Saturday, 11 August 2012 22:41
BY MANJULA WEDIWARDANE
கலை
In 1997, Chandragupta Thenuwara coined the term 'Barrelism' as a way of conceptualizing his opposition to militarization. As the barrels kept invading city squares, urban streets and many other public spaces, he converted the barrels painted in camouflage into works of art. Instead of artistic reproduction of landscapes, he created 'barrelscapes' using the empty exhibition spaces of the art galleries. "If someone asked me to portray the present state of Sri Lankan society, I have nothing to draw but barrels. Barrels have occupied the space around us. Barrels have blocked my view. How can I paint the sky as it hardly can be seen?" he asked during an interview in 1999. Since then more than a decade has elapsed and the war has paused. "We now live in a post-barrelist stage, surrounded by new symbols of militarization" he said to JDS, while his latest exhibition of sculpture and drawings - 'The Monument and Other Works' - is being held at Lionel Wendt Art Gallery in Colombo. Returning to the island in 1993 after completing his postgraduate studies at the Moscow State Art Institute, Thenuwara became head of the Vibhavi Academy of Fine Arts - better known as VAFA - apart from lecturing at the Faculty of Aesthetic Studies at the Colombo University. He was an artist in residence at CAIR, Centre for Art International Research at Liverpool John Moores University and served as a Board Member of the Architectural Association Foundation in London in 1996-97.
Last Updated on Saturday, 11 August 2012 22:51
Read more...
Friday, 29 June 2012 05:45
- ஊர்க்குருவி -
கலை
விஜய் தொலைக்காட்சியின் 'ஏர்டல் சுப்பர் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களின் மத்தியில் மிகுந்த ஆதரவையும், அன்பையும் பெற்ற இளைய பாடகி மகிஷாவின் இசைப்பயணம் நிறைவு பெற்றாலும் , அந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களில் ஒருவராகத் தேர்வுசெய்யப்பட்டு தன் பாடும் ஆற்றலை வெளிப்படுத்திய மகிஷாவின் ஆற்றலும், முயற்சியும் பாராட்டுக்குரியன. அவரது இசைப்பயணம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு எஞ்சியிருந்த ஏனைய பாடகர்களும், பெற்றோர்களும் கண்ணீர் விட்டழுதனர். அது அவர்களுக்கிடையில் நிலவிய அன்பினை வெளிப்படுத்தியது. நடுவர்களாகச் செயற்பட்ட பிரபல பாடகர்களான 'சின்னக்குயில்' சித்ரா, 'மாங்குடி' சுபா, மனோ ஆகியோர் எழுந்து நின்று தங்களது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், கனடாவின் சிறந்த பாடகியாக அவரை குறிப்பிட்டும் மகிழ்ந்தனர். மகிஷா தன் முயற்சியையும், திறமையையும் மூலதனமாக்கித் தமிழக மக்களை, உலகத் தமிழ் மக்களைக் கவர்ந்தார். அனைவருமே அவரைத் தம்முள் ஒருவராக இனங்கண்டார்கள். மகிஷாவின் முயற்சிக்காகவும், ஆற்றலுக்காகவும் அவரைப் பாராட்டுகின்றோம்.
Last Updated on Saturday, 30 June 2012 06:34
Wednesday, 23 May 2012 16:42
- மு.ஹரிகிருஷ்ணன் -
கலை
அன்புடையீர் வணக்கம், கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.மரபார்ந்த தொல்கலைக்ககூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும், அக்கறையையும், அதிகாரங்களுக்கு எதிரான போர்க்குணங்களையும், கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது.
Last Updated on Wednesday, 23 May 2012 17:00
Read more...
Monday, 26 March 2012 02:52
கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை), தடாகம் சர்வதேச கலை இலக்கிய வட்டம் -
கலை
-வானொலி என்றால் அது இலங்கை தான். அது போல வானொலிக் குரலுக்குச் சொந்தக்காரி மதிப்பிற்குரிய அம்மா திருமதி இராஜேஸ்வரி சண்முகம். குழல் இனிது, யாழ் இனிது, மழலைச்சொல் கேளாதவர், ஆனால் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது குரலில் ஒரு ஈர்ப்புச் சக்தி இருக்கின்றது.எழுத்துக்கள் உச்சரிக்கும் பொழுது வார்த்தைகள் சகா வரம் பெறுகின்றன. சொல் நயம், ஒலி நயம், அதற்கெல்லாம் மேலாக இயற்கை கொடுத்த குரல் நயம் அதை உபயோகிக்கக் கூடிய "சூழ் கலை நயம்". வானொலி செய்த பாக்கியமோ, நேயர்கள் செய்த பாக்கியமோ, இலங்கைசெய்த பாக்கியமோ, எல்லாவற்றிக்கும் மேலாக நாம் கேட்கும் பாக்கியம்! மழையின் சாரல்களை அவரின் குரலில் செவிமடுக்கின்றோம். அலங்காரத்தின் அலங்காரமாய் ஜொலிக்கிறார் அவர் குரலால் கேட்கிறோம்.
Last Updated on Monday, 26 March 2012 14:27
Read more...
Saturday, 25 February 2012 18:46
- க.மோகனதாசன், விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக் கழகம், இலங்கை -
கலை
 ஒரு கலைஞன் தான் பார்த்து கேட்டு அனுபவித்த விடயங்களை தனக்கு கை வந்த ஊடகத்தினூடாக வெளிப்படுத்தும் போது அது கலையாகின்றது. கலைஞர்களுக்கிடையே வெளிப்படுத்தும் முறையிலும் கையாளும் உத்திகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களது அனுபவத்தினாலும் பயிற்சியினாலும் சூழலினாலும் வேறுபடுகின்றது. ஒரு கலைப்படைப்பில் சமூகத்திலுள்ள பிரச்சினைகளும் அதிலிருந்து மீள்வற்கான வழிமுறைகளும் கூறப்படும் போது அதன் பெறுமதி இன்னும் அதிகரிக்கின்றது. கலையாக்கங்களில் சமூகத்தின் நிலைமைகளை பிரதிபலிப்போரில் பழைய கதைகளுக்கு புதிய வியாக்கியானங்களையும் புதிய கருத்தேற்றங்களையும் செய்வோரும் உள்ளனர். இது தழுவலாகவோ அல்லது அதே கதையமைப்புடன் சிறு மாற்றத்தினை மேற்கொள்ளும் முறைமையுடையதாகவோ அமைந்து காணப்படும். இராமாயணம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. இதனால்தான் பல இராமாயணங்கள் (கம்பர், வால்மீகி, வசிட்டர், போதாயினர், துளசி, சம்பூர்ணர்,….இராமாயணங்கள்) உருவாயின. இராமாயணம் சமூகத்திற்கான பல்வேறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றது. அந்தவகையில் இராமாயணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு, 2010ல் இராமாயணத்தைத் தழுவியதான கதையமைப்புடன் மணிரத்தினத்தின் இராவணணனும் (சினிமா) இராமாயணத்தின் யுத்த காண்டத்தை அடிப்படையாகக் கொண்டு மௌனகுருவின் இராவணேசனும்(நாடகம்) படைத்தளிக்கப்பட்டுள்ளன.
Last Updated on Saturday, 25 February 2012 19:18
Read more...
Tuesday, 04 October 2011 20:09
- ஊர்க்குருவி -
கலை
அண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தப்பெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான 'சுப்பர் சிங்கர் 3' இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி 'சுப்பர் சிங்கர் 3' நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதே.
Last Updated on Tuesday, 04 October 2011 20:42
Read more...
Tuesday, 14 June 2011 18:05
- கே.எஸ்.பாலச்சந்திரன்
கலை
மீள்பிரசுரம்!
 கொழும்பில் 60களில் நடைபெற்ற நிழல் நாடகவிழா என்னைப்போன்ற நாடக அபிமானிகளுக்கு நல்விருந்தாக அமைந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினமும் ஒன்றாக புகழ்பெற்ற இயக்குனர்களின் நாடகங்கள், சிறந்த கலைஞர்களின் பங்களிப்புடன் மேடையேறின. அவற்றில்; ஒன்றுதான் நடிகவேள் லடிஸ் வீரமணி இயக்கி நடித்த :'சலோமியின் சபதம்' பைபிளில் வரும் சலோமியின் கதையை ஒஸ்கார்வைல்ட் நாடகமாக எழுதியிருந்தார். அதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு லடிஸ் வீரமணியால் மேடையேற்றப்பட்டது. பார்த்தவர்கள் முற்றுமுழுதாக அந்த நாடகத்தின் தன்மையினால் கவரப்பட்டார்கள். ஆரம்பக்காட்சியில் ரோமாபுரி வீரர்கள், கலீலி வீரர்கள் கவர்ச்சியான ஆடை, அணிகலன்களுடன் மேடையில், நிரம்பியிருந்தார்கள். ஏரோது மன்னனின் மாளிகையின் முன்னுள்ள புற்றரையில் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் அவர்கள் பேசிக்கொள்வதும், உலாவிவருவதும் மிகச்சிறந்த நெறியாள்கையின் வெளிப்பாடாக சீருடன் இருந்தது. ஓஸ்கார் வைல்ட்டின் வசனங்களை அவர்கள் அழகு தமிழில் பேசினார்கள். நிலவைப் பார்த்து அவர்கள் பேசினார்கள். சிரியநாட்டு இளைஞன், நிலவு இளவரசி சலோமி போல இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஹேரோதியா அரசியின் பணியாளோ 'நிலவு மரணக்குழியிலிருந்து எழுந்து வந்ததுபோல இருக்கிறது. அது சாவின் துர்க்குறி' என்கிறான். அவர்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வரும் ஏரோது அன்ரிபாஸ் (லடிஸ் வீரமணி) என்ற குறுநிலமன்னன். அவனது பிறந்தநாளைக் குறிக்குமுகமாக நடனமாடும் அவனது பெறாமகள் சலோமி(சந்திரகலா). பாதாளச்சிறையில் இடப்பட்டபோதும், அஞ்சாமல் யேசுவின் வருகையைக்கூறும் ஜோவான் (கலைச்செல்வன்) போன்ற பாத்திரங்கள். தனது பெறாமகளின் ஆட்டத்தினால் மகிழ்வுற்ற ஏரோது அன்ரிபாஸ், 'நீ எதை விரும்புகிறாயோ.. அது உன்னதாகட்டும்' என்று சலோமிக்கு சொல்கிறான். தனது தாயின் தூண்டுதலினால், தனது ஆட்டத்திற்கு பரிசாக ஜோவானின் தலையை ஏரோதுவிடம் கேட்டுப் பெறுகிறாள் சலோமி.
Last Updated on Tuesday, 14 June 2011 18:14
Read more...
Sunday, 08 May 2011 00:16
ROM News
கலை
A North American premiere, this exhibition of original vintage Bollywood cinema artworks features the greatest Bollywood celebrities and award-winning films from India's recent film history. These pieces embody the quirky and colourful style of India's cinema culture, which holds a growing fascination in the West, and is a deep cultural tradition in the East. With an emphasis on cinema showcards from the 1950s to the 1980s, the exhibition includes more than 60 original showcards from the Hartwick collection, a private collection assembled in Mumbai over several decades. Commissioned to promote Bollywood films, these showcards were produced by local artisans who used a combination of photo collage and hand painting to create dynamic and colourful interpretations of scenes from Bollywood films. Along with posters, lobby cards, cinema booklets and photographs from the ROM's collection, Bollywood Cinema Showcards traces a historical and visual journey through the world of Bollywood Cinema.
Last Updated on Sunday, 08 May 2011 00:22
Read more...
Friday, 01 April 2011 00:00
Dr Vasumathi Badrinathan
கலை
Last week, I went for the Homai Vyarawalla retrospective, currently exhibited in Mumbai. The beautiful black and white photos of a bygone era, captured moments of history in a special way that made you want to see and re-see the pictures. They also told the story of a fiery, gutsy young woman ahead of her time, wielding her camera and immortalising precious instances of political history as India’s first woman photojournalist. Confined to a wheelchair, this nonagenarian belies the spirit that went behind her photographs. What a pity it took 90 odd years for her contribution to be recognised with a Padma award just this year!
Last Updated on Friday, 01 April 2011 16:17
Read more...
|