- முல்லைஅமுதன்

சிறு தூறலாய்
காட்சி தந்த பெருமழையாயிற்று.
அம்மா
பெரிய கிடாரமாய்
கொண்டுவந்து
கூரை ஒழுக்கைச் சரிசெய்தாள்.
மரங்கள் முறிந்ததாயும்,
காற்று பேயாய் அடிப்பதாகவும்
கணபதியர் சொல்லிப்போவது மெதுவாய்
சன்னலோரம்
குந்தியிருந்தவளுக்கும்
கேட்டது.
அப்பா மூலையில் குடங்கிப்போய்
பிணம்போலக்கிடந்தார்..
மழை விடவேண்டும்..ஊருக்குள் போகவேண்டும்..
இன்று அடுப்பெரிய ஏதாவது வேண்டும்..
கடைசிக்குரலும்
'அம்மா பசிக்குது'
சொல்லி அடங்கிப்போனது.
அம்மா என்ன ஊற்றெடுக்கும் சுரங்கமா?
அழும் குழந்தைக்குப்பால்தர...??

 

திடுதிப்பென்று
கதவை உடைத்துவந்த
சப்பாத்துக்கால்கள்
தேடுதல் என்று சொல்லியபடியே..
அக்காவை இழுத்த்போயினர்.
அவர்களுள் ஒருவன்
அம்மாவின் கிடாரத்துடன்
அவளின் குரலையும்
எடுத்துசென்றனர்.
குரல் வராத வீட்டில்
மழை பெய்தென்ன??

Mahendran Ratnasabapathy <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>