பதிவுகள்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
இலக்கியம்


வாசிப்பும், யோசிப்பும் - 22: லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் தொடரும் மொழிபெயர்ப்புப் பணி: 'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் கவிஞர் சேரனின் கவிதைளை வெளியிட்ட ஆர்க் வெளியீட்டகத்துக்கு இங்கிலாந்தின் பேனா அமைப்பின் மொழிபெயர்ப்புக்கான விருது!

E-mail Print PDF

லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom)'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் கவிஞர் சேரனின் கவிதைகளை லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom) அவர்களின் மொழிபெயர்ப்பில் 'ஆர்க்' வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. இதற்காக அப்பதிப்பகத்துக்கு  இங்கிலாந்துப் பேனா அமைப்பினரின் (PEN - UK) மொழிபெயர்ப்பு நூல்களுக்கான 2012ற்குரிய விருது கிடைத்துள்ளது. லக்சுமி ஹாம்ஸ்றம் அவ்ர்களுக்குக் கனடாவின் 2007ற்கான இயல்விருது கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த விருது கிடைத்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் கடுமையாக அந்த விருதினையும், லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் அதற்கான தகுதி பற்றியும், அவரை அவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பற்றியும் விமர்சித்துத் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அந்நடுவர்களில் நானுமொருவனாக இருந்ததனால் அது பற்றி பதிவுகள் இணைய இதழில் எழுதிய பதில் கட்டுரைகளிலொன்றினை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்.

Last Updated on Wednesday, 12 June 2013 18:01 Read more...
 

Independent publishers scoop PEN awards for translation

E-mail Print PDF
- Cheran's 'In a Time of Burning', translated from the Tamil by Lakshmi Hostrom, receives a 2013 English PEN Award for Translation. -

[Grants] Independent publishers scoop PEN awards for translation  Posted May 15th, 2013 by Emma Cleave & filed under Translation.  In a Time of Burning by Cheran, translated from the Tamil by Lakshmi Hostrom. Published by Arc Publications, July 2013Publishers Arc, Peirene, Haus Publications, And Other Stories, Portobello Books and Harvill Secker were all named today as recipients of English PEN’s latest series of awards for books in translation.  Alongside these five award-winners, English PEN announced a further 16 titles that will receive grants to enable publishers to bring into English outstanding writing from languages as diverse as Farsi, Tamil, Portuguese, Occitan, Hebrew, French, German and Spanish. Each year, English PEN highlights worldwide writing of exceptional literary merit and courage. The charity awards grants to support both the promotion of published titles to readers in this country and to help finance the translation of planned titles, to ensure they reach English-speaking readers around the world.
 

Last Updated on Tuesday, 11 June 2013 17:34 Read more...
 

பயனுள்ள மீள்பிரசுரம்: "புலம்பெயர் இலக்கிய' முன்னோடி ப.சிங்காரம்!.

E-mail Print PDF

எழுத்தாளர் ப.சிங்காரம்தமிழ்ச் சூழலில் கவனிக்கப்பட்ட படைப்பாளிகளைவிட கவனிக்காமல்விட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகமென்பது பலரும் அறிந்ததுதான். ஓர் எழுத்தாளரைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து, அவருடைய படைப்புகளை அங்கீகரிக்கும்போது அவரிடமிருந்து மேலும் சில சிரத்தையானப் படைப்புகளை எதிர்பார்க்க முடியும். அந்த அங்கீகாரம் மேலும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை அவருக்குக் கொடுக்கும். காலம் கடந்து ஒருவரின் சாதனைகளைப் பாராட்டுவதும், விழா எடுப்பதும் தமிழ்ச்சூழல் கண்டிராத ஒன்றல்ல. அந்த வகையில், நிகழ்காலம் மறந்த ஓர் எழுத்தாளர்தான் ப.சிங்காரம். தான் எழுதிய இரு நாவல்களுக்காக எந்தவித அங்கீகாரமும் கோராத மகத்தான மனிதர். இவர் எழுதியது "கடலுக்கு அப்பால்', "புயலிலே ஒரு தோணி' ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே!

Last Updated on Thursday, 06 June 2013 21:44 Read more...
 

பொன்னீலனின் ”மறுபக்கம்“ : மதச்சார்பின்மைக்கு இணக்கமான நாவல்

E-mail Print PDF

பொன்னீலனின் ”மறுபக்கம்“ : மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்சுப்ரபாரதிமணியன்சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த  இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும். ’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.

Last Updated on Thursday, 06 June 2013 16:49 Read more...
 

உலக நெறியான மனித நேயம்

E-mail Print PDF

- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் ஆறறிவுள்ள மனிதனுக்கு மிக முக்கியமாக வேண்டப்படுவது மனிதனால் வகுக்கப்பட்ட மனித நேயமாகும். மனித நேயம் என்பது 'மனித உலக வாழ்க்கை இயல்', 'மனித இனநலக் கோட்பாடு', 'மனிதப் பொதுமைநல இயல்', 'மனித இனப் பொதுச்சமய அமைதி', 'மனித இன இயற் பண்பாய்வுத் துறை' என்றும் பொருள்படும். மனித நேயத்துக்குரிய ஒழுக்கத் தத்துவ முறைகளை மனிதன் சிந்திப்பதாலும், வரலாறுகளைப் படிப்பதாலும், தன்னிடமுள்ள   அனுபவத்தாலும் பெற்றுக் கொள்கின்றான். இதைக் கருத்திற் கொண்ட ஆன்றோரும், சான்றோரும் அன்பு, பண்பு, சத்தியம், உண்மை, தர்மம், நேர்மை போன்ற அறநெறிகளைத் தமது இலக்கியங்களிலும், நீதிநெறி நூல்களிலும், சமய நூல்களிலும் எழுதி வருகின்றனர். மக்கள் இவற்றைப் படித்துத் தாமும் இவ்வறநெறிகளை உள்வாங்கித் தமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கின்றனர். இதனால் மக்களும் மனித நேயமுள்ளவர்களாகி அவ்வழி நின்று செயல்படுவதனால் மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வைக் காண்கின்றனர். மனித நேயம் மக்கள் மத்தியில் மிளிர்வதால் அவர்கள் மக்களையும், மற்றைய ஐயறிவுடைய உயிரினங்களையும் கட்டிக்காப்பாற்றிப் பேணி வருவதும் தெளிவாகின்றது.

Last Updated on Tuesday, 04 June 2013 22:33 Read more...
 

தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஒரு விமர்சன அறிமுகம்......

E-mail Print PDF

1. வரலாற்றுக் காட்சியான ஒரு படைப்பாக்கம்
எழுத்தாளர் தேவகாந்தன்.முனைவர் நா.சுப்பிரமணியன் நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட - கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட - வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.

Last Updated on Monday, 03 June 2013 17:46 Read more...
 

அகவை எண்பத்து ஐந்தினைக் காணும் அன்பு நண்பரை அணைக்கிறேன்!

E-mail Print PDF

பொன்-பாலா என்று எம்மால் ஆசையுடன் அழைக்கப்படும் எம்இனியநண்பர் பொன்னையா பாலசுந்தரம் அவர்கள் 85 ஆகிவிட்டார்கள். பேராசிரியர் கோபன் மகாதேவாபொன்-பாலா என்று எம்மால் ஆசையுடன் அழைக்கப்படும் எம் இனிய நண்பர் பொன்னையா பாலசுந்தரம் அவர்கள் வயது எண்பத்து ஐந்தினை அடைந்துவிட்டார். குறொய்டனுக்குக் கிட்டிய 'பேர்ளி'யில் ஒரு கிறீத்தவக் கோவிலில் கொண்டாட்டம். அவரின் மூத்த மருமகன் கிருபாகரன், எமக்குத் தொலை பேசியில் அழைப்பு விடுத்தார். 2013 மேமாதம் 27 திங்களில் அந்தஒன்றுகூடல். என் மேசைத்தொலை பேசிக்குக் கிட்டப் பேனா, கடுதாசி இருந்தபடியால் எல்லா விபரங்களையும் கேட்டு மடமடவென்று மகிழ்ச்சியுடன் குறித்தேன். (இப்போஅதைத் தேடுகிறேன்! தேடித்தேடிக் கொண்டே இவ்வாழ்த்துக் கட்டுரையை எழுதுகிறேன்!!). பொன்-பாலாவுக்கும் எனக்கும் நல்ல ஒற்றுமைகள் பல உள்ளன. . ஒன்று, நாம் இருவரும் தமிழ் கவிதையின் தாசர்கள். நாங்களும் கவிப்போம். எனது கவிதைகளை அவர் தன் இதயத்தினால் இமயத்தில் வைத்துப் பாராட்டுவார். நானும் அவரின்கவிதைகளை உடனுடன் மிகவும்மெச்சுவேன். அவரின் கட்டுரைகளில் ஒன்றை மட்டும் நான் சுருக்கி இருக்கிறேன். என் ஆங்கிலக் கவிதை ஒன்றில் மட்டும் சில தட்டெழுத்துப் பிழைகளை அவரால் திருத்த முடியவில்லை. இவை எம் தொகுப்புக் கடமைகளை ஆற்றும் போது நாம் எதிர்கொண்ட நிர்ப்பந்தங்கள்@ இன்றுமட்டும் இவை எம்மால் பேசப்படாதவை.
 

Last Updated on Sunday, 02 June 2013 23:48 Read more...
 

எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?

E-mail Print PDF

- யாழ்ப்பாணப் பொது நூலகம் சிங்கள வன்முறையாளர்களால் தீவைத்து அழிக்கப்பட்ட நினைவுநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது (01.06.2013) -

N.Selvarajahநூல்களை எரிப்பதும் நூலகங்களை எரிப்பதும் அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக்கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளாக உலகெங்கினும் உள்ள அரசியல் அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் வரலாறு. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடி அறியப்படாத அந்நாளில் இருந்த நூல் ஒரு பிரதியோ, சில பிரதிகளோ  ஏடுகளிலும், களிமண் தகடுகளிலும் எழுதப்பட்டுப் பேணப்பட்டு வந்திருந்தன. அவற்றை அழிப்பதன் மூலம் அதிகார வர்க்கம் அதிலிருந்த கருத்துக்களை குழி தோண்டிப் புதைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கலாம். அன்று மட்டுமல்ல இன்று அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்காலத்திலும் இந்த நடைமுறையைக் கைக்கொள்வதினால் இவர்கள் எதைச்சாதித்து விட்டார்கள்?

Last Updated on Saturday, 01 June 2013 05:05 Read more...
 

மீள்பிரசுரம்: பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் ஒரு நேர்முகம்

E-mail Print PDF

 பேராசிரியர் கா.சிவத்தம்பி[ பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினம் மே 10. அதனையொட்டி உயிர்நிழல் சஞ்சிகையில் வெளியான இந்த நேர்காணல் மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள் ]

ய.ரா: நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன். சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நீங்கள் எப்படி assess(மதிப்பீடு) பண்ணுகிறீர்கள்?

கா.சி : சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணக்களை நான் இப்படிப் பார்க்கிறேன். இந்த மார்க்சியத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சினை என்னவென்றால் சோவியத் stateஇனுடைய, சோவியத் அரசினுடைய development-உம் சோவியத் அரசு ரஷ்யப் பேரரசினுடைய பகுதிகளை சோவியத் அரசுக்குள் கொண்டு வரவேண்டிய-- கொண்டு வந்த நிர்ப்பந்தமும் இதன் காரணமாக, தொடக்கம் முதலே காணப்பட்ட ஒரு சமனற்ற வளர்ச்சியும, சோவியத் ரஷ்யப் புரட்சியை, ரஷ்யப் பேரரசின் மாநிலங்கள் முழுவதற்கும் புதுமையாக ஆக்க முனைந்ததில் எற்பட்ட வரலாற்றுப் பிரச்சினைகள் அடிப்படையில் உள்ளன என்று நான் கருதுகிறேன். புரட்சி ஏற்பட்டது ரஷ்யாவில்தான், மொஸ்கோவில்தான். ஆனால் ரஷ்யப் பேரரசு, கசாக்ஸ்தான் வரை துருக்கிஸ்தான் வரை நீண்டு கிடந்தது. லெனின் காலத்திலே படிப்படியா இவையெல்லாம் அதாவது 27, 28 இலை தான் வந்து சேருது. இங்கெல்லாம் பெரிய ஒரு revolution உடைய தன்மைகள் பற்றியோ புரட்சி பற்றியோ அதற்கான சிந்தனைகளே இருந்தது கிடையாது.

Last Updated on Thursday, 09 May 2013 22:06 Read more...
 

சீட்டு விளையாட்டே வாழ்க்கை

E-mail Print PDF

சுப்ரபாரதிமணியன்தீவிரமான வாசிப்பின் அடுத்த வெளிப்பாடு எழுதிப் பார்ப்பது. கவிதையின் இறுக்கம் பிடிபடாதபோது-அல்லது கவிதையிலிருந்து அடுத்த தளத்திற்குச் செல்கிறபோது சிறுகதை மனதில் வந்துவிடும். வாசிப்பு தந்த பாதிப்பில் உரைநடையில் எதையாவது எழுதிப் பார்க்கத் தோன்றும். அல்லது வாசிப்பின்போது கிடைத்த, பிடிபடுகிற விஷயத்திற்கு இணையான இன்னொரு அனுபவத்தை எழுதிப் பார்க்கத் தோன்றும். அந்த விஷயம், அனுபவம் சிறுகதைக்கான முரண் அற்றும் இருக்கலாம். முரண் அல்லது திருப்பம் சிறுகதையின் கடைசியில் வெளிப்பட்டு இருக்க வேண்டும் என்பது பல சமயங்களில் செயற்கையாகவும் அமைந்துவிடும். சமூக முரணே சிறுகதைக்கான முரண் என்று சொல்லலாம். இதை உடைத்தெறிகிற பல வடிவங்கள் நம்முன் இன்று.  'நாலு பேரும், பதினைந்து கதைகளும்' என்றொரு தொகுப்பு. நானும் நாலு நண்பர்களும் சேர்ந்து வெளியிட்டோம். (கார்த்திகா ராஜ்குமார், ப்ரியதர்ஷன், நந்தலாலா) அது எழுபதுகளில் சா. கந்தசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் போன்றோர் இடம் பெற்ற 'கோணல்கள்' என்ற தொகுப்பின் சாயலைக் கொண்டிருந்தது. அதில் உள்ள 'கவுண்டர் கிளப்' என்ற நீண்ட கதை என் சின்ன வயசின் கிராம வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு மண் சார்ந்த வாழ்க்கையும், அனுபவங்களும் அதனூடாக அமைந்த வாழ்க்கையின் சிக்கல்களும், முரண்களும்-அதை ஒரு சிறுகதையாக்கியிருந்தது.

Last Updated on Saturday, 27 April 2013 22:27 Read more...
 

அமைதியும் ஆற்றலும் ஆளுமையும் இணைந்த இலக்கிய கலாவித்தகர் மணிவிழா நாயகர் கலாமணி

E-mail Print PDF

எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறதுஎழுத்தாளர் முருகபூபதிஎல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக -  செடியாக - மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன்.  அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக   அவுஸ்திரேலியா   சிட்னிக்கு வந்தார்.   நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன். மனைவி  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய   மனஉளைச்சல்   என்பதை  அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். Home Sick இடம்பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும்   அனுபவித்த    புத்திக்கொள்முதல்தான். எனினும் தான் வந்தநோக்கத்தில்   கண்ணும்   கருத்துமாக இருந்து   அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி.   சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு    ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின்   எதிர்காலம்   குறித்த   ஏக்கமும்   கவலையும் அவரது மனதில் கொழுவேறியது.

Last Updated on Sunday, 14 April 2013 19:34 Read more...
 

காலமும் கணங்களும்: இலக்கிய உலகில் ஒரு யோகி கணேஷ்!

E-mail Print PDF

காலமும் கணங்களும்: இலக்கிய உலகில் ஒரு யோகி கணேஷ்!எழுத்தாளர் முருகபூபதிபாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப்பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது” என்றாள். தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் பிறந்த உலகப் பிரசித்திபெற்ற பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக இலங்கைக்கு அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச்சுருக்கமாகச் சொல்லிவிட்டு, இயக்குநர் பாலா தமிழ்நாட்டில் தேயிலைத்தோட்டங்களில் கூலி அடிமைகளாக வேலைசெய்த மக்களுக்கு நேர்ந்த கொடுமையை சித்திரித்திருக்கிறார்” என்றேன். மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி இந்த காலமும் கணங்களும் தொடர் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.

Last Updated on Sunday, 14 April 2013 19:34 Read more...
 

தொல்காப்பியம் - பாலவியாகரணம் எச்சவியல் ஒப்பீடு!

E-mail Print PDF

தொல்காப்பியர்1. திராவிடமொழிக் குடும்பத்தில் தொன்மையானது தமிழ்.  தமிழை விடத் தெலுங்கு மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம். தமிழ் தனித்தன்மை வாய்ந்தது.  இம்மொழிக்குரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் அத்தன்மை பெற்று விளங்குகிறது. தெலுங்குமொழி சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைச் சார்ந்தது.  தெலுங்கின் முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி (நன்னயப்பட்டு, கி;.பி.11). இந்நூலின் பெரும்பகுதி சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. அதன்பின், பன்னூறாண்டுகள் கழித்து மாணவர்களுக்காக தெலுங்கில் பாலவியாகரணம் (சின்னயசூரி, 1858) இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் பாலவியாகரணத்திலும் எச்சவியல் இடம்பெற்றுள்ளது.  அவ்வியல்களின் கருத்தியல்களை ஒப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. [மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ] .....முழுவதும் வாசிக்க

Last Updated on Tuesday, 09 April 2013 18:40
 

தினக்குரல்.காம்: பவள விழாக்காணும் கவிஞர் இக்பால்

E-mail Print PDF

தினக்குரல்.காம்: பவள விழாக்காணும் கவிஞர் இக்பால்இன்றைய தினம் (11.02.2013) பவள விழா அகவையைத் தொட்டு நிற்கும் கவிஞர் ஏ.இக்பால் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அசைக்க முடியாததொரு ஆளுமை என்பது யாவரும் அறிந்ததே. அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மேல் மாகாணம் தர்கா நகரை புகுந்தகமாகக் கொண்டு அங்கு இற்றைவரை வாழ்ந்து வருகிறார். இலக்கியத்துறையில் தன்னை நிலைநாட்டி ஜாம்பவானாகத் திகழும் அதே நேரத்தில் கல்விப் புலத்தில் அவர் பணி இரண்டாம் பட்சமானதல்ல. அக்கரைப்பற்று ரோமன் கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் படிக்கும்போது அங்கு பயிற்சி ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எம்.வை.எம். முஸ்லிம், அ.ஸ.அப்துஸ்ஸமது ஆகியோரால் இனம் காணப்பட்டு வழி நடத்தப்பட்டார். அங்கு "கலாவள்ளி' என்ற கையெழுத்துச் சஞ்சிகை இவர் பொறுப்பில் நடத்தப்பட்டது. ஆசிரியராகக் கல்விச் சேவையை ஆரம்பித்த இவர் தமிழ்ப் பாட நூல் ஆலோசனை சபை உறுப்பினராக, இஸ்லாமிய பாடநூல் எழுத்தாளராக விடுவிப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, கல்விக் கல்லூரி தமிழ்ப் பிரிவு போதனாசிரியராக பல்லாண்டுகள் சேவையாற்றியுள்ளார்.

Last Updated on Wednesday, 27 March 2013 21:08 Read more...
 

National Post: Things Fall Apart author Chinua Achebe dead at 82

E-mail Print PDF

Chinua Achebe, the internationally celebrated Nigerian author, statesman and dissident who gave literary birth to modern Africa with Things Fall ApartChinua Achebe- March 22, 2013 - Chinua Achebe, the internationally celebrated Nigerian author, statesman and dissident who gave literary birth to modern Africa with Things Fall Apart and continued for decades to rewrite and reclaim the history of his native country, has died. He was 82. Achebe died following a brief illness, said his agent, Andrew Wylie. “He was also a beloved husband, father, uncle and grandfather, whose wisdom and courage are an inspiration to all who knew him,” Wylie said. His eminence worldwide was rivaled only by Gabriel Garcia Marquez, Toni Morrison and a handful of others. Achebe was a moral and literary model for countless Africans and a profound influence on such American writers as Morrison, Ha Jin and Junot Diaz. As a Nigerian, Achebe lived through and helped define revolutionary change in his country, from independence to dictatorship to the disastrous war between Nigeria and the breakaway country of Biafra in the late 1960s. He knew both the prestige of serving on government commissions and the fear of being declared an enemy of the state. He spent much of his adult life in the United States, but never stopped calling for democracy in Nigeria or resisting literary honours from a government he refused to accept.

Last Updated on Friday, 22 March 2013 22:03 Read more...
 

வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்

E-mail Print PDF

முன்னுரை

வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை.  கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி.  1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.

வண்ணதாசனும் இயற்கையும்

சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.  தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார்.  ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.

 “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
 செய்தி யாழினி பகுதியொடு
 அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1

Last Updated on Monday, 18 March 2013 23:58 Read more...
 

அந்தனி ஜீவா வின் ‘’அ.ந.க ஒரு சாகாப்தம்’ –ஒரு மதிப்பீடு

E-mail Print PDF

அந்தனி ஜீவா வின் ‘’அ.ந.க ஒரு சாகாப்தம்’ –ஒரு மதிப்பீடுஎழுத்தாளர் மேமன்கவி[அறிஞர் அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனை முன்னிட்டு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுன் 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூல் பற்றிய எழுத்தாளர் மேமன்கவியின் இக்கட்டுரை பிரசுரமாகின்றது. இதனைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பிய மேமன்கவிக்கு நன்றி. -பதிவுகள்.] அ.ந.க.என நெருக்கமானவர்களால் அழைக்கப்பட்டவர்.. அவரது மறைவு நிகழ்நது சுமார் 40 வருடங்கள் கடந்து அவரை பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகள் உதிரிகளாக ஆங்காங்கே  பிரசுமாகி இருப்பினும், அவர் பற்றிய ஓரு நூல் என்ற வகையில் அந்தனி ஜீவாவின் ‘அ.ந.க ஒரு சகாப்தம்’ முக்கியமான நூலென்றே சொல்லவேண்டும். இன்றைய நமது கலை இலக்கிய சூழலில் முக்கிய தேவை ஒன்று இருக்கிறது. புதிய தலைமுறையைச் சார்ந்த கலை இலக்கிய ஈடுபாட்டாளார்களுக்கு, அவர்கள் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் நவீன கலை இலக்கிய வளர்ச்சிக்கு அஸ்திவாரமிட்டுப் போன முன்னோடிகளைப் பற்றிய அறிதலை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இந்த நூல் அந்த தேவையை நிறை வேற்றுவதில் பங்காற்றி இருக்கிறது. அந்தனியின் இந்த சிறிய நூல் அ.ந.க வை சிறப்பான முறையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஆய்வு செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

Last Updated on Monday, 18 March 2013 19:09 Read more...
 

தேசம்நெற்.காம்: நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு தமிழகத்தில் கௌரவம்!

E-mail Print PDF

கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர். கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர்.  சென்னை பாரதீய வித்தியா பவனில் 29.1.2013 அன்று செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழாவின் சிறப்பம்சமாக இவ்வரவேற்புபசாரம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றான பலனை எதிர்பார்க்காமல் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்ய வேண்டும் என்ற வாக்கைத் தன் வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி வரும் செல்வராஜாவுக்கு இந்நிகழ்வு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். நிகழ்ச்சிக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும். பாரதீய வித்தியா பவன் வாயிலில் நூலகவியலாளரின் புகைப்படத்தைத் தாங்கிய பாரிய வண்ணப் பதாதையொன்று “இலண்டன் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வரவேற்பு விழாவுக்கு வருகைதரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்று வரவேற்றது.

Last Updated on Saturday, 16 March 2013 16:33 Read more...
 

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

E-mail Print PDF

வெங்கட் சாமிநாதன்[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ]  -  'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று.

Last Updated on Saturday, 29 September 2012 00:43 Read more...
 

பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'

E-mail Print PDF

பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' - வ.ந.கிரிதரன் -['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையினை முன்வைத்துக் கட்டுரையொன்றினை மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையில் எழுதியிருக்கின்றேன். 1981 அல்லது 1982ஆம் ஆண்டு வெளிவந்ததாகவிருக்க வேண்டும். அப்பொழுது அதன் ஆசிரியராகவிருந்தவர் பொறியியலாளர் பிரேமச்சந்திரன். எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரனை நான் முதன் முதலில் அறிந்துகொள்ளக் காரணமாகவிருந்ததும் அக்கட்டுரையே. 'நுட்பத்தில்' வெளிவந்த அக்கட்டுரையினை வாசித்துவிட்டு என்னுடன் தொடர்புகொண்டார். அதன் பின்னர் அக்கட்டுரை கைவசமில்லாத காரணத்தால் மீண்டும் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு' என்னும் தலைப்பில் 'டொராண்டோ'வில் வெளிவந்த 'தாயகம்' (சஞ்சிகை/ பத்திரிகை)யில் எழுதினேன். பின்னர் அக்கட்டுரை 'பதிவுகள்' இணைய இதழிலும், 'திண்ணை' இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது. அக்கட்டுரையினை எழுத்தாளர் (சீர்காழி) தாஜ் தனது வலைப்பதிவான 'தமிழ்ப்பூக்க'ளிலும் மீள்பிரசுரம் செய்து அது பற்றிய தனது கருத்தினையும் பதிவு செய்திருக்கின்றார். பாரதியின் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 11) அக்கட்டுரை மீண்டும் பதிவுகளில் பாரதியின் நினைவுக்காகவும், ஒரு பதிவுக்காகவும் பிரசுரமாகின்றது. - வ.ந.கி]  தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள்,இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்:

Last Updated on Tuesday, 11 December 2012 23:48 Read more...
 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் வெளியீடு பற்றி...

E-mail Print PDF

குடிவரவாளன் பற்றிச் சில குறிப்புகள்......

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'[வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் இந்த வருட இறுதிக்குள் தமிழகத்தில் வெளிவரவுள்ளது. அதனையொட்டி இக்கட்டுரை, ஓர் அறிமுகத்துக்காகப் பிரசுரமாகின்றது. - பதிவுகள்-] இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா 'எயார் லைன்ஸ்' எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.

Last Updated on Thursday, 07 March 2013 20:08 Read more...
 

கரிகாலன் விருது பற்றிச் சில குறிப்புகள்!

E-mail Print PDF

வே.ம.அருச்சுணன் – மலேசியாகடந்த  10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில்  ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம்  மிகச் சிறப்பாக  நடத்தியது பாராட்டுக்குரியது. இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும்  சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய  நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் போன்று நானும் மகிழ்கிறேன்.  கரிகாலன் விருது  குறித்து என் கருத்தைக் கூற விழைகிறேன். தமிழ்நாட்டிலுள்ள தஞ்சைப் பல்கலைக்கழகம் இவ்விருதினை வழங்குவதில்,எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக விளைந்ததே இந்த விருது. இதற்காகச் சங்கத்தையும் தொலைநோக்காகச் செயல்படும் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களையும் பாராட்டத்தான் வேண்டும்.

Last Updated on Tuesday, 12 March 2013 21:45 Read more...
 

தமிழ்மகனுக்கு இன்னுமொரு விருது

E-mail Print PDF

தமிழ் மகனின் 'வனசாட்சி'தமிழ்மகன்நீலகிரி மலையைச்  சார்ந்த ” மலைச்சொல்” என்ற இலக்கிய  அமைப்பு  இவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான “ மலைச் சொல்” இலக்கிய விருதை தமிழ்மகனின் சமீபத்திய  நாவலான “ வனசாட்சி” க்கு கோவையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.  எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, திலகபாமா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், பால நந்தகுமார், மு.சி. கந்தைய்யா ஆகியோர் நாவல் பற்றி பேசினர்.  ரூ 10,000 ரொக்கப்பரிசு கொண்டது இப்பரிசு.” மலைச் சொல் “ அமைப்பு வழக்கறிஞர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் இயங்குவதாகும். தமிழ்மகன் தனது இந்த அய்ந்தாவது நாவலின் பின்னணியை  முந்திய நாவல்களின் களமான திராவிட அரசியல், திராவிட  ஆளுமைகள், திரைப்படம், அவற்றின் உளவியல் பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்து  வேரோடு பிய்த்துக் கொண்டு  இலங்கைப் பின்னணிக்கு நகர்த்தியிருக்கிறார்  என்பது ஆரோக்யமான விசயம். படைப்பாளி புதிய களங்களில் இயங்குவது உற்சாகமாக இருக்கும்.வழமையான அனுபவங்களிலிருந்து புது அனுபவ வார்ப்புகள் கிடைக்கும். இன்னொருவரின் ஆவியாக இருந்து கொண்டு செயல்படுவதில் நிறைய சவுகரியங்கள் உண்டு.இந்த சவுகரியத்தை உற்சாகமாக இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.அவரின் ஆர்வமான படைப்பு வீச்சிற்கு சவாலாகி சமாளித்திருக்கிறார்.

Last Updated on Tuesday, 12 March 2013 21:35 Read more...
 

சசிபாரதி என்கிற அற்புத மனிதன்.

E-mail Print PDF

சசிபாரதிவாழ்வது   அர்த்தமுள்ளதாய்  வாழ்தல்  வேண்டும். குறைந்த  பட்சம்  மனிதனாய் வாழவேண்டும். அப்படி  வாழ்கின்றவர்கள்  குறைவு.குறை கூறுதல்,பழி சொல்லல்,இருட்டடிப்பு, மனிதரிடையே புரையோடிய மனிதர்களே அதிகம். மாறாக, மனித நேயம்,அன்பு,பழி கூறாமை,அனைவரையும் அன்புடன் நேசிப்பது,முடிந்தவரை ஊக்கப்படுத்துவது என மதிக்கப்பட்ட அற்புத மனிதர் தான் சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் ஆவார். அமரர்களான சுப்பிரமணியம்,செல்லம்மா தம்பதியர்க்கு மகனாக புங்குடுதீவில் 26/06/1930 இல் பிறந்தவர். எனினும் வாழ்வின் பல நாட்களை யாழ்ப்பாணம்,கொழும்பு என வாழ்ந்ததினால் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்றே  கணிக்கப்பட்டார். புங்குடுதீவு விக்னேஸ்வரா வித்தியாசாலை,புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, யாழ்/இந்துக்கல்லூரி, யாழ்/ மத்திய கல்லூரி, ஊர்காவற்துறை/புனித அந்தனீஸ் கல்லூரி ஆகியவ்ற்றில் தன் கல்வியைத் தொடர்ந்து க.பொ.த.தரம் வரை பயின்றார். சிறு வயது முதலே பேச்சாற்றல் நிறைந்தவராகவும்,எழுத்தின் மீது ஆர்வம் மிகுந்தவராக காணப்பட்டார். அதனால் கவிதை, கதைகள், நாடகம், கட்டுரை என தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். ஈழத்து குறுங்கதைகள் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்க பதிவை ஏற்படுத்தியவர்களுள் ஒருவராக கணிக்கப்படுகிறார்.

Last Updated on Tuesday, 12 March 2013 21:21 Read more...
 

புலவர் பார்வதிநாதசிவம்: உணர்வைத் தந்த தமிழாசிரியர்!

E-mail Print PDF

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!எனக்குள் உணர்வைத் தந்த தமிழாசிரியர். ஈழத்துப்  பைந்தமிழ்க் கவியாள்பவர்களின்  வரிசையில்  புலவரும்  நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்தவர். எளிமையானவர். பழகுவதில்  இனிமையானவர். தோய்த்துலர்ந்த  வேட்டி, நாஷனலுடன்  வகுப்புக்குள்  வந்தால்  அமைதியாகிவிடும். உடையிலேயே  தேசியத்தைக்  கடைப்பிடித்த  தமிழாளர். உரையாசிரியர். ம.க.வேற்பிள்ளை, ம.வே. மகாலிங்கசிவம், ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை, பண்டிதை. இ. பத்மாசினி,  பண்டிதர், சா.வே.பஞ்சாட்சரம், மயிலங்கூடலூர். ப. நடராஜன் போன்ற  பலரை உறவுகளாகக்  கொண்ட  பாக்கியம்  பெற்றவர். மேலாக, ம. ப.மகாலிங்கசிவம் அவர்களின்  இலக்கியப் பணி கூட  இவரிடம்  இருந்து  வந்ததுவோ? ஆனைப்பந்தி  உயர்கலைக் கல்லூரியில்  தமிழாசிரியராக  எனக்குக் கிடைத்தது நான் செய்த  கொடுப்பினை. இலக்கியப்பூக்களுக்கு  கட்டுரைகள்  ம.பா.மகாலிங்கசிவம்  அவர்களிடமிருந்து கிடைத்த போது பெருமிதமாக  இருந்தது. பின்னாளில், அவரின்  பசிப்பிணி  மருத்துவன், இன்னும் ஒரு திங்கள்  நூல்களை  வாசிக்கக் கிடைத்தது  போது  அவரின் கவிதைகள்  மீது  அளப்பரிய  விருப்பம்
ஏற்பட்டது.

Last Updated on Saturday, 09 March 2013 17:35 Read more...
 

கோவை ஞானி என்ற போராளி

E-mail Print PDF

கோவை ஞானிசுப்ரபாரதிமணியன்சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு தத்துவார்த்தத்தளத்திலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் கோவை ஞானியின் தொடர்ந்த செயல்பாடு தீவிரமாகவே அமைந்தது.கீழை மார்க்சீயம், மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்ற நிலையில் தொடர்ந்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார்.  பொதுவுடமையின் வீழ்ச்சி, பொதுவுடமையின் போதாமைக்கு பிறகு வளர்தெடுக்கப்பட்ட பின்நவீனத்துவம் சார்ந்து சிந்தனைகளும், கூட்டங்களும், பயிலரங்குகளும் என்று தொடர்ந்து நடத்தினார். அவரின் விளிம்பு நிலை மக்களின் ஆய்விற்கும் விளக்கத்திற்கும் இது இன்னும் உரமளித்தது. அமைப்பியல்வாதம் சார்ந்து அவரின் சிந்தனைகள் இன்னும் வலுப்பெற்றன.கட்டுடைத்தலும் அது சார்ந்த உளவியல் அணுகுமுறைகளும் தமிழ் விமர்சனத்தை வலுப்படுத்தின. பின்நவீனத்துவம் சார்ந்த சிந்தனைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்தவர்களின் நிராகரிப்பும், கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த வெகு சிலரின் இணக்கமான  அணுகுமுறைகளும் தொடர  பொதுவுடமை சார்ந்த பின் நவீனத்துவ அணுகுமுறைகளை வளர்தெடுக்கவேண்டியது பற்றிய அவரின் தொடர் சிந்தனை முக்கிய பங்களிப்பாக இருந்திருக்கிறது. தலித் இலக்கியச் சார்பும், தத்துவமும் இதிலிருந்து  பெறப்படக்கூடியதாக வழிகாடுதலை முன் வைத்தார்

Last Updated on Thursday, 07 March 2013 19:14 Read more...
 

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!

E-mail Print PDF

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!புலவர் பார்வதிநாதசிவம் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கோர் இழப்பே. அவரது காணொளியிலான நேர்காணலொன்றினை இணையத்தில் 'யு டியூப்' இல் கேட்டேன். அவரது காணொளி நேரகாணலில் அவர் கூறியுள்ள தகவல்கள் (குறிப்பாக ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகள்) மிகவும் பயனுள்ளவை. ஈழநாடு பற்றிய அவரது கருத்துகள் எனக்கு அன்றைய காலகட்ட நினைவுகளைத் தோற்றுவித்தன. என் எழுத்துலக வாழ்வில் ஈழநாடு சிறுவர் மலர் மிகவும் முக்கியமானது. அதில் கட்டுரைகள், கவிதைகள், குட்டிக்கதை என எனது சிறுவர் காலத்து ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. புலவர் நேர்காணலில் ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகவிருந்த பெருமாள் பற்றிக் கூறியிருந்தார். பெருமாள் வாரமலருக்குப் பொறுப்பாகவிருந்தபோது எனது சிறுகதைகள் , நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள், பழமையின் சின்னங்கள் பேணப்படுதல் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார்.  அன்றைய காலகட்டத்தில் புலவரின் கவிதைகள் போன்ற ஆக்கங்கள் பலவற்றை ஈழநாட்டில் வாசித்ததாக ஞாபகம். அவரை நான் அறிந்து கொண்டதே ஈழநாடு மூலம்தான். அமைதியாகத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்களில் புலவரும் முக்கியமானவர். அவரது மறைவினையொட்டி இணையத்தில் கிடைத்த பிற தளச் செய்திகள் சிலவற்றை, நன்றியுடன், மீள்பிரசுரம் செய்கின்றோம். அவரது படைப்புகளை இணையத்தில் காண முடியவில்லை. அவரது  படைப்புகள்  சேகரிக்கப்பட்டு,  நூலகம்  போன்ற  தளங்களில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதவசியம்.  அத்துடன் அவரது மறைவால் வாடும் அனைவரின் துயரத்திலும்  பங்குகொள்கின்றோம்.

Last Updated on Wednesday, 06 March 2013 19:46 Read more...
 

எஸ்.ஏ உதயனின் நாவல்கள்

E-mail Print PDF

அறிமுகம்

எஸ்.ஏ உதயனின் நாவல்கள்சு.குணேஸ்வரன்தமிழ் இலக்கியத்தின் செழுமையினையும் குறித்த ஒரு மக்கட்கூட்டத்தின் பண்பாட்டு அம்சங்களையும் விரிவாகப் பதிவு செய்யும் இலக்கிய வடிவங்களில் புனைகதை இலக்கியம் முதன்மையானது. அண்மைக்காலத்தில் இலங்கைத் தமிழ்ப்படைப்பாளிகளின் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. போர்க்காலத்திலும் போரின் பின்னரும் வெளிவந்த நாவல்களை அரசியல் அடிப்படையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பகுக்கலாம். அவற்றுள் பண்பாட்டின் அடிப்படையில் பெரிதும் கவனத்தைக் குவித்த படைப்புக்களாக எஸ். ஏ உதயனின் நாவல்கள் அமைகின்றன. இந்தக் கட்டுரையில் லோமியா, தெம்மாடுகள், வாசாப்பு, சொடுதா ஆகிய உதயனின் நான்கு நாவல்களும் நோக்கப்படுகின்றன. இவை கடந்துபோன காலங்கள் பற்றியும் அவை கொண்டியங்கிய பண்பாட்டு பெறுமானங்களின் மீதான வேணாவா குறித்தும் பேசுகின்றன. கழிந்துபோன காலத்தின் எச்சங்களான நினைவுகளின்மீது கட்டியெழுப்பப்பட்ட படைப்புக்கள் இவை. ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் படிப்படியான மாறுதல்களைக் காட்டுபவை. பலவற்றை இந்தச் சமூகம் மறந்துவிடுகிறது. சிலவற்றையே ஞாபகக் கிடங்குகளில் இருந்து மீட்டுப் பார்க்கின்றது. மீளவும் மீளவும் இந்தச் சமூகம் தவறுவிடும்போது கடந்த காலங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த பாடங்களாகி விடுகின்றன. கடற்பிரதேச மக்களின் வாழ்க்கை அம்சங்கள், அவர்களின் பண்பாடுகள், வாழ்க்கைப் போராட்டங்கள், மாறுதல்கள் என ஏறத்தாள எண்பது வருடத்திற்கு முற்பட்ட காலங்களில் இருந்தான கதைகளை தனது நாவல்களில் எஸ்.ஏ உதயன் பதிவு செய்கிறார்.

Last Updated on Tuesday, 26 February 2013 23:17 Read more...
 

Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province - A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan

E-mail Print PDF

[Recently, a conference on canadian writing  was held in the National college , Trichy. Called 'Canada:A Multitude of Spaces', the conference was spearheaded by the Indian Association of Canadian Studies. The following paper on V.N.Giritharan's writings was submitted to the conference by Dr R Dharani.] 

Literature, in a way, is a manifestation of an individual’s or a community’s elusive experiences. A grand procession of happy episodes alone in a life is highly impracticable and astonishing, as life itself is, and in most cases, akin to the tragi-comedies of Shakespeare. However, in the history of literature across the globe, catastrophe gained more attention than romance, chivalry and happy endings. The misfortunes of African- American writers have ever earned them the proper justice. The sorrow-stricken lives of a community who had been intimidated simply because of their ethnic background have been the cause of many social changes in western countries. Of all the complexities of life, the crisis of a survival stands first in the life of any human being. This is not the case with any other living creature in any part of the world. In any piece of literature, it is not uncommon to unearth such a theme intertwined with many other themes. Man struggles to locate a place of his own on this planet to ascertain a sense of identity of his life. Nationality, nativity, society, family, tradition, culture, language are such things endorsing the survival impulse of a man. Depending on the needs, man sets the priority for concepts like nationality, family and other matters.

Last Updated on Wednesday, 27 February 2013 00:28 Read more...
 

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடைக்காப்பு

E-mail Print PDF

திருஞானசம்பந்தர்திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன.  திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார்.  அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh,  இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும்.  சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை.  ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது.  இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர்  தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார்.  சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார்.  அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம்.

திருக்கடைக் காப்பு:
பத்து பத்து பாடல்களால் பாடப்பெறுவது தான் பதிகம் என்று  பெயர் பெறும், சமய இலக்கியங்களில் காரைக்காலம்மையார் இம்முறையைத் தொடங்கி வைக்கிறார்.  அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்;கள் இதற்குச் சான்றாகும்.  திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதினொரு பாடல்கள் அமைந்துள்ளன.  புதினொன்றாவதாக உள்ள பாடலுக்கு திருக்கடைக்காப்பு என்று பெயர்.  இதைப் பதிகப் பயன் என்றும் கூறுவர்.  தம்முடைய பதிகங்களை ஓதுவதால் வரும் நன்மைகளை திருக்கடைக்காப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்.

Last Updated on Monday, 11 February 2013 21:19 Read more...
 

தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு

E-mail Print PDF

தொல்காப்பியர்1.0. முகப்பு

தமிழ் மொழிக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். தெலுங்கு மொழிக்காக எழுதப்பட்ட முதல் இலக்கணநூல் அந்திர சப்த சிந்தாமணி(நன்னயா, கி.பி.11). இந்நூல் சமசுக்கிருத மரபைப் பின்பற்றி சமசுக்கிருதத்தில் யாக்கப்பட்டதாகும். அதன் பின்பு கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் தூயதெலுங்கில் இலக்கணம் எழுத முனைந்த நூல் ஆந்திர பாஷா பூஷணம்(மூலகடிக கேதனா). இந்நூலுக்குப் பிறகு கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நூல் எழுதப்பட்டது. அந்நூல் பாலவியாகரணம். இஃது தெலுங்கு மொழியைக் கற்கும் மாணவருக்காக எழுதப்பட்டது. இந்நூலிலும் தொல்காப்பியத்திலும் அமைந்துள்ள சொற்பாகுபாடு குறித்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.

2.0. தொல்காப்பியமும் சொற்பாகுபாடும்

 தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்புடைத்து. இதனை யாத்தவர் தொல்காப்பியர். இவரின் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் கி.மு.5 என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

Last Updated on Saturday, 09 February 2013 22:48 Read more...
 

தெணியான் 'இன்னும் சொல்லாதவை'

E-mail Print PDF

எழுத்தாளர் தெணியான்எழுத்தாளர் முருகபூபதி நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள், நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். 'இன்னும் சொல்லாதவை' நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளனது புனைவுலகை தரிசித்து அதில் லயித்துக்கிடக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தாளனது சொந்த வாழ்வைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ளும்போது அந்த எழுத்தாளனைப்பற்றி உருவாக்கிவைத்திருக்கும் மனக்கோட்டை உடைந்து சிதறுவதே இயல்பு. இதனால்தானோ என்னவோ பல பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்வை வெளிப்படுத்துவதில்லை. தங்களது சுற்றம், நட்பு இவற்றின்மீது வெளிச்சம்படாமல் கவனமாகப்பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலைக்கு மாறாக தெணியானின் வாழ்வனுபவங்களை படிக்கும்போது அவர் மீதான நமது மதிப்பு பல மடங்கு கூடுகிறது. அவருடன் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

Last Updated on Friday, 08 February 2013 00:37 Read more...
 

அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்:

E-mail Print PDF

அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்:தமயந்திபெரும்பாலும் வெகுஜனஇதழ்களிலும், கொஞ்சம் இலக்கிய இதழ்களிலும் படித்த தமயந்தியின் சிறுகதைகள் அவரின் பிறப்பு, ஜாதி சார்ந்த அடையாளங்களைக் காட்டியதில்லை. அவரின் நாவல்” நிழலிரவு” படிக்க ஆரம்பித்தவுடன் கிறிஸ்துவ சமூகம் சார்ந்த அவரின் அனுபவங்கள் அவரின் பெயர், கிறிஸ்துவ சமூகம் பற்றிய எண்ணங்கள் அவரின் இன்னொரு முகமாய் வெளிப்படுத்தியது. தமிழ்ச்சூழலில் கிறிஸ்துவ இலக்கியம் பற்றிய யோசிப்பில் எழுத்தாளர் பட்டியல் விடுபட்டுப்போகிறது. சிஎல்எஸ், பூக்கூடை எண்பதுகளில் நடத்திய இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகள் ஞாபகம் வந்தது.நண்பர் வட்டம் பத்திரிகை சரோஜினி பாக்கியமுத்து மறைந்து போனார். ”அரும்பு  “ சிறுவர் இதழாகவே நின்று விட்டது. அதன் இலக்கிய தரம் அவ்வப்போது அதன் ஆசிரியராய் அமர்த்தப்படும் பாதிரியார்களின் இலக்கிய அக்கறை சார்ந்தே வெளிப்பட்டிருக்கிறது, “கோணல்கள்” தொகுப்பின் பாதிப்பில் நாங்கள் வெளியிட்ட “நாலு பேரும் பதினைந்து கதைகளும்” தொகுப்பில் இடம்பெற்ற கார்த்திகா ராஜ்குமார் அப்போதைய ஸ்டார் எழுத்தாளர். இப்போது  கிறிஸ்துவ மத போதக விசயங்களை சின்னத்திரையில் பரப்புகிறவராகி விட்டார், காஞ்சிபுரம் எக்ஸ்பர்ட் சச்சிதானந்தமும் எழுதுவதில்லை. தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்களின் ஜாதீய சிக்கல்களை பாமா, ராஜ்கவுதமன், ஆர். எஸ்.ஜேக்கப் கொஞ்சம் எழுதியிருக்கிறார்கள். பத்தாண்டுகளில் முஸ்லீம் மக்களின் வாழ்க்கை தமிழில் குறிப்பிட்த்தக்கதாய் சொல்லப்பட்டது போல் கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கை முன் வைக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ இதழ்கள். சிலது விடுதலை இறையியலைப்  பேசுகின்றன. அவற்றில் இலக்கியப் பதிவுகள் ரொம்பக்கம்மி.

Last Updated on Tuesday, 05 February 2013 21:32 Read more...
 

பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)

E-mail Print PDF

முகப்பு
பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)ஒரு மொழிக்கு மொழித்தூய்மை குறித்த சிந்தனை எப்போது வரும்? பிறமொழித்தாக்கம் ஏற்படும்போது  தானே! அஃது இராண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியருக்குத் தோன்றிற்று. தோன்றியதின் காரணம் அவர்கால மொழிச்சூழல் எனலாம்.  அவர் காலத்தில் வடக்கேயிருந்து வந்த சொற்கள் உட்புக முனைந்தன; முனைந்துகொண்டிருந்தன. இதனையறிந்த அவர் அதனை விடுக்க வேண்டும் என எண்ணினார். அது மட்டுமின்றி  தம் காலத்திற்குப் பிறகும் பிறமொழித்தாக்கம் விரிந்து நிற்கும் எனவும் அறிந்திருந்தார் போலும். ஆதலின் மொழிக்கான தூய்மைக்கொள்கையை மொழிந்துள்ளார்.  இக்கொள்கை தமிழ் மொழியை மட்டுமே எண்ணி மொழிந்ததாகத் தெரியவில்லை. திராவிடமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வனவற்றிற்கும் அந்நிலை ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்தது போல் தோன்றுகிறது. அச்சிந்தனை அனைத்துத் திராவிட இலக்கண அறிஞர்களிடமும் காண முடிகின்றது.

Last Updated on Saturday, 09 February 2013 22:45 Read more...
 

ரொக்கட் செய்த குற்றம் என்ன?

E-mail Print PDF

2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எப்படி என கேட்கிறீர்களா?- 'டொக்டர்' நோயல் நடேசன் -2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எப்படி என கேட்கிறீர்களா? மிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து கொள்வது இலகுவானது. தானாகவே மனிதர்கள் இப்படி செயல்ப்படுவதற்காக மூளையின் கீழ்பகுதியில் கம்பியூட்டர் மாதிரி ஏற்கனவே புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளது. இதனால் கண்ணீர் விடுவது, கோபம் கொள்வது போன்ற உணர்வின் வெளிபாடுகள் இலகுவானது. அதே நேரத்தில் விடயங்களை அறிவு பூர்வமாக அணுகுவதற்கான தேவை வரும்போது மூளையின் முன்பகுதி வேலை செய்யவேண்டும். இது சிறிது காலம் கடந்து நடக்கும். அத்துடன் சிலவேளைகளில் பெரும்பாலானவர்கள் நடக்கும் திசைக்கு எதிர்திசையில் தனிமையில் பயணப்பட வேண்டியுள்ளது. இப்படியான சிக்கலை எப்படி கடந்து போவது ? எவருக்கும் கடினமானனது. இதனால்தான் சட்டங்கள் நீதிமன்றங்கள் என்பன உருவாக்கப்படுகிறது.

Last Updated on Thursday, 17 January 2013 19:41 Read more...
 

மூத்த எழுத்தாளராகக் கௌரவம் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கான பாராட்டுரை

E-mail Print PDF

மூத்த எழுத்தாளராகக் கௌரவம் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கான பாராட்டுரைஇந்த மாலைப்பொழுது மிக இனியதாக இருக்கிறது. இப்பொழுது இம் மேடையில் நிற்பது அதை விட மகிழ்ச்சியாக இருக்கிறது. பாராட்டும் பெறும் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களை விட, பாராட்டப் புறப்பட்ட நான் களிப்பில் மிதந்து நிற்கிறேன். பாராட்டுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்பது மட்டும் காரணமல்ல. ஈழத்தின் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளருக்கு பாராட்டுரை வழங்கக் கிடைத்த இந்த வாய்ப்பானது நோயாடும், சீழோடும்; பிணியோடும் நிதம் கலந்தலையும் எனக்கு, பூவோடு கூடிய நார்போன்று, இவர் அருகே நிற்பதே பெருமை வீச்சதை தருகிறது. இந்த வாய்ப்பைத் தந்த தகவம் அமைப்பினருக்கு நன்றி. எழுத்துலகில் அவர் சாதாரணர் அல்ல. பூனையையும் எலியையும் வழுக வழுகப் பிடித்துவிட்டு இமயமலை உச்சியில் ஏறிநின்று, மார்தட்டி, கைஉயர்த்தி இருவிரல் சுட்டி, அது தன் வெற்றியெனத் தாமே பறைசாற்றுபவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர். அத்தகையோர் பலர் எழுத்துலகில் இருக்கிறார்கள். காலத்திற்கும் தருணத்திற்கு ஏற்ப குயளவ குழழன போலக் கதைகட்டிச் சுடச்சுடப் பரிமாறும் எழுத்தாளர்கள் அவர்கள். இவர் அவற்றில் சேர்த்தியல்ல. அனுபவங்களோடு கூடியவை இவரது படைப்புகள். இரை மீட்டி, மீள மீள அரைத்து, மனத்தில் செரிமானமான பின் எழுத்தில் வந்து யதார்த்தமாக வீழ்பவை.

Last Updated on Sunday, 13 January 2013 22:57 Read more...
 

மீள்பிரசுரம்: தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…

E-mail Print PDF

கவிஞர் தேவதேவன்கவிதை ரசனை அந்தரங்கமானது. சொல்லுக்கும் வாசகனின் அகமனதிற்கும் இடையேயான மர்மமான, முடிவற்ற உறவின் மூலம் இயங்குவது. அதைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஓர் எல்லைவரை பகிர்வதும் சாத்தியமில்லை. அதே சமயம் ஒருவன் ஒரு கவிதையை ரசிக்கும் முறையைத் தன்னுடைய ரசனைமுறையைத் தானாக கண்டடைய முடியும். ஒவ்வொரு ஆழ்மனமும் தனித்தன்மை உடையது. எனினும் ஒருவகையில் அனைத்தும் ஒன்றுதான். ஒரு கவிதைக்கு நான் என்ன அர்த்தத்தைத் தருகிறேன் என்பது இன்னொருவருக்குச் சற்றும் முக்கியமில்லை. ஆனால் அந்த அர்த்தத்தை நான் எப்படி வந்தடைந்தேன் என்பது உதவிகரமானது. இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சாதாரணமாகக் கவிதை பற்றிப்பேசும் விமரிசகர்கள் அதன் குறைந்தபட்ச சாத்தியங்களைப்பற்றி மட்டுமே பேசுவார்கள். காரணம் அதுவே புறவயமானது என அவர்கள் நம்புகிறார்கள். கவிதையில் எதுவுமே புறவயமானதல்ல. எனவே ஒரு கவிதையிலிருந்து நான் போகக்கூடிய – அதாவது எழுதக்கூடிய அளவுக்குப் போகக்கூடிய – அதிகபட்சத்தை முன் வைப்பதே உதவிகரமானது.

Last Updated on Tuesday, 25 December 2012 23:28 Read more...
 

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

E-mail Print PDF

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.

Last Updated on Wednesday, 19 December 2012 06:58 Read more...
 

அகஸ்தியரின் 'மானுட தரிசனங்கள்' நூலிலிருந்து...

E-mail Print PDF

அகஸ்தியரின் 'மானுட தரிசனங்கள் [எஸ் அகஸ்தியர் அவர்களின் நினைவையொட்டி (29.08.1926  -- 08.12.1995)  அவரது ‘மானிட தரிசனங்கள்’ என்ற விவரணச் சித்திரத்திலிருந்து தரிசனம் 23 ஐத் தருகின்றோம். 'பதிவுகள்' இதழுக்கு அனுப்பியவர் அவரது மகள்: நவஜோதி யோகரட்ணம் - பதிவுகள் ]

      லெக்ஷனெண்டா தமிழருக்க தமிழர்தான் போட்டியெண்டில்லை.
      அந்த நசல் வந்து முடிஞ்சாலும் தமிழருக்கு, ‘நான்  
      உயர்ந்தவன்,  நீதாழ்ந்தவ’னெண்ட போட்டி பொறாமை   
      பெருமைதான் முதிசச்  சொத்து. வீண் பெருமை பேசி
      அநியாயமாக அழியிறதுக்கும் பந்தயம் கட்டுவினம்.
      இவேதான், தமிழர் ஒற்றுமையா இருக்கவேணு’மெண்டு சும்மா
      ஓயாமல் கத்துறது. இந்தப் புலுடா சிங்களச் சனத்துக்கும்
      வடிவாத் தெரியும்.
    
யாழ்ப்பாண நகரசபைக் கோபுர முகப்பு வாசலை மருவிய வெட்டை மைதானம் சன நெருக்கடிக்குள் திமிலோகப்பட்டது. வட மாகாணக் கனதனவான்கள், அப்புக்காத்து புரக்கிராசியார், பேர்போன டாக்குத்தர்மாரும், நொத்தாரிஸ், உடையார், மணியம், விதானைமாரும், இந்திய ஆமை வாய்க்குள் அபின் திணித்துக் கடத்தல் வியாபாரம் செய்கிற பெரும் புள்ளிகள், நகைக் கடைக்காறர்கள், சம்மாட்டிமார், கத்தோலிக்கச் சுவாமிமார் என்று தங்கள் தங்கள் சீவியத்துக்காகத் தவம் செய்ய வந்தவர்களாட்டம் மேடையைச் சூழ்ந்து ஓர் அரண்மனை ஏவலாளர்கள்போல் புட்டுவங்களில் வீற்றிருந்தனர்.

Last Updated on Friday, 07 December 2012 23:21 Read more...
 

அ.செ.மு

E-mail Print PDF

எழுத்தாளர் அ.செ.முருகானந்தன்[தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது படைப்புகளில் சிறுகதைகள் சில விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தினரால் தொகுக்கப்பட்டு 'மனிதமாடு' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன. யாழ் மாவட்டக் கலாச்சாரப் பேரவையினரும் அ.செ.மு.வின் சிறுகதைகளைத் தொகுத்து 'மனிதமாடு' என்னும் தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். குறுநாவல்கள், நாவல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் அவர் எழுதியிருந்தபோதும் அவை இதுவரை நூலுருப் பெறவில்லை. ஈழநாடு பத்திரிகையில் அவர் பல்வேறு புனைபெயர்களில் கட்டுரைகள், தொடர்கட்டுரைகள் ஆகியவற்றைப் பல்வேறு விடயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கின்றார். ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் 'மறுமலர்ச்சிக்'காலம் முக்கியத்துவம் வாய்ந்ததொரு காலகட்டம். எழுத்தாளர் அ.செ.மு அக்காலகட்டத்துடன் பின்னிப் பிணைந்தவர். பலவேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆசிரிய பீடங்களை அலங்கரித்தவர் அ.செ.மு. எழுத்தாளர் அ.செ.மு.வைப் பற்றி எழுத்தாளர் கருணாகரன் தனது 'புல்வெளிகள்' வலைப்பதிவில் நல்லதொரு பதிவினை எழுதியிருக்கின்றார். ஒரு பதிவுக்காக அக்கட்டுரையினை 'பதிவுகள்' இங்கே பதிவு செய்கின்றது. - பதிவுகள்-]

Last Updated on Thursday, 01 November 2012 21:24 Read more...
 

‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக ‘யோசிப்பும் வாசிப்பும்’ பகுதியில் வந்த வ.ந.கிரிதரனின் எதிர்வினைக்கான எனது பதில்மறுப்பு…

E-mail Print PDF

எழுத்தாளர் தேவகாந்தன்வணக்கம், கிரிதரன். ‘புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்’ என்ற எனது உரைக்கட்டின் மீதாக நீங்கள் எழுதிய எதிர்வினையை ‘பதிவுக’ளில் பார்த்தேன். பொதுவாக உரைக்கட்டுசார் விடயங்களுக்கான எதிர்வினைகள் வருவது ஆரோக்கியமானது என்பதே எனது கருத்தாக என்றும் இருந்துவருகின்றது. அது குறித்து என்வரையில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதிர்வினையாக மட்டுமே அது இருந்திருந்திருந்தால் அதற்கு இவ்வாறான ஒரு பதில்மறுப்பு என்னளவில் அவசியமில்லாமலே இருந்திருக்கும். ஆனால் நீங்கள் சுமத்தியது ஒரு குற்றச்சாட்டு அல்லவா? என் வாசிப்பின் மீதான உங்களது அவநம்பிக்கையை என்மேல் சுமத்திய ஒரு குற்றச்சாட்டாகவே அதை என்னால் பார்க்க முடிகிறது. அக் குற்றச்சாட்டின் பதில்மறுப்பிற்காக உரைக்கட்டினைவிட கடித வடிவம் சிலாக்கியமாகப்பட்டதில் இவ்வாறு எழுத நேர்ந்திருக்கிறது. என் வாசிப்பின் போதாமையை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள், கிரிதரன்?

Last Updated on Saturday, 27 October 2012 16:05 Read more...
 

சொல்ல மறந்த கதை: காவி உடைக்குள் ஒரு காவியம்

E-mail Print PDF

Rathnawansa Theroமுருகபூபதிஇலங்கையில் வடமேல் மாகாணத்தில்  அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை  மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் அத்தனகல்லை என்ற நகரத்துக்கு சமீபமான கிராமம்தான் இங்கு நான் குறிப்பிடும் கொரஸ்ஸ. மினுவாங்கொடை என்ற மற்றுமொரு ஊரைக்கடந்து உடுகம்பொலை என்ற இடத்தையும் கடந்து சென்றால் இந்த கொரஸ்ஸ கிராமம் வரும். அங்கே ஒரு பௌத்த விகாரை. அதன் பிரதம குரு (விஹாராதிபதி) வணக்கத்துக்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ தேரோ. அவரைப்பார்க்கச்செல்பவர்கள் பெரும்பாலும் அந்தக்கிரமத்திலும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களையும் சேர்ந்த சிங்கள கிராமவாசிகள்தான். அவர்கள்தான் அந்த பௌத்த பிக்குவுக்கு தினமும் தானம் (மதிய உணவு) முறைவைத்து கொண்டுவந்து கொடுப்பவர்கள். தினமும் பகலில் மாத்திரம் ஒரு வேளை உணவுண்டு பௌத்த தர்மத்தை மக்களுக்கு போதித்துவந்த அவரைப்பார்க்க அடிக்கடி தமிழ் எழுத்தாளர்களும் சென்றுவந்திருக்கிறார்கள் எனச்சொன்னால் இதனை வாசிக்கும் வாசகர்கள் ஆச்சரியப்படலாம்.  அதிசயம்தான். ஆனால் உண்மை.

Last Updated on Wednesday, 17 October 2012 22:44 Read more...
 

புலம்பெயர் இலக்கியமும் ஈழத்து இலக்கியமும்: ஓர் ஒப்புநோக்கு

E-mail Print PDF

பகுதி ஒன்று

எழுத்தாளர் தேவகாந்தன்(இது அக்டோபர் 06 2012இல் தேடகம் சார்பில் நடைபெற்ற மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் என்ற கருத்திலான இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாள் நிகழ்வின் முதல் அமர்வில் வாசிக்கப்பட்ட உரைக்கட்டு. இதன் போதாமையை. விடுபடல்களை முன்னரே நான் கண்டிருந்தேன். ஆனாலும் இத்துறையில் மேலும் விரிவான தேடல்களுக்கும். பதிவுகளுக்கும் உதவக்கூடுமென்ற வகையில் அவ்வுரைக்கட்டை இங்கே வெளிப்படுத்த விரும்பினேன். - தேவகாந்தன் -)   புலம்பெயர் இலக்கியம் என்ற விடயத்தில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியம் என்ற கூறுகளும், ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பில் ஈழத்து தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக இலக்கியம் என்ற கூறுகளும் இத் தலைப்பிலான ஓர் உரைக்கட்டில் தலையிடும் தவிர்க்கமுடியாமை இயல்பாகவே எழும். அவ்வாறு அது எழுந்தாக வேண்டும். அதுவே சரியான பார்வையாக இருக்க முடியும்.  புலம்பெயர் தமிழிலக்கியம் என்ற வடிவத்திலும் ஈழத்தவரின் ஆக்கங்களை மட்டும் கருதும் போக்கு  நிச்சயமாக தவிர்க்கப்பட்டாக வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வந்து வேற்று நாடுகளில் வதிவோரின் தமிழ்ப் படைப்புகளையும் புகலிடத் தமிழிலக்கியமாகவே கொள்ளவேண்டும் என்ற கருத்தினையும் இவ்வுரைக்கட்டு கருத்திலெடுத்திருக்கிறது. இல்லாவிட்டால் பிரான்சில் வதியும் நாகரத்தினம் கிரு~;ணா, இங்கிலாந்தில் வதியும் யமுனா ராஜேந்திரன், கனடாவில் வதியும் சு.கி.ஜெயகரன், ஐக்கிய அமெரிக்காவில் வதியும் காஞ்சனா தாமோதரன் ஆகியோரது ஆக்கங்களை எந்தவகையான வகைமைக்குள்ளும் கொண்டுவந்துவிட முடியாதுபோய்விடும்.

Last Updated on Saturday, 27 October 2012 15:59 Read more...
 

வெப்துனியா.காம்: சீன படைப்பாளி மோ யான் (Mo Yan) என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

E-mail Print PDF

2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை சீன படைப்பிலக்கிய எழுத்தாளர் மோ யான் வென்றுள்ளார். குவான் மொயே என்ற இயற்பெயருடைய இந்த படைப்பிலக்கியவாதி 1955 ஆம் ஆண்டு பிறந்தார். வட-கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் இவர் பெரும்பாலும் வளர்ந்தார். சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது இவருக்கு 12 வயது. அப்போது பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு சென்றார். முதலில் விவசாய வேலையைச் செய்த இவர் பிறகு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு வாக்கில் அவர் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்தார். இதில் இருக்கும்போதுதான் இலக்கையங்களை வாசிக்கத் தொடங்கினார், பிறகு எழுதவும் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை 1981ஆம் ஆண்டு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்தே இவரது பெயர் பிரபலமானது. Touming de hong luobo என்ற நாவல் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இது 1986ஆம் ஆண்டு வெளிவந்தது என்றால் 1993ஆம் ஆண்டு இதே நாவல் பிரெஞ்ச் மொழியில் பெயர்க்கப்பட்டது.[2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு சீன எழுத்தாளரான மோ யானுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளின் மீள்பிரசுரமிது. ஒரு பதிவுக்காக. - பதிவுகள்-] 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை சீன படைப்பிலக்கிய எழுத்தாளர் மோ யான் வென்றுள்ளார். குவான் மொயே என்ற இயற்பெயருடைய இந்த படைப்பிலக்கியவாதி 1955 ஆம் ஆண்டு பிறந்தார். வட-கிழக்கு சீனாவில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் இவர் பெரும்பாலும் வளர்ந்தார். சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது இவருக்கு 12 வயது. அப்போது பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு சென்றார். முதலில் விவசாய வேலையைச் செய்த இவர் பிறகு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு வாக்கில் அவர் மக்கள் விடுதலைப் படையில் சேர்ந்தார். இதில் இருக்கும்போதுதான் இலக்கையங்களை வாசிக்கத் தொடங்கினார், பிறகு எழுதவும் தொடங்கினார். இவரது முதல் சிறுகதை 1981ஆம் ஆண்டு இலக்கியப் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டது. ஆனால் சில ஆண்டுகள் கழித்தே இவரது பெயர் பிரபலமானது. Touming de hong luobo என்ற நாவல் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இது 1986ஆம் ஆண்டு வெளிவந்தது என்றால் 1993ஆம் ஆண்டு இதே நாவல் பிரெஞ்ச் மொழியில் பெயர்க்கப்பட்டது.

Last Updated on Friday, 12 October 2012 18:01 Read more...
 

பத்துமலை முருகனும், பெரியாரும்

E-mail Print PDF

- சுப்ரபாரதிமணியன் -கோலாலம்பூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் பத்துமலை  முருகன் 140 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.272 படிகள் ஏறிச் சென்றால் குகையில்  புராதான முருகனைச் சந்திக்கலாம் என்றார் ஏ ஆர் சுப்ரமணியன். கவிஞர். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவர்.மலேசிய தொலைத்தொடர்புத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அங்கு 55லேயே ஒய்வு. நான் கடவுள்   மறுப்பாளன் என்பதை மறந்தீரா  ”  என்று கேட்டு வைத்தேன். பத்து என்றால் கல். பத்துமலை கல் மலை என்று பெயர். சுண்ணாம்பும்லைதான் அது. அடர்ந்த காடுகள் அதன் பின்னணியில். விலங்குகள், விதம்விதமான மரங்கள் அழகூட்டுகின்றன.பழங்கால கொக்காலிகா மரம் , விதவிதமான  மஞ்சள் நிற மரங்கள், கொஞ்சம் வெற்றிலை மணம்.நம்மூர் ஆண்மைச் சின்னம் குரியன் பழங்கள் மலிவாக்க் குவிந்து  கிடக்கின்றன.பொரிகடலையும்.  இடது பக்கம் மினி வள்ளுவர் கோட்டம். சின்ன திருவள்ளுவர். கொஞ்சம் கொஞ்சும் திருக்குறள்கள்.

Last Updated on Thursday, 04 October 2012 05:16 Read more...
 

ஓ...மலேசியா..

E-mail Print PDF

- சுப்ரபாரதிமணியன் --கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப்பெண்களைக் கூட  புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது. தொடை தெரியும் குட்டைப் பாவாடைகள், பெர்முடாஸ், அரை ஜீன்ஸ்கள் என்று தமிழ் பெண்களும் மலேயர்கள், சீனர்கள் மத்தியில் தென்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், தமிழ்க்கோவில்களிலும் தமிழ்ப்பெண்கள் புடவை அணிகிறார்கள். தமிழ்த்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி வாசிப்பில் பெண்கள் புடவை அணிந்து வருவது கட்டாயமாக இருந்தது. இப்போது அது குறைந்து விட்டது என்று தமிழ் அமைப்பினரும், சனாதானிகளும் கண்டித்திருப்பது சமீபத்திய சலசலப்புச் செய்தியாக இருக்கிறது. நம்மூர் வேடிடி சட்டை போல் மலேயா தேசிய உடையிலும் சிலர் தென்படுகிறார்கள். தலையில் குல்லா. முழுக்கைச் சட்டை. பேண்ட் மேல் சுற்றப்பட்ட கைலி. இதுதான் தேசிய உடை எனலாம். சுதந்திரதினத்தை தேசிய தினமாகக்  கொண்டாடும்  வைபவத்தில் நாடு முழுவதும் மலேசியா தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.1958ல் சுதந்திரம் பெற்றது.அந்நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி இரும்பால் வார்த்தெடுக்கப்பட்டு வீதிமுழுக்க  விளக்குக் கம்பங்களில் மினுங்குகிறது. 100 வருடத்திற்கு முன் தமிழன் கட்டிய ரயில்வே ஸ்டேசன் மின் விளக்கில் பளிச்சிடுகிறது.இந்தியர்களின் பெருமையைச் சொல்லும் லிட்டில் இந்தியாவிற்கு எப்போதும் மவுசுதான்.கோலாலம்பூரின் மத்தியில் தென்படுகிறது ராம்லீ தெரு. ராம்லி நம்மூர் சிவாஜிகணேசன் போல் முக்கிய நடிகர்.  இவரை இயக்கிய முக்கிய இயக்குனர்களீல் ஒருவரான கிருஸ்ணன் ஒருதமிழர்.மலேசியாவின் முதல் கோடீஸ்வரர்  ஆனந்த கிருஸ்ணனுக்குச் சொந்தமானது  கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களில் ஒன்று. அதை விற்றுவிட்டார். 2ஜி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டு பல நிறுவனப் பங்குகளை விற்றுவருகிறார். இவரின் ஒரே மகன் புத்தமத சாமியாராகிவிட்டார்.

Last Updated on Friday, 21 September 2012 05:25 Read more...
 

அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்

E-mail Print PDF

அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் கணத்திலும் தமது சித்தாந்தங்களுக்கு எதிராகச் செல்லும், அதாவது முதலாளித்துவத்துக்கு எதிராகக் கிளம்பும் எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுக்கத் தயாராகவுள்ளது. அவர்கள் யுத்தம் செய்வது தாம் விரும்பும் விதத்தில் நிலத்தையும், நிலத்தில் வாழும் மனிதர்களையும் சுரண்டித் தின்பதற்கேயன்றி, பொதுமகனுக்கு நன்மையைக் கொண்டு வருவதற்காகவல்ல. அதனாலேயே இம் மாபெரும் சக்தி படைத்தவனின் குறிக்கோளை பூலோக அரசியல் சங்கிலியிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றுவதை உணர்ந்துகொள்ள முடிகிறது. உலகத்தில் உண்மையான சமாதானத்தை உருவாக்க வேண்டுமெனில் அமெரிக்காவானது தனது அணுசக்தியை கைவிட்டு விட வேண்டுமென அருந்ததி ராய் போன்ற செயற்பாட்டாளர்கள் கூறுவது அதனாலேயே. அணுசக்தி ஆயுதப் பாவனை குறித்த பலம்வாய்ந்த கருத்துவேறுபாடு அமெரிக்காவுக்குள்ளேயே இருக்கிறது. அமெரிக்காவின் ஆயுத பலத்தை நேசிப்பவர்கள், அந்த ஆயுத எதிர்ப்பாளர்களை துரோகிகளாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.

Last Updated on Wednesday, 19 September 2012 00:03 Read more...
 

மகாகவி பாரதியார் கவிதைகள்

E-mail Print PDF

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள்!
[செப்டம்பர் 11 பாரதியார் பிறந்ததினம்.]

1. இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

Last Updated on Tuesday, 11 September 2012 03:17 Read more...
 

கவிஞர் காரை செ. சுந்தரம்பிள்ளை நினைவாக தமிழ்ழ் 'விக்கிபீடியா'க் குறிப்புகள்: முனைவர் காரை செ.சுந்தரம்பிள்ளை (மே 20, 1938 - செப்டம்பர் 21, 2005) .

E-mail Print PDF

அமரர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தினையொட்டி மீள்பிரசுரமாகும் கட்டுரை. தமிழ் விக்கிபீடியா இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார்.

Last Updated on Tuesday, 21 August 2012 23:15 Read more...
 

தினமணி.காம்: ரா.கி.ரங்கராஜன் காலமானார்

E-mail Print PDF

ரா.கி.ரங்கராஜன்19, 2012- சென்னை:பிரபல பத்திரிகை ஆசிரியரும், நாவல் ஆசிரியரும், ஆயிரக்கணக்கான கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, வேடிக்கை கவிதைகள், நாடகம், திரைக்கதை படைத்தவரும், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக, குமுதம் ஆசிரியர் அமரர் எஸ்.ஏ.பி.,க்கு தோளாக, தளபதியின் வாளாக, நண்பராக திகழ்ந்த, ரா.கி.ரங்கராஜன், தனது, 85ம் வயதில், நேற்று காலமானார்.கதை எழுதும் கலையை இளைஞர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அவர், "எப்படி கதை எழுதுவது?' என்ற அமைப்பின் மூலம் எழுத்துக் கலையின் சூட்சுமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியவர். இவரது இறுதிச் சடங்கு, இன்று காலை, 9 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 80154-03491, 94442-69006. இவரது பல கதைகள், திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. "சுமைதாங்கி, இது சத்தியம், மகாநதி (ஆலோசகர்) வெளிவந்துள்ளன. இவரது இலக்கிய படைப்புகளில், "படகு வீடு, பட்டாம்பூச்சி' ஆகியவை, இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு, இவர் புகழை பாடிக் கொண்டிருக்கும்.மனைவி கமலா, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் கொண்ட குடும்பம் இவருடையது. தன் கண்களை தானமாக வழங்க விருப்பப்பட்டார். அவர் விருப்பப்படியே, மறைவுக்கு பின், கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

Last Updated on Sunday, 19 August 2012 04:53 Read more...
 

பாரதியின் ஆன்மீக நாத்திகம்

E-mail Print PDF

பாரதியின் ஆன்மீக நாத்திகம் ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் - இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது” என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது. தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனை- மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து , மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதியாக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதிலில் பாரதி நாத்திகவாதியாகக் காட்டப்படுகிறார்.

Last Updated on Friday, 17 August 2012 21:40 Read more...
 

மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை

E-mail Print PDF

சுப்ரபாரதிமணியன்மலேசியத்  தமிழ் எழுத்தாளர் சங்கம்  ஜூலை இறுதியில்   கோலாலம்பூரில் இரண்டு நாள் நாவல் பயிற்சி முகாம் நடத்தியிருந்ததில் கலந்து கொண்டேன்.முதல் நாள் தமிழ் நாவல் வளர்ச்சியும் தோற்றமும், புதிய நாவல்களின் தீவிரமும் பற்றிப் பேசினேன்.இரண்டாம் நாள் எனது நாவல் அனுபவம் என்ற தலைப்பிலும், இளையோர் மற்றும் சிறுவர் கதைகள் பரிசளிப்பு விழாவில் தமிழ் சிறுகதைகள் பற்றியும் என்னுரை இருந்தது.  மலேசியாவிலிருந்து எழுதும்  ரெ.கார்த்திகேசு அவர்கள் 4 நாவல்கள், 10 சிறுகதைத்தொகுதிகள், கட்டுரைகள் என்று தொடர்ந்து தன் பங்களிப்பை செய்து வருபவர்.( அவரின் சமீபத்திய சிறுகதைத்தொகுதி “ நீர் மேல் எழுத்து” கட்டுரைத் தொகுதி ரெ.கார்த்திகேசுவின்       விமர்சனமுகம்-2 )).அவர் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்துப்பேசுகையில்  எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு பெரிய நாவல் அனுபவம் உள்ளது. முதலில் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.பேராசிரியர் சபாபதி 2000க்குப் பின் மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் 45 நாவல்கள் வெளியிட்டுள்ளதைப்பற்றிப் பேசினார். அ.ரங்கசாமி, சீ.முத்துசாமி முதல் சை.பீர்முகமது,  பாலமுருகன் வரை சிறந்த நாவலாசிரியர்கள் பற்றி விரிவாய் குறிப்பிட்டார். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 5 ஆண்டுகளாக நாவல் போட்டி நடத்தி வருகிறது.இவ்வாண்டு சுமார் 1, 75,000 ரூபாய் சிறந்த நாவல்களுக்கான பரிசுத்தொகையை வழங்குகிறது. இவ்வாண்டு அப்போட்டியை ஒட்டியே ஒரு பயிற்சியாக இப்பட்டறை அமைந்திருந்தது.கலந்து கொண்ட 40 எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த  தமிழ் நாவல்கள் பற்றிப் பேசினர். பத்துக்கும் மேற்பட்டோர் மு.வ., அகிலன், நா.பா. நாவல்களைப் பற்றி பேசினர். இன்னொரு பகுதியினர் கீழ்க்கண்ட  மலேசியா எழுத்தாளர்களின் இரு நாவல்கள் பற்றி அதிகம் பேசினர்.

Last Updated on Wednesday, 08 August 2012 20:43 Read more...
 

விடியல் சிவா கடிதம்

E-mail Print PDF

விடியல் சிவா மரணம் - ஒரு நினைவுக் குறிப்பு[எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட இக்கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. - பதிவுகள் -]

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, உங்கள் வளைத்தளத்தில் (Jeyamohan.in) 23.5.2012 அன்று எஸ்.வி.ராஜதுரைக்கு எழுதியுள்ள பதிலில், கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்: “உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.”

“இதை புதியதாகவும் சொல்லவில்லை. தமிழகமெங்கும் பெரும் முன்பணம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய நூலுக்கு, தமிழகச் சிந்தனையாளர் ஒருவரைப்பற்றிய நூலுக்கு, எதற்காக அன்னிய நிதியுதவி என நான் முன்னரும் எழுதியிருக்கிறேன்.”

Last Updated on Friday, 03 August 2012 16:40 Read more...
 

'விடியல்' சிவா மறைவு!

E-mail Print PDF

விடியல் பதிப்பகம் தோழர் சிவா 'விடியல்' பதிப்பகத்தின் மூலம் மார்க்சிய நூல்கள் (மொழிபெயர்ப்பு நூல்களுட்பட) பதிப்பித்து வந்தவர் தோழர் 'விடியல்' சிவா என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த சிவஞானம் அவர்கள். ஆரம்பத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் முழுநேர ஊழியராகச் செயற்பட்டவர் இவர். அண்மைக்காலமாகவே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று, ஜூலை 20, 2012, காலை 10.30மணிக்குக் காலமானார். இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு, குறிப்பாக முற்போக்குத் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய பேரிழப்பே. அவரது பிரிவால் வாடும் தோழர்கள், குடும்பத்தவர்களுக்குப் பதிவுகள் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன் இணையத்தில் அவரது மறைவு பற்றி வெளியான செய்திகளையும் மீளப்பிரசுரித்துத் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - ஆசிரியர் -

Last Updated on Friday, 03 August 2012 15:53 Read more...
 

மாத்தயாட்ட பின் சித்தவெனவா

E-mail Print PDF

இங்கே நான் சொல்ல வருவது வேறு ஒரு புது விதமான அனுபவம். நான் அங்கு வைத்தியசாலையின் மேல் மாடி  அறையில் இருந்த போது இரண்டு இளம் விரிவுரையாளர்கள் வந்து, “17 வயதான ஒரு நாயின் கால் முறிந்து விட்டது.  ஆனால் அதன் எஜமானர் அதற்கு  சத்திரசிகிச்சை  செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டார்.  இந்நிலையில் நாம் என்ன செய்வது.” எனக்கேட்டனர்.'டொக்டர்' நடேசன்இலங்கையில் பேராதனை மிருக வைத்திய துறையில்  நாய் பூனைகளுக்கான புதிய வைத்தியசாலை  அரசாங்கத்தால் கட்டப்பட்டு  மிருக வைத்திய பீடத்திற்கு கையளித்திருக்கிறார்கள். அந்த வைத்தியசாலையில் ஒரு வாரகாலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இலங்கையில்  மிருக வைத்தியத்துறையில் இருந்து பெற்ற பட்டப்படிப்பு என்னை மெல்பனில் மிருக வைத்தியம் செய்வதற்கு  தயார் படுத்தியது. குறைந்த பட்சம் நான் பெற்ற அறிவை  சிறிதளவாவது மீண்டும் அங்கு தற்போது பயிலும் மாணவர்களுக்குக்  கொடுத்து நான்பட்ட கடனில் சிறிய அளவை தீர்த்துக் கொள்ள நினைத்ததால் இந்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு கண்டி சென்றேன். என்னுடன் முன்னர்   படித்த  சகாக்கள்தான் அங்கு வைத்திய துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் எனது அனுபவம் இனிமையாக இருந்தது.

Last Updated on Friday, 13 July 2012 19:02 Read more...
 

கணையாழியின் கதை

E-mail Print PDF

[ கணையாழி தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென்றோரிடத்தைப் பதிவு செய்துகொண்ட சஞ்சிகை. அது தொடர்ந்தும் வெளிவரவேண்டும். ஏற்கனவே பல தடைகளைத் தாண்டி வெளிவந்ததைப்போல் இம்முறையும் அது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கணையாழிக்கு இன்னுமோர் சிறப்புண்டு. உலகத்தின் பல்வேறு பக்கங்களிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பை அது அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளதைத்தான் கூறுகின்றேன். 'கனடாச் சிறப்பிதழ்', 'ஆஸ்திரேலியச் சிறப்பிதழ்' .. போன்ற சிறப்பிதழ்களாகக் கணையாழி வெளிவந்துள்ளது. எனது கட்டுரைகள் சிலவும், சிறுதையொன்றும் கணையாழியில் வெளிவந்துள்ளதை இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். கணையாழி தொடர்ந்தும் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன். - வ.ந.கி, பதிவுகள் -]  இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான ‘கணையாழி’ யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு ‘திரும்பிப் பார்த்தல்’. ‘புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார். தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மீகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பதிதிரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. ‘கலைமகள்’ போல் ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து ‘கணையாழி’ என்று பெயர் வைத்தேன்’ என்று ‘கணையாழி’ பத்திரிகையின் நதி மூலத்தை, அமெரிக்கப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் தில்லி நிருபராகப் பணியாற்றி வந்த திரு.கி.கஸ்தூரிரங்கன் குறிப்பிடுகிறார்.

Last Updated on Wednesday, 11 July 2012 23:42 Read more...
 

ஆயிரம் வருடத் தூக்கம் - பஷீரின் நேர்காணலும் சில பத்திகளும் (டிட் ஃபார் டாட் நடத்திய ஒரு நேர்காணல் - 1984

E-mail Print PDF

வைக்கம் முகம்மது பசீர்தார்மீகமின்மையும் அக்கிரமமும் அநீதியும் இந்தளவுக்கு வெகுசாதாரணமாகி விட்டதற்கான காரணம், சமூகத்தின் மத உன்னதங்களின் வீழ்ச்சிதானே?

"நிச்சயமாக! மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தி மனிதத்தன்மைக்கு உயர்த்துவது மதங்கள்தான். மதங்களில் மிகவும் இயல்பானதும் எளிமையானதும் இஸ்லாம்தான்.

கலாச்சாரச் சீரழிவில் இன்றைய இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் பங்கிருக்கிறதல்லவா?

இருக்கிறது. இங்கே ஏராளமான வெளிநாட்டுப் படைப்புகள் இறக்குமதியாகின்றன. இணைசேர்வதைக் கற்றுக் கொடுப்பவைதான் இதில் அதிகம். ஆண்-பெண் போகமும் ஒரு பெண்ணைப் பல ஆண்கள் பல போகிப்பதும் எப்படி என்பதை அவை கற்றுத் தருகின்றன. அதையெல்லாம் வாசித்து விட்டு இங்கிருப்பவர்கள் எழுதத் தொடங்கினால்தான் ஆபத்து. இறக்குமதி செய்யப்படுபவைகளில் நல்லவைகளும் இருக்கக் கூடும். அப்புறம் திரைப்படங்கள். அவை மனிதனுக்கு நல்லவற்றைப் போதிப்பதும் ரசிக்க வைப்பதுமாக இருக்க வேண்டும்

Last Updated on Thursday, 05 July 2012 17:44 Read more...
 

பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (இலங்கை)

E-mail Print PDF

முனைவர் நா.சுப்பிரமணியன் தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது. அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன. இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பல நூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் சமயம் சார்ந்த அரிய நூல்கள் வரைந்தவர். தமிழகத்திலும் இலங்கை, கனடாவிலும் பேருரைகள் வழியாகத் தமிழ்வளர்ப்பவர். சமயத்தின் ஊடாகத் தமிழ் வளர்க்கும் இந்தச் சான்றோர் இப்பொழுது கனடாவில வாழ்ந்துவருகின்றார். அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம். நா.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் அமைந்துள்ள முள்ளியவளை (முல்லை மாவட்டம்) என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் நாகராசன், நீலாம்பாள்.இவர்களுக்கு இரண்டாவது மகனாக 25-12-1942இல் பிறந்தவர். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியன் அவர்கள் முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றிலே தமது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பயின்றவர். பின்னர் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் "ஈழத்துத் தமிழ் நாவல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972 இல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் "தமிழ் யாப்பு வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985இல் முனைவர்(Ph.D.) பட்டத்தையும் பெற்றவர். (கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் 19ஆம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக அமைந்த இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடானது தேர்வாளர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்டது.

Last Updated on Sunday, 01 July 2012 05:17 Read more...
 

"மக்கள் எழுத்தாளர்' விந்தன்

E-mail Print PDF

"மக்கள் எழுத்தாளர்' விந்தன்[எழுத்தாளர் விந்தனின் நினைவுதினமான ஜூன் 30இனையொட்டி அவர் பற்றிய இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. - பதிவுகள்]  எழுத்துலகில் "விந்தன்' என்று அறியப்படும் கோவிந்தன், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வேதாசலம்-ஜானகி இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியது சென்னைப் பட்டினம். சூளைப் பகுதியில்தான் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். பிடித்தமான தொழில் இல்லாவிட்டாலும் வேறு சிறு சிறு தொழிலையும் செய்ய வேண்டிய கட்டாயம். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அச்சுக் கோக்கும் தொழில் அவருக்கு உதவியது. இயற்கையிலேயே தமிழ்ப் பற்றும் புத்திக் கூர்மையும் உடைய விந்தன், அச்சகத்தில் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றத் தொடங்கினார். அச்சுத் தொழிலாளியாக இருந்து, மேதையாக மாறிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி.க்கு அடுத்து விந்தனைக் கூறலாம். மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு' மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். அப்போது பாரதிதாசனாரின் "தமிழுக்கும் அமுதென்று பேர்'  என்ற கவிதையை அச்சுக் கோத்ததைப் பெருமையாகச் சொல்வார் கோவிந்தன்.

Last Updated on Friday, 29 June 2012 05:23 Read more...
 

எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு வயது 86

E-mail Print PDF

எழுத்தாளர் டொமினிக் ஜீவா[ தனிமனிதராக நின்று இத்தனை வருடங்களாகச் சளைக்காமல், களைக்காமல் 'மல்லிகை' மாத இதழினை நடாத்திவரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்த தினம் ஜூன் 27. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இவரது சிறுகதைகள் முக்கியமானவை.  இலங்கை அரசின் சாகித்திய அகாடமி விருது, கனடாவிலிருந்து சுயாதீன திரைப்பட அமைப்பினரின் 'அகேனம்' இலககிய விருது ஆகியவற்றைப் பெற்றவர். எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினத்தையொட்டி அவரைப் பற்றிய விக்கிபீடியாக் குறிப்புகள் பிரசுரமாகின்றன- பதிவுகள் -]  டொமினிக் ஜீவா (பிறந்த திகதி:  ஜூன் 27, 1927, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முக்கியமான ஒரு சிறுகதையாசிரியர், பதிப்பாளர். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.

Last Updated on Friday, 29 June 2012 05:11 Read more...
 

Book of veteran Eezham Tamil writer published in Jaffna

E-mail Print PDF

 Mayilangkoodaloor P. Nadarajan ; Mayilangkoodaloor P Nadarajan [Photo courtesy: thirdeye2005.blogspot.com[TamilNet, Friday, 15 June 2012] A collection of writings on the antiquity and traditions of Eezham Tamils written by Mayilangkoodaloor P. Nadarajan was launched at I’nuvil in Jaffna on last Sunday. 76-year-old Mr. Nadarajan has spent a lifetime in Eezham Tamil studies, editing old texts and in bringing out valuable publications. He is regarded as a symbol of selfless service to Tamil studies, benefitting school children to university academics. Generations of writers, researchers and publishers were benefitted by his editing skills in Tamil. Mayilangkoodaloor P Nadarajan [Photo courtesy: thirdeye2005.blogspot.com]The present book of him is published to honour an intellectual tradition that gives importance to society than self, said the publishers, Parani Pathippakam, Koa’ndaavil. The book launch event was presided by Professor of Tamil of the University of Jaffna, S. Sivalingarajah, while Mr Kuzhanthai M. Shanmugalingam and Mr. A. Sabaratnam received the first copies. Mr Nadarajan has earlier brought out error-free publications of many historiographical texts. He long served as a teacher at Mahajana College, Thellippazhai.

Courtsey: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35297

Last Updated on Saturday, 16 June 2012 05:44
 

நீண்ட ஆறு

E-mail Print PDF

ஜெயந்தி சங்கர்ஸியா, ஷாங், ஜோவ் முடியாட்சிகளுக்கெல்லாம் மூதாதையரான லுவோஜு சீனர்களின் ஆதித்தாய் என்றறியப் பெறுகிறாள். மஞ்சள் மாமன்னரின் மனைவியான லுவோஜு யாங்சே ஆற்றங்கரையோரத்தில் முற்கால சீனத்தின் ஸிலிங் என்றறியப்பட்ட நகரத்தில் பிறந்தாள். இவர்களுக்கு ஸுவான் ஸியாவ் மற்றும் ச்சாங் யீ என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். அரசி லுவோஜு தான் முதன்முதலில் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மற்றும் பட்டிழை நெய்தல் பற்றி அக்காலச் சமூகத்துக்குக் காட்டியதால் இன்றைக்கும் சீனத்தில் லுவோஜு என்றால் பட்டுப்புழுக்கள் வளர்க்கும் தேவதை என்றே பொருள். இந்தக் கண்டுபிடிப்பு சீன நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சிக்குப் பெரிது உதவியுள்ளது. லுவோஜுவின் நினைவாக அன்றே கட்டப்பெற்ற ஓர் ஆலயம் இன்றைக்கும் யிச்சாங்கில் இருக்கிறது. ஒவ்வொரு சந்திர ஆண்டின் மூன்றாம் மாதத்தின் ஐந்தாம் நாளில் இந்தக்கோவிலில் பெரிய திருவிழா நடக்கும். லுவோஜு கலாசாரத்தைக் குறித்த கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளும் இங்கு நடைபெறும்.

Last Updated on Sunday, 10 June 2012 22:51 Read more...
 

மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக் - நாவலப்பிட்டி கே.பொன்னுத்துரை

E-mail Print PDF

ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் புது இரத்தம் பாய்ச்சியது என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றிற்கிணங்க, மலையக இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தியான வகிபாகத்தை வகித்த, மலையகப் பெண் படைப்பிலக்கியவாதிகளை நாம் கவனத்தில் கொள்வது புறந்தள்ள முடியாத அதிமுக்கிய விடயமாகும். அந்த வகையில் மலையக மூத்த பெண் படைப்பாளிகளான திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர், 'தூரத்துப் பச்சை' என்ற படைப்பைத் தந்த திருமதி. கோகிலம் சுப்பையா, திருமதி. சிவபாக்கியம் குமாரவேல் போன்ற தமிழ் பிரம்மாக்களின் வரிசையில் மலையக முஸ்லிம் பெண் படைப்பிலக்கியவாதிகளில் பல தளங்களில் தனது பங்களிப்பினைப் பதிவுசெய்து இன்று அயராமல் எழுதிக்கொண்டிருக்கும் 'இலக்கியத் தாரகை' கலாபூஷணம் நயீமா சித்தீக் முக்கியமானவராவார். மலையக இலக்கியத்தை நோக்கும்போது 60களின் பின் 'மறுமலர்ச்சிக் காலம்' என்றே குறிப்பிடலாம். அதற்கு அடித்தளமாக விளங்கியது 'கலாபூஷணம்' க.ப.சிவம் இணையாசிரியராக இருந்து வெளியிட்ட 'மலைமுரசு' என்பதே ஆய்வாளர்களின் கூற்று. மலைமுரசில் தனது ஆரம்ப எழுத்துருவை வெளிக்கொணர்ந்த பலர் இன்று மலையக மாணிக்கங்களாக மிளிர்வது கவனிக்கத்தக்க விடயமாகும். குறிப்பாகக் கூறுவதானால் பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பை மேற்கொள்ளாத தேசபக்தன் கோ. நடேசய்யர், 'மலையகத் தமிழர் வரலாறு' போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை மலையக இலக்கிய உலகிற்குக் கொண்டுவந்த சாதனையாளர் சாரல்நாடன், அமைதியே உருவான ஆசிரியை திருமதி. லலிதா நடராஜா ஆகியோரின் வரிசையில் மலைமுரசில் முகிழ்த்தவர்களில் ஒருவரே இன்றைய (மல்லிகை) அட்டைப்படத்தை அலங்கரிக்கும் 'இலக்கியத் தாரகை' 'கலாபூஷணம்' திருமதி. நயீமா சித்தீக் அவர்கள்.

Last Updated on Thursday, 07 June 2012 00:28 Read more...
 

டானியல் கல்லறையின் இன்றைய நிலை..? நினைவுச் சின்னம் மறைந்த மாயம் என்ன..??

E-mail Print PDF

அமரர் கே.டானியல்இலங்கை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பாளரும் - மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவரும் - தலித் இலக்கியப் பிதாமகர் - முன்னோடி எனப் போற்றப்படுபவரும் - பொதுவுடமைவாதியுமான கே. டானியல் 23 - 03 - 1986 -ல் தஞ்சாவூரில் காலமானார். அங்கு வடவாற்றங்கரையில் நாத்திகர்கள் - பொதுவுடமைவாதிகள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பெருமளவிலான கலை இலக்கிய - அரசியல் தோழர்கள் முன்னிலையில் அவரது அடக்கம் இடம்பெற்றது. புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கல்லறை - நினைவுச் சின்னத்தைப் பேராசிரியர் பா. கல்யாணி 1987 -ல் திறந்து வைத்தார். சில வருடங்களுக்குப் பின்னர் டானியல் புதல்வர்கள் - பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆகியோர் முயற்சியினால் அது புதுப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலை கவலையளிக்கிறது.இலங்கை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பாளரும் - மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவரும் - தலித் இலக்கியப் பிதாமகர் - முன்னோடி எனப் போற்றப்படுபவரும் - பொதுவுடமைவாதியுமான கே. டானியல் 23 - 03 - 1986 -ல் தஞ்சாவூரில் காலமானார். அங்கு வடவாற்றங்கரையில் நாத்திகர்கள் - பொதுவுடமைவாதிகள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பெருமளவிலான கலை இலக்கிய - அரசியல் தோழர்கள் முன்னிலையில் அவரது அடக்கம் இடம்பெற்றது. புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கல்லறை - நினைவுச் சின்னத்தைப் பேராசிரியர் பா. கல்யாணி 1987 -ல் திறந்து வைத்தார். சில வருடங்களுக்குப் பின்னர் டானியல் புதல்வர்கள் - பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆகியோர் முயற்சியினால் அது புதுப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலை கவலையளிக்கிறது. கடந்த 11 - 05 - 2012 காலை தோழர் பசு. கௌதமன் மற்றுமொரு தோழருடன் டானியல் கல்லறையைப் பார்க்கப் போனேன். அடையாளம் காணமுடியாதபடி முட்புதர்களால் மூடப்பட்டிருந்தது. நினைவுச் சின்னத்தைக் காணவில்லை. அது மறைந்த மாயம் என்ன..? அது பொருத்தப்பட்ட இடம் சிறிது சிமெந்து பூசி மறைக்கப்பட்டிருந்தது. புகழ்பெற்ற படைப்பாளியும் சமூக விடுதலைப் போராளியுமான டானியல் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் கல்லறைகள் அமைந்த இடத்தை இப்படியா பராமரிப்பது...? தஞ்சை நகரசபை கண் திறக்குமா..?  இது குறித்து டானியலின் உற்ற தோழரான பேராசிரியர் அ. மார்க்ஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது...!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  

Last Updated on Wednesday, 06 June 2012 23:59 Read more...
 

அறவழியா? ஆயுதவழியா? அமரர் மு.தளையசிங்கம் நினைவுகள்!

E-mail Print PDF

அமரர் மு.தளையசிங்கம் எழுத்தாளர் முருகபூபதி‘எழுத்தாளர்கள் Activist ஆக இருத்தல் தகுமா? தகாதா?’ என்னை நீண்டகாலமாக அரித்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. பேப்பரும் பேனையும் கற்பனையும் இருந்தால் போதும். எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் குவிக்கலாம். எழுதியவற்றை பிரசுரிக்க பத்திரிகை உலகத் தொடர்பும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாகி விடலாம். “ஒரு எழுத்தாளனின் கடமை அவ்வளவுதானா? வெறுமனே பெயரும் புகழும் தேடுவது மாத்திரம்தானா அவனது வேலை. தானும் சிந்தித்து மாற்றவர்களையும் சிந்திக்கச் செய்வதும் எழுத்தாளனின் வேலை” என்பார் ஜெயகாந்தன். “எழுத்தின் மூலமாகத்தான் மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றோமே – மக்களுக்கு போதனை செய்கின்றோமே. அதற்கும் அப்பால் நமக்கென்ன அலுவல் கிடக்கின்றது” என்று எழுத்தாளர்கள் எண்ணுவார்களாயின் மேற்குறிப்பிட்டவாறு அவர்களுக்கு பேப்பர், பேனா, கற்பனையுடன் - வெளியிட பத்திரிகையும் இருந்தால் மாத்திரம் போதுமானதுதான். சமுதாயத்தில் புரையோடிப்போயுள்ள அழுக்குகளை நீக்கவும், அநீதிகளை அம்பலப்படுத்தி, அவற்றுக்கு மாற்று வழிகளைக் காண்பிப்பதற்கும் எழுத்தை மாத்திரம் ஆயுதமாகப் பாவிப்பதுடன் அவனது கடமை முற்றுப்பெறுகின்றதா? சிலர் “ஆம்” என்கின்றனர். சிலரோ “இல்லை” அதற்குமேலும் அவன் செயலூக்கத்துடன் இயங்க வேண்டியுமுள்ளது என்கின்றனர். எப்பொழுதும் வித்தியாசமாக சிந்திப்பவர்களினாலும் செயல்படுவர்களினாலுமே ஒரு தேசத்தில் மாற்றமும் முன்னேற்றமும் காணப்படும் என்பர். வேலை, வீடு, உணவு, நித்திரை, குடும்பம் என்று ஒரு வட்டத்துள் சுழன்றுகொண்டு எழுதி, “எழுத்தாளர்” என்ற பெயரை சம்பாதித்தவர்களும் இருக்கின்றனர்.

Last Updated on Wednesday, 06 June 2012 05:07 Read more...
 

இலங்கையில் தலைசிறந்த தமிழ் நாவல்கள்.....?

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதிபேராசிரியர் க. கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றதையடுத்து, அவர் 1976 ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்கும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள ஆய்வரங்கொன்றை இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். குறிப்பிட்ட 1976 ஆம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டுக்காலமாகும். பல முன்னோடி நாவலாசிரியர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருந்த தமிழ்நாடு, இந்த நூற்றாண்டுக்காலத்தை ஏனோ மறந்துவிட்டிருந்தது. இத்தனைக்கும் தனது வாழ்நாள் பூராகவும் தன்னை ஒரு எழுத்தாளன் என்று நிறுவிவரும் கலைஞர் தமிழக அரசில் அப்போது முதல்வராக பதவியிலிருந்தார். இவ்வாறு தமிழகம் மறந்த பல விடயங்கள் இருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் இலக்கிய ஆர்வலர் (அமரர்) ரங்கநாதன் அவர்களின் இல்லத்தின் மேல்மாடியில் நடைபெற்ற மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்ட இலக்கிய விமர்சகர் சிட்டி அவர்கள், இலங்கையரின் பல முன்மாதிரிகளை சுட்டிக்காட்டிப்பேசும்போது கைலாசபதியினால் நடத்தப்பட்ட நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கையும் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளையும் கடந்து வெளியாகும் மல்லிகையையும் சிலாகித்துப்பேசினார். மேற்சொன்ன யாழ்.பல்கலைக்கழக நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் அடையாறில் நடந்த மல்லிகை நிகழ்விலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.

Last Updated on Saturday, 02 June 2012 22:30 Read more...
 

உலகத் தமிழ்ச் செய்திகள் இணையத்தளத்திலிருந்து: நினைவுகள் மரணிப்பதில்லை : பதினொரு தொறான்ரோ நாட்கள்

E-mail Print PDF

யமுனா ராஜேந்திரன்எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் நான் வேறு வேறு காலங்களில் சந்தித்த, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறுபட்ட மனப்போக்கு கொண்ட நண்பர்கள் சிலரை பல ஆண்டுகளின் பின்  தொறான்றோவில் சந்தித்தேன்.  எண்பதுகளில் ஈழமாணவர் பொதுமன்றத்தின் தமிழகச் செயல்பாட்டாளராக இருந்த வளவன் என்கிற யோகராஜா, பத்து ஆண்டுகளின் முன்பாக நண்பர் காண்டீபன் வீட்டில் எஸ்.வி.ராஜதுரை என்னுடன் தங்கியிருந்தபோது சந்தித்த நண்பர் சேனா, தாகம் மற்றும் நிருபம்  போன்ற பத்திரிக்கைகளை நடத்திய நண்பர் நகுலேந்திரன் என்கிற கீரன் பத்தாண்டுகளின் முன்பு எனக்கு அறிமுகப்படுத்திய கோணேஸ்வரன், இலண்டனில் விம்பம் அமைப்பின் செயல்பாடுகளின்போது அறிமுகமான போல், தேசம்நெட் ஜெயபாலன் இல்லத்தில் சந்தித்த நண்பர் ரகுமான் ஜான் போன்றவர்களை மறுபடியும் நான் தொறான்ரோவில் சந்;தித்தேன்.  கனடாவின் முக்கியமான படைப்பாளிகளாக அறியப்பட்ட கவிஞர் செழியன், நாடகாசிரியர் ஜயகரன், சிறுகதையாசியர் டானியல் ஜீவா, நாவலாசிரியர் தேவகாந்தன், நாவலாசிரியரும் பதிவுகள் இணையத்தள ஆசிரியருமான வ..ந.கிரிதரன், கவிஞரும் சிறுகதையாசிரியருமான மெலிஞ்சி முத்தன், மொழிபெயர்ப்பாளரான மணிவேலுப்பிள்ளை, மொழிபெயர்ப்பாளரும் கவிஞரும் சிறுகதையாசிரியருமான என்.கே.மகாலிங்கம், புகைப்படக் கலைஞரும் ஓவியருமான கருணா, ஆவணப்பட இயக்குனரான கனடா மூர்த்தி, கவிஞரும் கட்டுரையாசிரியருமான கவிஞர் தமிழ்நதி மற்றும் அவரது கணவர் ராஜகுமாரன், மற்றும் புதிய தலைமுறை எழுத்தாளரான அருண்மொழி வர்மன் போன்றவர்களையும் சந்தித்தேன்.

Last Updated on Sunday, 10 June 2012 03:15 Read more...
 

பால் நிலைப் பிறழ்வு குறித்தான கீழை, மேலைத் தேய கலை இலக்கியங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்

E-mail Print PDF

எழுத்தாளர் தேவகாந்தன்(பாலின் நிலைமாற்றத்தினை பாலின மாற்றம் என்பதா, பால்நிலைப் பிறழ்வென்பதா என இக் கட்டுரை 05.05.2012இல் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு 39இல் வாசிக்கப்பட்டபோது ஒரு பிரச்சினை தோன்றியது. பால்நிலை மாற்றம் என்று குறிப்பிடுவதே சரியென்று, இலக்கியச் சந்திப்பு வாசிப்பின் பின் நான் யோசித்திருந்தாலும், மீண்டும் மீண்டுமான என் யோசிப்பில் அலியென்பது ஒரு பிறழ்வெனவே தோன்றியது. ஆண் அல்லது பெண் ஆகவேண்டியது இரண்டுமல்லாததாக ஆவது ஒரு பிறழ்வுதான். ஆனால் ஆண் அலி, பெண் அலி தம்மைப் பெண்ணாக மாற்றிக்கொள்வதை மாற்றம் எனக் குறிப்பிடல் சரியாகலாம். எனவே தொடர்ந்தும் பிறழ்வு என்ற சொல்லையே இக் கட்டுரையில் நான் பாவித்திருக்கிறேன். சில இடங்களில் வரநேர்ந்திருக்கும் மாற்றம் என்ற சொல்லை நான் வலிந்து மாற்ற முயற்சி செய்யவில்லை.) பால் நிலைப் பிறழ்வு குறித்தும், பாலியல் சார்ந்த பகுப்புகள் குறித்தும், கலவி நிலைகளும் அதுபற்றிய விளக்கங்கள் பற்றியும் சிந்திக்க முனையும் ஒருவருக்கு, அவைபற்றிய முதல்நிலைத் தகவல்களைத் தருபவை கீழைத் தேய எழுத்துக்களாகவே இருக்கின்றமை வெளிப்படையானது.

Last Updated on Wednesday, 23 May 2012 15:55 Read more...
 

யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்

E-mail Print PDF

தற்போது 'டொராண்டோ' வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது 'டொராண்டோ' வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றிவருமிவரை எழுத்தாளர் 'கனவுச்சிறை' தேவகாந்தனின் இருப்பிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இன்று - மே 17, 2012 -  கிடைத்தது. இவர்களுடன் எழுத்தாளர் டானியல் ஜீவாவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். ஏற்கனவே பத்திரிகை சஞ்சிகைகள் வாயிலாக யமுனா ராஜேந்திரனை அறிந்திருந்தாலும், 'பதிவுகள்' மூலமாகத்தான் அவருடனான மின்னஞ்சல் தொடர்பு முதலில் ஏற்பட்டது. ஆனால் இன்றுதான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பு குறுகிய நேரம்தானென்றாலும் மிகவும் பயனுள்ளதாகவும், நெஞ்சில் நிலைத்து நிற்கும் சந்திப்புகளிலொன்றாகவும் அமைந்து விட்டது.

Last Updated on Sunday, 20 May 2012 12:58 Read more...
 

உச்சம் - படைப்புக் கட்டுரை

E-mail Print PDF

கங்காரு என்ற பெயர் முதன் முதலாக 1770 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி கப்டன் ஜேம்ஸ் குக் என்பவரால் பதியப்பட்டுள்ளது. கப்பலைத் திருத்துவதற்காக Endeavour river (தற்போது cook town) இல் தங்கியிருந்தபோது, அந்த அதிசய மிருகத்தைப் பார்த்து 'அதன் பெயர் என்ன?' என்று அங்குள்ள ஆதிவாசிகளிடம் கேட்டிருக்கின்றார்கள். ஆதிவாசிகள் 'Kangaroo' ('நீங்கள் கேட்பது புரியவில்லை') என்று தமது Guugu Yimithirr பாஷையில் சொல்லியிருக்கின்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் அந்த மிருகத்தின் பெயராயிற்று.1.
அவுஸ்திரேலியாவில் வருடக்கடைசி - கோடைகால விடுமுறை. மிக நீண்டதாக இருக்கும். பள்ளிக்கூடங்கள் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். வேலையில் இருந்து எனக்கு மூன்று கிழமைகள் விடுமுறை கிடைக்கும். பாடசாலை விடுமுறை விட இன்னமும் இரண்டு கிழமைகள்தான் இருந்தன. காலையில் மகனைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்லும் போது, வீதியில் பெரியதொரு கங்காரு இறந்து கிடப்பதைப் பார்த்தோம். வாகனங்கள் அதை விலத்திப் போய்க் கொண்டிருந்தன.

Last Updated on Thursday, 17 May 2012 16:21 Read more...
 

தாமரைச்செல்வியின் படைப்புகள்: சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா?

E-mail Print PDF

தாமரைச்செல்வி1970களின் பிற்பகுதி. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகமாக வாசிக்கப்பட்ட காலம் அது. இதற்கான வாய்ப்பை வீரகேசரி உருவாக்கியிருந்தது. அப்போது ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வீரகேசரி, மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படையில்  வெளியிட்டு வந்தது. அதில் பல புதிய எழுத்தாளர்களும் அறிமுகமானார்கள். அப்பொழுதுதான் தாமரைச்செல்வியின் ‘சுமைகள்” என்ற நாவலையும் வாசித்தேன். அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு வயது இருபது அல்லது இருபத்தொன்றாக இருக்கலாம். அந்த நாவல் அதிகம் என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு காரணங்களிருந்தன. ஒன்று, நாவலில் இடம்பெறும் களத்தின் அறிமுகம். அடுத்தது, எழுதிய தாமரைச்செல்வி எங்கள் ஊருக்கு அண்மையில் இருந்தார் என்பது. இதற்குப் பின்னர் தாமரைச்செல்வியின் எழுத்துகளில் ஒரு கூடுதல் அவதானிப்பு. அவர் அநேகமாக விவசாயிகளின் பிரச்சினைகளை, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளையே எழுதினார். நாங்களும் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் எங்களின் பிரச்சினைகள், எங்களுடைய கதைகளாகவே இருந்தன அவருடைய கதைகள். இதனால், எங்களின் குடும்பத்தில் தாமரைச் செல்வியின் எழுத்துகளுக்கு உச்ச வரவேற்பு. அவருடைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வரும்போது இந்த வரவேற்பின் உற்சாகத்தை எங்களின் வீட்டில் காணலாம்.

Last Updated on Wednesday, 25 April 2012 17:01 Read more...
 

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் – கிளர்த்தும் நினைவுகள்

E-mail Print PDF

ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகிய சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி நந்தினிசேவியர் ஐயா மூலம் இன்று (20-04-2012) பகல் அறியநேர்ந்தது. சண்முகம் சிவலிங்கம் என்றாலே ‘ஆக்காண்டிப் பாடல்’தான் ஞாபகம் வரும். ‘ஆக்காண்டி’ என்ற நாட்டார் பாடலில் தனது குஞ்சுகளை ஒவ்வொன்றாக இழந்த தாய்ப்பறவையின் சோகம் காற்றில் இழைந்து வருவதை எல்லோரும் அறிவர். அதே ஆக்காண்டிப் பாடலை அடிப்படையாக வைத்து சண்முகம் சிவலிங்கம் எழுதிய பாடலும் எங்கள் வாழ்க்கையைப் பாடும் பாடலாக அமைந்திருந்தது.ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகிய சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி நந்தினிசேவியர் ஐயா மூலம் இன்று (20-04-2012) பகல் அறியநேர்ந்தது. சண்முகம் சிவலிங்கம் என்றாலே ‘ஆக்காண்டிப் பாடல்’தான் ஞாபகம் வரும். ‘ஆக்காண்டி’ என்ற நாட்டார் பாடலில் தனது குஞ்சுகளை ஒவ்வொன்றாக இழந்த தாய்ப்பறவையின் சோகம் காற்றில் இழைந்து வருவதை எல்லோரும் அறிவர். அதே ஆக்காண்டிப் பாடலை அடிப்படையாக வைத்து சண்முகம் சிவலிங்கம் எழுதிய பாடலும் எங்கள் வாழ்க்கையைப் பாடும் பாடலாக அமைந்திருந்தது. 1988 இல் வெளிவந்த “நீர்வளையங்கள்” என்ற தொகுப்பினூடாக இலக்கிய உலகில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பிறகு 2010 இல் தான் அவருடை ய இரண்டாவது தொகுதியான “சிதைந்துபோன தேசமும் தூர்ந்து போன மனக்குகையும்“ வெளிவந்தது. இந்த இரண்டாவது தொகுப்பு ஒரு காவியம்போலவே தொகுக்கப்பட்டுள்ளதை படிப்பவர் உணர்வர். அண்மைக்காலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. விமர்சனத்தின் புதிய போக்குகளை அவை இனங்காட்டத்தக்கவை. கவிதைகளோடு சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிவற்றிலும் தன் ஆளுமையைச் செலுத்திவந்துள்ளார். ஆனால் கவிதையே அவரை ஒரு அழியாக் கவிஞனாக நிலைநிறுத்தியுள்ளளது.

Last Updated on Friday, 20 April 2012 21:48 Read more...
 

வாழ்நாள் சாதனையாளர் தெளிவத்தை ஜோசப்!

E-mail Print PDF

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்[தினகரன்(இலங்கை) வாரமஞ்சரியில் வெளியான கட்டுரை - பதிவுகள்] மலையக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மேலும் சிறப்பிடம் பெறுகிறது. இதற்கு காரணம் அந்த (தந்தையார்) தோட்டத்துப் பள்ளி ஆசிரியர் லயத்தின் தொங்கல் வீட்டில் குடியிருந்தது காரணமாகவிருக்கக் கூடும். தென்னிந்தியாவிலிருந்து கற்பிக்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர் குழுக்களில் அவரது தந்தையும் ஒருவர் (தெளிவத்தை ஜோசப் அவர்களின் நேர்காணல் – மூன்றாவது மனிதன்). பதுளை ஊவா கட்டவளை என்ற தோட்டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் ஆகிய இருவருக்கும் இரண்டாவது பிள்ளையாக 1934.02.16 திகதியன்று பிறந்தவரே ஜோசப். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக இருக்கும் அதேவேளை இதற்கு முன் ஒரு பாரிய நிறுவனத்திலும் கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார். ‘பேசும்படம்’ என்ற சஞ்சிகையில் பார்த்த படங்களில் உள்ள பிடிக்காத காட்சிகளை ‘வெட்டுங்கள் வெட்டுங்கள்’ என்ற பகுதிக்கு பாடசாலை காலத்திலேயே எழுதி அனுப்பும் பழக்கம் இவருக்குண்டு. ‘எஸ் ஜோசப் - ஊவா கட்டவளை, ஹாலிஎல’ என்ற பெயரில் பல கடிதங்களை பிரசுரித்திருந்தன. இவ்வாறு ஆரம்பமானதே இவரது எழுத்துப் பணி. அதனை தொடர்ந்து 1955 இல் அவரது அண்ணன் ஞானப்பிரகாசம் (எழுதுவினைஞர்) தொழில் நிமித்தம் பதுளையின் இன்னொரு தோட்டமான தெளிவத்தை யில் தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாய் அவருடன் இருந்த ஓய்வு நேரங்கள் அவரை எழுத்துப் பணிக்கு இழுத்துச்சென்றது.

Last Updated on Sunday, 08 April 2012 22:36 Read more...
 

சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும்

E-mail Print PDF

- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -காதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில் போன்ற கருத்துகள் அகராதியில் நீண்டு அமைவதுபோல் காதலும் இன்ப ஒழுக்கத்தின் இயல்பை உணர்த்தி நின்று மக்களை வழிப்படுத்துகின்றது. பெண்ணானவள் 12 ஆவது, 13 ஆவது அகவைகளிலும், ஆணானவன் 14 ஆவது, 15 ஆவது அகவைகளிலும் பருவமடையும் பொழுது உடம்பில் ஏற்படும் ஓர் இயற்கை உந்தலால் தூண்டப்பட்டு, உடல் இச்சை கொண்டு, இன்பமடைய விரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். பசித் தூண்டலுக்குச் சாப்பிடுவதும், தாகத்துக்கு நீர் அருந்துவதும் உடல் தேவையின் நியதியாகும். தொல்காப்பியம் (தி.மு.680—கி.மு.711):- இனி, எமக்குக் கிடைக்கக்கூடிய காலத்தால் மூத்த சங்க இலக்கிய நூலான தொல்காப்பியம் முதல் மற்றைய நூல்களிலும் காதல் எவ்வண்ணம் பேசப்படுகின்றது என்ற கதைகள் பற்றிக் காண்போம். தொல்காப்பியர் காதலை (1) கைக்கிளை, (2) அன்பின் ஐந்திணை, (3) பெருந்திணை என்று மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்.

Last Updated on Saturday, 07 April 2012 22:05 Read more...
 

விலகிச் செல்லும் பாதை: கருணாகரனின் ‘எதுவுமல்ல எதுவும்;’

E-mail Print PDF

கருணாகரனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில். 108 பக்கங்கள். 56 கவிதைகள். இலங்கையிலிருந்து ‘மகிழ்’ வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைகள் 2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளன. கருணாகரன்கருணாகரனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில். 108 பக்கங்கள். 56 கவிதைகள். இலங்கையிலிருந்து ‘மகிழ்’ வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதைகள் 2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தக் காலப் பகுதியில் போர் நடைபெற்ற ஈழப் பகுதியிலிருந்து எழுதப்பட்ட வேறு கவிதைத் தொகுதிகள் ஏதும் இதுவரையில் வந்ததா என்று தெரியவில்லை. அப்படி வேறு தொகுதிகள் வரவில்லையென்றால், இந்தக் கவிதைகளே அந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இந்தக் காலப்பகுதியில் கருணாகரனினால், இலங்கையில், வன்னியில் இருந்து எழுதப்பட்ட இன்னொரு தொகுதிக் கவிதைகள் ஓராண்டின் முன்னர் ‘பலியாடு’ (இந்தத் தொகுதி ‘பலியாட்டின் கண்கள்’ என்றே வந்திருக்க வேண்டும் என்று கருணாகரன் சொல்கிறார்) என்ற தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலை தமிழகத்திலுள்ள வடலி என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அவற்றைத் தவிர்த்து எஞ்சிய கவிதைகள் ‘எதுவுமல்ல எதுவும்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

Last Updated on Saturday, 07 April 2012 21:42 Read more...
 

மோகமுள் - நாவல் பிறந்த கதை

E-mail Print PDF

கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.

“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”

“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே. அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?…” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.

“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”

Last Updated on Thursday, 05 April 2012 21:24 Read more...
 

தினமணி: சூடாமணி வாழ்கிறார்!

E-mail Print PDF

சூடாமணி வாழ்கிறார்ஜிம் ஸ்டோவல் என்று ஓர் ஆங்கில எழுத்தாளர் எழுதிய "த அல்டிமேட் கிஃப்ட்' என்ற புத்தகத்தைப் படித்தவர்கள், ஹோவர்ட் ரெட் ஸ்டீவன்ஸ் என்ற ஒரு செல்வந்தர் தம் சொத்துக்களை உயில் மூலம் தன் குடும்பத்தினருக்கு எழுதி வைத்தபின், அவர்கள் எப்படி அதை அழித்துவிட்டு, அவர்களும் உருப்படாமல் போனார்கள் என்று முடித்திருக்கிறார். இளைஞனான மருமான் ஜேசன், மறைந்த தன் மாமா வீடியோவில் தன்னுடன் பேசுவதைப் பார்க்க வழக்கறிஞர் ஏற்பாடு செய்வார். நமக்கு இந்த உலகில் கிடைத்திருப்பதெல்லாம், கடவுளின் அன்பினால் மட்டுமே கிடைத்தது என்பதைப் புந்துகொள்ள எனக்குப் பல ஆண்டுகள் ஆயின என்று அவனுக்குக் கூறுவார். எனக்கு உன் மீது சிறிது நம்பிக்கை இருக்கிறது. அதை ஊதிப் பெரிதாக்க முடியும் என்று நம்புகிறேன் என்பார். ஜேசன் கடினமாக உழைத்து, பெரியவரின் நம்பிக்கையை நிறைவேற்றுவான். ரெட் ஸ்டீவன்ஸ் சிறுவர் இல்லம், ரெட் ஸ்டீவன்ஸ் நூலகம், மருத்துவமனை, ஏராளமான கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் எல்லாம் நடத்த ஒரு பில்லியன் டாலர் அறக்கட்டளை அவன் வசம் ஒப்படைக்கப்படுகிறது முழுப் புத்தகத்தையும்கூடப் படிக்க வேண்டாம். பின் அட்டையை முழுதும் படித்தாலே போதும். நூலின் மையக்கருத்து புலப்பட்டுவிடும்.

Last Updated on Wednesday, 04 April 2012 23:22 Read more...
 

இலங்கைத் தமிழ் வெளியீட்டுத் துறையின் எதிர்காலம்

E-mail Print PDF

ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாக இல்லாது போனாலும், 25 ஆண்டுகள் நூலகராக இருந்த அனுபவம், பத்தாண்டுகளாக நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூற்பட்டியலைத் தொகுத்து 8000 ஈழத்துத் தமிழ் நூல்களைப் பதிவுசெய்து வழங்கிய அனுபவம், இரண்டொரு ஈழத்துத் தமிழ்ப் பதிப்பாளர்களுடன் இணைந்து கடந்த இரு ஆண்டுகளாக லண்டனில் ஈழத்துத் தமிழ்ப் புத்தகச் சந்தையை பல இடங்களிலும் நடத்தி சராசரி வாசகர்கள் பற்றிப் பெற்றுக்கொண்ட அனுபவம் இவை அனைத்தும் என்னை இக்கட்டுரையை எழுதத் தூண்டியுள்ளது. எம்மவரிடையே வாசிப்புத் தரம் குறைந்துவிட்டது என்று வெளிப்படையான உண்மையைச் சொல்லி ஒதுங்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இக்கருத்துக்கள். வாசிப்பு என்பது கல்வித் தேவைகளுக்காகவும், அதற்கப்பால் உள்ள விரிந்த தேடலுக்கும் என இரண்டு வகைகளில் இங்கு நிகழ்கின்றது.

Last Updated on Friday, 30 March 2012 20:17 Read more...
 

திண்ணை.காம்: அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்

E-mail Print PDF

அண்மையில் மறைந்த எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான தி.சு.சதாசிவம் அவர்களின் நினைவாக எழுத்தாளர் பாவண்ணனால் எழுதப்பட்டு , திண்ணை இணைய இதழில் பிரசுரமான கட்டுரையிது. - பதிவுகள்[அண்மையில் மறைந்த எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான தி.சு.சதாசிவம் அவர்களின் நினைவாக எழுத்தாளர் பாவண்ணனால் எழுதப்பட்டு , திண்ணை இணைய இதழில் பிரசுரமான கட்டுரையிது. - பதிவுகள்] எண்பதுகளின் பிற்பகுதியில் கொப்பள என்ற ஊரிலிருந்து கதக் என்னும் ஊர்வரைக்கும் கேபிள் புதைக்கும் வேலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். இரண்டு ஊர்களுக்கும் இடையில் லக்குண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. பருத்தியும் சோளமும் விளையும் கரிசல் மண்ணைக் கொண்ட சிற்றூர். ஊருக்கு நடுவில் அழகான ஏரியொன்றும் சமணக்கோவில் ஒன்றும் உண்டு. அதையொட்டித்தான் நாங்கள் எங்களுடைய கூடாரத்தை அமைத்திருந்தோம். பொழுது சாய்ந்தபிறகுதான் வேலையிலிருந்து திரும்புவோம். பிறகு ஒரு குளியல். அதற்கப்புறம் நண்பர்களோடு பேசியபடியே ஒரு நடை. எளிய இரவு உணவு. உணவை முடித்ததுமே நண்பர்கள் மீண்டுமொரு நடைக்குத் தயாராவார்கள். நான் எனது கூடாரத்துக்குள் சென்றுவிடுவேன். லாந்தர் விளக்கெரியும் ஒரு சிறிய எழுத்துமேசையின் முன்பு அமர்ந்து படிக்கவோ அல்லது எழுதவோ, அக்கணத்தின் மனநிலைக்குத் தகுந்தபடி செய்வேன். அந்த ஊரில் இருக்கும்போதுதான் பெங்களூரிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த காவ்யா பதிப்பகத்தின் தொடர்பு கிடைத்தது. இங்கே இன்று என்னும் இதழையும் வேறு சில சிறுகதைத்தொகுதிகளையும் நாவல்களையும் காவ்யாவிடமிருந்து வரவழைத்துப் படித்தேன். அவற்றுள் ஒன்று சம்ஸ்காரா என்னும் கன்னட நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பு.

Last Updated on Monday, 19 March 2012 16:32 Read more...
 

உயிர் கொண்டு அலையும் மனிதனின் பயணத்தில் ஆறா வடு

E-mail Print PDF

சயந்தனின் 'ஆறாவடு'புதிய மாதவி சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையும் அதன் பின்னணிகளையும் மட்டுமே சொல்லிச் சென்றிருக்கும் கதையல்ல ஆறாவடு. போர்க்காலத்தில் வாழத்துடித்த ஓரிளைஞனின் பயணமிது. போர், காதல், சண்டை, சச்சரவு , பணம், அதிகாரம், கதை, கவிதை எல்லாமே எதற்காக...? மனிதன் தன் இருத்தலை எப்போதும் உணர்ந்து கொள்ளும் தேடலுக்காக. அந்த தேடலின் பயணத்தில் போரும் காதலும் அதிகாரமும் அவனைப் பாதிப்பதும் அந்தப் பாதிப்புகள் எழுப்பும் கேள்விகளுக்கான பதில் தேடும் பயணமும் தொடர்கின்றன. சயந்தனின் ஆறாவடு நாவல் இப்படியான ஒரு தேடல்தான். இந்தத் தேடல் அமைதியான சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒரு விதமாகவும் போர்க்கால சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் வேறுவிதமாகவும் இருக்கிறது. ஈழப்போரட்ட வரலாற்றில் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல் என்ப்தால் இந்த நாவலின் ஒவ்வொரு வரியும் கவனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 14 March 2012 17:49 Read more...
 

Writing vs. Translating

E-mail Print PDF

John Bunch: an American, and a professional translator for German to English. He currently lives in Munich, Germany.In reading Chris Durban's great book, "The Prosperous Translator" (which is in the form of a series of questions and answers from translators), one of the main take-aways I learned was that writing ability in one's own native language is a critical skill of the best translators. Too many of us translators, me included, get caught up in the source language. We think that our native language is kind of automatic, and we don't have to work on it. This is wrong for the following reasons: The target language text is the only thing your client and reader will see.  No matter how good your translation skill is, if you can't write well in your native language, it is all for naught. The black and white text on the page in your native tongue is the only thing the reader sees of your awesome translation skills.  Language is constantly evolving. Words are being invented today in my native American English, that I don't know about. I need to keep up.   If your text is 100% "perfect" from a translation point of view, but does not flow well, you are still going to be viewed as not very good. 

Last Updated on Tuesday, 13 March 2012 16:18 Read more...
 

சயந்தனின் ‘ஆறாவடு’ மீதான ஓர் அரசியல், இலக்கியக் கண்ணோட்டம்

E-mail Print PDF

‘ஆறாவடு” நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்துகொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசித்து முடித்தேன். நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும்  அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது. நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும்.  -தேவகாந்தன்-   ‘ஆறாவடு” நூல் குறித்த பிரஸ்தாபம் ஈழத்து வாசகர் மத்தியில், முகப் புத்தகப் பக்கங்களில் இவ்வாண்டு தை முதலே இருந்து கொண்டிருந்திருப்பினும், அதை அண்மையில்தான் வாசித்து முடித்தேன். நூலின் பின்னட்டையிலுள்ள படைப்பாளியின் போட்டோவிலிருந்தும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவருடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடலிலிருந்தும்  அவரது வயதைக் கணிப்பிடக்கூடியதாக இருந்தது. இது முக்கியம். ஏனெனில் நூல் தெரிவிக்கும் வெளியில் படைப்பாளியின் அனுபவ நிஜத்தை அதிலிருந்தேதான் வாசகன் கணிக்கவேண்டியிருக்கிறது. நிகழ்வுகளில் அதிவிஷேடத்தனங்கள் இல்லாதிருந்த நிலையில் களத்தில் நின்றிராதிருந்தும் நிகழ்வுகளை இணையம், பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் கவனித்திருக்கக்கூடிய ஒருவராலும் இந்தமாதிரி ஒரு கதையை மிகச் சுலபமாகப் புனைந்துவிட்டிருக்க முடியும். இந்நூல் ஒரு புனைவு என்ற தளத்திலிருந்தான நோக்குகைக்கு இத் தகவல்கள் ஒன்றுகூட அவசியமானவையில்லை. ஆனால் முகப் புத்தகத்தில் பெரிய ஆரவாரம் நடந்துகொண்டு இருந்தவகையில் இதுவும், இத்துடன் வேறுபல செய்திகளும் வேண்டியேயிருந்தன. தன்னைத் தானே முன்னிலைப்படுத்திக்கொண்டு படைப்பே பேசவெளிக்கிட்டது போன்ற நிலை படைப்பின்மீதான சந்தேகத்தை எவரொருவரிலும் கிளர்த்தமுடியும். அதுவே இந்தப் பிரதி விளைந்தது. இந்நிலையில் வெளியிலிருந்து வந்த தகவல்கள் தவிர்ந்து அவர்பற்றி வேறெதையும் அறிந்துகொள்ளும் சாத்தியமெதுவும் நூலில் கிடைக்காததும், தொலைக்காட்சி உரையாடலில் இல்லாததும் இதை எழுதுவதற்கான தாமதத்தை ஏற்படுத்தியது.

Last Updated on Saturday, 10 March 2012 21:40 Read more...
 

படைப்புக் கட்டுரை: 'சாத்தானின் விரல்கள்'

E-mail Print PDF

-1-

கடந்த இருபது வருடங்களாக, சிட்னியில்; வசிக்கும் என்னுடய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவருக்கு நோயற்ற திடகாத்திரமான உடம்பு! அவரின் முப்பத்திரண்டு பற்களும் ஒறிஜினல். சூத்தையோ, ஆட்டமோ அற்ற பால் வெள்ளைப் பற்கள் அவை.  பல்வைத்தியரான என்னுடய மகன், அப்பாச்சியின் பற்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, பல்வைத்திய மாநாட்டு விரிவுரைகளில் காட்டிப் பெருமைப்படுவான். 'நல்ல காலம்! ஆஸ்ரேலியர்களுக்கு அப்பாச்சியின் பற்கள் இல்லை. அப்பாச்சி போல, இங்கே பிறந்தவர்களும் இருந்தால், நான் கிளினிக்கை இழுத்து மூடவேண்டும்’ என பேத்தியாருக்கு 'கொமன்ற்’ அடிப்பான் பேரன். யாழ்ப்பாணத்து தண்ணியும், கைதடி முருங்கைக் காயும்தான், தனது உறுதியான பற்களுக்குக் காரணம் என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. முருங்கைக்காய் சமாசாரம்பற்றி பேச்சு வரும்போதெல்லாம் கைதடி முருங்கைக் காய்தான் திறமென அடம் பிடிப்பார்.  கைதடி, ஒரு கலட்டிப் பாங்கான பூமி. அங்கு  எது வளருதோ இல்லையோ, முருங்கை மரங்கள்  நன்கு வளர்ந்தன. எங்கள் கைதடி வளவிலும் அம்மா பலவகை முருங்கை மரங்களை நட்டிருந்தார். களிமுருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை, உலாந்தா முருங்கை என அம்மாவின் பாஷையில் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள்.

Last Updated on Thursday, 08 March 2012 01:02 Read more...
 

மீள்பிரசுரம்: ஹெப்ஸிபா ஜேசுதாசனின் படைப்புலகமும் கருத்துலகமும்

E-mail Print PDF

எழுத்தாளர் ஹெப்ஸிபா ஜேசுதாசன் 'புத்தம் வீடு' என்னும் தனது நாவலின் மூலம், உலகத் தமிழிலக்கியத்தில் தன் தடத்தினைப் பதித்த ஹெப்ஸிபா ஜேசுதாசன் பெப்ருவரி 9, 2012 அன்று இயற்கை எய்தினார். அவரது நினைவாக '.அ.ராமசாமி எழுத்துகள் என்னும் வலைப்பதிவில் வெளியான் கட்டுரையினை அவரது நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம்.['புத்தம் வீடு' என்னும் தனது நாவலின் மூலம், உலகத் தமிழிலக்கியத்தில் தன் தடத்தினைப் பதித்த ஹெப்ஸிபா ஜேசுதாசன் பெப்ருவரி 9, 2012 அன்று இயற்கை எய்தினார். அவரது நினைவாக 'அ.ராமசாமி எழுத்துகள்' என்னும் வலைப்பதிவில் வெளியான கட்டுரையினை  மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்-]  ஹெப்ஸிபா ஜேசுதாசன் அறுபதுகளின் மத்தியில் ‘புத்தம் வீடு’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தவர். தான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி, தமிழ் இலக்கியச் சூழலில் நிலவும் ஒரு மனோபாவத்திற்கு எதிராக இயங்கியும் வருபவர். தமிழ் இலக்கியச் சூழல் என்பது பொதுவாக அறுபதுகளுக்கு முந்தியும் பிந்தியும் இரண்டு முகங்களைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. குழுமன நிலையோடும், கட்சி அடிப்படையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சிறுபத்திரிகை உலகம் ஒரு முகம். இதில் ஒரு எழுத்தாளன் ஒரு குழு சார்ந்தவனாகவோ, அல்லது கட்சி சார்ந்தவனாகவோ அடையாளங்காணப்படுதல் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இன்னொரு முகம் வெகுஜனப் பத்திரிகைகளின் உலகமாகும். பெருமுதலாளிகளின் வணிக லாபத்திற்கு எழுத்துச் சரக்கினை உற்பத்தி செய்யும் பேனாத் தொழிலாளர்களைக் கொண்டது இம்முகம். இவ்விருமுகங்களில் ஏதாவது ஒன்றை அணிந்து கொள்ளாமல் இயங்கி வருபவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன். அதே வேளையில் சிறுபத்திரிகைக் குழுவினராலும், கட்சி சார்ந்த விமரிசகர்களாலும் புறமொதுக்கப்படாமல், தமிழ் நாவல் இலக்கியத்திற்கு முக்கியப்பங்களிப்பு செய்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர். இத்தகைய விதிவிலக்குகள் நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் வெகு சொற்பமே.

Last Updated on Saturday, 11 February 2012 00:46 Read more...
 

மீள்பிரசுரம்: சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்' - 2

E-mail Print PDF

2. வரலாற்றில் வண்ணம் சேர்த்தல்

- 2011ற்கான இந்திய மத்திய அரசின் 'சாகித்திய அகாடமி' விருதினைத் தமிழுக்காகப் பெற்ற நாவல் சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்'. இந் நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருக்கின்றார். அதன் முதற் பகுதி ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் மீள்பிரசுரமாகியுள்ளது. அதன் இரண்டாம் பகுதி இம்முறை வெளியாகின்றது. - பதிவுகள் -

சு.வெங்கடேசனின் 'காவல் கோட்டம்'சு.வெங்கடேசன்வரலாற்று நாவல் என்பது என்ன? முகங்களாக ஆக்கப்பட்ட வரலாறு என்று அதைப்பற்றி கூறலாம். வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று நாவலின் கலை. சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ ஏன் ஒரு தோல்வி என்றால், அந்நாவல் இந்தச் சவாலில் வெல்ல முடியவில்லை என்பதே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ஏன் வெற்றிகரமான நாவல் என்றால் மொத்த வரலாற்றையும் நாமே சென்று வாழ்ந்து விட்டு மீளக்கூடிய ஒரு பரப்பாக, என்றும் உணரும் வாழ்க்கையாக அது மாற்றிவிடுகிறது என்பதே. அதாவது செல்லப்பாவின் நாவலில் நாம் வரலாற்றையே காணமுடியும். அதேசமயம் தல்ஸ்தோயின் நாவலில் நாம் வாழ்க்கையையே வரலாறாகக் காண்கிறோம். இதையே வரலாற்றுக்கு வண்ணம் சேர்க்கும் பணி என்று கூறுகிறேன்.

வரலாற்றின் பக்கங்களில் நாம் காண்பது ஒரு செய்தியை. ‘கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட குமார கம்பணன் என்ற மன்னன் தன் பெரும் படையுடன் இஸ்லாமிய தளகர்த்தர்களால் ஆளப்பட்ட மதுரைமீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றினான்.’ ஆனால் அதை காவல் கோட்டம் ஒரு நிகழ்வாகச் சித்தரிக்கிறது. ‘வைகையின் நீர் மெலிந்து வடகரையோரம் நூலாக ஓடியது’ என்று ஆரம்பிக்கிறது சித்தரிப்பு. கழுத்தளவு நீரில் சிறுவர்கள் நீந்தி தாவி குதூகலிக்கிறார்கள். அவர்கள் அன்னையர் துணி துவைத்துக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு சிறுவன் “நாயீ நாயீ” என்று கத்தினான். அவன் குரல் கேட்டு தாய் மேற்கே பார்த்தாள்.

Last Updated on Tuesday, 31 January 2012 22:06 Read more...
 

புதிய கவிஞர் சுமதியின் 'தளிர்களின் சுமைகள்' கவிதை நூல்

E-mail Print PDF

ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன்.ஒரு புதிய கவிஞரின் முதலாவது கவிதை நூல் இது. இளைப்பாறிய ஆசிரியரான சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற நூல் இது. நூல் பற்றிய எனது கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பாக இன்றைய கவிதைகள் பற்றிய சில கருத்துக்களை பகிர்வது நூலிலுள்ள கவிதைகளை அணுக உதவலாம் என எண்ணுகிறேன்.
 
இலக்கியங்களின் அரசி கவிதை
 
கவிதையை இலக்கியங்களின் அரசி என்பார்கள். காலத்தால் முந்தைய இலக்கிய வடிவமும் அதுதான். நாட்டார் பாடல்கள், தாலாட்டுப் பாட்டு போன்ற வாய்மொழி இலக்கியங்கள் அதற்கு முந்தையவையாயினும் எழுதில் பதியப்பட்ட இலக்கியங்களில் அதுவே முந்தையது எனலாம். கம்பனும் இளங்கோவும் பாடி வைத்த அவற்றை இரசித்து மகிழாத இலக்கிய நெஞ்சங்கள் எதுவும் இருக்கமாட்டாது. எழுத்தறிவு இல்லாத காலங்களில் அவற்றைப் பாமர மக்கள் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. படித்தவர்களும் பழம் தமிழ் இலக்கியங்களை முழமையாக பொருள் உணர்ந்து இரசிப்பதற்கு பதவுரை, நயவுரை என நாட வேண்டியிருந்தது. ஆனால் பாரதியின் கவிதைகள்  தமிழ்க் கவிதை இலக்கிய படைப்புலகை முற்று முழுதாக மாற்றிப் போட்டன. இலகு தமிழில் எளிய நடையில் காதுக்கும் கருத்திற்கும் இனிய படைப்புலகின் முன்னோடி அவன்.

Last Updated on Tuesday, 31 January 2012 15:02 Read more...
 

முனைவர் மு.வரதராசன் நினைவாக .....

E-mail Print PDF

முனைவர் மு.வரதராசன்  அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களிவை.] மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட 'டாக்டர்' மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்[முனைவர் மு.வரதராசன்  அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து பெறப்பட்ட தகவல்களிவை.] மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட 'டாக்டர்' மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

Last Updated on Friday, 20 January 2012 23:21 Read more...
 

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

E-mail Print PDF

முனைவர் மு. பழனியப்பன்சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.

Last Updated on Tuesday, 10 January 2012 23:17 Read more...
 

எழுத்தாளர் எஸ்.ரா.வின் கவனத்திற்கு ...

E-mail Print PDF

எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கியம் பற்றிய அறிமுகப் பதிவுகளை நான் விரும்பி வாசிப்பது வழக்கம். மிகவும் அழகாக படைப்பாளிகளைப் பற்றியும், படைப்புகள் பற்றியும், தன் உளப்பாதிப்புகளின் அடிப்படையில் விபரிக்கும் அவரது நடை வாசகர்களின் நெஞ்சங்களை ஈர்த்துவிடும். எஸ்.ராமகிருஷ்ணனின் உலக இலக்கியம் பற்றிய அறிமுகப் பதிவுகளை நான் விரும்பி வாசிப்பது வழக்கம். மிகவும் அழகாக படைப்பாளிகளைப் பற்றியும், படைப்புகள் பற்றியும், தன் உளப்பாதிப்புகளின் அடிப்படையில் விபரிக்கும் அவரது நடை வாசகர்களின் நெஞ்சங்களை ஈர்த்துவிடும். அவரது படைப்புகளில் காணப்படும் இன்னுமொரு அம்சம் இருப்பின் நிலையாமை பற்றிய சோகம். பெரும்பாலான அவரது படைப்புகளில் புனைவுகளாகவிருக்கட்டும், அபுனைவுகளாகவிருக்கட்டும் எல்லாவற்றிலுமே இவ்விதமான சோகம் பரவிக்கிடக்கும். நகரங்கள், பயணங்கள் எல்லாமே அவருக்கு எப்பொழுதும் கடந்த கால நிகழ்வுகளை, உறவுகளை, துயரங்களையெல்லாம் தம்முள் அடக்கி வைத்திருக்கும் படிவுகளாகவேயிருக்கின்றன. இதனால் பெரும்பாலான அவரது புனைவுகளை வாசிக்கும்பொழுது வாசகரொருவரின் உள்ளமானது வாசிப்பின் முடிவில் நிலையாமை பற்றிய ஒருவித துயரத்தால் கனத்துப் போகின்றது.

Last Updated on Thursday, 12 January 2012 18:04 Read more...
 

2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்

E-mail Print PDF

புதியமாதவி, மும்பைஓரளவு அறிமுகமான எழுத்தாளருக்கு / அரசியல்  விமர்சகருக்கு தமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில் அனுபவமிக்க   ஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர் தேவை. பிரபலமான அரசியல்வாதிகளின் அரசியல் அறிவை அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் அறிந்துக் கொண்டதால் தன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை விட எவ்வகையிலும் தரம் குறைந்ததில்லை என்று திடமாக நம்புகிறார். மிகப் பிரபலமானவர்களின் பிரபலமான படைப்புகளை வாசித்த அனுபவங்கள் மூலம் அவர்கள் பிரபலமான சூத்திரத்தை அவரும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு , அறிந்தவர்கள் சொன்ன அண்மைக்கால சரித்திரங்கள் என்ற பின்புலத்தின் அடிப்படையில் அவருடைய 2012க்கான திட்டங்கள்:

Last Updated on Friday, 06 January 2012 00:08 Read more...
 

பண்டைத் தமிழரின் திருமணங்கள்!

E-mail Print PDF

-நுணாவிலூர் கா.விசயரத்தினம்- (இலண்டன்)உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் அன்பு, பரிவு, பாசம் காட்டுவதால் ஆண், பெண் பாலாரிடம் காதல் எழுந்து, அவர்கள் ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியை நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. மனித இனத்தைத் தவிர்ந்த, மற்றைய உயிரினங்கள் யாவும் திருமணம் என்று வெளிப்படையாக நடாத்தா விட்டாலும், அவையும் ஏதோ ஒரு வகையில் ஒரு மணம் புரிகின்றன. திருமணங்கள் நாட்டுக்கு நாடு – காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கின்றன. திருமணங்கள் அனைத்திலும் சிறந்தது காதல் திருமணமேயாகும். காதல் திருமணத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றன.உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் அன்பு, பரிவு, பாசம் காட்டுவதால் ஆண், பெண் பாலாரிடம் காதல் எழுந்து, அவர்கள் ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியை நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. மனித இனத்தைத் தவிர்ந்த, மற்றைய உயிரினங்கள் யாவும் திருமணம் என்று வெளிப்படையாக நடாத்தா விட்டாலும், அவையும் ஏதோ ஒரு வகையில் ஒரு மணம் புரிகின்றன. திருமணங்கள் நாட்டுக்கு நாடு – காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கின்றன. திருமணங்கள் அனைத்திலும் சிறந்தது காதல் திருமணமேயாகும். காதல் திருமணத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றன.

Last Updated on Monday, 02 January 2012 18:08 Read more...
 

Dawn.Com: Memon Kavi - Man of Pakistani origin makes waves as Tamil poet

E-mail Print PDF

Memon Kavi: Man of Pakistani origin makes waves as Tamil poetAbdul Karim Abdul Razak. —Dawn photoCOLOMBO: Abdul Karim Abdul Razak is an oddity. This Urdu-speaking Memon Muslim from what is now Pakistan, is a leading light in Tamil literary circles in Sri Lanka as a poet and writer! Tall and fair with a stubble and betel stained teeth, Razak is every inch a Memon, who no one would associate with Tamil poetry at first glance. But he has managed to break into a literary circle which has been the close preserve of ethnic Tamils and indigenous Sri Lankan Muslims whose mother tongue is Tamil. In fact, the 54-year-old Razak has the distinction of being the world`s first and the only Tamil litterateur from the Memon community. It was trade which took the Memons from Sindh to Gujarat, Mumbai, East Africa and Sri Lanka. Razak`s forefathers, who had migrated from Sindh to Junagadh in Gujarat, finally landed in Colombo to take advantage of the growing trade links between Ceylon and India during British rule. But while the Memons of Colombo were immersed in commerce, showing little inclination towards scholarship, literature or poetry, school student Razak was a different kettle of fish. He not only loved to read but had a passion for the Tamil language, with a burning ambition to be a revolutionary Tamil poet.Fittingly known as “Memon Kavi”, Razak has several volumes of poems in free verse to his credit, one of which, Naalayay Nokkiya Inril (Today Looking Towards Tomorrow), had won the Lankan Sahithya Award for the best Tamil poem in free verse in 1990.

Last Updated on Friday, 30 December 2011 21:30 Read more...
 

மீள்பிரசுரம்: காவல்கோட்டம்!

E-mail Print PDF

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் நாவலான 'காவல் கோட்ட'த்திற்கு 2011ற்கான 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்துள்ளது. இதனையொட்டி 'காவல் கோட்டம்' நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதிய நீண்ட விமர்சனத்தின் முதற்பகுதி ஒரு பதிவுக்காக நன்றியுடன் மீள்பிரசுரமாகிறது. - பதிவுகள்எழுத்தாளர் சு.வெங்கடேசன்[எழுத்தாளர் சு.வெங்கடேசனின் நாவலான 'காவல் கோட்ட'த்திற்கு 2011ற்கான 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்துள்ளது. இதனையொட்டி 'காவல் கோட்டம்' நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதிய நீண்ட விமர்சனத்தின் முதற்பகுதி ஒரு பதிவுக்காக நன்றியுடன் மீள்பிரசுரமாகிறது. - பதிவுகள்] வரலாற்றுப் புனைக்கதை என்றால் என்ன என்பதை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன். வரலாறு என்பது ஒரு மாபெரும் மொழிபு (Narration) அந்த மொழிபு தொடர்ச்சியாக பல்வேறு மனிதர்களால் பல்வேறு காலகட்டமாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. அத்தனை மனிதர்களையும் அவர்களுக்குப் பொதுவானதாக இருக்கக்கூடிய ஒரு தர்க்க அமைப்பு உள்ளது. அந்தத் தர்க்க அமைப்பின் விதிகளின்படியே வரலாற்று உண்மைகள் நிரூபிக்கப்படுகின்றன. வரலாற்று உண்மைகள் பொய்ப்பிக்கவும் படுகின்றன.

Last Updated on Friday, 23 December 2011 00:48 Read more...
 

மகாகவி பாரதி: சூழலை மீறிச் சிந்தித்த மாகவிஞன்!

E-mail Print PDF

மகாகவி பாரதி: சூழலை மீறிச் சிந்தித்த மாகவிஞன்!மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் டிசம்பர் 11. தனது குறுகிய காலத்து வாழ்வில் அவரது சாதனைகள் வியப்பைத் தருவன. தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிச் சிந்தித்த கவிஞன் அவன். 'தன்னுடை அறிவி னுக்குப் புலப்பட லின்றியே தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம் தீயபக்தி யியற்கையும் வாய்ந்தி'டாத கவிஞனவன்.  தன் அறிவு கொண்டு , தனக்குச் சரியென்று பட்டதை உரைத்திடத் தயங்காதவன் அவன். தான் வாழந்த சமுதாயத்தைப் பற்றி, அச்சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளைப் பற்றி, அந்நியர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த தன் பிறந்த மண் பற்றி, அதன் விடுதலை பற்றி, பெண் விடுதலை பற்றி, வர்க்க விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மானுட இருப்பைப் பற்றி, சக உயிர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பாடிய, எழுதிய படைப்பாளி அவன். பணத்தை மட்டுமே வைத்து எடைபோடும் இந்த மானுட சமுதாயம், அவன் வாழ்ந்த காலத்தில், வாழத் தெரியாதவனென்றெல்லாம் அவனை எள்ளி நகையாடியது. ஆனால் இன்று .. அதே மானுட சமுதாயம் அவனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. மாகவி பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு 'பதிவுகள்' அவனது கவிதைகள் சிலவற்றை மீள்பிரசுரம் செய்கிறது.

Last Updated on Monday, 12 December 2011 19:11 Read more...
 

கைலாசபதி: மாற்று செல்நெறிக்கான பிரயோகச் சிந்தனை முறை

E-mail Print PDF

பேராசிரியர் கைலாசபதிபேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11.  எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.

Last Updated on Wednesday, 07 December 2011 23:37 Read more...
 

'டொமினிக் ஜீவா' என்றோர் இயக்கம்!

E-mail Print PDF

டொமினிக் ஜீவாஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இன்று ,85 வயதினைக் கடந்த நிலையிலும், உற்சாகம் குறையாமல் இலக்கியப் பணியாற்றும் அவரது விடா முயற்சியும், சுறுசுறுப்பும் அனைவரையும் வியப்படைய வைப்பன. தீண்டாமைக் கொடுமைக்கெதிராக அடங்கி, ஒடுங்கிச் சோர்ந்து விடாமல், அதன் நச்சுக்கரங்களின் தீண்டுதல்களைக் கண்டு அஞ்சி விடாமல், அத்தீண்டுதல்களையெல்லாம் சவால்களாக ஏற்றுக்கொண்டு, இத்தனை வருடங்களாக 'மல்லிகை' என்னும் மாத இதழினைக் கொண்டு வரும் அவரது ஆற்றல் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடும். 'மல்லிகை'யையும் ஜீவாவையும் பிரிக்க முடியாது. 'மல்லிகை ஜீவா' என்று அழைக்கப்படுவது அவரது இலக்கியப் பங்களிப்பினை நன்கு புலப்படுத்தும். 'மல்லிகை' சஞ்சிகை பல இளம் எழுத்தாளர்களுக்குக் கை கொடுத்திருக்கின்றது; இன்றும் அவ்விதமே ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களை, ஆர்வலர்களை, புரவலர்களை அட்டைப்பட நாயகர்களாக்கிப் பெருமைப்பட்டிருக்கின்றது.

Last Updated on Wednesday, 07 December 2011 23:38 Read more...
 

அகஸ்தியர்-எனது பதிவுகள!

E-mail Print PDF

எஸ். அகஸ்தியர்காலம் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது. வர்க்கம் சார்ந்து, சாதிய முறைமைகளை எதிர்த்தபடி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர்தான் அகஸ்தியர். 29/08/1926இல்  சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் நேசிக்கப்பட்ட அதே வேளை சிலரால் இருட்டடிப்புக்குள்ளாக்கவும் பட்டதனால் இவரின் எழுத்துக்களை கண்டும் காணாது விட்டதும் பலரின் பார்வைக்குத் தெரியாமல் போய்விட்டார்; பலரிடம் இவர் படைப்புகள் சென்று சேர முடியாது போனது. ஆனாலும் பார்வைக்குக் கிடைத்தவைகள் காத்திரமானதான  தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

Last Updated on Tuesday, 06 December 2011 20:34 Read more...
 

எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் நினைவுதினக் கட்டுரை: மனித நேயத்தை நேசித்த இலக்கியவாதி!!

E-mail Print PDF

எழுத்தாளர் எஸ். அகஸ்தியர்ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 16 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.  (29. 08.1926 – 08.12.1995)  பாரீஸ் தமிழர் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் வளர்ச்சிப் பணியில் நாம் அதிக அக்கறை கொண்டிருந்த காலங்களில், எமது கல்வி நிறுவனத்தோடு அதிக அக்கறை கொண்டவராக அறிமுகமானவரே திரு.எஸ்.அகஸ்தியர் அவர்கள். ஆரம்பகால ஆண்டுவிழா, மலர் வெளியீட்டுகளிலும் ஆலோசனைகளையும்,  உதவிகளையும் செய்து எமது வளர்ச்சிப் பாதையில் துணை நின்றார். மனித நேயத்தை நேசித்து அதற்காக வாழ்ந்து மறைந்துவிட்ட ஒரு இலக்கியவாதியின்  காலத்தில் அவரது புலம்பெயர் வாழ்வில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம்  என்பதை இங்கு பெருமையோடு நினைவுகூர்ந்து மதிப்பளிக்கு முகமாகவே அவரைப்பற்றிய நிகழ்வுகளைத் தருகின்றேன்.

Last Updated on Tuesday, 06 December 2011 20:22 Read more...
 

கலாநிதி பாரதி ஹரிசங்கருடனான சந்திப்பும் , அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் சிலவும்

E-mail Print PDF

முனைவர் பாரதி ஹரிசங்கர் [முனைவர் பாரதி ஹரிசங்கர் 2007இல் கனடா வந்திருந்தபொழுது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றி 'பதிவுகள்' இதழில் வெளியான கட்டுரையும், 'பதிவுகளி'ல் வெளியான அவரது படைப்புகள் சிலவும் ஒரு பதிவுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. -பதிவுகள் ]அண்மையில் தமிழகத்திலிருந்து கலாநிதி பாரதி ஹரிசங்கர் கனடாவுக்குக் 'கனடியக் கற்கைநெறி'க்கான 'சாஸ்திரி அறக்கட்டளைப்' புலமைப் பரிசில் பெற்று விஜயம் செய்திருந்ததை ஏற்கனவே பதிவுகள் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். அதன் பொருட்டுக் கனடாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்றிருந்த பாரதி ஹரிசங்கர் தன் பயணத்தின் இறுதி இலக்காகத் 'டொராண்டோ'வுக்கும் வந்திருந்தார். 'டொராண்டோப் பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த அவரை எழுத்தாளர்கள் தேவகாந்தன், டானியல் ஜீவா மற்றும் வ.ந.கிரிதரன் ஆகியோர் சந்தித்தனர். அருகிலிருந்த உணவகமொன்றில் சந்தித்துச் சிறிது நேரம் கலந்துரையாடினர். பாரதி ஹரிசங்கரின் நிகழ்ச்சி நிரல் மற்றும் குறுகிய நேர அறிவிப்பு காரணமாக அவருடனொரு விரிவான கலந்துரையாடலினை ஏற்பாடு செய்ய முடியாது போய்விட்டது. இருந்தாலும் மேற்படி சந்திப்பானது குறுகியதாக அமைந்திருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

Last Updated on Tuesday, 06 December 2011 22:09 Read more...
 

ஈழத்துத் தமிழ் இலக்கியம்: ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்த இளங்கீரன்!

E-mail Print PDF

எழுத்தாளர் இளங்கீரன்ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு எழுத்தாளர்கள் பெரும் பங்களிப்பை ஆற்றியதன் மூலம் ஈழத்து இலக்கியம் தனித்துவம் பெற்றதாக உயர்ந்து நிற்கின்றது. பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு விசாலமானது. அத்தகைய இலக்கியப் பரப்பில் தடம் பதித்த இளங்கீரன் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் எழுச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஒருவராக மதிக்கப் படுகின்றார். சமகால ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும் எவரும் அவரை விட்டுவிட்டு எழுத முடியாத அளவுக்கு அவரது பங்களிப்பின் முக்கியம் பரவலாக உணரப் பட்டுள்ளது. அவரது படைப்பாற்றலின் வளர்ச்சி அவரது சமூக உணர்வின் வளர்ச்சியை ஒட்டியே நிகழ்ந்துள்ளமையே இதற்கான காரணமாகும். 1950 களிலிருந்து 1970கள்வரை படைப்பிலக்கியத் துறையில் இளங்கீரன் மும்முரமாகச் செயற்பட்டார். எழுத்தையே வாழ்வாகக் கொண்ட ஒருவராக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். இக்கால கட்டத்தில் அவரது எழுத்தும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் ஈழத்தின் சமூக உணர்வின் வளர்ச்சியையொட்டிய விருத்தியினைக் காட்டி நிற்கின்றன. இளங்கீரன் பல்வகைப் பரிமாணங்களையுடைய ஒருவராக அறியப் படுகின்றார்.

Last Updated on Sunday, 27 November 2011 20:34 Read more...
 

ஈழத்துத் தமிழ் இலக்கியம்: செ.யோகராசாவின் படைப்புத்துறைப் பங்களிப்புகளும் பயன்பாடுகளும்

E-mail Print PDF

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழியியல்துறை பீடத்தின் தலைவராக இருந்து செயற்படும் கலாநிதி செ. யோகராசா நவீன கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழியியல்துறை பீடத்தின் தலைவராக இருந்து செயற்படும் கலாநிதி செ. யோகராசா நவீன இலக்கியத்தின் பல்துறைப் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து தமது கருத்துக்களை முன்வைப்பதில் முன் நிற்பவராக முகிழ்ந்து நிற்கின்றார். கடந்த மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக நவீன இலக்கியம் சம்பந்தமான பல்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். சிறுவர் இலக்கியம் பற்றிய இவரது சிந்தனையை முதலில் நோக்குவோம். ‘ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்! ‘ஈழத்து சிறுவர் பாடல் களஞ்சியம்’ என்ற இவரது நூல்கள் இரண்டையும், ஆழ்ந்த அகன்ற அறிவிற்காய் ‘குமரன் புத்தக இல்லம் ‘வெளிக்கொணர்ந்துள்ளது. நவீன இலக்கியத்துறைகள் வளர்ந்துள்ள ஈழத்துத் தமிழ்ச் சூழலில் சிறுவர் இலக்கியத்துறையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதென்பதனை ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள் நன்கறிந்திருப்பர். மேலை நாடுகளில் இத்துறைசார் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியதாய் உள்ளமை மனங்கொள்ளப்பட வேண்டியது. இந்நிலையில் சிறுவர் இலக்கியத்துறையில் நாம் எங்கே நிற்கின்றோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொள்வது அவசியமானது.

Last Updated on Sunday, 27 November 2011 20:32 Read more...
 

மீள்பிரசுரம்: தஸ்தாயெவ்ஸ்கியின் 'அசடன்'

E-mail Print PDF

தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர். இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன். தஸ்தாயெவ்ஸ்கியின் Crime And Punishment, The Idiot, The Possessed (or Devils), The Brothers Karamazov. ஆகிய  நான்கு நாவல்களும் தனித்துவமானவை, அவற்றை ஒரு சேர ஒருமுறை வாசித்திருக்கிறேன், நான்கும் ஒரு பெரிய இதிகாசத்தின் தனிப்பகுதிகள் போலவே இருக்கின்றன. நான்கின் முக்கியக் கதாபாத்திரங்களும் தீவிரமான மனப்போராட்டமும் நெருக்கடியும் கொண்டவர்கள். தனிமை தான் அவர்களது முக்கியப் பிரச்சனை, மேகத்தில் மறைந்துள்ள சூரியனைப் போல அவர்கள் இருப்பு பிறர் கண்ணில் படாதது, நிலவறை உலகம் தான் அவர்களுக்குப் பிடித்தமானது, பகல் வெளிச்சத்தை அவர்கள் விரும்புவதில்லை, சக மனிதர்களோடு இயல்பாகப் பேசிப்பழக முடியாமல்  ஒதுங்கியேவாழ்கிறார்கள். அதேவேளை உலகின் சகல குற்றங்களுக்கும் தாங்கள் ஒரு விதத்தில் பொறுப்பாளர்களாக கருதுகிறார்கள். அதன் பொருட்டு இடையுறாத மனவருத்தம் கொள்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து வாசிக்க வாசிக்க ஈரக்களிமண்ணைப் போல பிசுக்கென நம் உடலோடு ஒட்டிக் கொள்ளக்கூடியது.

Last Updated on Tuesday, 22 November 2011 04:59 Read more...
 

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருது

E-mail Print PDF

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் பிரன்ட்ஷிப் விருது சென்னை, நவ. - 9 - எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் பிரன்ட்ஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பிரபல திரைப்பட இயக்குனர் மிர்னாள்சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் நிகோலாய் ஜெயகாந்தனிடம் சென்னையில் வழங்கினார். இந்த நட்புறவு விருது வழங்கும் விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், ரஷ்ய அதிபரின் தூதர் குழுவினர் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தோ -ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் உள்ளார். இவர் தனது எழுத்துப் பணியோடு இந்திய, ரஷ்ய நாடுகளிடையே உறவை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது நாவலை தழுவி எடுக்கப்பட்ட உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் ரஷ்ய அதிபர் விருதை பெற்றது. இந்தோ, ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தை அவர் கடந்த 2006 ல் தொடங்கினார்.

http://www.thinaboomi.com/2011/11/08/7858.html

 

தொல்காப்பியரின் காலம் கி.மு.711

E-mail Print PDF

தொல்காப்பியர்

-நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன) -தொல்காப்பியம் என்னும் நூலைத் தொல்காப்பியனார் என்ற பெரும் புகழ் பெற்ற புலவன் பாடியருளினார்.  தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்  தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஒரு பெரிய இலக்கண, இலக்கிய உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது.  இந்நூலை யாத்த  தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும்,  இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவராவார்.  இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்' என்று நக்கீரனார் கூறியுள்ளார். மேலும், 'தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்' என்பது டாக்டர் மு.வரதராசனாரின் கூற்றாகும்.

Last Updated on Saturday, 29 October 2011 19:59 Read more...
 

மீள்பிரசுரம் : பாரதி, மகாகவி: வரலாறு

E-mail Print PDF

கோவை ஞானிமகாகவி பாரதியார்[மீண்டும் இணையத்தில் 'பாரதி மகாகவியா' என்பது பற்றிய விவாதத்தை பிரபல தமிழ் எழுத்தாளரொருவர் தனது வலைப்பதிவில் ஆரம்பித்து வைத்துள்ளார். 'பாரதி பற்றிய இத்தகைய விவாதம் தமிழ் இலக்கிய உலகிற்கொன்றும் அந்நியமானதல்ல. 1936இலிருந்து இவ்விதமான விவாதங்கள் தமிழ் இலக்கிய உலகில் நடைபெற்று வந்திருக்கின்றன; இனியும் வரும்.. கோவை ஞானியின் 'பாரதி, மகாகவி: வரலாறு' என்னுமிந்தக் கட்டுரை இத்தகைய விவாதங்களுக்கெல்லாம் நல்லதொரு பதிலாக அமைந்திருக்கின்றது. காவ்யா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட 'ஞானி கட்டுரைகள் - III - தமிழ்க் கவிதை' என்னும் நூலில் வெளியான இக்கட்டுரையினை இச்சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்துவது பொருத்தமானதென்பதால் 'பதிவுகள்' அதனை மீள்பிரசுரம் செய்கிறது. ]   1936 வாக்கில் தமிழகத்தில் பாரதியார் மகாகவி இல்லையா என்ற விவாதம் எழுந்தது. காரைக்குடியில் வ.ரா. பேசும்போது பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு சேக்ஸ்பியரோ செல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினாராம். பாரதியாரை மகாகவி என்று அடைமொழி தந்து நூல் எழுதியதோடு, தன் காலம் முழுவதும் பாரதி புகழ் பாடுவதையே தன் கடமையாக வ.ரா. கொண்டிருந்தார். வ.ரா.வின் கருத்து கடுமையான சர்ச்சைக்குள்ளாகியது. சுதேசமித்திரன், ஆனந்தவிகடன், தினமணி ஆகிய இதழ்களில் 'நெல்லை நேசன்' என்ற புனைபெயரில் பி.ஸ்ரீ.ஆச்சார்யா, கல்கி ஆகியோர் தமிழ்க் கவிதையில் பாரதியின் இடத்தைக் கேள்விக்குரியதாக்கி எழுதினார்கள். பாரதியைத் தேசியக்கவி என ஒப்புக் கொள்ளலாம் என்றும், வால்மீகி, காளிதாசர், சேக்ஸ்பியர், செல்லி, முதலியவர்களுக்கு நிகராகச் சொல்லமுடியாது என்றும் எழுதினார்கள்.கு.ப.ராவும் சிட்டியும் விரிவாக மறுப்பு எழுதினார்கள். ஓமர் முதலிய பெரும்கவிஞர்கள்பலரோடு ஒப்பிட்டு, அவர்களுக்கு நிகராக பாரதியை மகாகவி என்றார்கள்.

Last Updated on Thursday, 20 October 2011 22:48 Read more...
 

மீள்பிரசுரம்: மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

E-mail Print PDF

தேசியக் கவி சுப்ரமணிய பாரதி

பாரதியார்'பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி காட்டிய புலவன். தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்த ஓர் உயர்கவி. எண்ணத்தாலும், எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர். பல்துறை அறிஞர், தொலை நோக்கினர், அறிவியல் பார்வை நல்கிய கவிஞானி. மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை அவர் படையல். புதிய தமிழகத்தை உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். சுதந்திரப் போரில் பாரதியின் பாடல் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத் தீயாய், சுதந்திரக் கனலாய்ப், புனலாய்த் தமிழ் நாட்டை வீறுகொள்ளச் செய்தது'. - ச. மெய்யப்பன், எம்.ஏ. [அண்ணாமலைப் பல்கலைக் கழகம்] -

Last Updated on Wednesday, 26 October 2011 06:32 Read more...
 

மீள்பிரசுரம்: ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள்

E-mail Print PDF

ஆய்வின் முன்னுரை
மகாகவி பாரதியார்மகாகவி தாகூர்நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான்.  எளிய சந்தம்.  எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Last Updated on Wednesday, 19 October 2011 18:57 Read more...
 

பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்...

E-mail Print PDF

கே.எஸ்.சிவகுமாரன்ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நேர்மையான வழியில் உழைப்பவர்களை விட குறுக்கு வழியில் செயல்படுபவர்களே அதிகம். இவர்களுக்கு மத்தியில் 22 நூல்களை வெளியிட்டுள்ள கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எவ்வித படோடோபமுமின்றி இயல்பாக வாழ்ந்து வருதலே அவரது சிறப்பாகும். இலங்கையின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர்களுள் ஒருவராக இருந்து வரும் சிவகுமாரன் பிரபலமான இலக்கியவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரின் நூல்களை திறனாய்வு செய்து அவற்றை நூல்களாகவும் தொகுத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல்மிக்க இவர், பத்தி எழுத்து எனும் பதத்திற்கு முதன் முதலில் உயிர்கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க கே.எஸ்.சிவகுமாரனுக்கு இலக்கிய உலகில் உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பது பல இலக்கியவாதிகளின் ஆதங்கமாக இருந்து வருகின்றது.

Last Updated on Wednesday, 19 October 2011 17:29 Read more...
 

'மக்கள் எழுத்தாளர்' விந்தன் நினைவாக ......

E-mail Print PDF

எழுத்தாளர் விந்தன்[எழுத்தாளர் விந்தன் (இயற்பெயர் : கோவிந்தன்) தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாதவர். அவரது 'பாலும் பாவையும்' நாவல் வெளிவந்த காலத்தில் முக்கிய கவனத்தினைப் பெற்றது. அவரது  'பாலும் பாவையும்' நாவலினை நான் முதன் முதலில் வாசித்தது என் மாணவப் பருவத்தில். அப்பொழுதுதான் 'ராணிமுத்து' என்னும் பெயரில் ஆதித்தனாரின் தினத்தந்தி நிறுவனம் மாதமொரு நாவலென நாடறிந்த எழுத்தாளர்களின் நாவல்களை வெளியிட்டு வந்தது. அவ்விதம் வெளியிட்டு வந்த முதல் பத்து அல்லது பன்னிரண்டு நாவல்களை அப்பா வாங்கியிருந்தார் - தமிழகத்திலிருந்து வெளிவரும் வார, மாத சஞ்சிகைகளான 'விகடன்', 'கல்கி', 'கலைமகள்', 'அம்புலிமாமா', 'தினமணிக்கதிர்', 'மஞ்சரி', 'ராணி' ஆகியவற்றுடன் 'தினமணி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' போன்ற பத்திரிகைகளையும் அவர் வாங்கிக் கொண்டிருந்தார். 'பொன்மலர்' , 'பால்கன்' போன்ற காமிக்ஸ் சஞ்சிகைகள் அச்சமயத்தில் மாதாமாதம் மிகவும் அழகாக வெளிவந்து கொண்டிருந்தன. அத்துடன் 'இந்திரஜால் காமிக்ஸ்' வேறு.  அவற்றையும் எங்களுக்காக அவர் வாங்கித் தந்தார். இவற்றையெல்லாம் நாட்டுச் சூழல் பின்னர் அழித்துவிட்டது. இது தவிர அவர் ஆங்கில நூல்களைக் கொண்ட சிறியதொரு நூலகத்தையும் வைத்திருந்தார். அவற்றில் 'கிரகாம் கிறீன்', 'பி.ஜி.வூட் ஹவுஸ்', 'ருட்யார்ட் கிப்ளிங்', 'டால்ஸ்டாய்', 'இர்விங் ஸ்டோன்', 'தோமஸ் ஹார்டி', 'சேக்ஸ்பியர்', டி.எச்.லாரன்ஸ், 'ஏர்னஸ்ட் ஹெமிங்வே', ஆர்.கே.நாராயணன் .... எனப் பலரின் நாவல்களும் அடங்கியிருந்தன. ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்த அவர் நன்கு எழுதும் ஆற்றல் மிக்கவராகவிருந்தும் வாசிப்புடன் நின்று விட்டார். அன்றைய காலகட்டத்தில் விகடன், தினமணிக்கதிரில் வெளிவந்த ஜெயகாந்தனின் எழுத்துகளை மிகவும் விரும்பிப் படிப்பார்.  - இவ்விதமாக ஆரம்பத்தில் வெளிவந்த 'ராணிமுத்து' நாவல்களிலொன்றுதான் விந்தனின் 'பாலும் பாவையும்'. அப்பொழுதுதான் முதன் முறையாக விந்தனை நான் அறிந்து கொண்டது. அன்றைய காலகட்டத்தில் ஆரம்பத்தில் வெளியான ராணிமுத்து நாவல்களில் சில இன்னும் ஞாபகத்திலுள்ளன: அறிஞர் அண்ணாவின் 'பார்வது பி.ஏ', ஜெயகாந்தனின் 'காவல் தெய்வம்', அநுத்தமாவின் 'கேட்டவரம்', ஜெகசிற்பியனின் 'நந்திவர்மன் காதலி', மாயாவியின் 'வாடாமலர்', கலைஞரின் 'வெள்ளிக்கிழமை', அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா', சி.ஏ.பாலனின் 'தூக்குமர நிழலில்', சாண்டில்யனின் 'ஜீவபூமி', பானுமதி ராமகிருஷ்ணாவின் 'மாமியார் கதைகள்' ...  இதனைத் தொடர்ந்து விந்தனை நான் அறிந்து கொண்டது தினமணிக்கதிர் வாயிலாக. தினமணிக் கதிரில் அவர் 'பாகவதர் கதை', 'கிட்டப்பாவின் கதை' மற்றும் 'விக்கிரமாதித்தன் கதைகள்' ஆகிவற்றைத் தொடராக எழுதியிருந்தார். தமிழ் சினிமாத் துறையிலும் கால்பதித்த எழுத்தாள முன்னோடிகளில் விந்தனும் முக்கியமான ஒருவர். விந்தனின் பிறந்த தினம் செப்டெம்பர் 22. இச்சமயத்தில் அவரை 'பதிவுகள்' நினைவு கொள்கிறது. அதன் விளைவாக அவ்வப்போது இணையத்தில் வெளியான எழுத்தாளர் விந்தன் பற்றிய கட்டுரைகள் சிலவற்றை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறது. -  ஆசிரியர், 'பதிவுகள்']

Last Updated on Friday, 23 September 2011 15:32 Read more...
 

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்

E-mail Print PDF

முனைவர் மு. பழனியப்பன் ,இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைகவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது.  தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் கோ. சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், பேராசிரியர் அ. சிதம்பரநாதன், திரு. பி.ஸ்ரீ ஆச்சாரியா, திரு நீ. கந்தசாமிப்பிள்ளை, பால்நாடார் திரு மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, திரு. பு.ரா. புருஷோத்தமநாயுடு முதலியோர் பங்காற்றியுள்ளனர். இதன் முலமே அந்த உரையின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள இயலும்.  இந்த உரை முல பாடலை முதலில் பதச்சேர்க்கையாக முல நூல் வடிவிலேயே தருகின்றது. இதற்கு அடுத்ததாக பாடலைப் பதம் பிரித்து அனைவரும் படிக்கும் வகையில் தருகின்றது. இப்பாடலுக்கு பாடற் பொருள் தொடர்ந்து தரப்படுகிறது. இவற்றுடன் வினைமுடிபுகள், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை, ஒப்புமைப் பகுதி, விசேடக் குறிப்பு, இலக்கணக் குறிப்புகள் முதலாயின தரப்பெறுகின்றன.

Last Updated on Wednesday, 21 September 2011 18:48 Read more...
 

"பாரதத்தின் சொத்து’’

E-mail Print PDF

நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார்.நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்யப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்ப் பண்பாட்டுடன், கட்சியை வளர்த்த பெருமை ஜீவாவையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய ஜீவா என்ற ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள்   21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை-உமையம்மாள் ஆகியோரின்  மகனாகப்  பிறந்தார். அவருக்கு பெற்றோர் ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து எனும் பெயரை இட்டனர்.

Last Updated on Friday, 16 September 2011 20:20 Read more...
 

புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு

E-mail Print PDF

- எம்.கே.முருகானந்தன் -புகலிட இலக்கியம் என்றால் என்ன? புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? இவற்றிற்கிடையே வேறுபாடு இருக்கும் என்பதை பலர் சிந்திப்பதே இல்லை. அவற்றிடையே மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. அரசியல் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் படைப்பதே 'புகலிட இலக்கியம்' (Diasporic literature) எனலாம். தொழில் நிமித்தமான ஈழத்தமிழர் புலப்பெயர்வு செய்தோர் எழுதுவது புலம்பெயர் இலக்கியம் (Expatriate literature) இந்த வேறுபாட்டை முதலில் தெளிபடுத்திய பின் "புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு" என்ற தனது நினைவுப் பேருரையின் முக்கிய பகுதிக்குள் நுழைகிறார் செ.யோகராசா.பருத்தித்துறை வேலாயும் மகாவித்தியாலய ஸ்தாபகரான அமரர் உயர்திரு.வை. வேலாயுதம்பிள்ளை அவர்களின் முன்னோடிப் பணியை கெளரவப்படுத்தப்படும்  நிகழ்வான 'நிறுவனர் தின நினைவுப் பேருரை' சென்ற 07.08.2011 ஞாயிறு மாலை கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த உரை சிறு கைநூல் நூலாக அன்று வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

Last Updated on Sunday, 28 August 2011 21:35 Read more...
 

கலித்தொகை காட்டும் ஏறுதழுவல்

E-mail Print PDF

- இரா. முத்துப்பாண்டி - முனைவா; பட்ட ஆய்வாளர், தமிழவேள் உமாமகேசுவரனார்; கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்.முல்லை நிலமக்களின் வீரவிளையாட்டாக விளங்குவது ஏறு தழுவலாகும். இவ்விளையாட்டு இன்றும் விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதற்கு மதுரை அலங்காநல்லூர் குறிப்பிடதக்க ஊராகும். இவ்வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும், காளை விரட்டு என்றும், வடமாடு என்றும், மஞ்சுவிரட்டு என்றும், எருதுகட்டு என்றும் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.

Last Updated on Sunday, 28 August 2011 21:02 Read more...
 

வீரகேசரி பிரசுர நாவல்கள் -ஒரு பொது மதிப்பீடு!

E-mail Print PDF

நூல்: வீரகேசரி பிரசுரங்கள்கலாநிதி நா. சுப்பிரமணியன்தமிழ் நாவல் நூற்றாண்டு நிறைவையொட்டி இழத்துத் தமிழ் நாவல்களின் நூல்விபரப் பட்டியலொன்று தயாரிக்கும் முயற்சியிலீடுபட்டிருந்த வேளையில், தகவல் தோட்ட எல்லைக்குட்பட்ட நாவல்களில், ‘ஒரு பிரசுரக்கள’த்தின் வெளியீடுகள் என்ற வகையில் வீரகேசரி பிரசுரங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த சுமார் தொண்ணூறாண்டுக் காலப்பகுதியில் (1885-1976) ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத்தொகையில் இருபது வீதத்துக்கு மேற்பட்டவை வீரகேசரி பிரசுரங்கள். கடந்த ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல் வடிவில் வெளிவந்த எண்பத்தைந்து நாவல்களில் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ‘ஜனமித்திரன்’ பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை, அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இலக்கியத்தரம் என்பது புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல வெனினும் வெளியீட்டுச் சாதனத்தின் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் மதிப்பிடக் கூடியதுமல்ல. இவ்வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே, கடந்த சுமார் ஐந்து ஆண்டுக் காலத்தின் வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்துள்ள காரணிகளுள் ஒன்றாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை இயங்கிவந்துள்ளதென்பது மிகையுரையல்ல. சமகால இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்ற வகையில் வீரகேசரி பிரசுர நாவல்களைப் பொதுமதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

Last Updated on Friday, 19 August 2011 01:20 Read more...
 

கலித்தொகையில் அறக் கருத்துக்கள்

E-mail Print PDF

- இரா. முத்துப்பாண்டி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழவேள்; உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் மக்களின் அனுபவத்தால், நெறிமுறையால் விளைந்த கருத்துக்களின் தொகுதி அறமாகும். அறக்கருத்துக்கள் மக்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து வாழ்வை செம்மையுறச் செய்கின்றன. அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெரு வழக்காக வழங்கப்பட்டு வருகின்றன. தனி மனிதனுடைய உரிமைகளும், கடமைகளும், சமூகப் பிணைப்பும் குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டுப் படுத்தப்பட்டுள்ளன. வீடாக இருந்தாலும் நாடாக இருந்தாலும் அறத்தின்படியே விளங்க வேண்டும். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை சிலப்பதிகார பாடல் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

Last Updated on Tuesday, 09 August 2011 19:17 Read more...
 

What Atwood can teach Ford about Toronto

E-mail Print PDF

Doug Ford, the chattier contingent of the Brothers Grim now running Toronto, is itching to close local Toronto libraries. But he has retreated uneasily from his bluff statement about library-defender Margaret Atwood that “If she walked by me, I wouldn’t have a clue who she is.” Now he says, confusedly, “Everyone knows who Margaret Atwood is but if she were to come up to 98 per cent of the people, they wouldn’t know who she was.” Rob and Doug, this is untrue. I have seen Atwood walk down a Toronto street, arm in arm with her daughter. You should have seen the reaction of Torontonians. A gape, a gasp, an elbow in the ribs, a pantomime “Did you see her? It’s Margaret Atwood!” Then they smile proudly, as if they have been given the key to the city of Toronto, which they sort of have been. But that’s not my quarrel with Mayor Ford’s smarter — which is not saying much — sibling. It’s what followed that rankled.Doug Ford, the chattier contingent of the Brothers Grim now running Toronto, is itching to close local Toronto libraries. But he has retreated uneasily from his bluff statement about library-defender Margaret Atwood that “If she walked by me, I wouldn’t have a clue who she is.” Now he says, confusedly, “Everyone knows who Margaret Atwood is but if she were to come up to 98 per cent of the people, they wouldn’t know who she was.” Rob and Doug, this is untrue. I have seen Atwood walk down a Toronto street, arm in arm with her daughter. You should have seen the reaction of Torontonians. A gape, a gasp, an elbow in the ribs, a pantomime “Did you see her? It’s Margaret Atwood!” Then they smile proudly, as if they have been given the key to the city of Toronto, which they sort of have been. But that’s not my quarrel with Mayor Ford’s smarter — which is not saying much — sibling. It’s what followed that rankled.

Last Updated on Wednesday, 03 August 2011 23:41 Read more...
 

“படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்கு ஆன்ம பலம் வேண்டும”; நீர்கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் பயணித்த படைப்பாளியின் வாழ்வனுபவம். மணிவிழாக்காணும் முருகபூபதியுடன் நேர்காணல்

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதிஅவுஸ்திரேலியா முருகபூபதி இலங்கையில், நீர்கொழும்பில் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி பிறந்தவர். இன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 ஆம் ஆண்டு விவேகானந்த வித்தியாலயம் என்ற பெயரில் தோன்றியபோது அங்கு முதலாவது மாணவனாகச்சேர்ந்து 1963 இல் புலமைப்பரிசில் பெறறு; யாழ். ஸ்ரான்லி கல்லூரியிலும் பின்னர் நீர்கொழும்பு அல்ஹிலால ; மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றவர். 1972 இல் படைப்பிலக்கியவாதியாகவும் பத்திரிகையாளராகவும் அறிமுகமானவர்.  சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், கடித இலக்கியம், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் இதுவரையில் 18 நூல்களை எழுதியிருப்பவர்.

Last Updated on Tuesday, 02 August 2011 22:29 Read more...
 

'பூ வனம்' வலைப்பதிவு: தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜெயகாந்தன்

E-mail Print PDF

ஜெயகாந்தன்நெருங்கிய 'மடத்து' நண்பர்களுக்கு ஜே.கே. ஊருக்கு, உலகத்துக்கெல்லாம் ஜெயகாந்தன். பெற்றோர் வைத்த பெயரும் அதுவே. இந்த அடலேறு பிறந்த இடம்: மஞ்சக்குப்பம்; கடலூரின் ஒரு பகுதி. ஜெயகாந்தனின் எழுத்துப் பற்றி, தனக்கு வெளியேயான புறவுலகை அவர் பார்த்த பார்வையான அவரின் எழுத்தின் சாதனை பற்றி நிறையப் பேர் நிறைய எழுதிவிட்டார்கள். அவர்களில் வாசகர்கள், விமர்சகர்கள், எழுத்தாளர்கள் என்று நிறையப் பேர். பொதுவாக எழுத்தாளர்கள் இன்னொரு எழுத்தாளரைப் பற்றி விமர்சன ரீதியில் எழுத நிறைய யோசிப்பார்கள். இது பொதுவாக ஒரு எழுத்தாளர் குணம். இவர் விஷயத்தில் அவர்களிடையே அந்த யோசிப்பும் இல்லாது போயிற்று நல்லதாயிற்று. அவரது இளமைப் பருவத்தில், விந்தன் நடத்திய 'மனிதன்', இஸ்மத் பாஷாவின் 'சமரன்', மாஜினியின் 'தமிழன்', தோழர் விஜயபாஸ்கரனின் 'சரஸ்வதி', மற்றும் 'தாமரை' ஆகிய இதழ்களுக்கு தமது எழுத்துக்கள் பிரசுரமாக இலாயக்கான பத்திரிகைகள் இவையே என்று இவரே தெரிவுசெய்து தமது கதைகளைக் கொடுத்திருக் கிறார். இவைகளே எழுதுவதற்கு இவர் நடை பழகிய பத்திரிகை களாகவும் ஆயிற்று.

Last Updated on Tuesday, 02 August 2011 22:04 Read more...
 

'தீராத பக்கங்கள்' வலைப்பதிவிலிருந்து: செகாவுக்கு வயது 150!

E-mail Print PDF

அண்டன் செகாவ்ரஷ்ய எழுத்தாளரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவருமான அன்டன் செகாவின் 150வது பிறந்த ஆண்டு உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 1860ம் ஆண்டில் பிறந்து 1904 வரை 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த செகாவ் மகத்தான இலக்கியச் சாதனைகளை நிகழ்த்தியவர். எனக்கு செகாவை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவரான- தேர்ந்த வாகரும், விமர்சகருமான- எஸ்.ஏ.பெருமாள் அவர்களே, இங்கும் செகாவைப் பற்றி சொல்கிறார்…   செகாவின் பாட்டனார் ஒரு பண்ணை அடிமையாக வாழ்ந்தார். இது வம்ச பரம்பரையாக நீடித்தது. எண்பது ரூபிள் கடனுக்காக அவரும் அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் அடிமைகளாயினர். கடுமையாக உழைத்து எண்பது ரூபிள் சேர்ந்ததும் கடனை அடைத்துவிட்டு விடுதலை பெற்றார். அவரது பிள்ளைதான் பாவெல் செகாவ்.

Last Updated on Tuesday, 02 August 2011 22:09 Read more...
 

மார்க்சிய சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகளை அழிக்கமுடியாது : கார்த்திகேசு சிவத்தம்பி

E-mail Print PDF

பேராசிரியர் கா.சிவத்தம்பியுடனொரு நேர்காணல்..[நேர்காணல் : கல்பனாதாசன்.  (இந்நேர்காணல் புதிய பார்வை 16 – 31 அக்டோபர், 1-15 நவம்பர் 1997 இதழ்களில் வெளிவந்தது. நன்றி : புதிய பார்வை. மேற்படி நேர்காணல் 'இனியொரு' இணையத் தளத்திலும் மீள்பிரசுரமாகியுள்ளது. நன்றி: இனியொரு.காம்]

மார்க்சிய சிந்தனையின் பிரயோகம் இல்லாமல் சமூக ஒடுக்குமுறைகளை அழிக்கமுடியாது : கார்த்திகேசு சிவத்தம்பி நீங்கள் ஆய்வு, திறனாய்வுத் துறைக்கு வந்த பின்னணி என்ன?

பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது தான் கைசலாசபதியோடு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழைப் பேசி நடிப்பதில் இருவருக்கும் புகழ் இருந்தது. எனக்கு நாடகங்களின் மூலம் நடிப்புப் பின்புலமும் அமைந்தது.பின்னர் 4 ஆண்டுகள் பாடசாலை ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டு எம்.ஏ.ஆயத்தம். நான், கைலாசபதி, தில்லைநாதன் (பேராதனைப் பல்கலைப் பேராசிரியர்) மூவரும் ஒன்றாக எம்.ஏ. செய்தோம். இது ஐம்பதுகளில் நடந்தது. இந்தக் காலகட்டத்தில் இடதுசாரி எழுச்சி காணப்பட்டது. அந்த எழுச்சியில் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். அப்போது எங்களுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு வந்தது. அந்தச் சமயத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் இருந்தது.

Last Updated on Wednesday, 13 July 2011 20:29 Read more...
 

“வேதாவின் கவிதைகள்!” ஓர் மதிப்பீடு!

E-mail Print PDF

வேதா  இலங்காதிலகம்ஆழ வேரூன்றி! அகலக் கிளைகள் பரப்பி!
வானோக்கி உயர்ந்து! விரிந்து விருட்சமாகி!
விழுதுகள் பல இறக்கி!
எங்குமாய் வியாபித்து
நின்று நிழல் கொடுக்கும்
இந்த ஆலமரத்தின்
அடி முடி தேடுவது என்பது
அவ்வளவு சுலபமானது அல்ல... 

Last Updated on Wednesday, 13 July 2011 19:43 Read more...
 

பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுக் கட்டுரை: புதிய வார்த்தை

E-mail Print PDF

பேராசிரியர் கா.சிவத்தம்பிஅ.முத்துலிங்கம்எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது.   ....   காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவை தள்ளுகிறான்  இளைஞன். அவனுக்கு 19, 20 வயதிருக்கும். வழக்கம்போல கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. திறந்து உள்ளே சென்றால் அங்கே இரண்டு கட்டில்களில் இரண்டு பேர் தூங்குகிறார்கள். இளைஞன் அங்கேயிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்து கொள்கிறான். துங்குபவர்களில் ஒருவர் சிவத்தம்பி, மற்றவர் அவருடைய அறைவாசி. இருவரையும் இளைஞன் உற்றுப் பார்த்தபடி காத்திருக்கிறான். கையை நீட்டி, முறித்து, உறுமி கண்விழிக்கிறார் சிவத்தம்பி. என்னைப் பார்த்ததும் சிரித்து எழும்பி பேசத் தொடங்குகிறார். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கிறார். முழுக்க முழுக்க இலக்கியம்தான். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் அப்படிச் சென்று அதிகாலை உட்கார்ந்திருந்ததற்கு காரணம் இருக்கிறது. காலையில் சிவத்தம்பி யாரை முதலில் சந்திக்கிறாரோ அதன்படியே அன்றைய நாளின் திட்டம் உருவாகும். அன்றைய நாளை நான் கைப்பற்றி விடுகிறேன். நாங்கள் இருவரும் பக்கத்திலே இருக்கும் காந்தி லொட்ஜிற்கு காலை உணவு சாப்பிட நடந்து போகிறோம். வழக்கம்போல சாப்பாட்டுக்கான பணத்தை சிவத்தம்பியே கட்டுகிறார்.

Last Updated on Wednesday, 13 July 2011 20:51 Read more...
 

"பேராசிரியர் கா.சிவத்தம்பி: ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழின் குறியீடு" சூழலியலாளர் ஐங்கரநேசன் அஞ்சலி!

E-mail Print PDF

பேராசிரியர் கா.சிவத்தம்பிபொ.ஐங்கரநேசன்பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் அப்பாலும் சென்று உலக அரங்கில் தமிழின் குறியீடாக நிலை பெற்றுள்ளார் என்று சூழலியலாளரும் இயற்கை, பண்பாட்டு, மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் கா.சிவத்தம்பிஅவர்களின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அஞ்சலிக் குறிப்பில், தமிழ் கூறும் நல்லுலகில் புலமையாளராக, ஆய்வாளராக, விமர்சகராக, சிந்தனையாளராகப் பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையாக மிளிர்ந்தவர் பேராசிரியர்கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். தமிழ், தமிழர் பற்றிய சமூக வரலாற்றுப் பண்பாட்டுத் தேடுகையில் தனது ஆற்றல்களையும் அறிவுத் திறன்களையும் முழுமையாகக் குவியப்படுத்திச் செயற்படுத்திவந்த இவர், 20ஆம் நூற்றாண்டின் தமிழியல் ஆய்வுப் போக்கைத் திசைமுகப்படுத்தும் பேராளுமையாக விளங்கி வந்துள்ளார்.

Last Updated on Wednesday, 13 July 2011 20:52 Read more...
 

பேரறிஞர் சிவத்தம்பி அவர்கட்கு எமது அஞ்சலிகள்... ...!

E-mail Print PDF

பேராசிரியர் கா. சிவத்தம்பிபண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியவர்.   
ஊடகம், கலை, இலக்கணம், பண்பாடு சார்ந்து பேராசிரியர் சிவத்தம்பி வெளிப்படுத்திய பார்வைகள் புதிய வளங்கள் கொண்டவை. தமிழியல் ஆய்வுக்குரிய அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டவை.  இன்று எம் தமிழர் மத்தியில் வாழ்ந்தவர்களுள் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவத்தம்பி.  தமிழியல் ஆய்வுச் செல்நெறியில் அவர் விட்டுச்சென்ற தடங்கள் ஆழமும் விரிவும் மிக்கவை.

Last Updated on Thursday, 07 July 2011 05:18 Read more...
 

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மறைவு! பேராசிரியர் சிவத்தம்பி பற்றிய பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு!

E-mail Print PDF

பேராசிரியர் கா.சிவத்தம்பி!- பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தியினை எழுத்தாளர் மேமன்கவி மின்னஞ்சல்வாயிலாக அறியத்தந்திருந்தார். ஈமச்சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அறிவித்திருந்தார்.   ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமன்றி,  உலகத் தமிழ் இலக்கிய உலகிற்கே பேராசிரியரின் மறைவு பேரிழப்பே. ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்திற்கு பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் ஆற்றிய பணி அளப்பரியது. முதன் முறையாக இவரை நான் அறிந்து கொண்டது இவரது 'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்' என்னும் நூல் மூலமாகத்தான். நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் , 7ஆம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம், மட்டக்களப்பு, புனித மைக்கல் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்த் தின விழாவில் தமிழ்க் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையில் முதலாவதாக வந்ததற்காக கேடயமொன்றினையும், நூல்கள் பலவற்றையும் பரிசுப் பொருட்களாகத் தந்திருந்தார்கள். 'மட்டக்களப்புத் தமிழகம்', புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் நூலொன்று, வடமோடி தென்மோடி கூத்துகள் பற்றிய நூலொன்று, இன்னும் சில நூல்களுடன் பேராசிரியரின் மேற்படி 'ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்' நூலும் அவற்றிலடங்கும். சிறிய நூலானாலும், ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கிய, விளங்கும் நூலது. அது முதல் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பலரும் மேற்படி நூலின் அடிப்படையிலேயே தமது ஆய்வுகளைத் தொடர்ந்திருப்பார்கள். இவரை ஒருமுறை சந்தித்துமுள்ளேன். அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைகழகத்தின் தமிழ்ச் சங்கத்தினரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் 'நுட்பம்'  இதழின் ஆசிரியராகவிருந்த சமயம். அம்மலர் மிகவும் சிறப்பாக வெளிவருவதற்கு முனைவர் மு. நித்தியானந்தன் அவர்கள் மிகவும் உதவியாகவிருந்தார். அம்மலருக்கு ஆக்கங்கள் வேண்டி, அப்பொழுது யாழ்பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானபீட மாணவனாகப் பயின்றுகொண்டிருந்த நண்பர் ஆனந்தகுமாருடன் பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இருவருமே இதழுக்குக் கட்டுரைகள் தருவதாக உறுதியளித்தார்கள். ஆயினும் அச்சமயம் பேராசிரியர் க.கைலாசபதியிடமிருந்து மட்டுமே உரிய நேரத்தில் கட்டுரை எமக்குக் கிடைத்தது.  பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தி மேற்படி நினைவுகளை மீண்டும் ஒருமுறை எழுப்பின. அவரது மறைவையொட்டி, கானாபிரபாவின் வலைப்பதிவிலிருந்து பேராசிரியர் மெளனகுருவின் பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய பகிர்வுகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். -  வ.ந.கிரிதரன் , பதிவுகள் -

Last Updated on Wednesday, 13 July 2011 20:53 Read more...
 

மீள்பிரசுரம்: கல்லுக்குள் ஈரம்

E-mail Print PDF

எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள்நாவல்: கல்லுக்குள் ஈரம்[அண்மையில் மறைந்த எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் பற்றித் 'தினமணி' பத்திரிகையில் வெளியான கட்டுரையிது. அவரது ஞாபகார்த்தமாக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. - பதிவுகள் -] அண்ணாச்சி ர.சு.நல்லபெருமாள் இன்று உடலோடு இல்லை. இயற்கை எய்தினார் இறைவனடி சேர்ந்தார் என்று பலபடச் சொன்னாலும் காலமானார் என்று சொல்லுவதுதான் சாலப் பொருந்தும் அந்தப் பெருமகனாருக்கு. ஆமாம், கல்கியின் அன்புக்குப் பெரிதும் பாத்திரப்பட்டவர் அண்ணாச்சி. அவரது வாழ்க்கை வருங்கால இளையவர்க்குப் பெரும் பாடமாக அமையும். மிகுந்த அன்பு கொண்டவர் அண்ணாச்சி. அதிர்ந்து பேசாத பண்பாளர். எந்தவித தீயபழக்கங்களும் இல்லாத தூயவர். அவரது சித்தப்பா சங்கரபாண்டியம் பிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரு அவையில். இன்றோ அவரது உறவில் தம்பி ஏ.எல்.எஸ். திருநெல்வேலி மாநகரத் தலைவர். எனினும், அண்ணாச்சிக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம். 

Last Updated on Wednesday, 29 June 2011 20:35 Read more...
 

தேன்நிலவில் சீதைக்கு எழுந்த ஐயுறவு

E-mail Print PDF

நுணாவிலூர் கா.விசயரத்தினம்- (இலண்டன்)விசுவாமித்திரன் வரங்கள் பல பெற விரும்பி ஒரு வேள்வி செய்யத் தீர்மானித்தார். அதே நேரத்தில் அந்த வேள்வியைக் குழப்பிவிடப் பல அசுரர்கள் எத்தனிப்பர் என்ற ஐயப்பாடும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, கடுகதியாய் அயோத்தி சென்று, தசரத மன்னனைக் கண்டு, விடயத்தைக் கூறி, வேள்வியைக் காப்பதற்கு இராமனைத் தந்தருளுமாறு வேண்டி நின்றார். இராமனைப் பிரிய விரும்பாத தசரதன் துடிதுடித்து ஈற்றில் இராமர், இலக்குமணன் ஆகிய இருவரையும் விசுவாமித்திரருடன் செல்வதற்குச் சம்மதித்தான். விசுவாமித்திரன், இராமன், இலக்குமணன் ஆகிய மூவரும் அயோத்தியிலிருந்து காட்டுக்குச் சென்றனர். ஆங்கு முனிவர்களின் தவத்திற்கு இடையூறு புரிந்து வருபவளான தாடகை என்ற அரக்கியை இராமன் அம்பைத் தொடுத்துக் கொன்றான். அதன்பின் இராமரும், இலக்குமணனும் யாக சாலையைச் சுற்றி நின்று காவல் புரிய, விசுவாமித்திரன் அரிய வேள்வியை ஆறு நாட்கள் நடாத்தி முடித்து இராமனையும், இலக்குமணனையும் வாழ்த்தினார்.

Last Updated on Wednesday, 29 June 2011 17:55 Read more...
 

"தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை "

E-mail Print PDF

ந.பிச்சமூர்த்திதமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்களுள் குறிப்பிடத்தக்கவர் .பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் . பிச்சமூர்த்தி ஆவார். தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் முறையினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய .பிச்சமூர்த்தி தமிழ்நாட்டில் கலைகள் செழித்த மாவட்டமாகத் திகழும் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் நகரில் 1900-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15-ஆம் நாள் நடேச தீட்சிதர் - காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். 

Last Updated on Friday, 03 June 2011 21:49 Read more...
 

சங்கச் சான்றோர் விருது பெறும் முற்போக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன்

E-mail Print PDF

மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்
செ.கணேசலிங்கன்முற்போக்கு இடதுசாரி இயக்க செல்நெறிகளில் ஆழக்கால் பதித்த செ.கணேசலிங்கன் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அறுபது ஆண்டு காலத்துக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்களில் முதன்மை பெற்று நிற்கின்றார். எண்பது நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுச் சாதனை படைத்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், சஞ்சிகை என்று பல்துறை இலக்கிய வடிவங்களுக்கூடாக தன் ஆளுமையை நிலை நிறுத்தியுள்ளார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் அதன் கொள்கை வழிநின்று செயற்பட்ட பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கே.கணேஷ், எச்.எம்.பி.மொஹிடீன், சில்லையூர் செல்வராஜன், இ.முருகையன், நீர்வை பொன்னையன், அ.முகம்மது சமீம், இளங்கீரன், கே.டானியல்,பிரேம் ஜி, டொமினிக் ஜீவா, அ.ந.கந்தசாமி போன்றவர்களுடன் தோழமை உணர்வுடன் ஒன்றிணைந்து முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செ.கணேசலிங்கன் வழங்கினார். தாம் மேற்கொண்ட மார்க்சிய சித்தாந்தக் கொள்கைப் பற்றுறுதியுடன் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் செ.கணேசலிங்கன் முற்போக்கு இலக்கியச் செம்மல்களில் ஒருவராக முகிழ்ந்து நிற்கின்றார்.

Last Updated on Monday, 23 May 2011 19:16 Read more...
 

பாவாணரின் மடல்கள் அறிமுகமும் ஆய்வும்

E-mail Print PDF

மொழிநூலறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் தமிழநம்பிமாந்தர் செய்திப் பரிமாற்றத்திற்குத் தொடக்கத்தில் சைகைகளையும் ஒலிகளையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.  பின்னர், தொடர்ந்த வளர்ச்சி நிலையில், படிப்படியே சொற்களை உருவாக்கி, மொழியை அமைத்து, அம் மொழி வழி பேசத் தொடங்கினர். அதன்பின் வரிவடிவங்கள் அமைத்துக் கொண்டு, அதன் வழியாகத்  தம் எண்ணங்களை எழுத்திலும் வெளிப்படுத்தத் தொடங்கினர். முதலில் உருவான எழுத்து வழியான செய்தித் தொடர்பு ஊடகமே மடல் அல்லது கடிதம். தொலைவில் இருப்பாருடன் தொடர்பு கொள்ளப் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டுவரும் இந்த ஊடகம், கணிப்பொறி கைப்பேசி வருகைக்குப்பின் பெரிதும் குறைந்து அறவே மறைந்துவிடும் நிலைக்குச் சென்றுகொண்டுள்ளதைக் காண்கிறோம். 
 
மடல் ஊடகத்தின் சிறப்பு
இயல்பாகவே நாம் பேசுகின்ற நிலையைவிட, எழுதுகின்ற நிலையில் பிழையின்றியும், அழகிய சொல்லிய அமைப்புக்களோடும் செப்பமாக இருக்கக் கவனம் கொள்கிறோம். கடிதம், இலக்கு நோக்கிச் செலுத்தும் அம்பைப் போல், ஒருவரையோ, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தையோ விளித்து, உணர்வார்ந்த கருத்துகளைச் சொல்லும்போது எண்ணியவாறு பயன் விளைகின்றது என்பதனால் இந்தக் கடிதம் எழுதி கருத்துரைக்கும் உத்தி, இன்றளவும் பலராலும் கையாளப்படுகின்றது.

Last Updated on Friday, 20 May 2011 20:36 Read more...
 

பிரமிளின் புனைவுலகு

E-mail Print PDF


பிரமிள்[ தமிழ் இலக்கிய வரலாற்றில் பிரமிளின் பங்களிப்பானது முக்கியமானது. கதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், தத்துவமென இவரது ஆளுமை பரந்துபட்டது. இவை தவிர ஓவியம், சிற்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவராக விளங்கினார். தமிழ்ப் படைப்பாளிகளில் குறிப்பிட்ட வெகு சிலரே நவீன அறிவியற் துறையின் பலவேறு கோட்பாடுகளை, அவை கூறும் பொருளினைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலான தேடலை மேற்கொண்டவர்களெனலாம். அவர்களில் பிரமிள் முக்கியமானவர். விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு இருப்பை அறிதற்கு முயன்றவர் பிரமிள். நவீன விஞ்ஞானம் கூறும் காலவெளி, 'குவாண்டம்' இயற்பியல், சார்பியற் தத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் இருப்பை அறிதற்கு முயன்றார்.  இதனைத்தான்  'விஞ்ஞானம் - ஞானம் - விபூதிப்பட்டை', 'விஞ்ஞானப் பார்வையும் காலாதீதமும்' போன்ற அவரது கட்டுரைகள் புலப்படுத்துகின்றன. பிரமிளின் பிறந்த தினம ஏப்ரல் 20. அவரது நினைவாகவும், தமிழ் இலக்கிய உலகில் அவரது ஆளுமையினை, பங்களிப்பினை நினைவு கூரும் முகமாகவும் அவரைப் பற்றிய மற்றும் அவரது ஆக்கங்கள் சில 'பதிவுகளி'ல் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. - பதிவுகள்]

Last Updated on Thursday, 19 May 2011 20:26 Read more...
 

காலம் என்பது…

E-mail Print PDF

தேவகாந்தன்காலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. ‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின் பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்!

Last Updated on Monday, 02 May 2011 19:47 Read more...
 

நேர்காணல்: சுப்ரபாரதிமணியனுடன் ....

E-mail Print PDF

சுப்ரபாரதிமணியன்1. உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக:

15 சிறுகதைதொகுப்புகள் கொண்ட சுமார் 250 சிறுகதைகள் , 7 நாவல்கள் ( மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை, பிணங்களின் முகங்கள், சமையலறைக்கலயங்கள், தேநீர் இடைவேளை, ஓடும் நதி ) , இரண்டு குறுநாவல் தொகுப்புகள்,  கட்டுரைத்தொகுப்புகள் மூன்று, நாடகம், வெளிநாட்டுப்பயண அனுபவம், திரைப்படகட்டுரைகள்  இரண்டு என்று 30 நூல்கள் வெளிவந்துள்ளன. மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளன. அ. மொழிபெயர்ப்புகள், விருதுகள், திரைத்துறை ஈடுபாடு, களப்பணிகள்...... திரைப்படக்கட்டுரைகள் சில மொழிபெயர்த்திருக்கிறேன். ஜே பி தாஸ் என்ற ஒரிய எழுத்தாளரின் சிறுகதைத்தொகுப்பு, திருப்பூர் பின்னலாடைதுறை சம்பந்தமான “ தி நிட்டெட் டூகதர் “ என்ற ஆராய்ச்சி நூல் ஆகியவைதான் மொழிபெயர்த்தவை. சிறந்த சிறுகதையாளருக்கான கதா விருது , சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு, ஏர் இண்டியா குமுதம் குறுநாவல் போட்டிப்பரிசாக அய்ரோப்பா, இங்கிலாநது நாடுகளின்  பயணம், மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகள் ஆகியவைதான். தனியாகக் களப்பணி என்று எதுவும் செய்ய நேரம் வாய்த்ததில்லை.நாவல்கள் களப்பணிகளைக் கோருபவை.ஆனால் வந்து சேரும் அனுபவங்களை எழுதுவதைத் தவிர வேறு நேரம் வாய்க்காத வேலை வாழ்க்கை சங்கக்டப்படுத்துகிறது. 

Last Updated on Saturday, 23 April 2011 18:40 Read more...
 

சரித்திர வரலாறாகியவர் புலவர் அமுது

E-mail Print PDF

அமுதுப் புலவர்அச்சுப் போன்ற தமிழை அடக்கமாக உச்சரித்து,  நகைச்சுவை ததும்ப தமிழை ஈழமண்வாசனையுடன் சுவைக்கத்தந்தவர் புலவர் அமுது. லண்டனில் ‘மூதறிஞர்’பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டு சரித்திர வரலாறாகிய புலவர் அமுது, ஈழத்தின் பாரம்பரிய பண்டித மரபையும் பல்கலைக்கழகத்தின் நவீன இலக்கிய மரபையும் இணைத்த ஒரு பாலமாகத் திகழ்ந்தவர். இத்தகைய ஒரு பெரிய தமிழ் அறிஞரை நான் அவருடைய இளைய மகள் ஜெயமதியுடன் இளவாலைக் கன்னியர் மடத்தில் சிறுமியாகப் படித்த காலம் தொட்டே அறிந்திருந்தேன். எமது பாடசாலையின் அனைத்து முக்கியமான வைபவங்களிலும் வெள்ளை வேட்டி சால்வையோடு மெல்லிய உயர்ந்த இந்த அறிவுச்சுடரின் தலை பளபளக்க, கழுத்தை பூ மாலைகள் அலங்கரிக்க, முதல் வரிசையில் இருந்ததைப பார்த்திருக்கிறேன்.  லண்டனில் ஆண்டுதோறும் இடம்பெறும் இளவாலைக் கன்னியர் மடத்தின் பழைய மாணவிகளின் ஒன்றுகூடலின்போதுதான் இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

Last Updated on Monday, 04 April 2011 17:35 Read more...
 

Mistry up for Man Booker International Prize

E-mail Print PDF

Rohinton Mistry

Canadian writer Rohinton Mistry has been shortlisted for the lucrative Man Booker International Prize.

The celebrated author of A Fine Balance is one of 13 finalists in line for the award, worth roughly $93,000.

Last Updated on Thursday, 31 March 2011 23:43 Read more...
 

ஒரு நினைவோட்டம்: அறிவுப் பசிக்கு உதவிய ஆர். ஆர். பூபாலசிங்கம்

E-mail Print PDF

இளங்கோவன்தற்போதைய யாழ். நவீன சந்தைக் கட்டிடம் அப்போது கட்டப்படவில்லை. அந்த இடத்தில் தான் அன்றைய பஸ் நிலையம் அமைந்திருந்தது. அதற்கு மேற்குப்புறமாகக் கஸ்தூரியார் வீதியின் ஆரம்பம். அதனருகாமையில் மேற்குப்புறமாகத் தகரக் கூரைகளுடன் வரிசையாகப் பல கடைகள். அதிகமானவை குளிர்பானம், பிஸ்கட் முதலியன விற்கப்படும் கடைகள். அவற்றின் நடுவே ஒரு புத்தகசாலை. அந்தப் புத்தகசாலையின் உள்ளேயும், வாசலிலும் தினசரி பல இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்களைக் காணலாம். உள்ளே ஓர் உயர்ந்த கறுப்பு உருவம், வெள்ளை வேட்டி, அதற்கேற்ற வெள்ளை நாசனல் - சேட், சிவப்பு நிற 'மவ்ளர்" தோளில் - சிலவேளை நாரியில் இறுக்கக்கட்டியபடி, சிலவேளை நெற்றியில் சந்தனப் பொட்டு, பளிச்சிடும் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரிக்கும் அழகு, அன்பாகப் பண்பாகப் பேச்சு. ஆமாம்.. அவர் தான் அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் ஆர். ஆர். பூபாலசிங்கம்.

Last Updated on Friday, 01 April 2011 16:21 Read more...
 

ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

E-mail Print PDF

முல்லை அமுதன்ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை. ஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும். குறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை. கோ.றஞ்சகுமாரின் 'மோகவாசல்' தொகுப்பு மீள் பிரசுரம் பெற்றிருந்தாலும் அதில் அவரின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

Last Updated on Sunday, 27 March 2011 23:50 Read more...
 

எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி 'நானா' மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா!

E-mail Print PDF

பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி சோலாஅறிஞர் அ.ந.கந்தசாமி[14.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பில் வெளியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் எமிலி ஸோலா பற்றிய கட்டுரையிது. சுதந்திரனில் ஸோலாவின் நாவலான 'நானா'வை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு முதல்வாரம் 'நானா'வின் ஆசிரியரான எமிலி ஸோலாவைப் பற்றி அ.ந.க எழுதிய அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதலாம்]. உலக எழுத்தாளர் வரிசையிலே முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் எமிலி ஸோலா. ஸோலாவின் வாழ்க்கை துன்பமும், துயரமும் நிறைந்தது. வாழ்க்கைப் பாதையிலே சென்று கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இருளில் மறைந்திருந்து கள்வர்கள் தாக்குவதுண்டல்லவா? உலகத்திலுள்ள மாந்தரிலெ அனேகருக்கு ஏற்படும் துன்பங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் ஸோலாவோ துன்பத்தை எதிர்கொண்டழைத்த வினோதப் பிரகிருதி. 'பாதையிலே கள்வன் இருப்பான்; அதுவும் கத்தியும், ஈட்டியும், துப்பாக்கியும் தாங்கிக் காத்திருப்பான். நானோ நிராயுதபாணியாக உள்ளத்தின் துணிவொன்றே கவசமாக, சத்தியத்தின் கேடயமே காவலாகச் செல்கிறேன். கள்வன் ஆயுதபாணியாகக் காத்திருப்பது மட்டுமல்ல, என்னைத் தாக்குவதும் நிச்சயம். இருந்துமென்ன? துன்பம் நிறைந்த அந்தப் பாதையிலே செல்ல வேண்டியது உண்மை அறிந்த எனது பொறுப்பு. உலகினரென்னைப் பார்த்து எள்ளி நகையாடுவர். கருங்கற்பாறையில் கவிஞன் தன் தலையை மோதினால் கவிஞனுக்காபத்தா கல்லுக்காபத்தா? என்று பேசுவர். இருந்துமென்ன? வானந்தூளாகினாலும், மண் கம்பமெய்தினாலும், என் மண்டை சுக்குநூறாகினாலும் இந்தப் பாதையால்தான் சென்று தீருவேன். ஒரு உத்தம கொள்கைக்காக என்னையே நான் பணையம் வைக்கிறேன்!' என்ற ஒரே மனப்பான்மையோடு துன்பத்தை வரவேற்கச் சென்ற தியாக புருஷர் ஸோலா.

Last Updated on Tuesday, 15 March 2011 16:57 Read more...
 

'நந்தலாலா' ஜோதிகுமாருடன் ஒரு நேர்காணல்!

E-mail Print PDF

'நந்தலாலா' ஆசிரியர்களிலொருவர்.இலங்கையிலிருந்து வெளிவரும் 'நந்தலாலா' , முன்பு வெளிவந்த 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாருடன் நடைபெற்ற நேர்காணல். இந்த நேர்காணல் 1997இல் ஜோதிகுமார் தொராண்டோ வந்திருந்த சமயம் எடுக்கப்பட்டது. பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் கருதிப் பதிவுகளுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். பேட்டி கண்டவர் வ.ந.கிரிதரன்.-

வ.ந.கிரிதரன்:ஜோதிகுமார்! நீங்கள் ஆரம்பத்தில் 'தீர்த்தக்கரை' சஞ்சிகையினை வெளியிட்டீர்கள். தற்போது 'நந்தலாலா'வினை வெளியிடுகின்றீர்கள். ஏனிந்தப் பெயர் மாற்றம்?

Last Updated on Sunday, 20 March 2011 12:12 Read more...
 

ஒரு நினைவோட்டம்: எல்லோருக்கும் இனிய மனிதன் சிவகுருநாதன்..

E-mail Print PDF

சிவகுருநாதன் - முன்னாள் தினகரன் ஆசிரியர்எங்கள் வீடு ஒரு செய்தி நிறுவனம் போன்று பல்லாண்டுகள் இயங்கியது. மூத்த சகோதரர் நாவேந்தன் முதல் கடைசிச் சகோதரர் வரை எங்கள் சகோதரர்கள் யாபேருமே சுமார் நாற்பது வருடங்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவரெனக் காலத்துக்காலம் பத்திரிகை, வானொலிச் செய்தியாளர்களாகச் செயற்பட்டோம். நாவேந்தன் பதினாறு வயதில் வீரகேசரியில் ஒப்புநோக்காளராகச் சேர்ந்து சில மாதங்கள் கடமையாற்றிவிட்டு ஊருக்குத்திரும்பிச் சில வருடங்கள் வீரகேசரியின் நிருபராகச் செயற்பட்டார். துரைசிங்கம் அண்ணர் தினகரன் நிருபராக விளங்கினார். பின்னர் அக்கா ஞானசக்தி, சிவானந்தன் அண்ணர், யான், தங்கை சரோஜினி, தம்பி தமிழ்மாறன் என எல்லோருமே காலத்துக்காலம் இலங்கையிலிருந்து வெளிவந்த சகல பத்திரிகைகளுக்கும் நிருபர்களாகக் கடமையாற்றினோம். வீரகேசரி, தினகரன் குறூப், தினபதி குறூப், டெயிலி மிரர் - ஈழமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யாவற்றுக்கும் எமது வீட்டு மேசையிலிருந்து விதம்விதமாகச் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டன.

Last Updated on Thursday, 17 March 2011 12:48 Read more...
 

மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக' கவிதைத் தொகுதியின் மீதான பார்வை

E-mail Print PDF

மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக'- அஷ்ரஃப் சிஹாப்தீபுதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. அது எப்படியென்றால் இடறி விழுந்து நிமிர்ந்து பார்த்தால் அவன் அநேகமாக ஒரு கவிஞனாகவே இருப்பான். இந்தச் சூழலில் கணினியின் கைங்கரியத்தாலும் வசனத்தை உடைத்துப் போட்டால் கவிதை என்கிற வசதியினாலும் கவிதை என்கிற பெயரில் வெளிவரும் பல்லாயிரம் கவிதையின் வடிவ எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுப் பல நூறு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நூல்களுக்குள்ளும் ஒரு சில நல்ல கவிதைகள் இடம்பெறவே செய்கின்றன. ஒரு சில வரிகள் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன.

Last Updated on Tuesday, 08 March 2011 11:08 Read more...
 

சீன மரபு காட்டும் ஒருபால் உறவு: பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்

E-mail Print PDF

ஜெயந்தி சங்கர்ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி பாதி கடித்த அந்தக்கனியை அரசருக்குக் கொடுக்க அவர் அதை வாங்கிச் சுவைத்தபடியே, “ஆஹா ! பழத்தை நான் ருசிக்க வேண்டும் என்பதில் உனக்குத் தான் எத்தனை அக்கறை ! உனது பசியை விட என் மீதான காதலே உனக்குப் பெரிதாக இருக்கிறதென்றறிந்து யாம் மிக மகிழ்ந்தோம்’, என்று கசிந்துருகுவார்.

Last Updated on Monday, 07 March 2011 16:18 Read more...
 

சர்வதேச மகளிர் தினம் மார்ச் - 8: பத்திரிகைத்துறையில் ஓர் சாதனை மாது...

E-mail Print PDF

எழுத்தாளர் யாழ்நங்கை (அன்னலட்சுமி ராஜதுரை)சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்து வருடங்களுக்கு முன்பு (2000) 'ஞாயிறு தினக்குரல்" பத்திரிகையில் தோழர் 'பாரதிநேசன்" வீ. சின்னத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். 'கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்" என்பது அக்கட்டுரையாகும். அடுத்த ஆண்டு அவர் காலமாகிவிட்டார். அவரது நினைவாக அக்கட்டுரையைச் சிறு நூலாக யான் வெளியிட்டேன். அக்கட்டுரையில் வேதவல்லி கந்தையா, தங்கரத்தினம் கந்தையா, பரமேஸ்வரி சண்முகதாசன், வாலாம்பிகை கார்த்திகேசன், பிலோமினம்மா டானியல் ஆகிய மாதரசிகளின் பணிகள் குறித்துச் சுருக்கமாக விளக்கியிருந்தார். இம்மாதரசிகளையும் அவர்தம் பணிகளையும் யான் நன்கறிவேன். அவர்களது பணிகள் மெச்சத்தக்கவை தான்.பாடசாலைக் காலத்திலிருந்தே மூத்த சகோதரர்களைப் பின்பற்றி கலை இலக்கிய, அரசியல்துறைகளில் யான் ஈர்ப்புக்குள்ளானேன். அக்காலத்திலேயே யானும் மேடையேறத் தொடங்கினேன். அறுபதுகளின் முற்பகுதியிலிருந்தே பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களோடு பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அன்று சிறந்த பெண் பேச்சாளர்களாக வடபகுதியில் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதை பொன் பாக்கியம், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, புஸ்பா செல்வநாயகம், வேதவல்லி கந்தையா, உருத்திரா கந்தசாமி ஆகியோர் விளங்கினர். இவர்களது பேச்சுக்களைக் கேட்கவும், இவர்கள் சிலரோடு மேடையேறும் சந்தர்ப்பமும் அன்றே எனக்கு வாய்த்தது.

Last Updated on Sunday, 06 March 2011 17:19 Read more...
 

டாக்கா: பிசாசு நகரம் - சுப்ரபாரதிமணியன் -

E-mail Print PDF

அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல் ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப் போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. முக்கிய பாகங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன. தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது. 11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உண்டு.

Last Updated on Monday, 07 March 2011 16:42 Read more...
 

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

E-mail Print PDF

[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது ]

 வெங்கட் சாமிநாதன்"'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது.  

Last Updated on Sunday, 17 April 2011 04:26 Read more...
 

டானியல் நினைவலைகள்...! வி. ரி. இளங்கோவன்

E-mail Print PDF

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 14-ம் திகதி வெள்ளிக்கிழமை (14 - 01 - 2011) மாலை இடம்பெற்ற 'இலக்கியக் களம்" நிகழ்ச்சியில் 'டானியல் நினைவலைகள்;" என்ற தலைப்பில்  எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) நிகழ்த்திய உரையின் சுருக்கம். 'ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். டானியல் யார்? என்ன அவர் சாதனை? அவரை  இன்றும் நினைத்துக்கொள்ள, அவர் என்ன செய்துவிட்டார்? டானியல் ஓர் அற்புதமான மனிதர் - கலைஞர் - மனிதாபிமானி - எல்லாவற்றுக்கும்மேலாய் தமிழில் ஓர் அருமையான படைப்பாளி - நாவலாசிரியர் - சமூக விடுதலைப் போராளி - தடம்புரளாத அரசியல்வாதி.

Last Updated on Friday, 04 March 2011 12:50 Read more...
 


counter for tumblr

அண்மையில் வெளியானவை

கூகுளில் தேடுங்கள்

Custom Search

பதிவுகளில் விளம்பரங்கள்

பதிவுகளில் விளம்பரங்கள், திருமண அறிவித்தல்கள், மரண அறிவித்தல்கள் போன்றவற்றைப்  பிரசுரிக்க விரும்புகிறீர்களா? நியாயமான கட்டணங்களில் பிரசுரிப்போம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசிக்கப்படும் பதிவுகளில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரியுங்கள். மேலதிக விபரங்களுக்கு ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

Satyamev Jayate

Join Aamir Khan and STAR India on Satyamev Jayate – an emotional, challenging quest for hope – Sundays, at 11 AM

பைசா.காம்: இணையத்தில் உழையுங்கள்!

Speak English

Sell your books to Powell's Online

Sell your books to Powell's

Build Your Own Business Website!

Get online instantly with Geohostcorner.com web page software.  Have you ever wanted to build a website, but just weren't quite sure how? With the Geohostcorner.com webstore builder creating your own website is easier than ever! You'll amaze your friends with a professional design, beautiful stock images, and great, customizable features. You have over 1700 professionally designed website templates that come free with the website design software - just a click and it will look like you spent thousands on a designer!  Start Your Own Web Business! Easy Business Websites! Get online instantly with Geohostcorner.com web page software! Build your own website for only $29.99. For More information Click On Here

WIX: Create Your Free Website

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள் / அறிவித்தல்கள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் கடந்தவை (மார்ச் 2000 - மார்ச் 2011)
வெங்கட் சாமிநாதன் பக்கம்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
கட்டடக்கலை / நகர அமைப்பு / வரலாறு/ அகழாய்வு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன் பக்கம்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்

பதிவுகள் இதுவரையில் (2000 - 2011)

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

கட்டுரைகள்: கடந்தவை

கடந்தவை 1

கடந்தவை 2

தமிழ் வர்த்தகக் கையேடு
'பதிவுகள்' வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு. .உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர் இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல

இலவச வரி விளம்பரம்
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

அ.ந.கந்தசாமி படைப்புகள்

புதிய பனுவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

IT Training!

We provide one to one or small group  training for the following subjects (In Toronto only):

1. IBM (AIX) System Admin (Basic)
2. IBM (AIX) System Admini (Advanced)
3. ASP (Classic)
4. C Programming (Basics)
5. Soldering & Basics Electronics
6. Joomla 

More Infomation: Contact at ngiri2704@rogers.com 
 

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

Fyodor Dostoevsky

Fyodor Dostoevsky (1821-1881) was a Russian novelist, journalist, short-story writer whose psychological penetration into the human soul had a profound influence on the 20th century novel. Read More

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More

The Fabric Of The Cosmos By Brian Greene

The Hidden Reality: Parallel Universes and the Deep Laws of the Cosmos By Brian Greene

Hyperspace: A Scientific Odyssey Through Parallel Universes, Time Warps, and the 10th Dimension By Michio Kaku

Das Kapital By Karl Marx

The Brothers Karamazov [Hardcover] By Fyodor Dostoevsky

Penguin Classics Nana By Emile Zola

A Brief History of Time By Stephen Hawking


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

ISSN  1481 - 2991 
ஆசிரியர்: வ.ந.கிரிதரன்   Editor-in - Chief: V.N.Giritharan

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One" 

*அறிவித்தல்:  ஏப்ரல் 2011 ( இதழ் 136 ) வரை   மாத இணைய இதழாக வெளிவந்து கொண்டிருந்த 'பதிவுகள்' இணைய இதழ் ஏப்ரல் 2011  இதழிலிருந்து  மாத, வார இதழென்றில்லாமல் ஆக்கங்கள் கிடைக்கும் தோறும் வெளியிடப்படும் இதழாக வெளிவரும்.  'பதிவுகள்' இதழுக்குக் கிடைக்கப் பெறும் ஆக்கங்களை (அறிவித்தல்களுட்பட) கிடைத்ததும் உடனுக்குடன் பிரசுரிப்பதே அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால்தான் இந்த முடிவு.

உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

வ.ந.கிரிதரன் எழுதிய தமிழ் நூல்கள் மின்னூல்களாக விற்பனைக்கு

தமிழியல் (Journal Of Tamil Studies)

தமிழியல் இதழ்

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர், ' அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் ' ( International Association of Tamil Research ) என்னும் அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் இசைவினைப் பெற்று ' Tamil Culture ' இதழை ' Journal of Tamil Studies ' என்னும் மாற்றுப் பெயரில் அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் நடத்தி வந்தது. பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் ' Journal of Tamil Studies ' இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1970 அக்டோபர் 21 இல் தொடங்கப் பெற்ற நிலையில், IATR அமைப்பு இந்த ஆய்விதழை அதே பெயரில் ( Journal of Tamil Studies ) நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதனை விளைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழை வெளியிட்டு வருகிறது. இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ' Journal of Tamil Studies ' இதழ் தனிநாயகம் அடிகள் தொடங்கிய ' Tamil Culture ' என்னும் இதழின் மறு அவதாரமே தவிரப் புதியதன்று என்பதையும், ' Tamil Culture ' நின்றுவிடவில்லை என்பதையும் இவ்வரலாறு தெரிவிக்கிறது. இதழினன வாசிக்க ... உள்ளே

Center For Asia Studies

கூகுளில் தேடுங்கள்!

SHAADI.COM: Matrimonial Service

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!

 Welcome to the home page of the Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures project..Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

Raga Surabhi

Raga Surabhi is a small effort to create more awareness on Carnatic music.  We would like to dedicate this site to those music lovers, who listen to Carnatic music with great interest and enthusiasm, but have not had enough opportunity to learn about identifying and appreciating ragas. Read More

இணையத்தில் வர்த்தகம் செய்ய..

இணையத்தில் நீங்களும் வர்த்தகம் செய்யலாம். பொருட்களை, உங்கள் சேவைகளை விற்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இணையத்தில் நீங்கள் வர்த்தகம் செய்வதை PayPal மிகவும் இலகுவாக்குகின்றது. இப்பொழுதே PayPalஇல் இணைவதன் மூலம் இணையத்தில் நீங்களும் பணம் சம்பாதிக்கலாமே. இணைவதற்கு கீழுள்ள 'பட்டனை' அழுத்துங்கள்

Steve Jobs

The Wealthy Barber Returns

The Ediot By Fyodor Dostoyevsky

Internet Riches: The Simple Money-Making Secrets of Online Millionaires By Scott Fox

Get Rich Click!: The Ultimate Guide to Making Money on the Internet

How I Made My First Million on the Internet and How You Can Too! By Ewen Chia

Canadian Immigration Made Easy - 2nd Edition By Tariq Nadeem

Awaken the Giant Within: How to Take Immediate Control of Your Mental, Emotional, Physical and Financial

The Phantom The Complete Series: The Gold Key Years Volume One [Hardcover]

Sell your books to Powell's

Sell your books to Powell's


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -