வ.ந.கிரிதரன் பக்கம்

வாசிப்பும், யோசிப்பும் 315: ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane) & 'தாயகம்(கனடா)' பற்றிச் சில குறிப்புகள்..

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 315: ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane)ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane) ஒரு சிங்கள ஊடகவியலாளர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் , 2006இல் இலங்கையை விட்டு புகலிடம் நாடி புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களிலொருவர் இவர். மெளனிக்கப்பட்ட யுத்தத்தின்போது இலங்கைத்தமிழர்கள் அடைந்த இன்னல்கள், துயரங்களை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற ஆவணப்படமான 'மெளனிக்கப்பட்ட குரல்கள்' (The Silenced Voices) ஆவணப்படத்தில் நேர்காணப்படும் சிங்கள ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.  இலங்கைத்தமிழர்கள் நிலையை நன்கு அறிந்த, அதற்காகக் குரல் கொடுக்கும் சிங்கள ஊடகவியலாளர்களில் ரோகித பாஷனா அபயவர்த்தனேயின் பங்களிப்பு முக்கியமானது. தற்போதும் நாடு திரும்பாமல் PEN அமைப்பின் உதவியுடன், ஜேர்மனியில் வாழ்ந்துவரும் இவர் 'இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள்' என்னும் (JDS - Journalists for Democracy in Srilanka: http://www.jdslanka.org/ ) இணையத்தளத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், ஆசிரியர் குழுவிலொருவராகவுமிருந்து வருகின்றார். ரோகித பஷானா அபயவர்த்தனே நன்கறியப்பட்ட சிங்களக் கவிஞர்களில் ஒருவரும் கூட. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மாற்றுக்கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சிங்களப்பத்திரிகையான ஹிரு பத்திரிகையின் ஸ்தாபகராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவுமிருந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தது. அப்பத்திரிகையில் இவர் எழுதிய அரசியல் கருத்துகள் காரணமாகவே இவருக்குப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவற்றின் காரணமாகவே இவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

சமூக ஊடகங்கள் காரணமாகவும், யுத்தம் ஏற்படுத்திய் பேரழிவுகள் காரணமாகவும் சிங்கள மக்களில் பலர் நாட்டில் அமைதி வேண்டுமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். உணரத்தொடங்கியிருக்கின்றார்கள். நாட்டில் தமிழர்கள் சம உரிமையற்று வாழ்வதை உணர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் சிறுபான்மையினத்தவரின் நியாயமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு அவசியமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். அவர்களிலொருவர் ரோகித பாஷனா அபயவர்த்தனே. இவர்களைப்போன்றவர்களைப்பற்றி, இவர்கள்தம் அரசியல் நிலைப்பாடு பற்றியெல்லாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

Last Updated on Sunday, 02 December 2018 07:12 Read more...
 

கனடாத் தமிழ் இலக்கியத்தில் 'தாயகம் (கனடா)\வின் பங்களிப்புப் பற்றியதொரு சுருக்கமான அறிமுகம்!

E-mail Print PDF

'தாயகம்' (கனடா) - எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு , ஆண்டுதோறும் வெளியாகும் இலக்கிய இதழான 'கூர் 2018' இதழில் வெளியான கட்டுரை இது. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. - பதிவுகள் -


கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் தவிர்க்க முடியாத , காத்திரமாகத்தடம் பதித்த, ஜோர்ஜ் இ.குருஷேவ்வை ஆசிரியராக கொண்டு வெளியான  சஞ்சிகை, பத்திரிகை 'தாயகம்' (கனடா).  புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இருந்தும் கனடியத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிக் கட்டுரைகள் எழுதுவோர் தம் கட்டுரைகளில் மிகவும் இலகுவாக மறந்து விடும் பத்திரிகை, சஞ்சிகையும் 'தாயகம்' தான். மிகவும் வேடிகையான விடயமென்னவென்றால் 'தாயகம்' வெளிவந்தபோது, 'தாயகம்' களம் அமைத்துக்கொடுத்துத் 'தாயக'த்தில் எழுதிய எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் பலர்  கூட இவ்விதம் மறப்பதை எண்ணவென்பது. இந்நிலையில் 'தாயகம்' பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டிய தேவை இருப்பதால், அது பற்றிய ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதால், 'தாயகம்' பற்றிய சிறியதோர் அறிமுகம் தேவை என்பதால் உருவான கட்டுரையே இக்கட்டுரை. இக்கட்டுரையின் முக்கிய நோக்கங்களிலொன்று 'தாயகம்' பத்திரிகை/ சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வுக்கு எதிர்காலத்தில் மேலும் பலரைத் தூண்டுவதாகும்.

'தாயகம்' பத்திரிகை /சஞ்சிகைக்கு இன்னுமொரு முக்கியமான சிறப்புண்டு. கனடாவில் இலக்கியச்சேவை செய்வதாகச் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பல பத்திரிகைகளின் முக்கிய நோக்கம் பணமீட்டுவதே. விளம்பரங்களால் பக்கங்களை நினைத்து,  இலவசமாக விநியோகிக்கப்பட்டுவரும் கனடியத்தமிழ்ப் பத்திரிகைகளுக்கு மத்தியில் , காசு கொடுத்து வாங்கிக் கனடியத்தமிழ் மக்கள் படித்த ஒரேயொரு பத்திரிகை 'தாயகம்' (கனடா). இதற்காகத் 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ் இ.குருஷேவ்வைப்பாராட்டலாம். அதுவும் சுமார் ஆறுவருடங்கள் வரையில் 'தாயகம்' இவ்விதம் விற்பனையில் இருந்ததே குறிப்பிடத்தக்க சாதனைதான்.

'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகை பல விதங்களிலும் தனித்துவம் மிக்கதாக , 'உண்மையைத் தேடி' என்னும் தாரக மந்திரத்துடன் வெளிவந்தது. அதற்கென்று உறுதியான கொள்கையொன்றிருந்தது. அரசியல் ஆதிக்கம் மிக்க சக்திகளால் மறைக்கப்பட்ட விடயங்களை அது வெளிக்கொணர்ந்தது. அதே சமயம் அது விடுதலைப்புலிகளை விமர்சித்த பத்திரிகை, சஞ்சிகை. அதற்காக அதனைத் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரான பத்திரிகை என்று யாரும் தவறாக எண்ணி விடவேண்டாம். அது தமிழ் விடுதலை அமைப்புகளில் நிலவிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதையே முக்கியமான நோக்கங்களிலொன்றாகக்கொண்டிருந்தபோதும், அனைத்துப்பிரிவினருக்கும் இடமளித்தது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். பல்வேறு அரசியல் கொள்கை கொண்டவர்களும் 'தாயக'த்தில் எழுதினார்கள்.

Last Updated on Monday, 19 November 2018 03:20 Read more...
 

சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்!

E-mail Print PDF

சிற்றிதழ்கள் பற்றிய புரிதலும் கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய அறிதலும்! கனடியத் தமிழ்ச் சிற்றிதழ்கள் பற்றிய எனது பார்வையைப்பகிர்ந்துகொள்வதற்கு முன் சிற்றிதழ்கள் என்றால் எவை? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். சிற்றிதழ் என்பதற்கு இரு அர்த்தங்களைக் கூறலாம். சிறிய இதழ் என்னுமொரு கருத்தும் உண்டு. இவ்வடிப்படையில்தான் பலர் சிற்றிதழ்களை, சிறுசஞ்சிகைகள் என்று அழைக்கின்றார்கள். சிற்றிதழ் என்றால் சிறந்த இதழ் என்றும் அர்த்தம்கொண்டு அதனை நோக்குவோர் சிலருமுண்டு. உதாரணத்துக்கு “சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். " என்று விக்கிபீடியா சிற்றிதழ்கள் பற்றிக் கூறும். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் சிற்றிலக்கியம், சிற்றிதழ், சிற்றன்னை என்பவற்றில் சிறிய எனும் அர்த்தத்திலேயே இச்சொற்கள் பாவிக்கப்படுகின்றன. சிறந்த இதழ் என்றால் சிறப்பிதழ் . சிற்றிதழ் அல்ல. சிறு சஞ்சிகை என்று கூறும்போது அது சஞ்சிகையின் உள்ளடக்கத்தின் தரத்தைக் கொச்சைப்படுத்தி விடுவதாக எதற்காகக் கருத வேண்டும்? சிறு சஞ்சிகை சிறந்த சஞ்சிகையாக இருப்பதில் என்ன தடை இருக்க முடியும்? சிறு சஞ்சிகை என்றாலும் அதன் உள்ளடக்கத்தைப்பொறுத்தவரையில் அது ஒரு பேரிதழ்.

சிற்றிதழ் அல்லது சிறு சஞ்சிகை என்றால் என்ன? அது ஏன் உருவாகின்றது? என்பது பற்றிச் சிறிது பார்ப்போம்./

வெகுசன இதழ்கள் , வணிக இதழ்கள் வருமானத்தைக் குறி வைத்து வெளியாகும் இதழ்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு (குறிப்பாக இனம் , மதம், மொழி மற்றும் பால்) , மக்கள் மத்தியில் புகழடைவதுடன , அதிக வருமானத்தையும் பெறும் நோக்குடன் அவை செயற்படுகின்றன; வெளிவருகின்றன. இந்நிலையில் வணிக இதழ்களில் தீவிர , காத்திரமான இலக்கியப்படைப்புகளுக்கு இடமில்லை. இவ்விதமான சூழலில்தான் சிற்றிதழொன்று உருவாகின்றது. காத்திரமான , தீவிரமான கலை, இலக்கிய, அரசியற் கோட்பாடுகளை உள்ளடக்கிய, சார்ந்த படைப்புகளைத்தாங்கிப் பல்வகைச் சிற்றிதழ்கள் வெளியாகின்றன. சிற்றிதழ்கள் பொருளீட்டி, இலாபம் சம்பாதிப்பதை மையமாக வைத்து உருவாவதில்லை. ஆர்வமுள்ளவர்களில் சிலர் ஒன்றிணைந்து வெளியிடும் இதழாக, அல்லது தனிப்பட்ட  ஒருவர் வெளியிடும் இதழாக இருப்பதால் ஒரு சிற்றிதழானது அது வெளியாகும் காலத்திலிருந்து அதன் முடிவு வரை பொருளியல்ரீதியில் போராடவே வேண்டியிருக்கின்றது. வாசகர்களை, புரவலர்களை நம்பியே, நாடியே அது இயங்க வேண்டிய சூழலும், தேவையுமுள்ளதால்தான் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பு மூச்சடங்கிப்போகின்றன. அவ்விதம் அவை இயங்காது போயினும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் வரலாற்றில் நிலைத்து நின்று விடுகின்றன. அவற்றின் ஆரோக்கியமான பங்களிப்புகள் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றன. கலை, இலக்கிய வளர்ச்சியில் அவை படிக்கட்டுகளாக அமைந்து விடுகின்றன. உதாரணத்துக்கு மணிக்கொடி, சி.சு.செல்லப்பாவின் எழுத்து, இலங்கையில் வெளியான மறுமலர்ச்சி, அலைகள், தீர்த்தக்கரை,  ஜோர்ஜ் இ.குருஷேவின் தாயகம் (கனடா) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

Last Updated on Monday, 19 November 2018 13:25 Read more...
 

நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!

E-mail Print PDF

நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!

தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாகவும் பதவி வகித்திருக்கின்றார். கிழக்கு இலணடன் பல்கலைக்கழகம் இவரது சமூக சேவையினைப்பாராட்டி, இவருக்கு கெளரவ பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மார்க்கம், மக்னிகல் சந்திக்கருகில் அமைந்துள்ள டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் இன்று மாலை நடைபெற்ற சந்திபில் நண்பர் செல்வம் மற்றும் எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணித்தியாலம் நடைபெற்ற சந்திப்பில் போல் சத்தியநேசன் அவர்கள் பல்வேறு விடயங்கள் பற்றித்தன் கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவற்றில் முக்கியமான விடயங்களாகப்பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

Last Updated on Saturday, 17 November 2018 06:00 Read more...
 

'புதுசு' நா.சபேசனுடன் ஒரு மாலைப்பொழுது!

E-mail Print PDF

'புதுசு' நா.சபேசனுடன் ஒரு மாலைப்பொழுது!

இன்று மாலை தற்போது கனடா விஜயம் செய்திருக்கும் 'புதுசு' சஞ்சிகையின் ஆசிரியர்களிலொருவரான கவிஞர் நா.சபேசனுடன் கழிந்தது.  நண்பர் எல்லாளனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். '5ஸ்பைஸ்' உணவகத்தில் எம் சந்திப்பு நிகழ்ந்தது. கள்ளங்கபடமற்ற புன்னகையுடன் கூடிய முகத்தோற்றம் மிக்க நா.சபேசனுடன் உரையாடுவதும்  இனியதோர் அனுபவம்தான். கலை, இலக்கியம், மற்றும் அரசியல் பற்றிய கருத்துகளும், நனவிடை தோய்தல்களுமாக நேரம் கழிந்தது. நண்பர் எல்லாளன் எண்பதுகளில் தமிழகத்தில் கழிந்த தன் நினவுகளையும் நினைவு கூர்ந்தார்.

Last Updated on Saturday, 17 November 2018 05:57 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 314: கனடா மூர்த்தி!

E-mail Print PDF

கனடா மூர்த்திகனடா மூர்த்தி என்று அறியப்படுகின்ற மு.நாராயணமூர்த்தி பல்துறை திறமை கொண்டவர். கதை, கட்டுரைகள் எழுதுவதில் , ஆவணப்படங்கள் தயாரிப்பதில், ஓவியம் வரைவதில், நகைச்சுவை ஆக்கங்கள் படைப்பதில், ஒலி(ளி) பரப்பாளராகப் பணி புரிவதில் என்று பல்துறை ஆற்றல் கொண்ட இவரை நான் முதன் முதலில் கண்டது யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த காலகட்டத்தில்தான். அப்பொழுது இவர் சமயத்தில் ஈடுபாடு மிக்க ஒருவராக நினைவிலுள்ளார். தேவாரங்கள் கூடப் பாடியதாக ஒரு நினைவு. ஆனால் அப்போது இவரை நான் பார்த்ததோடு சரி. கதைத்தது இல்லை. இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அதன் பின்னர் நான் இவரைக் கனடாவில் சந்தித்தபோது ஆளே மாறிப்போயிருந்தார். ருஷ்யாவில் புலமைப்பரிசு பெற்று சென்று பொறியியல் படித்து முடித்து திரும்பியிருந்த ஒருவராக, சமூக, அரசியலில் நாட்டமுடையவராக, இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவராக  மாறிப்போயிருந்தார்.

தாயகம் பத்திரிகை(+ சஞ்சிகை) வெளிவந்த போது அதில் இவரது கை வண்ணத்தைக் கண்டு வியந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில்தான் இவரை முதன் முறையாகச் சந்தித்திருக்கின்றேன். 260 பார்ளிமென்ற் வீதித் தொடர்மாடிக் கட்டடத்தில் கனடாவில் முதன் முதலாகச் சந்தித்ததாக நினைவ. அப்பொழுது தாயகம் பத்திரிகையில் எனது தொடர்கதைகள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதிலொன்று 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்' அதற்கு ஓவியம் வரைந்தவர் இவரே என்பதைப்பின்னரே அறிந்து கொண்டேன். அதுபோல் தாயகம் பத்திரிகையில்  (+சஞ்சிகை) வெளிவந்து பலரின் கவனத்தையும் கவர்ந்துகொண்டிருந்த பகுதிகளில் ஒன்று 'முனியின் பதில்கள்'. சுவையான முனியின் பதில்களை இரசித்தவர்களில் நானுமொருவன். அம் முனி இவர்தானென்பதையும் பிறகு அறிந்துகொண்டேன். அம்முனிவரின் படத்தை வரைந்தவரும் இவர்தான் என்பதையும் பின்பு அறிந்தேன்.

கலை, இலக்கிய மற்றும் அரசியல் ஆளுமைகள் பலருடன் புகைப்படமெடுப்பதில் விருப்புள்ளவர் இவர். அப்புகைப்படங்கள் அனைத்தையும் தனியொரு தொகுதியாக வெளியிடலாம்.

Last Updated on Monday, 12 November 2018 12:54 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்'...

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்'... வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளியான , புலம்பெயர்தமிழ்ப்படைப்பாளிகளிடமிருந்து வெளியான சிறுகதைத்தொகுப்புகளில் 'நான்காவது பரிமாணம்' வெளியீடாக வெளிவந்த எழுத்தாளர் க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்' தொகுப்புக்கு முக்கிய இடமுண்டு. எழுத்தாளர் ஒரு கல்விமான் மட்டுமல்லர் சிறந்த எழுத்தாளரும் கூட. கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு எனப்பல்துறைகளிலும் சிறப்பாக ஆற்றலை வெளிப்படுத்தும் இவரது 'பரதேசம் போனவர்கள்' தொகுப்பினை அண்மையில் ஆறுதலாக வாசித்துப்பார்த்தேன். தொகுப்பின் கதைகள் அனைத்துமே நாட்டு அரசியற் சூழல் காரணமாகப் புலம்பெயர்ந்து பரதேசம் சென்ற ஈழத்தமிழர்களின் வாழ்வை விபரிப்பவை. தொகுப்பின் தலைப்பான 'பரதேசம் போனவர்கள்' பொருத்தமான தலைப்பு.

தொகுப்பின் கதைகள் கூறும் கருத்துகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

சொந்த மண்ணிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கு, அந்நிய நாட்டுக்கு, வேறொரு கலாச்சாரச்சூழல் விளங்குமிடமொன்றுக்குப் புலம்பெயரும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளியல்ரீதியிலான, கலாச்சாரரீதியிலான மற்றும்  நிறவெறி போன்ற பிரச்சினைகளை, சவால்களை, அவற்றை அவர்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றார்கள் என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. புதிய சூழல் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் எவ்விதம் அவர்கள் வாழ்வைச் சீரழிக்கின்றன என்பதை  புதிய சூழல் தரும் பொருளியல்ரீதியிலான அனுகூலங்களை எவ்விதம் அவர்கள் தவறாகப்பாவித்துப் பயன்பெறுகின்றார்கள் என்பதையெல்லாம் தொகுப்பின் கதைகள் விபரிக்கின்றன. சில கதைகள் அதிகம் ஏனைய எழுத்தாளர்களினால் கையாளப்பட்டிராத பால் மாற்றம் ('ட்ரான்ஸ்ஜென்டர்'), பாலியல்ரீதியிலான பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் கதைகள் வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தொகுப்பில் என் பார்வையில் கவனத்தை ஈர்த்த கதைகளாக 'ஜீவித சங்கல்பம்', 'வெள்ளைப்புறா ஒன்று.', 'பிச்சைக்காசு', 'காற்றைப்போன்றதடி என் காதல்', 'ஆசாரசீலம்' போன்றவற்றைக் கூறுவேன். ஏனையவையும் சோடை போனவையல்ல.

Last Updated on Wednesday, 14 November 2018 01:07 Read more...
 

வாசிப்பும் யோசிப்பும் 312: "சொல்லும் செய்திகள்" -வி.என்.மதிஅழகனின் செய்தியறைக் கனவினை நனவாக்கும் படிக்கட்டு!

E-mail Print PDF

வாசிப்பும் யோசிப்பும் 311: வி.என்.மதிஅழகனின் செய்தியறைக் கனவொன்றை நனவாக்கும் படிக்கட்டாகச் 'சொல்லும் செய்திகள்'வி.என்.மதியழகன்புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதெல்லாம்,  பார்க்கும்போதெல்லாம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் எம்மை மறந்திருந்த காலம் நினைவுக்கு வருவதுண்டு. எவ்வளவு ஆர்வமாக அன்று வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசித்தோம். எம்மை மறந்து இன்பத்தில் திளைத்தோம். இன்றம் கூட சற்சொருபவதி நாதன், இராஜேஸ்வரி சண்முகம், கமலினி செல்வராசன், சில்லையூர் செல்வராசன், அப்துல் ஹமீட், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வி.என்.மதியழகன், கே.எஸ்.ராஜா, விவியம் நமசிவாயம், கே.எஸ்.பாலச்சந்திரன், சுப்புலட்சுமி காசிநாதர், கமலா தம்பிராஜா என்று பலரின் பெயர்கள் பசுமையாக நினைவிலுள்ளன. அதற்குக் காரணம் அவர்கள் திறமையான கலைஞர்கள். ஒரு நிறுவனத்தில் முறையான நிர்வாகத்தில் கீழ், திறமையாகத் தம் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். தவறுகள் விட்டால் அவை அவர்களது பணியினைப் பாதிக்கும். இதனால் அவர்கள் கேட்பவர்களை மனத்திலிருத்தி நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்கள். செய்திகளை வாசித்தார்கள். தம் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகச்சிகளை நடாத்தினார்கள். ஆனால் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் பல வானொலிகள், தொலைகாட்சிகளுள்ளன. ஆனால் இவற்றில் ஒலி(ளி) பரப்பாகும் நிகழ்ச்சிகளை நடத்தியவர்களின், பங்குபற்றியவர்களின் பெயர்களை நாம் அன்று எம்மை மகிழ்வித்தவர்களைப்போல் நினைவில் வைத்திருக்கின்றோமா?. வைத்திருப்போமா?

இதற்கு முக்கிய காரணங்களில் சில:  இங்குள்ள வானொலிகளும், தொலைக்காட்சிகளும் தனிப்பட்டவர்களின் வியாபாரங்களாக இருக்கின்றன; முறையான பயிற்சியற்ற பலர் செய்திகளை வாசிக்கின்றார்கள்; நிகழ்ச்சிகளை நடாத்துகின்றார்கள்; உச்சரிப்பில் தவறிழைக்கின்றார்கள்; போதிய தமிழறிவு, ஆய்வறிவு அற்றவர்களாக இருக்கின்றார்கள். இது போன்ற  காரணங்களினால் இவர்களால் என்றும் அழியாத கோலங்களாக நிலைத்து நிற்கும் நிகழ்ச்சிகளை வழங்க முடிவதில்லை.

இங்கு வானொலிக்கலைஞர்களாக, தொலைக்காட்சிக் கலைஞர்களில் எவ்வளவுபேர் முறையாக அத்துறைகளில் கல்வி கற்று, பயிற்சியெடுத்து பணியாற்ற வருகின்றார்கள்? இவர்களைப்போன்றவர்கள் இத்துறைகள் பற்றி , இத்துறைகளில் சிறந்து விளங்கியவர்களால் எழுதப்படும் நூல்களையாவது, விவரணக் காணொளிகளையாவது வாசித்து, பார்த்து விட்டுப் பணி புரிய வரவேண்டும். அதனால் அவர்கள் தயாரிக்கும், ஒலி(ளி) பரப்பும் நிகழ்ச்சிகளும் சிறக்க வாய்ப்புண்டு. இவ்விதமாக இத்துறைகளில் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்ட நூலொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. இதனை எழுதியவர் இத்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய  ஒருவர். இந்நூல்  இந்நூல் குறிப்பாகச் செய்தித்துறையினை மையமாக எழுதப்பட்டிருந்தாலும், இவ்விதமான துறைகளில் பணிபுரியும் வகையிலான நூலாகும், வாசிப்பவர்களுக்கும் இத்துறை பற்றிய அறிவினை அதிகரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நூலாகும், இதனை எழுதியவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , ரூபவாஹினி தொலைக்காட்சி ஆகியவற்றில் பணி புரிந்த வி.என். மதியழகன். இந்நூலின் பெயர் 'சொல்லும் செய்திகள்'. இதனை அழகாகத் தயாரித்து வெளியிட்டுள்ளது 'காந்தளகம்' பதிப்பகம்.

இந்நூல் மிகவும் சுவையாக, எளிமையாக, வாசிப்பவர்களுக்கு இத்துறை பற்றிய புரிதலைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. செய்தித்தயாரிப்பில் இவ்வளவு விடயங்கள் இருக்கின்றனவா என்று வாசிப்போரைப்பிரமிக்க வைத்து விடுகின்றது.

இந்நூல் பதினைந்து அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் செய்தித்துறையின் வெற்றிக்கு, சிறப்புக்கு முக்கியமானவையாகக் கூறப்பட்ட விடயங்களில் முக்கியமானவையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

Last Updated on Monday, 05 November 2018 13:22 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 311: எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அடுத்த சிறுகதை 'ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரி'

E-mail Print PDF

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் தமிழகத்தின் வெகுசன இதழ்களில் குறிப்பாக ஆனந்த விகடனில் நன்கு பிரபலமான எழுத்தாளர். வெகுசன இதழ்களில் புனைகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அவ்விதழ்களின் வாசகர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அவர்களைக் கவரும் வகையில் எழுதுவதை விரும்புவார்கள். அ.மு.வின் புனைகதைகளை வாசிக்கும்போது இதனை அவதானிக்கலாம். தனது கற்பனையைத் தொய்வில்லாமல், கதைக்கு மேல் கதையாக நகர்த்திச்செல்வதில் வல்லவர் அவர்.

புனைகதைகளை வாசகர்களின் சுவைகளின் அடிப்படையில் எழுதுவதனாலோ என்னவோ சில வேளைகளில் அபுனைவுகளைப்பற்றி விபரிக்கையிலும் அவற்றிலும் வாசிக்கும் அல்லது கேட்டுக்கொண்டிருக்கும் வாசகர்களைக் கவரும் வகையில் புனைவுகளைக் கலந்து விடுகின்றாரோ என்று என்றொரு சந்தேகம் எனக்குண்டு. அச்சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோல் நேற்று நடைபெற்ற வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' நூல் வெளியீட்டில் அவர் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிக் குறிப்பிட்ட சம்பவம் அமைந்திருந்தது. அவர் தனது உரையில் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு நாள் தனது கதையொன்றினை ஆரம்பிக்கத் தகுந்த சொற்கள் கிடைக்காது போனதனால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டார். நானறிந்தவரையில் ஹெமிங்வே தனது இறுதிக்காலத்தில் மன அழுத்தம் போன்ற பல்வேறு உளவியல்ரீதியிலான மற்றும் உடல்ரீதியிலான நோய்களுக்குள்ளாகியவர். அதன் காரணமாகவே அடிக்கடி மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர். சில சமயங்களில் அவற்றில் தங்கியும் சிகிச்சை பெற்று வந்தவர். அவ்விதம் ஒருமுறை தம் உளவியல் சிக்கல்களுக்காகச் சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்தவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களின் முதல் வரிகளைப்பற்றிக் குறிப்பிடத்தொடங்கிய அ.மு அவர்கள் ஏர்னஸ்ட் ஹெம்ங்வேயின் முடிவையும் சுவையானதொரு புனைவாக்கி விட்டார். ஒருவேளை அவரின் அடுத்த சிறுகதையின் தலைப்பு 'ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரிகள்' என்பதாக இருக்குமோ?
Last Updated on Monday, 05 November 2018 13:56 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 310 : வேந்தனார் இளஞ்சேய்!

E-mail Print PDF

- வேந்தனார் இளஞ்சேய் -இளஞ்சேய் (வேந்தனார் இளஞ்சேய்) இவர் என் மாணவப்பருவத்து நண்பர்களிலொருவர்.  வவுனியா மகா வித்தியாலயத்தில் எழாம் வகுப்பை முடித்துக்கொண்டு , எட்டாம் வகுப்பிலிருந்து என் கல்வி யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பமாகியது. 8G தான் என் வகுப்பு. அவ்வகுப்பில் என்னுடன் சக மாணவராக அறிமுகமானவர்தான் இளஞ்சேய். இலங்கையின் புகழ்மிக்க எழுத்தாளர்களிலொருவரான வேந்தனார் அவர்களின் இளைய புதல்வன். மிகவும் சிறந்த பேச்சாளர்ராக எம் வகுப்பில் அக்காலகட்டத்தில் விளங்கியவர். இளஞ்சேயிடமிருந்து அண்மையில் எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. இலண்டனில் எழுத்தாளர் முல்லை அமுதனிடமிருந்து என் மின்னஞ்சலைப்பெற்றுக் கடிதம் அனுப்பியிருந்தார். அவரது தந்தையார் அமரர் வேந்தனாரின் நூறாவது பிறந்ததினத்தையொட்டிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிப்பதற்காகக் கட்டுரையொன்றினையும் அனுப்பியிருந்தார்.

இளஞ்சேயின் கடிதமும், மீள் தொடர்பும் மாணவப்பருவத்து நினைவுகளை மீண்டும் சிந்தையிலெழ வைத்துவிட்டன. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம் என் நல்ல நண்பர்களிலொருவராக விளங்கினார். நாமிருவருமே வாசிப்பதில் ஈடுபாடுள்ளவர்களாக இருந்ததும் முக்கிய காரணங்களிலொன்று. அக்காலகட்டத்திலேயே இவர் தன்னுடைய தந்தையாரை இழந்து விட்டிருந்தார். இவரது வீடு யாழ் இந்து மகளிரி கல்லூரிக்கு அண்மையிலிருந்தது. நான் இவரிடமிருந்து வாசிப்பதற்காகக் கதைப்புத்தகங்கள் வாங்குவதற்காக அடிக்கடி இவரது வீட்டுக்குச் சென்றிருக்கின்றேன். இவரும் அவ்வப்போது என்னிடம் புத்தகங்கள் இரவல் வாங்கிச்செல்வதற்காக வருவார்.

அக்காலகட்டத்தில்தான் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் முதுகலையில் பட்டம் பெற்றிருந்த இவரது மூத்த அக்கா கலையரசி அவர்களின் திருமணம் நல்லூர் ஆலயத்துக்கருகிலிருந்த ஆலயமொன்றில் நடைபெற்றது. மணமகனும் பேராதனைப்பல்கலைக்கழகப்பட்டதாரியே. அத்திருமணத்துக்காக எம் வகுப்பு மாணவர்கள் பலர் இணைந்து சென்றிருந்தோம். இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

பின்னர் காலப்போக்கில் திசை மாறிச்சென்று விட்டோம். இவரைக் கடைசியாகச் சந்தித்தது கொழும்பில் பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸொன்றில். 1978- 1981ற்குட்பட்ட காலகட்டத்திலொரு நாளென்று ஞாபகம். அப்பொழுது இவர் கணக்கியல் துறையில் படித்துக்கொண்டிருந்தார். பின்னர் நாட்டு நிலை காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன். இவரும் பின்னர் இங்கிலாந்து சென்று விட்டதாக அறிந்திருந்தேன். ஆனால் தொடர்புகளிருக்கவில்லை. பல வருடங்களின் முன்னர் டொராண்டோ, கனடாவில் அமரர் வேந்தனாரின் நூல்கள் வெளியிடப்பட்டபோது அந்நூல்களிலொன்றில் இவரது பெயரைப் பார்த்திருந்தேன்.

Last Updated on Friday, 02 November 2018 05:48 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 309: தற்போதுள்ள இலங்கைச் சூழல் பற்றி...

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 309: தற்போதுள்ள இலங்கைச் சூழல் பற்றி...தற்போதுள்ள இலங்கைச் சூழலில் மீண்டும் மகிந்த ராஜபக்சவிடம் சரண்டைந்திருக்கின்றார் மைத்திரி. இலங்கை அரசியலைப்பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்க துரதிருஷ்டம் பிடித்த அரசியல்வாதி. அன்று யுத்த நிறுத்தம் கொண்டுவரக் காரணமாகவிருந்தார் அவர். ஆனால் அவர் துரதிருஷ்டம் சந்திரிகா அம்மையார் அவர் தலைமையிலான பாராளுமன்றத்தைக் கலைத்தார். மீண்டும் மோதல்களுக்கு அடிகோலினார். அடுத்து கைக்கெட்டிய தூரத்திலிருந்த ஜனாதிபதிப்பதவியை விடுதலைப்புலிகள் தேர்தலைப்பகிஸ்தரித்ததன் விளைவாக ஏற்பட்ட சாதகச்சூழலில் மகிந்த ராஜபக்சவிடம் பறிகொடுத்தார். பின்னர் யுத்தத்தை வென்ற துட்ட(:-) காமினியாக வெறி பிடித்தாடிக்கொண்டிருந்த மகிந்தாவின் ஆட்சியிலிருந்து , உபகண்ட. உலக அரசியற் சக்திகளுடன் இணைந்து , ஶ்ரீலங்கா கட்சியை உடைத்து நல்லாட்சி என்னும் பெயரில் மைத்திரியுடன் இணைந்து இலங்கையைக் கைப்பற்றினார். ஆனால் அதனையும் இன்று மைத்திரியின் முதுகு குத்தலால் இழந்து நிற்கின்றார். அன்று சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்குச் சகல நிறைவேற்றதிகாரங்களும் இருந்தன. ஆனால் இன்று மைத்திரி சிற்சேனாவின் ஜனாதிபதிப்பதவியை பத்தொன்பாதாவது திருத்தச் சட்டம் சிறிது கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அவர் பிரதமரைப் பதவி நீக்கம் செய்தது இலங்கை அரசியல் அமைப்புக்கு முரணானது என்றே கருதுகின்றேன். இது பற்றி ஜெயம்பதி விக்ரமரட்ன (Jayampathy Wickramaratne ) நல்லதொரு கட்டுரையினைக் 'கொழும்பு டெலிகிறாப்' பத்திரிகையில் 'The Removal Of The Prime Minister: Why It Is Unconstitutional' என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். இலங்கை அரசியல் அமைப்புச்சட்டத்தின் பல்வேறு சரத்துகள் பற்றி ஆராய்ந்து அவர் இம்முடிவுக்கு வந்திருக்கின்றார். அவரது கட்டுரைக்கான இணைய இணைப்பு: https://www.colombotelegraph.com/index.php/the-removal-of-the-prime-minister-why-it-is-unconstitutional/

'இந்நிலையில் அலரி மாளிகையில் இன்னும் தங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன் மக்கள் ஆதரவை வெளிப்படுத்த அழைப்பு விடுத்த மக்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியையே அளித்துள்ளது. இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ஆதரவளித்திருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களைப்பொறுத்தவரையில் தற்போதுள்ள சூழலில் எவ்விதம் செயற்பட  வேண்டும்?

இச்சமயத்தில் ஒன்றை நாம் மறக்கக் கூடாது? அது 2015ம் ஆண்டுக்கு முற்பட்ட சூழல். இலங்கையின் அனைத்து மக்களும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இருண்ட காலகட்டம் அது. இருண்ட அக்காலகட்டத்தில் வெள்ளை வான் ஆட் கடத்தல்களும், காணமல் போதல்களும் அன்றாட வாழ்வின் அம்சங்களாகவிருந்தன. இலங்கைத் தமிழ்ப்பிரதேசங்களில் படையினரின் ஆதிக்கம் கடுமையாகவிருந்த காலகட்டம் அக்காலகட்டம்.  யுத்த முடிவுக்குப் பின்னான காலகட்டத்தில் அபிவிருத்திகள் நடைபெற்றன . உண்மைதான் ஆனால் அவை மக்கள் மீதுள்ள உண்மையான பற்றினால் அல்ல. அவற்றின் மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான ஊழற்பணத்துக்காக அவை நிறைவேற்றப்பட்டதாகக் கருத வேண்டும். அவ்வூழல் செயற்பாடுகளுக்கான வழக்குகள் பல இன்னும் நிலுவையில் நீதிமன்றங்களில் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.

Last Updated on Wednesday, 31 October 2018 13:17 Read more...
 

கவிதை: நினைவுகள்!

E-mail Print PDF

கவிதை: நினைவுகள்!

கடல்நினைவு!
நினைவுக்கடல்!
நினைவுமீன்கள்!
நினைவுகள் சகியே!

விண்நினைவு!
நினைவுவிண்!
நினைவுப்புட்கள்!
நினைவுகள் சகியே!

Last Updated on Wednesday, 31 October 2018 01:39 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 308: மகாவலி (L) - வாழ்வும் அரசியலும்!

E-mail Print PDF

நேற்று மாலை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் 'மகாவலி (L) - வாழ்வும் அரசியலும்' நிகழ்வு 'சமாதானத்துக்கான கனேடியர்கள் மற்றும் 'சம உரிமை இயக்கம்' ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரைக் காண முடிந்தது.நேற்று மாலை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் 'மகாவலி (L) - வாழ்வும் அரசியலும்' நிகழ்வு 'சமாதானத்துக்கான கனேடியர்கள் மற்றும் 'சம உரிமை இயக்கம்' ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரைக் காண முடிந்தது.

நிகழ்வினை அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன் ராஜசிங்கம் தலைமையேற்றுச் சிறப்பாக நடத்தினார். நிகழ்வில் மூவரின் உரைகள் இடம் பெற்றன. பேராசிரியர் சிவச்சந்திரன் 'வடக்கின் நீர்வள மேம்பாடும் எதிர் நோக்கும் பிரச்சினைகளும்' என்னும் தலைப்பிலும், மகாவலி அதிகாரசபை முன்னாள் ஊழியர் மோகன் அந்தோனிப்பிள்ளை 'பயனற்ற குடியேற திட்டங்களும் பலிக்கடா ஆக்கப்பட்ட குடியேற்றவாசிகளும்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த புபுது ஜயகொடவின் ஒலி(ளி)ப்பதிவு செய்யப்பட்ட 'மகாவலியும் குடியேற்றமும்' காணொளி உரை நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.

இம்மூவரின் உரைகளும் மிகுந்த பயனைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் தந்திருக்கும். ஏனெனில் எனக்கு அவ்விதமான உணர்வே ஏற்பட்டது.

மோகன் அந்தோனிப்பிள்ளை மகாவலித் திட்டத்தில் பணியாற்றியபோது அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களிலேயே ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அவர் தனதுரையில் இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்திலிருந்து இலங்கை அரசுகளால் (மகாவலித் திட்டமுட்பட) உருவாக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், அவை எவ்விதம் தமிழ்ப்பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படப்பாவிக்கப்பட்டன என்பது பற்றிய்யும் எடுத்துரைத்தார். அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு கருத்தொன்றும் கவனத்தை ஈர்த்தது. அது: டி.எஸ்.சேனநாயக்காவின் குடியேற்றத்திட்டங்கள் அக்காலகட்டத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கிய இடதுசாரிகளின் செல்வாக்கினை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டன. அதற்காக இடதுசாரிகளின் கோட்டைகளாக விளங்கிய பிரதேசங்களில் இவ்விதமான குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம் இத்திட்டங்களின் மூலம் பயனடையும் குடியேற்றவாசிகளின் ஆதரவினை வென்றெடுக்கலாம் என்பது டி.எஸ்.சேனநாயக்கா போன்றவர்களின் எண்ணமாகவிருந்தது. இச்சாரப்பட மோகன அந்தோனிப்பிள்ளையின் கருத்து அமைந்திருந்தது.

Last Updated on Monday, 29 October 2018 13:25 Read more...
 

வாசிப்பும் யோசிப்பும் 307: நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது!

E-mail Print PDF

மனக்கண் அத்தியாயம் முப்பது.காத்யானா அமரசிங்க அறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம்.  அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் 'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது  அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை 'லீகல் சைஸ்' அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.

நாவலின் பிரதிகளை சிறிய எழுத்துகள் காரணமாக வாசிப்பதில் சிரமம் இருந்ததால் , நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, தமிழகத்தில் தட்டச்சுச் செய்வித்துப்பெற்று, 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியிட்டேன்.

Last Updated on Friday, 26 October 2018 13:00 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 306: எழுத்தாளர் த.இந்திரலிங்கம் யார்? எங்கே? வினாக்களுக்கான விடைகள் கிடைத்தன.

E-mail Print PDF

எழுத்தாளர் த.இந்திரலிங்கம்என் மாணவப்பருவத்தில் என் போன்றவர்களையெல்லாம் சிரிக்க வைத்த எழுத்தாளர் த.இந்திரலிங்கம் யார் என்னும் வினாவுக்கான விடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ' ப்ன்முகத்திறமை மிக்க எழுத்தாளர் த. இந்திரலிங்கம்' என்னுமொரு பதிவினைப் 'பதிவுகள்' இணைய இதழிலும், முகநூலிலுமிட்டிருந்தேன்.

என் 'பதிவுகள்' இணைய இதற் பதிவினைப் பார்த்த நாடகவியலாளர் க.பாலேந்திரா இவருக்கு அப்பதிவின அனுப்பியிருக்கின்றார். அத்துடன் என் மின்னஞ்சல் முகவரியையும் அவருக்கு அறியத்தந்திருக்கின்றார். அவர் உடனேயே மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில்  பின்வருமாறு தன் எண்ணங்களைக் குறிப்பிட்டிருந்தார்:

Last Updated on Friday, 26 October 2018 12:42 Read more...
 

வாசிப்பும் யோசிப்பும் 305: 'நவீன விஞ்ஞானி'

E-mail Print PDF

நவீன விஞ்ஞானி

ஈழத்துத்தமிழ் இலக்கியம் மிகவும் பெருமைப்படத்தக்கதொரு அறிவியற் பத்திரிகை 'நவீன விஞ்ஞானி'. வீரகேசரி நிறுவனத்தால் வார வெளியீடாக வெளியிடப்பட்ட பத்திரிகை அது. அறிவியலின் பல்வகைப்பிரிவுகளிலும் குறிப்பாக இரசாயனம், உயிரியல், கணிதம், பெளதிகம், புவியியல், விண்ணியல் , இலத்திரனியல் எனப் பல்வகைப்பிரிவுகளிலும் உயர்தரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் ஆக்கங்களைப் போதிய விளக்கப்படங்களைத்  தாங்கி வெளியான பத்திரிகை இது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் ஆர்வமுடன் 'நவீன விஞ்ஞானி' பத்திரிகையை வாசித்தார்கள். 'நவீன விஞ்ஞானி'பத்திரிகையின் 'மாணவர் மன்ற'த்தில் இணைந்து கொண்டார்கள்.  அறிவியல் அறிஞரும், அறிவியற் புனைகதை எழுத்தாளருமான ஆர்தர் சி கிளார்க் அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளும் 'நவீன விஞ்ஞானி' பத்திரிகையில் வெளியாகின.

Last Updated on Thursday, 25 October 2018 04:23 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 304: வாசிப்பு பற்றிய எழுத்தாளர் கோமகனின் முகநூற் கருத்துகள் பற்றி...

E-mail Print PDF

டால்ஸ்டாய்எழுத்தாளர் கோமகன் தன் முகநூற் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "வாசிக்க வேண்டுமே என்பதற்காக எல்லாவற்றையும் வாசித்தால் இறுதியில் மண்டை சுக்கு நூறாகி வெடித்துவிடும் என்பது மட்டுமல்லாது தனக்குரிய கற்பனைவளத்தையும் சுயத்தையும் அது மழுங்கடித்து விடும். ஆக ஒருவனுக்கு எழுத்தும் கற்பனை வளமும் தானாக வரவேண்டியது ஒன்றாகும். அதற்கு வாசிப்பு பெரிதாக உதவப் போவதில்லை. வேண்டுமானால் அவை ஒருவரது எழுத்துப்பற்றிய ஒப்பீட்டுக்குத் துணை நிற்கலாம்."

வாசிப்பு என்பது தானாக விரும்பி வாசிப்பது. சிலர் வேலை காரணமாகவும் வாசிக்கின்றார்கள். உதாரணத்துக்குப் பத்திரிகை நிறுவனமொன்றில் வேலை பார்ப்பவர் வேலையின் காரணமாக கட்டாய வாசிப்புக்குத் தன்னை ஆட்படுத்த வேண்டிய தேவையுண்டு. அவ்வகையான வாசிப்பை நான் இங்கு குறிப்பிடவில்லை. கோமகனும் அவ்விதமான வாசிப்பைக் குறிப்பிடவில்லை எனவும் கருதுகின்றேன். வாசிப்பு என்பது இன்பத்தைத்தருமொன்று. அதற்கு வாழ்நாளே போதாது என்பதுதான் என்னைப்பொறுத்த குறை. வாசிப்பு என்னைப்பொறுத்தவரையில் மூச்சு விடுவதைப்போன்றது. மூச்சு விடுவதால் மண்டை வெடித்து விடுவதில்லை. வாசிக்காமல் இருந்தால்தான் மண்டை வெடித்து விடும். என்னைப்பொறுத்தவரையில்.  

அதிக வாசிப்பு என்பது 'தனக்குரிய கற்பனைவளத்தையும் சுயத்தையும் அது மழுங்கடித்து விடும்' என்றும் கோமகன் கூறுகின்றார். உண்மையில் பரந்த வாசிப்பு ஒருவரின் கற்பனை வளத்தையும், படைப்பாற்றலையும் மேலும் செழுமை அடைய வைக்குமென்பதே என் கருத்து. பரந்த வாசிப்பு காரணமாக ஒருவரின் எழுத்தாற்றல் மேன்மேலும் வளர்கின்றது. பரிணாமமடைகின்றது. மொழியைக் கையாடும் ஆற்றலும் மேலும் வளர்கின்றது.

அத்துடன் ஒருவனுக்கு 'எழுத்தும் கற்பனை வளமும் தானாக வரவேண்டியது ஒன்றாகும்.  அதற்கு வாசிப்பு பெரிதாக உதவப் போவதில்லை ' என்றும் கூறுகின்றார். எழுதும் ஆர்வம் என்பது பலருக்குத் தானாக பரம்பரை உயிரணுக்களின் பாதிப்பு காரணமாக வரலாம். அவ்விதம் இல்லாமலும் வாழும் சூழல் காரணமாகவும் வரலாம். கற்பனை வளம் என்பது அவரது வாசிப்பு , சிந்தனையாற்றல், பலவகை அனுபவங்கள் மற்றும் பரம்பரை உயிரணுக்களின் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக செழுமையடையலாம். இது என் கருத்து. ஒருவரின் எழுத்துச்சிறப்புக்கும், படைப்பாற்றலுக்கும் நிச்சயம் வாசிப்பு பெரிதும் உதவும் என்பது என் கருத்து. உதாரணத்துக்குச் சங்கீதத்தில் ஆர்வமுள்ள ஒருவரின் திறமை வளர்வதற்கு அவர் நிச்சயம் அத்துறையில் மேலும் கற்க வேண்டும். பிறப்பிலேயே அவருக்குப் பாடும் திறமை இருந்தாலும் அவர் அத்துறையில் கற்காமல் சிறக்க முடியாது. சிலர் விதிவிலக்காக ஆரம்பத்தில் பிரகாசித்தாலும், அப்பிரகாசம் மேலும் சிறப்படையை பயிற்சியும், கல்வியும் அவசியம். இது போலவே எழுத்தைப்பொறுத்தவரையில் வாசிப்பு எழுத்தின் சிறப்புக்கு மிகவும் அத்தியாவசியமானதொன்று.

