Tuesday, 21 February 2012 19:38
- தமிழ்மணவாளன் -
நிகழ்வுகள்

*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2011ஆம் ஆண்டு ( ஜனவரி 2011 முதல் திசம்பர் 2011 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.
Last Updated on Tuesday, 21 February 2012 19:41
Read more...
Tuesday, 21 February 2012 19:20
- கே.எஸ்.பாலச்சந்திரன் -
நிகழ்வுகள்
புலம்பெயர் எழுத்தாளர்களில் தனது படைப்புக்களினால் உலகளாவிய தமிழ் வாசகர்களின் கவனத்தை ஈர்த்த மிகச்சிலரில் குறிப்பிடக்கூடிய ஒருவர், கனடாவை வாழ்விடமாகக்கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன். சென்ற ஆண்டில் இந்தியாவில் கலைமகள் சஞ்சிகை நடாத்திய குறுநாவல் போட்டியில் “தாயுமானவர்” என்ற இவரது குறுநாவல் விருது பெற்றதின் தொடர்ச்சியாக, கனடாவில் புகழ்பெற்ற “தமிழர் தகவல்” விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாற்றலுக்காக இந்த விருதைப்பெற்ற மிகச்சிலரில் குரு அரவிந்தனும் இடம்பெறுவது பொருத்தமானதே. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரே எழுத்துப்பணியில் புயலென உருவாகிய இவரது படைப்புகள் உலகின் பலபாகங்களில் வெளிவரும் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஏராளமான வாசகர்களைக்கொண்ட பிரபல சஞ்சிகைளில் அண்மைக்காலத்தில் இவரது படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. “ஆனந்தவிகடன்” சஞ்சிகை வெளியிடும் தீபாவளி மலர்களுக்காக இவரது சிறுகதைகளை கோரிப்பெற்று பிரசுரிப்பது பெருமை தரும் சந்தர்ப்பங்களாகும். குறிப்பாக இவர் எழுதிய இருபத்துநான்கு பக்கக் கதையான “நீர் மூழ்கி நீரில் மூழ்கி” ஆனந்தவிகடனின் ஒரே இதழில் முதன்முறையாக ஐந்து புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுடன் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டினைப் பெற்றது.
Last Updated on Tuesday, 21 February 2012 19:37
Read more...
Monday, 20 February 2012 21:10
- சு.குணேஸ்வரன் -
நிகழ்வுகள்

கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் பயிலும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆற்றுகைக் கலையும் கலந்துரையாடலும் 19.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை பருத்தித்துறை அறிவோர் ஒன்றுகூடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. கலாநிதி சி. ஜெயசங்கர் தலைமையிலான கிழக்குப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்த்திய மேற்படி நிகழ்வில் கண்டியரசன் தென்மோடிக்கூத்திலிருந்து சில ஆட்டமுறைமைகள், (அரசன் மந்திரி வரவு, தோழிமார் பூப்பறிக்கச் செல்லுதல்) மழைப்பழம் சிறுவர் கூத்துப் பாடல்கள், வடமோடி மற்றும் தென்மோடி அரசர் வருகைப்பாடல் ஆட்டமுறைமைகள் என்பன நிகழ்த்திக் காட்டப்பட்டன.
Last Updated on Monday, 20 February 2012 21:59
Read more...
Monday, 20 February 2012 18:20
-சு. குணேஸ்வரன் (துவாரகன்)
நிகழ்வுகள்
 சயந்தனின் ஆறாவடு நாவல் பற்றிய கலந்துரையாடல் ஒன்று 18.02.2012 சனிக்கிழமை கவிஞர் சத்தியபாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தபின், நிலாந்தன், கருணாகரன், சசீவன், துவாரகன், சு. ரமேஸ் ஆகியோர் உரையாடலில் பங்கெடுத்தனர். நிலாந்தனின் உரையானது; சயந்தனின் நாவலில் வெளிப்படும் அரசியல் பற்றியதாகவே அமைந்திருந்தது. தமிழரின் காயங்களை உலகளாவிய கூட்டுக்காயங்களுடன் இனங்காண்பதுடன் இந்நாவல் நிறைவு பெறுகின்றது என்றார். ஒப்பீட்டளவில் எல்லாத்தரப்பினரையும் கவனத்தில் எடுக்கும் வகையில் நாவல் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சாத்திரியார், சனாதனன், பா.அகிலன் ஆகியோரின் படைப்புக்களும் உரையில் ஒப்பிட்டுப் பேசப்பட்டது. கருணாகரனும் இந்தக் கருத்துக்களை ஒட்டியே மேலும் தனது உரையினை நிகழ்த்தினார். தபின் உரை நிகழ்த்தும்போது சயந்தனுடன் ஒரு நாடகத்தில் நடித்த அனுபவத்துடன் நாவல் பற்றிய உரையினை நிகழ்த்தினார். நாவலில் வரும் சம்பவங்களை, உண்மை நிகழ்வுகளை வாசிக்கும்போது யுத்தத்தினால் எங்களுக்கு ஏற்பட்ட வடுக்களே ஞாபகங்களாக வருகின்றன எனக்குறிப்பிட்டார்.
Last Updated on Monday, 20 February 2012 21:10
Read more...
(21) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
இதுகாறும் நான் எழுதிவருவனவற்றைப் படிப்பவர்களிடமிருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் ஒரு சில வகைகளுள் அடங்கும்.
1. தங்களுக்குப் பிடித்த, ஏதோ கலைமேதையென தமக்குள் கற்பித்துக்கொண்டு பாலாபிஷேகம்ம் செய்து பூசிக்கும் சில நடிகர்களை அவர்கள் நடித்த படங்களை, சில இயக்குனர்களையெல்லாம் குறிப்பிட்டு அவர்கள் இயக்கிய படங்களையும் பட்டியலிட்டு, ”இவையெல்லாம் நல்ல படங்கள் இல்லையா?” என்று தம்முள் பொங்கி எழும் சீற்றத்தை அல்லது தமக்குள் வதைபடும் மிகுந்த மன வேதனையைக் கொட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்கு நான் முன் வைக்கும் கருத்துக்கள் பார்வைகள் எதையும் எதிர்கொள்ளும் மனமிருப்பதில்லை. அவற்றையெல்லாம் படித்தும், அது பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், தம் கையிலிருக்கு விளக்குமாற்றால் ஒரே வீச்சில் அவ்வளவையும் துடைத்து எறிந்து விட்டு, தாம் முன் கொண்டிருந்த மனநிலைக்கே திரும்பி இதெல்லாம் நல்ல படமில்லையா, அதெல்லாம் நல்ல படமில்லையா? என்று தொண்டை அடைக்கக் கேட்கும் போது, அதை ஒரு வேதனைக் குறல் என்றே சொல்லவேண்டும், குரல் கம்மிக் கம்மி, கதற ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுகாறும் தம் சொப்பன சுகத்தில் ஆழ்ந்திருந்ததெல்லாம் பொய் எனச் சொல்லப்பட்டால் நிலை குலைந்து போவதைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை.. இல்லையெனில் திடீரென ஒரு அதிர்ச்சியும் கையாலாகாச் சீற்றமும். பத்து வயது அண்ணனுக்கு வீட்டில் அடி விழுந்தால் ஆறு வயது தம்பி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிடுவான். அண்ணன் எதற்கு அடிபடுகிறான், என்ன சொல்லி அப்பா அடிக்கிறார் என்பதெல்லாம் அவனுக்குப் புரிவதேயில்லை. அன்ணன் அடி படுவது தெரிகிறது. அது அவனால் தாங்க இயலாது. இரண்டாவது தான் தனித்து விடப்பட்ட துக்கம் வேறு. தாங்கத் தான் முடிவதில்லை. தம்பிப் பையனுக்கு
Last Updated on Saturday, 18 February 2012 23:29
Read more...
[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]
11-ம் அத்தியாயம்: சுந்தரேஸ்வரர் சந்நிதியில்
 பத்மா நீச்சல் ராணிப் போட்டியில் கலந்து கொண்டது பற்றி பரமானந்தர் எவ்விதக் கவலையோ கோபமோ கொள்ளாதபடி ஸ்ரீதரும் சுரேசும் பார்த்துக் கொண்டனர். ஸ்ரீதர் பத்மாவை அன்று வழக்கத்துக்கு மாறாகத் தனது ‘பிளிமத்’ காரில் கொலீஜ் ரோட்டிலுள்ள அவள் வீட்டிலேயே கொண்டு போய் இறங்கி விட்டான். பரமானந்தர் கூட அன்று தான் அவன் காரை முதன் முதல் பார்த்தார். சிவநேசரின் மகன் என்பதை மூடு மந்திரமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் முற்றிலும் தீர்ந்து விட்டதும், பத்மாவுக்கும் தனக்குமுள்ள காதல், திருமணக் கட்டத்தை அடைந்து விட்டது, இனி யாருக்கும் தான் அஞ்சாமல் காரியங்களைச் செய்யலாம் என்று அவன் நம்பியதுமே அவன் இவ்வாறு பகிரங்கமாகத் தன் படாடோபக் காரில் பத்மா வீட்டுக்குப் போகும் துணிவைப் பெற ஏதுவாயிருந்தது. பத்மா - ஸ்ரீதர் திருமணத்தை விரைவில் செய்து முடிக்க இன்னும் ஒரே ஒரு நடவடிக்கைதான் எடுக்கப்பட வேண்டியிருந்தது. தந்தை சிவநேசரதும் தாய் பாக்கியத்தினதும் ஆசியைப் பெறுவதே அது. ஸ்ரீதருக்கு அது மிகவும் அற்ப விஷயமாகவே பட்டது.
Last Updated on Friday, 17 February 2012 17:56
Read more...
Wednesday, 15 February 2012 23:37
administrator
நிகழ்வுகள்

நிகழ்வை தொடங்கி வைப்பவர்: படத்தொகுப்பாளர் லெனின் ஆவணப்பட இயக்குனர்: ம. சிவக்குமார் நாள்: 18-02-2012 & 19-02-2012, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை நேரம்: காலை பத்து மணி முதல் (இரண்டு நாட்களும்) இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே) முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
Last Updated on Thursday, 16 February 2012 00:10
Read more...
Wednesday, 15 February 2012 23:21
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
நூல் அறிமுகம்
அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற நூலும், இறுவட்டும் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இந்நூலை கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தனது இரண்டாவது தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கனலாய் எரிகிறது என்ற கவிதைத் தொகுதியை புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியிட்டுள்ளார். 2010 இல் இலங்கை அரசு இவருக்கு கலைத்துறையில் ஆற்றிய பணிக்காக கலாபூஷண விருது வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற கவிதைத் தொகுப்பு 27 பக்கங்களில் வெளிவந்திருக்கிது. இத்தொகுதியில் 69 பாடல்வரிகள் அமைந்துள்ளன. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிலத்தைப் பிழந்த சுனாமியில் உயிர்நீத்த உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும்... நெஞ்சத்தைப் பிழந்து என்று நூலாசிரியர் தனது சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளார்.
இவர் 1977 இல் இலக்கிய உலகில் அடிபதித்தவர். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் இவரது 100க்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்கள், ஒரு சங்கீத ஆசானால் பாடப்பட்டுள்ளன. நிந்தவூர் அல்-அஷ்ரக் உயர்தரப் பாடசாலையிலும், சாய்ந்தமருது முன்பள்ளி கல்வி நிலையம் ஒன்றிலும் இவரது காலை வந்தனப் பாடல்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன. கே.எம்.ஏ அஸீஸ் இவ்வாறு கவிதைத் துறையில் அகலக் கால்பதித்து நிற்கிறார். ஏழாண்டு சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நினைவஞ்சலி விழாவில் வெளியாகும் இவரது கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியமும், இறுவட்டு;ம் எதிர்கால சந்ததியினரின் ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை என்கிறார் இந்நூலுக்கு உரை எழுதியிருக்கும் கலாபூஷணம் யூ.எல் ஆதம்பாவா அவர்கள்.
Last Updated on Wednesday, 15 February 2012 23:31
Read more...
Wednesday, 15 February 2012 19:00
இர.மணிமேகலை (கோவை) ,துவாரகன் , மன்னார் அமுதன், முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) ,மெய்யன் நடராஜ் (இலங்கை), ஜுமானா ஜுனைட் (இலங்கை)
கவிதை
Last Updated on Thursday, 16 February 2012 17:43
Read more...
Monday, 13 February 2012 21:08
கம்பன் கழகம் பிரான்சு:
நிகழ்வுகள்

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் விழாவை 19.02.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14.00 மணிமுதல் 20.00 மணிவரை கொண்டாடுகிறது.
Last Updated on Monday, 13 February 2012 21:13
Read more...
Sunday, 12 February 2012 21:53
By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]
வ.ந.கிரிதரன் பக்கம்
23. HEADING TOWARDS LAWYER ANISMAN’S OFFICE!

