கார்ல் மார்க்ஸ்இந்த உலகத்து மானுடர்களின் துன்பங்களுக்கு அடிப்படைக்காரணம் வர்க்கங்களாகப் பிரிந்து கிடத்தலே. மானுடரின் சகல துயரங்களுக்கும் அடிப்படை பொருளே. பொருள் பிரச்சினை என்பது மானுடர் தாமே தமக்குள் கட்டி அமைத்த சமுதாய அமைப்பு என்ற விளையாட்டே. இது ஒரு விதத்தில் 'பாம்பும் ஏணியும்' போன்றதொரு விளையாட்டே. ஏறுவதும், இறங்குவதும், ஏறுவதுமாக அமைந்த ஒரு விளையாட்டே. இந்த விளையாட்டு மானுடரின் வரலாற்று வளர்ச்சியில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிப்போக்கின் விளைவே. இவ்வித வர்க்கங்களாக மானுடரின் பிரிவுதனை நிலை நிறுத்தி வைப்பதற்குத் துணை போகும் முக்கிய காரணங்களாக மானுடரின் மத்தியில் காணப்படும் ஏனைய பிரிவுகளைக் (மதம், மொழி, இனம், சாதி போன்ற பல) கூறலாம்.

மானுடரின் பிரச்சினைய நன்கு உணர்ந்து மதவாதிகள் பலர் தீர்வுகள் கூறி வருகின்றார்கள். ஆனால் அவர்களின் தீர்வு இறுதித்தீர்வினை ஒருபோதும் அடையப்போவதில்லை. காரணம்: அவர்கள் யாருமே மானுடரின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணமான வர்க்கங்களாகப் பிரிவு பட்டிருக்கும் சமுதாய அமைப்பினை அடியோடு மாற்றுவதைப்பற்றி கூறுவதில்லை. வலியுறுத்துவதில்லை.

இந்த நிலையில்தான் கார்ல மார்க்ஸ் என்னும் பொருளியல் மேதை முக்கியத்துவம் பெறுகின்றான். அவன் தன் அறிவைப்பாவித்து , வறுமையில் வாடிய நிலையிலும், ஒரு கோட்பாட்டினை 'மூலதனம்' மூலம் வைத்தான். அந்தக் கோட்பாடு மானுடரின் பிரச்சினைக்குரிய தீர்வுக்கான சரியான வழியைக் காட்டியது. அல்லது சரியான காரணங்களை இனங்கண்டு ஆராய்ந்தது.

வர்க்கங்கள் அற்ற அமைப்பொன்றில் , மக்கள் தமக்கிடையில் பொருளியல்ரீதியில் துன்பப்படும் நிலை இருக்காது. அடிப்படைத்தேவையான உணவு, இருப்பிடம் ஆகியவற்றுக்கான பிரச்சினை இருக்காது. வறுமை காரணமாக ஏற்படும் அழிவுகள் எதுவுமிருக்காது. அந்த நிலை முதலில் ஏற்படாமல், மானுட வரலாற்றின் அடுத்த கட்டத்தை அடைய முடியாது என்பதை மார்க்ஸ் நன்கு தன் ஆய்வுகள் மூலம் உணர்ந்திருந்தார். அவ்விதமானதொரு சூழல் அல்லது அமைப்பு உருவாகும் வரை மானுடர் தமக்குள் பல்வேறு வழிகளில் பிளவுண்டு மோதிக்கொண்டுதானிருப்பர்; இவ்வழகிய உலகைப் போர்களால் அழித்துக்கொண்டுதானிருப்பர். போர்களற்ற உலகு உருவாவதற்கு வர்க்கங்களற்ற சமுதாய அமைப்பு இவ்வுலகில் நிலவுவது அடிப்படைக்காரணமாக இருக்கும்.

இதனால்தான் மார்க்ஸ் எனக்கு மானுட வழிகாட்டியாகத் தென்படுகின்றான். மானுடரின் துயரங்களை அவன் மனப்பூர்வமாக அறிந்ததனால்தான், உணர்ந்ததனால்தான் அவனால் அதற்கான தீர்வு நாடிய கோட்பாட்டொன்றினை நாடித் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்க முடிந்தது. வறுமை வாட்டியபோதும், மானுடரின் வறுமைக்குக் காரணமான வர்க்கங்கள் அற்ற சமுதாயமொன்றுக்காக அவன் கனவு கண்டான். ஆய்வு செய்தான். அவனது கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்ததனால்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன் போன்ற பலரும் அதனை ஆதரித்தார்கள்.
மார்க்ஸ்: வாழ்க நீ எம்மான்!

இந்த உலகத்து மானுடர்களின் துன்பங்களுக்கு அடிப்படைக்காரணம் வர்க்கங்களாகப் பிரிந்து கிடத்தலே. மானுடரின் சகல துயரங்களுக்கும் அடிப்படை பொருளே. பொருள் பிரச்சினை என்பது மானுடர் தாமே தமக்குள் கட்டி அமைத்த சமுதாய அமைப்பு என்ற விளையாட்டே. இது ஒரு விதத்தில் 'பாம்பும் ஏணியும்' போன்றதொரு விளையாட்டே. ஏறுவதும், இறங்குவதும், ஏறுவதுமாக அமைந்த ஒரு விளையாட்டே. இந்த விளையாட்டு மானுடரின் வரலாற்று வளர்ச்சியில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிப்போக்கின் விளைவே. இவ்வித வர்க்கங்களாக மானுடரின் பிரிவுதனை நிலை நிறுத்தி வைப்பதற்குத் துணை போகும் முக்கிய காரணங்களாக மானுடரின் மத்தியில் காணப்படும் ஏனைய பிரிவுகளைக் (மதம், மொழி, இனம், சாதி போன்ற பல) கூறலாம்.

மானுடரின் பிரச்சினைய நன்கு உணர்ந்து மதவாதிகள் பலர் தீர்வுகள் கூறி வருகின்றார்கள். ஆனால் அவர்களின் தீர்வு இறுதித்தீர்வினை ஒருபோதும் அடையப்போவதில்லை. காரணம்: அவர்கள் யாருமே மானுடரின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணமான வர்க்கங்களாகப் பிரிவு பட்டிருக்கும் சமுதாய அமைப்பினை அடியோடு மாற்றுவதைப்பற்றி கூறுவதில்லை. வலியுறுத்துவதில்லை.

இந்த நிலையில்தான் கார்ல மார்க்ஸ் என்னும் பொருளியல் மேதை முக்கியத்துவம் பெறுகின்றான். அவன் தன் அறிவைப்பாவித்து , வறுமையில் வாடிய நிலையிலும், ஒரு கோட்பாட்டினை 'மூலதனம்' மூலம் வைத்தான். அந்தக் கோட்பாடு மானுடரின் பிரச்சினைக்குரிய தீர்வுக்கான சரியான வழியைக் காட்டியது. அல்லது சரியான காரணங்களை இனங்கண்டு ஆராய்ந்தது.

வர்க்கங்கள் அற்ற அமைப்பொன்றில் , மக்கள் தமக்கிடையில் பொருளியல்ரீதியில் துன்பப்படும் நிலை இருக்காது. அடிப்படைத்தேவையான உணவு, இருப்பிடம் ஆகியவற்றுக்கான பிரச்சினை இருக்காது. வறுமை காரணமாக ஏற்படும் அழிவுகள் எதுவுமிருக்காது. அந்த நிலை முதலில் ஏற்படாமல், மானுட வரலாற்றின் அடுத்த கட்டத்தை அடைய முடியாது என்பதை மார்க்ஸ் நன்கு தன் ஆய்வுகள் மூலம் உணர்ந்திருந்தார். அவ்விதமானதொரு சூழல் அல்லது அமைப்பு உருவாகும் வரை மானுடர் தமக்குள் பல்வேறு வழிகளில் பிளவுண்டு மோதிக்கொண்டுதானிருப்பர்; இவ்வழகிய உலகைப் போர்களால் அழித்துக்கொண்டுதானிருப்பர். போர்களற்ற உலகு உருவாவதற்கு வர்க்கங்களற்ற சமுதாய அமைப்பு இவ்வுலகில் நிலவுவது அடிப்படைக்காரணமாக இருக்கும்.

இதனால்தான் மார்க்ஸ் எனக்கு மானுட வழிகாட்டியாகத் தென்படுகின்றான். மானுடரின் துயரங்களை அவன் மனப்பூர்வமாக அறிந்ததனால்தான், உணர்ந்ததனால்தான் அவனால் அதற்கான தீர்வு நாடிய கோட்பாட்டொன்றினை நாடித் தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்க முடிந்தது. வறுமை வாட்டியபோதும், மானுடரின் வறுமைக்குக் காரணமான வர்க்கங்கள் அற்ற சமுதாயமொன்றுக்காக அவன் கனவு கண்டான். ஆய்வு செய்தான். அவனது கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்ததனால்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன் போன்ற பலரும் அதனை ஆதரித்தார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.