- சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -முன்னுரை
பழந்தமிழர் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். இதில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இலக்கியமாகும். எட்டுத்தொகையில் நூல்களில் அகம் சார்ந்த நூல்களுள் ஒன்றான அகநானூறு மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். 13 அடி முதல் 31 அடி வரை அமைந்த 400 அகப்பாடல்களின் தொகுப்பாகும். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவாகப் பாகுபாடு செய்துள்ளனர். வேறு நூல்களில் காணமுடியாத ஒரு வரையறையை இந்நூல் காணலாம். நான்காம் எண் முல்லை என்ற முறையில் இந்நூல் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தலைவன் தலைவி மீது கொண்ட காதலும், தலைவி தலைவன் மீது கொண்ட காதலும் இவ்விருவரும் அன்பைப் பயிரினச் காட்சி உவமைகள் வாயிலாகவும், பயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் நிலைகளைக் கூட்டுப் பயிரினக் காட்சிகள் வாயிலாகக் காட்டி அகமாந்தர்கள் உள்ளத்தில் அன்பின் நிலைபேற்றினை உறுதிப்படுத்தும் உணர்வுகளைப் புலவர்களின் குறிப்பின் சுட்டிக்காட்டுவதை இக்கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்துவதை அறியலாம்.

தலைவனின் கூற்று
வினையின் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனே முல்லைத்திணையில் மிகுதியான கூற்று நிகழ்த்துகிறான். வினையை முடிந்து மீண்டும் வரும் சூழலில் தலைவனானவன் தன்னோடு வரும் தேர்ப்பாகனிடம் தன்னுணர்வை வெளிப்படுத்துகிறான். தலைவனுக்குரிய கிளவிகளையெல்லாம் தொகுத்துக் கூறும் தொல்காப்பியர் பாகனைக்குறிப்பிடும்போது,

பேரிசை ஊர்தீப் பாகர் பாங்கினும்     (தொல்.பொருள்.நூ:144)

என்று நூற்பாவின் மூலமாகக் கூறுகிறார்.

தலைவியைப் பிரிந்திருக்கும் போது பாகன் ஒருவனே தலைவனுடன் நெருங்கிப் பணிபுரிபவனாக, நெருங்கியத் தொண்டனாக இருப்பதால் பாகனிடம் மட்டுமே தலைவன் தன் கடமைகளை இனிதே முடித்த மகிழ்ச்சியையும் பிறவற்றையும் புலப்படுத்துவான். இதனை,

.   .   .   .   .   .   முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையிலும் (தொல்.பொருள்.நூ:44)

என்ற நூற்பாவின் மூலமாகச் சுட்டுகிறது.

முல்லைத்திணையில் தலைமகன் தேர்ப்பாகன் கூறுவதாகப் பதினெட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாசறையில் இருக்கும்போது தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக ஒரு பாடலும், வினையை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக பதினான்குப் பாடல்களும், தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக மூன்று பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர வினைமுற்றியத் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பது போல் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக இரு பாடல்களும், பாசறையில் இருந்த தலைவன் தன் நெஞ்சிடம் கூறியதாக நான்கு பாடல்களும், தலைவன் பாசறையிலிருந்து தனக்குத் தானே சொல்லியதாக ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது.

வினைமுற்றியத் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது
தலைவன் பொருள்தேடும் பொருட்டோ, பாசறையில் சென்று போர்புரியம் பொருட்டோ, தலைவியைப் பிரிந்து உரிய காலத்தில் மீண்டும் வருவதாகக் கூறிச்செல்வான். தலைவன் மீண்டு வருவதாகக் கூறிய கார்காலம் வந்ததும் வினையை முடிந்து வருகின்ற தலைவனை தலைவி படும் துயரினையும் வரும் வழியில் உயிரினங்கள் ஒன்றையொன்று அன்பு செய்வதையும், கார்கால மலர்களாகிய முல்லை, பிடவு, காயா முதலியன மலர்கள் மலர்ந்து காணப்படுவதையும் கண்டு தலைவியின் நினைவு மிகுதியால் தேர்ப்பாகனிடம் விரைந்து தேரினைச் செலுத்துமாறு கூறுவது முல்லைத்திணையில் இயல்பாக நிகழும் சூழலாகும்.