- I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. - V.N.GIRITHARAN -
Distributing the advertisement pamphlets for Carlo in the evenings gave them yet another new experience. At the intersection between Fourth Street West and Sixth Avenue, Ilango began his work of distributing the advertisement pamphlets. Arulrasa worked at the junction where Christopher Road, Seventh Avenue and Fourth Street West met. They had no real stress in distribution. The initial feeling of hesitation and embarrassment were all gone with the wind in just a few minutes. “Two for one …two for one…” “Buy one; get one free!” Such phrases were the slogans for Carlo’s “throwaway price” sales. And, soon it became easier for them to shout the slogan words and distribute them to the passersby. A few people stopped to inquire about the sales and asked for advertisement pamphlets as well. They had to distribute at least one thousand pamphlets, each. Carlo said if one thousand were distributed, at least one hundred would pay a visit to his shop. Of them, at least ten or fifteen would buy something and go. As they continued with their distributions, more andmore the pedestrians stopped and inquired, thereby making the whole process easier with time.
Last Updated on Tuesday, 14 February 2012 22:58
Read more...

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் 'பாரதியைப் பயில...' http://www.mahakavibharathiyar.info வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும்.
நன்றி.
அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Monday, 13 February 2012 20:55
Sunday, 12 February 2012 19:53
By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]
வ.ந.கிரிதரன் பக்கம்
CHAPTER 17: HARIBABU’S ROADSIDE BUSINESS!

- I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. - V.N.GIRITHARAN -
The whole night, Ilango’s mind wondering who and what Haribabu was. He couldn’t wait to meet this person the next day and ask about his work. Now and then, he couldn’t help wondering whether the person would also be a puzzle just the way his advertisement was. Whatever the case may be, if they got a job and if it would be a permanent job, all would be good. His mother’s letter also stressed on him getting a job. He was reminded of the golden proverb, which his grandmother used to always mutter, “Wherever the cursed went, there were pits and wasteland all over.” It looked like as if the proverb had been coined just for his sake. Whenever, he would think of grandmother he would be filled with wonder and awe. grandmother belonged to the bygone golden era. More than bookish education, she had the wisdom of worldly experience. She would look bright and happy always. He had never seen her lose her cool and shadow rage. “Oh, fare thee well, my boy – my blessings are always with you,” grandma would wish them every time and hearing her words always left them feeling immensely happy. And, her cooking has no equal in the world! Her ‘Mulaikeerai’ and hot beverage and curd would prove eternally tasty, no matter how many times one had to eat it! A sturdy woman with a strong mind! Another especial quality of grandma was her mastery over words! She was indeed a maestro in handling language and its components. In the 70s, sporting Bell-bottoms and long hair, Ilango would be roaming around and if she happened to see him she would greet him, calling out, “Hey, come – you 'Peeththal Parangi'” Hearing her words of greeting, he would enter inside, with the bottom corners of his bell-bottom looking sticky and dirty with the oily residue residing inside the cycle-chain, smiling sheepishly.
Last Updated on Sunday, 12 February 2012 22:43
Read more...
புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிகை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிகை. தினசரிப் பத்திரிகை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்கு பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிகைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட கழக படிப்பகத்தில் அப்போது வந்து கொண்டிருந்த தினசரி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் எதுவும் கிடைக்காது. கழக பிரசார பத்திரிகைகள் தவிர வேறு எதற்கும் அங்கு இடம் இருந்ததில்லை. அந்த பழக்கத்தில் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்ததும் விடுதலை பத்திரிகைக்கு பணம் கட்டி வரவழைத்தேன். கண்ணில் பட்ட அதைப் பார்த்த செல்லஸ்வாமி. அவர்தான் ஹிராகுட்டில் எனக்கு போஷகர் மாதிரி, “என்ன இதையெல்லாம் படிக்கிறாய்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவருக்கு அது தான் விடுதலை பத்திரிகையோடு முதல் பரிச்சயம். நான் அப்போது விடுதலைப் பத்திரிகையை மீறி வளர்ந்து விட்ட போதிலும், ஏதோ பழக்க தோஷத்தில் ஒரு தினசரி என்று தான் அதை வரவழைத்தேன். அந்த முதல் மாசத் தோடு விடுதலையை நிறுத்தினேன்.
Last Updated on Sunday, 12 February 2012 20:03
Read more...
Saturday, 11 February 2012 21:12
By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]
வ.ந.கிரிதரன் பக்கம்
13. I WANT A JOB

- I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. - V.N.GIRITHARAN -
Another day dawned. As usual, with the always availale existential problems. Arulrasa and Ilango were deep in thought, wondering how to start the day and how to spend it. Ilango was first to speak his thoughts.
“Arul, I have to get a job really soon. What is your plan?”
“I am also seriously searching for a suitable job. But, nothing comes my way. Wherever I go, they are insisting on a Social Insurance Card. If you ask me, I think it will be better if we try to get that first. Let us go to the Immigration office and try our best to secure that Card. What do you say?”
“Arul, it’s a nice idea, but, of course, there are many obstacles. But let’s first go there today and enquire. After that, we can then begin our job-hunting...”
"Ya, that is good. We will do that. Let us go find a solution to this problem. If we feel that it is not going to be helpful, then, like you, I should also gear myself to accept any kind of job.”
Last Updated on Sunday, 12 February 2012 06:05
Read more...
Saturday, 11 February 2012 20:59
By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]
வ.ந.கிரிதரன் பக்கம்
Chapter 9 The pride and glory of 42nd Road!

- I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. - V.N.GIRITHARAN -
Ilango and Arulrasa had planned to spend the day wandering in the Manhatten area of New York City. As far as Ilango was concerned, he was prepared to get into any kind of job at once. But, Arulrasa was not prepared for that. The dialogue between the two, given below, which took place that morning, is enough for anyone to understand why such a difference in opinion existed.
“Okay Arulrasa, as Gosh said, it seems like we should seek the help of the Employment Bureau agent, Peter.”
Last Updated on Saturday, 11 February 2012 21:14
Read more...
Saturday, 11 February 2012 00:20
- அ.ராமசாமி -
இலக்கியம்
 ['புத்தம் வீடு' என்னும் தனது நாவலின் மூலம், உலகத் தமிழிலக்கியத்தில் தன் தடத்தினைப் பதித்த ஹெப்ஸிபா ஜேசுதாசன் பெப்ருவரி 9, 2012 அன்று இயற்கை எய்தினார். அவரது நினைவாக 'அ.ராமசாமி எழுத்துகள்' என்னும் வலைப்பதிவில் வெளியான கட்டுரையினை மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்-] ஹெப்ஸிபா ஜேசுதாசன் அறுபதுகளின் மத்தியில் ‘புத்தம் வீடு’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தவர். தான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி, தமிழ் இலக்கியச் சூழலில் நிலவும் ஒரு மனோபாவத்திற்கு எதிராக இயங்கியும் வருபவர். தமிழ் இலக்கியச் சூழல் என்பது பொதுவாக அறுபதுகளுக்கு முந்தியும் பிந்தியும் இரண்டு முகங்களைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. குழுமன நிலையோடும், கட்சி அடிப்படையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சிறுபத்திரிகை உலகம் ஒரு முகம். இதில் ஒரு எழுத்தாளன் ஒரு குழு சார்ந்தவனாகவோ, அல்லது கட்சி சார்ந்தவனாகவோ அடையாளங்காணப்படுதல் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இன்னொரு முகம் வெகுஜனப் பத்திரிகைகளின் உலகமாகும். பெருமுதலாளிகளின் வணிக லாபத்திற்கு எழுத்துச் சரக்கினை உற்பத்தி செய்யும் பேனாத் தொழிலாளர்களைக் கொண்டது இம்முகம். இவ்விருமுகங்களில் ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ளாமல் இயங்கி வருபவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன். அதே வேளையில் சிறுபத்திரிகைக் குழுவினராலும், கட்சி சார்ந்த விமரிசகர்களாலும் புறமொதுக்கப்படாமல், தமிழ் நாவல் இலக்கியத்திற்கு முக்கியப்பங்களிப்பு செய்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர். இத்தகைய விதிவிலக்குகள் நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் வெகு சொற்பமே.
Last Updated on Saturday, 11 February 2012 00:46
Read more...
Thursday, 09 February 2012 21:52
- அருண் & குணா -
நிகழ்வுகள்

நாள்: 11-02-2012, சனிக்கிழமை நேரம்: மாலை 5.30 மணி. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே) முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
Last Updated on Thursday, 09 February 2012 21:56
Read more...
Thursday, 09 February 2012 21:42
- பாண்டித்துரை -
நிகழ்வுகள்
வணக்கம், எதிர் வரும் 12.02.2012 ஞாயிறு மாலை 6- மணியளவில் ''ஜீராங் ஈஸ்ட்" (Jurong Regional Library - Jurong East MRT) நூலகத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடான நண்பர் ஷாநவாஸ் எழுதிய "ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்" புத்தகம் வெளியீடு காணவிருக்கிறது. இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து உயிர்மை பதிப்பாளர் எழுத்தாளர் கவிஞர் மதிப்பிற்குரிய மனுஸ்யபுத்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். விழாவிற்கான அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன், உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். புதிய நண்பர்களை அழைத்துவாருங்கள்.
Last Updated on Thursday, 09 February 2012 21:49
Read more...
Wednesday, 08 February 2012 20:58
By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]
வ.ந.கிரிதரன் பக்கம்
CHAPTER 5 FROM ILANGO’S DIARY…
From Ilango’s Diary…

- I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. - V.N.GIRITHARAN -
When they arrived at Saraswathi Camp, there were absolutely no facilities for the refugees, not even the bare essentials. My fellow-students at the University, the other Tamil youths, and I came together and formed a Volunteer Team. Then, till that time we left for Yaazhpaanam in the ship called Chidambaram, It had been sent by the government of Tamil Nadu to evacuate the refugees, We remained in that camp and served as volunteers. Till I reached Yaazhpaanam, my voyage in the vessel called Chidambaram was unknown to my family back home. My family was in the dark as to whether I was alive or not. I sought the help of a person belonging to my village, who was with me in the refugee camp and who found a berth in Sri Lankan government’s cargo vessel called ‘Lankarathna.’ He was returning home. I had requested him to inform my family about my condition. On reaching Yaazhpaanam, he went on to stay with his relatives there in Kaithadi and hence he couldn’t inform my family about my situation. Only after I arrived in Chidambaram and reached my home, did he return and visit my family to inform them of me being alive.
Last Updated on Thursday, 09 February 2012 17:31
Read more...
கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் 'பை'யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய 'புக்கர்' விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் நான் வாசித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களிலொன்றாக இந்நாவலும் அமைந்து விட்டதென்று கூறினால் அது மிகையான கூற்றல்ல. ஜான் மார்டெல்லின் இந்த நாவல் பல்வேறு காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளது. அவற்றில் முக்கியமானவையாக நான் கருதுவது: கதை கூறப்படும் முறை, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, மானுட இருப்பு பற்றிய தேடல், இயற்கை பற்றிய சித்திரிப்பு... இவைதான் முக்கியமாக இந்நாவல் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம். இவையெல்லாம் சேர்ந்து இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தையொரு இன்பகரமானதொரு அனுபவமாக்கி விட்டன. அதன் விளைவே இந்நாவல் பற்றிய எனது இந்தக் குறிப்புகளும்.
Last Updated on Thursday, 09 February 2012 22:40
Read more...
Wednesday, 08 February 2012 20:10
- ந.முரளிதரன் -
நிகழ்வுகள்
காலம்: மார்ச் 4, 2012 , ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 4.00 மணிக்கு இடம்: கனடா சிறிசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கலாச்சார மண்டபம், 1 Golden Gate Court , Unit -1 (Brimly/Ellesmere சந்திப்புக்கு அருகாமையில்) தற்போது சுவிசில் வாழ்ந்து வரும் சயந்தன் எழுதிய முதலாவது நாவலான “ஆறா வடு” நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் பலரதும் வரவேற்பைப் பெற்றிருந்ததை ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியத் தலையீடு, அதற்குப் பின்னரான இலங்கை அரசின் சமாதானப் பேச்சுவார்த்தை போன்றவை நடைபெற்ற காலகட்டங்களில் நிகழ்ந்த விடயங்கள் இந்நாவலில் பேசப்படுகின்றன. அளம்பில் யுத்தத்தில் ஒரு காலை இழந்த போராளி இளைஞன் பின்னர் அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு புலிகள்-ரணில் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் யாழ்பாணத்திற்கு அரசியல் வேலை செய்யப் போகின்றான். அங்கு அவன் காதலிக்கின்றான் அகிலா என்ற பெண்ணை. பின்னர் இயக்கத்தை விட்டு வெளியேறி நீர்கொழும்பிலிருந்து கடல் பயணம் மூலமாக இத்தாலி புறப்பட்டுச் செல்கிறான். இவற்றுக்கு இடையில் அவன் சந்தித்தவை, கண்டவை, நினைத்தவை என நகர்ந்து செல்கிறது இந் நாவல். இதில் வரும் மொழிபெயர்பாளர் "நேரு ஐயா" என்ற பாத்திரம் யாழ்பாணச் சமூகத்தின் மனோநிலைக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓர் உதாரணம். அண்மைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை உள்ளடக்கும்விதமாக ஈழத்து எழுத்தாளர்கள் எவருமே நாவல் எதனையும் படைக்கவில்லை. அந்த வகையில் "ஆறா வடு" முக்கியமான ஒரு நாவல். இலக்கிய ஆர்வலர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு -) 647-237-3619
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Wednesday, 08 February 2012 20:16
Sunday, 05 February 2012 06:49
Tamil Coordinating Committee
அரசியல்
 Three years have passed since the Government of Sri lanka (GoSL) announced the end of the armed conflict, but to date it has not taken any steps towards a permanent political solution for the genuine grievances of the Eelam Tamil people. Eelam Tamils have been pursuing their just struggle for freedom for more than 60 years; part of that was an armed conflict. Recent years have witnessed some of the most horrendous crimes against humanity committed by Sri Lankan armed forces against the Tamils. The suffering has only strengthened the resolve of the people for justice. To symbolise the continuation of the struggle, and to coincide with the 19th Session of the UN Human Rights Council, three Tamil youths from Europe (Gracian from Switzerland, and Kajan and Selvin from France) have joined together to conduct a ‘walk for justice’ from Brussels to Geneva.
Last Updated on Sunday, 05 February 2012 07:02
Read more...
Saturday, 04 February 2012 23:31
- கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -
கவிதை

உள்ளத்தில் வேதனை யெனும் நெருப்பை மூட்டி! நேந்திரமாம் ஒளிமலரை இறுக மூடி! பிரிந்ததேன்..?என் தாயே..! துடித்து வாடி..! ஹிதாயாமகள் கதறிப்புலம்புவதை காணீரா யோ..?
Last Updated on Saturday, 04 February 2012 23:40
Read more...
ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges - பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கோடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ஹங்கரியர் பெயர்தான் மறந்து போனது. அவர் பின்னர் இந்தியாவுக்கும் வந்திருந்தார். அவரோடு நிகழ்ந்த ஒரு எழுத்தாளர் கூட்டத்தில் நம் க.நா. சுப்ரமணியம் கலந்து கொண்டது பற்றி Quest என்னும் காலாண்டு பத்திரிகையில் படித்திருக்கிறேன். அதற்கும் முன் The God That Failed – ல் தன் அனுபவங்களை எழுதியவர்களில் இன்னொருவரான, Stephen Spender, Iஇவர் ஒரு ஆங்கில கவி, Encounter என்னும் ஒரு மிகச் சிறந்த மாதப் பத்திரிகையை நடத்தி வந்தார் அது எனக்கு 1950 களில். எனக்கு புர்லாவில் ஒரு ரூபாய்க்குக் கிடைத்தது. அவரும் இந்தியாவுக்கும் சென்னைக்கும் வந்திருந்தார். அவரையும் சந்தித்து அவர் சென்னையில் இருந்தவரை அவரோடு உடன் இருந்தவர் க.நா. சுப்ரமண்யம், அது பற்றி (கொஞ்சம் மூச்சை நிறுத்திக் கேட்டுக் கொள்ளலாம்) ஆனந்த விகடனில், ஆமாம் ஆனந்த விகடனில்தான், எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் க.நா.சு. எப்படி எழுத நேர்ந்தது? அவர் எழுதுவது ஒரு ஆங்கில கவிஞர் பற்றியல்லவா? புதுமைப் பித்தனைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தால் இடம் கிடைத்திருக்குமா, சந்தேகம் தான்.
Last Updated on Friday, 03 February 2012 22:26
Read more...
Friday, 03 February 2012 21:30
-சு.குணேஸ்வரன்
நிகழ்வுகள்
புதிய நூலகத்தின் 9 வது மற்றும் 10 வது செய்திமடல்கள் சிறிய இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்துள்ளன. 9 வது இதழில் ‘சிறப்புச் சேகரங்கள் வலைவாசல்கள்’ என்ற செய்தியுடன்; இராகவன் எழுதிய ‘புதிய தரிசனம் ஒரு நினைவோடை’, தீபச்செல்வன் எழுதிய ‘வன்னியில் அழிந்த நூல்கள்’, நற்கீரன் எழுதிய ‘தமிழில் திறந்த தரவுகள் ஏன் எப்படி’ ஆகிய கட்டுரைகளும்; கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயம், கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்ற ‘எண்ணிம நூலக அறிமுகம்’ பற்றிய சி.சேரனின் நிகழ்வுக்குறிப்புக்களும், அ.யேசுராசா பற்றிய பதிவும் இடம்பெற்றுள்ளன.
Last Updated on Friday, 03 February 2012 22:06
Read more...
Thursday, 02 February 2012 22:00
Prime Minister Stephen Harper
அரசியல்
 [February 1, 2012 Ottawa, Ontario] Prime Minister Stephen Harper today issued the following statement in recognition of Black History Month: "Every February, Canadians celebrate Black History Month by learning about and reflecting upon the legacy and accomplishments of black Canadians. “In conjunction with the 200th anniversary of the War of 1812, we are taking a special look this year at the important contributions made by black soldiers to the historic battles that helped define the country that Canada would ultimately become. "One of the heroes of the fight for Canada was a freed slave named Richard Pierpoint, who, in his late 60s, volunteered and served with distinction in a number of battles in the Niagara Peninsula. “Many of the former slaves and black Loyalists who fought on the Canadian side during the War of 1812 settled in places such as Nova Scotia and south-western Ontario, where they and their descendants formed communities that continue to enrich Canada to this day.
Last Updated on Thursday, 02 February 2012 22:31
Read more...
Thursday, 02 February 2012 21:07
BTF Press Release, News
நிகழ்வுகள்
The All Party Parliamentary Group for Tamils (APPGT) in collaboration with the British Tamils Forum (BTF) held an exhibition on 31st January 2012, at the UK Parliament building. The exhibition highlighted the current situation of the Tamils in Sri Lanka; and why, the Lesson Learnt and Reconciliation Commission (LLRC) report recently published by the Sri Lankan Government will not deliver justice to the Tamil civilians for the crimes committed by the Sri Lankan Armed Forces during the final stages of the war in 2009.
The event in portcullis house was well attended by MPs from all the major parties, Members of European parliament, Peers from the House of Lords and diplomats from various foreign missions in London and journalists. Photos, books, publications, documentaries and videos were on display. There were also key eyewitnesses to the bloody war in Sri Lanka present at the event. Over one hundred invited honourable guests attended the event and were given information pack containing reports, documents and photographs. A printed version of Tamil National Alliance (TNA) response to the LLRC was also given to the visitors.
Last Updated on Thursday, 02 February 2012 21:32
Read more...
Thursday, 02 February 2012 20:42
- நவஜோதி யோகரட்னம் -
நிகழ்வுகள்
 சலங்கை நர்த்தனாலயா நுண்கலைப் பீடத்தின் அதிபர் நாட்டியக் கலாசாரதி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் வருடாந்த கலைகளின் சங்கமம் அண்மையில் லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பல்வேறுபட்ட கலை வல்லுநர்களின் கலைத் திறமைகள் வெளிப்பட்டதோடு பிரதம விருந்தினராக சங்கீத வித்துவான் மணிபல்லவம் கே.சாரங்கன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Last Updated on Thursday, 02 February 2012 21:55
Read more...
Tuesday, 31 January 2012 23:04
மாலினி அரவிந்தன்
நிகழ்வுகள்
Last Updated on Tuesday, 31 January 2012 23:24
Read more...
Tuesday, 31 January 2012 21:33
- ஜெயமோகன் -
இலக்கியம்
2. வரலாற்றில் வண்ணம் சேர்த்தல்
- 2011ற்கான இந்திய மத்திய அரசின் 'சாகித்திய அகாடமி' விருதினைத் தமிழுக்காகப் பெற்ற நாவல் சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்'. இந் நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கின்றார். அதன் முதற் பகுதி ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் மீள்பிரசுரமாகியுள்ளது. அதன் இரண்டாம் பகுதி இம்முறை வெளியாகின்றது. - பதிவுகள் -
 வரலாற்று நாவல் என்பது என்ன? முகங்களாக ஆக்கப்பட்ட வரலாறு என்று அதைப்பற்றி கூறலாம். வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று நாவலின் கலை. சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ ஏன் ஒரு தோல்வி என்றால், அந்நாவல் இந்தச் சவாலில் வெல்ல முடியவில்லை என்பதே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ஏன் வெற்றிகரமான நாவல் என்றால் மொத்த வரலாற்றையும் நாமே சென்று வாழ்ந்து விட்டு மீளக்கூடிய ஒரு பரப்பாக, என்றும் உணரும் வாழ்க்கையாக அது மாற்றிவிடுகிறது என்பதே. அதாவது செல்லப்பாவின் நாவலில் நாம் வரலாற்றையே காணமுடியும். அதேசமயம் தல்ஸ்தோயின் நாவலில் நாம் வாழ்க்கையையே வரலாறாகக் காண்கிறோம். இதையே வரலாற்றுக்கு வண்ணம் சேர்க்கும் பணி என்று கூறுகிறேன்.
வரலாற்றின் பக்கங்களில் நாம் காண்பது ஒரு செய்தியை. ‘கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட குமார கம்பணன் என்ற மன்னன் தன் பெரும் படையுடன் இஸ்லாமிய தளகர்த்தர்களால் ஆளப்பட்ட மதுரைமீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றினான்.’ ஆனால் அதை காவல் கோட்டம் ஒரு நிகழ்வாகச் சித்தரிக்கிறது. ‘வைகையின் நீர் மெலிந்து வடகரையோரம் நூலாக ஓடியது’ என்று ஆரம்பிக்கிறது சித்தரிப்பு. கழுத்தளவு நீரில் சிறுவர்கள் நீந்தி தாவி குதூகலிக்கிறார்கள். அவர்கள் அன்னையர் துணி துவைத்துக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு சிறுவன் “நாயீ நாயீ” என்று கத்தினான். அவன் குரல் கேட்டு தாய் மேற்கே பார்த்தாள்.
Last Updated on Tuesday, 31 January 2012 22:06
Read more...
Tuesday, 31 January 2012 21:20
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
நூல் அறிமுகம்
நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. 'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள். குட்டிக் கரணமடித்த குண்டு பயில்வான் என்ற கதையில் இரு எலி நண்பர்கள் பற்றியும், அவை குண்டு பயில்வான் ஒருவனுக்கு செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பயில்வானின் தோற்றத்தையும், பரபரப்பையும் கண்டு கேலியாக கதைக்கும் எலிகளை கல்லால் அடிக்கிறான் பயில்வான். அவன் கயிற்றில் ஏறி சர்க்கஸ் செய்யும்போது எலி தன் கூரிய பற்களால் கயிற்றை கடித்துவிட கயிறு அறுந்து பயில்வான் விழுகிறான் என்றவாறு இக்கதை அமைந்திருக்கிறது.
Last Updated on Tuesday, 31 January 2012 21:24
Read more...
ராஜே: நீங்கள் படைப்பிலக்கியத்தில் ஏன் ஈடுபடவில்லை? இதே தானே அதுவும். யாரோ எழுதியதைப் பார்த்துவிட்டு ,அந்த சந்தோஷத்தை, அனுபவத்தை வெளியில் சொல்கிற உங்களால்…..
வெ.சா: எழுதினது மாத்திரம் இல்லை. நடக்கிறது எதுவுமே அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல் கிறேன். அவ்வளவு தான்.
ராஜே: உங்களை யாரும் சிறுகதை எழுதுங்க என்று கேட்கவில்லையா? நாங்கள் கேட்கிறோம் ஒரு சிறு கதை கொடுங்க என்று.
வெ.சா எழுத்தாளர் ஆகணும் என்கிற விருப்பமே எனக்கு இருந்த தில்லை. ஆசை ஏற்பட்டது கிடையாது. நான் தான் கொஞ்ச நேரம் முன்னாலேயே சொன்னேனே. அந்தக் கதையைப் படித்ததும் எரிச்சலாக இருந்தது. “செல்லப்பா ஏன் தான் அந்தக் கதையைப் போட்டார்” என்று. ஆகையால் எழுதினேன். நான் கெட்டிக்காரன். அவரைத் திருத்தணும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.
Last Updated on Tuesday, 31 January 2012 17:14
Read more...
Tuesday, 31 January 2012 16:52
- Ayesha Zuhair -
அரசியல்
 A group of well-known civil society activists have strongly condemned the recent attack on the Colombo head office of Viluthu, a non-governmental organisation working to promote social justice and women’s rights. In a communiqué signed by 35 activists which was released today, the incident is described as a “cowardly act” that was “carried out in order to intimidate the organisation”. The signatories also expressed dismay that the incident occurred in a high security zone and called on the law enforcement agencies to take prompt action to apprehend those responsible for the attack. The attack took place between the night of January 23 and the early hours of January 24. According to the joint communiqué, “Viluthu’s work is focused on good governance and empowerment in the north and east of Sri Lanka in supporting the war-affected community. These kinds of attacks pose a threat to an open society that is founded on democratic values and the rule of law, and upholds freedom of speech and civic activism. It is such a society that we as Sri Lankans should nurture if we are to move towards reconciliation and a lasting peace.”
Last Updated on Tuesday, 31 January 2012 17:16
Read more...
Tuesday, 31 January 2012 14:27
Louise Arbour
அரசியல்
 For Tamils, the end of Sri Lanka’s civil war has brought no peace dividend; for Tamil women, peace has brought with it a continuation – and in some cases an intensification – of violence and insecurity. In the country’s predominantly Tamil-speaking north and east – a region half the size of Nova Scotia – tens of thousands of “war widows” have been living under the control of the central government and Sinhalese security forces since 2009 and the end of the civil war, whose last few months saw as many as 40,000 civilians killed. There has been an alarming increase in gender-based violence, including domestic violence, within the Tamil community, as well as forced prostitution and trafficking. All of this is against a backdrop of credible evidence of wartime sexual violence by government forces, including video footage showing soldiers making sexual comments while handling dead, naked bodies of female suspected Tamil Tiger fighters, some with their hands bound. At the UN Human Rights Council session opening late next month, there is a chance to finally ensure accountability and to address the current state of insecurity; Sri Lanka and the international community, including Canada, should take it.
Last Updated on Tuesday, 31 January 2012 14:52
Read more...
Tuesday, 31 January 2012 06:17
- எம்.கே.முருகானந்தன் -
இலக்கியம்
ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன். இலக்கியங்களின் அரசி கவிதை கவிதையை இலக்கியங்களின் அரசி என்பார்கள். காலத்தால் முந்தைய இலக்கிய வடிவமும் அதுதான். நாட்டார் பாடல்கள், தாலாட்டுப் பாட்டு போன்ற வாய்மொழி இலக்கியங்கள் அதற்கு முந்தையவையாயினும் எழுதில் பதியப்பட்ட இலக்கியங்களில் அதுவே முந்தையது எனலாம். கம்பனும் இளங்கோவும் பாடி வைத்த அவற்றை இரசித்து மகிழாத இலக்கிய நெஞ்சங்கள் எதுவும் இருக்கமாட்டாது. எழுத்தறிவு இல்லாத காலங்களில் அவற்றைப் பாமர மக்கள் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. படித்தவர்களும் பழம் தமிழ் இலக்கியங்களை முழமையாக பொருள் உணர்ந்து இரசிப்பதற்கு பதவுரை, நயவுரை என நாட வேண்டியிருந்தது. ஆனால் பாரதியின் கவிதைகள் தமிழ்க் கவிதை இலக்கிய படைப்புலகை முற்று முழுதாக மாற்றிப் போட்டன. இலகு தமிழில் எளிய நடையில் காதுக்கும் கருத்திற்கும் இனிய படைப்புலகின் முன்னோடி அவன்.
Last Updated on Tuesday, 31 January 2012 15:02
Read more...
Monday, 30 January 2012 18:12
- க.நவம் -
நிகழ்வுகள்

வணக்கம்!, மறைந்த மாமேதை பேராசிரியர் கா. சிவதம்பி அவர்களை நினைவுகூரும் இந்த முயற்சிக்குத் தங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்.
தோழமையுடன், க. நவம்
பேராசிரியர் குறித்த கருத்துரையாடலும், அவரைக் கனம் பண்ணும் ஆய்வுக் கட்டுரைகளின் வெளியீடும்!
இடம்: ஸ்கார்பரோ 'சிவிக் சென்டர்' (கனடா) காலம்: மே 20, 2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மேலதிக விபரங்கள் .... உள்ளே
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Monday, 30 January 2012 19:05
Monday, 30 January 2012 17:19
- நாகரத்தினம் கிருஷ்ணா -
நிகழ்வுகள்

அன்புடையீர், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். - நா.கிருஷ்ணா, பிரான்சு.
Last Updated on Monday, 30 January 2012 17:42
Read more...
Monday, 30 January 2012 01:20
by Emanuel Stoakes
அரசியல்
The extrajudicial killing of civilians, surrendering soldiers and dissident journalists under the direction of the Sri Lankan government has been alleged by a former general in the Army who was extremely well-placed to comment on military activity during the island nation’s bloody civil war. The source, whose name is withheld for reasons of safety, had high-level security clearance and access to the flow of orders during the final days of the conflict. He made the assertions in legally binding testimony to a US lawyer in New York in 2010, recorded in an affidavit seen by Truthout. His statements hold particular significance because they appear to corroborate claims made in reports by prominent human rights organizations, international media and a report for the United Nations by a panel of experts published in 2011. The allegations also closely corroborate the accounts of other members of the Sri Lankan Army during the civil war. It is believed that representatives of the United States State Department have spoken to the source and hold a rich collection of testimonies and other evidence regarding alleged crimes committed during the civil war.
Last Updated on Monday, 30 January 2012 01:45
Read more...
Saturday, 28 January 2012 00:25
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா (இலங்கை) -
நூல் அறிமுகம்
யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்
முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Last Updated on Saturday, 28 January 2012 19:48
Read more...
Friday, 27 January 2012 23:57
- சுப்ரபாரதிமணியன் -
நிகழ்வுகள்
திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் 'அமெரிக்க உளவாளி'. தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத்தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் எழுத்து புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது. முத்துலிங்கத்தின் கவனம்பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச்சித்திரங்களாக விழித்தெழுகிறது. எந்த ஒரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றி விடும் அவர் நவீன தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்குகிறார்.அவ்வகையில் அவரின் சமீப நூல்களான, ”அமெரிக்க உளவாளி”, 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்” , ”ஒன்றுக்கும் உதவாதவன்”‘, ”அமெரிக்கக்காரி“ ஆகிய நூல்களில் ஏதாவது ஒன்று பற்றிய ஆய்வு, ரசனை சார்ந்த சிறந்த எட்டு கட்டுரைகளுக்கு ரூ4,000 பகிர்ந்தளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட எந்த நூல் பற்றியும் இருக்கலாம். பக்கக் கட்டுப்பாடு இல்லை. தபாலில் அனுப்புதல் சிறந்தது. மின்னஞ்சலிலும் அனுப்பலாம். 31-3-2012க்குள் அனுப்பலாம்.
முகவரி: சுப்ரபாரதிமணியன், கனவு காலாண்டிதழ், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Saturday, 28 January 2012 00:03
 சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு வழிவிட்டுத் திறந்து ஆனால் கம்பி கிராதிகளால் அடைபட்டிருக்கும் வாசலை நோக்கிய இடம் தான் நான் விருப்பத்துடன் பகல் நேரம் முழுதையும் செலவிடும் இடம். வீட்டின் முன் இருக்கும் வெளியிடத்தில் பவளமல்லி, செம்பருத்தி, மரங்கள். அந்தி நேரத்தில் பூத்துக் குலுங்கும் செம்பருத்தி மறுநாள் காலையை வசீகரமாக்கும். பவளமல்லி மரம் பூத்து தரையெல்லாம் கொட்டிக் கிடக்கும். வெண்ணிற இதழ்களும் செந்நிறக் காம்புகளும் கொட்டிக்கிடக்கும் அந்த மலர் பரப்பைக் காண்பதே ஒரு சுகம். விடி காலையில் பூத்து முடிந்து காலை ஏழு எட்டு மணி வரை மணம் பரப்பி, உதிர்ந்து கொண்டே இருக்கும். நந்தியா வட்டை பூக்க ஆரம்பித்தால் முற்றும் மலரவும் பின் வாடவும் வெகுநாட்கள் ஆகும். பூக்களுக்காக வரும் வண்ணத்திப் பூச்சிகள் வானில் மிதக்கும் பூக்களாகவே வரும் போகும் அவற்றின் இஷ்டத்துக்கு. நான் இதுகாறும் பார்த்திராத வெகு சின்ன குருவி, மிக அழகான குருவி, நீலமும், கரும்பச்சையுமாக சூரிய ஒளி படுவதும், அது அமர்ந்திருக்கும் திசையும் பொருத்து அது நிறம் மாறி மாறி மின்னும் சிறகுகளோடு கீச் கீச் என்று ஓயாது கூவிக்கொண்டே வரும் ஜோடியாக. எப்போதும் அவை ஜோடியாகத் தான் வரும். ஆனால் அவை மரத்தின் கிளைகளுக்குள் எங்கெங்கோ உட்காரும். பிறகு வேறு கிளைக்குத் தாவும். ஓரிடத்தில் அவை ஒரு சில கணங்களே இருக்கும். கிளைக்குக் கிளை தாவிக்கொண்டே இருக்கும். ஒரு இலையடர்ந்த கிளையிலிருந்து இன்னொரு இலையடர்ந்த கிளைக்கு எப்படித்தான் எப்படியோ குண்டு பாய்வது போல சட்டென பாய்ந்து பறக்கும். இடைப்பட்ட வெளியில் அதை பறக்கும் ரூபத்தில் காணமுடியாது. ஒரு கணத்தில் ஒரு கிளையில். மற்ற கணத்தில் இன்னொரு கிளையில்.
Last Updated on Saturday, 28 January 2012 00:46
Read more...

1.கனேடிய சமூக வாழ்வியல் - முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள் 2.ஆக்க இலக்கியங்கள் - மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை ஆற்றுகைகள், திரைப்படங்கள் 3.போருக்கு முன்-பின் ஈழத்து நிலை 4.புலப்பெயர்வு வாழ்வியல் - குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின் 5.பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின் மீள்எழுகை, காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள் பங்களிப்பு 6.சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்
Last Updated on Monday, 23 January 2012 17:53
Read more...
Monday, 23 January 2012 00:58
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
அரசியல்
ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தபோது, இந்தியாவில் அவர்களுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நிகழ்ந்தன. இருப்பினும் அப்போராட்டங்கள் வீறுகொண்டதாக அமையவில்லை. தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தியடிகள் இந்தியாவிற்கு வந்து காங்கிரஸ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர்தான் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்தன எனலாம்.
Last Updated on Monday, 23 January 2012 01:12
Read more...
Monday, 23 January 2012 00:24
மணிமேகலை (கோவை), வேதா. இலங்காதிலகம் (ஓகஸ், டென்மார்க்), ஜுமானா ஜுனைட், இலங்கை -, கலைமகள் ஹிதாயாறிஸ்வி (இலங்கை) -,முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) -
கவிதை
Last Updated on Monday, 23 January 2012 00:56
Read more...
Friday, 20 January 2012 21:24
- தகவல் : 'விருபா' து. குமரேசன் -
நிகழ்வுகள்

அனைத்துலக நாடுகளிலிருந்து படைக்கப்படும் நூல்களில் தமிழ்மொழிக்கும் இனத்துக்கும் மிகு பயன் விளைவிக்கும் சிறந்த நூலை ஈராண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்து பரிசளித்தல் [- தகவல் : 'விருபா' து. குமரேசன் ].... விரிவான தகவல்கள் உள்ளே
Last Updated on Saturday, 21 January 2012 23:36
Saturday, 21 January 2012 18:43
- நாகரத்தினம் கிருஷ்ணா -
சிறுகதை
பிச்சைகாரர்கள் என சொல்கிறபோது மனது ஏற்படுத்தும் பிம்பங்கள் கிழிந்த அல்லது அழுக்கேறிய உடைகள், கலைந்த தலை, துர்நாற்றமென்ற பொதுப்பண்புகளைக் கொண்டவை. ஆனால் பிச்சை எடுப்பதற்கான அவசியமேதும் இல்லாததுபோலத்தான் அவளுடைய தோற்றமிருக்கிறது. உடல் வனப்பிலும், முகத்தைத் திருத்திக்கொள்வதிலும் அக்கறை கொள்ளாதவள் என்பதைத் தவிர பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை: செம்பட்டை நிறத்தில் நீண்டிருந்த தலைமயிர் அருவிபோல முதுகில் விழுந்திருக்கிறது. மையிட்ட பெரிய பூனைக் கண்கள். காற்று அலைமோதுகிறபோதெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்வதும் படபடப்பதுமாய் தாள்வரை வழியவழிய மிட்டாய் நிறத்தில் ஒரு பூபோட்ட பாவாடை, இறுக்கமாக ஒரு சோளி - நாடோடிப்பெண்.
Last Updated on Saturday, 21 January 2012 18:47
Read more...
Saturday, 21 January 2012 18:03
கடல்புத்திரன்
சிறுகதை
சரஸ்வதி, அவசர அவசரமாக வெளிக்கிட்டு.. அம்மா வைத்த சாப்பாட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வீட்டையும் ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள். வாசற்கதவின் வலத்தூணின் தலைப் பகுதியில் 'மருது இல்லம்' என எழுதப்பட்டிருந்தது. புதிதாய் அந்த வீட்டைக் கட்டிய போது, அம்மா தெரிவு செய்த பெயர். 'மருது இல்லம்' என எவர் கேட்டாலும், கூட்டி வந்து அவள் வீட்டருகே விட்டு விடுவார்கள். கிராமத்திலேயே, அந்த வீட்டுக்கு மட்டுமே 'பெயர்' இருந்தது.
Last Updated on Saturday, 21 January 2012 18:42
Read more...
Friday, 20 January 2012 23:44
From http://www.cbc.ca
விளையாட்டு
Burke died at the age of 29 in hospital in Salt Lake City, Utah, after tearing the artery that supplies blood to the brainstem during a training run in the superpipe at a personal sponsor event at the Park City Mountain resort. As the result of a fall after completing a jump, she suffered a ruptured vertebral artery, one of the four major arteries supplying blood to the brain. This caused her to go into cardiac arrest. Emergency personnel responded and CPR was administered on the scene during which time she remained without a pulse or spontaneous breathing. Burke was rushed to hospital, where she was put on life support and therapeutic hypothermia was initiated to protect her brain. On Jan. 11, she had surgery to repair the torn artery, and had been in a medically induced coma until she died on Thursday morning. Irreversible brain damage to Burke resulted from heart stopping. The artery that ruptured when freestyle skier Sarah Burke fell during a training run is one of the most critical blood vessels in the body, feeding oxygen-rich blood to the brain stem, neurosurgeons say.
Last Updated on Saturday, 21 January 2012 00:00
Read more...
Friday, 20 January 2012 22:50
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து
இலக்கியம்
[முனைவர் மு.வரதராசன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களிவை.] மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட 'டாக்டர்' மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
Last Updated on Friday, 20 January 2012 23:21
Read more...
Wednesday, 18 January 2012 00:33
- From Wikipedia, the free encyclopedia -
அரசியல்
 About the actionThe Wikipedia community has blacked out the English version of Wikipedia for 24 hours on January 18th to raise awareness about legislation being proposed by the U.S. Congress — the Stop Online Piracy Act (SOPA) in the U.S. House of Representatives, and the PROTECT IP Act (PIPA) in the U.S. Senate -- and to encourage readers to speak out against it. This legislation, if passed, will harm the free and open Internet. If you are in the United States, let your congressional representative know what you think of the proposed legislation by clicking here. The blackout will last 24 hours - from midnight to midnight EST (05:00 UTC Wed to 05:00 UTC Thu). This decision was made by Wikipedia’s global community of editors -- the people who built Wikipedia. The Wikimedia Foundation, the non-profit organization that operates Wikipedia, also opposes SOPA and PIPA, and supports the editors' blackout. SOPA and PIPA are real threats to the free and open Internet. Although recent media reports have suggested that the bills are losing support, they are not dead. On January 17th, SOPA's sponsor said the bill will be discussed and pushed forward in early February. PIPA could be debated in the U.S. Senate as soon as next week. There is a need to send a strong message that bills like SOPA and PIPA must not move forward: they will cause too much damage.
Last Updated on Wednesday, 18 January 2012 01:03
Read more...
கற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன? அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது. ஆகவேதான் முற்றிலும் யதார்த்தத்தில் வேரூன்றிய ஆக்கங்களை விட ஒரு நுனியில் கற்பனாவாதத்தையும் தொட்டுக்கொள்ளும் ஆக்கங்கள் பெரிதும் விரும்ப்பபடுகின்றன – சிறந்த உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது கற்பனாவாதம் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் உச்சப்படுத்தி முன்வைக்கும் விதத்தில் உள்ளது.
Last Updated on Monday, 16 January 2012 22:29
Read more...
‘பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதொ அதுவே அப்படம். ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை அடியொற்றி இந்திய திரைப்படத்துறை தன் படிமமொழியை கண்டடைந்தது. அத்திரைப்படம் வழியாகத்தான். மிதமிஞ்சிய உற்சாகத்துடன் நாற்பது வருடங்களாக பாதேர் பாஞ்சாலி திரைப்படம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு அடிப்படையாக அமைந்த விபூதி பூஷன் பந்த்யோபாத்யாயவின் அபூர்வமான நாவல் பேசப்பட்டது மிகவும் குறைவு. என் கணிப்பில் கலைப்படைப்பு என்று பார்த்தால் விபூதி பூஷனின் நிழல்தான் சத்யஜித்ரே.
Last Updated on Monday, 16 January 2012 20:49
Read more...
Monday, 16 January 2012 19:11
- சேசாத்ரி ஸ்ரீதரன் -
சமூகம்
 புத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும ஆத்திரிக்கு(Astraloid) மரபினங்களின் கலப்பால் உண்டானவர்கள் என அறிஞர் உரைக்கின்றனர். சற்றொப்ப 30,000 - 20,000 ஆண்டுகளுக்கு முன்னம் ரசியாவையும் அலாசுகாவையும் இணைத்தபடி இருந்த பெர்ரிங்கு நிலப்பாலம் ஊடாக ஆசிய, ஐரோப்பாவில் இருந்து பெயர்ந்த தொல் மாந்தர் வட, தென் அமெரிக்காவில் பரவி வாழ்ந்தனர். இங்கு 12,500 ஆண்டுகள் அளவில் கற்காலம் தொடங்கியதாக அறியப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகள் அளவில் சிறுசிறு வேளாண் குமுகங்கள் அமைந்ததாக தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Last Updated on Monday, 16 January 2012 19:43
Read more...
Sunday, 15 January 2012 18:21
- அ.முத்துலிங்கம் -
நிகழ்வுகள்
2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
Last Updated on Sunday, 15 January 2012 18:35
Read more...
Saturday, 14 January 2012 20:47
- கவிஞர் தீபச்செல்வன் -
நூல் அறிமுகம்
 முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக வெற்றியையும் வீழ்ச்சியையும் விவாதிப்பதற்காக ஈழத்தின் போர் இலக்கியம் தொகுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஆழி பதிப்பகம் ஈழத்தை சேர்ந்த எட்டு சமகால கவிஞர்களின் கவிதைகளை மரணத்தில் துளிர்க்கும் கனவு என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது. வருடம் தோறும் தமிழகத்தில் இடம்பெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சி வரிசையில் இந்த ஆண்டு நடைபெறும் 35ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை தொகுத்துள்ள ஈழக் கவிஞர் தீபச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிட்டவை வருமாறு: ஈழத் தமிழினம் வரலாறு காணாத அழிவை சந்தித்திருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் அரசியலையும் வாழ்வையும் பொறுத்தளவில் பெரும் வீழ்ச்சியாக இப்போர் முடிந்திருக்கிறது. அழிவு என்ற பேரிலக்குடன் இந்தப் போர் நடத்தப்பட்டது. இந்தக் காலத்தில் ஈழத் தமிழினம் பேரழிவுக்கு முகம் கொடுத்திருக்கிறது என்பது தாங்க முடியாத மகா துயரம்.
Last Updated on Sunday, 15 January 2012 18:10
Read more...
Thursday, 12 January 2012 23:43
- பதிவுகள் -
நிகழ்வுகள்
அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தையும் சேகரிப்பதற்குப் பற்பல வழிகளில் 'பதிவுகள்' முயன்று வருகின்றது. தினகரனில் வெளிவந்த 'மனக்கண்' நாவலின் முழு அத்தியாயங்களும் திருமதி கமலினி செல்வராசனிடம் இருந்ததாக அறிந்து தொடர்பு கொண்டோம். ஆனால் அதனைப் பெற முடியாமல் போயிற்று. அதன்பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டபோது அவர்கள் நியாயமான கட்டணத்தில் A 4 அளவுத் தாளில் பிரதிகளெடுத்து அனுப்பியிருந்தார்கள். அதற்காக சுவடிகள் திணைக்களத்திற்கு நன்றி கூறவேண்டும். ஆனால் அவர்கள் அனுப்பிய பிரதிகளில் எழுத்துகள் மிகச் சிறியனவாக இருந்த காரணத்தினால் தமிழகத்திற்கு அனுப்பி , நண்பர் 'ஸ்நேகா' பாலாஜி மூலம் நியாயமான கட்டணத்தில் தட்டச்சு செய்து எடுப்பித்தோம்.
Last Updated on Friday, 13 January 2012 20:28
Read more...
[அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி அமரர் செம்பியன் செல்வனின் 'ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்' நூலில் அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியினை மீள்பிரசுரம் செய்கின்றோம். -பதிவுகள்]
இலக்கிய மின்னல் இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் - சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலாம் இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது1, - என்று தனது முதற்படைப்பான ‘சிந்தனையும் மின்னொளியும்’ என்ற கவிதை தனது பதினேழாவது வயதில் பிறந்ததையும், அது பின்னர் ஈழகேசரிப் பத்திரிகையில் வெளிவந்ததையும் நினைவுகொண்ட அமரர் அ.ந. கந்தசாமி அவர்களின் இலட்சியக் கொள்கை வெறி, எழுத்தின் ஆரம்காலம் தொட்டு, அவரின் அந்தியகாலமான 14-2-68 வரை மாறவோ, மறையவோ இல்லை.
Last Updated on Sunday, 15 January 2012 18:34
Read more...
கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்.
திலீப் குமார்: சாமிநாதன், நேற்று நீங்க பேசினபோது, ஒரு விஷயம் சொன்னீங்க. எப்போதுமே, என்ன சொன்னாலும் என்னைக் விமரிசகன்னே பாக்கறாங்க. ஆனால் நான் என்னை விமர்சகன்னு நினைத்துக்கொண்டு எதுவுமே சொன்னதில்லை. எழுதினதில்லை. ஒருத்தனின் பொது அறிவுக்கு என்ன படுமோ அதைத் தான் சொல்லி வந்திருக்கிறேன் எனக்கு ஏதும் extraordinary intellectual brilliance-ஓ அல்லது artistic sensibility-ஓ இருப்பதாக நான் நினைக்கவில்லை………
Last Updated on Wednesday, 11 January 2012 23:06
Read more...
1
உடையார் மாமா மகா விண்ணன். அவரைச் சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரும். அவரைப்போன்று 'அச்சொட்டாக' விவசாயம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைப் பேச நான் வேறு ஆளைக் கண்டதில்லை. மாமா ஊரில் வாழ்ந்த காலத்தில் வயல் தோட்டம் துரவு என வசதியாக வாழ்ந்தவர். 'அரைவாசி ஊரே அவருக்குச் சொந்தமாக இருந்தது' என்று விண்ணாணம் பேசுபவர்கள் சொல்வார்கள். எப்படி இது சாத்தியமானதென ஒரு தடவை பாட்டியைக் கேட்டேன். இங்கிலீசுக்காரர் இலங்கையை ஆண்ட காலத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை இலகுவாக்க, மணியகாரன், உடையார், விதானையார் என்ற பதவிகளை உருவாக்கியதாகவும், பதவிக்கு வந்தவர்கள் தமது ஆட்சி அதிகாரங்களைப் பாவித்து ஊரில் உள்ள 'அடுகாணி-படுகாணிகளை' தம் வசமாக்கியதாகவும் பாட்டி சொன்னார். உடையார் மாமா வீடுகட்டியிருக்கும் 'நாவலடி வளவு' எங்கள் பாட்டனாருக்குச் சொந்தமானதென்று அம்மா சொல்லி வருத்தப்பட்டார்.
Last Updated on Wednesday, 11 January 2012 23:11
Read more...
Tuesday, 10 January 2012 23:01
முனைவர் மு. பழனியப்பன், இணைப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை, மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
இலக்கியம்
சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.
Last Updated on Tuesday, 10 January 2012 23:17
Read more...
Monday, 09 January 2012 23:57
- வானம்பாடி -
இலக்கியம்
எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கியம் பற்றிய அறிமுகப் பதிவுகளை நான் விரும்பி வாசிப்பது வழக்கம். மிகவும் அழகாக படைப்பாளிகளைப் பற்றியும், படைப்புகள் பற்றியும், தன் உளப்பாதிப்புகளின் அடிப்படையில் விபரிக்கும் அவரது நடை வாசகர்களின் நெஞ்சங்களை ஈர்த்துவிடும். அவரது படைப்புகளில் காணப்படும் இன்னுமொரு அம்சம் இருப்பின் நிலையாமை பற்றிய சோகம். பெரும்பாலான அவரது படைப்புகளில் புனைவுகளாகவிருக்கட்டும், அபுனைவுகளாகவிருக்கட்டும் எல்லாவற்றிலுமே இவ்விதமான சோகம் பரவிக்கிடக்கும். நகரங்கள், பயணங்கள் எல்லாமே அவருக்கு எப்பொழுதும் கடந்த கால நிகழ்வுகளை, உறவுகளை, துயரங்களையெல்லாம் தம்முள் அடக்கி வைத்திருக்கும் படிவுகளாகவேயிருக்கின்றன. இதனால் பெரும்பாலான அவரது புனைவுகளை வாசிக்கும்பொழுது வாசகரொருவரின் உள்ளமானது வாசிப்பின் முடிவில் நிலையாமை பற்றிய ஒருவித துயரத்தால் கனத்துப் போகின்றது.
Last Updated on Thursday, 12 January 2012 18:04
Read more...
Sunday, 08 January 2012 21:13
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
நூல் அறிமுகம்
சிறுகதை உலகில் தனக்கென்றதொரு தனியிடத்தை பெற்றிருக்கும் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களின் மூன்றாவது சிறுகதை தொகுதியான நிஜங்களின் தரிசனம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான 15 கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் வெளியீடாக 150 பக்கங்களில் அமைந்திருக்கிறது.மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய் ஆகிய தொகுப்புக்களை ஏற்கனவே வெளியிட்ட நூலாசிரியர் பற்றி பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தனது உரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கிறார். சம காலத்தைய மத்திய தரத்தினரின் வாழ்வு இடுக்கினுள் நிகழும் பல்கோணச் சிதறல்களின் தனித்தனிப் பரவல்கள் ஒவ்வொரு சிறுகதைக்குமுரிய தெரிவாகவும், கருவாகவும் அமைகின்றன. அவற்றின் இயல்பு முக்கியத்துவத்தை அடியொட்டி நெட்டாங்கு மற்றும் அகலாங்கு விபரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Last Updated on Sunday, 08 January 2012 21:49
Read more...
Sunday, 08 January 2012 20:52
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
நூல் அறிமுகம்
கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த க. சபாரெத்தினத்தின் சிறுவர் இலக்கியம் சார்ந்த நல்வழி என்ற கவிதைத் தொகுதி 39 பக்கங்களை உள்ளடக்கியதாக அண்மையில் வெளிவந்திருக்கிறது. இவர் ஏற்றமிறக்கம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் 35 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கல்வி அமைச்சின் தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் பாடசாலை மாணவர்களுக்கான நூலகப் புத்தகமாக இக் கவிதை நூல் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. 'எட்டு, ஒன்பது வயது தொடக்கம் பதினெட்டு வயது வரையான கல்வி கற்கும் குழந்தைகளின் அறிவு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் நல்ல பல கருத்துக்களை மையமாக வைத்து இலகு நடையில் கவிதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய புற அழுக்காறுகளினின்றும் தமது வாஞ்சையை மாற்றி நன்னெறி மார்க்கத்தை நோக்கிப் பற்றுக்கொண்டு வளர்ந்து வர 'நல்வழி' என்னும் இக் கவிதை நூல் பெருமளவில் உதவும் என நம்புகின்றேன். சோவியத்து பஞ்சவர்ணக் கிளிகள், வாராய் வலம் வருவோம் போன்ற கவிதைகள் உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஊட்டுவதற்காகவும், இயல்பு நிலையில் சிறிது அனாயாசமாக சிந்திக்கவும் என்றே இடையிடையே உட்புகுத்தப்பட்டுள்ளன' என்று திரு. சபாரெத்தினம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
Last Updated on Sunday, 08 January 2012 21:50
Read more...
['பதிவுகளி'ல் வெளிவந்த கட்டுரையிது ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. வ.ந.கிரிதரனின் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவல் பற்றிய 'திண்ணை' விமரிசனத்தையொட்டிய எழுத்தாளர் மைக்கலின் கடிதமிது. இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-]சிந்தனையின் போக்குகள் வலதும் இடமுமாக மாறி மாறித்தான் பயணிக்கும் என்பதில் எனக்கும் மறுப்பு இல்லை. நேர்கோட்டுப்பாதை என்பது ஏதாவது ஒரு தத்துவத்தை, கட்சிகளை, தனிநபரை வணங்குவதில் வந்து முடிந்துபோவது எமது மார்க்சியர்களின் கறாரான விமர்சன மரபு அல்லது எமது ஈழத்து இயக்கங்கள் சொல்லித் தந்த பாடங்கள். ஆகவே குறித்த படைப்பு மீதான பல்வேறு பார்வைகள் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.
Last Updated on Sunday, 08 January 2012 21:39
Read more...
Monday, 02 January 2012 17:52
-நுணாவிலூர் கா.விசயரத்தினம்- (இலண்டன்)
இலக்கியம்
 உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் அன்பு, பரிவு, பாசம் காட்டுவதால் ஆண், பெண் பாலாரிடம் காதல் எழுந்து, அவர்கள் ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியை நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. மனித இனத்தைத் தவிர்ந்த, மற்றைய உயிரினங்கள் யாவும் திருமணம் என்று வெளிப்படையாக நடாத்தா விட்டாலும், அவையும் ஏதோ ஒரு வகையில் ஒரு மணம் புரிகின்றன. திருமணங்கள் நாட்டுக்கு நாடு – காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கின்றன. திருமணங்கள் அனைத்திலும் சிறந்தது காதல் திருமணமேயாகும். காதல் திருமணத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றன.
Last Updated on Monday, 02 January 2012 18:08
Read more...
[ 30.4.2011 அன்று மாலை வாதங்கள் விவாதங்கள், தொகுப்பு வெளியிடப்பட்ட தருணம் கடைசியில் நான் நன்றி கூறு முகமாகச் சொன்னது, இங்கு சற்று ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ] முஸிபத் கபீ அகேலே நஹி ஆத்தி என்பார்கள். நம்மூரிலெ கூட கேட்டை மூட்டை செவ்வாய் என்று ஏதோ சொல்வார்கள். கஷ்ட காலம் என்று வந்தால் அது தனியாக வராது. நீங்கள் எல்லாம் மூன்று மணி நேரமா உட்கார்ந்திருக்கிறீர்கள். கடைசியில் நான் நன்றி சொல்ல வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. இவ்வளவு பெரிய நல்ல பேச்சாளர்களை இவ்வளவு நேரமாகக் கேட்டீர்கள். அவர்கள் பேச்சு உங்களைக் கவர்ந்திருக்கிறது. கடைசியாக நான். இவ்வளவு கஷ்டங்கள் போறாதா? சரி, நான் ரொம்ப காலமாக நான் ஒரு எழுத்தாளனே இல்லை என்று நானே சொல்லி வந்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் தெரியும். அத்தோடு இன்று நான் ஒரு பேச்சாளனும் இல்லை என்பதை நானே இங்கு நிரூபிக்கப் போகிறேன். ஒரு மேடை கிடைத்து மைக்கையும் கையிலே கொடுத்துவிட்டால் பேச ஆசைப்படாத தமிழன் யாராவது இருப்பானா என்பது சந்தேகம் தான். நான் இருக்கேன். இந்த விதத்தில் பார்த்தாலும் நான் தமிழனே இல்லை என்பதற்கான சான்று கிடைத்து விடும். இது இன்னம் ஒரு சான்றுதான்.. இன்னும் நிறைய எத்தனையோ சான்றுகள் என்னைத் தமிழனே இல்லை என்று ஒதுக்கித் தள்ளக் காத்திருப்பவர்கள் கையில் தயாராக இருப்பதும் வாஸ்தவம் தான். சரி போகட்டும். இது உண்மை. என்னைப் பற்றிய உண்மை எதையும் சொல்வதில் தவறு ஏதும் இல்லை.
Last Updated on Sunday, 01 January 2012 23:54
Read more...
Sunday, 01 January 2012 20:54
ரெ.கார்த்திகேசு , கே.எஸ்.சுதாகர் , பாஸ்டன் பாலாஜி , நாகரத்தினம் கிருஷ்ணா , செழியன், நாகரத்தினம் கிருஷ்ணா , புதியமாதவி, றஞ்சனி, ராகவன் தம்பி
'பதிவுகளில்' அன்று

'பதிவுகளி'ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-
Last Updated on Sunday, 01 January 2012 23:40
Read more...
Life பத்திரிகையில் அன்னாட்களில் வெளிவந்த இன்னொரு கட்டுரைத் தொடர் மிக முக்கியமானதும், அதிர்ச்சி தருவதுமாக இருந்தது,. அது நான்கைந்து இதழ்களுக்கு வந்தது என்று நினைவு. ஒவ்வொரு இதழிலும், அந்த பெரிய அளவிலான பத்திரிகையிலும் ஆறேழு பக்கங்களுக்கு அக்கட்டுரை நீண்டது. தலைப்பு எனக்கு நினைவில்லை. The Great Purges, என்று இருக்கவேண்டும். அல்லது The Great Stalinist Trials என்றும் இருக்கலாம். இன்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. இந்தத் தொடர் வந்தது ஸ்டாலினின் மறைவுக்குச் சற்று முன்னரா அல்லது சற்றுப் பின்னரா என்று. பின்னர் என்றாலும் ஓரு வருடத்துக்குள்ளாக இருக்கவேண்டும். ஸ்டாலின் இறந்தது 1953-ல். ஸ்டாலினின் புகழ் பாடப்படுவது நின்றது செர்ஜி க்ருஷ்சேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாம் காங்கிரஸ் கூட்டத்தில் தான். அப்போதிருந்து ஸ்டாலினிஸத்தை மறுப்பதும், ஸ்டாலினை அவர் நின்றுகொண்டிருந்த பீடத்திலிருந்து அகற்றும் காரியங்கள் தொடங்கிவிட்டன். ஸ்டாலின் இறந்ததும் ஒரு சில நாட்களுக்குள்ளேயே ரஷ்யாவின் ரகசிய போலீஸ் படைகளைத் தன் அதிகாரத்தில் வைத்திருந்த லாவ்ரெண்டி பெரியா (இவர் ஸ்டாலினைப் போல ஜியார்ஜியா வைச் சேர்ந்தவர்) கொல்லப் பட்டார். அவரை ஒழித்துக்கட்டுவது தான் தம் முதல் காரியமாக, ஸ்டாலினின் அடுத்தபடியிலிருந்த தலைவர்கள் தீர்மானித்தனர். அதைச் சொன்னதும் செர்ஜி க்ருஷ்சேவ் தான். க்ருஷ்சேவ் லாவ்ரெண்டி பெரியாவைப் பற்றி அப்போது சொன்ன கதை மிக சுவாரஸ்யமானது. சோஷலிஸ்ட் பாட்டாளி வர்க்க சொர்க்கத்தின் அதிகார மையத்தில் நடக்கும் விசித்திரங்கள் யாரும் கற்பனை கூட செய்ய முடியாதது. ஆனால் இதெல்லாம் பின்னால் வெளிவந்து நான் படித்தவை. ஆனால் இப்போது Life பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைத் தொடரைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
Last Updated on Tuesday, 27 December 2011 22:59
Read more...
Monday, 26 December 2011 20:26
- பாவண்ணன், டானியல் ஜீவா , சந்திரவதனா செல்வகுமாரன் , சி. ஜெயபாரதன் , பிரியா, வ.ந.கிரிதரன் , பாரதி , குரு அரவிந்தன் , திலகபாமா , துஸ்யந்தி பாஸ்கரன், சுமதி ரூபன், சாரங்கா தயாநந்தன், வேதா மஹாலஷ்மி
'பதிவுகளில்' அன்று

-'பதிவுகளி'ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-
Last Updated on Tuesday, 27 December 2011 20:51
Read more...
Friday, 23 December 2011 23:13
- நா . தில்லை கோவிந்தன் (விவசாயி).-
சுற்றுச் சூழல்
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு. எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே”
இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் . கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல. மணல் திருட்டு, மணலில் கள்ளச்சந்தை, மணல் எடுத்தால் லாரிகள் பறிமுதல். ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கைது.. மணல் லாரி ஓட்டுநரை தடுத்த தாசில்தாரை லாரியால் கொலை . ஏன் இந்த நிலைமை ? .அரசாங்கம், பொதுமக்கள்,அதிகாரிகள் பொறியாளர்கள் ,விவசாய வல்லுநர்கள், கட்டிடத் தொழில் வல்லுநர்கள் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
Last Updated on Friday, 23 December 2011 23:21
Read more...
Friday, 23 December 2011 00:34
- ஜெயமோகன் -
இலக்கியம்
 [எழுத்தாளர் சு.வெங்கடேசனின் நாவலான 'காவல் கோட்ட'த்திற்கு 2011ற்கான 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்துள்ளது. இதனையொட்டி 'காவல் கோட்டம்' நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதிய நீண்ட விமர்சனத்தின் முதற்பகுதி ஒரு பதிவுக்காக நன்றியுடன் மீள்பிரசுரமாகிறது. - பதிவுகள்] வரலாற்றுப் புனைக்கதை என்றால் என்ன என்பதை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன். வரலாறு என்பது ஒரு மாபெரும் மொழிபு (Narration) அந்த மொழிபு தொடர்ச்சியாக பல்வேறு மனிதர்களால் பல்வேறு காலகட்டமாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. அத்தனை மனிதர்களையும் அவர்களுக்குப் பொதுவானதாக இருக்கக்கூடிய ஒரு தர்க்க அமைப்பு உள்ளது. அந்தத் தர்க்க அமைப்பின் விதிகளின்படியே வரலாற்று உண்மைகள் நிரூபிக்கப்படுகின்றன. வரலாற்று உண்மைகள் பொய்ப்பிக்கவும் படுகின்றன.
Last Updated on Friday, 23 December 2011 00:48
Read more...
கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையும் அனுபவங்களும் தமிழக வாழ்க்கை என்ன, வரலாற்றின் எந்த நாட்டு மக்கள் தொகையின் வாழ்க்கையைப் போலும், வரலாற்றைப் போலும் அல்ல. நாடிழந்து, மொழியிழந்து, வாழும் யூத மனிதக் கூட்டம் தான் ஈழத்தமிரை நினைவூட்டும். இன்று ஈழத் தமிழர் வாழ்வையும் இழந்து நிற்கின்றனர்.
Last Updated on Tuesday, 20 December 2011 23:32
Read more...
9-ம் அத்தியாயம் அதிகார் அம்பலவாணர்
 [ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]
காதலுக்கு இருக்கும் புதுமையான பண்புகளில் ஒன்று, அது ஆண்களைப் பெண்மை நிறைந்தவர்களாகவும், பெண்களை ஆண்மை நிறைந்தவர்களாகவும் ஆக்கிவிடுவது தான். காதலின் வயப்பட்ட ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் சிறு விஷயங்களைப் பற்றிக் கூட அதிகமாக எண்ணி எண்ணிக் கலங்குபவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். பெண்களோ காதலின் உச்சத்திலே சத்தியவானை நேசித்த சாவித்திரியைப் போல் எமனையும் எதிர்த்துப் போராடத் துணிந்து விடுகிறார்கள். கல்கிசை என்னும் இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற மவுண்ட் லவீனியாக் கடற்கரையில்லே தன் காதற்கிளி பத்மாவைப் படமாக வரைய விரும்பிய ஸ்ரீதர் அடுத்த நாள் முழுவதும் அது பற்றிச் சிந்தப்பதிலேயே செலவிட்டான். அவளை எப்படி உட்கார வைக்க வேண்டும், என்ன உடையை அணியச் செய்ய வேண்டும்.
Last Updated on Monday, 19 December 2011 12:53
Read more...
1.
நான் முதன் முதலாக மட்டக்களப்பு சென்ற அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாததொரு சுவையான அனுபவம். அப்பொழுது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு மாணவனாகக் கல்வி பயின்று கொன்டிருந்த சமயம். விடுமுறைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த எங்களது ஆச்சி வீட்டிற்குச் செல்வோம். அல்லது ஆச்சி அம்மாவின் சகோதரி ஒருவரின் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வவுனியா வருவார். சில சமயங்களில் உறவினர்கள் யாருடனாவது அனுப்பி வைப்பார். என் வாழ்க்கையில் ஆச்சியின் பங்கும் முக்கியமானது. மிகவும் துணிச்சலான பெண்மணி. அவரைப் பற்றித் தனியொரு பதிவே இடலாம். இன்னுமொரு சமயம் அது பற்றியும் விபரிப்பேன்.
இவ்விதமானதொரு சூழலில் முதல் முறையாக மீன் பாடும் தேன் நாடு நோக்கிச் செல்லுவதற்குரிய சந்தர்ப்பம் வாய்த்ததும் எதிர்பாராத நிகழ்வொன்றின் மூலம்தான். ஆண்டு தோறும் நடைபெறும் தமிழ்த் தின விழாவுக்கான கையெழுத்துப் போட்டிக்கான தெரிவுக்காக என்னை வவுனியாவிலிருந்த சிங்களப் பாடசாலையான காமினி மகாவித்தியாலயத்திற்கு அனுப்பியிருந்தார்கள்.
Last Updated on Wednesday, 18 January 2012 18:48
Read more...
1999-ம் வருடம். டிஸம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, தில்லியை விட்டுப் பிரிய மனமில்லாது சில வருடங்கள் கழிந்தன. இருந்தாலும் சிறு வயதில் பதிந்திருந்த தமிழ் வாழ்க்கையின் காட்சிகள், மனிதர்கள், உறவுகள் மனதில் அவ்வப்போது திரையோடும். இழந்து விட்டவை அவை. நினைவுகளாகவே ஜீவிப்பவை. இருப்பினும் தமிழ் நாடு இழந்துவிட்ட தாயின் மடியைப் போல சோகத்தோடு தான் நினைவுகளைக் கிளறும். தாயின் மடி தரும் வாத்சல்யமும் சுகமும் வேறு எங்கு கிடைக்கும்? அந்நாட்களில் நான் விழித்தெழுவது மிதந்து வரும் கோயில் மணியோசை காதில் விழ. வீட்டு வாசல் நீர் தெளித்து கோலமிட்டிருக்கும். கொஞ்சம் தள்ளிப் பார்த்தால் குனிந்து கோலமிட்டுக்கொண்டிருக்கும் தெருப் பெண்களைப் பார்க்கலாம். சிலர் காவிரியில் குளித்து ஈரப்புடைவையோடு நீர் நிரப்பிய குடத்தை இடுப்பின் சுமந்து வரும் பெண்கள். முழங்கால் உயரத்துக்கு பிழிந்து கட்டிய ஈரவேட்டியுடன் வருபவர்கள் ஏதோ ஜபத்தை வாய் முணுமுணுக்கும். ஊரில் நுழையும் முன் காவல் தெய்வம் போல சென்னை ஒற்றை அறை வாசம் போல, ஒரு சின்ன கோயிலில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருப்பவர்களையும் பார்க்கலாம்.
Last Updated on Saturday, 17 December 2011 22:36
Read more...
Thursday, 15 December 2011 22:52
- திலகபாமா, நாகரத்தினம் கிருஷ்ணா , நாகூர் ரூமி , ஜெயந்தி சங்கர் , ரோஸாவசந்த், சுமதி ரூபன் , அ.முத்துலிங்கம்
'பதிவுகளில்' அன்று

-'பதிவுகளி'ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் - பதிவுகள்-
Last Updated on Tuesday, 27 December 2011 20:53
Read more...
 ஈழத்தமிழரின் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி இதுவரையில் முறையான ஆய்வு நூலொன்று வெளிவரவில்லையே என்ற குறையினைத் தீர்த்துவைக்கின்றது தமிழகத்திலிருந்து சோழன் படைப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' என்னும் ஆய்வு நூல். பெயருக்கு ஒரு சில நூல்களைப் படித்து விட்டு , தங்கள் எண்ணங்களைப் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளும் நமது பிரபல எழுத்தாளர்களின் நுனிப்புல் மேய்தல் போலில்லாது உண்மையிலேயே மிகவும் சிரமமெடுத்து, இயலுமானவரையில் நூல்களைத் தேடிப்பிடித்து இந்த ஆய்வு நூலினைப் படைத்துள்ள வெற்றிச்செல்வனின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுதற்குரியது மட்டுமல்ல இத்துறையில் விரிவான , எதிர்கால ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்த நூலுக்கு முக்கியத்துவமுண்டு.
Last Updated on Wednesday, 16 November 2011 06:53
Read more...
Monday, 14 November 2011 07:27
By V.N.Giritharan Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan
வ.ந.கிரிதரன் பக்கம்
Chapter 4: A Courageous Priest
- I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. - V.N.GIRITHARAN -
Even in those early hours of the morning, there were some European tourists happily taking a bath in the sea. “Foreigners are happily enjoying a bath in the sea, but myself, who is a son of the soil keeps running to escape death. I don’t have even the freedom and rights that these foreigners have.” Thus a thought invariably came to prevail upon Ilango that very moment, creating a chasm in his mind. Observing that the movements of the thugs going along the metro train routes from Colombo to Kaali was increasing, he got down into the sea-shore sands and began to walk in the direction of Ramakrishna Hall, watching the sea and its beauty and the people bathing there. Every now and then he looked back to make sure that his friend was following him. As for his friend, he looked like a rural Sinhala youth with curly hair and slightly fair skinned. Also, he can talk Sinhalese fluently. So, he could easily escape the wrath and the consequences. But, Ilango’s situation was different. Armed with only a few Sinhalese phrases, such as ‘Oeyaage nama mokkadha?” or “dikkath dikkath thennavaa,” he is completely at a loss when it comes to speaking in Sinhalese. An incident that took place in his university life would be enough to highlight his proficiency in the Sinhala tongue. Once, the senior students who ragged him, ordered him to go buy half a ‘rathal’ of sugar. He went to the grocery store near campus, which was owned by a Sinhala man. He uttered the phrase ‘Ekka Maaraa” which is used in Sinhala to mean one-and-a-hal ‘raathal paan’ and asked for “seeni maaraa”( the correct usage is ‘seeni baagayaa”). It is easy to see how he became the object of ridicule to those there.
Last Updated on Thursday, 17 November 2011 17:52
Read more...
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான 'வைகறை' மற்றும் வெளிவரும் 'சுதந்திரன்', ஈழநாடு' ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. - ஆசிரியர், பதிவுகள்]
Last Updated on Sunday, 16 October 2011 23:15
Read more...
நான் எழுதிய கவிதைகளில் பல இப்பிரபஞ்சத்தில் நமது , மானுட, இருப்புப் பற்றிய தேடல்களாகவே இருப்பதை எனது கவிதைகளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வர். மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இதனைக் கருதலாம். எனது புனைகதைள் இன்றைய மனிதரினின் சமகால சமூக, அரசியல்ரீதியிலான பாதிப்புகளைக் களமாகக் கொண்டியங்கினால், எனது கவிதைகளோ பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சம் பற்றி, அது பற்றிய தேடல்களைப் பற்றியே அதிகமாகப் பிரதிபலிக்கும். ஆயினும் அவ்வப்போது சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பற்றியும் அவை பேசும். ஆயினும் 'இருப்பதிகாரம்' என்னுமித் தொகுப்பு எனது இருப்பு பற்றிய தேடல்களின் விளைவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும். பல்வேறு இணைய இதழ்களில் (திண்னை, பதிவுகள், ஆறாந்திணை, தட்ஸ்தமிழ்.காம் போன்ற) வெளிவந்த கவிதைகள், என் மாணவப் பிராயத்திலே ஈழநாடு மாணவர் மலர், மற்றும் பலவேறு ஈழத்துப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி, தினகரன் போன்ற் பத்திரிகைகளில் வெளிவந்த ஆரம்பகாலக் கவிதைகளில் இருப்பு பற்றிய தேடலைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பிது. ஏற்கனவே 'பதிவுக'ளில் வெளிவந்தது.
Last Updated on Friday, 09 September 2011 18:26
Read more...
Friday, 19 August 2011 00:42
தகவல்: முல்லை அமுதன்
நிகழ்வுகள்
 எழுத்தாளர் முல்லை அமுதனைத் (இ.மகேந்திரன்) தமிழ் இலக்கிய உலகு நன்கறியும். இலண்டனில் வசிக்கும் அவர் வருடா வருடம் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியினையும் நடாத்தி வருபவர். 'காற்றுவெளி' என்னும் சஞ்சிகையின் ஆசிரியர். மறைந்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களை அடங்கிய 'இலக்கியப் பூக்கள் (தொகுதி ஒன்று)' நூலினையும் வெளியிட்டவர். நூல்கள் பலவற்றையும் வெளியிட்டவர். தற்போது எழுத்தாளர் விபரத் திரட்டு என்னும் நூலினைத் தொகுத்து வருகின்றார். எதிர்காலத்தில் நூலாக வெளிவரவுள்ள இந்நூல் பற்றிய விபரங்களை 'நெய்தல்' இணையத்தளத்தில் காணலாம். தற்போதுள்ள தொகுப்பு பூரணமானதல்ல. பலர் விடுபட்டிருக்கின்றார்கள்; தகவல்களில் ஒரு சில தவறுகள் காணப்படுகின்றன. இவை பற்றிய உங்கள் கருத்துகளை எழுத்தாளர் முல்லை அமுதனுக்கு
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்னும் மின்னஞ்சல் மூலம் அறியத் தரவும். இந்நூல் மேலும் பூரணத்துவம் பெற்று சிறப்பாக வெளிவருவதற்கு உங்களது கருத்துகள் நிச்சயம் உதவும். மேற்படி நூல் பற்றிய விபரங்களுக்கான இணையத்தள முகவரி: http://writersdetail.blogspot.com/ தகவல்: முல்லை அமுதன் -
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Friday, 19 August 2011 00:57
Wednesday, 10 August 2011 11:50
ஹெரால்ட் பின்ட்டர் - தமிழ்: யமுனா ராஜேந்திரன், திலகபாமா, பா.தேவேந்திரபூபதி , - ரவி(சுவிஸ்) , இளங்கோ , மொனிக்கா , நா.முத்து நிலவன், வ.ந.கிரிதரன், சாரங்கா தயானந்தன், பிச்சினிக்காடு இளங்கோ , வ.ஐ.ச.ஜெயபாலன், தநுசு , சைலஜா, தமிழ்மணவாளன்
'பதிவுகளில்' அன்று
[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]
Last Updated on Friday, 19 August 2011 17:06
Read more...
Thursday, 04 August 2011 13:27
சுகன், நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) , சந்திரவதனா செல்வகுமாரன், றஞ்சினி, வைகைச்செல்வி, சாரங்கா தயாநந்தன், த.அகிலன், சுப்ரபாரதிமணியன் , நளாயினி தாமரைச்செல்வன் (சுவிற்சலாந்து) , பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) , சத்தி சக்திதாசன் , மாலதி, சாந்தி ரமேஷ்
'பதிவுகளில்' அன்று
[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]
Last Updated on Thursday, 04 August 2011 18:22
Read more...
Wednesday, 03 August 2011 17:07
சித்தார்த்த 'சே' குவேரா , ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) , சி.ஜெயபாரதன் , திலகபாமா (சிவகாசி) , ரமேஷ், இளங்கோ, 'டாக்டர்' வை.பாரதி ஹரிசங்கர் , சாந்தினி வரதராஐன் , மதுமிதா, நாகூர் ரூமி, பாரதி (ஜேர்மனி), ப.வி.ஸ்ரீரங்கன் , பா.தேவேந்திரபூபதி , நா.முத்து நிலவன்
'பதிவுகளில்' அன்று
பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]
Last Updated on Thursday, 04 August 2011 13:31
Read more...
ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).
Last Updated on Thursday, 04 August 2011 21:31
Read more...
'பதிவுகள்' பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக ஆராய்ந்திருக்கின்றார்கள். எழுத்தாளர் அண்ணா கண்ணன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் ஆய்வுக்காக தான் எழுதிய ஆய்வில் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வு நூல் அமுதசுரபி வெளியீடாக வெளிவந்துள்ளது. மேலும் பலர் தமது பல்கலைக்கழகப் பட்டபடிப்பில் 'தமிழ் இணைய இதழ்கள்' ஆய்வுக்காக 'பதிவுகள்' பற்றியும் ஆராய்ந்துள்ளார்கள். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வள மையம், புதுக்கோட்டை அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவர் திண்ணை இணைய இதழில் கட்டுரையொன்றினை அண்மையில் எழுதியுமிருந்தார். எழுத்தாளர் சோழநாடனும் (ப.திருநாவுக்கரசு) இணையத்தில் தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் 'பதிவுகள்' இணைய இதழ் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவ்வப்போது இவ்வாய்வு சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்வதுமுண்டு. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் இலக்கியமும் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையே மேற்படி ஆய்வுகளும், தமிழ் இணைய இதழ்கள் மீதான கவனமும் காட்டுகின்றன. இன்று கணித்தமிழ் இலக்கிய உலகில் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், விவாதக்குழுக்களெல்லாம் முக்கிய பங்கினையாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கணித்தமிழ் அடைந்துள்ள வளர்ச்சி நம்பிக்கையினையும், பிரமிப்பினையும் ஊட்டுகின்றது.
Last Updated on Wednesday, 16 March 2011 15:31
Read more...
Saturday, 05 March 2011 18:08
ஆசிரியர்: வ.ந.கிரிதரன்

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
பதிவுகள் வாசகர்களே! பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு இவ்விதழில் மாறியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதே சமயம் பதிவுகளின் வழமையான அம்சங்கள் பல இவ்விதழில் விடுபட்டுள்ளதையும் அவதானித்திருப்பீர்கள். பதிவுகளின் வழமையான அனைத்து அம்சங்களும், இதுவரை வெளியான ஆக்கங்கள் அனைத்தும் படிப்படியாக இப்புதிய வடிவமைப்பினுள் இணைத்துக்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றோம். அதுவரை சிறிது பொறுமை காக்க. வழமைபோல் உங்கள் ஆக்கங்களை நீங்கள் பதிவுகளுக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
.
இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே: இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) : கடந்தவை
Last Updated on Monday, 09 May 2011 20:03
|