பதிவுகள்

 • Increase font size
 • Default font size
 • Decrease font size
பதிவுகள்

கவிதை: மீட்பர்

E-mail Print PDF

கவிதை படிப்போமா?தேர்ந்தெடுத்த மீட்பரும் மீட்கும்
தொழில் நம்முடையதென மறந்து போனார்.
எந்திர எச்சில் பெற
எறும்புகள் வரிசையில் நகர்கின்றன.
எச்சிலை வாங்கியபடி வியர்வையைத் துடைத்தபடி
எறும்புகள் வீட்டுக்கு திரும்புகின்றன நிம்மதியாக.
தடாலடியாக தேசம் இமாலயத்தைக் கத்தியென சுருட்டித்
தன்னைத்தானே கழுத்தறுத்துக் கொண்டது.
தவறி விழுந்த தலையில் பறக்கும்
சின்ன மலைத் தொடர்கள் இரத்தத்தில் நனைகின்றன.
ஒரு முதலாளி நீதிமன்றத்தை நொறுக்கி வீசி விளையாடுகிறார்
மீட்பர் பாராட்டிப் பிழைத்திருந்தார்.
துண்டுதுண்டாய் தேசத்தை எடுத்து பெட்டியில்
மூடி வைத்துக் கொள்கிறார்கள் முதலாளிகள்.
அண்டை தேசத்தில் மீட்பருக்கு ஒரு சிலை வான் தொடுகிறது
மீட்பர் பிணந்தின்னி கழுகுகள் மீதேறியபடி அண்டை தேசமெங்கும்
சுற்றி திரிந்து முதலாளிகளின் கையொப்பங்களை வேட்டையாடுகிறார்.
வீட்டிலிருந்த எறும்புகள் உரிமைக்காக விடுதலையைப் பரிமாறிக் கொள்கின்றன.
புரட்சியென்றவுடன் எறும்புகள் தம் வயிறு குலுங்க நகைக்கின்றன.
எதிர்ப்பின் மியுசியம் மூங்கில் மரம் போல் துரித பிரம்மாண்டம் கொள்கிறது

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 08 December 2016 22:45
 

நூல் அறிமுகம்: அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

E-mail Print PDF

எங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன.  இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட புறூக் சைட் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தயானி விஜயகுமார் தற்போது அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் கற்றுக் கொண்டிருக்கிறன்றார். ஒரு எழுத்தாளன் தன் படைப்பினூடாக தனது வாழ்க்கை முறை பற்றியும், அதில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் முழு சமுதாயத்துக்கும் அறியத் தருகின்றான். அன்றாட வாழ்வில் தன்னைச் சார்ந்தோர் படும் இன்னல்களையும் துன்பங்களை காணச் சகிக்காது அவனது பேனா மைகொண்டு அழுகின்றது. அத்தகையதொரு எழுத்தாளராக இராகலை தயானி காணப்படுகின்றார். நாட்டுக்காக உழைத்துக் களைத்து, கறுத்துச் சிறுத்துப் போன தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மனதைப் பிசைகின்றன. அபலையாய் விடப்பட்ட பெண்கள் பற்றியும் இவரது கவிதைகள் நிறையவே பேசியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கோபாவேசம் கொள்வதையும் கவிதையின் வரிகளில் காணமுடிகிறது.

அக்கினியாய் வெளியே வா (பக்கம் 11) என்ற கவிதை ஒரு தாயின் மனக்குமுறலாகக் கொந்தளிக்கின்றது. வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு தாய் கூறும் அறிவுரையாக அல்லது வலிகளின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கின்றது. அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போன மலையக மக்கள் இனிமேலாவது தமது எதிர்கால சந்ததிகளை சுதந்திரப் பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்பதை தயானி இக்கவிதையினூடே உணர்த்தியிருப்பது சிறப்புக்குரியது.

Last Updated on Thursday, 08 December 2016 22:18 Read more...
 

தொல்காப்பியர் காட்டும் ஐந்திணைகளின் அமைப்பும் அவற்றின் எழிலும்

E-mail Print PDF

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பண்டைத் தமிழ் ஆன்றோரும், சான்றோரும் தம்வாழ்வியலை அகம், புறம் என இருவகைப் படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். அகம் என்ற அகவாழ்வில் எழும் காதலன்பு, அன்பின் எழுச்சி, நெறியோடு சேர்ந்த வாழ்வின் தகைமை ஆகியவை இப்பகுதியிற் பேசப்படுவதைக் காணலாம். புறம் என்ற புறவாழ்வில் மேற்கொள்ளவேண்டிய முறைகள், ஆண்மை சார்ந்த பணிகள், போரியல் மரபு, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகள் ஆகியவை இப்புறத்திற் கூறப்படுவதைக் காண்கின்றோம். அகம் என்ற பகுதியை ஒருதலைக் காமம் என்றும், அன்புடைக் காமம் என்றும், பொருந்தாக் காமம் என்றும் மூன்று பகுதிகளாகக் காட்டுவர். இன்னும் இவற்றை முறையே கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் தொல்காப்பியர்  (கி.மு.711) ஏழு (07) திணைகளை எடுத்துக் காட்டுவர்.

'கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.'  - (பொருள். 01)

மேற்கூறப்பட்ட ஏழு திணைகளுள், நடுவென்று கூறப்பட்ட பாலைத்திணை ஒழியக், கைக்கிளை பெருந்திணைக்கு நடுவாகி நின்ற ஐந்திணைகளும், கடல்சூழ்ந்த உலகம் பகுக்கப் பட்டிருக்கும் இயல்பாகும்.

'அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.' -  (பொருள். 02)

மேற்காட்டிய 'நடுவண் ஐந்திணை' – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம்.

பெரியோரின் செய்யுளை ஆராய்ந்தால், முதற்பொருள் எனவும், கருப்பொருள் எனவும், உரிப்பொருள் எனவும் கூறப்பட்ட மூன்று பொருள்களுமே காணப்பெறும் என்று தொல்காப்பியர் சூத்திரம் கூறும்.

'முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை.' – (பொருள். 03)

Last Updated on Thursday, 08 December 2016 21:43 Read more...
 

உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக் கிளை நடத்தும் தொல்காப்பியக் கருத்தரங்கு தொடர் - 8!

E-mail Print PDF

உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக் கிளை நடத்தும் தொல்காப்பியக் கருத்தரங்கு தொடர் - 8!

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள எட்டாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்: 'கணினித்தமிழும் தொல்காப்பியமும்' - திரு. வல்லிபுரம் சுகந்தன்

நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 10, 2016
நேரம்: பிற்பகல் 3:00 மணி முதல் – 5:00 மணி வரை
இடம்: Unit 3A - 5637, Finch Avenue East, Scarborough, M1B - 5K9
தொடர்ந்து கேள்வி நேரமும் - கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
நிகழ்வு சரியாக பி.ப. 3: 00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.

உலகத் தொல்காப்பிய மன்றம் - கனடாக் கிளை
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 08 December 2016 21:32
 

எஸ்.பொ. நினைவுகள்......

E-mail Print PDF

(எஸ்.பொ. 26-11-2014 இல் மறைந்த வேளையில் நான்கு அங்கங்களில் எழுதிய தொடரின்  இறுதிப்பகுதி)

எஸ்.பொ

அவுஸ்திரேலியாவில்  பல  தமிழ்  அமைப்புகள்  1983  இற்குப்பின்னர் இயங்கியபோதிலும்  1988   இற்குப்பின்னரே   கலை - இலக்கியம்  சார்ந்த சிந்தனைகள்   உதயமாகின.  1986 - 1987  காலப்பகுதியில்  இங்கு குடியேறிய  ஈழத்தமிழர்கள்  மத்தியில்  நடன -  இசை  ஆசிரியர்கள் கலைஞர்கள்   - எழுத்தாளர்கள்  தத்தமது துறைகளில்  தம்மை வளர்த்துக்கொள்ள   அக்கறைகொண்டனர். தமது  அவுஸ்திரேலிய  வாழ்வில்  பொன்னுத்துரையினால் கடுமையாக   விமர்சிக்கப்பட்ட  கலாநிதி ஆ. கந்தையா  எழுதியிருக்கும்   சில  நூல்களில்  அவுஸ்திரேலியாவில்  புகலிடம் பெற்ற  ஈழத்தமிழர்களின்  கலை,  இலக்கியம்,  கல்வி,  ஆன்மீகம், சமூகம்  சார்ந்த  குறிப்புகள்  அடங்கிய  ஆவண  நூல்களில்  பல செய்திகளை  காணலாம். மெல்பனிலும்  சிட்னியிலும்  பல  இதழ்கள்  வெளியாகின.  சில காலப்போக்கில்   நின்றுவிட்டன.  கணினியின்  தீவிரமான  பாய்ச்சல் இணைய   இதழ்களுக்கும்  இங்கு  வழிகோலியதனால்  பல  அச்சு ஊடகங்கள்  நின்று  விட்டன.  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  முருகபூபதி  1972  இல் எழுதத்தொடங்கி  1997  இல்  தனது  இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை  தனது  பாட்டி  சொன்ன  கதைகள்  நூலினதும் ஏற்கனவே   வெளியான  தனது  நூல்கள்  பற்றிய  விமர்சனங்கள் தொகுக்கப்பட்ட  முருகபூபதியின்  படைப்புகள்  என்ற   நூலையும் மெல்பன் YWCA மண்டபத்தில்  15-11-1997   ஆம்   திகதி நடத்தியபொழுது   -  குறிப்பிட்ட  நிகழ்வை   வித்தியாசமாகவும் அவுஸ்திரேலியாவில்  வதியும்   முக்கியமான  கலை, இலக்கிய ஆளுமைகள்  நால்வரை  பாராட்டி  கௌரவித்து  விருது வழங்குவதற்கும்  தீர்மானித்து -  அந்த  நிகழ்வில்  நம்மவர் மலரையும்   வெளியிட்டபொழுது,  சிட்னியிலிருந்து  கவிஞர்  அம்பி, எஸ்.பொ.  - மெல்பனிலிருந்து  மூத்த  ஓவியர்  செல்லத்துரை, நாட்டுக்கூத்து   கலைஞர்    அண்ணாவியார்  இளைய  பத்மநாதன் ஆகியோரை    அழைத்தார்.

நம்மவர்   மலரில்  மேற்குறித்த  ஆளுமைகள்  பற்றிய  விரிவான பதிவுகளும்   முருகபூபதியின்  படைப்புகள்   நூலில்  எஸ்.பொ.  எழுதிய முருகபூபதியின்  சமாந்தரங்கள்   கதைக்கோவையின்   விமர்சனமும் இடம்பெற்றன. இந்நிகழ்வுக்கு   சிட்னியிலிருந்து  வருகை  தந்த  பேரசிரியர்  ஆ.சி. கந்தராஜா   தலைமை வகித்தார். மெல்பன்   அன்பர்கள்  இந்த  விழாவுக்கு  முருகபூபதிக்கு  பூரண ஒத்துழைப்பு   வழங்கியமையினால்  அது  சாத்தியமானது. ஆளுமைகளை  வாழும்  காலத்திலேயே   பாராட்டி கௌரவிக்கவேண்டும்   என்ற   மரபு  அவுஸ்திரேலியா   மண்ணிலே தமிழ்    சமூகத்திடம்   அறிமுகப்படுத்தப்பட்டதுடன்  அதன்  தேவையும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில்   கலந்துகொண்டு   கௌரவம்  பெற்ற  எஸ்.பொ. அவர்களைப்பற்றிய  சிறப்புரையை  மெல்பனில்  தமிழ்  ஆசிரியராக பணியாற்றும்   இலக்கிய  ஆர்வலர்  திரு. சிவசம்பு  நிகழ்த்தினார்.

மறுநாள்   நவம்பர்  16   ஆம்   திகதி  மெல்பனில் Clarinda  என்னும் இடத்தில்   நடந்த  உதயம்  மாத  இதழ்  நடத்திய  கருத்தரங்கில் பொன்னுத்துரையும்   உரையாற்றினார்.  பொன்னுத்துரைக்கு  உதயம் இதழின்    கருத்துக்கள்   சிலவற்றில்   உடன்பாடுகள் இல்லாதிருந்தமைக்கு  காரணங்கள்   பல  இருந்தாலும்,   உதயம் ஆசிரியர்  டொக்டர்  நடேசனிடத்தில்  அன்பு  பாராட்டினார்.  நடேசனின்  சில  நூல்களையும்  அவர்  செம்மைப்படுத்தி  தமது  மித்ர பதிப்பக   வெளியீடாக  வெளியிட்டார். அவற்றுள்  ஒரு  சிலவற்றுக்கு  பொன்னுத்துரையே  பெயரும்  இட்டார்  என்பதும்  குறிப்பிடத்தக்கது.  வாழும்  சுவடுகள்  (இரண்டு பாகங்கள்)   வண்ணாத்திக்குளம்,   உனையே  மயல்கொண்டு  (நாவல்கள்) இந்த   இரண்டு    நாவல்களையும் - பின்னர்    ஆங்கிலத்தில் ( Butterfly Lake  --  Lost in You)   கொழும்பில்  பிரபல்யமான  நூல் பதிப்பு நிறுவனம்  விஜித்த   யாப்பா  வெளியிட்டது.

Last Updated on Thursday, 08 December 2016 21:22 Read more...
 

முகநூல் பதிவு: அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு

E-mail Print PDF

- தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா -பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய உடலை கட்டிப் பிடித்து முத்தமிட எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வருகிறது.

2) நடிகை நாடாளலாமா வென ஆணாதிக்க அறங்களைப் பேசிய சனாதனிகளின் மூஞ்சியில் ஓங்கி அறைந்த ஒரு திரை நட்சத்திரம் செல்வி ஜெயலலிதா. தனது இரண்டு வயதிலேயே அப்பா ஜெயராமனை பறிகொடுத்தார். தாயார் வேதவல்லி என்ற சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அம்மு என்று அன்பால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தனது இருபத்துமூன்றாம் வயதில் தாயையும் இழந்தார்.மைசூரில் பிறந்தாலும் இவரது பூர்வீகம் திருச்சி சிறீரங்கமாக இருந்தது.சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் பள்ளி படிப்பை கற்ற ஜெயலலிதா தனது பனிரெண்டாவது வயதிலேயே நடன அரங்கேற்றம் செய்தார். இசைத்துறையிலும் தேர்ச்சிமிக்கவராக இருந்தார்.2016 ஆகஸ்டில் எழுத்தாளர் வாஸந்தி எழுதிய Amma: Jayalalithaa's Journey from Movie Star to Political Queen என்ற நூல் ஜெயலலிதாவின் பூர்வீகம் பற்றிய தகவல்களை பதிவு செய்து உள்ளன.

3)முதல்தடவையாக இயக்குநர் சிறீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகம் ஆனார். இது 1965 இல் நடந்தது.அன்றுமுதல் 1980 வரையில் முதன்மை கதாநாயகிப் பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என 127 திரைப்படங்களில் நடித்திருந்தார்.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு 28 படங்களில் இணைந்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படம் துவங்கி அடிமைப் பெண், கன்னித்தாய், காவல்காரன், அரசக்கட்டளை, தலைவன் , ராமன்தேடிய சீதை என தனது திரையுலக முத்திரையை பதித்துக் கொண்டார். நடிகர்திலகம் சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,எஸ்.எஸ்.ஆர் போன்ற பிரபலங்களோடு இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாயின.

4)புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபரில் திமுகவை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( அதிமுக) கட்சியை எம்.ஜி.ஆர்.துவங்கினார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக உருவாகினார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். 1984 இல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். 1989 இல் அதிமுக பொதுச் செயலாளரானார். பல்வேறு அரசியல் சமூக நெருக்கடிகளைத் தாண்டி 1991 ஆம் ஆண்டில் முதன்முறையாக தமிழக முதல்வரான செல்வி ஜெ.ஜெயலலிதா 2015 மே 13 இல் ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி வந்தார். இறுதியாக உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நள்ளிரவில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்தார். தமிழக மக்களின் இதயத்தில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட தமிழகமுதல்வருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

Last Updated on Wednesday, 07 December 2016 22:29 Read more...
 

அரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ. நாடகத்தில் - திரைப்படத்தில் - இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது

E-mail Print PDF

சோ" நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்."  என்று  35 வயதுள்ள  அவர்,  நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம்  கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர்,  சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும்  விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில்   விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும்  இருந்தும்,  எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக  நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின்  அடிப்படையிலேயே சிவாஜி  அவருக்கு  புத்திமதி  சொன்னார்.

" உனக்கு நடிப்பைத்தவிர வேறும்  ஒரு  நல்ல  தொழில் தெரியும்.  நீ பத்திரிகை  நடத்தினால் அது எப்படி இருக்கும் தெரியுமா...? கள் அருந்திய குரங்கை  தேனீக்கள் கொட்டினால் அது என்ன பாடுபடுமோ அப்படித்தான்  இருக்கும்  உனது பத்திரிகையும்" என்றார் சிவாஜி. ஆனால்,  இதனைக்கேட்ட  அவர்  தனது  யோசனையை கைவிடவில்லை. 1970 ஆம் ஆண்டு பிறந்ததும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் தனது பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார். நாற்பத்தாறு ஆண்டுகளையும் கடந்து இன்றும் வெளியாகிறது அந்த இதழ். அதன் பெயர் துக்ளக்.

நடிகராகவும்  வழக்கறிஞராகவும்  இயங்கிக் கொண்டே   வெற்றிகரமாக பத்திரிகையும்  நடத்திய  அவர்தான் நேற்று  சென்னையில் தமது 82 வயதில் மறைந்த சோ. ராமசாமி. துக்ளக் என்ற மன்னர் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இன்று இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் புதிய நாணயத்தாள் விவகாரம் பற்றி  அறிவோம். இந்தியாவில்  விலங்குகளுக்கென மருத்துவமனை அமைத்த முன்னோடியாக அசோக மன்னன் விளங்குவது போன்று, மன்னர் கியாஸ்தின் துக்ளக்கின் மறைவிற்குப்பிறகு,  கி.பி. 1325 இல் பதவி ஏற்ற  முகம்மது பின் துக்ளக்தான் இந்தியாவில் நாணயத்தாளை அறிமுகப்படுத்திய  முன்னோடி. . கிறுக்குத்தனமாக  முடிவுகளை எடுக்கும்  மன்னர்  என்றே முகம்மது பின் துக்ளக்கை வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர். ஆயினும், துக்ளக் -  கணித சாஸ்திரம், தத்துவம், வானவியல், இயற்பியல்   முதலான துறைகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றிருந்தவர். துக்ளக் சோ  அவர்களும் பல்துறை ஆற்றல் மிக்கவர். அவர் ஒரு நடிகராகவும் வழக்கறிஞராகவும்  மாத்திரம்  இருந்திருப்பாரேயானால்  இவ்வளவு  தூரம் பிரபல்யம்  அடைந்திருக்கமாட்டார். சில  அரசியல்  தலைவர்களுக்கும்  ஆலோசகராக  விளங்கியர்  சோ.

Last Updated on Wednesday, 07 December 2016 21:59 Read more...
 

நூல் அறிமுகம்: அர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்

E-mail Print PDF

நூல் அறிமுகம்: அர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்திரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். தற்போது ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் இவர் பேருபகாரியும் கூட. எழுத்தாளரான இவர் ஏனைய எழுத்தாளர்களுக்கும் கரம் கொடுத்து உதவும் ஒரு வள்ளல். பல முக்கிய சம்மேளனங்களில் தலைவராகவும் இருக்கிறார்.

இலங்கையின் இந்துக் கலாசார அமைச்சின் இறைப்பணிச் செம்மல் விருது, சிறந்த வணிக ஏற்றுமதியாளருக்கான இலங்கை ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவரது அனுபவங்களைக் கூறும் நூலாக அர்த்தமுள்ள அனுபவங்கள் என்ற கனதியான தொகுதி 264 பக்கங்களில் காந்தளகம் வெளியீடாக வெளிவந்துள்ளது. முயற்சி திருவினையாக்கும் (பக்கம் 19) என்ற அவரது முதலாவது அனுபவத்தில் பல வியக்கத்தகு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதாவது இறைவனின் சித்தம் இருந்தால் எந்தக் காரியமும் கைகூடும் என்பது எல்லா மதத்தவரதும் நம்பிக்கை. திரு. ஈஸ்வரன் அவர்கள் தொழில் செய்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில் இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த மாவு திரிக்கும் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பப்பட்ட மூடைகளில் பல இறாத்தல் எடை குறைவாக இருந்திருக்கின்றது. அதற்கு எதிராக செயல்பட்டால் அரசாங்கத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அந்த சந்தர்ப்பத்தில் தான் அவர் தனது தந்தையைப் பார்;க்கச் செல்லும் நேரம் அங்கிருந்த வரதராஜ விநாயகர் ஆலயத்திலிருந்து கேட்ட மணியோசை அவரை ஈர்த்திருக்கிறது. அப்போது ஒரு சட்டத்தரணியைச் சந்தித்துப் பேசியதில் அவரது பிரச்சினை தீரும் வழி கிடைக்கின்றது. இது வரதராஜ விநாயகரின் அருள் என்று எண்ணிய ஈஸ்வரன் அவர்கள் கோயிலுக்கு தன்னாலான பங்களிப்பை நல்கினார். ஆனால் அவரைவிட இன்னொருவர் பெரிய தொகையைக் கொடுத்த போது தன் இறைவனுக்கு அதைவிட மேலானதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய இவர், தான் அடிமைப்பட்டிருந்த விஸ்கி குடிக்கும் பழக்கத்தை அன்று முதல் விட்டொழித்தாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

முயற்சி திருவினையாக்கும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் விளக்கம் சிந்திக்கத்தக்கது. இதை நூலாசிரியருக்குக் கற்றுக்கொடுத்தவர் சுவாமி வாகீசானந்தர். முயற்சி வினையாக்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்றுதான் சொல்லப்படுகின்றது. திரு என்பதன் அர்த்தம் இறைவனின் ஆசி என்பதாகும். முயற்சியும், இறைவனின் ஆசியும் இருந்தால்தான் எந்த காரியமும் வெற்றியடையும் என்கிறார் நூலாசிரியர்.

Last Updated on Wednesday, 07 December 2016 19:49 Read more...
 

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்

E-mail Print PDF

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்முன்னுரை
கவிஞர் சிற்பியின் சிந்தனைகள் பரந்த அனுபவமும் மனித வாழ்க்கை குறித்த காலத்திற்கேற்ற மதிப்பீடுகளும் கொண்டவை. தனிமனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் போக்கில் அவருடைய கவிதைகள் அமைந்துள்ளன. இவை சமூகம் சார்ந்த பல்வேறு சிந்தனைகள், வரலாறுகள், மரபுகள், தொன்மங்கள், சமயம், சமயமறுப்பு, அரசியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் தற்கால வாழ்க்கைக்கும் எதிர்கால சமூக நலனுக்கும் ஒரு தீர்வு சொல்கின்ற வகையில் அமைந்துள்ளன. அவருடைய கவிதைகளில் அவர் சார்ந்திருந்த சில இயங்கங்களின் செயல்பாடுகளும், கொள்கைகளும், தத்துவங்களும் எதிரொலிக்கின்றன. இவ்வகையில் அவ்வியக்கம் சார்;ந்து, இவர் கவிதைகளை ஆராய்வது இங்கு பொருத்தமுடையதாகிறது.

தத்துவம் - விளக்கம்
“தத்துவம் என்ற சொல் நெடுங்காலமாகவே ஆன்மீக வாதிகளால் பிரம்மத்தைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தள்ளது. சாமவோ சாந்தோக்கிய உபநிடதத்தில் வேதாந்த மகாவாக்கியமான தத்துவம்சி (தத் - இறைவன், துவம் - நீ, ஆசி – ஆகிறாய்) இறைவன் ஒருவன் உள்ளான் என்பதை வலியுறுத்துகிறது”1 மாணிக்கவாசகரும், “தாயிற் சிறந்த தயாவண தத்துவனே என்ற பிரமத்தைச் சுட்ட தத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்”.2

பழங்காலத்தில் ‘மெய்’ என்னும் சொல், உட்பொருளை உணர்த்திற்று, உட்பொருள் என்பது உண்மைப்பொருள் என்று பொருள் தருகிறது. இந்த அடிப்படையில் தத்துவம் என்ற வடசொல்லை விடுத்துத் தமிழ்ச் சொல்லான ‘மெய்ப்பொருளியல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘மெய்யியல்’ என்றும் வழங்குவர்.
மேலும் 'Philosophy’ என்னும் ஆங்கிலச் சொல் ‘பிலாஸ்’, ‘சோமியா’ என்னும் இரு கிரேக்கச் சொற்களாலானது. இதன் தமிழாக்கம் ‘பேரறிவுக்காதல்’ என்பதாகும். ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்படும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக’ என்ற பெரிய புராணச் சொற்றொடரில் பேரறிவு என்னும் சொல் ஏறத்தாழ இதே பொருளைத் தாங்கி வந்துள்ளது”3.

'Philosophy’ என்னும் சொல் தத்துவம் என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. தத்துவம் என்பது ‘தத்வ’ என்ற வடசொல்லின் தற்பவம் ஆகும். ‘நீயே அது’ என்பது இச்சொல்லின் உண்மைப் பொருளாகும்.

Last Updated on Wednesday, 07 December 2016 19:31 Read more...
 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!

E-mail Print PDF

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்! கடந்த சில மாதங்களாகவே அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் விரைவில் பூரண குணம் பெற்று வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் மாரடைப்பினால் அவர் மறைந்த செய்தியினை அப்பலோ மருத்துவமனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. தமிழகத்தின் ஏன் இந்தியாவின் வசீகரமான மக்களின் மனங்கவர்ந்த அரசியல் தலைவர்களிலொருவராக அவர் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார். தமிழகத்தின் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் முதலமைச்சர் என்ற வரலாற்றுச்சிறப்பும் அவருக்குண்டு. ஆழ்ந்த வாசிப்பும், பன்மொழி அறிவும் மிக்கவராக விளங்கியவர் ஜெயலலிதா. இவர் எழுத்தாளர், பத்திரிகையாளரும் கூட. கலையுலகைப் பொறுத்தவரையில் சிறந்த நடிகை மட்டுமல்லர் சிறந்த நாட்டியக் கலைஞராகவும் விளங்கியவர்

அரசியலுக்கு அப்பால் எம்ஜிஆர்/ஜெயலலிதா சினிமாவில் கோலோச்சிய காலகட்டத்தில் அவர்களது திரைப்படங்கள் பார்த்து வளர்ந்தவர்கள் பலர்.

அரசியலில் எவ்விதம் எம்ஜிஆரின் சத்துணவுத்திட்டமோ  அவ்விதமே ஜெயலலிதா ஆட்சியில் பெண் சிசுக் கொலையினைத்தவிர்ப்பதற்காக அவர் அறிமுகப்படுத்திய தொட்டில் திட்டம், மாணவர்களுக்கு அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள், வறிய மக்களுக்காக அறிமுகப்படுத்திய குறைந்த விலை உணவுத்திட்டங்கள், மற்றும் திருமணம் செய்யவிருக்கும் குடும்பங்களுக்கு உதவும் திட்டங்கள் போன்றவையும்.

ஆணாதிக்கம் நிலவிய சினிமா மற்றும் அரசியல் உலகில் அவர் தனித்து, தைரியமாக , சவால்களை எதிர்த்து நின்ற துணிச்சல் வியப்புக்குரியது. மானுடர்கள் யாருமே நிறைவானவர்கள் அல்லர். அனைவருமே குறை. நிறைகளுடன் கூடியவர்கள்தாம். ஜெயலலிதாவும் விதிவிலக்கானவரல்லர். தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் அபிமானத்துக்குரிய அரசியல் தலைவர்களிலொருவர் அவர். அம்மக்களின் உணர்வுகளை நாம் அனைவரும் மதிக்க வேண்டும்.  இத்தருணம் அவரது நல்ல பக்கங்களைப்பார்ப்போம். பாராட்டுவோம்.நினைவு கூர்வோம்.

Last Updated on Tuesday, 06 December 2016 00:49
 

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து இலங்கை (கிழக்கு மாகாணம்) நடத்திய சர்வதேச “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள்” சர்வதேச பயிற்சிப்பட்டறை!

E-mail Print PDF

[அண்மையில் இலங்கையில் உத்தமம் அமைப்பு சார்பாக இலங்கையில் அதன் செயற்குழு உறுப்பினர் திரு.சரவணபவானந்தன் அவர்களின் முன்னெடுப்புகளால் இரண்டுநாள் பயிலரங்கம் 8,9-நவம்பர் 2016   நடைபெற்றது. அதன் நிகழ்வுகளைப் பற்றிய விபரங்களை முனைவர் துரை மணிகண்டன் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் -]

8,9-நவம்பர் 2016 இரண்டுநாட்கள் திருக்கோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கவிழா 8-11-2016 காலை 9 மணிக்கு இனிதே தொடங்கியது. நிகழ்வில்  உத்தமம் உறுப்பினரும், கிழக்குக் கல்வி அமைச்சரின் இணைப்பாலருமான வ. கலைச்செல்வன்  வரவேற்புரை வழங்கினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ஆசிரியர்கள் கணினியில் தமிழ்மொழியினை அதிகமாகப் பயன்படுத்துவதோடு அதேசமயம் அந்த விடயத்தை மாணவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.  மேலும் கணினியில் தமிழின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று, தாய்மொழியின் ஊடாக இணையத்தில் அதிகமான தொழில்நுட்ப அறிவையும், தமிழில் இருக்கின்ற இலக்கிய ஆக்கங்களையும் பெற்று புதிய நோக்கில் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள இது பேருதவி புரியும் என்றார். இணையத்தில்  தமிழ்மொழியை வளர்ப்பதன் மூலம் உலக மொழிகளில் தமிழையும் ஒரு சிறந்த இட்த்திற்குக் கொண்டுசெல்ல முடியும் என கருத்துரைத்தார்.

Last Updated on Saturday, 03 December 2016 21:21 Read more...
 

நூல் அறிமுகம்: நெய்தல் நிலத்துக் கவிதைகள் - மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை.

E-mail Print PDF

நெய்தல் நிலத்துக் கவிதைகள்: மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத்தொகுதி குறித்த ஒரு பார்வை. மு.புஷ்பராஜன்போர் என்பது ஒரு பிரதேசத்தில் பிரவேசித்து விட்டால் அந்நிலமானது மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிடுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். கூடவே இழப்புக்களும் இடப்பெயர்வுகளும் கூட அங்கு நியதிகளாகவும் நிரந்தரங்களாகவும் மாறி விடும். இத்தகைய மரணங்கள் மலிந்த பூமியிலிருந்து இன்னல்களுடனும் இழப்புக்களுடனும் இப்பூமிப்பந்தெங்கும் சிதறிப் போன பல லட்சம் ஈழமக்களினது சாட்சியங்களாகவும் குரல்களாகவும் மு.புஷ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள்‘ எனும் கவிதைகளின் தொகுதியொன்று வெளிவந்துள்ளது.

மு.புஷ்பராஜன் நாடுகள் கடந்த கவிஞர், விமர்சகர், ஆய்வாளர். அத்துடன் கலை, இலக்கியம், திரைப்படம் எனப் பல்வேறு தளங்களிலும் இயங்குபவர். இவரது நூல்களாக ‘அம்பா’ என்ற மீனவர் பாடல்களின் தொகுப்பும் ‘வாழ்புலம் இழந்த துயரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பொன்றும் இதுவரை வெளிவந்துள்ளது. ஈழத்தில் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் மட்டுமே வெளிவந்தாலும் ஈழ இலக்கிய உலகில் பலத்த அதிர்வுகளையும் எதிர்வினைகளையும் ஆற்றிய ‘அலை’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். ஈழம், தமிழகம், புகலிடம் என்ற முக்கோணத் தளப் பரப்பில் உயிர்ப்புடன் இயங்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.  இது இவரது முதலாவது கவிதைத்தொகுதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று பல நூறு கவிஞர்களால் இயங்குகின்ற நவீன தமிழ் கவிதை உலகில் மு.புஷ்பராஜன் அவர்கள்  முற்றிலும் வேறுபட்டவராக காணப்படுகிறார். இதற்கு இவரது இந்த மரபு குறித்த அறிதலும்  புரிதலுமே  முக்கிய காரணமாக விளங்குகின்றது. நவீன தமிழ் கவிதை மரபானது 150 வருடங்களுக்குள் மட்டுமே உட்பட்ட மிகக் குறுகிய ஆயுட்காலத்தை கொண்டதாக இருப்பினும் இது  உலக அரங்கில் தனக்கென ஒரு தனியான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமைக்கு, இம்மரபானது தன்னகத்தே ஒரு மூவாயிரம் வருட பழமையும் செழுமையும் வாய்ந்த ஒரு கவித்துவ பாரம்பரியத்தையும் மரபையும் கொண்டிருப்பதே ஒரு முக்கிய காரணமாகும். இம்மரபு குறித்த புரிதலும் அறிதலும் கொண்டவர்களே ஒரு சிறந்த கவிஞராக இருக்க முடியும் என்பது இன்று நிதர்சனமான உண்மையாகிவிட்டது. இதனால்தான் என்னவோ எந்தவிதமான மரபு சார்ந்த அறிவோ எண்ணங்களோ  இன்றி மேலைத்தேய சிந்தனையில் மட்டும் தடம் புரண்டு எழுதும் இன்றைய பல கவிஞர்கள் அவர்களது கவிதைகளை படிமங்கள் என்னும் பம்மத்துக்களால் மட்டும் காட்சிப் படுத்துகின்றனர். இத்தகைய பயமுறுத்தும்  கரடு முரடான காட்சிப் படிமங்களின்றி மிக எளிமையானதும் சிக்கல்கள் இல்லாததுமான  சொற்களால் மட்டுமே இக்கவிதைத் தொகுதி நிரம்பியிருக்கின்றது.

Last Updated on Saturday, 03 December 2016 01:56 Read more...
 

மகுடம் கனடாச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா!

E-mail Print PDF

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் மகுடம் கலை இலக்கிய இதழின் கனடா சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு பகிர்வு இலக்கிய அமைப்பினால் எதிர்வரும் சனிக்கிழமை (03-12-2016) மாலை 4.00 மணிக்கு திருகோணமலை உட்துறை முக வீதியில் அமைந்துள்ள TDDA மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது. ஆய்வாளரும் பிரபல ஊடகவியலாளருமான திருமலை நவம் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் பிரபல நாவலாசிரியர் க.அருள் சுப்பிரமணியம் பிரதம அதிதியாகவும் பிரபல எழுத்தாளர் திரு. அ.ஜெயராஜா சிறப்பதிதி யாகவும் கலந்து கொள்கின்றனர். வரவேற்பை பகிர்வு செயற்பாட்டாளர் திரு. வ.தர்ம பாலனும் வெளியீட்டுரையினை மலை முரசு ஆசிரியர் மாயன் சிறி ஞானேஸ்வரனும் " ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் மகுடம் " என்ற தலைப்பில் ஆய்வுரையை கவிஞர் தில்லை நாதன் பவித்திரனும் நிகழ்த்தவுள்னர். மலரின் முதல் பிரதியை கனடா திரு.எஸ்.லிங்கேஸ்வரன் பெற்றுக்கொள்ள நன்றியுரையை மகுடம் ஆசிரியர் மகுடம் வி.மைக்கல் கொலின் ஆற்றுவார். திருமலை வாழ் கலை இலக்கிய நண்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்

Last Updated on Thursday, 01 December 2016 00:13 Read more...
 

ஆய்வு: விழுமியத்தை தொலைத்த தமிழர்களைத் தேடி

E-mail Print PDF

- பெ.இசக்கிராசா, முனைவர்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்தொடக்கமாக
பண்டைய தமிழனின் முற்போக்குத் தனமான தரத்தினை நாம் கண்டு கொள்ள வேண்டிய அல்லது பயணிக்கும் பாதையாக தமிழ் இலக்கியத்தினைக் காணலாம். வழக்கமாக சொல்லப்படுகின்ற மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இலக்கியங்கள் இன்றளவும் இருந்து வருகின்றன. மொழியின் இலக்கண ஒழுக்கத்தை போதித்த தொல்காப்பியம் தொடர்ந்து சங்க இலக்கிய நூல்களும், தனிப்பாடல் நூல்களும், காப்பியமான சிலம்பும், உலகம் போற்றும் வள்ளுவமும் அவை வழங்கிய வாழ்வியல் விழுமியமும் இன்னும் உயிர் கொண்டுதானிருக்கின்றன. குழந்தைப் பருவத்திலேயே ஞானத்தினை வளர்க்கும் விதமாக ஆத்திசூடி முதலான எண்ணிலடங்க அறநெறி இலக்கியங்கள் அதிகமே. அதனை எடுத்தியம்பும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

விழுமியம்
தனக்கு எது தேவையோ அதுவே தர்மம் என்று சொல்லப்படுகின்ற மனோபாவத்திற்கு வந்து விட்ட இன்றைய தமிழ் தலைமுறையினர் தங்களது மூதாதையர்களின் முற்போக்கான பாங்கினை மறந்து விட்டனர். காரணமின்றி முந்தையோர் அறக் கருத்துக்களை வழங்கியதன் தேவையை இன்றைய சூழலில் வாழ்கின்றவர்கள் தங்களது தனிமனித உள்ளத்தின் வழியாக நின்று சிந்திக்கும் பொழுது தமது முன்னோர்களின் ஒவ்வொரு பதிவும் முக்கியமான விழுமியங்கள் என்பது புலப்படவே செய்யும்.

அறத்தினூ உங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறந்தனன் ஊங்கில்லை கேடு

என வள்ளுவம் வழங்கும் அறம் எப்பொழுதும் எல்லாத் தலைமுறைக்கும் புரிந்து கொள்ளும் விதமாகவே படைக்கப்பட்டிருக்கிறது. அறங்கள் பற்றி நாம் சிந்தனை செய்கின்ற தருணங்களில் உள்மனக்கிடக்கையில் புதைந்திருக்கும் சுயநல தர்மங்கள் உடைந்தே போகும். உள்ளமே கோயில் என்ற சொற்பதத்திற்கு மூலவிதையான ஆரம்பத் தமிழனின் இன்றைய வாரிசுகளின் பாதைகளும் பயணிக்கும் தடங்களும் எவ்வழியான அறத்தினைச் செய்து கொண்டிருக்கின்றன. இன்று கௌரமாக வாழ்ந்து  கொணடிருக்கின்றவர்கள் அறமற்ற விழுமியங்களைச் சுமந்து செல்கின்ற தோடு மட்டுமின்றி அது தான் சரியென தவறான வழித்தடங்களை பின்வருகின்ற தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாதிகள் மண்ணுயிர் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில

Last Updated on Tuesday, 29 November 2016 05:30 Read more...
 

