முருகபூபதிLetchumanan Murugapoopathy <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
Dec. 24 at 11:51 p.m.

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம்.  தங்கள் பதிவுகளில் வாசிப்பும், யோசிப்பும் 320: எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்! என்ற தலைப்பில் நீங்கள் பதிவிட்டுள்ள உங்களதும் மற்றவர்களதும் எதிர்வினைகளைப்படித்தேன். இறுதியில் கவிஞர் சேரன் எழுதியிருக்கும் வசனங்களைப்பாருங்கள்.

"Cheran Rudhramoorthy:  பிரபஞ்சனை இங்கே அழைத்தவர் உதயன் பத்திரிகை ஆசிரியர் லோகேந்திரலிங்கம். அவர் என்னுடைய முகனூலில் இல்லை என்பதால் அவரைத் தொடுக்க முடியவில்லை. கனடாவின் நல்ல இலக்கியவாதிகளின் பரிந்துரையால்தான் பிரபஞ்சன் வருகை சாத்தியமானது. எனினும் பிரபஞ்சன் வந்த பிற்பாடு எவரும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் பலமுறை லோகேந்திரலிங்கத்தை அழைத்து பிரபஞ்சனுடன் பேச வேண்டும் என்று கேட்டேன். சாத்தியப் படவில்லை. இறுதியில் அவர் தமிழகம் திரும்பும் முன்பு சிறிது நேரம் பேச வாய்ப்புக் கிடைத்தது. அப்போது பிரபஞ்சன் சொன்னதை இங்கு எழுத முடியாது. இந்த இணைப்பில் Nagamany Logendralingam, Canada Uthayan என்பதை நண்பர்கள் தொடுப்புச் செய்தால் மேலதிக விவரங்கள் தெரிய வரலாம்"

எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளிடம் அடிப்படையில்  நேர்மை இருக்கவேண்டும். அதனால்தான் அவர்களிடம் மக்கள் உண்மையை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், உண்மை சுடும்! கசக்கும் என்பதனால் பலரும் தமக்கு நேர்ந்த அவமானங்களை வெளிப்படையாக எழுத மறுக்கிறார்கள். பிரபஞ்சனை நானும் தொடர்ந்து படித்தமையினால், அவர் கனடாவிலிருந்து திரும்பியதும்,  அவரது வாய்மொழிக்கூற்றை எழுத்தில் படித்தேன். அச்சமயமே நான் ஊகித்தது "யார் அது..?"  ஊகங்கள் சிலவேளைகளில் பொய்ப்பதில்லை! வீரகேசரி வாரவெளியீடு முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு  (ஆ. சிவநேசச் செல்வன் அல்ல) என்ன நடந்தது?  என்பதும் நான் அறிவேன்.

இலங்கையில் தமிழக பிரபல எழுத்தாளர் ஒருவருக்கு கிழக்கு மாகாணத்தில் என்ன நடந்தது?  என்பதும் அறிவேன். ஆனால், நண்பர் சேரன் போன்று என்னாலும் பல விடயங்களை பகிரங்கமாக எழுத முடியவில்லை. இத்துடன் ஒரு படம்  இணைக்கின்றேன். இதில் பிரபஞ்சனுடன் இருப்பவர்கள் கனடாவில் வசிக்கிறார்கள். இவர்களிடம் மேலதிகமாக நீங்கள் அறியமுடியும். நன்றி.

எதிர்வினை: வாசிப்பும், யோசிப்பும் 320: எழுத்தாளர் பிரபஞ்சனின் கனடா விஜயமும், அவமதிப்பும்!

முருகபூபதி


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R