சுப்ரபாரதிமணியன்கவிதையின் மொழி என்றைக்கும் அந்தரங்கமாயும்  குறியீடாகவுமே இயங்குவது. கி.ஜெயந்தி அவர்களின் மொழிபெயர்ப்பில் இரு தொகுப்புகளைச் சமீபத்தில் படித்தேன். ஒன்று வைதேகி கதைகள் ( கிரவஞ்சப்பட்சிகள் –மூலம் கன்னடம் . சாகித்ய அக்காதமி வெளியீடு ).  இன்னொன்று  சுக்கூர் பெடயங்கோடு அவர்களின் மலையாளக் கவிதைகள்   ( ஆழங்களில் ஜீவிதம் –சாந்தி நிலையம் , சென்னை வெளியீடு  ) .

வைதேகிக்கதைகளில் எல்லாவற்றையும் புற உலகின் விசயங்களாக சொல்லியிருப்பதை ஜெயந்தி அவர்கள் சுலபமாக வெளிப்படுத்திடுத்தியிருக்கிறார். ஆனால் கவிதையின் விசேசமான மொழியில் உள்ளில் ஏதோ வைத்துப் பேசுவதை தொடர்ந்து படிக்கிற போதே தெரிந்து கொள்ளமுடிகிறது. சரளமாய் உரைநடையைப் பயன்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்பின் வழியே உள் கருத்தாய் அமைந்திருப்பதை உணர்வதற்குமான வித்தியாசங்களை இத்தொகுப்புகளின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது. சொற்சிக்கனம் , விவரிப்புகள் மூலம் சுக்கூர் பெடயங்கோடு வெளிப்படுத்தும் உலகம் வித்தியாசமானது.

முதலில் அவர் சார்ந்த தொழில் . அவர் ஒரு மீன் விற்பனையாளர் . அதை நாமும் அவர் பார்வை வழியே கண்ட கவிதைகளில் கண்டு கொள்ளலாம்.

* நான் அலைகளையெண்ணி யெண்ணி/  கனவு விற்று நடந்த போது / என் தலை முழுவதும் இந்றந்த மீன்களின்  விம்மல்கள்
* நான் மீனை அரிந்து விற்கிறேன் ./ உன்னையும் அது போல் /உனக்கும் மீனுக்கும் நல்ல விலை
* நீயோ ...மீனோ .../விரைவில் முடிவீர்கள் /கெட்டுப்போயின் நீயும் மீனும் குப்பைக்குழியில்.

வாழ்க்கை  நாட்களின் ஆர்ப்பாட்டமான மவுன அழிப்பில் ,           உயிர்ப்பின் துள்ளலும் தவிப்பும் சிதறடிக்கப்படுகின்றன. இந்த்த் தவிப்பு தொழில் ரீதியான செயல்பாடுகள், தினசரி வாழ்க்கை சம்பவங்களோடு கவிதைக்குள்ளும் வந்து விடுகிறது. அப்படித்தான்....

* என் பசியையும் உன் விம்மலையும்/ இணைத்து கண்டிப்பாய் /கவிதை எழுதுவேன்.
* இரத்தச் சிவப்பில்லாத/ உனக்கும் எனக்கும் / கவிதை மட்டும் எழுதித் தீர்க்க /ஒரு புதிய காலண்டர்
* உன் பெயரும் கற்சுவரில்/ பொறித்து வைக்கப்படும்/ .அன்று நீ கற்பைப் பற்றி கதையோ கவிதையோ எழுதக்கூடும்.


சுக்கூர் பெடயங்கோடு அவர்களின் கண்களில் படுபவையெல்லாம் கவிதைக்கான காட்சிகளாகவும் விரிகின்றன.அதுவும் வீடு சார்ந்த சித்திரங்கள் நிரம்பி வழிகின்றன.

* யாரேனும் ஓர் ஆள் ஒரு மூலையில்/ யாரும் பாடாத காதற்கசவிதைகளின் வரிகளை எழுதி வைத்திருக்க்க்கூடும்./ புறம் திரும்பி நடந்தால் வழுக்கி விழ ஒரு முற்றம் மட்டும்.
* இரத்தம் புரண்ட வரியில் /வீட்டின் வரைபடம் நான் வரைந்து வைக்கிறேன்.

காட்சிகளின் கதை கவிதைக்குள் எத்தனையெத்தனை  கதைகள் –அம்மாவின் கதை, பூனையின் கதை, கண்னீன் கதை, சூபியின் கதை, சாபத்தின் கதை,  கடிதத்திலும் கதை.

இயற்கையின் சலுகைகள் நீக்கப்பட்ட வாழ்க்கை. இரக்கமின்மையின் இறுகியத்தனம் ,  ஆனாலும் உயிர்வாழ்தலின் ஆவேசம் எங்குமாய் கவிதையில் நிறைந்திருக்கின்றன. வாழ்க்கை பற்றிய அர்த்தத்தையும் சொல்லிப் போகின்றன.

* நான் சாப்பிடப்போகும் முன்
மீனைக்கவ்வியபடி பூனை ஓடியது.
மீன் ருசி அறியாது இன்னும் எத்தனை காலம் நான் சோறு தின்பேனோ.


* ஆடையைக் களைந்த போதுதான்
வாழ்க்கையின் ஆழமும் அளவும் நான் அறியப்பெற்றேன்.


* கனவுகளுக்கு மேல்/ காத்தான் விருந்துக்கு வரும்போது /உன் ஆடைகளை களைந்து எங்கே எறிவாய்.

கவிதையின் உள்ளார்ந்த இருப்பை கவிதையின் மறை பொருளினை சரியாய் காட்டுகின்றன. இதில் உள்ள காலண்டர் கவிதை வெளிப்படையாய் தினசரியில் கிழிபடும் தாள்களைப் பற்றியதாக இருந்தாலும் மனித வாழ்க்கை, வெவ்வேறு மனிதர்களைப் பற்றி   உயிர்ப்புடன் பேசுகிறது எனலாம். இது போல்தான் பல கவிதைகள்.

” வலியின் சூளையில் வேகும்போது
கவிதை போதை  “ என்கிறார்.


சாதாரண மனிதனின் மனச்சாட்சியின் குரல்  எப்போதும் எளிமையாகத்தான் இருக்கும். வெளிப்படையாகத்தான் இருக்கும். அதுவும் மொழிபெயர்ப்பு எனப்படுகையில்  காதருகில் வந்து சொல்லும் வித்தையாகத்தான் இருக்கும் என்பதை எளிமையாகச் சொல்லியிருக்கிறார் ஜெயந்தி அவர்கள் மலையாளக் கவிதைகள் மூலமாக.

ஆழங்களில் ஜீவிதம் –சாந்தி நிலையம் ,புதுப்புனல் சென்னை வெளியீடு  ) . கி.ஜெயந்தி அவர்களின் மொழிபெயர்ப்பில்..     ரூ 40. / 99623 76282

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R