ஆய்வு: சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கம்.மானுடத்தை அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவிலிருந்து தோற்றம் பெற்ற புதிய இலக்கிய வகையான சென்ரியு, ஹைக்கூவின் இயற்கை, ஜென்தத்துவம், உயர்ந்த நடை, குறிக்கோள் போன்ற கட்டுப்பாடுகளை துறந்து சுதந்திரமாக செயல்படும் போக்கினைக் கொண்டிருக்கின்றது. ஹைக்கூவும் சென்ரியுவும் மூன்றடிகளை உடைய கவிதைகளாக இருப்பினும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மானுடத்தினை நடைமுறையில் மனிதன் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படையாகப் படைக்கப்படுகின்ற சென்ரியுவின் இத்தகையத் தன்மையே பிற கவிதை இலக்கியங்களிலிருந்து சென்ரியு கவிதை வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் உள்ளடக்கங்களாக உண்மையை உரைத்தல், அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, விடுகதை, பொன்மொழி ஆகியவற்றை இக்கட்டுரையின் வாயிலாக விரிவாக காணலாம்.

உண்மையை உரைத்தல்
சென்ரியு கவிதைகள் உண்மையினை வெளிப்படையாக உள்ளபடியே உரைத்திடும் கவிதை இலக்கியமாகும். மானுட நடத்தைகளை பாடுபொருளாகக் கொண்டு உண்மைத்தன்மையுடன் சென்ரியு படைக்கப்படுவதால் கற்பனை, வர்ணனை ஆகியவற்றிற்கு இடம் தராது கூறவந்த செய்தியை வெளிப்படையாக உண்மைத்தன்மையுடன் எடுத்துக்கூறும் தன்மைக் கொண்டது. இதனை, 

'பேச்சாளரின் பேருரை
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
நல்ல உறக்கம் வரும் வரை '1

என்னும் கவிதை வரிகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் பேச்சாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நற்சிந்தனைகளுடன் மக்களை மகிழ்விக்கும் வகையில் பேசுவதில்லை என்பதனை இக்கவிதை வரிகள் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் ஆனால் இன்றைய சமுதாயத்தில் அதிகாரிகள் பெரும்பாலும் மக்களிடத்தில் லஞ்சம் பெற்று தங்களுடைய பணிகளை செய்கின்றனர். தனக்கு சாதகமாக ஒரு காரியத்தை செய்து தருவதற்காக அதிகாரம் உள்ள அல்லது பொறுப்பில் உள்ள ஒருவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள் லஞ்சம் ஆகும். 'அதிகாரி பிறந்த நாள்

வீடு முழுக்க
இலஞ்ச அலங்காரம்'2

இக்கவிதை வெளிப்படை தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் வீட்டில் நிகழும் சுப காரியங்களில் அவர்களுக்கு கொடுக்கப்படும் அன்பளிப்பு பொருளானது லஞ்சமாகவே கொடுக்கப்படுகிறது என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது. அரசியலில் உள்ள எந்த தலைவர்களும் இதுவரை தேர்தலை நேர்மையான முறையில் சந்தித்ததே இல்லை. இத்தகைய பொய்யான அரசினால், ஏமாறும் மக்களைப் பற்றி, 

'சுவரில் வெள்ளை
வந்து போனது தேர்தல்
முகத்தில் கரி'3

என்னும் ஆலாவின் கவிதை எடுத்துரைக்கின்றது. அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களையும், அவர்களின் வாக்குறுதிகளையும் மக்கள் நம்பி ஓட்டுப்போடுகின்றனர். ஆனால், இறுதியில் மக்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிகின்றன இதனையே இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

அங்கதம்
அங்கதம் என்பது சமுதாயத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எடுத்துரைப்பது ஆகும். அங்கதத்தின் பணி ஒருவரை இழித்துரைப்பதோடு முடிந்து விடுவதில்லை மாறாக அன்னாரைக் கண்டித்து திருத்தி சீர்திருத்தும் பொழுதே அதன் பணி முழுமையடைகின்றது. ஆக பழிப்புக்குரிய ஒன்றை ஏளனம் செய்து தாழ்த்தியுரைத்து உணர வைத்து திருத்துகின்ற ஓர் உன்னத இலக்கியக் கலையாக அங்கதம் உருவெடுத்துள்ளது. என்று கூறப்படுகின்றது. அங்கத வகைகள் குறித்த குறிப்புகள் தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது.

'அங்கதம் தானே அரில்தபத் தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே'4

அங்கதச் செய்யுளின் இலக்கணத்தை குற்றமற ஆராய்ந்தால் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். நேரடியாக உண்மையை கூறுவது செம்பொருள் அங்கதம் என்றும், மறைமுகமாக உலகியல் நிகழ்வை கூறுவது பழிகரப்பு அங்கதம் என்றும் கூறப்படுகின்றது.

அங்கதம் சமுதாயத்தில் புனிதமாக கருதப்படுவனவற்றை எல்லோராலும் ஏற்கப்பட்ட ஒன்றை அல்லது அதிகார அமைப்பினை தன்னுடைய பாடுபொருளாக கொள்கிறது. இதனை ஈரோடு தமிழன்பனின்,

'குருக்களாகிவிட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டு நிறையக் காணிக்கை'5

எனும் கவிதையின் வாயிலாக அறியலாம். கடவுளின் பெயரால் மனிதன் தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நிலையினை இக்கவிதை வெளிப்படைத்தன்மையுடன் எடுத்துரைக்கின்றது. இக்கவிதை கற்பனைத் திறத்துடன் படைக்கப்பட்டு இருப்பினும் சமுதாயத்தில் நிகழும் உண்மை நிலையினை கூறுவதாக அமைகிறது.

நம் நாட்டில் சட்டங்கள் அதிகாரத்தில் உள்ளோர் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளன. மேலைநாடுகளில் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக பின்பற்றப்படுகின்றன. சிறிய தவறுகளுக்கு கூட மிக பெரிய கடுமையான தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. ஆகையால் தான் மேலை நாடுகளில் குற்றங்கள் மிகவும் குறைந்து காணப்படுகின்றன. ஆனால் நமது நாட்டின் நிலையினை,

'சீனாவில் மரண தண்டனை
இங்கே மந்திரி பதவி
மக்களை தூக்கில் போடவேண்டும்'6

என்னும் கவிதை வரிகளின் வாயிலாக அறியலாம். அரசியல் குற்றவாளிகளின் கூடாரமாகி விட்ட நிலையினை நமது நாட்டில் காணலாம் இங்கு பெரும்பாலும் குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கு பதவிகள் அளிக்கப்படும் நிலையினை இக்கவிதை வெளிப்படைத்தன்மையுடன் எடுத்துரைக்கிறது மேலும் குற்றவாளிகளை தேர்ந்தெடுத்த மக்களைத்தான் தூக்கில் போட வேண்டும் என்று கடுமையாக இக்கவிதை வெளிப்படுத்துகிறது

லஞ்சம் கொடுத்து பலர் அரசு அலுவலகங்களில் வேலை வாங்குகின்றனர். அவ்வாறு வேலை கிடைத்தப்பின்னர் லஞ்சமாக கொடுத்தப்பணத்தை சம்பாதிக்க மக்களிடம் லஞ்சம் பெற்று சம்பாதிக்கின்றனர். இவ்வாறு ஒரு அரசு அதிகாரி லஞ்சம் கேட்டும் முறையினை,

'அய்யா என்னோட கோப்பு
அடுத்த வாரம் வா
கையூட்டு கேட்கும் முறை'7

யுகபாரதியின் இக்கவிதை எடுத்துரைக்கின்றது. மேலும் இக்கவிதை அரசு அலுவலகங்களில் நடக்கும் நிகழ்வுகளையும், அதிகாரிகள் கையூட்டு பெறாமல் எந்த வேலையினையும் செய்வதில்லை என்பதையும், எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

நகைச்சுவைத் தன்மை
நகைச்சுவை என்பது சென்ரியுவிற்கே உரிய முதன்மை தன்மையாக கருதப்படுகின்றது. மனித நடத்தைகளை வேடிக்கையாகவும், நகைப்புடனும், சமுதாய நலனை முன்னிறுத்தும் நோக்கில் சென்ரியு கவிதைகள் படைக்கப் படுகின்றன. நகைச்சுவை தன்மையுடைய கவிதையைப் படைத்தல் என்பது ஒரு கவிஞனுக்கு எளிதல்ல. ஏனெனில் கவிஞனுக்கு நகைச்சுவையாக தோன்றிய செயல் வாசகனுக்கு எளிமையான சாதாரணமான ஒரு செயலாக தோன்றலாம். 

கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பழமொழியாகும். இப்பழமொழியே இக்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் பெற்றுள்ள நிலையினை,

'கற்றவர்கள்
சென்ற இடமெல்லாம்
வேலை காலி இல்லை'8

என்னும் கவிதையில் வாயிலாக வருகிறோம் மேலும் கவிதையானது இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் படித்தும் வேலை இல்லாத நிலையில் தங்கள் வாழ்க்கையினை வால் நிலையினை இக்கவிதை நகை உணர்வுடன் வெளிப்படுத்துகிறது.

சென்ரியு கவிதைகளின் முதல் இரண்டு வரிகள் படிக்கின்ற வாசகனுக்கு எவ்வித பாதிப்பையும் மனதில் ஏற்படுத்துவதில்லை ஆனால் மூன்றாவது வரி வாசகனின் மனதில் மாபெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துவதாக படைக்கப்படும் சென்ரியு கவிதைகள் பெரும்பாலும் கருத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை ஆனால் நகை உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பவை.இதனை,

'முதலாளி சமாதிமேல்
முட்டிக் கொண்டழுதான்
சம்பளப் பாக்கி'9

எனும் கவிதையின் வாயிலாக அறியலாம் இக்கவிதையில் முதல் இரண்டு வரிகள் எவ்வித உணர்ச்சி பெருக்கையும் ஏற்படுத்தும் வகையில் படைக்கப்படவில்லை முதலாளியின் மீதுள்ள பற்றினால் தான் தொழிலாளி முதலாளியின் சமாதியை மூடிக்கொண்டு அழுகிறான் என்பதை முதல் இரண்டு வரி வரிகள் பதிவு செய்கின்றன ஆனால் சம்பளபாக்கி என்னும் மூன்றாவது வரியானது வாசகனுக்கு அதீத நகை உணர்வினை ஏற்படுத்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளதை அறிகின்றோம்.

விடுகதை போன்றது
விடுகதை என்பது விடுவிக்கப்பட வேண்டியது. முறை பொருளினின்றும் விடுவிக்கப்பட்ட வேண்டிய கதையே விடுகதையாகும். 'விடுகதை கேட்போரின் எண்ணத்தைக் கிளரச் செய்து அதன் பொருளை அறிய ஊக்குவிக்கும் சிந்தனைக் கருவியாகும். சிந்தனைக்கு விருந்தாகவும் நகைப்பிற்குக் களமாகவும் விடுகதை பயன்படுவதால் அது பாமர மக்களின் விருப்பமான விளையாட்டு என வருணிக்கப்படுவதுண்டு'10 என்று ச.வே.சுப்பரமணியன் தனது நூலில் கூறியுள்ளார். இத்தகைய விடுகதை தன்மை சென்ரியு கவிதையில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதை,

'பரமனுக்கு தெரியாதது
பாமரனுக்கு தெரிந்தது
பசியின் வலி'11

என்னும் கவிதை வரிகள் மூலம் உணரமுடிகின்றது. கடவுள் தங்களது குறைகளை தீர்ப்பார் என்று நம்புகின்ற மக்களின் அறியாமையும், ஒரு போதும் கடவுளால் மக்களின் பசி துயரினை அறியமுடியாது என்பதை இக்கவிதை எடுத்துரைக்கின்றது. கடவுள் பற்றிய நம்பிக்கைகள் ஒவ்வொருவரையும் பொறுத்து வேறுபடுகின்றது. இதனையே மேற்கண்ட கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றது. 

'தம்பிக்கு எட்டாது
அண்ணனுக்கு எட்டும்
அப்பாவின் சட்டப்பை'12

என்னும் பிரியா புளோரியின் கவிதையானது விடுகதை அமைப்பிலும் நகைச்சுவை கலந்தும் தோற்றம் பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது. பொதுவாக குழந்தைகள் செய்யும் செயல்களை நகைச்சுவை கலந்து கிண்டலாகவும் கேலியாகவும் விடுகதை அமைப்பில் இக்கவிதை எடுத்துரைப்பதைக் காணமுடிகின்றது.

வேடிக்கைத் தன்மை
சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகளில் வேடிக்கைத்தன்மையும் இன்றியமையாத ஒன்றாகும். தமிழ் சென்ரியு கவிஞர்கள் வேடிக்கையான சம்பவங்களை சென்ரியு கவிதையின் பாடுபொருளாக நகைஉணர்வுடனும் சிந்தனையை தூண்டுமாறும் படைத்துள்ளனர். 

'எல்லோர் வீட்டிலும்
இரவல் குழம்பு கேட்கிறாள்
காணாமல் போனது கோழி'13

என்னும் ஈரோடு தமிழன்பனின் கவிதை அமைந்துள்ளதைக் காணமுடிக்கின்றது. இவ்வரிகள் மனிதனிடம் உள்ள தீய குணமாகிய திருட்டுத்தனத்தையும், அத்திருட்டை கண்டறிய மேற்கொள்ளும் முயற்சியில் உள்ள வேடிக்கை தன்மையையும் எடுத்துரைக்கின்றது.

குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன குறும்பு தனங்களை ரசிக்காதவர்கள் யாருமில்லை. அப்படி ரசிப்பிற்குரிய அக்குழந்தைகளின் குறும்புகளை கவிதையில் புகுத்தும் போது அக்கவிதை இன்னும் அழகாகின்றது. இதனையே,

'முதல் நாளிலேயே
ஆசிரியரின் பிரம்பைக் கேட்டு
அடம் பிடித்தது குழந்தை'15

என்னும் இக்கவிதை உணர்த்துகின்றது. மிகவும் வேடிக்கைத் தன்மையுடையதாகவும் இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது. பள்ளிச் செல்லும் ஒரு குழந்தையின் வேடிக்கையான செயலினையும், ஆசிரியரின் பிரம்பால் தான் வருங்காலத்தில் உதைக்கப்படப்போகிறோம் என்பதை, உணராத குழந்தையின் மனநிலையினையும் இக்கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன.

பழமொழி போன்றது

பழமொழிகள் ஒரு சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சி மற்றும் அறிவுக் கூர்மையைய எடுத்து விளக்குபவைகளாக அமைகின்றன.பழமொழி என்பது கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்ரை பிரதிப்பலிப்பவை ஆகும். இதனை,

'நுண்மையும் சுருக்கமும் ஒளி உடைமையும்
ஓண்மையும் என்றிவை விளங்கத்தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப'16

கருதிய பொருளை விளக்கும் வகையில் நுண்மை, சுருக்கம், தெளிவு, மென்மை ஆகிய இயல்புகளுடன் பழமொழி விளங்க வேண்டும். 

எந்த ஒரு செயலாக இருந்தாலும் அச்செயலினை சரியான காலத்தில் செய்தல் வேண்டும். சரியான காலத்தில் செய்கின்ற செயல் மட்டுமே சிறப்பானதாக அமையும். காலம் தவறி செய்கின்ற செயலால் எவ்வித பயனும் இல்லை என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.

'கண்கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம்
முதியோர் கல்வி'17

இளமையில் கல்வி கற்க வேண்டும். இளமையில் கல்வி கற்பதே சிறந்தது. இளமையில் கற்ற கல்வியே எதிர்காலத்தில் மிக சிறந்த அனுபவங்களை நமக்கு அளிக்கும் திறன் படைத்தது. இளமையில் கற்க வேண்டிய கல்வியை முதுமையில் கற்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது என்பதை எள்ளலுடன் கேட்பதாக இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க பதவியில் உள்ள மனிதர்கள் சில நேரங்களில் தடுமாறலாம். அத்தகைய தடுமாற்றங்கள் அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய சோதனையை ஏற்படுத்தும். இக்கருத்தினை, யானைக்கும் அடி சறுக்கும் என்னும் பழமொழியின் வாயிலாக கூறுவர் 

‘நிச்சயம்
யானைக்கும் அடிச்சருக்கும்
பனிபிரதேசத்தில்'18

இக்கவிதையில் கவித்துவம் மிகவும் குறைந்து காணப்படும் வெளிப்படையாக சற்று நகை உணர்வு தோன்ற பொதுத்தன்மையுடன் இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது.

தொகுப்புரை
சென்ரியு கவிதை பிற இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு காணப்பட அதன் தனித்தன்மையே முக்கியமான காரணமாகும். சென்ரியு கவித்துவம் குறைந்தும், கற்பனை கலப்பின்றியும், முற்றிலும் உண்மைமையை வெளிப்படுத்தும் தன்மையுடன் காணப்படுகின்றது. சென்ரியு மக்களிடம் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக நோக்குடன் படைக்கப்படுகின்றது. 

அங்கதம், நகைச்சுவை, விடுகதை, பழமொழி போன்ற பல தன்மைகளில் சென்ரியு தன்னை வெளிப்படுத்திக்கொண்டுள்ளது. சென்ரியு அங்கதத்தன்மையில் மெல்லிய நகைப்புடன் சமூக சீர்திருத்த கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றது. சென்ரியு நகைச்சுவை தன்மையுடையது எனினும் சமூகத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் முதன்மை வகிக்கின்றது.

அடிக்குறிப்புகள்
1. ஒரு வண்டி சென்ரியு, ஈரோடு தமிழன்பன் - ப -40
2. மேலது, ப -60
3. மலேயசியப் புதுக்கவிதைகள் தோற்றம் வளர்ச்சி, இராஜம் இராஜேந்திரன் ப -17
04. தொல்காப்பியம் - பொருள், இளம்பூரணர் ப -461
05. ஒரு வண்டி சென்ரியு, ஈரோடு தமிழன்பன் ப -27
06. யாதெனில், பாரதி வசந்தன் ப -68
07. அரசமரம், யுகபாரதி ப -7
08. சென்ரியு கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி, வே.மணிகண்டன் ப -40
09. ஒரு வண்டி சென்ரியு, ஈரோடு தமிழன்பன் ப -75
10. வளர்தமிழ் ஆய்வு ப - 40
11. கடவுளின் கடைசி கவிதை, மாமதயானை ப -36
12. குறுமணல், பிரியாபுளோரி ப -12
13. ஒரு வண்டி சென்ரியு, ஈரோடு தமிழன்பன் ப -76
14. மேலது, ப -67
15. நாட்டுப்புறவியல் ஆய்வு, சு.சக்திவேல் ப -106 
16. மாமதயானை, வே.மணிகண்டன் ப -7
17. மேலது, ப -40
18. மேலது, ப -40

* கட்டுரையாளர் - - முனைவர்.வே.மணிகண்டன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) விழுப்புரம். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R