['பதிவுகளி'ல் வெளிவந்த கட்டுரையிது ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. வ.ந.கிரிதரனின் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவல் பற்றிய 'திண்ணை' விமரிசனத்தையொட்டிய எழுத்தாளர் மைக்கலின் கடிதமிது. இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-]சிந்தனையின் போக்குகள் வலதும் இடமுமாக மாறி மாறித்தான் பயணிக்கும் என்பதில் எனக்கும் மறுப்பு இல்லை. நேர்கோட்டுப்பாதை என்பது ஏதாவது ஒரு தத்துவத்தை, கட்சிகளை, தனிநபரை வணங்குவதில் வந்து முடிந்துபோவது எமது மார்க்சியர்களின் கறாரான விமர்சன மரபு அல்லது எமது ஈழத்து இயக்கங்கள் சொல்லித் தந்த பாடங்கள். ஆகவே குறித்த படைப்பு மீதான பல்வேறு பார்வைகள் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.['பதிவுகளி'ல் வெளிவந்த கட்டுரையிது ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. வ.ந.கிரிதரனின் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவல் பற்றிய 'திண்ணை' விமரிசனத்தையொட்டிய எழுத்தாளர் மைக்கலின் கடிதமிது. இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-]சிந்தனையின் போக்குகள் வலதும் இடமுமாக மாறி மாறித்தான் பயணிக்கும் என்பதில் எனக்கும் மறுப்பு இல்லை. நேர்கோட்டுப்பாதை என்பது ஏதாவது ஒரு தத்துவத்தை, கட்சிகளை, தனிநபரை வணங்குவதில் வந்து முடிந்துபோவது எமது மார்க்சியர்களின் கறாரான விமர்சன மரபு அல்லது எமது ஈழத்து இயக்கங்கள் சொல்லித் தந்த பாடங்கள். ஆகவே குறித்த படைப்பு மீதான பல்வேறு பார்வைகள் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.

அத்துடன் விமர்சனமும் அவை முன் வைக்கும் படைப்புக்களும் காலத்தின் நகர்வின் பின்னர் வேறொரு உண்மையை வெளித் தெரிய வைக்கிறது என்பதற்கு அண்மையில் நான் படித்த புத்தகத்தில் (முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்) கண்ட செய்தியைக் கீழே தர விரும்புகிறேன். ரஷ்ய கூட்டுப்பண்ணை உருவாக்கம் அதன் சிரமங்கள், வெற்றிகள் பற்றிய கருவை வைத்து சோசலிச யதார்த்தவாதப் போக்கில் எழுதப்பட்ட கன்னிநிலம் நாவல் கம்யூனிஸ்டுகளால் படித்து பெரிதும் சிலாகிக்கப்பட்டு தமது எதிர்காலக்கனவின் சாட்சியாகக் கொள்ளப்பட்டதாம்.  இதே நாவலை எழுதிக் கொண்டிருக்கும் போது மிக்கயில் ஷொலகாவ் தனது வாசகி ஒருவருக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில், ரஷ்ய மக்கள் பட்டினியால் மாண்டு கொண்டிருப்பதையும், கிடங்குகளில் பிணங்கள் குவிக்கப்படுவதை அன்றாடம் நடுக்கத்துடன் பார்த்து வருகிறேன் என்றும் எழுதியிருக்கிறார். நோபல்பரிசும் கிடைத்து, சோவியத்யூனியனும் உடைவு கண்ட பிற்பாடு இப்போது இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. ஆக. விமர்சகர்கள் சிலரது அன்றைய அளவுகோலான சோசலிச யதார்த்தவாதம் எங்ஙனம் பிழைத்தது? 

உண்மையில் மாற்றுப்பார்வைகள் அல்ல எனது பிரச்சனை. அவை ஒரு வகையில் படைப்பாளியே கவனத்தில் கொள்ளாத பல கோணங்களை படைப்பில் வெளித்தெரிய வைக்கும். நாம் அவற்றை வரவேற்கவேண்டும்தான். ஆனால் விமர்சனம் என்பது விளம்பரமாக, பொய்மையாக மாற்றமுறும் அபேதத்திற்கு இரையாகி அதிகம் பேசப்பட்ட இலக்கியவாதிகளது படைப்புகளை பலத்த நம்பிக்கையுடன் தேடிப் படித்தபோது அவை யானை கழித்த வெறும் விளாங்காய்க் கோதுகளாகவல்லவா இருக்கின்றன? 