மிகுந்த மழைப்பொழிந்தால் முல்லை நிலத்தில் உள்ள பள்ளங்களில் நீர் நிரம்பின. அந்நீரில் வாழும் தேரையின் ஒலியானது வாத்தியங்களின் இசையைப்போல் இருந்தன. பிடவ மலர்கள் மலர்ந்து கிடப்பது செம்மண் நிலத்தில் கோலமிட்டது போல் காணப்பட்டது. காந்தள் மலர்கள் மலர்ந்து பாம்பு படமெடுப்பது போல் காட்சித் தந்தது. திரிந்து கொம்புகளையுடைய ஆண்மான் தன் பெண்மானோடு நீரினை உண்டு மகிழ்ந்தன. பெண்மானோடு நீரினை உண்டு மகிழ்ந்தன. இவ்வாறு நான் மீண்டு வருவதாகக் கூறிச் சென்றக் கார்பருவம் இதுவேயாகும். எனவே தேரினை விரைந்து செலுத்துக எனப் பாகனிடம் கூறுவதை,

ஒருபரி மெலியாக் கொய்சுவல் புரவித்
தாள்தாழ தார்மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ தேரே சீர்மிகுபு
நம்வயிற் புரிந்த கொள்கை
அம்மா அறிவையைத் துன்னுகம் விரைந்தே     (அகம்.154:11-15)

என பொதும்பிற் புல்லாளங் கண்ணியாரின் பாடல்வழியாக அறியமுடிகிறது. வினைமுற்றி மீண்டு வரும் தலைவன் “தேரொலியால் அஃறிணை உயிரிகள் துன்பப்படும். எனவே தேரினை மெதுவாகச் செலுத்துக" என்று பாகனிடம் கூறும் சூழல்களும் இடம்பெற்றுள்ளன.

தேர்ப்பாகனே விரைந்து செல்லும் குதிரை éட்டியத் தேரின் ஓசையைக் கேட்டால் வாழையின் பெரிய மடல்கள் முறையாக உதிர்ந்து பின் கடைசியாகத் தங்கும் குவிந்த மொட்டைப் போன்ற முருக்குடைய கொம்புகளைக் கொண்ட ஆண்மானும், பெண்மானும் அன்போடு சேர்ந்திருக்கும் சேர்க்கைத் தொடராமல் போகும். எனவே தாவிச் செல்லும் குதிரைகளைத் தாற்றுக்கோலால் குத்தாமல் மெதுவாக செல்வாயாக" எனக் கூறுவதை,

வாழை வான்é ஊழுறு புதிர்ந்த
ஒழிகுலை யன்ன திரிமருப்பே ஏற்றோடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டல் ஆகலும் உண்டே    (அகம்.134:10-14)

எனச் சீத்தலைச் சாத்தனார் பாடலடிகளின் வழி அறியமுடிகிறது.

வெறியாட்டுக் களத்தில் பல்வேறு மலர்கள் பரவிக் கிடப்பதைப் போன்று கார்கால மழையில் முல்லைநிலத்தில் பல மலர்கள் பரவிக் கிடக்கின்றன. இக்கார்பருவத்தில் நான் தலைவியைக் காணச் செல்லவில்லை என்றால் சந்தினை இராகு விழுங்குவதால் ஒளி குறைந்து இருள் தோன்றுவதைப் போல், தலைவி என் மீது கொண்டு அன்பு குறைந்து வெறுப்புத் தோன்றிவிடும். எனவே தேரினை விரைந்து செலுத்துக என்பதை,

வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்
உரவுக் கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்
சிறு புன் உறையும் எவ்வம்             (அகம்.114:2-6)

என்று பாகனிடம் தலைவன் என்பதை அகநானூற்றுப்பாடல்களின் மூலமாக அறியமுடிகிறது. கார்காலம் என்றதும் முல்லைநிலத்தில் காணக்கூடிய பல்வேறு மலர்களும் மலர்ந்து செழிப்புடன் காணப்படும். இச்சூழலில் தலைவன் வரவிற்காகக் காத்திருக்கும் தலைவிக்கும், தலைவியைக் காண்பதற்காக வரும் தலைவனுக்கும் இம்மலர்கள் அடையாளமாகத்திகழும் பாங்கினை இதன் வழி அறியலாகிறது.

தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைப்பது
வினைமுற்றிய சூழலில் தலைவன் தன் தலைவியை நினைத்து, அவள் என்ன துன்பம் அடைவாளோ என்ற தன் வருத்தத்தினைப் பாகனுக்குச் சொல்வதும், தன் நெஞ்சிடம் மட்டும் கூறுவதாகவும் பாசறையில் இருக்கும் தலைவன் தன் நெஞ்சிடம் மட்டும் கூறுவதாகவும் இருவேறு சூழல்களில் தலைவன் கூற்று நிகழ்த்துகிறான்.

பாசறையில் இருக்கும் தலைவன் தான் குறித்துச் சென்ற வினை முடியாத நிலையிலும் கார்கால வரவினை உணர்ந்த முல்லை, காந்தள் போன்ற மலர்கள் மலர்ந்து விட்ட சூழலில் தலைவன், தலைவியை நினைத்து நெஞ்சிற்கு உரைக்கின்றான். தலைவியின் பேரழகினைக் காண வேண்டுமெனில், மன்னன் போரினை நிறுத்தினால் மட்டுமே முடியும் என்பதை,

எவன்கொல் மற்றுஅவர் நிலை என மயங்கி
இகுபனி உறைக்கும் கண்ணொடு இனைபுஆங்கு
இன்னாது உறைவி தொல்நலம் பெறூஉம்
இதுநற் காலம் கண்டிசின்             (அகம்.164:8-11)

என்று பாசறையில் இருந்த தலைமகன் தான் சென்ற வினையினை முடித்த பின்னே தலைவியை காணவேண்டும் என்ற பாடலடிகளின் வழியாக மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்றேவனார் உறுதிப்பாட்டினை உணரமுடிகிறது.

முல்லைத்திணைச்சூழலில் தலைவி கூற்று
இருத்தலும், இருத்தல் நிமித்தமும் உடைய முல்லைத்திணையில் தலைவி தன் ஆற்றாமையைத் தோழியிடம் கூறுவதாக ஐந்து (5) பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தலைவன் பிரிந்து வினைமேற்சென்று குறித்தப் பருவம் வந்தும் தலைவன் வராததால் தலைவியின் உடல் மெலிந்து, உள்ளம் கலங்கி வருத்தப்படுவதைக் கண்ட தோழி, பருவத்தின் வரவைக் காட்டி சொல் தவறாது அவன் வருவான்| என வற்புறுத்த அவளுக்கு தலைவி பதிலுரைப்பதாக இரு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கார்காலத்தில் மீண்டு வருவதாகக் கூறிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் வராததால் தன் வருத்ததைத் தோழியிடம் புலம்புவதாக இரு பாடல்களும், தலைவன் குறித்த காலத்தில் வருவான் நீ ஆற்றிருப்பாயாக என வற்புறுத்திய தோழியிடம் எதிருரை கூறுவதாக ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளன.

பருவ வரவின் வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது
தலைவன் வரவினை எதிர்நோக்கி வருத்தத்துடன் காத்திருக்கும் தலைவியிடம் தோழி, உன்னை பிரிந்து தலைவன் உயிர்வாழ் மாட்டன். வினை முடித்ததுமே வருவான்| என ஆற்றுகிறாள். அதற்குத் தலைவி, “மேகமானது மிகுந்த இடியுடன் பெய்த பெருமழையாகிய கார்காலம் முடிந்து, புகைபோல நுண்ணிய துவலைகள் éக்களின் உள்ளே நிறையுமாறு பனியாகப் பெய்து கொண்டிருக்கும் கூதிர்காலமும் முடிந்தது. தன் காதலனைப் பிரிந்த துயரத்தால் வாடிய நீர் வழியும் கண்களைப் போல் காக்கணச் செடியிலே நீலப்éக்களும் மலர்ந்தன. ஈங்கையில் தளிர்கள் நீர் நனைந்த இரு பிரிவாகிய இதயம்போல் பனித்துளியால் நனைந்து காணப்படுகிறது. அவரையின் éக்களும் éத்து செறிவுடன் விளங்குகிறது. கதிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கின்ற முன்பனிக்காலம் வந்தும் தலைவன் வரவில்லையே, அவன் என்று தான் வரப்போகிறான்" எனத் தன் ஆற்றாமை மிகுதியைத் தோழியிடம் கூறுகிறாள். இதனை,

காதலர்ப் பிரிந்த கைறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலர     (அகம்.294:4-5)

என்றும்,

துய்த்தலைப் éவின் புதலிவர் ஈங்கை
நேய்தோய்த் தன்ன நீர்தனை அம்தளிர்
இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர        (அகம்.294:6-10)

என்றும்

சிதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்     (அகம்.294:1-11)

என்றும் கருப்பொருள்கள் முன்பனிக்காலம் வந்ததைக் காட்டும் அடையாளத்தைத் தம் கழார்க்கீரன் எயிற்றியார் பாடலடியின் குறிப்பிடுகின்றன.

கார்காலத்தில் மீண்டு வருவதாகச் சென்றத் தலைவன் கார்காலத்துடன், கூதிர் காலமும், முன்பனிக்காலமும் முடிந்து விட்டது. இப்பொழுது வராத தலைவன் எப்போது வரப்போகிறானோ என ஆற்றாமை மிகுதியை அவரை, ஈங்கை, நெல் போன்ற பயிரினங்கள் வெளிப்படுத்துகின்றது.

பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத் தலைமகள் சொல்லியது
தலைவன் பிரிந்த பின் உழவர்கள் தம்தொழிலைச் செய்யக்கூடிய கார்காலம் வந்துவிட்டது. அத்தொழில் முறையாக முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் தலைவன் வரவில்லையே என தன் தோழியிடம் தலைவி புலம்புகிறாள்.
முல்லை நிலத்தில் மழைப் பொழிந்ததால் ஏற்கனவே புழுதியாகக்கப்பட்ட நிலத்தை மீண்டும் ஊனைக் கிழிப்பது போன்று கிழித்து உழுதனர். பின் விதையினை விதைத்து பயிராக முளைத்தது. விளைந்த வரகினை உண்ட மயில்கள் தோகை விரித்து ஆடின. அக்காட்சியானது குருந்த மரத்தில் கிளிகளை ஓட்டும் மகளிர் அமர்ந்திருப்பதைப் போல் காட்சியளித்தது. இவ்வாறு கார்காலம் முடிந்து அறுவடைக்குரியக் காலமாகிய முன்பனிக் காலமும் வந்தும் தலைவன் வரவில்லையே எனத்தலைவி புலம்புவதை,

கொல்லை யுழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து
கிளிகடி மகளிரின் விளிபடர் பயிரும்
கார்மன் இதுவால் தோழி             (அகம்.194:13-16)

என்ற இடைக்காடனார் பாடலடிகளின் மூலமாக அறியமுடிகிறது.


மற்றொரு தலைவி, வினையின் பொருட்டுப் பாசறையில் இருக்கும் தலைவனுக்கு நாம் படும் துன்பம் தெரியாது இருப்பினும் மேகம் இல்லாத வானத்தில் தெரியும் விண்மீன்களைப்போல் பசுமையாகத் தோன்றும் முசுண்டையின் வெண்மையான மலர்கள் மலர்ந்தன. ஆயர்கள் சூடிய வெண்காந்தன் மலர் மாலையில் மழைநீரானது மாலைப்பொழுதில் வடிந்தது. தெருவெல்லாம் இடியோசையும் பெரும்வெள்ளமும் ஏற்படும் காலம் வந்துவிட்டது. கார்காலத்தில் மீண்டு வருவதாகச் சென்ற நாம் கூதிர்காலம் வந்தும் தலைவியைக் காணச் செல்லாததால் அவள் நிலை என்னாகுமோ என்பதையாவது நினைத்தை,

மழைஇல் வானம் மீன்அணிந் தன்ன
குழைஅமல் முசுண்டை வாலிய மலர
வரிவெண் கோடல் வாங்குகுலை வான் éப்
பேரிய சூடிய கவர்கோல் கோவலர்
எல்லுப் பெயல் உழந்த பல்ஆன் நிரையொடு
நீர்திகழ் கண்ணியர் ஊர்வயின் பெயர்தர
நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து
ஏர்தரு கடுநீர் தெருவுதொரு ஒழுக
பேர்இசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கி
கூதிர்நின் றன்றால் …            (அகம்.264:1-10)

என உம்பற்காட்டு இளங்கண்ணனார் பாடலடிகளின் வழியாகக் காணமுடிகிறது.

முடிவுரை
முல்லைத்திணையில் தலைவன் கூற்று நிகழ்த்தும் சூழல்கள் அனைத்தும் தலைவியைக் குறித்த பருவத்தில் சென்று காண முடியவில்லையே, தன்னை நினைத்து தலைவி எத்தகைய துன்பப்படுவாளோ என்பதை உரைப்பதாகவே அமைந்துள்ளன. தலைவியைப் பற்றிய எண்ணத்தைக் கார்கால வரவை உணர்த்தும் மலர்கள் தலைவியைப் பற்றிய எண்ணத்தைக் கார்கால வரவை உணர்த்தும் மலர்கள் தலைவனின் உள்ளத்தில் எழுப்பதும், வினைவயிற் சென்ற தலைவன் தான் குறித்துச் சென்ற கார்காலம் மட்டுமின்றி கூதிர், முன்பனிப் போன்ற காலங்கள் முடிந்தும் தலைவன் வரவில்லையே என்பதை தன் ஆற்றாமை மிகுதித் தோன்ற கருப்பொருட் தன்மைகளை முன்னிட்டுத் தோழியிடம் தலைவி கூற்று நிகழ்த்துகிறாள். இவ்விருவரின் உணர்த்தப்படும் பயரினங்கள், உயிரினங்கள் வாழும் சூழலில் கூற்றுக்களின் வாயிலாகவே இக்கட்டுரை அமைகின்றது.

துணைநின்ற நூல்கள்
1.    வேங்கடாசாமி நாட்டர், ந.மு.  -  அகநானூறு வேங்கடாசலம் பிள்ளை, ரா.   கழக வெளியீடு சென்னை - 18.
2.    மாணிக்கனார், அ.  - அகநானூறு ,வார்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர். காம்ப்பெக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 17.
3.     செயபால், இரா. -  நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டியல் ' அம்பத்தூர், சென்னை – 98.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர் -    - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -