நாடளாவிய ரீதியில் புதிய எழுத்தாளர்களின் இலக்கிய ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை எழுத்தாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மூன்று நாள் எழுத்துப் பயிற்சிப் பட்டறையை நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிங்கள / தமிழ் இலக்கிய ஆக்கத்தில் ஈடுபடும் புதிய படைப்பாளிகளின் திறமைகளை மெருகேற்றுவதன் மூலம் இலக்கியத்துறையின் வளர்ச்சியினூடாகப் பண்பட்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

நடைபெறும் திகதிகள்: 28, 29 மற்றும் 30 நவம்பர் 2023
இடம்: பொது நூலக மண்டபம், கொழும்பு. (விஹார மகாதேவி
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்கேற்புடன்

பயிலரங்கில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை, மதிய உணவு மற்றும் தேநீர் இலவசமாக வழங்கப்படும். பட்டறையில் பங்கேற்பவர்களுக்கு பயணச் செலவுகள் அல்லது பிற கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. நிகழ்ச்சியின் 3 நாட்களும் பங்கேற்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிலரங்கின் முடிவில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். நீங்கள் இதில் ஆர்வமாக இருந்தால், கீழே காட்டப்பட்டுள்ளபடி அதாவது பெயர், முகவரி, அடையாள அட்டை எண், தொலைபேசி எண், E mail Address/ Whats App no. கல்வி/தொழில்முறை தகுதி, எழுத்து அனுபவம் சாதனைகள் சுருக்கமாகக் குறிப்பிட்டு தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தை 20.11.2023 க்கு முன்னர் பின்வரும் முகவரிகோ மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கப் படவேண்டும்

Writers Organization of Srilanka
c/o Memonkavi
23, Reservoir road, Colombo-09
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தொடர்புகளுக்கு
மேமன்கவி 077861464
இரா.சடகோபன் - 0777679232