தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டார் மரத்திலே என்ற பாடல் காதுக்கு இனிமையாக இருப்பது போல் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாக... இருக்கும். இந்த கூடுகளை இன்றைய தலைமுறைக் குழந்தைகளில் எத்தனை பேர் தூக்கணாங்குருவியையும், அதன் கூட்டையும் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்து விட்டதே என்று வியக்கும் வ்ண்ணம் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. ஒரு அற்புதமான கூட்டினை கட்டுவதற்கு அது பதினெட்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வல்லுநராக இருக்க வேண்டும். வீடு கட்டியாகி விட்டது. வீட்டுக்கு விளக்கேத்த வேண்டுமே. பறவைகள் மண்ணெண்ணெய்க்கும் மின்சாரத்துக்கும் எங்கு போகும். இயற்கை அதற்கும் வழி சொல்லித்தந்துள்ளது. ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்கிறது.

'தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டார் மரத்திலே' என்ற பாடல் காதுக்கு இனிமையாக இருப்பது போல் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாக... இருக்கும். ' இன்றைய தலைமுறைக் குழந்தைகளில் எத்தனை பேர் தூக்கணாங் குருவியையும், அதன் கூட்டையும் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்து விட்டதே என்று வியக்கும் வ்ண்ணம் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. ஒரு அற்புதமான கூட்டினை கட்டுவதற்கு அது பதினெட்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வல்லுநராக இருக்க வேண்டும். வீடு கட்டியாகி விட்டது. வீட்டுக்கு விளக்கேத்த வேண்டுமே. பறவைகள் மண்ணெண்ணெய்க்கும் மின்சாரத்துக்கும் எங்கு போகும். இயற்கை அதற்கும் வழி சொல்லித்தந்துள்ளது. ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்கிறது.

ஆண்பறவைதான் கூடுகட்டும். காய்ந்த புல், வைக்கோல், நீண்ட இலைகள் போன்றவைகளை சேகரித்து வந்து கூடுகட்டும். இவற்றை இணைப்பதற்கு ஈரகளிமண், உலர்ந்த மாட்டு சாணி ஆகியவற்றை கொண்டு வந்து, வீடுகட்ட மனிதன் சிமிண்ட் அல்லது சுண்ணாம்பு கலவையை பயன்படுத்துவது போல், அவற்றை பசையாக்கி புல், வைக்கோல், இலைகள் ஆகியவற்றை இணைத்து வலுவான உறுதியான கூட்டினைக் கட்டுகிறது. தலைகீழாக தொங்கும் சுரைக்காய் போன்று இருக்கும் இதன் கூட்டின் நீண்ட பகுதியை தனது பெண் துணை உறுதியான பின்னரே ஆண்குருவி கட்டுகிறது. அது வரை கூட்டின் கூண்டுப் பகுதி மட்டுமே இருக்கும். இப்பகுதியை கட்டி முடித்த பின் தனது பெண் துணையை ஆண்குருவி கூட்டி வந்து காட்டும். கூட்டின் உட்பகுதி பெண்குருவிக்கு பிடிக்கவில்லை என்றால் பெண்குருவி ஆண்குருவியை விட்டு பிரிந்து விடும். ஆண்குருவி வேறு பெண்குருவியை தேடிச்செல்லும், அல்லது கூட்டை சிறிது மாற்றியமைத்து மீண்டும் பழைய பெண்குருவியை கூட்டி வந்து காட்டும். இவ்வாறு பெண்குருவியின் ரசனைக்கேற்ப கூடுகட்டிய பின் அதை பெண்குருவியும் ஏற்றுக்கொண்ட பின் கூட்டின் நீண்ட பகுதியை ஆண்குருவி கட்டத் தொடங்கும்.இவை நார்களை, இலைகளை தங்கள் அலகுகளால் நேராக கிழித்து அவற்றை பின்னி கூடுகளைக் கட்டும். இதனால் இதனை ஆங்கிலத்தில் வீவர்ஸ் பேர்ட் (WEAVERS BIRD) என்று அழைக்கிறார்கள்.

தூக்கணாங்குருவி ஒரு தலைசிறந்த பொறியியலாளரும் கூட. பெண்குருவி ஒரு பருவத்துக்கு மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். இந்த முட்டைகள் கூண்டு பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்படும். காற்று வீசும் திசையை நன்கு கணித்து அதற்கேற்ப கூண்டின் குடுவைப்பகுதியும், நீண்டபகுதியும் அமைக்கப்படும். காற்று எவ்வளவு வேகமாக அடித்தாலும், முட்டைகள் குடுவைப்பகுதிக்குள்ளேயே இருக்கும்படி நீண்ட பகுதி பின்னப்பட்டிருக்கும்.மேலும், கூட்டின் மீது காற்றின் தாக்கம் இல்லாத மரக்கிளைகளில் இவைகள் கூடுகட்டும். குடுவை போன்ற பகுதியை கட்ட எட்டு நாட்களும், நீண்ட பகுதியை கட்ட பத்து நாட்களும் இவை எடுத்துக்கொள்ளும். கூடுகட்டும் பொருட்களை சேகரிப்பதற்காக இவை சுமார் 500 முறை பறந்து செல்கின்றன.கூட்டைக்கட்ட சுமார் நான்காயிரத்துக்கு மேற்பட்ட பதர்களையும், மற்றவற்றையும் சேகரிக்கின்றது. பெண்குருவி பதினைந்து நாட்கள் அடைகாக்கும். குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து சென்றபின் ஆண்குருவி வேறு கூட்டை கட்ட ஆரம்பிக்கும்.

இவை தானியங்கள், பூச்சி புழுக்கள் ஆகியவற்றை உண்டு உயிர்வாழக்கூடியவை. இவை கூட்டம் கூட்டமாக வாழக்கூடியவை. இவற்றின் கூட்டை தனியாக பார்க்கமுடியாது. ஒரு பகுதியில் குறைந்தது இருபது முப்பது வீடுகள் இருக்கும். இந்திய துணைக்கண்டம் முழுவதும் இப்பறவைகளைக் காணலாம். தெற்காசியா, தென்கிழக்காசியாவின் தெற்குப்பகுதிகளில் மட்டும் இப்பறவைகளைக் காணமுடியும். சிட்டுக்குருவி இனத்தை சேர்ந்தது தூக்கணாங்குருவி. இக்குருவியின் உச்சந்தலை, மார்பு ஆகியவை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.பெண்குருவிகள் பொதுவாக மரவண்ண நிறத்தில் இருக்கும்., முட்டையிடும் பருவத்தில் ஆண், பெண் குருவிகள் இரண்டும் அடர்த்தியான பிரகாசமான மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும் . இனப்பெருக்கம் இல்லாத காலங்களில் இவை கூடு கட்டுவதில்லை. அக்காலங்களில் இவை மரப்பொந்துகள் போன்ற அடைவிடங்களில் கூடி இரவைக் கழிக்கும். பொதுவாக இப்பறவைகள் முட்கள் இருக்கக்கூடிய ஈச்சமரம், கருவேலமரம், இலந்தை மரம் போன்ற மரங்களில் கூடுகளைக் கட்டும். பொதுவாக நீர்வளம் நிறைந்த பகுதிகளை தேடி இவை கூடுகளைக் கட்டும்.முட்டைகளை யும் குஞ்சுகளையும் உணவாக்கிக் கொள்ளவரும் பாம்பு, காகம் ஆகியவைகளிடம் இருந்து தப்பிக்கவே இவ்வாறு கூடுகளைக் கட்டுகின்றன. இவற்றின் கூடுகளை விவசாயக்கிணறுகளுக்குள்ளும் காணலாம்.

தமிழகத்தின் செழிப்பு மிகுந்த பகுதிகளில் இவை பரவலாக காணப்படும். முல்லையாற்றின் கரையில் இக்கூடுகளை பரவலாக காணலாம். வைகை அணையில் இருந்து பேரணை வரையிலான பகுதிகளில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மழைக்காலங்களில் இவற்றின் கூட்டினை இப்பகுதிகளில் ஏராளமாக காணலாம். விவசாயப்பரப்பு குறைந்து வருவதும், பருவநிலை மாற்றத்தால் பயிர்கள் அழிந்து வருவதும், இயற்கையை மனிதன் பகைத்துக் கொண்டதால் உருவாகும் வறட்சியும் பஞ்சமும் இவற்றை மிகவும் பாதித்துள்ளன.சர்வதேச நாடுகளின் அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் தூக்கணாங்குருவிகள் இடம் பெறவில்லை. அதனால் அழிவுக் கவலையற்ற இனங்கள் பட்டியலில் தூக்கணாங்கருவிகள் இடம் பெற்றுள்ளன.எனவே இவற்றை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பது பொது உண்மையாகி விட்டது. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது அறுபதுகளில் நீர்நிலைகள் அருகில் இருந்த மரங்களில் இவற்றின் கூடுகள் தொங்குவது மிகவும் சாதாரணமான விஷயமாக இருந்தது. இன்று அவற்றின் கூடுகளை காண மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க ஒரு இயக்கம் தோன்றியுள்ளது போல் இவற்றை பாதுகாக்கவும் ஒரு இயக்கம் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வறண்டு போன ஆறுகள், காய்ந்து போன ஏரிகள், கண்மாய்க்கரைகள் நிரந்தரமாகி விட்ட இன்றைய சூழலில் இவை மாயமாகி வருகின்றன. இவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால், நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், பசுமையை உருவாக்க வேண்டும், காடுகளை பராமரிக்க வேண்டும் .

நன்றி: முகநூல் நண்பர் சுப்ரமணியன் ரவிகுமார்


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R