அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு EPPING MEMORIAL HALL (827  HIGH STREET, EPPING, VIC 3076 - Melway :-  182 B10 ) இல் நடைபெறும். விழாவில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி, கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘மறுவளம்’ நூல் வெளியீடு, ‘வண்ணம்’ வெளியீட்டாளர் சிவா முனியப்பன் அவர்களின் ’ஒன்லைன் புத்தகங்கள் & ஒலிவடிவப்புத்தகங்கள்’ பற்றிய ஒரு கலந்துரையாடல், ‘பாரதம் தந்த பரிசு’,  ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’, ’ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’ நூல்கள் அறிமுகம். ’பாலகாத்தான்’ (காத்தவராயன்)கூத்து மற்றும் கானமழை (இன்னிசை நிகழ்ச்சி) என்பவை இடம்பெறும்.

அன்று நடைபெறும் ’அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியில்’ உங்கள் புத்தகங்களும் இடம்பெறவேண்டுமாயின் – நீங்கள் புலம்பெயர்ந்த்தன் பிற்பாடு எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் பிரதி ஒன்றை அனுப்பி வைக்கலாம். இந்தப்புத்தகங்கள் மீள உங்களுக்கு கையளிக்கப்படமாட்டாது. அவ்வப்போது நடைபெறும் புத்தகக்கண்காட்சிகளில் அவை காட்சிப்படுத்தப்படும். தொடர்புகளுக்கு

தலைவர் - சு.ஸ்ரீகந்தராஜா (03)94651319 / 0478060366
செயலாளர் - கே.எஸ்.சுதாகர் (03)83618265 / 0431038728
மின்னஞ்சல் முகவரிஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..


EPPING MEMORIAL HALL;
827  HIGH STREET, EPPING, VIC 3076
(Melway Ref:-  182 B10 )
27.10.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி

۞ அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி
۞  கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘மறுவளம்’ நூல் வெளியீடு     ۞ நூல்கள் அறிமுகம்
۞ ’ஒன்லைன் & ஒலிவடிவப்’ புத்தகங்கள் - வண்ணம்’ வெளியீட்டாளர் சிவா முனியப்பன்
۞ ’பாலகாத்தான்’ (காத்தவராயன்) கூத்து (10 நிமிடங்கள்) ۞ கானமழை (இன்னிசை நிகழ்ச்சி)

 

மேலதிக விபரங்களுக்கு: 

சு.ஸ்ரீகந்தராஜா (03)94651319 / 0478060366      கே.எஸ்.சுதாகர் (03)83618265 / 0431038728 

பா.ஆனந்தகுமார் 0433922340                         செ.கிருஷ்ணமூர்த்தி (03)94042459 / 0402418304

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R