சுரா, ஜெயமோகன், சாருநிவேதிதா... ஆகியவர்களுக்கு அபரிமிதமான கவனிப்பும், ஆலவட்டம், முதல்மரியாதையும் கொடுக்கப்பட்டபோது அந்தக் கண்ணைக்கூசும் வெளிச்சத்தின் பின்பக்கம் ஆர்ப்பாட்டமில்லாது சிறந்த படைப்புகளைத் தந்துகொண்டிருக்கும் படைப்பாளிகளது முயற்சிகள் அறவே மறைக்கப்பட்டுப் போகும் அபத்தம் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக நகரமயமாதலின் கட்டாயத்தால் மனிதமனத்துள் இருக்கும் அன்பு எப்படி வறள்கிறது, ஆத்மாக்கள் எங்ஙனம் தனி அலகுகளாக்கப்படுகின்றன என்பதை கலைநயம் குறையாமல், தொக்கிநிற்கும் நடையில் எழுதப்பட்ட பெருமாள் முருகனின் ஏறுவெயில் நாவல் பற்றி காலச்சுவடோ, காலமோ, அல்லது புலம்பெயர் அகவிவட்டமோ விமர்சனம் செய்ய விழையாது. (இந்த பெ.முருகன் மக்கள் கலாச்சாரக்கழகத்தில் இயங்கியவர், அதன் நின்றுபோன மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தவர், இவரும், பேரா. சீனிவாசனும் இணைந்து எழுதிய முகமூடிகளும், முகமூடிவியாபாரிகளும் நல்லதொரு நூல்) ஏன் நமது ஈழத்தவரான, சற்று மெளடீகமான சிந்தனை கொண்டவராக இருப்பினும், வல்வை கமலா பெரியதம்பி எழுதிய நம் தாயர் தந்த தனம் என்ற நாவல் முயற்சி பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை. அந்த நாவல் கிராமிய தெய்வங்களிலேயே வீச்சுகூடியதென சாற்றப்படும் முத்துமாரி பற்றிய பண்டுக்கதை ஒன்றை ஒரு குடும்ப வரலாறுடன் பிணைத்து, பழைய நடையும், தற்புகழ்ச்சியுமாக எழுதப்பட்டிருந்தது. அதை ஒரு முக்கியநாவலென்று நான் குறிப்பிட வரவில்லை. ஆனால் கவனங் குவிக்கவேண்டிய கதைசொல்முறை ஒன்றை அது இளம் படைப்பாளிகட்கு தரமுடியும். மற்றும் மார்க்சிச அழகியலை மிகவும் நளினமாக உருமாற்றித்தரும் ச.தமிழ்ச்செல்வனின் படைப்புக்கள், நகரநெரிசல்களுக்குள்ளும், இழந்த கிராமிய வாழ்வின் ஞாபகங்களுக்கூடாகவும் நேசத்தின் தெறிப்பைக்காணும் பாவண்ணனின் படைப்புலகம், வண்ணநிலவனின் தாமே தமக்குள் அந்நியப்படும் இளைஞர்கள், நாஞ்சில்நாடனது மிதவை, சதுரங்கக்குதிரை போன்ற நாவல்கள். இங்ஙனம் பலபேரது படைப்புகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் கையில் சிற்றிதழ் ஊடகமோ, பாதசேவிகளோ இல்லை. ஆனாலும் தொடர்ந்து தங்கள் பங்குக்கு வினையாற்றிய வண்ணமே உள்ளனர். 

இவ்வகை விளம்பர விமர்சனங்களுக்கு இரையாகிப்போனதொரு நல்ல கலைஞனாகவே கோணங்கியையும் என்னால் பார்க்க முடிகிறது. இவரது ஆரம்ப நு¡லான மதினிமார்கள் கதை, கைத்தடி கேட்ட நு¡று கேள்விகள் குறுநாவல் போன்றவை கோணங்கியின் உள்ளார்ந்த கரிசல் கிராமத்து விவசாயியின் மனம் இயங்கிய படைப்புக்கள். பின்னர் கோடைமழை போல வந்து குவிந்த பாராட்டுக்களின் கூதலில் மனிதன் சொற்களின் காட்டில் சிக்கி வழிதவறி, இன்று பேதலித்தவனின் குறிப்புகளாக எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால் சிரிப்பு என்னவென்றால் அவர் எழுதுவதைப் படித்து புரிந்து கொண்டதாக பாவ்லா காட்டும் நண்பர்களைப் பார்க்க இலக்கியப்படிப்பு என்பதே நடிப்போ என்று தோன்றுகிறது. 

['பதிவுகளி'ல் வெளிவந்த கட்டுரையிது ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. வ.ந.கிரிதரனின் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவல் பற்றிய 'திண்ணை' விமரிசனத்தையொட்டிய எழுத்தாளர் மைக்கலின் கடிதமிது. இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-]சிந்தனையின் போக்குகள் வலதும் இடமுமாக மாறி மாறித்தான் பயணிக்கும் என்பதில் எனக்கும் மறுப்பு இல்லை. நேர்கோட்டுப்பாதை என்பது ஏதாவது ஒரு தத்துவத்தை, கட்சிகளை, தனிநபரை வணங்குவதில் வந்து முடிந்துபோவது எமது மார்க்சியர்களின் கறாரான விமர்சன மரபு அல்லது எமது ஈழத்து இயக்கங்கள் சொல்லித் தந்த பாடங்கள். ஆகவே குறித்த படைப்பு மீதான பல்வேறு பார்வைகள் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.என்னுடைய நண்பர் ஒருவருக்கு பாஸ்கர்சக்தியின் பரிசுபெற்ற கதையான சாதனம் கதையைப் படிக்கக் கொடுத்தபோது அவருக்கு அது புரியவில்லை. ஆனால் அவர் கோணங்கியின் தீவிர வாசகர். அவரது புத்தகஅலுமாரியில் கோணங்கியின் புத்தகங்கள் (அவை அலுமாரிக்குள் அடங்காத வடிவமைப்புக் கொண்டவை.) அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மற்றும் இன்னுமொன்று ஞாபகம் வருகின்றது அண்மையில் ரொரண்ரோவில் ஜெயமோகனின் படைப்புகள் பற்றிய விமர்சனக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட நேரத்தில் உங்குள்ள முக்கியமான கவிஞரொருவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். விஷ்ணுபுரம் படித்தீர்களா? அதிலே எனக்குப் பிடித்த இடம் இத்தனாவது அத்தியாயம்தான். அது ஒரு சிறந்த சிறுகதைபோல விரிவும் இறுக்கமும் கொண்டது. என்று அதைப்பற்றி இலக்கியக் கலைச்சொற்கள் சிலதை தெளித்துச் சொன்னார். உண்மையில் எனக்கு அப்போது அத்தியாயமோ, மேற்படி விசயமோ ஞாபகத்தில் இல்லை. ஆகவே உரையாடல் முடிந்ததும் பின்னேரம் மறக்காமல் விஷ்ணுபுரத்தை எடுத்து கவிஞர் குறிப்பிட்ட அத்தியாயத்தைத் தேடினேன். அப்படி ஒரு விடயமே அதில் இல்லை. இந்தப் பொய்மைக்கும் இலக்கியப் பிரக்ஞைக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா? இவ்வகை வாசகர்களைத்தான் இன்றுள்ள நவீன மேற்கத்தைய சிந்தனையின் துணைகொண்டுள்ள விமர்சகர்கள் உருவாக்கி வருகிறார்கள்! 

கன்னியாகுமரி விமர்சனத்திற்கான எதிர்வினைக்கு புதியஜீவா, லொலிடாவையும், லேடி சர்ட்டர்லியையும் துணைக்கு அழைத்து வருகிறார். அன்றைய விக்டோரிய, கிறிஸ்தவ கலாச்சார அழுத்தங்கள், பாலியல் பிறள்வுகளை அரண்மனை சுவருக்கு உள்ளே வைத்துக் கொண்டு, வெளியே கிறிஸ்தவ நல்லொழுக்கங்களை போதித்து வந்த முடியாட்சியின் இரட்டைவேடம் என்பவற்றிற்கு எதிராக லேடி சர்ட்டர்லி போன்றதொரு படைப்பு பிறக்க நியாயம் இருந்தது. இன்றைய 95வீதமான ஆசியக் கிராம மக்களுக்கு எந்தவித மனப்பிரச்சனை பொதுவாக இருக்கும் என்பதை ஏன் புதியஐ£வா பார்க்கத் தவறுகிறார்? மத்தியதர வர்க்கத்து மனிதமனத்தின் உட்கூறுகளை இலக்கியமாக்கினால்தான் தமிழிலக்கியத்தின் முக்கிய படைப்பாக வரமுடியும் என்ற நிலையை நிர்ணயித்தது யார்? அவரும் இன்னொரு மத்தியதரவர்க்கத்து வாசகராகவோ, விமர்சகராகவோதான் இருப்பார். ஆகவே தரத்தை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களைப் பரப்பி விடுவது ஒரு சிறுபான்மை படித்த, படித்ததனால் சில நாசூக்குகள் வளர்ந்த போலி வட்டம்தான். 

இதே லேடி சர்ட்டலியின் பாதிப்பை என்னால் வேறொரு கோணத்திலிருந்து சொல்ல முடியும். எனது நண்பரொருவர் நேரே பார்த்த சம்பவம் இது. 1988 அல்லது 1989ம் ஆண்டில் அமைப்பொன்று தமக்கு ஆட்களைத் திரட்ட வீடு வீடாக அலைந்து ஏமாந்து ( எல்லாப் பெடியன்களும் ஓடி ஒழித்துக் கொண்டனராம்) ஈற்றில் நம்பிக்கையுடன் வாகனங்களைக் கொண்டுபோய் லேடி சர்ட்டலி திரையிடப்பட்ட வெலிங்டன் தியேட்டர் வாசலில் நின்று ஒவ்வொரு காட்சி முடியும்போதும் வெளியே வந்த சின்னப்பெடியளை அள்ளிக்கொண்டு போனது. அடுத்தநாள் யாழ் தினசரியொன்றில் இது செய்தியாக வந்திருந்தும், செக்ஸ் காட்சி பார்ப்பதற்கு இளைஞர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்து, கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டனராம். இச்சம்பவத்தை வாதத்திற்காக நான் குறிப்பிடவில்லை. ஆனாலும் பாதிப்புக்கள் பலவடிவங்கள் எடுக்கும் என்பதற்காகத்தான் குறிப்பிடுகிறேன். 

மற்றும், சுந்தரராமசாமியையும் இவ்வகைப் போலிப்பல்லக்குத் தூக்கிகள்தான் காவித்திரிகிறார்கள். அவரது புளியமரத்தின் கதையைத் தவிர மீதி இரண்டு நாவல்களும் சாப்பாட்டுக்குக் குறையில்லாத ஜீவிகளது பிரச்சனை சார்ந்த உலகம் அடங்கியவை. இவ்வகைப் பதிவுகள் தேவையில்லை என்று நான் கூறவில்லை. இந்தப் படைப்புகள் மட்டுமல்ல இன்றைய தேவைகள் என்றுதான் நினைக்கிறேன். 

சுரா. உலவும் பூங்கா நகரசபையின் கண்காணிப்பில் தண்ணி ஊற்றிப் பராமரித்து, அழகாக வெட்டப்பட்டு நிற்கும் பூமரங்கள் அடங்கிய பூங்கா. அது ஒரு சின்னச் சதுரம். அதன் வேலிக்கு மேலால் அவரது பார்வை போகவில்லை. அதனால்த்தான் புயலிலே ஒரு தோணி நாவல் அவருக்கு ஒற்றைப்படைப் படைப்பாகவும், டானியலின் நாவல்களில் கலைத்தரம் எம்பவில்லை என்றும் கருத்துக்கூறுகிறார். அவருடைய கருத்துக்கள் அவருக்கான சுதந்திரம். ஆனால் நிறுவனப்பட்ட இலக்கியவாதியான சுராவின் கருத்துத் தெறிப்புக்கள் பல நல்ல படைப்பாளிகளைப் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடிய வலுவுள்ளது. சுராவும் தன் வார்த்தையின் வலிமையை நன்கே அறிந்துதான் செயற்படுகிறார் என்பதை அவர் மீரானின் கூனன் தோப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து கண்டு கொள்ளலாம். சுராவை விட மீரான் நல்ல கலைஞர் என்பது எனது அபிப்பிராயம். ஆனாலும் மீரானின் நாவலைப்பற்றிக் கருத்துச் சொல்லும்போது எங்கே நல்லதென்று சொல்லி தன்னை வீழ்த்திக் கொண்டு விடுவேனோ என்று பயத்துடன்தான் சுரா அம்முன்னுரையை எழுதியுள்ளார். 

கடிதம் நீண்டுவிட்டது. இத்துடன் முடிக்கிறேன். இந்தப் போலிமைகள் அற்ற சொந்தச் சிந்தனையில் பிறந்த கருத்துக்களாக உங்களது கன்னியாகுமரி விமர்சனத்தைப் பார்த்ததால்தான் மிகவும் சந்தோசப்படுகிறேன். அத்துடன் மாற்று விமர்சனமென்பது ஒன்று தனிநபர் தாக்குதலாகவோ அல்லது ஒரேயடியாக மறுத்தடிப்பதாகவோ இருக்கும்போது தனித்த பார்வைகளின் வரவுக்கு பாராட்டுவதும் ஒரு தார்மீக உணர்வு சார்ந்ததுதானே..? 
 
பதிவுகள் ஆகஸ்ட் 2001; இதழ் 20


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R