Monday, 15 April 2013 21:23
- தமிழ் கருத்துகள (முகநூல்) பக்கம் -
சுற்றுச் சூழல்
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துக்கொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!
யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார். 1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!
Last Updated on Monday, 15 April 2013 21:42
Read more...
Friday, 23 December 2011 23:13
- நா . தில்லை கோவிந்தன் (விவசாயி).-
சுற்றுச் சூழல்
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு. எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே”
இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் . கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல. மணல் திருட்டு, மணலில் கள்ளச்சந்தை, மணல் எடுத்தால் லாரிகள் பறிமுதல். ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கைது.. மணல் லாரி ஓட்டுநரை தடுத்த தாசில்தாரை லாரியால் கொலை . ஏன் இந்த நிலைமை ? .அரசாங்கம், பொதுமக்கள்,அதிகாரிகள் பொறியாளர்கள் ,விவசாய வல்லுநர்கள், கட்டிடத் தொழில் வல்லுநர்கள் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
Last Updated on Friday, 23 December 2011 23:21
Read more...
[ சுற்றுச் சூழல் துறைக்கு ஆற்றிய சேவைக்காக நோபல் பரிசினைப் பெற்ற 'வங்கரி மாதாய்' அண்மையில் மறைந்தார். அவரது ஞாபகமாக , அவர் நோபல் பரிசினைப் பெற்றபோது பதிவுகளில் வெளியான குறிப்பினை மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்] இம்முறை சமாதானத்துக்கான நோபல் பரிசு ஆபிரிக்காவின் பெண்ணொருத்திக்குக் கிடைத்துள்ளது. நோபல் விருதினைப் பெறும் முதலாவது ஆபிரிக்க தேசத்துப் பெண் என்ற பெருமையினைப் பெற்றிருக்கின்றார் கென்யாவைச் சேர்ந்த வங்கரி மாதாய் (Wangary Maathaai). சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் அமைதி போன்றவற்றுக்கு இவர் ஆற்றிய, ஆற்றிவரும் சேவைக்காக இவர் இம்முறை இவ்விருதினைப் பெறுகின்றார். 1940இல் பிறந்த கிழக்காபிரிக்காவின் முதலாவது பெண் கலாநிதி, கென்யாவின் பல்கலைக் கழகமொன்றின் இலாகாவொன்றின் முதலாவது பெண் தலைவர் என்ற பெருமைகளையும் ஏற்கனவே பெற்றுள்ள இவர் கென்யா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சூழல் மற்றும் இயற்கை/வன வளத்துறைக்குரிய இணை அமைச்சராகவும் விளங்கி வருகின்றார். இவர் உயிரியற் துறையில் பட்டப்படிப்பினை கன்சாஸிலுள்ள மவுண்ட். செயின்ற் ஸ்கொஸ்டிகா காலேஜிலும், பிட்ஸ்பார்க் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் (Masters) பட்டத்தினையும் பெற்றவர். அதன் பின்னர் கென்யா திரும்பிய இவர் நைரோபிய பல்கலைக் கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் ஆய்விலீடுபட்டுக் கலாநிதி பட்டம் பெற்றவர். சக ஆண்களின் அவநம்பிக்கையினையும், எதிர்ப்பினையும் சமாளித்து இவர் இப்பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அப்பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி மிருக வைத்தியத் துறைக்கான தலைவராக பதவி உயர்வு பெற்ருச் சாதனை புரிந்தார்.
Last Updated on Monday, 03 October 2011 04:46
Read more...
Thursday, 18 August 2011 17:40
- மட்டுவில் ஞானகுமாரன் -
சுற்றுச் சூழல்
 புல்லுக்குளத்தையும் அதனை ஒட்டிய நிலப்பரப்பையும் தென் இலங்கை நபர் ஒருவருக்குச் சுற்றுலா விடுதி அமைப்பதற்கென நீண்டகாலக் குத்தகைக்கு விடும் முயற்சிகள் திரைமறையில் இடம்பெற்று வருவதாகச் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையின் முழு விபரம் வருமாறு: யாழ்.நகரின் மத்தியில் அமைந்திருக்கும் புல்லுக்குளத்தை உல்லாசப் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தும் திட்டத்தை உள்ளடக்கி, உல்லாச விடுதி ஒன்றை புல்லுக்குளத்தை ஒட்டிய நிலப்பரப்பில் நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது, யாழ்.நகரை அழகுபடுத்தவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் உதவும் ஓர் அபிவிருத்தித் திட்டமாகவே தோற்றம் காட்டும். ஆனால், இதன் பின்னணி கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரியதாகவே உள்ளது. உத்தேச இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள புல்லுக்குளமும், அதனை ஒட்டி மணிக்கூட்டுக் கோபுரப் பக்கமாக அமைந்திருக்கும் நிலப்பரப்பும் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானது.
Last Updated on Thursday, 18 August 2011 18:57
Read more...
Friday, 27 May 2011 19:42
- நுணாவிலூர் கா. விசயரத்தினம் - (இலண்டன்)
சுற்றுச் சூழல்
 அன்று கால்களுடன் நடமாடிய பாம்புகள் இன்று கால்களை இழந்து ஊர்வனவாய் ஊர்ந்து திரியும் விந்தையை விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர். மரத்தில் வாழும் ஆசிய நாட்டுப் பறக்கும் பாம்புகள் தங்கள் உடல்களைத் தட்டையாக்கிக் கொண்டு; மரத்துக்கு மரம் தாவியும், நழுவியும் செல்லக் கூடியவை. பாம்பு தோன்றிய பின்பே மனிதன் பூமியிற் தோன்றினான். அப்பொழுது மூத்த பிறப்பான பாம்பு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. மனிதனைக் கண்டதும் சீறிப் பாய்ந்து அவனைக் கொத்தி நஞ்சூட்டிக் கொன்று குவித்து வந்தது. அவன் பாம்புக்குப் பயந்தும், அதனை வணங்கியும் வந்தான். ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?’, ‘நாதர் முடி மேலிருக்கும் நாகப் பாம்பே, நச்சுப் பையை வைத்திருக்கும் நாகப் பாம்பே!’, ‘கண்ணபிரான் துயிலும் ஐந்து தலை நாகம்’, ‘பாம்பென்றால் படையும் அஞ்சும்’, ‘நாகர் கோயில், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில்’ போன்ற சொற் பதங்கள் மனிதன்; பாம்பை மதித்தும், பயந்தும், வணங்கியும் வந்தான் என்பதைக் காட்டுகின்றது.
Last Updated on Friday, 27 May 2011 20:24
Read more...
BUFFALO, N.Y. — A deer has been standing watch for several days over a female goose nesting in a city cemetery, a scene normally reserved for a children’s movie. “People always want to turn it into a Disney story and in this case it’s not far off,” said Gina Browning, director of the Erie County SPCA. For at least four days, the buck stood guard near the nest of a Canada goose as she sits on her eggs inside a large urn at Forest Lawn cemetery, home to the remains of President Millard Fillmore and rock icon Rick James. “He does appear to be guarding the goose, as it were,” Erie County SPCA Wildlife Administrator Joel Thomas said. “He’s within touching distance of her — there’s no doubt what’s going on.” The deer, which he said looks like a buck that has shed its antlers, has not strayed from his post. Employees at the cemetery were alerted to the situation after the animal positioned itself between the bird and an employee of a company that traps and relocates geese, which Thomas said have become a messy problem in large numbers.
Last Updated on Saturday, 09 April 2011 18:10
Read more...
இயற்கையை தனது அடிமையாக பாவித்து மனிதன் அதை பலவிதங்களிலும் சேதப்படுத்திவருவதன் பலனை உலகமும், அதிலுள்ள உயிரினங்களும் அனுபவித்துவருகின்றன. புவி வெப்பமயமாதல் என்ற சொற்பிரயோகத்தை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கநேர்கிறது. மரம் நடுவதன் அவசியத்தைப் பேசியபடியே மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காடுவளர்ப்புப் பற்றி பேசியவாறே காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. புலி, யானை போன்ற எத்தனையோ விலங்கினங்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே போகிறது. தட்பவெப்பநிலையில் விரும்பத்தகாத பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல், வாழ்க்கைச்சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்த தொடர்ந்தரீதியான அக்கறையும், விவாதங்கள், வழிகாட்டல்களும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளன.
Last Updated on Monday, 07 March 2011 16:43
Read more...
|