இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2008! இதழ் 99!  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இ(அ)க்கரையில்...
இரண்டாந்தலைமுறையினரின் கணிப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் யார்?

- பிங்கலை ராஜேஸ்வரன் (ஜேர்மனி) -
- தமிழில்: காருண்யா கருணாகரமூர்த்தி (ஜேர்மனி) -

இரண்டாந்தலைமுறையினரின் கணிப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றால் யார்?[
www.Studivz.net என்பது ஜெர்மன் மொழியிலான மாணவர்களின் இணையத்தளம். ஜெர்மனியிலுள்ள புலம்பெயர்ந்த மற்றும் தாய்நில தமிழர்களின் இரண்டாந்தலைமுறைப் பிள்ளைகளின் அங்கத்துவம் பங்களிப்புக்கள் அதில் அதிகம். அண்மையில் அவ்வரங்கில் பிங்கலை இராஜேஸ்வரன் என்கிற மாணவி சக உறுப்பினர்களிடையே அவர்கள் பார்வையில் தமிழர்கள் என்றால் யார், அவர்களுக்கேயான தனித்துவங்கள் அடையாளங்கள் என்ன என்று கேட்டுக் கிடைத்த பதில்களைத் தொகுத்திருந்தார். அவ் இளையவர்கள் தெரிவித்த விஷயங்கள்/அடையாளங்கள் பல உண்மையாயும் சுவாரஸ்யமானவையாயும் இருக்கின்றன. அவற்றை - அப்பாவின் , எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி, உதவியுடன் - மொழிபெயர்த்து இங்கே வழங்குகிறார் காருண்யா கருணாகரமூர்த்தி . இவர் பெர்லினில் பிரெஞ்சு + சட்டம் + மொழியியல் கற்கிறார்.]

01. உங்களின் பெற்றோருக்கு எப்போதும் ஒரு பட்டப்பெயர் (Nickname) இருக்கும். அது அவர்கள் மீதான அன்பு மேவியதால் அல்ல, அவர்களின் பெயர்களை முற்றாக உச்சரிப்பது கஷ்டம் என்பதால்.

02. நீங்கள் ஒரு போதும் பார்த்தோ பழகியோ இருக்காத மனிதரேயாயினும், அவரை இனிமேல் நீங்கள் பார்க்கப்போவதே இல்லையாயினும் அவர் ஒரு தமிழரானால் அவரை நீங்கள் 'மாமா' என்றே அழைக்கவேண்டும். அவர்கள் பெயரெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது.

03. உங்கள் அம்மாவோ அப்பாவோகூட ஒருவரை ஒருவர் பெயர்சொல்லி அழைக்கமாட்டார்கள். ஒருபோதும் உங்கள்/பிறர்
முன்னிலையில் ஒருவரையொருவர் அன்பு செய்யவோ/சீண்டவோ மாட்டார்கள்.

04. உங்களின் நெருக்கமான சிநேகிதர் தமிழராக இருப்பதை விரும்பமாட்டார்கள். பின்னால் நீங்கள் அவருடன் காதலில் விழுந்து தொலைக்கலாம்.

05. உங்களைப் புரிந்துகொள்ளும்/நேசிக்கும் ஒருவரோடு கொஞ்சம் சாவகாசமாகப் பேசவேண்டியிருந்தால் நீங்கள் 100 கி.மீட்டர் தொலைவிலுள்ள நகர்ப்பகுதி ஒன்றுக்குத்தான் செல்லவேண்டும். ஏனெனில் நீங்கள் பேசிக்கொண்டிருப்பது யாராவது ஒரு தமிழர் கண்ணில் விழுந்து தொலைத்துவிட்டால் உடனே விஷயம் வேறுமாதிரியாக எல்லா உலகங்களுக்கும் அலைபரப்புச் செய்யப்படும்.

06. நீங்கள் பரீட்சைகளில் 98% மார்க்குகள் எடுத்தாலும் "ஏன் உன்னால் 100% எடுக்கமுடியவில்லை. உனக்கு நாங்கள் எதிலே குறை வைத்தோம்?" என்பார்கள். உங்களை எல்லா விஷயங்களிலும் எப்போதும் தம் நண்பர்களின் பிள்ளைகளுடன் ஒப்பீடுசெய்தபடி இருப்பார்கள்.

07. உயர் தொழில்நுட்பக்கல்லூரிகளும் (Fachhochschule) பல்கலைக்கழகங்கள்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. நீங்கள் பயிலும் கல்விச்சாலையின் பெயர் பல்கலைக்கழகம் என்று இருந்தாலே அவர்களுக்குத்திருப்தி.

08. நீங்கள் படித்து டாக்டராவதோ, இஞ்ஜினியராவதோதான் அவர்களுக்குப்பெருமை. இதர சாத்தியங்கள் பற்றி அறிய ஆர்வங்காட்டமட்டார்கள்.

09. உங்களுக்கு DUDEN அகராதியிலுள்ள அத்தனை வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். ஏதாவதொரு கலைச்சொல் தெரியாதுபோனால் தொலைந்தீர்கள். உடனே "அப்போ பள்ளிகூடத்தில் இவ்வளவு நாளும் என்னதான் கிழித்தாய்?" என்பார்கள்.

10. நீங்கள் பெண்ணானால் உங்கள் கல்லூரியால் ஒழுங்குசெய்யப்படும் சுற்றுலாக்களில் எதிலுமே நீங்கள் பங்கு பெறமுடியாது. மாணவர்கள் ஆண்களும் பெண்களுமாகச்சென்று ஹொஸ்டல்களில் தங்குவதெல்லாம் கலாச்சாரச் சீரழிவு.

11. உங்களுக்கு ஒரு கைத்தொலைபேசி தந்திருப்பார்கள். அதொன்றும் உங்கள் சொந்தப்பாவனைக்கல்ல, வேண்டியபோது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள.

12. எல்லா உறவினர்வீட்டுக் கொண்டாட்டங்களுக்கும் ஒரு மணிநேரம் தாமதமாகவே செல்வார்கள். ஆனாலும் அவர்கள்தான் அங்கு முதலில் சென்றதாக இருக்கும். இருக்கும் நகரில் 1000 பேர்தான் வாழ்ந்தாலும் அனைவர் ஜாதியும் அனைவருக்கும் அத்துபடி.

13. உங்கள் பெற்றோரின் நண்பர்களின் வட்டம் அநேகமாக ஒரே உறவுக்குள்ளாகவோ, இனத்தவர்களுக்குள்ளாகவோ அல்லது ஊரவர்களுக்குள்ளாகவோதான் இருக்கும். அவர்களின் குழந்தைகளுக்கு நீங்கள் டியூசன் சொல்லித் தரவேண்டும்.

14. சமூகமதிப்பு என்பது அவரவரின் சேமிப்பில் இருக்கும் தங்க நகைகளின் எடையிலேயே இருக்கிறது என்று நினைப்பார்கள். ஏதாவது விஷேடம் வந்துவிட்டால் எப்படியாவது இருக்கும் அத்தனை நகைகளையும் அடுக்கிச் செல்லவே முற்படுவார்கள்.

15. ஒரு பிள்ளைக்கு கிரிஜா என்று பெயர் வைத்துவிட்டால் அடுத்துப் பிறக்கும் குழந்தைகளின் பெயரும் சாருஜா, நீரஜா, தனுஜா, பானுஜா என்றே இருக்கும். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் என்ன எழுத்தில், எத்தனை எழுத்தில், என்னபெயர் வைக்கலாமென்று கோவில் ஐயரையோ, நியூமொரலிஸ்டையோதான் ஆலோசனை கேட்பார்கள்.

16. நீங்கள் வயிற்றுப்போக்குக்காக இரண்டுநாட்கள் ஆஸ்ப்பத்தரியில் அனுமதிக்கப்பட்டிருந்தால் போதும். உங்களுக்கு ஹோர்லிக்ஸ¤ம், ஆப்பிள், தோடைகளும் ஒரு கடைவைக்குமளவுக்கு வந்து குவிந்திருக்கும்.

17. விருந்தினர்களுக்கு கோப்பி, தேநீர் எப்போதும் 2-3 தேக்கரண்டி சீனிசேர்த்து கண்ணாடி டம்ளர்களில் வழங்கப்படும், சிலவேளைகளில் கோப்பைகளில்தான் வழங்கப்பட்டாலும் அவற்றுக்குச் ஸோசர் இருக்காது.

18. உணவில் Ketchup சேர்க்கவேண்டிய போதெல்லாம் பதிலாக Chilli-Sauce சேர்க்கப்படும். உங்கள் இறைச்சிக்கறியை அது வெந்து பிறவுண் ஆகும்வரை வேகவைத்திருப்பார்கள். வீட்டின் எல்லா உணவுவகைக்குள்ளும் ஏதோவொரு ரூபத்தில் வெங்காயமும் மிளகாயும் சீரகமும் நுழைந்துவிட்டிருக்கும்.

19. உங்கள் வீட்டில் தொலைக்காட்சி, டிவிடி, சவுண்ட் சிஸ்டம் என்பனவற்றின் (Remote controls) தொலை இயக்கிகளில் விற்பனையின்போது சுற்றப்பட்டிருக்கும் அவற்றின் பிளாஸ்டிக் உறைகளை எப்போதும் அகற்றிவிடாமல் வைத்துப் பாவித்துக்கொண்டிருப்பார்கள். தொலைக்காட்சிபோன்றவையும் பாவிக்கப்படாத வேளைகளில் தம்மை ஒரு போர்வையால் போர்த்திக்கொண்டிருக்கும்.

20. உங்கள் வீட்டின் குப்பைவாளிகளுக்கு அதற்கேயான பிளாஸ்டிக் உறைகளைக்குப் பதிலாக கடைகளில் இலவசமாகக் கிடைக்கும் (Shoppingbags) நெகிழியாலான பைகளையே பாவிப்பார்கள். ஆனால் அத்யாவசியமற்ற பொருட்கள் [எ+கா: ஷேர்ட் ஹாங்கர்கள்,
மெழுகுதிரி ஸ்டாண்ட்கள், நெகிழியாலான அஞ்சன உறைகள், குறுவட்டு உறைகள், டிபன் பெட்டிகள் , பூச்சாடிகள் ect etc.] என்றாலும் அவை தள்ளுபடிவிலையில் போட்டிருந்தால் அவற்றில் அப்பா நூறும் அம்மா நூறுமாக வாங்கிவந்து சேர்த்திருப்பார்கள்.

21. உங்கள் விடுமுறைகள் எப்போதும் உறவினர் வீட்டில்தான். ஒவ்வோர் ஆண்டும் 650கி.மீட்டர் தொலைவு பிராங்·பேட்டிலுள்ள அத்தைவீட்டுக்குகோ அல்லது எங்களை வரவேற்கக்கூடிய இன்னொரு உறவினர் வீட்டுக்கோ சளைக்காமல் ஒவ்வோர் ஆண்டும்அழைத்துச்செல்வார்கள். அதைவிடவும் அணுக்கமாயுள்ள சூறிச்சையோ, ஆம்ஸ்ரர்டாமையோ, ஹொப்பென்காகனையோ அழைத்துச்சென்று காட்டவேமாட்டார்கள்.

22. ஒவ்வொரு ஆண்டும் அடுத்தமுறை உங்களை ஊருக்குக் கூட்டிப்போகிறேன் என்று வாக்குறுதி அளிக்கப்படுவீர்கள். ஆனால் எப்போதுமே "அங்கே நிலமைசரியில்லை மோசம் என்பதுதான்" அவர்களின் பதிலாக இருக்கும். தப்பித்தவறி எப்போதாவது இந்தியாவுக்குச் செல்லநேர்ந்திருந்தால் அங்கே உங்களுக்கு தினமும் ஆலயதரிசனங்களாகத்தான் இருக்கும்.

23. McDonalds உணவகம் ஒன்றுக்கு எல்லோரும் சேர்ந்து போவதுதான் குடும்பத்தின் உச்சக் கட்டக் குதூகலிப்பாகும் (Outing).

24. உங்கள் பிறந்தநாள்விழாவில் கிடைக்கும் காகிதஉறைகளிலுள்ள வாழ்த்து அட்டைகளை மட்டும் நீங்கள் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை (பணம் etc) அவர்களிடமே தந்துவிடவேண்டும்.

25. உங்களுக்கு ஏதேனும் சம்பாத்தியம் வருமானம் இருந்தால் அதில் பாதியை தங்களுக்குத் தந்துவிடவேணும் என்று உங்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு இருக்கும்.

26. அவர்கள் ஒன்றிவிட்ட சகோதரியின் மாப்பிள்ளையின் தங்கச்சியின் புருஷனின் சகோதரனின் மைத்துனி கர்ப்பமாகியிருந்தால் அதை அவள் அறிய முதலே இவர்களுக்குத்தெரிந்துவிட்டிருக்கும்.

27. உங்கள் 19 வயது சிநேகிதிக்கு கல்யாணமானால் போதும். 25 வயதான உங்களுக்கு இனிமேல் கல்யாணமே ஆகாதென்று உட்கார்ந்து கவலைப்படத்தொடங்கி விடுவார்கள்.

28. அவர்கள் விமானநிலையத்திலிருந்து வெளியே வருவார்களானால் 15 உறவினராவது அவர்களை அழைத்துச் செல்லக்காத்திருப்பார்கள்.

29. வாழ்வது ஒஸ்லோவிலாயிருந்தாலும் எப்போது நல்லூர் முருகனின் கொடியேற்றம், செல்வசந்நிதி தீர்த்தம், வன்னிவிளாங்குளம் முத்துமாரிஅம்மன் தீமிதிப்பு என்ற தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பார்கள்.

30. தன் சப்பாத்துக்கள் தேய்ந்து சிரித்துக்கொண்டிருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ஊரில் குஞ்சியப்புவின் கடைக்குட்டிக்கு ருதுசாந்திச்சடங்கு செய்ய இயூரோ அனுப்பிவிடுவார்கள். பாவம் எங்களைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள் அவர்களுக்கு?

நன்றி : www.studivz.net &
Pingkalai Rajeswaran 10.01.2008

karunaharamoorthy@yahoo.ie


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner