பதிவுகள்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
இ(அ)க்கரையில்..

சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை

E-mail Print PDF

[ஜூலை 2009 இதழ் 115  மார்ச் 2010  இதழ் 123  வரை , பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர்/மலேசிய எழுத்தாளர்கள் வரிசை' என்னும் தலைப்பில் எட்டு எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருந்தார். அத்துடன் அறிமுகம் செய்விக்கப்பட்ட எழுத்தாளர்களினதும் படைப்புகளையும் அவர்களைப் பற்றிய குறிப்புகளில் உள்ளடக்கியிருந்தார். ஒரு பதிவுக்காக, பதிவுகளின் புதிய வடிவமைப்பிக் அவை பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம் கருதி, அவை இங்கு,  படைப்புகள் தவிர்த்து , மீள்பிரசுரமாகின்றன. - பதிவுகள்-]

1. அறிமுகம்: (சிங்கப்பூர்) எழுத்தாளர் சித்ரா ரமேஷ்

- ஜெயந்தி சங்கர் - சித்ரா ரமேஷ் இலக்கியத்தைக் குறித்துப் பேசுமிடத்தில், 'இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம்பொருள் தானே!', என்று சொல்லியிருப்பார். சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் 'வாழ்க்கையில் இலக்கியம்' என்ற தலைப்பில் விறுவிறுப்பாகவும் சரளமாகவும் உரையாற்றி எல்லோரையும் அசத்தியவர். இவருக்கு எழுத வேண்டும் என்பதில் மிகப் பெரிய குறிக்கோள் இல்லாததால் அதிகமாக எழுதுவதை விட அதிகமாகப் படிக்க விரும்பும் வாசகியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். படிப்பது என்ற விஷயம் பொழுது போக்கிற்காக சில சமயம் நிகழலாம். ஆனால், எழுதுவது என்பது வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் செய்யப்படும் விஷயம் இல்லை என்று சொல்வார் சித்ரா, பதின்ம வயதிலேயே இவரது கட்டுரைகள் தமிழாசிரியையை விட இவருடைய தோழிகளுக்கு மிகவும் பிடித்திருக்கும். அந்தக் கட்டுரைகள் எந்த இலக்கண வரையறைக்குள்ளும் வராமல் சித்ராவின் பாணியில் அமைந்தவை. வெகுஜனப் பத்திரிகை ரசனையிலிருந்து விலகிநின்ற மேம்பட்ட எழுத்துக்களை இவரது மூத்த சகோதரர்தான் இவருக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

Last Updated on Saturday, 06 April 2013 03:00 Read more...
 

சிங்கப்பூர் சிறு கதைகளில் மிளிரும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள்

E-mail Print PDF

சிங்கப்பூர் சிறு கதைகளில் மிளிரும் தமிழர் பண்பாட்டு விழுமியங்கள்சீனர், மலாயர், இந்திய வம்சாவழியினர் , யுரேஷியர் மற்றும் இதரர் என்னும் பல்வேறு இனம் மற்றும் மொழிபேசுகின்ற குடிமக்களையும் நிரந்தரமாய்த் தங்கி வாழ்வோரையும் கொண்ட சிங்கப்பூரின் இன்றைய மக்கள் தொகை 53 லட்சம். இவர்களுள் இந்திய வம்சாவழியினர் மட்டும் சுமார் 9 விழுக்காடு. இவர்களுள் தமிழ் பேசுவோர் 3.2 விழுக்காட்டினர். இவ்வாறு குறுகிய எண்ணிக்கையில் தமிழரும் தமிழ் பேசுவோரும் வாழ்கின்ற நாடாக வளமிக்க சிங்கப்பூர் இருந்தாலும் மலாயாவிலிருந்து பிரிந்து சுதந்திரக் குடியரசாக 1965 ல் பிரகடனப்படுத்தப்ட்டதிலிருந்து  கீழ்த்திசை நாடுகளின் வளர்ச்சிச் சுடரொளியாய் பரிணமிக்கும் இந்நாடு தமிழ் மொழிக்குத் தந்திருக்கும் தகுதி உயர்வானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துவ மொழிகளுள் தமிழும் ஓன்று . ஆங்கிலம் , சீனம், மலாய் என்பன பிற அதிகாரத்துவ மொழிகள். கல்வித்துறையில் இங்குள்ள பாலர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழைப் பாடமாகப் பயில முடியும். பொது ஊடகங்களில் சிங்கை வானொலியின் ஒலி  96.8 அல்லும் பகலும் தமிழை ஏந்தி வருகிறது. தொலைகாட்சியின் வசந்தம் சென்ட்ரல் தமிழ் நிகழ்சிகளை நள்ளிரவு வரை நல்கிடக் காண்கிறோம். அச்சு ஊடகங்களில் தமிழவேள் கோ. சாரங்கபாணியவர்களால் 1935-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ் முரசு நாளேடு இன்றும் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழாக இங்குள்ள தமிழ் சமூகத்தின் அடையாளமாகத் திகழக் காண்கிறோம். 

Last Updated on Saturday, 23 March 2013 18:13 Read more...
 

பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்!