ஆய்வு: முதுமொழிக்காஞ்சி உணர்த்தும் சமுதாய நெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முதுமொழிக்காஞ்சியில் இடம் பெறும் சமுதாயநெறிகளை ஆராய்வதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் முதுமொழிக்காஞ்சி
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்.முதுமொழி,முதுசொல் என்பன பழமொழியைக் குறிக்கும்.”காஞ்சி தானே பெருந்திணைப் புறனே” (தொல்.பொருள் புறம்.22) என்பது தொல்காப்பியம்;.இவ்விரு சொற்களால் குறிப்பிடப்படும் இந்நூல் நிலையாமை குறித்தோ,பழமொழியைப் பெற்றோ அமையவில்லை.மாறாக உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.புறப்பொருள் வெண்பாமாலையில் மூதுரைப் பொருந்திய முதுமொழிக்காஞ்சி எனச் சுட்டும் ஆசிரியர்,

“பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடிவு உணரக் கூறின்று”

என்று விளக்குகிறார்.அதாவது உலகியல் உண்மைகளைப் புலவர் பெருமமக்கள் எடுத்துயம்புவது என்பது இந்நூற்பாவிற்குரிய விளக்கமாகும்.

Last Updated on Tuesday, 29 November 2016 05:09 Read more...
 

தமிழகம்: கனவு - சேவ் : இலக்கிய நிகழ்வு

E-mail Print PDF

சுப்ரபாரதிமணியன்நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!( குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலகத் திரைப்படம்  திரையிடல் மற்றும் இலக்கிய அமர்வுகள் )4/12/16 ஞாயிறு மதியம் 3 மணி முதல், சேவ் அலுவலக வளாகம், தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம்   வீதி, திருப்பூர்

சிறப்புத் திரைப்படங்கள்”
1.குறும்படங்கள்
சப்வே- தஞ்சை ரமேஷ்

கோவை செல்வியின் இரு குறும்படங்கள்
2. ஆவணப்படம் : மனோமணியம் சுந்தரம்பிள்ளை- இளங்கோ, திருனெல்வேலி
3. உலகத் திரைப்படம் : கொரியன் திரைப்படம்

நூல்கள் அறிமுகம்:
சேவ் வெளியிட்ட “ களவாடப்பட்ட குழந்தைப்பருவம் “
சுப்ரபாரதிமணியனின் “ சிவப்புப் பட்டியல் “ ( அழியும் உயிரினங்கள்) பற்றியது
அண்டனூர் சுராவின் “ ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை “ சிறுகதை

- பேராசிரியர் செல்வியின் படைப்புகள் பற்றி சுபசெல்வி 

* கவிதைகள் வாசிப்பு

வருக ..(ஒருங்கிணைப்பு ஜோதி 90255 26279 , மனோகர் 81242 83081

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 29 November 2016 04:54
 

ஆய்வு: திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது ( உ.வே.சா நூலகச்சுவடி)

E-mail Print PDF

 பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -முன்னுரை
உலகின் எந்த மொழி இலக்கியமானலும் அது தோன்றிய சமகாலநிகழ்வுகளை பிரதிபலிப்பதாகவே பெரும்பாலும் அது அமையும் எனலாம். ஆனால், நாம் இன்று அனுபவிக்கும்; எந்தவொரு நவீனக் கண்டுபிடிப்பும் தோன்றாத காலகட்டங்களில் வாழ்ந்த மக்களின் சமுதாய பின்னனிகளையும், அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், அவர்களை வழிநடத்திய அரசர்களையும், அவர்கள் கால வரலாறுகளையும், இன்னபிற பதிவுகளையும் ஏடுகளில் அடுத்த தலைமுறையினருக்கு எழுத்து வடிவத்தில் எடுத்துச்செல்லும் அற்புதப் பணியில் ஈடுபட்ட நம் முன்னோர்களின் முயற்சி உண்மையில் வியந்து பாராட்டத்தகும். அந்த வகையில் தமிழுலகம் இதுவரை எத்தனையோ இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே வளர்த்து வந்துள்ளது. அவற்றில் தமிழுக்குக் கிடைத்த தூது என்னும் சிற்றிலக்கியம் அகவாழ்விலும் புறவாழ்விலும் மன்னர்களுக்கும் மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணி தமிழிலக்கியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது என்பதை கற்றோர் யாவரும் அறிவோம். உ.வே.சாமிநாதையர் நூலகச்சுவடியில் பதிப்பாசிரியர் மு.சண்முகம்பிள்ளை மற்றும் பொறுப்பாசிரியர் முனைவர் இரா.நாகசாமி முயற்சியால் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்ட திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது என்னும் நூலின் உட்கருத்துக்களை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூது பொருள் விளக்கம்
ஒருவர் தன்னுடைய கருத்தினை மற்றொருவருக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிப்பதற்கு தன் நம்பிக்கைக்குரிய உயிரினத்தின் வாயிலாகவோ அல்லது ஒரு நபரின் வாயிலாகவோ ஒலிவடிவிலோ வரிவடிவிலோ பொருள்வடிவிலோ தெரிவிப்பதனை தூது எனலாம். தூது என்பது சொல்லியனுப்பப்படும் செய்தியையும் சென்று சேர்ப்பவனின் செயலையும் குறிக்கும். இச்செயலினைச் செய்பவன் ‘தூதன்’ எனப்படுவான். இந்நிலை உயர்திணை அஃறிணையாகிய இரண்டிற்கும் பொருந்தும்.

மகளிர் தம் மனங்கவர்ந்த மனாளனுக்கு தன்நிலையை தோழியின் வாயிலாகத் தூதாகச் சொல்லியனுப்பும் மரபு நம் தமிழ் சமுதாயத்தில் காலந்தோறும் இருந்து வந்துள்ளதனை இலக்கண இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. மேலும், பிரிவுக்காலங்களில் தலைவன் தலைவியின் மனமாற்றத்தினை நீக்குவதற்கு தோழி உள்ளிட்ட பலரும் தூதாக சென்றுள்ளனர். இவ்வாறு தலைவன் தலைவி பொருட்டு தூது செல்பவளை ‘தூதி’ என்பர். தலைவன் தலைவியின் காதல் பொருட்டு செல்லும் தூதினை ‘வாயில்’ என்னும் பெயரால் தொல்காப்பியர் குறிப்பிடுவர். இதனையே,

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”        ( தொல்.பொருள்.கற்பியல்.52 )

Last Updated on Monday, 28 November 2016 02:50 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 210: இசை கேட்கும் நேரம் இது!

E-mail Print PDF

பாலமுரளி கிருஷ்ணா1. இசை கேட்கும் நேரம்: இசைச்சிகரம் சரிந்தது: பாலமுரளிகிருஷ்ணா மறைவு! அமரர் சங்கீதக் கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா நினைவாக...

பிரபல கர்நாடக இசைக்கலைஞரான கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா இன்று (நவம்பர் 22) சென்னையில் மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக இசையின் சிகரங்களில் ஒருவராக விளங்கிய பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இந்தியத் திரைப்படத்துறையிலும் தன் பங்களிப்பினை வழங்கித் தடம் பதித்தவர். இது பற்றி தினமணி இணையத்தளத்தில் '400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராக நடித்தார். 1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார். 11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலமுரளிகிருஷ்ணா எனக்கு மிகவும் பிடித்துப்போனதுக்கு முக்கிய காரணங்களாக அவரது அனைவரையும் ஈர்க்கும் முகராசி, எந்நேரமும் இதழ்க்கோடியில் ஒளிரும் காந்தப்புன்னகை, நெஞ்சினையள்ளும் இன்குரல், வித்துவச்செருக்கு அற்ற பெருந்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய 'ஒரு நாள் போதுமா? ' பாடலை யார்தான் மறப்பர்? இவரது பாடல்களைக் கேட்டு இரசிப்பதற்கு நிச்சயம் ஒரு நாள் போதாதுதான்.

இன்று முழுவதும் அடிக்கடி சிந்தையில் 'ஒரு நாள் போதுமா/', 'தங்கரதம் வந்தது' மற்றும் 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' ஆகிய பாடல்களே தோன்றுவதும், மறைவதுமாகவிருந்தன. அப்பொழுதுதான் தெரிந்தது என் ஆழ்மனத்தில் எவ்வளவுதூரம் அமரர் பாலமுரளிகிருஷ்ணாவின் இன்குரல் பதிந்துபோய்க்கிடக்கின்றது என்ற உண்மை. தமிழ்த்திரையுலகின் முக்கியமான இசைச்சாதனையாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர். இம்மூவரின் இசையமைப்பிலும் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் மெல்லிசைப்பாடல்கள் பாடியிருக்கின்றார். அவை அனைத்துமே மிகுந்த வரவேற்பினைப்பெற்ற பாடல்கள். எழுபதுகளில் 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' பாடல் இலங்கை வானொலியின் தமிழ்ப்பகுதியில் ஒலிக்காத நேரமேயில்லை என்னும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.

Last Updated on Sunday, 27 November 2016 07:31 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 209: அன்பரசியின்(அன்பு) தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்..' பற்றிய கருத்துகள் பற்றி....

E-mail Print PDF

அன்பரசி உரைஅண்மையில் டொராண்டோவில் நடைபெற்ற தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய அன்பரசி (அன்பு) அவர்களின் கூறிய கருத்துகள் பற்றிச் சில கருத்துகளைக் கூறலாமென்று மீண்டுமொரு தடவை அவரது உரையினை உள்ளடக்கிய காணொளியினை (வடலி அமைப்பினர் யு டியூப்பில் வெளியிட்ட காணொளி) பார்த்தபொழுது தோன்றியது.

தனதுரையின் உரையின் ஆரம்பத்தில் அவர் தமிழினியக்கா என்று விளித்துக் கூறிய கருத்தொன்றில் நூல் பற்றிக் குறிப்பிடும்போது 'தமிழினியக்கா அவரது அறிவுக்கும், ஆளுமைக்கும் உட்பட்டு அவர் அறிந்த தரவுகள், தகவல்கள், அடிப்படையாக வைத்து நகர்கின்றது இந்நூல் என்றும், 'போர் கொடுமையானது. அதை ஒரு போராளியாக நேர்மையாகப் பதிவு செய்கின்றார் தமிழினி' என்றும் கூறுவார். ஆனால் காணொளியில் இந்த அவரது முடிவைத்தொடர்ந்து அவர் கூறிய பெரும்பாலான கருத்துகள் இக்கருத்துகளுக்கு எதிராகவே இருந்தன. எவ்விதம் அவரால் இந்த நூல் பற்றி இவ்விதமான இரு முரண்பட்ட கருத்துகளுக்கு வர முடிந்தது? அதனை அவர்தான் விளக்க வேண்டும்.

மேலும் மேற்படி நிகழ்வில் கலந்துரையாடலுக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்த நூல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட பிரதி அல்ல. கிளிநொச்சியில் வெளியான நூலின் பிரதி அது. ஆனால் தனதுரையை ஆரம்பித்ததுமே காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டதன் காரணமாக, காலச்சுவடு பதிப்பகத்தின் அரசியல் காரணமாக, அந்த அரசியலைத் தான் ஏற்காததன் காரணமாக காலச்சுவடு பதிப்பகப் பிரதியாக ஏற்கனவே எண்ணியிருந்ததால், அவ்வுணர்வுகளின் அடிப்படையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையினை அந்நோக்கில் வைத்து ஆரம்பித்தார். இலங்கைப்பதிப்புக்கும் , காலச்சுவடு பதிப்புக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் உண்டா? (பின் அட்டைப்பட அறிமுகத்தில் காலச்சுவடு பதிப்பகப் பிரதியிலுள்ள தவறு அனைவரும் அறிந்ததே.). அறிந்தவர்கள் அறியத்தரவும். ஏனெனில் நான் இன்னும் காலச்சுவடு பதிப்பகப்பிரதியினை வாசிக்கவில்லை. இரு பிரதிகளின் உள்ளடக்கமும் ஒன்றாக இருந்தால் காலச்சுவடு அரசியல் செய்கிறதென்ற தர்க்கம் வலுவாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.

Last Updated on Sunday, 27 November 2016 06:19 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 208 : டொராண்டோ: தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி ஜான் மாஸ்ட்டர்!

E-mail Print PDF

ஜான் மாஸ்ட்டர்அண்மையில் டொராண்டோவில் தேடகம் ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் பற்றிய நூல் வெளியீட்டில் அரசியற் செயற்பாட்டாளர் திரு.ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்) ஆற்றிய உரை பற்றிய எனது சிந்தனைத்தெறிப்புகள் இவை. அவரது முழுமையான உரையினைக்கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.

எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இவரை எனக்குத்தெரியும். ஆனால் புலம் பெயர்ந்து குடி புகுந்த நாடான கனடாவில்தான் இவரது முழுமையான ஆளுமையினை என்னால் , கடந்த பல வருடங்களாக இவரை , இவரது செயற்பாடுகளை அவதானித்ததன் மூலம் அறிய முடிந்தது. மிகுந்த தேடல் மிக்க இவரது சிந்தனையும், செயற்பாடும் எப்பொழுதும் உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்களின் மானுட உரிமைகளுக்காகத் தான் கற்று, உணர்ந்து, சிந்தித்துத் தெளிவடைந்த சமூக, அரசியல் தத்துவ நோக்கில் குரல் கொடுப்பதும், எழுதுவதும்தாம். இவ்வளவு வருடங்களாக அந்த விடயத்தில் இவர் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார். இவரது தான் நம்பும் சித்தாந்தம் பற்றிய தெளிவும், அதன் மீதான தொடர்ச்சியான இவரது தேடலும், புரிதலும், தெளிதலும் இவரது அத்தத்துவம் பற்றிய புரிதலைப் பண்படுத்துகின்றன. எனவே இவருடன் தர்க்கிப்பது மிகவும் இன்பமளிக்கக்கூடிய, பயன்மிக்க, ஆரோக்கியமானதொரு விடயமாக நான் உணர்வதுண்டு. ஆனால் அதிகம் பல்வேறு விடயங்களைப்பற்றித் தர்க்கிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. இனிமேல் அவ்விதமான வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதை இவரது இக்காணொளியிலுள்ள உரை தூண்டுகின்றது.

இங்கு இவர் தமிழினியின் நூல் பற்றிய விமர்சனத்தை ஏனையவர்களிடமிருந்து வித்தியாசமானதொரு கோண்த்தில் நடாத்துகின்றார். தமிழினியின் நூல் பற்றிய முக்கியமான கருத்துகள் பற்றி ஆரம்பத்திலும், இடையில் அவ்வப்போதும் கூறி விடுகின்றார். தமிழினியின் நூலைப் பல்வேறு சக்திகளும் பல்வேறு வழிகளில் தமக்குச் சார்பாகப் பாவிக்கும். தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள சில விடயங்களில் தனக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவ்விதம் கூறுவதற்குத் தமிழினிக்குள்ள உரிமையினை மறுக்க முடியாது. இவ்விதமாகத் தமிழினியின் நூல் பற்றிய கருத்துகளைக் கூறும் ஜான் மாஸ்ட்டர் அதன் பின் தான் நம்பும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நூலைப்பற்றி ஆராய்கின்றார். அந்த ஆய்வினைச் செவிமடுக்கும் ஒருவருக்கு இதென்ன இவர் தமிழினியின் நூலைப்பற்றி விமர்சிப்பதாகக் கூறி விட்டு., தனது அரசியல் கருத்துகளையெல்லாம் மடை திறந்த வெள்ளமென அள்ளி விடுகின்றாரே என்றொரு எண்ணம் தோன்றக்கூடும். ஆனால் சிறிது கூர்ந்து பார்த்தால் அவர் தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களைத்தாம் தான் புரிந்த ஏற்றுக்கொண்ட அரசியற் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கின்றார் என்பது புரிய வரும்.

Last Updated on Saturday, 26 November 2016 23:10 Read more...
 

நினைவு கூர்வோம்!

E-mail Print PDF

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக் காலகட்டத்தில் இலங்கை அரசுடனான முரண்பாடுகளினால், அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளினால் மற்றும் அந்நிய ஆதிக்க சக்திகளுக்குகிடையிலான முரண்பாடுகளினால் பலியாகிய அனைத்துப்போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்வோம். சிறைகளில் வாடும் அனைவரையும் நினைவு கூர்வோம். நடைபெற்ற போராட்டச்செயற்பாடுகள் அனைத்தையும் சுய விமர்சனம் செய்வோம். முரண்பாடுகளை பகை முரண்பாடுகளாக்காமல் , நட்புரீதியில் இனியாவது கையாள்வோம். பிரித்தாளும் சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியாமல் அடக்கு, ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் அனைத்துப்பிரிவு மக்களுடனும் நிபந்தனையற்ற கலந்துரையாடல்களை மேற்கொள்வோம். எதிர்கால சுபீட்சத்துக்கு அடிப்படையான செயற்பாடுகள் இவை.

Last Updated on Saturday, 26 November 2016 22:54
 

ஃபிடல் காஸ்ட்ரோ: மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவன்.

E-mail Print PDF

ஃபிடல் காஸ்ட்ரோ: மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவன்.தனது தொண்ணூறாவது வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரத்தலைவர்களில் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ. லெனின், மாசேதுங், ஹோ சி மின் , சேகுவேரா வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். தான் நம்பிய மார்க்சிச அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் படை சமைத்து, பாடிஸ்டா அரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த் ஃபிடல் காஸ்ட்ரோவின் வரலாறு அடக்கு முறைகளுக்கு எதிராகப்போராடும் புரட்சிகர சக்திகளுக்கெல்லாம் முன்மாதிரியானது.

அலுக்காமல், சலிக்காமல் நீண்ட நேரம் வரை உரையாற்றுவதில் வல்லவர் இவர். ஒரு சமயம் இவர் அவ்விதமாகத் தொடர்ந்து 9 மணித்தியாலங்கள் வரையில் உரையாற்றியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்த ஒரு விடயத்தையும் பற்றி மிகவும் தெளிவாக, விரிவாக உரையாற்றுவதில் வல்லவரான இவரது அரசினை பெரும் வல்லரசான அமெரிக்காவாலேயே ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது. எத்தனையோ அமெரிக்கத் தலைவர்கள் முயன்று பார்த்தார்கள். அவரை அசைக்க முடியவில்லை. அமெரிக்க உளவுத்தாபனமான சி.ஐ.ஏ பல தடவைகள் இவரைக்கொல்ல முயன்று அனைத்து முயற்சிகளிலும் தோற்றே போனது. இறுதியில் மேற்கு நாடுகளே , அமெரிக்கா உட்பட, இவரது காலடியில் வீழ்ந்தன.

இவரது வெற்றிக்குக் காரணம் கியூபா மக்கள். பெரும்பான்மைக் கியூபா மக்கள் இவரை தம் அன்புக்குரிய தலைவராகக் கொண்டாடினார்கள். மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவனாக மானுட வரலாற்றில் ஃபிடல் காஸ்ட்ரோ நிலைத்து நிற்பார்.

ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராவுக்குமிடையில் நிலவிய நட்பும், இணைந்த நடத்திய கியூபாப் புரட்சியும் புரட்சிகர வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. இவரது மறைவு வருத்தப்பட வேண்டியது அல்ல. கொண்டாடப்பட வேண்டியது.

Last Updated on Saturday, 26 November 2016 21:09 Read more...
 

கவிதை குறித்த உரையும் சமூக, அரசியல் கலந்துரையாடலும்

E-mail Print PDF

கவிதை குறித்த உரையும் சமூக, அரசியல் கலந்துரையாடலும்


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 26 November 2016 20:50
 

திரும்பிப்பார்க்கின்றேன்: பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு - கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்திற்காக பயன்படுத்திய பெண்ணிய ஆளுமை

E-mail Print PDF

பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு"பெண்களது  இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே  இருக்கிறது. பல  இடைவெளிகள், கேள்விகள் என்றும்  இருந்துகொண்டே  உள்ளன. சங்க  இலக்கியம் தொட்டு இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. சங்கப்பாட்டுகளில்  எத்தனை  பெண்களுடையவை...? சங்கப்புலவர்களில் எத்தனைபேர் பெண்கள்...?  என்ற  மயக்கம்  இன்னும்  முற்றாகத் தீர்ந்து விடவில்லை. பெயர் தொடர்பான மயக்கமே  இது. ஆணா? பெண்ணா? என்கிற மயக்கம் தற்காலம் வரை தொடர்கிறது." பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, 2007 ஆம் ஆண்டு வெளியான பெயல் மணக்கும் பொழுது ( ஈழத்துப்பெண் கவிஞர்கள் கவிதைகள் - தொகுப்பு அ. மங்கை) நூலுக்கு எழுதியிருந்த பின்னுரையில்  மேற்கண்ட  வரிகளைப்பார்க்கலாம்.

எஸ்.பொ.வுடன் இணைந்து நாம் தொகுத்த பனியும் பனையும் -புலம்பெயர்ந்தவர்களின் கதைத்தொகுப்பு வேலைகளிலும் எமக்கு இந்த மயக்கம் வந்தது. பல ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களில் இன்றுவரையில் எழுதிவருகிறார்கள். காலப்போக்கில் தொடர்ச்சியான வாசிப்பில் எழுதுவது பெண்களா, ஆண்களா என்பதை தெரிந்துகொள்கின்றோம்.

ஈழத்தில் பெண் எழுத்துக்களை குறிப்பாக இளம் தலைமுறை பெண்படைப்பாளிகளை  எமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும், எம்மத்தியில் இன்றும் அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமையான சித்திரலேகா மௌனகுரு அவர்களை  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் சந்தித்தேன்.  கலை, இலக்கியம், கல்வி மற்றும் ஊடகத்துறையில்  ஈடுபாடுகொண்டிருந்தவர்கள்  வாழ்ந்த ஒரு அழகிய மாடி வீட்டில்தான் சித்திரலேகா - மௌனகுரு தம்பதியரையும் கண்டேன். அந்த இல்லத்தை ஏற்கனவே எனது பத்திகளில் காவிய நயம் நிரம்பிய கலாசாலை என்றும் வர்ணித்துள்ளேன். கொழும்பு - பாமன் கடை என்னும் இடத்தில் அமைந்த அந்த வீட்டில் 'அப்பல்லோ' சுந்தா சுந்தரலிங்கம்,  மௌனகுரு, கவிஞர்கள் முருகையன், சிவானந்தன் குடும்பத்தினர் வசித்தனர். அடிக்கடி அங்கு இலக்கிய சந்திப்புகள் நடக்கும். நீர்கொழும்பில் ஏதும் இலக்கியக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யும்பொழுது அந்த இல்லத்திலிருப்பவர்களிடம் சென்றுதான் ஆலோசனைகள் பெறுவேன். அன்று முதல் இன்றுவரையில் அங்கிருந்தவர்களுடனான எனது நேசிப்புக்கு எந்தவொரு விக்கினங்களும் வந்ததில்லை. கலை இலக்கிய ஊடக உலகில் உறவுகள் ஆரோக்கியமாக  நீடித்திருப்பது அபூர்வம் என்பதனால்தான் அவ்வாறு சொல்கின்றேன்.  சித்திரலேகா அக்காலப்பகுதியில்   இலங்கை வானொலி கலைக்கோலத்தில்  இலக்கிய உரைகளை நிகழ்த்தியபோது கேட்டிருக்கின்றேன். இவரது வானொலி ஊடகப்பிரவேசம் குறித்து ஜோர்ஜ் சந்திரசேகரன் தமது நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்தப்பதிவு சித்திரலேகாவின் ஆற்றல்களை மேன்மைப்படுத்தாமல், வளர்ந்துவரும்   ஆளுமையை  இனம்காணாமல்  ஆணாதிக்க மனோபாவத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து, அந்த நூலை எனக்கு வாசிக்கத்தந்த நண்பர்  காவலூர்   ராசதுரையிடமும்  சொல்லியிருக்கின்றேன்.

Last Updated on Saturday, 26 November 2016 19:51 Read more...
 

எழுத்துலக எழுச்சி எஸ்.பொ !

E-mail Print PDF

எஸ்.பொ

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

எஸ்.பொ என்னும் பெயர் எழுத்துலகில் ஒரு முத்திரை எனலாம்.அவரின் முத்திரை எழுத்துக்கள் அத்தனையும் தமிழ் இலக்கியப்பரப்பில் தனியான இடத்தினைத் தொட்டு நிற்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள். 1947 இல் கவிதை மூலமாக எழுத்துத் துறைக்குள் புகுந்து - சிறுகதை, நாவல் ,விமர்சனம், கட்டுரை, உருவகக்கதை,மொழிபெயர்ப்பு , நாடகம், என அவரின் ஆற்றல் பரந்துவிரிந்து செல்வதையும் காண்கிறோம். எஸ்.பொ என்னும் பெயரைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது உண்டு.அவரின் காரசாரமான அஞ்சாத விமர்சனமேயாகும்.எழுத்திலோ பேச்சிலோ பயங்காட்டாத தனிப்பட்ட ஒருவராக இவர் இருந்தார்.  இதுவே அவரின் தனித்துவமும் பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈழத்தில் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி இருவரும் என்றுமே ஒருவரப்பிரசாதமாகவே இருந்தார்கள்.அவர்களை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.ஆனால் எஸ். பொன்னுத்துரை மட்டும் தனது ஆற்றலின் துணிச்சலால் இவர்களையே ஒருபக்கம் வைத்துவிட்டார்.இதுதான் எஸ்.பொ என்னும் இரண்டெழுத்தின் வீறுகொண்ட படைப்பாற்றல் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. ஆங்கிலமொழியில் நல்ல பாண்டித்தியமும் தமிழில் அதே அளவு ஆற்றலும் மிக்கவராக இவர் இருந்தமையும் இவரின் துணிவுக்கு ஒரு காரணமாகவும் இருக்க லாம் என எண்ணத்தோன்றுகிறது.

பல தமிழ் எழுத்தாளர்கள் தம்மைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள பேராசிரியர் எதிர்த்தால் துவண்டு விடுவார்கள்.ஆனால் எஸ்.பொ இதற்கு விதிவிலக்காகி தனித்து நின்று தனக்கென ஒருவழியில் பயணித்து உச்சியைத் தொட்டு நின்றார்.இவருக்கு இதனால் பல எதிர்ப்புகள் வந்தன.இதனாலேயே பல அரச விருதுகளும் வழங்கப்படா நிலையும் காணப்பட்டது.ஆனாலும் எஸ். பொ இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தனது எழுத்தூழியப் பணியினை வீறுடன் செய்து வெற்றிவீரனாகவே விளங்கினார். எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார் எனலாம்.எதையும் எழுதுவார்.எப்படியும் எழுதுவார்.எதிர்த்தாலும் எழுதுவார். ஏசினாலும் எழுதுவார்.எழுத்தை எஸ்.பொ.ஒரு தவமாகவே கருதினார் என்றுகூடச் சொல்லலாம்.

பொன்னுத்துரை பச்சை பச்சையாகவே எழுதுகிறார்.படிக்கவே கூசுகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தாலும் பொன்னுத்துரையின் எழுத்தை யாவருமே ரசித்தார்கள்.1961 ஆம் ஆண்டில் " தீ " என்னும் நாவல் வெளிவந்து யாவரையும் திக்குமுக்காடச் செய்தது.இப்படியும் எழுதுவதா ? இது ஒரு எழுத்தா ? இவரையெல்லாம் எப்படி எழுதுவதற்கு அனுமதித்தார்கள் என்றெல்லாம் மிகவும் கடுமையான, காரசாரமான, விமர்சனங்கள் எல்லாம் பறந்து வந்தன.எஸ்.பொ.வை யாவருமே வித்தியாசமகவே பார்த்தார்கள்.ஆனால் பொன்னுத்துரையின் மனமோ தான் எழுதியது தர்மாவேஷம் என்றே எண்ணியது.

Last Updated on Thursday, 01 December 2016 00:41 Read more...
 

ஆய்வு: ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே!’

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்ஆய்வு: ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே!’ மெல்ல அவல் தேடும் மேற்குலக ஊடகங்களின் வாய்களுக்குள் அகப்பட்டு, அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது, வெர்மான்ற் (Vermont) பல்கலைக்கழகம்! அமெரிக்காவின் வடகிழக்கே, இயற்கையழகு கொஞ்சும் வெர்மான்ற் மாநிலத்துப் பல்கலைக்கழக வளாகத்தின் மத்தியில் பறந்துகொண்டிருந்த கொடி ஒன்று, இந்தவார இறுதியில் (செப்ரெம்பர் 24-25) களவாடப்பட்டமையே அதற்கான காரணம். அது ‘Black lives Matter’ என அழைக்கப்படும் ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கத்தின் கொடி. கடந்த வாரம் சார்லெற் (Charlotte) நகரிலும், அதற்கு முன்னர் வேறுபல நகர்களிலும் கறுப்பு இனத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஏற்றப்பட்ட கொடி. ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், நீதியின் தேடல், வன்முறைக்கெதிரான போராட்டம் போன்ற இலட்சியங்களின் அடையாளச் சின்னமாகப் பறக்க விடப்பட்ட கொடி. பல்கலைக்கழக நிர்வாகத்தின் பூரண அங்கீகாரத்துடன், தேசியக் கொடியுடனும் மாநிலக் கொடியுடனும் சம உயரத்தில், சமாந்தரமாகப் பறக்க விடப்பட்ட கொடி. இனவாதிகள் அதனை இரவோடிரவாகக் களவாடியமை, எரிகின்ற இனவெறுப்புச் சூளையினுள் எண்ணெயை ஊற்றிவிட்டிருக்கின்றது!

அமெரிக்கக் காவற் துறையினரின் கடும் போக்கும், அதன் விளைவாக  இனவுறவில் ஏற்பட்டு வரும் விரிசல்களும் சமூகத்தில் ஆழ ஊடுருவியுள்ள இத்தருணத்தில் இடம்பெற்றுள்ள, வெர்மான்ற் பல்கலைகழகக் கொடியகற்றற் சம்பவம், இனப் பதற்றத்திற்கு மென்மேலும் ஊட்டம் அளித்துள்ளது. ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் குறித்த புதிய சர்ச்சைகளுக்கும், வாதப் பிரதிவாதங்களுக்கும் வழி திறந்துள்ளது. நல்ல நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை, வெவ்வேறானோர் வெவ்வேறு விதங்களில் அர்த்தம் கொள்ள வகைசெய்துள்ளது.

‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் (BLM) வன்முறையை ஊக்குவிப்பதாகவும், அதுவே ஒரு இனவெறுப்பு இயக்கமென்றும், வெர்மான்ற் பல்கலைகழக நிர்வாகம் இவ்வியக்கத்தின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்துவிட்டதாகவும், பண்பாட்டு மோதலொன்றின்போது பல்கலைகழகம் பக்கச்சார்புநிலை எடுத்துவிட்டதாகவும், இனிவருங் காலங்களில் தீவிரவாதக் குழுவொன்றின் கொடியையும் ஏற்றிவைக்கப் பல்கலைகழக நிர்வாகம் சம்மதிக்கக் கூடும் என்பதாகவும் வெள்ளையின அடிப்படைவாதிகளும் பழமைவாதிகளும் குற்றம் சாட்டத் துவங்கியுள்ளனர். இக்குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் BLM இயக்கத்தின் மூலகர்த்தாக்களோ, இதற்கு முற்றிலும் முரணான வாதத்தை முன்வைத்துள்ளனர். கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பாகுபாடுகளையும் கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் உணர்ந்தவர்கள் இவ்வாறான குற்றச் சாட்டுகளைச் சொல்லத் துணிய மாட்டார்கள் எனவும், BLM பற்றி இத்தகைய தவறான பரப்புரையை அவர்கள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Last Updated on Saturday, 26 November 2016 19:15 Read more...
 

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா - 2016

E-mail Print PDF

- - நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் இறுதி நேரத்தில் கிடைக்கப்பெறுவதால், சில சமயங்களில் அவை கவனத்துக்கெடுப்பதில் சிறிது தாமதம். ஒரு பதிவுக்காக இந்தத்தகவல் இங்கே. - -

\

Last Updated on Saturday, 26 November 2016 00:24
 

நீதி நெறியான நட்பியல் கூறும் திருக்குறள்

E-mail Print PDF

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு (18) நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று.   அப் பதினெட்டு நூல்களையும்,

'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே 
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.'

இவ் வெண்பாவில் காண்கின்றோம். திருக்குறள் இப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு (11)  நூல்களும் நீதி/அற நூல்களாகும். கார் நாற்பது, ஐந்திணை  ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு (06) நூல்களும் அகம் சார்ந்தவை. களவழி நாற்பது என்ற ஒரு (01) நூல் புறம் சார்ந்ததாகும்.

திருக்குறள் உலகப் பொதுமுறை என்னும் சிறப்பினைப் பெற்று உலாவுகின்றது. உலகத்திலுள்ள எல்லாச் சமயத்தாரும் திருக்குறளைப் போற்றுகின்றனர். மேனாட்டு அறிஞர்கள் திருக்குறளைத் தம் மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பாலைக் கூறுகின்றது. அறத்துப்பால் மனிதன் வாழ்வியலின் மேன்மையைக் குறிக்கும். பொருட்பால் சமுதாய வாழ்க்கையைக் காட்டும். காமத்துப்பால் அகவாழ்வின் வெற்றியை எடுத்துக் கூறும். 'கொல்லாமை', 'கள்ளுண்ணாமை' என்னும் இரு அதிகாரங்களும் திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவர் இதைத் தனித்து நின்று செயற்பட்டு வெற்றியும் கண்டுள்ளார். திருவள்ளுவ மாலையில், சீத்தலைச் சாத்தனார், திருக்குறளின் சிறப்பைக் கூறும் பாங்கினையும் காண்போம்.

'மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ
யாமுரைதேர் வள்ளுவர்முப் பால்.'

இனி, பொருட்பாலில் வரும் நட்பியல் பற்றித் திருவள்ளுவர் கூறுவதை விரிவுபடுத்திக் காண்போம்.

Last Updated on Thursday, 17 November 2016 07:03 Read more...
 

ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த "புதுமைப்பிரியை" பத்மா சோமகாந்தன்! அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் இலக்கியவாதி!

E-mail Print PDF

"புதுமைப்பிரியை" பத்மா சோமகாந்தன்இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு,  இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள்.  அவர்கள்  தந்த  சுதந்திரம்  எமது அரசியல்வாதிகளுக்கு  தந்திரமானதுதான்  மிச்சம். இந்தப்பின்னணியில்  முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952  இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர்  யார்...?  என்ற பதவிப்போட்டியில் வேரோடியிருந்த   இனப்பிரச்சினை இன்னமும் தீரவில்லை. சிங்களத்தலைவர்கள்  பதவிக்கு  வரவேண்டுமானால்  இலங்கை தேசிய  சிறுபான்மை  இனங்கள்  பலிக்கடாவாகவேண்டும். 1955 இல் பிரதமராக யாழ்ப்பாணம் சென்ற சேர். ஜோன் கொத்தலாவலை, வடபுலத்து மக்கள் வழங்கிய மாலை மரியாதை வரவேற்பினால் மனம் குளிர்ந்து, " தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவருவேன்" என்றார். இதனை தவறாகப்புரிந்துகொண்ட எச். எல். மேத்தானந்தா என்ற ஒரு பௌத்த மத தீவிரவாதி " சரிதான், இனிமேல் சிங்களவர்களும் தமிழ்தான் படிக்கவேண்டிவரும் " என்று தென்னிலங்கையில் வகுப்புவாதம் கக்கத்தொடங்கினார். அதனை தனக்குச்சாதமாக்கினார் பண்டாரநாயக்கா. இதனைப்புரிந்துகொண்ட கொத்தலாவலை, தாமதிக்காமல் ஒரு பல்டி அடித்தார். 1956 இல் களனியில் ஐ.தே.கட்சி மாநாட்டில், தனிச்சிங்களமே ஆட்சி மொழி என்றார். பண்டாரநாயக்கா அதன் பிறகும் சும்மா இருப்பாரா...? தாம் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவேன் என்றார். ஐ.தே.க.வை தோற்கடிக்க ஐம்பெரும் சக்திகளை (பஞ்சமா பலவேகய) திரட்டிக்கொண்டு தேர்தலில் வென்ற பண்டாரநாயக்காவுக்கு உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. டீ.எஸ். சேனாநாயக்காவுக்குப்பிறகு தனக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் டட்லிக்கும் அவரையடுத்து கொத்தலாவலைக்கும் சென்றதுதான்  அவரை சிங்கள தீவிரவாதம் பேசக்காரணமாக இருந்திருக்கிறது. அதற்குப்பின்னாலிருந்து நெருப்பு மூட்டியவர்கள் மேத்தானந்தா, புத்தரகித்த தேரோ ஆகியோர்.

இன்றும் இந்தக்கதைதான் வேறு வேறு ரூபத்தில் இலங்கையில் நீடிக்கிறது. ஏறச்சொன்னால் எருதுக்குக்கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பார்களே... அவ்வாறு யாராவது ஒரு சிங்களத்தலைவர் இனப்பிரச்சினைக்கு  தீர்வுகொண்டுவந்தால் மற்ற சிங்களத்தலைவர் எதிர்ப்பார். இன்று எதிர்ப்பவர் நாளை பதவிக்கு வந்து நல்ல தீர்வு சொன்னால், முன்னர் நல்ல தீர்வுகொண்டுவர விரும்பியவர், அதனை ஆதரிக்காமல் எதிர்ப்பார். இது முற்றுப்பெறாத கதை.

இது இவ்விதமிருக்க,  இந்த வரலாற்றில் வரும் மேத்தானந்தா போன்றதொரு இனவாதியை அதே பெயரில், சித்திரித்து 1956 இல் காலிமுகத்தில் தமிழ்த்தலைவர்கள் சத்தியாக்கிரகம் நடத்தியபோது இடம்பெற்ற  தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஒரு சிறுகதையை தமிழில் எழுதியிருப்பவர் யார் என்று பார்த்தால் எமக்கு அதிசயமாக இருக்கிறது. ஆனால், அது அதிசயம் அல்ல உண்மை.

Last Updated on Thursday, 17 November 2016 01:45 Read more...
 

தம்பா (நோர்வே) . கவிதைகள்!

E-mail Print PDF


1. வீதியின் நீதி

தம்பாஆயுதங்கள் நிறைத்து
தெருக்களை ஆட்சி செய்த காலங்களில்
வீதிகளில் கொல்லப்படுவதற்கு
ஆட்கள் இல்லாது போனது
குறையாகவே இருந்தது.

போரை அழித்த
சமாதானப் புறாக்கள்
புதைகுழிகள் மேல் மண்சோறு உண்டு
வீதிகளை புனிதப் படுத்தின.

சாதாரணனுக்கு
இனிப்பும் சல்யூட்டும் வழங்கி
முகஸ்த்துதி செய்தன.

நம்பி நிறைந்தன வீதிகள்.

தூதர்களை பூட்டி வைத்து
அலுக்கோசுகளை திறந்து வைத்தனர்.

தன்னியங்கி இயந்திரங்கள்
சாதாரணனனின் இதயத்துக்கு
துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கி
வாழ்ந்ததற்கு
வழக்குகள் பதிய வைக்கின்றன.

Last Updated on Wednesday, 16 November 2016 18:52 Read more...
 

ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் விருந்தோம்பல் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பதற்கு தமிழ் தமிழ் அகர முதலி புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் போற்றுதல் என்று பொருள் உரைக்கிறது.கௌரா தமிழ் அகராதி வேளாண்மை,புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை.

சென்னை பல்கலைக் கழகத் தமிழ் ஆங்கில அகராதி புதிதாக வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை;( welcoming and entertaining guest) என்று பொருள் கூறுகிறது.
இத்தகைய விருந்தோம்பல் சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட பேரறமாக விளங்கியது.எந்நாட்டவராயினும்,எம்மொழியினராயினும் நட்புக் கொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடு தேடி வருவார்களாயின் அவர்களை வரவேற்று புதியவராக கொண்டனர்.தொல்காப்பியர் இதனை,

“விருந்தே தானும் புகுவது கிளந்த யாப்பின் மேற்றே”

என்ற நூற்பாவால் குறிப்பிடுகிறார்.மேலும் அக்கால மக்கள் விருந்தோம்பலைக் கடமையாக கொண்டனர் என்பதை,

“ விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவும் அன்ன”


என்ற நூற்பா அடிகள் குறிப்பிடுகின்றன.

Last Updated on Tuesday, 15 November 2016 23:38 Read more...
 

ஆய்வு: சித்தர் இலக்கியத்தில் தன்னையறிதல்

E-mail Print PDF

ஆய்வு: சித்தர் இலக்கியத்தில் தன்னையறிதல்- இல.சவுரிராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுபேட்டை, புதுச்சேரி-08. முன்னுரைஆன்மீக உலகிலத்தில் நான் யார் என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்;ள ஒன்றாகும். எத்தனையோ அணுகுமுறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் நான் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக்  கூறியிருப்பினும் அடிப்படை உண்மை ஒன்றுதான். இவற்றை சித்தர்கள் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.    

நான் தற்காலிகமானது
உண்மையில் அனுபவத்தையும்,அனுபவிப்பவனையும் பிரிக்க இயலாது. “கணந்தோறும் புதிது புதிதாக வரக்கூடிய அமசம் உடையது தான் சிந்தனை. ஊதுவத்தியிலிருந்து வெளிவரும் புகை புதிது புதிதாக எப்படி வந்து கொண்டிருக்கிதோ,அப்படிதான் நமது சிந்தனையும் புதிது புதிதுதாக வந்து கொண்டிருக்கிறது. சிந்தனை எப்படி ஒவ்வொரு கணந்தோறும் புதியதோ, அப்படித்தான்  அதனால் உருவாக்கப்படும் அனுபவிப்பவனும் ஒவ்வொரு கணந்தோறும் புதியவன். அனுபவமும் ஒவ்வொரு கணந்தோறும் புதியது. அனுபவிப்பவனாகிய நாம் நிரந்தரமாக இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் உண்மையன்று”(ஸ்ரீ பகவத் கவலைகள் அனைத்திற்கும் தீர்வு பக் 99-100).
எனவே அனுபவிப்பவனாகிய ‘சின்ன நான்’ தற்காலிகமானதே: நிலையானதன்று: காணப்படும் ஒவ்வொரும் பேற்றோரைப் பார்க்கும் போது பிள்ளையாக, பிள்ளையைப் பார்க்கும் போது தாயாக, தந்தையாக, வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் போது கணவராக, மனைவியாக அனுபவிப்பலனாகிய ‘நான்’ தோன்றுகிறது.

நான் அற்ற நிலை
நான் அற்ற நிலை வேண்டும் என்று நாம்; கூறிக்கொள்ளலாம். அனுபவிப்பவன் இல்லாத அனுபவம் வேண்டும் என்று நாம் கூறிக்கொள்ளலாம் ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லாத வெறும் கனவே ஆகும். சிந்தனை இருக்கும் வரை காண்பவன் - கணப்படும் பொருள், அனுபவிப்பவன் - அனுபவம் என்னும் இரட்டை நிலை நிரந்தரமாகவே இருந்துகொண்டுதான் இருக்கும். இவற்றுள் எதையாவது ஒன்றை நீக்குவதற்கு சாத்தியமே இல்லை. ஆனால் இப்படி ஓர் இரட்டைநிலை இருந்தாலும்கூட, அதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

Last Updated on Tuesday, 15 November 2016 23:27 Read more...
 

ஆய்வு: தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

E-mail Print PDF

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -ஆய்வு முன்னுரை
தமிழிக அரசியல் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரசியல் சார்ந்த அறநெறிகளை ஆராய்ந்தோமானால் உலக நாடுகள் முழுவதற்கும் இலக்கியப் பேராறு மூலம் ஒரு நாட்டையாளும் அரசனுக்குரிய அறங்களை மிக நேர்த்தியோடு எடுத்துச்சொன்ன பெருமை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உண்டு. தமிழக வரலாற்றில் தமிழ் மண்ணில் ஏற்பட்ட பல்வேறு போர்களாலும், பூசலாலும் காலந்தோறும் வெவ்வேறு ஆட்சிமுறைகள் வழக்கத்தில் இருந்து மக்களாட்சி முறையே இன்று நிலைத்துள்ளது. அரசன் என்பவன் அரச பரம்பரை அல்லது வாரிசுரிமையின் காரணமாகவோ, கணக்கற்ற படைவலிமையின் காரணமாகவோ, மக்களை ஆளும் இறைமையைப் பெற்றுக் கொண்டு அவர்களை அரசாண்ட வரலாறுகளின் அனுபங்களிலிருந்தே இன்றைய அரசியல்வாதிகள் அறநெறிகளை கற்றுக்கொண்டு மேடை தோறும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என மோசிகீரனாரும், ‘குடியுயரக் கோன் உயர்வான்’ என்றுரைத்த ஓளவையார் போன்ற தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் காலந்தோறும் ஆய்ந்தறிந்து தமிழக அரசியல் அறங்களை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர். அதன்வழி நின்று அரசனுடைய அங்கங்களாகத் திகழும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவைக்குழுவின் வழிகாட்டுதல்களையும், செயற்பாட்டம்சங்களையும் தமிழிலக்கியங்கள் வாயிலாக எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஐம்பெருங்குழு எண்பேராயம்
“ஐம்பெருங்குழு அமைப்பில், ‘அமைச்சர் (Chief Minister)> புரோகிதர் (Priest)> சேனாபதியர் (Commender - in - Chief)> தாவாத் தொழில் தூதுவர் (Ambassador)> சாரணர் (Intelligence Officer) ஆகியவர் அடங்கிய குழுவே ஐம்பெருங்குழு எனப்படும். இவ்வைந்து கூட்டத்தை பஞ்சாயம் என்றும் அழைப்பர். கரணத்தியலவர் (Chief Executive Officer)> கருமகாரர் (Priests)> கனகச் சுற்றம் (Treasury Officials)> கடைகாப்பாளர் (Guards)> நகரமாந்தர் (Great Men of the City)> படைத்தலைவர் (Captains of Troops)> யானைவீரர் (Elephant -Warriors )> இவுளிமறவர் (Cavalry - Officers) ஆகிய இவர்கள் எண்பேராயத்தில் இடம்பெற்றிருப்பார்கள்’ என்பர் அ.கி.பரந்தாமன்.” (வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும். ப.101) அரசியலில் அரசனுக்குத் துணையாக அமைவன ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் என்பதனை,

“ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர் தம்மொரு குழிஇ” 
(சிலம்பு.வஞ்சிக்காண்டம் கால்கோள்காதை.2-3)

Last Updated on Tuesday, 15 November 2016 20:58 Read more...
 

'நூல் அறிமுகமும் இசைச் சமர்ப்பணமும்' :

E-mail Print PDF

'நூல் அறிமுகமும் இசைச் சமர்ப்பணமும்' :தமிழும்  இசையும்  இணைந்து  அரங்கேறிய  இனிமையான  நிகழ்வு  ஒன்று  22/10/2016  சனிக்கிழமை  மாலை  ஈஸ்ட்ஹாமிலுள்ள  அக்ஷயா மண்டபத்தில்  நிறைவேறியது. பிரபல எழுத்தாளர்  முல்லைஅமுதன் ஜெயராணி  தம்பதிகளின்  மூத்த  புதல்வி  கார்த்திகா  "சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்"  என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி  சிறிதரன்  அவர்களிடம்  தான்  கற்றுத் தேர்ந்த இசையையும்  சமர்ப்பணம்  செய்தார்.

முற்பகுதியில்  நூல்  அறிமுகம்,  பிற்பகுதியில்  இசைச் சமர்ப்பணமும் இடம்பெற்றது. ஆரம்பத்திலிருந்து  நிகழ்ச்சி  முடியும் வரை  சபையோர்  இருந்து  இரசித்து மகிழ்ந்தமை  இது  ஒரு  தரம்  மிக்க  நிகழ்வு  என்பதை  உறுதிப் படுத்தியது.

'தந்தை  எவ்வழி  மைந்தரும்  அவ்வழி'  என்ற  பழமொழிக்கிணங்க  மகள் தனது  பதின்மூன்றாவது  வயதிலேயே  அழகாக  ஒரு  நூலை  எழுதி வெளியிட்டது  பாராட்டத்தகுந்தது. மகாகவி  பாரதியைப்  பற்றித்  தமிழ் மக்கள்  ஒவ்வொருவரும்  அறிய வேண்டியது  அவசியம். இருபதாம் நூற்றாண்டின்  ஆரம்பக் காலத்தில்  அறியாமை  இருளில்  மூழ்கிக்  கிடந்த தமிழ்ச்  சமுதாயத்திற்கு  அறிவொளி  ஊட்டத்  தோன்றிய  ஒளிமிகு  சூரியன் மகாகவி. அவரது  அளப்பரிய  பெருமை  மிகு வரலாற்றையும்  சில பாடல்களையும்  தனது  நூலில்  பதிவு  செய்துள்ளார்  கார்த்திகா.

அது  மட்டுமன்றி, கர்நாடக  இசை  மேன்மையுற்று  வளர  மூலகர்த்தாக்களான மும்மூர்த்திகளின்  வரலாறும், இசைப்பணியும்  மட்டுமன்றி  அவர்களுக்கு இணையான  இன்னும்  சில  இசைமேதைகளின் (கோபால கிருஷ்ணபாரதி, பாபநாசம் சிவன், சுவாதித் திருநாள்)  வரலாறும்  சுருக்கமாகவும்  தெளிவாகவும்   இந் நூலில்  இடம் பெற்றுள்ளது. ஈழத்தில்  தோன்றி  ஈழத்திலும் , தமிழ்நாட்டிலும்  இசைக்கும் , தமிழுக்கும்  தம் வாழ்வை  முழுவதும்  அர்ப்பணித்த  விபுலானந்த அடிகளின்  வரலாறும்  இந் நூலில்  இடம்பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. இந்  நூல்  ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது  இந்  நாட்டில்  வளரும்  இளம்  தலைமுறையினருக்கு இலக்கியத்தை  அறிமுகப்படுத்தத்  துணை  நிற்கும்.  இசை கற்போர்  அனைவருக்கும் சிரந்த  கைநுலாக அமையும்.

Last Updated on Tuesday, 15 November 2016 00:18 Read more...
 

எஸ்.அகஸ்தியரின் 20ஆம் ஆண்டு நிறைவும் நவஜோதி யோகரட்னத்தின் 'மகரந்தச் சிதறல்' நூல் வெளியீடும்!

E-mail Print PDF

தகவல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 14 November 2016 23:29
 

குறமகள்: அன்புள்ளம் கொண்ட இராசாத்தி அக்கா

E-mail Print PDF

- எழுத்தாளர் அமரர் குறமகள் நினைவாக நினைவழியா நினைவுகள் என்ற நினைவு மலர் ஒன்று  சென்ற சனிக்கிழமை (12-11-2016)  குடும்பத்தினரால் கனடாவில் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலரில் இடம் பெற்ற எனது நினைவுக் குறிப்பையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன். - குரு அரவிந்தன். -


திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களைப் பிரிந்து இன்று ஒரு மாதமாகிவிட்டது. இலக்கிய உலகில் குறமகள் என்று சொன்னாலே இவரைத் தெரிந்து கொள்வார்கள். சிலர் இவரைப் பெண்ணிய வாதியாகப் பார்த்திருந்தார்கள். ஆனால் பிறந்ததில் இருந்து இவருடன் கூட வளர்ந்ததாலோ என்னவே அன்புள்ளம் கொண்ட அக்காவாகவும், பாசமுள்ள தாயாகவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஒருவருமாகத்தான் நான் எப்பொழுதும் இவரைப் பார்த்தேன். பொறுமையாக எதையும் ஏற்றுக் கொள்வதால், அக்கா தனது மரணத்தையும் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார். எப்பொழுதுமே கலகலப்பாக இருப்பதையே விரும்பினார். எங்கள் குடும்பங்களுக்குள் என்ன நடந்தாலும் எங்கள் அத்தான் அதிபர் கனகசபாபதியும், இராசாத்தி அக்காவும்தான் (குறமகள்) உடனே எங்களுக்கு அறிவிப்பார்கள். இவர்கள் இருவரும் எங்களுக்கு வழிகாட்டியாக மட்டுமல்ல, எங்களைத் தாங்கும் தூணாகவும் இருந்தார்கள்.

இவர் எனது தந்தையின் அண்ணாவின் முத்த மகள். எங்கள் இருவரின் வீடும் ஒரே காணியில் இருந்தது. நடுவில் ஒரு வேலிபோட்டு போய்வருவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருந்தது. நாங்கள் வாழ்ந்த குருவீதியில், குரு விளையாட்டுக் கழகத்தை ஆரம்பிக்கும்வரை இராசாத்தி அக்கா வீட்டு முற்றமே எங்கள் விளையாட்டுத் திடலாக அமைந்தது. அவரிடம் தலைமைத்துவம் இருப்பதை அப்போதே கவனித்திருக்கின்றேன். எனது தந்தையார் குருநாதபிள்ளை காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபராகவும், காங்கேசந்துறை உள்ளுராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். அக்காவிற்குச் சிறியதந்தையான எனது தந்தையே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தனக்கு வழிகாட்டியாக இருந்ததாக அக்கா அடிக்கடி சொல்வார். தனது நூலான ‘மாலை சூட்டும் மணநாள்’ என்ற நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்து அதில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எங்கேயாவது வெளியே போவதானால் வீட்டிலே விடமாட்டார்களாம், அப்போதெல்லாம் எனது தந்தைதான் அனுமதி பெற்றுத் தருவதாகவும் சொல்வார். உறவு என்பதைவிட, வழிகாட்டி அறிவூட்டிய ஆசிரியர் என்பதற்கான நன்றிக்கடனே அவர் செய்த இந்தச் சமர்பணம்.

எனது பெரியப்பாவான மு.அ. சின்னத்தம்பியின் மூத்த புதல்விதான் இராசாத்தி அக்கா. அடுத்துப் பிறந்த நான்கு பெண் குழந்தைகளுக்கு ராணி, அரசி, தேவி, ரதி என்று பெயர் சூட்டினார்கள். கடைசி ஆண் குழந்தைக்கு நவநீதன் என்று பெயர் சூட்டினர். அருகே இருந்த குலதெய்வமான குருநாதசுவாமி கோயில் வீதியில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு மடம் கட்டி அக்காவின் நட்சத்திரமான ரோகிணி என்ற பெயரிலே ‘ரோகிணிமடம்’ என்ற பெயரைச் சூட்டி, திருவிழாக் காலங்களில் வருடாவருடம் அந்த மடத்தில் அன்னதானமும் நடைபெற்றதை இன்றும் மறக்க முடியாது. இன்று இருந்த இடமே தெரியாமல் எல்லாமே தரைமட்டமாக்கப் பட்டு விட்டது. மூலஸ்தானத்திற்குப் பின்னால் இருந்த அரசமரம் மட்டும் அந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கின்றது.

Last Updated on Monday, 14 November 2016 23:14 Read more...
 

தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?

E-mail Print PDF

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி]- இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். - வ.ந.கி ]


தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் 'இது கூர்வாளல்ல. மொட்டை வாள்' என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து,  சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில்  அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.

இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.

சுருக்கமாகக் கூறுவதானால் இந்நூலைப் பலவேறு கோணங்களில் வாசகர் ஒருவர் அணுகலாம்.

1. ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விபரிப்பதால் இந்நூல் அப்போராளியின் வாக்குமூலமாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத்தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, ,,இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை நூல் விபரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். ஒரு கட்டத்தில் அவர் இவ்விதம் நினைக்கின்றார்:

Last Updated on Wednesday, 16 November 2016 21:42 Read more...
 

தமிழினியும், பெண் விடுதலையும்!

E-mail Print PDF

தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தஈ ஈர்த்தன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தஈ ஈர்த்தன. தமிழினியின் இக்கருத்துகள்  ஓர் ஆயுதமெடுத்துப்போராடிய அமைப்பின் போராளி என்ற வகையில் முக்கியமானவை. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:

1. :" எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், எப்ண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 73)

2. "பெண்கள்  ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது.   குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து  வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட  புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான  புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு  ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக  வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப்பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப்போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். " ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 75 & 76)

3. "பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை.  பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 76)

Last Updated on Friday, 11 November 2016 06:57 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை மக்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு அளித்துள்ளனர். விபரங்கள் வருமாறு:

ஹிலாரி ஹிளிண்டன்: 59,626,052 votes (47.7%) | டொனால்ட் ட்ரம்ப்: 59,427,652 votes (47.5%)

ஆனால் அமெரிக்கத் தேர்தலில் அதிகப்படியான மக்களின் வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் பெற்றுள்ளார்.

Hillary Clinton 228 | Donald J. Trump 279

ஆனால் அமெரிக்கத்தேர்தல் சம்பந்தமான சட்ட விதிகளின்படி அதிகளவு மக்களால் விரும்பப்படும் ஒருவர்தான் ஜனாதியாகவும் வரவேண்டும் என்பதில்லை. யாரும் 270 எண்ணிக்கையில் 'எலக்டோரல் (Electoral) வாக்குகளை, குறைந்தது 270 வாக்குகளைப் பெற வேண்டும். அப்பொழுதுதான் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியும்.

இம்முறை தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை நிர்ணையித்தது சில தேர்தல் தொகுதிகள்தாம். அமெரிக்காவைப்பொறுத்தவரையில் குடியரசுக்கட்சியினருக்கு எப்பொழுதும் ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும், ஜனநாயகக் கட்சியினருக்கே ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும் உள்ளன. அவை தவிர்ந்த ஏனைய தொகுதிகள்தாம் எப்பொழுதும் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி , தோல்வியை நிர்ணயிப்பவையாக எப்பொழுதும் விளங்குகின்றன. சில வேளைகளில் குடியரசுக்கட்சியினரின் தொகுதிகள் சில ஜனநாயகக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினரின் தொகுதிகள் சில குடியரசுக்கட்சியினருக்கும் போவதுண்டு. அவ்விதம் நடப்பது அரிதாகத்தானிருக்கும். பெரும்பாலும் இரு கட்சியினரினதும் ஆதரவுத்தொகுதிகள் தவிர்ந்த ஏனைய தொகுதிகளான ஓகியோ, மிச்சிகன்,, புளோரிடா, போன்ற கடும் போட்டி நிலவும் தொகுதிகளை வென்றெடுக்கத்தான் இரு கட்சியினரும் கடுமையாகப்போட்டியிடுவார்கள். இம்முறையும் அவ்விதமே போட்டி நிலவியது.

ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் ட்ரம்பை விட அதிகளவு ஆதரவு பெற்றவராக தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னர்வரையில் திகழ்ந்தார். அச்சமயம் பார்த்து அமெரிக்க மத்திய புலனாவுத்துறையின் இயக்குநர் ஏற்கனவே முடிவுக்கு வந்திருந்த , ஹிலாரி கிளிண்டன் தன் பதவிக்காலத்தில் அந்தரங்கமாகப் பாவித்த மின்னஞ்சல் சேர்வர் பற்றிய விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதனையடுத்து குடியரசுக்கட்சியினரின் கடுமையான பிரச்சாரத்தினால் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவு அதிகரிக்கத்தொடங்கியது. அதுவரையில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப்பிரிந்திருந்த குடியரசுக்கட்சியினரை அவருடன் மீண்டும் ஒன்றுபட்டு தேர்தலைச் சந்திக்க ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பு உதவியது. தேர்தலுக்கு ஓரிரு நாட்களின் முன்னரே மத்தியப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணையை மீண்டும் முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தார். இதற்கிடையில் தேர்தலில் முன்னதாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி சுமார் 25 மில்லியன்களுக்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து விட்டார்கள். மத்தியபுலனாய்வுத்துறை இயக்குநரின் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பும் இறுதி நேரத்தில் புளோரிடா போன்ற எந்தக் கட்சியினரினதும் கோட்டையாகக்கருதப்படாத தொகுதிகளைச்சேர்ந்த வாக்காளர்கள் மனம் மாறுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

Last Updated on Thursday, 10 November 2016 19:07 Read more...
 

தமிழ் ஸ்டுடியோ பேசா மொழி: பியூர் சினிமா - நூலகம் - புத்தகங்கள் தேவை.

E-mail Print PDF

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!பேசா மொழி: பியூர் சினிமா - நூலகம் - புத்தகங்கள் தேவை.

நண்பர்களே பியூர் சினிமா புத்தக அங்காடியில் நூலகம் என்றொரு தனிப்பிரிவு இருக்கிறது. இதில் இலக்கியம், அரசியல், சினிமா, ஓவியம், காமிக்ஸ், சங்க இலக்கியம் என எல்லா வகையான நூல்களும் இருக்கிறது. ஆனாலும் நூலகத்திற்கு இன்னும் நிறைய புத்தகங்கள் தேவைப்படுகிறது. எனவே நண்பர்கள் தங்களிடம் என்ன வகையான நூல்கள் இருந்தாலும் அவற்றை பியூர் சினிமா நூலகத்திற்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலவசமாக கொடுக்க இயலாது என்றால், குறைந்த அளவு பணம் கொடுத்து கூட வாங்கிக்கொள்கிறோம். ஆனால் பெரும் தொகை கொடுக்க இயலாது. புத்தகங்களை நூலகத்திற்கு கொடுக்க விரும்பும் நண்பர்கள் வடபழனியில் உள்ள பியூர் சினிமா அலுவலகத்தில் கொடுக்கலாம். வெளியூரில் உள்ள நண்பர்கள் கொரியர் அல்லது தபாலில் அனுப்பலாம். நிறைய புத்தகங்கள் இருந்தால் KPN போன்ற டிராவல்ஸ் பார்ஸல் சேவை மூலம் அனுப்பலாம். அல்லது உங்களால்  வரமுடியாது என்றால் பியூர் சினிமா அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்களே வந்து எடுத்து செல்கிறோம். உங்களுக்கு தேவையில்லை என்கிற புத்தகங்களை அல்லது நூலகத்திற்கு கொடுத்து உதவலாம் என்று நீங்கள் நினைக்கும் புத்தகங்களை எங்களுக்கு கொடுத்து உதவலாம்.

முகவரி:
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

Last Updated on Monday, 07 November 2016 00:18 Read more...
 

வல்லினம் கலை இலக்கிய விழா 8

E-mail Print PDF

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!வணக்கம். ‘வல்லினம்’ வருடம் தோறும் மேற்கொள்ளும் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளின் முத்தாய்ப்பு தினமாகக் கலை இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 8ஆம் ஆண்டு கொண்டாட்டமான இவ்வருட நிகழ்ச்சி மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாள் 13.11.2016 (ஞாயிறு)
இடம்
Grand Pasific Hotel (KL)
Jalan Tun Ismail, Kuala Lumpur, 50400 Jalan Ipoh, Kuala Lumpur.
(ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)

நேரம் பிற்பகல் 2.00

கலை இலக்கிய விழா 8 இன் சிறப்பு அம்சங்கள்
1. ஆளுமைகளும் ஆவணங்களும்
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்காற்றிய  சண்முக சிவா, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகியோரின் நேர்காணல்கள் வெவ்வேறு கோணத்தில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படமாக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணப்படத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மிக அரிய சில புகைப்படங்களையும் இணைக்கப்பட்டுள்ளன.

விமர்சன நூல்
பொதுவாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாராட்டுவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் ஒரு படைப்பாளனின் எல்லா படைப்புகளும் பாராட்டத்தக்கவை என மேம்போக்காகக் கொண்டாடப்படுகின்றன. ‘வல்லினம்’ இவ்வாறான மனநிலைக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ளதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படைப்பாளிகளின் சிறுகதைகளும் முழுமையாக வாசிக்கப்பட்டு அவற்றை ஒட்டிய விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டு நூல்வடிவமாக்கப் பட்டுள்ளன.

Last Updated on Monday, 07 November 2016 00:15 Read more...
 

ஆய்வு: பரிபாடல் காட்டும் தெய்வத்துவம்

E-mail Print PDF

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது பரிபாடல் என்ற நூலாகும். 'பரிபாடல்' என்னும் பாவினத்தால் ஆகிய பாடல்களின் தொகுதி இந்நூலாகும். அதனால், பரிபாடல் என்ற பெயரை இந்நூல் பெற்றது. பண்ணமைதியான இப்பாக்களைப் பயபக்தியோடு மனமுருகிப் பாடியும் பயின்றும் வந்தனர். அதனால் இப்பாடல்களை 'ஓங்கு பரிபாடல்'  என்ற பெரும் புகழையும் பெற்றுக்கொண்டது. எட்டுத்தொகை நூல் விவரங்களை,

'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஓத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.'

என்ற வெண்பா உணர்த்துகிறது.


இப் பரிபாடல், தொகுக்கப்பட்ட காலத்தில் எழுபது (70) பாடல்களுடன் இருந்துள்ளது. இதனை,

'திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று – மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்.'

vன்னும் ஒரு பழம் செய்யுளால் அறியக்கிடக்கின்றது. இவற்றுள், இந்நாளில் 22 பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. மற்றைய 48 பாடல்களும் காலத்தால் மறைந்து போயின. எஞ்சிய 22 பாடல்களையும் பண்களின் அமைப்பில் அமைத்துள்ளனர். இதன் முதற் பன்னிரு பாடல்களும் பாலையாழ் என்ற பண்ணிலும், அடுத்து வரும் ஐந்து பாடல்களும் நோதிறம் என்ற பண்ணிலும், அடுத்து வரும் நான்கு பாடல்களும் காந்தாரம் என்ற பண்ணிலும் அமைந்துள்ளன. இறுதிப்பாடலின் பண் தெரியவில்லை.

Last Updated on Monday, 07 November 2016 00:12 Read more...
 

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்

E-mail Print PDF

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்முன்னுரை:
தமிழர்பண்பாட்டின் கருவூலமாகத் திகழ்வது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகும் பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை நூல்களுல் ஒன்று சிறுபாணாற்றுப்படை. இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் இந்நூலின் கடையேழு வள்ளல்களைப் பற்றிய வரலாறு பதிவு செய்யப் பட்டுள்ளது. பேகன் பாரி காரி ஓரி ஆய் அதியமான் நள்ளி எனும் இவ்வள்ளல்களின் வரலாறு கொடைத்திறத்தைக் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மயிலுக்குப் போர்வை தந்த பேகன்:
பேகன் என்பவன் ஆவியர் குடியின்கண் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அப்பேகன் மலை வளம் உலா வரும்போது பருவத்தே பெய்த மழையால் வளம் மிகுந்த பக்கத்தே வாழும் காட்டு மயில் இயல்பாக அகவியது. ஆனால் அது குளிரால் நடுங்கியது என்று எண்ணி தான் அணிந்திருந்த நுட்பமான வேலைப்பாடுகளுடைய விலை உயர்ந்த போர்வையை அதற்குப் போர்த்தி அதன் குளிரை நீக்கினான் இதனை

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய     அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்” (சிறுபாண் 85-87)

எனும் பாடல் வரி விளக்குகிறது.

முல்லைக் கொடி படர தேர் தந்த பாரி:
பறம்பு மலையின் குறுநில மன்னன் பாரிபற்றி புறநானூறு அகநானூறு நற்றிணை குறுந்தொகை போன்ற தொகை நூல்கள் மட்டுமின்றி சிறுபாணாற்றுப்படையும் சிறப்புற எடுத்தியம்புகிறது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளல் பெருமான் போல
கருணை உள்ளம் கொண்டவன் பாரி

Last Updated on Monday, 07 November 2016 00:06 Read more...
 

கவிதை: காவியக் கலைஞனின் பயணம்!

E-mail Print PDF

-

புகழ்பெற்ற சிங்களப் பாடகரும் இசைக்கலைஞருமான பண்டிதர் டபிள்யூ.டி. அமரதேவா அண்மையில் காலமானார். அவரது நினைவாக தேசபாரதியின் இக்கவிதை பிரசுரமாகின்றது. -

அமரதேவ!

ஒரு கவிஞன் காவியம் படைத்தான்!

சூரியக் கதிர்களால்
எழுதப்பெற்றது இந்தத்
தூரனின் பயணம்!

அவன்தான்...!
வன்னகுவத்த வடுகே
டொன் அல்பேர்ட் பெரேரா!

Last Updated on Sunday, 06 November 2016 23:54 Read more...
 

ஆய்வு: ஒரு நாள் போதுமா? நாவல் உணர்த்தும் மனிதநேயம்

E-mail Print PDF

ஆய்வு: ஒரு நாள் போதுமா? நாவல் உணர்த்தும் மனிதநேயம்ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை	திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123.முன்னுரை:
ஒரு நாள் போதுமா? என்ற தலைப்பில் அமைந்த சு. சமுத்திரம் அவர்களின் குறுநாவல் கட்டிடத்தொழிலாளர்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் ஒரு சமூக நாவல் ஆகும். சமூக நாவலில் மனிதநேயம் என்பது தவிர்க்கமுடியாததொன்று எனலாம். அந்த வகையில் இந்நாவலில் காணக்கிடக்கும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

நாவலும் நாவலாசிரியரும்:
வேலு-அன்னவடிவு இருவரும் கணவன் மனைவியர். விவசாயத்தொழில் செய்துவந்த இவர்கள் சிறு சிக்கல் காரணமாக ஊரைவிட்டு வந்து சென்னையில் செய்வதறியாது நின்ற போது தாயம்மாள், பெயிண்டர் பெருமாள் இன்னபிற கட்டிடத்தொழிலாளர்களின் ஆதரவோடு வாழ்க்கையை நகர்த்துகின்றனர். முதலாளியின் தூண்டுதலால் அதிகமான பளுவைச் சுமந்த வேலு கீழே விழுந்து இறந்து விட இயற்கை மரணம் என்று மூடி மறைக்கின்றான் முதலாளி. அவனை எதிர்த்து நஷ்ட ஈடு கேட்டுச் சங்க உறுப்பினர்களோடும் தொழிலாளர்கள் ஆதரவோடும் வெற்றி இலக்கோடு அன்னவடிவு போராடத் துவங்குவதாகக் கதை முடிகிறது.

சு. சமுத்திரம் அவர்கள் நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள திப்பண்ணம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவர். அகில இந்திய வானொலியிலும் தூதர்சனிலும் பணிபுரிந்தவர். 1974 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்துலகில் வலம் வந்தவர். 15 நாவல்களும் 8 குறுநாவல்களும் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 2 கட்டுரைகளும் ‘லியோடால்ஸ்டாய்’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்றும் எழுதியுள்ளார். சோசியலிசவாதி. அடிமட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர். இவரது படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1990இல் வேரில் பழுத்த பலா என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தவிர தமிழக அரசின் விருது, இலக்கியச் சிந்தனை விருது, தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். தன்னுடைய 63ஆவது வயதில் 3.4.2003 அன்று வாகன விபத்தில் காலமானார். வேரில் பழுத்த பலா, வாடாமல்லி, பாலைப்புறா, ஊறுக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, கடித உறவுகள், மண்சுமை, தலைப்பாகை, வெளிச்சத்தை நோக்கி, வளர்ப்பு மகள், தராசு, சத்திய ஆவேசம், இல்லம்தோறும் இதயங்கள், நிழல் முகங்கள் ஆகியன சமுத்திரம் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.

மனிதநேயம்:
உயிரினங்களில் உயர்ந்த இனம் மனித இனமாகும். இம்மனித  இனத்தின் உயர்ந்த பண்பே மனிதநேயமாகும். உயர்ந்த பண்பெனப்படுவது அன்பு, கருணை, அருள், நட்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்து கொள்ளுதல், சூழ்நிலைக்கேற்றவாறு நடந்துகொள்ளுதல் போன்றனவாகும். இப்பண்புகளின் ஒட்டு மொத்த வடிவமே மனிதநேயமாகும் எனலாம்.

Last Updated on Sunday, 06 November 2016 00:52 Read more...
 

ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை

E-mail Print PDF

ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை	திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123.முன்னுரை
வீரர்களின் புறவாழ்க்கையில் மிக இன்றியமையாதப் பணி போர் புரிவதாகும். வீரர்கள் போர்த் தொழிலில் விருப்பத்தோடு ஈடுபட்டுள்ளனர். தம் உயிரின் மீது சிறிதும் பற்று இல்லாதவர்களாய் செயல்பட்டுள்ளனர். போர்ப்பறை கேட்டவுடன் வீறுகொண்டு எழும் வீரர்கள் போர்க்களத்தில் எவ்வாறு செயல்பட்டனர் என்பதைத் தொல்காப்பியப் புறத்திணையியல் மற்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்துள்ளன.

போரில் வீரர்களின் வலிமை
வலிமை காரணமாகச் செய்யப்படும் போர் தும்மைப் போராகும். இப்போரில் ஈடுபடக்கூடிய வீரர்கள் மிகுந்த ஆவேசத்தோடும் ஆக்ரோ~மாகவும் செயல்படுவதுண்டு. இப்போரில் இருநாட்டு வேந்தர்களும் களம் புகுவதுண்டு.

பகைவர்களால் சூழ்ந்து கொள்ளப்பட்ட, வேற்படை மிக்க மன்னனைக் காப்பாற்ற விரும்பிய முன்னனணிப் படையில் இருக்கக் கூடிய வீரன் ஒருவன் மட்டும் தப்பித்து பகைவர்களை வெட்டி வீழ்த்துகின்றான்.

“    வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
தான் மீண்டு எறிந்த தார்நிலை ”        (தொல்.புறத்.1018:3-4)

பகைவர் முன் தோற்று ஓடிவரும் படையில் உள்ள வீரன் ஒருவன், பகைவர் படையில் தனி ஒருவனாகப் புகுந்து பகைவர்களை வெற்றி கொள்வதோடு அடுத்து வரக்கூடிய கூழைப் படையையும்(பின்னணிப்படை)தடுத்து நிறுத்துகின்றான்.

இன்னொரு வீரன் தன் மீது பகைவர்கள் படைக்கலன்களை வீசியதால் புண்பட்ட நிலையில் இருக்கின்றான். இருந்தாலும் அவற்றை அறுத்து எறிந்துவிட்டு, தன் உடல்வலிமையால் மட்டுமே போரிடுகின்றான்.

“    கூழை தாங்கிய எருமையும் படைஅறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும் ”        (தொல்.புறத்.1018:7-8)

என்பதன் மூலம் போர்க்களத்திலே வீரர்கள் துடிப்போடு செயல்பட்டதை அறிய முடிகின்றது.

போரில் தன் மன்னன் இறந்து வீழ்ந்தான் என்றவுடன் கோபங் கொண்ட வீரனொருவன் தனி ஒருவனாகப் போரில் புகுந்து போரிடுவதுண்டு; தன் படைகள் தோற்று ஓடுகின்ற நிலையில் வீரன் ஒருவன் மட்டும் போர்க்களத்திலே தன் வாளைச் சுழற்றி ஆடுவதும் உண்டு. இதனை,

“    செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசய நூழிலும் ”        (தொல்.புறத்.1018:14-17)

Last Updated on Saturday, 05 November 2016 19:19 Read more...
 

ஆய்வு: அற இலக்கியங்களில் செய்ந்நன்றியுணர்வு

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே  (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

Last Updated on Tuesday, 15 November 2016 23:35 Read more...
 

நேர்காணல் (மீள்பிரசுரம்): Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) : எம்ஜிஆரைப்பற்றி ஜெயலலிதா!

E-mail Print PDF

எம்ஜிஆர் / ஜெயலலிதாதமிழக முதல்வர் செல்வி ஜெயலிதா சிமி கரேவலின் Rendezvous with Simi Garewal என்னும் நிகழ்ச்சியில் மனந்திறந்து சிமி கரேவலுடன் உரையாடிய நேர்காணல் ஜெயலலிதா அவர்கள் பங்குபற்றிய நேர்காணல்களில் நானறிந்தவரையில் சிறப்பானது; முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இரும்புப்பெண்மணியாக அறியப்பட்ட ஜெயலலிதா அவர்கள் மிகவும் இளகி, மனந்திறந்து பதில்களை அளித்திருக்கின்றார்.  தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், தனக்குப் பிடித்த நடிகர் என்றெல்லாம் மனந்திறந்து பதில்களை அளித்துள்ள ஜெயலலிதா எம்கிஆர் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார். எம்ஜிஆரைக் காதலித்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் புன்னகையுடன்'அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்' என்று பதிலளித்திருக்கின்றார். 'உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா ?' என்ற கேள்விக்கு அவர் 'இருந்திருக்கலாம்' என்று கூறியிருக்கின்றார். .மேலும் எம்ஜிஆரைப்பற்றிக் கூறும்போது 'மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப்  பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.' என்றும், 'எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா?' என்ற கேள்விக்கு 'கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.' என்றும் கூறியிருக்கின்றார். மேலும் 'அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது' என்றும் எம்ஜிஆரைப்பற்றியும் கூறியிருக்கின்றார் ஜெயலலிதா.

