பதிவுகள்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
வ.ந.கிரிதரன் பக்கம்

வாசிப்பும், யோசிப்பும் 231: தமிழ்க்கவியின் கட்டுரையும் அது தொடர்பான சர்ச்சையும் பற்றி...

E-mail Print PDF

தமிழ்க்கவிதமிழ்க்கவியின் கிளிநொச்சியும், மலையகத்தமிழரும் -தமிழ்க்கவி' என்ற கட்டுரை வாசித்தேன். நல்லதோர், ,அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. நல்லதோர் ஆய்வுக்கட்டுரையாக வந்திருக்க வேண்டிய கட்டுரை மேலும் பல தகவல்களை உள்ளடக்காமல் போனதால் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளிலொன்றாக வரமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக வட, கிழக்கில் பெருமளவு மலையகத்தமிழர்களை எழுபதுகளில் குடியேற்றிய காந்திய அமைப்பு பற்றி எந்தவிதத்தகவல்களுமில்லை.
அது தவிர கட்டுரை சிறப்பானதொரு கட்டுரை.

கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழுள்ள விடயங்களுக்காக இணையத்தில் பலர் தமிழ்க்கவியைத் தாக்கி வருகின்றார்கள்.

1. "மலையகத்தில் இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறோம். என்ன அங்கை குளிர் இங்கை வெயில். அவ்வளவுதான் என்றார் ஒரு முதியவர். இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங் கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும் பத்தில் பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத் தாட்சி இல்லை என்றபோது அப்பிள்ளை களின் தாய், தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.

Last Updated on Thursday, 20 April 2017 07:19 Read more...
 

சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு

E-mail Print PDF

சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் [சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் வல்லுபுரத்திலேயே இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்து. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆய்வின் இரண்டாம் பதிப்பு நூலாக வெளிவரும்போது இந்தக் கட்டுரையும் உள்ளடக்கியே வெளிவரும். இக்கட்டுரை ஏற்கனவே திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது மீள்பிரசுரமாக வெளிவருகிறது ஒரு பதிவுக்காக.. - வ.ந.கி -] சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார்.

Last Updated on Friday, 08 July 2016 19:05 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 230: போராட்ட அனுபவங்களை ஆவணப்படுத்தல் பற்றி..

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும்எழுத்தாளர் கடல்புத்திரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் 1984 -1987 வரையிலான காலப்பகுதியில் வடக்கு அராலிப்பொறுப்பாளராக இயங்கியவர். இவரைப்போல் பல இளைஞர்கள், சிறுவர்கள் அக்காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் போராளிகளாக யாழ்ப்பாணத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இயங்கியவர்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் படிப்படியாக போராட்டம் சென்று கொண்டிருந்த வேளை அது. இருந்தாலும் வடகிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் இவர்களைப்போன்றவர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சின்னமெண்டிஸின் மறைவு வரை மட்டும் இயங்கிப் பின் முற்றாக இயக்க நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் மனத்தளர்ச்சியுடன் போராட்டத்திலிருந்து அமைதியாக ஒதுங்கிப்போனவர்களில் இவருமொருவர்.

அண்மையில் இவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன் " நீங்கள் ஏன் உங்கள் காலகட்ட இயக்கச் செயற்பாடுகளை எழுதி ஆவணப்படுத்தக் கூடாது " என்று. இவரைப்போல் பின் தளத்தில் இறுதிவரை இயங்கிய போராளிகள் யாரும் தம் அனுபவங்களைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. இதுவரை பதிவு செய்தவர்கள் அனைவரும் பல்வேறு இயக்கங்களிலும் முன்னணியில் இருந்த ஆரம்பக்காலத்தைச் சேர்ந்தவர்களே (எல்லாளன் ராஜசிங்கத்தின் போராட்ட அனுபவக்குறிப்புகள் தவிர) என்று நினைக்கின்றேன்.

இவரைப்போன்றவர்கள் பதிவு செய்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்வருமாறு பட்டியலிடலாம்:

Last Updated on Thursday, 20 April 2017 22:04 Read more...
 

அருவியில் நீராடியபோது அருவியெனக் கொட்டியது கண்ணீர்! முடிவில் ஆனந்தக்கண்ணீர். 'அருவி' குறும்படம் பற்றிய குறிப்புகள்.

E-mail Print PDF

அருவியில் நீராடியபோது அருவியெனக் கொட்டியது கண்ணீர்! முடிவில் ஆனந்தக்கண்ணீர். 'அருவி' குறும்படம் பற்றிய குறிப்புகள்.அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை நண்பர் ரதன் அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒரு நீள்படத்தை விட இக்குறும்படம் விளங்கியது. அம்புலி மீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறும்படமான 'அருவி' இன்றைய சூழலில் புகலிடச்சூழலில் வாழும் தமிழ்ப்பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

இக்குறும்படம் டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளதையும், நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் உத்தியோகபூர்வத் தேர்வு விருதினையும் மற்றும் டொரோண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினையும் பெற்றுள்ளதையும் குறும்படத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

பணம், பணம் என்று ஓடி அலையும் பலர் குழந்தைகளை, அவர்களது விருப்பு வெறுப்புகளைக் கவனிக்கத்தவறுகின்றார்கள். குழந்தைகளின் திறமைகளைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொண்டும் அவை பற்றிக்கவனத்திலெடுக்காமல், தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப குழந்தைகளை வளர்க்க முற்படுகின்றார்கள். தம் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மேல் திணிக்கின்றார்கள்.

Last Updated on Sunday, 16 April 2017 08:01 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 229 : எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவின் தாயகம் (கனடா) புகலிடத்தமிழர்களின் முக்கியமான பத்திரிகை / சஞ்சிகைகளிலொன்று.

E-mail Print PDF

எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.'தாயகம்' சஞ்சிகை அட்டை...புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இந்தப்பத்திரிகை /சஞ்சிகையினை நடத்தியவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.

ஜோர்ஜ் இ.குருஷேவ் விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளை விமர்சித்து எழுதியவர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் ஆயுதபோராட்டம் முடிந்து, மெளனித்ததன் பின்பு ஆக்ரோஷமாக விமர்சித்து வருவதைப்போல் அல்லாமல் , விடுதலைப்புலிகளின் காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதியவர். அதேசமயம் தான் ஆசிரியராக, பதிப்பாளராகவிருந்து வெளியிட்ட தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் அனைத்து அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் இடம் கொடுத்தார். அவர்கள்தம் படைப்புகளைப் பிரசுரித்தார். தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது.

தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா!' தொகுப்பினை அச்சிட்ட அச்சியந்திரமும் அதுவே. அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) )சுமார் ஐந்து வருடங்கள் வரையில் 'தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

தாயகம் (கனடா) பத்திரிகை /சஞ்சிகையின் 50 இதழ்களைப் 'படிப்பகம்' (http://padippakam.com ) இணையத்தளத்தில் வாசிக்கலாம். தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையிலேயே கவிஞர் கந்தவனம் அவர்களின் மணிக்கவிதைகள்' முதலில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Friday, 07 April 2017 22:07 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 228: கவிஞர் பிரமிள் சுட்ட 'தவளைக்கவிதை'யும், அதற்கான மூலமும் பற்றி.....

E-mail Print PDF

பிரமிள்:  கவிஞர் பிரமிள் சுட்ட 'தவளைக்கவிதை'யும், அதற்கான மூலமும் பற்றி.....' பிரமிளின் தவளைக்கவிதை பற்றியதொரு புரிதல்.' என்னுமொரு கட்டுரையினை ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன்.முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அதில் மேற்படி கவிதை பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1539:-17-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54


அந்தக் கட்டுரையில் நான் பிரமிள் அவர்களின் 'தவளைக்கவிதை' பற்றிக்குறிப்பிட்டிருந்ததுடன் இப்பதிவினை வாசிப்பது நல்லதென்பதால் அக்கட்டுரையில் அக்கவிதை பற்றிய எனது புரிதலின் சாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு மேலே செல்வோம். ஏனெனில் இப்பதிவானது அவரது அக்கவிதையின் தோற்றத்துக்கான மூலம் பற்றியது என்பதால் அக்கட்டுரை பற்றி மீண்டுமொருமுறை பார்ப்பதும் அவசியமானதே. அக்கட்டுரையின் அக்கவிதை பற்றிய கருத்துகளின் சாரம் வருமாறு:

"நூறு புத்தி உள்ள மீனை எடுத்துக் கோத்திட முடிந்தது ஈர்க்கில். மீன் பெருமைப்பட்ட புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. இது போல் தன் புத்தி அதனிலும் அதிகமென்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி விட்டால், அதன் மேல் கல்லை ஏற்றி வைத்து விட்டால், அதன் கதை அவ்வளவுதான். அதனால் மீண்டும் நிமிர்ந்திட முடிகிறதா? ஆமை பெருமைப்பட்ட அதன் புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியுமா? ஆனால் இவற்றுடன் ஒப்பிடும்பொழுது குறைந்தளவே புத்தி உடையதாகக் கூறிக்கொள்ளும் தவளையை மட்டும் பிடிக்க முடிந்ததா? இங்கு கவிஞர் தவளையைக் கவிதையாக உருவகிக்கின்றார். அந்தத் தவளையோ கைகளுக்கு அகப்படாமல் தத்தித் தத்திச் செல்கிறது. இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையைத் தவளையாக உருவகித்திருப்பதால் (தவளை கவிதை என்று கூறாமல் , தவளைக்கவிதை என்று கூறியிருப்பதால்; தவளை கவிதை என்று கூறியிருந்தால், தவளையும் கவிதையும் என்று பொருளாகியிருக்கும்), நூறு புத்தியுள்ள மீனையும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையையும் ஏனைய பிரிவுகளாகக் கருதலாம். ஒரு விதத்தில் நூறு புத்தியுள்ள மீனை சிறுகதைக்கும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையை (ஆடி அசைந்து நிதானமாகச் செல்வதால்) நாவலுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிறுகதை எழுதுவதற்குரிய அறிவுத் தேடலை விட நாவல் எழுதுவதற்குரிய தேடல் மிக அதிகம். அதனால்தான் சிறுகதைக்குரிய அறிவுத் தேடலை நூறு புத்தியாகவும், நாவலுக்குரிய தேடலை ஆயிரம் புத்தியாகவும் எழுத்தாளர் கருதுகின்றார். ஆனால் கவிதைக்குரிய அறிவுத் தேடல் அதிகமாக இல்லாவிட்டாலும் (அதனால்தான் தவளைக் கவிதை தனக்கு ஒரு புத்தி என்கின்றது), மேலும் ஏனைய பிரிவுகளை விட , கவிதையானது உணர்ச்சியின் விளைவாக உருவாவது. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளுக்குத் தேவையான அறிவுத்தேடலும், ஆக்குவதற்குரிய நேரமும் இதற்குத் தேவையில்லை. ஆனால் , நல்லதொரு கவிதையினை உருவாக்குவது சிறுகதையினை எழுதுவதை விட, நாவலொன்றினை எழுதுவதை விடச் சிரமமானது. அதனால் தான், கவிதையானது எழுத்தாளரின் பிடிக்குள் அகப்படாமல் தத்தி, நழுவிச் செல்கிறது. அதனால்தான் எழுத்தாளர் கவிதையினைத் தவளையாக உருவகிக்கின்றார்...... கவிதையைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளைவிட எழுதுவது மிகவும் இலகுவானதென்று பலர் எண்ணி விடுகின்றார்கள். அதனால்தான் புற்றீசல்கள்போல் தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் முளைத்து விடுகின்றார்கள். உண்மையில் பிரமிள் புற்றீசல்கள்போல் படையெடுத்த புதுக்கவிஞர்களால் நிறைந்துவிட்ட அன்றைய தமிழ் இலக்கியப் பரப்பின் மீதான விமர்சனமாகத்தான் மேற்படி 'தவளைக்கவிதை' என்னும் கவிதையினை எழுதியிருக்கின்றாரென்று படுகிறது. கவிதை எழுதுவதை மிகவும் இலகுவாக எண்ணி ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் பொழிந்து தள்ளும் கவிஞர்களை நோக்கி, 'நீங்கள் மிகவும் இலகுவாகக் கருதிப் படைக்கின்றீர்களே கவிதைகள். அவை கவிதைகளே அல்ல. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளை விடக் கவிதை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது.' என்று சாடுகின்றார் பிரமிள். ........ ஆயிரக்கணக்கில் புற்றீசல்களைப் போல் பெருகியிருக்கும் தமிழ்க் கவிஞர்கள். கவிதையோ இவர்களின் கைகளில் அகப்படாமல் தத்தித் தத்தி ஓடுகிறது. இவர்களும் அதன் பின்னால் தத்தித் தத்தி ஓடுகின்றார்கள். ஆனால் கவிதைதான் இவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. இவர்கள் கவிஞர்களா? பித்தர்கள் இவர்கள் என்று சாடுகின்றார். மேற்படிக் கவிதைக்குத் 'தவளைக் கவிதை' என்று தலைப்பிட்டுள்ளதால் கவிதையின் முதன்மைப் பொருள் சமகாலத் தமிழ்க் கவிதையும் அதனைப் படைக்கும் கவிஞர்களும். மேலும் மேற்படி கவிதையினை இன்னுமொரு கோணத்திலும் அணுகலாம். எதற்காகக் கவிதையினைத் தவளைக் கவிதை என்றார்? குறைந்த அளவு அறிவுத் தேடலும் ஆயிரக்கணக்கில் பிரசவிக்கப்படும் இன்றைய தவளைக் கவிதையானது தத்தித் தத்தித் தப்பிப் போகுது. எதனிடமிருந்து உண்மைக் கவிதையிடமிருந்து. தவளைக்கு இன்னுமொரு பெயர் மண்டூகம். மண்டூகம் என்பதற்கு இன்னுமொரு பொருள்: மண்டுகளின் ஊகம். அதாவது முட்டாள்களின் ஊகம். ஆக, இன்றைய தமிழ்க் கவிதையானது மண்டுகளின் ஊகம் என்று சாடுகிறாரோ பிரமிள்?"

இவ்விதம் அப்பதிவினில் எழுதியிருந்தேன். இனி இப்பதிவுக்கு வருவோம்.

Last Updated on Sunday, 02 April 2017 02:22 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 227 : அழியாத கோலங்கள் - வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்!

E-mail Print PDF

ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'

* 'அழியாத கோலங்கள்: வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்' இப்பகுதியில் அக்காலகட்டத்தில் நான் வாசித்த தொடர்கள் பற்றிய விபரங்கள், ஓவியங்கள், அட்டைப்படங்கள் என்பவை நன்றியுடன் பிரசுரமாகும். *


ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்''கல்கி' சஞ்சிகை தனது வெள்ளிவிழாவினையொட்டி நடாத்திய நாவல் போட்டியில் முதற்பரிசினை உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' நாவலும், இரண்டாம் , மூன்றாம் பரிசுகளை ர.சு,நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', மற்றும் 'பி.வி.ஆர் எழுதிய 'மணக்கோலம்' ஆகிய நாவல்கள் பெற்றன.

'முள்ளும் மலரும்' நாவலுக்கு ஓவியர் கல்பனாவும், 'கல்லுக்குள் ஈரம்' நாவலுக்கு ஓவியர் வினுவும், 'மணக்கோலம்' நாவலுக்கு ஓவியர் விஜயாவும் ஓவியங்கள் வரைந்திருப்பார்கள்.

என் அப்பாவின் கருத்துப்படி முதற் பரிசு பெற்றிருக்க வேண்டிய நாவல் ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'. என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்தும் அதுவே. உண்மையில் 'முள்ளும் மலரும்' நாவல் 'பாசம்' திரைப்படத்தில் வரும் உப கதையான அசோகன்/கல்யாண்குமார்/ஷீலா கதையின் தூண்டுதலால் உருவானதோ என்று கூட எனக்குச் சந்தேகம் வருவதுண்டு. அது பற்றி இன்னுமொரு சமயம் என் கருத்தினை விரிவாகவே பகிர்வேன்.

உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' சமூக நாவல். ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட சமூக, அரசியல் வரலாற்று நாவலென்று கூறலாம். நாவல் இறுதியில் மகாத்மாவின் மரணத்தை மையமாக வைத்து நடைபோடும். நாவலின் பிரதான பாத்திரங்களான ரங்கமணி, திரிவேணி ஆகிய பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.

Last Updated on Tuesday, 28 March 2017 07:05 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 226 : கலாப்ரியாவின் 'உருள் பெருந்தேர்' ஓடிய என் மனப்பாதையில் அது பதித்த தடங்கள்....

E-mail Print PDF

எழுத்தாளர் கலாப்ரியாஎழுத்தாளர்களின் பால்ய காலத்து அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களை, மொத்தத்தில் அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வமுண்டு. முக்கிய காரணம் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வெறும் அபுனவுகளாக  மட்டும் இருந்து விடாமல் இலக்கியச்சிறப்பு மிக்கதாக, கலைத்துவம் மிக்கதாகவும் இருக்கும். ஒளிவு, மறைவு இல்லாமல் அவர்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மை நெஞ்சினைத்தொடும்.

எழுத்தாளர்களின் அபுனைவுகளில் மட்டுமல்ல அவர்கள்தம் புனைவுகள் கூட சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக அப்புனைவுகள் இருந்து விடுவதுதான். புகழ் பெற்ற உலகப்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகள் அவர்கள் சிந்தனைகளின், வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருப்பதை அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அறிய முடிகின்றது.

மேலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் தெரிவிக்கும் புதுத்தகவல்கள் ஒரு காலகட்ட வரலாற்றுச்சின்னங்களாக விளங்கும். காலமாற்றத்தில் காணாமல் போனவற்றையெல்லாம் அவர்கள்தம் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிப்பின்பத்துடன் எம்மையும் எம் கடந்த காலத்துக்கே அழைத்துச்சென்று விடுகின்றன.

அண்மையில் என் நெஞ்சினைத்தொட்டதொரு எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவங்களினை வெளிப்படுத்தும் புத்தகமொன்றாக எழுத்தாளர் கலாப்ரியாவின் வாழ்வு அனுபவங்களின் தொகுப்பான '  ' என்னும் நூலினைக் குறிப்பிடலாம். இன்றுதான் டொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் அதனை இரவல் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை வாசித்த நூலில் வரும் அவர் வாழ்வில் வந்து போன மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் நெஞ்சினைத்தொட்டன என்று மட்டும் கூறிவிடமுடியாது. வாசித்த பின்னரும் நெஞ்சினை வாட்டும் வகையில் கலாப்ரியாவின் அனுபவங்கள் நெஞ்சினை உலுக்கு விட்டன என்றே கூற வேண்டும்.

Last Updated on Wednesday, 15 March 2017 23:43 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 225 : சாத்திரியின் 'ஆயுத எழுத்து'

E-mail Print PDF

சாத்திரியின் 'ஆயுத எழுத்துசாத்திரிஅண்மையில் சாத்திரியின் 'ஆயுத எழுத்து' வாசித்தேன் அவ்வாசிப்பு பற்றிய என் கருத்துகளே இப்பதிவு. சாத்திரியின் 'ஆயுத எழுத்து' நூலின் முக்கியம் அது கூறும் தகவல்களில்தானுள்ளது.தமிழினியின் அபுனைவான 'கூர்வாளின் நிழலில்' நூலின் ஞாபகம் சாத்திரியின் புனைவான 'ஆயுத எழுத்து' நாவலை வாசிக்கும்போது எழுந்தது. தமிழினியின் அபுனைவு சுயசரிதையாக, தான் சார்ந்திருந்த அமைப்பின் மீதான சுய விமர்சனமென்றால், 'ஆயுத்த எழுத்து' தான் அமைப்பிலிருந்த அனுபவங்களின் அடிப்படையில் தன்அனுபவங்களை, தான் அறிந்த விபரங்களைக்கூறும் புனைவாகும். புனைவென்பதால் இந்நாவல் கூறும் விடயங்கள் சம்பந்தமாக யாரும் கேள்வி எழுப்பினால், 'இது அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட நாவல்' என்று கேள்வி கேட்டு தப்பிப்பதற்கு நிறையவே சாத்தியமுண்டு. தமிழினியின் 'கூர்வாளின் நிழலில்' ஆவணச்சிறப்பு மிக்கதாக, கவித்துவ மொழியில் ஆங்காங்கே மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக, மானுட நேயம் மிக்கதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கும் அபுனைவுஎன்றால், சாத்திரியின் 'ஆயுத எழுத்து'ம் தவிர்க்கப்படக்கூடியதல்ல. ஆவணச்சிறப்பு மிக்க புனைவான 'ஆயுத எழுத்து' நாவலில் ஆங்காங்கே அங்கதச்சுவை மிக்கதாக, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அங்கதச்சுவையுடன் ஆரம்பத்தில் 'டெலி' ஜெகன் பற்றிய பகுதி அமைந்திருக்கின்றது. அவ்விதமான அங்கதச்சுவை மிக்கதாகவே முழு நாவலும் அமைந்திருந்தால் 'ஆயுத எழுத்து' அற்புதமான, இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் அமைந்திருக்குமென்பது என் தனிப்பட்ட கருத்து. உண்மையில் அங்கதச்சுவை மிக்கதாக 'டெலி' ஜெகன் பற்றிய பகுது இருப்பதால், நூலினை படித்து முடிந்தும் கூட, நூலில் கூறப்பட்ட முக்கியமான பல தகவல்களையும் விட 'டெலி' ஜெகனின் இயக்க நடவடிக்கைகள் பற்றிய விபரிப்புகளும், அவரது துயரகரமான முடிவும் நெஞ்சில் நிற்கவே செய்கின்றன. அவரது இயக்க நடவடிக்கைகளை ஆசிரியர் அங்கதச்சுவை மிக்கதாக விபரித்திருந்தாலும்,வாசிக்கும் ஒருவருக்கு ஜெகனின் தாய் மண் மீதான பற்றும், அதற்கான விடாப்பிடியான போராட்ட முன்னெடுப்புகளும் நெஞ்சில் படமென விரிகின்றன. அதுவே ஆசிரியரின் எழுத்துச்சிறப்பு. அதனால்தான் கூறுகின்றேன் சாத்திரி அந்த நடையிலேயே முழு நாவலையும் படைத்திருக்கலாமே என்று.
Last Updated on Thursday, 02 March 2017 23:15 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 224: கவிதை - கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 224: கவிதை - கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..இந்தக் கவிதை கவிஞனொருவனின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளிலொன்று. இது போன்ற அனுபவங்களை பலவற்றை இன்று இணையம் சாத்தியமாக்கியிருக்கின்றது. நண்பனொருவனை நீண்ட காலத்தின் பின் சந்தித்தபொழுது அவன் தன் முதற் காதல் பற்றியும், முகநூல் அனுபவம் பற்றியும் தன் உணர்வுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டான். அப்பொழுது அவன் கூறினான் 'ஒரு காலத்தில் அவன் நெஞ்சினை ஆட்டி வைத்த அந்தப்பெண் இன்று குடும்பம், குழந்தைகள் என்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதாகவும், அவளைத்தான் முகநூலில் மீண்டும் சந்தித்தபொழுது அது தனக்கு மகிழ்ச்சியினைத் தந்ததாகவும், உண்மையில் அவள் மகிழ்ச்சியுடன் வாழ்வது தனக்கு இன்பத்தைத்தந்ததாகவும்' அவன் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டான்.

உண்மையில் முகநூல் ஆரோக்கியமான பல விடயங்களைச் சாதித்திருக்கின்றது. என் பால்ய காலத்து நண்பர்கள் பலரை மீண்டும் சந்திக்க வைத்திருக்கின்றது. இழந்த உறவுகள் பலவற்றை மீண்டும் புதுப்பித்திருக்கின்றது. புதிய உறவுகளை அறிய வைத்திருக்கின்றது.

அந்த நண்பனுக்காக , அவன் உணர்வுகளுக்காக எழுதிய சிறு கவிதை இது.

கவிதை: கவிஞனொருவனின் நினைவுக் குறிப்புகள்..

- வ.ந.கிரிதரன் -

இன்னும் ஞாபகத்திலிருக்கிறது
அதிகாலைகளில்
அந்திப்பொழுதுகளில்
நீ
ஆடி அசைந்து நடை பயின்ற
அந்தப்பொழுதுகள்.
உனது அந்தக் காந்தக் கண்கள்,
ஓரக்கண்களால் பார்த்தும் பார்க்காததுபோல்
பார்த்து நீ
சந்திகளில் திரும்புவது,
இன்னும் நினைவுப்பூங்காவில்
மணக்கும் மலர்களிலொன்றாக
பூத்துத்தான் குலுங்குகிறது.
எனக்கு உன்னிடம் பிடித்ததே
உனது அந்தப்புன்னகைதான்.
கண்களும், உன் இதழ்களும்
கூடி உருவாகுமொரு கவிதை அது.
மின்னலென என் இதய வானில்
வந்ததுபோலவே நீ
ஒரு நாள் ஒளிந்து போனாய்.

Last Updated on Wednesday, 22 February 2017 21:24 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 223 : 'The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan' by Dr.R.Dharani

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 223 : 'The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan' by Dr.R.Dharaniமுனைவர் ஆர்.தாரிணிமுனைவர் ஆர்.தாரிணி அவர்கள் என் படைப்புகள் பற்றித் தமிழகத்தில் ஆய்வுகட்டுரைகளை ஆய்வரங்குகளில் சமர்ப்பித்திருக்கின்றார். அவர் பெப்ருவரி 11, 2017 அன்று தமிழகத்தில் நடந்த ஆய்வரங்கொன்றில் கடந்த வருடம் வெளியான 'குடிவரவாளன்' (Am Immigrant) நாவல் பற்றியும் ஆய்வுக்கட்டுரையொன்றினை 'The Dark Night of the Soul : A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan' என்னும் தலைப்பில் சமர்ப்பித்திருப்பதாக அறியத்தந்திருந்தார். அந்த ஆய்வுக்கட்டுரையானது 'Scholarly International Multidisciplinary Print Journal' ஆய்விதழின் ஜனவரி-பெப்ருவரி 2017 இதழில் பிரசுரமாகியுமுள்ளது. அவ்வாய்விதழின் முகப்புப் படத்தையும், அதில் பிரசுரமாயுள்ள முனைவர் தாரிணியின் கட்டுரையின் முதற்பக்கப் போட்டோப்பிரதியையும் ஒரு பதிவுக்காக இங்கே பதிவு செய்வதுடன் , 'பதிவுகள்' வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.

Last Updated on Monday, 20 February 2017 06:36 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 222 : சண்முகம் முத்துலிங்கம் மறைவு (Sanmugam Muttulingam)

E-mail Print PDF

சண்முகம் முத்துலிங்கம்சண்முகம் முத்துலிங்கம்நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது முகநூல் பதிவொன்றில் சண்முகம் முத்துலிங்கம் (Sanmugam Muttulingam) அவர்களின் மறைவு பற்றிய செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். அறிந்தபோது உண்மையிலேயே அதிர்ச்சியாகவிருந்தது. இரு நாட்களுக்கு முன்புகூடத் தனது முகநூலில் பதிவுகள் பலவற்றை இட்டிருந்தாரே. மிகவும் துயர் தருவது. அண்மையில்கூட எழுத்தாளரும் இவரது நண்பருமான நந்தினி சேவியர் அவர்களின் இவரது உடல் நலம் பற்றிய குறிப்பொன்றுக்கான தனது பதிலினைத் தனது முகநூலில் பின்வருமாறு பகிர்ந்துகொண்டிருந்தார்.