E-mail Print PDF

நவஜோதி ஜோகரட்னம்“கோயில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர, மற்றையோரில் தமிழை எழுத வாசிக்கத் தெரிந்த இரு பெண்களை மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருத்தி அளவெட்டியிலும் மற்றவள் உடுப்பிட்டியிலும் இருக்கிறாள். வேறும் ஒருத்தி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இன்னமும் அவளைச் சந்திக்கவில்லை” என்று 1816 ஆம்; ஆண்டில் அமெரிக்க சமயக் குழுவின் பாதிரியார் வண.மெயிக் எழுதிய குறிப்புகள் ( “யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி, வள்ளிநாயகி இராமலிங்கம்”) யாழ்ப்பாணத்தில் நிலவிய பெண்கல்வி நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் உடுவில், வேம்படி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, சுண்டுக்குளி, இளவாலை ஆகிய இடங்களில் தோன்றிய பெண் பாடசாலைகள் யாழ்ப்பாணத்துப் பெண்களின் கல்வி வளாச்சியை மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாவும், பொறியியலாளர்களாகவும், பல்கலைக்கழக உபவேந்தர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், வருமானவரி மதிப்பீட்டாளர்களாகவும் என்று சமூக வாழ்வின் எல்லாத் தளங்களிலும் பெண்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். இந்த உயர்ந்த கல்வியின் ஒரு வெளிப்பாடாக வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரியும் சாத்தியங்களையும் யாழ்ப்பாணப் பெண்கள் கொண்டிருந்தனர். இங்கிலாந்திற்கும் இலங்கைக்குமான தொடர்பு ஒரு காலனித்துவ தொடர்பாக ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி கற்ற ஈழத்துப் பெண்மணிகள் இங்கிலாந்திலேயே திருமண தொடர்புகள் மூலமாக புலம்பெயர ஆரம்பித்து இங்கிலாந்திலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில் சுதந்திரத்திற்குப் பின்னர் இங்கிலாந்தை நோக்கிய ஈழத்தின் புலப்பெயர்வு எண்பதுகளை அடுத்த காலப்பகுதியில் மிக வேகமாக அதிகரிக்கலாயிற்று. இந்நிலையில் எழுத்து, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பெண்மணிகள் இங்கிலாந்தில் கணிசமான அளவில் சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்.

Last Updated on Saturday, 09 March 2013 17:31 Read more...
 

எதுவரை.நெட்: புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்

E-mail Print PDF

-கே.எஸ்.சுதாகர் -[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.] உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.

Last Updated on Wednesday, 13 February 2013 06:41 Read more...
 

உலகத் தமிழ் இலக்கியம்: பிரெஞ்சுத் தமிழிலக்கியம்

E-mail Print PDF

- நாகரத்தினம் கிருஷ்ணா -[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இலக்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை 'பதிவுகள்' எதிர்பார்க்கின்றது - பதிவுகள் - ]

மேற்கத்திய நாடுகளில் தற்போதைக்கு இலக்கியம் என்பதற்கு எழுதப்படாத விதியொன்றிருக்கிறது. - மொழி ஆளுமைகொண்டதும், வாசகன் சிந்தனையை மேம்படுத்தக்கூடியதும் இலக்கியம்; - தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வது இலக்கியம்; பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம். - இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியம்: இந்திய இலக்கியம்,  ஈழ இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியமென்றிருந்தது, பின்னர் கடந்த இருபது ஆண்டுகளாக அக்களத்தை தலித் இலக்கியமும், பெண்ணிலக்கியமும் பாகம் பிரித்துக்கொண்டிருக்கின்றன.  "அகதியாக இருப்பதற்கு மைல் தொலைவு அவசியமில்லை இரண்டு மைல்களே போதும். பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட மனிதர்களையும் பொருள்களையும் மண்ணையும் வானத்தையும் குடிதண்ணீரையும் கோயிலையும் இழக்க வேண்டி நேரிடும் பொழுது, இழந்து அதன்பின் தொடர்ந்து வாழுதல் வேண்டும் என்ற நினைப்பில் தொழிற்படுகிற பொழுது அகதி உருவாகிறான்/ள் - என்கிறார்  முனைவர் கா. சிவத்தம்பி. பேராசிரியர் கருத்தின்படி பிரான்சு நாட்டில் வாழ்கிற தமிழர்கள் பூர்வீகம் எதுவென்றாலும் புலம்பெயர்ந்ததற்கான காரணம் எதுவாயினும் அனவருமே ஒருவகையில் அகதிகளே.

Last Updated on Friday, 14 December 2012 16:54 Read more...
 

உலகத் தமிழ் இலக்கியம்: கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய பதிவுகள் - 1

E-mail Print PDF

தமிழகத்திலிருந்து வெளிவரும் கணையாழி இதழ் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஜீவநதி சஞ்சிகை ஆகியவை கனடாச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகம் வெளியிட்ட 'பனியும் பனையும்' சிறுகதைத் தொகுப்பிலும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவை பற்றிப் பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பிது; ஒரு பதிவுக்காக. இவை கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு பார்வையினை வெளிப்படுத்துவன. இவை எழுதப்பட்ட காலங்களில் அதிகம் எழுதாத பல புதிய படைப்பாளிகள் பலர் இன்று எழுதுகின்றார்கள்.  இவர்களைப் பற்றிய குறிப்புகள், கட்டுரைகள் எமக்குக் கிடைக்கும்போது அவையும் இங்கு தொகுக்கப்பட்டுப் பதிவு செய்யப்படும். கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். ஒரு பதிவுக்காக அவை மிகவும் அவசியம். பதிவுகள் -

Last Updated on Saturday, 15 December 2012 20:01 Read more...
 

உலகத் தமிழ் இலக்கியம்: அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் (சிறப்பிதழ்கள் ஊடான ஒரு பார்வை - பகுதி 2 & 3)

E-mail Print PDF

கே.எஸ்.சுதாகர்[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இல்க்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை 'பதிவுகள்' எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே நாம் வேண்டியதைக் கருத்தில்கொண்டு மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையினை எழுத்தாளர் வே.ம.அருச்சுனன் எழுதியிருந்தார். அக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளிவந்திருக்கின்றது.  ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் எழுதிய ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் பற்றி கட்டுரையின் இரண்டாம், மூன்றாம் பகுதிகள்  இவை. ஏற்கனவே  அக்கட்டுரையின் முதற்பகுதி பதிவுகளில் வெளியாகியுள்ளது. அவருக்கு எமது நன்றி. இதுபோல் ஏனைய நாடுகளிலுள்ள எழுத்தாளர்களிடமிருந்தும் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம் ஒரு பதிவுக்காக.- பதிவுகள்-]  அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி  போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது.

Last Updated on Wednesday, 12 December 2012 22:11 Read more...
 

உலகத் தமிழ் இலக்கியம்: அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் (சிறப்பிதழ்கள் ஊடான ஒரு பார்வை - பகுதி 1)

E-mail Print PDF

கே.எஸ்.சுதாகர்[பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் பரந்து சிதறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து அவர்கள் வாழும் பகுதிகளில் படைக்கப்படும் கலை, இல்க்கியச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தும் அல்லது ஆய்வுக்குட்படுத்தும் கட்டுரைகளை 'பதிவுகள்' எதிர்பார்க்கின்றது. ஏற்கனவே நாம் வேண்டியதைக் கருத்தில்கொண்டு மலேசியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையினை எழுத்தாளர் வே.ம.அருச்சுனன் எழுதியிருந்தார். அக்கட்டுரை ஏற்கனவே பதிவுகள் இணைய இதழில் வெளிவந்திருக்கின்றது. தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரையின் முதற் பகுதியினை அனுப்பியிருக்கின்றார். அக்கட்டுரை இங்கு பிரசுரமாகின்றது. அவருக்கு எமது நன்றி. இதுபோல் ஏனைய நாடுகளிலுள்ள எழுத்தாளர்களிடமிருந்தும் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம் ஒரு பதிவுக்காக.- பதிவுகள்-]   அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களைக் கருத்தில் கொண்டு காலத்துக்குக்காலம் சில இலக்கியச்சஞ்சிகைகள் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளன. 'அம்மா', கணையாழி, மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற இந்த வெளியீடுகளுக்குப் பொறுப்பாக அருண் அம்பலவாணர் (நட்சத்திரன் செவ்விந்தியன்), ஆசி கந்தராஜா, லெ.முருகபூபதி, அருண்.விஜயராணி  போன்றோர் உறுதுணையாக இருந்திருக்கின்றார்கள். இந்தக்கட்டுரை அதிலுள்ள படைப்புக்களை விமர்சனம் செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியத் தமிழர்களின் இலக்கியச்சூழல் பற்றியும் அந்த சிறப்பிதழில் எழுதிய அவுஸ்திரேலியத் தமிழ்ப்படைப்பாளர்கள் பற்றியதுமான ஒரு அறிமுக நோக்கில் எழுதப்படுகிறது. இந்தச் சிறப்பிதழ்களில் மல்லிகை, கணையாழி, ஜீவநதி என்பவை கனதியான படைப்புகளைக் கொண்டிருந்தன.

Last Updated on Wednesday, 12 December 2012 22:26 Read more...
 

உலகத்தமிழ் இலக்கியம்: மலேசிய நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் எதிர்காலமும்!

E-mail Print PDF

 முன்னுரை

வே.ம.அருச்சுனன் -  மலேசியா மலேசியத் தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 126ஆண்டுகளுக்கும் மேலான   பழமை வாய்ந்ததாகும். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் செவிலித்தாய்களாக  விளங்கியவை பத்திரிக்கைகளாகும். மலாயாவில் தோன்றிய முதல்  பத்திரிக்கை யாகக் கருதப்படுவது சி.கு.மகுதும் சாயபு அவர்களால் 1875-இல் வெளியிடப் பட்ட “சிங்கை வர்த்தமானி” என்னும் இதழே.( மா.இராமையா,1996) அதனை- யடுத்து மலேசியாவில், பினாங்கில் 1876 இல் “ தங்கை நேசன்” என்னும் பத்திரிக்கை வெளிவந்துள்ளது . “உலக நேசன்”,  “சிங்கை நேசன்”,  “இந்து நேசன்”  ஆகிய பத்திரிக்கைகள் 1887-இல் வெளிவந்துள்ளன.(இரா.தண்டாயுதம்,1986). சிங்கப்பூரில் 1887-இல் சி.ந. சதாசிவப் பண்டிதரின் “வண்ணையந்தாதி”என்ற நூல் தொடக்கமாக அமைந்தது. (ஏ.ஆர்.எ.சிவகுமாரன்: “சிங்கப்பூர் மரபுக்கவிதைகள்) மலேசியாவின் முதல் தமிழ் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது  நாகப்பட்டினம் மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்ற “ ஆறு முகப் புதிகம்” என்ற கவிதை நூலாகும்.( இராஜம் இராஜேந்திரன்,1988) மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கிய வகைகளுள் கவிதை இலக்கியமே முதலில் தோன்றியது. அதற்கடுத்த நிலையில் நாவலைக் குறிப்பிடலாம். மலேசியாவின் முதல் நாவல் க.வெங்கடரத்தினம் அவர்களால் 1917-இல் எழுதப்பட்ட “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி.( வே.சபாபதி,2004).முதல்மலேசியத் தமிழ்ச் சிறுகதை வே.சின்னையா 1930 இல் வெளியிடப்பட்ட “ நவரச கதா மஞ்சரி” எனும் தொகுப்பில் அடங்கியுள்ள ஐந்து சிறுகதைகளாகும்.( ந.பாஸ்கரன்,1995).   

Last Updated on Friday, 16 November 2012 02:47 Read more...
 

படிப்பகத்தில் புலம்பெயர் இலக்கியப் பதிவுகள்!

E-mail Print PDF

படிப்பகத்தில் புலம்பெயர் இலக்கியப் பதிவுகள்!

புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியச் செயற்பாடுகளைப் பதிவு செய்யும் சஞ்சிகைகள் பலவற்றை 'படிப்பகம்' இணையத்தளம் பதிவு செய்திருக்கிறது. புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிக் கட்டுரைகளைப் படிப்பவர்கள் இத்தளத்திலுள்ள ஆக்கங்களை வாசிப்பது மிகவும் முக்கியம். அதன்பொருட்டு இத்தளத்தினை இங்கு அறிமுகம் செய்கின்றோம். தள முகவரி: http://www.padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=14&Itemid=54

Last Updated on Saturday, 20 October 2012 00:47
 

புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளே!

E-mail Print PDF

புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்!இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களையடுத்து உலகின் நானா பக்கங்களையும் நோக்கி ஈழத்தமிழர்கள் 1979இலிருந்து அதிக அளவில் புலம்பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னரும் அரசியல் காரணங்களுக்காக , புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தாலும், 1979இல் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்கு வந்தபின்னர், அதன் பின்னர் 1983 ஜூலை இனக்கலவரத்திற்குப் பின்னர்தான் அதிக அளவில் இவ்விதம் புலம்பெயரத்தொடங்கினார்கள். இவ்விதம் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமக்குள் பலவேறு திசைகளில் அரசியல்ரீதியில் பிரிந்து கிடந்தாலும், தாம் வாழும் நாடுகளிலிருந்துகொண்டு பல்வேறு கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்; ஈடுபட்டுக்கொண்டு வருகின்றார்கள். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக இவ்விதமான கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு வரும் இவர்களின் செயற்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இவை பற்றிய கலந்துரையாடல்கள் விரிவாக, பரந்த அளவில் நடைபெற்றிருக்கவில்லை. அவ்விதம் நடைபெற்ற கருத்தரங்குகளெல்லாம் குறிப்பிட்ட குழுசார் மனப்பான்மையுடன் நடைபெற்றதால் விரிவாக, நடுநிலையுடன், எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் மனப்பாங்குடன் அவ்விதமான அமர்வுகள் நடைபெறவில்லை. இவ்விதமான சூழலில் உலகின் நானா பக்கங்களிலும் பரந்து வாழும் தமிழக் கலை, இலக்கியவாதிகள் படைப்புகள் அனைத்தையும் படிப்பதற்கு முயலவேண்டும். அவை பற்றிய கலந்துரையாடல்களை அமர்வுகள் வாயிலாகவோ, இணையத்தினூடாகவோ நடாத்திட வேண்டும். அவை பற்றிய ஆக்கங்களைப் பிரசுரிக்க வேண்டும். இதன்மூலம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைத்த, படைக்கும் கலை, இலக்கியப் படைப்புகள் பற்றிய விபரங்கள் ஆவணப்படுத்தப்படும். அவை பற்றிய விரிவான ஆய்வுகள் நடைபெறும்.

Last Updated on Friday, 19 October 2012 00:45 Read more...
 

ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்க்கல்வி

E-mail Print PDF

அறிமுகம்

சு. குணேஸ்வரன்ஒரு இனக்குழுமத்தின் உயிர்ப்பின் அடையாளமாக இருப்பது மொழி. அது பண்பாட்டின் வழிவந்த ஊற்று. மொழியின்றேல் இனமில்லை. அந்த இனத்தின் தனித்துவ அடையாளங்கள் இல்லை. பல்பண்பாட்டுச் சூழலில் புலம்பெயர்ந்து, தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கும் தமிழைப்பேச வைப்பதற்கும் தமிழினூடாகத் தமிழர் என்ற அடையாளத்தைக் கையளிப்பதற்கும் பல்வேறு செயற்பாடுகளை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் ஆற்றிவருகின்றனர். இவ்வகையில் அந்நாடுகளில் வாழ்கின்ற இரண்டாந் தலைமுறைத் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ்க்கல்வி பற்றிய சிந்தனைக்குரியதாக இக்கட்டுரை அமைகிறது.

புலம்பெயர்ந்தவர்கள் - தலைமுறை

60 களில் இருந்தே இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு ஆரம்பித்து விட்டதாயினும் அது பண்பாட்டு ரீதியில் பெருமாற்றத்தை ஏற்படுத்தியதென்று கூறமுடியாது. ‘மூளைசாலிகள் வெளியேற்றம்’, ‘தொழிலுக்கான புலப்பெயர்வு’ என்ற வகையிலேயே அவை அமைந்திருந்தன. ஆனால் 80 களில் இருந்தான புலப்பெயர்வே இங்கு முக்கியமாக கருத்திற்கொள்ளப்படுகிறது, அவ்வாறு புலம்பெயர்ந்தவர்களை ‘தலைமுறை’ என்று வகுத்துப்பார்த்தால் தற்போது இரண்டாந் தலைமுறை தாண்டி மூன்றாந் தலைமுறையும் உருவாகிவிட்டது.

Last Updated on Wednesday, 08 August 2012 05:06 Read more...
 

மீள்பிரசுரம்: சமகால ஈழத்து இலக்கியம்

E-mail Print PDF

1.
- டி.செ.தமிழன் -ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் என்ப‌து ப‌ர‌ந்த‌ த‌ள‌த்தில் அணுக‌வேண்டிய‌து. விரிவான‌ வாசிப்பும், ஆழ‌மான‌ விம‌ர்ச‌ன‌ப்ப‌ண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்த‌ல் என்ப‌து க‌டின‌மான‌து.. ஈழ‌த்திலிருந்து என‌க்கு வாசிக்க‌ கிடைத்த‌ பிர‌திக‌ள் மிக‌ச் சொற்ப‌மே. எனவே ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ற‌ வ‌கைக்குள் ஈழ‌த்திலிருந்தும் புல‌ம்பெய‌ர்ந்தும் வ‌ந்த‌ ப‌டைப்புக்க‌ளை சேர்த்து, சில‌ வாசிப்புப் புள்ளிக‌ளை முன்வைக்க‌லாமென‌ நினைக்கின்றேன். அத்துடன், இது எத‌ற்கான‌ முடிந்த‌ முடிபுக‌ளோ அல்ல‌ என்ப‌தையும் த‌ய‌வுசெய்து க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வும். மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற‌ ஈழ‌த்துச் சூழ‌லில், இன்று இல‌க்கிய‌ம் பேசுவ‌து கூட‌ ஒருவ‌கையில் அப‌த்த‌மான‌துதான். ச‌ம‌கால‌ ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ப‌தை 2000ம் ஆண்டுக்குப் பிற‌கான‌ சில‌ பிர‌திக‌ளினூடாக‌ அணுக‌ விரும்புகின்றேன். ஈழ‌த்தில‌க்கிய‌த்தில், மிக‌ நீண்ட‌கால‌மாக‌ புனைவுக‌ளின் ப‌க்க‌ம் தீவிர‌மாக‌ இய‌ங்கிய‌வ‌ர்க‌ள் என‌, எவ‌ரேயையேனும் க‌ண்டுகொள்ளுத‌ல் ச‌ற்றுக் க‌டின‌மாக‌வே இருக்கிற‌து.

Last Updated on Tuesday, 01 May 2012 23:01 Read more...
 

கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள்.

E-mail Print PDF

- எம்.கே.முருகானந்தன் -என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்டகால வாசகன் என்ற முறையில் இது எனக்கு மகிழ்வைத் தருகிறது. ஆனால் இதற்காக எமது எழுத்தாளர்கள் நெடும்பயணம் செய்ய வேண்டியிருந்தது. கிடுகு வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த எமது சிறுகதைகள் பெருவீதி கடந்து வான்வெளி எட்ட பெரு முயற்சிகள் தேவைப்பட்டன.

Last Updated on Tuesday, 01 May 2012 22:53 Read more...
 

'கறுத்தக் கொழும்பான்'

E-mail Print PDF

1

ஆசி கந்தராஜாஉடையார் மாமா மகா விண்ணன். அவரைச் சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரும். அவரைப்போன்று 'அச்சொட்டாக' விவசாயம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைப் பேச நான் வேறு ஆளைக் கண்டதில்லை. மாமா ஊரில் வாழ்ந்த காலத்தில் வயல் தோட்டம் துரவு என வசதியாக வாழ்ந்தவர். 'அரைவாசி ஊரே அவருக்குச் சொந்தமாக இருந்தது' என்று விண்ணாணம் பேசுபவர்கள் சொல்வார்கள். எப்படி இது சாத்தியமானதென ஒரு தடவை பாட்டியைக் கேட்டேன்.  இங்கிலீசுக்காரர் இலங்கையை ஆண்ட காலத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை இலகுவாக்க, மணியகாரன், உடையார், விதானையார் என்ற பதவிகளை உருவாக்கியதாகவும், பதவிக்கு வந்தவர்கள் தமது ஆட்சி அதிகாரங்களைப் பாவித்து ஊரில் உள்ள 'அடுகாணி-படுகாணிகளை' தம் வசமாக்கியதாகவும் பாட்டி சொன்னார். உடையார் மாமா வீடுகட்டியிருக்கும் 'நாவலடி வளவு' எங்கள் பாட்டனாருக்குச் சொந்தமானதென்று அம்மா சொல்லி வருத்தப்பட்டார்.

Last Updated on Wednesday, 11 January 2012 23:11 Read more...
 

எண்பதுகளில் புகலிடப் புனைகதைகள் -பார்த்திபனின் படைப்புக்களை மையமாகக் கொண்ட பார்வை-

E-mail Print PDF

அறிமுகம்
பார்த்திபனின் 'ஆண்கள் விற்பனைக்கு'பார்த்திபன் 1984 செப்டம்பரில் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். புகலிடத்திலிருந்து எழுதிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் முதன்மையானவர். இவர் எழுதிய நாவல்களையோ சிறுகதைகளையோ படைப்புக்கள் சார்ந்த கூற்றுக்களையோ ஈழத்தில் மிகச் சாதாரணமாகப் பெற்றுவிடமுடியாத நிலையே தற்போது பார்த்திபனைப் பொறுத்தவரையில் உள்ளது. இதுவரை பார்த்திபனின் படைப்புக்களுக்கு எழுதப்பட்ட விமர்சனங்களில் 14 சிறுகதைகளை மையமாகக் கொண்டு யமுனா ராஜேந்திரன் ‘கிழக்கும் மேற்கும்’ மலரில் எழுதியதே ஓரளவு விரிவான பதிவாக இருந்தது. மேலைத்தேயப் படைப்பாளிகளில் நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரி, குர்திஸ் எழுத்தாளரான ஸோரக்லி போன்றோரின் படைப்புக்களின் கருத்துலகமும் பார்த்திபனின் கருத்துலகமும் ஒன்றுதான் என ஒப்பிட்டுக் கூறுமளவுக்கு அவரது சிறுகதைகளின் பேசுபொருள் இருக்கின்ற நிலையில் பார்த்திபனைத் தேடவேண்டும் என்ற சிந்தனை உதித்தது. இந்த வகையில் இக்கட்டுரையானது அவரது முழுப்படைப்புக்களையும் ஒரு வாசகனுக்கோ ஆய்வாளனுக்கோ தமிழ்ச்சூழலில் அறிமுகம் செய்தவற்கான ஆரம்ப நிலையாகவே அமைந்துள்ளது.

 

Last Updated on Tuesday, 05 July 2011 15:25 Read more...
 

புலம் பெயர் தமிழ் இலக்கியம்: 'பனியும் பனையும்' நூல் நுழைவாயிலில் ....

E-mail Print PDF

பனியும் பனையும்எஸ்.பொ.[ஈழத்து எழுத்தாளர்களில் தனக்கென்றொரு பாணியை உருவாக்கி, தனக்கென்றொரு முகாமை உருவாக்கி வெற்றி நடை போடுபவர் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை அவர்கள். இவருக்கு அண்மையில் அவரது வாழ்நாள் இலக்கிய சேவையினைக் கெளரவிக்கும் முகமாக கனடாவிலிருந்து இயங்கும் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' என்னும் அமைப்பு 2010ற்கான இயல் விருதினை வழங்கிக் கெளரவித்தது. எஸ்.பொ. அவர்கள் தனது மித்ர பதிப்பகம் மூலம் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நூல்களைப் பதிப்பித்து வருகின்றார். இவரது பதிப்பகத்தின் மூலம் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்று 'பனியும் பனையும்' என்னும் தலைப்பில் வெளியாகிப் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றதைத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் அறிவர். மேற்படி நூலினை 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்க முடியும்.  மேற்படி நூலின் நுழைவாயிலில் எஸ்.பொ. எழுதிய குறிப்புகளையும், நூலிற்கான 'நூலக' இணையத் தொடர்பினையும் 'பதிவுகளி'ன் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம். மேற்படி நூலில் எஸ்.பொ. அவர்கள் சிறுகதைகளை புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் வாழும் நாடுகளுக்கேற்ப வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை இவ்விதமே அணுக வேண்டுமென்பதே எமது கருத்தும். - பதிவுகள் ]

Last Updated on Thursday, 23 June 2011 14:11 Read more...
 

எண்ணப் பறவை சிறகடித்து .....

E-mail Print PDF

உலகம்

இனியும் ஆயிரம் நித்தியானந்தாக்கள் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்களின் பின்னால் ஆயிரமாயிரமாய் மக்கள் திரளத்தான் போகின்றார்கள்
ஓரிரு கிருஸ்ணமூர்த்திகளும் இனிமேலும் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்கள் யாரென்று அறியப்படாமலே மறையத்தான் போகின்றார்கள்

Last Updated on Sunday, 03 April 2011 19:48 Read more...
 

இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள்

E-mail Print PDF

சு.குணேஸ்வரன்1.0 அறிமுகம்
புகலிடச் சிற்றிதழ்கள் கடந்த 1983 இன் பின்னர் ஈழத்தமிழர் புகலடைந்த நாடுகளில் இருந்து வெளிவந்துள்ளன. ஏறத்தாழ 150 ற்கும் மேற்பட்ட இதழ்கள் இதுகாலவரையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்தும் வெளிவந்துள்ளன. 90 களின் பிற்பகுதியில் இருந்து இலத்திரனியற் சூழலை தமிழ்ப் படைப்புலகு தமது எழுத்துக்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில் புகலிடச் சிற்றிதழ்ச் செயற்பாட்டை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாக அமைகின்றது.

2.0 இலத்திரனியற் சூழலில் சிற்றிதழ்கள்
கலை இலக்கியம் சார்ந்து வெளிவரும் இதழ்களை இலக்கியச் சிற்றிதழ்கள் (Little Magazines) என்று அழைப்பர். 1914 இல் அமெரிக்காவில் வெளியாகிய The Little Review என்ற இதழுடன் சிற்றிதழ் என்ற சொற்பிரயோகம் வழக்கத்திற்கு வருகிறது. (தமிழகத்தில் 1933 இல் வெளிவந்த ‘மணிக்கொடி’யும்> ஈழத்தில் 1946 ஜனவரி வெளிவந்த ‘பாரதி’ யும் முதல் இதழ்களாக வெளிவந்தபோதிலும்) தமிழில் 1959 இல் தோற்றங்கொண்ட ‘எழுத்து’ இதழே முதல் இலக்கியச் சிற்றிதழாக அமைகின்றது. ஈழத்தில் 1946 இல் வெளிவந்த மறுமலர்ச்சியும்> புகலிடத்தில் 1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த தூண்டிலும் முதலில் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ்களாக அமைந்துள்ளன. சிற்றிதழ் என்பதற்கு

Last Updated on Friday, 04 March 2011 16:45 Read more...
 

தெ. வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' பற்றிய சிறு குறிப்பு!

E-mail Print PDF

தெ. வெற்றிச்செல்வன்ஈழத்தமிழரின் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி இதுவரையில் முறையான ஆய்வு நூலொன்று வெளிவரவில்லையே என்ற குறையினைத் தீர்த்துவைக்கின்றது தமிழகத்திலிருந்து சோழன் படைப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' என்னும் ஆய்வு நூல். பெயருக்கு ஒரு சில நூல்களைப் படித்து விட்டு , தங்கள் எண்ணங்களைப் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளும் நமது பிரபல எழுத்தாளர்களின் நுனிப்புல் மேய்தல் போலில்லாது உண்மையிலேயே மிகவும் சிரமமெடுத்து, இயலுமானவரையில் நூல்களைத் தேடிப்பிடித்து இந்த ஆய்வு நூலினைப் படைத்துள்ள வெற்றிச்செல்வனின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுதற்குரியது மட்டுமல்ல இத்துறையில் விரிவான , எதிர்கால ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்த நூலுக்கு முக்கியத்துவமுண்டு.

Last Updated on Sunday, 14 October 2012 22:58 Read more...
 

புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!

E-mail Print PDF

மீள்பிரசுரம்: 'கூர் 2011' மலரிலிருந்து.
புலம் பெயரும் மானுட சமுதாயம் ...[இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக எழுதப்பட்டது. மேற்படி மலரில் ஒரு சில பிழைகள் ஏற்பட்டு விட்டதன் காரணமாக அவ்விடங்களில் அர்த்தங்கள் மாறுபட்டும், மயக்கம் தருவதாகவும் காணப்படுவதால் இக்கட்டுரையினை இங்கு மீள்பிரசும் செய்கின்றோம். மலரில் வெளியான கட்டுரையில் காணப்படும் முக்கியமான குறைகளாக பந்திகள் ஒருங்கிணைக்கப்பட்டமை, வார்த்தைகள், வசனங்கள் தவறிப் போனமை மற்றும் அடைப்புக் குறிகள் சில இடம் மாறி இடப்பட்டுள்ளமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன் புறக்கணிக்கக் கூடிய தவறுகளாக எழுத்து, இலக்கணப் பிழைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலர் மிகவும் காத்திரமானதொரு மலராக வெளிவந்திருக்கின்றது. கனடாத் தமிழ் இலக்கியவுலகில் தவிர்க்க முடியாததொரு தொகுப்பிதழ் 'கூர்' கலை இலக்கிய மலரென்று நிச்சயம் கூறலாம். - ஆசிரியர் ]

Last Updated on Sunday, 14 October 2012 22:59 Read more...
 


counter for tumblr

அண்மையில் வெளியானவை

கூகுளில் தேடுங்கள்

Custom Search

பதிவுகளில் விளம்பரங்கள்

பதிவுகளில் விளம்பரங்கள், திருமண அறிவித்தல்கள், மரண அறிவித்தல்கள் போன்றவற்றைப்  பிரசுரிக்க விரும்புகிறீர்களா? நியாயமான கட்டணங்களில் பிரசுரிப்போம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசிக்கப்படும் பதிவுகளில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரியுங்கள். மேலதிக விபரங்களுக்கு ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

Satyamev Jayate

Join Aamir Khan and STAR India on Satyamev Jayate – an emotional, challenging quest for hope – Sundays, at 11 AM

பைசா.காம்: இணையத்தில் உழையுங்கள்!

Speak English

Sell your books to Powell's Online

Sell your books to Powell's

Build Your Own Business Website!

Get online instantly with Geohostcorner.com web page software.  Have you ever wanted to build a website, but just weren't quite sure how? With the Geohostcorner.com webstore builder creating your own website is easier than ever! You'll amaze your friends with a professional design, beautiful stock images, and great, customizable features. You have over 1700 professionally designed website templates that come free with the website design software - just a click and it will look like you spent thousands on a designer!  Start Your Own Web Business! Easy Business Websites! Get online instantly with Geohostcorner.com web page software! Build your own website for only $29.99. For More information Click On Here

WIX: Create Your Free Website

பதிவுகள் இதுவரையில் (2000 - 2011)

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

இ(அ)க்கரையில் ..

பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் புலம்பெயர்ந்து பரவியிருக்கும் உலகத்தமிழ் மக்களின் கலை, இலக்கிய முயற்சிகள் மற்றும் வாழ்வு பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள், மற்றும் தகவல்கள்  இப்பகுதியில் பிரசுரிக்கப்படும். உங்கள் ஆக்கங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.-ஆசிரியர்

தமிழ் வர்த்தகக் கையேடு
'பதிவுகள்' வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு. .உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர் இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல

இலவச வரி விளம்பரம்
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

அ.ந.கந்தசாமி படைப்புகள்

புதிய பனுவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

IT Training!

We provide one to one or small group  training for the following subjects (In Toronto only):

1. IBM (AIX) System Admin (Basic)
2. IBM (AIX) System Admini (Advanced)
3. ASP (Classic)
4. C Programming (Basics)
5. Soldering & Basics Electronics
6. Joomla 

More Infomation: Contact at ngiri2704@rogers.com 
 

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

Fyodor Dostoevsky

Fyodor Dostoevsky (1821-1881) was a Russian novelist, journalist, short-story writer whose psychological penetration into the human soul had a profound influence on the 20th century novel. Read More

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More

The Fabric Of The Cosmos By Brian Greene

The Hidden Reality: Parallel Universes and the Deep Laws of the Cosmos By Brian Greene

Hyperspace: A Scientific Odyssey Through Parallel Universes, Time Warps, and the 10th Dimension By Michio Kaku

Das Kapital By Karl Marx

The Brothers Karamazov [Hardcover] By Fyodor Dostoevsky

Penguin Classics Nana By Emile Zola

A Brief History of Time By Stephen Hawking


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

ISSN  1481 - 2991 
ஆசிரியர்: வ.ந.கிரிதரன்   Editor-in - Chief: V.N.Giritharan

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One" 

*அறிவித்தல்:  ஏப்ரல் 2011 ( இதழ் 136 ) வரை   மாத இணைய இதழாக வெளிவந்து கொண்டிருந்த 'பதிவுகள்' இணைய இதழ் ஏப்ரல் 2011  இதழிலிருந்து  மாத, வார இதழென்றில்லாமல் ஆக்கங்கள் கிடைக்கும் தோறும் வெளியிடப்படும் இதழாக வெளிவரும்.  'பதிவுகள்' இதழுக்குக் கிடைக்கப் பெறும் ஆக்கங்களை (அறிவித்தல்களுட்பட) கிடைத்ததும் உடனுக்குடன் பிரசுரிப்பதே அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால்தான் இந்த முடிவு.

உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

வ.ந.கிரிதரன் எழுதிய தமிழ் நூல்கள் மின்னூல்களாக விற்பனைக்கு

தமிழியல் (Journal Of Tamil Studies)

தமிழியல் இதழ்

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர், ' அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் ' ( International Association of Tamil Research ) என்னும் அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் இசைவினைப் பெற்று ' Tamil Culture ' இதழை ' Journal of Tamil Studies ' என்னும் மாற்றுப் பெயரில் அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் நடத்தி வந்தது. பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் ' Journal of Tamil Studies ' இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1970 அக்டோபர் 21 இல் தொடங்கப் பெற்ற நிலையில், IATR அமைப்பு இந்த ஆய்விதழை அதே பெயரில் ( Journal of Tamil Studies ) நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதனை விளைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழை வெளியிட்டு வருகிறது. இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ' Journal of Tamil Studies ' இதழ் தனிநாயகம் அடிகள் தொடங்கிய ' Tamil Culture ' என்னும் இதழின் மறு அவதாரமே தவிரப் புதியதன்று என்பதையும், ' Tamil Culture ' நின்றுவிடவில்லை என்பதையும் இவ்வரலாறு தெரிவிக்கிறது. இதழினன வாசிக்க ... உள்ளே

Center For Asia Studies

கூகுளில் தேடுங்கள்!

SHAADI.COM: Matrimonial Service

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!

 Welcome to the home page of the Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures project..Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

Raga Surabhi

Raga Surabhi is a small effort to create more awareness on Carnatic music.  We would like to dedicate this site to those music lovers, who listen to Carnatic music with great interest and enthusiasm, but have not had enough opportunity to learn about identifying and appreciating ragas. Read More

இணையத்தில் வர்த்தகம் செய்ய..

இணையத்தில் நீங்களும் வர்த்தகம் செய்யலாம். பொருட்களை, உங்கள் சேவைகளை விற்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இணையத்தில் நீங்கள் வர்த்தகம் செய்வதை PayPal மிகவும் இலகுவாக்குகின்றது. இப்பொழுதே PayPalஇல் இணைவதன் மூலம் இணையத்தில் நீங்களும் பணம் சம்பாதிக்கலாமே. இணைவதற்கு கீழுள்ள 'பட்டனை' அழுத்துங்கள்

Steve Jobs

The Wealthy Barber Returns

The Ediot By Fyodor Dostoyevsky

Internet Riches: The Simple Money-Making Secrets of Online Millionaires By Scott Fox

Get Rich Click!: The Ultimate Guide to Making Money on the Internet

How I Made My First Million on the Internet and How You Can Too! By Ewen Chia

Canadian Immigration Made Easy - 2nd Edition By Tariq Nadeem

Awaken the Giant Within: How to Take Immediate Control of Your Mental, Emotional, Physical and Financial

The Phantom The Complete Series: The Gold Key Years Volume One [Hardcover]

Sell your books to Powell's

Sell your books to Powell's


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -