Poem: Oh, Super Human! Where have you concealed yourself?  'ஓ! அதிமானுடரே! நீவிர் எங்கு போயொளிந்தீரோ?' என்னும் என் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில் இக்கவிதையினை மொழிபெயர்த்தவர் முனைவர் ர.தாரணி .


Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

- In Tamil: V.N.Giritharan; Translation in English Dr. R. Dharani -

Concrete! Concrete and Concrete
Walls! Ingesting the rays to radiate flames
Blameless, pellucid white surface,
Chuckling Cement-clad pathway.
In the embrace of the audacious columns,
lies enraptured spaces
heat rays cut through the layers of air.
In the pleasure of delusion over
The grass being excited
by the smiles of dew drops,
There is a gloomy cloud of thought over
The cool Lady Earth under her blue canopy.

The embracing dreams of the
Drooping tree belles' cuddle.

The impact of artificiality
Spreading over Nature’s repository.

In trees, on grass, in herds, in  caves,
In the dreadful hours of darkness,
Panicked by the lightning storm, under the torrential shower,
Coiled up in the times of bewilderment,
Continued the ancient  journey

In the gyres of Nature’s Effect,
Lies the life captivated.
Are the gyres blissful dawns?
Are they the fascinating Arcadia?

In the heart that builds castles in the air
With the pride of wisdom…………
Ahhhh….. That peace of mind! That sweetness.
Where are they?  Where are they?
Where to find? Alas! Where did they get lost completely?
In the smoke of the flickers, in the Fuming wars of the Classes that is
Causing the choking of breath,
The atmosphere is floundered by
The dance of bombs.

Dearest friends, who flew fearlessly!
My beloved  comrades, who swam with cheerful grin!
The tree offspring who slumbered
Calmly by the breeze!
Beloved friends who are distraught by the Sixth sense!
Growing in the path of development…..?

Despair! Loss of peace! Haughtiness
War! War! War!  War means ……
War! War! War!  

Ahhh………...

What  mistake  is spurred by progress!
What  mistake  is spurred by progress!
What  mistake  is spurred by progress!
What  mistake?  What  mistake?
What  mistake?

Ahh…….. that …

Peace! Peace! Peace!
Love! Love! Love!
Joy! Joy! Joy!

Oh, Super Human!

Where have you concealed yourself?
Where have you concealed yourself?
Where have you concealed yourself?



மூலம்:  கவிதை -  ஓ! அதிமானுடரே! நீவிர் எங்கு போயொளிந்தீரோ?

- வ.ந.கிரிதரன் -


மூலம்:  கவிதை -  ஓ! அதிமானுடரே! நீவிர் எங்கு போயொளிந்தீரோ?'

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட் '
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.
'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.
அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும் புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும் விருட்ஷக் கன்னியர்தம்
மென்தழுவல் ஸ்பரிசக் கனவுகள்.

செயற்கையின தாக்கங்கள் படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

மரங்களில் புல்வெளிகளில் மந்தைகளாகக்
குழுக்களாகக் குகைகளில்
நடுங்கடிக்குமிருண்ட இராவினில்
நடுங்கி மின்னிடுமொளியினில்
மருண்டு கொட்டிடும் மழையினுள் சுருண்டு
புரியாத பொழுதுகளில் பதுங்கிக் குடங்கித்
தொடர்ந்திட்ட ஆதிப்பயணங்கள்.

இயற்கையின் தாக்கத்தினுள்
சுழன்றிட்ட வட்டங்களில்
மயங்கிக் கிடந்திட்ட வாழ்வு    
வட்டங்கள். இன் அதிகாலைப் பொழுதுகளா ?
எழில் கொட்டிய இன்பப் பொழில்களா ?

ஞானத்தினிறுமாப்பில் ஆகாசக் கோட்டை கட்டும்
நெஞ்சினிலோ....
ஆ....அந்த அமைதி! அந்த இனிமை!
எங்கே ? எங்கே ? அவையெல்லாம்
எங்கே ? ஐயோ..அவையெல்லாம்
எங்கே போய் அடியோடு தொலைந்தனவோ ?
பொறி கக்கும் புகையினில் சுவாசம் முட்டி
புகைந்திட்ட வர்க்கப் போர்களால்
நிலைகுலையும் ககனத்தில்
குண்டுகளின் தாண்டவம்.

அச்சமின்றிப் பறந்த ஆருயிர் நண்பர்களே!
நகை தவள நீந்திச் சுகித்த என்னருமைத் தோழர்களே!
தென்றலணைப்பில் தூங்கிக் கிடந்திட்ட
விருட்சத்துக் குழந்தைகளே!
ஆறறிவால் நிலைகுலைந்து
நிற்கும் பிரிய சிநேகிதர்களே!
வளர்ச்சி தந்த வளர்ச்சியிலோ... ?

விரக்தி! அமைதியின்மை! ஆங்காரம்!
போர்! போர்!போர்! போரென்றால்..போர்!போர்!போர்!
ஆ....

வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வளர்ச்சியில் விட்ட வழுதானென்ன ?
வழுதானென்ன ? வழுதானென்ன ?
வழுதானென்ன ?
ஆ..அந்த
அமைதி!அமைதி!அமைதி!
அன்பு!அன்பு!அன்பு!\இனிமை!இனிமை!இனிமை!

ஓ!  அதிமானுடரே!

நீவிர் எங்கு போயொளிந்தீரோ?
நீவிர் எங்கு போயொளிந்தீரோ?
நீவிர் எங்கு போயொளிந்தீரோ?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R