Saturday, 24 November 2012 23:56
- வ.ந.கிரிதரன் -
கணித்தமிழ்
அண்மையில் மறைந்த ஈழநாதனின் வாழ்நாள் குறுகியது. இளம் வயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தவருக்கு பேரிழப்பு. அவரது கலை, இலக்கிய உலக நண்பர்களுக்கும் பேரிழப்பே. 'நூலகம்' தளம் இன்று முக்கியமானதோர் ஈழத்துத் தமிழ நூல்களின் ஆவணச் சுரங்கமாக விளங்குகின்றது. இத்தளத்தின் தோற்றத்திற்கும், ஆரம்பகால வளர்ச்சிக்கும் ஈழநாதன் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. நூலக நிறுவனத்தின் மாதாந்த செய்திக் கடிதத்தின் அண்மைய பதிப்பு ஈழநாதன் நினைவிதழாக வெளிவந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழநாதனின் பங்களிப்பு இன்னுமொரு வகையிலும் நினைவு கூரத்தக்கது. பல்வேறு படைப்பாளிகளின் இணையத்தளங்கள், வலைப்பதிவுகளில் வெளியாகும் படைப்புகளை வாசிப்பதோடு மட்டுமல்லாது அவற்றுக்குக்கான பின்னூட்டங்களில் தன் கருத்துகளையும் பதிவு செய்திருக்கின்றார். கூகுள் தேடுபொறியில் அவரது பெயரையிட்டுத் தேடினால் அவ்விதமான சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர அவர் வலைப்பதிவுகள் சிலவற்றையும் நடாத்தி வந்தார். அவற்றைப்பற்றி பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
Last Updated on Sunday, 25 November 2012 00:27
Read more...
Sunday, 11 November 2012 22:26
- கா.இரி.சதிசு தமிழாசிரியர் புதுச்சேரி -
கணித்தமிழ்
இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள். அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது. சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன. சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன. இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில் அவை சேரா. இணையத்தில் மட்டுமே வெளிவந்து, செய்திகளை வழங்கும் இதழ்களை இணைய இதழ்கள் என்று கூறலாம். இணையத்தின் முதல் இணைய இதழாக ‘திண்ணை’ என்னும் இதழ் தடம் பதித்தது. இதன் பின்னர் பல இதழ்கள் செய்திகளை வழங்கத் தொடங்கின. தமிழுக்கென்று மட்டும் பல இதழ்கள் நடத்தப்பட்டன.
Last Updated on Sunday, 11 November 2012 22:37
Read more...
Wednesday, 20 June 2012 19:51
- முனைவர் மு. பழனியப்பன், ஸ். ராமகிருஷ்ணன், முனைவர் மு. இளங்கோவன், முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர், பத்ரி சேஷாத்ரி, சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., முனைவர். மு. இளங்கோவன் -
கணித்தமிழ்
இணையத்தில் தமிழ்!
- முனைவர் மு. பழனியப்பன் -
தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.
Last Updated on Wednesday, 20 June 2012 20:14
Read more...
Wednesday, 20 June 2012 19:45
- லூசியா லெபோ -
கணித்தமிழ்
அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும் இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை. திண்ணை: வீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும் இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப் பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று. தட்ஸ் தமிழ்: இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். வார்ப்பு: தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் 'நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு 'வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள 'நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம். பதிவுகள்: 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம். கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (தமிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.
Last Updated on Wednesday, 20 June 2012 19:50
Read more...
Tuesday, 26 July 2011 22:46
- முஜிப் ரகுமான -
கணித்தமிழ்
கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா?கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது.இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம். கம்ப்யூட்ட ர் கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுல் பட்டியலிட்டுள்ளது.புதிய புரோகிராமிங் மொழிகள், எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, இணையதள பாதுகாப்பு,ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகல் தொடர்பான இணைய பாடங்கள் வீடியொ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன.ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம்.கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
Last Updated on Wednesday, 27 July 2011 15:45
Read more...
Saturday, 23 April 2011 21:28
ஆசிரியர், பதிவுகள்
கணித்தமிழ்
பதிவுகள் வாசகர்களே! நண்பர்களே! உறவினர்களே! உங்கள் அனைவருக்கும் அவ்வப்போது உங்களது நண்பர்களிடமிருந்து அல்லது ஏன் உங்களிடமிருந்தே கூட பல்வேறு வகையான மின்னஞ்சல்கள் வரலாம். இத்தகைய மின்னஞ்சல்கள் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வருவதே வழக்கமாகுமென்பதையும் அறிந்திருப்பீர்கள். இத்தகைய மின்னஞ்சல்களைப் பற்றி இணையத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் புதியவர்களோ தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து இத்தகைய மின்னஞ்சல்கள் வரும்போது அதிர்ச்சியடைந்து விடுவார்கள். சில வேளைகளில் தேவையற்ற குழப்பங்களும், சஞ்சலங்களும் இவ்வகையான மின்னஞ்சல்களினால் ஏற்பட்டுவிடும் அபாயமும் உண்டு. இதனைத் தடுப்பதற்கு சரியான வழிமுறை இத்தகைய மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றனவென்பதை அறிந்து கொள்வதுதான். அவ்விதம் அறிந்த பின்னர் அவ்விபரங்களை உங்களுக்கு இணையச் சேவையினை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவித்து விடுங்கள். ஆயினும் ஒருபோதுமே இவ்விதமான மின்னஞ்சல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. இவ்விதமான சந்தேகத்திற்கிடமாக வரும் மின்னஞ்சல்களை உடனேயே அழித்து விடுவதுதான் சரியான நிலைப்பாடு. சரி இப்பொழுது இவ்வகையான மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றவென்பதை எவ்விதம் அறிந்துகொள்வது என்பதைப் பார்ப்போம்.
Last Updated on Saturday, 23 April 2011 21:31
Read more...
Wednesday, 23 March 2011 13:26
சு. குணேஸ்வரன்
கணித்தமிழ்
[கணித்தமிழ் பற்றி குறிப்பாக இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம். இணைய இதழ்கள் பற்றிய மேற்படி கட்டுரைகளின் தொகுப்பானது இணைய இதழ்கள் பற்றியதோர் ஆவணங்களின் தொகுப்பாகமிருக்கும்; அதே சமயம் இணைய இதழ்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வோருக்குப் பேருதவியாகவுமிருக்கும் -பதிவுகள்]
1. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்
- சு. குணேஸ்வரன் -=
1.0 அறிமுகம்
புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.
2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள் கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும், ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும, புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு “கவிதைகள் புனைகதைகள் விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு குறைந்த எண்ணிக்கைப் பிரதிகளை வெளியிடும் இதழ்கள். நீடித்த ஆயுளைக் கொண்டிராதவையுங்கூட.” (1)
Last Updated on Wednesday, 20 June 2012 20:04
Read more...
Monday, 28 February 2011 14:00
முனைவர் மு. பழனியப்பன்
கணித்தமிழ்
 ஆயிரத்துத் தொள்ளாயிரத்து என்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் அதன் வளர்ச்சி குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணை கருவியாகப் பயன்பட்டு வந்தது.
Last Updated on Tuesday, 05 April 2011 16:53
Read more...
Monday, 01 September 2008 00:00
- முனைவர் மு. இளங்கோவன் -
கணித்தமிழ்
22.08.2008 மாலை சிங்கம்புணரியில் நீண்ட நேரம் நின்றும் பேருந்து இல்லை.மழை பெய்தபடி இருந்தது.மதுரை செல்லும் பேருந்து வரவில்லையாதலால் கொட்டாம்பட்டி சென்றால் விரைவுப் பேருந்துகள் கிடைக்கும் என்றனர்.கொட்டாம்பட்டிக்கு அங்கிருந்து நகர் வண்டியில் சென்றேன்.அங்கிருந்தும் பேருந்துகள் வாய்ப்பாக இல்லை.கூட்டம் மிகுதியாக இருந்தது.அவ்வழியில் மகிழ்வுந்து ஒன்று வந்தது.அதில் ஏறிக்கொண்டேன். கையில் கைப்பையும்,மடிக்கணினிப் பையும் தோள்பட்டைகளைப் பதம் பார்த்தன.இப்பொழுது செலவு இனித்தது.போக்கில் இருக்கும் பொழுது அறிஞர் தமிழண்ணல் அவர்கள் செல்பேசியில் அழைத்தார்கள்.பிறகு பேசுவதாக ஐயாவிடம் தெரிவித்துவிட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த நண்பர் முத்துராமன் அவர்களுக்குப் பேசினேன்.
Last Updated on Wednesday, 28 September 2011 20:16
Read more...
|