ஈழத் தமிழர்கள் தம்மை பாலஸ்தீன மக்களுக்கு ஒப்பானவர்களாக கருதிக்கொள்ளுகின்ற ஒரு நிலை இருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவானதொரு போக்கு ஈழத்தில் நெடுங்காலம் நிலவுகிறது. அதேவேளை தமக்கென்று ஒரு நாடற்ற நிலையில் இஸ்ரேலை உருவாக்கிய இஸ்ரேலியர்களிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டென்ற பார்வையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

இந்த சிக்கலான அரசியலை புரிந்துகொள்ள ஜீவநதி பதிப்பகத்தின் 351 ஆவது வெளியீடாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய 'ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகி உள்ளது.

உலக அரசியல் சார்ந்த விடயங்களை நாம் அதிகமும் கற்றுக்கொள்வது இன்றைய உலக அரசியலின் போக்கை புரிந்து கொள்ளவும் 'ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் உதவும் என இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச விடுதலை போராட்டங்கள் குறித்த ஆழமான புரிதலை எழுத்தாளர் ஐங்கரன் கொண்டிருப்பதற்கு உலக வரலாறு குறித்த அவரது அரசியல் அறிவும், உலக அரசியல் குறித்த அவரது ஆழமான புரிதலும் தான் அடிப்படையானவை. உலக அரசியலின் முகங்களை, ஆயுத அரசியலின் அர்த்தங்களை, ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை, சமகால உலக அரசியலில் பொதிந்துள்ள தந்திரங்களின் முகங்களை என இவர் தன் எழுத்துக்களின் வழியாக தரும் செய்திகள் மிகவும் அதிர்வு தரக்கூடியவை என்றும் இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது “ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்”என்ற புதிய நூல், உலக அரசியலை புரிந்துகொள்ள உதவும் இவரின் எழுத்துக்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒரு தொகுதியாக இருக்கும் என்றும் எழுத்தாளர் தீபச்செல்வன் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அனுப்பியவர்:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.