வாசிப்பும், யோசிப்பும் 294 : முன்னுரை, முகவுரை மற்றும் அணிந்துரை ? எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் தனது 'புகையில் தெரியும் முகம்' நாவலுக்கான நூலின் ஆரம்பத்தில் கதையின் கதை என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அதனைக் குறிப்பிடுகையில் முகவுரை, முன்னுரை போன்ற பதங்களப் பாவித்திருப்பார். அதிலவர் பின்வருமாறு கூறுவார்:

"அடுத்தபடியாக இந்த முகவுரையை ஏன் எழுதினீர் என்று கேட்கின்றீர்களா? சரி அதையும் சொல்லி விடுகிறேன்" என்று கூறியதுடன் " முன்னுரையை நானேதான் எழுதவேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் - அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகின்றேன்" என்றும் கூறுவார்.

இது பற்றிய தனது முகநூல் எதிர்வினையில் எழுத்தாளர் மைக்கல் கொலின் (மகுடம் இதழாசிரியர்) பின்வருமாறு கேல்வியொன்றினை எழுதியிருப்பார்:

"நூலாசிரியர் தனது நூலுக்கு எழுதும் உரை முன்னுரையே.ஏனையோர் எழுதுவது அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை, அ.செ.மு.தனது நூலுக்கு தான் முன்னுரை எழுதியதில் என்ன புதுமை உண்டு."

இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அப்பொழுதுதான் முன்னுரை, அணிந்துரை மற்றும் முகவுரை விடயத்தில் பலருக்கும் ஒருவிதக் குழப்பமிருப்பதை அறிய முடிந்தது. இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அ.செ.மு அவர்கள் முன்னுரையையும் முகவரையையும் ஒன்றாகக் கருதுவதாகத்தான் அவரது 'கதையின் கதை' என்னும் கூற்றிலிருந்து முடிவு செய்யலாமா?

ஆக்ஸ்போர்ட்டின் 'ஆங்கில -ஆங்கில -தமிழ்' அகராதியில் பின்வருமாறு Preface என்னும் சொல்லை விபரித்திருப்பார்கள்:

"ஒரு நூல் இன்னது பற்றியது அல்லது இன்ன காரணத்துக்காக எழுதப்பட்டது என்பதை விளக்கும் அதன் எழுத்து வடிவிலான முன்னுரை , முகப்புரை"

முகவரை பற்றி க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதியில் " உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை. ஆசிரியர் முன்னுரை". மேற்படி அகராதியில் முன்னுரை பற்றி "நூலாசிரியரால் நூல் குறித்த கருத்துகள அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை preface" என்று கூறப்பட்டிருக்கும்.

அதற்கு முன் மேலும் சில விடயங்களைப் பார்ப்போம்.

ஆங்கிலத்தில் preface மற்றும் foreward என்னும் சொற்பதங்களைப் பாவிப்பார்கள்.

ஆக்ஸ்போர்ட் அகராதியின் ஆங்கில இணையத்தளத்தில் தேடியபோது கிடைத்தது:

"Sartre's famous preface to de Beauvoir's first novel’

SYNONYMS introduction, foreword, preamble, prologue, prelude, opening remarks, prefatory remarks, preliminary remarks"

இங்கு எழுத்தாளர் சார்த்தரின் இன்னுமோர் எழுத்தாளரான de Beauvoir இன் முதலாவது நாவலுக்கு எழுதப்பட்ட புகழ்மிக்க அறிமுகத்தை preface என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட்டின் ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதியில் முகவுரையும் (முகப்புரை) , முன்னுரையும் ஒன்று என எண்ணும் வகையில் "ஒரு நூல் இன்னது பற்றியது அல்லது இன்ன காரணத்துக்காக எழுதப்பட்டது என்பதை விளக்கும் அதன் எழுத்து வடிவிலான முன்னுரை , முகப்புரை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் ஆங்கில இணையத்தளத்தில் "சார்த்தரின் இன்னுமோர் எழுத்தாளரான de Beauvoir இன் முதலாவது நாவலுக்கு எழுதப்பட்ட புகழ்மிக்க அறிமுகத்தை preface" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி முகவுரை அல்லது முன்னுரை என்பது நூல் அறிமுகக் கட்டுரை. அது நூலாசிரியரால் மட்டும்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை என்னும் அர்த்தம் புலப்படுகின்றது.

க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதியில் " உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை. ஆசிரியர் முன்னுரை". மேற்படி அகராதியில் முன்னுரை பற்றி "நூலாசிரியரால் நூல் குறித்த கருத்துகள அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை preface" என்று கூறப்பட்டிருப்பதைப்பார்க்கையில் முன்னுரையே preface என்னும் அர்த்தம் புலப்படுகின்றது.

எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் தனது 'கதையின் கதை' வலைப்பதிவில் கூறுவது:

" முன்னுரை, முகவுரை: எந்த ஒரு புத்தகம் வாங்கினாலும் நான் முதலில் வாசிப்பது அந்த புத்தகத்தின் ஆசிரியர் எழுதிய முன்னுரை, மற்றொரு இலக்கியவாதி அதற்கு எழுதியிருக்கும் முகவுரை இவைகளைத்தான். எந்த ஒரு முன்னுரையோ முகவுரையோ அழுத்தமாக எழுதப் பட்டிருக்கிறதோ, வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறதோ, அதுவே அந்த புத்தகத்திற்கு பெருமை சேர்த்து விடும்."

இவரது கருத்துப்படி முகவுரை நூலாசாரியர் அல்லாத இன்னுமொருவர் எழுதுவது. முன்னுரை நூலாசிரியர் எழுதுவது. இவர் சுட்டிக்காட்டியிருக்கும் லா.சா.ரா வின் கூற்று:

'முன்னுரை எழுதுவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயமல்ல. என்னைக் கேட்டால் நாவல் எழுதுவதை விட கடினமானது முகவுரை எழுதுவதுதான் என்பேன். , தெளிவு, தீர்க்கம், சுவாரசியம், இவற்றோடு சற்றே நகைச்சுவையும் சேர்ந்து விட்டால் முன்னுரையையே பலமுறை படிக்கலாம்.' லா.ச..ரா. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றிற்காக (அலைகள் ஓய்வதில்லை) இப்படி எழுதியிருப்பார். (http://vidyasubramaniam.blogspot.com/2011/06/blog-post.html) "

இங்கு லா.சா.ரா முன்னுரைதான் முகவுரை போன்று கருதுவதாக அல்லவா புரிகிறது.

இனி விக்கிபீடியா (தமிழ்) கூறுவதைப்பார்ப்போம்:

"ஒரு நூல் தொடர்பில் முன்னுரை என்பது நூலை ஆக்கியவர் எழுதும் ஒரு அறிமுகம் ஆகும். இது ஆக்கியோன் தவிர்ந்த இன்னொருவர் எழுதும் நூலின் அறிமுகமான அணிந்துரையில் இருந்தும் வேறுபட்டது."
(https://ta.wikipedia.org/…/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%A…)

விக்கிபீடியா (தமிழ்) கருத்துப்படி நூலைப்பற்றிய நூலாசிரியரின் அறிமுகம் முன்னுரை. நூலைப்பற்றிய இன்னுமொருவரின்(நூலாசிரியர் அல்லாத) அறிமுகம் அணிந்துரை. அணிந்துரையை எழுத்தாளர் லா.சா.ரா முகவுரை என்கின்றார். நூலைப்பற்றிய அறிமுகம் நூலாசிரியர் எழுதினாலும், நூலாசிரியல்லாத இன்னுமொருவர் எழுதினாலும் அது முன்னுரை (அல்லது முகப்புரை அல்லது முகவுரை). இங்கு அணிந்துரையும் முன்னுரை, முகவுரைக்குள் வந்து விடுகின்றது.

எழுத்தாளர் அ.செ.மு வின் மேற்படி நூலுக்கான 'கதையின் கதை' கட்டுரையை அவர் முகவுரை மற்றும் முன்னுரை ஆகிய சொற்பதங்களால் கூறியிருக்கின்றார். ஆக்ஸ்போர்ட் அகராதியின் அர்த்தத்தின்படி நூலாசிரியர் எழுதினாலும், நூலாசிரியர் அல்லாத இன்னுமொருவர் எழுதினாலும் அது முன்னுரை (அல்லது முகப்புரை / முகவுரை).

எழுத்தாளர் லா.சா.ரா.வின் கருத்துப்படி இது முன்னுரை அல்லது முகவுரை. விக்கிபீடியா (தமிழ்) மற்றும் எழுத்தாளர் மைக்கல் கொலின் கருத்துப்படி முகவுரை என்பது முன்னுரை அல்ல அது அணிந்துரை.

Carol Saller எழுதிய Forewords, Prefaces, and Introductions: Where to Begin? (இணையத்தளம்: The Chronicle of Higher Education)

என்னும் கட்டுரையில் preface மற்றும் foreward பற்றிக் கூறப்பட்டுள்ளதைப்பார்ப்போம்:

"So where to start? The terms foreword, preface (from Latin praefatio, “speech before”), and introduction (from Latin introducere, “to lead in”) all seem to be saying “Me first.” But each has a particular meaning in book publishing—allowing for a fair bit of overlap—and there is a traditional order for presenting them. If you want to have all three, start by enlisting a writer for the foreword, in which someone other than you—preferably a professional connection of elevated status—will lend credibility to your work by explaining its importance and legitimacy. The preface you will write yourself. Its content can include a more personal account than the one in the foreword, along with a section where you acknowledge specific people and institutions for their help and perhaps another section where you cite and credit previously published chapters or versions of the work. This is the place for name-dropping and reminiscing, if you must, in the course of sharing your years-long adventure from dissertation to finished book, including seminars, visiting positions, monetary support, sabbaticals, and everyone who ever cast an eye on your pages or lent an ear over coffee."

இங்கு preface ஆசிரியர்எழுதுவார். foreward என்பது ஆசிரியரல்லாதவரால் எழுதப்படுவது. அதாவது அணிந்துரை.

விக்கிபீடியா(ஆங்கிலம்) இணையத்தளத்தில் foreward பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

"A foreword is a (usually short) piece of writing sometimes placed at the beginning of a book or other piece of literature. Typically written by someone other than the primary author of the work, " பொதுவாக ஆசிரியர் அல்லாத ஒருவரால் எழுதப்படுவது இது. இதுவே விக்கிபீடியா (தமிழ்) தளத்தின்படி 'அணிந்துரை'. ஆனால் foreward ஆனது நூலாசிரியராலும் எழுதப்படலாம் என்பதை விக்கிபீடியாவின் தொடரும் வரிகள் தெரிவிக்கின்றன:

"When written by the author, the foreword may cover the story of how the book came into being or how the idea for the book was developed, and may include thanks and acknowledgments to people who were helpful to the author during the time of writing." இதன்படி foreward ஆனது நூலாசிரியராலும் சில சந்தர்ப்பங்களில் எழுதப்படலாம். என்னைப்பொறுத்தவரையில் foreward என்னும் சொற்பதத்துகுரிய தமிழ்ச் சொல் 'முன்னுரை' என்பேன்.

விக்கிபீடியா (ஆங்கிலம்) preface பற்றியும் இப்படி கூறுகின்றது:

"A preface (/ˈprɛfɪs/) or proem (/ˈproʊɛm/) is an introduction to a book or other literary work written by the work's author. An introductory essay written by a different person is a foreword and precedes an author's preface. The preface often closes with acknowledgments of those who assisted in the literary work. " (https://en.wikipedia.org/wiki/Preface)

இதன்படி நூலாசிரியர் எழுதுவது preface. இதனை முகவுரை என அழைப்பது பொருத்தமானது என்பதென் கருத்து. முகவுரை நூல் பற்றிய நூலாசிரியரின் அறிமுகம் என்பேன். முன்னுரை என்பது நூலாசிரியர் அல்லாத ஒருவரால் எழுதப்படுவது எனபேன். முன்னுரையினை நூலாசிரியரும் சில சந்தர்ப்பங்களில் எழுதலாம் என்பேன். ஆனால் அப்படியென்றால் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின்படி "Sartre's famous preface to de Beauvoir's first novel" என்று வருகின்றதே. இதன்படி preface இன்னுமொருவராலும் எழுதப்படலாம் என்று வருகின்றதே..

சரி உங்களிடம் ஒரு கேள்வி: முன்னுரை, முகவுரை மற்றும் அணிந்துரைக்கு வரைவிலக்கணம் கூறுங்கள் பார்க்கலாம்? என்ன தலை சுற்றுகிறதா?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R