- சிவானந்த கக்கோட்டி, இந்திய  ஸ்டேட் வங்கியின் அதிகாரி. முக்யமான அஸ்ஸாமிய எழுத்தாளர். மறைந்து வரும் மனித விழுமியங்களையும் அதன் அக்கறையும் கிராம மக்களின் வாழ்வனுபவங்களோடு சொல்பவர். இவரின் கதைகள் . மூன்று சிறுகதைத் தொகுதிகளும், ஒரு நாடகமும் பதிப்பிததுள்ளார். 2000ம் ஆண்டில் மதிப்பிற்குரிய மும்மின் பர்கடகி விருதைப் பெற்றவர். -

சுப்ரபாரதிமணியன்நிலாவெளிச்ச முற்றத்தில் மெல்ல வினோதமான  மெளனம் விரைவாகப் பரவியது. முற்றத்தின் மத்தியில் வலது புறத்தில் பரவியிருந்த பாயின் கடைசிப் பகுதியிலிருந்து அய்டா மட்டும் பேசிக்கொண்டிருந்தான். பராமா, டெய்து ராஜன்,  பகுல், மைனா மற்ற  பக்கத்து வீட்டு சிறுவர்கள் அய்டாவை மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டியின் உதடுகளிலிருந்து இந்த நேரத்தில் கதைகள் கசிந்து கொண்டிருக்கும். இருட்டின கொஞ்ச நேரத்திற்குப்பிறகு விலாசமான முற்றத்தில் பெரும்பாலும் எல்லா  குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விடுவர்.  பராமா அவனின் மூத்த சகோதனுடன் கொஞ்சம் தாமதமாக வருவான். அவர்களின் தினசரி படிப்பு வேலைகள் முடிந்தபின் அவர்கள் வருவர். அவர்கள் வெகு ஆர்வத்துடன் வருவர். அவர்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளித்தான் இருந்தனர்.. அவள் அவர்களுடைய சொந்த பாட்டியல்ல. ஆனால் குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகள் பொதுவாக கடைபிடிக்கப்படும் குழுவைச் சேர்ந்தவள். அவர்கள் அவசரப்படுவதில்லை.அய்தா எப்போதும் பாராமாவுக்குக்காக மற்ற குழந்தைகளுக்காகவும் காத்திருப்பான். சில வருடங்களுக்கு முன்பு வரை பாராமா  பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டே இந்த முற்றத்தில் கதை கேட்டுக் கொண்டிருப்பான். வளர்ந்தபின்னும் கூட அவள் மடியிலேயே அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருப்பான்.  இந்த கதி பிகு திருவிழா நாளில் அவனுக்கு பனிரெண்டு வயது நிறைவடைந்தது பதிமூன்று வயது தொடங்கியது. அந்நாள் அம்மா பிராத்தனைகள் செய்து கடவுளுக்கு பிரசாதம் சமர்ப்பிப்பாள். அவன் வளர்ந்தாலும் அய்தாவின் கதைகள் தொடர்கின்றன.  அனைத்திற்கும் மேலாக, அவள் கதைக் களஞ்சியமாக இருந்தாள்.

முற்றத்தின் மத்தியில் அனைவரும் ஒன்றாக அமர்வர். ஒரே ஒரு பாயில் அவர்கள் அனைவராலும் குறுக்கி அமர இயலவில்லை. முற்றத்தை சுற்றியுள்ள பக்கத்து வீடுகளில் பாய்கள் இரவலாகப் பெறப்பட்டன. குழந்தைகள் மட்டுமல்ல  பதின்வயது கொண்டோருமந்த இரவில் வாங்கிய பாயில் அமர்ந்திருப்பார்கள். அய்தாவின் கதைகள் என்றும் முடிந்ததில்லை. கதைகள் மகாபாரதம் , புராணம், வெவ்வேறு பேய்க்கதைகள், நம்முடைய கட்டுக்கதைகளிலிருந்து இருக்கும். புராணக் கதைகள் சொல்லி முடிந்த உடனே பெஞ்சின் நுனியில் அமர்ந்திருந்தகும் தினாநாத் “ கோசெயின் மூங்கில் காட்டிலிருந்து மூங்கில்களை வீதியில் போடும் பேய்பிசாசுகள் பற்றியும் அம்மாவாசை இரவுகளில் பேய்கள் நடமாட்டத்தையும் பற்றிய கட்டுக்கதைகளை சொல்லுங்கள் என்றான்.

ஹே, அவையெல்லாம் உண்மையல்ல. அவையெல்லாம் பொய்கள். மக்களின் கட்டுக் கதைகள். பேய்க் கதைகளுக்கு பின்னால் ஒரு சலனம் இருக்கும். சிலருக்கு அது ரொம்ப பிடிக்கும். அவர்கள் மத்தியில் இருக்கும் சிறிய குழந்தைகளுக்கு அதில் ஆர்வமில்லை. அவர்கள் நெருங்கி அமர்ந்திருந்தார்கள்.

இறுதியாக, அய்தா ஆரம்பித்தார். மிதந்து கொண்டிருந்த மேகங்கள் நிலாவை மறைத்தன. அவர்கள் அறியாமல் இருள் சூழ்ந்தது. இருட்டுப் பரவி பேச்சு மவுனமாகி அவர்கள் கவனமாகவும் ஆர்வமாகவும் இருந்தார்கள்.

பாராமா பயந்திருந்தாலும் அவனால் கதைகளை நியாயப் படுத்திக் கொள்ள இயலவில்லை. அவன் அம்மா சமயலறையில் வேலைகளை முடித்துவிட்டு வரும் வரை  அவனால் தூங்க இயலவில்லை. அவளை இறுக பிடித்தபடி, தொந்தரவு செய்யும் புதிரான விஷயங்கள் கொண்டு அந்த கதைகள் பற்றி கேட்க விருப்பபட்டான். ஆனால் கேட்கவில்லை . அவன் உறங்க முயற்சித்தான். ஆனால் ஒரு விஷயம் அவன் நினைவுக்கு மறுபடியும் வந்து கொண்டே இருந்தது. கிராமத்தின் இறுதியில் உள்ள வீதியின் இரண்டு பக்கத்து அடர்ந்த மூங்கில்காடு அவனை துன்புறுத்தியது. எந்தவொரு காற்றும் சூறாவளியும் இல்லாமல் மூங்கில்களால் எப்படி ரோட்டை அடைக்க முடியும் என அவன் வியந்தான். மூங்கில் மேல் நின்று கொண்டிருக்கும் போது கால்கள் தொங்கிக் கொண்டிருப்பது பற்றி அவன் ஆச்சர்யப்பட்டான்.

அவன் அம்மாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டு மூடினான். அவன் கண்களை மூடின உடனே அவன் வீட்டிற்கு பின்னால் உள்ள அடர்ந்த காடுகள் அவன் முன்னே வந்தன. வெற்றிலைக் கொடி, பலாப்பழ  மரங்களுக்கு அப்பால் சில மூங்கில்கள் கோனசன் காட்டில் உள்ளதைப் போல அந்த மூங்கில்கள் நெருக்கமானதாகவும் விரிவானதாகவும் இல்லை. பெரும்பாலும் எல்லாம் தரமான மூங்கில்கள் . ஆனால் அந்த அடர்ந்த காட்டிற்குப் பின்னால், மாம்பழம், பலாப்பழம், வாசனை மரம் , போ மரம் வேறு மரங்களுடன் சில ஏக்கருக்கு நிலம்பரவி இருந்தன. அந்த கிராமத்தில் சுடுகாடு என்று தனியாக இல்லை.

வீட்டுப் பின்புறத்தில் பெரும்பாலும் மக்கள் இறந்தவர்களைப் புதைப்பர், அதிக நிலமில்லாதவர்கள் இறந்தவர்களை காட்டின் முடிவில் இருக்கும் இடத்தில் புதைப்பர். எந்த வாசனை மரத்தின் அடியிலிருந்து அந்த பிசாசுகள் வெளிவந்து மனிதனை துரத்தும் என்று பாராமா ஆச்சர்யப்பட்டான். அவன் சில சமயம் தீயிலிருந்து தீப்பொறி வெளிவருவதை கண்டுள்ளான்.இன்று அய்தாவிடமிருந்து பிசாசுக் கதைகளை அவன் கேட்டான். அவைகளாகத் தான் இருக்கும். கதைகளில் உள்ளவை வித்தியாசமாக இருக்கலாம். நிலவில்லாத அம்மாவாசை இருட்டில் அவை வெளிவந்து வருத்தத்துடன் யாரையோ தேடும். பணக்காரர்கள் அனுபவிக்காமல் புதைத்து வைத்திருக்கும் புதையலை அவை பாதுகாக்கும்.   அந்த ஆன்மாக்கள் இறுதியாக விடுதலை அடையும்  வரை பல ஆண்டுகளை கழிக்க வேண்டியிருக்கும். நிலவில்லாத இரவுகளில் அவை பயங்கர கோபத்துடன் இருக்கும். வெறித்தனமாக அவை அலைந்து கொண்டிருக்கும். பாராமா மிகவும் பயந்து போய் அவனது அம்மாவை இறுக கட்டிக் கொண்டான். புதைக்கப்பட்ட புதையலைப் பற்றி மட்டுமே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. மற்றவற்றைப் பற்றி அல்ல, தாகத்துடன் அலையும் ஆன்மா பற்றி அவனின் அம்மாவிடன் கேட்க நினைத்தான்.

உலகவாழ்க்கையில் பூர்த்தியடையாத ஆசைகளைக் கொண்ட விடுதலையடையாத ஆன்மாக்களைப் பற்றி அய்தா லேசாகத் தொட்டாள். பல்வேறு  காரணங்களும் உள்ளன. ரகசியங்கள் புதைந்து வேறு யாருக்கும் சொல்லப்படாதவை. அது போல பல விஷயங்கள் உண்டு. நீங்கள் வளர்கிற போது அவற்றைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். அவர்களே காடுகளில் வெளிச்சங்களாகவோ, தீயாகவோ பல ஆண்டுகள் திரிகிறார்கள். அவர்களின் ஆயுள் முடிவு பெறும்போதே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

புரிந்துலுக்கும், குழப்பத்திற்கும் இடையில் மாட்டிக் கொண்டு மெளனமாக இருந்தான் பாராமா.  அவன் அவை பற்றி கேட்க நினைத்தான். ஆனால் அவன் அம்மாவை கேட்கவில்லை. அவளும் மிகவும் களைப்படைந்திருந்தவன் சீக்கிரம் தூங்க ஆரம்பித்து விட்டான்.
 
அடுத்த நாள் வெராண்டாவின் முனையில் பாராமா தன்னந்தனியாகவே இருந்தான். அன்று இரவு அய்தா கூறப்போகும் இன்னுமொரு பேய்க் கதையினை எதிர்பார்த்து அவன் ஆர்வத்துடனும் அமைதியில்லாமலும் இருந்தான்.

தரணி வீட்டு கேட்டில் ‘நன்கலா’வை  எடுத்துவிட்டு உள்ளே வந்தான். பக்கத்தில் தரணி டோடையின் வீடு இறுதியாக இருந்தது. முற்றத்தில் இருந்து அவன், “வீட்டில் காகைது இருக்கிறாரா” என்று கேட்டான். தரணி பாராமாவின் அப்பாவை ககைது என்று அழைப்பான். அவன் அவர்களின் அதே வகைப் பிரிவைச் சார்ந்தவன். இல்லையன்றாலும் பரம்பரை வழியைச் சார்ந்தவன்.

தாரணி மாலை புனித வாசிப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழுடன் வந்திருந்தான். அதில் ஜந்து மாடு மேய்ப்பவர்கள் கெளரவிக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு பாயாசம் போன்ற இனிப்பு வகைகள்  தொடர்ந்து மூன்று நாட்கள் வழங்கப்ப்டும். ஒவ்வொரு மாலையும் ஒரு மாதத்திற்கு அந்த புனித வாசிப்பு நிகழச்சி இருக்கும்.  காகைது தரணியின் அம்மா கடந்த இரண்டு மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்தார். அவளால் நகரக் கூட இயலவில்லை. எய்தா டாகர் இறந்து கொண்டு இருக்கிறாள். மருத்துவர் கைவிட்டாலும் அவளின் ஒரே மகன் தாரணி தன்னால் முடிந்ததை செய்கிறான். ஒரு வாரமாகவே அவள் தண்ணீர் மட்டும் குடித்து வருகிறாள். தரணியின் அப்பா அவன் சிறுவயதாக இருக்கும்போதே இறந்துவிட்டாள். தனியாக தாகர் அவனை வளர்த்து ஆளாக்கினாள். டாகர் அவனை படிக்க வைத்து, தனது சொந்த காலில் நிற்க வைத்தாள். அவன் வேலைக்குப்போய் சம்பாதிக்க ஆரம்பித்தான். தரணி இவை அனைத்தையும் மறப்பவனல்ல.  அரசாங்க மருத்துவர் வாரம் ஒரு முறையாவது வந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

பூஜைகள், வழிபாடுகள், பரம்பரை வைத்தியங்கள், மாயமான முறையில்  மந்திரங்களை பயன்படுத்தினர். எல்லாவற்றையும் முயற்சி செய்தாகிவிட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் சொன்ன ஆலோசனைப்படி தரணி எல்லாவற்றையும் செய்தான். இப்போது இறுதியாக ஹரி-கீர்த்தனை பஜனை புனித கயான் குறிப்பிட்ட குருபை சாத்ராவிலிருந்து நிதான் என்னும் பகுதிப்பாடலை எடுத்தான். கீர்த்தனை அதன் ஆரம்பத்தில் இருந்து பாடப்பட்டது. இதனோடு அடுத்தடுத்த மூன்று மாலைகளுக்கு ஜந்து மாடு மேய்ப்பவர்கள் சடங்கில், உணவு தரப்பட வேண்டும். வெற்றிலைப் பாக்கு தரப்பட வேண்டும். தரணி பாரமா அப்பாவை பிராத்தனைக்கு கூப்பிடுவதற்கு  வந்தான். பாராமாவை கூட்டத்திற்கு அழைக்கவும். அந்த பெரிய அறையில் அய்தா டாகர் சிறிய கட்டிலில் கிடந்தாள். துணிகளின் மடிப்புக் கிடையில் கிடப்பவள் போல அவள் உடம்பு சுருங்கி இருந்தது. படுக்கையின் மேலே தலையணையில் தலை ஒளிர்ந்தது. நோய்வாய்ப்பட்ட தாகருக்கு காது கேட்கும் திறன் இன்னும் இருந்தது. தெளிவாகவும் அவள் தொடர்ந்து பேசுவாள். பார்ப்பவர்களை அவளால் அடையாளம் கொண்டு கொள்ள முடியாது.. விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அது சிரமம்தான். ஏதாவது குரல் கேட்டால் அது அவரா, இவரா என்று கேட்கும் அளவு உடனடியாக அடையாளம் கண்டு கொள்வாள். அதன் பிறகு அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் மற்ற எல்லா செய்திகளையும் கேட்பாள்.

அந்த அறையின் இறுதியில், சுவரை ஒட்டி இரு பக்கங்களிலும் பாய்களின் குவியல் இருக்கும் கீர்த்தனை உள்ள மரப்பலகை இருக்குமிடத்தில் கடைசியாக ஒருவருக்கான ஒரு பாய் இருக்கும். . அதற்கு அடுத்து இன்னொரு பலகையில் ஒரு பெரிய திரியுடன் மண்விளக்கு எறிந்து கொண்டிருந்தது. சுவரைப்பாத்து ஒரு பலகையில் பருத்தித்துணியில் மூடப்பட்ட ஒரு முக்காலி இருந்தது. புனிதவாசகங்களை அந்த துணி மூடியிருக்கும்.

பதக் வருகிறவரை அவர்கள் உட்கார்ந்திருந்தார்க்ள் ஒரு தரம் பாராமவின் அப்பா தாகருடன் பேச எழுந்தார். அவர் அவருடைய குரலை உடனே அடையாளம் கண்டுகொண்டு அவரின் மருமகள் மற்றும் குழந்தைகள் பற்றி வழக்கமாக விசாரித்தாள். பாராமா பாராமாவின் அப்பா அவள் எப்படி உள்ளான் என்பதை அறிய கேட்கலாமா என ஆச்சர்யப்பட்டார். ஆனால் அந்த வயதானவள் தொடர்ந்து பேசி, “ சடங்கை பார்க்கவும். உட்கார்” என்றாள். புனித கயான் இப்போதுதான் வந்தது. சொனாராம் பதாக் தாமதமாக வந்தார். அவர் தாமதமாக வருகிறபோது, புனித கயான் வாசிப்பு தொடங்கிவிடும், அவர் அதில் அக்கறை எடுத்ததில்லை. அவரின் கண்ணாடிகள் மாற்றப்பட வேண்டும். ஆனால் அவர் அழகாகவும் சரியாகவும் விளக்கி விடுவார்.

சொனாரம் அவரது பாடும் குரலில் வாசிக்க ஆரம்பித்தார். கடந்த சில நாட்களாக பத்தாம் பகுதியில் இருந்து காலைய தாமன் மற்றும் சிசுபெல்லா ஆகியவை பாடப்பட்டன. பதினொன்றாம் பகுதியில் இருந்து தசகீறியா படிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு மூன்று முதல் ஜந்து அத்தியாயங்களை படிக்கிறார்கள். சொனாரம் பதக்கின் வாசிப்பு அவ்வளவு இனிமையாக இருக்காது. ஆனால் ஹோலி கயானின் விளக்கம் புரியும்படி இருக்கும். அய்தா தாகர் படுத்து கிடந்து கேட்டுக் கொண்டிருந்தாள். சில நேரங்களில் தரணியிடமோ, வாசிப்புக்காக கூடி இருப்பவர்களிடமோ ஏதாவது கூறுவாள். சில சமயங்களில் அவள் உறங்குகிறாளா அல்லது கவனிக்கிறாளா என்று அனுமானிக்க இயலாது. ரொம்ப நேரத்திற்கு அவள் அமைதியாக இருந்தால் தரணி அவளிடம் செல்வாள். சடங்கின் இறுதியில் எல்லோரும் முழங்காலில் நின்றார்கள். புனித கயான் ஆசீர்வதித்தார். அவர் நமோ நமோ நாராயணா என்று பாட, மற்றவர்கள் அதைக் கேட்டு கோஷமாக பாட,  “ எங்கிருந்து வந்ததோ அங்கெடுத்து செல், கடவுளே எல்லாம் உன் விருப்பம். ஓஹரி ஓராம்” கடைசி சில வார்த்தைகள் அய்தாதாகர் கேட்கும்படி முணுமுணுப்பாக இருக்கும். கடைசி ஹரி தரணியின் ஒலி அறையை மீண்டும் சப்தமாகும்.

தாரணி இன்று வழக்கமான பிரசாதத்தோடு பாயாசத்தை தயார் செய்திருந்தார். வாசிப்புக்கும், சடங்குகளுக்கும் பிறகு ஜெயராம் மெல்லிய குரலில் ஹோலி ராமிடம், ” ‘வயதான கிழவி ,இன்னும் சொல்லாது, செய்யாது ஏதேனும் உள்ளதா’ என வினவினார்.

ஹோலி ராம் ‘ எனக்கு ஆச்சர்யமாக உள்ளது’ என்றான்.

 ‘இன்னொரு பக்தர் யாராவது கேட்டீர்களா?’ என்றார்.

‘எனக்கு தெரியாது. ஆனால் நான் இதுவரையிலும் எதுவும் கேட்கவில்லை’ என்றார்.

 ‘அவளை நேரடியாக கேட்பது சிறந்தது’ என் ஜெயராம் தொடர்ந்தார் ‘ சில ரகசியங்கள், சில பாவங்கள் அல்லது ஆன்மா எப்படி திருபதியடையும்’.
ஜெயராம் முணுமுணுக்கவில்லை. அவர் சத்தமாக் சொன்னார் அனைவரும் வயதான தாகரும் கேட்கும்படி. மற்றும் ஏதேனும் சொல்ல வேண்டியிருந்தால் அவை வெளிவரட்டுமே. அனைவருக்கும் தெரியட்டும் அவளின் விடுதலையை அவள் பெறட்டும்.

பாராமாவின் முதுகுத்தண்டு சில்லிட்டது. ஆன்மாவின் விடுதலையா? அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள்? எப்படி ஒரு ஆன்மா விடுதலையடையும்?

என்ன பாவம்? என்ன ரகசியம்? இவற்றுக்கொல்லாம் என்ன அர்த்தம்? அவன் புரியாமல் கேள்வியுடன் சுற்றும் பார்த்தான். தெயூரி வாழை இலையில் வந்தவர்களுக்கு பிரசாதத்தையும், பாயாசத்தையும் பரிமாறிக் கொண்டிருந்தாள். அதன் பிறகு அந்த அய்வரின் முன்னால் தரணி வந்து மண்டியிட்டு ஆசிபெற்றான். அவர்கள் அதன் பிறகு புறப்படுவார்கள்.
 
பாராமாவின் சஞ்சலம் அந்த அறையையும் மக்களையும் விநோதமாக பார்க்க வைத்தது. ஏன் அந்த ஜவருக்கு முன்னால் மடும் விழுந்து வழங்குகிறார்.  அவர்களால் எந்த வகையிலான ஆசிர்வாதத்தை வழ்ங்க முடியும்? யார் விடுதலை அடைய வேண்டும்? ஒரு வேளை விடுதலை அடைந்தால், என்ன நடக்கும்? திடீரென பாராமாவுக்கு முந்தைய இரவின் கதை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு வேளை ஆன்மாவின் ஆசைகள் விருப்பங்கள், நிறைவேற்றப்படாமல் இருந்தால், தன் அப்பாவும் மற்றவர்களும் பேசிக் கொண்டிருப்பதைப் போல் தன் அய்தா தாகரும் தங்கள் வீட்டிற்கு  பின்னால் உள்ள காட்டில் ஆவியாக அலைவாளோ? ஒருவேளை அய்தா தகரின் மனதில் ஏதேனும் ரகசியம் இருந்தால், வெளிவராத பாவம் ஏதேனும் இருந்தால், பாராமாவால் படுக்கைக்கு பின்னால் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

மக்கள் இன்று அய்தா தாகரிடம் அவரின் விருப்பம் பற்றி நேரடியாக கேட்பதென  முடிவு செய்தனர். தரணிக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை.  தனது அம்மாவை பார்த்துக் கொள்வதால் எந்தவொரு கஷ்டமும் இல்லை. ஆனால் அவளும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். மருந்துகளால் எந்த பயனும் இல்லை இப்போது. தரணி இவற்றைப் போல் பலவற்றைப் பார்த்திருப்பதால் இந்த விசயம் அவனுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அய்தா தாகருக்கு ஒருவேளை மனவருத்தமோ, அமைதியின்மையோ இருக்கலாம். அவர்கள் கேட்கட்டும் என தரணி நினைத்தான்.

ஹோலி கயான் அய்தா தாகரின் கட்டிலை  நெருக்கி இரு கைகளையும் தட்டினார். தெளிவாகவும், தன்மையாகவும் அவர் மூன்றுமுறை கேட்டார். அய்தா தாகர் மூடிய கண்களுடன் கவனமாக கேட்டார். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை. அய்தா தாகரால் தெளிவாக keetkavuகேட்கவும் பேசவும் முடியும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவள் அமைதியாக இருந்தாள்.  மக்கள் புறப்பட்ட தயாராயினர். தரணி கைகளை கட்டியபடி, அடுத்தநாள் பிராத்தனைக்கு வருமாறு அவர்கள் அனைவரையும் கேட்டான். நாளையும் அடுத்த நாளும் பரமாவும் மற்றவர்களும் பிராத்தனைக்கு அழைக்கப்பட்டார்கள்.

ஹோலி கயானும் பராமாவின் அப்பாவும் கடைசியாக எழுந்தனர். பிரசாதம்  இருந்த வாழைஇலையை பொட்டலமாக பாராமா கட்டினான். பாராமா புறப்படுவதற்கு தயாராக தனது அப்பாவின் அருகில் நின்றான். வயதான பாட்டி திடீரென தன்னுடைய படுக்கையிலிருந்து கூப்பிட்டாள்   ‘ஹோலி, இன்னும் இங்கே இருக்கிறாயா?’

‘ ஆமாம். குடி’ என ஹோலி கயான் அவளிடம் விரைந்தார். ‘ ஏதாவது சொல்ல வேண்டுமா?’

‘ அப்படியொன்றும் இல்லை’ அவள் தெளிவாகவும் மெதுவாகவும் பேசினாள். சிறிது இடைவேளைவிட்டு சொன்னாள். ‘இந்த இந்திரா, இந்திரா நாமதி, அவர் கிராமத்தில் இருக்கிறாரா? ஒருவேளை இருந்தால் நாளைய பிராத்தனைக்கு அவரை வரச் சொல். அவரை படிக்கச் சொல்லி கேள்’.
 
ஹோலி தாகர் வேறெதும் வேண்டுமா என் கேட்கும்போது அய்தா தாகர் அமைதியாக இருந்தார். அனைவரும் முற்றத்திற்கு வந்தனர். இந்திரா கயான் மற்றொரு குழு தலைவர். அவர் பிராத்தனை கூட்டங்களில் பாடும் நமாத்தியாவார். அவர் அந்த குடும்பத்திலும்  கிராமத்திலும் சார்ந்தவராக  இருந்தாலும் மிகச் சிறந்தவராக் கணிக்கப்பட்டவர். அவர் வேறு குழுவைச் சார்ந்தவராக இருந்தாலும் அந்த வயதான பெண்மணியின் எண்ணம் நிறைவேறட்டும். நாளைய பிராத்தனைக்கு தரணி அவரை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
 
இந்திரா வயலுக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அவருக்கு வயல்வெளியில்  அவ்வளவாக வேலை இல்லை. இந்திராவும் முதுமையை எட்டிக் கொண்டிருக்கிறார். அவர் பயிர்களை பார்வையிட சென்றார். நெல் விளைந்து அறுவடைக்கு தயராக உள்ளது. வயல் வேலையில் ஈடுபட ஆட்கள் பெருமளவில் வந்து கொண்டிருந்தனர். நேற்று மதியமே சுவா மரத்தின் கிளைகளை அவர் வெட்ட வேண்டியிருந்தது. பயிர்களுக்கு நடுவில் அவற்றை நட வேண்டியிருந்தது.
 
தரணி உள்ளே வரும்போது அவர் முற்றத்தை கடந்து வந்து கொண்டிருந்தார். தரணி கைகளை கட்டியபடி தன் வீட்டில் நடக்கும் பிராத்தனைக் கூட்டத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். இது தன்னுடைய அம்மாவின் விருப்பம் என்றும் கூறினார். அவர் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. இந்திராவின் பதிலுக்கு காத்திருக்காமல் தரணி உடனே கிளம்பிவிட்டார்.
  
தரணி சென்ற பிறகும் கூட நீண்ட நேரம் இந்திரா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். வயலுக்கு செல்லும் வழியில்  நடைபாதையின் முன்னால் தரணியின் வீடு அமைந்துள்ளது. தரணியின் வீட்டை தாண்டி செல்லும் போதெல்லாம் அந்த வீட்டை பார்த்து பெருமூச்சு விடுவார் இந்திரா. சில சமயங்களில் அவர் தாகர் நா பொவைப் பார்ப்பாள். சில சமயங்களில் இல்லை. தரணியின் அப்பா முகுந்தா இந்திரா வயதை ஒத்தவ்ர், கொஞ்சம் வயதானவர். தாகர் கிராமத்திற்கு மாப்பிள்ளையின் கூட்டத்தோடு இந்திராவும் சென்றிருந்தார். மாப்பிள்ளை யானையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதுவும் பலகாலத்திற்கு முன்பு.
 
திருமணம் முடிந்த மறுநாள்  வட்டமுகத்தில் குழியுடன் இருந்த இந்த அய்தாவை முதல்முறையாக இந்திரா பார்த்தார். தனது கையில் பாத்திரம் முழுக்க நெல்லோடு நின்று கொண்டிருக்கும்போது அவளைப் பார்த்தார்.
 
திடீரென்று காலம் சுழன்றது. ஒரு வருடத்திற்கு பிறகு, முகுந்தாவின் பாதங்களால் அய்தா தாகர் விழுந்து அழ வேண்டியிருந்தது. அவளின் கைகளில் குழந்தை தரணி இருந்தான். முகுந்தா முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தான்.  விறகு பொறுக்கும்போது அவனை பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக ஏறக்குறைய அவன் உடம்பு நீலமாகிவிட்டது. ஆனால் அவன் மூன்று நாட்களாக கிடத்தப்பட்டிருந்தான். அந்த பகுதியில் இருந்து பலர் வந்து மந்திரங்களையும், பிராத்தனைகளையும் முயற்சி செய்து பார்த்தனர். ஆனால் எதுவும் பயன்படவில்லை.
 
தாகர் தரணியை கையில் ஏந்தியபடி இருந்தாள். அவள் அம்மா வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இப்போது அவள் கூட போக வேண்டியதாகி விட்டது.
 
தாகர் வீட்டை இந்திரா கூர்ந்து கவனித்தான். அது வித்தியாசமாக தோன்றியது அல்லது அது அப்படித்தானோ? தரணி அதை ஏகதேசம் கட்டியிருந்தாள். பழைய ஓலைக் கீற்றுகளை எடுத்திருந்தான்.  தாகர் பிராத்தனைக்கு வந்தவர்களை வெற்றிலை வைத்து வணங்கினான்.
 
அவளின் கூறை வேறு மாற்றப்பட வேண்டியிருந்தது. அவளின் கூறைக்காக அவளின் பகுதி மக்கள் மூங்கில் குச்சிகளை தயார் செய்தனர்.
 
அடுத்த ஞாயிற்றுக்கிழமை, கிராமத்தில் தாகர் வீட்டுக்கூரை மேய்வதற்காக கூடினர். கூரை சரியாக இருந்தது. விட்டங்களும், தப்பைகளும் மாற்ற வேண்டியிருந்தது. மக்கள் இந்த வேலையை மெதுவாகச் செய்தனர். யாரோ ஒருவர் தொட்டியில் போட்டு வைத்திருந்த மூங்கில் குச்சியை எடுத்தார். பழையதை எடுத்து ஒரு மூலையில் போட்டு மாட்டுத் தொழுவத்தில் போட்டு எருதுகளால் சிதைத்தனர். நன்றாக இருந்ததை எடுத்து சுமையாக கட்டினர். எல்லா மக்களும் வந்திருந்ததால் மதியத்தில் கூரை வேலை முடிந்திருக்கும். அவர்கள் என்ன செய்ய முடியுமோ, அதையோ அல்லது என்ன செய்ய விரும்பினார்களோ அதை செய்தனர்.
 
வயதில் மூத்தோரும், வயதானவ்ர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஆனால் அவர்கள் அதைப்பற்றி பேச நிறைய இருந்தது. இந்திரா கூரை மேய்வதில் வல்லவர். முற்றத்தின் ஓரத்தில் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு ஜெயதன், ரிஷி, மற்றும் ராஜனுடன் கூரைமேல் ஏறினார். கூரையில் கீற்றுகளை குவித்தார். மூங்கில்களை கூரைமேல் அதன் முனைவரை கட்டினார். அந்த முற்றம் பரபரப்பாகவும், சத்தமாகவும் இருந்தது.
 
குழந்தை தரணி மகிழ்ச்சியுடன் திரிந்து கொண்டிருந்தான். அந்த கூட்டத்தில் பக்கத்து வீட்டு குழந்தைகளும் குழுமியிருந்தனர். எல்லோரும் வேலை மும்மரத்தில் இருந்து துரிதப்படுத்தினர். தாகர் வருபவர்களை வரவேற்கவும் அவர்களுக்கு வெற்றிலையும், தேநீரும் தருவதில் மும்மரமாக இருந்தாள். அவள் காலையில்  முன்னதாகவே குளித்திருந்தாள். எல்லாவற்றையும் தயாராக வைத்திருந்தாள்.
 
இந்திராவும் மற்றவர்களும் கூரை பொருட்களைப் பரப்பினார்கள். பிறகு சிரமத்துடன் புதிய வைக்கோலை பரப்பினார்கள். பிளந்து மூங்கில் குச்சிகளை சரிப்படுத்தி மூங்கிலால் முக்கோண வடிவத்திற்கு கட்டினார்கள். கட்டின இடங்களை சுத்தியால் அடித்து இறுக்கமாக்கினார்கள். மெல்ல குளிர்ந்து தெளிந்த நீலவானம் சுருங்கிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் பாதி கூரை வேலை முடிந்திருந்தது.
 
தேநீர் இடைவேளையில் அவர்கள்  theeதேநீரும்  வெல்லப்பாகு உடனான தேங்காய் லட்டுகளையும் சாப்பிட்டனர். பலர் கைகளை கழுவவில்லை. ஆனால் கயான, பயான்சும், நாமாதீசும் மூலையில் டின்னில் இருந்த தண்ணீர் எடுத்து கைகளை கழுவி, வாயை துடைத்துக் கொண்டார்கள். இந்திராவைத் தவிர மற்றவர்கள் மூங்கில் ஏணியில் இறங்கினர். இந்திரா இன்னும் கொஞ்சம் கயிறுகட்டும் வேலையை செய்து கொண்டிருந்தார்.
 
தாகர் குனிந்து சாப்பிடும்படி அழைத்தாள். பித்தளை தட்டில் தேநீர் கோப்பைகளை கொடுத்தாள். கிராமத்தினர் அவர்களாக எடுத்துக் கொண்டனர்.  தாகர் இன்னும் கொஞ்சம் தேநீர் கொண்டுவர உள்ளே சென்றாள். யாரோ ஒருவர் கீழேயிருந்து சப்தமாக டீ கப்புகளை இங்கிருந்தே எறியட்டுமா? இந்திரா கீழே பார்த்தான். அவன் புஜங்களோடு நல்ல வடிவமாக இருந்தான். அவன் வலிமையாக செயல்படும்போது தசைகள் முறுக்கேறுகின்றன. அவன்  மார்பும் தோள்களும் பரந்து விரிந்திருந்தன. மனோகர் வாழைப்பழம் போல அவன் உள்ளங்கையின் தசைகளும் தோளும் விரிந்திருந்தன. அவனின் நெற்றியில் வேர்வைத்துளிகள் பனித்தன. இந்திரா களையப்படையவில்லை. மற்றவர்கள செய்வதைவிட இந்திராவால் இரண்டு மடங்கு வேலை செய்ய முடியும். அவன்  குரல் இனிமையானது மற்றும் நன்றாகப் பாடுவான். பஜனையின்போது  அவனது குரல் அந்த முழு பகுதிக்கும் எதிரொலிக்கும்.
 
எதையோ பாடியபடி இந்திரா தாரின் வீட்டைச் சுற்றிலும் பார்த்தான். இன்னும் சில கட்டுகள் போட்டபின் கீழே வந்து தேநீர் சாப்பிடுவான். ‘தேநீர் கோப்பையை மேலே கொடுக்கட்டுமா என்று கேட்ட ராஜனை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டான். மூங்கில் கயிர்களை வைக்கோலுக்கும் கீழ்பகுதிக்கும் இடையில் போட்டு குனிந்து கட்ட எத்தனித்த போது கீழே என்ன நடக்கிறது என்று பார்த்தான்.  தாகர் கீழே உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் அதை அறிந்திருந்தாலும் கவனிக்கவில்லை.
 
இந்திரா கூரை மேய்ந்து கொண்டிருந்த பகுதிக்கு நேர் கீழாக இப்போது தாகர் சென்றாள். அவள் தேநீர் கோப்பைகள் இருந்த பித்தளை தட்டை கையில் வைத்திருந்ததால் தலையில் மூடியிருந்த துணி கீழே விழுந்தது. அவள் சேலையின் ஒரு பகுதியை தலையில் மூடியிருந்தாள். ஒரு கையில் பித்தளை தட்டை வைத்துக் கொண்டு மறுகையில் அதை சரி செய்ய முயல்கையில் அது கீழே விழுந்தது. சுற்றிலும் பார்த்த அவள் பித்தளை தட்டை கீழே வைத்துவிட்டு அந்தத் துணியின் நுனியை எடுத்து அவள் காதுகளில் பொருத்திக் கொண்டாள். அவள் நிமிர்ந்து பார்கையில் கையில் கத்தியுடன் இந்திரா இருப்பதைப் பார்த்தான். இந்திரா வேறு பக்கம் பார்க்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
 
ரொம்ப நேரமாக் பார்க்கிறானோ? அவள் உடம்பை மேலிருந்து பார்க்கிறானா? ரவிக்கை மூடப்படாத தலை அவன் பார்வை ஊடுருவுகிறதா? துணியை தேடும்போது அவள் மார்பு கண்ணில் பட்டிருக்குமா? இந்திரா என்ன பார்த்தான்?
 
தாகர் கொஞ்ச நேரம் தன்னை மறந்திருந்தாள். ஆனால் அவள் சுதாகரித்துக் கொண்டு தலையை துணியில் மூடினாள். பித்தளை தட்டை எடுத்துக் கொண்டாள் இந்திரா. அவளை இன்னும் பார்க்கிறானா என்று பார்த்தான். அவனும் தாகரை பார்த்தான். பார்க்காததை பார்க்கிற மாதிரி இந்திரா அவளைப் பார்த்தானா? அவள் அறிந்திருக்கவில்லை.
 
இந்திரா சுவா மரக்கிளைகளையும், பெரிய மெல்லிய இலைகளையும் பின்பக்க தோளில் போட்டபடி வயலில் நடந்தான். பரந்த வயலின் மத்தியில் பட்டுபடுத்தி மரத்தின் அடியில், அவன் நிலம் தொடங்கியது. அது நீண்டு விரிந்து மஞ்சள் நிறமாக மினுங்கியது. இப்போதெல்லாம் மக்கள் வயதுக்கு வயலுக்கு அடிக்கடி உண்மையாக வருவதில்லை. ஒரு வாரம் கழித்தோ அதன் பின்போ குறிப்பிட்ட பகுதி அறுவடை செய்யப்பட வேண்டும். இப்போது பூச்சிகளையும், வெட்டுக்கிளியையும் வயல்வெளியில் இருந்து துரத்த வேண்டியிருந்தது.
 
கூரை வேய்ந்த ஒரு மாதத்திற்கு பிறகு, தாகர் பிராத்தனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாள். இந்திரா அங்கு வந்து படித்தான். அப்போது அவ்ர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இந்திரா வாசிப்பதை ஒவ்வொருவரும் கவனத்துடன் கேட்டார்கள். அவன் படித்த முறையில் அதை புரிந்து கொள்வது சுலபமாக இருந்தது. தாகர் எல்லா ஏற்பாடுகளிலும் மும்மரமாக இருந்தாலும், அவள் கேட்பதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. அவன் வாசிக்கும்போது அவள் கூர்ந்து அவனைப் பார்த்தாள். இந்திராவின்  வாசிப்பு  அந்தநாளில் இனிமையாகவும், அழகாகவும் இருந்ததைக் கவனித்தாள்.
 
வாரசந்தை நாட்களில் மக்களில்லாமல் கிராமங்கள் வெறுமையாக் இருக்கும். பிற்பகலில்தான் மக்கள் நடமாட்டம் இருக்கும். அன்று இந்திரா மார்க்கெட்டிற்கு செல்லவில்லை. மாட்டுத்தொழுவத்தில் ஒரு முனையில் கம்பத்தில் கட்டுவதற்காக சணல் கயிறை தயாரித்துக் கொண்டிருந்தான். வயல்வெளிக்கு  செல்லும் நடைபாதை இந்திராவின் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளியிருந்தது. யாரோ நிதானமாக அந்தப் பாதையின் சென்று கொண்டிருந்தனர். தாகரைப் போல ஒருவள். அது தாகர். அது உச்சி வெயில் நேரத்தில்.
 
இந்திரா தன்னுடைய வேலையை ஓரம்கட்டினான். அவன் நேரத்தை கணித்து, குறுக்கு வழியில் பின்பக்க வழியாக வயலை அடைந்தான்.
 
சுற்றிலும் மஞ்சலாக அறுவடைக்கு தயாரான நிலையில் நெல்வயல் இருந்தது. மஞ்சள் வெயிலில் தாகர் மறைந்து விட்டாளா? அந்த வருடம் கீழ்ப்பகுதி நிலப்பயிர்கள் தேவையான அளவு இருந்தன. தண்டு, கம்பு, மனிதனைப் போல் உயரமாக இருந்தது. கரையில் இருந்து பார்த்தாலும் கூட அங்கிருக்கும் மக்களை கண்டுபிடிக்க இயலாது. மதிய சூரியன் அறுவடைக்கு தயாரான நெல்லின் மேல் சுட்டெரித்தது. காற்றுகூட இல்லாமல் இருந்தது. கதிமாதத்தின் சோம்பல் மதியம் அமைதியாக இருந்தது. இந்திரா மன அமைதியில்லாமல் இருந்தான். அவன் எங்கு போகிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை. வயலில் எங்கு போகிறான் என்பதும். தாகர் இந்த வழியாகத்தான் வந்தாள். ஏன், அவள் இப்போது எங்கே சென்றுவிட்டாள்.
 
நன்கு வளர்ந்திருந்த பயிர்கள் மத்தியில் அவற்றை கடந்து செல்கையில் சரசரவென்று சப்தம் கேட்டது. இரு கைகளாலும் பயிர்களை தள்ளிக் கொண்டு வழிசெய்து முன்னேறினான். சலசலப்பு சத்தத்தினூடே சென்றான். வேறொரு திசையில் கூர்ந்து கவனித்து கவனமாக இருந்தான். ஆமாம் அவனை நோக்கி சலசலப்பு சத்தம் வந்தது. அவன் கவனித்து மவுனமாக இருந்தான். அந்த வயல்வெளியின் மவுனத்தை கலைத்து பறவைகள்  வெளியேறின. வானத்தில் தூரமாக நீளமான இறகுடைய பறவைகள்  வயலை சத்ததுடன் கடந்து சென்றன. அதன் பிறகு, எல்லாம் அமைதியான பின்பு இந்திராவின் காலடிச் சத்தம் மட்டும் கேட்டது. ஒரு இடத்தில் இருவரின் சத்தங்கள் நேரடியாக சந்தித்துக் கொண்டன. சிறிது நேரத்திற்கு மற்றவர்களுக்கு கேட்காத வகையில் ஒரே ஒரு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அமைதியான வயல் வெளியில், ஒரு இடத்தில், நெல்பயிர்களின் கிளைகள் மட்டும் அசைந்தாடிக் கொண்டிருந்தன, மற்றவர்களுக்குத் தெரியாமல்.
 
வயல்வெளியின் மத்தியில் சுவாமரத்தின் கிளையை நட்டபடி, இந்திரா கதையின் இன்னொரு முடிவுக்கு வந்தார். இந்நாள் வரை, இரண்டு பேருக்கு மட்டுமே இந்த இடம் நன்றாகத் தெரியும்.
 
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கூட, இந்த இடத்தை அவரால் மறக்க இயலவில்லை. யாருக்கும் தெரியாமல், யார் கண்ணிலும் படாமல், இந்த இடத்திற்கு வந்து பூமியின் மீது கைவைத்து அவர் காத்திருப்பார். கைகளை தரையில் வைத்தபடி சில நேரம் அமர்ந்திருப்பார். தாகருக்கு தற்போது உடல்நிலை சரியில்லை. மோசமான உடல்நிலை, பிராத்தனை, கீர்த்தனை படிப்பது சற்றே பழைய சடங்காகிவிட்டது. தாகருக்கு ஏதேனும் சொல்ல வேண்டியிருக்குமோ. ஏதேனும் வெளிப்படுத்த எண்ணமோ? ஏதேனும் பாவம் செய்த எண்ணம் இருக்குமோ? தான் எதற்காக பயப்பட வேண்டும்? இன்று மாலை நடக்கவிருக்கும் கூட்டத்திற்க்கு செல்வதென இந்திரா முடிவு செய்தார்.
 
பாராமாவுக்கு விசயங்கள் புரியாததாகவும், குழப்பமானதாகவும் மர்மமானதாகவும் மாறின. அவனால் பேசவும் முடியவில்லை. மனதில் ஒளித்து வைக்கவும் இயலவில்லை. எவ்வளவுக்கெவ்வளவு அவன் புரிந்து கொள்ள முயற்சிக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சூழலின் ஒளியில் அல்லது இருட்டில் குழம்பிப் போனான்.
 
இன்று காலை தனது பெற்றோர் பேசுவதை கேட்டாலும் அவனால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அய்தா தாகர் இந்திராவை ஏன் வரச் சொன்னார். இந்திரா வருவாரா? அவரிடம் தாகர் என்ன சொல்வாள். ஏதேனும் சொல்வாளா?
 
பாராமாவும் அவனின் நண்பர்களும் ஒருபாயில் அமர்ந்திருந்தனர். ஹோலி கயானும், ஜெயராமும் மற்றவர்களும் தனி பாயில் அமர்ந்திருந்தனர். பதக்கிற்காக தனி பாய் ஒன்று காலியாக இருந்தது. சோனாராம் பதக்  அவரின் தந்தை மற்றவர்களுடன்  அமர்ந்திருந்தார். பலகையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கு கீர்த்தனை பாடுவதற்காக  பிரகாசமாக எரிந்து  கொண்டிருந்தது. சுவரீன் அருகில் இருந்த கட்டிலில் அய்தா தாகர் எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியாக படுத்திருந்தார். அவள் ஆழமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறாளா அல்லது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாளா என்பதை  கண்டுபிடிக்க முடியாது.
 
பாராமாவால் அய்தா தாகரின் கட்டிலை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை. அவள் எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பாள். இறந்து கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணி எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பாள். பாராமா தன்னைத் தாண்டிய எண்ணங்களில் அமிழ்ந்து போயிருந்தான்.
 
அந்த அறையில் ஒரு வகையான பதற்றம், எதிர்ப்பார்ப்பு நிரம்பியிருந்தது. சோனாராம் கீர்த்தனை படிப்பதை ஆரம்பிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்தார். வயதான பாட்டி இந்த மாலையில் இந்திரா கீர்த்தனை படிக்க வேண்டுமென விரும்பினார். அதனால் இந்திரா இதைச் செய்யட்டும். ஆனால் இந்திரா இன்னும் வரவில்லை.அவர் எங்கு இருப்பார்?
 
கதவு திறக்கும் சப்தம் கேட்டு அனைவரும் வெளியே திரும்பிப் பார்த்தனர். இந்திரா கையில் ஒரு உறை போட்ட புத்தகத்துடன் வந்தார். அந்த வீட்டில் முணுமுணுப்பு சத்தம் கேட்டது. ஆனால் தெளிவாக இல்லை. பாராமா அய்தா தாகரின் கட்டிலைப் பார்த்தான். இந்திரா வந்திருப்பது தெரிந்தால் அவளிடம் ஏதேனும் அசைவு, மாற்றம் ஏற்படுமோ என்ற தொனியில் பாராமா அவளின் கட்டிலைப் பார்த்தான்.
 
“நாங்கள் அனைவரும் உங்களுக்காகத்தான் காத்திருந்தோம்” என பாராமாவின் அப்பா சொன்னார்.
இந்திரா மண்டியிட்டு பிராத்தனை செய்தார். “ பிராத்தனையை தாங்கள் தொடங்குவது சிறந்தது’’”.”
 
இந்திரா பாயை வணங்கிவிட்டு நடுவில் வந்தமர்ந்தார். அவ்ர் புத்தகத்தைப் பார்த்து மூன்றுமுறை வணங்கிவிட்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தார். முதல் பாகத்தை எடுத்து மங்கல சுலோகத்தைப் பாட ஆரம்பித்தார். – கிருஷ்ணாயா பாசுதேவாய தெய்வகி என பாராமந்த மாதவம் வரை பாடி பாடலை முடித்தார்.
 
இந்திரா மெதுவாக பக்கங்களை திருப்பினார். அவர் ப்தினொராம் அத்தியாயத்தின் பொருளடக்கத்தை நன்கு அறிந்தவர். அவர் எல்லா அத்தியாயங்களையும் மனதில் வைத்திருக்கிறார். ஆனால் இன்று மாலை ராசாகரீராவில் ஒரு பகுதியை படிப்பதில் அவர் மிக ஆர்வமாக இருந்தார். பிரகலாத சரித்திரத்தையோ அல்லது பைகுந்த பிரயாணத்தையோ அல்லது மிகவும் ஆத்மீகமான உரையையோ, தெய்வீகமான பக்தி பவாயையோ கூடப் படிக்கத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அவர்கள் வரிசைப்படி படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திரா ஒன்பதாவது கீர்த்தனையில் ரசாகிரீராவிலிருந்து  ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இந்திரா அவரின் விருப்பப்படி அத்தியாயங்களை மாற்றிப் பாடுவதைப் பற்றி யாரும் கருத்துக் தெரிவிக்கவில்லை.
 
நன்கு படித்த கம்பீரமான குரலில் இந்திரா paatபாட ஆரம்பித்தார். நாவாம் கீர்த்தனையை அவர் முதலில் பாட ஆரம்பித்தார். எங்கே நீ சென்றாய்? தாமரையை ஏந்தியவனே, எங்கே கிருஷ்ணாவை கண்டுபிடிப்பேன், கோவிந்தா இல்லாமல் நாங்கள் எங்கள் வாழ்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அவர் ஒவ்வொரு பாடலையும் வரிசையாக பாட ஆரம்பித்தார். ஹோலி கயான் இன்றிரவு வழக்கமான உற்சாகத்துடன் இல்லை. இந்திரா மட்டும் தொடர்ந்து நிதானமாக, மெதுவாக படித்துக் கொண்டிருந்தார். ஒன்பதாம் கீர்த்தனையை பாடி முடித்தபின் சிறிது இடைவெளி விட்டார்.
 
பாபராமாவும் மற்றவர்களும் பெரியவர்களுடன் இணைந்து மிகக் கவனமாக படிப்பதை கேட்டுக் கொண்டிருந்தனர். பாராமா சூழலை கூர்ந்து ஒவ்வொருவரையும், ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்துக் கொண்டிருந்தான். கூடியிருந்த மக்கள் அனைவரும் ஆவலுடனும், ஆர்வத்துடனும் விளக்க முடியாத ஆர்வம் அவர்களை ஆட்கொண்டது. பாராமாவும் அதைப் போலத்தான் அதற்கு மேலாக உணர்ந்தான். எந்த நிமிடத்திலும் ஏதேனும் சொல்லலாம், ஒருவேளை தன்னுடைய பாவத்தைப் பற்றிக் கூட. எதுவெனக் கணிப்பது பாராமாவின் யூகத்தைத் தாண்டியதாக இருந்தது. அந்த சூழலின் விசித்திரத் தன்மை அதிகரிக்க அவன் தன் பாயுடன் ஸ்திரமாய் அமர்ந்திருந்தான். படிப்பதைத் தவிர வேறெதுவும் பெரிதாக அங்கே நிகழவில்லை. முதல் அத்தியாயம் முடிந்தது. இதன்பிறகு இரண்டு அல்லது அதற்கு மேல் அதிக அத்தியாயங்கள் முடிந்த பின் இன்றைய மாலைப் பிராத்தனைக் கூட்டம் முடிந்துவிடும். எதுவும் பெரிதாக நிகழவில்லை. இந்திரா அடுத்த அத்தியாயத்தை தாமதித்து துவங்கிய தொனியில் ஆரம்பித்தார்.

 “ஆனால் என் வாழ்க்கையின் பொக்கிஷத்தை நான் கொண்டுள்ளேன்.            முகுந்தா முராரி,
நீ உன்னையே என் வாழ்வில் வெளிப்படுத்தியுள்ளாய் தாமோதரா,”

கோஷங்களை திரும்பச் சொன்ன பிறகு, பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பாட ஆரம்பித்தார். ””  “ கோபி, யாருடைய பார்வை காதலை உண்டாகுகிறதோ, கோபாலாவின் மனதை சஞ்சலப்பட வைக்கிறது “  என அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். இந்திரா இன்றிரவு பாடிய பாடல்கள் வித்தியாசமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கலாம். அந்த  அத்தியாயம் முடிவடைய இன்னும் நான்கு செய்யுள்களே இருந்த நிலையில் ‘தனக்கு இணையாக அவளுக்கு மரியாதை அளிக்கும் போது, அவனுக்கு தரையில் அமர அவள் ஏற்பாடு செய்த...”
 
திடீரென இன்னொரு குரல் அந்த அறையில் பிரவேசித்தது. கைப்பற்றியது. “ இந்திரா.. இந்திரா”  இந்திரா அடுத்த அத்தியாயத்திற்கு செல்வதைப் போல் திடீரென்று நிறுத்தினான்.
 
அய்தா தாகர் சத்தமாகவும் தெளிவாகவும் கூப்பிட்டார். “ இந்திரா!’ அனைவரும் இந்திராவைப் பார்த்தனர். ஹோலி கயான் , பாராமாவின் அப்பா, ஜோய் ராம், சோனாராம் பதக் என் எல்லோரும். எல்லோரும் இப்போது இந்திரா தன்னுடைய இருக்கையை விட்டு எழுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் இந்திரா அமைதியாகவும், பதட்டமில்லாமலும் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் அந்த அத்தியாயத்தை ஒரே மூச்சில் முடித்துவிட நினைத்தார். ஒன்றோ இரண்டோ செய்யுள்களை அவர் வாசித்திருப்பார்.      ‘அங்கு அமர்ந்திருந்த அனைவருக்கும் தெரியுமபடி’.

‘இந்திரா! அந்த குரல் மீண்டும் மிதந்து கொண்டு வந்தது. இந்திரா இந்த முறை நிறுத்தினார். அவர் வேறெந்த பக்தரையும் பார்க்கவில்லை. சிறிது நேரம் தாகரின் கட்டிலைப் பார்த்துக் கொண்டிருந்தார். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை திறந்து வைத்தபடியே இருக்க. அவர் எழுந்தார். அந்த அமைதியான, கம்பீரத்துடன்/ மரியாதையும் இந்திரா தாகரை நோக்கிச் சென்றார். தரணி கையில் விளக்குடன் அவரை பின்பற்றினார்.
இந்திரா தாகர் அருகில் நின்றார்.

இந்திரா தாகரை எப்படி அழைப்பது என் புரியாமல் யோசித்தார். ஆனால் தாகர் இந்திரா இன்றிரவு நன்றாக இருப்பதை அறிந்து கொண்டார். தன்னுடைய இடதுகையை அவரை நோக்கி மெல்ல நீட்டினாள்.

தாகர் தன்னுடைய மெல்லிய குரலில், மிகத் தெளிவாக, ஏறக்குறைய சத்தமாக எல்லோரும் கேட்கும்படி, அந்த வயதான பெண்மணி சொன்னாள்.
“ நான் எந்த பாவமும் செய்யவில்லை. வெளிப்படுவதற்கு என்னிடம் இன்றும் இல்லை.”
 
இந்திரா தன்னுடைய கையை அவளின் கையின்மேல் வைக்க வேண்டுமா என் யோசித்தான். ஆனால் அடுத்த நொடியே எந்தவொரு தயக்கமும் இன்றி தாகரின் கையை தன் கைகளுக்குள் பற்றினான். தாகரின் இளைத்த மெலிந்த முகம் ஒளிர்ந்தது. எதுவோ அவள் சொல்ல முயற்சித்தது போல் உடல் எழும்பியது.
 
அவளின் முழுப்பார்வை, அவன் முகம் இனிமையாக முறையிடுவதைப் போன்ற பாவனையை இந்திராவைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

படிப்பதை முழுமையாக முடிக்க வேண்டிய அவசியமில்லை. பாராமாவும் மற்றவர்களும் பாயாசங்களைப் பெற்றனர். இரவு நெருங்க கிராமத்தினர் மூங்கில் தோப்பில் நுழைந்தனர் மூங்கில்களை வெட்டுவதற்காக.
 
ஆனால் விஷயங்கள் முடிந்தபாடில்லை. பாராமாவால் அவனின் கவலையில் இருந்து மீண்டுவர இயலவில்லை. அந்த இரவு அவர் உணவு உண்ணவில்லை. தனது கைகளை தன் அம்மாவின் மேல் போட்டபடி அவன் தூங்க முயற்சித்தான். அன்று மாலையில், அய்தா தாக்ர் எதுவும் சொல்லாமலே இறந்துவிட்டார். அவள் எதுவும் சொல்லவில்லை. அவளின் ஆன்மா நிம்மதியை அடைந்திருக்குமா? ஆனால் அவள் கண்டிப்பாக ஏதாவ்து சொல்லியிருக்க வேண்டும். அவளின் ரகசியங்கள் அவளிடமே உள்ளன. அவன் அவனது அம்மாவைக் கேட்க வேண்டுமா? ஆனால் அவனது எண்ணங்களை ஒழுங்குபடுத்தி கவலைகளையும் பற்றி அவன் அம்மாவிடம் கேட்க நினைத்தான். ஆனால் அதை எப்படி கேட்பது என அவனுக்கு தெரியவில்லை.
 
டெண்டா தரைப்பரப்பிற்கு சென்றிருந்தான். அவர்களின் வீட்டிற்கு பின்னால் உள்ள காட்டில் அய்தா தாகர் எரிக்கப்படுவாள். ஒன்றிரண்டு மூங்கில்கள் எறிந்து கொண்டிருப்பதைப் போன்ற சப்தம்  மிதந்து வந்தது. இருந்தாலும்  பாராமா தளறாத நிலையில் இல்லை. அய்தா தாகரின் விசயங்கள் சொல்லப் படாமல் விடப்பட்டன்.  அவளின் ஆன்மா விடுதலையடையாது.

அந்த கதைகள் கூட அவனை தொந்தரவு செய்து கொண்டிருந்தது. இன்று வரை, இரண்டு கொடிய அமைதியில்லாமல் அலையும் ஆன்மாக்கள் தீவிரமாக அலைந்து கொண்டிருக்கின்றன. அடுத்த கிராமத்தில் மேலும் ஒன்று இருக்கலாம். மூன்று பேய்கள் நிம்மதியில்லாமல் காடுகளின் பின்னே நிலவில்லாத அம்மாவாசை இருட்டில் அலைந்து கொண்டிருக்கும்.
 
பாராமா தன்னுடைய அம்மாவை இறுக கட்டிக் கொண்டு கேட்டான்

‘ இந்த முறை என்று அம்மாவாசை வரும் அம்மா?’


- அஸ்ஸாமீஸ் மொழியிலிருந்து மொழிபெயர்த்தவர் – பிரதீப் ஆச்சர்யா. தமிழில்: சுப்ரபாரதிமணியன் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R