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் யாருமே கேட்கத்துணியாத கேள்விகளை ஜெயலலிதாவிடம் சிமி கரேவல் கேட்டிருக்கின்றார் இந்த நேர்காணலில். அத்துடன் இந்த நேர் காணலில் தனக்குப் பிடித்த இந்திப்பாடலின் சில வரிகளையும் பாடிக்காட்டியிருக்கின்றார் தமிழகத்தின் இரும்புப்பெண்மணி.

இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல். இதனை TheTamilTimes இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கின்றார்கள். ஜெயலலிதா ஆங்கிலப்புலமை வாய்ந்தவர். இந்த நேர்காணலில் அவர் ஆங்கிலத்தில் அளித்த பதில்களும், பாவித்த ஆங்கிலச்சொற்களும் அவரது ஆங்கிலப்புலமையினை வெளிப்படுத்துவன. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பினைத்தமிழாக்கம் செய்த 'தி தமிழ் டைம்ஸ்' இது பற்றிக் குறிப்பிடுகையில் 'ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார்' என்று குறிப்பிட்டுள்ளது. அந்த 'தி தமிழ் டைம்ஸ்' இணையத்தளத்தில் வெளியான தமிழாக்கம் செய்யப்பட்ட நேர் காணல் முழுவதையும் இதோ உங்கள் முன்னால்...


உரையாடல்: “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி. பேட்டி கண்டவர் சிமி கரேவல் (Simi Garewal).

தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.

Last Updated on Thursday, 03 November 2016 06:34 Read more...
 

குறுநாவல்: சலோ,சலோ! (1)

E-mail Print PDF

- சும்மா,நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய .நீளத் தொடர். -  கடல்புத்திரன் -


அத்தியாயம் ஒன்று!

குறுநாவல்: சலோ,சலோ! (1)

அராலிக்கூடாகச் செல்கிற பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக வேலியில்லாமல் திறந்த 'ட'னா வடிவில் முருகமூர்த்திக் கோவில் வளவு, மண்பாதையுடன் செல்கிறது.. வீதியை விட்டு இறங்கியவுடன் சிறிய கோவில்,அதில் யார் இருக்கிறார்கள்?பிள்ளையாரா?துர்க்கை அம்மனா?வைரவரா? யாரோ ஒருவர் செகிருட்டி போல இருக்கிறார்.பனை மரங்களுடன் எதிர்ரா போல் இருக்கிற அமெரிக்கன் மிசன்  தமிழ்க்கலவன் பாடசாலைக் காணி முருகமூர்த்தி வளவை 'ட‌'னாவாக்கியிருக்கிறது. அந்த வளவையும் சேர்த்து விட்டால் அது வளவு,சதுர வளவு தான்.  ஒரு புண்ணியவான், தன் வளவை கோவிலுக்கும் கொடுத்து,முன்னால் சிறிய துண்டை பள்ளிக்கூடத்திற்கும் கொடுத்திருக்கிற வேண்டும். அந்த காலத்தில், யாரோ ஒருவர்? மதசார்ப்பற்ற  ,உயர்ந்த மனிதராக இருந்திருக்கிறார்! அவர் யார்?  தேடினால் அறிய முடியும். அந்த கிராமம் சைக்கிளால் அளந்து விடக் கூடிய தூரம் தான். அராலியும் எல்லா கிராமங்களைப் போல‌ மறைவாக முற்போக்குத் தன்மையையும் கொண்டு தானிருக்கிறது.இவர்களைப் போல,பள்ளிக்கூடத்தில் ஏற்படுற‌ நட்பு தான் அதை வளர்த்துக் கொண்டு வருகிறதோ, என்னவோ பிழை இருக்கிறது?என்கிற மாதிரி கிடக்கிற குழப்பங்கள் எல்லாம் எமக்கென்று ஒரு சுயராட்சியம் ஏற்பட்டவுடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுமோ?

பல பிரச்சனைகளிற்கு பெரும் பெரும் பாறைகளை உருட்டி விட்டு தடை படுத்திக் கொண்டிருக்கிறது போல இருக்கிற‌ பூதங்கள்,ஒரு நாள், இல்லாவிட்டால் ஒரு நாள் தோற்றுப் பின் வாங்கவே போகின்றன. ஏனெனில் ‘தர்மம்’ நம்மவர்களின்(தமிழர்களின்) பக்கமே கிடக்கிறது. இப்படி, நகுலனின் சிந்தனைகள் ஓடுகின்றன‌. ஒன்றை யோசிக்கத் தொடங்கினால்,அதிலே மட்டும் நில்லாமல் மனம் போன போக்கில் எங்கையோ போய் விடுகிறான். 'இப்படி இருக்கிறதாலேதான் கிராமத்தின் வரலாறும் சரியாக‌  தெரியாதவனாக கிடக்கிறேனே !'  அவன்,  தன்னையே சலித்துக் கொண்டான் . .

பிழைகள், அவனிடம் மட்டுமல்ல‌ ,வெளியிலேயும், சமூகத்திலும் கிடக்கின்றன‌. தேவையற்ற லண்டனின் தேம்ஸ்  நதியைப்பற்றியும்,அமெரிக்காவில் ஆதிக் குடிகள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைப் பற்றியும் தான் தெரிகிறது படிக்கிறது எல்லாம் ....சுய கல்வி முறை துப்பரவாக  கை விடப்\பட்டிருக்கிறது. தாவரங்களைப் பற்றி படித்தாலும் சரி, விலங்குகள் பற்றி படித்தாலும் சரி, இங்குள்ள  எல்லாற்கும்  அழகான‌  பழந்தமிழ்ப்  பெயர்களும் இருக்கின்றன. வேறு மொழிப் பெயர்களாகப் படித்து, அதை நினைவில் வைத்திருப்பதிலேயே பாதிப்பேர் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது. இப்படியே எல்லாத்தையும் அந்நிய‌ம் புக‌ விட்டு... அந்நிய‌ப்படுத்தி யே விட்டிருக்கிறோம்.

Last Updated on Tuesday, 01 November 2016 19:30 Read more...
 

சிறுகதை: மரத்துடன் மனங்கள்

E-mail Print PDF

-கே.எஸ்.சுதாகர்	இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.

”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”

“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”

இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.

“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும் எங்களோடை வாருங்கள்” சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்த பூதங்களில் நான்கு போயின.

கருணா மாத்திரம் பல்லவியுடன் நின்றான். சந்தித்த முதல்நாளே கருணாவின் கண் அவள்மீது பட்டுவிட்டது.

ஹந்தான மலைச்சாரலில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக்கற்றைகள் பல்லவியின் மீது படர முகம் ஜோராக ஜொலித்தது. சினிமாப்படங்களில் வருவது போல தென்றல் அவள் கேசங்களைச் சிலிர்க்க வைத்தது. பல்லவி குள்ள உருவம் என்றாலும் அழகுராணிதான். இரட்டைப்பின்னலை முன்னாலே தூக்கி வாகாக வீசியிருப்பாள். அதில் கருணாவின் மனம் ஏறி இருந்து ஊஞ்சல் ஆடும்.

“என்னைத் திருமணம் செய்வாயா?” நிஜத்தைப் பகிடியாகத் திரித்து கேள்வியாக்கித் தூது விட்டான் கருணா.

Last Updated on Tuesday, 01 November 2016 18:45 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்

E-mail Print PDF

- முருகபூபதி - அவுஸ்திரேலியா -கடந்த பதினொரு  ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள்.  கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர். 2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக வந்தபோது முதல் முதலில் சந்தித்தேன். 2009  இல் தி.மு.க.வின் இளைஞர் அணி மாநாட்டை திருநெல்வேலியில் கொடியேற்றி தொடக்கிவைத்த அவரது அரசியல் பிரவேசத்தைக்கண்டேன். 2013 இல் கரிசல்காட்டின் வாசம் நிரம்பிய சில நூல்களின் படைப்பாளியாக பார்த்தேன். குறிப்பிட்ட  இந்த எட்டு ஆண்டுகளுக்குள் ஒரு  சந்தர்ப்பத்தில்  லோகசபைத்தேர்தலில் ஒரு எம்.பி.யாக நிற்பதற்கு வேட்புமனு தாக்கல்செய்யவேண்டிய தருணத்தில் எதிர்பாராதவிதமாக வேலூரில் கார்விபத்தில் சிக்கியதனால் அந்த வாய்ப்பையும் இழந்து, அதனால் சில மாதங்கள் படுக்கையிலிருந்தபோதிலும் மீண்டு எழுந்துவந்து கவிதைகள், கட்டுரைகள் படைத்தார். பாதியில் நின்ற ஆய்வேட்டை பூர்த்திசெய்து முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.

சென்னை திருவான்மியூர் அருகே நீலாங்கரையில் தமிழச்சி சுமதி தங்கபாண்டியனை அவரது அழகான இல்லத்தில் சந்தித்தபோது அவருடனான உரையாடலில் நானும் என்னைப்போன்று பலரும் தொலைத்துவிட்ட கிராமங்கள் படிமங்களாக வந்து நெஞ்சை உரசிக்கொண்டிருந்தன.

தமிழச்சி தான் பிறந்து தவழ்ந்த கரிசல் காட்டை தனது கவிதைகளில் கட்டுரைகளில் பதிவுசெய்வது ஜனநெரிசல் நிரம்பிய கட்டிடக்காட்டிலிருந்துகொண்டுதான். அவரது எஞ்சோட்டுப்பெண்ணும், வனப்பேச்சியும் அருகனும் மஞ்சனத்தியும் பாம்படமும் அவர் உளமாற நேசிக்கும் மல்லாங்கிணறு கிராமத்தையே உயிர்ப்புடன் சித்திரிக்கின்றன. 90 களில் இலக்கியப்பிரவேசம் செய்தவர். சென்னை ராணிமேரிகல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியிலிருந்தபோது தமிழ்நாட்டில் மித்ர பதிப்பகம் ஊடாக எஸ்.பொ.வின் அறிமுகம் கிடைத்து, கனடாவில் வதியும் அளவெட்டி சிறிசுகந்தராஜாவின் அனுசரணையுடன் தனது எஞ்சோட்டுப்பெண் கவிதை நூலை வெளியிட்டார். கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழ் வெளியானபோது அதில் பிரசுரமான அருண். விஜயராணியின் தொத்துவியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியன் ஸ்டடீஸ் சென்டரில் நடந்த கருத்தரங்கில் ஆய்வு செய்தார்.

Last Updated on Tuesday, 01 November 2016 18:26 Read more...
 

ஆய்வு: அழகியல் நோக்கில் கல்யாண்ஜி கவிதைகள்

E-mail Print PDF

கல்யாண்ஜி மனிதன் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைக் கண்டு மகிழத் தொடங்கிய அன்றே அழகுணர்ச்சியும் அரும்பியது எனலாம்.    அழகு என்ற சொல்லாட்சியின் வீச்சும், பயன்பாடும் பரந்துபட்டது. அழகு என்ற சொல், பொருள் வரையறைக்கு உட்படாதது. ""அழகு என்பது காண்டலும் கற்பனை அனுபவமுமே''1 என்று அழகியல் கொள்கையாளர் கூறுவர். (அப்ப் க்ஷங்ஹன்ற்ஹ் ண்ள் ண்ய் ல்ங்ழ்ஸ்ரீங்ல்ற்ண்ர்ய் ர்ழ் ண்ம்ஹஞ்ண்ய்ஹற்ண்ர்ய்) இந்த அடிப்படைக் கருத்தை இடைக்கால உரையாசிரியரான "பேராசிரியர்' மிகவும் தெளிவாய்க் கூறியுள்ளார் அவர், ""திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை, நோக்கம் என்றது அழகு''2 ஆகும் என்று கூறுகின்றார்.    அழகியல் என்ற சொல் அழகான பொருளை மட்டும் குறிப்பதன்று. ஒவ்வொருவரின் பார்வையிலும் அழகு வேறுபடலாம். ""அழகு என்பது ஆழந்த பொருளில் இல்லை; ஆழந்த உள்ளத்தில் இருக்கிறது'' 3என்று வாழ்வியல் களஞ்சியம் பொருள் தருகிறது.  மேலும்,    ""அழகு என்பது அனுபவமே அல்லாது அநுபவிக்கப்படும் பொருள் அன்று. அது காணப்படும் பொருளில் இல்லை. காண்பவர் தம் கருத்தில் இருக்கிறது...''4 என்பர். அழகியல் இன்பமயமான உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துவது. புனையப்படும் பொருளின் அழகையோ, அழகின்மையையோ சார்ந்ததன்று; தனிப்பட்ட மனிதனின் உள்ளத்தைச் சார்ந்தது. அத்தகையவனைக் கலைஞன் என்று கூறுவர்.

அழகின் நிலைக்களன்கள்:
அழகினை வேண்டுவோர் இயற்கை வாழ்வு வாழ வேண்டும் என்ற விளக்கத்தை அடிப்படையாகக் கொள்வர் என்று கூறலாம். அழகின் தன்மையையும் பயனையும், ""உள்ளதை உள்ளவாறு கூறுவதும் உள்ளதை உள்ளவாறே ஏற்பதுவம் அழகியன் அடிப்படை. இங்கே உள்ளது, உள்ளவாறு எனப்படுபவை உணர்த்தும், உணர்ந்தவாறும் ஆகும். எனவே அழகு என்பது உண்மை; உண்மை நன்மையே தரும். நன்மை இன்பம் தரும். இன்புறுத்துவது அழகாகும்'' 5என்பர்.

அழகியல் இருவகைக் கண்ணோட்டங்களை நிலைக்களன்களாகக் கொண்டுள்ளது. அவை, வாழ்வியற் கண்ணோட்டம், கலைக்கண்ணோட்டம் என்பனவாகும்.

Last Updated on Tuesday, 01 November 2016 06:17 Read more...
 

எம். ஜெயராமன் (மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

E-mail Print PDF

1. வாய்க்கும் நல்லதீபாவளி

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி
மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி
நிறைவான மனதுவர  உதவிடட்டும்  தீபாவளி
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !

புலனெல்லாம் தூய்மைபெற
புத்துணர்வு பொங்கிவர
அலைபாயும் எண்ணமெலாம்
நிலையாக நின்றுவிட
மனமெங்கும் மகிழ்ச்சியது
மத்தாப்பாய் மலர்ந்துவிட
வாசல்நின்று பார்க்கின்றோம்
வந்திடுவாய் தீபாவளி !

பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்
தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்
கஷ்டமான அத்தனையும் கழன்றோட வெண்டுமென்று
இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !

தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்
தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம்
தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்
தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !

Last Updated on Monday, 31 October 2016 04:34 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' பற்றி.....; முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி...

E-mail Print PDF

1. கவிஞர் நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' பற்றி.....

வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் 'தாத்தாமரும் பேரர்களும்' பற்றி.....; முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி...ஈழத்துத்தமிழ்க் கவிதையுலகில் எம்.ஏ.நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' முக்கியமான கவிதைத்தொகுதி. நுஃமானின் ஐந்து நெடுங்கவிதைகளை உள்ளடக்கிய தொகுதி. வாசகர் சங்க வெளியீடாக (கல்முனை) வெளியானது.

இத்தொகுப்பிலுள்ள நெடுங்கவிதைகள் வருமாறு:

1. உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்
2. அதிமானிடன்
3. கோயிலின் வெளியே
4. நிலம் என்னும் நல்லாள்
5. தாத்தாமரும் பேரர்களும்

இந்நூலை நுஃமான் கவிஞர் மஹாகவிக்கும், நீலாவணனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.

இன்று கவிதைகள் என்னும் பெயரில் நூற்றுக்கணக்கில் எழுதிக்குவிப்போர் ஒரு கணம் நுஃமான் போன்றோரின் கவிதைகளை வாசித்துப்பார்க்க வேண்டும். அப்பொழுது புரிந்து கொள்வார்கள் ஒருவருக்கு மரபுக்கவிதையின் அறிவு எவ்விதம் இன்றைய கவிதையினை எழுத உதவியாகவிருக்கும் என்பதை. உதாரணத்துக்கு நூலிலுள்ள நுஃமானின் 'அதிமானிடன்' கவிதையிலிருந்து ஒரு பகுதியைப்பார்ப்போம்:

Last Updated on Sunday, 30 October 2016 16:44 Read more...
 

வே.நி. சூர்யா கவிதைகள்!

E-mail Print PDF

1. தாந்தேவின் நரகத்தில் நான்

 தாந்தேவின் நரகத்தில் நான்அப்போது வலியின் ஒளியொலிக்கீற்றுகள் நிறப்பிரிகை கண்டு
வானவில்லாகக் கதறல்களை அம்பாகத் தொடுத்து கொண்டிருந்தது எனக்குள்
தாந்தேவின் நரகத்திற்குள் பிணங்களை அரைத்து பொடியாக்கி
காலைக் காபியில் கலந்து அருந்துபவனை நான் சந்தித்தேன்
ரகசியங்களை கேட்கப் பல ஜோடிக் காதுகள்
ஊசியில் கோர்க்கப்பட்டு அவன் அலமாரியில் இருந்தன
நீயொரு பெண்ணாய் இருந்தாய்
நான் உன் ரகசியங்களை என்னுள்
ரகசியப்படுத்தி கொண்டிருந்தேன்
என் மூளையின் சதைமடிப்புகளுக்குள்
என்றொரு உரையாடல் கேட்கிறது நீ தானா அது என்கிறான்
என் முகத்தை கழற்றி எறிகையில்
தற்கொலையின் வாசனையைப் பின்பற்றி
என்னை உண்ணக் காத்திருந்தவர்கள் வந்திருந்தார்கள்
ஒப்பந்தத்திற்க்ச் சம்மதிக்கிறேன் என மொழிந்தேன்
என் தலையை அவர்களும் என் உடலை அவனும் உண்ணும்போது
தற்கொலையின் சீழ் காற்றில் பரவி காலத்தின் யோனிக்குள்
விந்தென கறுப்பு ரத்தம் பாய்கிறது
கூடவே எனக்காக சிரிக்கிறது
என் சொல்லும் என் முள்ளும் கடைசியாக
என் குடல்களை என் எலும்பால் உருவாக்கிய யாழில் நாணென போட்டு
என் நுரையீரல் அதிர இசைப்பார்கள்
என் பிறப்புறுப்புகளை புல்லாங்குழலென உருவாக்கி இசைப்பார்கள்
என் தோலை மிருதங்கத்தில் பொருத்தி இசைப்பார்கள்
என் மூளையின் சதைமடிப்புகளை விரித்து அதன்மேல் சயனம் கொள்வார்கள்
என்றெல்லாம் நினைத்து மகிழ்வுடன் உருவாகிறேன்
இல்லாமல் இருப்பவனாய்
அப்போது மரணத்தின் வானவில் தலைகீழாக மாறியிருந்தது என்னைத் தொடுத்தபடி

(நரகங்களின் வரைபடங்களை வைத்திருக்கும் தாந்தேவுக்கு )

Last Updated on Saturday, 29 October 2016 18:12 Read more...
 

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

E-mail Print PDF

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

தீபத் திரு நாளில்

தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்.......

தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீயவை அனைத்துக்கும்  தீயை மூட்டுவோம்.
தீண்டாமைக்கும் தீயூட்டுவோம்.

தீபாவளி அன்று
தீனி இல்லாதோருக்குத்
தீனி இடுவோம்.
தீபத்தை ஏற்றும்போது
ஒளிரட்டும் அகம்.

இனிமையான
இன்பமான
இனிய தீபாவளி வாழ்த்துகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 29 October 2016 17:45
 

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் - 28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில் தொழில் நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்திய ஒன்றுகூடல்!

E-mail Print PDF


அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் - 28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில் தொழில் நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்திய ஒன்றுகூடல்!" அவுஸ்திரேலியா  மெல்பனில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கு தடையின்றி இயங்கி 28 ஆண்டுகளை நிறைவுசெய்து மற்றும் ஒரு புதிய ஆண்டில் கால் பதிக்கின்றது. இதுவரை காலத்தில் இலங்கையில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய  இந்நிதியம், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அன்பர்களின் பேருதவியினால்  அனுப்பி  பட்டதாரிகளாக்கியுள்ளது.  எனினும் இலங்கையில்   நீடித்த   போரினால்  பாதிப்புற்ற  தமிழ் மாணவர்களின்  தேவைகள்  நீடித்துக்கொண்டே  இருக்கின்றன."

இவ்வாறு கடந்த ஞாயிறன்று ( 16 ஆம் திகதி)  அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெற்ற இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 28 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  தலைமையுரையாற்றிய  நிதியத்தின் தலைவர்  திரு. விமல் அரவிந்தன்  குறிப்பிட்டார். மெல்பன், வேர்மண்  தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  நிதியத்தின்  உறுப்பினர்கள்  கலந்து  சிறப்பித்தனர். இலங்கையிலும்  உலகநாடெங்கிலும்  போர்களினாலும்  இயற்கை அனர்த்தங்களினாலும்  உயிரிழந்த  மக்களுக்கும்,  கடந்த ஆண்டு இறுதியில்  மறைந்த நிதியத்தின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  ஒரு  நிமிடம் மௌனம் அனுட்டிக்கப்பட்டது. நிதியத்தின்  2015- 2016  ஆண்டறிக்கையை  துணை  நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியும்  நிதியறிக்கையை  நிதிச்செயலாளர்  திருமதி வித்தியா  ஶ்ரீஸ்கந்தராஜாவும்  சமர்ப்பித்தனர்.

Last Updated on Monday, 24 October 2016 19:54 Read more...
 

இலண்டன்: புத்தக அறிமுக விழா!

E-mail Print PDF

செல்வி கார்த்திகா மாகேந்திரனின் புத்தக அறிமுக இசைச் சமர்ப்பணவிழா22/10/26 சனிக்கிழமை அன்று செல்வி. கார்த்திகா மகேந்திரனின் புத்தக அறிமுக, இசைச் சமர்ப்பண விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விழாவே வித்தியாசமான முறையில் எம் சமுதாயத்திற்கு நல்லதோர் பாடம் கற்றுக் கொடுக்கும் முறையில் அமைந்திருந்ததைக் காண்டு வியந்தேன். விழாக்கள் என்றாலே ஆடம்பர மோகம் தாண்டாவமாடுகின்ற இக் காலகட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் தரமான நிகழ்வுகளை சிறப்பாக வழங்கியிருந்தார்கள். அவரவர் புகழை பறைசாற்றவே அனேகமானோர் இப்படியான விழாக்களை நடாத்துவது வழக்கம் ஆனால் இவ்விழாவோ இளைய தலைமுறையினரிடம் இலைமறை காயாக மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பணியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் தேனுண்ட வண்டுகளாக மயங்கி மகிழ்வுற்றதையும் காணக்கூடியதாக இருந்தது. கார்த்திகாவின் இனிமையான குரலில் நானும் என்னை மறந்து இசையோடு சங்கமித்துவிட்டேன். இந்த நேரத்தில் கார்த்திகாவின் ஆசிரியை இசைக்கலைமணி, கலாவித்தகர் திருமதி. சேய்மணி. சிறிதரன் அவர்களின் அளப்பரிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும் பல்லாயிரம் இசைவல்லுனர்களை உருவாக்குவார் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு. நிகழ்வின் போது கார்த்திகாவிற்கும் ஆசிரியருக்கும் இடையில் இருந்த புன்னகையின் ஊடான தொடர்பு இரசிக்கக்கூடியதாக இருந்தது.

14 வயதிலேயே நூல் எழுதும் வல்லமை கொண்ட கார்த்திகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.  தொடரட்டும் உங்கள் கலைப்பயணம். இந் நிகழ்வில் மிகப் பிரமாதமாக இசைக் கருவிகளை வாசித்தவர்கள், அழகாக நடனமாடிய சிறுவர்கள், அனுபவம்மிக்க சிறந்த அறிவிப்பாளார், உரையாற்றியவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். முக்கியமாக திரு.மகேந்திரன் குடும்பத்தினர் சபையோரை மிகவும் அன்பாகவும் பண்பாகவும் வரவேற்று மகிழ்ந்தார்கள். அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகாட்டும் .

Last Updated on Saturday, 29 October 2016 17:52 Read more...
 

குடிவரவாளன்: வ.ந.கிரிதரனின் சுயசரிதைத்தன்மையிலான, உணர்வைத்தூண்டும் விவரணை.

E-mail Print PDF

-  முனைவர் ஆர்.தாரணியின் '‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் கட்டுரையின் முக்கியமான தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகள். -  பதிவுகள் -


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'முனைவர் ஆர்.தாரணிகுடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும்  போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது.  நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில்  , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ  அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.

சாதாரண வாசகரொருவரை இந்நூலின் நேரடியான கூறுபொருளும், நடையும் எழுச்சியூட்டும். ஆயினும், இந்ந நூலானது பலபடிகளில் அர்த்தங்களைத்தருவதிலும், தகவல்களின் விபரிப்புகளில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த அறிவுமிக்க கருத்துகளிலும், விமர்சனத்துக்குரிய சிக்கலான எண்ணங்களைக்கொண்டிருப்பதிலும் மிகவும் வியப்பூட்டுவதாகும். இது வெறுமனே 83 கலவரத்திலிருந்து தப்பிக் கனடாவுக்குச் சென்ற இளங்கோ என்பவனின் கதை மட்டுமில்லை. கதாசிரியர் பல சவால்மிக்க விடயங்களை, சட்டவிரோதக்குடிவரவாளன் என்ற நிலை அப்பாவி மனிதனொருவன் மேல் திணிக்கப்பட்டமை, அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடொன்றில் மறுதலிக்கப்பட்ட மனித உரிமைகள், தடுப்புமுகாமின் கடுமையான  வாழ்க்கை, சமூகக் காப்புறுதி அட்டை இல்லாததால் வேலை தேடுவதில் ஏற்படும் இன்னல்கள், ஹரிபாபு, ஹென்றி போன்ற நடைபாதை வியாபாரிகளின் தந்திரங்கள், பீட்டர், பப்லோ போன்ற முகவர்களின் சுரண்டல் நடவடிக்கைகள், சட்டத்தரணி அனிஸ்மன்னின் கோழைத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக நியூயார்க் நகரில் வசிக்கும் சட்டவிரோதக்குடிவரவாளர்கள் அங்கீகரிக்காமை போன்ற பல விடயங்களைப்பற்றி இந்நூலில் உரையாடுகின்றார். அனைவரையும் கவரும் தன்மை மிக்க நகரின் மறுபக்கம் நாவலின் நாயகனை மட்டுமல்ல வாசகர்களையும் அதிர்ச்சியடைய வைக்கின்றது.

Last Updated on Sunday, 23 October 2016 17:22 Read more...
 

தம்பா கவிதைகள்!

E-mail Print PDF

தம்பா1. தீக்குச்சிகளின் நடனம்.

மேற்கில் விதை தூவி
மத்திய கிழக்கில் உரம் போட்டு
வடக்கில் நீருற்றி
தெற்கில் அறுவடை செய்த
கழிவுப் பொருட்களை
பரவி கடை விரிக்க
காணி நிலம் வேண்டும்.

போரை ஒழித்த துண்டு நிலத்தில்
ஒரு பாரிய
சிலுவை யுத்தத்திற்கு காத்திரு.

இரத்தம் ஊறும் கிணறுகள்
இன்னமும் தூர்ந்து போகவில்லை.

கண்ணையும் காதையும் இழந்த பின்
மீதமாக இருப்பது
உனது மூச்சுக்கு காற்று மட்டும் தான்
என்பதையும் மறந்து விடு.

Last Updated on Thursday, 20 October 2016 23:49 Read more...
 

ஆய்வு: திரிகடுகம் உணர்த்தும் கல்வி நெறிகள்

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.இந்நூல் குறித்து விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே      (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.   

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகமும் ஒன்றாகும். திரிகடுகம் என்பது மருந்தின் பெயராகும்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் கலந்து செய்யப்படுகிற மருந்திற்கு திரிகடுக சூரணம் என்று பெயர்.இம்மருந்து போல101 செய்யுள் தோறும் மூன்று கருத்துக்களை அமைத்து இந்நூலாசிரியரான நல்லாதனார் பாடியுள்ளார்.இந்நூலாசிரியர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் காலம் 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலில் இடம்பெறும் கல்வி நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Last Updated on Wednesday, 19 October 2016 05:28 Read more...
 

ஆய்வு: தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியல்

E-mail Print PDF

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

இடைச் சங்ககாலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற அரும் பெரும் மூத்த நூலை 'ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்' எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) என்பவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியம் -எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களைக் கொண்டJ. அவை ஒவ்வொன்றும் ஒன்பது இயலாக வகுக்கப் பட்டுள்ளன. இதில், பொருளதிகாரத்தை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களாக அமைக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாடு என்ற சொல்லுக்கு, புகழ், உண்மை, உள்ளத்தின் நிகழ்வு புறத்தார்க்கு வெளிப்படுத்தல், இயற்கைக் குணம் ஆகியவற்றை அகராதி கூறும். இதில் மெய்ப்பாட்டியல் என்ற இயல் கூறும் தன்மையினை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்காகும்.

மெய்ப்பாட்டியலை- மெய்ப்பாடுகளின் வகை, எண்வகை மெய்ப்பாடுகள், ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள், புறனடை என ஐவகையாக வகுத்துக் காண்பர் தொல்காப்பியர்.

(1)    மெய்ப்பாடுகளின் வகை
1. விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று கூறுவர்.

'பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப.' – (பொருள். 245)

2. மேற்கூறப்பட்ட பதினாறு பொருளும், எட்டாக வரும் இடமும் உண்டு. அவையாவன, குறிப்புப் பதினெட்டனையும் சுவையுள் அடக்கிச் சுவையை எட்டாக்கி நிகழ்த்துவதாகும்.

'நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.' – (பொருள். 246)

Last Updated on Monday, 07 November 2016 00:12 Read more...
 

நூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

E-mail Print PDF

நூல் அறிமுகம்: வெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - வெலிகம ரிம்ஸா முஹம்மத் -ஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொண்டிருக்கும் திருமதி ஏ.சீ. ஜரீனா முஸ்தபா நாவல்கள் தவிர ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும், யதார்த்தங்கள், மீண்டும் ஒரு வசந்தம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். பொக்கிஷம் இவரது கவிதைத் தொகுதியாகும்.

இலக்கியத் துறையில் சுமார் 30 வருட காலம் அநுபவம் மிக்கவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பிட்டகோட்டையில் பிறந்து, கடுவெல வெளிவிட்டயில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ் மொழி மூலம் கற்காத இவர் சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் சிங்கள மொழியிலேயே கல்வி கற்றுள்ளார். தன்னார்வத்தோடு தமிழைக் கற்று தமிழ் மொழியிலேயே இலக்கியம் படைத்து வருகின்றார். 1985 – 1987 காலப்பகுதிகளிலேயே வெண்ணிலா, மதூகரம் போன்ற சஞ்சிகைகளுக்கு இணை ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார். அந்தக் காலங்களிலேயே இலங்கை வானொலிக்கு நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். பிற்பட்ட காலங்களில் இவரது நாவல்கள் வீரகேசரி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் தொடராக பிரசுரமாகியுள்ளன.

பேனா வெளியீட்டகத்தின் மூலம் 80 பக்கங்களை உள்ளடக்கியதாக பொக்கிஷம் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்த நூலில் 38 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அறிவுறை கூறும் வகையிலும், சமூக நோக்கிலும் எழுதப்பட்ட கவிதைகளே நூலெங்கும் விரவிக் காணப்படுகின்றன. இன்னும் சில படைத்துப் பரிபாலிக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்காகவும், இறைவனுடனான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன.

இந்த நூலுக்கு, 'ஜரீனா முஸ்தபா தந்த பா பொக்கிஷம்' என்ற தலைப்பில் கவிஞர் கிண்ணியா அமீர் அலி வாழ்த்துரையொன்றையும், தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் நஸீர் அஹமட் (ஆலயம்பதி ராஜா) அவர்களின் மதிப்புரையொன்றையும் வழங்கியுள்ளார். நூலாசிரியர் தனதுரையில் 30 வருட காலம் இலக்கியம் படைத்து வந்தாலும் கவிதை நூலொன்றை வெளியிட முன்வராமல் தாமதித்து இருந்ததற்கான காரணத்தை முன்வைத்துள்ளார்.

இனி இவரது சில கவிதைகளைப் பார்ப்போம்.

நீதான் (பக்கம் 17) என்ற கவிதை இறைவனின் தயவை வேண்டி நிற்பதாக அமைந்திருக்கின்றது. மனிதனுக்கு துன்பங்கள் ஏற்படும் போது இறைவனின் உதவியை நாடுவதும் இன்பங்களின் போது இறைவனை மறப்பதும் மனித இயல்பாக மாறிவிட்டது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனின் கருணையை நாம் எதிர்பார்த்து அவனிடமே மீள வேண்டும் என்பதை இக்கவி வரிகள் நன்கு உணர்த்துகி;ன்றன.

Last Updated on Tuesday, 18 October 2016 19:38 Read more...
 

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: பியூர் சினிமா புத்தக அங்காடி - விரிவாக்கம்!

E-mail Print PDF

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: பியூர் சினிமா புத்தக அங்காடி - விரிவாக்கம்!பியூர் சினிமா புத்தக அங்காடியில் இதுநாள் வரை முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களே விற்பனைக்கு இருந்து வந்தன. இப்போது சினிமாவின் உபபிரிவுகளான, அல்லது சினிமாவின் முன்னோடி கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக திரைப்படமாக்கப்பட்ட நாவல்கள் என்கிற தலைப்பில் எந்தெந்த நாவல் / சிறுகதையெல்லாம் திரைப்படமாக்கப்பட்டதோ அவையும் விற்பனைக்கு உள்ளன. இவைகள் அன்றி, தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய திரைப்படங்களின் டி.வி.டி க்களும், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கு கழகம் (NFDC) தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்பட டி.வி.டி க்களும், விற்பனைக்கு உள்ளன. சினிமா சார்ந்து என்ன வேண்டுமென்றாலும், இனி நண்பர்கள் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரியலாம். சினிமா சார்ந்த உங்கள் அணைத்து தேவைகளும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் நிறைவடையும் வகையில் அதனை செம்மைப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறோம். இன்னமும் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரியாத நண்பர்கள் உடனே வருகை தாருங்கள்.

பியூர் சினிமா புத்தகங்களை ஆன்லைன் மூலம் பெற: http://www.purecinemabookshop. com/index.php   முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.  தொலைப்பேசி: 044 42164630

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 18 October 2016 19:30
 

கவிதை: ஓவியன் பெரேடைப் பற்றி

E-mail Print PDF

கவிதை படிப்போமா?அந்த வெண்நீல நகரம் ஓவியவர்களுடையது
அங்குள்ள அனைவரும் கண்டதை புறக்கணித்து கண்டது மறைப்பதை தீட்டுபவர்கள்
இதனால் என்னவோ அவர்களுக்கும் அவர்கள் காணும் வஸ்துகளுக்கும் தீராத போர்
நிறக்கொலைகள், நிறப்படுகொலை, நிறவீக்கம், நிறப்பற்றாக்குறை என
நகரமே எப்போதும் பரபரப்போடு இருக்கும்
துப்பாக்கி குண்டுகள் விரையும் போது முத்தமிடும் காட்சியையும்
முத்தமிடும் போது ஆண்குறிகள் வெட்டுபடும் காட்சியையும் அவர்கள் தீட்டுவார்கள்
அந்த நகரத்தில் பெரேட் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன்
பகலின் இரத்தத்தை கோப்பையில் ஊற்றி குடிப்பவன் பெரேட்
அவன் தான் அந்த நகரத்தை கேன்வாஸில் உருவாக்கினான்
ஒருகணம் அவன் யோசித்திருக்ககூடும் பெரேட் ஆகிய நான் இருப்பது ஓவியத்திற்குள்ளா
நீலப்பெண் பனிக்கால நாய் போல மஞ்சள் ஆணுடன் பிணைவதை அவன் தீட்டியிருக்கிறான்
சிவப்பு நிற பெருங்கடலின் மீது ஊறும் எறும்புக்கப்பலில்
அந்த எறும்புக் கப்பலில் இருக்கும் நீலப்பெண்னின் உதடுகளில்
புரோட்டான் நியுட்ரான் மேற்கொண்ட காதலை தீட்டியிருக்கிறான்
அந்த நியுட்ரானின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை பற்றித் துல்லியமாக தீட்டியிருக்கிறான்
எங்கோ அட்ரீனல் கற்பூரம் கொழுந்துவிட்டு எரிகிறது
காட்டுத்தீயைப் போல கற்பனையை வாளியில் அள்ளி அணைக்க முயற்சிக்கிறார்கள்
அது பெரேடின் வீடு தான்
ஓவியத்திற்குள் இருக்கிறது கற்பனையின் கனவுகளின் கையொப்பங்கள் பல
வெளியே என்ன இருக்கிறது என கேட்டால் பெரேட் சொல்லுவான்
ஒன்றுமே இல்லை என இரவின் மார்புகளில் தலையை புதைத்துக்கொண்டே


(சால்வடார் டாலிக்கு )

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 18 October 2016 19:39
 

வாசிப்பும், யோசிப்பும் 205: தமிழினியை நினைவு கூர்வோம்!..

E-mail Print PDF

தமிழினி ஜெயக்குமாரனின் நிதமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18. தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே.

அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே  தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.

தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அவரது சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில்யில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.

தமிழினி என்ற பெயரில் முகநூல் அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.  பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது.  படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.

Last Updated on Tuesday, 18 October 2016 01:16 Read more...
 

ஆய்வு: வாழும் தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா - (தமிழ்நேயம் இதழை முன்வைத்து)

E-mail Print PDF

கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர் அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி) கோயம்புத்தூர் - 18. -தமிழகம் நன்கறிந்த பாவலராகவும் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடுபவராகவும் இன்று நம்மிடையே வாழ்ந்து வருபவர்; ம.இலெனின் தங்கப்பா (08.03.1934). பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பாவலர், படைப்பாளர், தமிழ்ப்போராளி எனப் பல தளங்களில் பயணிப்பவர். பன்மொழி அறிஞர் இளமையிலேயே தன் தந்தையாரிடம் தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் அறிந்து கொண்ட இவர் இன்றுவரை அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இவர், கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ்இலக்கியம் கற்பித்தார். இளமைக்காலத்தில் ஆங்கிலத்தை விரும்பிக்கற்றார். இயல்பாகவே இயற்கை எழிலில் மிகுந்த நாட்டம் கொண்டவராதலால் 'ஷெல்லி', கீட்ஸ், வோர்ஸ்வொர்த் ஆகியவர்களின் பாடல்கள் இவரை ஈர்த்தன.

இயற்கை நலம்:

இவரது பாடல்களில் இயற்கை, தமிழர்நலம், சுற்றுச்சூழல், வாழ்வுநலம், விழிப்புணர்வு, மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இவரது இயற்கை ஈடுபாட்டிற்குச் சான்றாக ஒரு பாடல்,எளிமையும், இனிமையும் இயற்கையழகும் பயின்று வருவதைக் காணலாம். (த.நே.45,g.4,5)

“விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே.”- (ப.66)

இயற்கையோடு இயைந்த வாழ்வே உயரியவாழ்வு என்பது இவர் கருத்து. மாணவர்களுக்கு இயற்கை அழகையும், சுற்றுச்சூழலைப் பற்றிய புரிதலையும் உணர்த்தும் முறையில் விடுமுறை நாட்களில் மிதிவண்டியில் மாணவர்களோடு பயணம் மேற்கொண்டார்.

Last Updated on Sunday, 16 October 2016 21:00 Read more...
 

உரைநடைச்சித்திரம்: மருமகள் அல்ல... மகள்!

E-mail Print PDF

--தனது மனைவியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழுத்தாளர் தீவகம் இராசலிங்கம் எழுதிய கவிதை இது. -

--தனது மனைவியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழுத்தாளர் தீவகம் இராசலிங்கம் எழுதிய  உரைநடைச்சித்திரம். -

மருமகள் அல்ல... மகள்!

எனக்காக வாழவேண்டும் என்ற
எந்தப் பிரார்த்தனையும்
இல்லாது நின்ற எனது கணப்பொழுதுகளில்
நானும் அவளும் இணைபிரியாதவர்களாக...!

இன்று...அவளுக்கு அகவை அறுபத்தியெட்டு!

கடந்த ஆவணி 31இல், திருமணநாள் நாற்பத்தியெட்டு!

எனக்கான கடமைகள் எதுவோ?
அவற்றை அவள்...
தனக்கானதாக எடுத்துக் கொண்டவைதான்
இன்றைய பொழுதின் எனது வெற்றிகள்!

Last Updated on Sunday, 16 October 2016 20:50 Read more...
 

தமிழினியின் உயிர்க் கொடை!

E-mail Print PDF

தமிழினி ஜெயக்குமாரன்அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். மறைந்த விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினியின் சுயசரிதை சிங்கள மொழியில் வெளிவந்து, தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு  இலங்கையில் அதிகளவில் விற்பனையான நூலாக சாதனை படைத்திருக்கிறது. அந் நூலைக் குறித்த சிங்கள வாசகர்களது கருத்துக்களோடு ஒரு கட்டுரையை எழுதி இணைத்திருக்கிறேன்.

இப் புத்தக வெளியீடு, 2016.05.13 அன்றும், மற்றும் கலந்துரையாடல்கள் கொழும்பு, Sri Lanka Foundation Institute, ஹொரண, நகர மண்டபம், கண்டி புத்தகக் கண்காட்சி, ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனம், கொழும்பு தேசிய நூலக மண்டபம், சர்வதேச புத்தகக் கண்காட்சி போன்ற பல இடங்களில் இப்போது வரையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. இந் நிகழ்வுகளில் இலங்கையின் பல முக்கியமான எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகளோடு, பதிப்பாளர் திரு.தர்மசிறி பண்டாரநாயக்க, மொழிபெயர்ப்பாளர் சாமிநாதன் விமல், தமிழினியின் கணவர் திரு.ஜெயக்குமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருக்கின்றனர். கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கள், இந் நூல் தொடர்பான நேரடி மற்றும் சமூக வலைத்தள கலந்துரையாடல்களின் போது பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்


‘இதை ஏன் எழுத வேண்டும்? என என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். என்னை எழுத ஊக்குவித்தது ஒரே ஒரு பதில்தான். அது, நான் உயிராக நேசிக்கும் மக்களிடம், எனது குரல்வளைக்குள் சிறைப்பட்டிருக்கும் சில உண்மைகளை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்பதாகும்.’

இலங்கை சமூகத்துக்கு விலை மதிப்பற்ற கொடையாகக் கருதப்படுகிறது முன்னாள் போராளியும், புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாகவுமிருந்த தமிழினி எழுதிய அவரது வாழ்க்கைச் சரிதத்தின் சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பு. இந்திய காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்த ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ தொகுப்பானது,  ‘Thiyunu asipathaka sevana yata’ எனும் தலைப்பில் திரு.சாமிநாதன் விமலினால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 260 பக்கங்களில், எழுத்தாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொகுப்பே அண்மைக்காலமாக இலங்கையில் அதிகம் விற்பனையான சிங்கள மொழி புத்தகமாக அறியப்பட்டுள்ளது. சுரஸ பதிப்பகத்தால் வினியோகிக்கப்படும் இத் தொகுப்பானது, ஒரு மாதத்துக்கு இரண்டு பதிப்புக்களென அச்சிடப்படுகிறது எனும்போது, இப் புத்தகம் சிங்கள மொழி வாசகர்களை எந்தளவுக்கு ஈர்த்துள்ளதென்பதை அறியக் கூடியதாக இருக்கிறது.

Last Updated on Friday, 14 October 2016 23:22 Read more...
 

ஆய்வு: தீவிரவாதமும் தீக்கோழி மனோபாவமும்

E-mail Print PDF

எழுத்தாளர் க.நவம்“அழுதேன்….! அவனையும் அவனது தாய் தந்தையரையும் நினைத்து, உண்மையில்…. நான் வாய்விட்டு அழுதேன்!”
ஒன்ராறியோவின் ஸ்றத்றோய் (Strathroy) என்னுமிடத்தில், ஆரன் ட்றைவர் (Aaran Driver)  என்னும் வாலிபன் காவல் துறையினரால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு, தற்போது பிரான்ஸில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் கனடியக் குடிமகளான கிறிஸ்ரியான் ப்பூட்ரோ (Christianne Boudreau)  இப்படித்தான் சொல்லியழுதாள்! ஆரன் ட்றைவரின் கொலையின் மூலம் பெருந்தொகையிலான உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் தவிர்க்கப்பட்டமை கனடியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஆனால் இருவருடங்களுக்கு முன்னர், சிரியாவில் இஸ்லாமியதேச தீவிரவாதக் குழுவொன்றுடன் இணைந்து போராடி உயிரிழந்த, தனது 22 வயது மகனான டேமியன் கிளயமனைப் (Damian Clairmont) பறிகொடுத்த தாயான கிறிஸ்ரியான் ப்பூட்ரோவைப் பொறுத்தவரை, ஆரன் ட்றைவரின் கொலை அவளுக்கு இன்னொரு அவலச் செய்தி! “என்னையும், எனது மகனையும் குடும்பத்தையும் போலவே, ஆரன் ட்றைவரையும் அவனது குடும்பத்தையும் கனடிய அரசு அனாதரவாகக் கைவிட்டுவிட்டது!” வளரிளம் பருவத்துச் செல்வங்கள் பலவும், வழி தவறிப்போய் மாண்டழிவதற்குக் கனடிய அரசின் கையாலாகாத்தனமும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் ஒருவகையில் காரணங்கள் என அத்தாயானவள் முன்வைக்கும் வாதங்கள் வெறுமனே அலட்சியம் செய்யப்படக் கூடியனவல்ல!

24 வயதுடைய ஆரன் ட்றைவரது தந்தையார் ஒரு வான்படை அலுவலராகப் பணியாற்றியவர். தந்தையாரது பணியின் நிமித்தம் ஆரன் ட்றைவர் ஒன்ராறியோ, அல்பேர்ற்ரா ஆகிய மாகாணங்களில் வசித்தவர். 2014இல் கனடியப் பாராளுமன்றில் தாக்குதல் நடத்திய மைக்கல் ஸேய்ஹஃப் ப்பிப்போவையும் (Michael Zehaf-Bibeauv) பயங்கரவாத நடவடிக்கைகளையும் சமூக ஊடகங்களில் விதந்து பாராட்டியவர். தம்மை ஓர் இஸ்லாமியராகச் சுய பிரகடனம் செய்தவர். இஸ்லாமியதேச தீவிரவாதிகளை ஆதரித்து, அவர்களோடு தொடர்பில் இருந்தவர். விளைவாக, 2015இல் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர், கணினியோ கைத்தொலைபேசியோ பாவிக்கக்கூடாதென்ற நீதிமன்ற உத்தரவுடன், கண்காணிப்பின் கீழ் காலம் கழித்தவர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்றத்றோயிலுள்ள தமது இருப்பிடத்தின் நிலக்கீழறையில் இரகசியமாக வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்து, சனசந்தடி மிக்க ஒன்ராறியோ நகர் ஒன்றில் அதனை வெடிக்க வைக்கவென ஆரன் ட்றைவர் ஆயத்தமாயிருந்தார். தனது நோக்கத்தை வெளியிடும் காணொளி ஒன்றையும் பதிவுசெய்தார். இத்தகவலை அறிந்த அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினர் (FBI), கனடிய ஆர்சியெம்பியினருக்கு (RCMP) இதனைத் தெரியப்படுத்தினர். ஆகஸ்ட் 10, 2016 புதன்கிழமை ஆரன் ட்றைவர் தமது குண்டுத் தாக்குதற் திட்டத்தை நிறைவேற்றப் புறப்பட்ட தருணம், ஒன்ராறியோ காவல் துறையினருடன் இடம்பெற்ற மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Last Updated on Friday, 14 October 2016 23:06 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்! - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்! - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துத் தெருக்களில் 'டபுள் டெக்கர் பஸ்'கள் ஓடித்திரிந்தன. எழுபதுகளின் இறுதிவரையில் ஓடியதாக ஞாபகம். கே.கே.ஸ். வீதிவழியாக மானிப்பாய் வரையில் அவ்விதமோடிய 'டபுள் டெக்கரில்' சில தடவைகள் பயணித்திருக்கின்றேன். 'டபுள் டெக்கரில்' பயணிக்கையில் எனக்கு எப்பொழுதுமே மேற்தட்டில் பயணிப்பதுதான் விருப்பம். 'டிக்கற்' எடுத்ததுமே மேலுக்கு ஓடிவிடுவேன். மேல் தட்டிலிருந்தபடி இருபுறமும் விரியும் காட்சிகளைப்பார்த்தபடி, அவ்வப்போது பஸ்ஸுடன் உராயும் இலைகளை இரசித்தபடி செல்வதில் அப்பொழுது ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்தது.

'டொராண்டோ'வில் உல்லாசப்பிரயாணிகள் நகரைச்சுற்றிப்பார்ப்பதற்காக இவ்விதமான 'டபுள் டெக்கர்' பஸ்களை இன்னும் பாவிக்கின்றார்கள். அவற்றைப்பார்க்கும் சமயங்களிலெல்லாம் அன்று யாழ்ப்பாணத்தில் 'டபுள் டெக்கரி'ல் பயணித்த பால்ய காலத்து அனுபவங்கள்தாம் நினைவுப் புற்றிலிருந்து படம் விரிக்கும். 'டபுள் டெக்கரில்' பயணிப்பதைப்பற்றி ஏன் துள்ளிசைப்பாடகர்கள் 'டபுள் டெக்கரில்' பஸ்ஸில் போனேனடி!' என்று  பாடல்கள் எதுவும் எழுதவில்லை என்று இவ்விதமான சமயங்களில் தோன்றுவதுண்டு.

'டபுள் டெக்கர்' பஸ் என்றதும் ஞாபகத்துக்கு வரும் இன்னொரு விடயம். நண்பரொருவர் மானிப்பாய்ப்பக்கமிருந்து வருபவர். அவரது High school sweet heart' ஒருவர் யாழ் வேம்படியில் படித்துக்கொண்டிருந்தார். இவர் என்ன செய்வாரென்றால் பாடசாலை முடிந்து அந்தப்பஸ்ஸில் பயணிக்கும் அந்தப்பெண்ணைப்பார்ப்பதற்காக, அவரது கவனத்தைக் கவர்வதற்காக யாழ் பொது சனநூலகத்துக்குச் சென்று , காத்திருந்து, பாடசாலை முடிந்து அந்த  பஸ்ஸில் பயணிப்பார். ஒருபோதுமே நூலகப்பக்கமே செல்லாத நண்பன் இவ்விதம் நூலகம் சென்றது அக்காலத்தில் எமக்கு வியப்பினைத்தந்தது. பின்னர்தான் உண்மை புரிந்தது. ஆனால் அவரது முயற்சி அவருக்கு வெற்றியளிக்கவில்லை.  இவ்விதம் யாழ்ப்பாணத்து 'டபுள் டெக்கர்'களில் பல காதல் காவியங்களும் நிகழ்ந்ததுண்டு :-) காதல் காவியங்கள் எல்லாமே தோல்வியில் முடிபவைதாமே. :-) அந்த வகையில் நண்பரின் காதலும் காவியமாகிவிட்டது. :-)

Last Updated on Friday, 14 October 2016 22:08 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: கரிசல் இலக்கியத்திலிருந்து பயணித்து, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்! கயத்தாறில் தூக்கில் தொங்கிய கட்டபொம்மன் சிலையான கதையை தெரிந்துகொள்ளுங்கள்!

E-mail Print PDF

இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்வள்ளுவர் கம்பன்   இளங்கோ  பாரதி  முதலான முன்னோடிகளை  நாம்  நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான்  அவர்கள்  என்று ஓவியங்கள் உருவப்படங்கள்  சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.   இவர்களில் பாரதியின் ஒரிஜினல் படத்தை  நம்மில்  பலர் பார்த்திருந்தாலும்,  கறுப்புக் கோர்ட் வெள்ளை தலைப்பாகை தீட்சண்யமான   கண்களுடன் பரவலாக அறிமுகம்பெற்ற  படத்தைத்தான் பார்த்து வருகின்றோம். அந்தவரிசையில் வீரபாண்டிய  கட்டபொம்மனை  நடிகர் திலகம்  சிவாஜியின்  உருவத்தில்   திரைப்படத்தில்  பார்த்துவிட்டு  அவரது சிம்ம கர்ஜனையை கேட்டு வியந்தோம். பிரிட்டிஷாரின்  கிழக்கிந்தியக்கம்பனிக்கு  அஞ்சாநெஞ்சனாகத் திகழ்ந்து  இறுதியில் தூக்கில்  தொங்கவிடப்பட்ட   வீரபாண்டியகட்டபொம்மன்  மடிந்த  மண்  கயத்தாறைக் கடந்து 1984  இல்   திருநெல்வேலிக்குச்  சென்றேன். கட்டபொம்மன்  தூக்கிலிடப்பட்ட   அந்தப் புளியமரம்   இப்பொழுது அங்கே இல்லை. கட்டபொம்மன்   பற்றிய  பல கதைகள்  இருக்கின்றன.  அவன் ஒரு தெலுங்கு மொழிபேசும் குறுநில மன்னன்  என்றும்   வழிப்பறிக்கொள்ளைக்காரன்   எனவும் எழுதப்பட்ட   பதிவுகளை  படித்திருக்கின்றேன்.  இவ்வாறு கட்டபொம்மனைப் பற்றிய  தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு   முன்பே எனது  இளம்பருவ  பாடசாலைக்காலத்தில்  இலங்கை  வானொலியில்  வீரபாண்டிய  கட்டபொம்மன்   திரைப்படத்தில்  சக்தி  கிருஷ்ணசாமியின் அனல்கக்கும்  வசனங்களை சிவாஜிகணேசனின்  கர்ஜனையில்  அடிக்கடி   கேட்டதன்பின்பு- அந்த  வசனங்களை  மனப்பாடம்செய்து  பாடசாலையில்  மாதாந்தம்  நடக்கும் மாணவர்  இலக்கிய மன்ற  கூட்டத்தில்   வீரபாண்டிய கட்டபொம்மன்  வேடம்  தரித்து நடித்தேன்.  ஜாக்சன்  துரையாக நடித்த  மாணவப்பருவத்து  நண்பன்  சபேசன்  தற்பொழுது   லண்டனிலிருக்கிறான். இடைசெவலைக்   கடந்துதான்   திருநெல்வேலிக்குப்போக   வேண்டும். வழியில் வருகிறது கயத்தாறு.  அந்த இடத்தில்  இறங்கி கட்டபொம்மன்   சிலையைப்பார்த்தேன்.   பாடசாலைப்பருவமும்   வீரபாண்டிய  கட்டபொம்மன் திரைப்படமும்  நினைவுக்கு  வந்தன.  அவ்விடத்தில் அந்தச்சிலை  தோன்றுவதற்கு  முன்னர்  மக்கள்  தாமாகவே  ஒரு நினைவுச்சின்னத்தை   எழுப்பியிருந்தார்களாம். எப்படி...?

Last Updated on Friday, 14 October 2016 19:38 Read more...
 

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் கவனத்துக்கு...

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் கவனத்துக்கு...'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து  வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it - பதிவுகள் -

Last Updated on Friday, 14 October 2016 19:50
 

தீபாவளிச் சிறப்பு சிறுதை. மாயாண்டியும் முனியாண்டியும்

E-mail Print PDF

- வே.ம.அருச்சுணன் – மலேசியா

மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும்  தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர்.

“காளி...இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்.... நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் மாயாண்டி கேட்கிறார்.

“புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? பல வருசமா தீபாவளி விருந்து நிகழ்ச்சிய நடத்தி வரோம். இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது  சந்தோசமா ஆட்டுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். சந்தோசமா ஆடி பாடி மகிழனும். நாம கோயில் கட்டிப் பத்து வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் படையல் போட்டு அமர்க்களப்படுத்திடனும் தலைவரே.இதுதான் என்னோட ஆசை” கோவில் செயலாளர் காளி பெரிய எதிர்பார்ப்புடன் கூறுகிறான்.

“பத்தில்ல காளி.... இருபது கிடாக்கள வெட்டி நம்ம கம்பம் மட்டுமல்லாம...சுற்று வட்டாரத்துல இருக்கிற ஏழைபாளைகளுக்கெல்லாம்     பெரிய அளவில பத்தாமாண்டுக் கோவில் திருவிழாவையும் தீபாவளி விருந்தையும் தடபுடலா விருந்து வெச்சு அசத்திடுவோம் அசத்தி.....!” தலைவர் மாயாண்டி  உற்சாகமாகப் பேசுகிறார்.

“இந்த வட்டாரத்தில, இதுவரையிலும் யாரும் நடத்திடாத அளவில மிக விமர்சியா தீபாவளி விருந்தை  நடத்திக் காட்டுவோம் காளி” மீசையை வேகமாக முறுக்கிவிடுகிறார் தலைவர்.

“தலைவரே....உங்கப் புண்ணியத்தாலே வருசா வருசம் கோவில்ல தீபாவளி விருந்துல  சுவையான ஆட்டுக் கறியோட வயிறாரச் சோறு சாப்பிட முடியுது. என் புருசன் இறந்த பிறகு நான் ஒண்டியா.... உழைச்சு சின்னஞ்சிறுசுகளா இருக்கிற என்னோட ஐந்து புள்ளைங்களக் காப்பாற்ற பாடு இருக்கே அந்த முனியாண்டி சாமிக்குத்தான் தெரியும்.நீங்க மவராசனா இருக்கனும் சாமி”

Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 203: எழுத்தாளர் சொக்கன் முற்போக்கிலக்கியவாதிகளிலொருவர்!

E-mail Print PDF

எழுத்தாளர் சொக்கன்சொக்கனின் 'சீதா' நாவல் (வீரகேசரி பிரசுரம்)- யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் வருடாந்த நிகழ்வான 'கலையரசி 2016' விழா மலருக்காக, எழுத்தாளர் சொக்கனைப்பற்றிச் சுருக்கமாக எழுதிய கட்டுரையிது. -


ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் பலர், ஆசிரியர்கள் பலர் காத்திரமான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர். அவர்களில் சொக்கன் என்றழைக்கப்படும் கலாநிதி கந்தசாமி சொக்கலிங்கம் அவர்களுமொருவர். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் , நல்லூரை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்தவர் சொக்கன்.  யாழ் ஸ்ரான்லி கல்லுரியில் இடைநிலைக்கல்வியைக்கற்ற இவர் பின்னர் தமிழ் வித்துவான், இளநிலை, முதுகலை ஆகிய பட்டங்களுடன் கெளரவக் கலாநிதி பட்டங்களையும் பெற்றவர். யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகப்பணியாற்றியவரிவர்.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் சிறுகதை, நாவல், நாடகம் , இலக்கிய ஆய்வு என சொக்கனின் பங்களிப்பு பரந்து பட்டது. தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், சைவ மதத்துக்கும் மிகுந்த பங்களிப்பு செய்திருக்கின்றார் சொக்கன். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் 'தமிழ்மாமணி', இந்துக் கலாச்சார அமைச்சின் 'இலக்கியச்செம்மல்' , அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் 'மூதறிஞர்' பட்டத்தினையும், விடுதலைபுலிகள் அமைப்பு வழங்கிய மாமனிதர் பட்டத்தையும்  பெற்றவர்..

இவரது 'கடல்' சிறுகதைத்தொகுப்பு 1972ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசினைப்பெற்றுக்கொண்டது. 'வீரத்தாய்', 'நசிகேதன்', 'நல்லூர் நான் மணிமாலை', 'நெடும்பா' ஆகிய கவிதைத்தொகுதிகள், 'சிலம்பு பிறந்தது', 'சிங்ககிரிக் காவலன்' ஆகிய நாடகங்கள், 'சீதா', 'செல்லும் வழி இருட்டு' ஆகிய நாவல்கள் மற்றும் 'ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' (முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக எழுதப்பட்ட ஆய்வு நூல்) ஆகியவவை அவரது இலக்கிய வரலாற்றைச்சிறப்பிப்பவை.

Last Updated on Monday, 10 October 2016 05:46 Read more...
 

சிறுகதை : என்றென்றும் அவளோடு

E-mail Print PDF

சுரேஷ் அகணிசிக்காகோ  ஓ ஹரே சர்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 10:40க்குப் புறப்பட்ட அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம்  ரொறன்ரோ நோக்கி;ப் பறந்து கொண்டிருந்தது.

“முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு எனது நண்பன் குமாரினை சந்திக்கப் போறேன் என்று நினைக்க மகிழ்ச்சியாகவும், மிகவும் நெருங்கிப் பழகிய நண்பன் ஒருவனுடன்  கடந்த முப்பத்தாறு வருடங்களாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்திட்டன் என்று நினைக்க குற்ற உணர்வும் என் மனதைப் போட்டு உறுத்துது” என்று புலம்பிக் கொண்டு விமானத்தில் இருக்கையில் இருந்தவாறு தனது இளமைக்கால நினைவுகளை மனதில் மீளோட்டம் செய்து கொண்டிருந்தான் சுதன். அவனோடு பயணம் செய்து கொண்டிருந்த மனைவி ரேகா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். விமானத்தின் பறப்பு வேகத்தையும் மேவிய வேகத்துடன் கடந்த கால நினைவுகள் சுதனின் மனதில் அலையலையாக எழுந்தன……………

யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரித் தொகுதியில்  அமைந்து எண்ணற்ற கலைத்துறை மாணவர்களையும்  ஒருசில விஞ்ஞான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் அனுப்பி வரும் சாதனையால் சாவகச்சேரி இந்துக்கல்லூரி என்று எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு முதன்மைநிலைக் கல்லூரியாக விளங்கும் கல்லூரியில் தரம் நான்கு முதல் சாதாரண தரம் வரை ஒன்றாகப் படித்தவர்கள் சுதனும், குமாரும். அவர்களின் வீடுகள் கல்லூரியிலிருந்து எதிர்த்திசைகளில் பத்து மைல் தூர இடைவெளியில் இருந்தபோதும் கல்லூரியில் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள்.

சாதாரணதரக் கல்விக்குப் பின்னர் உயர்தரத்தில் சுதன் உயிரியல் துறைக்கும், குமார் கணிதத்துறைக்கும் சென்று படிக்க வேண்டியிருந்ததால் எற்பட்ட பிரிவினைக் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது இருவரும் திண்டாடியவர்கள். உயர்தர வகுப்பிலும் இரசாயன பாடத்துக்குச் சுதனின் வழிகாட்டலும், பௌதீகப் பாடத்திற்கு குமாரின் வழிகாட்டலும் பெற்றுக் கொண்டு இருவரும் தத்தமது துறைகளில் சிறப்பாகப் படித்தார்கள்.

உயர்தரப் பரீட்சையில் சுதன் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கும், குமார் பேராதனைப் பொறியியல் துறைக்கும் அனுமதி பெற்றார்கள். பல்கலைக்கழகம் செல்வதற்காகக் காத்திருந்த காலத்தில் சாவகச்சேரியில் புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியரான சிரோன்மணி ஆசிரியரிடம் பிரத்தியேகமாகச் சென்று ஆங்கிலம் படித்தார்கள். இவர்களைப் போன்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற பல மாணவர்களும் அந்த வகுப்புக்கு வந்திருந்தார்கள். ஆங்கிலம் கற்பதற்கு மேலாக அங்கு வந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தார்கள்.

Last Updated on Saturday, 08 October 2016 23:36 Read more...
 

’ரிஷி’யின் கவிதைகள்: சுவடு அழியும் காலம்…

E-mail Print PDF

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

1. மண்ணாந்தை மன்னர்கள்'

யாரோ கையில் கோலைக் கொடுத்துவிட்டு
காலணாக் கிரீடத்தையும் சூட்டிவிட்டார்கள்.
கேட்கவேண்டுமா கர்வத்துக்கு?
ஆசானாகத் தன்னைக் கற்பிதம் செய்துகொண்டுவிட்ட மண்ணாந்தையொன்று
பேசலாகாப் பேச்செல்லாம் பேசிமுடித்து
நீசத்தின் உச்சத்தில் நின்றபடி
கெக்கலித்துக்கொண்டிருந்தது.
கொக்கரக்கோவென்று கூவியா
பொழுது விடிகிறது?
கடி துடி அடி மடி
படி இடி குடி முடி
யொவ்வொன்றுக்கும் உன் அகராதியில்
அதிகபட்சம் பத்து அர்த்தங்களென்றால்
அவர் அகராதியில் நூறுபோல்…
இவர் அகராதியில் ஆயிரத்திற்கு மேல்!
கவிதையின் அரிச்சுவடி தெரிந்திருந்தால்
கவியின் மனப்பிறழ்வுக்காய் முதலைக்கண்ணீர்
வடித்திருக்க மாட்டாய்.
கவிதையெழுதும்போதெல்லாம் கவிஞர் காதலனாய்
கிறுக்கனாய்
மாறுவது உனக்குத் தெரியுமா?

Last Updated on Monday, 10 October 2016 05:35 Read more...
 

கலையரசியின் கலைச்சங்கமம் 2016!

E-mail Print PDF

Last Updated on Friday, 14 October 2016 19:49
 

தமிழ் ஸ்டுடியோ: திரை எழுத்தாளர்கள் சுபாவுடன் ஒரு கலந்துரையாடல்

E-mail Print PDF

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!09-10-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக 100 திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ நடத்தி வருகிறது. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு துறையை சார்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் ஞாயிறு திரை எழுத்தாளர்கள் சுபா அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம். இவர்கள் இருவரும் கே.வி. ஆனந்தின் கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன் உள்ளிட்ட படங்களுக்கும், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதி, ஷங்கரின் ஐ படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்கள். திரைப்படங்களுக்கான திரைக்கதை எழுதுவது, திரைக்கதை அமைப்பு போன்றவை குறித்து நண்பர்கள் இவர்களுடன் கலந்துரையாடலாம்.

அனுமதி இலவசம்... அனைவரும் வருக...

அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com

Last Updated on Saturday, 08 October 2016 20:50
 

நூல் அறிமுகமும், இன்னிசை நிகழ்வும்!

E-mail Print PDF

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!அன்புடையீர். வணக்கம்,  எதிர்வரும்  22/10/2016  சனிக்கிழமை  மாலை  5.30  மணிக்கு   எமது  மகளும், ‘இசைக்கலைமணி’, ‘கலாவித்தகர்’  திருமதி. சேய்மணி. சிறிதரனின்  மாணவியுமான கார்த்திகா மகேந்திரனின் ‘Subramanya  bharathi and  other Legends of  Carnatic Music’ எனும்  நூலின்   அறிமுகமும், இன்னிசை  நிகழ்வும் Akshyis Events Hall, Southend  Road, East Ham, E6 2AA மண்டபத்தில் இடம்பெறும். அவ்விழாவில் தாங்களும்  வந்து  கலந்து  கொண்டு  சிறப்பிக்குமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்களின் வரவை எதிர்பார்த்து..
இ.மகேந்திரன்   (முல்லைஅமுதன்)
திருமதி.ஜெயராணி மகேந்திரன்
தொடர்பு  எண்: 208 5867783/ 0744 8138233

மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 08 October 2016 20:36
 

ஜெயலலிதா எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த வாசகர். பல்துறை ஆற்றலும் நினைவாற்றலும் மிக்கவர்

E-mail Print PDF

ஜெயலலிதாபதிவுகள்  இணையத்தில்  கிரிதரன்  குறிப்பிட்டிருப்பது போன்று இன்றைய  தமிழக முதல்வர்  செல்வி ஜெயலலிதா ஜெயராம் எழுத்தாளர்  மட்டுமல்ல,  அவர்  சிறந்த வாசகர்.  அத்துடன்  நல்ல நினைவாற்றலும்  பல்துறை ஆற்றலும்  மிக்கவர்.தினமும்  அவர்  நூல்கள் படிப்பவர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் சினிமாவுக்கு வந்தது  ஒரு  விபத்து. தொடர்ந்து கல்லூரியில்  படித்து  பட்டம்  பெறுவதற்கே  விரும்பியிருந்தவர். தாய் நடிகை சந்தியாவிடம், பத்மினி பிக்‌ஷர்ஸ் பந்துலுவும், சித்ராலய ஶ்ரீதரும்  கேட்டதனாலேயே  அம்மு  என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா  தமிழ்த்  திரையுலகிற்கு வந்தார்.

பந்துலுவின் எம். ஜி. ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஶ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை முதலான படங்களே அவருடை முதல் தமிழ்ப்பட வரிசையில் இடம்பெற்றவை.   1961 இலேயே அவர்  Epistle  என்ற ஒரு ஆங்கிலப்படத்திலும் நடித்தவர். 1961 - 65 காலப்பகுதியில் அவர் கன்னடம், ஹிந்தி, தெலுங்குப்படங்களில் நடித்துவிட்டிருந்தார். ஆனால், அவர் எம்.ஜி. ஆருடன் திரையுலகில் இணைந்து அரசியலுக்கு வராமல் விட்டிருந்தால், சிலவேளை சிறந்த எழுத்தாளராகியிருப்பார்.

Last Updated on Saturday, 08 October 2016 20:31 Read more...
 

கவிதை: மண்வீடு .....

E-mail Print PDF

- முனைவர் J..துரைமுருகன் உதவிப்பேராசிரியர், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -- பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பதிவுகள் இணைய இதழாளர்களுக்கு எனது இனிய வணக்கங்களும் வாழ்த்துகளும் .....தமிழ்நாட்டின் மாவட்டங்களுள் ஒன்றான நீலகிரியில் வசிப்பவன் நான். எங்களது குடும்பத்தார் இலங்கையின் மலையகத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் ......அதன் நினைவாக இந்தக்  கவிதை..... -


களிமண்ணால் சுவரேற்றி
கல்மூங்கிலால் கூரை அமைத்து
செம்மண் ஓடால்
கூரை வேய்ந்தது
எங்கள் வீடு .....
கடுங்குளிர் கனமழை
சுடுவெயில் அடர்பனியிலிருந்து
பாதுகாத்தது
எங்கள் வீடு ....
ஆந்தை அலற நரி ஊளையிட
யானை பிளிறி நிற்க புலியோ உறும
கரடியின் கத்தலில் இருந்தும்
முப்பதாண்டுகள் முழுமையாய் காத்த வீட்டை
முற்றாக மறந்து
கான்கிரீட் வீட்டுக்கு காலடிவைத்த போதும்
கலங்காமல்
வாழ்த்தி வழியனுப்பியது
எங்கள் வீடு .....

Last Updated on Friday, 07 October 2016 21:56 Read more...
 

கவிதை: அன்பு செலுத்த அருள்வாய்!

E-mail Print PDF

கவிதை: அன்பு செலுத்த அருள்வாய்!

எதோ ஒரு பயங்கரக் கனவு.
வாய்விட்டுக் கத்த
முயற்சிப்பதும் ,
முடியாமல்
திணறுவதும் புரிகிறது.
ஆனாலும்
எதுவுமே செய்ய முடியாத
இயலாமை.
பக்கத்தில்
அன்புக் கணவர்
அணைத்துக் கொள்ள,
குழந்தையானேன்.
கடுமையாய்
உழைத்து வீடு திரும்பும் முன்
உணவு தயார் செய்கையில் ,
தாயானேன்.'

Last Updated on Friday, 07 October 2016 21:57 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 202: என் குருமார்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

E-mail Print PDF

என்னைப்பொறுத்தவரையில் என் குருமார்கள் நூல்களே! அவற்றை எழுதிய எழுத்தாளர்கள், அறிஞர்களே! அவர்களின் இருப்பிடமான நூலகங்களே என் ஆலயங்கள்.
எனது குருமார்களின் உதவியினால் அறிவியல் , அரசியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப்பல்வேறு துறைகளையும் அறிய முடிந்தது.
ஐனஸ்டைன், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் ஃபிராய்ட், லெனின், மேரி கியூரி, ஸ்டீபன் ஹார்கிங், என் மனதைத்தொட்ட பல புனைகதை எழுத்தாளர்கள் எனப்பலரையும் அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள முடிந்தது. இந்த உலகை, இந்தப்பிரபஞ்சத்தை, உள்ளே விரிந்திருக்கும் உள்ளத்தை, அதன் ஆற்றலை , அண்ட வெளியில் பரந்து கிடக்கும் பிரமிப்பினையூட்டும் புதிர்களை இவற்றையெல்லாம் அறிய வைத்தவர்கள் எனது குருமார்களே!

"உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே" என்று என்னை நெஞ்சு நிமிர்த்தி ஆட வைத்தவர்கள் எனது குருமார்களே!

"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்"

என்று என் சிந்தையைப்புடம் போட்டவர்கள் எனது குருமார்களே!

"மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்"

என்று போதித்தவர்கள் என் குருமார்களே!

'இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்ந்திட' வைத்தவர்கள் என் குருமார்களே!

என் சிந்தனையை விரிவு படுத்திய, எப்பொழுதுமே விரிவு படுத்திக்கொண்டிருக்கும் குருமார்களே, இருப்பினைத் தெளிவுடன், நம்பிக்கையுடன் எதிர்கொண்டிட என்னை உருமாற்றிய குருமார்களே, இருப்பில் இன்பத்தைத்தந்த, தருகின்ற குருமார்களே! உங்களுக்கு என் நன்றி! மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

Last Updated on Friday, 07 October 2016 05:12
 

வாசிப்பும், யோசிப்பும் 201: ஜெயலலிதா என்னும் எழுத்தாளர் பற்றி......

E-mail Print PDF

ஜெயலலிதாவின் கட்டுரைத்தொகுப்பு.ஜெயலலிதா அன்று.'காவிரி தந்த கலைச்செல்வி' என்னும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பற்றிய தொடரொன்றின் முதற்பகுதியை யு டியூப்பில் பார்த்தேன். அந்நிகழ்வினைத்தொகுத்து வழங்கியவர் எழுத்தாளர் சுதாங்கன். அதில் ஜெயலலிதாவின் எழுத்து முயற்சிகளைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவார். .

எண்பதுகளில் 'எண்ணங்கள் சில' என்னும் தொடர் எழுதினார்  அதனைத் 'துக்ளக்' சஞ்சிகையில். எழுதியிருக்கின்றார்.

'தாய்' வார இதழில் 'எனக்குப் பிடித்த ஊர்', 'எனக்குப் பிடித்த வாத்தியார்', 'எனக்குப் பிடித்த ஓவியர்', 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்', 'எனக்குப் பிடித்த நாவல்', 'எனக்குப் பிடித்த தத்துவஞானிகள்' என 45 கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவையே 'மனதைத்தொட்ட மலர்கள்' என்ற நூலாக வெளிவந்தது. மேற்படி நூலில் தனக்குப் பிடித்த ஓவியராக லியனார்டோ டாவின்சியை குறிப்பிட்டிருக்கின்றார். தனக்குப் பிடித்த நாவலாக சார்ள்ஸ் டிக்கன்ஸின் 'டேவின் காப்பர்ஃபீல்ட்' டைக்குறிப்பிட்டிருப்பார். பதினாறு பக்கங்களில் நாவலைச்சுருக்கமாகக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பார்.

68இல் பொம்மை இதழுக்காக எம்ஜிஆரிடம் நேர் காணல் எடுத்திருக்கின்றார். 63 கேள்விகளை அவரே தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்திருக்கின்றார்.'இவை 'காவிரி தந்த கலைச்செல்வி' காணொளியில் கிடைக்கப்பெற்ற தகவல்கள்.

Last Updated on Thursday, 06 October 2016 22:11 Read more...
 

ஆய்வு: கேடாகிப் போன கேலிச்சித்திரம்!

E-mail Print PDF

“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்ததுஎழுத்தாளர் க.நவம்“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ  “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. அவுஸ்திரேலியாக் கண்டம் இன்று அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிக்க, இந்தச் சின்னஞ்சிறு கேலிச் சித்திரம் காரணமாகிவிட்டது! சர்ச்சைக்குரிய இந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்தவர் ப்பில் லீக் (Bill Leak) என்பவர். இதனால் ஒரு புறத்தில் கோபத்துடன் கிளர்ந்தெழுந்து, ஆர்ப்பரித்து நிற்பவர்கள் அவுஸ்திரேலியப் பழங்குடியினர். அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்புபவர்கள் சில அரசியல்வாதிகள், நடுநிலை ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், உள்ளூர் - வெளியூர் பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளுக்கான அமைப்பினர் - முகவர் நிலையத்தினர் எனப் பலதரப்பட்டவர்கள். இனவெறுப்பாளர்களுடன் மறுதரப்பில் கைகோர்த்து நின்று கள்ள மௌனம் காப்பவர்கள் வெள்ளை நிறப் பெரும்பான்மையினர். இடையில் நின்று இருபக்க மத்தளம் போல அடிபடுவோர் அரசயந்திரச் சாரதிகளும் சங்கூதிகளுமான அரசாங்கத்தினர்!

Cartoons எனப்படும் கேலிச் சித்திரங்கள் அதன் ஆரம்ப காலங்களில் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, பண்பாடு போன்ற அம்சங்கள் குறித்த வர்ணனைகளையும் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்தும் வரைபடங்களாக இருந்து வந்துள்ளன. அங்கதத்துடனும் நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும் நுட்பமான விமர்சனங்களை மிகுந்த புத்தி சாதுரியத்துடன் அவை முன்வைத்து வந்துள்ளன.

இந்த வகையில், மேற்கூறப்பட்ட கேலிச்சித்திரத்தை வரைந்த ப்பில் லீக், தனது கேலிச்சித்திரத்தைக் கண்டு, ‘புனிதமான இனிய பறவைகள் வீறிட்டெழுந்துள்ளன’ என்று குறிப்பிட்டிருப்பதுடன், இதன் விளைவாக ஆத்திரம் கொண்ட சமூக ஊடகப் பாவனையாளரிடம், காவல் துறையினர் தம்மைக் கையளிப்பது போன்ற ஒரு புதிய கேலிச்சித்திரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், பிரச்சினைக்குரிய அந்தக் கேலிச்சித்திரத்தைப் பிரசுரித்த பத்திரிகையின் ஆசிரியர், தமது செயலை நியாயப்படுத்தி இருக்கின்றார். பழங்குடி இனத்தவரின் அலுவல்களுக்கெனத் தமது பத்திரிகை கணிசமான மூலவளங்களை ஏற்கனவே அர்ப்பணித்துள்ளது எனவும், இந்தக் கேலிச்சித்திரம் அவர்களை இழிவுபடுத்தும் ஒன்றல்ல எனவும் அவர் வாதிட்டிருக்கின்றார்.

Last Updated on Thursday, 06 October 2016 19:00 Read more...
 

ஆய்வு: முனைவர். சூ. இன்னாசியின் திருத்தொண்டர் காப்பியத்தில் “பெண்ணலம்”

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை வாசிப்போம்!முன்னுரை:
இலக்கியமென்பது அறிவுறுத்தல், இன்புறுத்தல் ஆகிய இருபெரும் பணிகளைச் செய்யவேண்டும். இவ்விருபெரும் பணிகளைச் செய்யும் இலக்கியங்கள்தாம் வாழ்வாங்கு வாழ்கின்றன. பேராசிரியர் சூ. இன்னாசி அவர்கள் எழுதிய “திருத்தொண்டர் காப்பியம்” என்ற இலக்கியமும் அங்ஙனமே வாழ்வாங்கு வாழும் வகையில் உள்ளது. அவரது இக்காப்பியத்தில் பல இடங்களில் பெண்ணியம் சிறப்பிக்கப் பெறுகிறது. பெண் சிறந்தால் நாடு சிறக்கும். பெண்மையை சிறப்பு செய்ய தமிழ்க்கவிஞர்கள் பலர் பா இயற்றியிருந்தாலும், பெண்மை பெருமைப்பட வேண்டும் என்ற நன்நோக்கில், பேராசிரியர் முனைவர்.   சூ. இன்னாசி அவர்கள், “திருத்தொண்டர் காப்பியம்” என்னும் தம் காப்பியத்தில் “பெண்ணலம்” பீடுற்ற நிலையை அரிய பல உண்மைகள் வாயிலாக அழகாக, நயம்பட எடுத்துரைக்கின்றார்.

முனைவர் சூ. இன்னாசியின் பிறப்பு:
பேராசிரியர் சூ.இன்னாசி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சூசைபிள்ளை, லூர்தம்மாள் இணையருக்கு 1934 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 13ஆம் நாள் பிறந்தார். திருமயம், தேவகோட்டை ஆகிய ஊர்களின் பள்ளிகளில் பயின்று 1951இல் பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றார். பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியையும் முடித்து 1953இல் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். பணியாற்றிக் கொண்டே வித்துவான், தமிழ் இளங்கலை, முதுகலை போன்ற பட்டங்களையும் பெற்றார்.

கல்லூரிப்பணி:
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணி நியமனம் பெற்று முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1983ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கிறித்தவத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர்-தலைவராகப் பணியமர்த்தப் பெற்றார். 1993 வரை அங்குப் பணிபுரிந்தார். ஆசிரியர், ஆய்வாளர், படைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர். சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆளுமைகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பேராசிரியர் தமிழ்ப் புலத்தில் ஆய்வு செய்து முதுமுனைவர் (டி.லிட்) பட்டமும் பெற்றார்.

Last Updated on Thursday, 06 October 2016 18:46 Read more...
 

ஆய்வு: இன்னா நாற்பது காட்டும் அரசியல் நெறிகள்!

E-mail Print PDF

- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் கபிலர். இவர் சிவன், திருமால், பிரம்மன் முருகன் முதலிய நால்வரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் என்பதை அறிய முடிகிறது. இந்நூலில் அமைந்துள்ள நாற்பது பாடல்களிலும் 160  கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இந்நூலில் இடம்பெறும் அரசியல் நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

அரசன்
இன்னா நாற்பதில் அரசியல் நெறி அரசனையே மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அரசன் என்னும் சொல்லிற்கு  தமிழ் மொழி அகராதி இராசன் எப்பொருட்கு மிறைவன்,எழுத்து தானம் ஐந்தினொன்று,கார் முகிற் பா~hனம்,துருசு,பாணகெந்தகம்,முக்குவர் தலைவன்,வியாழன் என்று பொருள் கூறுகிறது.(பக்.113)
அரசன் என்பதற்கு க்ரியா அகராதி பரம்பரை முறையில் ஒரு நாட்டை ஆளும் உரிமையை பெற்றவர் என்றும் மiபெ என்றும் பொருள் கூறுகிறது.மேலும் அரசன் செய்யும் அரசாட்சியை ஆளுகை,நிர்வாகம் சரடந ழச சநபைn ழக ய மiபெ என்று பொருள் உரைக்கிறது. (ப.38)

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழமொழி.இதற்கு காரணம் மன்னது  நீதி ஆட்சி முறையில் தான்  மக்களது நல்வாழ்வு அடங்கும்.ஆட்சியின் உயர்வும் தாழ்வும் மக்களை நேரிடையாகப் பாதிக்கும் என்பதை மோசிகீரனார்,

நெல்லும் உயிரென்றே நீரும் உயிரென்றே
மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயிர் என்ப தற்கை
வேல்மிகு தானே வேந்தற்குக் கடனே      (புறம்.186)

என்ற பாடலின் மூலம் மக்கள் மகிழ்ச்சியுடனும்,செழுமையுடனும் வாழ்வதும,; பகை,பஞ்சம்,பிணி போன்றவற்றிலிருந்து காப்பதும் மன்னன் ஆகையால் நெல்லும் நீரும் உயிரன்று மன்னனே மக்களுக்கு உயிர் போன்றவன் என்கிறது.மேலும் புலி தன் குருளைகளை பேணுவதைப் போல அரசன் மக்களைப் பேணி காத்தான் என்பதை,

புலி புறங்காங்கும் குறளை போல
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப  (புறம்.42:10-11)

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.

Last Updated on Thursday, 06 October 2016 18:20 Read more...
 

தொடர்நாவல்: “ஒரு நம்பிக்கை காக்கப்பட்டபோது…! ”

E-mail Print PDF

அத்தியாயம் மூன்று:

ஆர்.விக்கினேஸ்வரன்அன்றய  இரவுப்பொழுது  விடியும்போது, என்  வாழ்விலும்  விடியல் மகிழ்ச்சி  தெரிந்த்து. பகல்பொழுது  திருமண வைபவத்தோடு  கழிந்தது.  நண்பன்  வீட்டுத் திருமணம் அல்லவா…! ஓடியோடி  வேலைபார்த்துப்  போதும் போதும்  என்று  ஆகிவிட்டது. செமையாக  உழுக்கு எடுத்துவிட்டார்கள். வேலைகளை முடித்து, குளித்துச்  சாப்பிட்டுவிட்டு, லாட்ஜில்  எனக்கென்று  ஒதுக்கிய  ரூமுக்கு சென்று, கட்டிலில்  விழும்போது  பத்துமணி  ஆகிவிட்டது. மாலாவின்  எண்ணுக்குப்  போன்  எடுத்தேன்.  மறுமுனையில் கலாவின்  அப்பா. “கலாவிடம் கொடுங்கள்….” எனச்  சொல்லவும்  முடியவில்லை. அதேவேளை,  என்மீது  அவர்கள்  மனதில்  தப்பான  எண்ணங்கள்  இருக்கும் பட்சத்தில், அதனை  நீக்கும் முகமாக  நான்  பேசவேண்டிய முதல் நபரே  அவர்தான்.  

ராமேஸ்வரத்தில்,  கலா வீட்டிலிருந்து  புறப்பட்டு  எனது  வீடு நோக்கிச்  சென்றது முதல், அங்கு நடந்த பிரச்சினைகள்.. ஹோமா நிலை, அதன் பின் ஓராண்டு கழித்து, ராமேஸ்வரம்  சென்று  அவர்கள் குடும்பம் பற்றி  விசாரித்தமை,  ஏமாற்றத்தோடு திரும்பியமை  அனைத்தையும் விபரமாகக்  கூறிவிட்டு,  பேச்சின்  கோணத்தைத்  திருப்பினேன். முக்கியமாக, மாலாவை இரவுவேளையில்  வியாபாரம் செய்ய விடுவது பற்றிய, மன விசனத்தைக்  கொட்டியபோதுதான், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவளுக்குத்  திருமணமான தகவலை  அவர் தெரிவித்தார். உள்ளூர  மகிழ்ந்தேன்…! அதையடுத்து, அவளின் கணவன் இரண்டு  மாதங்களுக்குள்ளாக, இறந்துபோனதையும்…, அவள் விதவையானதையும் தெரிவித்தார். உள்ளத்துள்  நெகிழ்ந்தேன்…!! இறுதியாக, அவளது கணவனை.. “அவளே கொன்றாள்..” என்றும், அதற்குக் காரணம் : அவனது தவறான  நடத்தையின்  உச்சக்கட்டம் என்றும், அதன் பொருட்டு – சிறைவாசத்தையும் அனுபவித்தாள் மாலா என்பதையும் தெரிவித்தார். உண்மையில்  அதிர்ந்து போனேன்…!!! அதைவிடக்  கொடுமையான  சம்பவம்  நான் கொடுத்திருந்த  என்வீட்டு  விலாசத்திற்கு, ஆரம்ப காலத்தில் கலா எழுதிய கடிதங்கள், மூன்று வந்துள்ளன. என்னுடைய  ‘ஹோமா’காலத்தில், வந்த இக் கடிதங்கள் அனைத்தையும் என் பெற்றோர், உறவினர் எல்லோரும் சேர்ந்து மறைத்து விட்டனர். அது மட்டுமன்றி, கலா குடும்பத்தார் யாவரும் ராமேஸ்வரத்திலிருந்து இடம் மாறியமை, மாறிச் சென்ற புது இடத்தின் முகவரி  உள்பட  யாவும் தெரிந்து வைத்துக்கொண்டுதான், என்னோடு  ராமேஸ்வரம் வந்து, கலா குடியிருந்த வீட்டுக்கெல்லாம் அலைந்து…..  அப்பப்பா…. எத்தனை  அழகாக நடித்து முடித்துவிட்டார்கள்.    அது மட்டுமல்ல.!  ‘அக்னி தீர்த்த’த்தில் நீராடி, எனக்காக அர்ச்சனைகள் செய்து…. சே…சே…..  கண்ணை மறைத்துக்கொண்டிருக்கும் மூட கெளரவம்.. கடவுள் முன்னும் ‘கபடநாடகம்’ புரியவைத்துவிட்டதா..

Last Updated on Wednesday, 05 October 2016 23:48 Read more...
 

ஆய்வு: பறை கொட்டிக் கூத்தும் ஆடி இன்புற்றிருந்த பண்டைத் தமிழன்

E-mail Print PDF

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பறை என்பதை ஆதிகாலம் தொடக்கம் இற்றைவரை தென் இந்தியத் தமிழ் நாட்டு மக்களும், சிறி - இலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களும் தம் இசைக் கருவியாகப் பாவித்து வருகின்றனர். பறை என்பதற்கு முரசு, முரசொலி, தட்டு, கொட்டு, மிடா, முரசடிப்பவர் என்றும் அகராதிச் சொற்கள் உள. பறை என்றால் 'அறிவித்தல்' என்ற பொருளும் உண்டு. இது தமிழரின் பாரம்பரிய இசைக் கருவியுமாகும். இது எல்லாத் தோல் இசைக் கருவிகளுக்கும் தாய்க் கருவியாகும். இதன் ஒலி அரைக் கி.மீ. தூரம் வரை சென்று அங்குள்ளோரைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.

ஆதிகாலத்தில் கூத்தாடல், பிண ஊர்வலம், கோயில் திருவிழா, விளையாட்டு நிகழ்ச்சிகள், அறுவடை காலத்தில் விழா நடத்துவதற்கும், பறவைகளைத் துரத்துவதற்கும், போர் காலத்தில் வெற்றி தோல்வி அறிவிக்கவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்டளைகள், செய்திகள். உத்தரவுகள் ஆகியன அறிவிக்கவும், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றிற்குப் பறையினைப் பெரும்பாலும் பாவித்தனர். மேலும், சுகப் பிரசவம் வேண்டிக் கோயில்களில் பறை முழக்குவதும் அன்றிலிருந்து இற்றைவரை காணக்கூடிய தெய்வ நம்பிக்கைக்குரிய ஒரு நிகழ்ச்சியாகும். இன்னும், ஒரு சிலர் கோயிற்; பூசை நிகழ்வின்போது தெய்வ உருவெடுத்துக் குறி கூறுவதையும் காண்கின்றோம். இதன்போது பறையை அடித்து அடித்து உருவேற்றுவர் பறையடிப்பவர்கள்.

பறை பசுவின் தோலால் ஆக்கப்பட்டது. அதை இரண்டு தடிகளால் அடித்து முழக்குவர். அதில் ஒரு தடி 28 செ.மீ. நீளமுடையது. மற்றத் தடி 18 செ.மீ. நீளமுடையது. இரு தடிகளும் மூங்கில் தடிகளாகும். பறையை நின்று கொண்டும், நடந்து கொண்டும், இருந்து கொண்டும் அடிப்பார்கள். பறையின் முரசறைவை 1. ஒத்தையடி என்றும், 2. தென்மாங்கு என்றும், 3. சாமியாட்டம் என்றும், 4. துள்ளல் என்றும், 5. உயிர்ப்பு என்றும் வுகுத்துக் கூறுவர்.

பறையில் பல்வேறுபட்ட பறைகள் உள்ளன. அவற்றில்  1. ஆரியப் பறை, 2. ஆறிருப் பறை, 3. உவகைப் பறை, 4. சாப் பறை, 5. வெற்றியின் பறை, 6. மீன்கோற் பறை, 7. மருதநிலப் பறை, 8. குறவைப் பறை, 9. தடாருப் பறை, 10. குறும் பறை, 11. கேற் பறை, 12. தடாரிப் பறை, 13. நிசாளம் பறை, 14. தலைப் பறை, 15. பண்டாரப் பறை, 16. பான்றிப் படை,        17. முருகியம் பறை, 18. வெறியாட்டுப் பறை, 19. வீரணம் பறை, 20. பஞ்சமாசதம் பறை என்பவை ஒரு சிலவாகும்.

Last Updated on Thursday, 06 October 2016 18:15 Read more...
 

கவிதை: தமிழ்க் கனேடியனும் நானும்!

E-mail Print PDF

கவிஞர் திருமாவளவன்இன்று கவிஞர் திருமாவளவனின் நினைவு தினம்.  அவரது நினைவாக அவரது கவிதைகளிலொன்றான 'தமிழ்க்கனேடியனும் நானும்' என்னும் கவிதையினை இங்கு எமது வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.- ப்திவுகள் -


இருப்பு நிரந்தரமானதல்ல. இருக்கும் மட்டும் பலர் இதனை உணர்வதில்லை. மனிதர் உருவாக்கிய அமைப்பானது பொருளுக்கு முதலிடம் தருகிறது. அதுதான் இருப்பின் பயன் என்பதாக இருப்பினைச் சித்திரிக்கிறது. விளைவு? பொருள் தேடுவதே வாழ்க்கையாகப் பலருக்குப் போய் விடுகிறது. அதிலும் பொருள்மயமான மேற்குலகு நாடுகளின் சமுதாய அமைப்பு மானுட இருப்பினை அந்த அமைப்பின் சிறைக்கைதியாகவே ஆக்கி விடுகிறது. உழைப்பது இருப்புக்கு என்பதாக மாறி விட்டது. அவ்விதம் இருக்க விரும்புவோர், அதுதான் இருப்பின் நோக்கம் என்போர், அதுவே இருப்பின் பயன் என்போர் அவ்விதமே இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்தம் உரிமை. ஆனால் உண்மைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள் இருப்பினை இவ்விதம் எண்ணுவதில்லை. இவர்களை பொருள்மயமான இருப்பு என்றுமே சிறைப்பிடிப்பதில்லை. இந்த இருப்பினை இவர்கள் தம் இருப்புக்கேற்றபடி மாற்றிவிடுவதில் வல்லவர்கள்.

இவர்களைச்சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களைப்பார்த்தால் பரிதாபம். இவர்களைப்பார்க்குபோதெல்லாம் 'இந்தக் கலை, இலக்கியமெல்லாம் சோறு போடுமா? இவற்றால் எவ்வளவு உழைக்கிறாய்?' என்பதாகவே அவர்களது கேள்விகள், அனுதாபங்கள் மற்றும் ஆலோசனைகளெல்லாமிருக்கும்.

எனக்குத்தெரிந்த பலர் இங்கு வந்து பொருளியல்ரீதியில் உயர்ந்து தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். இன்னும் பலர் சொத்துகளைச்சேர்ப்பதிலேயே குறியாகவிருக்கிறார்கள். அவ்விதமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினைத்தருகிறது. மகிழ்ச்சி!   ஆனால் அவ்விதம்தான் எல்லாரும் இருப்பார்களென்று அவர்களெண்ணுவதுதான் நகைப்புக்கிடமானது.

மிகுந்த வேடிக்கை என்னவென்றால் தாம் உண்மையான கலை, இலக்கியவாதிகளாகத்தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும்பலர் கூடத்தம் சொந்த வாழ்வில் இவ்விதம்தானிருக்கின்றார்கள். இவ்விதமான நகல் கலை, இலக்கியவாதிகள் அசல் கலை, இலக்கியவாதிகளைச்சந்திக்கும்போது கலை, இலக்கியம் பற்றி உரையாடுவதில்லை. பொருள் பெருக்குவது பற்றியதாகவே அவர்களும் உரையாடலைத்தொடங்குவார்கள்.

இவர்களில் பலர் என்னைச்சந்திக்கும்போதும் 'பதிவுகள்' இணைய இதழைப்பற்றி ஆர்வமாகக் கேட்பார்கள். அப்படி என்ன ஆர்வமாகக் கேட்கின்றார்கள் என்கின்றீர்களா? அவர்களது கேள்வி இதுதான்: "பதிவுகள் நடத்துவதால் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?"

இந்நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமரர் திருமாவளவன் தனது கவிதையொன்றில் விபரித்திருக்கின்றார். கவிதையின் பெயர்: 'தமிழ்க்கனேடியனும் நானும்'.

Last Updated on Wednesday, 05 October 2016 20:50 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 200: மீண்டு வருக!

E-mail Print PDF

தமிழக முதல்வரின் சிறு வயதுத்தோற்றம்.தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாதமிழக முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் கட்சி பேதமின்றி அவர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டுமென்று வாழ்த்தியிருக்கின்றனர். இது தமிழக அரசியலில் காணாத விடயம். அரசியல் நாகரிகம் இன்னும் சிறிதாவது இருப்பதை எடுத்துக்காட்டும் பண்பு இவ்வாழ்த்துதலில் தெரிகிறது. "மகிழ்ச்சி!"

தமிழக முதல்வர் பற்றிய அரசியல்ரீதியிலான கருத்துகளுக்கு அப்பால் அவர் தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப்பெற்ற வசீகரம் மிக்க தலைவர். அந்த மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொள்ள வேண்டும். அவரை உயிருக்குயிராக விரும்பும் அந்த மக்களுக்காக அவர் விரைவில் பூரண சுகமடைந்து வருவார் என்று எதிர்பார்போம். ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல் சுகவீனம் சாதாரணமானதல்ல. அது பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் வெளியில் வராது மறைக்கப்பட்டிருந்தாலும், அவர் கடுமையானரீதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதுதான் அது. ஏதாவது தொற்றுநோயாகக்கூட இருக்கலாம். சவால்களை எதிர்த்து மீண்டு வரும் ஆளுமை மிக்கவர் அவர். இம்முறையும் மீண்டு வருவாரென்று எதிர்பார்ப்போம்.

பெண் சிசுக்கொலையைத்தடுக்க எடுத்த நடவடிக்கை,  மாணவர்களுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவும் திட்டங்கள். போன்ற அவரது திட்டங்கள் வறிய மக்களுக்கு மிகவும் உதவும் திட்டங்கள் என்பதில் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை.

Last Updated on Wednesday, 05 October 2016 20:17 Read more...
 

முள்ளிவாய்க்கால் அவலம் பற்றிய தீர்க்கமான அரசியல் ஆய்வு! தேசம் ஜெயபாலனின் நூல் குறித்துப் பாராட்டு.

E-mail Print PDF

முள்ளிவாய்க்கால் அவலம் பற்றிய தீர்க்கமான அரசியல் ஆய்வு! தேசம் ஜெயபாலனின் நூல் குறித்துப் பாராட்டு.    ‘2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரபாகரனின் மாவீரர் தின உரையிலிருந்து இன்றைய காலகட்டத்தை உபயோகித்து, தமிழர்களுடைய போராட்ட வரலாற்றையே ஆராய்ந்து பார்த்துள்ளது இந்த நூல். தமிழ் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர்நது தமிழர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு என்ற ஈழப்போராட்டத்தின் பங்குதாரர்கள் பற்றியும் பக்க சார்பில்லாமல் இந்நூலில் அழகாகச் சொல்லியிருக்கிறார் ஜெயபாலன். ஜனநாயகத்திற்காக, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தார்மீகப் போராளியின் பதிவாகவே இந்நூலை நான் பார்க்கிறேன்’ என்று அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்கள் அண்மையில் கிழக்கு லண்டன் றினிற்ரி மண்டபத்தில் இடம்பெற்ற ‘வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற நூல் அறிமுகத்தின்போது அந்நூல் குறித்துப் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வி.சிவலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் ‘2008 – 2009 ஆண்டுக் காலப்பகுதியில் மக்கள் அனுபவித்த அவலங்களை வெளிக்கொண்டுவருவதற்கு ஜெயபாலன் பதிவு செய்ய முயற்சித்து இருக்கிறார். ஜெயபாலன் என்ன அரசியல் நிலைப்பாட்டில் இருந்தார் என்பது இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களுக்குத் தெரியாது. ஆனால் இதில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தேசியத்தைக் கைவிட்டு சிறீலங்காவின் தேசியத்துள் கரைந்து போய்விடவேண்டும் என்றுதான் கூறுவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எரிச்சோல்ஹைம் போன்ற வெளித்தரப்பு அதிகாரங்களின் ஏவலாளிகளுக்கு கொடுக்கின்ற மதிப்பை எங்களுடைய புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்கவில்லை என்பது எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்கின்றபோது எழுகின்ற வினா. ஆனாலும் ஜெயபாலன் உண்மையிலேயே ஜனநாயகத்திலும் இவ்வாறான கருத்துப் பரிமாற்றத்திலும் ஆர்வமுடையவர் என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்றும் தெரிவித்தார்.

‘இந்த நூல் அறிமுவிழாவில் அரசியல் ஆய்வாளரும், ஒரு பேப்பர் ஆசிரியருமான கோபி ரத்தினம் பேசுகையில்: இது மிகவும் முக்கியமானதொரு பதிப்பு. இது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அலட்சியப்படுத்த முடியாதது. உடனுக்கு உடன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவ்வப்போது தொகுத்து மிகவும் நிதர்சனமான உண்மையயை சந்தேகத்திற்கு இடமின்றி பதிவு செய்துள்ளது இந்நூல். தனித்துவமான மனிதனாக இருந்து ஜெயபாலன் ஒரு பார்வையாளனின் பதிவாக இந்நூலைக் கொண்டுவந்துள்ளார்’ என்று தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 05 October 2016 19:03 Read more...
 

ஆய்வுக்கட்டுரை: தமிழ் மெய்யியல் ஓர் அறிமுகம்

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை: தமிழ் மெய்யியல் ஓர் அறிமுகம்நான் ஏன் பிறந்தேன்? என்னைப் படைத்தது யார்? இப்படிப் படைப்பதற்கான காரணம் என்ன? இறைவன் உண்டா? இல்லையா? இறைவன் தான் என்னைப் படைத்தான் என்றால் இத்தனைத் துன்பங்களை ஏன் படைக்கவேண்டும்? இவ்வாறாக வாழ்க்கைக்கு அடிப்படையான கேள்விகளை உள்ளடக்கியது மெய்யியல்.

தத்துவம் என்ற சொல் மெய்யியல் என்பதற்கு நிகரான சொல் இல்லை. தத்துவம் என்பது அது நீ, நீயே பிரம்மம். என்று பொருள் தரும் வடசொல். மெய்யியல் என்பது இதிலிருந்து வேறுபட்டது. வாழ்வின் அடிப்படை என்ன? மனித துயரங்களுக்கு எது காரணம்? என்று ஆராய்வது.  வள்ளுவர் கூறுவது போல 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும்' (355) – 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது' (423) - மெய்யியல். மெய்ப்பொருளியல் என்பதன் சுருக்கம் மெய்யியலாகும்.

மேற்கத்திய  மெய்யியலாளர்  மெய்யியல் என்பதை   நான்கு  கூறுகளாகப்  பகுக்கின்றனர். 1.   நுண்பொருளியல்    (meta pshyics),  2.  அளவையியல்   (logic),   3. அறவியல் (ethics),      4. அழகியல் (esthetics) என்பனவாகும். வாழ்வின் அடிப்படை எது என்று ஆராய்வது நுண்பொருளியல். ஆய்வுக்கான தர்க்கம் பற்றியது அளவையியல். அறவியலும், அழகியலும் வாழ்வின் பிற கூறுகள். மேற்கத்திய மெய்யியல் கூறுகள் இவை என்றால் இந்திய மெய்யியலையும் இதே கூறுகளை உள்ளடக்கி ஆய்வு செய்யமுடியும். இவ்வகையில் தமிழ் மெய்யியலையும் ஆய்வுசெய்யலாம்.

தமிழ் மெய்யியல் கருத்துகள் பழந்தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் உலகாய்த சிந்தனைகளைக் கொண்டுள்ளதை இனங்காணமுடியும். உலகாய்தமாவது 'கடவுள், மாயை, பிறவிசுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாய்தம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், உலக உடன்பாட்டுச் சிந்தனையும் கொண்டது.  இந்தச் சிந்தனை வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது' (உலகாய்தம், வீக்கிப்பிடியா).   இவற்றை முன்வைத்து இவ் ஆய்வு அமைகிறது.

Last Updated on Tuesday, 04 October 2016 19:11 Read more...
 

சிறுகதை: மௌனம் தொடர்கிறது

E-mail Print PDF

சிறுகதை: மௌனம் தொடர்கிறதுஅப்பா வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து கடன் முடித்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிக் கொண்டே வேஷ்டி உடுத்தி, நெற்றியில் பட்டையிட்டு, பொட்டு வைத்து, காவித்துண்டை பெல்ட்டுப் பட்டையாகக் கட்டிக்கொண்டு 6 மணிக்கு கோயிலுக்குச் சென்றவர் சரியாக ஒருமணி நேரம் கழித்துத் தான் வீடு திரும்புவார்.

போகும் போது “மலர், கனகா எழுந்திரிங்க. பொம்பளப் பிள்ளைங்களுக்கு ஆறு மணிக்கு மேல என்ன தூக்கம்?” என்று குரல் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். என்றாலும் கூட இருவரும் அப்பாவின் காலடி சத்தம் கேட்டுப் பாய், தலையணைகளை சுருட்டிக் கொண்டு படுத்திருந்த சுவடு தெரியாமல் எழுந்து ஆளுக்கொரு திக்காக ஓடினார்கள்.

“கனகா . . . . . கனகா .
. . . .”
“என்னப்பா”. குளியலறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் கனகா,

“மலர் . . . . . மலர் . . . . .”

"இந்தா வந்துட்டேம்பா…”             படித்துக்கொண்டிருந்தவளைப் போல பாவணை செய்து கொண்டிருந்த மலர் புத்தகமும் கையுமாக அப்பாவின் முன் வந்து நின்றாள்.

“படிச்சிட்டுருக்கியா. சரிசரி அம்மா எங்கன்னு சொல்லிட்டுப் போ”

“அம்மா அடுப்படில உங்களுக்கு இட்லி ஊத்திட்டிருக்காங்கப்பா”.

“உங்கப்பன் தலையைக் கண்டதும் தானே உங்கம்மா அடுப்படியில கால வைப்பா” என்று மலரிடம் திட்டிவிட்டு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்தார் அப்பா. பத்து நிமிடம் கூட கழிந்திருக்காது அடுப்படியைப்பார்த்துக் குரல் கொடுத்தார்.

Last Updated on Tuesday, 04 October 2016 18:59 Read more...
 

ஆய்வு: ஞானக்கூத்தன் கவிதைகளில் படிமங்களும் பிற உத்திகளும்

E-mail Print PDF

ஆய்வு: ஞானக்கூத்தன் கவிதைகளில் படிமங்களும் பிற உத்திகளும்புதுக்கவிதைகளின் படைப்பு முறை உத்திகளில் படிமம் ஒன்றாகும்.  ‘Image’ என்னும் சொல்லில் இருந்து உருவெடுத்தது இதுவாகும். கவிஞர் எஸ்ரா பவுண்டு புனைவியக்கக் கொள்கையினை எதிர்த்த இளம் கவிஞர்களை ஒன்று திரட்டி ஒரு அமைப்பை நிறுவினார். பிற கவிஞர்களிடமிருந்து அவர்களை பிரித்துக் காட்டுவதற்காக படிமக் கவிஞர்கள் (Imagist) எனப் பெயர் சூட்டினார். படிமக் கவிஞர்களின் கொள்கையாக பின்வருவனவற்றை வெளியிட்டார். இக்கொள்கை படிமத்தின் இயல்பினை வரையறைகளை விளக்கும் வகையில் அமைகின்றது.

“1. பேச்சு வழக்குச் சொற்களும் கவிதையில் இடம்பெற வேண்டும், கவிதைக்கு அலங்கார சொல்லைவிட சரியான சொல்லே தேவை.
2. ஒரு கவிஞன் தனது தனித்தன்மையை மரபைவிடக் கட்டற்ற கவிதையில்தான் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே, யாப்பிலக்கண அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களைவிட கருத்துத் தொனியின் அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களே சிறந்தவை. அவையே கவிஞனின் மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
3. கடினமாக இருந்தாலும், சரியாக எழுதப்படும் கவிதையில் தெளிவின்மையோ, கருத்துறுதியற்ற தன்மையோ இருக்காது”

என்பது படிம இயக்கத்தின் முக்கியமான கோட்பாடுகள் ஆகும். தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமம், அங்கத உத்திகளுக்கு அடுத்து அதிகமாக கையாளப்படும் உத்தியாக அமைகின்றது. ஞானக்கூத்தன் கவிதைகளில் இடம்பெறும் படிமங்களை பின்வரும் நிலையில் பிரிக்கலாம்.

1.இயற்கைப் படிமங்கள்
2.செயற்கைப் படிமங்கள்
3.காட்சிப் படிமங்கள்
4.சர்ரியலிசப் படிமங்கள்


என்று வகைப்படுத்தி ஆராயலாம். பிற உத்திகளாக குறியீடும், முரண்களும், இருத்தலியமும் அமைந்திடுகின்றன.

Last Updated on Tuesday, 04 October 2016 18:39 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 199 : இலங்கைச்சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள்!

E-mail Print PDF

அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரம்"கூற்றுவனின் வாசலிலே
குற்றமற்றவர்
சுற்றமிழந்து இன்னுமெத்தனை
நாள் வாடுவதோ ?
"

அண்மையில் அகால மரணமடைந்த பின்னர்தான் பலருக்குக் கேலிச்சித்திரக்காரர் (Cartoonist) அஸ்வின் சுதர்ஸன் பற்றி தெரியவந்தது. அவரது படைப்புகள் மீது பலரின் கவனமும் திரும்பியது. என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

அவரது இங்குள்ள கேலிச்சித்திரம் (நன்றி: தமிழ்வின்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிந்த ராஜபக்சவின் கையிலிருந்த ஆட்சி அமைதியான முறையில் மைத்திரி பால சிறிசேனாவின் கைக்கு மாறியது. ஆனால் இன்னும் அரசியல் கைதிகளின் நிலை மாறாதது ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் ஒருசேர எழுப்புகிறது. ஏன் என்ற கேள்விக்குத் தர்க்கரீதியான விடையேதும் கிடைக்கவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டன. அரசை எதிர்த்துப்போரிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமெல்லாம் அஞ்சாத அரசு எதற்காகச் சந்தேகத்தின்பேரில் கைது செய்தவர்களையெல்லாம் ஆண்டுக்கணக்காக இன்னும் சிறைகளில் வைத்திருக்கின்றது? உண்மையில் அவர்களைச்சிறைகளில் வைத்துப் பராமரிப்பதால் அரசுக்கு வீண் செலவுதான் ஏற்படுகிறது.

இவ்வளவு காலமும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட அவ்வரசியல் கைதிகள் பலர் சொல்லமுடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பார்கள். அவர்களை வெளியில் விட்டால் மேலும் பல குற்றங்களை அரசுக்கு எதிராக அவர்கள் கூறுவார்கள் என்று அரசு நினைக்கின்றதோ? பின் எதற்காக அவர்களை இன்னும் சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றார்கள்?

Last Updated on Sunday, 02 October 2016 06:03 Read more...
 

மதிப்புரை: மரபுக் கவிதைப் பாவலன் தேசபாரதி-தீவகம் வே.இராஜலிங்கம்

E-mail Print PDF

 மரபுக் கவிதைப் பாவலன் தேசபாரதி-தீவகம் வே.இராஜலிங்கம்“தீவகம் தொட்டுத் துறைபனிச் சாரலும்
நாவகம் தந்தானெம் நம்நாடன் – பாவகத்துத்
தண்ணார் தமிழ்மணக்கச் சந்தமொடு தேனூற
விண்ணார் புகழ்பரப்பும் வேள்! – (காரையூரான்)


‘தீவகம் இராஜலிங்கம்’ எனத் தமிழ் எழுத்தாளர் உலகம் போற்றும் ஈழத் தமிழ்க் கவிஞரைக் கனடா ‘கதிரொளி’  வானொலி ‘ தேசபாரதி’ என விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. இலக்கியத் துறையிலும் ஊடகத்துறையிலும் அனுபவம் உடையவராகக் கனடாவில் புகலிடம் கொண்ட இராஜலிங்கம் அவர்கள், ‘நம்நாடு’ எனும் வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து அப்பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி (1992-2003) ஓய்வு பெற்றவர். இராஜலிங்கம் அவர்கள், தாயகத்திலும் கனடாவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை அரங்குகளிற் பங்குபற்றித் தம் கவிதைகளை அரங்கேற்றியதோடு, பலகவி தை நூல்களை வெளியிட்டுத் தமிழ்த் தாயகப் பற்றும், தமிழ்மீ தான தணியாத தாகமும், சமய ஈடுபாடுங்கொண்ட தேசபாரதி அவர்கள,; ஈழத்திலும், தென்னிந்தியாவிலும் நூற்றுக்கும் மேற் பட்ட திருத்தலங்களுக்குத் தான் மேற்கொண்டதிருத்தலப் பயணங்களின் பயனாக ஆயிரக்கணக்கான பாடல்களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார். இதுவரை இவராற் பத்தாயிரம் பாடல்கள்வரை இயற்றப் பட்டுள்ளன. இவற்றைவிட இன்னும் மூன்று கவிதைப் படைப்புகள் நூலாக்கம் பெறத் தயார்நிலையில், வெளியீட்டுக்காகக் காத்துக்கிடக்கின்றன.

ஏற்கனவே வேவியூ(டீயலஎநைற) பெரியபிள்ளையார் ஆலயத்தின்மீது பாடப்பட்ட பாடல்களைக் கலைமாமணி உன்னி கிருஷ்ணன் அவர்களின் தலைமையிலான இசையாளர்களைக் கொண்டு பாடுவித்து ஆலய நிர்வாகம் இசைத்தட்டாக வெளியிட்டுள்ளனர். அதுபோன்றே ‘திருப்பொலி ஐயனார்’ மீது பாடிய பஜனைப் பாடல்களை இசையமைப்பாளர் முரளியின் இசையமைப்பில் ஈழத்துச் சாந்தன், அவரது பிள்ளைகள் ஆகிய இசைக் குழுவினரின் குரலிசையில்பாடி, இரண்டாவது இசைத்தட்டையும் வெளியிட்ட பெருமைக்குரியவர.; இவற்றுடன், ‘நிலப்பூக்கள்’ ‘அகவைப்பா’, ‘சரவணை கிழக்கு பள்ளம்புலம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்’, ‘திருப்பொலி ஐயனார் அருட் பாமாலை’, ‘தெய்வமும் தீந்தமிழும்- கீர்த்தனைப் பாடல்கள்’ (இது பல தெய்வப் பாடல்களின் தொகுப்பாகும்) என்பனவும் இதுவரை வெளிவந்த தேசபாரதியின் கவிதை நூல்கள் ஆகும்.

Last Updated on Saturday, 01 October 2016 05:06 Read more...
 

பார்வைக் குறைபாடுகளும், தீர்வுகளும்!

E-mail Print PDF

பார்வைக் குறைபாடுகளும் பரந்திடும் தீர்வுகளும்!சுரேஷ் அகணிவெளியே உள்ள ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பாகக் கண் உள்ளது. மனிதர்களின் கண்கள் முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. ஐம்புலன்களில் ஒன்றான பார்த்தலுக்கு உதவுவது கண். நமது உடலில் உள்ள கண்ணின் தொழிற்பாடு எவ்வாறுள்ளது என்பதையும், அதன் தொழிற்பாடு எவ்வாறாக ஒரு நிழற்படக் கருவியோடு ஒப்பீடு செய்யப்படுகின்றது என்பதையும் பற்றி எமது கல்வியில் விஞ்ஞானப் பாடங்கள் ஊடாகவும், இயற்பியல் போன்ற உயர்தரப் பாடங்கள் ஊடாகவும் படித்திருக்கின்றோம். ஒளியின் உதவியுடன் படம் பிடிக்கப்படும் பொருட்களின் உருவம் மனதில் பதிவுசெய்யப்பட்டு மூளையால் உணரப்படுகின்றது. கண்ணில் உள்ள பல பாகங்கள் இணைந்து இதனைச் சாத்தியமாக்குகின்றன. விம்பத்தை அல்லது பிம்பத்தை தேக்கி வைத்திருப்பது விழிப்படலம் (Comea) ஆகும். கண்ணில் உள்ள கண்மணிக்குள் ஒளிக்கதிர்கள் திசைமாற்றி கண்மணிக்குப்  பின்னால் உள்ள குவி ஆடியைச்  சென்றடைகின்றன. விழித்திரை அல்லது ஒளிமின்மாற்றி (Retina) எனப்படும் பாகம் தலைகீழ் உருவத்தைப் பதிக்கின்றது. பதிக்கப்படும் இந்த உருவம் மூளைக்குள் மின் விசைகளாகச் செலுத்தப்பட்டு விருத்தி செய்யப்படுகின்றது. கண் இமைகள் கண்களின் மேற்பரப்பில் வீசப்படும் காற்றின் திசையைத் திருப்பிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலன் உணர்வு தொடர்பான விடயங்களைத் தொழிற்படுத்தும் நரம்புத் தொகுதியின் பகுதிகளை இணைத்து உணர்வுத் தொகுதி (Sensory System) என்று அழைக்கப்படுகின்றது. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய ஐம்புலன்களும் உணர்வுத்தொகுதியால் உணரப்படுகின்றன. கண்ணால் பார்க்கக் கூடியவற்றை உணரப்படக்கூடிய பகுதி ஏற்புப் புலம் (Receptive field) எனப்படும். கண்ணும் பார்வைக்குரிய புலன் உணர்வுத் தொகுதியின் முக்கியமான உறுப்பாகவே கருதப்படுகின்றது.

குருட்டுத்தன்மை (Blindness) என்பது உடல் அல்லது நரம்புப் பாதிப்பினால் ஏற்படும் பார்வை உணர்வுக் குறைவு ஆகும். வடிவங்களை, எழுத்துக்களை, பார்க்கக் கூடிய ஒளியை முற்றாக உணரமுடியாத நிலையாகக் குருட்டுத்தன்மை உள்ளது. மருத்துவரீதியாக ஒளியுணர்வுத்தன்மை (No light Perception) என்றும் சட்டரீதியாக சட்டக் குருட்டுத் தன்மை(Legal Blindness) என்றும் குருட்டுத்தன்மை விபரிக்கப்படுகின்றது. பார்வைக் கூர்மையின் அளவு 20/200 அல்லது 6/60 இனைவிடக் குறைவாக இருத்தலை குருட்டுத் தன்மையாகக் கொள்ளப்படுகின்றது. சாதாரண பார்வை கொண்ட ஒருவர் 200 அடி (60 மீற்றர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடியதை சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவர் 20 அடி (6 மீற்றர்) தூரத்தில் இருந்தே தெளிவாகப் பார்க்க முடியும் என்பதே இதன் விளக்கம் ஆகும். பார்வைப் புலம் (Visual Field) 180 பாகைக்குப் பதிலாக 20 பாகைக்குள் கொண்டிருக்கும் ஒருவரும் குருட்டுத் தன்மை உள்ள ஒரு மாற்றுத்திறனாளர் ஆகக் கருதப்படுகின்றார்.

Last Updated on Sunday, 09 October 2016 06:20 Read more...
 

ஆரம்பிக்கிறது சர்வதேச புத்தகக் கண்காட்சி. செல்ல நீங்கள் தயாரா?

E-mail Print PDF

“A reader lives a thousand lives before he dies, said Jojen. The man who never reads lives only one.”
― George R.R. Martin, A Dance with Dragons, Chapter 34

இலங்கையின் இலக்கிய மாதமான செப்டம்பரின் 'சர்வதேசப் புத்தகக் கண்காட்சி' 16.09.2016 முதல் கொழும்பில், BMICH (Bandaranaike Memorial International Conference Hall - பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்) இல் ஆரம்பமாகவிருக்கிறது. இக் கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடரவிருக்கிறது.

இத் தினங்களில் தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதோடு, கண்காட்சியின் இறுதி நாளான 25 ஆம் திகதி, இரவு 12 மணி வரைக்கும் கடைகள் திறந்திருக்கும். இம் முறை 410 புத்தகக் காட்சியறைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் வாசகர்களுக்காக புத்தகங்களை வழங்க தயாராக உள்ளதோடு, அவற்றுள் 60 விற்பனை நிலையங்கள் வெளிநாட்டு பதிப்பகங்களுக்கானவை. அனுமதிக் கட்டணம் ஒருவருக்கு 20/= மாத்திரமே. அத்தோடு இங்கு விற்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 20% கழிவு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வருடம்தோறும் நடைபெறும் மிகப் பெரிய அளவிலான புத்தகக் கண்காட்சி இதுவாகும். ஆகவே தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இக் கண்காட்சியில் ஒன்று கூடுவர். எங்கும் சன நெரிசலும், புத்தகங்களுமே நிறைந்திருக்கும் இக் கண்காட்சியில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள சில வழிமுறைகளை அனுபவ ரீதியில் குறிப்பிட விரும்புகிறேன்.

Last Updated on Sunday, 18 September 2016 21:55 Read more...
 

நேர்காணல்: சுங்கை பட்டாணி க.பாக்கியம் அவர்களின் நேர்காணல்

E-mail Print PDF

சுங்கை பட்டாணி க.பாக்கியம்மலேசிய இலக்கியத்தின் இன்றியமையாத  சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், , முன்னாள் கெடா மாநில எழுத்தாளர் கழக தலைவர். கெடா மாநிலம் தந்த தமிழ்ச்சுடர் சுங்கைபட்டாணி க. பாக்கியம் விருதுகட்கு அப்பாற்பட்டவர்.பெண் எழுத்துக்களை மலேசிய வரலாற்றில் பதிவு செய்தே ஆகவேண்டும் என மூன்று தலைமுறை  எழுத்தாளினிப் பெண்களை தேடித் தேடிக் கண்டடைந்தவர். வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. பெண்ணிலக்கியவாதிகளுக்காக இவர் வெளியீடு செய்த ஆய்விலக்கிய நூல் வரலாற்றில் இவர் பெயர் சொல்லும்.  வள்லலார் மண்டபம் எழுப்பிய பெருமைமிகு பெண்மணி. நேர்காணல்: கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -

கேள்வி 1:மலேசிய பெண் படைப்பாளர்களில் முதன் முதலில் நூல் வெளீயீடு செய்தவர் என்ற பெருமையை பெற்றவர் நீங்கள். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா?

மலேசியத் தமிழிலக்கியத் துறையில் தொடர்ச்சியான நூல் வெளியீடுகள் நடைபெற்ற காலகட்டம் 1970/1980பதுகள்  எனலாம். மலேசியத் தமிழிலக்கிய வரலாற்றில் இலக்கியத் தரம் உச்சத்திலிருந்த காலகட்டம் அது. தரமிக்க இலக்கியவாதிகள் வரிசை பிடித்திருந்த காலம். பத்திரிகைத் துறையிலும் இலக்கியப் பரிச்சயமிக்க பத்திரிகை ஆசிரியர்கள் சூழ இருந்தனர். இலக்கிய போட்டிகளை அன்றைய  தமிழ்ப் பத்திரிகைகள் முன்னெடுத்தன. சிங்கப்பூர் இலக்கிய களமும் தன் பங்குக்கு தரமிக்க இலக்கியத்தை அடையாளம் காட்ட முனைப்புடன் செயல்பட்டது.

மலேசிய சிங்கப்பூர் இலக்கியவாதிகளின் தரம் எவ்வித பாரபட்சமுமின்றி அடையாளம் காணப்பட்டு இலக்கிய வெளியில் பதிவு செய்யப்பட்டது. பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகள் என இலக்கியவாதிகளை உருவாக்கவும், அடையாளப் படுத்தவும் பெரிதும் முனைப்புக் கொண்டு செயல்பட்ட மிக உன்னதமிக்க அந்தக் காலகட்டத்தில் நூல் வெளியீடுகளும் ஆங்காங்கே பரபரப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தன. இலக்கியப் போட்டிகளில் வெற்றி கொள்ளும் முனைப்பும், தரத்தை உயர்த்திக் கொள்வதில் விளைந்த முயற்சிகளும் அக்காலகட்டம் மலேசிய இலக்கியவானில் உதயம் கொண்ட பொற்காலம்.

அக்காலகட்டத்தில் பெண்ணிலக்கியவாதிகளில் பலர் இலக்கிய உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். ஆண் பெண் என்ற பேதமில்லாமல் தரத்தைப் பதிவு செய்வதில் உற்சாகத்தோடு செயல்பட்டிருந்தனர்.

அச்சூழலில், நூல் வெளியீடும் எண்ணம் என்னுள் துளிர் விடத் துவங்கியது. இலக்கியப் போட்டிகளில் வென்றதும் சிங்கப்பூர் இலக்கிய களத்தின் வழி அன்றைய பிரபல தமிழிலக்கியவாதிகளால் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுப் பெற்ற எனது சிறுகதைகள் என என்னுள் இலக்கியத் தாகம் ஊற்றெடுத்ததன் விளைவாக புத்தக வடிவில் பதிவு  செய்வதில் முனைப்புக் கொண்டேன்.

Last Updated on Tuesday, 06 September 2016 20:10 Read more...
 

சிறுகதை: தெருச் சருகுகள்

E-mail Print PDF

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள். காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும் முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது. மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது. பசித்தது. ஏஜண்ட்காரன் எதையாவது சாப்பிடக் கொண்டுவருவான் என்ற மெல்லிய நம்பிக்கை மனதுக்குள் ஓடியது. ஆனால் நிச்சயமில்லை. விகாரையைத் தரிசிக்க வரும் யாராவது புண்ணியவான்கள் அவள் மேலோ அந்தக் குழந்தையின் மீதோ ஏதேனும் பரிதாபப்பட்டு உணவாக எதுவும் போட்டுவிட்டுப் போனால்தான் உண்டு. விரித்து வைத்திருந்த வெள்ளைத் துணியில் சில்லறைகள், பத்து, இருபது ரூபாய் நோட்டுக்கள் சேர்ந்திருக்கின்றனதான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஏதாவது வாங்கி வந்து உண்ணும் நப்பாசையும் உள்ளுக்குள் எழுந்தது. சாத்தியமில்லை. ஏஜண்ட்காரன் எங்கிருந்தாவது நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனது பார்வையைத் தாண்டிப் போய் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு தைரியமில்லை. போன வாரம் இப்படித்தான். பணம் ஏதாவது ஒளித்து வைத்திருக்கிறாளா என குமாரியின் ஆடையை அவிழ்த்துப் பார்த்தார்கள். அவளால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. என்ன செய்ய முடியும்? வீரு வீரென்று பிரம்பால் அடிவாங்குவதை விடவும் 'பாருய்யா பாரு..எங்கேயும் எதுவும் மறைச்சு வைக்கல' என்று கத்தி அவளே உடுப்பை அவிழ்த்துக் காண்பித்தாள். அன்று முழுக்க அவள் எதுவும் சாப்பிடவில்லை. அழுது கொண்டே இருந்தாள்.

பிணத்தின் மீது இலையான்கள் மொய்த்துக் கொண்டே இருந்தன. அது பிணம் என்பது இலையான்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டிருக்கிறது. இலையான்களால் எப்படியும் ஒரு பிணத்தை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இலையான்களால் மட்டுமல்ல. பிண வாடையை மோப்பம் பிடித்துத் தேடி வரும் நாய், பூனைகள் கூட பிணத்தை அடையாளம் கண்டு இழுத்துப் போக முயற்சிக்கும். அதனால்தான் புஷ்பமாலா பிணத்தைத் தனது மடியை விட்டு இறக்கவும் இல்லை. அங்கு இங்கென நகரவும் இல்லை. காசு போட்டுச் செல்லும் எவராலும் கூட அது பிணம்தான் என இன்னும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் சந்தேகப்படக் கூட இல்லை. வெறுமனே அசுத்தமான ஆடைகளைப் பார்த்துக் கொண்டு அசூசை பட்டுக்கொண்டு தூரத்திலிருந்து காசை விட்டெறிந்துவிட்டுச் செல்கிறார்கள். எவனாவது கண்டுபிடித்து விட்டால் அவளும் அவளது கூட்டமும் சிறையில் கம்பியெண்ண வேண்டியதுதான். அவள் இதற்கு முன்பும் சிறைக்குப் போயிருக்கிறாள். அப்பொழுது அவள் சிறுமி. கஞ்சா வைத்திருந்ததற்காக அவளது அப்பாவைக் கைது செய்து கொண்டு போயிருந்தார்கள். அம்மாவுடன் அவள் அப்பாவைப் பார்க்கப் போயிருக்கிறாள். பொலிஸார் அடித்து அப்பா செத்துப் போனதால் அப்பாவைப் பிணமாகத்தான் வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். புஷ்பமாலாவுக்கு எல்லாம் நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு அதுதான் பிரச்சினை. எதுவும் மறந்து தொலைய மாட்டேனென்கிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நினைவிருக்கிறது. அவளும் பல விஷயங்களை மறந்துவிட தீராது முயற்சிக்கிறாள். ஒருபோதும் முடியவேயில்லை. முக்கியமாக மாதந்தோறும் அவளது வீட்டில் கிடக்கும் பிணங்கள். பல நாட்கள் இரவுகளில் அவள் தூங்காமல் விழித்திருந்திருக்கிறாள். என்னதான் அவர்களின் வாயில் அலறிவிடாமல் இருக்க பழந்துணியைத் திணித்து அடைத்திருந்த போதிலும் அவர்கள் வாய்க்குள்ளேயே கதறும் சப்தம் அவளது கனவில் கூடக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

Last Updated on Tuesday, 06 September 2016 19:04 Read more...
 

சிறுகதை: வட்டி!

E-mail Print PDF

அமரர் எஸ். அகஸ்தியர்- எழுத்தாளர் அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 29. அவர் நினைவாக அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைந்த அகஸ்தியரின் சிறுகதை 'வட்டி' அவர் நினைவாகப்பிரசுரமாகின்றது. - பதிவுகள் -


‘தாரு வூட்டில? கதவைப் பூட்டிக்கிட்டிருக்கீங்கலே, எந்திரிச்சு வெளியே வாங்கலேன்?’

பாத்திமாதான் வந்து கரிக்கிறாள். காலங் காத்தால வேறு யார் இப்படி வருவது?

‘நான் கூப்புட்டுக்கிட்டே இருக்கேன். ஓத்தரும் பேசாம அப்புடியே அமுங்கிப் பேயித்திருக்கீங்கலே. அது என்னில தாண்டியம்மா குத்தம்...நான் சும்மா இரிக்கிய ஏலாம எண்ணிக் குடுத்துப்போட்டு இப்ப நாயா அலஞ்சு திரியிறனல்ல..? வூடு தேடியாந்து கூப்பிட்டாக்கா வந்து ஏனென்னும்  கேட்கிறதாக் காங்கலியே?  ஏய், தாரு வீட்டில, எந்திரிக்சு வெளியால வாங்கலேன்...’

பலகைக் கதவு திறபடுகிறது, வீட்டுப்பெண் மொட்டாக்குடன் வெளியே வந்தாள்.

‘ஏன்ரியும்மா இம்மட்டு நேரமா உள்ளுக்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க. செல்லம் பொழிஞ்சிக்கிட்டிருந்தீங்கலா?’

‘கோவிச்சசுக்காதையுங்க ராத்தா. புள்ளைங்கள வூட்டுல உட்டுட்டுக் கக்கூசுக்குப் பேயித்திற்று இப்பதான் வந்தன்’

பாத்திமாவுக்கு மனசு கொஞ்சம் இளகிற்று. ஆனாலும், அதுவே பின் கொதித்து வேறு உருவெடுத்துச் சாடியது.

‘ஏன். ‘அதெ’ இன்னும் கொண்ணாந்து குடுக்காம இரிக்கீங்க, எத்தனை தரமா அதுக்காவ நடக்கிறது?’

Last Updated on Thursday, 01 September 2016 17:21 Read more...
 

பயணம்: 'சூரியனை நோக்கி ஒரு பயணம் 2

E-mail Print PDF

8ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்    July 25, 2016

- மீராபாரதி - தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது பெரும் குறையாக இருந்தது.

நமது பொதிகளை வைத்துவிட்டு வெளியில் கிளம்பினோம். முதல் வேளை தொலைபேசிக்கு சிம் காட் ஒன்று வாங்குவது. இரண்டாவது இரவு உணவிற்கு மரக்கறி சாப்பாடு சாப்பிடக் கூடிய கடை ஒன்றைத் தேடுவது. வெளியில் வந்தவுடனையே வாசிலில் நின்ற விற்பனையாளர்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள். தாம் மதீனா பார்க்க கூட்டிச் செல்வதாகவும் எங்கே போகவேண்டும் எனக் கேட்டு நமது பயணத்தை தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடமிருந்து மெதுவாக நழுவி நமக்கு கிடைத்த மதீனா வரைபடத்தின் உதவியுடன் நடந்தோம்.

போகும் வழியில் சிறிய உணவுவிடுதி. அதன் உணவு விபரங்களைப் பார்த்தோம். தான்ஜின் என்ற உணவில் பல வகைகளும் மற்றும் முட்டைப் பொறியலில் பல வகைகளும் இதைவிட மாமிச உணவு வகைகளுக்கான விபரங்களும் இருந்தன. Tripadvisorஆல் சிபார்சு செய்யப்பட்ட விளம்பரமும் ஒட்டப்பட்டிருந்தது. சரி வேறு உணவு விடுதிகளை கண்டு பிடிக்க முடியாவிட்டால் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவோம் என நினைத்துக் கொண்டு சென்றோம். ஒரு வீதியில் நிறைய சனம். கடைகள் திறந்து வீதி முழுக்க பலவிதமான வியாபாரிகள் தமது பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவிதமான சாப்பாடுகளும் திறந்து விற்பனைக்கு இருந்தன. எந்தவிதமான  உணவு பாதுகாப்பு விதிகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஈக்களும் மனிதர்களைப் போல உணவுப்பண்டங்களை சுற்றி குமிந்து இருந்தன. புதிதாக  வரும் ஐரோப்பியர்களுக்கு அதுவும் தற்சமயம்  ஸ்பெயினின் அழகிய நகரங்களான மலக்கா சிவிலி என்பவற்றிலிருந்து  வருபவர்களுக்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் எம்மைப் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படி இருக்காது என நினைக்கின்றோம். நாம் கனடாவில் வாழ்ந்தபோதும் இந்த இடம் நமது ஊருக்கு வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

Last Updated on Thursday, 18 August 2016 18:50 Read more...
 

சிங்கள மொழிக் கவிதை: பூனையாகிய நான்…

E-mail Print PDF

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலிகவிதை பற்றிய மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
ஆதி முதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர்.

பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக் குட்டியைப் போல அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் குறுக்குப் புத்தி’, ‘மாறிக் கொண்டேயிருக்கும் பூனைக் குணம்’ ‘பூனையைப் போல சோம்பேறி’, ‘பூனையைப் போல பாவனை’ போன்ற வசவு வார்த்தைகளும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவர்களை நோக்கி ஏவப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

பெண்கள் பூனைகளாகின்றனர்; பூனைகள் பெண்களாகின்றனர். ஆண்களின் சந்தர்ப்பங்களும், உணர்வுகளுமே அதையும் தீர்மானிக்கின்றன. கீழுள்ள கவிதையின் தலைப்பை ‘அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அக உணர்வு’ எனக் கருதினாலும், கவிதையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் அவர்களுக்கும் எப்பொழுதும் பொருந்தக் கூடியன. இக் கவிதையை பெண்ணின் மன உணர்விலிருந்து வாசித்துப் பார்க்கலாம். பெண்களை வெறுப்பவர்கள், தாம் இஷ்டப்பட்ட பிராணியைத் தலைப்பிலாக்கி, கவிதையோடு பொருத்தி வாசித்துக் கொள்ளலாம். -சிங்கள மொழிக் கவிதை: பூனையாகிய நான்…

- தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப் போல என்னால் அழ இயலாது

உங்களிடம் கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம் என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப் போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப் போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப் போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை

Last Updated on Tuesday, 16 August 2016 05:13 Read more...
 

ஒரு முக்கியமான வேண்டுகோள்: வாசகசாலை - மனதிற்கான வைத்தியசாலை

E-mail Print PDF

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -ஒரு முக்கியமான வேண்டுகோள்: வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை

வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம்.

இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் தங்க நேர்பவர்களுக்கும். அந்த மந்த நிலையும், தன்னம்பிக்கை ஏற்படுத்தாத சூழலும் நோயாளிகளை இன்னுமின்னும் சோர்வடையச் செய்கின்றன. இந்த நிலைமையை மாற்ற நாம்தான் முயற்சிக்க வேண்டும்.

முதல் முயற்சியாக, நீர்கொழும்பு, மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள வைத்தியர் ஷாலிகா மற்றும் மருத்துவத் தாதிகளுடன் இணைந்து, அங்குள்ள டெங்கு நோயாளர் பிரிவில், ஒரு சிறு வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் தற்போது தங்கி சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவ தாதிகளை அணுகுவதன் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

முற்றிலும் இலவச சேவையான இது, முற்றுமுழுதாக சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அவர்களைப் பார்த்துக் கொள்ளத் தங்கியிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாத்திரமானது. வைத்தியசாலையில் தங்க நேரும் காலப்பகுதியில், புத்தக வாசிப்பில் அவர்கள் காணும் மன நிறைவானது சொல்லி மாளாதது.

Last Updated on Wednesday, 10 August 2016 06:49 Read more...
 

சிறுகதை: ஜெமோவும் சமந்தாவும் .

E-mail Print PDF

பரதன் நவரத்தினம்யாழ்ப்பாணம் .காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தொட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மொட்டார் சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து ,

“அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" .

நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் .

காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் .

“நம்பி ,என்னடா இந்த நேரம் ? “

“உமா மகேஸ்வரன் எல்லோ ராத்திரி செத்துபோனார் "

“அட, சுகமில்லாமல் இருக்கின்றார் என்று போன மாதம் போய் ஆளைப்பார்த்தேன் , கொஞ்ச நாளாக வருத்தமாகத்தான் இருந்தார்"

“நான் உனக்கு தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சன் .பின்னேரம் என்ரை வீட்டை வா, ஒண்டடியாக தெல்லிப்பழைக்கு போகலாம் "

“உனக்கு எப்ப நியுஸ் வந்தது "

“தம்பி போன் பண்ணினவன் .அரச மரியாதையுடன் அடக்கம் செய்யும் பிளான் இருக்காம்.பிரபாவையும் கூட்டிக்கொண்டு வாறாராம்"

“உன்ரை தம்பிக்குத்தான் அவரை பிடிக்காதே ,இப்ப மாகாண முதல்வர் எண்டபடியால் அரச மரியாதை செய்ய போறார் போல"

“ஓமடாப்பா , சும்மா பழைய கதைகளை இப்ப கிளறாமல் அஞ்சு மணிபோல வா , பார்த்துக்கொண்டு நிற்பன் என்ன "

Last Updated on Tuesday, 09 August 2016 23:52 Read more...
 

வாசிப்பு - ஒரு கலை !

E-mail Print PDF

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -'வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்' என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது 'வாசிக்கும் கலை' எனப்படுகிறது.

வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

S - Survey ( தேடிப் பார்த்தல்)
Q - Question ( கேள்வி எழுப்புதல்)
R - Read (வாசித்தல்)
R - Retrive ( மீளவும் பார்த்தல்)
R - Review (விமர்சித்தல்)

இங்கு முதல் படிமுறை S - Survey ( தேடிப் பார்த்தல்) ஆகும். தேடிப்பார்ப்பதில் நூலின் பெயர், நூலாசிரியர், பிரசுரிக்கப்பட்டுள்ள ஆண்டு, முன்னுரை மற்றும் அறிமுகம், பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும். நூல் குறித்த கேள்விகளை எழுப்புவது இரண்டாவது படிமுறையாகும்.

Last Updated on Monday, 08 August 2016 04:24 Read more...
 

போராட்டத்தின் முற்றுப்புள்ளி?

E-mail Print PDF

இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!'நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது; நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும் இல்லை.

இப்போது நான் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். ஒரு மனித உயிர் வாழும்போது அவனோ அவளோ பல தவறுகளைச் செய்யலாம். நம் பெற்றோர் நமக்குப் பிறப்பளித்தாலும் அவர்கள் குணங்கள் எல்லாம் நமக்குண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனது தாய் தந்தையிடம் வேண்டாத குணங்கள் உண்டு. அவர்கள் என்னை வளர்த்த போது அவர்கள் சரி என்று கருதிய முறையில் வளர்த்தார்கள். ஆனால் நான் வளர்ந்து பெரியவளாகி எது சரி, எது தவறு என்பதை உணர்ந்தபோது, அவர்கள் செய்ததில் எது சரி, எது தவறு என்பது எனக்குத் தெரிந்தது. அவற்றைத் திருத்தும் ஆசை ஏற்பட்டது. அதுபோலவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.'

சம கால வீர மங்கையான மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் மேற்படி கருத்து சாவை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு பதிலாக அமைந்தது. வீர மங்கை. மனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர் என அறியப்பட்டுள்ள அவர், மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வந்தவர்.

அயல் தேசத்தவர்களின் சட்ட விரோதமான ஊடுருவலைத் தடுப்பதற்காக, 1958 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் உள்ளிட்ட ஏழு வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் முற்றுமுழுதாக ஆயுத மற்றும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச் சட்டம் வழங்குவதால் இராணுவம் மிக மோசமான வன்முறைகளை அம் மாநில பொதுமக்கள் மீது பிரயோகிக்க ஆரம்பித்தது. அம் மாநிலங்களில் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள்  எழுந்து கொண்டேயிருந்தன.

இந்த நிலையில் 'மலோம் படுகொலை' என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படும், மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ஆயுதப் படையினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பொதுமக்களில் பத்துப் பேர் சுடப்பட்டு இறந்த சம்பவம், 2000.11.02 அன்று நிகழ்ந்தது.

Last Updated on Monday, 08 August 2016 04:25 Read more...
 

உலகின் முதல் அணுஉலை இயக்கிய என்ரிகோ பெர்மி

E-mail Print PDF

அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்* பதிவுகள் இணைய இதழில் (ஜூன் 2002 இதழ் 30) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். -


அணுவைப் பிளந்தார்கள்!

1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ பெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளை ஏவி, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற, அந்த அணுப் பிளவுச் சம்பவம் அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதிய கதிர்வீச்சு உலோகமும் மற்றும் சிறிய துணுக்குகளும் தோன்றின! தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி விட்டதாகப் பெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக உருமாற்றம் [Transmutation] கொண்டது! ஆனால் சிறிய துகள்களை இரசாயன முறையில் பிரித்துக் கண்டு பிடிக்கத் தவறிவிட்டார்! அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப் பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது புரியவில்லை.

ஜெர்மன் வெளியீடு "பயன்படும் இரசாயனம்" [Applied Chemistry] இதழில் ஐடா & வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், பெர்மியின் பிழையான கருத்தை எடுத்துக் கூறி, "கன உலோகம் யுரேனியத்தை நியூட்ரான் தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது" என்று எழுதி யிருந்தார்கள். மெய்யான இவ்வரிய விளக்கத்தை, பெர்மி உள்படப் பலர் அன்று ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள்! சாதாரண ஆய்வகச் சாதனங்களால் எளிதாக அணுவைப் பிளக்க முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான் அணுவை உடைக்க முடியும், என்பது பெர்மியின் அசைக்க முடியாத கருத்து.  பெரும்பான்மையான பௌதிகவாதிகள் [Physicists] பெர்மியைப் பின்பற்றி, யுரேனியம் நியூட்ரானை விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞான மேதைகள் அணுவைப் பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தையே கொண்டிருந்தனர்.

Last Updated on Monday, 01 August 2016 01:32 Read more...
 

அணுப் பிணைவு சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி

E-mail Print PDF

அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்- * பதிவுகள் இணைய இதழில் (ஆகஸ்ட் 2002 இதழ் 32) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். -


சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத்தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth's Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்கு கிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்துதரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா?

1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது!

மின்சக்திப் பற்றாக் குறை உலக நாடுகளில் மெதுவாகத் தலை தூக்கி யிருக்கிறது! செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன! சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலி·போர்னியாவில் தலை விரித்தாடி வர்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர்! சென்ற நூற்றாண்டில் திரீமைல் தீவு, செர்நோபிள் அணுசக்தி நிலையங்களில் பெரும் விபத்து நேர்ந்து, கதிரியக்கத்தால் தீங்குகள் விளைந்து, புது அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவில் கட்டப் படாமல் நிறுத்தப்பட்டன.

Last Updated on Monday, 01 August 2016 01:09 Read more...
 

பயணம்: 'சூரியனை நோக்கி ஒரு பயணம் 1

E-mail Print PDF

18 நாட்கள்: மொரோக்கோ – மதினாக்களின் நாடு.  June 20, 2016

தொலைந்துபோக…

- மீராபாரதி - நமது பயணத்தில் சென்ற மூன்றாவது நாடு மொரோக்கோ. இந்த நாடு இரண்டு வகையில் எங்களுக்கு முக்கியமானது. முதலாவது ஆபிரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டிற்கு முதன் முதலாக செல்கின்றோம். இரண்டாவது இதுவே  நாம் செல்கின்ற முதல் முஸ்லிம் நாடுமாகும். இந்த நாட்டின் பழங்குடி மக்கள் பாபர் (Berber) என்ற மனிதர்கள். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இயற்கையுடன் வாழ்ந்த இந்த மக்களையும்  நாட்டையும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முதல் ரோமர்கள் ஆக்கிரமித்து ஆண்டார்கள். வரலாறு எழுதும் மேற்குலகினர் ரோமர்கள் பிற்காலங்களில் இந்த நாட்டை விட்டு விட்டுச் சென்றதாகவும் முஸ்லிம்கள் பின் ஆக்கிரமித்ததாகவும் எழுதுகின்றார்கள். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களோ பாபர்கள் கடவுளின் தூதர்களை எதிர்பார்த்திருந்தாகவும் முஸ்லிம்கள் வந்தபின் இஸ்லாமே தமது மதம் என உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறுதான் வரலாறு என்பது ஆதிக்கத்திலிருப்பவர்களின் வரலாறாகவே உள்ளது. ஆனால் வரலாறுகளை எழுதும் பெரும்பாலானவர்கள் இன்னுமொரு நாட்டை தமது நாட்டினிர் மதத்தினர் ஆக்கிரமித்து ஆண்டார்கள் என்ற உண்மையைக் கூறுவதுமில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. ஆரம்பகால பாபர்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்களின் வருகையை எப்படிப் பார்த்தார்கள் என ஒருவரும் கூறுவதில்லை. இதுவே வரலாறுகளின் தூரதிர்ஸ்டம். இப்பொழுதும் இவர்களில் பெரும்பாலானவர்கள் காடுகளிலும் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தே வாழ்கின்றனர்.

இந்த நாட்டை அரேபியர்கள் 9ம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தபின் முதல் மதீனா 10ம் நூற்றாண்டில் வெஸ்சில் (Fes/Fez) கட்ட ஆரம்பிக்கப்பட்டு 15ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது கட்டி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொரோக்கோவின் பல நகரங்களில் மதீனாக்கள் கட்டப்பட்டன. இன்று மொரோக்கோ பல மதீனாக்களைக் கொண்ட ஒரு நாடு. தான்ஜீர் (Tangier). செவ்செவ்வோன்(Chefchaouen). வெஸ் (Fez). மரகாஸ் (Marrakesh) மற்றும் பல நகரங்களிலும் பெரிய சிறிய மதீனாக்கள் உள்ளன. தொலைந்து போக விருப்பமானவர்களுக்கும்  தொலையாமல் இருப்பதற்கான சவாலை எதிர்கொள்பவர்களும் பயணிக்க வேண்டிய நகரங்கள் இவை. ஏனெனில் இந்த மதினாக்கள் திட்டமிட்டு கட்டப்பட்டவையல்ல. மதினாக்களின்  மத்தியில் கஸ்பா அல்லது ரியாட் ஒன்று முதன் முதலாக கட்டப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து தமது தேவைக்கும் விருப்பத்திற்கும் புதிதாக குடியேறியவர்கள் சிறிய கஸ்பாக்களையும் சிறிய பெரிய ரியாட்களையும் கட்டியுள்ளார்கள். வெளியிலிருந்து பார்க்கும் பொழுது சிறிய வீடுகளாக இருக்கும். ஆனால் உள்ளே சென்றால் அழகிய வேலைப்பாடுகளுடன் பெரிய நாற்சதுர வீடுகளாக இருக்கும். கஸ்பா என்பது ஒரு குடும்பத்திற்குரியது. நான்கு கோபுரங்களைக் கொண்ட நாற் சதுர வீட்டின் ஒவ்வொரு கோபுரத்திலும் ஒரு மனைவியார் என மொத்தமாக நான்கு மனைவிமார் வசிக்கலாம். ரீயாட் என்பது கொஞ்சம் பெரியதும் வசதியானதுமாகும். சிலவற்றில் நடுவில் நீந்திக் குளிப்பதற்கான வசதிகளும் பூந்தோட்டங்களும் உள்ளன.

Last Updated on Thursday, 18 August 2016 18:49 Read more...
 

மீள்பிரசுரம்: நாய் கற்பித்த பாடம்!

E-mail Print PDF

[ எமக்கு பிலோ இருதயநாத் அவர்களது பயணக்கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். கானுயிர் பயணங்கள் மற்றும் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியாகக் கருதப்படுபவர். அவர் ஞாபகமாக 'எங்கள் புளக்' (engalblog.blogspot.com) வலைப்பதிவில் 1965இல் வெளியான மஞ்சரி இதழில் வெளியான 'நாய் கற்பித்த பாடம்' மீள்பிரசுரமாகியிருந்தது மகிழ்ச்சியினைத்தருகின்றது. அந்தக் கட்டுரையினை இங்கு மீள்பதிவு செய்கின்றோம் பதிவுகள் -.]


நாய் கற்பித்த பாடம் - பிலோ இருதயநாத்.பிலோ இருதயநாத்ஆபத்தில் உதவாத நண்பர்களிடம் நாயானாலும் ஆத்திரம் வராதா?

அன்று மைசூரிலிருந்து சென்று கூடலூரில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கினேன்.  மறுநாள் காலையில் சுல்தான்பத்திரி, தேவர்சோலை ஆகிய இடங்களுக்குச் சென்றேன்.  தேவர் சோலையில் என்னை நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருந்த நண்பரான ரூப் சிங் என்பவருடைய இல்லத்தில் தங்கினேன்.  அவர் சிறந்த வேட்டைக்கார்.  அவரிடம் கன்றுக்குட்டியைப்போல ஒரு வேட்டை நாய் உண்டு.  வேட்டைக்கு ரூப் சிங் செல்லும்போதெல்லாம் அந்த நாயும் அவருடன் செல்லும்.

"இந்த நாயை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.ரூப் சிங் சொல்லலானார். "அது ஒரு பெரிய கதை.  இந்த நாயின் குடும்பத்தைச் சேர்ந்த முன்னூறு நாய்கள் என் நண்பருள் ஒருவரிடம் இருக்கின்றன.  அவர் ஒரு செல்வர்.  இந்த நாயை அவர்தான் எனக்குக் கொடுத்தார்.  அவர் நல்ல வேட்டைக் காரர்.  அது மட்டுமல்ல; நாய் வளர்ப்பிலும் அவருக்கு அளவு கடந்த ஆசை.  நாய்களைக் கவனிப்பதற்கு மட்டும் சுமார் இருபது ஆட்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.  இரவில் அந்தச் செல்வர் தமது பங்களாவில் எந்தக் கதவையும் மூடுவதே இல்லை. எந்த எந்தக் கதவுகளின் மூலம் அந்தச் செல்வரின் இல்லத்துக்குள்ளும், காம்பௌன்டுக்குள்ளும் அந்நியர் வர இயலுமோ, அந்தக் கதவு வாயிற்படிகளை எல்லாம் நாலு நாலு நாய்கள் காவல் புரியும்.   இரவு 7 மணிக்குத் தம் காவல் நாய்களைச் செல்வர் தடவிக் கொடுப்பார்.  பிறகே உறங்கச் செல்வார்.  செல்வர் தடவிக் கொடுத்த பிறகு, நாய் வளர்ப்பு வேலைக்காரனுங்கூட எந்த வழியாகவும் உள்ளே புக முடியாது.

Last Updated on Wednesday, 29 June 2016 20:01 Read more...
 

கவிதை: எழுத்தாளர் கீதம்! - அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -

E-mail Print PDF

எழுத்தாளர் கீதம்!

- அறிஞர் அ.ந.கந்தசாமி -

அறிஞர் அ.ந.கந்தசாமி

[ 'புதுமை இலக்கியம் பாரதி நூற்றாண்டு முன்னோடி மலரினை 'நூலகம்' தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதில் முதற்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'எழுத்தாளர் கீதம்' கவிதையினை இங்கு பதிவு செய்கின்றேன். இக்கவிதையானது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962இல் நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொதுமாநாட்டை ஒட்டி அமரர் அ.ந.கந்தசாமி அவர்களால் இயற்றப்பெற்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம்  பரந்துபட்டது. 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'கடவுள் என் சோரநாயகன்' போன்ற கவிதைகள் முக்கியமானவை. ]


சங்கு முழங்குது! சங்கு முழங்குது!
சங்கு முழங்குது கேள் - புதுமைச்
சங்கு முழங்குது கேள்.
எழுத்தெனும் சங்கம்
ஒலித்திடுகின்றது.
உழுத்திடும் உலகம் ஒழிந்திடவே -
சங்கு முழங்குது.               - சங்கு முழங்குது

சுரண்டல் மிகுந்தது, சூழ்ச்சி
நிறைந்தது
இருண்ட இச்சமுதாயம்!
வரண்டு கிடந்திடு மக்களின் துன்ப
வதைகள் ஒழித்திடுவோம்!
திரண்டிவண் எழுவீர் பேனா மன்னர்
தீரமுடன் நீரே - கலைச்
சிற்பிகளே! எம் எழுத்தாற் பற்பல
அற்புதம் செய்திடுவோம்! - புது
அமைப்பும் நிறுவிடுவோம்.            - சங்கு முழங்குது

Last Updated on Saturday, 18 June 2016 15:21 Read more...
 

வானொலி ஊடகங்களின் நீட்சியும் நேயர்களின் வகிபாகமும்

E-mail Print PDF

எழில்வேந்தன்அண்மையில் எனது ஊடக நண்பர் ஒருவரின் நூல்வெளியீடொன்று மெல்பேனில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட இலக்கிய நண்பர் ஒருவர் “வானொலிகள் நகரவில்லை” என்ற குற்றச்சாட்டை வெளிப்படையாக மேடையில் தெரிவித்ததாக நண்பர்கள் கூறக்கேட்டேன். நகரவில்லையெனில் அது பக்க வாட்டிலா அல்லது மேல்நோக்கியா என அவரேதும் கூறினாரா என அவர்களிடம் நான்  பதிலுக்குக்  கேட்டேன். அண்மைக்காலமாக வானொலி ஊடகத்தைச் சாராத பல அன்பர்கள் பொத்தாம்பொதுவில் இவ்வாறான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்து வருகின்றனர். கடந்த சுமார் 4 தசாப்த காலமாக வானொலி மற்றும் தொலக்காட்சித் துறையில் ஈடுபட்டு வருகின்ற ஒருவன் என்ற ரீதியில் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களின் அளவுகோல் எது என்ற கேள்வி என் முன்னே வந்து நிற்கின்றது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்ற ஓர் அடிப்படை உண்மையையும் நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. வானொலி தொடர்பான இந்தக் குற்றச்சாட்டுகள் எழுவதற்கான  பின்னணி என்ன என்பதை நாம் முதலில் பார்க்கவேண்டியுள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிகளின் பின்னணிகள் எவையெனப் பார்க்கும்போது அடிப்படையில் அவற்றை ஆரம்பித்தவர்கள் இவற்றை ஒரு வர்த்தக முயற்சியாகவே ஆரம்பித்தனர் எனத் தெரிகிறது. பணம் பண்ணவேண்டும் அல்லது புகழடையவேண்டுமென்ற ஓர் ஆதார நோக்கையே கொண்டு ஆரம்பிக்கப்பட்டவையாக இந்த வானொலிகளை நான் காண்கிறேன். பலசரக்குகளை விற்கும்  பல்பொருள் அங்காடிக்கும் அல்லது ஸ்பைஸ் ஷொப்பிற்கும் வானொலி நிலையத்திற்குமிடையில் இவற்றை ஆரம்பித்தவர்கள் பெரிய வித்தியாசத்தைக்காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. வானொலி தொடர்பான அரைகுறை அறிவுடையவர்கள் அல்லது பகுதிநேரமாக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்டவர்கள் அல்லது வேறு இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றின்மூலம் புகழடைய முடியாதவர்கள் என பலதரப்பட்டவர்கள் வானொலிகளை ஆரம்பித்து அல்லது அவற்றில் இணைந்து தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டும் சாதனமாக அவற்றைப் பயன்படுத்தினர், பயன்படுத்திவருகின்றனர்,  ஏன் வானொலியில் பிறந்தநாள் வாழ்த்து மரண அறிவித்தல் கொடுப்பதற்காக இலங்கை வானொலிப் படிகளை மிதித்தவர்கள்கூட பின்னர் இலங்கை வானொலி புகழ்.. இன்னார் எனக் கூச்சமின்றிக் கூறியே ஒலிபரப்பு நிலையங்களை ஆரம்பித்த சோகமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.  இன்று பல ஒலிபரப்பு நிலையங்கள் இவ்வாறு ஒலிபரப்புப் பயிற்சியற்றவர்களால் நடத்தப்படுவது கவலைக்குரியதே.

Last Updated on Saturday, 11 June 2016 07:12 Read more...
 

எழுத்தாளர் தேவகாந்தனுடான நேர்காணல் (மூன்றாம் பகுதி)!

E-mail Print PDF

எழுத்தாளர் தேவகாந்தன்பதிவுகள்:  அண்மையில் வெளியான அ-புனைவுகளில் மிகவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்'.  விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான ஆளூமையொருவரின் சுயசரிதையான இந்த நூல் அதன் காரணமாகவே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதுகின்றோம். தன்னைச்சுயவிமர்சனம் செய்வதன் மூலம் மெளனிக்கப்பட்ட தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய அமைப்பான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனமாகவும் இந்த நூல் விளங்குவதாகக் கருதுகின்றோம். இது போன்ற நூல்கள் ஆரோக்கியமான விளைவுகளையே தருவதாகவும் நாம் கருதுகின்றோம். மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதுகின்றோம். இந்த நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததா? வாசித்திருந்தால் இந்நூல் பற்றிய உங்கள் எண்ணங்களையும் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

தேவகாந்தன்: தமிழ்நாட்டில் நான் தங்கியிருந்தபோதுதான் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் வெளியீட்டுவிழா  (பெப். 27, 2016ல் என்று ஞாபகம்) காலச்சுவடு பதிப்பகம் சார்பில் சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடந்தது. அந்நிகழ்வுக்குப் போக முடியாதிருந்தபோதும், மறுநாள் மாலைக்குள்ளேயே நூலை நான் வாசித்துவிட்டேன். அதுபற்றிய என் அபிப்பிராயங்களை அன்று பின்மாலையில் சந்தித்த சில நண்பர்களிடமும் பகிர்ந்திருந்தேன்.

ஒரு வாசகனாய் அந்த நூலை வாசித்தபோது என் ரசனையில் அதன் பின்னைய மூன்றில் இரண்டு பகுதியின் உணர்வோட்டத்தில் அது விழுத்தியிருந்த மெல்லிய பிரிநிலை துல்லியமாகவே தெரிந்தது.  நீண்ட இடைவெளிவிட்டு எழுதப்படும் ஒரு நூலும் அம்மாதிரி வித்தியாசத்தைக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழினியின் சுகவீனம் அந்த உணர்வுநிலை மாறுபாட்டின் காரணமோவெனவும் அப்போது நான் யோசித்தேன். அது எது காரணத்தால் நடந்திருந்தாலும் அந்த உணர்வு மாற்றம் அங்கே நிச்சயமாக இருந்தது.

இதற்குமேலே நாமாக யோசித்து எந்தவொரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. எழுதியவர் ஜீவியந்தராக இருக்கிறபட்சத்தில் அந்நூல் குறித்து எழக்கூடிய சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். அல்லாத பட்சத்தில் அதுகுறித்த சந்தேகங்களையும், கேள்விகளையும் நூலின் தரவுகள்மூலமாகவேதான் நாம் அடையவேண்டியவர்களாய் உள்ளளோம். ஆசிரியர் அந்நூலை எழுதத் தொடங்கிய காலம், எழுதிமுடித்த காலம், பிரசுரப் பொறுப்பைக் கையேற்றவர் யார், எப்போது என்ற விபரம், பிரசுரத்திற்கு கையளிக்கப்பட்ட காலம் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு பதிவு பதிப்பினில் இடம்பெற்றிருக்க வேண்டும். இது முக்கியமான அம்சம். அதுவும் இல்லாத பட்சத்தில் அப்பிரதி சந்தேகத்திற்கு உரியதுதான். அதற்கும் நியாய வரம்புகள் உள்ளன. அந்த நியாய வரம்புகளை எமது நிலைப்பாட்டினடியாக அல்லாமல் உண்மையின் அடிப்படையில் பார்க்கவேண்டுமென்பது இதிலுள்ள முக்கியமான விதி.

Last Updated on Sunday, 05 June 2016 02:16 Read more...
 

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு'

E-mail Print PDF

மந்திரிமனையின் உட்தோற்றமொன்று..நல்லூர் ராஜதானி நகர அமைப்புஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

Last Updated on Friday, 08 July 2016 18:47 Read more...
 

பத்தி 14 இணையவெளியில் படித்தவை!

E-mail Print PDF

சி.சு. செல்லப்பா - பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு நிவேதிதா

சத்யானந்தன்

நவீன இலக்கியம் (கவிதை கதைகளில் நவீனத்துவம்), விமர்சன இலக்கியம், வணிக இதழ்களுக்கு மாற்றான தீவிர இலக்கியம் இவற்றை 'எழுத்து' என்னும் பத்திரிக்கை மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்த சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்டதில் பங்கேற்று சிறை சென்றவர். அவர் இன்று தமிழில் தீவிர இலக்கியம் வணிக இலக்கியத்தைத் தாக்குப் பிடித்து நிமிர்ந்து நிற்கும் காலத்துக்கு அடித்தளமிட்ட முன்னோடி. சாரு நிவேதிதா அவரது பணி, ஆளுமை, படைப்புகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றையும் விரிவாக ஒன்பது பகுதிகளில் தினமணியின் இணையதளத்தில் எழுதி இருக்கிறார். எட்டாம் பகுதியில் அவருடைய சாதனைகள் என்ன என்னும் சாருவின் பார்வையைக் கீழே பகிர்கிறேன்:

மேற்கு நாடுகளில் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பணிபுரிபவர்கள் அனைவருமே சிந்தனையாளர்களாகவும், விமரிசகர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு நிலைமை வேறு. இங்கே விமரிசனம் என்றால் என்னவென்றே தெரியாது. வியாக்கியானமும் உரை விளக்கங்களும் மட்டுமேதான் இங்கே உண்டு. இப்படிப்பட்ட சூழலில் விமரிசனம் என்ற புதிய விஷயத்தை ஆரம்பித்த சி.சு. செல்லப்பாவின் விமரிசனப் பயணம் அவர் காலத்திலேயே - அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையிலேயே பெரும் விபத்துக்குள்ளாகியது. அவருடைய மாணாக்கர்களான வெங்கட் சாமிநாதனும் தர்மு சிவராமுவும் செல்லப்பாவின் பாணியிலேயே சென்று விமரிசனக் கலையை வம்புச் சண்டையாக மாற்றினர். ‘நமக்கு நட்பாக இருந்தால் நல்ல எழுத்தாளர்; இல்லாவிட்டால் போலி’ என்பதுதான் இவர்களது விமரிசனப் பாணியாக மாறியது. அவர்களின் விமரிசனத்தில் வேறு எந்தவித இலக்கியக் கோட்பாடுகளோ ரசனையோ இருந்ததில்லை. க.நா.சு. பரவாயில்லை. தன்னுடைய ரசனைக்கு ஏற்றபடி அவர் உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் விமரிசனக் கலைக்கு அவர் பங்காற்றவில்லை. உலக இலக்கியத்தை வாசித்தால் நம்மால் நல்ல இலக்கியத்தை இனம் காண முடியும் என்று மட்டுமே குறிப்பிட்டார். அதன்படியே வாழ்நாள் முழுதும் வாசித்தார்; நமக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் செல்லப்பாவும் சாமிநாதனும் சிவராமுவும் விமரிசனக் கலைக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

அசோகமித்திரனை மட்டுமல்ல; ஞானக்கூத்தன் உட்பட அவர்கள் காலத்திய பல எழுத்தாளர்களைப் போலி என்றார்கள் சாமிநாதனும் சிவராமுவும். ந. பிச்சமூர்த்தியின் இலக்கியத் தகுதியை சந்தேகித்து எழுதினார் நகுலன். அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையில். ஆக, மேற்குலகைப் போல் ஓர் ஆரோக்கியமான இலக்கிய வடிவமாக ஆகியிருக்க வேண்டிய விமரிசனக் கலை அடிதடி சண்டையாக மாறியது.

Last Updated on Sunday, 22 May 2016 01:01 Read more...
 

நினைவுகளின் தடத்தில் (6 & 7)!

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -- அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நினைவுகளின் தடத்தில் (6)!'

சந்தோஷம் யாருக்கு என்ன காரணங்களால் கிடைக்கிறது என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விடமுடிகிறதில்லை. நேற்று ஒரு ·ப்ரென்சு படம் பார்த்தேன். தான் செய்யாத, ஆனால் தான் இருக்க நடந்து விட்ட ஒரு குற்றத்திற்காக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு தாய் என்னேரமும் வெறிச்சிட்ட முகமாகவே காணப்பட்டாலும் ஒரு சில கணங்களில் அவள் முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடிகிறது. அவள் வசமாக கை ரேகை சாட்சியத்தோடு சிறையில் அகப்பட்டுக் கிடக்கிறாள். அவள் குற்றமற்றவள் என்று தன்னைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டாலும், அவளுக்கு விடுதலை என்பதே சாத்தியமில்லை. இருப்பினும் அவள் முகம் மலரும் கணங்களும் அவளுக்குக் கிடைத்துவிடுகின்றன. நாம் எல்லோரும் அறிந்த ஒரு அரசியல் தலைவருக்கு எத்தனையோ ஆயிரம் கோடிகள் சொத்து குவிந்து கொண்டே இருக்கிறது. இன்னமும் பணம் எல்லா வழிகளிலும் சொத்து சேர்த்துக்கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும், அவரைக் கவலைகள் அரித்துக்கொண்டே இருக்கின்றன. அங்கங்கள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வருகின்றன. திட்டமிடும் மூளையைத் தவிர. காலையில் இரண்டோ மூன்றோ இட்டிலிக்கு மேல் அவரால் சாப்பிட முடிவதில்லை. மான் கறியும் முயல்கறியும் ஆரவாரத்தோடு சாப்பிட்டவர் தான். இருப்பினும், அலுப்பில்லாமல், வெறும் சொத்து சேர்த்துக் கொண்டே போவதில் அவருக்கு சந்தோஷம் கிடைத்து விடுகிறது.

என்னைக் குழந்தைப் பருவத்திலிருந்து 14 வயது வரை வளர்த்துப் படிக்க வைத்த மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். அந்த வறுமை இப்போது நினைக்கக் கூட பயங்கரமானது. அவருடைய சம்பாத்தியமான 25 ரூபாய் 4 அணா வில் வீட்டு வாடகை ஆறு ரூபாய் போக மீத பணத்தில், நாங்கள் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை எப்படி சமாளித்தார் என்பதல்ல விஷயம், சமாளிக்க முடிந்ததில்லை. ஆனாலும் அவர் என் அப்பாவுக்கு, "என்னால் முடியவில்லை, பையனை அனுப்புகிறேன்" என்று ஒரு கார்டு போட்டவரில்லை. என்னைப் பார்த்து அலுத்துக் கொண்டவரில்லை. யாரும் எந்த சமயத்திலும் அந்த வீட்டில், நான் ஒரு உபரி ஜீவன் என்று நினைத்ததில்லை; உணர்ந்ததில்லை முதலில்.

Last Updated on Saturday, 14 May 2016 19:43 Read more...
 

நகைச்சுவையும் உளவியல் சிக்கல்களும்

E-mail Print PDF

அகஸ்ரி ஜோகரட்னம் (சிம்பா), - எழுத்தாளர் நவஜோதி ஜோகரட்னம் அவர்களின் மகன் அகஸ்ரி ஜோகரட்னத்தின் ஆங்கிலக்கட்டுரையின் தமிழ் வடிவம். அகஸ்ரி ஜோகரட்னம் இலண்டன் வோறிக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மேற்கொண்டு வருகின்றார். அவரது இக்கட்டுரை பல்கலைக்கழகப் பத்திரிகையில் பிரசுரமானதும் குறிப்பிடத்தக்கது. - பதிவுகள் -.


நவீன உலகில் உளவியல் கோளாறுகள் என்பன கண்ணுக்குத் தெரியாத நோய்க்கூறுகள் ஆகும். இந்த உளவியல் கோளாறுகளின் முக்கியமே இவற்றை நாம் தொட்டு, பார்த்து அறிந்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பதாகும். அது மட்டுமல்ல அவை எமது நாளாந்த அசைவியக்கத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், நாங்கள் எவ்வாறு பேசுகிறோம், எவ்வாறு நடக்கின்றோம், எவ்வாறு செயலாற்றுகின்றோம், எவ்வாறு அன்பு செலுத்துகின்றோம் என்பனவற்றிலெல்லாம் பாதிப்பு செலுத்தக்கூடியனவாக உள்ளன. அத்தோடு நகைச்சுவையை நாம் எவ்வாறு ரசிக்கின்றோம், ஹாஷ்யமான நிகழ்ச்சிகள் குறித்து நாம் எவ்வாறு சிந்திக்கின்றோம், நகைச்சுவையை நாம் எவ்வாறு எதிர்கொள்கின்றோம் என்பனவற்றையும்கூட இவை பாதிக்கின்றன.

என்னைச் சிரிப்பிலாழ்த்தும் பிரபல்யமான நகைச்சுவை ஆளுமைகள் ஏன் தொடர்ச்சியான உளவியல் கோளாறுகளுக்கு உட்படுகிறார்கள் என்பதுபற்றி நான் நீண்டகாலமாக வியப்புற்று வந்திருக்கிறேன். நகைச்சுவைக்கும், உளவியல் சிக்கல்களுக்குமிடையில் உள்ள தொடர்புகள் குறித்து நிறையவே பேசப்பட்டுள்ளது.

உண்மையில் உளவியல் கோளாறுகளுக்கு உட்பட்டவர்கள் தங்களின் உள்மனதில் வியாபித்துக்கிடக்கின்ற இந்த ராட்சகர்களிடமிருந்தே தங்கள் நகைச்சுவைக்கான பெருந்தூண்டுதலைப் பெற்றிருக்கிறார்கள்.

உளவியல் சிக்கல்கல்களும்;, மன அழுத்தங்களை சீராக்கும் செயற்பாடுகளும் அடிப்படையில் நகைச்சுவையுடன் சேர்ந்தே செயற்படுவதைக் காணலாம். சிறந்த ஹாசிய நிகழ்ச்சியானது உணர்ச்சிகள் மற்றும் மன எழுச்சிகளுக்கு சாதமாகத் திகழ்கின்றன. நிலைமைகள் மோசமாகிப்போகின்ற கட்டங்களில் இவை உளவியல் ரீதியான அடிதாங்கியாக அமைகின்றன. பகிடிகள் விடுவதன் மூலம் நவீன உலகம் தங்களுடைய உணர்ச்சிகளை உற்சாகத்தோடு வைத்திருக்க உதவுகின்றது என்று மேக்றோ (McGraw) என்ற அறிஞர் கூறுகின்றார்.

Last Updated on Thursday, 05 May 2016 22:23 Read more...
 

வாழ்த்துச்செய்தி: எழுத்தாளர் ‘தமிழ்வேள்’ கமலாதேவி அரவிந்தன்

E-mail Print PDF

எழுத்தாளர் குரு அரவிந்தன்எழுத்தாளர் கமலாதேவியின் நேர்காணலைப் பதிவுகள் இணையத் தளத்தில் வாசிக்க முடிந்தது. சிறந்ததொரு எழுத்தாளரின் திறமைகளை புலம்பெயர்ந்த இலக்கிய உலகத்திற்கு அறியத் தந்ததையிட்டு எழுத்தாளரும் நண்பருமான அகில் அவர்களையும், இதைப் பலரும் அறியத்தந்த பதிவுகள் ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரன் அவர்களையும் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். இதற்கெல்லாம் காரணமான சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் ‘தமிழவேள் விருது’ கிடைக்கப் பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனுக்கு எனதும், எனது குடும்பத்தினரதும் இனிய பாராட்டுக்கள்.

பதிவுகள் இணையத்ததளத்தின் மூலம்தான் எனக்குச் சகோதரி கமலாதேவியின்  அறிமுகம் முதலில் கிடைத்தது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எனது கனடிய 25 வருட இலக்கிய சேவையைப் பாராட்டிச் சென்ற வருடம் விழா எடுத்த போது சிறப்பான வாழ்த்துச் செய்தி ஒன்றைச் சகோதரி கமலாதேவி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். ‘கனடாத் தமிழர் இலக்கியம் - குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற ஆவண நூலில் சமகால எழுத்தாளர்களின் வாழ்த்துச் செய்தியுடன் இவரது வாழ்த்துச் செய்தியும் இடம் பெற்றிருக்கின்றது.

சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட திருமதி. கமலாதேவி அரவிந்தன் அவர்கள் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் எழுதும் ஆற்றல் கொண்டவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம், மலாய், எனப் பல மொழிகள் சரளமாகப் பேச, எழுதத் தெரிந்தவர். சங்க இலக்கியத்திலும் இவருக்கு ஈடபாடு அதிகம். இவரைப் பாராட்டி  எழுதுவதானால் நிறையவே எழுத முடியம். இச்சந்தர்ப்பத்தில் 'தமிழ்வேள் விருது' பெற்ற பண்பான எழுத்தாளரான கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 27 April 2016 19:02
 

அஞ்சலி: பிரின்ஸ் - சமுதாயப்பிரக்ஞை மிக்க கலைஞன்!

E-mail Print PDF

பாடகர் பிரின்ஸ் மறைவு!தன் பாடல்களைத் தானே எழுதி, நடித்து, பாடி, தயாரித்து, கிட்டார் இசைக்கருவியினையும் வாசித்து சாதனை புரிந்த பாடகர் கிராமி விருதுகளை, ஆஸ்கார் விருதினை எனப்பல்வகை விருதுகளையும் பெற்றவர் மட்டுமல்லர் சமுதாயப்பிரக்ஞை மிக்க கலைஞரும் கூட. Rolling Stone சஞ்சிகை இவரை உலகின் சிறந்த கிட்டார் வாத்தியக்கருவியை வாசிப்பதில் 33ஆவது இடத்தில் வைத்துப்புகழாரம் சூட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எண்பதுகளில் தனது இசைக்குழுவுக்கு 'புரட்சி' (Revolution) என்னும் பெயரினையிட்டுத் தன் இசைப்பயணத்தைத்தொடர்ந்தவர் பிரின்ஸ். அக்காலகட்டத்தில் வெளியான இவரது 'ஆல்பமா'ன 'Purple Rain' , பின் அதே பெயரில் வெளியான 'திரைப்படம்' என்பவை இவரது கலையுலகப்பயணத்தின் சாதனைகள். இத்திரைப்படத்துக்காகவே அவர் ஆஸ்கார் விருதினையும் பெற்றவர். அண்மையில் பால்டிமோர் நகரில் காவற்துறையினரின் பாதுகாப்பிலிருந்த கறுப்பின இளைஞரின் மரணத்துக்குக் குரல் கொடுப்பதற்காகவும், அதனைத்தொடர்ந்து அங்கு வெடித்த ஆர்ப்பாட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காகவும் 'பால்டிமோர்' என்னும் பாடலை வெளியிட்டு ஆதரவு தெரிவித்தவர் பிரின்ஸ். சமுதாயப்பிரக்ஞையுள்ள கலைஞன் பிரின்ஸின் மறைவு பெரியதோர் இழப்பே. அவருக்கு எம் அஞ்சலி! அவரைப்பற்றிய விரிவான தகவல்களைக்கீழுள்ள விக்கிபீடியா இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Last Updated on Thursday, 21 April 2016 20:39
 

எதிர்வினை: 'வாசிப்பும், யோசிப்பும் 161 - நவகாலத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இணைய இதழ்கள்!' பற்றி..

E-mail Print PDF

கலாநிதி நா. சுப்பிரமணியன்அன்ப! தங்களது 12-03-2016 திகதியிட்ட வாசிப்பும்யோசிப்பும் பகுதியிலே, ‘அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது’ எனக்குறிப்பிட்டதோடு அவ்வாறான செயற்பாடுகளுக்குச்சான்றுகளாக  என்னுடையதும் மற்றும் நண்பர் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்களுடையதுமான ஆய்வுச்செயற்பாடுகளைச்சுட்டி, எம்மிருவருக்கும் கௌரவமளித்திருந்தீர்கள். அதற்காக முதற்கண் எனது மனநிறைவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

அத்தொடர்பிலே மேலும் ஒரு நன்றிக்கடப்பாட்டை உங்களுக்கும் நீங்கள் சுட்டியுள்ள   ஏனைய இணைய இதழ்ச்செயற்பாடாளர்களுக்கும்  தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் என்போன்ற ஆய்வளர்களுக்கும் உளது என்பதையும் இங்கு குறிப்பிட  விழைகிறேன். இது   இணைய இதழ்களின் ஆய்வுநிலைப் பயன்பாடு தொடர்பானதாகும். இத்தொடர்பிலான  சிறு விளக்கமொன்றை இங்கு முன்வைக்கவேண்டியது எனது கடமையாகிறது.. 

ஆய்வு அல்லது ஆராய்ச்சி எனப்படும் செயன்முறையானது  பல படிநிலைகளைக் கொண்டதுஎன்பதை அறிவீர்கள். அவ்வாறான படிநிலைகளைக் கல்வியாளர்கள்முக்கியமான மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

முதலாவது கட்டம் :ஆய்வுகளுக்கான தரவுகளைத் தேடித்திரட்டல்.
இரண்டாவது கட்டம்:திரட்டப்பட்டவற்றைத்தொகை வகைசெய்து விளக்கியுரைத்தல் மற்றும் விமர்சித்தல் .
மூன்றாவதுகட்டம்:குறித்த ஆய்வுப்பொருண்மை சார்ந்த புதிய எண்ணக்கருக்கள்,
புதிய கருதுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கி அவ்வாய்வுப்பரப்பைப் புதிய கட்டத்துக்கு வளர்த்துச்செல்லுதல் .

Last Updated on Saturday, 19 March 2016 18:29 Read more...
 

எதிர்வினை: ’கனடாவில் தமிழ் இலக்கியம் ...’ தொடர்பாக,,! 'இது ஒருவருடைய தனி முயற்சியில் நடைபெறக்கூடியதன்று; பலர் கூடி இழுக்கவேண்டிய தேர்!

E-mail Print PDF

கலாநிதி நா. சுப்பிரமணியன்அன்ப! அண்மையில் வெளிவந்த தமிழர் தகவல்  மலரில் நான் எழுதிய. 'கனடாவில் தமிழ் இலக்கியம்! வரலாறு மற்றும் வளர்ச்சிநிலைகள் தொடர்பான சில அவதானிப்புகள்' என்ற தலைப்பிலான  கட்டுரை  தொடர்பான தங்களது 22 மற்றும் 26 திகதியிட்ட  பதிவுகளை வாசித்தேன்.

எனது அக்கட்டுரை . ஆய்வுச்சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது எனவும் எதிர்காலத்தில் இத்துறை பற்றிய ஆய்வுகளுக்கு உசாத்துணையாக விளங்கக்கூடிய முக்கியத்துவமுடையது எனவும் மதிப்பிட்டிருந்தீர்கள்.  தங்களது அம்மதிப்பீடு எனக்கு  மன நிறைவைத்தருவதாக அமைந்தது என்பதை முதலில் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அக்கட்டுரையிலுள்ள முக்கிய குறைபாடுகள் எனதாங்கள் கருதுவனவற்றையும்  நீங்கள்  எடுத்துக்காட்டியிருந்தீர்கள்.  விடுபட்டமுக்கிய தகவல்களையும்   பொறுப்புணர்வுடன் சுட்டியிருந்தீர்கள்.  அவ்வாறாக நீங்கள் கருதக்கூடிய குறைபாடுகள் மற்றும் விடுபாடுகள் என்பவற்றுக்கு  வேறு யாரும் பொறுப்பல்ல என்பதையும்  நான் மட்டுமே பொறுப்பாவேன் என்பதையும்  உங்களுக்கும் இவ்விணையதள வாசகர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது எனது உடனடியான கடமையாகிறது.

’ கனடாவில் எழும் தழிலக்கியமானது புலம்பெயர்  இலக்கியம் என்பதான பொது அடையாளத்திலிருந்து கனடியத்தமிழிலக்கியம் என்பதான தனி அடையாளத்தை நோக்கி மாற்றமெய்தத் தொடங்கியுள்ளது’  என்பதை உணர்த்தும் வகையில்  ஒரு கட்டுரை எழுதுவதே எனது பிரதான நோக்கம்.  அவ்வாறான வரலாற்றுப்போக்கினை   அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கான முக்கிய  அம்சங்களை  மையப்படுத்தியே  அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 29 February 2016 00:14 Read more...
 

பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு...

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் கவனத்துக்கு...'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் , அனுப்பிய ஓரிரு தினங்களிலேயே தம் படைப்புகள் ஏன் வெளிவரவில்லை என்று மின்னஞ்சல் அனுப்புகின்றார்கள்.

எமக்குப் படைப்புகளைப் பலர் அனுப்புகின்றார்கள் என்பதைக்கவனிக்கவும். சிலர் பாமினி எழுத்துருவில் அனுப்புகின்றார்கள். சிலர் ஒருங்குறி எழுத்துருவில் அனுப்பினாலும், அவற்றில் பல எழுத்துப்பிழைகளுடன் அனுப்புகின்றார்கள். அவர்கள் பாமினியில் எழுதி விட்டு, எழுத்துரு மாற்றி மூலம் ஒருங்குறிக்கு மாற்றி விட்டு, அவ்விதம்  மாற்றுகையில் ஏற்படும் எழுத்துப்பிழைகளைத்திருத்தாமலே அனுப்புகின்றார்கள் என்று நினைக்கின்றோம்.  இவ்விதமான தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

மேலும் கிடைக்கும் படைப்புகள் வாசிக்கப்பட்டு, பதிவுகள் இதழில் பிரசுரிப்பதற்கு உரியனவா என்பது முடிவு செய்யப்பட்ட பின்னரே அவை வெளியாகும் என்பதை அவர்கள் கவனத்துக்கெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எமக்கும் கிடைக்கும் படைப்புகள் , பிரசுரத்துக்கு உரியனவாகத்தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பிரசுரமாகும். படைப்புகள் எப்பொழுது வெளியாகும் என்று விசாரித்து மீண்டும் மீண்டும் கடிதங்களை அனுப்பாதீர்கள் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

Last Updated on Friday, 26 February 2016 00:00
 

வாசகர் கடிதம்

E-mail Print PDF

வாசகர் கடிதங்கள் சில.Dear Mr. Giritharan,  Good day, We read your Pathivugal when ever we get time. You are publishing really valuable information and we spare time to read,even we are so busy in our regular job. Recently i read research articles of  Dr. C. Ravisankar., M.A. Phd, Professor of Madurai Kamarajar University, Madurai, India.  Really awesome researches. I felt along with my friends who are here in Kingdom of Bahrain that really you are doing great job for our great, ancient Tamil language. I wish you all the best your team and all the writers.  Keep rocking...

Your sincerely, Engineer.C.KARUPPIAH,
Al - Manama, Kingdom of Bahrain

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 26 October 2015 06:18 Read more...
 

'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் கவனத்துக்கு..

E-mail Print PDF

'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் கவனத்துக்கு: 'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள், கடிதங்கள் அனுப்புவோர் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it      அல்லது   This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

Last Updated on Monday, 02 November 2015 20:04
 

பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு..

E-mail Print PDF

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்! ("Sharing Knowledge With Every One")" - பதிவுகள்

பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு.. பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பினால் லதா (யூனிகோடு)  எழுத்தினை அல்லது ஏதாவதொரு tsc எழுத்தினைப் பாவித்து தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்ப முன்னர் எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரி பார்த்து அனுப்பி வையுங்கள். மேற்படி பிழைகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்களே பொறுப்பு. தற்போதைய சூழலில் 'பிரதியைச் சரிபாத்தல்' எமக்கு மிகவும் சிரமமானது. இருந்தாலும் முடிந்தவரை திருத்த முயல்வோம். முக்கியமான இலக்கணப் பிழையாக பன்மை எழுவாயும், ஒருமைப் பயனிலையும் கொண்டமைத்த வாக்கியங்களைக் கூறலாம். 'பாமினி' எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைப்பதைத் தவிர்க்க முனையுங்கள். 'பாமினி' எழுத்தில் வரும் படைப்புகள் பதிவுகளில் உடனடியாகப் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். அவற்றை tscற்கு மாற்றும் பொழுது பல எழுத்துகள் , 'இ', 'அ','ஆ', மற்றும் 'ஞ' போன்றன காணாமல் போய் விடுவதால் மீண்டும் அவ்வெழுத்துகளைத் தட்டச்சு செய்ய வேண்டிய மேலதிக வேலை எமக்கு ஏற்பட்டு விடுகிறது.  ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துக்கு மாற்றுகையில் தேவையற்ற எழுத்துகளை இடையிடையே தூவி விடுகின்றது. அவற்றை நீக்குவதென்பது மேலதிக வேலை. குறிப்பாகப் படைப்பானது மிகவும் நீண்டதாகவிருந்தால் தேவையற்ற சிரமத்தைத் தருகிறது.'பாமினி'யில் எழுத விரும்புவர்கள் அவற்றை ஏதாவதொரு  'உருமாற்றி' (Converter) மூலம் tscற்கு மாற்றி, அவற்றை மின்னஞ்சல் செய்தியாக அனுப்பி வையுங்கள். 'உருமாற்றிக'ளை பின்வரும் இணையத் தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்:
http://www.tamil.net/tscii/toolsold.html

Last Updated on Sunday, 08 September 2013 05:14 Read more...
 

பதிவுகளுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் கவனத்துக்கு....

E-mail Print PDF

பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும். பாமினி போன்ற எழுத்துருக்களைப் பாவித்து அனுப்பும் படைப்புகள் இனிமேல் .pdf கோப்பாகவே வெளியாகும். பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும்பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும்.   பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும். பின்வரும் இணையத்தளத்தில் (கண்டுபிடி எழுத்துருமாற்றி)  இதற்கான வசதிகளுண்டு: http://kandupidi.com/converter/ இதுபோல் பல இணையத்தளங்களுள்ளன. அல்லது இலவசமாக எழுத்துருமாற்றி (Converters) மென்பொருள்கள் இணையத்தில்  பல இருக்கின்றன. அவற்றை உங்கள் கணினியில் பதிவிறக்கி, நிறுவிப் பாவிக்கலாம்.

Last Updated on Saturday, 29 March 2014 23:06
 

Novel: AN IMMIGRANT By V.N.Giritharan

E-mail Print PDF

Canadian Tamil Literature!

Novel: AN IMMIGRANT By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]: - I have already written a novella ,  AMERICA, in Tamil, based on a Tamil refugee's life at the detention camp.  The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then,  adding some more short-stories, a short-story collection of mine was published under the  title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes   life at the detention camp, this novel ,AN IMMIGRANT  , describes the struggles  and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN  To read more

Last Updated on Monday, 11 February 2013 02:34
 

வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள் (பகுதி 1)!

E-mail Print PDF

- வ.ந.கிரிதரன் சிறுகதைகள் -[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது  சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான 'வைகறை' மற்றும் வெளிவரும் 'சுதந்திரன்', ஈழநாடு' ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. - ஆசிரியர், பதிவுகள்]

Last Updated on Sunday, 16 October 2011 23:15 Read more...
 

பதிவுகள் வாசகர்களுக்கு ...

E-mail Print PDF

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

பதிவுகள் வாசகர்களே! பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு இவ்விதழில் மாறியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதே சமயம் பதிவுகளின் வழமையான அம்சங்கள் பல இவ்விதழில் விடுபட்டுள்ளதையும் அவதானித்திருப்பீர்கள். பதிவுகளின் வழமையான அனைத்து அம்சங்களும், இதுவரை வெளியான ஆக்கங்கள் அனைத்தும் படிப்படியாக இப்புதிய வடிவமைப்பினுள் இணைத்துக்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றோம். அதுவரை சிறிது பொறுமை காக்க. வழமைபோல் உங்கள் ஆக்கங்களை நீங்கள் பதிவுகளுக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

ஆரம்ப காலத்து ''பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011)  இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில், எழுத்துருவில் (திஸ்கி எழுத்துரு,  அஞ்சல் எழுத்துரு)  நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே: இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) : கடந்தவை

Last Updated on Monday, 02 November 2015 20:08
 


பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள் / அறிவித்தல்கள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் கடந்தவை (மார்ச் 2000 - மார்ச் 2011)
வெங்கட் சாமிநாதன் பக்கம்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
கட்டடக்கலை / நகர அமைப்பு / வரலாறு/ அகழாய்வு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன் பக்கம்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
சுப்ரபாரதிமணியன் பக்கம்
சு.குணேஸ்வரன் பக்கம்
யமுனா ராஜேந்திரன் பக்கம்
நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
தேவகாந்தன் பக்கம்
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா பக்கம்
எழுத்தாளர் பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன் பக்கம்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
குரு அரவிந்தன் பக்கம்
சத்யானந்தன் பக்கம்

counter for tumblr

அண்மையில் வெளியானவை

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.
இலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.

'ஓவியா' பதிப்பக விபரங்கள்:
Oviya Pathippagam

17-16-5A, K.K.Nagar,
Batlagundua - 642 202
Tamil Nadu, India

Phone: 04543 - 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com

பதிவுகள் இதுவரையில் (2000 - 2011)

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

அ.ந.கந்தசாமி படைப்புகள்

புதிய பனுவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Wikileaks


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

ISSN  1481 - 2991
ஆசிரியர்: வ.ந.கிரிதரன் Editor-in - Chief: V.N.Giritharan

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"
'பதிவுகள்' இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.  'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளில் தேடுக!

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர்...

'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து  வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுர