லண்டனில் ‘சலங்கைகளின் சங்கமத்’தின் வெள்ளி விழா‘சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்புத் தொடர்ந்து வருடந்தோறும் ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியை முன்னெடுத்து 25 வருடங்களை பூர்த்திசெய்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். கணபதி வந்தனம், கவித்துவம், கீர்த்தனம், நவீன வடிவில் அமைந்த வித்தியாசமான  பூ நடனம், கிருஷ்ண பஜனை, செம்பு நடனம், குறத்தி நடனம், சிவஸ்துதி நடனம், தில்லானா என நாட்டியத்தின் பல்வேறு வடிவங்களை இந்த மேடையில் நடன ஆசிரியர்கள், அவர்களின்; மாணவர்களென தொடர்ச்சியாக முன்னெடுப்பதை சிறந்த ஒரு நாட்டியக் கலையின் வளர்ச்சியாக என்னால் அவதானிக்க முடிகின்றது’ என கீழைத்தேச நுண்கலை அமைப்பின் தலைவியும் ( ழுநுடீடு), நாட்டியக் கோகிலவாணியுமான ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் இடம்பெற்ற  வெள்ளிவிழா நாட்டிய நிகழ்வின்போது தனது பிரதமவிருந்தினர் உரையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தனது பேசுகையில்; ‘நாட்டிய ராஜேஸ்வரி நர்த்தனம் பட்டம் பெற்ற ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா நாட்டியத்தில் புதிய புதிய வடிவங்களைக் கையாண்டு மாணவர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தி, நாட்டிய நாடங்களையும் இணைத்து புதியரசனையில் உட்படுத்திவிடுவது மகிழ்ச்சிக்;குரிய விடயம். அந்த வகையில் இன்றைய ‘பார்வதி பரியம்’ என்ற நாட்டிய நாடகத்தின் மூலம் புராணக்கதையுருவத்தை  கண்முன் நிறுத்திய கலைஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.  ‘மாயா’ நடனக்குழுவை பாங்களுரில் நடாத்தி வரும் பாங்களுர் நாட்டியக் கலைஞரான கே.சி. ருபேஷ் சிவனாகவும், ஜெயந்தி யோகராவின் அன்பு மகளான நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜா பார்வதியாகவும் இணைந்து வழங்கிய காட்சிகள் மிகவும் பாராட்டுக்குரிய காட்சிகளாக அமைந்திருந்தன. அவர்களுடன் இணைந்து பல்வேறு பாத்திர வடிவங்களை சலங்கைகளின் சங்கமம் நுண்கலை அமைப்பின் தலைவி நாட்டிய விசாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும், அந்த அமைப்பின் ஆரியர்கள் மாணவர்கள் என 30 இற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இணைந்து சிறப்பித்தமை புத்துணர்வு தரும் புதிய முயற்சி’ என மேலும் அவர் தெரிவித்தார்.

நாட்டியக் கலாசாரதி  ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் வெள்ளிவிழா நிகழ்ச்சியையும் அவரது விடாமுயற்சியையும்; பாராட்டி  ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள்; அவருக்கு  பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார். சிறப்பு விருந்தினரான ஸ்ரீகரசர்மா குருக்கள் அவர்கள் ஜெயந்தி யோகராஜாவின் பரந்த கலை உள்ளத்தைப் பாராட்டி ‘வாழ்த்துப் பாடல்’ பாடி கௌரவித்திருந்தார்.  வெள்ளிவிழாவின் நிகழ்ச்சித் தொகுப்புக்களை நவஜோதி ஜோகரட்னம் வழமைபோல் தொகுத்து வழங்கியிருந்தார். சிறப்பான ஒரு கலை நிகழ்வை பார்த்த பூரிப்பில் பார்வையாளர்கள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தமை குறிப்பிடவேண்டிய விடயம்.

மேலும் சில நிகழ்வுக் காட்சிகள்...

லண்டனில் ‘சலங்கைகளின் சங்கமத்’தின் வெள்ளி விழா

லண்டனில் ‘சலங்கைகளின் சங்கமத்’தின் வெள்ளி விழாலண்டனில் ‘சலங்கைகளின் சங்கமத்’தின் வெள்ளி விழா

லண்டனில் ‘சலங்கைகளின் சங்கமத்’தின் வெள்ளி விழா


08.01.2017

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R