Last Updated on Thursday, 25 October 2018 03:12 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 303: பன்முகத்திறமை மிக்க எழுத்தாளர் த.இந்திரலிங்கம்!

E-mail Print PDF

நுட்பம் - 1975என் மாணவப்பருவத்தில், யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் வெளிவந்துகொண்டிருந்த 'சிந்தாமணி' பத்திரிகையில் (தினபதி பத்திரிகையின் ஞாயிறுப் பதிப்பு சிந்தாமணி என்னும் பெயரில் வந்துகொண்டிருந்தது) த. இந்திரலிங்கம் என்னும் எழுத்தாளர் நகைச்சுவை ததும்பும் படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய தொடரொன்று ஞாபகத்திலுள்ளது. அத்தொடரின் பெயர், பாத்திரங்களின் பெயர்கள் எல்லாம் மறந்து விட்டாலும், தொடரின் மையக் கரு இன்னும் ஞாபகத்திலுள்ளது. யாழ்ப்பாணத்து மணிக்கூட்டுக் கோபுரத்துக்கருகிலுள்ள முற்றவெளியிலிருந்தென்று நினைக்கின்றேன் சிலர் சந்திரனுக்கு 'ராக்கட்' மூலம் பயணிக்க விளைகின்றார்கள். 'அப்புக்குட்டி' 'மணியண்ணை' போன்ற பாத்திரங்களுடன் , சிறுவனொருவனும் விண்வெளி வீரர்களாகப் பயணிக்கின்றார்களென்று எண்ணுகின்றேன். பனங்கள்ளை ராக்கட்டுக்குரிய எரிபொருளாகப் பாவித்து ஒரு வழியாக ராக்கட்டில் புறப்படுகின்றார்கள். இவ்விதம் பலத்த ஆரவாரங்களுடன் புறப்பட்டவர்களின் விண்வெளிக்கப்பலுடனான தொடர்பு அறுந்து விடுகின்றது. தொடர்பு அறுவதற்கு முன்னர் அவர்கள் தரையினைக் கண்டது பற்றி அறிவிக்கின்றார்கள். பூமியிலிருந்தவர்களெல்லாரும் விண்வெளிக்கப்பலில் சென்றவர்கள் நிலவில் இறங்கிவிட்டதாக எண்ணுகின்றார்கள். அவர்களது நிலை பற்றிக் கவலையுறுகின்றார்கள். ஆனால் தொடரின் இறுதியில்தான் தெரிய வருகிறது அவர்கள் இறங்கியது நிலவிலல்ல , பரந்தனுக்கு அருகிலுள்ள பிரதேசமொன்றிலென்று. இவ்விதமாகத்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. என் ஞாபகத்தில் பிழைகள் இருக்கக்கூடும். ஆனால அன்றைய காலகட்டத்தில் விழுந்து விழுந்து சிரித்துச் சிரித்து மேற்படி தொடரினை வாசித்தது மட்டும் இன்னும் நினவிலிருக்கிறது. ஈழத்தில் நகைச்சுவைப் படைப்புகளைத் தந்தவர்களில் த.இந்திரலிங்கத்தின் பெயரும் நிச்சயம் இடம்பெறும்.

அவ்வப்போது த.இந்திரலிங்கம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றதா என்பது பற்றிப் பார்ப்பதுண்டு. அண்மையில் த.இந்திரலிங்கம் பற்றி மேலும் சில தகவல்கள் கிடைத்தன. மொறட்டுவைப்பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பெத்தை வளாகமாகவிருந்த சமயம், நாடகவியலாளர் க.பாலேந்திரா கட்டுப்பெத்தைத் தமிழ்ச்சங்கத்தலைவராக இருந்த சமயம், பொறியியல் பீட மாணவரான யோ.க.மதுரநாயகத்தை இதழாசிரியராகக் கொண்டு வெளியான கட்டுப்பெத்தைத் தமிழ்ச்சங்க இதழான 'நுட்பம்' சஞ்சிகையில் வெளியான அவரது அறிவியற் சிறுகதையான 'தொலைவிலிருந்து வந்தவர்கள்' என்னும் சிறுகதையில் அவரைப்பற்றி வெளியான சிறு குறிப்பிலிருந்து மேலும் சில தகவல்களை அறிய முடிகின்றது. [ கட்டுப்பெத்தை வளாகம், மொறட்டுவைப்பல்கலைக்கழகமாக 1978இல் மாறியது. மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தின் 1980ஆம் ஆண்டுக்கான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியராக நானிருந்தேன்.)

அச்சிறுகதையின் ஆரம்பத்தில் அவரைப்பற்றி வெளியான குறிப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள்:

1. த.இந்திரலிங்கம் என்னும் இளம் எழுத்தாளரின் படைப்புகள் இலங்கை மற்றும் வெளிநாட்டுச் சஞ்சிகைகளில்  'ஆனந்தவிகடன்' , Readers Digest ஆகியவற்றிலும், பி.பி,சி உலகச்சேவையிலும் வெளியாகியுள்ளன. இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதுமாற்றலுள்ளவர் என்பதை இவை புலப்படுத்துகின்றன.

2. சிறுகதையின் தொடக்கத்திலுள்ள த.இந்திரலிங்கத்தின் சிறு குறிப்பு: " என் எழுத்து முயற்சிகளுக்குப் பலவகையிலும் ஊக்கமும், உற்சாகமும் அளித்துவரும் , உலகப்புகழ்பெற்ற , விஞ்ஞான எழுத்தாளரும், விஞ்ஞானியுமாகிய ஆதர் - ஸி - கிளார்க் (Arthur  C Clarke)அவர்களுக்குப் புனைகதை சமர்ப்பணம். ( இதிலிருந்து எழுத்தாளர் த.இந்திரலிங்கத்துக்கும், ஆர்தர் சி கிளார்க் அவர்களுக்குமிடையில் நிலவிய தொடர்பினையும் அறிய முடிகின்றது.

Last Updated on Friday, 26 October 2018 11:07 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 302 : கவிஞர் அனாரின் கவிதை பற்றிய முகநூற் பதிவு பற்றி; முல்லை அமுதனின் காற்றுவெளி!

E-mail Print PDF

பாரதியார்இளங்கோவடிகள்கவிஞர் அனார்  தனது முகநூற் பதிவொன்றில் கவிதையைப்பற்றி இவ்விதம் குறிப்பிட்டிருந்தார்:

"யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ? இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டுபட்ட மனதை கொண்டுசென்று சொற்களாலான கூட்டை இளைத்து நிரந்தரமின்மையான அனைத்திலும் இருந்து விடுதலையடைய முயலும் தொடர்ச்சியான செயற்பாடுதான் கவிதை. கவிதை இன்னொரு உணர்ச்சியென நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சிக்கு ஆண்பால், பெண்பால், அரசியல், தத்துவம், கோட்பாடு, கலைத்தாகம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகும்....."

இக்கூற்றின் ஆரம்பத்தில் "யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ?" என்று கேள்வியைக் கேட்டு, அதற்கான பதிலையும் கேள்வியிலேயே முடித்திருக்கின்றார். இதன்படி நமக்காகக் கவிதைகள் எழுதவில்லை என்னும் தொனியும் பிரதிபலிக்கின்றது. அடுத்து வரும் வரிகளில் "இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். " என்றும் அவர் கூறுகின்றார்.

இக்கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. கவிதை என்பது பல்வேறு காரணங்களுக்காக எழுதப்படலாம். கவிஞர் தன் உணர்வுகளின் வடிகாலாகத்தனக்காக எழுதலாம். அவர் தனக்காக எழுதியபோதும் அக்கவிதையின் சிறப்பினால் பலருக்கும் அது பிடித்துப்போகலாம். உதாரணமாகப் பட்டினத்தார் தன் தாயின் இறுதிச்சடங்குகளின் போது பாடிய கவிதைகளைக் குறிப்பிடலாம். அதிலவர் அக்கணத்தில் தன் தாயின் பிரிவு ஏற்படுத்திய உணர்வுகளை வடித்திருப்பார். அச்சமயம் அவர் பாடியவைகளில் ஒன்றான பின்வரும் பாடல் அனைவரும் அறிந்த பாடல்களிலொன்று:

Last Updated on Tuesday, 23 October 2018 12:57 Read more...
 

வாசிப்பும்,யோசிப்பும் 301: நினைவில் நிற்கும் எஸ்.பொ!

E-mail Print PDF

எழுத்தாளர் எஸ்.பொ

எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் ஒருமுறை (2000) கனடா வருகை தந்திருந்தார். வருவதற்கு முன்னர் எனது முகவரிக்கு எனக்குக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதிலவர் தன் கனடா விஜயம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தொடர்ந்து செய்யவுள்ள உலகப்பயணம் பற்றியும் கூறியிருந்தார். அதிலவர் கூறியிருந்தவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:

"படைப்பிலக்கியத்திலே நீங்கள் அடைந்துவரும் முன்னேற்றமும் வெற்றியும் மனசுக்குக் குளிர்வினைத்தருகின்றது. நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமென நம்புகின்றேன். நான் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் பிற்பகுதியிலே கனடா வரத்திட்டமிட்டுள்ளேன். பத்து நாள்கள் Toronto வில் தங்கலாம் என்பது திட்டம். அங்கு வாழும் தமிழ் நேசங்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும் நேரிலே சந்தித்து அளவளாவதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். இது தமிழ்ப்பயணம்.

இலக்கியப்பயணம். குழு நலன்களை பேசுவதற்கப்பாற்பட்ட முதிர்ச்சி அடைந்து விட்டேன். இந்நிலையில் படைப்பிலக்கியத்திற்குச் செழுமை சேர்க்கும் இளவல்கள் கூட்டத்தினைச் சந்திப்பதற்கே அதிகம் விரும்புகின்றேன். .... கனடாவிலிருந்து லண்டன் போய், அங்கிருந்து சில மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று , சென்னையை அடைவது திட்டம். தற்பொழுது நான் அதிக காலத்தினைச் சென்னையிலேயே செலவு செய்கின்றேன். உலகப்படைப்பிலக்கிய மையம் ஒன்றினை இங்கு நிறுவியுள்ளேன். புத்தாயிரத்திலே புலம் பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளே இலக்கிய வீரியத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்கிற சுவிஷேசத்தின் பிரசாரகனாயும் சென்னையில் வாழ்கின்றேன்."

இவ்விதம் கூறியிருக்கும் எஸ்.பொ அவர்கள் கடிதத்தின் இறுதியில் பின்வருமாறு கூறியிருப்பார்: "இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றினைத் தக்கபடி ஆவணப்படுத்தும் பாரிய நூலொன்றினையும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதிலே குறிப்பிடும் தகவல்களைச் செப்பம் பார்ப்பதற்கும் இந்தப்பயணத்தினைப் பயன்படுத்துதல் நோக்கம்"

Last Updated on Thursday, 18 October 2018 03:29 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 299 : பாட்டைசாரியின் ''பாதை ஓரத்தில்''! 'பாட்டைசாரி' யார்?

E-mail Print PDF

பாட்டைசாரியின் பாதை ஒரத்தில்

ஈழகேசரி பத்திரிகையின் பழைய பிரதிகளின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது பத்தி எழுத்தாளர் ஓருவரின் பத்திகள் என் கவனத்தை ஈர்த்தன. அவர் வேறு யாருமல்லர் 'பாட்டைசாரி'யே அவர் அவரது 'பாதை ஓரத்தில்' என்னும் பத்தி ஈழகேசரியில் நாற்பதுகளின் ஆரம்பத்திலிருந்து  அதன் இறுதிவரை , பத்து வருடங்களுக்கும் அதிகமாக ஈழகேசரியில் வெளியாகியிருந்தது. அப்பத்திகளினூடு அக்காலச் சமுக, அரசியல் (உள்நாட்டு & வெளிநாட்டு) நிலைமைகளை அறிய முடிந்தது. அவற்றை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அவை. அவை பற்றிய பாட்டைசாரியின் விமர்சனக் குறிப்புகள் அவை. உதாரணத்துக்கு அவரது பத்தியொன்றினைப்பார்ப்போம்:

ஈழகேசரி ஞாயிறு 29.8.48:
"இலங்கைப் பல்கலைக்கழகத்து உப அத்தியட்சகர் சமீபத்திற் சீமைக்குச் சென்றிருந்தார். அங்கு அவரை ஒரு பல்கலைக்கழகம் கெளரவப்பட்டமளித்துக் கண்ணியப்படுத்திற்று. அப்பட்டத்தைப் பிற்போக்கு அரசியல்வாதியான சேர்ச்சில் வழங்கிய்யிருந்தார். சேர்.ஜென்னிங்ஸ் இருக்கின்றாரே, அவர் ஏகாதிபத்தியத்துக்கு மிண்டு கொடுக்கும் ஒரு டாக்குத்தர். இப்பெரியாருக்கு ஏகாதிபத்தியப் பெருச்சாளியாய் சேர்ச்சில் பட்டம் வழங்கியது மிகவும் பொருத்தமானதாகும். இனி சேர் ஜென்னிங்ஸ் அவர்கள் இலங்கையிலும், மலாயாவிலும் பல்கலைக்கழகங்கள் மூலம் தாய்ப்பாஷைக்குக் குழி தோண்டலாம்."

காடைத்தனம்
சேர் ஜென்னிங்ஸ் பிறந்தநாட்டை நோக்கிச் சென்ற காலத்தில் அவருக்குப் பதிலாகப்  பேராசிரியர் ஏ.டபிள்யு மயில்வாகனம் கடமையாற்றினார். அந்தக் காலத்திற் பல்கலைக்கழகக்த்து மாணவர்கள் சிலர் காடைத்தனமாக நடந்துகொண்டதுமன்றி அங்கு முதன் முறையாகச் சேர்ந்துகொண்ட மாணவிகளைத் துன்புறுத்தினரெனவும் பத்திரிகைகளிற் படித்தோம்.  முஸ்பாத்திக்காகச் சில வேடிக்கைகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் எதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? பண்பாடு, சீர்சிருத்தம் என்ற பெயராற் காடைத்தனங்கள் நடைபெறுவதை யார்தான் சகிக்க முடியும்? ஆகவே, சேர் ஜென்னிங்ஸ் இலங்கை திரும்பியதும் குறித்த மாணவர்களின் சேட்டைகள் அவருக்கு எடுத்தோதப்பட்டன. கூட்டங்கூடி ஆலோசித்த பின்னர் ஏழு மாணவர்கள் சரியாகக் கண்டிக்கப்பட்டனர். இது ஏனையோருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்குமல்லவா?

அரசியற் சாஸ்திரம்
அரசியல் என்றால் அது கிள்ளுக்கீரையாகி விட்டது. இது காரணமாகத் தெரிவிற் போவோர் வருவோர் பலர் அரசியலைப்பற்றிப் புகைப்பறக்கப்பேசுகின்றனர். அரசியல் சாமனியமான கலையல்லவென்பதைத் தமிழ்க் காங்கிரஸ் அடைந்த பெரிய வெற்றியிலிருந்தும், அது கெளரவமற்ற முறையிற் சரணடைந்த  தோல்வியிருந்தும் நன்கு அறிந்துகொள்ளலாம். 'அரசியற் சாஸ்திரத்துக்கு இரண்டு முகங்களுண்டு. ஒன்று உண்மை. மற்றொன்று கற்பனை' என ஓர் அறிஞர் கூறுகிறார். :-)

அவர் மேலுங் கூறுவதாவது :- "அதாவது நிகழ்காலத்தில் நம் கண்முன்னே காணப்படுகின்ற அரசியல் அமைப்புகள், அவற்றின் அசைவுகள், அந்த அசைவுகளினால் உண்டாகின்ற விளைவுகள், இவைகளை உதாரணமாகக வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் அரசியல் அமைப்பு எப்படியிருக்க வேண்டும், எப்படியிருந்தால் அதிகமான நன்மைகள் உண்டாகும் என்பனவ்வற்றைக் கற்பனை செய்து காட்டவேண்டியது அரசியற் சாஸ்திரத்தின் கடமையாகக் கருதப்படுகின்றது."

தமிழ்க் காங்கிரஸுக்கு அரசியல் தூரதிருஷ்டியுமிருக்கவில்லை. கற்பனையூற்றும் சுரக்கவில்லை. ஆகவேதான் அது நிலை நிற்க முடியவில்லை.

Last Updated on Friday, 05 October 2018 12:23 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 298 : இலங்கைப்புகலிடத் தமிழர்களின் 'நாடுகடந்தஉள்ளூர்த் தேசியம் (Translocal Nationalism)!

E-mail Print PDF

 கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன்இலங்கைப்புகலிடத் தமிழர்களின் 'நாடுகடந்தஉள்ளூர்த் தேசியம் (Translocal Nationalism) : வ.ந.கிரிதரனின் தேர்தெடுத்த சிறுகதைகள் மீதான வாசிப்பு! - கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன் (The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan By Dr. Gnanaseelan Jeyaseelan)

நாடு கடந்த அரசு, நாடு கடந்த தேசியம், நாடு கடந்த உற்பத்தி, நாடு கடந்த பொருளாதாரம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். 'நாடு கடந்த உள்ளூர் தேசியம்' (Translocal Nationalism) என்னுமொரு சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கின்றீகளா? குறிப்பாக எமது விமர்சகர்களிடமிருந்து கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கேட்டிருந்தால் அறியத்தாருங்கள். ஆனால் நான் முதலில் இச்சொற்றொடரை அறிந்து கொண்டது 2007இல். அப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த கலாநிதி ஞானசீலன் ஜெயசீலனின் ஆய்வுக்கட்டுரையொன்றிலிருந்து. அக்கட்டுரையை அவர் மார்ச் 13, 2007 அன்று சென்னையில் 'நியூ காலே'ஜில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுக் கருத்தரங்கில் சமர்ப்பித்திருந்தார். அக்கருத்தரங்கானது ஆசியர்களின் புகலிடப் புனைவுகளில் காணப்படும் அடையாளம் மற்றும் கலாச்சாரப்பிரச்சினைகள் பற்றியது. அதற்காக அவர் எடுத்துக்கொண்ட புனைகதைகள் ஆங்கிலத்தில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்ட எனது சிறுகதைகளான 'ஒரு முடிவும் விடிவும்', 'ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை', 'மான்ஹோல்', 'வீடற்றவன்', 'சுண்டெலிகள்' மற்றும் where are you fom? ஆகியவையாகும்.

நாடுகடந்த உள்ளூர்த் தேசியம் (The ‘Translocal’ Nationalism )

இதற்கு முதல் நாடுகடந்த உள்ளூர்த் தேசியம் என்றால் என்ன? என்று சிறிது பார்ப்போம். புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த குடிவரவாளர்கள் பலரும் பல்வகைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் அவர்கள் எதிர்நோக்கும் அடையாளச்சிக்கல்கள் பல்வகையின. மொழி, கலாச்சாரம், நிறம் என்று அவர்கள் பல்வகைப்பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். அதே சமயம் அவர்களால் அவர்கள் விட்டு விட்டு வந்த பிறந்த மண், அங்குள்ள அவர்களை உருவாக்கிய கலாச்சாரக் கூறுகளை, அரசியலை எல்லாம் மறந்து விட முடியாது. நாடு கடந்து வாழும் நிலையிலும் அவர்கள் கவனம் அவர்களது இழந்த மண்ணின் மீதிருக்கும். பிறந்த மண்ணின் அரசியலில் அவர்களது பங்களிப்பு இருக்கும். பிறந்த மண்ணின் பொருளாதாரத்தில் அவர்களது பங்கு இருக்கும். பிறந்த மண்ணின் சமூகத்தில் புகலிட அனுபவங்கள் மூலம் பல் வகை மாற்றங்கள் ஏற்படும் நிலைக்குக் காரணமாகவும் புகலிடக் குடிவரவாளர்களிருப்பார்கள்.

Last Updated on Monday, 24 September 2018 12:24 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 297 : நாடு கடந்த முதலாளித்துவப் பொருளாதாரமும், அரசும் மற்றும் உற்பத்தியும் சமூகவியலறிஞர் வில்லியம் ஐ.ராபின்சனின் கருதுகொள்களும்..

E-mail Print PDF

மாமூலனின் 'இனப்படுகொலை நாட்களில் (குரலற்ற கனடாப்பத்தி எழுத்துக்கள்)மாமூலன்அண்மையில் 'நாளை பதிப்பகம்' (கனடா) வெளியிட்ட மாமூலனின் 'இனப்படுகொலை நாட்களில் (குரலற்ற கனடாப்பத்தி எழுத்துக்கள்)' நூலை வாசித்துக் கொண்டிருந்தபொழுது அதிலுள்ள சில கட்டுரைகள் கவனத்தைக் கவர்ந்தன. அவை நாடு கடந்த அரசு பற்றிய கட்டுரைகள். அவற்றிலும் குறிப்பாக என்னைக் கவர்ந்த கட்டுரை 'நாடு கடந்த நாடு வினாவிடை (Transnational State: A short introduction for dummies) ' என்னும் கட்டுரை. கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகச் சமூகவியற் பேராசிரியரான வில்லியம் ஐ. ராபின்சன் (William I.Robinson) அவர்கள் அரசியற் பொருளாதாரம், உலகமயமாதல் , இலத்தீன் அமெரிக்கா மற்றும் வரலாற்றுப்பொருள்முதல்வாதம் ஆகிய துறைகளை மையமாக வைத்து ஆய்வு செய்பவர். இவர் கிரேக்கப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் கருத்துகளைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் கட்டுரை.

அந்நேர்காணலில் வில்லியம் ஐ. ராபின்சன் தெரிவித்துள்ள கருத்துகளைச் சுருக்கமாக வழங்கும் மாமூலனின் கருத்துகளைச் சுருக்கி இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. புதிய முதலாளித்துவம் 'நாடு கடந்த மூலதன'ங்களைக் கொண்டது. அத்துடன் உலகலாவியரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடு கடந்த உற்பத்தி முறையும், பொருளாதார ஒழுங்கமைவும் உள்ளன.

2. நாடு கடந்த உற்பத்தி முறையானது ஓர் இடத்தை மையமாகக் கொண்ட உற்பத்தி முறை அல்ல. அதாவது பொருளொன்றின் பாகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நாடுகளில் செய்யப்பட்டு இன்னுமொரு நாட்டில் ஒன்றாக்கப்பட்டுச் சந்தைக்கு
வருகின்றன.

3. தேசியப்பொருளாதாரங்கள் உலகமயமாதலால் மீள் கட்டமைக்கப்பட்டுள்ளன. நாடு கடந்த உற்பத்தி என்பதும் உலகம் தழுவிய இப்பொருளாதாரத்தின் விளைவே.

4. மூலதனமானது தேசிய , உள்ளூர் மூலதனங்கள், நாடு கடந்த உலகலாவிய மூலதனம் எனப்பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் நாடு கடந்த மூலதனமே ஆதிக்கம் செலுத்துவதாகவுள்ளது.

5. நாடு கடந்த அளவிலான முதலாளித்துவ முதலீடு செய்யும் குழுக்கள் இன்று உலகளாவியரீதியிலுள்ளன. இவையே உலகத்தின் ஏனைய அதிகார, ஆளும் வர்க்கங்களின் மீது மிகப்பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.

Last Updated on Saturday, 22 September 2018 12:06 Read more...
 

ராஜினி திரணகம: மண்ணின் மகளே நீ வாழி!

E-mail Print PDF

- செப்டம்பர் 21 ராஜினி திரணகமவின் நினைவு தினம். அவர் நினைவாக -

ராஜினி திரணகம

மானுடர்தம் உரிமைகளுக்காய்ப்போராடினாய்!
மண்ணின் விடுதலைக்காய்க் குரல் கொடுத்தாய்.
மாணவர்க்கு மருத்துவம் போதிப்பதற்காய்
மீண்டும் வந்தாய் நீ பிறந்த மண்ணுக்கு.
மண்ணோ யுத்த பூமியாக,
மரண பூமியாகக் கொந்தளித்துக் கிடந்தது.

மண்ணின் அச்சூழல் கண்டும் நீ
மனந்தளரவில்லை.
மக்களுக்காய், மக்கள்தம் உரிமைகளுக்காய்
மீண்டும் மீண்டும் முழங்கினாய்.

மரணம், உன் மரணம் உன்
மண்ணின் மைந்தனொருவானாலே புரியப்படுமென்று
மனத்தில் உணர்ந்திருந்தாய்.
மனத்தில் உணர்ந்ததை எதிர்வும் கூறினாய்.

மருத்துவபீடத்தின் முன்னால் உன்
மரணம் நிகழ்ந்தது தீராத்துயர்; மாறா வலி.

Last Updated on Friday, 21 September 2018 11:43 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 296 : தமிழினி ஜெயக்குமரனின் 'மழைக்கால இரவு' சிறுகதைத்தொகுப்பு பற்றி; கிழக்கில் சுடர்விட்ட தாரகை!; எழுத்தாளர் தேவகாந்தனுடன் ஒரு மாலைப்பொழுது!

E-mail Print PDF

தமிழினி ஜெயக்குதமிழினி ஜெயக்குமரனின் 'மழைக்கால இரவு' சிறுகதைத்தொகுப்பு பற்றி...,மரனின் 'மழைக்கால இரவு' சிறுகதைத்தொகுப்பு தமிழகத்தின் 'பூவரசி' பதிப்பகமும், இலங்கையிலுள்ள 'ஷேக் இஸ்மையில் நினைவுப் பதிப்பக'மும் இணைந்து கடந்த ஆண்டு வெளியிட்ட நூல். ஏற்கனவே சிங்களத்தில் வெளியான 'அளுயம் சிஹினய' சிறுகதைத்தொகுப்பின் மூல வடிவம். 'கவுரவக் கவசம்', 'மழைக்கால இரவு', 'சுதர்சினி', 'வைகறைக் கனவு', 'பாக்கியம்மா' மற்றும் 'எனது மகன் வந்திட்டான்' ஆகிய ஆறு கதைகளின் தொகுப்பு. தமிழினியின் மறைவுக்குப்பின்னர் அவரது சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்', 'தமிழினி கவிதைகள்' மற்றும் 'மழைக்கால இரவு' (சிறுகதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிடக் காரணமாகவிருந்த அவரது கணவர் ஜெயக்குமரனை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இவை அனைத்துமே தமிழினியின் அனுபவங்களை கலை, இலக்கிய மற்றும் அரசியல் வரலாற்றில் பதிவு செய்பவை. அத்துடன் தமிழினியின் பல்வேறு காலகட்டச் சிந்தனைப்போக்குகளின் பரிணாம வளர்ச்சியினை வெளிப்படுத்துபவை.

தமிழினியின் 'மழைக்கால இரவு' சிறுகதைத்தொகுப்பும் இலங்கை அரசின் சாகித்திய அமைப்பின் 2017ஆம் ஆண்டுச் சிறந்த சிறுகதைத்தொகுப்பு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இறுதிச்சுற்றில் தெரிவான மூன்று நூல்களிலொன்றாக இருந்தது என்னும் விடயத்தை அறிந்தேன். இறுதிச்சுற்றுக்குத் தெரிவான மூன்று நூல்களின் விபரங்கள் வருமாறு:

1. ஒரு பெண்ணின் கதை - எம்.எஸ்.அமானுல்லா
2. உயிருதிர் காலத்தின் இசை - பதுளை சேனாதிராஜா
3. மழைக்கால இரவு - தமிழினி ஜெயக்குமாரன்

( இறுதியில் விருது பெற்ற நூல் பதுளை சேனாதிராஜாவின் 'உயிருதிர் காலத்தின் இசை'.)

தமிழினியின் மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் 'மழைக்கால இரவு', 'வைகறைக் கனவு' மற்றும் 'பாக்கியம்மா' ஆகிய சிறுகதைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியவை என்பதை இத்தருணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன். அவர் முதலில் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பிய சிறுகதை 'மழைக்கால இரவு'. அதனை வெளியிட்டபோது கீழுள்ள குறிப்புடன் வெளியிட்டோம்:

Last Updated on Tuesday, 18 September 2018 03:47 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 295: ஶ்ரீலங்கா சஞ்சிகையின் கலை, இலக்கியப்பங்களிப்பும், அ.ந.கந்தசாமியின் படைப்புகளும்!

E-mail Print PDF

ஶ்ரீலங்கா இதழொன்றுஅறிஞர் அ.ந.கந்தசாமி'ஸ்ரீலங்கா' சஞ்சிகை இலங்கைத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தமிழ்ச் சஞ்சிகை. ஆகஸ்ட் 1950 - டிசம்பர் 1963 காலகட்ட இதழ்கள் பல (தொடர்ச்சியாக அல்ல) நூலகம் இணையத்தளத்திலுள்ளன. இவற்றைப் பார்த்தபோதுதான் ஈழத்தமிழ்இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பினைச் செய்த சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகையையும் காண முடிந்தது.

அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் போன்றவர்கள் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்த காலகட்டத்தில் , அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை இச்சஞ்சிகையென்று அறிந்திருக்கின்றேன்.ஆனால் சஞ்சிகையின் முன் அட்டையில் அரசாங்க சமாச்சாரப் பகுதியால் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசிப்பக்கத்தின் அடியில் தகவற் பகுதியினருக்காக இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றிய விபரமெதனையும் காணவில்லை.
ஆனால் இச்சஞ்சிகையின் உருவாக்கத்தில் அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் ஆகியோரின் பங்களிப்பினை சஞ்சிகையில் வெளியான படைப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது. இருவருமே இச்சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தில் இலங்கைத் தகவற் திணைக்களத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததாலும், இருவருமே நாடறிந்த எழுத்தாளர்கள் என்பதாலும் 'ஶ்ரீலங்கா' சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தினை அலங்கரித்தவர்களாக அறிந்த தகவல் உண்மையென்றே தோன்றுகின்றது.

இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடு என்பதால் அரசு பற்றிய , அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகையாக இச்சஞ்சிகை விளங்கினாலும், ஈழத்தமிழ்க் கலை, இலக்கியத்துக்குக் காத்திரமான படைப்புகளையும் கூடவே வெளியிட்டுள்ளதால் , ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கிய சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகை விளங்குகின்றது எனலாம்.

கவிதை, சிற்பக்கலை பற்றி, ஆலயக் கட்டடக்கலை பற்றி, பல்லினச் சமூகங்கள் பற்றி, ஊர்களைப்பற்றி, கந்தரோடை, நல்லூர் போன்ற நகர்கள், அரசின் பல் வகை நீர்ப்பாசனத்திட்டங்கள் பற்றி, பரந்தன் இரசாயன, வாழைச்சேனைக் காகிதத் தொழிற்சாலைகள் பற்றி, ஆதிவாசிகளான குறவர்கள் பற்றி இவ்விதம் இச்சஞ்சிகையின் களம் விரிந்தது. மிகுந்த பயன் தருவது. அறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப்பலரின் படைப்புகள் பலவற்றைத்தாங்கி வெளியாகிய சஞ்சிகை ஶ்ரீலங்கா. அவ்வகையில் தவிர்க்க முடியாத கலை,
இதுவரை இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பேராசிரியர்கள் , எழுத்தாளர்கள் பலர் இனிமேலாவது இது போன்ற காத்திரமான கலை, இலக்கியப் பங்களிப்பு செய்த சஞ்சிகைகள் பக்கமும் கவனம் செலுத்தட்டும்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. " என்னும் வள்ளுவனாரின் குறளுக்கொப்ப ஆய்வுகளைக் காய்தல், உவத்தலின்றிச் செய்யட்டும்.

இலக்கியச் சஞ்சிகை.நூலகத் தளத்திலுள்ள ஶ்ரீலங்கா சஞ்சிகைகளில் காணப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் வருமாறு:
Last Updated on Friday, 07 September 2018 02:10 Read more...
 

வடக்கு நோக்கிய மகாவலி அபிவிருத்தித்திட்டம் பற்றி!

E-mail Print PDF

- தென்னிலங்கையில் மகாவலி ஆற்றினை வழி மறித்துக் கட்டிய அணைகள் -

- தென்னிலங்கையில் மகாவலி ஆற்றினை வழி மறித்துக் கட்டிய அணைகள் -

வீணாகக் கடலில் கலக்கும் மகாவலி ஆற்று நீரை அணைகள் கட்டித் தடுத்து , மக்களின் விவசாயத்தேவைகள் மற்றும் மின்சாரத்தேவைகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்துவதும், நகரங்களை நோக்கி வேலை வாய்ப்புகளுக்காகப் படையெடுக்கும் கிராமப்புற மக்களை அவ்விதம் செல்லாமல் , தாம் வாழும் பகுதிகளில் தங்கி விடச்செய்வதும், புதிய நகர்களை நதியோடும் திசை வழியே உருவாக்குவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள். மகாவலித்திட்டம் திருப்பப்படுமாயின் உண்மையில் வட, கிழக்குப் பகுதிகளுக்கு நன்மையையே தரும். ஆனால் இவ்வகையான திட்டங்களைக் காலத்துக்குக் காலம் இலங்கை அரசுகள் பெரும்பான்மைச் சமூகத்தினரின் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்துவதுதான் பிரச்சினையைக் கொண்டுவருகின்றது. காலத்துக்காலம் தமிழ்ப்பகுதிகள் பல சிங்களப்பகுதிகளாகியதைப் பார்க்கின்றோம். அம்பாறை திகாமடுல்லாவாகியதையும், மணலாறு வெலிஓயா ஆகியதையும் பார்க்கின்றோம். இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இவ்வகையான குடியேற்றத்திட்டங்கள். இவ்விதமான திட்டங்களை நிறைவேற்றும்போது அப்பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள் (அவ்விதம் அப்பகுதிகளில் வாழ்ந்திருப்பின், வாழ்ந்திருந்து வெளியேற்றப்பட்டிருப்பின்) மீளக்குடியேற்றப்பட வேண்டும். மேலும் அப்பகுதிகளில் புதிதாக மக்கள் குடியேற்றப்படுவதாக இருப்பின் அப்பகுதியில் வாழும் மக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

Last Updated on Thursday, 30 August 2018 03:16 Read more...
 

சிங்கள மொழியில் எனது (வ.ந.கிரிதரன்) 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'

E-mail Print PDF

சிங்கள மொழியில் எனது (வ.ந.கிரிதரன்) 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'

இன்று 'அகாசா மீடியா வேர்க்ஸ்' மூலம் பல சிங்கள நூல்கள் இலங்கையில் வெளியாகின்றன. அவற்றிலொன்று எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு. சிங்கள மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த (G.G.Sarath Ananda). இந்நூலுக்கான பதிப்பகத்தைத் தேர்வு செய்து நூல் வெளிவரக் காரணமாகவிருந்தவர் எழுத்தாளர் காத்யானா அமரசிங்க (Kathyana Amarasinghe) . இவர்களுக்கும், இந்நூலினைச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் 'அகாசா மீடியா வேர்க்ஸ்' (AHASA Media Works) உரிமையாளர் அசங்க சாயக்கார ( Asanka Sayakkara) அவர்களுக்கும் நன்றி. நூல் வெளியீடு நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற என் மனம் நிறைந்த வாழ்த்துகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Last Updated on Tuesday, 28 August 2018 17:20 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 294 : முன்னுரை, முகவுரை மற்றும் அணிந்துரை ?

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 294 : முன்னுரை, முகவுரை மற்றும் அணிந்துரை ? எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் தனது 'புகையில் தெரியும் முகம்' நாவலுக்கான நூலின் ஆரம்பத்தில் கதையின் கதை என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அதனைக் குறிப்பிடுகையில் முகவுரை, முன்னுரை போன்ற பதங்களப் பாவித்திருப்பார். அதிலவர் பின்வருமாறு கூறுவார்:

"அடுத்தபடியாக இந்த முகவுரையை ஏன் எழுதினீர் என்று கேட்கின்றீர்களா? சரி அதையும் சொல்லி விடுகிறேன்" என்று கூறியதுடன் " முன்னுரையை நானேதான் எழுதவேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் - அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகின்றேன்" என்றும் கூறுவார்.

இது பற்றிய தனது முகநூல் எதிர்வினையில் எழுத்தாளர் மைக்கல் கொலின் (மகுடம் இதழாசிரியர்) பின்வருமாறு கேல்வியொன்றினை எழுதியிருப்பார்:

"நூலாசிரியர் தனது நூலுக்கு எழுதும் உரை முன்னுரையே.ஏனையோர் எழுதுவது அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை, அ.செ.மு.தனது நூலுக்கு தான் முன்னுரை எழுதியதில் என்ன புதுமை உண்டு."

இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அப்பொழுதுதான் முன்னுரை, அணிந்துரை மற்றும் முகவுரை விடயத்தில் பலருக்கும் ஒருவிதக் குழப்பமிருப்பதை அறிய முடிந்தது. இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அ.செ.மு அவர்கள் முன்னுரையையும் முகவரையையும் ஒன்றாகக் கருதுவதாகத்தான் அவரது 'கதையின் கதை' என்னும் கூற்றிலிருந்து முடிவு செய்யலாமா?

ஆக்ஸ்போர்ட்டின் 'ஆங்கில -ஆங்கில -தமிழ்' அகராதியில் பின்வருமாறு Preface என்னும் சொல்லை விபரித்திருப்பார்கள்:

"ஒரு நூல் இன்னது பற்றியது அல்லது இன்ன காரணத்துக்காக எழுதப்பட்டது என்பதை விளக்கும் அதன் எழுத்து வடிவிலான முன்னுரை , முகப்புரை"

முகவரை பற்றி க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதியில் " உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை. ஆசிரியர் முன்னுரை". மேற்படி அகராதியில் முன்னுரை பற்றி "நூலாசிரியரால் நூல் குறித்த கருத்துகள அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை preface" என்று கூறப்பட்டிருக்கும்.

Last Updated on Sunday, 19 August 2018 03:30 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 293 : ஒரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' மற்றும் அ.செ.முருகானந்தனின் 'புகையில் தெரிந்த முகம்' பற்றி.....

E-mail Print PDF

அ.செ.முருகானந்தன்Orhan Pamukஓரான் பாமுக் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற துருக்கி நாட்டவர். அவரது புகழ் பெற்ற நாவலான 'எனது நிறம் சிவப்பு' (My Name is Red) நாவலுக்காக அவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதில் இறந்தவர்களே நடந்த கொலைகள் எவ்விதம் நிகழ்ந்தன என்பதை விளக்குவார்கள். பின் நவீனத்துவப்படைப்புகளில் ஒன்றாக மேற்படி நாவல் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இது போன்ற ஆனால் அளவில் சிறிய நாவலை இலங்கைத்தமிழ் எழுத்தாளர் ஒருவர் 'ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே எழுதியுள்ளார்.

'சுதந்திரன்' வாரவெளியீட்டில் தொடராக வெளியான நாவல் அது. பின்னர் நவலட்சுமி புத்தகசாலை ( 136 செட்டியார் தெரு, கொழும்பு ) பதிப்பகத்தினால் 1950இல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நூலுக்கு நூலாசிரியர் சுவையானதொரு முன்னுரையினையும் எழுதியுள்ளார். அம்முன்னுரையின் முடிவில் அவர் " முன்னுரையை நானேதான் எழுத வேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் - அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகிறேன். புத்தகத்தை எழுதியவரே அதற்கு முன்னுரை எழுதக்கூடாது என்று நியதி் இருக்கிறதா? :-) இன்னும் சொல்லப்போனால் நான் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத என்னைவிட வேறு யார் அதிகமாக ஆசை கொள்ளப்போகிறார்கள்?"

சரி யார் அவ்வெழுத்தாளர்? அப்படைப்பின் பெயர் என்ன? என்று கேட்கின்றீர்களா? அதற்கு முன் மேலும் சில வார்த்தைகள்..

இவ்வெழுத்தாளர் யாழ்ப்பாணத்தமிழர்களின் வாழ்வினை மண் வாசனை கமழ, சுவையுடன் எழுதுவதில் வல்லவர். இக்கதையின் கதை சொல்லியான ராமலிங்கம் சுருட்டொன்றைப் பற்ற வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கின்றார். புகையை வட்ட வட்ட வளையங்களாக விட்டுக்கொண்டிருக்கின்றார். அச்சமயம் அச்சுருட்டுப் புகையினூடு அழகிய முகமொன்று தெரிகின்றது. அந்த முகத்துக்குரியவள் வேறு யாருமல்லள். புகையிலை வியாபாரி பொன்னுச்சாமியின் மகளான காந்திமதியே் அவள்.

காந்திமதியையும் அவளது அத்தானான காதலன் முருகேசனையும் பொன்னுச்சாமி அவர்களது காதலை எதிர்த்ததனால் கொன்று விடுகின்றார். அதன் மேல் தென்னம்பிள்ளையொன்றையும் வளர்த்து விடுகின்றார். அவ்விதம் அவரால் கொல்லப்பட்ட அவரது மகளான காந்திமதியும், அவளது காதலான முருகேசனுமே கதை சொல்லியான ராமலிங்கத்துக்குத் தங்களது கதையினைக் கூறுகின்றார்கள்.

Last Updated on Sunday, 19 August 2018 03:26 Read more...
 

கலைஞர் மறைவு: உதயசூரியன் அஸ்தமித்தது!

E-mail Print PDF

கலைஞர் மறைவு: உதயசூரியன் அஸ்தமித்தது!கலைஞர் கருணாநிதி  அவர்களின் மறைவுச்செய்தியினை முகநூல் நண்பர்களின் பதிவுகளின் மூலமே முதலில் அறிந்துகொண்டேன். கலைஞர் தமிழக , இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல்வாதி. தமிழ்க் கலை, இலக்கிய உலகிலும் தவிர்க்க முடியாதவர்களிலொருவர்தான்.  அவரது கலை, இலக்கிய உலகத்துப் பங்களிப்பின் மூலம்தான் அவரைப்பற்றி முதலில் அறிந்துகொண்டேன். அவற்றின் மூலமே திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசியலில் வலுவாகக் காலூன்றியது. வெற்றியையும் அடைந்தது.

ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல் எப்பொழுதுமே மனிதர் ஒருவருக்கும் இரு பக்கங்கள் இருக்கும். நேர்மறையான , எதிர்மறையான பக்கங்களிலிருக்கும். கலைஞரும் விதிவிலக்கானவர் அல்லர். ஜெயலலிதா என்றால் பெண் குழந்தைகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட 'தொட்டில் சிசு'த்திட்டம் நினைவுக்கு வருவதைப்போல், எம்ஜிஆர் என்றால் 'சத்துணவுத்திட்டம்' நினைவுக்கு வருவதைப்போல், கலைஞர் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது 'சமத்துவப்புர'த்திட்டம். சாதிப்பிரிவுகளற்று அனைவரும் வாழும் குடியேற்றத்திட்டம் அது. சாதிப்பிரிவுகளால் பிளவுண்டிருக்குமொரு சமுதாயத்தில் மிகவும் முக்கியமானதொரு திட்டமாக அதனை நான் கருதுகின்றேன்.

கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்கள். கலையுலக, அரசியலுலக வாழ்வினுள் காலடி வைத்தவர்கள். வரலாற்றில் இவர்கள்தம் வாழ்க்கையானது அரசியலில் மட்டுமல்ல கலையுலகிலும் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்று.

அரசியலைப்பொறுத்தவரையில் இவரைப்பற்றிய விமர்சனங்கள் பல இருப்பினும் ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியவர். ஒரு காலத்தில் பாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச்சினிமா உலகை இளங்கோவனின் வசனங்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் பின்னர் கலைஞரின் வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்ப காலகட்டங்களில் கோலோச்சின. பராசக்தி, மருத நாட்டு இளவரசி, மனோஹரா , பூம்புகார், ராஜா ராணியென்று கலைஞரின் வசனங்களின் சிறப்பினை, தாக்கத்தை வெளிப்படுத்த பட்டியலொன்று உண்டு. அண்ணாவின் வசனங்கள் மாற்றியமைத்தன. சமுதாயத்தில் நிலவிய சீரழிவுகளுக்கெதிராக, மூட நம்பிக்கைகளுக்கெதிராக அடுக்குமொழிகளில் எழுதப்பட்ட கனல் பறக்கும் வசனங்களை , தர்க்கரீதியிலான வசனங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.  கலைஞரின் திரைப்படப்பாடல்கள் குறைவாக இருப்பினும் அவற்றுக்கும் முக்கியத்துவமுண்டு. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புண்டு,

தமிழ் இலக்கியத்துறையிலும் கலைஞர் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையென்று அவரது இலக்கியத்துறைக்கான பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் அடுக்கு மொழி நடைக்கும் ஒரு காலகட்டப்பங்களிப்புண்டு. சமூகச் சீர்கேடுகளை, மூட நம்பிக்கைகளைக்கடுமையாகச் சாடி மக்கள் மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை அவை ஐம்பதுகளில், அறுபதுகளில் ஏற்படுத்தின. அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது வரலாறு.

Last Updated on Wednesday, 08 August 2018 06:00 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 292: கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப்பங்களிப்பு!\

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 292: கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப்பங்களிப்பு!\கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்கள். கலையுலக, அரசியலுலக வாழ்வினுள் காலடி வைத்தவர்கள். வரலாற்றில் இவர்கள்தம் வாழ்க்கையானது அரசியலில் மட்டுமல்ல  கலையுலகிலும் வைத்து நோக்கப்பட வேண்டியதொன்று.

அரசியலைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றிய விமர்சனங்கள் பல இருப்பினும்  ஏனைய கலை, இலக்கியத் துறைகளில் இவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியவர். ஒரு காலத்தில் பாடல்களால் நிறைந்திருந்த தமிழ்ச்சினிமா உலகை இளங்கோவனின் வசனங்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. அதன் பின்னர் கலைஞரின் வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ஐம்பதுகளில், அறுபதுகளின் ஆரம்ப காலகட்டங்களில் கோலோச்சின. பராசக்தி, மருத நாட்டு இளவரசி, மனோஹரா , பூம்புகார், ராஜா ராணியென்று கலைஞரின் வசனங்களின் சிறப்பினை, தாக்கத்தை வெளிப்படுத்த பட்டியலொன்று உண்டு. கலைஞரின் திரைப்படப்பாடல்கள் குறைவாக இருப்பினும் அவற்றுக்கும் முக்கியத்துவமுண்டு. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புண்டு,

தமிழ் இலக்கியத்துறையிலும் கலைஞர் நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரையென்று அவரது இலக்கியத்துறைக்கான பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத்  தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரின் அடுக்கு மொழி நடைக்கும் ஒரு காலகட்டப்பங்களிப்புண்டு. சமூகச் சீர்கேடுகளை, மூட நம்பிக்கைகளைக்கடுமையாகச் சாடி மக்கள்  மத்தியில் மிகுந்த விழிப்புணர்வை அவை ஐம்பதுகளில், அறுபதுகளில் ஏற்படுத்தின. அதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப்பிடிக்கும் அளவுக்கு முன்னேறியது வரலாறு.

கலைஞரின் குறளோவியம், சங்கத்தமிழ் போன்ற தொகுதிகள் முக்கியமானவை.

என்னைப்பொறுத்தவரையில் கலைஞரைப்பற்றி முதன் முதலில் அறிந்துகொண்டது 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்த் மகாநாட்டு மலர் மூலமேதான். அப்பா திமுகவினர் மேல் மதிப்பு மைத்திருப்பவர். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர் மீது மதிப்பு வைத்திருந்தவர். அதன் காரணமாகவே அம்மாநாட்டு மலரையும் வாங்கியிருந்தார். மிகவும் சிறப்பாக வடிவமைக்கட்டிருந்த மலர் அது. இதுவரை நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மலர்களில் மிகவும் சிறப்பான மலராக அம்மலரே கணிப்பிடப்படும் என்று கருதுகின்றேன். அம்மலரில் கலைஞரின் 'பூம்புகார்' நாடகமிருந்தது. அதன் மூலமே அவரைப்பற்றி முதலில் அறிந்து கொண்டதாக நினைவு. அதன் பின் அறிஞர் அண்ணாவின் மறைவினையடுத்து அவர் பாடிய இரங்கற்பா மூலம் என்னை அவர் மீண்டும் கவனிக்க வைத்தார். கேட்பவர் நெஞ்சங்களை உருக்கும் இரங்கற்பா அது. அவ்வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரங்கற்பாவாக அவ்விரங்கற்பா அமைந்து விட்டது.

அடுத்து என்னைக் கவனிக்க வைத்தது குமுதம் சஞ்சிகையில் ஆரம்பமான அவரது 'ரோமாபுரிப்பாண்டியன்' தொடர் நாவல். வரலாற்று நாவல். அத்தொடரை அக்காலகட்டத்தில் முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் வெளியான ஆரம்ப அத்தியாயங்கள் என்னை அவ்வயதில் கவர்ந்தன. ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியான தொடர் அது. அக்காலகட்டத்தில் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான அவரது நாவலான 'வெள்ளிக்கிழமை'யும் என் கவனத்தைச் சற்றே அவர்பால் ஈர்த்த படைப்புகளிலொன்றே.

Last Updated on Friday, 03 August 2018 11:36 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 291 : 'பொதிகை'யின் 'நூல் நயம்' நிகழ்ச்சியில் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' பற்றிய எண்ணத்துளிகள்..

E-mail Print PDF

'பொதிகை'யின் 'நூல் நயம்' நிகழ்ச்சியில் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' பற்றிய எண்ணத்துளிகள்.. -வ.ந.கிரிதரன் -எம் மாணவப்பருவத்தில் எமது பிரதானமான பொழுதுபோக்குகள்: திரைப்படங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள் & பத்திரிகைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத் தமிழ் நிகழ்ச்சிகள் இவையே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ் ஒலிபரப்புச் சேவை இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பைப்பெற்ற சேவை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தமிழ்ச் சேவை என்றதும் உடனடியாக எனக்கு ஞாபகத்தில் வரும் பெயர்கள் அப்துல் ஹமீட், 'பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி புகழ்' ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, ராஜகுருசேனாதிபதி கனகரத்தின்ம், சற்சொருபவதி நாதன், வி.என்,மதியழகன், சில்லையூர் செல்வராசன், கமலா தம்பிராஜா...இவர்களே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவையில் எல்லா நிகழ்ச்சிகளையும் நான் கேட்பவனல்லன். அவ்வப்போது வயதுக்கேற்ப கேட்கும் நிகழ்ச்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு வயதில் பொங்கும் பூம்புனல் கேட்பது பிடித்திருந்தது. இன்னுமொரு சமயம் 'தணியாத தாகம்' போன்ற தொடர் நாடகங்கள், 'இசையும் கதையும்' போன்ற இசையுடன் கூடிய கதைகள், இன்னுமொரு பருவத்தில்'நெஞ்சை ஈர்க்கும் 'நெஞ்சில் நிறைந்தவை' என விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சிகளின் தன்மையினை  எம் வயதும் , அவ்வயதுக்குரிய உளவியலும் நிர்ணயித்தன. எனக்கு அக்காலத்தில் ராஜேஸ்வரி சண்முகத்தின் குரல் மிகவும் பிடிக்கும். சீரான வேகத்தில் நிதானத்துடன் சொற்களை வழங்கும் குரல் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினத்துடையது. இவ்விதமாக முறையான பயிற்சியும், அனுபவமும் மிக்க அறிவிப்பாளர்கள் மொழி வளம் மிக்கவர்களாக விளங்கினார்கள்; தமிழ்த்திரைப்படப்பாடல்களின் ஆவணச்சுரங்கங்களாக விளங்கினார்கள்; எப்பாடலுக்கும் உரிய தமிழ்ச் சொற்களைக் கையாண்டு அவற்றை விபரிப்பதில் மிகவும் வல்லவர்களாகவிருந்தார்கள்.

நிகழ்ச்சிகள் தவறுகள் அதிகமற்று, சிறப்பாக அமைந்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று இலங்கை ஒலிபரப்ப்புக் கூட்டுத்தாபனமென்னும் அரச கட்டமைப்பு. ஆனால் புகலிடச் சூழலிலோ இவ்விதமான கட்டமைப்புகள் எதுவுமற்றுள்ளன. பெரும்பாலும் தனிப்பட்டவர்களது பொருளீட்டுவதற்குரிய வர்த்தக முயற்சிகளாகவே இங்கு இயங்கும் வானொலிகளிருக்கின்றன. இதனால் ஒலி/ஒளி பரப்புத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் ஈடுபடுகின்றார்களே தவிர. இவர்களது நிகழ்ச்சிகளைக் கண்காணித்து, சீரமைப்பதற்குரிய முறையான கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பல தவறுகளை இவர்கள் புரிகின்றார்கள். உதாரணத்துக்கு ஒன்று: நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒருவர் ஆர்வமுடன் உரையாடிக்கொண்டிருக்கின்றார். ஆனால் நடத்துபவருக்கோ அந்நிகழ்ச்சியினை விரைவாக முடித்து விட வேண்டுமென்று எண்ணம் போலும். கலந்து கொள்பவருடன் இவரால் ஆனந்தமாக , உற்சாகமாகத் தொடர்ந்தும் உரையாட முடியாமலுள்ளது. அவரது குரலிலும் அதற்கான சலிப்பு தென்படுகின்றது. கேட்கின்றவர்களுக்கும் அந்நிகழ்ச்சியினை நடத்துகிறவரின் சலிப்பும் தெரிகின்றது. இதனால் அவர்களுக்கும் சலிப்பு ஏற்படுகின்றது. இது போன்ற சலிப்புகளையெல்லாம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவை நிகழ்ச்சிகளிலெல்லாம் நான் அடைந்ததில்லை.

Last Updated on Sunday, 29 July 2018 22:25 Read more...
 

"அன்பு நண்பர்களே, உங்களிடம் மன்னிப்பைக் கோருகின்றோம்""

E-mail Print PDF

எழுத்தாளரும், 'லக்பிமா' பத்திரிகையில் இலக்கியப்பகுதிக்கான ஆசிரியராகவுமிருக்கும் காத்யானா அமரசிங்க ( .Kathyana Amarasinghe )1983 இனக்கலவரத்தையொட்டி அவரது நண்பர்கள் சிலருடன் இணைந்து உருவாக்கிய இப்போஸ்டரை அனுப்பியிருந்தார். இதிலுள்ள வாசகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவ்வாசகங்கள் இவைதாம்: "கருப்பு ஜூலை - 35 ஆண்டுகள். அன்பு நண்பர்களே, உங்களிடம் மன்னிப்பைக் கோருகின்றோம்"

முதல் தடவையாகச் சிங்கள மக்களிடமிருந்து இவ்வாசகங்களைக் கேட்கின்றேன். இவை முக்கியமான வாசகங்கள். 1983 இனக்கலவரத்துக்காக, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அழிவுகளுக்காகச் சிங்கள மக்கள் சார்பில் இவர்கள் மன்னிப்புக் கேட்கின்றார்கள். உண்மையில் இலங்கையின் அதிபர் ஓருவர் என்று இவ்விதம் சிங்கள மக்கள் சார்பில் தமிழ் மக்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற அநீதிகளுக்காக மன்னிப்புக் கோருகின்றாரே அதுவே இந்நாட்டு மக்களுக்கிடையிலான உண்மையான நல்லெண்ணத்துக்கும், புரிந்துணர்வுகளுக்கும் வழி வகுக்கும். அதற்கு முதற்படியாகவே இப்போஸ்டரையும் , வாசகங்களையும் பார்க்கின்றேன். அத்துடன் அடையாளம் காணப்பட்ட , இக்கலவரங்களில் குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். சட்டமானது அனைவருக்கும் பொது என்னும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

Last Updated on Sunday, 29 July 2018 22:22 Read more...
 

83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.....

E-mail Print PDF

ஓவியர் புகழேந்தியின் 1983 பற்றிய ஓவியம்சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து அன்று தமிழக முதல்வராகவிருந்த எம்ஜிஆர் கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தார். இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

பின்னர் இறுதியாக சிதம்பரம் கப்பல் தமிழக அரசால் அனுப்பப்பட்டபோது , இரு வாரங்கள் கழிந்திருந்த நிலையில், நானும் யாழ்ப்பாணம் செல்வதற்கு முடிவு செய்தேன். என் வாழ்க்கையில் கட்டுமரங்களில் பயணித்திருக்கின்றேன்; படகுகளில் பயணித்திருக்கின்றேன்; ஆனால் கப்பலொன்றில் பயணித்தது அதுவே முதற் தடவை. கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்தைச் சுற்றிச் சென்ற கப்பலின் பணியாளர்களெல்லாரும் அகதிகளென்று மிகவும் அன்புடன் , பண்புடன் உதவியாகவிருந்தார்கள். கொழும்பில் கப்பலில் ஏறும்பொழுதும் வரிசையில் நின்று ஒவ்வொருவர் உடமைகளையும் வாங்கியுதவி ஏற்றினார்கள். நேற்றுத்தான் நடந்ததுபோல் இன்றும் நினைவிலிருக்கின்றது.

1977கலவரம் நடைபெற்று மக்கள் அகதிகளாக யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரி அகதி முகாமுக்கு வந்துகொண்டிருந்தவேளையில் நண்பர்களுடன் மாலை நேரங்களில் சென்று வரும் அகதிகளுடன் அளவளாவி அவர்கள் கதைகளைக் கேட்டு உணர்ச்சி வசப்படுவதுண்டு. ஆனால் நானே என் சொந்த மண்ணில் அகதியாக கப்பலில் மீண்டும் வருவேனென்று அச்சமயத்தில் எண்ணியிருக்கவில்லை.

அகதிகளாக முகாமில் இருந்த சமயத்தில் என்னுடன் பணி நகர அதிகார சபையில் பணிபுரிந்த சிங்கள நண்பர்கள் சிலர் விடயமறிந்து எங்களை வந்து பார்த்தார்கள். தங்களுடன் வந்து பாதுகாப்புடன் தங்கலாமென்று அழைத்தார்கள். அப்போதிருந்த சூழலில் எம்மால் அவர்களுக்கும் பிரச்சினைகள் வரலாம்; நிலவிய சூழலில் எமக்கும் பாதுகாப்பில்லை. எனவே அகதிகள் முகாமில்இருப்பதே உசிதமாகப்பட்டது. அங்கேயே தங்கி விட்டோம். அவர்களின் பெயர்களைக் கூட மறந்து விட்டேன். ஆனால் பணியாற்றிய காலத்தில் எம்முடன் நன்கு அன்புடன் பழகிய நண்பர்கள் அவர்கள். அவ்விதம் அச்சூழலில் எம்மை வந்து பார்த்ததும் அழைத்ததும் முக்கிய விடயமாக அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி தோன்றுகின்றது.

அக்கலவரம் எனக்கு நன்கு தெரிந்த சிலரைப் பலி வாங்கியிருக்கின்றது. அவர்களில் பொறியியலாளர் ராஜாராம் ஒருவர். மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்து முன்பாக இருந்த தெருவொன்றில் சிங்கள் வீடோன்றில் வாடகைக்கு நண்பர்களுடன் வசித்தபோது எம்முடன் வசித்தவர்களிலொருவர். மலையகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு காதலி இருந்தார்; ஆசிரியை என்றும், பெயர் ராஜேஸ்வரி என்றும் ராஜாராம் கூறியதாக நினைவு. நீண்ட காலமாகக் காத்திருந்து ராஜாராம் படிப்பை முடிந்து பணி புரிந்து கொண்டிருந்தபோதுதான் திருமணம் செய்தார். பல்கலைக்கழகப்படிப்பு முடிந்து பணி புரிந்துகொண்டிருந்த சமயத்தில் கலவரத்துக்குச் சில மாதங்களின் முன்பே அவரை வழியில் இ.போ.ச பஸ்ஸொன்றில் சந்தித்து உரையாடியிருந்தேன். யாருக்குமே தீங்கு செய்ய மனம் வராத அப்பாவி அவர். நன்கு சிங்களம் பேசக்கூடியவர். 83 கலவரத்தில் களுபோவிலை ஆஸ்பத்திரியில் ஏற்கனவே காயமுற்றிருந்து அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காடையர்கள் சென்று கொலை செய்ததாகப் பின்னர் அறிந்து துயருற்றேன்.

Last Updated on Sunday, 29 July 2018 22:23 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 290: வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையின் பரிணாம வரலாறு பற்றிய சில தகவல்களும், எண்ணங்களும்!

E-mail Print PDF

 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி '1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.'வெற்றிமணி' சஞ்சிகையின் 22.2.1955 இதழ் எம்.எம்.பாரிஸ் ((M.M.Faries)  என்பவரை ஆசிரியராகக்கொண்டு நாவலப்பிட்டி மிட்லண்ட் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு அவராலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதில் மலர் 1, இதழ் 1 என்றிருப்பதால் இதுவே அவர் ஆசிரியராகவிருந்து , வெளியிட்ட முதலாவது இதழென்பது தெரிகின்றது. (ஆதாரம் - நூலகம் தளத்திலுள்ள வெற்றிமணி சஞ்சிகைகள்) 20-10-1955  இதழ் எம்.எம்.பாரிஸ் ஆசிரியராகவிருக்கின்றார். அச்சடிக்கப்பட்டது ஆனந்த, யாழ்ப்பாணத்தில்.

20.12.1955 இதழ் நாவலப்பிட்டி மிட்லண்ட அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால் ஆசிரியரின் பெயர் ஏ.கே.சாமி என்றுள்ளது. 22-2-1955 தொடக்கம் 21_11_1955 வரை வெளியான இதழ்களுக்கு ஆசிரியராகவிருந்தவர் எம்.எம்.பாரிஸ். 20-10-1955 இதழ் தவிர அவ்வருடத்தில் வெளியான ஏனைய இதழ்கள் அச்சடிக்கப்பட்டதும் மிட்லண்ட் அச்சகத்திலேயே.

வெற்றிமணி சஞ்சிகையின் முதலாம் ஆண்டு மலராக 14.1.1956 இதழ் வெளியாகியுள்ளது. ஆசிரியர் ஏ.கே.சாமி. இவ்விதழில் அட்டைப்படம் அழகாக வந்துள்ளதுடன், சஞ்சிகையின் வடிவமைப்பும் மாறியுள்ளதையும் காண முடிகின்றது. அட்டையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பொங்கல் கவிதையும் வெளியாகியுள்ளது. முதலாவது ஆண்டு மலர் பொங்கல் மலராக வெளியாகியுள்ளது. 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி '1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.

வெற்றிமணி சஞ்சிகையின் 1.9.1956 இதழில் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியொன்று முன் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "தமிழ் பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்தை  நிர்ணயிக்கும் தமிழரசுக் கட்சியின் சரித்திரப்பிரசித்தி பெற்ற மாநாடு திருகோணமலையில் 18,19-8-1956 இல் நடைபெற்றது.  தமிழ்பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்திற்குச் செல்லும் "திருமலை யாத்திரை" என்னும் அறிவிப்புடன் நெடுங்கவிதையொன்றின் முதற்பகுதி  , நவாலியூர் பண்டிதர் சோ.இளமுருகனார் எழுதியது, வெளியாகியுள்ளது. கவிதை "திருமலைக்குச் செல்லுவோம். சிறுமை அடிமை வெல்லுவோம்" என்று ஆரம்பமாகியுள்ளது.

இவ்விதழில் "எங்கள் ஊர் வவுனியா" என்னுமொரு கட்டுரையினை மாணவர் மன்ற உறுப்பினரான செல்வி.சே.சிவநேசமணி என்னும் மாணவி எழுதியிருக்கின்றார். சுருக்கமான , சுவையான கட்டுரை . அதில் அவர் வன்னிக்கு 'அடங்காப்பற்று' என்னும் காரணம் வந்த காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார். இதுவரை நான் கேட்காத விளக்கம். தர்க்கபூர்வமானது. அதனை இங்கு தருகின்றேன்: "வன்னிநகர் "அடங்காப்பற்று" எனும் மங்காப்பெயர் கொண்டது. இப்பெயர் பெறுவதற்குக் காரணம் அவர்கள் பேராசையன்று. முற்காலத்தில் பல்வகைச்செல்வங்களும் நிறைந்து விளங்கிய வன்னியிலே உள்ள மக்கள் ஈதலையே தலை சிறந்த அறமாகக் கொண்டிருந்தனர். இரப்போர்க்கு இல்லையென்னாது ஈந்தனர். ஈகையின்மேல் அவர்கள் கொண்டிருந்த அடங்காப்பற்றினாலேயே அவர்களது நாடாகிய வன்னிக்கு 'அடங்காப்பற்று' எனப்பெயர் உண்டாகியதென்று பலர் கூறுவர்".

Last Updated on Sunday, 22 July 2018 23:00 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 289: மறக்க முடியாத 'வெற்றிமணி'

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 289: மறக்க முடியாத 'வெற்றிமணி'இலங்கையில் வெளிவந்த 'வெற்றிமணி' சிறுவர் சஞ்சிகைக்கு முக்கியமானதோர் இடம் இலங்கைத் தமிழ் இலக்கியத்திலுண்டு. தமிழகத்தில் வெளியான 'கண்ணன்' சிறுவர் இதழ் எவ்விதம் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதோ அவ்விதமே 'வெற்றிமணி' சஞ்சிகையும் பலரை உருவாக்கியுள்ளது. வெற்றிமணியின் 'பாலர் பக்கத்தில்' இளம் எழுத்தாளர்கள் பலர் தமது ஆரம்பகாலப்படைப்புகளை (கட்டுரை, சிறுகதை, விமர்சனம், நாடகம் , உருவகக் கதை போன்ற படைப்புகளை) எழுதியுள்ளார்கள். கிழக்கு மாகாணம், மலையகத்திலிருந்தெல்லாம் இளம் எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ளார்கள். முஸ்லீம் இளம் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் பலவற்றை 'வெற்றிமணி' இதழ் தாங்கி வெளியாகியுள்ளது. 'கவிதை' அரங்கம்' பகுதியிலும் பலர் இவ்விதமே எழுதியுள்ளார்கள். இலங்கையின் பிரபல எழுத்தாளர்களான திக்குவல்லை கமல், காரை செ.சுந்தரம்பிள்ளை, சாரதா, கவிஞர் புதுவை இரத்தினதுரை, கோப்பாய் சிவம் எனப்பலர் 'வெற்றிமணி' சஞ்சிகையில் சிறுவர் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஏழாம் வகுப்பு மாணவனான எனது குட்டிக்கதையொன்றும், பொங்கல் பற்றிய கட்டுரையொன்றும் 'வெற்றிமணி' சிறுவர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. கவிஞர் வி.கந்தவனம், இரசிகமனி கனக செந்திநாதன் , த. அரியரத்தினம், ஏ.ரி.பொன்னுத்துரை, மு.க.சுப்பிரமணியம் போன்றொர் தொடர்ச்சியாக 'வெற்றிமணி'யில் எழுதி வந்துள்ளார்கள். குறமகளின் சிறுவர் சிறுகதையொன்றினையும் ஓரிதழில் காண முடிந்தது.

அவ்வயதில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைகளில் யாழ்ப்பாணத்துக்குச் செல்லுகையிலெல்லாம் யாழ் நகரிலிலிருந்த 'அன்பு புத்தகசாலை'க்குச் சென்று 'வெற்றிமணி'யை வாங்குவதுண்டு. 'அன்பு புத்தகசாலை' எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணரான எழுத்தாளர் 'புதுமைலோலன்' அவர்களுடையது. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞரொருவர் எப்பொழுதும் சஞ்சிகைகள், நூல்கள் வாங்க அங்கு செல்லும்போதெல்லாம் அன்புடன் வரவேற்றுதவுவார். பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் என் கல்வி தொடர்ந்த என் பதின்ம வயதுக் காலகட்டத்திலும் அங்கு செல்வதுண்டு. அங்குதான் செங்கையாழியானின் முதலாவது நாவலான 'நந்திக்கடல்' சரித்திர நாவலினை வாங்கியதுண்டு. மார்க்சிம்கார்க்கியின் புகழ்பெற்ற நாவலான 'தாய்' (தொ.மு.சி.ரகுநாதன் மொழிபெயர்த்தது) நாவலை அவ்விளைஞரே எனக்கு வழங்கியவர்.

அறிஞர் அண்ணாவின் மறைவின் போது அவரது புகைப்படத்தை அட்டையிலிட்டு 'வெற்றிமணி' சஞ்சிகை அஞ்சலி செய்ததையும் அறிய முடிகின்றது.

'வெற்றிமணி டாணெனவே விண்முட்ட ஒலித்திடுவாய்.
நற்றமிழாம் எங்கள்மொழி நலமுற ஒலித்திடுவாய்'

என்னும் தாரகமந்திரத்துடன், குரும்பசிட்டி மு.க சுப்பிரமணியத்தைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'வெற்றிமணி' சஞ்சிகையின் பழைய இதழ்கள் என்னை அக்காலத்துக்கே இழுத்துச் சென்றுவிட்டன.

Last Updated on Sunday, 22 July 2018 22:39 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 288: கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான 'On Films Seen' என்னும் நூலை முன்வைத்துச் சில கருத்துகள்..! (1)

E-mail Print PDF

on films seen by K.S.Sivakumaran

கலை, இலக்கியத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன்

அண்மையில் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்த இரு நூல்களை ('திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்', மற்றும் 'On Films Seen ) 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன'த்தின் புகழ்பெற்ற முன்னாள் ஒலிபரப்பாளரும் , ஊடகவியலாளருமான திரு.வின்.என்.மதியழகன் மூலம் பெற்றுக்கொண்டேன். இத்தருணத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நண்பரொருவரிடம் கே.எஸ்.எஸ் அவர்கள் கொடுத்திருந்த நூல்கள் இன்னும் என் கைகளை வந்தடையவில்லையென்பதையும் நினைவு கூர்ந்திடத்தான் வேண்டும். நூல்களை அனுப்பிய கே.எஸ்.எஸ் அவர்களுக்கும் அவற்றை விரைவாகவே கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பித்த வி.என்.எம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கோடி.

இவ்விரு நூல்களில் 'கொடகே பிறதர்ஸ்' பதிப்பக வெளியீடாக வெளியான கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான 'On Films Seen' என்னும் நூலைப்பற்றிய எனது குறிப்புகளே இச்சிறுகட்டுரை. இந்நூலைப்பார்த்தபோது எனக்கு மிகுந்த பிரமிப்பே ஏற்பட்டது. இலங்கைக்கு வெளியே நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அவர் அவ்வப்போது பார்த்து, களித்துச் சிந்தித்தவற்றை வைத்து எழுதப்பட்ட 58 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 1990 ஆம் ஆண்டுக்கு முன் எழுதிய கட்டுரைகள் கிடைக்காததால் , அதற்குப்பின்னர் எழுதிய கட்டுரைகளையே இந்நூல் அடக்கியுள்ளதென்பதை அவரது நூலுக்கான முன்னுரை புலப்படுத்தும். கூடவே அம்முன்னுரை இன்னுமொன்றையும் கூறும். அது இந்நூலுக்கான காரணம் பற்றியது. தன்னைப்போல் இவ்விதம் சர்வதேசத் திரைப்பட விழாக்களைக் கண்டு களிக்க  முடியாத சினிமாப்பிரியர்களுக்கு இவ்விதமான சர்வதேசத் திரைப்படங்கள் பற்றிய தகவல்களைத் தருவதே இந்நூலின் நோக்கம் என்று அவர் மேற்படி முன்னுரையில் குறிப்பிடுவார். உண்மையில் கடந்த பல தசாப்தங்களாகக் கலை, இலக்கியத்துறையில் அவர் தளராது இயங்கி வருவதற்குரிய காரணங்களிலொன்றல்லவா அது.

இந்நூலின் மிகவும் பிரதானமானதும் , முக்கியமானதுமான அத்தியாயம் முதலாவது அத்தியாயமாகவிருப்பது நூலின் சிறப்பான ஒழுங்கமைப்புக்கு  நல்லதோர் எடுத்துக்காட்டு. திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள எவரும் கலைத்துவம் மிக்க திரைப்படங்களைப் பார்த்து இரசிப்பதற்கு முக்கியமாகத் திரைப்படக்கலை பற்றிச் சிறிதளவாவது அறிந்திருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பார்க்கும் திரைப்படங்களை நன்கு அறிந்துகொள்ள இவ்விதமான ஆரம்ப அறிவு பயனுள்ளதாகவிருக்கும். இதனையுணர்ந்துதான் இந்நூலின் முதலாவது அத்தியாயத்துக்குத் 'திரைப்படங்களை அறிந்துகொள்ளல்' (Understanding the Films) என்று தலைப்பிட்டுள்ளார். இவ்வத்தியாயமெட்டுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஆறு கட்டுரைகளும், டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியான இரண்டு கட்டுரைகளுமே அவை. 'சினிமாவின் மொழியும், அமைப்பும்', 'திரைப்பட மொழி', 'பார்வையாளரொருவரின் பங்கு' போன்ற பல விடயங்களில் சினிமா என்னும் ஊடகத்தைப்பற்றிய தனது கருத்துகளை முதல் ஆறு கட்டுரைகளில் வெளிப்படுத்துவார் கே.எஸ்.எஸ் அவர்கள். அடுத்த இரு கட்டுரைகளில் தமிழ்ப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான அமரர் பாலு மகேந்திராவின் சினிமா பற்றிய பார்வையினை நேர்காணல் மற்றும் கூற்றுகள் வாயிலாக வெளிப்படுத்துவார்.

Last Updated on Friday, 20 July 2018 10:32 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 287 : யாழ் கோட்டையில் இராணுவமுகாமும், இலங்கையின் எதிர்காலமும்; யாழில் தலைவிரித்தாடும் வன்முறைகளும், சண்டியர்களும்!

E-mail Print PDF

யாழ் கோட்டைக்குள் இராணுவ முகாம்புத்தரின் கண்ணீர்'ட்விட்ட'ரில் கண்ட இச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தரின் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இலங்கைத் தொல்லியற் திணைக்களம் அனுமதியளித்துள்ளதாம். அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் புகைப்படங்களையும் அச்செய்தியில் காண முடிந்தது. கரிகாலன் garikaalan‏ @garikaalan என்பவரின் 'ட்வீட்' இது. ஆச்சரியமென்னவென்றால் முகநூலில் இது பற்றிய செய்திகள் எதனையும் கண்டதாக நினைவிலில்லை. இச்செய்தி உண்மையாகவிருக்குமானால் இலங்கை அரசு தவறிழைக்கின்றதென்றே கூற வேண்டும். யாழ்நகரின் மத்தியில் கோட்டைக்குள் இராணுவமுகாம் அமைப்பதே முட்டாள்தனமானது. காலம் மீண்டுமொருமுறை ஆயுதபோராட்டமொன்றினை உருவாக்குமானால் (தென்னிலங்கையில் முதற் புரட்சியில் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டெழுந்து பதினேழு வருடங்களுக்குப் பின்னர் ஆயுதப்புரட்சி செய்யவில்லையா) மீண்டும் அன்று மாதிரி கோட்டை மீதான முற்றுகைக்குள் சிக்கப்போவது இம்முகாம் இராணுவத்தினரே..

உபகண்ட அரசியலில் இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு உத்தரவாதமெதுவுமில்லை. இலங்கை எவ்வளவுக்கு எவ்வளவு சீனாவின் பிடிக்குள் செல்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் தனது துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தவே முனையும். மேலும் களத்தில் விடுதலைப்புலிகளுமில்லை. இந்தியாவின் சார்பு முன்னாள் ஆயுதப்போராட்ட அமைப்புகளே உள்ளன. எனவே இந்தியா மிகவும் இலகுவாக இலங்கைப் பிரச்சினைக்குள் உள் நுழைய முடியும்.

இலங்கையின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் புத்திசாலிகளென்றால் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முற்றாகத் தீர்த்து வைப்பார்கள். அதன் மூலம் இந்தியாவின் அழுத்தங்களிலிலிருந்து தப்பலாம். இதுபோன்ற இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் இலங்கையை யுத்த பூமியாகவே மாற்றும். ஜே.வி.பி.க்கு மீண்டும் உயிர்த்தெழ சுமார் 17 வருடங்கள் பிடித்தது. தமிழர்களின் யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகளே கடந்துள்ளன. இன்னும் எட்டு ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடக்கலாம்? யார் கண்டது?

Last Updated on Monday, 09 July 2018 10:39 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 286 :மனவெளிக்கலையாற்றுக் குழுவினரின் இப்சனின் ஒரு பொம்மை வீடு !

E-mail Print PDF

இப்சனின் ஒரு பொம்மை வீடு

நேற்று (30.6.2018) நண்பர் தேவகாந்தனுடன் மனவெளி அமைப்பின் பத்தொன்பதாவது அரங்காடல் நாடக நிகழ்வுக்கு இப்சனின் 'ஒரு பொம்மை வீடு ' பார்க்கச்சென்றிருந்தேன். நண்பகற் காட்சி, மாலைக் காட்சி என்று இரு காட்சிகள் அரங்கு நிறைந்த மக்கள் ஆதரவுடன் நடைபெற்றன. மனவெளி கலையாற்றுக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

ஏற்கனவே பலமுறை படித்திருந்த நாடகமாதலால் நாடகம் பற்றிய புரிதலுடனேயே சென்றிருந்தேன். நாடகம் எவ்விதம் மேடையேற்றப்படுகின்றது, எவ்விதம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் இயக்கப்பட்டிருக்கின்றது, எவ்விதம் மேடை அலங்காரங்கள், ஒலி, ஒளி அமைப்புகள் இருக்கப்போகின்றன , எவ்விதம் நடிகர்களின் நடிப்பு இருக்கப்போகின்றது எனப் பல்வகை எதிர்பார்ப்புகளுடன் சென்றிருந்தேன். எதிர்பார்ப்புகள் எவையும் பொய்த்துப்போய் விடவில்லை. நாடகத்தைச் சிறப்பாக மேடையேற்றியிருந்தார்கள். அதற்காக மனவெளி அமைப்புக்கும், மொழிபெயர்த்து இயக்கிய பி.விக்னேஸ்வரனுக்கும் மற்றும் நாடகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறையே அரசி விக்னேஸ்வரன், ஜெயப்பிரகாஷ் ஜெகவன் , எஸ்.ரி. செந்தில்நாதன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏனைய பாத்திரங்களான டாக்டர் ராங், திருமதி லிண்டே, அன்னா மரியா மற்றும் ஹெலெனா ஆகிய பாத்திரங்களில் குரும்பச்சிட்டி ஆர்.ராசரத்தினம், பவானி சத்தியசீலன், மாலினி பரராஜசிங்கம், கனித்தா உதயகுமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்களில் கனித்தா உதயகுமார் தவிர ஏனையோர் ஏற்கனவே நாடகத்துறையில் அனுபவம் பெற்ற தேர்ந்த நடிகர்கள். பல்கலைக்கழக மாணவியான கனித்தா உதயகுமார் அண்மையிலேயே தன்னை இத்துறையில் ஈடுபடுத்திக்கொண்டவர். நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்.

'ஒரு பொம்மை வீடு' இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கெல்லாம் முன்னோடியான நாடகம் நாடகத்தின் முக்கிய ஆளுமை நோரா. வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட சிறப்பான பாத்திரம். குழந்தைகளுடன் தன் அன்புக் கணவனுடன் வாழுமொரு பெண் , அவனது நலன்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அவனுக்கு உண்மை கூறாது மறைத்த பெண், அவனுடன் வாழ்ந்த காலகட்டத்தில் , அதற்கு முற்பட்ட காலத்தில் தன் தந்தையுடன் வாழ்ந்த காலகட்டங்களிலெல்லாம் தான் ஒரு பொம்மையாகவே தான் வாழ்ந்த சமுதாயத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததை உணர்ந்து , தன் சுயமரியாதையுடன், சுய சிந்தனையுடன், சுதந்திரமாகத் தன்மீது பிணைக்கப்பட்டிருந்த தளைகளையெல்லாம் உடைத்து (திருமண பந்தமுட்பட) வாழப்புறப்படுவதுதான் நாடகத்தின் மையக்கரு.

Last Updated on Monday, 02 July 2018 18:19 Read more...
 

எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைவு!

E-mail Print PDF

என்.கே.ரகுநாதன்'டொராண்டோ'வில் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் மறைந்த தகவலினை எழுத்தாளர்கள் கற்சுறா மற்றும் பா.அ.ஜயகரன் ஆகியோர் பகிர்ந்திருந்தனர். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திய எழுத்தாளர் என்.கே.ரகுநாதன்.  என்.கே.ரகுநாதன் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது அவரது புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' சிறுகதைதான். இத்தலைப்பிலேயே அவரது சிறுகதைத்தொகுதி 1962இல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியுள்ளது. இலங்கையில் பாரதி புத்தகசாலையில் நூல் கிடைக்குமென்ற அறிவிப்புடன் வெளியான தொகுப்பு அது. எப்பதிப்பகம் வெளியிட்டது என்பதில் தெளிவான விபரமில்லை.

இத்தொகுப்பிலிருந்து என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்' சிறுகதை பற்றி மேலதிகத் தகவல்களைப்பெற முடிகின்றது.

அக்கதையை என்.கே.ரகுநாதன் மதுவிலக்குப பிரச்சாரம் செய்யும் இயக்கமொன்றின் பத்திரிகைக்கு அனுப்பியபோது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுதந்திரனுக்கு அனுப்பியபோது 1951ம் ஆண்டில் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. நூலுக்கான அ.ந.க.வின் முன்னுரை மூலம் இதனை அறிய முடிகின்றது.  மேலும் என்.கே.ரகுநாதனின் 'சில வார்த்தைகள்'  மூலம் அ.ந.க மேற்படி முன்னுரையினை ஆஸ்பத்திரியில் நோய்ப்படுக்கையிலிருந்துகொண்டு எழுதியுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது.

என்.கே.ரகுநாதனின் மறைவுக்காக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, அவர் நினைவாக 'நிலவிலே பேசுவோம்' தொகுப்புக்கு அ.ந.கந்தசாமி எழுதிய முன்னுரையினையும், 'நூலகம்' தளத்திலுள்ள 'நிலவிலே பேசுவோம்' தொகுப்புக்கான இணைய இணைப்பினையும் ( http://www.noolaham.net/project/03/252/252.pdf )  இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.


என்.கே.ரகுநாதனின் 'நிலவிலே பேசுவோம்' நூல் முன்னுரை! - அ. ந. கந்தசாமி -

'நிலவிலே பேசுவோம்"-என்ற அழகிய தலைப்புடன் கூடிய இச்சிறுகதைத் தொகுதியைத் தரும் என். கே. ரகு நாதன், ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர்.

முதன்முதலில் இவருடைய சிறுகதையொன்றினை நான், 1951ம் ஆண்டில் வாசித்தேன். "சுதந்திரன்" பத்திரிகையில் நான் கடமையாற்றி வந்த காலம் அது. வாரந்தோறும் பிரசுரத்துக்கேற்ற கதைகளை நானே வாசித்துத் தெரிந்தெடுப்பது வழக்கம். இது அவ்வளவு இன்பமான பொழுதுபோக்கல்ல. நல்லது, கெட்டது, இரண்டும் கெட்டான் என்ற நிலையிலுள்ள சகல கதைகளையும் வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒரு மூடை பதரை நாள் முழுவதும் துழாவி ஒரு நெல்லைப் பொறுக்கி எடுப்பது போன்ற வேலை. சில சமயம் ஒரு முழுநாள் வேலைகூட வியர்த்தமாகிவிடலாம். இப்படி, நான், ஒரு நாள் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தபோது ஒரு  குண்டுமணி கிடைத்தது. அதுதான் "நிலவிலே பேசுவாம்" என்ற இப்புத்தகத்தின் தலைப்புக்குரிய சிறுகதையாகும்.

Last Updated on Tuesday, 12 June 2018 11:07 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 285: நடிகர் ரஜினியின் தூத்துக்குடிப்பேச்சும், அவர் மீதான சாடல்களும் பற்றி.....

E-mail Print PDF

முகநூல் முழுவதும் நடிகர் ரஜினியை வாங்கு  வாங்கென்று வாங்கித்தள்ளுகின்றார்களே அப்படி என்னதான் அவர் பேசி விட்டார் என்று பார்க்க வேண்டுமென்று இணையத்தில் தேடியபோது கிடைத்த காணொளியில் ரஜினி பேசியதையும், அவர் பேசியதாக அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

ரஜினி நியாயமாகப் போராடிய மக்களைச் சமூக விரோதிகள் என்று கூறி விட்டார் என்பது அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூறும் முக்கிய காரணம். ஆனால் அக்காணொளியில் ரஜினி கூறியது என்ன? மக்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கெடுத்து விட்டார்கள். அவ்விதம் புகுந்த சமூக விரோதிகள்  காவல் துறையினரைத் தாக்கியதே தொடர்ந்து நடந்த நிலைமைக்குக் காரணம் என்று கூறுவதைத்தான் அக்காணொளியில் காண முடிகின்றது. இன்னுமொன்றையும் அவர் கூறுகின்றார். அது காவற்துறை ஆடை அணிந்த காவற்துறையினரைத்தாக்குவதை ஒருபோதுமே தன்னால் ஆதரிக்க முடியாது. அடுத்து அவர் கூறியது தொடர்ந்து இவ்விதம் போராட்டங்கள் நடந்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்பதை.

காணொளியில் ஓரிடத்திலும் போராட்டம் நடத்திய மக்களைச் சமூக விரோதிகள் என்று ரஜினி கூறவில்லை. நியாயமான போராட்டத்தினுள் சமூக விரோதிகள் சிலர் புகுந்து காவல் துறையினரைத்தாக்கியதுதான் நடந்த பிரச்சினைக்குக் காரணம். இவ்விதம்தான் அவர் கூறியிருக்கின்றார்.  அவர் தன் கருத்துகளைக் கூறுவதற்கு முழு உரிமையுமுண்டு. மேற்படி போராட்டம் தவறு. போராட்டத்தை நடத்தியவர்கள் சமூக விரோதிகள் என்று பொதுவாகக் கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது. ஏற்றுக்கொள்ள முடியாதது.

Last Updated on Saturday, 02 June 2018 10:38 Read more...
 

கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு!

E-mail Print PDF

- எனது  'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது)  அடிப்படையாக வைத்துத் திறனாய்வுக் கட்டுரையொன்றினை லக்பிமா  (Lakbima) சிங்களத் தினசரியின் வாரவெளியீட்டின் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பான எழுத்தாளர் கத்யான அமரசிங்க அவர்கள் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை லக்பிமா வாரவெளியீட்டில் எழுதியுள்ளார். சிறப்பான அச்சிங்களக் கட்டுரையினை தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். இருவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. இக்கட்டுரையினைத் தங்களது வாரவெளியீட்டில் வெளியிட்ட லக்பிமா பத்திரிகை நிறுவனத்துக்கும் மனப்பூர்வமான நன்றி. இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. பல தமிழ் நூல்களைச் சிங்கள மொழிக்கும் மொழிபெயர்த்த எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களால் மேற்படி 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூல் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. அவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -


பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, 'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

முதன்முறையாக 'மந்திரி மனை'யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய ஶ்ரீலங்காவின் தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

Last Updated on Saturday, 26 May 2018 02:49 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 284: ஈழகேசரி இலக்கியத் தடங்கள் 2 - ஈழகேசரியின் கம்பன் நினைவு இதழும், கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) 'கவியரசன்' கவிதையும்!

E-mail Print PDF

ஈழகேசரி 16.4.1944 ஞாயிற்றுக்கிழமைப் பிரதியை அண்மையில் நூலகம் இணையத்தளத்தில் வாசித்தபொழுது அவதானித்த , என் கவனத்தைக் கவர்ந்த விடயங்கள் வருமாறு:

1. முதற்பக்கத்தில் 'புதிய கல்வித்திட்டம்' பற்றிய 'விந்தியா விசாரணைச்சபையின் கல்வித்திட்டம் பற்றிய பரிந்துரை சம்பந்தமாகப் பிரபல வழக்கறிஞர் பாலசுந்தரத்தின் அபிப்பிராயம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வருடாந்தப்பரிசளிப்பு நிகழ்வில் (7.4.44) அவர் ஆற்றிய உரையில் அவர் அந்நிய பாஷையில் ஊட்டப்படும் கல்வியினைச் சாடியிருக்கின்றார்.  அந்நிய பாஷையில் கல்வி கற்பதால் துரிதமாக அறிவு பெறவே முடியாது என்று அவர் கூறுகின்றார்.

'விந்தியா' விசாரணைச்சபை தாய்மொழி மூலம் கல்வியூட்ட வேண்டுமென்று வற்புறுத்தியிருப்பதுடன், பல்கலைக்கழகம் வர இலவசக் கல்வி கொடுபடவேண்டுமென்றும் வற்புறுத்தியுள்ளது என்பதையும் இச்செய்திமூலம் அறிகின்றோம்.

மேலும் அவ்விழாவுக்குத் தலைமை வகித்துப் பரிசுகளை வழங்கியவரான உள்நாட்டு மந்திரி தமிழரான் அ.மகாதேவா என்பதையும் அறிகின்றோம். மேற்படி செய்திக்கு ஈடாக இரண்டாம் உலக யுத்தம் பற்றிய செய்தி 'யுத்தம் நடக்கின்றது: இம்பாலில் கடும்போர்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேற்படி பிரதி கம்பர் 'நினைவு இத'ழாகவும்  வெளியாகியுள்ளது என்பதையும் காண முடிகின்றது. 'சூர்ப்பணகையின் காதல்' என்னும் தலைப்பில் தென்மயிலை இ.நமச்சிவாயத்தின் கட்டுரை, இலங்கையர்கோனின் 'கம்பராமாயணமும் நானும்'என்னும் கட்டுரை, க.செ.யின் 'அளவான சிரிப்பு', 'சோதி'யின் 'வால்மீகியும் கம்பனும்', ச.அம்பிகைபாகனின் 'இரு காதற் காட்சிகள்', சோம.சரவணபவனின் 'கம்பச் சக்கரவர்த்தி', வ.கந்தையாவின் 'கம்பன் கடவுட்கொள்கை', மா.பீதாம்பரத்தின் 'கம்பர் வந்தால்..', இராஜ அரியரத்தினத்தின் 'சான்றோர் கவி', இணுவை வை.அநவரத விநாயகமூர்த்தியின் 'கம்பன் கவிச்சுவை', ஆசாமி என்பவரின் 'தண்டனை', பண்டிதர் அ.சோமசுந்தர ஐயரின் 'கம்பர் கண்ட கசிவு' ஆகிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

Last Updated on Friday, 25 May 2018 10:01 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 283: ஈழகேசரி இலக்கியத் தடங்கள் 1 - பதின்ம வயது இளைஞன் ஒருவனின் புரட்சிக்கவிதை!

E-mail Print PDF

'ஈழகேசரி' (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் 7.11.1943 பதிப்பில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'கனல்' என்னும் கவிதையானது 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளியாகியுள்ளது. 1924இல் பிறந்த அ.ந.க.வுக்கு அப்பொழுது வயது  19. தனது பதின்ம வயதினிலேயே அவர் கவீந்திரன் என்னும் புனைபெயரைப் பாவித்துள்ளதை அறிய முடிகின்றது. ஈழகேசரி பத்திரிகைப் பிரதிகளை 'நூலகம்' அறக்கட்டளை நிறுவனத்தின் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.

பின்னாளில் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகப் பரிணமித்த அ.ந.க.வின் பதின்ம வயதுக்கவிதையான 'கனல்' என்னும் இக்கவிதையிலேயே அதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காண முடிகின்றது.

சண்டமாருதம் எழுந்ததாம். சகமெல்லாம் சூறையில் சுழன்றதாம். அச்சண்டமாருதத்தால் அண்டங்கள் யாவும் நடுங்கியதாம். மேலே ஆகாய மேகமும் அதனால் அலையும் நிலை ஏற்பட்டதாம். தொடர்ந்து எங்கும் கனல் தோன்றி மூடியதாம். எட்டுத் திசையும் எரியும் வகையிலான கனலது. யாவற்றையும் பொசுங்கிடச் செய்யும் பெரு நெருப்பு அது.

Last Updated on Friday, 25 May 2018 09:57 Read more...
 

தமிழகத்தில் நூல்கள் வாங்கு ஆர்வமுள்ளவர்கள் கவனத்துக்கு: அறிமுகம் - எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh, (வவுனியா விக்கி)

E-mail Print PDF

தமிழகத்தில் நூல்கள் வாங்கு ஆர்வமுள்ளவர்கள் கவனத்துக்கு: அறிமுகம் - எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் ,Srirham Vignesh, (வவுனியா விக்கி) எழுத்தாளர் ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலிதமிழகத்திலிருந்து நூல்களை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நான் நண்பரொருவரை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். அவர் என் பால்ய காலத்து நண்பர்களிலொருவர். நண்பர் வவுனியா விக்கியே எழுத்தாளர் ஸ்ரீராம் விக்னேஷ் (Srirham Vignesh). அவர்களையே நான் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். நீங்கள் வாங்க விரும்பும் புதிய நூல்களென்றாலும் சரி, உங்களது இளமைக்காலத்தில் நீங்கள் வாசித்த 'பைண்டு' செய்த படைப்புகள் அல்லது அக்காலகட்டத்தில் வெளியான நூல்கள் எவையென்றாலும் அவர் தன்னால் முடிந்த வரையில் தேடி, நியாயமான கட்டணத்தில் அனுப்புவார்.

நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நூல்களிலொன்று: ஆரம்பகால ராணிமுத்துப் பிரசுரமாக வெளியான எழுத்தாளர் ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'. என் பால்ய காலத்தில் நான் வாசித்த என்னைக் கவர்ந்த நூல்களிலொன்றென்பதால் , ஒரு நினைவுக்காக அந்நூலை வாங்க விரும்பினேன். அவரிடம் கூறினேன் இந்நூலை எங்காவது பழைய புத்தக் கடையில் கண்டால் வாங்க விருப்பமென்று. அவர் உடனேயே பழைய புத்தகக் கடைகளெல்லாம் தேடி , கடையொன்றில் அந்நூலைக் கண்டு பிடித்தார். ஆனால் அட்டையில்லாமலிருந்த நூலினையே அவரால் கண்டு பிடிக்க முடிந்தது. இந்நிலையில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் தன் முகநூலில் பகிர்ந்திருந்த ஆரம்ப கால ராணிமுத்துப் பிரசுரங்களின் அட்டைப்படங்களிலொன்றாக ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'யுமிருந்தது. அதனை நான் என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அவர் அவ்வட்டைப் படத்தைக்கொண்டு அழகான அட்டையொன்றினை உருவாக்கி, அட்டையற்ற நந்திவர்மன் காதலிக்கு அதனை அணிவித்துக் கூரியரில் அனுப்பியிருந்தார். அதற்காக அவருக்கு நன்றி.

கூடவே அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளியான ஜே.எம்.சாலியின் 'கனாக் கண்டேன் தோழி' யின் பைண்டு செய்யப்பட்ட தொகுப்பினையும் கண்டெடுத்து அனுப்பினார். அத்தொடர் நாவலில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த சில ஓவியங்களையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் விதவையின் மறுமணத்தைப்பற்றியும் பேசுகின்றது. நாவலில் அவ்வப்போது வரும் காவிரி ஆற்றங்கரைக் காட்சிகளும், மொழி நடையும் படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வன.

Last Updated on Monday, 21 May 2018 17:05 Read more...
 

'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)

E-mail Print PDF

'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)நேற்று மாலை (18.05.2015) எழுத்தாளர் தேவகாந்தனுடன் 'ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்' ஏற்பாடு செய்திருந்த , தற்போது கனடாவுக்கு வருகை தந்திருக்கும் 'ஞானம்' இதழாசிரியர் எழுத்தாளர் தி.ஞானசேகரன் தம்பதியினருடனான இலக்கியச்சந்திப்புக்குச் சென்றிருந்தேன். நிகழ்வில் கனடாவில் கலை, இலக்கியத்துறையில் நன்கு அறியப்பட்ட பலரைக் காணக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், மனுவல் ஜேசுதாஸ், அகணி சுரேஷ், அகில், தேவகாந்தன், பார்வது கந்தசாமி, சி.பத்மநாதன், ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, 'சோக்கலோ' சண்முகநாதன், முருகேசு பாக்கியநாதன், 'காலம்' செல்வம், த.சிவபாலு, முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர்.. எனப்பலரைக் காணக்கூடியதாகவிருந்தது.

நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைவருக்குமான மெளன அஞ்சலியுடன் ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினை நிகழ்த்தினார். அதிலவர் இலங்கையில் வெளியான தமிழ்ச்சஞ்சிகைகளின் பங்களிப்பு பற்றி, குறிப்பாக முதலாவது சஞ்சிகையான கே.கணேசின் 'பாரதி' தொடக்கம் 'ஞானம்' சஞ்சிகை வரையிலான இலக்கியப்பங்களிப்புகள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைத்தார். தனது முதலாவது சிறுகதை ஞானம் சஞ்சிகையிலேயே வெளியானதெனவும், மேலும் சிறுகதைகள் வெளியானதாகவும், தனது நாவலொன்று ஞானம் வெளியீடாக வெளியானதாகவும் தனது உரையிலவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரான எழுத்தாளர் தி. ஞானசேகரன் 'ஈழத்தின் இன்றைய இலக்கியச் செல்நெறி' என்னும் தலைப்பில் சுமார் 45 நிமிடங்கள் வரையில் நீண்டதொரு உரையினை நிகழ்த்தினார். தான் கூறவேண்டியவற்றை, மிகவும் திறமையாகத் தயார் படுத்தி வந்திருந்தார் என்பதை அவரது தான் கூற வேண்டிய பொருள் பற்றிய தெளிவான உரை புலப்படுத்தியது. அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான கருத்துகள் சில வருமாறு:

1. அண்மையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போரின் விளைவாக உருவான இரட்டைக் குழந்தைகளாக நாட்டில் படைக்கப்பட்ட போர்க்கால இலக்கியத்தையும், நாட்டில் நிலவிய அரசியல் நிலை காரணமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைத்தபுலம்பெயர் இலக்கியத்தையும் குறிப்பிடலாம்.

2. அக்காலகட்டத்தில் உருவான இலக்கியம் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஞானம் சஞ்சிகை போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் தமிழர் இலக்கியச் சிறப்பிதழ் போன்றவற்றை வெளியிட்டுள்ளது.
Last Updated on Sunday, 20 May 2018 22:40 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 282 : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு!

E-mail Print PDF

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுஎழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு பற்றிய செய்தியைப் பலர் முகநூலில் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எண்பதுகளில் தமிழகத்து வெகுசன இதழ்களில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர். தமிழ்த்திரையுலகிலும் கால் பதித்தவர். இவர் வெகுஜன இதழ்களில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் நான் வெகுசன இதழ்களை விட்டு விலகி விட்டிருந்தேன். அவ்வப்போது பார்ப்பதோடு சரி. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் படைப்புகள் ஏதும் வந்தால் மட்டும் வாங்குவதுண்டு. அதனால் பாலகுமாரனின் எழுத்துகள் எவையும் என்னைக் கவர்ந்திருக்கவில்லை. கல்கி, நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், அகிலன், 'நைலான் கயிறு', 'அனிதா இளம் மனைவி' காலத்து சுஜாதா, மீ.ப.சோமு, ர.சு.நல்லபெருமாள், பி.வி.ஆர், .. என்று வெகுசன இதழ்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களுக்குப் பிறகு என்னை பிறகு உருவான வெகுசன எழுத்தாளர்கள் எவருமே கவரவில்லை. ஆனால் வெகுசன எழுத்துகளை வழங்கிய, வழங்கும் எழுத்தாளர்கள் மேல் மதிப்பு வைத்திருப்பவன் நான். வாசகர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டியவர்கள், தூண்டுபவர்கள் இவர்கள். அவ்வகையில் இவர்களது படைப்புகள் முக்கியமானவை.

Last Updated on Tuesday, 15 May 2018 22:35 Read more...
 

Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

E-mail Print PDF

Poem: Oh, Super Human! Where have you concealed yourself? 'ஓ! அதிமானுடரே! நீவிர் எங்கு போயொளிந்தீரோ?' என்னும் என் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில் இக்கவிதையினை மொழிபெயர்த்தவர் முனைவர் ர.தாரணி .


Poem: Oh, Super Human! Where have you concealed yourself?

- In Tamil: V.N.Giritharan; Translation in English Dr. R. Dharani -

Concrete! Concrete and Concrete
Walls! Ingesting the rays to radiate flames
Blameless, pellucid white surface,
Chuckling Cement-clad pathway.
In the embrace of the audacious columns,
lies enraptured spaces
heat rays cut through the layers of air.
In the pleasure of delusion over
The grass being excited
by the smiles of dew drops,
There is a gloomy cloud of thought over
The cool Lady Earth under her blue canopy.

The embracing dreams of the
Drooping tree belles' cuddle.

The impact of artificiality
Spreading over Nature’s repository.

In trees, on grass, in herds, in  caves,
In the dreadful hours of darkness,
Panicked by the lightning storm, under the torrential shower,
Coiled up in the times of bewilderment,
Continued the ancient  journey

Last Updated on Monday, 30 April 2018 22:56 Read more...
 

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்!

E-mail Print PDF

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! "The Wanderers Of The Sky And Their Cry Of Melancholy " என்னும் தலைப்பில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு லக்பிம சிங்களத் தினசரியின் ஞாயிற்றுப் பதிப்பில் (22.04.2018) வெளியாகியுள்ளது. அக்கவிதை தமிழில் கீழே:

http://e-paper.lakbima.lk/2018/April/last_22_04_18/manjusawa.pdf

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -

"படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை எப்பொழுதுமே
என்னிதயத்தை ஆழமாகத் தொடுவன.

காலையிலிருந்து
மழை பலமாகப்
பெய்து கொண்டிருக்கிறது.

மழை.
அகதிகளின் கண்ணீர்.
நாடற்ற வான் நாடோடிகள்,
மேகங்களின்
கண்ணீர்,

வழக்கம்போல்
படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை என்னிதயத்தை
ஆழமாகத் தொடுகின்றன.

துயர்மிகு அழுகை.
நாடோடிகளின் துயர் மிகு அழுகை.
வேதனைமிகு அழுகை.
நாடோடிகளின் வேதனை மிகு அழுகை.
அவர்கள் அழுகின்றார்கள்
அவர்கள் இழந்த மண்ணுக்காக.

Last Updated on Saturday, 21 April 2018 20:57 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 281: சங்கக்கவிதைகளும், ஓசையும்..

E-mail Print PDF

 கவிஞர் விக்ரமாதித்யன்முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன்அண்மையில் கவிஞர் விக்ரமாதித்யனின் 'எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு' என்னும் நூலை வாசித்தேன். கவிஞர் தன் பால்ய காலம் பற்றி, தனது பிறந்த மண்ணான திருநெல்வேலி பற்றி, தன் கவிதைகள் பற்றி, கவிதைகள் பற்றி, தானறிந்த சக இலக்கிய ஆளுமைகள் பற்றி, திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களைப்பற்றி, அவர்களின் பாடல் வரிகள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, திமுக அரசியல்வாதிகள் பற்றி, அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, சக கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி, .. இவ்விதம் பல்வேறு விடயங்களைச் சுவையான, நெஞ்சையள்ளும் நடையில் கூறியிருக்கின்றார். பொதுவாகவே எனக்கு கலை, இலக்கிய ஆளுமைகளின் நனவிடை தோய்தல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிஞர் விக்ரமாதித்யனின் இந்நூலையும் அவ்விதமே வாசித்தேன்.

அவர் நேர்காணலொன்றில் சங்கக்கவிதைகள் பற்றிக் கூறியிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தைக் கவர்ந்தது: "சங்கக் கவிதைகள் இசை கருதிச் செய்யப்பட்டவையல்ல". இன்னுமோரிடத்தில் " தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது" என்கின்றார்.

கவிஞரின் இக்கூற்றுகளை வாசித்துக்கொண்டிருந்த போது எனக்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியனின் "இசைத்தமிழ்ச் சிந்தனைகள்" நூலின் ஞாபகம் வந்தது. அதிலவர் சங்க காலத்திலிருந்து தமிழ் இசைப் பாடல்களின் வரலாறு தொடங்குவதாகக் கூறுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வுரீதியாக முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. நூலிலுள்ள 'கலிப்பாவும் தமிழரின் இசை மரபும்' என்னும் கட்டுரையில் சங்கத் தமிழ்ப்பாவினங்களில் ஒன்றான கலிப்பா எவ்விதம் பிற்காலத்தில் உருவான கீர்த்தனைகளின் உருவாக்கத்துக்கு முன்னொடியாக விளங்கியது என்றெல்லாம் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. அதில் அவர் கீர்த்தனைகளில் வரும் பல்லவி , அநுபல்லவி மற்றும் சரணம் என்பன 'கலிப்பாவின் தரவு, தாழிசை. சுரிதகம் என்ற கட்டமைப்புடன் ஓரளவு ஒத்த காட்சியைத் தருவதை உணர முடியும்" என்று கூறுவார் (பக்கம் 61). மேலும் அவர் "கீர்த்தனையிலே சரணங்களே அவற்றின் உயிர்ப்பான உள்ளடக்கப் பகுதியாகத் திகழ்வன. கலிப்பாவில் தாழிசைகளும் அப்படியே. எனவே கீர்த்தனை என்னும் இசைப்பா வடிவத்துக்கு கலிப்பாவின் அமைப்பு - குறிப்பாக ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு, தாழிசை அமைப்பு - ஒரு முன்னோடி நிலை என்பதை நாம் உய்த்துணர முடியும்." (பக்கம் 61) என்றும் கூறுவார்

Last Updated on Saturday, 21 April 2018 20:29 Read more...
 

கவிதை: என்னைக் கண்ணீர் உகுக்க விடு! மூலம் (ஆங்கிலம்) - கத்யானா அமரசிங்க ( Kathyana Amarasinghe) | தமிழில் - வ.ந.கிரிதரன் -

E-mail Print PDF

கத்யான அமரசிங்க ( Kathyana Amarasinghe) அண்மையில் ஆங்கிலத்தில் கத்யான அமரசிங்க ( Kathyana Amarasinghe)  ஆங்கிலத்தில் எழுதிய கவிதை Let  My Tears Fall என்னும் கவிதை  இது. 83 கறுப்பு ஜுலைக்கலவரத்தால் நாட்டை விட்டே அகதியாகப் புலம்பெயர்ந்து சென்ற தனது தமிழ்ச்சகோதரனை எண்ணி, இதயம் வருந்தி வெளிப்படுத்தும் உணர்வுகளின் வெளிப்பாடு இக்கவிதை. அண்மையில் இவரது  'பருத்தித்துறைக் கடற்கரையில்..' என்னும் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினை வழங்கியிருந்தேன். இப்பொழுது கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினைத் தருகின்றேன். பல்லினங்கள் வாழுமொரு சூழலில் இது போன்ற கவிதைகள் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வினை வளர்க்க உதவும். தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  - பதிவுகள் -


கவிதை: என்னைக் கண்ணீர் உகுக்க விடு!

மூலம் (ஆங்கிலம்) - கத்யானா அமரசிங்க ( Kathyana Amarasinghe) | தமிழில் - வ.ந.கிரிதரன் -

கறுப்பு ஜூலை வானமானது
செவ்விரத்தத்தால் வர்ணமடிக்கப்பட்டிருந்தபோது,
நகரம் வெறுப்பினால் எரிந்துகொண்டிருந்தபோது,
என்னுடைய சகோதரனின் இதயம் காயப்பட்டிருந்தபோது,
அது துண்டுகளாகச் சிதறுண்டிருந்தபோது
நான் எங்கே?

பனையோலை வேலியானது உடைக்கப்பட்டபோது
பூத்துக்குலுங்கும் பூக்கள் சிதைக்கப்பட்டபோது
எனது சகோதரன் தனக்குப் பிரியமான நாட்டை விட்டுப்
பலவந்தமாக ஓடச்செய்யப்பட்டபோது
அத்துடன் தொலைதூர நாடொன்றில்,
நாடற்றவனாகத் தனிமை கவிந்த மனிதனாக
அவன் அமைதியாகக் கண்ணீர் சிந்தியபோது
நான் எங்கே!

Last Updated on Wednesday, 18 April 2018 23:49 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 280: பார்த்திபனின் கதை சிறுகதைத்தொகுதி பற்றி...

E-mail Print PDF

பார்த்திபன் கதைகள்: 'கதை' முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி: கிடைத்தது பார்த்திபனின் சிறுகதைத்தொகுப்பு 'கதை'! புகலிட, புலம்பெயர் தமிழ்ப்படைப்பாளிகளில் மிகுந்த சிறப்பானதோரிடத்திலிருப்பவர் எழுத்தாளர் பார்த்திபன், சிறுகதை, நாவல் என வெளியான அவரது படைப்புகள் மிகவும் முக்கியமானவை. அவரது படைப்புகளில் பிறந்த மண்ணில் நிலவிய சூழல்கள், புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் நிலவிய, நிலவிடும் சூழல்கள், நவீன உலகமயப்படுத்தப்பட்ட மானுட சமுதாயச் சூழலில் மானுடர் நிலை எனப்பல்வகைச் சூழல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். முக்கியமான படைப்பாளி. அவரது சிறுகதைகளில் 25 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து 'கதை' என்னும் பெயரில் தொகுப்பொன்றினை அவரது நண்பர்கள் 'தமிழச்சு' (சுவிஸ்) பதிப்பக வெளியீடாக வெளியிட்டுள்ளார்கள். இதற்காக அந்நண்பர்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

பார்த்திபனின் எழுத்துகளைக் குறிப்பாகச் சிறுகதைகளை ஆவணப்படுத்தியுள்ள முக்கியமான தொகுப்பு இது. நூலின் இறுதியில் எழுத்தாளர்கள் பலரின் பார்த்திபனின் எழுத்துகள் பற்றிய கருத்துகளையும் இணைத்துள்ளார்கள். அட்டைப்படத்தைச் சிறப்புற வரைந்த மணிவண்ணன் என்னும் ஓவியரே நூலிலுள்ள சிறுகதைகளுக்கும் நவீனத்துவம் வெளிப்படும் ஓவியங்களையும் வரைந்துள்ளார். அவையும் நூலுக்கு மேலும் சிறப்பூட்டுகின்றன.

அத்துடன் இத்தொகுதியினை என்னிடமும் கனடாவுக்கு அனுப்பிச் சேர்த்துள்ளார்கள். முகம் தெரியாத அந்நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எழுத்தாளர் பார்த்திபன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது எழுத்துகள், சிந்தனைகள் எனக்குப் பிடித்தவை. அவ்வகையில் இத்தொகுப்பினை எனக்கு அனுப்பிய முகம் தெரியாத நண்பர்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி. இவர்களைப்போன்றவர்களால்தாம் பல அரிய படைப்புகள் வரலாற்றில் ஆவணப்படுத்தப்படுகின்றன. அதற்காகவும் ஒரு பாராட்டு. நூலில் கூடத் தாம் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தாத இவர்களது பண்பு நெஞ்சைத்தொடுகின்றது. இத்தொகுதியினைப் பற்றிய எனது கருத்துகளை விரைவில் பதிவு செய்வேன்.

பார்த்திபனின் சிறுகதைத் தொகுதியான 'கதை'யின் முதல் ஐந்து சிறுகதைகளை வாசித்து விட்டேன். அவை பற்றிய கருத்துகளிவை. இவற்றைத்தாம்  எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் 'புள் ஷிட்' குப்பைகள் என்று தனது முகநூற் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் சுமதி ரூபன் முதல் மூன்று கதைகளுக்கு மேல் தன்னால் வாசிக்க முடியவில்லையென்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். அவ்வப்போது வாசித்து முடிந்ததும் அவை பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கும் தீர்மானித்திருக்கின்றேன்.

தொகுப்பிலுள்ள  முதல் ஐந்து கதைகளின் தலைப்புகள் வருமாறு: 'ஒரே ஒரு ஊரிலே..', (1986), 'பாதியில் முடிந்த கதை' (1987), 'காதல்' (1988), 'பசி' (1988) & 'மனைவி இறக்குமதி' (1988).

மானுட வாழ்வானது அதன் முடிவு தெரியாத நிலையில் இறுஹி வரையில் ஆசாபாசங்களுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. முகநூலில் முடிவு வரைப் பல்வேறு விடயங்களைப்பற்றிப் பதிவுகளிட்ட பலரின் முடிவுகளை அடுத்த நாள் அறிந்திருக்கின்றோம். கனவுகளுடன், கற்பனைகளுடன், வருங்காலத்திட்டங்களுடன் , பல்வகையான உணர்வுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கும் மானுட இருப்பானது பல சமயங்களில் எதிர்பாராத விபத்துகளில், இயற்கை, செயற்கை நிகழ்வுகளின் கோரப்பிடிக்குள் சிக்கி, வாழும் மண்ணில் நிலவும் சமூக, அரசியற் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் காரணமாக முற்றுப்பெறுவதை அன்றாடம் வெளியாகும் செய்திகள் மூலமறிந்திருக்கின்றோம். பார்த்திபனின் 'கதை' தொகுதியிலுள்ள  கதைகளான 'ஒரே ஒரு ஊரிலே', 'பாதியில் முடிந்த கதை' மற்றும் 'பசி' இதனை மையமாக வைத்துப் புனையப்பட்டிருக்கின்றன.

Last Updated on Thursday, 12 April 2018 19:53 Read more...
 

வாசிப்பும் யோசிப்பும் 279: பால்ய காலத்து அழியாத கோலங்கள் - ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'

E-mail Print PDF

ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களில் ராணிமுத்துப் பிரசுரங்களுக்கு முக்கியமானதோரிடமுண்டு. நான் ஆர்வமாக வாசிக்கத்தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் ராணிமுத்து மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் அக்காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வந்தது. அவ்வகையில் வெளியான முதலாவது நாவல் அகிலனின் 'பொன்மலர்'. ஆனால் அப்புத்தகத்தை அப்பா வாங்கவில்லை. அப்பா வாங்கத்தொடங்கியது ராணிமுத்து பிரசுரத்தின் இரண்டாவது வெளியீட்டில் இருந்துதான். இரண்டாவதாக வெளியான நாவல் அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பி.ஏ' இவ்விரண்டு நாவல்களும் முதலும் இரண்டும் என்று ஞாபகத்திலுள்ளது. இதன் பின் வெளியான நாவல்களில் எங்களிடம் இருந்ததாக இன்னும் என் நினைவிலுள்ளவை:

ஜெயகாந்தனின் 'காவல் தெய்வம்'.
ஜெயகாந்தனின் 'வாழ்க்கை அழைக்கிறது'.
மாயாவியின் 'வாடாமலர்'
ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'
சாண்டில்யனின் 'ஜீவபூமி'
சாண்டில்யனின் 'உதயபானு' & இளையராணி
நாரண துரைக்கண்ணனின் 'உயிரோவியம்'
அகிலனின் 'சிநேகிதி'
பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்'
விந்தனின் 'பாலும் பாவையும்'
கலைஞர் கருணாநிதியின் 'வெள்ளிக்கிழமை'
அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா'
மு.வ.வின் 'அந்த நாள்'
சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்'
குரும்பூர் குப்புசாமியின் 'பார் பார் பட்டணம் பார்'
மாயாவியின் 'வாடாமலர்'
லக்சுமியின் 'காஞ்சனையின் கனவு' & 'பெண்மனம்'

இவை இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. ஜெயராஜின் அட்டைப்படத்துடன் , நூலின் உள்ளேயும் நாலைந்து ஓவியங்கள் அவர் வரைந்திருப்பார்.

அக்காலகட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான பிரசுரங்களாக ராணி முத்துப் பிரசுரங்கள் விளங்கின. என்னிடமிருந்தவற்றைப் பத்திரமாக ஏனைய நூல்களுடன் வைத்திருந்தேன். அவை அனைத்தையுமே நாட்டுச் சூழலில் தொலைத்து விட்டேன்.

ராணிமுத்து பிரசுரங்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களாக ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி'யும், சாண்டில்யனின் 'ஜீவபூமி'யும் விளங்கின.

Last Updated on Tuesday, 10 April 2018 22:27 Read more...
 

கவிதை: அந்தி விடிவெள்ளி!

E-mail Print PDF

கவிதை: அந்தி விடிவெள்ளீ!

அதிகாலை விடிவெள்ளிப்பெண்ணே
ஒருபோதில்
அதிகாலைகளுக்கெல்லாம் எழிலூட்டினாய்.
அதிகாலைகளில் நான் விழித்தெழுந்ததெல்லாம்
அடியே! கிழக்கினில்
ஆடி அசைந்து வரும்
உன் அழகைப்பருகுவதற்காகத்தானென்பதை
நீ அறியாய்! அந்தத் தைரியத்தில் நானுனை
அணு அணுவாக இரசித்ததுண்டு; தெரியுமா?
அதிகாலை விடிவுப்பெண்ணே!
அதிகாலைகளினெழிலேற்றிய
விடியற் பெண்ணே!
இடையிலெங்கே சென்றாய்?
தனிமையிலெனைத் தவிக்க விட்டு நீ
தலைமறைவானாய்! ஏன்?

Last Updated on Saturday, 07 April 2018 19:07 Read more...
 

கவிதை: பருத்தித்துறைக் கடற்கரையில்...

E-mail Print PDF

- கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe)

- சிங்கள மொழியில் தான்  எழுதிய இக்கவிதையினை  ஆங்கில வடிவில் அனுப்பியிருந்தார் கத்யானா அமரசிங்க. அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். அண்மையில் அவரது வடக்குக்கான பயணத்தில் பருத்தித்துறைக்கடற்கரையில் அவரடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  - பதிவுகள் -


 


நான் அங்கிருந்தேன் கண்ணீர்த்துளியின் மறு முனையில்
துயரக் காற்றினால் தாக்கப்பட்ட மறுமுனை
ஆழமான நீலக் கடலும் கூட
நெஞ்சை வலிக்கும் கதையினை அமைதியாகக்
கூறும்.

வீசிக்கொண்டிருந்த புயல்கள்
இளம் பறவைகளை அவற்றின்
அன்னையரிடமிருந்து பிரித்திருந்த
நேரமொன்றிருந்தது.

Last Updated on Wednesday, 18 April 2018 23:42 Read more...
 

அ.முத்துலிங்கத்தின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய குறிப்புகள் சில!

E-mail Print PDF

வ.ந.கிரிதரனின் அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரை..- இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஞானம் கலை, இலக்கியச் சஞ்சிகையின் ஏப்ரில் 20018 இதழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அறுபதாண்டு இலக்கியப்பங்களிப்பினைச் சிறப்பிக்கும் மலராக வெளிவந்திருக்கின்றது. அதில் வெளியாகியுள்ள எனது கட்டுரையான 'அ.முத்துலிங்கத்தின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய குறிப்புகள் சில' என்னுமிக் கட்டுரை ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. -


இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், புலம் பெயர்தமிழ் இலக்கியத்தில் காத்திரமாகத் தடம் பதித்தவை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துகள். இவரது எழுத்துலகக் கால கட்டத்தை  புலம்பெயர்வதற்கு முன், புலம் பெயர்ந்ததற்கு பின் என இருவேறு காலகட்டங்களில் வைத்து ஆராய்வது சரியான நிலைப்பாடாகவிருக்கும். இவர் பரவலாக , உலகளாவியரீதியில், குறிப்பாகத் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட காலகட்டம் இவரது புலம்பெயர் எழுத்துக் காலகட்டம். அதற்காக இவரது ஆரம்ப எழுத்துலகக்காலகட்டம் ஒன்றும் குறைவானதல்ல. தனது ஆரம்பக் காலகட்ட எழுத்துகள் வாயிலாகவும் இவர் கலை, இலக்கியத்திறனாய்வாளர்களின் கவனத்தைப்பெற்று, அக்காலகட்டத்துப் படைப்புகள் மூலம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கால் பதித்தவர்தான். அந்த வகையிலும் இவர் புறக்கணிக்கப்பட முடியாதவரே. இச்சிறுகட்டுரையில் இயலுமானவரையில் இவரது இலக்கியப்பங்களிப்பினைச் சுருக்கமாக நோக்குவதற்கு முயற்சி செய்கின்றேன். இதன் மூலம் என் பார்வையில் இவரது இலக்கியப்பங்களிப்பினை இவரது படைப்புகளை நான் அறிந்த வரையில், வாசித்த வரையில் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவரது படைப்புகளை இவர் நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முற்பட்ட  காலகட்டத்தை வைத்து நோக்கினால் ஒன்றினை அவதானிக்கலாம். இக்காலகட்டத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு சிறுகதை வடிவிலேயே அதிகமாகவிருந்திருக்கின்றது. இவரது புகழ்பெற்ற முதற் கதையான 'அக்கா' தினகரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசினைப்பெற்றிருக்கின்றது. 1964இல் வெளியான இவரது முதலாவது சிறுகதைத்தொகுதியிலும் இடம் பெற்றுள்ளதுடன் அதன் பெயராகவும் விளங்குகின்றது. இவரது எழுத்தார்வத்திற்கு ஆரம்பத்தில் ஊக்குசக்தியாக விளங்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி என்பதை 'அக்கா' நூலுக்கான முன்னுரையில் இவர் எழுதிய முன்னுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பேராசிரியர் கைலாசபதி அவர்களும், பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுமே இவரது ஆரம்ப எழுத்துலகச் செயற்பாடுகளை ஊக்குவிப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதை அ.மு.அவர்கள் அம்முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றார்.

இவர் எழுத்துலகில் புகுந்த காலகட்டத்தில் இலங்கைத்தமிழ் இலக்கியச் சூழலில் பல் வகையான இலக்கியப்போக்குகள் நிலவி வந்தன. கலை மக்களுக்காக என்னும் கோட்பாட்டுடன் இயங்கிய முற்போக்கு இலக்கியச் சூழல், பாலியல் சார்ந்த எழுத்தை மையமாக வைத்து எஸ்.பொ. இயங்கிக்கொண்டிருந்த 'நற்போக்குச் சூழல்' (முற்போக்கு எழுத்தாளர்களின் கூடாரத்துடன் எழுந்த பிணக்குகள் காரணமாகத் தனித்தியங்கிய எழுத்தாளர்கள் தம்மை அழைக்கப் பாவித்த பதமாகவே இதனை நான் கருதுகின்றேன்), கலை, கலைக்காகவே என்னும் நோக்கில் இயங்கிய எழுத்துக்குக் கலை என்னும் ரீதியில் முக்கியத்துவம் கொடுத்த எழுத்துலகச் சூழல், இவற்றுக்கு இடைப்பட்ட , அனைத்தையும் உள்ளடக்கிய , பிரபஞ்ச யதார்த்தவாதம் என்னும் நோக்கில் இயங்கிய மு.தளையசிங்கம் அவர்களின் சிந்தனைகளை மையமாகக்கொண்ட எழுத்துலகச் சூழல் எனப்பல்வேறு சிந்தனைகளைக்கொண்டதாக விளங்கிய இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலுக்குள் அ.மு. அவர்கள் நுழைந்தபோது அவரது எழுத்தானது இவ்வகையான சூழல்கள் அனைத்திலிருந்தும் தனித்து, தனித்தன்மையுடன் விளங்கியதை அவதானிக்க முடிகின்றது.

இவரது எழுத்தினைப்பற்றி மேற்படி 'அக்கா' சிறுகதைத்தொகுப்பில் அணிந்துரை வழங்கிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இவரைப்பற்றிக் கூறுவதையும், அ.மு. அவர்கள் நூலுக்கான முன்னுரையில் தன்னைப்பற்றிக் கூறுவதையும் நோக்குவது பயன் மிக்கது. அவரது எழுத்து பற்றிய சிந்தனையில் தெளிவினை அடைய அவ்வகையான நோக்கு உதவும். முதலில் கைலாசப்தி அவர்கள் கூறுவதைச் சிறிது பார்ப்போம்:

ஞானம் சஞ்சிகையின் அ.முத்துலிங்கம் சிறப்பிதழ்"தனக்கென ஒரு நடையையும் போக்கையும் வகுத்துக் கொண்டு எழுதி வந்தார் அவர். தொகுதியிலடங்கியுள்ள கதைகள் எனது கூற்றுக்குச் சான்று... 'அக்கா'  என்னும் தலைப்புப் பெயரைப் பார்த்துவிட்டு வாசகர் எந்த விதமான அவசர முடிவுக்கும் வந்துவிடக் கூடாது, காதல், சகோதர பாசம், குடும்பச் சச்சரவு முதலிய வழக்கமான 'பல்லவி இங்கு பாடப்படவில்லை. காதல் போயிற் சாதலென்றே, சமூகத்தின் கொடுமை என்னே என்றே, வஞ்சனை செய்யும் மனிதரைப் பாரீர் என்றும், கதாசிரியர் எம்மை நோக்கிக் கூறவில்லை. அதற்கு மாறாகச் சர்வசாதாரணமான மனித உணர்ச்சிகளும் மனித உறவுகளும் கிராமப்புறச் சூழலில் எவ்வாறு தோன்றி இயங்குகின்றன என்பதை உணர்த்துகிறார் ஆசிரியர். நேர்மை, எளிமை, நுட்பம், விளக்கம், ஆகிய பண்புகள் பசுமை குலையாத ஓருள்ளத்திலிருந்து வந்து எமக்குப் புத்துணர்ச்சியளிக்கின்றன. நமது உணர்வைத் தொட்டுத் தடவிச் செல்கின்றன......  திரு. முத்துலிங்கம் பல்கலைக் கழகத்திலே விஞ்ஞானம் படித்த பட்டதாரி. கணிதத்தையும், பெளதீகவியலையும் இரசாயனவியலையும் படித்த அளவிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துள்ளார் என்று கூறமுடியாது. அது காரணமாகத் தற்காலத் தமிழ் இலக்கியங்களைப் படித்துவிட்டு, அவற்றினால் கவரப்பட்டு, அவற்றின் வழிநின்று எதிரொலிக்கும் பண்பு அவரிடம் காணப்படவில்லை. இது மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும். இலக்கியங்களிலிருந்து இரவல் அனுபவமும், போலியுணர்ச்சியும் பெற்றுக் கொள்ளாத அவர், தனது சொந்த அனுபவ உணர்வையே அடிநிலையாகக் கொண்டு, எழுதி வருகின்றார், இலக்கிய அறிவும், நூற் படிப்பும் எழுத்தாளனுக்கு ஆகாதன என நான் கூறுவதாக எவரும் கருத வேண்டியதில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக் குதவாது என்னும் பழமொழியையே நான் இலக்கிய சிருட்டித் துறைக்கு ஏற்றிச் சொல்கின்றேன்; அவ்வளவுதான். தனது அனுபவத்தையே ஆதாரமாகக் கொண்டு திரு. முத்துலிங்கம் எழுதிவருவதினுல் அவர் எழுத்துக்களில் பலமும் பலவீனமும் விரவிக் காணப்படுகின்றன. எனினும் தராசில் பலம் தாழ்ந்தே காணப்படுகின்றதென்பதில் ஐயமில்லை. சிறு கதை, நாவல் ஆகியவற்றில் அடிக்கடி காணப்படும் நைந்து போன சொற்றொடர்களோ, கதை நிகழ்ச்சிகளோ, பாத்திரங்களோ இக்கதைகளில் காணப்படா; அதே சமயத்தில் பிரச்சினைகளும் காணப்படா. ஆனால், ஆசிரியர் திறம்படச் சித்திரிக்கும் யாழ்ப்பாணத்துக் கிராமப்புறச் சூழ்நிலையிலே தோன்றும் சில பாத்திரங்களின் மன நோவுகளையும், குமைவுகளையும், சலனங்களையும், கொந்தளிப்பையும், நாம் இலகுவில் உணர்ந்து கொள்கிறோம்.....  ஆசிரியரின் சிறப்பியல்பு. இவ்வெற்றிக்குத் துணை செய்யும் அமிசங்கள் சிலவற்றையும் குறிப்பிடல் வேண்டும். யாழ்ப்பாணத்திலே கொக்குவில்கோண்டாவில் - இணுவில் - பகுதியே ஆசிரியரது பெரும் பாலான கதைகளின் களம். அப்பகுதியிலுள்ள வீடுகள், தெருக்கள், ஒழுங்கைகள், கோயில் ஆகியன உயிர்த்துடிப் புடன் கதைகளில் இடம் பெறுகின்றன; மக்களின் ஊண், உடை, பழக்கவழக்கங்கள், கம்பிக்கை முதலியன பாத்திரங்களின் சூழலுக்கு வரம்பு செய்கின்றன; அவ்வரம்பிற்குள்ளேயே மனித உணர்ச்சிகள் தோன்றி மறைகின்றன; அவ்வுணர்ச்சிகள் தாம் பிறந்த சொல் வடிவிலேயே எமக்குப் பொருள் விளக்கஞ் செய்கின்றன; நுணுக்கமான ஒலியலைகளைப் பதியும் நுண் கருவிபோலத் தனக்கு நன்கு தெரிந்த உணர்ச்சிமயமான அநுபவத்தைத் திரிக்காமலும், விகாரப்படுத்தாமலும், கெடுக்காமலும் அமைதியான முறையில் சொற்களிலே தேக்கியுள்ளார் திரு. முத்துவிங்கம்."

Last Updated on Saturday, 07 April 2018 22:01 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 279 : பால்ய காலத்து அனுபவங்கள் - மறக்க முடியாத ஆளுமை - 'ராஜு அங்கிள்'

E-mail Print PDF

ராஜு அங்கிள்என் பால்ய காலத்து வாசிப்பனுபவங்களைப்பற்றி எண்ணீயதும் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக என் நினைவில் நிற்பவர் 'ராஜு அங்கிள்' என்றழைக்கப்படும் ராஜநாதன் முத்துச்சாமிப்பிள்ளை. இவர் என் அம்மாவின் கடைக்குட்டித்தம்பி.  அவருக்கும் அம்மாவுக்குமிடையில்  பதினெட்டு வயது வித்தியாசம். ஆச்சி பதின்ம வயதிலிருந்தே இல்லறபந்தத்தில் தன்னைப்பிணைத்துக்கொண்டவர். அதன் விளைவு இவ்வயது வித்தியாசம். அம்மா இவரைத் தன் தம்பி என்று பார்த்ததை விடத் தனது இன்னுமொரு மகன் போன்றே எப்பொழுதும் கருதி வந்தாரென்று நான் உணர்வதுண்டு. அம்மாவின் இளமைக்காலப்புகைப்படமொன்றில் அம்மாவுடன் காற்,சட்டையுடன் இவரிருந்த புகைப்படமொன்றினைப் பார்க்கும் எவரும் அவ்விதமே கருதுவர். இவர் அம்மாவுக்கு  மட்டுமின்றி அம்மம்மா, அம்மாவின் ஏனைய சகோதர, சகோதரிகள், அம்மப்பா யாவருக்குமே செல்லப்பிள்ளைதான். குறிப்பாக அம்மப்பாவின் மிகுந்த பிரியத்துக்குரிய கடைக்குட்டி பையனாக இருந்ததால், அவருடன் எப்பொழுதும் அவரது 'நாஷ்' காரில் இவர் திரிவார். சில சமயங்களில் அதில் நண்பர்களுடன் நகரை வலம் வருவதுண்டு. அம்மாவின் இன்னுமொரு தங்கையின் திருமணத்தின் போது அக்காரில் யாழ்நகரில் எங்களையெல்லாம் ஏற்றி விரைவாக ஓட்டிச்சென்றது இன்னும் ஞாபகத்திலுள்ளது. அம்மப்பாவின் இறுதிக்காலத்திலும் கூட எந்நேரமும் அவருடன் அவரது மரணம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்தவர் இவர். அம்மா எவ்விதம் இவரைத் தம்பி போன்று கருதாமல், மகன் போன்று கருதினாரோ அவ்வாறே நாங்களும் இவரை மாமா முறையென்றாலும் கூட அவ்வாறு கருதுவதில்லை; எங்களது நண்பர்களிலொருவரைப்போன்றுதான், மூத்த அண்ணர்களிலொருவரைப்போன்றுதான் கருதினோம்; பழகி வந்தோம். அவரும் எங்களுடன் அவ்விதமே மிகவும் இயல்பாகப் பழகி வந்தார்; வருகின்றார்.

இவர் சிவாஜியின் 'புதிய பறவை', 'ஆலயமணி' திரைப்படங்கள் வெளியான காலகட்டத்து இளைஞர்களிலொருவர் என்பதால் சிகரட் பிடிப்பதிலிருந்து, தோள்களைக் குலுக்கிச் சிரித்துக் கதைப்பதிலிருந்து அன்றிலிருந்து இன்று வரை அதே சிவாஜி ஸ்டைலைப் பின்பற்றி வருபவர். 1970இலேயே கனடாவுக்கு வந்து விட்டார். அதற்கு முக்கிய காரணங்களிலொன்று: அக்காலகட்டத்தில்தான் அம்மப்பாவின் மறைவும் நிகழ்ந்தது. அம்மப்பாவின் சகோதரர் ஒருவருக்கும் இவர் மீது மிகுந்த பிரியம் இருந்தது. அவர் சிறிது காலம் புளியங்குளத்தில் இருந்த தனது பண்ணையொன்றை இவரது பொறுப்பில் விட்டுப் பார்த்தார். ஆனால் அது வெற்றியளிக்கவில்லையென்றே கூறுவேன். எப்பொழுதும் நண்பர்களுடன் 'ஜாலி'யாக நகரத்தில் திரிந்த இவருக்கு வன்னிக்காட்டுப் பகுதி ஒத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வாரமும் அடிக்கடி அம்மாவிடம் , அப்பொழுது அம்மா வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார், 'அக்கா, அக்கா' என்று ஓடி வந்து விடுவார்.
அப்பொழுதுதான் நான் அப்பா வீட்டில் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் தமிழக வார, சஞ்சிகைகளில் என்னை மறந்து வாசிப்பதில் ஈடுபடுத்திக்கொண்டிருந்தேன். ஒருமுறை அம்மாவிடம் வரும்போது அழகாக பைண்டு செய்யப்பட்டிருந்த , கல்கியில் தொடராக வெளியான அகிலனின்  'வேங்கையின் மைந்தன்' நாவலைக் கொண்டு வந்திருந்தார். அதன் மூலமே எனக்கு எழுத்தாளர் அகிலன் அறிமுகமானார்.

Last Updated on Thursday, 05 April 2018 23:41 Read more...
 

அஞ்சலி: மானுட விடுதலை பாடிய கவிஞன் தம்பி தில்லை முகிலன் மறைவும், முகநூலும்!

E-mail Print PDF

கவிஞர் தம்பி தில்லை முகிலன்கவிஞர் தம்பி தில்லை முகிலனைப்பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச்சேர்ந்த இவரது அகால மரணம் பற்றிய நண்பர் சிவா முருகுப்பிள்ளையின் முகநூற் பதிவின் பின்னரே இவரைப்பற்றி அறிந்து கொண்டேன். இவரது மறைவைப்பற்றிய பாலசிங்கம் சுகுமார் அவர்களின் முகநூற் பதிவு இவரது கலை, உலக மற்றும் சமூக, அரசியற் செயற்பாடுகளை நினைவுகூர்ந்திருந்தது. இவரது முகநூலுக்குச் சென்று பார்த்தேன். கலாபூஷணம் விருதினைபெற்ற இவருடனான நேர்காணல்கள் வெளியான பத்திரிகைகளின் புகைப்படங்களைப் பார்த்தேன். அதன் பின்னர் இவரது அண்மையப் பதிவுகளைப் பார்த்தேன். மார்ச் 30 எழுதிய பதிவில் பின்வரும் கவிதையினைப் பதிவு செய்திருந்தார்:

"வாதம் நிதம் வளம் காண
தினம் மோதலாகத் தொடரட்டும்.
பேதமழிக்க யாவரும்
பொதுமை காண ,
மனிதர் இனிமை காண,
வாதம் நிதம் தொடரட்டும்."


மானுட சமுதாயத்தில் பேதங்கள் நீங்க, பொதுமை காண (பொதுமைக்குப் பல கருத்துகளுள: இனிமை, பொதுவுடமை என) வாதம் நிதம் மோதலாகவாவது தொடரட்டும் என்று அறை கூவல் விடுக்கின்றார். இதனை எழுதியபோது மணி காலை 8.20.

இவ்விதம் மானுட சமுதாய முன்னேற்றத்துக்காக அறை கூவல் விடுத்த கவிஞர் தம்பி தில்லை முகிலன் , மார்ச் 31 இரவு 10.02 மணிக்கான இரு பதிவுகளில் பின்வருமாறு எழுதுகின்றார்:

பதிவு ஒன்று: "இருப்பதற்கு விருப்பமில்லை என் இருப்பை என்னவர் என்போரும் விரும்பவில்லை ஏன் இருப்பான் என்பதில் எழும் கேள்விக்குப் பதில் இறப்பதே சரி ஆகவே எனக்காக யாரும் கவலைப்படாதீர். ஒருவன் சொன்னதைச் சொன்னேன் சரியா பிழையா சொல்வீர். ஒருவர் இல்லை இன்று பத்தில் எட்டுப்பேர் சொல்வது தான். பற்றும் பாசமும் அற்றுப்போன காலமிது. செத்துப் போனால் என்ன? நடமாடும் பிணமாகத்தானே நாளும் பலர் இங்கு வாழ்கிறார்? பிறப்பைவிட இறப்பே இப்போ பெரிது. விடுதலை."

பதிவு இரண்டு: "செல்கின்றேன் கவலைப் படாதீர்கள். போதுமானது வாழ்கை. பிறருக்கு வாழ்வதே பிறவிப்பயன் என்பார். என்னால் பிறருக்கு வாழமுடியாது உள்ளது. உயிர்தான் உள்ளது. அதனால் எவருக்கும் ஒன்றும் செய்ய முடியாது. என்னை என்நிலை அறிந்தவர் செத்துப்போ என்றும் சொல்வதும் உண்டு. அது பற்றின் காரணம். இப்போ பற்றும் பாசமும் இடையூறாய் இருப்பது உண்மைதானே. அதனால் இறப்பை நாமே தேடுவது சரியா? பிழையா? என்நிலையில் சரியே."

இவ்விதமிட்ட கவிஞரின் முகநூற் பதிவானது அவரது முகநூல் நண்பர்கள் மத்தியில் திகைப்பினை ஏற்படுத்தியதை இப்பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பர்களின் எதிர்வினைகளிலிருந்து தெரிய வருகின்றது.

நண்பர் பாலசிங்கம் சுகுமார்: "என்ன"

Jasothsrabanu Shekar என்பவரும் பதிவு புரியாமல் கேட்கின்றார்: "என்ன?'

நாகசோதி தங்கவேல் என்னும் நண்பருக்கு விடயம் புரிந்திருக்கின்றது. எனவே அவர் கவிஞருக்கு ஆறுதலும், ஆரோக்கியமான ஆலோசனையும் கூறுகின்றார்: "சொல்பவர்கள் சொல்லட்டும் எல்லோர் விருப்பத்திற்கும் வாழ விரும்பினால் எம்மால் வாழ முடியாது, நீங்கள் இன்னும்பல ஆண்டுகள் தமிழுடனும் கவியுடனும் ஆரோக்யமாக வாழவேண்டும் இறைவன் துணையிருப்பார்."

Last Updated on Monday, 02 April 2018 21:57 Read more...
 

ஆங்கில மொழிபெயர்ப்பில் வ.ந.கிரிதரனின் இரு கவிதைகள்!

E-mail Print PDF

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.-அண்மையில் 'குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி' என்றொரு எனது கவிதையை இங்கு பிரசுரித்திருந்தேன். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் (ரிஷி)  அனுப்பியிருந்தார்.  அது போல் முனைவர் ர.தாரணி அவர்கள் எனது 'தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை' என்னும் கவிதையினை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருந்தார். அவர்களிருவருக்கும் நன்றியினைக் கூறுவதுடன் அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.. - வ.ந.கிரிதரன் -

Poem: A message for  Stallion-Stealers!  - V.N. Giritharan -   Translation  in English by Latha Ramakrishnan

Hei you, the Stallion-Stealers!
Here is a message for you.
I am a caretaker of horses.
Not a trader.
A genuine, straightforward caretaker.
I have so many sturdy stallions with me.
Indeed all of them are real good.
They are not lame ones.
I have great affection for
all the horses in my possession
I treat them with no discrimination.
I am not one to rear or sell crippled horses
Still – Hei you, the Stallion-Stealers!
You’ve become more troublesome.

Last Updated on Monday, 02 April 2018 21:57 Read more...
 

நனவிடை தோய்தல்: தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

E-mail Print PDF

மகேஸ்வரி நவரத்தினம் (மங்கையற்கரசி, மங்கை) டீச்சர்!அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அம்மா எழுந்து விடுவா எவ்வித அலாரமும் இல்லாமல். குருமண்காட்டுப் பிரதேசத்தித்தின் சேவல்கள் ஆங்காங்கே தம் காலைக்கச்சேரிப் போட்டியினை ஆரம்பித்துவிடும் கூவல் ஒலிகள் தவிரப் பெரிதாக வேறெவ்வித ஒலிகளுமற்ற காலைப்பொழுதில் அம்மா அந்த அதிகாலை நேரத்தில் எழுந்து விடுவதற்குக் காரணமுண்டு. குழந்தைகள் நாம் ஐவர். வவுனியா மகாவித்தியாலயத்துக்கு நடந்து செல்ல வேண்டும். அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் படிப்பித்துக்கொண்டிருந்தார். 'நவரத்தினம் டீச்சர்' என்றால் தெரியும். அனைவருக்கும் காலை, மதிய உணவு தயாரித்து, அவற்றை உணவுக்`கேரியரி`ல் அல்லது வாழை இலையில் பார்சல்களாகக் கட்டி, பாடசாலை தொடங்குவதற்குள் அனைவரையும் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் 'றோட்டி'ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு. அவரது கணவர் சட்டத்தரணி. மகன் இறம்பைக்குளக் 'கான்வென்'டில் படித்துக்கொண்டிருந்தார். அவர்களை இறக்கிவிட்டு அனைவரும் மகா வித்தியாலயம் செல்வோம்.

அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் 'றோட்டின்' ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.

இன்று (மார்ச் 26) அம்மாவின் நினைவுகள் அதிகமாக எழுகின்றன. அவருடன் வாழ்ந்த இனிய பொழுதுகள் நினைவிலெழுகின்றன. இனிமையான பொழுதுகள் அவை. காரணமுண்டு: இன்று அம்மாவின் நினைவு நாள். இருப்புள்ளவரை இருக்கப்போகும் நினைவுகள். காலம் மாறி விட்டது. காட்சிகள் மாறி விட்டன. ஆனால் நினைவுகள் மாறுவதில்லை. நிலையாக இருந்து விடுகின்றன. நினைவுகளின் தோய்தல்கள் மானுடப்பிறப்புக்கு இன்பம் சேர்க்கின்றன. அம்மா பற்றிய நினைவுகளும் அவ்விதமான நினைவுகள். இருப்புக்கு இன்பம் சேர்க்கும் நினைவுகள்.

Last Updated on Monday, 26 March 2018 20:59 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 278: அ.ந.க.வின் 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையும், 'மனக்கண்' நாவலும் பற்றிய சிந்தனைகள்!

E-mail Print PDF

ஈழகேசரிச் சிறுகதைகள்!அறிஞர் அ.ந.கந்தசாமியின் முதலாவது சிறுகதையினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எழுத்தாளர் செங்கை ஆழியான் தொகுத்து பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை) வெளியிட்டிருந்த 'ஈழகேசரிச் சிறுகதைகள்' தொகுப்பு நூல் உள்ளடக்கியுள்ள 'குருட்டு வாழ்க்கை' என்னும் சிறுகதைதான் அது. 17.5.1942 ஈழகேசரிப்பிரதியில் வெளியான சிறுகதை இது. இதனை எழுதியபோது அ.ந.க.வுக்கு வயது பதினேழு. இதுவே அவரது முதலாவது சிறுகதை என்று செங்கை ஆழியான நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் சிறுகதை வெளியாகியுள்ள பக்கத்தில் அ.ந.க 'சிப்பி' என்னும் புனைபெயரில் 'பகல் வெள்ளி' (1941) என்னுமொரு சிறுகதையினையும் ஈழகேசரியில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 'பகல்வெள்ளி'யே அ.ந.க.வின் முதலாவது சிறுகதையாகவிருக்க வேண்டும். 'குருட்டு வாழ்க்கை' வெளியான ஆண்டு 1942. 'பகல் வெள்ளி' வெளியான ஆண்டு 1941. அ.ந.க.வின் பிறந்த ஆண்டு 1924 என்பதால் (ஆகஸ்ட் 8, 1924) இச்சிறுகதை வெளியானபோது அவருக்கு வயது பதினேழு.

இச்சிறுகதையை வாசித்த போது இன்னுமொர் உண்மையினையும் அவதானிக்க முடிந்தது. அ.ந.க எழுதி தினகரனில் தொடராக வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. இந்நாவலின் கதையமைப்பும், 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையின் கதையமைப்பூம் ஒரே மாதிரியானவை. குருட்டு வாழ்க்கை சிறுகதையில் வரும் நாயகன் அம்மை நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இது போலவே மனக்கண் நாவலிலும் நாயகன் ஶ்ரீதர் கண் நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இரண்டிலுமே கண் பார்வை இழந்த நாயகர்களின காதலிகள் நாயகர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களின் பெற்றோர்கள் அவர்களது காதலிகள் என்று கூறி வேறு பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து வைத்து விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களுக்கு கண் சத்திர சிகிச்சை செய்து பார்வை திரும்புகின்றது. இரண்டிலுமே உண்மை அறிந்த நாயகர்கள் தாம் பெற்ற பார்வையினைத் தாமே பறித்து விடுகின்றார்கள். அவ்விதம் செய்வதன் மூலம் காதலிகள் அல்லாத மனைவியர்களுடன் குடும்பத்தை நடாத்த அவர்களால் முடிகின்றது. ஆனால் குருட்டு வாழ்க்கை சிறுகதை இந்நிலையுடன் நின்று விடுகின்றது. மனக்கண் நாவலிலோ கதை மேலும் தொடர்கின்றது. மனக்கண் நாவலில் நாயகன் தன்னை மணந்து கொண்ட பெண்ணைப்பற்றி மேலும் சிந்திக்கின்றான். அவளது தியாகத்தின் அளவை உணர்ந்துகொள்கின்றான். மீண்டும் கண் பார்வையைப் பெற விரும்புகின்றான். செல்வந்தரும், செருக்கும் மிக்க அவனது தந்தையார் இறுதியில் தன் கண்களைக் கொடுத்து அவனைக் காப்பாற்றி மறைந்து விடுகின்றார்.

குருட்டு வாழ்க்கை சிறுகதையைப்பற்றிக் குறிப்பிடுகையில் செங்கை ஆழியான் 'ஈழகேசரித் தொகுப்பு நூலில் 'நல்லதொரு சினிமாப்பாணிக் கதை. ஆனால் வாசித்ததும் வலிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். மனக்கண் நாவலின் இறுதியில் அ.ந.க எழுதிய முன்னுரையில் அ.ந.க ஏன் அவ்விதமானதொரு சுவை மிகுந்த கதையினைப் பின்னினார் என்பதற்கும், தான் நாவலில் பாவித்த சுவையான நடையினைப்பற்றியும் விளக்கம் தந்திருக்கின்றார்.  அதில் அவர் பின்வருமாறு கூறுவார்:

Last Updated on Thursday, 22 March 2018 20:07 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 277: அஞ்சலி: இதழாசிரியர் ம.நடராஜனின் மறைவு! | கவிதை: பரிணாமம் |

E-mail Print PDF

'புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராஜன்அண்மையில் மறைந்த 'புதிய பார்வை' சஞ்சிகையின் ஆசிரியரான ம.நடராஜனுக்கு இலக்கியம், அரசியல் என இரு முகங்கள். கலை, இலக்கியரீதியில் அவரது 'புதிய பார்வை' சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அந்த வகையில் அதன் ஆசிரியரான ம.நடராஜனும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர்களிலொருவராகின்றார். முனைவர் ம.நடராஜன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் அப்பிமானம் பெற்றவர். 'மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு' என்னும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அரசியலைக் கடந்து கலை, இலக்கியவாதிகள் மத்தியிலும் நட்பினைப் பேணியவர். 1967இல் தமிழகத்தில் நடைபெற்ற தனது மாணவப்பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு 'சுபமங்களா' வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் , அதே சாயல் மிக்க வடிவமைப்புடன் வெளியான சஞ்சிகை 'புதிய பார்வை'. அக்காலகட்டத்தில் அதன் இணை ஆசிரியரான பாவை சந்திரனின் 'நல்ல நிலம்' நாவல் தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது.

புதிய பார்வை சஞ்சிகை விடயத்திலும், அதன் ஆசிரியர் ம.நடராஜன் மீதும் என் மனத்தில் மென்மையான உணர்வுமுண்டு. அதற்குக் காரணமுமுண்டு. 1996இல் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மங்கை பதிப்பகத்துடன் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான 'அமெரிக்கா' (அமெரிக்கா சிறு நாவல் மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு) வெளியானபோது புதிய பார்வை அதற்கு புத்தக மதிப்புரையொன்றினை எழுதி தனது மே 1997 இதழில் வெளியிட்டிருந்தது. அதனை ஜி.சுவாமிநாதன் என்பவர் எழுதியிருந்தார். 'அமெரிக்கா'தான் தமிழகத்தில் வெளியான எனது முதலாவது நூல். ஆனால் அந்த நூலுக்கு மதிப்புரை எழுதி என் நூலுக்கு வரவேற்பு கொடுத்திருந்த 'புதிய பார்வை' சஞ்சிகை மீது அந்த விடயத்தில் எனக்கு எப்பொழுதுமே மதிப்புண்டு. குறை நிறைகளுடன் அமைந்திருந்த அந்த விமர்சனம் வெளியான 'புதிய பார்வை' சஞ்சிகைப்பக்கத்தினையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள்.

Last Updated on Thursday, 22 March 2018 20:24 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 276: நவீன இயற்பியலின் தந்தை ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன்! - வ.ந.கிரிதரன் -

E-mail Print PDF

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்ததினம் மார்ச் 14..

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன்நவீன இயற்பியலின் தந்தை என்பர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனை. நவீன இயற்பியலின் இரு அடித்தளங்களாக சார்பியற் தத்துவத்தையும் (சிறப்புச் சார்பியற் தத்துவம் மற்றும் பொதுச் சார்பியற் தத்துவம்)  , சக்திச்சொட்டுப் பெளதிகம் அல்லது 'குவாண்டம் பிசிக்ஸ்'ஸையும் குறிப்பிடலாம். இவ்விரண்டு கோட்பாடுகளின் மூலவராக ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனைக் குறிப்பிடலாம். அரிஸ்டாட்டில், சேர் ஐசாக் நியூட்டன் போன்றோரின் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருந்த நவீன இயற்பியலின் அடித்தளங்களையே அடியோடு மாற்றி வைத்தவை ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த வெளி (Space) காலம் (Time)  ஆகியவை பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை அடியோடு மாற்றி வைத்தவை ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடான சிறப்புச் சார்பியற் தத்துவக் கோட்பாடு. அதுவரை வெளி, நேரம் ஆகியவை சுயாதீனமானவை என்று கருதப்பட்டு வந்தன. அவை சுற்றிவர நடைபெறும் இயக்கங்களால் பாதிப்புறுவதில்லை என்று கருதப்பட்டு வந்தன. ஆனால் ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடோ வெளி, நேரம் ஆகியவை இரண்டும் சுற்றிவர நடைபெறும் இயக்கங்களால் பாதிக்கப்படுபவைதாம் என்று கூறின. அவை சுயாதீனமானவை அல்ல மாறாகச் சார்பானவை என்பதை வெளிப்படுத்தின. நேரமானது வேகத்தால் பாதிக்கப்படுகின்றது. வெளியானது பொருளொன்றின் திணிவினால் பாதிக்கப்படுகின்றது. திணிவு கூடிய பொருளொன்றானது தன்னைச் சுற்றியிருக்கும் வெளியினை வளைத்து விடுகின்றது என்பதை ஐன்ட்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவக் கோட்பாடு வெளிப்படுத்தியது. அத்துடன் காலத்தையும் , நேரத்தையும் தனித்தனியாக ஒருபோதுமே பிரித்து வைத்துப் பார்க்க முடியாது என்றும் , நாம் வாழும் இப்பிரபஞ்சமானது 'வெளிகால' (SpaceTime) அல்லது 'காலவெளி'யால் ஆன ஒன்று என்றும் அச்சிறப்புச்சார்பியற்க்கோட்பாடு கூறியது.

இது போல் புவியீர்ப்பானது நியூட்டன் கூறியதுபோல் ஒரு விசையேயல்ல என்றும், அது காலவெளிப்படுதாவில் பொருளொன்று ஏற்படுத்திவிடும் வடிவவியல் மாறுதலின்  விளைவு என்றும் எடுத்துக் காட்டியது ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியற் தத்துவம். பொருளொன்றின் திணிவின் அளவினால் சுற்றிவர இருக்கும் காலவெளியில் ஏற்படும் வளைவின் காரணமாகவே ஒரு பொருளானது வளைக்கும் பொருளைச் சுற்றிவருவதன் காரணம் என்பதை அக்கோட்பாடு எடுத்துக்காட்டியது. அவரது சிறப்புச் சார்பியற் தத்துவமே கருந்துளைகள் போன்ற பிரபஞ்சச் சாத்தியங்களை எதிர்வு கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகளை மையமாக வைத்து நான் எழுதிய வானியற்பியற் பற்றிய கட்டுரைகள் தொண்ணூறுகளில் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் கட்டுரையொன்று கணையாழி சஞ்சிகையில் வெளியானது./ பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்தநாள் மார்ச் 14. அவர் நினைவாக இச்சிறு குறிப்பினையும், முன்பு எழுதிய கவிதைகள் இரண்டினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

Last Updated on Saturday, 17 March 2018 14:25 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 275: எனது சிறுகதையான 'நடு வழியில் ஒரு பயணம்' சிங்கள மொழியில்....

E-mail Print PDF

லக்பிமா சிங்களப்பத்திரிகையில்..இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா (lakbima)  சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர் 2006இல் 'பதிவுகள்' மற்றும் 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள  மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும், லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe)  அவர்களுக்கும் நன்றி. இச்சிறுகதை வெளியான 'லக்பிமா' :  http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf

ஏற்கனவே எனது இன்னுமொரு சிறுகதையான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்' சிறுகதையினை ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து 'லங்கஇரிடா' (Lankairida)) பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை 'லங்கஇரிடா'வின் பெப்ருவரி 18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.


'நடுவழியில் ஒரு பயணம்' சிறுகதையினை முழுமையாகக் கீழே வாசிக்கலாம்:

நடுவழியில் ஒரு பயணம்' - வ.ந.கிரிதரன் -

பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). 'பஸ்'சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக 'பஸ்' தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் 'பஸ்'சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். 'லாண்ட்ஸ்டவு'னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான 'ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்'இலிருந்து நிர்வாண நடனமாதர் சிலர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.

"ஏ! நண்பா! எப்படிச் சுகம்" என்று உரையாடலினைத் தொடர்ந்தேன்.

"நான் நல்லாத்தானிருக்கிறேன். நீ எப்படி?"யென்றான். அப்பொழுதுதான் கவனித்தேன் அவன் போதை இன்னும் தணியாததை.

"நானும் நலமே! நன்றி!" என்றேன்.

அவன் அவ்வழியால் சென்று கொண்டிருந்த டாக்ஸிகள் சிலவற்றை மறித்தான். ஒருவராவது அவனுக்காக நிற்பாட்டுவதாகத் தெரியவில்லை.

"பார். கறுப்பினத்தவனென்றதும் ஒருத்தனாவது நிற்பாட்டுகிறானில்லை. அங்கு பார். அந்த கறுப்பின டாக்ஸிச் சாரதி கூட நிற்பாட்டுகிறானில்லை" என்றான்.

"அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பத்திரிகைகளில் பார்த்திருப்பாயே. எத்தனை தடவைகள் அவர்கள் தாக்கப்பட்டிருப்பார்கள். சிலர் கொல்லப்பட்டுமிருக்கிறார்களே. மிகவும் ஆபத்தான பணிதான். உனக்கென்ன டாக்ஸிதானே வேண்டும். நான் மறிக்கவா?" என்றேன்.

"அவ்விதம் செய்தால் நன்றியுள்ளவனாகவிருப்பேன்" என்றான்.

"அது சரி. நீ எங்கு போக வேண்டும்?"

"கோடன் ரிட்ஜ் தெரியுமா? 'டான்வோர்த்' வீதியும் 'மிட்லாண்ட்' வீதுயும் சந்தியும் சந்திக்குமிடத்திற்கண்மையில்.." என்றான்.

Last Updated on Saturday, 17 March 2018 17:30 Read more...
 

அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங் (1942 - 2018)!

E-mail Print PDF

அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங் (1942 - 2018)!

ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் தனது 76ஆவது வயதில் இன்று காலை (மார்ச் 14, 2018)  தன்னியக்கத்தை நிறுத்தி விட்டார். இவரது அறிவு மட்டுமல்ல இவரது வாழ்க்கை கூட அனைவரையும், மருத்துவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியதொன்று. இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில்  'மோட்டார் நியூரோன் டிசீஸ்' என்னும் ஒருவகையான நரம்பு நோயால்  உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி இத்தனை ஆண்டுகள் இவர் வாழ்ந்திருக்கின்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்திருக்கின்றார். திருமண வாழ்வில் ஈடுபட்டு தந்தையாக வாழ்ந்திருக்கின்றார். இவர் மூன்று குழந்தைகளுக்குத்தந்தை.

நவீன வானியற்பியற் துறைகளின் தந்தையான அல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் இயக்க மற்றும் கருந்துளைகள் பற்றிய ஆய்வில், சக்திச்சொட்டுப் பெளதிகத்தில் தன்னை ஈடுபடுத்தி மேலும் பல ஆய்வுகளைச் செய்திருக்கின்றார். அவற்றின் வாயிலாகப் பல முடிவுகளை, உண்மைகளை அறிய வைத்திருக்கின்றார். குறிப்பாகக் கருந்துளைகள் பற்றிய, நாம் வாழும் இப்பிரபஞ்சம் பற்றிய இவரது கோட்பாடுகள் நவீன வானியற்பியத்துறைக்கு வளம் சேர்ப்பவை.

Last Updated on Wednesday, 14 March 2018 22:13 Read more...
 

காலத்தால் அழியாத கானங்கள் (4-6)

E-mail Print PDF

காலத்தால் அழியாத கானங்கள் 4:  நாரே நாரே நாரே! நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே

ஸ்ரேயா கோஷல்கவிஞர் வைரமுத்துஇன்று இந்தியத்திரையுலகில் கொடி கட்டிப்பறக்கும் பாடகிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியாக ஸ்ரேயா கோஷலைக் கூறுவேன். அவரது பிறந்த தினம் மார்ச் 12. மார்ச் 12, 1984 பிறந்த ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர். 'சரிகமப' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி சிறந்த பாடகியாகப் புகழ்பெற்று, திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியால் இனங்காணப்பட்டு (Sanjay Leela Bhansali ) , அவரது தேவதாஸ் இந்தித் திரைப்படத்தில் (2002) பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டு, அப்படத்தின் மூலமே இந்திய மத்திய அரசின் மற்றும் ஃபிலிம்ஃபெயர் சஞ்சிகையின் சிறந்த பாடகிக்கான விருதினைப்பெற்றவர். குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதினையும், ஆறு தடவைகள் ஃபிலிம்ஃபெயரின் விருதினையும் சிறந்த பாடகிக்காகப் பெற்றவர். இவை தவிர தமிழக அரசின் மாநில விருதினை இரு தடவைகளு, மூன்று தடவைகள் கேரள மாநில அரசின் விருதினையும் , மேலும் பல விருதுகளையும் பெற்றவர். இங்கிலாந்திலுள்ள Madame Tussauds அருங்காட்சியத்தில் மெழுகினால் சிலையாக வடிக்கப்பட்ட முதலாவது இந்தியப் பாடகர் என்ற பெருமையினையும் பெற்றவர். இவரது பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையானவை. திரைப்படங்கள் மட்டுமல்லாது, சொந்தமாகவும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் இசை ஆல்பங்கள் தயாரித்தும் வெளீயிட்டுள்ளார்.

இவர் பாடகர் உதய் மஜும்தாருடன் பாடிய மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான 'குரு' படத்தில் பாடிய 'நன்னாரே' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. இப்பாடலின் சிறப்புகளாக ஸ்ரேயா கோஷலின் குரல், ஏ.ஆர்.ரகுமானின் இசை, கவிஞர் வைரமுத்துவின் வரிகள் , இயற்கையெழிலின் அழகிய காட்சிகளை வெளிப்படுத்தும் ஒளிப்பதிவு மற்றும் ஐஸ்வர்யா ராஜி`ன் நடிப்பு, நடன அசைவுகள் ஆகியவற்றைக் கூறுவேன்.

Last Updated on Wednesday, 14 March 2018 00:12 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 274: இருப்பு வாழ்வதற்கே!

E-mail Print PDF

திருமதி யோகரத்தினம் செல்லையாமானுடர்களில் கலைஞர்கள் (எழுத்தாளர்கள் உள்ளடங்கி),  அரசியல்வாதிகள் இவர்களைப்பொறுத்தவரையில் ஓய்வு என்பது உடலில் வலு உள்ளவரையே. உடல், உள்ளம் வலுவாக உள்ளவரை இவர்கள் இயங்கிக்கொண்டேயிருப்பார்கள். இருப்பை இவ்விதம்தான் எதிர்நோக்க வேண்டும். இதனால்தான் மனோரமா போன்ற கலைஞர்கள் தாம் இறுதிவரை நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உண்மையில் இருப்பினை ஆரோக்கியமாக எதிர்நோக்கும் பண்பு இது.  இவ்விதமே மனிதர்கள் இருக்க வேண்டும் என்பது என் பெரு விருப்பு.

இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே இயங்கிக்கொண்டேயிருக்கின்றன கதிர் உட்பட. இயக்கத்துக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆனால் சாதாரண மானுடரைப்பொறுத்தவரையில் தம் வாழ்க்கையை ஓய்வு பெறுதல் என்பதன் அடிப்படையில அமைத்துக்கொள்கின்றார்கள். இதனால் ஓய்வு பெறும் இலக்கை மட்டுமே வைத்துக்கொண்டு உழைக்கின்றார்கள். கடுமையாக உழைக்கின்றார்கள். ஓய்வு பெற்றதும் இவர்களில் பலருக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒய்வு பெற்றதும் எல்லாமே முடிந்து போய்விடுகின்றது என்று தளர்ந்து விடுகின்றார்கள். விரைவிலயே முதுமை பெற்று உடல்ரீதியாக, உடல் ரீதியாக வாடிப்போகின்றார்கள். பலர் ஒன்றுக்கும் இயலாத இயலாமையில் ஓய்வு பெற்றதும் வாழ்வே இல்லை  என்பது போல் ஒதுங்கி, ஓய்ந்து விடுகின்றார்கள்.

இதனால் ஓய்வு பெறுதல் (Retirement) என்னைப்பொறுத்த வரையில் எதிர் மறையானது என்பது கருத்து. இதற்குப் பதில் ஒருவர் தன்னிடமுள்ள ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாக இக்கால  கட்டத்தைப் பார்க்கலாம். இளமையில் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்று விரும்பி, வாழ்க்கைச் சூழல்கள் காரணமாக அதனைச் செய்ய முடியாமல் போனவர்கள் படித்துப் பட்டங்கள் பெறுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளலாம். மேனாடுகளில் அன்றாடப் பணிகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பலர் முதுமையில் படித்துப் பட்டம் பெறுகின்றார்கள். ஓவியம், எழுத்து , நடிப்பு போன்ற தம் ஆற்றல்களை வளர்த்துக்கொள்கின்றார்கள். தன்னார்வத்தொண்டர்களாக ஏனைய மானுடர்களுக்குப் பயனுள்ளவர்களாக வாழ்கின்றார்கள்.

மானுடர்கள் ஓய்வு பெறும் காலகட்டத்தை  இருப்பின் வளமான ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாகக் கருதித் தம் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  ஓய்வு பெறுதல் என்னும் சொல்லினைத் தம் வாழ்க்கையின் அகராதியிலிருந்து நீக்க வேண்டும். இருப்பில் மானுடர்களுக்கு ஓய்வு என்பது இருப்பின் முடிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்னும் வகையில் மானுடர்கள் தம் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வேண்டும்.

Last Updated on Saturday, 10 March 2018 14:25 Read more...
 

அண்மைய முஸ்லிம் - சிங்கள இனக்கலவரம் பற்றி...

E-mail Print PDF

அண்மைய முஸ்லிம் - சிங்கள இனக்கலவரம் பற்றி...இலங்கை பல்லினங்கள் வாழும் நாடு. அண்மையில் நடந்து சற்றே தணிந்துள்ள சிங்கள் , முஸ்லீம் இனக்கலவரத்தின்போது முகநூலில் வெளியான பல பதிவுகளைப் பார்த்தேன். பலவற்றிலும் வதந்திகளின் அடிப்படையில் முஸ்லீம் மக்கள் மீது குற்றஞ்சாட்டும் இனக்குரோதம் மிக்க பதிவுகளையும் பார்த்தேன். நடந்து முடிந்த சம்பவங்களின் அடிப்படையில் தமிழர்களின் பதிவுகள் சில உணர்ச்சி மிக்கவையாக, இனக்குரோதம் மிக்கவையாக இருந்தன. சென்றவை சென்றவையாகவே இருக்கட்டும். குற்றஞ்சாட்டுவதாக இருந்தால் அனைவர் பக்கம் தவறுகள் உள்ளன. நடந்து முடிந்தவற்றிலிருந்து பாடங்கள் படிக்க வேண்டுமே தவிர அவற்றையே கூறிக்கொண்டு அவற்றில் குளிர் காய முடியாது. ஆனால் தற்போது நடைபெற்ற கலவரச்சுழலில் நான் அவதானித்த நம்பிக்கை தரும் ஆரோக்கியமான நடவடிக்கைகளாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடுவேன்:

இம்முறை தென்னிலங்கையில் ஊடகங்கள் அல்லது சிங்கள் மக்கள் பலர் நடந்து முடிந்த கலவரத்தையிட்டு வாய் மூடி மெளனத்திருக்கவில்லை. 'கலம்போ டெலிகிறாப்' பத்திரிகையில் கலவரத்தை அடக்காமல் பார்த்துக்கொண்டிருந்த காவற் துறையினரைப் பற்றிய ஆதாரபூர்வமான செய்திகளைக் காணொளி ஆதாரங்களுடன் பிரசுரித்துள்ளது. கலவரத்துக்குக் காரணமான பெளத்த துறவியை உடனடியாக இனங்கண்டு வெளிப்படுத்தியுள்ளது.

சிங்கள் மக்களில் பலர் இத்துறவியின் நடவடிக்கையை மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ள எதிர்வினைகளை இணையத்தில் வாசித்தேன். பாராமுகமாகவிருந்த காவல் துறையினரையும் கண்டித்திருக்கின்றார்கள். அதன் பின்னராவது காவற் துறையினர் கலவரத்துக்குக் காரணமானவர்களைக் கைது செய்திருக்கின்றார்கள். அரச பத்திரிகையான 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் கூட உடனடியாகக் கலவரத்தைக் கண்டித்து ஆசிரியத் தலையங்கம் வெளியாகியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க தென்னிலங்கை ஊடகங்கள், மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்.

இத்தருணத்தில் 1977 இனக்கலவரத்தில் நாட்டின் ஜனாதிபதி தம்மிஷ்ட்டர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று போர் முழக்கமிட்டதை நினைத்துப்பார்க்கின்றேன். அன்றைய நிலைக்கும் , கலவரம் நடந்த உடனேயே அது பற்றிய காரமான விமர்சனங்களை வைக்கும் ஊடகங்களும், சிங்கள மக்களுள்ள இன்றைய நிலைக்குமிடையில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். இதனை நாம் வரவேற்போம். இனக்குரோதத்துடன் இப்பிரச்சினையை அணுகும் தமிழ் முகநூல் பதிவாளர்களில் மிகச்சிலரே தென்னிலங்கைச் செய்திகளைப் பிரசுரித்திருந்தார்கள். மற்றவர்கள் வழக்கம்போல் எவற்றையும் வாசிக்கும் மனோநிலையற்றவர்கள் தம் மேதாவிலாசத்தைக் காட்டுவதாக வெட்டி முழங்கியுள்ளார்கள். இவர்கள் கண்களை மூடிக்கொண்ட பூனைகள். ஒருபோதுமே இவர்கள் தம் கண்களைத்திறந்து எவற்றையும் அணுகுவதில்லை. இவர்களைப்பொறுத்தவரையில் தெரிவதெல்லாம் இருட்டே. ஒளியல்ல.

Last Updated on Thursday, 08 March 2018 22:57 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 273: முகநூற் குறிப்புகள் சில!

E-mail Print PDF

கவலையளிக்கும் இலங்கை நிலை!

இலங்கை பல்லினங்கள் வாழும் நாடுகளிலிலொன்று. அண்மையில் கண்டியிலேற்பட்ட கலவரம் துரதிருஷ்ட்டமானது. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் சமயங்களில் பாதித்தவரும், பாதிக்கப்பட்டவரும் வேறு வேறான இனத்தைச் சார்ந்தவராகவிருக்கும் பட்சத்தில் இனவாதிகளால் இச்சம்பவங்கள் ஊதிப்பெருப்பிக்கப்பட்டு இனக்கலவரங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்களுள்ளன. கடந்த காலங்களில் வதந்திகள், சம்பவங்கள் இனக்கலவரங்களை உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்தின. இவ்விதமான கலவரங்கள் ஏற்படும் சமயங்களில் நாட்டில் நிலவும் சட்டதிட்டங்கள் இவ்விடயங்களைப் பொறுப்பேற்று, கலவரங்கள் ஏற்படாத வகையில் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் நாட்டில் அடிக்கடி இனக்கலவரங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இவ்விதமான சம்பவங்கள் ஏற்படும் சமயங்களிலெல்லாம் இன, மத, மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று, சட்டம் தன் கடமையைத் துரிதமாகச் செய்யும் சூழலை நடைமுறைப்படுத்த வேண்டும். குற்றமிழைத்தவர்கள் முறையான நீதி விசாரணைகளின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விதமான நடைமுறை பழக்கத்துக்கு வருமானால் இவ்விதமான சம்பவங்கள் நடைபெறும் சமயங்களில் சட்டம் தன் கடமையை ஒழுங்காகச் செய்யும் என்னும் மனநிலையில் அனைத்து நாட்டினருமிருப்பார்கள். அதனால் உணர்வுகளுக்கு ஆட்பட்டு இனக்கலவரங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. ஆனால் சட்டம் தன் கடமையைச் செய்வது பாரபட்சமற்று இருப்பது அவசியம். அவ்விதமிருந்தால்தான் அனைத்து இன மக்களும் அச்சட்டத்தின் மேல் மதிப்பு வைப்பதுடன், காவல் துறையினருக்கும் ஒத்துழைப்பினை நல்குவர்.

கடந்த காலங்களில் இனக்கலவரங்கள், யுத்தங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்த நாட்டில் தற்போதுதான் சிறிது காலமாக அமைதி ஓரளவென்றாலும் நிலவுகின்றது. இந்த அமைதி நீடிக்க வேண்டுமென்றால் நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் சமமாகப் பிரயோகிக்கப்படுவது அவசியமாகும்.


எம்ஜிஆர் சிலை சிறப்பு விழாவில் ரஜனிகாந்தின் உரை பற்றி....

எம்ஜிஆர் சிலை சிறப்பு விழாவில் ரஜனிகாந்தின் இந்த உரையைக் கேட்டேன். விமர்சனங்களுக்கு அப்பால், என் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், இந்த உரையிலிருந்து நான் வந்தடைந்த முடிவு : தமிழ் நாட்டு அரசியலையே மாற்றப்போகின்ற பேச்சு.

இதற்கு முக்கிய காரணங்கள்:
1. தன் மேல் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் உள்வாங்கி அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கின்ற பாங்கு.
2. தமிழ் நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்குணர்ந்து எம்ஜிஆருடன் தன் உறவு, எம்ஜிஆர் பற்றிய தன் சிந்தனைகள் ஆகியவற்றை மக்களை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்திய பாங்கு.
3. மக்களை ஈர்க்கும் வகையிலான அவ்வப்போது 'பஞ்ச்' வைத்துப் பேசப்பட்ட உரை.
4. ஏன் நடிகனொருவன் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்கான காரணங்களைத் தர்க்கரீதியாக முன் வைத்தது. எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த சமயம் அவரைக் கூத்தாடி என்று இகழ்ந்தார்கள். அப்பொழுது தேர்தலுக்கு முன் அனைத்துக் கட்சியினருக்கும் இந்திய வானொலியில் உரையாற்ற சந்தர்ப்பம் கொடுத்தார்கள். அச்சந்தர்ப்பத்தை நன்கு பாவித்த எம்ஜிஆர் 'நான் கூத்தாடிதான்' என்று ஆரம்பித்துத் தன்னைக் கூத்தாடி என்றவர்களின் வாயை அடைத்து வெற்றியைத் தரும் வகையிலான உரையினை ஆற்றியிருந்தது நினைவுக்கு வருகின்றது. அதனை நினைவு படுத்துகின்றது ரஜனியின் தான் நடிகனே. நடிகன் அரசியலுக்கு வரக்கூடாதா என்ற பேச்சு.
5. ஆன்மிக அரசியலென்றால் தூய்மை அரசியல் என்ற விளக்கம்.
6. அரசியல் தலைவருக்கான வெற்றிடமுள்ளதை ஆணித்தரமாக வலியுறுத்தும் பாங்கு.
7. நடிப்பு என்னும் தொழிலை ஒழுங்காகச் செய்த நடிகனால், தம் அரசியல் வேலைகளை ஒழுங்காகச் செய்யாத அரசியல்வதியை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமென்று வாதிட்ட தர்க்கச்சிறப்பு.

Last Updated on Tuesday, 06 March 2018 20:54 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 272: நடிகர்கள் நாட்டின் செல்வங்கள்!

E-mail Print PDF

நடிகை ஸ்ரீதேவிஅண்மையில் நடிகை ஸ்ரீதேவி மறைவினையொட்டி நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் நடைபெற்ற ஒரு விடயம் என்னைக் கவர்ந்தது. அவரது மரணத்தை மகாராஷ்ட்டிர அரசானது அரச மரியாதைகளுடன் நடத்தி அவரைக் கெளரவித்தது. இது சிலருக்கு மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கூத்தாடிக்கு இவ்வளவு மரியாதை தேவைதானா என்று கேட்கும் இந்தச்சிறுமதிக் கூட்டம்தாம் அக்கூத்தாடிகளின் கலைத்திறமையில் தம் இருப்புப் பிரச்சினைகளையெல்லாம் மறந்து இன்பமடைவது அதிகம். இந்தச்சிறுமதிக்கூட்டம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சினிமா, நாடக நடிகர்களும் எழுத்தாளர்கள் போல், இசைக்கலைஞர்களைப்போல், ஓவியர்களைப்போல் மக்களை அவர்கள்தம் வாழ்வியற் பிரச்சினைகளிலிருந்து சிறிதளவாவது கவனத்தைத் திருப்பி இன்பமடைய வைப்பவர்கள்; வாழ்வுக்கு வேண்டிய ஆரோக்கியமான அறிவுரைகளைத் தம் நடிப்பின் மூலம் உணர வைப்பவர்கள்; நாடொன்றின் பெருமையினை உலகெங்கும் வெளிப்படுத்துவதில் பெரும் பங்காற்றுபவர்கள். எல்லாக் கலைகளிலுள்ளதைப்போல் நடிப்புக் கலையிலும் திறமையான கலைஞர்களுள்ளனர். இவர்கள் ஏனைய துறைக்கலைஞர்களைப்போல் நாடொன்றின் செல்வங்கள். அந்த வகையில் நாடொன்றானது பல்வேறு உயரிய விருதுகளைக் கொடுத்து அவ்வப்போது இக்கலைஞர்களைக் கெளரவிக்கிறது. அதுபோன்றதொரு உயர் கெளரவம் தான் இவ்விதமான அரச மரியாதை என்பதும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்தான் நடிகை ஸ்ரீதேவி.

தமிழகத்தில் பிறந்த ஒருவரின் இழப்பில் பாரதத்தின் அனைத்து மாநில மக்களும் இன,மத, மொழி , மாநில வேறுபாடுகளற்றுப் பங்குபற்றுகின்றார்கள் என்றால், அரசியல்வாதிகள், நடிகர்கள், பொதுமக்கள் அனைத்துப் பிரிவுகளைச்சேர்ந்தவர்களும் அவர் இழப்பால் துயருகின்றார்கள் என்றால், அங்குதான் நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பாளுமை, திறமை என்பன தங்கியுள்ளன. அனைத்து மக்களையும் பாதிக்கும் வகையில் அவரது கலையுலகப் பங்களிபபு அமைந்துள்ளது. இந்த வகையில் அவரது இறுதிச்சடங்குகளை அரச மரியாதைகளுடன் நடாத்திய மகாராஷ்டிர மாநில அரசினைப்பாராட்ட வேண்டும். ஒரு மாநில அரசுக்கு நாட்டின் செல்வமான கலைஞர்களின் பங்களிப்பைப் பொறுத்து எவ்விதம் கெளரவிக்க வேண்டுமென்று தீர்மானிக்கும் முழு உரிமையுமுண்டு. அது மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கும் உண்டு. அதனை அவர்கள் பாவிக்க வேண்டிய தருணத்தில் சரியாகப் பாவித்திருக்கின்றார்கள்.

Last Updated on Friday, 02 March 2018 22:48 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 271 :'கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)': கவிஞர் முருகையனின் நினைவுக்கவிதையும் அதன் சிறப்பும்!

E-mail Print PDF

கவிஞர் இ.முருகையன்அறிஞர் அ.ந.கந்தசாமிஈழத்தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளிலொருவரான  கவிஞர் இ.முருகையன் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி மறைந்து ஒரு மாதம் கழிந்த சூழலில் அ.ந.க. நினைவாகக் 'கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)' என்னும் கவிதையொன்றினை மார்ச் 14, 1968 தினகரன் பத்திரிகையில் எழுதியுள்ளார். மிகவும் சுவையான நினைவு கூரல். கவிஞரின் கனவில் ஒரு மாதம் முன் மறைந்த அ.ந.க தோன்றுகின்றார். நோய்வாய்ப்பட்டு மறைந்த அ.ந.க தேகசுகத்துடன் தோன்றுகின்றார்.  "நோயெல்லாம் தீர்ந்து மாயமாய் மறைந்த யாக்கைய ராகி இருந்தார்" அ.ந.க.  அவருடன் கவிஞர் கதைக்கத் தொடங்கினார்.

"இப்போ தெப்படிச் சுகம்?" எனக் கேட்கின்றார். அதற்கு அ.ந.க

அதற்கு அ.ந.க "நல்ல சுகம்" என்று நவில்கின்றார்.

கவிஞருக்கோ ஒரு மாதத்தின் முன் "அன்பர், சுவைஞர், ஆதரவாளர் துன்ப முகத்தராய்ச் சூழ்ந்து நிற்கையில், மூண்டெரி சூழ்ந்து முறுகிப் படர அன்னார் உடலம் தகனம் ஆனமை"  நினைவுக்கு வருகின்றது. இருந்தாலும் அ.ந.க.விடம் எப்படி அதை கூறுவதென்று கவிஞருக்கு ஒரு தயக்கம். கவிஞர் முன் தோன்றிய அ.ந.க.வே செளக்கியம் என்று கூறும்போது எவ்விதம் அவரது உடலம் சிதையில் எரிந்ததை எடுத்துக் கூறுவது?  இருந்தாலும் சொல்லாமலிருப்பதும் நல்லது அல்லவே. தயக்கத்தை நீக்கியவராகக் கவிஞர் அ.ந.க.விடம் கூறுகின்றார்: "உடலம் எரிந்ததை நான் கண்டேன்!"

இதற்கு அ.ந.க என்ன பதிலைக்கூறுகின்றார் தெரியுமா? கவிஞரின் வரிகளிலேயே படிப்போமா?

"இதற்கு விடையாய்க்
கலைஞர் சொன்ன பதிலைக் கேள்மினோ:
உடலம் எரிந்ததும் உண்மை தான். ஆயினும்
என் உட லாலே வீசப் பட்ட
மின்காந்த விம்ப மீதிலே, டாக்டர்
ஒப்ப ரேஷன் ஒன்றை ஆற்றினார்.
அதன் பின் எனக்கு நோய் அனைத்தும் முழுச் சுகம்"


அ.ந.க.வின் இப்பதிலுடன் கனவு நிலை நீங்கி நனவுலகுக்கு வருகின்றார் கவிஞர் இ.முருகையன். கவிஞரின் கனவில் தோன்றும் அ.ந.க கூறும் இப்பதில் என்னை மிகவும் கவர்ந்தது. அ.ந.க.வின் ஆளுமையினை எடுத்தியம்புவது. 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் சிறந்த அறிவியல் மிகுந்த கவிதையினைத் தந்த கவீந்திரன் (அ.ந.க) நிச்சயம் இவ்விதமொரு அறிவியல் பூர்வமான பதிலைக் கூறியிருக்கக் கூடும்தான். அ.ந.க.வின் உடல் சிதையில் எரிந்ததைக் கூறிய கவிஞர் முருகையனைப்பார்த்து அ.ந.க. கூறுவதாகக் கவிஞர் சித்திரித்துள்ள பதிலில் தொனிக்கும் அறிவியல் என்னை மிகவும் கவர்ந்தது. கவிஞரின் கற்பனைச்சிறப்பினையும் கூடவே வெளிப்படுத்துவது. அ.ந.க கூறுகின்றார் 'உண்மைதான். என் உடல் எரிந்தது உண்மைதான். அவ்விதம்  எரிந்தபோது வெளிப்பட்ட மின்காந்த அலைகளின் விளைவாகத் தோன்றிய விம்பத்தின் மீது டாக்டர் 'ஒப்பரேஷன்' செய்து மீண்டும் உயிர்ப்பித்து விட்டார்'. உண்மையில் இப்பதிலில் தொக்கி நிற்கும் உண்மை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. 'தொலைகாவும்' (Teleporting) தொழில்நுட்பம் மூலம் மானுடர்களும் அலைகளாகக்  (வானொலி அலைகளைப்போல்) காற்றினூடு பயணித்து மீண்டும் சுய உருவுக்கு வரும் வகையிலான தொழில்நுட்பம் (ஸ்டார் வார்ஸ் போன்ற அறிவியல் திரைப்படங்களில் வருவது போன்ற) மானுட வரலாற்றில் நிச்சயம் சம்பவிக்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான். அது போல் மானுட மரணத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாற்றும் தொழில் நுட்பமும் சாத்தியம் என்பதில்  மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான். அ.ந.க.வும் கூட இவ்விதமான நம்பிக்கையினைக் கொண்டிருந்தவர். 'வெற்றியின் இரகசியங்கள்' என்னும் தான் எழுதிய உளவியல் மற்றும் வாழ்க்கையினை முன்னேற்றும் சிந்தனைகள் மிக்க நூலில் அ.ந.க கூறியிருக்கும் பின்வரும் கூற்று அவரது சாவை வெல்லுதல் சாத்தியம் என்னும் நம்பிக்கையினை வெளிப்படுத்தும் கூற்று எனலாம்:

Last Updated on Friday, 23 February 2018 19:44 Read more...
 

அஞ்சலி: எழுத்தாளர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!

E-mail Print PDF

"ஓ! மனிதர்களே நம்புங்கள்.
நான்,
பிரபஞ்சத்தில் ஒளி தேடுபவன்.
சிறந்த சித்தாந்தத்தின் புத்தன்.
இப்பூவுலகம் என் போதிமரம்." - விதுரன் -


அஞ்சலி: எழுத்தாளர் விதுரன் (இராசையா தங்கேஸ்வரன்) மறைவு!இப்பொழுதுதான் முகநூலில் இராசையா தங்கேஸ்வரனின் மறைவுச் செய்தினை அறிந்து கொண்டேன். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது. இவர் முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்தவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் ஒர் எழுத்தாளர் என்பது சிலரே அறிந்ததொன்று. விதுரன் என்னும் பெயரில் சில சிறுகதைகளையும், கவிதைகள் சிலவற்றையும் எழுதியிருக்கின்றார் (நானறிந்த வரையில்). மேலும் அதிகமாக எழுதினாரா என்பது தெரியவில்லை. இவரது சிறுகதையான நிஜதரிசனம் தேடல் (தேடக வெளியீடு) சஞ்சிகையின் பங்குனி 1994 இதழில் வெளியானது. இலங்கையிலிருந்து அகதியாக அமெரிக்கா வரும் தமிழ்ப்பெண்ணொருத்தியைக் கனடாவிலிருந்து சென்று அழைத்துவரும் தமிழ் இளைஞனைப்பற்றியது. அதில் இவர் பெண்ணுரிமை, தமிழர்தம் பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமுறை, புகலிடப்பெண்கள் நிலை, காதல், இணைந்து பழகும் டேட்டிங் என்று பல விடயங்களைச்சுற்றிக் கதையினை அமைத்திருப்பார். இவரது கவிதையான காணாமல் போன ஆடு தேடலின் மே 1997 இதழில் வெளியாகியுள்ளது. இவரைச் சந்திக்கும் தருணங்களில் மேலும் எழுதும்படி கூறுவேன். எழுதுவேன் என்று கூறுவார். மேலும் எழுதினாரா என்பது தெரியவில்லை.

ஒருமுறை இவருடன் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது 1983 கலவரத்தைத்தொடர்ந்து சிறிது காலம் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்திருந்ததாகவும், அதன் காரணமாகச் சிறிது காலம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட இளைஞர்களொருவராக இலங்கைச் சிறையொன்றில் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். நான் அவரது சிறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி , பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் அது பற்றி எதுவும் பின்னர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் வன்னிச்சங்கம்(கனடா) மலர் வெளியிட்ட கொம்பறைக்கு ஆக்கம் நாடி அணுகியிருந்தார். கொடுத்ததாக ஞாபகம். அக்கட்டுரை கொம்பறை` மலரொன்றில் வெளியாகியிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அக்காலகட்டத்தில் வன்னியில் மாணவர்களுக்காக இலாப நோக்கற்ற அமைப்புக்காகச் சிறு தொகை கொடுத்தபோது நன்றி கூறிக் கடிதம் அனுப்பியிருந்தார். பின்னர் அவ்வப்போது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்வதுண்டு. அண்மையில் கூட கண்புரை சத்திரசிகிச்சை பற்றிப் பதிவொன்றினையிட்டிருந்தபொது அச்சிகிச்சையினைத் தான் பல வருடங்களுக்கு முன்னர் செய்ததாகவும், அது பற்றிய அறிவுறுத்தல்களையும் முகநூலில் உள்பெட்டியில் தெரிவித்திருந்தார். அண்மையில் கூட ஜனவரி 23 எனது பிறந்தநாளினையிட்டு வாழ்த்துச் செய்தியினையும், பொங்கல் வாழ்த்துச் செய்தியினையும் அனுப்பியிருந்தார்.

Last Updated on Thursday, 22 February 2018 20:35 Read more...
 

மக்கள் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி: அ.ந.க! (அ.ந.க நினைவு தினம் பெப்ருவரி 14)

E-mail Print PDF

அறிஞர் அ.ந.கந்தசாமி

அறிஞர் அ.ந.க என்று அழைக்கப்பெறும் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. தனது நாற்பத்து நான்காவது வயதில் மறைந்து விட்ட அ.ந.க தனது குறுகிய கால வாழ்வினுள் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று அவர் ஆற்றிய இலக்கியப்பங்களிப்பு ஈழத்தமிழர்தம் இலக்கிய வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படும். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்த அ.ந.க இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று எழுத்தே மூச்சாக வாழ்ந்து மறைந்த படைப்பாளி. இவரது படைப்புகள் கூறப்படும் மொழியினால், சமுதாயப் பிரக்ஞை மிக்க பொருளினால், படைப்புகள் வெளிப்படுத்தும் தகவல்களினால் முக்கியத்துவம் பெறுபவை. சிந்தனையைத்தூண்டும் இவரது எழுத்தின் வீச்சு வாசகர்களின் உள்ளங்களைச் சுண்டி ஈர்க்கும் தன்மை மிக்கது.

அ.ந.க வெறும் இலக்கியவாதி மட்டுமல்லர். இலக்கியத்தைத் தான் நம்பிய சிந்தனைகளுக்கமைய வடித்த சிந்தனைச் சிற்பி. செயல்வீரர். தொழிற்சங்கங்கள் பலவற்றில் இணைந்து தொழிலாளர் நலன்களுக்காகப் போராடியவர். வீரகேசரி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கான தொழ்ற்சங்கம் அமைய அ.ந.க.வே காரணம் என்பர். மார்க்சியவாதியான இவரது எழுத்துகள் பிரச்சார வாடையற்றவை. அதனாலேயே அனைவரையும் கவர்பவை. இவரது புகழ்பெற்ற 'மனக்கண்' நாவல் தினகரனில் வெளியானபோது வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் இவரது நெருங்கிய நண்பரும் , எழுத்தாளருமான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக்கப்பட்டு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலி சேவையில் தொடராக வெளியானது குறிப்பிடத்தக்கது. மேடையேற்றப்பட்டபோது மிகுந்த வரவேற்பைப்பெற்ற பல தடவைகள் மீள மேடையேற்றப்பட்ட 'மதமாற்றம்' நாடகம் மதம் என்னும் கருத்தாடலை அங்கதச்சுவையுடன் விபரிக்கும் ஈழத்தமிழ் இலக்கியத்தில் மேடையேற்றப்பட்ட சிறந்த நாடகங்களிலொன்று. இந்நாடகத்தைப்பற்றிப் பிரபல எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறுவார்:

"சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம். 'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார், நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில். இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது" -  (  'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக 'மதமாற்றம்' வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரையிலிருந்து).

கலாநிதி கைலாசபதியும் தான் பார்த்த தமிழ் நாடகங்களில் வெளிவந்த மிகச்சிறந்த தமிழ் நாடகமாக இதனைக்குறிப்பிடுவார். இந்நாடகம் கொழும்பில் பல தடவைகள் மேடையேற்றப்போது பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துள்ளன.

Last Updated on Friday, 16 February 2018 12:35 Read more...
 

கட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)

E-mail Print PDF

லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக்கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe).  இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.

கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD Dominiyan centre  (1964)  தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது 'சீகிரம்'  (Seagram Buillding) கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.

இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass)  போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space)  முழுமையாக, தேவைக்கேற்ப  திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.

1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில்  பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல்,  இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.

இவரது புகழ்மிக்க கட்டடமான சீகிரம் கட்டடம் எளிமையானதும், பொதுவாகத் தேவையற்ற (superfluous)  மிதமிஞ்சிய அலங்காரங்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலை  தவிர்க்கப்பட்டு கட்டுமான உறுப்புகள் (structural elements)  வெளியில் தெரியும் வகையில் அமைந்த வானுயரக் கட்டடங்கள் உருவாவதற்குரிய புதிய சகாப்தமொன்றினைக் கட்டடக்கலை வரலாற்றில் உருவாக்கி வைத்ததெனலாம்.

Last Updated on Thursday, 15 February 2018 01:38 Read more...
 

'திண்ணை'க் கவிதைகள் மூன்று!

E-mail Print PDF

- வ.ந.கிரிதரன் -திண்ணை இணைய இதழில் முன்பு வெளியாகிய கவிதைகள் இவை. என்னை எப்பொழுதுமே நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில்  உருவான மானுட இருப்பும், இதற்கும் மேலான உயிரினங்களின் சாத்தியம் பற்றிய சிந்தனைகளும், எம் இருப்பின் முப்பரிமாண எல்லையும் , காலவெளி பற்றிய புரிதல்களும் அவற்றின் மீதான சிந்தனையும், இயற்கையின் பேரழகும், படைக்கப்பட்டுள்ளை ஏனைய உயிரினங்களின் படைப்புச்சிறப்பும் கவரும் விடயங்கள். எம் இருப்பு '"வெறுமைக்குள் விரியும்  திண்ம இருப்பு.". நாமோ 'பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமைகள்'. அவை பற்றிச் சிந்திப்பதிலுள்ள இன்பம் எனக்கு வேறெவற்றிலுமில்லையென்பேன். ஆழநடுக்காட்டில் பல்லாண்டுகள் தனித்து விடப்பட்டாலும் கூட என்னால் இவை பற்றித் தொடர்ச்சியாகச் சிந்தித்துக்கொண்டேயிருக்க முடியும். 'என்று வருமந்த ஆற்றல்?', 'காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! மற்றும்' 'மழையைச் சுகித்தல்!  ஆகிய கவிதைகளிலும் என் இந்த உளப்பாங்கினை நீங்கள் கண்டிட முடியும்.

1. என்று வருமந்த ஆற்றல்?

நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.

விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.

வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.

பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.

Last Updated on Thursday, 15 February 2018 12:36 Read more...
 

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

E-mail Print PDF

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.- அண்மையில் முகநுலில்  இலக்கியத்திருட்டு பற்றியொரு பதிவிட்டிருந்தேன். அதற்கு எதிர் வினையாற்றியிருந்த பிரபல கலை இலக்கிய விமர்சகரும், எனது மதிப்புக்குரியவருமான இந்திரன் (தமிழ்நாடு) அவர்கள் பினவருமாறு கூறியிருந்தார் " Indran Rajendran நல்ல குதிரையைத்தான் திருட முடியும்...உங்களுடையது நொண்டி குதிரையல்ல என்று தெரிகிறது...விடுங்கள்...". நன்றி திரு இந்திரன் அவர்களே. அதன் பாதிப்பிது. -


குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
அதிகமாகிவிட்டது.

 

Last Updated on Friday, 09 February 2018 23:28 Read more...
 

கட்டடக்கலைக் குறிப்புகள் 5: சேதனக் கட்டடக்கலை (Organic Architecture).

E-mail Print PDF

ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.

சேதனக் கட்டடக்கலை என்றால் என்ன?
இதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப  , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க  வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.

Last Updated on Thursday, 08 February 2018 18:35 Read more...
 

ஐபிசி தமிழ் இணையத்தின் இலக்கியத்திருட்டு!

E-mail Print PDF

ஐபிசி தமிழ் இணையத்தின் இலக்கியத்திருட்டு! ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்  கவிஞர் செழியனைப்பற்றிப்பின்வருமாறு செய்தியொன்று வெளியாகியுள்ளது: "ஈழத்தின் முன்னணிக் கவிஞராக அறியப்படும் தாயக விடுதலைப் போராளியும், கவிஞரும், எழுத்தாளரும், நாடகருமான செழியன் காலமானார். தாயக விடுதலைப் போராளியும், கவிஞரும், எழுத்தாளரும், நாடகருமான செழியன் காலமானார்! அண்மையில் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று கனடாவில் காலமானார். இவர் தாய்வீடு பத்திரிகையில் எழுதி வந்தவர். அத்தோடு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி என்று தான்,கவிஞர் செழியனைக் கூறவேண்டும். 'ஒரு போராளியின் நாட் குறிப்பு', 'வானத்தைப் பிளந்த கதை', 'குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), 'ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை' (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர் இவராவார்.தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள், பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை 'ஒரு போராளியின் நாட் குறிப்பு' என்னும் 'தாயகம்' பத்திரிகைத் தொடரில் ஆவணப்படுத்தியவர் செழியன் என்பது, குறிப்பிடத்தக்கது." [https://news.ibctamil.com/…/poet-writer-and-playwright-seli…]

இச்செய்தியிலுள்ள "இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி என்று தான்,கவிஞர் செழியனைக் கூறவேண்டும். 'ஒரு போராளியின் நாட் குறிப்பு', 'வானத்தைப் பிளந்த கதை', 'குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), 'ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை' (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர் இவராவார். தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள், பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை 'ஒரு போராளியின் நாட் குறிப்பு' என்னும் 'தாயகம்' பத்திரிகைத் தொடரில் ஆவணப்படுத்தியவர் செழியன் என்பது, குறிப்பிடத்தக்கது." என்னும் வரிகள் எனது முகநூற் பதிவிலுள்ள வரிகள். யார் இவர்களுக்கு என் பதிவின் வரிகளை மூலம் குறிப்பிடாமல், என் அனுமதியின்றிப்பாவிக்க அனுமதியளித்தது? இதனைச்சுட்டிக்காட்டி ஐபிசி தமிழ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். இதுவரை அவர்களிடமிருந்து பதிலெதுவுமில்லை. எனவேதான் இந்தப்பதிவு.

Last Updated on Wednesday, 07 February 2018 22:08 Read more...
 

கட்டடக்கலைக்குறிப்புகள் 4: லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)

E-mail Print PDF

லூயிஸ் சல்லிவன்ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

தேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருகின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கு.மு. காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas & venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
Last Updated on Tuesday, 06 February 2018 00:42 Read more...
 

கட்டடக்கலைக் குறிப்புகள் 3 : களனி விகாரைக் 'கண தெய்யோ' (பிள்ளையார்)

E-mail Print PDF

களனியா ரஜமகா விகாரைப்பிள்ளையார் களனி ரஜ மகா விகாரைSave மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் 'வெளிக்களக் கட்டடக்கலை' (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.

இப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka  என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம்.  இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக   விளங்கிய 'அடங்காத்தமிழன்' என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.

Last Updated on Monday, 05 February 2018 23:56 Read more...
 

போர்ச்சுவாலை அமரச்சுடராகியது: கவிஞர் செழியன் மறைவு!

E-mail Print PDF

கவிஞர் செழியன் ஆஸ்பத்திரியில் அனுமதி!கவிஞர் செழியனின் இறுதிச் சடங்கு குறித்த தகவல். இறுதி மரியாதைக்காக (நன்றி: பா.அ.ஜயகரன்)

Lotus Funeral and Cremation Inc ல்
121 City view Drive, Toronto, M9W 5A8
ஞாயிறு (04-02-2018) மாலை 5:00 - 9:00 மணி வரையும்
திங்கள் (05-02-2018) மாலை 2:00 -5:00 மணி வரையும் வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்

ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த எழுத்தாளர் 'கவிஞர் செழியன்' பெப்ருவரி 3, 2018 அன்று அமரராகிய செய்தி துயர் தருவது. மானுட வாழ்வில் இத்தகைய இழப்புகள் தவிர்க்க முடியாதவையெனினும் , ஏற்படுகையில் தரும் துயர் தவிர்க்க முடியாதது. சமூகப் பிரக்ஞை மிக்க படைப்பாளியான கவிஞர் செழியனின் பலவகை எழுத்துகளும் அவரது ஆளுமையினை வெளிப்படுத்துபவை. நாடகம், கதை, கவிதை, கட்டுரையெனப் பன்முகப்பட்ட இலக்கியப்பங்களிப்பை வழங்கிய எழுத்துகள் அவை.அவர் தான் வாழ்ந்த மானுட வாழ்வில் வழங்கிய மானுடப்பங்களிப்புகளினூடு நிலைத்து வாழ்வார். இத்தருணத்தில் அவரது இழப்பால் துயருறும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Last Updated on Sunday, 04 February 2018 17:18 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 270 : ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 270 : ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!வாசிப்பும், யோசிப்பும் 270 : ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!நான் எப்பொழுதுமே ஒரு குழந்தையிலக்கிய நூலொன்றினை அணுகும்போது ஒரு குழந்தை தன் சொந்த அனுபவத்தில் எவ்விதம் அந்நூலினை அணுகுமோ அவ்விதமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகுவேன். என் பால்ய காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த குழந்தைக் கதைத் தொகுப்புகளில்  முக்கியமான அம்சம். அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியமும், அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும், உள்ளே ஆக்கங்களுக்குப் பாவிக்கப்பட்டுள்ள ஓவியங்களும் மற்றும் கூறப்படும் மொழியும்தாம். எனக்கு எப்பொழுதுமே நூலொன்று பிடிப்பதாகவிருந்தால் மேற்கூறப்பட்டுள்ள சகல அம்சங்களும்  முக்கியமானவை. எனக்கு மட்டுமல்ல குழந்தைகள் அனைவருக்கும் இக்கூற்று பொருந்தும். குழந்தைப்பருவத்தில் குழந்தையொன்றின் சிந்தையில் நூலொன்றின் அட்டைப்படம் கற்பனைச்சிட்டினைச் சிறகடிக்கப் பறக்க வைக்கின்றது. அந்நூலிலுள்ள ஓவியங்களிலுள்ள உருவங்கள் அவை மானுடர்களாகவிருக்கட்டும் அல்லது ஏனைய உயிரினங்களாகவிருக்கட்டும் அவற்றைப்பார்க்கும் குழந்தையொன்றின் உள்ளத்தில் களிப்பினைத தருகின்றன. சிறு வயதில் கண்ணன் சிறுவர் சஞ்சிகையில் வெளியாகும் சிட்டுக்கள் போன்ற உயிரினங்களைப்பற்றிய குழந்தைக் கவிதைகளை இரசிக்கும் அதே ஆர்வத்துடன் நான் அப்படைப்புகளுடன் வெளியாகும் ஓவியங்களையும் இரசிப்பேன். இவற்றைப்போல் அப்படைப்புகளை வெளிப்படுத்தும் எளிமையான மொழி நடையும் எனக்கு மிகவும் பிடித்தவை. வாண்டுமாமா, குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா போன்றோரின் படைப்புகளின் சிறப்புக்கு முக்கியக்காரணம் அவற்றை விபரிக்கும் எளிய, இனிய மொழிநடையே. இவ்விதமான என் மற்றும் குழந்தைகளின் பொதுவான உளவியலின் அடிப்படையிலேயே நான் இவ்வகையான குழந்தைப்படைப்புகளையும் சரி, நூல்களையும் சரி அணுகுவது வழக்கம். அதே அணுகல் முறையினைத்தான் அண்மையில் 'டொராண்டோ' நகரில் வெளியான எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் கையாண்டேன். அவற்றில் இங்கு நான் எடுத்துக்கொண்ட நூல் அவர் எழுதிய 'சிறுவர் கதைகள்' என்னும் நூலே.

எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா இலங்கையில் தெல்லிப்பளையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்..யாழ் மகாஜனாக் கல்லூரி முள்ளாள் மாணவி. இலங்கைப் பல்கலைக்கழகத்துப் பேராதனை வளாகத்துப் பட்டதாரி. தற்போது 'டொராண்டொ'க் கல்விச்சபையின் தமிழ் மொழி ஆசிரியராகவும், மொழி மதிப்பீட்டளராகவும் மற்றும் பாட விதான அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்களிலொருவராகவுமிருக்கின்றார். இவரது இந்தப்பின்னணி இவ்வகையான நூல்களை எழுதுவதற்கு மிகவும் உதவும்; உதவியிருக்கின்றது. இந்நூலுக்குரிய ஓவியங்களை , அட்டைப்படங்களுட்பட (முன் அட்டை மற்றும் பின் அட்டை)  வரைந்திருப்பவர் ஓவியர் ஜீவா ( ஜீவநாதன்).

Last Updated on Wednesday, 14 November 2018 04:32 Read more...
 

அஞ்சலி: கலாநிதி தர்மசேனா பத்திராஜா ( Dr.Dharmasena Pathiraja)

E-mail Print PDF

கலாநிதி தர்மசேன பத்திராஜா

பிரபல சிங்களத்திரைப்பட இயக்குநரும் கல்வியாளருமான கலாநிதி தர்மசேன பத்திராஜா இன்று கண்டியிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத்திரைப்பட உலகில் தான் இயக்கிய திரைப்படங்கள் மூலம் தடம் பதித்தவர் இவர். தமிழில் வெளியான எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் 'பொன்மணி' புனைகதையினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுக் கலையுலகில் கவனத்திற்குள்ளாகிய 'பொன்மணி' என்னும் தமிழ்த்திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் மூலம் சிங்களத்திரையுலகில் மட்டுமின்றி இலங்கைத்தமிழ்த்திரையுலகிலும் தவிர்க்கப்பட முடியாத இயக்குநர்களில்ருவராகத் தடம் பதித்தவர் இவர்.

இவர் இயக்கிய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவை சர்வதேசத்திரைப்பட விழாக்களில் (மாஸ்கோ, இலண்டன், இத்தாலி, இந்தியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்றவையுட்பட) திரையிடப்பட்டுள்ளன. இவர் பல சர்வதேசத்திரைப்பட விழாக்களில் நடுவராகவும் விளங்கியிருக்கின்றார். இவரது படைப்புகளைப்பற்றிய ஆவணத்திரைப்படங்கள் சர்வதேசத்திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டுள்ளன. இவரது திரைப்படங்கள் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளன. இலங்கைச்சினிமாவுக்கு இவராற்றிய பங்களிப்புக்காகக் 'கோல்டன் லயன்' விருதினையும் பெற்றவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Last Updated on Tuesday, 30 January 2018 23:28 Read more...
 

காலத்தால் அழியாத கானங்கள் (1-3)

E-mail Print PDF

- வ.ந.கிரிதரன் -காலத்தால் அழியாத கானங்கள் 1: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?

"நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?"

தமிழர்களின் கவிதை வரலாறானது சங்கப்பாடல்களில் தொடங்கி இன்றைய தமிழ்ச்சினிமா மெல்லிசைப்பாடல்களையும் உள்ளடக்கியதொன்றுதான் என்பதை இன்று கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியன் போன்ற தமிழ் ஆய்வாளர்கள் , திறனாய்வாளர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளத்தொடங்கி விட்டார்கள். சங்கப்பாடல்கள் எவ்விதம் அகம், புறம் பற்றிப்பாடினவோ அவ்விதமே இம்மெல்லிசைப்பாடல்களும் மானுடரின் அகம் , புறம் பற்றிப் பல் கோணங்களில் மானுட வாழ்வை, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதலின் சிறப்பை, காதலின் இழப்பையெல்லாம் அற்புதமான நெஞ்சையள்ளும் மொழிநடையில் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் வைரமுத்து  போன்ற கவிஞர்கள் பலர் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களது பாடல் வரிகளுக்கு உணர்வூட்டிய பாடகர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் பங்களிப்பையும் புறக்கணித்து விட முடியாது.

காதலின் பிரிவுதுயரை வெளிப்படுத்தும் சிறப்பான பாடலிது. இப்பாடலின் சிறப்புக்கு மெல்லிசை மன்னர்களின் இசையும், சுசீலாவின் குரலும் ஏனைய முக்கிய காரணங்கள். கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு தன் குரலால் உயிரூட்டும் சுசீலாவின் மிகச்சிறந்த பாடல்கள் வரிசையில் வைத்தெண்ணப்படும் பாடல்களிலொன்று இந்தப்பாடல். இப்பாடல்களெல்லாம் மானுடரின் பல்வேறு பருவங்களில் அவர்தம் மனதுக்கு ஆறுதளிப்பவை; இதமாகவிருப்பவை. இப்பாடலின் 'யு டியூப்'  காணொளி ஒன்றுக்கான  எதிரிவினைகளில் முதியவர் ஒருவர் எழுதியிருந்த கருத்தொன்று என் நெஞ்சினைத் தொட்டது. அதனைக் கீழே பதிவு செய்கின்றேன். அத்துடன் தெரிவிக்கப்பட்டிருந்த மேலும் சில கருத்துகளையும் பதிவு செய்கின்றேன். இக்கருத்துகளெல்லாம் இவ்விதமான மெல்லிசைப்பாடல்கள் எவ்விதம் மானுட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை வெளிப்படுத்துவன.

Last Updated on Wednesday, 31 January 2018 12:28 Read more...
 

நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!

E-mail Print PDF

நினைவு கூர்வோம்: ஏ.ஈ.மனோஹரன் மறைவு!'பொப்' இசைப்பாடகர் ஏ.ஈ.மனோஹரன் மறைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத்திசையில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இலங்கையின் பல்லின மக்களாலும் பெரிதும் விரும்பப்பட்ட தமிழ்ப்பாடகராக இவரைக் குறிப்பிடலாம். இலங்கையில் அரசியல்வாதிகளால் ஊதி வளர்க்கப்பட்ட இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஓரளவுக்காவது தணிக்க உதவின ஏ.ஈ.மனோஹரன் ., எம்.எஸ்.பெர்ணாண்டோ, சுஜாதா அத்தனாயக்க, நந்தா மாலினி போன்ற கலைஞர்களின் பங்களிப்பு.  கலைஞர்களும் மானுடப் பிரிவினைகளைக் கடந்தவர்கள். கலையும், இசையும் எல்லைகளைக் கடந்தவை.

ஏ.ஈ.மனோஹரனைப்பற்றி எண்ணியதும் எனக்கு ஞாபகமொன்று தோன்றுவது வழக்கம். அப்பொழுது காற்சட்டையும், சேர்ட்டுமாகத்திரிந்து கொண்டிருந்த பருவம். யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் நடைபெற்ற திருமணக் களியாட்டமொன்றில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் கலந்துகொண்டிருந்தார். எழுபதுகளிலொருநாள். திருமண நிகழ்வினையொட்டி நடைபெற்ற ஊர்வலமொன்றில் அத்திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் யாழ் கே.கே.எஸ் வீதிவழியாக வந்து கொண்டிருந்தவர்களில் பாடகர் ஏ.ஈ.மனோஹரனும் ஒருவர். ஊர்வலம் எம்மைக் கடந்துகொண்டிருந்தபோது நண்பர்களிலொருவன் விரிந்த சுருட்டைத் தலைமயிர் குடை போல் கவிந்திருக்க வந்துகொண்டிருந்த ஏ.ஈ.மனோஹரனைக் கண்டு விட்டு 'இங்கே பாரடா ஏ.ஈ.மனோஹரன்' என்று கத்தி விட்டான். அந்த ஊர்வலத்தின் இரைச்சலிலும் நண்பனின் குரலினைச் செவிமடுத்த ஏ.ஈ.மனோஹரனின் முகத்தில் தன்னை இரசிகனொருவன் கண்டு விட்டதாலேற்பட்ட பெருமிதம் படர்ந்தது. அப்பெருமிதத்தோடு எம்மை நோக்கித் திரும்பிக் கைகளை அசைத்தவாறு சென்றார். அக்கணம் என் நெஞ்சில் அழியாத கோலங்களிலொன்றாகப் படிந்து விட்டது. பாடகர் ஏ.ஈ.மனோஹரனைப்பற்றிய நினைவுகளுடன் கலந்து விட்ட ஞாபகப்படிவம் அது.

Last Updated on Monday, 22 January 2018 20:51 Read more...
 

முகநூல் கலையுலகக் குறிப்புகள்: அயலவர் கலையுலகம் அறிவோம் - காமினி பொன்செகாவின் (Gamini Fonseka) நடிப்பில் சருங்கலய (Sarunggalaya)

E-mail Print PDF

 அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. பேராசிரியர் சுனில் ஆரியரத்தின- அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு முகநூற் குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. -


சிங்களத்திரையுலகின் எம்ஜிஆராக இவரைத்தமிழர்கள் அறிந்திருந்தாலும், இவர் நடிப்பிலும் திறமை வாய்ந்தவர். இவர்தான் காமினி பொன்செகா. இவரது இயற்பெயர் டொன் செல்டன் காமினி பொன்செகா (Don Shelton Gamini Fonseka). நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி எனப்பல்பரிமாண ஆளுமை மிக்கவர் இவர். பின்னாள்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியாகத்திகழ்ந்த இவர் வட, கிழக்கின் ஆளுநராகவும் விளங்கியவர். 'நீலகடல் ஓரத்தில்',' நங்கூரம்' ஆகிய தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்தவர் இவர்.

'சருங்கலய' (சருங்கலய என்றால் பட்டம் என்று பொருள்) என்னும் சிங்களத்திரைப்படத்தில் நடராஜா என்னும் தமிழராகவும் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பல காட்சிகள் கரவெட்டியில் படமாக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. இத்திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற 1977 இனக்கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிங்களத்திரைப்படமாகும். இத்திரைப்படத்துக்கான தமிழ் வசனத்தை திருமதி யோகா பாலச்சந்திரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கிய சுனில் ஆரியரத்தின தமிழில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், விமர்சகர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமையாளர். யாழ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணி புரிந்திருக்கின்றார்.

சருங்கலய திரைப்படத்தில் தமிழ்ப்பாடலொன்றும் இடம் பெற்றுள்ளது. 'வானத்து மழைத்துளி' என்னும் அப்பாடலை எழுதியவர் யோகா பாலச்சந்திரன். பாடியவர் கலாவதி சின்னச்சாமி. இசையமைத்தவர் விக்டர் ரத்னாயக்க (Victor Ratnayake).

Last Updated on Sunday, 21 January 2018 20:06 Read more...
 

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை'யும் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்'.

E-mail Print PDF

பேராசிரியர் நிமால் டி சில்வாமொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் 'பாரம்பர்யக்கட்டடக்கலை' பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.

எனக்கு நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி அறியும், ஆராயும் ஆர்வத்தை ஏற்படுத்திய காரணங்களிலொன்று பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் அறிமுகப்படுத்திய அக்கட்டுரை. அவர் அன்று அறிமுகப்படுத்திய ரோலன் சில்வாவின் 'அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையின் விளைவாக எனது ஆய்வு நூலான 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' தமிழகத்தில் ஸ்நேகா/மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விடயத்துக்காகவே எப்பொழுதுமென் நினைவில் நிற்கும் ஆளுமைகளிலொருவராக பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் விளங்குவார்.

Last Updated on Sunday, 14 January 2018 20:08 Read more...
 

கவிதை: ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

E-mail Print PDF

கவிதை: ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

மானுடர்தம் திருநாளிந்தப் பொங்கல் திருநாள்.
இரவியின் குழந்தைகள்  நாம். 
இரவிதன் கதிர் இல்லையேல் நாமில்லை.
இவ்வுலகில்லை.
இரவியின் சிறப்பை உணர்ந்தன்றோ
இளங்கோ பாடினான் அன்று
'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'

இத்திருநாளில் நாம் இருப்பறிவோம்!
இருப்பின் அடியான கதிர் அறிவோம்.
கதிர் வழங்கும் கருணை அறிவோம்.
உலகுக்கு உணவு தரும் இரவி மற்றும்
உழவர்தம் உழைப்பறிவோம்; சிறப்பறிவோம்.
உழவருக்குதவும் எருதறிவோம்.  ஆதலினால்
ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

பல்லினம், பல்லுயிர்  வாழும் பாரிது!
நல்லெண்ணம் நானிலத்தில் பரவட்டும்!
போர்க்குணமிழந்து பொங்கட்டும்
இன்பப்பேராறு! பொங்கட்டும்
அன்புப்பேரூற்று!

Last Updated on Tuesday, 16 January 2018 00:29 Read more...
 

வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கலைக் குறிப்புகள்' 1: ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003)!

E-mail Print PDF

ஜெவ்ரி பாவா Geoffrey Bawa ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa  - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!

இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.

இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற 'நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.

ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.  

இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர்  இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் 'ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்' (The Royal Institute of British Architects ) அமைப்பின் 'அசோசியட்' உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.

Last Updated on Friday, 12 January 2018 20:02 Read more...
 

வளமான புதுவருடம் பிறக்கட்டும்!

E-mail Print PDF

எமது வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
இன்பமான, வளமான புதுவருடம் பிறக்கட்டும்.

அன்பு தவழும் இதயம் மிக்க
பூமித்தாயின் பிள்ளைகளான நாம்
ஒருவர்மீதொருவர் அன்பு கொள்வோம்.
ஒருவரையொருவர் மதிப்போம்.
ஒருவரையொருவர் அறிந்துகொள்வோம்.

Last Updated on Thursday, 11 January 2018 21:56 Read more...
 

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்!

E-mail Print PDF

- 'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' இதழ் பன்னாட்டிதழாக மலர்ந்திருக்கின்றது. இச்சிறப்பிதழில் எனது கவிதையான 'காலவெளிப்பயணியின்  நெடும் பயணம்' கவிதை வெளியாகியுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -

Last Updated on Wednesday, 20 December 2017 18:18 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 269 : மாகவி நினைவாக...

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 269 : மாகவி நினைவாக...- வ.ந.கிரிதரன் -மகாகவி பாரதியாரின் நினைவு தினம் டிசம்பர் 11. நான் எங்கு சென்றாலும் நான் எடுத்துச் செல்லும் நூல்களில் நிச்சயம் 'பாரதியாரின் கவிதைகள்' அடங்கிய நூலுமிருக்கும். பாரதியின் அறிவுத் தேடல் மிக்க நெஞ்சு, சமுதாயப் பிரக்ஞை மிக்க நோக்கு எல்லாமே என்னை அவன் ஆகர்சிக்க முக்கிய காரணங்கள். மானுட இருப்பின் சகல கோணங்களைைப்பற்றியும் அவனது சிந்தித்தான். கனவுகள் கண்டான். அவற்றை அவன் எழுத்தில் வடித்தான். அனுபவமும், அறிவுத்தேடலும் அவன் எழுத்துகளெங்கும் நிறைந்திருந்தன. மானுடனொருவருக்குத் தேவையான அனைத்துமே அவனது எழுத்துகளில் நிறைந்திருந்தன. இதனாலேயே அவனது கவிதைகள் அடங்கிய தொகுதியானது வெறும் கவிதை நூலாக மட்டுமின்றி, வாழ்க்கைக்கு வழிகாட்டுமொரு வழிகாட்டியாக, அறிவினைப்போதிக்கும் அறிவு நிலையமாக, நண்பராக, காதலராக, இயற்கையை உபாசிப்பவருக்கு இன்பமளிக்கும் இயற்கை வளங்களாக.. இவ்விதம் பல்வேறு வழிகளில் விளங்கியது. எனக்கு மனம் சோர்ந்திருக்கும் சமயங்களில் அவனது கவிதைகளின் சில வரிகளை வாசிப்பேன். மறுகணமே சோர்வு இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்.

எனக்கு முதன் முதலாகப் பாரதியுடனான அறிமுகமும், தொடர்பும் என்னுடைய ஆறாம் வகுப்பில்தான் ஆரம்பமாகியிருந்ததாக நினைவு. பாரதியாரின் கவிதைகள், ராஜாஜியின் 'சக்கரவர்த்தித் திருமகன்' (இராமாயணம்) , 'வியாசர் விருந்து' (மகாபாரதம்) மற்றும் புலியூர்த் தேசிகனின் 'சிலப்பதிகாரம்' , 'நற்றிணை' ஆகிய நூல்களை வாங்கி வந்திருந்தார். ஒருநாள் கூட அப்பா அவற்றை வாசித்துப் பார் என்று கூறியதில்லை. அவ்விதம் வாங்கிப்போட்டிருந்த நூல்களை அவ்வப்போது எடுத்து வாசிக்கத்தொடங்கியபோது எனக்கு அறிமுகமாகி, என்னுள்ளத்தில் வந்து குடியேறியவரே மகாகவி பாரதியா. அன்று வந்து குடியேறியவர் இன்று வரை மட்டுமல்ல நான் இருக்கும்வரை இங்குதான் தங்கியிருக்கப்போகின்றார்.

இவ்விதம் என் அபிமானக் கவி பாரதியின் எனக்குப் பிடித்த கவிதை வரிகள் சிலவற்றை 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நான் பெற்ற இன்பம் நீவிரும் பெறுக!

1.
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

Last Updated on Monday, 11 December 2017 23:16 Read more...
 

கவிதை: காலம் மிகவும் வலியது!

E-mail Print PDF

காலம் மிகவும் வலியது!

காலம் மிகவும் வலியது.
முகநூற் பதிவொன்றுக்கு நண்பனொருவன்
இட்ட எதிர்வினையிது.
உண்மைதான் நண்பா!
காலம் மிகவும் வலியதுதான்.
நிலையற்ற காலம் கூடச்
சார்பானதுதான். இருந்தும்
காலம் மிகவும் வலியதுதான்.
இருப்பில் இருக்குமனைத்தையுமே
இங்கு
நினைவுகளாக்கி நனவிடை தோய
வைத்துவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.
உண்மைதான் நண்பா!
மின்காந்த அலைகளுக்குள் அனைத்தையும்
அடக்கிவிடும்
காலம் மிகவும் வலியதுதான்.

Last Updated on Saturday, 09 December 2017 00:56 Read more...
 

தோழர் வேலனின் 'தேசிய இயக்கம் துயிலெழல்' மற்றும் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களை முன் வைத்துச் சிறு குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -

E-mail Print PDF

தோழர் வேலனின் 'தேசிய் இயக்கம் துயிலெழல்' மற்றும் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களை முன் வைத்துச் சிறு குறிப்புகள்.... வ.ந.கிரிதரன் -தோழர் வேலனின் 'தேசிய  இயக்கம் துயிலெழல்' மற்றும் 'தேசிய இயக்கங்களின் காலம்' ஆகிய நூல்களின் வெளியீடு கடந்த ஞாயிறன்று (3.12.2017) 'டொராண்டோ'வில் நடைபெற்றபோது நான் ஆற்றிய சிற்றுரையினை ஒரு பதிவுக்காக இங்கு பதிவிடுகின்றேன்.  வ.ந.கிரிதரன் -


தோழர் வேலனை எனக்கு முகநூல் வழியாகத்தான் அறிமுகம். அவரது இயற்பெயர் கூட இதுவரையில் நான் அறிந்ததில்லை. ஆனால் அவரது மார்க்சியப்பார்வை பற்றி அவரது இணைய எழுத்துகளினூடு, நூல்களின் வாயிலாக அறிந்திருக்கின்றேன்.. இன்று இங்கு நான் அவரது இந்நிகழ்வில் வெளியிட்டப்படவுள்ள நூல்கள் இரண்டைப்பற்றிச் என் நோக்கைப் பகிர்ந்துகொள்ளவிருக்கின்றேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் பல அவரது வலைப்பதிவிலுள்ள கட்டுரைகளே. இக்கட்டுரைகளில் அவர் தேசம், தேசியம், ஈழத்தமிழர்களின் தேசியப்போராட்டம், பின் நவீனத்துமும் , மார்க்சியமும், தேசிய விடுதலைப்போராட்டமும் போன்ற பல விடயங்களைப்பற்றிய தனது உறுதியான பார்வையினைப் பகிர்ந்திருக்கின்றார். ஆனால் அவரது உறுதியான் பார்வை தெளிவானதா இல்லையா என்பது பற்றிச் சிறிது பார்ப்போம். அதற்கு முன்னர் இத்தொகுதிக் கட்டுரைகளைப்பொறுத்தவரையில் முக்கியமான குறைபாடுகளாக நான் கருதுவது: இலக்கணப்பிழைகள். இலக்கணப்பிழைகள் என்னும்போது சில பிழைகள் வாசிப்பின் புரிதலைத் தடுப்பதில்லை. உதாரணமாக எழுவாய்க்குரிய பயனிலை சரியாக அமையாது போவதுமோரிலக்கணப்பிழை. ஆனால் அப்பிழைகள் புரிதலைத் தடுப்பதில்லை. மாறாக முடிவற்றுத் தொங்கும் வாக்கிய அமைப்புகள், குழப்பமான சொற்தொடர்கள் ஆகியன வாசகர்களின் புரிதலுக்குச் சவாலாக இருப்பவை. அவ்விதமானவற்றை வாசிப்பின்போது அவதானித்தேன். இந்நூலிலுள்ள கட்டுரைகள் கூறும் விடயங்களில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களே சாதாரண வாசகர்களுக்குப் புரியாதவை. இந்நிலையில் இவ்விதமான இலக்கணத்தவறுகள் அவர்கள்தம் புரிதல்களைச் சிரமத்துக்குள்ளாக்குகின்றன. இத்தவறுகள் எதிர்காலப்பதிப்புகளில் களையப்படுதல் அவசியம்.

அடுத்த முக்கிய குறைபாடாக நான் கருதுவது இந்நூல் பொதுவான வாசகர்களுக்காக எழுதப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். மார்க்சியப்புரிதல்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே எழுதப்பட்ட நூல்கள் அல்ல இவை.  இந்நிலையில் இவற்றில் கையாளப்பட்டுள்ள சொற்பதங்களுக்குரிய விளக்கங்கள் நூலின் இறுதியில் இடம் பெற்றிருந்தால் வாசகர்களுக்கு மிகுந்த பயனைத் தந்திருக்கும் எனக்கருதுகின்றேன். உதாரணமாக திருத்தல் வாதம், பாகுபாட்டுச் சிந்தனைகள், தாராளவாதம், தரகு வர்க்கம் போன்ற பல சொற்கள் இந் நூலிலுள்ள கட்டுரைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அவை பற்றிய விளக்கங்கள் சாதாரண வாசகர்கள் பலருக்கு மிகுந்த உதவியாகவிருந்திருக்கும். இதுவும் என் நிலைப்பாடு.

Last Updated on Tuesday, 05 December 2017 21:53 Read more...
 

மகா மானுடர்களைப் பெருமையுடன் நினைவு கூர்வோம்!

E-mail Print PDF

மகா மானுடர்களைப் பெருமையுடன் நினைவு கூர்வோம்! உண்மையிலேயே எனக்குச் சில நேரங்களில் ஈழத்தமிழர்களை நினைத்தால் வியப்பாகத்தானிருக்கும். அவர்களுக்கிடையில் தீர்க்கப்படாத சமூக, அரசியற் பிரிவுகள் இருந்தபோதிலும் உலக அரங்கில் இன்று தமிழர் என்னும் அடையாளமாகத் திகழ்பவர்கள் ஈழத்தமிழர்கள்தாம். இலங்கையில் தமிழர்கள் கொடிய அடக்குமுறைகளுக்குள்ளாகிய போது எதிர்த்துப் போரிட்டார்கள். தம் வரலாற்றுக்கடமையை முன்னெடுத்துச் சென்றார்கள். வரலாற்றில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டார்கள். அது உலகத்தமிழர் வரலாற்றில் நிச்சயம் பெருமையுடன் பொறிக்கப்படும். உலகத்தமிழர்களின் அடையாளமாகத் திகழ்பவர்கள் சின்னஞ்ச்சிறு தீவொன்றில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் என்பது பெருமையுடன் நோக்கப்பட வேண்டியதொன்று.

அண்மையில் நடந்து முடிந்த இலங்கைத்தமிழரின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த விடுதலைப்போராளிகள் , பலியாகிய அப்பாவிப்பொதுமக்கள் (அவர்கள் எவ்வினத்தவராக இருந்த போதிலும், எப்பிரிவினராகவுமிருந்தபோதிலும் ) அனைவரையும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம். எதிர்காலத்தில் யுத்தமற்ற , சமூக அரசியற் பிரிவுகளற்ற சமுதாயமொன்றின் தேவையினை நடந்து முடிந்த யுத்தமும், மானுட அழிவுகளும் தொடரும் மானுடத் துயரங்களும் வேண்டி நிற்கின்றன. இத்தருணத்தை வரலாற்றிலிருந்து பாடம் படிப்பதற்குப் பயன்படுத்திக்கொள்வோம். போரற்ற சம உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழுமொரு வாழ்வினை அடைந்திட கற்றுக்கொண்ட பாடங்கள் உதவட்டும்.

விடுதலைப்போராட்டத்தின் ஒரு வடிவமான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும், தொடரும் ஈழத்தமிழர்களின் சம உரிமைக்கான போராட்டம் நல்லதொரு முடிவினை அனைத்து மக்களுக்கும் தரட்டும். இன்று ஈழத்தமிழர்களின் உரிமையைப்பற்றித் தென்னிலங்கை மட்டுமல்ல உலகமே சிந்திக்கின்றது என்றால் அதற்குக் காரணம் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம்தான். எதிர்கால நன்மைக்காகத் தம்மை அர்ப்பணித்து அனைத்து மகா மானுடர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம். அனைவரினதும் தியாகங்கள் நல்லதொரு யுத்தங்களற்ற அமைதியான தீர்வினைத்தரட்டும்.

 

Last Updated on Sunday, 26 November 2017 12:45
 

வ.ந.கிரிதரனின் முகநூற் பதிவுகளும் , எதிர்வினைகளும்: 1

E-mail Print PDF

- இப்பகுதியில் அவ்வப்போது முகநூலில் இடப்படும் பதிவுகளும், அவற்றுக்கான எதிர்வினைகளும் பிரசுரமாகும் -

ஒற்றுமையே பலம்!- வ.ந.கிரிதரன் -1. தமிழர்கள் சொந்த நிலங்கள் பறிபோகுதென்று கூக்குரலிடுகையிலெல்லாம் சில வேளைகளில் எனக்கேற்படும் சிந்தனையென்னவென்றால்.... அன்று ஈழத்தமிழர்களை எல்லைப்புறங்களில் சென்று குடியேறும்படி அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் அழைப்பு விடுத்தார்கள். எத்தனைபேர் சென்றார்கள்? சென்ற இளைஞர்கள் சிலரும் நுளம்புக்கடி தாங்காமல் ஓடி வந்து விட்டார்கள். பின்னர் வந்தவர்கள் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்கள். அவர்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டார்கள்.

இன்று சொந்த இடத்தில் முஸ்லிம் மக்கள் அத்து மீறிக்குடியேற்றங்கள் செய்கின்றார்கள் என்று மக்களை இன, மதரீதியாகப் பிளவு படுத்திக் கருத்துகள் விடும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நாட்டில் நிலவும் சட்டங்களை மீறி யாரும் செயற்படுவதாக இருந்தால் , சட்டங்கள் மூலம் அவற்றை எதிர்கொள்ளுங்கள். நிலத்துக்கான உறுதிப்பத்திரங்கள் இருந்தால் அவற்றின் உதவியுடன் உங்கள் உரிமைகளை நிலைநாட்டுங்கள். அமைதியான முறையில் அரசியல் ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்யுங்கள். அப்பகுதிகளிலுள்ள அரச அதிகாரிகளிடம் , சமூக , அரசியல் தலைவர்களுக்கு முறையிடுங்கள். தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அனைவருமே இவ்விதமே தமக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்க்கப்பழக வேண்டும்.

இவற்றை விட்டு விட்டு முஸ்லிம் மக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கருத்துகளை இனத்துவேசம் வெளிப்படும் வகையில் வெளியிடாதீர்கள். ஓரினத்துக்கு எதிராக எவ்விதச் சட்டங்களையும் திணிக்க முடியாது. அது மனித உரிமை மீறல். ஒரு நாட்டின் சட்டமென்பது அந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானது.

உண்மையில் உங்களுக்கு உங்கள் மண்ணில் ஆர்வமிருந்தால், மேற்கு நாடுகளின் அரவணைப்பில் அம்மண்ணின் வளங்களைச் சுகித்துக்கொண்டு வாழும் இவ்விதமான கருத்துகளைக் கூறும் நீங்கள் உடனடியாக உங்கள் குழந்தைகளுடன் நாட்டுக்குத் திரும்புங்கள், அங்கு உங்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள். உங்கள் கருத்துகள் உருவாக்கும் மோதல்களால் பாதிக்கப்படப்போவது அங்குள்ள அப்பாவி மக்களே. உங்களிடமெல்லாம் ஒரு கேள்வி: அன்று தலைமுறை தலைமுறையாகத் தம் சொந்த மண்ணில் வாழ்ந்து வந்த வடக்கிலிருந்த முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட வேளையில், ஒரு சில மணித்தியாலயங்களில் அவர்களின் உடமைகள் பிடுங்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டபோது நீங்கள் எல்லோரும் எங்கு சென்றிருந்தீர்கள். அன்றிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்களில் பலர் இன்றும் திரும்பாமல் இருப்பதை அண்மையில் ஐபிசி தமிழ் வெளியிட்ட ஆவணப்படமொன்றில் பார்த்தேன்.

ஒரு கணம் மேனாடுகளின் அரவணைப்பில் வாழும் நீங்கள் சிந்தித்துப்பாருங்கள். அந்நாடுகளின் பெரும்பான்மை வெள்ளையின மக்களில் சிலர் இவைபோன்ற இனத்துவேசம் மிக்க கருத்துகளை உங்களை நோக்கிக் கூறும்போது எவ்வளவுதூரம் துடித்துப்போகின்றீர்கள். இதைத்தானே அவர்களும் கூறுகின்றார்கள். எங்கள் பண்பாடு பறி போகின்றது. அதிக அளவில் குழந்தைகளைப்பெற்று, சமூக உதவிப்பணத்தை அதிக அளவில் பெற்று நாட்டு வளங்களைச் சுரண்டுகின்றார்கள். அச்சமயங்களில் அவற்றை மனித உரிமை மீறல்களாகக் கருதி முறையிடுகின்றோம். ஆனால் உங்கள் சொந்த மண்ணில் நீங்கள் வெளியிடும் கருத்துகளும் இவ்வகையானவையே.

Last Updated on Sunday, 19 November 2017 22:13 Read more...
 

வ.ந.கிரிதரன் கவிதைகள் 28: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!

E-mail Print PDF

ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்!இவை 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியானவையே. சில 'பதிவுகளி'ல், ஏனையவை ஈரிதழ்களிலும் வெளியானவை. மீண்டும் இவற்றை வாசித்தபோது பல கவிதைகளின் அடி பிரிப்பு எனக்கு உவப்பானதாகவிருக்கவில்லை. அவை வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகளை அவ்வடிப்பிரிவுகள் தடுப்பதுபோல் உணர்ந்தேன். அவ்விதமான கவிதைகள் பலவற்றை மீண்டும் வேறொரு வகையில் அடி பிரித்து ஒழுங்காக்கியுள்ளேனே தவிர ஏற்கனவே எழுதிய சொற்களெவற்றையும் திருத்தியோ அல்லது மாற்றியோ அமைக்கவில்லை. இவை என் உணர்வுகளை , தேடல்களை, எண்ணப்போக்குகளை விபரிப்பன. உங்களுக்கும் பிடித்திருக்கும் என எண்ணுகின்றேன். இவற்றை விரைவிலொரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுண்டு. 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் தலைப்பில் அத்தொகுப்பு வெளியாகும்.

1. ஆசை!

அர்த்த ராத்திரியில் அண்ணாந்து பார்த்தபடி
அடியற்று விரிந்திருக்கும் ஆகாயத்தைப் பார்ப்பதிலே
அகமிழந்து போயிடுதல் அடியேனின்
வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளிலே கண் சிமிட்டும்
சுடர்ப் பெண்கள் பேரழகில் மனதொன்றிப் பித்தனாகிக்
கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்தி விடும் நள்ளிரவில்
சித்தம் மறந்து
சொக்கிடுவேன்.

பரந்திருக்கும் அமைதியிலே பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்டபடி பைத்தியமாய்ப்
படுத்திடுவேன்.

இயற்கையின் பேரழகில் இதயம் பறிகொடுத்தே
இருப்பதென்றால் அடியேனின்
இஷ்ட்டமாகும்.

Last Updated on Wednesday, 15 November 2017 20:28 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 268 (முகநூற் பதிவொன்றும் சில எதிர்வினைகளும்): யோ. புரட்சியின் 'செஞ்சோற்றுக்கடன்" கவிதை பற்றி...

E-mail Print PDF

- வ.ந.கிரிதரன் -எழுத்தாளர் யோ.புரட்சி பதிவிட்டிருந்த முகநூற் பதிவினைப்பார்த்தேன். இது ஒரு கவிதை. முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தத்தின் இறுதிக்கால நிகழ்வுகளை விபரிக்கும் கவிதை. யோ.புரட்சியும் படையினரின் தாக்குதல்களுள்ளாகிக் காயம் பட்டவர்களிலொருவர். அச்சமயம் அவருக்கு , அவரைப்போல் பாதிக்கப்பட்ட ஏனையோருக்கு எவ்விதம் உயிரைப்பணயம் வைத்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் உதவினார்கள் என்பதை இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. கவிதையென்பதின் வெற்றியானது அதனைப்படைத்தவரின் புலமைச்சிறப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை. எத்தனையோ, படைத்தவரின் புலமையினை வெளிப்படுத்தும் கவிதைகள் பல படிப்பவரின் உணர்வுகளில் எவ்விதப்பாதிப்புகளையும் ஏற்றும் வலிமையற்று காலத்தில் காணாமல் போய் விடுகின்றன. சிறந்த கவிதையின் வெற்றியென்பது அதனைப்படைத்த கவிஞரின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். உணர்ச்சியின் வெளிப்பாடாக வெளிப்படும் கவிதையே வாசிப்பவரின் உணர்வுகளையும் பாதித்து , காலத்தில் நிலைத்து நின்று விடுகின்றது. யோ.புரட்சியின் இக்கவிதை அத்தகைய கவிதைகளிலொன்று. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அவர் அடைந்த உணர்வுகளின் உண்மையின் உண்மையான வெளிப்பாடாகவிருப்பதால் , வாசிப்பவரின் நெஞ்சங்களை ஒரு கணம் அசைத்து விடுகின்றது. நிலவிய மானுடத் துயரங்கள் வாசிப்பவர் நெஞ்சங்களில் வலியை ஏற்படுத்துகின்றன. மானுடர்கள் மட்டுமல்லர் மிருகங்கள் கூடத் தம் அன்பை வெளிப்படுத்துகின்றன. அக்காலகட்டத்து நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதால் முக்கியத்துவம் வாய்ந்த கவிதைகளிலொன்றாகவும் இக்கவிதை விளங்குகின்றது.

"யாருமருகில்இல்லாவேளை, காலதிலே எறிகணைபட்டு"க் கவிஞர் காயமுற்றவேளை, "தன்னாடை தன்னில், சிறுதுண்டு கிழித்து"க் கவிஞரின் குருதிப்பெருக்கைத்தடுத்த ஏழைத் தமிழ்த்தாய், "தாய்தன்னை இழந்த, தளிர்தன்னைக் கண்டு, யார் பிள்ளை எனும் கேள்வியது கேளாது தன்முலை தனையூட்டி வன்பசி தீர்த்த" நல்மனமுள்ள பெண், "அனைத்துறவும் இழந்து, அம்பலவன் பொக்கனையில் அந்தரித்த வேளையிலே அருகேயோர் உறவாகி" அன்புதனை அளித்துக் கவிஞருக்குக் கருணை காட்டிய ஜிம்மி என்னும் நாய், 'முகம்கழுவ நீரின்றி அகம் கரைந்த நாட்களிலே சிலமணிகள் ஒதுக்கியே கிணற்றுநீரளித்த வனப்பு உளங்கள். 'பதுங்கு குழிக்கு உரப்பையின்றி பாடுபட்ட நாட்களிலே பழஞ்சேலை' தந்துதவியவர்கள், 'பதுங்கு குழியில் இடம்தந்து பாசமொடு கஞ்சிதந்து நேசமாய்' அணைத்தவர்கள்...... .. இவ்விதம் தாம் அந்தரித்த வேளையிலும் மானுட நேயம் காட்டிய, மிருக நேயம் காட்டிய உயிர்களையெல்லாம் இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. அதனாலேயே வரலாற்றினை முறையாக ஆவணப்படுத்தும் சிறப்பு மிக்கதொரு கவிதையாகவும் இக்கவிதை விளங்குகின்றது. கவிதையின் முழு வரிகளும் கீழே:

Last Updated on Thursday, 09 November 2017 21:52 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 267: முகநூற் பதிவுகள் சிலவும், எதிர்வினைகளும்..

E-mail Print PDF

- வ.ந.கிரிதரன் -- அண்மையிலிட்ட முகநூற் பதிவும் சிலவும், அவற்றுக்கான எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவிடுகின்றேன். -

1. நினைவு கூர்வோம்: மகத்தான அக்டோபர் புரட்சி (நவம்பர் 7, 1917)

"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக! என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருதயுகம் எழுக மாதோ! " - பாரதியார் -


இந்தப்புரட்சி ஏன் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது? விளாடிமீர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளால் ரஷ்யாவில் பொதுவுடமைச் சமுதாயம் அமைப்பு முதல் முறையாக ஒரு நாட்டில் முழுமையாக நிறுவப்பட்ட தினம் என்பதால்தான். கார்ல் மார்க்ஸ் தனது இடையறாத ஆய்வுகள் மூலம் மானுட உலகுக்கு வழங்கிய மகத்தான மூலதனம் அவரது மூலதனம் என்னும் ஆய்வு நூலே. பல்வேறு பிரிவுகளால் (மதம், மொழி, இனம், வருணம், வர்க்கம் போன்ற) பிளவுண்டு, துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் மானுட சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வானது அரசு உலர்ந்து உக்கி விட்ட, வர்க்கங்களேதுமற்ற கம்யூனிசச் சமுதாய அமைப்பிலேயே இருக்குமென்னும் தன் கனவைத் தன் ஆய்வுகள் மூலம் நிறுவிப் படைத்திட்ட நூல்தான் இந்த மூலதனம்.

மார்க்ஸின் கனவை, ஆய்வுகள் மூலம் நடைமுறைச்சாத்தியமான கனவு என்று எடுத்துக்காட்டிய கனவினை இம்மண்ணில் பொதுவுடமை அமைப்பொன்றினை நிறுவியதன் மூலம் மார்க்ஸின் கனவின் முதற் கட்டத்தினைச் சாத்தியமாக்கியவர் விளாடிமீர் லெனின். இப்புரட்சியின் முக்கியத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிந்து, ஆதரித்துக் கவிதை பாடிய இலக்கியவாதி மகாகவி பாரதியார். அவரது 'ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி' இந்த வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிதை.

Last Updated on Thursday, 09 November 2017 21:53 Read more...
 

அணிந்துரை: எழுத்தாளர் பொன் குலேந்திரனின் அறிவியற் புனைவுகள் பற்றி....

E-mail Print PDF

பொன் குலேந்திரனின் 'காலம்' தொகுப்பு.- தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக நான் எழுதிய அணிந்துரை இது. -

அறிவியல் புனைகதை (Science Fiction)  என்றால் அறியப்பட்ட அறிவியல் தகவல்கள் ,  உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அல்லது சம காலத்தில் நடக்க் இருப்பதை எதிர்வு கூறி, அதனடிப்படையில் படைக்கப்படும் புனைவு என்றுதான் பொதுவாக அறியப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணங்கள், ஏனைய கிரக உயிரினங்கள், பிரம்மாண்டமான விண்வெளித்தொலைவுகளைக் கடப்பதற்கான வழிவகைகள், புதிர் நிறைந்த விண்வெளி அதிசயங்கள் (கருந்துளைகள் போன்ற) , பல்பரிமாண உயிரினங்கள், மானுடரின் எதிர்கால நிலை, நமது பூமியின் எதிர்கால நிலை, இவ்விதமான விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு படைக்கப்படும் புனைகதைகளையே அறிவியல் புனைகதைகள் என்போம். சமகால அறிவியல் உண்மைகளை விபரித்தலைக் கருப்பொருளாகக் கொண்ட புனைகதைகளை அவ்வகையான புனைகதைகளாகக் கருதுவதில்லை. ஆனால் அறிவியல் விடயங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டவையாதலால் அவையும் அறிவியல் புனைகதைகளே என்று அத்தகைய புனைகதைகளைப் படைத்த எழுத்தாளர் ஒருவர் வாதாடினால் அவருடைய தர்க்கத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பொன் குலேந்திரன் அவர்களின் இத்தொகுதியிலுள்ள புனைகதைகளையும் அறிவியல் கதைகளாகக் கொண்டு இத்தொகுதிக்கதைகளைபற்றிச் சிறிது நோக்குவோம்.

பொன் குலேந்திரன் அவர்கள்  ஒரு பௌதிகவியல் பட்டதாரி. அத்துடன் தொலை தொடர்புப் பொறியியலாளரும் கூட. அவரது பரந்த அறிவியல் உண்மைகளைப்பற்றிய அறிவு பிரமிக்க வைக்கின்றது. அவரது பன்முகப்பட்ட சுய தேடலை, சுய வாசிப்பை அது வெளிப்படுத்துகின்றது. தான் அறிந்ததை, உணர்ந்ததை சிறு சிறு கதைகளாக அழகாகப்புனைந்துள்ளார் அவர். அது அவரது எழுத்துத்திறனைப் புலப்படுத்துகின்றது.

இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப்பொறுத்தவரையில் மூன்று வகையான பிரதான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முதலாவது வகைப்புனைகதைகள் பொதுவாக அறிவியல் கதைகள் என்று கூறப்படும் கதைகள்.  அடுத்தவகைப்பண்பாக சமகால அறிவியல் உண்மைகளை விபரிக்கும் கதைகள். மூன்றாவது வகைப்பண்பாக ஆசிரியரின் மத மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தும் கதைகள். இவ்விதமாக முப்பண்புகளை வெளிப்படுத்தும் கதைகளில் பல ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

குலேந்திரன் அவர்களின் முன்னுரையில் அவர் கூறியிருப்பதும் மேற்படி என் அவதானம் சரியென்பதையே எடுத்துக்காட்டுகின்றது. "இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராச்சிகளையும் கருவாகக் கொண்டவை." என்றும் "மூடநம்பிகைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுகிறது கதைகள் 19, ,20" என்றும் அவர் குறிப்பிடுவதையே குறிப்பிடுகின்றேன்.

Last Updated on Monday, 06 November 2017 20:30 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 267 : கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்... -

E-mail Print PDF

- அண்மையில் முகநூலில் எனது கவிதையான 'நள்யாமப்பொழுதொன்றில்...' கவிதையினை பதிவு செய்திருந்தேன். அது பற்றி நிகழ்ந்த சிறு கருத்துப்பரிமாறல்கள் சுவையானவை. வாசகர்களுக்கும் பயனுள்ளவையாக அமையுமென்று கருதி இங்கும் பதிவிடுகின்றேன். -

வாசிப்பும், யோசிப்பும் 267 : கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்... - பற்றி....கவிதை: நள்யாமப்பொழுதொன்றில்... - வ.ந.கிரிதரன்

சொல்லவிந்து, ஊர் துஞ்சும்
நள்யாமப்பொழுதுகளில்
விசும்பு நீந்தி ஆங்கு
நீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்
வனப்பில் எனை மறக்கும்
தருணங்களில்,
இராப்பட்சிகள் குறிப்பாக
ஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.
கூரிய அவைதம் பெருங்கண்
விரித்து
இரை தேடி இரவு முழுக்கப்
பறந்து திரியும்.
ஆந்தைகளுக்குப் போட்டியாக
அவ்வப்போது நத்துக்களும்
குரல் கொடுக்கும்.
மீன்களே! உங்கள் நீச்சலின் காரணத்தை
விளக்குவீரா?
ஆந்தைகளே! நத்துகளே! உங்கள்
இருப்பின் காரணத்தை எனக்கும்
சிறிது பகர்வீரா?
இரவுவான் வியக்கும் பண்பு
தந்தாய்! எந்தையே
இத்தருணத்தில் உனை நான்
என்
நினைவில் வைக்கின்றேன்.

Last Updated on Saturday, 28 October 2017 20:42 Read more...
 

அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவாக..

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -அக்டோபர் 20 அமரர் வெங்கட் சாமிநாதனின் நினைவுதினம். தமிழகத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் என்னுடன் மிகவும் அதிகமாகத் தொடர்பு வைத்திருந்தவராக நான் கருதுவது அமரர் வெங்கட் சாமிநாதனைத்தான். இவ்வளவுக்கும் நான் அவரை ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. அவர் இயல் விருது பெறுவதற்காகத் 'டொராண்டோ' வந்திருந்தபோதுகூட நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் அப்பொழுது அவரை அழைத்தவர்களுடன் மிகவும் நேரமின்றி அலைந்துகொண்டிருப்பாரென்று எண்ணி நானும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அதிகமாக அனுப்பத்தொடங்கினார். அவரது மறைவுக்கு முதல் நாள் வரையில் அவர் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தன் மின்னஞ்சல்களில் தான் என்னை நேரில் சந்திக்காததையிட்டு வருந்தியிருப்பார். நான் தமிழகம் வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேனென்று ஆறுதலாக அப்போதெல்லாம் பதில் அளிப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அது என் துரதிருஷ்ட்டம்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்களிலொன்று: இறுதி வரையில் தன் நிலை தளராமல், தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அந்தப்பண்புதான். நிறைய வாசித்தார். நிறையவே சிந்தித்தார். கலை, இலக்கியத்துறையில் அவர் தனக்கென்றோரிடத்தை ஏற்படுத்தி விட்டு அமரராகி விட்டார். அவர் இருந்தபோதே அவரைக்கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்கள் திலிப்குமார், பா.அகிலன் போன்றவர்கள் 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்' என்னும் அரியதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டார்கள். மிகவும் பாராட்டுதற்குரிய பணி அது. அதில் என் கட்டுரையொன்றும் அடங்கியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவது. அதன் மூலம் அவரைச் சந்தித்திருக்காவிட்டாலும், சந்தித்துப் பழகியதோர் உணர்வே எனக்கு எப்பொழுதுமுண்டு.

அவரது தொடர்ச்சியான மின்னஞ்சல்களும், பதிவுகள் இணைய இதழுக்கான அவரது ஆக்கப்பங்களிப்புகளும் ஒருபோதுமே அவரை என் நினைவிலிருந்து அகற்றி விடாதபடி செய்து விட்டன. அவரது நினைவாக அவரது இறுதிக்கால மின்னஞ்சல்கள் சிலவற்றை மீண்டும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

Last Updated on Friday, 27 October 2017 13:29 Read more...
 

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்! (2)

E-mail Print PDF

அத்தியாயம் இரண்டு: இரவு வானம்!

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்!வ.ந.கிரிதரன்கேசவனும் மாயவனும் பால்கணியிலிருந்தபடி உரையாடிக்கொண்டிருந்தார்கள். இருவருமே ஒருவிதத்தில் ஒரே மாதிரியான மனப்போக்கினைக் கொண்டவர்கள். இரவு வானை, கொட்டிக்கிடக்கும் சுடர்களை இரசித்தபடியே , பியர் அருந்தியபடி அவர்களின் உரையாடலும் தொடர்ந்தது.

மாயவனுக்கு மீண்டும் மனைவியின் கோரிக்கை நினைவுக்கு வந்தது.

"கேசவா, இன்னும் எத்தனை காலம் தான்  உன் நிறைவேறாத காதலுக்காக உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாய்?"

அதற்குச் சிறிது சிந்தனையிலாழ்ந்த கேசவன் கூறினான்:

"எனக்கு அவள் நிலை தெரிய வேண்டும். அவ்வளவுதான். அவளுக்கு மட்டும் திருமணமாகியிருந்தால் அவளை மனதார வாழ்த்தி விட்டு என் வாழ்க்கையைத் தொடர்வேன். அதுவரையில் என்னால் அடுத்த நகர்வை எடுக்கவே முடியாது"

"ஒருவேளை அவளைப்பற்றிய தகவல்களை அறிய பல ஆண்டுகள் பிடித்தால் என்ன செய்யப்போகின்றாய்? அதுவரை உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாயா?"

"மாயவன் அண்ணே, எத்தனை ஆண்டுகளென்றாலும் பரவாயில்லை. அவளது நிலை அறியும் வரையில் காத்து நிற்பேன். அந்த என் முடிவில் எந்தவித மாற்றமுமில்லை. அவ்வளவு தூரத்துக்கு அவள் என் நெஞ்சில் பதிந்து விட்டாள். உனக்கு ஒன்று தெரியுமா?"

"என்ன..?"

"அவளைக் கடைசியாகக் கண்ட நாளிலிருந்து இன்றுவரையில் ஒவ்வொரு நாளும் முழித்திருக்கும் நேரமெல்லாம் அவளை நினைத்துக்கொண்டுதானிருக்கிறன். அவளது நினைவு தோன்றுவதை என்னாலை தடுக்கவே முடியவில்லை. அவ்வளவுக்கு நெஞ்சின் ஆழத்தே பதிந்து கிடக்கின்றாள். அவளது நிலையை அறிய வேண்டும். அதற்குப்பின்தான் எல்லாமே.."

கேசவனின் வைராக்கியம் மாயவனுக்கு நன்கு புரிந்தது. இவனது மனத்தை மாற்ற வேண்டுமென்றால் முதலில் அவனது அந்தக் காதலுக்குரியவள் பற்றிய தகவல்களை அறிய வேண்டும். அதற்குப்பின்னரே அவனது மனம் மாறும். மாயவனின் சிந்தனை பல்திசைகளிலும் பயணித்தது. திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

" ஏன் கேசவா, எனக்கொரு  யோசனை தோன்றுது. என்னவென்றால்.."

'என்ன மாயவன் அண்ணே! சொல்லுங்கோ"

Last Updated on Monday, 30 October 2017 16:27 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 266: 'டொராண்டோவில்' நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு விழா! ஆ.சிவநேசச்செல்வனின் ஆவணப்படுத்தற் சேவை பற்றி..

E-mail Print PDF

'டொராண்டோவில்' நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

திரு. ஆ.சிவநேசச்செல்வன் (22.10.2017) அன்று 'டொராண்டோவில்' நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன். சிறப்பாக நடைபெற்றது. இது பற்றிப்பின்னர் விரிவானதொரு பதிவிடுவேன். எழுத்தாளர் அருண்மொழிவர்மன் வரவேற்புரையினையும், நிகழ்வின் முடிவில் நன்றியுரையும் வழங்கினார். கவிஞரும், பேராசிரியருமான சேரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பாக நிகழ்வினை நிர்வகித்து நடாத்தினார். நிகழ்வில் பேராசிரியர் நா.சுப்பிரமணியன், க.சண்முகலிங்கன், கலாநிதி மைதிலி தயாநிதி, ஆ.சிவநேசச்செல்வன், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் மற்றும் எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் நூலகம் நிறுவனம் ஆகிவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்வின் வெற்றிக்கு பிறேமச்சந்திரா, அருண்மொழிவர்மன், தயாநிதி, மற்றும் புவனேந்திரன் திருநாவுக்கரசு ஆகியோர் உறுதுணையாக விளங்கியதை நிகழ்வில் காணக்கூடியதாகவிருந்தது.

நிகழ்வில் யாழ் இந்துக்கல்லூரியின் கலையரசி 2017 நிகழ்வில் எஞ்சிய பணத்தை (2000 கனடிய டாலர்களுக்கும் அதிகமான தொகை) யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சார்பில் புவனேந்திரன் திருநாவுக்கரசு நூலகம் நிறுவனத்துக்கு வழங்கினார். நூலகம் சார்பில் அருண்மொழிவர்மன் மற்றும் நக்கீரன் ஆகியோர் அப்பணத்தினைப் பெற்றுக்கொண்டனர். உண்மையில் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தைப்பாராட்டத்தான் வேண்டும். இவ்விதமானதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டதற்கும், நூலக அமைப்புக்கு நிதி வழங்கியதற்கும்.

நூலின் பதிப்பாசிரியராகவிருப்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் ஆவார். பழைய பிரதிகளை வாசித்துத் தொகுப்பதில் அவர் எவ்வளவு சிரமங்களை அடைந்திருப்பார் என்பதை அறிய முடிகின்றது. அவரது பணியும் பாராட்டுதற்குரியது.

Last Updated on Tuesday, 24 October 2017 21:25 Read more...
 

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி: ம.வே.திருஞானசம்பத்தப்பிள்ளையின் படைப்புகளை முன்வைத்துச்சில குறிப்புகள்...

E-mail Print PDF

- *'டொராண்டோ'வில் 22.10.17 அன்று நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் நான் ஆற்றிய உரை -

இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி என்றொரு கூற்றுள்ளது. உண்மை.  இலக்கியப்படைப்பொன்றினை ஆராய்ந்து பார்ப்போமாயின் பல்வேறு விடயங்களை அப்படைப்பினூடு அறிந்து கொள்ள முடியும். அப்படைப்பில் பாவிக்கப்பட்டுள்ள மொழியிலிருந்து அப்படைப்பின் காலகட்டத்தை ஆய்வொன்றின் மூலம் அறிவதற்குச் சாத்தியமுண்டு. உதாரணத்துக்குச் சங்க இலக்கியப்படைப்புகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றினூடு பண்டைத்தமிழரின் வாழ்க்கை முறை, இருந்த நகர அமைப்பு, ஆட்சி முறை, நிலவிய மானுடரின் பல்வேறு விடயங்களைப் பற்றிய நம்பிக்கைகள் .. எனக்கூறிக்கொண்டே செல்லலாம். எனது இச்சிற்றுரையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் அடிப்படையில் ம.வெ.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய  'உலகம் பலவிதம்' நூலினை அணுகுவதாகும்.

அளவில் இந்நூல் பெரியது. நூலிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் குறுகிய காலத்தில் முழுமையாக வாசிப்பதென்பது சாத்தியமற்றதொன்று. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில்  இந்நூலை அணுகலாம். அதுவும் கூட முழு நூலைப்பற்றிய இவ்விதமானதோர் அணுகுதலுக்குரிய மாதிரி அணுகலாகவிருக்கும் என்பதால், அது என் நம்பிக்கை என்பதால் அவ்விதமே இந்நூலை அணுகுவதற்கு முடிவு செய்து, அவ்வணுகுதலின் அடிப்படையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் கூற்றிலுள்ள உண்மை பற்றி அறிதற்குச் சிறிது முயற்சி செய்வதே என் நோக்கம்.

இதற்காக நான் இத்தொகுப்பபிலுள்ள இரு நாவல்கள் மற்றும் ஆசிரியரின் பத்திகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது என் கவனத்தைத்திருப்பப் போகின்றேன்.

1. மதமாற்றம்
அந்நியராட்சியின் கீழ் முக்கியமானதொரு விடயமாக மதமாற்றம் இருந்ததைக் காண முடிகின்றது. பாதிரிமார்கள் மக்களை மதம் மாற்றுவதில் தீவிர முனைப்புடன் செயற்பட்டதை அறிய முடிகின்றது. பல்வேறு ஆதாயங்களுக்காக மக்கள் மதம் மாறியதையும் , பலர் மதமாற்றத்துக்கெதிராகச் செயற்பட்டதையும் ம.வெ.தி.யின் புனைகதைகளிலிருந்து காணமுடிகின்றது. அவர் இந்துக்கல்லூரியின் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர். இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். இயல்பாகவே மதமாற்றம் என்பது அவரை மிகவும் பாதித்ததொரு விடயமாக இருந்திருக்கும். இருந்திருக்க வேண்டும். தன் எழுத்தை மதமாற்றத்துக்கெதிராக மக்களை விழிப்படைய வைப்பதற்கு அவர் பாவித்ததை அவரது புனைகதைகள் வெளிப்படுத்துகின்றன.

Last Updated on Tuesday, 24 October 2017 11:43 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 265 : இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!; மார்க்சியமும், ஆனை பார்த்த குருடர்களும்!; வாழ்த்துகின்றோம்: அர்ப்பணிப்பு மிக்க முயற்சி வெற்றியடையும்.

E-mail Print PDF

இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!
இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். சிலர் தீபாவளி சமயத்துடன் சம்பந்தப்பட்டதால் கொண்டாடக்கூடாது என்பார்கள். தீபாவளியின் அடிப்படை நோக்கம் மானுட சமுதாயத்தை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளியைப்பரப்பும் நாள் என்பது. சமயத்தைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால், மானுடரைச் சூழ்ந்திருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாள். சமய நம்பிக்கையுள்ளவர்கள் அவ்விதம் கொண்டாடட்டும். அது அவர்கள் உரிமை. அவ்வாறில்லாதவர்கள் மானுடரை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாளாகக் கொண்டாடலாம். என்னைப்பொறுத்தவரையில் இந்த இரண்டாவது காரணத்தையே மையமாக வைத்து இந்நாளை அணுகுகின்றேன். நண்பர்கள் அனைவர்தம் வாழ்விவும், உறவினர்கள் அனைவர்தம் வாழ்விலும், இவ்வுலக மானுடர்கள் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் ஆரோக்கியமான சிந்தனையொளி பரவட்டும். சமுதாயத்தை மூடியிருக்கும் மடமையென்ற இருள் நீங்கட்டும்; அறிவென்னும் இரவியெழுந்து ஒளி பாய்ச்சட்டும் இந்நாளில். மானுடரைக்கொன்று குவிக்கும் போரிருள் நீங்கி பேரொளி பரவட்டும். வர்க்கம், மதம், மொழி, இனம், நாடு, வருணம் என்னும் பிரிவிருள் நீங்கி , அன்பெனுமொளி உதயமாகட்டும்.

இந்த நாள் எம் அனைவர்தம் வாழ்விலும் தவிர்க்க முடியாத இன்ப நினைவுகளை நனவிடை தோய வைத்திடும் நாள். எம்மில் பலபேர் போர்ச்சூழலுக்கு முன் பண்டிகைகள் பல கொண்டாடிக் குழந்தைப் பருவத்தைக் குடும்பத்தவருடன் கழித்தவர்கள். மறக்க முடியாத அந்நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்பவர்கள். இன்னும் சிலருக்குப் போர்ச்சூழல் அவ்வாய்ப்பினைத் தட்டிப்பறித்திருக்கக் கூடும். ஆனால் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் இன்ப ஒளி பரவட்டும். இன்ப ஒளியில் இவ்வுலகு சிறகடிக்கட்டும்; சிறக்கட்டும். நோக்கும் திசையெங்கும் நாம் வாழும் இந்நானிலம் களியொளியில் ஒளிரட்டும்.

Last Updated on Tuesday, 24 October 2017 21:16 Read more...
 

இள முனைவர் பட்ட ஆய்வு (தமிழகம்) ஆய்வு: வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள் & இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள்

E-mail Print PDF

 வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள் 'பதிவுகள்' வாசகர்களுடன் மகிழ்ச்சியான தகவலொன்றினைப் பகிர்ந்துகொள்கின்றேன். விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரியும் வே.மணிகண்டன் அவர்கள் அவரது மாணவிகள் எனது படைப்புகளை மையமாக  வைத்து 'வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள்' என்னும் தலைப்பிலும், 'பதிவுகள்' இதழ் கவிதைகளை மையமாக வைத்து ''இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள்' என்னும் தலைப்பிலும் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ள விபரத்தை அறியத்தந்திருந்தார். அவருக்கு இதற்காக நன்றி. அவர் இது பற்றி அனுப்பிய மின்னஞ்சல்  ஒரு பதிவுக்காகக் கீழே பிரசுரமாகின்றது.

-- ஐயா... வணக்கம்,  நான் வே.மணிகண்டன் , புதுச்சேரி) தமிழ் நாட்டில், விழுப்புரத்தில் உள்ள தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணிபுரிகின்றேன். எனது மேற்பார்வையில் வ.ந. கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்ந்தோர் இலக்கியப் பதிவுகள், இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள் ஆகிய ஆய்வேடுகள் எனது மாணவிகளால்  உருவாக்கப்பட்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்(2016-  2017) சமர்பிக்கப்பட்டு இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். தங்களுடைய ஒத்துழைப்பிற்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இணையத்தமிழ் இதழ்களில் கவிதை இலக்கியப்போக்குகள் என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வேட்டில் 'பதிவுகள்' இதழ் கவிதைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை தக்களுக்கு தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

ஆய்வுக்குள்ளாகிய படைப்புகள் உள்ளடக்கியுள்ள விபரங்களும் ஒரு பதிவுக்காகக் கீழே தரப்படுகின்றன.

Last Updated on Saturday, 14 October 2017 22:05 Read more...
 

நாவல்: புதிய பாதை ( 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்') (13-15)

E-mail Print PDF

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் 13: ஊர் நிலைமை!

"ஹலோ. ஹலோ"

எதிர்த் தரப்பில் குரல் மிக நைந்துபோய் பலஹீனமாகக் கேட்டது. கொழும்புக் 'கோல்' போல் தெரிகிறது. யாராயிருக்கும்...

"ஹலோ. ஹலோ. யார் பேசுறது?"

'அக்கா. அக்கா. இது. அடக்கடவுளே. இது பெரிய தங்கச்சியின் குரல் அல்லவா. இவள் எங்கு நின்று பேசுகிறாள். கொழும்புக்கு எதற்காக வந்திருக்கிறாள்?

"யாரது பெரிய தங்கச்சியோ. எங்கயிருந்து பேசுகிறாய். எதுக்கும் உன்ரை நம்பரைத்தா. நான் உடனே எடுக்கிறன்."

பெரிய தங்கச்சி நம்பரைத் தந்தாள். இவள் எடுப்பதாக கூறி விட்டு, 'லைனை'க் 'கட்' பண்ணி விட்டுத் திரும்ப 'டயல்' பண்ணினாள். சிறிது நேரம் 'லைன்' பிசியாக இருந்தது. ஒரு மாதிரிக் கிடைத்து விட்டது.

"ஹலோ. ஹலோ. "யாரு அக்காவா? அக்கா. எதிர்த்தரப்பில் பெரிய தங்கச்சி விம்மத் தொடங்கினாள். தங்கச்சி என்ன விசயம் என்ன நடத்திட்டதெண்டு இப்படி இவள் முடிக்கவில்லை. பெரிய தங்கச்சி குறுக்கிட்டாள்.

"அக்கா. அக்கா. அம்மா. அம்மா"

"அம்மாவா. அம்மாவுக்கு என்ன?" இவள் குரலில் சிறிது பதட்டம் படர்ந்திருந்தது.

'அக்கா. இம்முறை பெரிய தங்கச்சி ஓவென்று அழத் தொடங்கினாள்.

'அக்கா அம்மா எங்களை எல்லாம் ஏமாத்திப் போட்டு போய் சேர்ந்திட்டா'

‘என்ன. இவளுக்கு ஒரு கணம் எல்லாம் சுழல்வது போன்றதொரு பிரமை எழத் தலையை இறுகப் பற்றிக் கொண்டாள். சிறிது நேரத்துக்குள்ளாகவே தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டாள்.

Last Updated on Saturday, 25 August 2018 04:39 Read more...
 

கவிதை: இருப்புமென் தாரகமந்திரமும்!

E-mail Print PDF

கவிதை: இருப்புமென் தாரகமந்திரமும்!
அன்பே!
அன்றொருநாள் நீ கூறினாய்
கத்தி முனையில் நடப்பதைப்
போன்றதிந்த இருப்பு என்று.

கத்திமுனை இருப்பில்
கவனத்துடன் நடப்பதிலுமோர்
களிப்பு குவிந்துதானிருக்கின்றது.
இருப்பில் இவ்விதம் இருப்பதிலுமோர்
இன்பம் இருக்கத்தான் இருக்கிறது.
இருப்பென்பது இவ்விதச் சவால்களையும்
உள்ளடக்கியுள்ளதுதானே.
இருப்பென்பதே இன்பம்தானே!
Last Updated on Tuesday, 10 October 2017 22:05 Read more...
 

நூல் அறிமுகம்: 'கசாக்கின் இதிகாசம்'

E-mail Print PDF

நூல் அறிமுகம்: கசாக்கின் இதிகாசம் பற்றி.... - 30.10.2017 அன்று 'ரொறன்ரோ' தமிழ் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் மூல வடிவத்தை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். இதனை மையமாக வைத்துத்தான் அவ்வுரையினை ஆற்றியிருந்தேன். இருந்தாலும் உரையாற்றும் நேரக் கட்டுப்பாடு காரணமாகக் கூற வேண்டிய யாவற்றையும் கூறினேனா இல்லையா என்ற சந்தேகமிருப்பதால் இக்கட்டுரையினை இங்கு பதிவிடுகின்றேன். - வ.ந.கி -


இங்கு நான் அண்மையில் நான் வாசித்த நூலொன்றினை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இது நூல் பற்றிய அறிமுகமேயன்றி விரிவான திறனாய்வு அல்ல என்பதையும் முதலிலேயே கூறிக்கொள்ள விழைகின்றேன். இதுவொரு புதினம்.  மலையாள மொழியிலிருந்து தமிழுக்கு  எழுத்தாளர் யூமா வாசுகியால்  மொழிபெயர்க்கப்பட்ட நாவல்.  ஓ.வி.விஜயனின் (ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன்)  'கசாக்கின் இதிகாசம்' நாவலைத்தான் குறிப்பிடுகின்றேன். இம்மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

முதலில் சுருக்கமாக நாவலாசிரியர் ஓ.வி.விஜயன் அவர்களைப்பற்றிப் பார்ப்போம். ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன் மலையாள மொழியில் எழுத்தாளர், பத்திரிகையாளர், கேலிச்சித்திரக்காரர் எனப்பன்முகபரிமாணங்களைக்கொண்டவர். நாவல், சிறுகதை, மற்றும் கட்டுரை என இவரது இலக்கியக் களம் விரிந்தது. இவரது சகோதரி ஓ.வி உஷா,வும் மலையாளக் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2.7.1939இல் கேரள மாநிலத்திலுள்ள கோழிகோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College, Madras) ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2005இல் மறைந்து விட்டார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாக்கித்திய அக்காதெமி மற்றும் கேரள மாநில அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது போன்ற விருதுகளைப்பெற்ற ஓ.வி.விஜயன் இந்திய அரசின் பத்மபூஷண் விருதினையும் பெற்றவர். இவரது மனைவி தெரசா . அவரும் அமரராகிவிட்டார். ஒரே மகனான மது அமெரிக்காவில் வசிக்கின்றார்.

'கசாக்கின் இதிகாசம்' என்னுமிந்த நாவல் மலையாளத்தில் வெளிவந்த ஆண்டு 1969. இதுவே ஓ.வி.விஜயனின் முதலாவது நாவலாகும். இதிகாசமென்றதும் பன்னூறு பக்கங்களைக் கொண்ட விரிந்த நாவலாக இதனை யாரும் கருதி விடாதீர்கள்.  தமிழ் மொழிபெயர்ப்பு 239 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது. விக்கிபீடியாக் குறிப்புகளின்படி இந்நாவலை ஆசிரியர் எழுதுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. இந்நாவலின் கட்டுக்கோப்பான மொழி இறுக்கத்தின் காரணத்தை உணர் முடிகின்றது. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் மிகக்குறுகிய காலத்தில் எழுதப்பட்ட நாவலாக இதனைக் குறிப்பிடுவார்:

 

Last Updated on Friday, 24 August 2018 02:09 Read more...
 

டொராண்டோவில் நிகழ்ந்த நிருத்திய நாட்டியம்! கலாநிதி பத்மா சுப்ரமண்யத்தின் 'பகவத் கீதை'!

E-mail Print PDF

சாண் சந்திரசேகர்-கலாநிதி பத்மா சுப்ரமணியம் கனடாவிலுள்ள 'ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்' (ATN) ஸ்தாபன உரிமையாளர் அவர்களை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. இவர் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் உடன் பிறந்த சகோதரர். புகபெற்ற இயக்குநர் கே.சுப்ராமணியத்தின் புத்திரர். கனடாவில் தெற்காசியர்களுக்கான தொலைக்காட்சி சேவைகளை இவரும் இவரது மனைவி ஜெயா சந்திரசேகரும் பல வருடங்களாக நடத்தி வருபவர்கள். கனடியார்கள் மத்தியிலும் வர்த்தக மற்றும் அரசியல்  வட்டாரங்களில் நன்கு அறிமுகமானவர். இவரை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதையும், அதன் காரணமாகவே கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின்  நடனத்தைக் கண்டு களிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டதையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது.

2001இல் ஒரு நாள், 'பதிவுகள்' இணைய இதழ் தத்தித் தவழ்ந்து நடை போட முயன்று கொண்டிருந்த சமயம். அப்பொழுது 'பதிவுகள்' இணைய இதழை அறிமுகப்படுத்தும்பொருட்டு 'டொரோன்டோ'விலுள்ள ஊடகங்களுக்கு அறிமுக மின்னஞ்சலொன்றினை அனுப்பியிருந்தேன். அவ்விதம் அனுப்பிய ஊடக நிறுவனங்களில் 'ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்' நிறுவனமும் ஒன்று. அதன் பின் அதனை அப்படியே மறந்தும் விட்டேன். ஆனால் திடீரென எனக்கு மின்னஞ்சலொன்று வந்திருந்தது. அது 'ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்' உரிமையாளரான சாண் சந்திரசேகரிடமிருந்து. அதில் அவர் என்னைத் தன் நிலையத்துக்கு வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்திருந்தார். அவர் அழைப்பினையேற்று நியுமார்க்கட் பகுதியில் அமைந்திருந்த 'ஏசியன் டெலிவிஷன் நெட்வோர்க்' நிலையத்துக்குச் சென்றிருந்தபோது அவர் வரவேற்று உபசரித்து தொலைக்காட்சி நிலையத்தைச் சுற்றிக் காண்பித்தார். அத்துடன் 'பதிவுகள்' இணைய இதழுக்கு வாழ்த்துக் கூறியவர், அக்காலகட்டத்தில் 'டொராண்டோ'வில் நடக்கவிருந்த அவரது சகோதரியான கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் நாட்டிய நிகழ்வுக்கான 'விஐபி' அழைப்பிதழினையும் வழங்கியிருந்தார். அதன் மூலம் எனக்கும் உலகப்புகழ்பெற்ற நாட்டியத்தாரகையான கலாநிதி பத்மா சுப்ரமணியத்தின் நடனத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்நிகழ்வுக்கு நானும் என் மூத்த புதல்வி தமயந்தியும் சென்றிருந்தோம். மறக்க முடியாத நிகழ்வு. பின்னர் அந்நிகழ்வு பற்றிப் 'பதிவுகள்' இணைய இதழில் கட்டுரையொன்றும் எழுதியிருந்தேன். அக்கட்டுரையே இங்குள்ள கட்டுரை.

கலாநிதி பத்மா சுப்ரமணியத்தை நினைக்கும்போதெல்லாம் ஞாபகத்துக்கு வருமொரு விடயம்: 'மக்கள் திலகம்' எம்ஜிஆரின் கனவுகளிலொன்று கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலைத் திரைப்படமாக்க வேண்டுமென்பது. அதில் தான் வந்தியத்தேவனாகவும், பத்மா சுப்ரமணியம் குந்தவையாகவும் நடிக்க வேண்டுமென்பது. ஆனால் எம்ஜீஆர் பலமுறை முயற்சி செய்தும் பத்மா சுப்ரணியம் தனக்கு நடிப்பதில் ஆசை இல்லையென்று மறுத்து விட்டதால் எம்ஜிஆரின் கனவும் கனவாகவே போய்விட்டது. இதனை பத்மா சுப்ரமணியமே பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கின்றார். -


Last Updated on Tuesday, 26 September 2017 20:42 Read more...
 

தமிழர்தம் வரலாற்றுச்சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம்!

E-mail Print PDF

- யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், விக்டோரியா, ஆஸ்திரேலியாவின் 'கானமழை 2017' சஞ்சிகையில் வெளியான கட்டுரை இது. -

கானமழை 2017'ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் தவறென்ன' என்று ஆக்ரோசமிடுவதுடன் திருப்தியுறும் தமிழர்களிடமுள்ள முக்கியமான குறைபாடுகளிலொன்றாக நான் கருதுவது தமிழ்ப்பகுதிகளில் காணப்படும் வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாப்பதில் , பேணுவதில் காணப்படும் ஆர்வமின்மை ஆகும். மாறிவரும் காலத்தின் ஓட்டங்களுக்கேற்ப மாறிவரும் சமுதாயச்சூழலில் இனமொன்றின் தனித்துவத்தையோ அல்லது அதன் பண்பாட்டின் வளர்ச்சியையோ பேணுவது அவசியமாகும்.  அவ்வாறு செய்யாவிடின் அக்காலத்தின் வளர்ச்சியும், காலத்தின் கோலத்திற்கேற்ப கட்டெறும்பாகத் தேய்ந்து மறைந்துவிடும்.  மேலும் ஓரினத்தின் வரலாறு தெளிவின்றியிருக்குமாயின் அதன் வரலாற்றிலொரு தெளிவினை ஏற்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும். ஈழத் தமிழினத்தைப்பொறுத்தவரையில் அதன் வரலாற்றிலோ தெளிவற்ற ஒரு குழப்ப நிலை நிலவுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  வரலாற்றினை நிரூபிப்பதற்குரிய சான்றுகளோ கவனிப்பாரற்ற நிலையில் புறக்கணிக்கப்பட்டுக்கிடக்கின்றன.  ஒரு வெளிநாட்டவரோ அல்லது நம்மவர் ஒருவரோ பார்க்க விரும்பினால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளென்று அழைத்துச்சென்று காட்டக்கூடிய  பகுதிகள் எத்தனையுள்ளன? இருக்கும் பகுதிகள் கூட கவனிப்பாரற்ற நிலையில், அவை பற்றிய போதிய தகவல்களற்ற நிலையில்தாமே இருக்கின்றன. இவ்விதமானதொரு சூழலில்தான் பழமையின் சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம் அதிகமாகின்றது.  வரலாற்றுரீதியான ஆய்வுகளுக்கு  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழமையின் சின்னங்களும், சிதைந்த நிலையில் காணப்படும் அழிபாடுகளும் பேணப்பட வேண்டியது மிகவும் அவசியமான, தவிர்க்க முடியாததொன்றாகின்றது.

உதாரணத்துக்கு நல்லூர் நகரை எடுத்துக்கொள்ளுங்கள்.  ஈழத்தமிழர்களின் கடைசித்தமிழ் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இராசதானியாக, அமோகமான புகழுடன் விளங்கிய நகர் நல்லூர்.  இன்றைய நிலை என்ன? காலத்தின் கோலத்துக்கேற்ப விரைவாக மாறுதலடைந்துள்ள நிலையில் உண்மையில் அந்நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளெல்லாம் முறையாகப் பேணப்படாத நிலையில், காலவெள்ளத்தில் அடியுண்டு போகும் நிலையில்தானுள்ளன. இதுவரையில் இவ்விதம் இராஜதானியாக விளங்கிய நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஒரேயொரு ஆய்வு நூல்தான் வெளியாகியுள்ளது. அது தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம், மங்கை பதிப்பகம் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் நூல்தான். 1996இல் வெளியானது.

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி ஆராய முற்பட்டபோதுதான் தமிழர்களாகிய நாம் எம் வரலாறு பற்றிய போதிய ஆய்வுகளற்ற நிலையில் இருக்கின்றோம் என்பதை உணர முடிந்தது. உண்மையில் நல்லூர் இராஜதானியாக விளங்கிய காரணத்தால், இப்பகுதியில் காணப்படும் வரலாற்று முக்கியம் வாய்ந்த பகுதிகள் பற்றி (குளங்கள் உட்பட) , காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள், அவற்றின் சிதைவுகள் பற்றி, அவற்றின் வரலாறு பற்றியெல்லாம் விரிவாக , ஆராயப்பட்டு, அவை நூல்களாகப் போதிய அளவில்  வெளிவந்திருக்க வேண்டும். அவ்விதம்  வெளிவரவில்லை. நல்லூர் நகரானது எவ்விதம் பெளத்தர்களுக்கு அநுராதபுரம் போன்ற தென்னிலங்கை இராஜதானி நகர்களெல்லாம் புனித நகர்களாகக் கருதப்பட்டு, அங்கு காணப்படும் பழமையின் சின்னங்கள் பேணப்படுகின்றனவோ அவ்விதமே கருதப்பட்டு முறையாகப் பேணப்பட்டிருக்க வேண்டும்.  ஈழத்தமிழர்களின் வட, கிழக்குப் பகுதிகளிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்களெல்லாம் , பேணப்பட வேண்டிய நகர்களாகக் கருதப்பட்டு, அந்நகர்களின் வரலாற்றுச்சின்னங்கள், வரலாற்றுக்குறிப்புகள் எல்லாம் ஆய்வுக்கண்ணோட்டத்தில் பேணப்பட்டு, இவை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும், ஆள்வோர் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

Last Updated on Tuesday, 26 September 2017 13:00 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 264 : விமல் குழந்தைவேலின் வெள்ளாவி பற்றி....

E-mail Print PDF

விமல் குழந்தைவேலின் 'வெள்ளாவி'எழுத்தாளர் விமல் குழந்தைவேல்விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த நாவல்களில்முக்கியமான நாவல். அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில் பகுதி வட்டாரத் தமிழில் நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழத்தில் வெளிவந்த வட்டாரத்தமிழில் வெளிவந்த நாவல்களில் இந்நாவலை முதலிடத்தில் வைக்கலாம். ஆடை துவைக்கும் சமூகத்தைச்சேர்ந்த பரஞ்சோதி என்னும் பெண் பாத்திரத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள நாவல் பல பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றது. சமூக, பொருளியல் மற்றும் அரசியற் பிரச்சினைகளை நாவல் வெளிப்படுத்துகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தில். அதுவும் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றில் பிறக்கும் சமூகமொன்றில் பிறக்கும் பெண்ணொருத்தி எத்தனை விதமான உளவியற் துன்பங்களை அடைய வேண்டியிருக்கின்றது என்பதை பரஞ்சோதி,, அவளது தாய் மாதவி ஆகியோர் தம் வாழ்வில் அடையும் அனுபவங்கள்: வெளிப்படுத்துகின்றன. பெண்ணைப்போகப்பொருளாகப் பயன்படுத்தும் போடியார் எவ்வளவு இயல்பாக மாதவியின் மகளை ஓரிரவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிச் செல்கின்றார். இந்த உண்மையை அறியாத பரஞ்சோதி , தன் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தந்தை தன்னை விரும்பிய வரதனாக இருக்குமோ என்று சந்தேகம் அடைகின்றாள். இச்சமயம் நடந்த உண்மையை அறிந்த தாயார் மாதவி போடியாரிடம் சென்று சண்டை போட்டு விட்டு வந்தவள் அந்தத் துயர் காரணமாகவே இறந்து விடுகின்றாள். வயிற்றில் குழந்தையுடன் தனித்து அநாதரவாக விடப்பட்ட பரஞ்சோதியை அரவணைத்துத் அவளது பிறக்கப்போகும் குழந்தையுடன் தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கின்றான் நாகமணி. பிறக்கும் குழந்தை அரவிந்தன் வளர்ந்து பெரியவனாகி இயக்கத்தில் இணைந்து போராடப்போவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. நாவலின் பிரதான விடயங்கள் இவையே.

இந்நாவலின் முக்கியமான சிறப்புகளாக நான் கருதுவது:

1. வட்டாரத் தமிழைப் பதிவு செய்தது.
2. கோளாவில் பகுதியில் நிலவிய சமுதாய அமைப்பு, அவ்வமைப்பில் நிலவிய சீர்கேடுகள், பெண்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகமொன்றினைச் சேர்ந்த பெண்கள் போடியார் போன்றவர்களிடமிருந்து எதிர்கொள்ளூம் பாலியல் ரீதியிலான வன்முறைகள், நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பது. பதிவு செய்திருப்பது.
3. தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தில் போராட்டத்தின் பெயரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் , உதாரணமாக உளநலம் குன்றிய பெண்ணொருத்தி இராணுவ உளவாளியென்று கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவது போன்ற , விடயங்களைப் பதிவு செய்திருப்பது. நாவல் மட்டக்களப்புச் சிறை உடைப்பு பற்றியும் நினைவு கூருகின்றது.

Last Updated on Tuesday, 24 October 2017 21:16 Read more...
 

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மானுட நேயம்!

E-mail Print PDF

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மானுட நேயம்!எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா கிழக்கில் முஸ்லீம் / தமிழ் மக்களுக்கிடையில் இனிரீதியான கலவரச்சூழல் நிலவிய காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி முகநூற் பதிவொன்றினை இட்டிருந்தார். அண்மையில் நான் வாசித்த , என்னைப் பாதித்த பதிவிது. வைத்தியர் குகதாசனை அவர் வீட்டின் முன் நின்ற வெறிபிடித்த கும்பலொன்றிலிருந்து எவ்விதம் காப்பாற்றினார் என்பதை அப்பதிவில் அவர் பதிவு செய்திருக்கின்றார். ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவிது. எழுத்தாளர் ஹனீபா அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். அவரைப்பற்றி நான் என் முகநூற் பக்கத்தில் இட்டிருந்த இக்குறிப்புக் கிடைத்த எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவு செய்கின்றேன்.

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் பதிவு கீழே:

"நேற்றுப் போலிருக்கிறது. கிழக்கில் தமிழ் முஸ்லிம் இனச்சங்காரம் நிகழ்ந்து 32 வருடங்கள். அந்த சித்திரை மாதம், எனக்குள் பெரும் வேதனையையும் வலியையும் விளைவித்தது. அந்த வலி இன்னும் தொடர்வதுதான் மிகப் பெரும் கொடுமை. அந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள், வாழைச்சேனையில் டாக்டர் குகதாசன் MBBS ஐயா அவர்களின் வீட்டின் முன்னால் பெரும் கும்பலொன்று திரண்டு நிற்பதாக செய்தி கிடைத்தது. ஊரில் அப்பொழுது நான் பெயர் பெற்ற LTTE ஆதரவாளன்.

அந்த இடத்திற்கு உடனே விரைந்தேன். அங்கே, குகதாசன் ஐயா முன் விறாந்தையின் நிலைப்படியில் தவித்துக் கொண்டிருந்தார். பெண்கள், பிள்ளைகள் என்று அவரைச் சுற்றி பதட்டத்தோடு நின்றார்கள். அந்தக் காட்சியை விபரிப்பதற்கு வார்த்தைகள் இன்றி முட்டுப்படுகிறேன். என்னைக் கண்டதும் இளைஞர்களில் சிலர் பின்வாங்கினார்கள். இன்னும் சிலர் என் முன்னாலேயே கண்களில் தீப்பிழம்பாக காட்சி தந்தார்கள். அவர்களை நோக்கி, நான் இவ்வாறு சொன்னேன்:

"தம்பிமாரே! நீங்கள் ஒவ்வொரு பிள்ளையும் உங்கள் தாயின் வயிற்றில் இருந்த பொழுது, இந்த டாக்டர் ஐயாதான் அந்த வயிற்றைத் தடவி உங்களையும் தடவி நீங்கள் சௌக்கியமாக இருப்பதாக உங்கள் தாயிடம் சொல்லி தைரியமூட்டியவர். என்ன நியாயம் நீங்கள் இன்று இந்த மனிதருக்கு முன்னால் இந்தக் கோலத்தில் நிற்பது? உடனடியாக இந்த இடத்தை விட்டு நீங்கள் விலகிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேற விடயம்" என்றேன்.

தெருச் சண்டியர்களுக்கு ஒரே பதில். நாமும் ஒரு தெருச் சண்டியராக மாறுவதுதான். வந்தவர்கள் ஒவ்வொருவராக திரும்பிப் போனார்கள். நான் உள்ளே போய் அமர்ந்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தேன்.

Last Updated on Tuesday, 19 September 2017 10:54 Read more...
 

தொடர் நாவல்: எத்தனை கோடி இன்பம்! (1) - வ.ந.கிரிதரன் -

E-mail Print PDF

அத்தியாயம் ஒன்று: முதற்காதல்!

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்!வ.ந.கிரிதரன்மாயவன் வசிக்கும் தொடர்மாடிக் கொண்டோக் கட்டடத்திலிருந்து எதிரே நோக்கினால் அருகில் விரிந்திருக்கும் பூங்காவின் வனப்பும், தொலைவில் 'டொராண்டோ' மாநகரின் மோனத்தில் தவமியற்றும் உயர்மாடிக் கட்டடங்களும், அவற்றுக்கிடையில் உயர்ந்த கோபுரமான சி.என். கோபுரமும் தெரியும். அந்திப்பொழுதுகளில் அல்லது மெல்லிருள் கவிந்திருக்கும் இரவுகளில் அங்கிருந்து சுற்றுச்சூழலை, நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானைப்பார்ப்பதைப்போல் இன்பம் வேறுண்டோ? அவனுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் இவ்விதமாகப் பொழுதைக் கழிப்பது மிகவும் விருப்பத்துக்குரியதொன்று. அவனது அபிமானக் கவி பாரதியின் பாடலொன்று நினைவில் சிறகடிக்கின்றது சிட்டுக்குருவியென.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்

முக்தியென்றொரு நிலை சமைத்தாய் – அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – எங்கள்
பரமா பரமா பரமா


'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்' மாயவனின் சிந்தனை அவ்வரிகளின் மீதே சுற்றிச்சுற்றிப்படருகின்றது. இப்பிரபஞ்சம்தான் எத்தனை எத்தனை கோடி இன்பத்தை இங்கு புதைத்து வைத்திருக்கின்றது. இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் படைப்பின் பேரதிசயம் உள்ளடங்கியல்லவா இருக்கிறது.

"சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்"

யார் இவ்விதம் இவ்வுலகை இவ்விதம்  அமைத்தது? யார்? மாயவனின் சிந்தனை மேலும் மேலும் சிறகடித்துப்பறக்கின்றது.

Last Updated on Saturday, 28 October 2017 22:13 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 263: மானுட விடுதலைப்போராளியான தோழர் தமிழரசன் பற்றிய தோழர் பாலனின் எண்ணங்களே 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' .

E-mail Print PDF

- * தோழர் பாலன் எழுதிய 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் மின்னூல் பற்றிய எண்ணத்துளிகள் சில. -


தோழர் தமிழரசன்

தோழர் பாலன்

தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியை உருவாக்கி, அக்கட்சியின் படைப்பிரிவாகத் தமிழ்நாடு விடுதலைப்படையினை நிறுவி , தமிழ்நாட்டில் மாவோயிச, லெனிசிச அடிப்படையிலான பொதுவுடமை அமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்பது தோழர் தமிழரசனின் எண்ணம், செயற்பாடு எல்லாம். 1987இல் தோழர் தமிழரசன் பொன்பரப்பிலிருந்த வங்கியொன்றினை இயக்கத்தேவைகளுக்காகக் கொள்ளையிட முயன்றபோது பொது மக்களால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவர் அவ்விதம் கொல்லப்பட்டது இந்திய மத்திய அரசின் திட்டமிட்ட சதியால் என்று உறுதியாக எடுத்துரைக்கின்றது தோழர் பாலனின் தோழர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்' என்னும் இந்த நூல்.

'தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை' என்னும் இயக்கம் புலிகள் இயக்கத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிளவின்போது உருவான புதியபாதைப்பிரிவில் இயங்கிப்பின்னர் அதிலிருந்து பிரிந்து தோழர் பாலன், தோழர் நெப்போலியன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மாவோயிச, லெனிசிசத்தைத் தம் கோட்பாடாகக் கொண்ட, மக்களின் சமூக அரசிய பிரச்சினைகளுக்கு ஒருபோதுமே முதலாளித்துவ பாராளுமன்ற அரசியல் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதைத் திடமாக நம்பும் புரட்சிகர அமைப்பாகும். அந்த அமைப்பினைச்சேர்ந்த தோழர் பாலனின் பார்வையில் தோழர் தமிழரசனை வைத்து எடை போடுவதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். தோழர் தமிழரசன் பயங்கரவாதியா அல்லது புரட்சிவாதியா என்பதை தோழர் தமிழரசனின் வாழ்க்கையினூடு, அவரது சமூக, அரசியற் செயற்பாடுகளினூடு, அவர் நம்பிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தத்துவங்களினூடு , உணர்ச்சிவசப்படாமல், நிதானமாகத் தர்க்கரீதியாக ஆராய்ந்து தோழர் தமிழரசன் பயங்கரவாதி அல்லர். பொதுவுடமையினை நிறுவுவதாகச் செயற்பட்ட புரட்சிவாதி என்று நிறுவுவதுதான் நூலின் பிரதான நோக்கம். அந்த நோக்கத்தில் இந்நூல் வெற்றியடைந்துள்ளதா என்பதைச் சிறிது நோக்குவோம்.

Last Updated on Thursday, 14 September 2017 22:20 Read more...
 

தொடர் நாவல்: புதிய பாதை ('அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' ) (10 - 12)

E-mail Print PDF

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'   என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் பத்து! அகலிகையும், அவளும் !

அவன் சென்று நெடுநேரமாகி விட்டிருந்தது. இவளுக்கு நித்திரை வரமாட்டேன் என்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறாள். அலுப்பாக, மனம் சினக்கிறது. எழுந்து 'லைற்'றைப்போட்டாள். கண்ணாடியில் தெரிந்த உருவத்தை ஒருவித ஆர்வத்துடன் முதன்முறையாக பார்ப்பதுபோல் பார்க்கிறாள். கூந்தல் விரிந்து தோள்களில் புரண்டு நிற்கிறது. அழகான உதடுகளை உவப்புடன் எடை போட்டாள். கூரிய அகண்ட பெரிய கண்களை வியப்புடன் நோக்கினாள். அவளுக்கு தன்னை நினைக்க சிரிப்பாக இருந்தது. அதே சமயம் பெருமிதமாகவும் இருந்தது. கர்வம் கூட ஓரத்தே எட்டிப்பார்க்கவும் செய்யாமலில்லை. ஏதாவது குடித்தால் பரவாயில்லை போல் பட்டது. பிரிட்ஜிலிருந்து 'ஓரென்ஜ் யூஸ்” எடுத்துப் பருகியபடி சோபாவில் வந்தமர்ந்தாள். ரி.வி.யைத் தட்டினாள். குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. ஊர் ஞாபகம் வந்தது. கடை குட்டிகளின் ஞாபகம் வந்தது. இந்நேரம் ஆவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஏ.கேயும் கையுமாக ஏதாவது சென்றிகளில் நிற்பார்களோ? அல்லது தாக்குதலில் முன்னணியில் நிற்பார்களோ? இவ்வளவு துணிச்சல் அந்தப் பிஞ்சுகளுக்கு எப்படி வந்திருக்க முடியும்? இவளால் அவர்களை உணர்ந்துகொள்வது கஷ்டமாக இருந்தது. சிறுவனின் ஞாபகம் கூட எழுந்தது. சிறுவனின் நட்பு நெஞ்சில் இதமாக இருந்தது. கணவனின் ஞாபகம் எழுந்தது. நெஞ்சில் ஒருவித கனிவு படர்ந்தது. அவனது நெஞ்சிலே படர்ந்து அடங்கி மனப்பாரத்தை இறக்கவேண்டும் போலிருந்தது. நான் எவ்வளவு தூரம் இன்னமும் அவரை விரும்புகிறேன். ஏன் அன்று என் உணர்வுகளுக்கு அடிமையாகிப்போயிருந்தேன்? தன்னையே கேட்டுக்கொண்டாள். எதற்காக? எதற்காக அவர் என்ன குறை வைத்தார். பின் எதற்காக? ஏன் அவ்விதம் நடந்து கொண்டேன்? பதில் அவ்வளவு சுலபமாக கிடைப்பதாக தெரியவில்லை. அன்று இவ்விதம் நடந்துகொண்ட நான் பின் எதற்காக அவர் இன்று நடந்து கொண்ட முறையைக் கண்டு கோபப்பட்டேன்? இவரை நான் உண்மையிலேயே விரும்புகிறேனோ? என் அடிமனதில் இவருடன் வாழ்வதை நான் உண்மையிலேயே விரும்பவில்லையா? எதற்காக என்னுள் இத்தனை முரண்பாடுகள். இப்படித்தான் பொதுவில் எல்லோருமா? அல்லது நான் தான் வித்தியாசமானவளோ? நான் நடந்த முறை தெரிந்தும் இவர் எப்படி என்னை ஏற்க முனைந்தார்? என்னில் ஏற்பட்ட கோபத்தை விட அவர் என்னை விரும்புகிறாரா? இவ்வளவு நிகழ்வுகள் சம்பவித்தபின்னும் இன்னும் அவருடன் சேர்ந்து வாழ்வது இயலக்கூடியது தானா? என்னால் தான் இயல்பாக இருக்கமுடியுமா? இவருக்கு துரோகம் செய்த நான் எதற்கு இன்று இவ்விதமாக ஆசைப்படுகின்றேன். நான் சுயநலக்காரியா? இந்தக் கேள்விகளைக் கேட்பதன்மூலம் தன்னை மேலும் அறிய முயன்றாள். இவ்வாறான நேரங்களில் சோர்வு நீங்கி ஒருவித தென்பில் மனம் துள்ளி எழுந்து விடுகிறது. செய்த செயல்களில் சரி,பிழைகளை சரியாக இனம் காண்பதன் மூலம் தவறுகளுக்கு பொறுப்பேற்பதன்மூலம் மனம் சுத்தமாகிவிடுகிறது. ஆடிப்பாடத் தொடங்கிவிடுகிறது.

Last Updated on Saturday, 25 August 2018 04:40 Read more...
 

கட்டுரை: 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -

E-mail Print PDF

- கடந்த ஆண்டு வெளியான 'கணையாழிக் கட்டுரைகள் (1995 - 2000) ' என்னும் தொகுப்பு நூல் பற்றிய எனது விமர்சனம் செப்டம்பர் 2017 'கணையாழி' இதழில் வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அக்கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. - வ.ந.கி -


கணையாழிக் கட்டுரைஅண்மைககாலத்தில் வெளிவந்து நான் வாசித்த கட்டுரைத்தொகுதிகளில் சிறந்த தொகுதிகளிலொன்றாகக் 'கணையாழிக்கட்டுரைகள் (1995-2000) தொகுதியினைக் கருதுவதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. இந்தக்கட்டுரைதொகுதி என்னைக் கவர்வதற்குக் காரணமாக  இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் கூறுபொருள், கட்டுரைகளின் மொழிநடை ஆகியவற்றையே குறிப்பிடுவேன்.

கட்டுரைகளின் கூறுபொருள்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் கூறுபொருள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் எனக் கட்டுரைகள் பல விடயங்களைப்பற்றிக் கூறுபவை. இலக்கியத்தை என்னும் அதை மேலு பல உபபிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். கவிதை, படைப்பாளிகளின் படைப்புத்தன்மை, நாடகம், மொழிநடை (வட்டாரத்தமிழ் போன்ற), மேனாட்டு இலக்கிய அறிமுகம், நூல் அறிமுகம் இவ்விதம் இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது தேர்வாளர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகின்றது. இப்பிரிவிவில் வெளியான கட்டுரைகள் வெளிப்படுத்தும் விடயங்கள், தகவல்களும் பற்பல.

படைப்பாளிகளைப்பற்றிய கட்டுரைகளாகச் சா.கந்தசாமியின்  'ஒரு படைப்பாளியின் நடைப்பயணத்தில்' , 'ஆருயிர் கண்ணாளுக்கு' (எழுத்தாளர் புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய நெஞ்சினைத் தொடும் கடிதம்), 'கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்'(பிரபஞ்சனின் கலைஞர் படைப்புகள் பற்றிய பார்வை), சா.கந்தசாமியின் 'இலக்கிய சரிதம்' , தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்', விக்கிரமாதித்யனின் 'நவீன கவிதை பிரமிளுக்கு முன்னும் பின்னும்' , ஞானக்கூத்தனின் 'டி.எஸ்.இலியட்டும் தமிழ் நவீன இலக்கியமும்' , அசோகமித்திரனின் 'சக பயணி' போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

அசோகமித்திரனின் கட்டுரைகளில் கூறப்படும் பொருளுடன் பல்வேறு தகவல்களும் காணப்படுவது வழக்கம். இங்கும் 'சக பயணி' என்னும் அவரது சிறு கட்டுரை கோமல் சுவாமிநாதனைப்பற்றி குறிப்பாக அவரது நாடக, சினிமா முயற்சிகளைபற்றி, அவர் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட 'சுபமங்களா' பற்றி, கோமலின் இறுதிக்காலத்தைப்பற்றிச் சுருக்கமாகப் பதிவு செய்யும் கட்டுரை அறுபதுகளில் நடிகர் சகஸ்ரநாம் சேவா ஸ்டேஜ் நாடகக் குழு பற்றி, அறுபதுகளில் உஸ்மான் சாலையின் தென்பகுதியிலிருந்த தி.நகர் பஸ் ஸ்டாண்ட் பற்றியெல்லாம் மேலதிகத் தகவல்களைத் தருகின்றது.\

தஞ்சை ப்ரகாஷின் 'எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்' என்னும் கட்டுரை எம்.வி.வி.யின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் சமயம், எழுத்தாளர் நீலமணி பற்றியும், சுதேசமித்திரன் பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கின்றது. பொருளியல்ரீதியில் எவ்வளவோ சிரமங்களை இருப்பு அவருக்குக் கொடுத்தபோதும் எம்.வி.வி ஒருபோதுமே 'அவர் வியாபார எழுத்தில் , வெகுஜன ரசனையில் என்றுமே ஈடுபாடு வைத்ததில்லை' என்றும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுவார்.

Last Updated on Wednesday, 06 September 2017 21:44 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 262: கே.எஸ்.சுதாகரின் 'சேர்ப்பிறைஸ் விசிட்'

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 262: கே.எஸ்.சுதாகரின் 'சேர்ப்பிறைஸ் விசிட்' கே.எஸ்.சுதாகர்புகலிட எழுத்தாளர்களில் நகைச்சுவை உணர்வு ததும்ப முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர். வாசிக்கும்போது அவ்வப்போது இதழ்க்கோடியில் புன்னகையை வரவழைக்கும் எழுத்து அவருடையது. நான் வாசிக்கும்போது அனுபவித்து வாசிப்பது வழக்கம். அவருடைய சிறுகதைகளிலொன்று புகலிடத்தமிழ்க் குடும்பமொன்றின் உளவியலை நகைச்சுவை உணர்வு ததும்பச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றது. வாசிக்கும்போதும், வாசித்து முடித்த பின்பும் சிறிது நேரம் என்னால் எழுந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

கதை இதுதான். 'சேர்ப்பிறைஸ் விசிட்' என்பதுதான் கதையின் தலைப்பு. நீண்ட நாட்களாக வருகை தராமலிருந்த இராசலிங்கம்/சுலோசனா தம்பதியினர் திடீரென் சிறீதரன்/பவானி தம்பதியினர் இல்லத்துக்குச் 'சேர்ப்பிறைஸ் விசிட்' அடிக்கின்றனர் :-)

"கனகாலமா வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு" என்று 'சும்மா'வைச் சற்றே அழுத்திச்சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து , "அப்பிடியெண்டில்லை. இனி ஈஸ்வரன் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப்பதினைந்து டொலர் பெற்றோலுமில்லே செல்வாகுது" காசைக் காரணம் காட்டினாள் சுலோசனா.

"நாங்கள் நினைச்சோம்.. உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு" உதட்டுக்குள் சிரித்தாள் பவானி."

இவ்விதம் கதை செல்கின்றது. 'உதட்டுக்குள்' சிரித்தாள் என்னும் சொற்பதம் அழகாக பவானியின் உளவியற் போக்கினை வெளிப்படுத்துகின்றது.

அதன்பிறகு கதை இவ்வாறு தொடர்கின்றது.

"அதன்பிறகு கோபம் நீக்கி சம்பிரதாயமான உரையாடல் சுகம் விசாரிப்பு, தேநீர் விருந்துபசாரம் மேற்கொண்டு நேரம் நகராத வேளையில் சுலோசனா இராசலிங்கத்தைப் பார்த்து கண்ணை வெட்டினாள். இராசலிங்கம் உதட்டுக்குள் சிரிப்பொன்றைத் தவழ விட்டார். ஏதோவொன்றை முடிச்சவிழ்க்கும் முஸ்தீபில் செருமினார்.

'உங்களுக்கொடு சேர்ப்பிறைஸ் விஷயமொண்டு சொல்ல வேணும். மவுன்ற் டண்டினோங்கிலை நாங்கள் ஒரு புது வீடொன்று கட்டி இருக்கிறம். ' சுப்பர் மார்க்கெட்டில் அரிசி, சீனி வாங்கியது போலச் சொன்னார் இராசலிங்கம்.'

Last Updated on Sunday, 03 September 2017 10:50 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 261: எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கடிதமும், அதற்கான எனது பதிலும்

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதிஞானம் சஞ்சிகையின் ஆகஸ்ட், செப்டம்பர் இதழ்களில் வெளியான என்னுடனான நேர்காணல் பற்றி எழுத்தாளர் முருகபூபதி அனுப்பிய கடிதமும், அதற்கான எனது பதிலும் ஒரு பதிவுக்காக.

முருகபூபதி: "அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். ஞானம் இதழ்களில் வெளியான தங்கள் நேர்காணல் படித்தேன். வாழ்த்துக்கள். தங்களைப்பற்றிய முழுமையான அறிமுகம் எனக்கு கிடைத்துள்ளது. உங்கள் வாழ்வில் நிறைய சாதித்திருக்கிறீர்கள். தங்கள் பதிவுகள் பற்றி அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களிடத்திலும் குறிப்பிட்டேன். அவர்களுக்கு உசாத்துணையாக விளங்கக்கூடிய பல விடயதானங்கள் தங்கள் பதிவுகளில் வருகின்றன. அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை, இந்தியா உட்பட வெளிநாடுகளிலிருந்து வரும் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களிடத்திலும் பதிவுகள் பற்றி குறிப்பிட்டேன். தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் இணையத்தளத்தை நடத்திக்கொண்டுமிருக்கும் தங்கள் உழைப்பு பெறுமதியானது. காலம் உங்களை மதிக்கும். வாழ்த்தும். நல்லதோர் நேர்காணலை வெளியிட்ட ஞானம் இதழுக்கும் அதற்கு வழிவகுத்த கே.எஸ். சுதாகரனுக்கும் எமது வாழ்த்துக்கள். அன்புடன், முருகபூபதி"

நான்: "அன்புள்ள திரு.முருகபூபதி அவர்களுக்கு, நன்றி உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு. 'பதிவுகள்' மூலம் நானடைந்த முக்கியமான நன்மைகளிலொன்று உங்களைப்போன்ற படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதுதான். அமரர் வெ.சா, நீங்கள் மற்றும் இன்னும் பலருடன் இலக்கியரீதியிலான தொடர்புகளும், கருத்துப்பரிமாறல்களும் மிகுந்த பயனுள்ளவை. உங்களது கலை, இலக்கியக் கட்டுரைகள் உண்மையில் சிறப்பானவை மட்டுமல்ல ஆவணச்சிறப்பும் மிக்கவை. ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனாகவும் விளங்குபவை. எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதுடன் நின்று விடாது , அவர்களுக்கும் உங்கள் கருத்துகளைத்தெரிவிப்பதானது உங்களது நல்ல உள்ளத்தை வெளிப்படுத்துகின்றது. உங்களது கருத்துகளையும், எழுத்துக்களையும் நான் உயர்வாக மதிக்கின்றேன். நன்றி உங்கள் கருத்துகளுக்கு. அன்புடன், வ.ந.கிரிதரன்"

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!

E-mail Print PDF

அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!
அனிதாவுக்கு அஞ்சலி!அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!

'ப்ளஸ் டூ தேர்வில்' 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், 'நீட்' தேர்வு காரணமாகத் தன் வாழ்வை முடித்துக்கொண்ட மாணவி அனிதாவின் மறைவுச் செய்தி இன்று என்னை மிகவும் பாதித்த செய்தி. வறுமைச்சூழலிலும் அவர் திறமையாகப் படித்திருக்கின்றார். ப்ளஸ் டூ'வில் 1176 மதிப்பெண்கள் வாங்கியிருக்கின்றார். இவ்விதம் திறமையாகச் சித்தியடைந்திருந்தும் அனிதாவுக்கு மருத்துவ பீடத்துக்கான இடம் கிடைக்கவில்லை. முறையற்ற அமைப்பு அநியாயமாக ஒரு திறமையான மாணவியின் உயிரைப்பறித்துள்ளது.

அனிதா! உன் விடாமுயற்சியாலும், திறமையாலும் நீ உன்னைப்பெற்றவர்களுக்குப் பெருமை சேர்த்தாய். நீ பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தாய். இருந்தும் உன்னை இந்த அமைப்பு பாதுகாக்கத்தவறி விட்டதே! ஊழற் பெருச்சாளிகளையெல்லாம் காப்பதற்காகக் கோடிகளைக் கொட்டும் நீ பிறந்த மண்ணில் இறுதி நேரத்தில் உன்னைக் காப்பாற்ற யாருமில்லையே என்பது சோகத்தைத்தருகின்றது. புது தில்லி வரை சென்று போராடிய உன் துணிச்சலை நான் போற்றுகின்றேன். உன் முடிவு சோகத்தைத்தந்தாலும், எதிர்காலத்திலாவது அனிதாக்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகவாவது உன் முடிவு வழி கோரட்டும். இருந்தாலும் உன் முடிவானது மிகப்பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத இழப்பு.

உனது முயற்சியும், திறமையும் எல்லோருக்கும் அவ்வளவு இலேசில் கிடைத்துவிடுவதில்லை. உனக்கு அவை கிடைத்திருந்தன . இருந்தும் அவற்றை யாரும் இனங்காணவில்லையே என்பது இதயத்தைத் தாக்குகின்றது. ஆனால், உனது முடிவால் உன்னை இம்மண் இழந்து விட்டாலும், நீ வரலாற்றில் எப்பொழுதும் நிலைத்து நிற்பாய். எத்தகைய சூழலிலும் திறமையாகக் கற்க முடியுமென்பதற்கு உன் சாதனைகள் முன்மாதிரியாக இருக்கட்டும். சிறுமியாகத் தனித்து உன் உரிமைக்காக நீதி கேட்டுப் புது தில்லி வரை சென்றாயே. அந்தப்போர்க்குணத்தால், மனவுறுதியால் நீ எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்து விட்டாய்.
Last Updated on Friday, 01 September 2017 23:03 Read more...
 

வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 2 (சென்ற இதழ் தொடர்ச்சி) , கண்டவர்: கே.எஸ்.சுதாகர் [ஞானம் , இலங்கை, சஞ்சிகையின் செப்டம்பர் 2017 இதழில் வெளியானது.]

E-mail Print PDF

வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 2 - இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'ஞானம்' மாத சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017 இதழில் நேர்காணலின் முதற் பகுதி வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அது இங்கு மீள்பிரசுரமாகின்றது. -

(வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.)


நேர்காணல் பகுதி 2

9. நீங்கள் எழுதிய அறிவியல் / அமானுஷ்ய சிறுகதைகள், புகலிட வாழ்வனுபவம் சார்ந்த படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.

எனக்கு அறிவியற் துறையில் மானுட இருப்பினை அறிந்து கொள்வதற்குரிய துறைகள் மிகவும் பிடிக்கும். உளவியல், உயிரியல், மானுட சமுதாயப்பொருளியல் மற்றும் வானியற்பியல் ஆகிய துறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவற்றில் வானியற்பியல் எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்த துறை. என் சிந்தனையை விரிவு வைக்கும் துறை. இத்துறையில் ஸ்டீபன் ஹார்கிங்ஸ், பிரயன் கிறீன் மற்றும் மிஷியோ ககு போன்றொர் சாதாரண மக்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய வானியற்பியல் சம்பந்தமான அறிவியல் நூல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் யாவரும் சிறந்த அறிவியல் அறிஞர்கள். தாங்கள் அறிந்ததை, புரிந்துகொண்டதை, கண்டு பிடித்ததை எல்லாம் சாதாரண மக்களும் அறிந்துகொள்வது அவசியம் என்று கருதுபவர்கள். ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம், குவாண்ட இயற்பியல் போன்ற துறைகளைப்பற்றி சாதாரண வாசகர்களும்  புரியும் வகையில் இவர்கள் எழுதினார்கள். பிரபஞ்சம் பற்றிய இவர்கள் பற்றிய கருதுகோள்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக மூன்று பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்களை உள்ளடக்கி உயிரினங்கள், இப்பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சங்கள் இருக்கக் கூடிய சாத்தியங்களைப்பற்றியெல்லாம் இவர்களின் நூல்கள் விபரித்தன.  இப்பல்பரிமாண உலகும், உயிர்களும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் எப்பொழுதும் எனக்கு மிகவும் வியப்பினைத் தந்த அதே சமயம் என் சிந்தனையையும் கேள்விகளுக்குள்ளாக்கி விரிவுபட வைத்தன. நான்  எழுதிய அறிவியற் சிறுகதைகளில் 'தேவதரிசனம்' மற்றும் 'நான் அவனில்லை' ஆகியவை  முப்பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு' 'தொலைகாவுதல்' (Teleporting) என்னும் அடிப்படையில் ஆத்மா என்னும் தத்துவத்தையும் இணைத்துச் சிந்தித்ததன் விளைவாக உருவான சிறுகதை.

Last Updated on Friday, 01 September 2017 17:17 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 260 : ஆங் சான் சூகியே விழித்தெழு! ஆகஸ்ட் 30: சர்வதேசக் காணாமற் போனோர் நாள்! - வ.ந.கிரிதரன் -

E-mail Print PDF

ஆங் சான் சூகியே விழித்தெழு!

உனக்கு ராஃப்டோ விருது தந்தார்கள்
உனக்கு சாக்கரோவ் விருது தந்தார்கள்.
அமைதிக்கான நோபல் விருதும் தந்தார்கள்.
இந்திய அரசினரும் தம் பங்குக்கு
சவர்கலால் நேரு விருது தந்தார்கள்.
உன்னை மனித உரிமைகளின்
நாயகி என்றார்கள்.
உன் மண்ணில், உன் காலுக்குக் கீழ்
மதத்தின் பெயரால்,
இனத்தின் பெயரால்,
ஓரினத்து மக்கள் ,
ரொகின்யா இன மக்கள்,
உரிமைகளிழந்து
உடல்ரீதியாக, உளரீதியாக
வாதைகள் அடைகின்றார்களே!
உயிரிழக்கின்றார்களே!
மனித உரிமைகளின் செயல் வீராங்கனையே!
ஜனநாயகமும், விடுதலையும்
ஒருபோதும் கைவிடப்படாத கனவுகள் என்றாயே!
எங்கே உன் உரிமைக்குரல்?

Last Updated on Wednesday, 30 August 2017 22:43 Read more...
 

தொடர் நாவல்: புதிய பாதை ('அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' ) (7 - 9)

E-mail Print PDF

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'  என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் ஏழு: 'டீச்சரி'ன் கடந்த காலம்!

அன்று அவனுக்கு நிறைய வேலைகளிருந்தன. "மான் பவரிற்கு போனான். வேலை ஏதாவது கிடைக்குமா என நோட்டம் விட்டான். 'போஸ்ட் ஒபிஸ்"க்கு சென்றான். வீட்டிற்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை போஸ்ட் பண்ணினான். பெல் கனடாவிலிருந்து றெட் நோட்டிஸ் வந்திருந்தது. ஜெராட் ஸ்குயரில் உள்ள பெல் கனடாவில் போய் பணம் கட்டினான். இவ்விதமாக நாள் முழுக்க பரபரப்பாக இருந்தான். நேற்று இரவு மாமா மகனும் மற்றவர்களும் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அவளது கடந்த கால வாழ்வு பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. அதைப் பற்றி அவளிடம் கேட்கவும் அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் சுற்றியிருக்கிறவர்கள் சும்மா இருக்கப் போவதில்லையே. அவன் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை. ஏற்கனவே ஓராயிரம் பிரச்சனைகள் அவனைச் சூழ்ந்திருந்தன. ஆனால் அவனால் அவளுக்கு பிரச்சனைகள் வருவதை அவன் விரும்பவில்லை. அவளது சூழ்நிலைகள் புரியாமல் அவள் வாழ்வில் குறுக்கிடுவதையும் மனம் ஏற்கவில்லை.

இதற்கு ஒரே வழி? அவளிடமே எல்லாவற்றையமே கேட்டு விட வேண்டியது தான். இவ்விதம் எண்ணினான். பிரச்சனையில் கனம் குறைந்தது போல் உணர்ந்தான். சில வேளைகளில் பிடிக்காதவற்றையும் செய்வதன் மூலம் பிரச்சனைகள் தீரும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இவ்விதம் தனக்குள் எண்ணிக் கொண்டான். இதுவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றே".

இவ்விதமான முடிவுகளுடன் அன்று 'பார்க்கில் அவன் காத்திருந்தான். வழமையாக ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுபவள் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படித்தான் ஒரு விசயத்தை வேண்டுமென்ற ஆவலுடன் செய்யும்போதுதான் தடங்கல்கள் ஏமாற்றங்கள் சம்பவித்து விடுகின்றன. ஏனைய சமயங்களில் தாராளமாக கிடைக்கும் பொருள் தேவைப்படும் சமயங்களில் தான் காணாமல் போய் விடுகிறது என்று எண்ணிக் கொண்டான். அன்று அவளைச் சந்திக்க வேண்டுமென ஒரு வித எதிர்பார்ப்புடன், ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் அவளோ வரவில்லை. நெடுநேரம் தனிமையில் அமர்ந்திருந்து விட்டு 'அப்பாட்மென்ட் திரும்பும் போது அவளிருப்பிடம் செல்வோமா' என ஒரு கணம் நினைத்தான். மறுகணமே இவ்விதமாகவொருவித நினைவு கூட எழுந்தது. "அவள் வருவதாயிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். அவள் வராமலிருப்பதற்கு ஏதாவது தவிர்க்கக் முடியாத காரணம் இருக்க வேண்டும். இந்நிலையில் அவளைத் தொந்தரவு செய்வது நல்லதல்ல"

ஆனால் அவள் அன்று மட்டுமல்ல தொடர்ந்தும் வராமலே இருந்தாள். அதுதான் அவனுக்கு புதிராகப் பட்டது. வியப்பைத் தந்தது. எங்கேயோ ஏதோ ஒன்று பிழைத்திருப்பது புரிந்தது. தொடர்ந்தும் இப்படியே தொடர்வது சரியாகப்படவில்லை. அன்று அவளிடம் செல்வதாக தீர்மானித்தான். இதே சமயம் பிறந்த மண்ணிலோ மோதல்கள் உக்கிரமடைந்திருந்தன. குடாநாட்டைச் சுற்றி வர அரசபடைகள் சுற்றி வளைத்திருந்தன. இம்முறை நிலைமை மக்களுக்குப் பாதகமாக இருப்பதாகவே பட்டது. தமக்குள் ஒற்றுமையின்மை, அயல்நாட்டின் ஆதரவின்மை. எதிர்காலம் பயங்கரமாகத் தெரிந்தது. நடப்பதைக் கண்டு கொள்ள வேண்டியது தானென எண்ணினான். அம்மாவின், தங்கச்சியின் ஞாபகம் எழுந்தது. ஒன்றாக இருந்த காலங்களை எண்ணி நெஞ்சு சிலிர்த்துக் கொண்டது. கூடவே அவளது குடும்ப நிலைமையையும் நினைத்துப் பார்த்தான். அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம். போலவும் பட்டது. எல்லாவற்றுக்கும் அவளைப் பார்ப்பதே சரியானதாகவும் தோன்றியது.

Last Updated on Saturday, 25 August 2018 04:41 Read more...
 

கவிதை: மின்னற்சுடர்!

E-mail Print PDF

courtesy: Art - lightning_woman_by_memeticus

மின்னற்பெண்ணே!  நீ மீண்டும்
என் முன்னால்
மின்னினாய்.
ஆயின் இம்முறை முன்னரைப்போல்
மீண்டும் மறைந்து விடாதே.
உன் ஒளிதரும் வெளிச்சத்தில்
இப்பிரபஞ்சத்தை இன்னும் அதிகமாகச்
சுகித்திடவே விரும்புகின்றேன்.
எட்டாத உயரத்தில் நீ
இருப்பதையிட்டு எனக்குக்
கவலையில்லை.
நீ இருக்கும் இடத்திலேயே
இருந்துகொள்
மின்னலாக அல்ல
விண்சுடராக.
Last Updated on Monday, 21 August 2017 20:50 Read more...