Thursday, 23 May 2013 19:40
- தமிழ் ஸ்டுடியோ.காம் -
நிகழ்வுகள்

நண்பர்களே பேசாமொழி இணைய மாத இதழ் (ஆறாவது இதழ்) வெளிவந்துவிட்டது. இந்த இதழ் முள்ளும் மலரும் திரைப்படத்திற்கான சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. படிக்க: http://pesaamoli.com/index_content_6.html படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பதியவும். இது முழுக்க முழுக்க, இணையத்தில் வெளிவரும் இலவச இதழ். அச்சு வடிவில் வெளிவருவதாக நினைத்துக் கொண்டு நிறைய நண்பர்கள் படிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மேலே உள்ளே இணைப்பை சொடுக்குங்கள். நீங்கள் இதழை இலவசமாக படிக்கலாம். மகேந்திரனின் ஓவியத்தை மிக சிறப்பாக வரைந்துக் கொடுத்த ஓவியர் சீனிவாசனுக்கு பேசாமொழியின் நன்றிகள் பல. அன்புடன் தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009) www.thamizhstudio.com
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Thursday, 23 May 2013 19:26
- முல்லைஅமுதன் -
நிகழ்வுகள்

அன்புடையீர், வணக்கம். காற்றுவெளி மின்னிதழ் சிறு சஞ்சிகை சிறப்பிதழை வெளியிட உள்ளது. எனவே, சிறு சஞ்சிகைகள் பற்றிய கட்டுரை ஒன்றை புதிதாக (வேறெங்கும் வெளிவராத) அனுப்புங்கள். சிறு சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
நட்புடன், முல்லைஅமுதன்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Thursday, 23 May 2013 19:28
Thursday, 23 May 2013 19:11
- themanbookerprize.com -
நிகழ்வுகள்
22 May 2013- "I was recently denied a writing prize because they said I was lazy." runs one of Lydia Davis's two-sentence short stories. Well not any more. Davis has just been awarded the fifth Man Booker International Prize at an award ceremony at the Victoria and Albert Museum in London. Her inventive, carefully-crafted and hard to categorise works saw off the challenge from nine other contenders from around the world. The judges - Professor Sir Christopher Ricks, Elif Batuman, Aminatta Forna, Yiyun Li and Tim Parks - recognised that crafting spare, philosophical and original works, however short, is not for the lazy at all but takes time, skill and effort. The Prize, worth £60,000, is awarded for an achievement in fiction on the world stage and Davis's achievements are writ large despite often using startlingly few words (some of her longer stories only stretch to two or three pages). Her work has the brevity and precision of poetry. Sir Christopher Ricks, chairman of the judges, said her "writings fling their lithe arms wide to embrace many a kind. Just how to categorise them? They have been called stories but could equally be miniatures, anecdotes, essays, jokes, parables, fables, texts, aphorisms or even apophthegms, prayers or simply observations." Davis then is not like any other writer and she follows, and contrasts with, the previous winners of the prize - Ismail Kadaré, Chinua Achebe, Alice Munro and Philip Roth.
Last Updated on Thursday, 23 May 2013 19:21
Read more...
Thursday, 23 May 2013 18:52
- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -
நூல் அறிமுகம்
இலங்கையின் (ஈழத்து இலக்கிய வானில்) தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு கலை இலக்கிய வரலாற்றில் இன்று நிலைக்கும் பெண் கவிஞர்களை (அதிலும் முஸ்லீம் பெண் கவிஞர்களை )விரல் விட்டு எண்ணலாம். அந்த வகையில் மீன் பாடும் தேன்னாடாம் கிழக்கிலங்கையின் கவி மணம் வீசும் பூந்தோட்டமான கிண்ணியாவில் முளைத்து தென்றலாய் சர்வதேச மட்டத்தில் கவிதைகளின் இதமான தடவலாய் தடவிக் கொண்டிருப்பவர்தான் இந்த பாயிஸா அலி. அவர் பிறந்த மண் தமிழ் கவிதை வளம் நிறைந்த மண். கவியூற்று கசியும் நிலம். மரபுக் கவிதை மா மன்னர்கள் நிறைந்த கவிக் குடும்பத்தில் பிறந்த இவர் நவீன கவிதை பிரசவத்தில் கால் பதிப்பது சிறப்பு. தன் கணவருக்கு தன் நூலை சமர்ப்பணமும் செய்து மகிழ்ச்சியும் திருப்தியும் பெறுகின்றார்.
சிந்தனை ஊற்றுக்களால் மனம் மகிழ எழுதும் விதம் கற்றாய் கவிதைத் தரத்தால் இமயச் சிகரம் தாண்டும் தன்மை பெற்றுவிட்டாய் - பாயிஸா
Last Updated on Thursday, 23 May 2013 19:08
Read more...
Tuesday, 21 May 2013 21:01
- வீ.சு.இராமலிங்கம், தஞ்சாவூர் -
நிகழ்வுகள்

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் 'பாரதியைப் பயில...' வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி.
அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
நவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும். ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா? குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா?
Last Updated on Thursday, 23 May 2013 19:22
Read more...
முதலாவது விமரிசனம்!
 ‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், நிலம் நிராகரிக்கப் படுகின்றபோது அரசு மனித நிராகரிப்புகளும் சேர்ந்து கொள்ள சிதைவுறும் குடும்பங்கள் உறவுகள் , இந்திய மண்ணுக்கு தூக்கி எறியப்பட்டவனாக வந்து சேருகின்ற அவலம், இந்திய தமிழகம் அவனுக்கு தந்த வாழ்வுதான் என்ன? இவையே நாவலின் களமாக இருக்கின்றன. இன்றைக்கெல்லாம் நாவல்கள் மூன்று அடிப்படைகளில் தான் வெளி வருகின்றன: தகவல்களின் அடிப்படையில் வியப் பூட்டுவது; பிரதேச மொழியைப் பதிவு செய்வது; இதுவரை அறியப் படாத சம்பவங்கள் என்ற முன்னெடுப்பில் சம்பந்தம் இல்லாத சம்பவங்களால் பக்கங்களை நிரப்புவது. இந்த மூன்று உத்திகளையும் கையிலெடுத்து, அதை போலிச்சடங்குகளாக்கி நாவலுக்கான சுவையை கலைத்தன்மையை இழந்து போன நாவல்களே இன்று அதிகம். அல்லது செய்நேர்த்தி மிகுந்து உண்மைகளை தொலைத்து விட்ட எழுத்துகளுக்கும் இடையில் நல்ல எழுத்தை , கலையும் உண்மையும் கூடிய எழுத்துக்களைத் தேர்வதே வாசகனின் இன்றைய சவால். தகவல்களை பின்னில் விட்டு மனிதனை முன்னிறுத்தி இந்நாவல் செயல்பட்டிருக்கின்றது. வாசகனை அந்நியப் படுத்தாது கூட இழுத்துச் செல்லுகின்ற மொழி, கதையோட்டம் சரியாக இருந்தால் எந்த பிரதேச மொழியும் புரிதலுக்கானதே, என சொல்லாமல் செய்து விட்ட நாவலிது. கதையோட்டத்திற்கு தேவையான சம்பவங்களால் ,தன்னை தகவமைத்துக் கொண்ட நாவலாகவும் இருக்கின்றது.
Last Updated on Tuesday, 21 May 2013 18:06
Read more...
நண்பர் மீராபாரதியின் 'பிரக்ஞை' அண்மையில் வாசித்தேன். தமிழில் இதுபோன்ற நூல்களை எழுதுபவர்கள் ஆன்மிக அடிப்படையில் எழுதுவார்கள். அறிவியலை மறந்துவிடுவார்கள் அல்லது தவிர்த்து விடுவார்கள். மீராபாரதி இந்தத் தவறினைச் செய்யவில்லை. மேற்படி நூலில் பிரக்ஞை பற்றிய மேலை நாட்டு அறிஞர்களின் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே மீராபாரதி பிரக்ஞையினை அணுகியிருக்கின்றார். அவ்வப்போது பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களையும் குறிப்பிட்டிருப்பார். எதிர்காலத்தில் பிரக்ஞை பற்றிய கீழை நாட்டுத்தத்துவங்களின் அடிப்படையிலான நூலொன்றினை எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். மேற்படி நூலில் ஒரு விடயம்தான் எனக்குச் சிறிது நெருடலாக இருக்கிறது. சிந்திக்கும் மனதை, உணர்வுள்ள மனதை பிரக்ஞை என்போம். அதனை நனவு மனமென்றும் கூறுவர். உளவியல் அறிஞர்களின் ஆய்வுகளின்படி மனித மனமானது இரு தளங்களை உள்ளடக்கியுள்ளது. சிந்திக்கும் மனம் (Conscious Mind), சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஆழ்மனம் (Unconscious Mind). இவ்விதமான மனதின் பிரிவுகளை மீராபாரதி முறையே பிரக்ஞை என்றும், பிரக்ஞையின்மை என்றும் குறிப்பிடுகின்றார். பிரக்ஞை என்பது சிந்திக்கும், உணரும் மனம் என்றால் (Conscious Mind), பிரக்ஞையின்மை என்பது சிந்திக்கும் மனம் அற்ற என்றுதான் பொருள்படும். அவ்விதம்தான் ஒரு சாதாரண மனிதர் புரிந்துகொள்வார். இதனை மீராபாரதியும் புரிந்துகொண்டிருக்கின்றார். அதனால்தான் அதுபற்றிய விளக்கமொன்றினையும் மேற்படி நூலின் பக்கம் 61இல் கீழ்வருமாறு தருகின்றார்:
Last Updated on Monday, 20 May 2013 21:03
Read more...
 வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன?, இருப்பார்கள் தான் - அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒரு எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும் குளவியானார். க.நா.சு.வுக்கு அவர் படிப்பினூடேயே, எழுத்தினூடேயே, விமர்சனப் பார்வை என்பது உடன் வளர்ந்தது. விருப்புடன் வளர்த்துக்கொண்டது. ஆனால் செல்லப்பா அப்படியில்லை. விமர்சனம் தேவை என்ற நினைப்பு கடைசியில் க.நா.சுவுடனான பழக்கத்தில் தோன்றியதும்,
Last Updated on Sunday, 19 May 2013 23:25
Read more...
Sunday, 19 May 2013 23:02
-எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -
சிறுகதை
ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள். செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத் தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப் பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது. எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப் படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்கு வந்து தங்கியிருந்தனர்.
Read more...
Sunday, 19 May 2013 21:41
- தகவல்: வி. ரி. இளங்கோவன் -
நிகழ்வுகள்
பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் மற்றும் பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்; ஆகியன இணைந்து நடாத்தும் மூன்றாவது 'இலக்கிய மாலை" நிகழ்வு எதிர்வரும் 02 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை 4. 30 மணியளவில் பாரிஸ் 'சமரா கோணர்" உணவகத்தில் (சுநுளுவுயுருசுயுNவு ளுயுஆயுசுயு ஊழுசுNநுசு) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. பாரிஸ் 'ஸ்ராலின்கிராட் மெற்றோ" (ஆ° : ளுவயடiபெசயன) நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 'சமரா கோணர்" உணவகத்தில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரான்;ஸ் நாட்டில் வாழும் பல கலை இலக்கியப் படைப்பாளிகள் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவர். வி ரி. இளங்கோவனின் புதிய நூல்களான 'இப்படியுமா" சிறுகதைத் தொகுதிää 'அழியாத தடங்கள்" கட்டுரைத் தொகுப்புää 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா"ää மற்றும் 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) ஆகிய நூல்களே வெளியிடப்படவுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது 'இலக்கிய மாலை" நிகழ்வில் இந்நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) நூல் கடந்த செப்டம்பர் மாதம் 27 -ம் திகதி புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு பாராட்டுப்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Sunday, 19 May 2013 21:47
Sunday, 19 May 2013 21:23
- மார்கெரித் த்யூரா; தமிழில - நாகரத்தினம் கிருஷ்ணா -
நாவல்
அத்தியாயம் -10
 மரி கிளாட் கார்பெண்ட்டர்(Marie-Claude Carpenter) அமெரிக்க பெண்மணி. எனது நினைவுத்திறனை நம்புவதால் அவள் பாஸ்ட்டனைச்( Boston) சேர்ந்தவள் என்பது உறுதி. மிகவும் நிர்மலமான கண்கள். வெளிர்நீலம். 1943. இளமஞ்சள்நிறம். வயதுக்கான தளர்ச்சியில்லை, தவிர அழகானவளென்றும் ஞாபகம். முகத்திற் சட்டென்று மின்னலாய் தோன்றி மறையும், கணநேரப் புன்னகை. நன்றாக நினைவிருக்கிறது, தாழ்ந்த குரல், உரத்துபேசுவதைத் தவிர்க்கும் ரகம். நடுத்தர வயதைக் கடந்திருந்தாள், நாற்பத்தைந்துவயது. பாரீஸின் பதினாறாவது வட்டத்தில், அல்மா(Alma)வுக்கு அருகில் வசித்துவந்தாள். அவளுடையது கடைசி மாடி, மிகப்பெரியது, எட்டிப்பார்த்து சேன்(Seine)நதியை வியக்கலாம். குளிர்காலத்தின் இரவு உணவுக்கும், கோடையில் மதிய உணவுக்கும் அங்கு சென்றதுண்டு. அவற்றைப் பாரீஸ் நகரத்திலிருந்த உயர்ரக உணவு விநியோக விடுதிகளிலிருந்து தருவிப்போம். பெரும்பாலும் அவை தரமானவை என்பது உறுதி, ஆனால் வயிறு நிறைந்ததில்லை.
Last Updated on Sunday, 19 May 2013 21:32
Read more...
Sunday, 19 May 2013 21:11
- நடேசன் (ஆஸ்திரேலியா) -
நாவல்
இரண்டாம் பாகம்
சுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மனைவியும் வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிப்பதால் குடும்பம் வசதியாக வாழ முடிந்தது. இரண்டு பேரின் சம்பளப் பணத்தில் பிள்ளைகளின் பாடசாலை ,வீட்டு வாடகை ,குடும்பச் செலவு என செலவு செய்த பின்பும் கையில் பணம் சேமிப்பாக மிஞ்சியது. இதனால் வீட்டுக்குச் சொந்தகாரராக வேண்டும் என்ற ஆசை தொத்திக் கொண்டது. எலி வளையானாலும் தனி வளை தேவை என்ற நினைப்பில் தற்பொழுது இருக்கும் வாடகை வீட்டை விட்டு சொந்தமாக வீடு வேண்டும் என்ற நினைப்பு மனத்தில் வந்து விட்டது. அவுஸ்திரேலியாவில் குடி வந்தவர்களின் பொதுவான கனவு, மெய்ப்படுத்த விரும்பி வீட்டுக் கடனுக்கு, வங்கிகளை அணுகிய போது ‘கவலை வேண்டாம்’ எந்த பிரச்சனையும் இல்லாமல் கடன் தருவதாக கூறினார்கள்.
Last Updated on Sunday, 19 May 2013 21:37
Read more...
Sunday, 19 May 2013 20:59
- வே.ம.அருச்சுணன் (மலேசியா) -
நாவல்
11. மலேசியக் கார்
‘வாடிய பயிர் சூரியனைக் கண்டது போல்’ பசி வயிரைக் கிள்ளிய நேரத்தில் படைக்கப் பட்ட உணவை உண்ண கேட்கவும் வேண்டுமா? அதிலும்,அம்மா தயாரித்த தேநீர் என்றால் பார்த்திபனுக்கு மிகுந்த விருப்பம்.இரண்டு மூன்று கிளாஸ் தேநீரை உருசித்துக் குடிப்பான்.அம்மாவின் கைப்பதம் அவனைக் கிறுகிறுக்கச் செய்துவிட்டிருந்தது! இதை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக அம்மா, பெரிய ஜக்கில் தேநீரைக் கலக்கி கொண்டு வந்திருந்தார். அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் பிரட்டிய மீகூனை சுவைத்து சாப்பிடும் அழகைப்பார்த்து இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் முடிந்த வரை சுவைமிகுந்த உணவை சமைத்துக் கொடுத்து உண்ணக் கொடுத்து மகிழ்வார்.
Last Updated on Sunday, 19 May 2013 21:06
Read more...
['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
“என் உயிரிடத்தில் நான் சொல்வேன். மெதுவாக செல்லவும். நான் குடிக்கும் கண்ணாடி டம்ளர் உலரட்டும். நான் என்னவாக இருக்கிறேன் அல்லது யாராக என்பதில் எனக்கு எந்த பங்குமில்லை. ஒரு வாய்ப்பின் பிறப்பு தவிர . இதற்கு எந்த பெயருமில்லை. என் மரணத்தின் பத்து நிமிடங்கள் முன்பாக டாக்டரை அழைக்கிறேன். பத்து நிமிடங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு போதும்.”
மரணப்படுக்கையின் இறுதியில் மேற்கண்ட வரிகள் பாலஸ்தீனின் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் புனைந்து சென்றவை. தன் இறுதி கட்டத்தில் வாசக சமூகத்தின் மீது கவிதை வரிகளோடு செல்லும் வாய்ப்பு சிலருக்கே மட்டுமே கிடைக்கிறது. அது அவனுக்கான வித்தியாச அனுபவம் கூட. படைப்பு மனத்தின் நெருடிய இடைவெளியில் விகசங்களின் வெளிப்பாடாக இவை அமைகின்றன. அரபு இலக்கிய வெளியில் அந்த விகசங்களை கவிதைகளாக அதிக அளவில் வெளிப் படுத்தியவர் மஹ்மூத் தர்வீஷ். அவரின் கவிதைகள் எல்லா தருணங்களிலும் மரணப்பெருவெளியில், வாழ்விலிருந்து அந்நியமாக்கலுக்கு பணிக்கப்பட்ட, அனாமதேய சூழலின் விளைபொருளாக எழுந்தவையே.
Last Updated on Saturday, 18 May 2013 21:53
Read more...
['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
1) பெண்ணின் உடல் உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் பட்டிருக்கும் பெண்மை, தாய்மை, கற்பு என்பதுபோன்ற பண்பாடுசார்ந்த மதிப்பீடுகளின் மனக்கட்டமைப்பும் மிகமுக்கியமானது. பெண்ணிய இனவியலும், அரசியல் பொருளாதார தளங்களில் விரிந்து செல்லும் பெண்ணிய அரசியலும் இவ்வகையில் அடுத்த கவனத்தை பெறுகின்றன. இவை மேல்/கீழ் என சமூக வாழ்வில் கட்டமைக்கப் பட்டிருக்கும். பாலின படிநிலை அதிகாரத்தின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன. ஒற்றைப் படுத்தப்பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது. ஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.
Last Updated on Saturday, 18 May 2013 20:11
Read more...
['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்று வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
ஊரை விழிகளால் அள்ளி ஞாபகப்பெட்டகத்துள் பூட்டிவைக்க வேண்டியிருக்கிறது. அந்நிய நிலங்களில் விழுந்து காயப்படும்போது மருந்தாகப் பூசிக்கொண்டு மீண்டுமொரு பொய்மிடுக்கில் உலவ அது உதவலாம். சில நண்பர்களைப் போல நாடு,இனம்,மொழி இன்னபிற கரைதல்களை அறுத்தெறிந்து விட்டேற்றியாகும் 'பெரும்போக்கு' மனம் இன்னமும் கூடவில்லை. அறைச்சுவர் தடவி, வேம்பின் பச்சையை விழிநிரப்பி, பூனைக்குட்டிகளின் கால்மிருதில் யாருமறியாதபடி முத்தமிட்டு விடைபெற்றேன். பேரறிவாளர்கள் இந்நெகிழ்வை பெண்ணியல்பு எனக்கூடும். பெருநகருக்கேயுரித்தான பைத்தியக்காரப் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்த கொழும்பில் நுழையும்போது மகிழ்ச்சியாகத்தானிருந்தது. தேவைகளின் குரல்களால் ஓயாமல் அழைத்துக்கொண்டேயிருக்கும் குடும்பம் அற்ற 'தனியறை நாட்கள்' என்னளவில் கொண்டாடத்தக்கன. மடிக்கணனி, சில புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், கடலோரம் மாலை நடை இவை போதும் தனியறை நிரப்புதற்கு. கனடா கடவுச்சீட்டிற்கு இந்திய விசா தர ஒரு வாரம் வேண்டுமென்றது ஒருவகையில் நல்லதாயிற்று.
Last Updated on Saturday, 18 May 2013 20:04
Read more...
[பதிவுகள் இணைய இதழின் ஆகஸ்ட் 2007 இதழ் 92 இதழில் வெளியான பிரமிள் பற்றிய கட்டுரையினை இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதிக்காகப் பதிவு செய்கின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் மகாகவி பாரதிக்குப் பின்னர் தமிழ் இலக்கிய உலகில் பாரதியைப் போன்றதொரு தேடல் மிக்க படைப்பாளிகளில் முதன்மையானவராகப் பிரமிளையே காண்கின்றோம். பிரமிளும் பாரதியைப் போல் தான் வாழ்ந்த சமூகத்தின் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த அதே சமயம் இருப்பு பற்றிய தேடலிலும் தனது கவனத்தைச் செலுத்தியவர். அவரது கருத்துகள் எதுவாகவிருந்தபோதிலும் அவரது பன்முக வாசிப்பும், தேடலும், அவற்றை வெளிப்படுத்தும் அவரது படைப்புகளும் முக்கியமானவை. - பதிவுகள் -] அண்மையில் பிரமிளின் 'வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழில் புதுக்கவிதையென்றால் படிமங்களுக்குப் பெயர் போன பிரமிளின் கவிதைகளைக் குறிப்பிட யாரும் மறுப்பதில்லை. குறிப்பாக 'பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து' என்னும் கவிதையினைக் குறிப்பிடாத விமர்சகர்களே இல்லையெனலாம். இத் தொகுதியிலுள்ள கட்டுரைகள் பிரமிளின் எழுத்துச் சிறப்பினைப் புலப்படுத்துவன. அவரது ஆழ்ந்த சிந்தனையினையும், வாசிப்பினையும் கூடவே புலமைத்துவத்துடன் கூடியதொரு கர்வத்தினையும் வெளிப்படுத்துவன. அந்தக் கர்வம் அளவுமீறி சில சமயங்களில் அணையுடைத்துப் போவதுமுண்டு என்பதற்கும் சான்றாக சில கட்டுரைகளில் வரும் கூற்றுக்கள் விளங்குகின்றன. அவ்விதம் கர்வம் அளவு மீறி விடும்போது, 'தனக்கு எல்லாமே தெரியுமென்ற அதிமேதாவித்தனத்தினைக் காட்ட முற்படும்பொழுது' அதுவே அவர்மேல் எதிர்மறைவான விளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கு இத்தகைய கூற்றுகள் காரணமாகிவிடுகின்றன. இந்தக் கட்டுரை பிரமிளின் மேற்படி 'வானமற்ற வெளி' நூல் பற்றிய மதிப்புரையோ அல்லது விரிவான் விமரிசனமோ அல்ல. இது பிரமிளின் கவிதைகள் பற்றிய விரிவான விமரிசனமுமல்ல. மேற்படி நூலிலுள்ள சில கருத்துகள் ஏற்படுத்திய என் மன உணர்வுகளின் வெளிப்பாடாகவே இதனைக் குறிப்பிடலாம்.
Last Updated on Saturday, 18 May 2013 21:29
Read more...
Thursday, 16 May 2013 19:25
- தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி -
கவிதை

"(வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள்."
Last Updated on Thursday, 16 May 2013 19:38
Read more...
Thursday, 16 May 2013 18:57
- நக்கீரன் -
அரசியல்
தமிழரசுக்கட்சியின் தொடக்குநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்டதுடன் பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா. அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மா.நடராசா, அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், திருமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது சித்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூசை இடம்பெற்றதுடன் தந்தை செல்வாவின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சேயோன் நிகழ்த்தினனார். அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து மா.அ. சுமந்திரன், பா.உறுப்பினர் தந்தை செல்வா நினைவுப் பேருரை ஆற்றினார். அதன் முழு வடிவம் கீழே கொடுக்ப்பட்டுள்ளது.
Last Updated on Friday, 17 May 2013 23:00
Read more...
Thursday, 16 May 2013 18:20
- tamilauthors.com -
நிகழ்வுகள்
மே 11, 2013 அன்று கனடா கந்தசாமி ஆலயத்தில் எழுத்தாளர் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பிரபல எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் முதற் சிறப்புப் பிரதியை வெளியிட மருத்துவர் லம்போதரன் அதனைப் பெற்றுக்கொண்டார். மேற்படி நிகழ்வின் காட்சிகள் சிலவற்றை ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றோம்.

Read more...
Thursday, 16 May 2013 18:08
- அகில் -
சிறுகதை
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதம். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது…..? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்குக் கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்…. நிம்மதியாய்….. மகிழ்ச்சியாய்…..நான் மட்டும்……?
Last Updated on Thursday, 16 May 2013 18:13
Read more...
கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' மாத இதழின் 22வது ஆண்டு மலரை அண்மையில் வாசிக்க முடிந்தது. அந்த மலரைப் பற்றிய விமர்சனமல்ல இது. அதில் வெளிவந்திருந்த இரு கட்டுரைகள் பற்றிய சில குறிப்புகளே இநத என் எண்ணப்பதிவு. பொன்னையா விவேகானந்தன் 'கனடியத் தமிழர் வாழ்வும் வளமும்' என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரையின் தலைப்பு இதே தலைப்பில் தமிழகத்திலிருந்து ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட 'தமிழ்க்கொடி 2006' ஆண்டு மலரில் நான் எழுதிய கட்டுரையான 'கனடாத் தமிழர் வாழ்வும் வளமும்' என்னும் கட்டுரையின் தலைப்பினையே எனக்கு ஞாபகப்படுத்தியது மேற்படி எனது கட்டுரையினைக் கனடாவிலிருந்து ஆண்டுதோறும் வெளிவரும் 'தமிழர் மத்தியில்' வர்த்தகக் கையேடும் சில வருடங்களுக்கு முன் தனது கையேட்டில் மீள் பிரசுரம் செய்திருந்தது. இது போன்ற கட்டுரைகளை எழுதுபவர்கள் ஏற்கனவே அத் தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்திருந்தால் இயலுமானவரையிலும் தவிர்ப்பது நல்லதென்பதென் கருத்து. மேற்படி மலரில் கலாநிதி இ.பாலசுந்தரம் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரை பற்றிய சில கருத்துகளே எனது இந்தப் பதிவு.
Last Updated on Thursday, 16 May 2013 00:31
Read more...

கனடா - தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20 வது நிறைவு விழாவும் மலர் வெளியீடும் ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோவிலில் தலைவர் சின்னையா சிவநேசனின் தலைமையில், ஏப்ரல் மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரங்கு நிறைந்த விழாவாக சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ் வாழ்த்து, கனடாக் கீதம் என்பவற்றைத் தொடர்ந்து திவ்வியராஜனின் கணீரென்ற குரலில் வந்த பேசாப் பொருளை என்ற பாரதியாரின் பாடலுக்கு கலாய நடனப்பள்ளி மாணவர்கள் நடனம் ஆடி வந்திருந்தவர்களை வரவேற்றனர். பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள், ‘புலம்பெ யர் இலக்கியங்களில் இலக்கியச் சிந்தனையின் போக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Last Updated on Tuesday, 14 May 2013 22:12
Read more...
Tuesday, 14 May 2013 20:21
- யமுனா ராஜேந்திரன் -
அரசியல்
"தலிபான் எமது காலத்தின் பிற்போக்குத் தனத்திற்கு சாட்சி. சிலவேளைகளில் தலிபான் என்பது நம் சமகாலத்தின் அரசியலைத் தெரிவிக்கும் வரலாறு. தலிபான் என்பது நாம் பெற்ற கல்வியையும் பயிற்சியையும் எமக்கு ஞாபகமூட்டுவது. எமது வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் சட்டங்களுக்கு மற்றொரு பெயர் தலிபான். சொர்க்கத்தினை அடையும் ஆசையின் பொருட்டும,; கடவுள் நம்பிக்கையின் பொருட்டும் நாம் சுமந்து திரியும் பயத்தில் விளைந்த எழுதப்படாத சட்டத்தின் பெயர் தலிபான். மதவெறிகொண்ட எந்த அரசும் தலிபானின் தன்மை படைத்ததுதான். அமெரிக்க ஜனநாயக சமூகத்தில் பாசிசவாதியான ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸினைச் சுற்றியிருக்கும் குழவினர் தலிபான்கள்தான். பின்லேடன் ஒரு தலிபான். ஜார்ஜ் புஸ் ஒரு தலிபான். ஸமீரா மக்மல்பாவ் ஒரு தலிபான். தலிபான் எனும் வார்த்தையைப் பிறவற்றுடன் இணைத்துப் பொறுத்திச் சொல்ல என்னை அனுமதியுங்கள். நான் தலிபான். நீங்கள் தலிபான். அவர் தலிபான். நாங்கள் தலிபான்கள். அவர்கள் தலிபான்கள். நாம் எல்லோரும் தலிபான்கள்." - ஸமீரா மெக்மல்பாவ், ஈரானிய திரைப்பட இயக்குநர் -
1.
திரைப்படம் வழி வரலாற்தை தேடிச் செல்பவன் எனும் அளவில், தலிபான் குறித்துச் சிந்திக்கிறபோது பல்வேறு முன்வரலாற்று அனுபவங்களும், திரைப்படப் பதிவுகளும் உடனடியாகவே ஞாபகம் வருகிறது. இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டால் பாசிசத்தைக் கருத்தியலாக நிறுத்திய இனக்கொலை வரலாறு, அதிகாரவர்க்கத்திற்கும் பழமைவாதிகளுக்கும் எதிரானது எனக் கோரப்பட்டு அறிவுஜீவிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் அப்பாவி மக்களுக்கும் எதிராகத் திரும்பிய கலாச்சாரப் புரட்சி, ஸ்டாலின் காலத்துச் சைபீரியப் பாலைவன சித்திரவதை முகாம்கள், அதீத மானுடக் கனவில் விளைந்து பிற்பாடு மனிதக் கபாலங்களின் எண்ணிக்கையைக் குவித்த கொடூரமாக மாறிய போல்பாட் காலத்திய பூஜ்யவரலாற்று மானுட விரோத நடவடிக்கைகள் என கருத்தியல்களுக்கும் வன்முறைக்குமான சாட்சியமாக வரலாறு நம் முன் இருக்கிறது. சின்ட்லர்ஸ் லிஸ்ட், கில்லிங் பீல்ட்ஸ், பாஸ்டர்நாக், டுலிவ், புளு கைட், பேர்வல் மை காங்குபைன் போன்ற திரைப்படங்கள் முறையே பாசிசம், போல்பாட் படுகொலைகள், ஸைபீரிய முகாம் சித்திரவதைகள், கலாச்சாரப் புரட்சி காலத்து அத்துமீறல்கள் போன்றவற்றின் திரைச் சாட்சிகளாக நமக்கு முன் இருக்கின்றன.
Last Updated on Tuesday, 14 May 2013 20:26
Read more...
Sunday, 05 May 2013 22:02
- மீராபாரதி -
நிகழ்வுகள்

போரினாலும் இன அழிப்பினாலும் மரணித்த மனிதர்களை நினைவு கூறவும், சமூக விடுதலைக்காகவும், தனிமனித உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும், ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலைக்காகவும் போராடி மரணித்தவர்களை நினைவு கூறவும், அனைவருக்கும் அஞ்சலி செய்வதற்கும், அஞ்சலி செய்வதற்கான உரிமையை வலியுறுத்தவும், இழந்தவர்களை ஆற்றுப்படுத்தவும் இவர்கள் வாழ்வை மேப்படுத்தவும், நடைபெறும் நிகழ்வு இது. இதில் பல்துறைசார்ந்தோர் பலர் உரையாற்றவுள்ளனர்.
ரொரன்டோவில் மே 19ம் திகதி மாலை 5.00 மணிக்கு; Mid Scarborough Community Centre, (2467 Eglinton Ave East). நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம். - வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு - வருகின்றவர்களுக்கு மாலை 5.30 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு மாலை 5.00 மணி.
Last Updated on Tuesday, 14 May 2013 20:46
Read more...
க. சட்டநாதன், தன் மூன்று சிறுகதைத் தொகுதிகளை சில மாதங்கள் முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் எழுபதுகளிலிருந்து எழுதிவருபவர், யாழ்ப்பாணக்காரர். இது காறும் இவரது சிறுகதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ளன எனத் தெரிகிறது. எனக்கு அவர் அனுப்பி வைத்தவை சமீத்திய மூன்று தொகுப்புகள், 2010-ல் வெளியான முக்கூடல் என்னும் தொகுப்பையும் சேர்த்து. நாம் அறுபதுகளில் முதன் முதலாக சரஸ்வதி பத்திரிகையில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய மௌனிவழிபாடு என்ற கட்டுரை மூலம் தெரிய வந்த ஏ.ஜெ. கனகரத்னா சட்டநாதன் கதைகளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். சட்ட நாதனின் புதியவர்கள் என்னும் தொகுப்பு ஒன்றும் நான் பத்து வருடங்களாகத் தங்கியிருந்த சென்னைப் புறநகர் மடிப்பாக்கத்தின் பொன்னி என்னும் பிரசுரம் 2006 – ல் வெளியிட்டுள்ளது. ஆனால் எனக்கு அந்த பிரசுரத்தின் இருப்பே தெரிந்திருக்க வில்லை. சட்டநாதனும் அவர் சிறுகதைத் தொகுப்புகளை அனுப்பி வைத்த பிறகுதான் எனக்கும் சட்டநாதனையே தெரியவந்துள்ளது. சட்ட நாதனின் சமீபத்திய தொகுப்பான முக்கூடலுக்கு குப்பிழான் ஐ சண்முகம் என்னும் இன்னொரு சிறுகதை எழுத்தாளர் சட்டநாதனின் படைப்பு வெளி என்ற தலைப்பில் ஒரு பாராட்டுரையையும் அறிமுகமாகத் தந்திருக்கிறார். குப்பிழான் ஐ சண்முகமும் 1946- பிறந்த, எழுபதுகளிலிருந்து சிறுகதைகள் எழுதிவரும் அறுபத்து ஏழு வயதினர். அவருடைய தொகுப்பு ஒன்றை, ஒரு பாதையின் கதை, காலச்சுவடு வெளியிட்டுள்ளது சில மாதங்கள் முன்பு. சொல்லி வைத்தாற்போல் அதுவும் ஓரிரு மாதங்கள் முன்பு எனக்குக் கிடைத்துள்ளது. நாற்பது வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் இவ்விருவரை பற்றி நான் அறிந்தவனில்லை. நாம் அறிந்தவர் இல்லை என்று என் அறியாமையைப் பொதுமைப் படுத்த முடியுமோ என்னவோ தெரியவில்லை. உலகில் எது ஒன்று பற்றியும் அறியாதவர் களேயாயினும், அறியாதவர்கள் என்று யாரும் சொல்லி விட்டால் நம்மவர்களுக்கு அசாதாரண கோபம் வருமாதலால், இந்த அறியாமையை என்னுடனேயே நிறுத்திக்கொள்கிறேன். இவ்விருவர் பற்றியுமோ, அவர்கள் எழுத்துக்கள் பற்றியுமோ இங்கு எந்த தமிழ் பத்திரிகையிலும் படித்ததாக எனக்கு நினைவில்லை. இருந்தாலும். ஒரு பெரும் குற்றச் சாட்டு அறுபதுக்களில் எழுந்ததுண்டு. இலங்கை தமிழ் எழுத்தாளர்களை நாம் அங்கீகரிப்பதில்லை என்று. நியாயமான குற்றச் சாட்டு தான் என்று நான் அப்போது நினைத்ததுண்டு. அதற்குப் பதில் சொல்லும் வகையில் தானோ என்னவோ அறுபதுகளிலிருந்து கலாநிதிகள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பின் இவர்களுக்கு எதிர்முனையாக, எஸ் பொன்னுத்துரையும் ஒரு பெரும் புயலாக நீண்ட காலம் தமிழ் இலக்கிய வெளியில் மிகுந்த செல்வாக்குடன் பவனி வந்தார்கள். அனேகமாக இன்னமும் கூடத்தான்.
Last Updated on Monday, 13 May 2013 03:23
Read more...
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினமான மே 10 அன்று அவரை நினைவு கூரும் முகமாக நிகழ்வுகள் பல நிகழ்ந்தன. தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத முக்கியமான ஆளுமைகளிலொருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையான 'கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு' என்னும் கட்டுரையில் பேராசிரியர் பற்றிய தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருப்பார். அதில் அவர் பேராசிரியர் கா.சிவத்தம்பியை இலக்கியத் திறனாய்வாளராக இனங்காண்பதற்குப் பதில் இலக்கியக் கோட்பாளராகவே இனங்கண்டிருப்பார். மேலும் பேராசிரியரின் தேடல் பற்றிய கேள்வியினையும் பேராசிரியரின் ‘தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்’ நூலிலுள்ள் இறுதிக்கட்டுரையினை ஆதாரமாகக் கொண்டு எழுப்பியிருப்பார். அதில் ஜெயமோகன் கீழ்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
Last Updated on Sunday, 12 May 2013 18:29
Read more...
Friday, 10 May 2013 18:22
- எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -
அரசியல்
தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் கெஞ்சல்களை மீறி சிரச்சேதம் செய்யப்பட்ட இளம்பெண் ரிஸானா நபீக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த இரண்டு இளவயதுப் பெண்கள் தொடர்பான செய்திகளே சவூதி அரேபிய ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக அமைந்தன. தாம் இந்தளவுக்குப் பிரபலமாகப் போகிறோமென கிஞ்சித்தேனும் நினைத்துக் கூடப் பார்த்திராத இப் பெண்கள் முழு உலகத்தினதும் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். 90 வயது முதியவரைத் திருமணம் முடிக்க நேர்ந்த சிறுமியின் பெயர் ஊடக தர்மத்தின் காரணமாக எந்த ஊடகங்களாலும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவரது வயது பதினைந்து எனக் குறிப்பிட்டுள்ளது. சவூதியரான தாய்க்கும், யெமனைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த இந்தச் சிறுமியின் குடும்பம் மிகவும் வறியது. வறுமையிலிருந்து மீளும் வழியை, 90 வயது முதியவரொருவர் இவரது தாயிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். அதாவது 17,500 அமெரிக்க டொலர்கள் தந்து அப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியதும், வேறு வழியின்றி பெற்றோர் சம்மதிக்க வேண்டியதாயிற்று. தனது எதிர்காலத்தை இருளுக்குள் தள்ள வேண்டாமென பெற்றோரிடமும், உறவினர்களிடமும் அழுது புலம்பிய சிறுமியின் கதறல்கள் பலனற்றுப் போயின. பணத்தினைப் பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் சிறுமியை முதியவரின் வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.
Last Updated on Friday, 10 May 2013 18:51
Read more...
Thursday, 09 May 2013 21:15
யமுனா ராஜேந்திரன்
இலக்கியம்
[ பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினம் மே 10. அதனையொட்டி உயிர்நிழல் சஞ்சிகையில் வெளியான இந்த நேர்காணல் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் ]
ய.ரா: நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன். சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நீங்கள் எப்படி assess(மதிப்பீடு) பண்ணுகிறீர்கள்?
கா.சி : சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணக்களை நான் இப்படிப் பார்க்கிறேன். இந்த மார்க்சியத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சினை என்னவென்றால் சோவியத் stateஇனுடைய, சோவியத் அரசினுடைய development-உம் சோவியத் அரசு ரஷ்யப் பேரரசினுடைய பகுதிகளை சோவியத் அரசுக்குள் கொண்டு வரவேண்டிய-- கொண்டு வந்த நிர்ப்பந்தமும் இதன் காரணமாக, தொடக்கம் முதலே காணப்பட்ட ஒரு சமனற்ற வளர்ச்சியும, சோவியத் ரஷ்யப் புரட்சியை, ரஷ்யப் பேரரசின் மாநிலங்கள் முழுவதற்கும் புதுமையாக ஆக்க முனைந்ததில் எற்பட்ட வரலாற்றுப் பிரச்சினைகள் அடிப்படையில் உள்ளன என்று நான் கருதுகிறேன். புரட்சி ஏற்பட்டது ரஷ்யாவில்தான், மொஸ்கோவில்தான். ஆனால் ரஷ்யப் பேரரசு, கசாக்ஸ்தான் வரை துருக்கிஸ்தான் வரை நீண்டு கிடந்தது. லெனின் காலத்திலே படிப்படியா இவையெல்லாம் அதாவது 27, 28 இலை தான் வந்து சேருது. இங்கெல்லாம் பெரிய ஒரு revolution உடைய தன்மைகள் பற்றியோ புரட்சி பற்றியோ அதற்கான சிந்தனைகளே இருந்தது கிடையாது.
Last Updated on Thursday, 09 May 2013 22:06
Read more...
Sunday, 05 May 2013 20:09
- குரு அரவிந்தன் -
சினிமா
 தமிழ் திரையுலகின் இசைத்துறைக்கு சென்றவாரம் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஒன்று திரையுலகில் தனது இனிய குரலால் பாடலிசைத்துக் கொடிகட்டிப் பறந்த பாடகர் பி.பி.சிறீனிவாஸின் இழப்பு, மற்றையது தமிழ் திரையுலகில் தனது இசையால் பல ஆண்டுகாலம் ஆளுமை செய்த இசையமைப்பாளர் ரி.கே. ராமமூர்த்தியினுடையது. 1922ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்த ரி,கே. ராமமூர்த்தி 2013 ஏப்ரல் மாதம் 17ம்திகதி புதன்கிழமை நோய்வாய்ப்பட்டு தனது 91வது வயதில் சென்னை தமிழ்நாட்டில் காலமானார். அவரது புனித உடல் சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. எம்மைவிட்டுப் பிரிந்த அமரர் ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர். ரி.கே. ராமமூர்த்தி என்று பலராலும் அழைக்கப்பட்ட இவர், தான் பிறந்த ஊரான திருச்சிராப்பள்ளியின் முதல் எழுத்தையும், தனது தந்தையின் முதலெழுத்தiயும் தனது பெயருக்கு முன்பாகப் பாவித்துக் கொண்டிருந்தார். சி.ஆர். சுப்புராமனின் இசைக்குழுவில் வயலின் வாசிப்பதில் மிகவும் திறமைசாலியாக இருந்த இவர் பின்னர் எம். எஸ் விஸ்வநாதனுடன் இணைந்து பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றார். இவரது தந்தையான கிருஸ்ணசுவாமி ஐயர், தாத்தாவான மலைக்கோட்டை கோவிந்தசுவாமி ஐயர் ஆகியோர் திருச்சிராப்பள்ளியில் வயலின் வாசிப்பதில் மிகவும் பிரபலமாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்து இவர் இந்த இனிய வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். அந்த நாட்களில் பிரபல இசை அமைப்பாளராக விளங்கிய எஸ். பி. வெங்கட்ராமன்தான் இவரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
Last Updated on Sunday, 05 May 2013 20:28
Read more...
Sunday, 05 May 2013 20:02
- குரு அரவிந்தன் -
சினிமா
 தமிழ்த்திரை உலகில் அன்றும் இன்றும் பலராலும் விரும்பப்பட்ட குரலுக்கு உரியவரான, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடலின் மூலம் பலரின் மனதைத் தொட்ட, பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.சிறீனிவாஸ் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது 82வது வயதில் (14-04-2013) காலமானார். 1930ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் தேதி ஆந்திரமாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்த இவர் பனிந்திரஸ்வாமி, சேஷகிரியம்மா தம்பதிகளின் மகனாவார். திருமணமான இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள். பட்டதாரியான, கர்நாடக சங்கீதம் கற்ற இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற எட்டு மொழிகளை அறிந்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை இவர் பாடியுள்ளார்.
Last Updated on Sunday, 05 May 2013 20:07
Read more...
 நான் முதன் முதலாக 1961-ல் செல்லப்பாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கு திரிகோணமலையிலிருந்து வந்திருந்த தருமு சிவராமுவை, செல்லப்பாவின் வீட்டில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன். அது எனக்கு எதிர்பாராத மகிழ்ச்சி தந்த ஒரு சந்திப்பு. திரிகோணமலையிலிருந்து வந்தவருக்கு தமிழ் நாட்டில், சென்னையில் யாரைத் தெரியும்? எழுத்து பத்திரிகையைத் தெரியும். அதன் ஆசிரியர் செல்லப்பாவைத் தெரியும். செல்லப்பா அப்போது என்ன, எப்போதுமே சம்பாத்தியம் என்பது ஏதும் இல்லாத மனிதர். வத்தலக்குண்டுவிலிருந்து சென்னைக்கு எழுத்தாளராகவே வாழ வந்தவர். க.நா.சு பத்திரிகை ஒன்று வெளியிட்டுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவியாக ஆசிரியர் குழுவில் இருந்தவர். சிறு பத்திரிகைகள் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? தினமணி கதிரில் சில காலம் வேலை செய்து வந்தார். பின்னர் அங்கு ஆசிரியராக இருந்த துமிலனோடு ஒத்துப் போக முடியவில்லை என அதையும் விட்டு வெளியே வந்தவர். அப்போது பிறந்தது தான், “நமக்கு மரியாதை இல்லேன்னா, ஒருத்தர் வீட்டு வாசற்படியை என்னத்துக்கு மிதிக்கறது?” என்ற மந்திரச் சொல் அறச்சீற்றமாக அவ்வப்போது அவரிடமிருந்து வெளிவரும். அந்த சமயத்தில் தான் சிவராமூவை, செல்லப்பா தன்னுடனேயே வீட்டில் தங்கச் செய்தார். சிவராமூ தான் வேறு எங்கு செல்லக் கூடும்!
Last Updated on Sunday, 05 May 2013 19:52
Read more...
 It is not a joke. Honestly how many of the younger generation have heard of him. With history books and social studies books written with lot of grammatical and factual errors and even hiding and distorting history, one cannot expect our young people to know about him for the simple reason that this man who has a Thamil name. With enthusiasm all around to establish a Sinhala only state with Buddhists alone and discarding all minorities as aliens as a hidden agenda is pursued in the name of Sinhala Buddhists as opposed to Buddhist Sinhalas, the rest of the sane Sinhalas, Thamilians, Muslims, Malays and other minorities in the country and the outside world watches the scene in awe. Because of the activities of such a minority of people who have influence and patronage shame is brought to the vast majority of the people belonging to the majority community.Even a street named after him in Colombo is taken away and instead some other name has been planted as if to erase all traces of contributions made by many Lankans to build up the nation. This scholar Dr Ananda Coomarawamy was born to a Thamilian father and an English lady. Even then he is considered a full blooded Thamilian by a knavishly ignorant people who are in the forefront of politics discarding all the tenets of what the noble Buddha preached.As a Lankan Thamilian Hindu fond of Buddhism, I find it hard to believe that some members of the clergy behave like common criminals resorting to crime.
Last Updated on Sunday, 05 May 2013 19:41
Read more...
1. சுடரும் இரகசியங்கள்!.
இருண்டு கிடக்கிறது இரவு வான். சுடரும் பெண்கள்; விரியும் வெளி. தனிமையின் மோனம். இலயிப்பினில் இருப்பு. பெண்களே! பெண்களே! பகர்ந்திடுவீரா உம் இரகசியத்தை? 'அஞ்சுதலற்ற கதிர்கள்.சூனியத்தைத் துளைத்து வருமொளிக் கதிர்கள். அட, அண்டத்திலார்க்கும் அஞ்சுவமோ? ஓராயிரம் கோடி ஆண்டுகள் ஓடியே வந்தோம்; வருகின்றோம்; வருவோம். காலப் பரிமாணங்களைக் காவியே வந்தோம்; வருகின்றோம்; வருவோம். வெளியும் விரவிக் கிடக்கும் சூனியமும் கண்டுதான் துவண்டோமோ? அஞ்சுதலற்ற நெஞ்சினர் எம்முன்னே மிஞ்சி நிற்பவர்தானெவருமுண்டோ? தெரிந்ததா? விளக்கம் புரிந்ததா? நொக்குங்கள்! நோக்குங்கள்! நோக்கம்தான் புரிந்ததுவோ?' புரிந்ததில் இனித்தது இரவுப் பொழுது.
Last Updated on Wednesday, 08 May 2013 15:55
Read more...
Thursday, 02 May 2013 22:02
- டி.எஸ்.எலியட் [தமிழில்: வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்) ] -
கவிதை
பாழ்நிலம் (1922)
"ஒரு தடவை கியூமா பட்டணத்து ஸிபில் கூண்டுக்குள் தொங்குவதை நானே என் கண்களால் நேரில் பார்த்தேன். அதைச் சூழ்ந்து கொண்ட சிறார்கள் 'ஸிபில், உனக்கு என்ன வேண்டும்?' என்று இரைச்சலிட அவள் சொன்ன பதில்: 'நான் சாக விரும்புகிறேன்' என்பதாகும்." - கலா நுணுக்கன் எஸ்ரா பவுண்டுக்கு -
1. நீத்தாரைப் புதைத்தல்
ஏப்ரல் மாதம் எத்துணை வெம்மையானது. வெடித்த நிலத்தில் லைலாக் வாசனை ஆசைகளையும் ஏக்கங்களையும் ஞாபகத்தில் சங்கமித்தது. சோம்பலின் வேர்களிலிருந்து விழுந்த வஸந்தத்தின் மழைத்தூரல்களில். குளிர்காலம் எங்களை இதப்படுத்தியதில் பூமியில் படர்ந்த மறதிப் பனியில் பூஞ்சைகள் தழைத்து உயிர்பெற்றன. கோடைப் பருவம் வந்து கொட்டிய மழையில் ஆச்சரியம் அடைந்த நாங்கள் ஸ்டான் பெகர்ஸ் ஏரிக்கரையில் நின்றோம். பாதையின் ஓங்கிச் செழித்த ஒரு மரநிழலில் ஒதுங்கினோம். சூர்யஒளி சுள்ளென்று சுட்டதில் ஹாப்கார்ட்டன் பூங்காவுக்குள் நுழைந்து காபி அருந்தினோம் ஒரு மணி நேரம் நீடித்தது உல்லாசப் பேச்சு 'நான் ரஷ்யாக்காரியே அல்ல. லித்துவேனியா தான் என் பூர்வீகம். நான் நிஜ ஜேர்மனியக்காரி' பால்யத்தில் எங்கள் ஒன்றுவிட்ட சகோதரனான சிற்றரசன் மாளிகையில் தங்கியிருந்தபோது ஒரு 'ஸ்லெட்ஜ் வண்டியில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கையில் அதன் படுவேகத்தில் அலண்டு போனேன் நான். 'மேரி, மேரி பயப்படாதே. என்னை கெட்டியாகக் கட்டிக்கொள்' என்றான் அவன். மேட்டிலிருந்து மெல்ல பள்ளம் நோக்கி இறங்கினோம். ம்லைகளில்தான் எப்போதும் பூரண சுதந்திரம் இரவில் நெடுநேரம் வாசிக்கும் நான் குளிர்காலம் வந்தால் தெற்கே சென்றிடுவேன்.
Last Updated on Thursday, 02 May 2013 22:19
Read more...

இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார்.
Last Updated on Thursday, 02 May 2013 19:49
Read more...
Thursday, 02 May 2013 19:16
- யோகன் கண்ணமுத்து -
நிகழ்வுகள்
வல்லரசுகள் கண்டங்களைத் தாண்டி இயற்கை வளங்களையும், தொழிலாளர்களின் உழைப்பையும், வாழ்வையும் சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியான இன்றைய கால கட்டத்தில், பிரான்சில் பாரளுமன்ற அமைப்புசாரா தீவிர இடதுசாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலமும் -ஒன்றுகூடலும் பாரிசில் மிகச் சிறப்பாக (01.05.2013) நடைபெற்றது. சர்வதேச ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், அனைத்து ஒடுக்குமுறைகளை கண்டித்தும், கோசங்களும்- கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் பிரான்சில் வாழும் பல்லின மக்களினது இடதுசாரி செயற்பாட்டு இயக்கமான சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பும் (comité de Défence Social International) கலந்துகொண்டது. இவ் ஊர்வலத்தில் இலங்கை அரசின் சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், இன அழிப்பு யுத்ததிற்கு எதிராகவும் கண்டனங்களும் கோசங்களும் எழுப்பப்பட்டன. இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் சார்பிலும் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும்.
Last Updated on Thursday, 02 May 2013 19:37
Read more...
Thursday, 02 May 2013 19:09
- முருகபூபதி -
நிகழ்வுகள்
முல்லைத்தீவு என்றவுடன் எனது நினைவுக்கு முதலில் வருபவர்கள், நிலக்கிளி பாலமனோகரன், முல்லை அமுதன், முல்லையூரான், முல்லைமணி, முல்லைசகோதரிகள். கலை, இலக்கியவாதியாக பயணிப்பதனால்தானோ என்னவோ இவர்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடுவார்கள். இவர்களைப்போன்று பலர் எழுத்து மற்றும் கலைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தபின்பும் தொடர்ந்து எழுதுகிறார்கள் என்பது மனதுக்கு நிறைவானது. சிலருடன் எனக்கு கடிதத்தொடர்புகளும் இருந்தன. முல்லையூரான் மறைந்துவிட்டார். நிலக்கிளி பாலமனோகரன் ஈழத்து இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்டவர். டென்மார்க்கில் வசிக்கிறார். அவரது நிலக்கிளி, குமாரபுரம் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தகுந்த கவனம்பெற்றவை. முல்லை அமுதன் காற்றுவெளி இதழையும் வெளியிட்டவாறு இங்கிலாந்தில் நூல் கண்காட்சிகளை வருடந்தோறும் நடத்திவருபவர். முல்லை சகோதரிகள் இலங்கையில் பல பாகங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள். தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனக்கு இந்தச்சகோதரிகளுடன் நேரடி அறிமுகம் இல்லை.
Last Updated on Thursday, 02 May 2013 19:14
Read more...
Thursday, 02 May 2013 18:33
- நக்கீரன் -
நிகழ்வுகள்

- ஏப்ரல் 30, 2013 - கடந்த கிழமை கனடாத் தமிழ்க் கலைக் கல்விச்சாலை இளங்கீற்று 2013 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா ரொறன்ரோ பெரிய சிவன் கோயில் அரங்கில் நடைபெற்றது. தமிழ்க் கலைக் கல்விச்சாலை நிகழ்த்திய இரண்டாவது ஆண்டு பரிசளிப்பு விழா இதுவாகும். நானூறுக்கும் அதிகமான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். மங்கல விளக்கை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட திரு நக்கீரன், திருமதி சரோசினி தங்கவேலு ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண், திருமறை ஓதல் இடம் பெற்றது. விழாவுக்கு வருகை தந்திருந்த அவையோர்களை தருமதி சுவந்தி சங்கர் வரவேற்று உரை நிகழ்தினார். அதனை அடுத்து இந்தோ கனடா நாட்டியப்பள்ளி அதிபர் திருமதி பத்மினி ஆனந்தின் மாணவர்கள் வரபேற்பு நடனம் ஆடினார்கள்.
Last Updated on Thursday, 02 May 2013 19:09
Read more...
Wednesday, 01 May 2013 20:08
- தமிழ் ஸ்டுடியோ -
நிகழ்வுகள்
Last Updated on Wednesday, 01 May 2013 20:13
Read more...
Wednesday, 01 May 2013 19:54
- விஜய நந்தன பெரேரா; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர் அஸ்மின் , வே.ம.அருச்சுணன் -
கவிதை
Last Updated on Wednesday, 01 May 2013 20:05
Read more...
Tuesday, 23 April 2013 19:51
- வே.ம.அருச்சுணன் (மலேசியா) -
சிறுகதை
“வெள்ளம் ஏறிடுச்சாம்.....! வெள்ளம் ஏறிடுச்சாம்......!”
“வெள்ளம்.......எங்க ஏறிடுச்சு? விவரமா........சொல்லு மணியம்....!”
“வேற எங்க ஜீவா ....! நம்ம...... தமிழ்ப்பள்ளியிலதான்.....வெள்ளம் ஏறிடுச்சாம்....!”
“ நேத்துப் பேஞ்ச செம மழைல.......வெள்ளம் ஏறாம இருக்குமா.....?”
தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது! பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர். இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன்,தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை ‘பிளாஸ்டிக்’ வாளியில் அள்ளி வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர். பள்ளிப் பணியாளர்கள் மற்ற வகுப்புகளில் ஏறிப்போயிருந்த நீரைச் சிரமப்பட்டு இறைத்துக் கொண்டிருந்தனர்! பல மணி நேர போராட்டத்தின் எதிரொலியை களைத்துப்போன அவர்களின் முகங்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருந்தன!
Last Updated on Tuesday, 23 April 2013 19:57
Read more...
Sunday, 21 April 2013 21:32
-நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-
அறிவியல்
மனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர் இருப்பிடம் தேவைப்படுகின்றது. இவை யாவுக்கும் இருப்பிடம் கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும் ஒன்பது கோள்களில் ஒன்றான பூமியாகும். பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழமுடியும். மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது. பூமியில் உள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இதனால்தான் பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன் நிலைத்துள்ளது. எனினும் சூரியன் இன்றேல் பூமியும் இல்லை. ஏன் மற்றைய எட்டுக் கிரகங்களும் இயங்காது அழிந்துவிடும். எனவே சூரியன் பிறந்த கதையையும் காண்போம். ஒரு கருநிலைக் கோட்பாட்டின்படி (Theory) 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு கிட்டிய நட்சத்திரம் விசையால் அழிக்கப்பட்டு அந்த வெடிப்பொலி அதிர்வு அலைகளைக் கதிரவன் முகிற் படலமூலம் வெளியேற்றி அதற்குக் கோணமுடக்கான இயங்கு விசையைக் கொடுத்தது.
Last Updated on Sunday, 21 April 2013 21:39
Read more...
['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. உலக அரங்கில் இராணுவ மற்றும் பொருளியல்ரீதியில் பலம் பொருந்திய வல்லரசுகளிலொன்றாகப் பரிணமித்துவரும் பாரதம் எதனால் தனது மண்ணின் முக்கியமானதோரினத்தின் கடற்றொழிலாளர்கள் மீது , அதுவும் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாக ஆழியினுள் அலைக்கழிந்து, வாழ்க்கையினையோட்டிச் செல்லும் வறிய தொழிலாளர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை உறுதியாகத் தட்டிக் கேட்காமலிருந்து வருகின்றது என்னும் கேள்வி அரசியல் அவதானிகள், தமிழ் மக்கள், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுவது நியாயமானதுதான். ஒருவரா, இருவரா ... கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானதாகும். இந்திய மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு இன்றைய அரசியல் சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் அபாயகரமானதொரு சமிக்ஞை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் காட்டிய கண்டிப்பையும், தீவிரத்தையும் ஏன் இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்கள் விடயத்தில் காட்டவில்லை என்ற கேள்வி நியாயமானதே.
Last Updated on Saturday, 20 April 2013 17:49
Read more...
['பதிவுகளில் அன்று' பகுதியில் 'பதிவுகள்' இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]
புகழ்பெற்ற எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் முப்பத்தியைந்து நூல்களில் ஒரு நாடக நூல் “ மணல் வீடு “ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்று எல்லாத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார். மணல் வீடு என்ற தலைப்பில் ஜே.கிருஸ்ணமூர்த்தியின் தமிழ் நூல் ஒன்று ஞாபகம் வருகிறது. தமிழில் நாடக நூல்கள் வெகு குறைவு. எழுத்தாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, பி.எஸ். ராமையா, ஜெயந்தன், பிரபஞ்சன், இன்குலாப் போன்ற எழுத்தாளர்கள் சில நாடகங்களை எழுதியிருக்கிறார்கள். மற்றபடி நவீன நாடகங்களை நாடகக்காரர்களே படைத்துக் கொள்கிறார்கள். நவீன நாடகங்கள் உருவான பிறகு எழுத்தாளர்கள் நாடகத்துறையை திரும்பிப் பார்ப்பதில்லை. அவைகளும் மக்களை நெருங்கவில்லை. கோமல் சுவாமிநாதனின் சட்டக வடிவ நாடகங்கள் மக்களின் போராட்டங்களை சித்தரித்தன. அதனால் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. கோமலுக்குப்பின் சில நல்ல நாடகங்களை தஞ்சை ராமசாமி உருவாக்கி வெற்றி பெற்றார். அமைப்புகள் பின்னணி இல்லாததால் மக்களை அதிகம் சென்றடையவில்லை.
Last Updated on Saturday, 20 April 2013 17:50
Read more...
Monday, 15 April 2013 21:23
- தமிழ் கருத்துகள (முகநூல்) பக்கம் -
சுற்றுச் சூழல்
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துக்கொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!
யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார். 1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!
Last Updated on Monday, 15 April 2013 21:42
Read more...
Tuesday, 09 April 2013 17:51
- தளநிர்வகிப்பாளர், பதிவுகள் -
நிகழ்வுகள்
பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும். பாமினி போன்ற எழுத்துருக்களைப் பாவித்து அனுப்பும் படைப்புகள் இனிமேல் .pdf கோப்பாகவே வெளியாகும். பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும். பின்வரும் இணையத்தளத்தில் (கண்டுபிடி எழுத்துருமாற்றி) இதற்கான வசதிகளுண்டு: http://kandupidi.com/converter/ இதுபோல் பல இணையத்தளங்களுள்ளன. அல்லது இலவசமாக எழுத்துருமாற்றி (Converters) மென்பொருள்கள் இணையத்தில் பல இருக்கின்றன. அவற்றை உங்கள் கணினியில் பதிவிறக்கி, நிறுவிப் பாவிக்கலாம்.
Last Updated on Tuesday, 09 April 2013 18:24

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், அவை பற்றி வெளிவந்த ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளையும் Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner என்னும் வலைப்பதிவில் நீங்கள் வாசிக்கலாம். 'இத்தளத்தில் அவரது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவல் மற்றும் 'குடிவரவாளன்' என்னும் தமிழ் நாவலின் மொழிபெயர்ப்பான 'An Immigrant ஆகிய நாவல்களையும் கூட வாசிக்கலாம். இத்தளத்தினை மேய விரும்பும் வாசகர்கள் இங்கு அழுத்தவும்.
Last Updated on Saturday, 30 March 2013 23:28
[பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். - ஆசிரியர் -]
From: thiyagarajan solai To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Tuesday, January 08, 2013 4:42 AM Subject: மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா
ஆசிரியர்-பதிவுகள் அனபுடையீர், வணக்கம் எங்கள் நாட்டில் ஜனவரி 12 தொடங்கி 14 வரை நடைபெறவுள்ள மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மியன்மார் நாட்டின் மாபெரும் பொங்கல் பரிசளிப்பு விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன் வாய்ப்பாக அமையுமானால் மியன்மா நாட்டிற்கு பயணம் வரலாமே! உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். என்றும் தமிழுடன், சோலை.தியாகராஜன் Yangon,Myanmar 0095 943042105.
[நண்பர் சோலை தியாகராஜனுக்கு, தகவலுக்கு நன்றி. இது பற்றிப் பதிவுகளிலும் அறிவிப்போம். தங்களது அழைப்புக்கும் நன்றி. மியனமாவிலிருந்து தொடர்பு கொண்டிருக்கின்றீர்கள். மகிழ்ச்சியாகவிருக்கிறது. அங்கு உங்களது பணி தொடர வாழ்த்துகள். மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரையொன்றினை பதிவுகளுக்கு அனுப்பி வையுங்கள். தற்போது பதிவுகளில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் கலை/இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மியான்மாவின் தமிழ் இலக்கிய வரலாறு பற்றியும் அறிய ஆவலாகவுள்ளோம். - ஆசிரியர், பதிவுகள்-]
Last Updated on Wednesday, 23 January 2013 05:09
Read more...
Sunday, 21 October 2012 23:31
By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]
வ.ந.கிரிதரன் பக்கம்
Canadian Tamil Literature!
Novel: AN IMMIGRANT By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]: - I have already written a novella , AMERICA, in Tamil, based on a Tamil refugee's life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. - V.N.GIRITHARAN To read more
Last Updated on Monday, 11 February 2013 02:34
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான 'வைகறை' மற்றும் வெளிவரும் 'சுதந்திரன்', ஈழநாடு' ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. - ஆசிரியர், பதிவுகள்]
Last Updated on Sunday, 16 October 2011 23:15
Read more...
ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).
Last Updated on Sunday, 14 October 2012 16:21
Read more...
Saturday, 05 March 2011 18:08
ஆசிரியர்: வ.ந.கிரிதரன்

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
பதிவுகள் வாசகர்களே! பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு இவ்விதழில் மாறியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதே சமயம் பதிவுகளின் வழமையான அம்சங்கள் பல இவ்விதழில் விடுபட்டுள்ளதையும் அவதானித்திருப்பீர்கள். பதிவுகளின் வழமையான அனைத்து அம்சங்களும், இதுவரை வெளியான ஆக்கங்கள் அனைத்தும் படிப்படியாக இப்புதிய வடிவமைப்பினுள் இணைத்துக்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றோம். அதுவரை சிறிது பொறுமை காக்க. வழமைபோல் உங்கள் ஆக்கங்களை நீங்கள் பதிவுகளுக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
.
இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே: இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) : கடந்தவை
Last Updated on Monday, 09 May 2011 20:03
|