|
பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
|
கடன் தருவோம்! |
|
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
|
மணமக்கள்! |
|
|
|
தமிழர் சரித்திரம்
|
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
|
Download Tamil Font
|
|
|
|
இலக்கியம்! |
புலம்பெயர் / புகலிடக் கலை, இலக்கிய முயற்சிகள்
பற்றிய ஆய்வுகளின் அவசியமும், படைப்பாளிகளின் பங்களிப்பும்!
படைப்பாளிகளே! ஆய்வுகளை அனுப்பி வையுங்கள்!
உலகெங்கும்
தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பூமிப் பந்தின் பல்வேறு திக்குகளிலும்
வாழுகின்றார்கள். அரசியல், சமூகம், மற்றும் பொருளியற் காரணங்களுக்காக மக்கள்
புலம்பெயர்வதென்பது ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைபெறுமொரு செயல்தான். 'யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!' என அன்றொரு தமிழக் கவிஞன் பாடியதும் இதனொரு விளைவுதான்.
அண்மைக்காலமாக ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் புலம்பெயர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா,
ஆசியா, ஆஸ்திரேலியாவென வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக இலங்கையிலேற்பட்ட 1983
இனக்கலவரத்தைத் தொடர்ந்துதான் இந்த் அதிகரிப்பு. இவ்விதம் புலம்பெயர்ந்த தமிழர்கள்
தாம் புகுந்த நாட்டிலிருந்து பல்வேறு வகைகளில் கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு
வந்தாலும், இதுவரையில் அவர்களது முயற்சிகள் பற்றிய விரிவான, பூரணமான ஆய்வுகளேதும
நடைபெற்றதாகத் தெரியவிலலை. மேலும் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகளோ அல்லது தொகுப்பு
நூல்களோ (எஸ்.பொ.வின் 'மித்ர' பதிப்பகம் தமிழகத்தில் பதிப்பித்த 'பனியும், பனையும்'
தொகுப்பு இதற்கொரு விதிவிலக்கு.) ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலானவை
அரைகுறையானவையாகவே, பூரணத்துவமற்றவையாகவே இருக்கின்றன. பல கட்டுரைகள் அவற்றின் ஆசிரியர்களால் தமக்குக் கிடைத்தவற்றைக் கொண்டு எழுதப்பட்டவை.
இந்நிலையில் புலம்பெயர் / புகலிட இலக்கியம் பற்றிய விரிவான ஆய்வுகளிலும்,
விமரிசனங்களிலும் ஆற்றலுள்ள ஆய்வாளர்கள் ஈடுபட வேண்டும். அதற்கு முதற்படியாக உலகின்
பல்வேறு திக்குகளிலுமிருந்து கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும் அனைவரினதும்
பங்களிப்பு, சுய விருப்பு / வெறுப்பு சார்பின்றிப் பதிவு செய்யப்பட வேண்டும்.
அத்தகைய பதிவுகளே எதிர்காலத்தில் புலம்பெயர் கலை / இலக்கியம் பற்றிய விரிவான
ஆய்வுகளுக்கு அடிக்கற்களாக அமையும் சாத்தியமுண்டு.
எனவே, உலகின் பல்வேறு திக்குகளிலும் பரந்து வாழும் தமிழ்ப் படைப்பாளிகளே, நீங்கள்
வாழும் நாடுகளின் கலை, இலக்கிய
முயற்சிகள், சாதனைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள்.
ஆஸ்திரேலியாவில் இருப்பவர்கள் 'ஆஸ்திரேலியாவில் தமிழ் நாவல்கள்', 'ஆஸ்திரேலியாவில்
தமிழ் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்', 'ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கவிதை',
'ஆஸ்திரேலியத் தமிழ் நாடகங்கள்' ... போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி
அனுப்பலாம். அவ்விதம் எழுதும் கட்டுரைகள் எந்தவிதச் சார்புமற்று, தகவல்களைச்
சேகரிப்பதை மட்டுமே அடிப்ப்டையாகக் கொண்டு உருவாகட்டும். இதுபோல் கனடா, அமெரிக்கா,
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே, சுவிஸ், சிங்கப்பூர்,
தமிழ்கம், மலேசியாவென.. அந்தந்த நாடுகளில் வாழும் படைப்பாளிகள் தாம் வாழும்
நாடுகளின் தமிழ்க் கலை இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வுகளை, விமரிசனங்களை மற்றும்
தகவல்களையெல்லாம் எமக்கு மின்னஞ்சலில் 'யூனிகோட்' எழுத்தில் அனுப்பி வைக்கலாம்.
புலம்பெயர்ந்த தமிழர்களென்று நாம் இங்கு குறிப்பிடும் மக்களோ அல்லது அவர்தம்
இலக்கியமோ வெறும் ஈழத்தமிழர்களுடையது
மட்டுமென்று நாம் கருதவில்லை. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கில் தமிழகத் தமிழர்கள்
புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது கலை ,இலக்கிய
முயற்சிகளையும் நாம் உள்ளடக்கியே கருதுகின்றோம். இது போல் மத்திய கிழக்கு நாடுகளில்
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியாவென்று பல்வேறு நாடுகளில் வசிக்கும்
தமிழ்ர்களும் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து வாழ்ந்து
வருகின்றார்கள். அவர்களது கலை,இலக்கிய முயற்சிகளையும் தாம் கருதுகின்றோம். இது போல்
சிங்கப்பூர், மலேசியா போன்ற
நாடுகளுக்கும் ஈழத்து மற்றும் தமிழகத்துத் தமிழர்களெல்லாரும் புலம்பெயர்ந்து
வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது
முயற்சிகளையும்தான் உள்ளடக்குகின்றோம்.
படைப்பாளிகளே! புலம்பெயர் / புகலிடக் கலை, இலக்கிய முயற்சிகளைப் பற்றிய விரிவான
ஆய்வுகளை மேலும் வளர்த்தெடுப்போம். இதுவரை நாம் அடைந்த வரலாற்றினை மீளாய்வு
செய்வதன் மூலம், எம் வளர்ச்சியினை, சாதனையினை இனங்கண்டுகொண்டிட இத்தகைய
சுயபரிசோதனைகள் மிகவும் அவசியமானவையென்பதால் , அதனையுணர்ந்து நீங்கள் வசிக்கும்
நாட்டின் தமிழ இலக்கிய முயற்சிகள், சாதனைகள் பற்றிய ஆய்வுக க்ட்டுரைகளை
ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகளில்' நிச்சயமாக பதிவு செய்யப்படும்..
- வ.ந.கி -
ngiri2704@rogers.com |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
| |
|