-பேராசிரியர் கோபன் மகாதேவா -

தீராத திமிர் கொண்ட பெண்ணு -- சீதை
வீட்டிலே புருஷனுக்கு மனமெல்லாம் புண்ணு...
தீராத திமிர் கொண்ட பெண்ணு!...   ...   ...   ...   ...   (தீராத)

தேத்தண்ணீர் கொண்டுபோய்க் கொடுப்பாள் -- அது
நாக்கிலே படுமுன்னர் தட்டிப் பறிப்பாள் -- அவர்
ஏனம்மா?... என்ன இது?.. என்றால்...
சீனிபோட மறந்தாச்சு! அதற்கு என்ன? என்பாள்!...     (தீராத)

படம் பார்க்கப் பத்துக்கு வாருங்கோ என்பாள் -- அவர்
பத்து மணிக்குச் சென்றால் பரிகாசம் செய்து...
முத்தி விட்ட வயதிலும் படத்தாசை! என்று...
குத்துப் பேச்சால் விரட்டித் தான்மட்டும் பார்ப்பாள்!.. ... (தீராத)

இருந்தாப் போல், இதைக் குடியும் என்பாள் -- அவர்
வருத்தம் ஒன்றும் இல்லையே? இதேன் எனக்கு? என்றால்...
மருத்துவிச்சி நானெல்லோ? நீர் அல்ல!... என்று...
சிரித்த படி மருந்துகளை அவருள்ளே திணிப்பாள்!...   (தீராத)

அமர்க்களமே சீதையின் அகம், என்றும், காண்பீர்!
சமர்க்களமே சீதையுடன், தினமெல்லாம், கேட்பீர்!!
பதைபதைக்கும் கணவரின் மனமெல்லாம் புண்ணு...
அதைத் தாங்காக் கணவர், தவிக்கின்றார், கண்ணு! ... ... ...

என்று அவர் கிண்டல்ப் பாட்டு ஒன்றைக் கவித்து ...
மன்றொன்றில் வாசித்துப் பார் சிரித்த வாரம்...
மார்-நடுவில் நோவென்று சிகிச்சைமனை சென்று...
பார் இதனை விட்டே பறந்து விட்ட சீதை...

தீராத திமிர் கொண்ட பெண்ணல்ல, காண்பீர்!
வீட்டிருக்கும் கணவரின் மனம் பறித்துச் சென்றால்...  
தீராத திமிர் அல்ல, எம் சீதை, கேட்பீர்!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.