- பேரா.பீ.பெரியசாமி பேரா.பீ.பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு, தமிழ்த்துறைத்தலைவர், பாட்டல் கம்பெனி அருகில் DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்-1 விளாப்பாக்கம் –முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்.(தொ.மெய்.3) அவற்றுள் இளிவரலெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியர் விரித்துரைக்கும் இளிவரலுக்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் உரையில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.

இளிவரல் தோன்றும் களன்கள்
இளிவரலெனும் மெய்ப்பாடு தோன்றும் களனை தொல்காப்பியர்,
மூப்பே பிணியே வருத்த மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.(தொ.மெய்.நூ.6)

எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

உரையாசிரியர்களின் பார்வையில் இளிவரல்
மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் இளிவரலுக்குரிய பொருளாகும். இவை தன்னிடமும் பிறரிடமும் தோன்றும்(இளம்.) மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இளிவரல்.(பேரா.) இளிவரல் எனும் மெய்ப்பாடு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கிறது.(பாரதி.) என உரையாசிரியர்கள் இளிவரலினைக் குறித்துக் கூறியுள்ளனர்.

மூப்பு
பிறர்மாட்டு தோன்றும் மூப்புப் பற்றி விளக்க நாலடி.14 ஆம் பாடலை இளம்பூரணர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். தன்கட் டோன்றிய மூப்புப் பற்றி விளக்க பேராசிரியர். புறம்.243 ஆம் பாடலையும்,

”மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல”(அகம்.6)

எனும் பாடலையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். மேற்கண்ட அகநானூற்றுப் பாடலடிகளில் இன்று இங்கு வந்து எனது மார்பில் தோன்றிய தேமலையும், கற்பினையும் உடைய புதல்வனது தாய் என்று வஞ்சனையுடன் வணங்கிப் பொய்ம்மொழி கூறி என்னுடைய முதுமையை இகழாது இருக்க என தலைவனிடம் தலைவி வேண்டுகின்றாள் எனும் செய்தி இடம்பெற்றுள்ளமையின் இஃது தன்னிடம் தோன்றிய முதுமைப் பொருளாயிற்று. மூப்பு என்பது முதுமை(பாரதி) என பாரதி கூறியுள்ளார்.

பிணி
பிணியுறவு கண்டு இழித்தல். அதனானே உடம்பு தூயதன்றென இழித்தலுமாம்(இளம.) நோய்(பாரதி) எனக் கூறியுள்ளனர். இதனை விளக்க இளம்பூரணர் நாலடி.41 ஆம் பாடலை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். தன்கட் டோன்றிய பிணிக்கு குறுந்.குறுந்.158 ஆம் பாடலையும், பிறன்கட் டோன்றிய பிணிக்கு குறுந்.128 ஆம் பாடலையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.

வருத்தம்
வருத்தமெனினும் முயற்சி எனினும் ஒக்கும்(பேரா.) தன்கட் தோன்றிய வருத்தத்தினை விளக்க புறம்.74 ஆம் பாடலையும், பிறன்கட் டோன்றிய வருத்தத்தை விளக்க குறள் 1255ஐயும் இளம்பூரணர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். தன்கட்டோன்றிய வருத்தத்தினை விளக்க குறுந்.337ஐயும் பிறன்கட்டோன்றிய வருத்தத்தை விளக்க கலி.47ஐயும் பேராசிரியர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.

மென்மை
நல்குரவு(இளம்.) இதனை விளக்க குறள்.1047, குறள்.1044 ஆகியவற்றை இளம்பூரணர் எடுத்தாண்டுள்ளார். தன்கண்ணும் பிறட்கண்ணும் தோன்றும் மென்மையினை விளக்க பேராசிரியர் புறம்.239 ஐ மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.

