பதிவுகள்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அகமுகம்: யாவற்றையும் கேள்விக்குட்படுத்துவோம்! நவீன கவிதை சொல்லாக்கப் பிற்புலமும் அதன் வளர்ச்சியும்!

E-mail Print PDF

அகமுகம்: எழுத்தாளரும், விமர்சகரும், இதழாசிரியரும் , கவிஞருமான சி.ரமேஷின் வலைப்பதிவு. [அகமுகம்: எழுத்தாளரும், விமர்சகரும், இதழாசிரியரும் , கவிஞருமான சி.ரமேஷின் வலைப்பதிவு. ஆரம்பநிலையிலிருந்தாலும், இவ்வலைப்பதிவில் காணப்படும் படைப்புகள் ஆழமானவை; வரவேற்கத்தக்கவை. ரமேஷ் அவர்கள் தனது வலைப்பதிவினைத் தொடர்ந்தும் வளர்த்தெடுக்க வாழ்த்துகிறோம்; அத்துடன் 'பதிவுகள்' வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கின்றோம். - பதிவுகள்-]

அறிமுகக் குறிப்புக்கள்

நவீனம் என்னும் சொல் புதியது, புதுமை, மறுமலர்ச்சி என்னும் பொருண்மையில் கட்டமைக்கப்பட்டு தமிழில் வழங்கி வரும் சொல்லாகும். இவற்றிடையே சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பினும் “புதுமை” என்ற அம்சமே பொதுவானதாய் இருப்பது கவனிக்கத்தக்கது. நவீனம் என்னும் சொல்லை க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மைகளையும் கொண்டமைவது” என வரையறுக்கும். எனவே நவீனம் என்றால் வழிவழி வந்த மரபிலிருந்து மாறுபட்டு புதுமையைச் சார்ந்து நிற்றல் அல்லது புதுமையை நாடிச் செல்லல் எனப்பிறிதொரு வகையில் பொருள் கொள்ளலாம். நவீன கவிதையுருவாக்கத்தில் நவீனத்துவத்தின் பண்புகள் இன்றியமையாதவையாகும். நவீனத்துவம் என்பது சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு வளர்ச்சி நிலையைச் சுட்டுகின்றது. கிறிஸ்தவ இறையியலுக்கூடாக அடையாளம் காணப்பட்ட நவீனத்துவம் ஆரம்பத்தில் ஜெர்மனியில் டி.எம்.ஸ்ட்ராஸ், பிரின்ஸில் ஏர்னஸ்ட்ரெனான், முதலானோராலும் இங்கிலாந்தில் பெடரிக்ஹேன் ஹ்யூகல், இத்தாலியில் அன்டானியோ போலஸ்டோ ரோமலோ போன்றோராலும் வளர்த்தெடுக்கப்பட்டது. ஆக்ஸ்போர்ட் இயக்கத்தை நிறுவிய பிரிட்டிஸ் மதப் பேச்சாளரான ஜான்நியூமான் மூலம் இலக்கிய உலகில் நுழைந்தது.

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே' என்னும் கூற்றுக்கமைய மரபுத் தளையிலிருந்து விடுபட்டு யாப்பு விடுதலையை நோக்காகக் கொண்ட கட்டற்ற கவிதைகள் 19ஆம் நூற்றாண்டில் தோன்றத் தொடங்கின. புதிய உள்ளடக்கம், புதிய வெளிப்பாட்டுமுறை, புதிய வடிவமாற்றம் என்னும் அடிப்படையில் இயங்கிய இக்கவிதையின் தோற்றுவாயாக வோல்ட் விட்மன் விதந்துரைக்கப்படுகிறார். பகுதி பகுதியாக விட்மனால் எழுதி வெளியிடப்பட்ட கவிதைகள் 1855இல் 'புல்லின் இலைகள்' என்னும் பெயரில் முழுத்தொகுப்பாக வெளிவந்தது. வார்த்தைகளுக்குள் சிக்குறாது ஓசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழு தப்பட்ட இவரின் கவிதைகள் தெய்வீகம், வேதாந்தம், அரசியல், பெண் விடுதலை, இனத்துவம், தேசியம், நாட்டுப்பற்று என பல்வேறு தளங்களில் இயங்குபவை. மனித வாழ்வியலின் இருப்பை உயிர்த்துடிப்புடன் பதிவு செய்யும் விட்மனின் கவிதைகள் யாப்பையும் எதுகை மோனைகளையும் கைவிட்டு ஒலிநயமிக்க சொல்லமைவுகளுக்கூடாக நிலைபெறுகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் கவிதைச் சொற்களையும் கவிதை வடிவங்களையும் புரட்சிகரமாக மாறுதலுக்கு உள்ளாக்கிய பவுண்ட் நவீன தமிழ்க்கவிஞர்களிடையே அதீத தாக்கம் செலுத்திய வோல்ட்விட்மனை நிராகரிப்பார். அருவருப்பூட்டும் அதீதமாய் குமட்டும் மாத்திரை என விட்மனின் கவிதைகளை இகழும் பவுண்ட் விட்மனை செய்நேர்த்திமிக்க தொழில்நுட்பனாகக் கருதவில்லை. ஆயினும் வழிவழி வந்த மரபு இலக்கியத்திலிருந்து விலகி கவிதையைக் கட்டற்ற கவிதையாகக் கண்டவர் என்னும் வகையில் விட்மனின் பங்கு நவீன கவிதையில் இன்றியமையாததாக அமைகிறது.

பிரெஞ்சில் புதிய செவ்வியல் இயக்கத்தின் பின் புத்துணர்வு இயக்கம் வளர்ந்ததன்போது வில்லியம்பிளேக், மேத்யூஆர்னால்டு முதலானோரால் கட்டற்ற கவிதை தொடர்பாக வடிவமைப்பில் பல்வேறு சோதனைகள் நடாத்தப்பட்டது. இதன் விளைவாக செய்யுள் தளையிலிருந்து விடுபட்டு உரைநடையில் அமைந்த எளிமையும், நெகிழ்ச்சியும் மிக்க கட்டற்ற கவிதைகள் பிறக்கத் தொடங்கின. சமூகப் பொருளாதார மாறுதலுக்கு ஏற்ப யதார்த்த வாழ்வின் அனுபவங்களை உள்வாங்கி உணர்வுத்தளத்தில் ஓசைநயத்துடன் புதுப் பொலிவுகொண்டு வெளிவந்த இக்கவிதைகளை, செய்யுள் என்ற சொல்லும் விடுதலை என்ற சொல்லும் இணையும் வண்ணம் 'விடுதலைச் செய்யுள்' என்று சுருக்கமாக அழைத்தனர். அதனைத் தமிழில் 'விடுநிலைப்பா' என்றே அழைத்தனர். கவிதையின் கருப் பொருள் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்னும் காலகட்டத்தில், அன்றாட வாழ்வியலின் சாதாரண நடைமுறைகளைக் கவிதையின் கருப்பொருளாகக் கொண்டு பாடி, நவீன கவிதையின் ஆதார சுருதியாக இருந்தவர் சார்ல் போதலேர் ஆவார். இசையயாழுங்கோ எதுகையோ எதுவுமற்று ஆழ்ந்த பொருட்பெறுமானமுள்ள கலை நுணுக்கம் கொண்ட கவிதைகளை ஆக்கிய போதலேர் பிரான்சின் நவீன கவிதையியலின் தந்தையாகக் கருதப்படுபவர். போதலேர் கவிதையுடன் ஒத்தியங்கும் ஆர்தர் ரெம்போ நவீன கவிதைத் துறையின் புரட்சியை தோற்றுவித்தவர். கவிதையில் பிரமிப்பு ஊட்டும் மாற்றங்களை ஏற்படுத்திய ரெம்போ கவிதை இலக்கணங்களை மீறி புறக்காட்சிப் படிமங்களுடாகக் கவிதைகளை வடித்தார். பிரெஞ்சு கவிதை இலக்கியத்தில் போதலேர் ரெம்போவை போன்று வெர்லேன், ஸ்டீபன் மல்லார்மே போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள். கடந்த நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த இயக்கமான நவீனத்துவ இயக்கத்துக்கு தாமஸ் ஸ்டெர்ன்ஸ்எலியட் அளித்த பங்களிப்பு மிக முக்கியமானது. அருவக் கவிஞர் என அழைக்கப்படும் ரி.எஸ். எலியட் அமெரிக்க கவிஞரான எஸ்ராபவுண்டுடன் இணைந்து ஒரு புத்தம் புதிய கவிதை முறையைத் தொடங்கி வைத்தார். கவிஞனை 'ஒரு தொழில்நுட்பன்' எனக் கூறும் எலியட் 'கவிதையானது மதத்திற்கோ கருத்துருவங்களுக்கோ கருவியாவதில்லை. கவிதை ஒரு பண்படுத்தப்பட்ட மொழியில் ஏதாவது ஒரு நித்திய மானிட உணர்ச்சித் தூண்டலை வெளிப்படுத்துகிறது' என்பார். வாழ்வின் சிக்கலான அனுபவங்களைத் தினசரி மொழியில் வெளிப்படுத்தும் எலியட்டின் கவிதைகள் பூடகமான உள் முகத்தன்மை கொண்டவை. மேற்கோள்கள், மறைமுகக் குறிப்பீடுகள், வேற்றுமொழி இலக்கியங்களின் பகுதிகளைப் பயன்படுத்தல் என விரியும் எலியட்டின் கவிதை உத்திகள், சாதாரண வாசகன் கவிதையின் மையத்தை நோக்கி நகர்வதற்குத் தடையாக அமைகிறது. இதனால் கடினமான கவிதைகளை எழுதுபவர் என்றும் புரியாமைக்கு முதலிடம் தருபவர் என்றும் எலியட் விமர்சகரால் குற்றம் சாட்டப்படுகிறார். 1915ஆம் ஆண்டு எஸ்ரா பவுண்ட்டுடன் கொண்ட தொடர்பினால் எலியட்டின் கவிதைகள் இறுக்கமடைந்தன. செறிவாக்கம் கொண்ட செம்மை யான கவிதைகளை எலியட்டால் இக்காலப் பகுதியில் படைக்க முடிந்தது. இதற்குத் தக்க சான்றாக பாழ்நிலம் என்னும் கவிதையைக் கூறலாம். பிரக்ஞைபூர்வமாகக் கலாச்சாரம் தொடர்பான வரலாற்றுச் சூழ்நிலையில் மையம் கொள்ளும் இக்கவிதை, நவீனத்துவ கவிதையாக்கத்தின் முனைப்புப் பெற்ற வடிவமாக விளங்குகிறது.

புயற் பறவையாகவும் ஆளுமைமிக்க சிருஷ்டி கர்த்தாவாகவும் அறியப்படும் எஸ்ரா லுமிஸ் பவுண்ட் உரைநடை வரிக்கும் இசைக்குமிடையேயுள்ள தொடர்பு பற்றிய கருத்தாக்களையும் உருவாக்கினார். ஐரிஸ் கவிஞரான யேட்ஸின் கவிதைகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட பவுண்ட் கவிதையில் காணப்பட்ட கருத்துறுதியற்ற புனைவியக் கொள்கையை எதிர்த்தார். நவீன கவிதை இயங்கியலில் செல்வாக்குச் செலுத்திய 'இமேஜிசம்' 'வோர்ட்டிசம்' ஆகிய இயக்கங்களிலும் முக்கியபங்கு வகித்தவரான பவுண்ட் இலக்கிய விமர்சகரால் மவோர்ட்டிசிஸ்ட்டு என்றும் 'இமேஜிஸ்ட்' என்றும் அழைக்கப்பட்டார். இது மாத்திரமன்றி இலண்டனில் வாழ்ந்த காலத்தில் அமெரிக்க அறிஞர் எர்னெஸ்ட் ஃபென்னலேசா வின் கையயழுத்துப்படிகளை ஆய்ந்து சீன-ஜப்பானியக் கவிதைகளையும் நோ நாடகங்களையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பதிப்பித்தார். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளையும் மேலைத்தேய நாடுகளில் அறிமுகம் செய்த பவுண்ட், வீ.சி.ஹ்யூமுடன் இணைந்து படிமவியல் இயக்கத்தையும் ஸ்தாபித்து வழிநடாத்தினார். ஆங்கிலப் புதுக் கவிதையையும் பிரெஞ்சு மடக்குப் பாடல்களையும் உள்வாங்கிக் கொண்ட பவுண்ட், சிக்கலான வடிவமைப்புடைய செறிவும் அடர்த்தியும் கொண்ட நீண்ட கவிதைகளைப் படைத்தார். இலக்கிய ஆர்வலராகவும் ஆழ்ந்த சிந்தனையாளராகவும் விளங்கிய எஸ்ரா பவுண்ட் கவிதையின் இயங்கு தன்மையை அடிப்படையாகக் கொண்டு நவீன கவிதையை

1. Logopoeia :ஏறத்தாழ கருத்துருவாக்களின் கவிதை:
மிகச் சிறந்த வெளிப்பாட்டைக் கொண்டது
2. Phanopoeia: படிமங்களின் கவிதை
3. Melopoeia :சக்தியூட்டப்பட்ட வார்த்தைகளுடன் அவற்றின்
எளிமையான அர்த்தத்திற்கு மேல்ஓரளவு இசைத்தன்மை கொண்ட கவிதை.

என மூன்றாக வகைப்படுத்துவார். பொதுவாக இருபதாம் நூற்றாண்டுக் கவிதையின் இயங்கு நிலையை அறிந்து கொள்வதற்கு இந்தப் பகுப்புநிலை வகை செய்கிறது. நவீன கவிதையின் மொழியைத் தெளிவாக்கிக் கலாச்சாரத்தை முன்னிறுத்தி அறிவார்ந்த தளத்தில் இயங்கிய பவுண்ட், ஸ்தூலமான படிமங்களுக்கூடான கருத்துருவாக்கங்களையும் சிக்கன மான சொற்களுக்கூடான வெளிப்பாட்டு முறைமையையும் கவிதையின்வளர்ச்சி ஒழுங்கில் முரணின்றிப் பொருந்தும் ஓசைமையையும் உருவாக்கி நவீன கவிதையானது செம்மையாக வும் சீர்மையாகவும் இயங்க வழி அமைத்தார்.

இலக்கியப் பயில் பரப்பில் மரபு, தேசிய எல்லைகளைக் கடந்து அறிவார்த்த பழங்கலை அழகியலிலிருந்து விடுபட்டு மனித மனத்தின் மாறுதலுக்கமைய புதிய சூழலில் துல்லிய நிகழ் உலகைச் சித்திரிக்கும் நவீனத்துவம், இறைத்துவம், மதநம்பிக்கைகள்,அவ்நம்பிக்கையினூடாகக் கட்டி எழுப்பப்பட்ட மத நிறுவனங்கள்,அதன் கோட்பாடுகள் ஆகிய அனைத்துக்கும் எதிராகத் தனிமனித பிரக்ஞையை முன்னிறுத்தியது. நவீனத்துவம் புறவய உலகின் தருக்கமே அகவுலகின் படிமங்களைத் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. தனிமனித ஆளுமைகள், அதனிருப்புக்கள் பொதுமனம் சார் உளவியல் பிரச்சினைகள், கலாச்சாரப் பிரச்சினைகள் என்பன நவீனத்துவத்தால் அடையாளம் காணப்பட்டு முன்மொழியப்பட்டது. அழகியல் சார்மிகு கற்பனாவாதப் போக்குகளைக் கடுமையாக நிராகரித்தபடி யதார்த்த இருப்பியலை அனுபவம் சார் வாழ்வியலுக்கூடாகப் பட்டவர்த்தனமாகக் காட்சிப்படுத்திய நவீனத்துவம், மனிதசார் நடத்தைகளின் அபத்தங்களையும் தூலநோக்கோடு வெளிப்படுத்தியது. வோல்ட் விட்மன், கலீல்ஜிப்ரான், உமர்கயாம், தாகூர் (கீதாஞ்சலி) ஆகியோரின் கவிதைகள் தமிழில் எளிய மொழிதலுக்கூடாக மொழி பெயர்க்கப்பட்டமை நவீன தமிழ்க் கவிதையின் எழுச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது. பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் 'பாரதியும் நவீனத்துவமும்' என்னும் கட்டுரையில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே இந்தியாவில் நவீனத்துவம் சார்ந்த இயக்கங்கள் செயற்படத் தொடங்கியதாகக் கூறுவார். பிரம்மசமாஜம் (1828), ஆர்யசமாஜம் (1925), இராமகிருஷ்ணமிசன் (1886) இந்து இலக்கியச்சங்கம் (1820), இந்து முற்போக்கு அபிவிருத்திச் சங்கம் முதலான சமய சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் இந்தியப் பண்பாட்டை நவீனப்படுத்த உதவின. இவற்றுடன் ஒன்றிணைந்து இந்திய தேசிய இயக்கமும் அரசியல் சமூகரீதியான புரட்சிகரமான மாற்றங்களுக்கு அடித்தளமிட்டன. இலக்கியத்தைப் பொறுத்தவரை நவீன சிந்தனையாளர்க ளாக விளங்கிய பாரதி உள்ளிட்ட இலக்கிய கர்த்தாக்கள் ஆரம்பத்தில் பழமையைப் போற்று பவர்களாகவே காணப்பட்டனர். இவர்களின் கவிதைப் புனைவாக்கம் மரபு மாறாது பழமையில் எளிமையைப் புகுத்திப் புதுமை காணுவதை நோக்காகக் கொண்டதேயன்றி நவீனத்துவ வழி நின்று புரட்சிகரமான மாறுதலுக்கூடாக ஒரு புதிய பிரக்ஞையைக்  காணுவதாக அமையவில்லை. ஆயினும் கோபாலகிருஸ்ண பாரதியாரின் 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்' தமிழிலக்கியப் பரப்பில் பாடுபொருளாலும் பாடப்பட்ட முறைமையாலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. திரிகூடராசப்பக் கவிராயரைப் பின்பற்றிக் கோபாலகிருஸ்ணபாரதியாரால் கையாளப்பட்ட சிந்து முதலிய இசைப்பா வடிவங்கள் நவீன தமிழ்க் கவிதையில் அதீத தாக்கம் செலுத்தின.

நிலப்பிரப்புத்துவ முறையிலிருந்து இந்தியச் சமூகம் தீவிர மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாரம்பரிய மரபுசார் வாழ்க்கைமுறை மாற்றமடைந்து கிராமங்கள் நகரமயமாகும் சூழ்நிலையிலே மனித வாழ்வியல்சார் இயங்கியலுக்கேற்ப இலக்கியமொழி தன்னிறுக்கத்தைத் தளர்த்தியது. இதனால் மரபு வழிபட்ட செய்யுட்களிடம் பெறும் அடைமொழிகளும் அலங்கார மொழிகளும் வழக்கிழக்கப் புளக்கத்திலுள்ள பேச்சுமொழியின் அவசியம் உணரப்பட்டது. இவ்வகையில் இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள், மயூரம் வேதநாயகம்பிள்ளையின் 'சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்' என்பன குறிப்பிட்டுக் கூறத் தக்கவை. ஐரோப்பியர் வருகையாலும் ஆங்கிலக் கல்வி முறையாலும் ஏற்பட்ட இம்மாற்றங்கள் உயிர்த்துடிப்புள்ள இலக்கிய ஆக்கங்களுக்கு கால்கோளாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டில் பாரதியின் எழுச்சி நவீன கவிதையின் வியாபித்து எல்லைகளை நிரப்பிக்கொள்ள உதவிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ் வழிச் சிந்தனாவுலகில் தாக்கம் செலுத்திய பழமையின் மரபு பாரதியின் ஆரம்பகாலக் கவிதைகளில் விரவிக் காணப்பட்டது. வேதாகம புராணங்களினை முறையாகப் பயின்றமையால் பாரதிக்கிருந்த அநுபவவழி ஞானத்தையும் வள்ளுவன், இளங்கோ, கம்பன், தாயுமானவர்,பட்டினத்தடிகள், மாணிக்கவாசகர் முதலானோர் மீது கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டையும் பாரதியின் கவிவழி கண்டு உணரலாம். மரபுவழி நின்று நெகிழ்ச்சியற்ற செறிவான கவிதைகளைப் பாடிய பாரதி ஆசிரியப்பா, வெண்பா, விருத்தப்பா முதலான பாவகைகளையும் கையாண்டார். இவ்வகை யில் மரபுவழிச் சமுதாயத்துடன் இணைந்து ஆறுதல் காணும் முயற்சியாக தோத்திரப் பாடல் கள், புதிய ஆத்திசூடி, கீர்த்தனைகள், பாரத மாதா திருப்பள்ளியயழுச்சி, கண்ணி, இளசை ஒருபா ஒருபஃது முதலான இலக்கியங்களை தன் முன்னைய காலத்தின் தொடர்ச்சியாகப் படைத்தான். இதனை அடிப்படையாகக் கொண்டே தமிழவன் அவர்கள் 'பாரதிக்கு இருபதாம் நூற்றாண்டு மொழிநடை உருவம் கைவரப் பெறவில்லை' என்பார். பழமையின் இறுக்கமான பிடிக்குள் சிக்குண்ட பாரதி ஆங்கிலக் கல்வி, வடநாட்டு யாத்திரை,பத்திரிகைத் தொழில் உரை நடையின் எழுச்சி, சமூக விழிப்புணர்வு என நிகழ்கால இயங்கியலுக்கூடாகப் புதுமையை நோக்கி நகர்கிறான் இதன் நிமித்தம் மேலைத்தேய கவிதை வடிவங்களான 'சொனெட்' முதலானவற்றைத் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். சான்றோருக்கு மாத்திரமன்றி சாதாரண வாசகனுக்கும் தன் கவிதை போய்ச்சேர வேண்டுமென்னும் நோக்கில் யாப்பிலிருந்து விடுபட்டு உரை நடையிலமைந்த வசன கவிதைகளை யாத்தான். எளியபதம், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு என்பவற்றின் அடிப்படையில் நவீன வாழ்வியலுக்கேற்ப இருபதாம் நூற்றாண்டுக் கவிதையைச் சாத்தியமாக்குகிறான். 'சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை' என்னும் தன் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் 'காட்சிகள்ட' என்ற தலைப்பில் வசன கவிதைகளை எழுதி நவீன கவிதைக்கு வித்திட்டான் வேத காலக் கவிதைகளைப் பின்பற்றி இயற்கையை வியந்து பாடும் இக்கவிதைகள் யாப்பைத் துறந்து வசனத்தில் கவிதை எழுத முயன்ற பரிசோதனையாகவே இற்றை வரை கருதப்பட்டு வருகிறது. பாரதியின் காட்சிகளும் வோல்ட்விட்மனின் வசன கவிதைகளும் ஏற்படுத்திய பாதிப்பால் 1934இல் புதுக் கவிதைகளை எழுதத் தொடங்கிய ந.பிச்சமூர்த்தி வடிவ ரீதியான சோதனைகளைத் தமிழ்க் கவிதையில் நிகழ்த்தினார். க.நா.சுப்ரமணியன் போன்றோர் ந.பிச்சமூர்த்தி யின் கவிதைகளை புதுக்கவிதைகளாக அங்கீகரிக்க மறுத்த சமயத்தில் சி.சு. செல்லப்பாவின் 'ஊதுபத்திப்புல்' என்னும் நூல் ந.பிச்சமூர்த்தியைத் தமிழ் போற்றும் புதுமைக் கவிஞனாக நிலை பெறச்செய்தது. இவரைத் தொடர்ந்து கு.ப. ராஜகோபாலன்,வல்லிக் கண்ணன் முதலானோரும் பெரும்பாலான வசன கவிதைகளை ஆக்கினார்கள்.

இக்காலப் பகுதியில் வெளியான 'மணிக்கொடி', 'சூறாவளி','கலா மோகினி', 'கிராம ஊழியன்', 'சரஸ்வதி', 'இலக்கியவட்டம்',  'எழுத்து', 'நடை', 'கசடதபற' முதலான சஞ்சிகைகள் வசன கவிதைகளை வெளி யிட்டதுடன் புதுக் கவிதை பற்றிய விவாதத்தையும் தொடக்கிவைத்தன. இதில் நவீன கவிதையை சக்தி வாய்ந்த இலக்கிய வடிவமாக உருவாக்கிய பெருமை 1959இல் சி.சு. செல்லப்பாவால் தொடங்கப்பட்ட எழுத்து என்னும் சஞ்சிகையையே சாரும். தருமுசிவராம், தி.சோ.வேணுகோபாலன், சி.மணி, பசுவய்யா, நகுலன், எஸ்.வைத்தீஸ்வரன் முதலான வீரியம்மிக்க நவீன கவிஞர்களை எழுத்தே அறிமுகம் செய்தது. இதனைப் போன்று மநடைடு, 'கசடதபற', 'தாமரை' போன்ற இதழ்களும் நவீன கவிதையைப் புதுப்பொலிவுடன் இயங்கச் செய்தன. நா.காமராசன், மீரா, சிற்பி,புவியரசு, மேத்தா, தமிழன்பன், அக்கினி புத்திரன் எனப் பல்வேறு புதுக்கவிஞர்களை தமிழுக்குத் தந்து அணிசெய்த பெருமை 'வானம்பாடி' என்னும் இதழுக்கு உண்டெனினும் செறிவான வீரியமிக்க கவிதைகளை இவ்விதழ் பெருமளவில் பிரசுரிக்கவில்லை. இடதுசாரிச் சிந்தனையும், தமிழ் மரபறிந்து கவிதை பாடும் புதுமையும் சமுதாயப் பார்வையும் கொண்ட முற்போக்குச் சிந்தனையுமுடைய வானம்பாடிக் கவிஞர்களால் அர்த்தபுஷ்டியுள்ள சொல்லிறுக்கமான கவிதைகளைப் பேரளவில்கூட எழுத முடியவில்லை. ஆயினும் இக்காலத்தில் நவீன வழிப்பட்ட மேனாட்டு மனநிலையால் தமிழ்க் கவிதை, உருவப் புதுமையோடு உள்ளடக்க ரீதியான மாற்றங்களுக்குள்ளாகிப் புதிய பரிமாணத்தை அடைந்தது. வசன நடையிலிருந்து மாறுபட்டு நுட்பமான சந்தங்களை உள்வாங்கி அர்த்த தன்மையுடைய சொற்களின் கெட்டிப்படுத்தலோடு உணர்வின் நிலைக்கேற்ப எண்ணத்தைப் பிரதிபலிக்கும் யாப்புடைத்த கவிதைகளாக நவீன கவிதைகள் காலமாறுதல்களைக் கடந்து நிலைபெறத் தொடங்கின.

ஈழத்து தமிழிலக்கிய வரலாற்றில் புதுமைச் சிந்தனைக்கூடான நவீன தமிழிலக்கியத்தின் தோற்றுவாயாக பத்தொன்பதாம் நூற்றாண்டு அமைந்து இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கிய நெறியில் காணப்படும் சிறப்பியல்புகள் பலவற்றுக்கு காலெடுத்துக் கொடுத்தது. இந்நூற்றாண்டிலே யதார்த்த வாழ்வியலுக்கூடாக சமுதாய உணர்வினைப் பிரதிபலிக்கத் தொடங்கிய புலவர்கள் மரபுவழி வந்த வடிவங்களைப் பயன்படுத்தி புதிய எண்ணங்களையும் நிகழ்வுகளையும் பாடினர். இவ்வகையில் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தத்தை விடுதூது (1892) நவீன கவிதையின் முதற்படியாக விளங்குகிறது. ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்ட பெண்களின் அவலநிலையை எடுத்துரைக்க சமூகத்தை முக்கியத்துவப்படுத்தும் வலுவான ஒரு கதைக் கருவைத் தெரிந்து அதனை மரபுவழித் தூதுப் பிரபந்த வடிவத்துக்குள் அடக்கி வெற்றியும் கண்டார். பின்னர் பாவலர் துரையப்பாபிள்ளையுடன் இருபதாம் நூற்றாண்டு ஈழத் துத் தமிழ்க் கவிதை முனைப்புப் பெறுகிறது. முதன் முதலில் சமூகச் சிந்தனையைக் கவிதைப் பொருளாக்கியவர் என்னும் வகையில் பிள்ளையவர்களின் இலக்கியப் பணி முக்கியமானது. கைத்தொழில்,கூட்டு முயற்சி, பெண் கல்வி, சாதி, விவாகமும் சீதனவழக்கமும் எங்கள் கற்ற வாலிபரின் பழக்க வழக்கங்களும், எங்கள் புதிய ஸ்திரீகள், தேசாபிமானம் எனப் பல்வேறு தலைப்புக்களில் இவர் எழுதிய பாக்கள் உள்ளடக்க முதன்மையைச் சுட்டி நிற்கின்றன. முன்னைய கவிதை மரபைச் சிதைத்து உருவத்திலும் புதுமையைப் புகுத்தியவராகப் பாவலர் விளங்குகின்றார். தான் கூறும் கருத்துக்கள் மக்களைச் சென்றடைதல் வேண்டும் என்னும் நோக்கில் பாமர மக்களால் கையாளப்பட்ட இசை வடிவங்களைப் பின்பற்றி, இவர் எழுதிய மயாழ்ப்பாண சுவதேசக் கும்மி (1907),எங்கள் தேசநிலை (1917), இதோபதேச கீதரச மஞ்சரி (1901)டு என்னும் நூல்கள் விதந்து போற்றத்தக்கவை.பாவலரைப் போல் சோமசுந்தரப்புலவர், விபுலாநந்தர், கல்லடிவேலுப்பிள்ளை முதலா னோர் சமூக வாழ்வியலை நிகழ்காலச் சித்திரிப்புக்களாகக் கொண்டு பாடல்களைப் புனைந்தாலும் இவர்களது பாக்கள் பழைய மரபுக்கும் புதிய மரபுக்கும் இடைப்பட்ட கால ஊற்றாகவே பிரவகித்தது எனலாம்.

1930களில் உருவான ஈழகேசரி கருத்தாழமிக்க காத்திரமான கவிதைகளைத் தமிழ் இலக்கியத்திற்கு அளித்தது. அல்லையூர் மு. செல்லையா, மனுப்புலியார், மு.நல்லதம்பி, அகிலேஸ் வரசர்மா, உண்மைவிளம்பி, சத்தியநாதன், யாழ்ப்பாணன், வேந்தனார், சாரதா, மஹாகவி, ஈசு முதலானோர் சமூகப் பார்வை கொண்ட நவீன கவிதைகளை யாத்தனர். இக்காலப் பகுதியில் மலையகத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வியலைப் பாடிய நடேசய்யர், மீனாட்சியம்மாள் பணிகளும் போற்றிப் புகழ்ந்துரைக்கத் தக்கவை.1940களில் நடுக்கூற்றில் வெளிவந்த மமறுமலர்ச்சி (1945), பாரதி (1946-கொழும்பு), பாரதி (1946- மண்டூர்)டு முதலான ஈழத்துச் சஞ்சிகைகளும் நவீன கவிதைகளை உள்வாங்கிப் பிரசுரித்தன. சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பாடுவதற்கு இவை கால் கோலாயின. சோ.நடராஜன், நாவற்குழி நடராஜன், அ.ந.கந்தசாமி,வரதர், கதிரேசன் எனக் கவிஞர்கள் பலர் இக்காலப் பகுதியில் உதயமாயினர். ஈழத்து நவீன கவிதை இயங்கியலின் புதிய சோதனை முயற்சியாக 13.06.1943இல் ஈழகேசரி, 'ஓர் இரவினிலே' என்னும் நீண்ட வசன கவிதையைப் பிரசுரித்தது. வரதரால் எழுதப்பட்ட இக்கவிதையே ஈழத்தின் முதல் புதுக் கவிதையாகும். 1950களில் நவீன கவிதைக்கூடாக முனைப்புப்பெறும் மஹாகவி பொதுமக்களின் வாழ்வியலைப் பாடினார். தற்கால உரைநடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப்படுத்துவதில் வெற்றியும் கண்டார். கவிதை, பாநாடகம், காவியம் எனப் புதிய செய்யுள் வடிவங்களுக்கூடாக எளிமையும் சொற்சிக்கனமும் மிக்க கவிதைகளைப் படைத்தார்.

மஹாகவிக்குப் பின்னர் ஈழத்து நவீன கவிதை புதிய தளத்தில் பிரவேசித்தது. தீவிரத்தன்மையுடன் இயங்கிய நவீன கவிதை அறிவியல், ஆத்மீகம், சமூகம்சார் பிரச்சினைகள், சமூக விடுதலை,தேசியம் எனப் பல்வேறு பாடுபொருட்களுக்கூடாகத் தன் பரப்பை அகலமாக்கிக் கொண்டது. முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன், ராஜபாரதி, புரட்சிக்கமால், அண்ணல் முதலான கவிஞர்களின் எழுச்சி பொருளுருவம் கொண்ட கலைச்சீர்மையான படைப்புகளுக்கு வித்திட்டது. 1956இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றமும் தனிச் சிங்களச் சட்டமும் தமிழர் மத்தியில் தேசியம் பற்றிய புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதுவே இக்காலக் கவிதையின் அதி உச்சபாடுபொருளானது. இ.முருகையன், மு.பொன்னம்பலம், பசுபதி,சுபத்திரன் போன்றோரின் கவிதைகள் இப்பொருண்மைத் தளத்திலேயே மையம் கொண்டன. 1959இல் உருவான எழுத்து புத்துயிர்ப்பும் புதுவேகமும் கொண்ட ஈழத்துக் கவிஞர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. தருமுசிவராமு, தா.இராமலிங்கம் முதலானோரின் கவிதைகள் நவீன கவிதையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தன. ஆழமான படிமங்களை உள்வாங்கி இறுக்கமான சொற்கட்டுமானங்களுக்கூடாக வெளிப்படும் இக்கவிதைகள் கவித்துவ உத்வேகம் கொண்டவை.

1960களில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் பிரக்ஞைபூர்வமாகச் சமூகத்தை அணுகின. மரபை எதிர்த்து எழுந்த நவீன கவிதை மீண்டும் பாரம்பரிய வேர்களைத் தேடத் தொடங்கின. முருகையனின் 'நெடும் பகல்', சண்முகம்சிவலிங்கத்தின் 'ஆக்காண்டி', நுஃமானின் 'அதி மானிடன் , நிலமென்னும் நல்லாள், தாத்தாமாரும் பேரர்களும்' என்னும் கவிதைகள் இத் தளத்திலேயே இயங்கின. அ.யேசுராசா, ஏ.இக்பால், மு.சடாட்சரன், பாண்டியூரான் முதலானோர் கலாபூர்வமான படைப்புக்களையும் ஈழத்து இலக்கியத்துக்கு அளித்தனர். 1970களுக்குப் பின் ஈழத்து நவீன கவிதைகள் இலக்கிய ஆய்வாளர்களால் விதந்து நோக்கப்பட்டது. சமூக அரசியல் உணர்வுகளை உள்வாங்கி கலைத்துவமிக்க கலைப் பெறுமானமிக்க படைப்புக்களை இக்கால கவிஞர்கள் உருவாக்கினர். இருத்தலையும் இருத்தலுக்கான இருப்பையும் இக்கால கவிதைகள் பேசின. வெற்று அலங்காரமில்லாத உன்னத கவிதைகளை வ.ஜ.ச.ஜெயபாலன், சிவசேகரம், அ.யேசுராசா, சேரன், வில்வரத்தினம் முதலான பலர் ஈழத்து இலக்கியத்துக்களித்தனர். சோலைக்கிளிக்குப் பின்னர் ஈழத்தில் பேச்சு வழக்காற்றுச் சொற்களுக்கூடாக புதிய உத்திகளைக் கையாண்டு கவிதை சொல்லும் முறையயான்று வளர்ந்தது. கட்டிறுக்கமான கவிதைகள் 1990களிலிருந்து இற்றைவரை வெளிவந்த வண்ணம் உள்ளன. 1980களின் பிற்கூற்றில் நவீன கவிதை புதிய தளத்தில் பிரவேசித்தது. நெகிழ்வுத் தன்மையுள்ள எளிமையான சொற்களைக் கொண்டு செறிவடர்த்தி கொண்ட செம்மையான கவிதைகளை இக்கால கவிஞர்கள் படைத்தனர். 'சொல்லாத சேதிகள்', 'மரணத்துள் வாழ் வோம்' என்னும் தொகுப்புக்களின் வருகை இதனை உறுதிப்படுத்துகிறது. பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்பவற்றுக்கப்பால் சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்டு போரும் போரியல் வாழ்வும் கவிதையின் பாடுபொருளாயின. ஒடுக்கப்பட்ட இனமொன்றின் தார்மீகக் குரலாய் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கின.

1990களின் நடுக்கூற்றில் மையம் கொண்ட பின் நவீனத்துவம்,கட்டுடைத்தலுக்கூடாக கவிதை சொல்லும் புதிய முறையயான்றைத் தோற்றுவித்தது. நவீன மொழி, நவீன சொல்லாடல் என விரியும் இக்கவிதா புனைவு வெளி வடிவத்தை உடைத்து எல்லைகளைத் தாண்டிப் பிரவகித்தது. மொழி மீறிய தருக்கமற்ற நிலையில் இயங்கும் இக்கவிதைகள் நவீன உத்திகளுக்கூடாக புறவய வாழ்வை பூடகமாகவே காட்சிப்படுத்தின. அதேசமயம் நவீனத்துவத்தின் எல்லைகளைத் தகர்த்து அழகியல் ரீதியாக கற்பனைவாத மரபைப் பின்பற்றி மொழியை கட்டுப்பாடற்று இயங்க விட்டு கவிதை சொல்லும் முறையும் ஈழத்திலின்று பரவலாகக் காணப்படுகிறது. சந்திரபோஸ் சுதாகர், சித்தாந்தன், றியாஸ்குரானா, றஸ்மி,  பா.அகிலன் ஆகியோரின் கவிதைகள் இதனைச் சாத்தியப்படுத்தின.

ஈழத்தின் கவிதைப் புனைவு மொழி தனித்துவமானது. பிரத்தியேக தளத்தில் இயங்கும் இப்புனைவு மொழி ஆழமான ஆய்வுகளுக்கூடாக அணுகப்பட வேண்டியது. அவ்வாறு நுணுகி ஆராயும் பட்சத்தில் இக்கவிதாப் புனைவு உயர் கவித்துவ நிலையில் தன் தருக்க தளத்தை அல்லது பிரக்ஞை தளத்தை விரித்துக் காட்டும்.

http://akamukam.blogspot.ca/2011/10/blog-post_3236.html

Last Updated on Monday, 25 June 2012 17:15  

counter for tumblr

அண்மையில் வெளியானவை

கூகுளில் தேடுங்கள்

Custom Search

பதிவுகளில் விளம்பரங்கள்

பதிவுகளில் விளம்பரங்கள், திருமண அறிவித்தல்கள், மரண அறிவித்தல்கள் போன்றவற்றைப்  பிரசுரிக்க விரும்புகிறீர்களா? நியாயமான கட்டணங்களில் பிரசுரிப்போம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசிக்கப்படும் பதிவுகளில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரியுங்கள். மேலதிக விபரங்களுக்கு ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

Satyamev Jayate

Join Aamir Khan and STAR India on Satyamev Jayate – an emotional, challenging quest for hope – Sundays, at 11 AM

பைசா.காம்: இணையத்தில் உழையுங்கள்!

Speak English

Sell your books to Powell's Online

Sell your books to Powell's

Build Your Own Business Website!

Get online instantly with Geohostcorner.com web page software.  Have you ever wanted to build a website, but just weren't quite sure how? With the Geohostcorner.com webstore builder creating your own website is easier than ever! You'll amaze your friends with a professional design, beautiful stock images, and great, customizable features. You have over 1700 professionally designed website templates that come free with the website design software - just a click and it will look like you spent thousands on a designer!  Start Your Own Web Business! Easy Business Websites! Get online instantly with Geohostcorner.com web page software! Build your own website for only $29.99. For More information Click On Here

WIX: Create Your Free Website

பதிவுகள் இதுவரையில் (2000 - 2011)

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

தமிழ் வர்த்தகக் கையேடு
'பதிவுகள்' வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு. .உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர் இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல

இலவச வரி விளம்பரம்
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

அ.ந.கந்தசாமி படைப்புகள்

புதிய பனுவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

IT Training!

We provide one to one or small group  training for the following subjects (In Toronto only):

1. IBM (AIX) System Admin (Basic)
2. IBM (AIX) System Admini (Advanced)
3. ASP (Classic)
4. C Programming (Basics)
5. Soldering & Basics Electronics
6. Joomla 

More Infomation: Contact at ngiri2704@rogers.com 
 

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

Fyodor Dostoevsky

Fyodor Dostoevsky (1821-1881) was a Russian novelist, journalist, short-story writer whose psychological penetration into the human soul had a profound influence on the 20th century novel. Read More

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More

The Fabric Of The Cosmos By Brian Greene

The Hidden Reality: Parallel Universes and the Deep Laws of the Cosmos By Brian Greene

Hyperspace: A Scientific Odyssey Through Parallel Universes, Time Warps, and the 10th Dimension By Michio Kaku

Das Kapital By Karl Marx

The Brothers Karamazov [Hardcover] By Fyodor Dostoevsky

Penguin Classics Nana By Emile Zola

A Brief History of Time By Stephen Hawking


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

ISSN  1481 - 2991 
ஆசிரியர்: வ.ந.கிரிதரன்   Editor-in - Chief: V.N.Giritharan

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One" 

*அறிவித்தல்:  ஏப்ரல் 2011 ( இதழ் 136 ) வரை   மாத இணைய இதழாக வெளிவந்து கொண்டிருந்த 'பதிவுகள்' இணைய இதழ் ஏப்ரல் 2011  இதழிலிருந்து  மாத, வார இதழென்றில்லாமல் ஆக்கங்கள் கிடைக்கும் தோறும் வெளியிடப்படும் இதழாக வெளிவரும்.  'பதிவுகள்' இதழுக்குக் கிடைக்கப் பெறும் ஆக்கங்களை (அறிவித்தல்களுட்பட) கிடைத்ததும் உடனுக்குடன் பிரசுரிப்பதே அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால்தான் இந்த முடிவு.

உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

வ.ந.கிரிதரன் எழுதிய தமிழ் நூல்கள் மின்னூல்களாக விற்பனைக்கு

தமிழியல் (Journal Of Tamil Studies)

தமிழியல் இதழ்

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர், ' அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் ' ( International Association of Tamil Research ) என்னும் அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் இசைவினைப் பெற்று ' Tamil Culture ' இதழை ' Journal of Tamil Studies ' என்னும் மாற்றுப் பெயரில் அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் நடத்தி வந்தது. பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் ' Journal of Tamil Studies ' இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1970 அக்டோபர் 21 இல் தொடங்கப் பெற்ற நிலையில், IATR அமைப்பு இந்த ஆய்விதழை அதே பெயரில் ( Journal of Tamil Studies ) நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதனை விளைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழை வெளியிட்டு வருகிறது. இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ' Journal of Tamil Studies ' இதழ் தனிநாயகம் அடிகள் தொடங்கிய ' Tamil Culture ' என்னும் இதழின் மறு அவதாரமே தவிரப் புதியதன்று என்பதையும், ' Tamil Culture ' நின்றுவிடவில்லை என்பதையும் இவ்வரலாறு தெரிவிக்கிறது. இதழினன வாசிக்க ... உள்ளே

Center For Asia Studies

கூகுளில் தேடுங்கள்!

SHAADI.COM: Matrimonial Service

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!

 Welcome to the home page of the Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures project..Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

Raga Surabhi

Raga Surabhi is a small effort to create more awareness on Carnatic music.  We would like to dedicate this site to those music lovers, who listen to Carnatic music with great interest and enthusiasm, but have not had enough opportunity to learn about identifying and appreciating ragas. Read More

இணையத்தில் வர்த்தகம் செய்ய..

இணையத்தில் நீங்களும் வர்த்தகம் செய்யலாம். பொருட்களை, உங்கள் சேவைகளை விற்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இணையத்தில் நீங்கள் வர்த்தகம் செய்வதை PayPal மிகவும் இலகுவாக்குகின்றது. இப்பொழுதே PayPalஇல் இணைவதன் மூலம் இணையத்தில் நீங்களும் பணம் சம்பாதிக்கலாமே. இணைவதற்கு கீழுள்ள 'பட்டனை' அழுத்துங்கள்

Steve Jobs

The Wealthy Barber Returns

The Ediot By Fyodor Dostoyevsky

Internet Riches: The Simple Money-Making Secrets of Online Millionaires By Scott Fox

Get Rich Click!: The Ultimate Guide to Making Money on the Internet

How I Made My First Million on the Internet and How You Can Too! By Ewen Chia

Canadian Immigration Made Easy - 2nd Edition By Tariq Nadeem

Awaken the Giant Within: How to Take Immediate Control of Your Mental, Emotional, Physical and Financial

The Phantom The Complete Series: The Gold Key Years Volume One [Hardcover]

Sell your books to Powell's

Sell your books to Powell's


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -