வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்![ அணமையில் எனது வலைப்பதிவுக்காக எழுதிய ஆங்கிலக் கவிதைகளும், நானே மொழிபெயர்த்த அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் ஒரு பதிவுக்காக இங்கு பதிவுகள் வாசகர்களுக்காக பிரசுரமாகின்றன. - வ.ந.கி. ]

1. ஒரு பொறாமைமிக்க கவிஞன்!

- வ.ந.கிரிதரன் -

எனக்குப் பறவைகளின்மேல் பொறாமையாகவுள்ளது.

சிலநேரங்களில் என்னை அவற்றிடத்திலிருத்தியுள்ளவாறு
கனவு காண்கின்றேன்.

நிலமானது வசந்தத்தில் பூத்துக்குழுங்கும்போது
அவை இங்கு, வடக்குக்கு தெற்கிலிருந்து
வருகின்றன.

அவை களைப்பற்றுப் பறப்பவை.

இலைகள் மரங்களைவிட்டு நீங்கும்போது
அவையும் வடக்கிலிருந்து தெற்குநோக்கிச்
செல்லுகின்றன.
இடைப்பட்ட காலத்தில்
அவை இணைகின்றன,
முட்டைகளிடுகின்றன, மேலும்
முட்டைகள் பொரிக்கும்போது
அவைதம் சந்ததிகளை
அவை முழுமையாக இறகுகள்
முளைத்து பறக்கும் பறவைகளாகும் வரையில்,
சிறகுகளை அகல விரிக்கத் தயாராகும்வரையில்
பாதுகாக்கின்றன.

நான் குளிர்காலச் சூழலை எதிர்கொண்டிருக்கையில்
அவை வெப்பமான வானத்தை நோக்கி
மீண்டும் பறக்கின்றன.
அவை தெற்கு நோக்கிச்செல்லுகையில்
ஒருவிதமான சோகம் என்னைச் சூழுகிறது.

பல வருடங்களுக்கு முன்னர்
இந்தப் பறவைகளைப்போல்
நான் என் பிறந்த நிலத்தைவிட்டு
விலகினேன்.
ஒரு குடிவரவாளனாக,
ஓர் அகதியாக
இங்கு வந்ததிலிருந்து
நான் விலகிவந்த என்
நிலத்தைப்பற்றி கனவு
கண்டுகொண்டுதானிருக்கின்றேன்.
விலகிய நிலத்திலும்,
அடைந்த நிலத்திலும்
என் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வது
பற்றி
நான் இன்னும் கனவு காண்கையில்,
கனடிய வாத்துகளோ என் கனவினை
வருடா வருடம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

வாழ்வினைப் பிரித்திடும் ,
ஈருலகங்களில் நல்லவற்றை உள்வாங்கும் அவற்றின்
செய்கைக்காக
எனக்கு அவற்றின்மீது
பொறாமையாகவுள்ளது.

***  *** ***  ***

1.  A  Jealous Poet

By V.N.Giritharan

I am jealous of  birds.

Some times I dream of
placing myself
in their shoes.

When the ground blooms
in the spring,
They arrive here, the North
from the South.

They are tireless flyers.

When the leaves leave the trees
They too leave from the North to the South.
In between,
they mate,
they lay eggs, and
when the eggs hatch,
they look after their offspring
until they become full fledged birds;
until they are ready
to spread their wings.
 
As I face the wintery environment,
they fly back to the warmer sky.
As they leave for the South,
A kind of sadness envelopes me.

Many years ago,
I left my home land
like these birds.
Since my arrival here
as an immigrant,
as a refugee,
I have been dreaming about
the land I left.
While, I am still dreaming
about sharing my life
in between the land I left
and the land I reach,
the Canadian Geese
live my dream
year after year.

I am jealous of them
for the way they divide
their life;
for the way
they accomodate
the best from both worlds.
 
https://vngiritharan23.wordpress.com/2014/01/24/poem-a-jealous-poet-by-v-n-giritharan/

 


 2. 'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!'

- வ.ந.கிரிதரன் -

வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்!- 'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!' என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது. -

சிறியதிலிருந்து பெரியதுவரை,
மெதுவானதிலிருந்து
விரைவானதுவரை,
அவதானிப்புகள் பறவைகள்
பற்றிய,
அவை பறக்கும் வெளி-நேரம் பற்றிய
அதிக விபரங்களைக்
கற்றுத்தந்துள்ளன.

வித்தியாசமான பறவைகள்
வித்தியாசமாகப் பறக்கின்றன.
வித்தியாசமாக நடந்துகொள்கின்றன.
சில தமது அறிவினைப் பாவிப்பதன்
மூலம், காற்றினூடு வழுக்கிச் செல்கின்றன.
சில பெரிய பறவைகள் காற்றோட்டத்தினைப்
பாவத்து மேல் நோக்கிப் பறக்கின்றன.
பறவை அவதானிப்பு என்னைத்
தத்துவபூர்வமாகச் சிந்திக்குமாறு
உருவாக்கியுள்ளது.
இது என்னிதயத்தை இன்பத்தாலும்,
பேரானந்தத்தாலும் நிறைத்துள்ளது.
தூங்குதல், கூடு கட்டுதல், பெற்றோராகச் செயற்படுதல்,
இவையெல்லாம் என் சிந்தையில்
அவற்றைப் பெருமைக்குரியதாக
உருவாக்கியுள்ளன.
அவற்றின் வாழ்க்கை எளிமையானது; சில செயல்களே
செய்வதற்குள்ளன, ஆனால் அவற்றை
ஒழுங்காகச் செய்கின்றன.
சபதங்கள் மூலமும், உடல்ரீதியான
அசைவுகள் மூலமும்,
அவை சிறப்பாகத் தொடர்புகொள்கின்றன.
களைப்படையாமல், நம்பிக்கை இழக்காமல்,
இரைக்காக அமைதியுடன் காத்திருக்கும்
விலங்குள் நிறைந்த
கொந்தளிக்கும் சூழல்களுக்குள்
அவை தங்கள் இருப்பினைக்
களிப்புடனும் ஆரோக்கியமான
நம்பிக்கையுடனும்
கொண்டு செல்கின்றன.
இந்த அழுத்தங்கள் ,மிகுந்த
'காங்கிரீட்' காட்டினுள்
எங்கள் கூடுகளோ
பொருளியல்ரீதியிலான
ஆசைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும்
நிறைந்து கிடக்கின்றன.

அவை, பறவைகள், வாழுதல் பற்றி
நிறையவே எனக்குக்
கற்றுத்தந்துள்ளன.
மேலாகவும், கீழாகவும்,
இடமாகவும், வலமாகவும்,
ஆகாயத்தில் உயரமாக,
மிகவும் கீழேயுள்ள நிலத்தைப் பற்றி,
எல்லைகள் பற்றி எந்தவிதக்
கவலைகளுமில்லாமல்
பறக்கும் அவற்றின் ஆற்றல்
என் சிந்தனையை
ஆழமாகவும், அறிவுபூர்வமானதாகவும்
உருவாக்கியுள்ளது.

காலநிலைகள் அவற்றின் இடப்பெயர்தலை
மட்டுமே நிர்ணயிக்கின்றன.
தமது சிறகுகளின் வலிமையுடன்
அவை எங்கு செல்ல விரும்பினாலும்
செல்லலாம்.
ஒருநாள்,
எமது அறிவு அனுமதித்தால்
நாமும் அவைபோல் சிறகடிக்கலாம்.
அல்லது நாம் அவற்றைவிட இன்னும்
விரைவாகப்
பறக்கலாம், அலைகளைப் போல்,
மின்காந்த அலைகளைப் போல்.
அதுவரை,
அவற்றைப் போல் பறப்பதற்கு விரும்புகின்றேன்.
அவற்றைப் போல் காற்றினில் எனது சிறகுகளை
விரிப்பதற்கு விரும்புகின்றேன்.
மிகவும் கீழேயுள்ள பிளவுண்ட நிலங்களிலுள்ள
எல்லைகள பற்றிய, தடுப்புமுகாம்கள்
பற்றிய
எந்தவிதக் கவலைகளுமில்லாமல்,
வானில் உயரத்தில் சிறகடிக்க
விரும்புகின்றேன்.

  *** *** *** ***

2, Poem: A Refugee’s Thoughts On Birds

By V.N.Giritharan

From tiny to very large.
Slow to fast.
Observations taught me a lot
about birds,
About the space-time where
they fly.
Different birds fly differently;
behave differently.
Some use their knowledge to
glide through the air.
Some large ones use the air currents
to fly upwards.
Bird observation makes me
think philosophically.

It fills my heart with happiness and bliss.
Roosting, nesting and parenting
Makes them so proud
in my thoughts.
Their life is simple; few things to do, but do
regularly.
Through sounds and physical movements
they communicate efficiently.
Without getting tired, without losing hopes
Amidst turbulent environments
where predators wait patiently,
They carry on their existence
happily & optimistically.
In this tension-filled,
stress-filled
concrete jungle,
Our nests are filled up
with materialistic aspirations.
They, birds taught me a lot on living.
Their ability to fly up and down,
Right and left,
On the sky high,
without worrying about borders
on lands far below,
Makes my thinking broad and
wise.

Seasons only determine their migrations.
With their wings’ strength
They can fly anywhere
they want to go.
One day, If our knowledge permits,
We may fly like them; or
We may even fly faster than them, like
waves, electromagnetic waves.
Until then,
I wish I could fly like them;
I wish , I could spread my wings in the air
like them.
Without worrying of borders, detentions
far below on divided lands
I wish I could fly like them high in the
sky.

Courtesy: http://www.srilankaguardian.org/2013/08/poem-refugees-thoughts-on-birds.html


வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்!- இந்தக் கவிதை எனது வலைப்பதிவுக்காக எழுதிய My humble request to the bellicose rulers of the world என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

3. கவிதை: போர்முனைப்புக் கொண்ட இவ்வுலகத்தின் ஆட்சியாளர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

- வ.ந.கிரிதரன் -

போர்முனைப்புக் கொண்ட இவ்வுலகத்தின்
ஆட்சியாளர்களுக்கு எனது
பணிவான வேண்டுகோளிது.

உங்களுக்கு அசோகாவைத் தெரியுமா?

மகா அசோகா,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவை ஆண்ட
உன்னதம்மிக்க
இந்தியச் சக்கரவர்த்தி.

அவர் ,
அமைதிப்பிரியராக
மாறிய
போர்ப்பிரியர்.

அவர்,
சமாதானப் பிரியராக
மாறிய
போர்வீரர்.

அவர் கலிங்கத்தில்
இரத்தம்தோய்ந்த
யுத்தத்தைப் புரிந்தவர்.

அழிவுகளின் யுத்தம்.

மிகப்பெரிய மானுட
அழிவுகளின் யுத்தம்.

மகா அசோகா.
தானே உருவாக்கிய மிகப்பெரிய
மானுட அழிவுகளுக்குச்
சாட்சியாக இருந்த
உன்னதம்மிக்க இந்தியச்
சக்கரவர்த்தி.

யுத்தத்தின் சாட்சியாக விளங்கியதும்,
அதன் விளைவுகளும்
அவரை மிகவும் ஆழமாகப்
பாதித்தன;அவரை
அடியோடு
மாற்றிவிட்டன.

அசோகா, யுத்தமனிதரான
அவர் அன்புமிக்கவராக,
அமைதியை நாடுபவராக
மாறினார்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு
முன்
ஒரு யுத்தம் அவரை
அமைதியை விரும்பும் ஒரு
மனிதராக, பெளத்தராக
மாற்றியது.

வாக்குச் சாதுரியத்தால் ஆட்சியில்
அமரும் சாமர்த்தியம் மிக்கவரே,
சொல்லொன்றும், செயலொன்றுமாக நடமாடும்
கபடதாரிகளே,
போர்ப்பிரியர்களே,

இந்த நவீன உலகத்தின்
ஆட்சியாளர்களான
நீங்கள்
எத்தனை யுத்தங்களை
சமாதானத்தின் பெயரால்,
மொழியின் பெயரால்,
சமயத்தின் பெயரால்,
தேசியத்தின் பெயரால்,
நடாத்தினீர்கள்?

போர்முனைப்பு மிக்க
இவ்வுலகத்தின் ஆட்சியாளர்களே!
உங்களுக்கு எனது பணிவுமிக்க
வேண்டுகோள் இதுதான்:

எப்பொழுது நீங்கள் நடந்தவற்றிலிருந்து
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவை ஆண்ட
உன்னதம்மிக்க
இந்தியச் சக்கரவர்த்தியான
மகா அசோகாவின் கதையிலிருந்து
பாடம் படிக்கப் போகின்றீர்கள்?

*** *** *** ***

3. POEM: My humble request to the bellicose rulers of the world!

By V.N.Giritharan

This is my humble request
to the bellicose rulers
of the world.

Do you know Ashoka?

Ashoka the great,
a great Indian emperor
who ruled the country
two thousand years ago.

He, a warmonger
became a great
peacemonger.

He , a warrior
became a great
pacifist.

He fought a bloody
war in Kalinga.

A war of destruction.

A war of
great human tragedy.

Ashoka the great,
a great Indian emperor
witnessed the human
tragedy which he himself
caused.

Witnessing the
war and its effects,
affected him
profoundly;
changed him
forever.

Ashoka , a man of war
became a man of
love ; a man of
peace.

Two thosand years ago
a war changed him
into a peace loving
man, a Buddhist.

You Demagogues,
You Hypocrites,
You warmongers,

how many wars
Have you, rulers
of the modern world,
waged
in the name of
peace;
in the name of
language;
in the name of
religion;
in the name of
nationalism.

My humble request
to you, bellicose rulers
of the world, is
this:

When are you
going to learn
a lesson
from the past;
from the story
of Ashoka,
a great Indian emperor,
who ruled the country
two thousand years ago
?

Courtesy: http://www.srilankaguardian.org/2013/10/poem-my-humble-request-to-bellicose.html


 4. பொருள் சார்ந்த நிரல்.

- வ.ந.கிரிதரன் -

வ.ந.கிரிதரனின் நான்கு ஆங்கிலக் கவிதைகளும், தமிழ் மொழிபெயர்ப்புகளும்!- எனது வலைப்பதிவுக்காக எழுதிய 'An object oriented program' கவிதையின் தமிழாக்கம். - வ.ந.கி - -

வீழும் இலை, பாடும் புட்கள்,
நீல வான், மரங்கள், சுடரும் நட்சத்திரங்கள்,
மானுடர்....
நாம் இயங்கும் வெளி-நேர
நிரலினை
எழுதியது யார்?

பொருள் சார்ந்த நிரல்.

ஏனைய நிரல்களைப் போல்
இந்த நிரலும் தவறுகளைக்
கொண்டதுதான்,
ஆனால் ஒரு விடயம் தவிர,
அது:
இது இதன் பொருட்களை
இதன் தவறுகளைச் சீராக்க
அனுமதிக்கிறது.

திருத்தங்கள் முழுமையானதோ அல்லது
இறுதியானதோ அல்லவென்றாலும்,
அவை தொடர்ச்சியான 'சேவைப்பொதி'களால்
இதன் பொருட்களால்
மேம்படுத்தப்படக் கூடியவை,
இதனை உருவாக்கிய
நிரல் வல்லுநர்களால் அல்ல.

அற்புதம்!

சேவைப்பொதிகள் - Service Packs
பொருட்கள் - Objects
நிரல் - Program
நிரல் வல்லுநர் - Programmer


*** *** *** ***

4. An object oriented program!

- V.N.Giritharan -

Falling leaves, chirping birds,
blue skies, trees, lakes, twinkling stars,
humans..
Who wrote the code
of this program of space-time
where we all function?
 
An object oriented program.
 
This program has bugs like
all other programs,
but exceptional
in one aspect:
It allows
its objects
to fix its bugs.
 
Though the fixes
are not perfect and
final,
they can be upgraded
by continual service packs
by the objects themselves,
not by the programmer.
 
Amazing!

http://vngiritharan23.wordpress.com/2013/11/10/an-object-oriented-program/


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R