மறக்க முடியாத மனிதர்கள குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ள இளங்கோவன் பணிகள் பாராட்டுக்குரியவை..! இலண்டன் இலக்கிய மாலை நிகழ்வில் பாராட்டு..!!'மக்கள் பணிபுரிந்த மாமனிதர்கள் குறித்துச் சிறப்பான பதிவுகளை இளங்கோவன் செய்துவருகிறார். அவை அவசியமான சிறந்த பணியாகும். நவீன தொழில்நுட்ப வசதி> முகநூல்> இணையத்தளங்கள் புத்தக வாசிப்பை அருகிடச் செய்துவிட்டது எனக் கூறுகிறார்கள். ஆனால் புத்தக வாசிப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தருவதாகும். முற்போக்குச் சிந்தனையுடனும் மாறாத இலட்சியப் பிடிப்புடனும் எழுதிவருபவர் இளங்கோவன். அவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியாகி பல நாடுகளிலும் பாராட்டைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது." இவ்வாறு கடந்த 31 -ம் திகதி ஞாயிறு (31 - 03 - 2019) இலண்டன் மாநகர் - ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற 'இலக்கிய மாலை" நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் கரவை மு. தயாளன் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் 'கலாபூஷணம் - இலக்கிய வித்தகர்" வி. ரி. இளங்கோவனின் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல, ஒளிக்கீற்று" ஆகிய நூல்களும் 'பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பியின் 'ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்" என்ற நூலும் வெளியிடப்பட்டன.

நிகழ்வில் எழுத்தாளர் மு. தயாளன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'இலக்கியப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் புலமையை அவரது கவிதை நூலில் கண்டு மகிழ்ந்தேன். அந்நூலில் யாரிடமும் அணிந்துரை பெறாது தைரியத்துடன் அவர் எழுதியுள்ள முன்னுரை என்னைக் கவர்ந்தது. அவர் கவிதைகள் காலத்தின் பதிவாகச் சிறப்பாகவுள்ளன. ஈழத்தில் மட;டுமல்ல புலம்பெயர்ந்த நாட்டிலும் எழுத்தாளன் தனது படைப்புகளை நூலுருவில; வெளிக்கொணர்ந்து மக்களிடம் சேர்ப்பிக்கப் பல அவதாரங்கள் எடுக்கவேண்டியுள்ளது. சிந்தனையில் வந்ததை எழுதி முடித்தல், ஒழுங்காகப் பதிதல்,  அச்சகம் தேடிக் கொடுத்தல், பிழை திருத்தம் பார்த்தல்> அச்சுக்கூலியைத் தேடிக் கொடுத்தல், நூல்களைத் தேவையான இடங்களில் சேர்ப்பித்தல்,  வெளியீட்டு விழாக்களை ஒழுங்கு செய்தல், விமர்சனம் என்ற வகையில் பேச்சாளர்களின் அறுவைகளைக் கேட்டுக் கொள்ளல், மிகுதி நூல்களை வீட்டில் அடுக்கி வைத்தல், மனைவி - பிள்ளைகளின் நச்சரிப்பைத் தாங்குதல் - இப்படியான நிலைமைகளையெல்லாம் சமாளித்து எழுத்தாளன் தன்னளவில் திருப்திப்படவேண்டியுள்ளது. இந்த அவல நிலைதான் எம்மிடையே உள;ளது. இத்தகைய நிலையிலும் சளைக்காது பல நூல்களை வி. ரி. இளங்கோவன் தொடர்ந்து வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது" என்றார்.

ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: 'என் பள்ளிப் பருவம் முதல் வி. ரி. இளங்கோவனுடன் பழகி வருகின்றேன். அவர் ஒரு தகவல் பொக்கிசமாகத் திகழ்பவர். இலக்கியம், அரசியல் சம்பந்தமான எந்தச் சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு நிவிர்த்திக்கலாம்;. அவை குறித்து ஆர்வத்துடன் விளக்கமாகக் கூறுவார். மறக்க முடியாத மனிதர்களின் பணிகள் குறித்துப் பதிவுகள் செய்த அவர் இன்றைய தலைமுறைக்கேற்ற பல படைப்புகளை, பதிவுகளை மேலும் தரவேண்டும்" என்றார்.

இந்நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர் கருணைலிங்கம், அம்பலவாணர் சிறிதரன், நடா சிவராசா, இரா[மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர்கள் மாதவி சிவலீலன்,  நவயோதி யோகரட்ணம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நூல்களின் முதற்பிரதிகளைப் பொறியியலாளர் எ];. கனகசபாபதி பெற்றுக்கொண்டார்.

மறக்க முடியாத மனிதர்கள குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ள இளங்கோவன் பணிகள் பாராட்டுக்குரியவை..! இலண்டன் இலக்கிய மாலை நிகழ்வில் பாராட்டு..!!

பத்மா இளங்கோவன் வெளியிட்ட சிறுவர் நூல்கள் ஒரு தொகையினைக் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றுவரும் தமிழ்வகுப்பில் பயிலும் சிறார்களுக்கெனத் தமிழ் ஆசிரியர் இரா[மனோகரனிடம் வி. ரி. இளங்கோவன் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மறக்க முடியாத மனிதர்கள குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ள இளங்கோவன் பணிகள் பாராட்டுக்குரியவை..! இலண்டன் இலக்கிய மாலை நிகழ்வில் பாராட்டு..!!


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R