சோமசுந்தரபாரதியின் மேற்கோள் உத்தி

உரையாசிரியர்களான இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் இளிவரலுக்கான களன்களை விளக்குமிடத்து தனித்தனியாக மேற்கோள்களை எடுத்தாண்டுள்ளனர். ஆனால் சோமசுந்தரபாரதி குறுந்.349, குறுந்.305, குறுந்.81 ஆகியப் பாடல்களை எடுத்துக்காட்டி ”இன்ன பலவும் அகத்தில் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை பற்றிய இளிவரல் குறிப்பன”(பாரதி, மெய்.நூ.6) என்றும் புறம்.74, குறள்.964 ஆகியவற்றை எடுத்துக்காட்டி “இன்ன பலவும் புறத்தில் இளிவரல் கூறுவது காண்க” (மேலது) என்கிறார். இது அவரின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் முகமாய் அமைந்துள்ளது. இது அவரின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் முகமாய் அமைந்துள்ளது. மேற்கூறியவற்றுள் தன்கண் தோன்றிய மூப்பு பற்றி குறுந்.349, தன்கண் தோன்றிய பிணி பற்றி குறுந்.305, பிறன்கட் டோன்றிய பிணி பற்றி புறம்.74, தன்கண் தோன்றிய வருத்தம் பற்றி குறுந்.181., பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றி குறள்.968, பிறன்கட் டோன்றிய மென்மை பற்றி குறள்.964, -ம் எடுத்துக்கூறியுள்ளன என்பது ஆய்ந்ததில் அறிந்தது.

வீரம் பற்றி இளிவரல் தோன்றுமா?
வீரம் பற்றி இளிவரல் தோன்றுமென தகுந்த உதாரணத்துடன் பேராசிரியர் விளக்கியுள்ளார்.

”ஒருகை யுடைய தெறிவலோ யாயினும்
இருகை சுமந்து வாழ்வேன்.”

என்பது வீரம் பற்றிய இளிவரல் பிறந்தது. இது தன்கண்ணும் பிறர்கண்ணும் தோன்றாமையின் இலேசினாற் கொண்டா மென்பது. (பேரா.உரை.மெய்.நூ.6)

முடிவுரை
மூப்பு என்பது இளமையின் மறுமை, பிணியென்பது நோய்வாய்ப்பட்ட நிலைமை, வருத்தமென்பது மனதின்கண் சோர்வு, மென்மையென்பது எளிமையாகும். இளிவரலெனும் மெய்ப்பாட்டின் களன்களான மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கினையும் விளக்கப்புகுந்த உரையாசிரியர்களான இளம்பூரணர், பேராசிரியர் சோமசுந்தரபாரதி ஆகியோர் தங்கள் உரையில் எடுத்துக்கொண்ட மேற்கோள்கள் முறையே – 6,7,6 எனும் எண்ணிக்கையிலானவை. அவற்றுள் இளம்பூரணர் – நாலடியாரில் 2 பாடல்களும், 3 – திருக்குறளையும், 1 – புறநானூற்றுப் பாடலையும் எடுத்தாண்டுள்ளார். பேராசிரியர் குறுந்தொகையில் -3 பாடல்களையும், புறநானூற்றில் -2 பாடல்களையும், அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் தலா-1 பாடலையும் எடுத்தாண்டுள்ளார். சோமசுந்தரபாரதி குறுந்தொகையில் 3 பாடல்களையும், 3 திருக்குறளையும், 1 புறநானூற்றுப்பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இவற்றினை நோக்கி ஆயும் போது இளிவரலெனும் மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் குறுந்தொகையினில் 6 பாடல்களையும், 5 திருக்குறளையும், 4 புறநானூற்றுப் பாடல்களையும், அகநானூறு, கலித்தொகையினில் தலா 1 பாடலையும் எடுத்தாண்டுள்ளனர் என்பதனை அறிய இயலுகிறது. இதன்வழி இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் ஒரேஒரு அகநானூற்றுா் பாடலை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர் என்பதனை அறிய இயலுகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

* கட்டுரையாளர் - - பேரா.பீ.பெரியசாமி பேரா.பீ.பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு, தமிழ்த்துறைத்தலைவர்,  DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்-1 விளாப்பாக்கம் –


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R