"//விரைந்து குணமடைக முத்தரே. (நந்தினி)// அப்பனே நந்தினி, 52 வருடத்தோழனே, உன் அன்புக்கு ... நன்றி ... மூன்றாவது மார்படைப்பிலிருந்து மீண்டுள்ளேன். உடல், மனம், இரண்டுக்கும் போதிய ஓய்வு கொடுக்கிறேன். முகநூல் -- எனது மூளைக்குத் தேவையான உயிர்ப்பைத் தருகிறது ... எனது உடல் யாழ் மருத்துவ பீடத்துக்குத் தானம் என்றும், மரணச்சடங்கு என எதுவிதமான கேலிக்கூத்தும் இருக்கக்கூடாது எனவும், வீட்டில் உறுதியாகச் சொல்லி வைத்துள்ளேன். உடல் இயங்கும் போதே உனக்கும், என்மீது அன்புள்ள யாவர்க்கும், உங்கள் அன்புக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன் ! இறுதி மூச்சு வரை -- "மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் ..." வாழ்வேன் ! :-) 'கிழட்டுக்கிளி' சண்முகம் முத்துலிங்கம்."

Last Updated on Wednesday, 15 February 2017 05:27 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 222 : தமிழக அரசியல் நெருக்கடியும், சசிகலாவும்.

E-mail Print PDF

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா'சின்ன அம்மா' சசிகலாவுக்கு அ.தி.மு.கவினரின் சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தமிழக ஆளுநர் அவரை அழைத்து அவருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். சசிகலாவால் முடியாவிட்டால் தற்காலிக முதல்வர் பன்னீர்செல்வத்தை அவருக்குத்தான் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென்பதை நிரூபிக்க அழைப்பு விடுக்க வேண்டும். இருவருக்கும் தம் கட்சிச் சட்டசபை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில் தி.மு.க.வினருக்குச் சந்தர்ப்பம் வாய்க்கலாம். ஒருத்தராலும் இப்பரீட்சையில் வெற்றியடைய முடியாவிட்டால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டு, சட்டசபைத்தேர்தல் நடத்தப்படலாமென்று கருதுகின்றேன். ஆனால் இதுபற்றி இந்தியத் தேர்தல் சட்டதிட்டங்களை அறிந்த வல்லுநர்கள்தாம் சரியான கருத்துகளை முன் வைக்க வேண்டும்.

'அரசியல் கோமாளி' என்று சுப்பிரமணிய சுவாமியைக் கூறினாலும், அவர் இந்தியச் சட்டதிட்டங்களை அறிந்த அரசியல்வாதி.  அவர் சசிகலாவை அழைப்பதில் ஆளுநர் ஏன் தாமதம் செய்கின்றார் என்று கருத்துத்தெரிவிக்கின்றார். அதில் நியாயம் இருப்பதாகவே கருதுகின்றேன்.

தமிழக ஆளுநரின் பொறுப்பு தன் கடமையைச் சட்டரீதியாகச்செய்வது. சசிகலா, பன்னீர்ச்செல்வத்தின் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மக்கள் கூறுவதை வைத்து அவர் செயற்பட முடியாது. அவ்விதம் அரசியல்ரீதியாக அவர் செயற்படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவ்விதம் அனுமதிப்பது பின்னர் பாரதூரமான விளைவுகளைத் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும்.

Last Updated on Sunday, 12 February 2017 21:18 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 221: வரதபாக்கியானின் (புதுவை இரத்தினதுரை) கவிதை ஒன்று: 'புலிகள் ஆவோம்'

E-mail Print PDF

கவிஞர் புதுவை இரத்தினதுரைஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது கவிதைகள் ஈட்டி போல் நெஞ்சினைக் குற்றுபவை. உணர்ச்சிமிக்க உரிமைக் குரலாக ஒலிப்பவை. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுக் கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் அவருமொருவர். அவரது அரசியற் கருத்துகளுக்கு அப்பால் ஈழத்துத தமிழ்க் கவிதையுலகில் தடம் பதித்த முக்கியமான கவிஞர்களில் அவருமொருவர். முக்கியமான கவிஞர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார். அவரைப்பற்றிய எவ்விதத்தகவல்களும் இதுவரை இல்லை. இலங்கை அரசாங்கம் இறுதியில் காணாமல் போனவர்கள் பற்றி வாய் திறப்பதற்கு இறுதியில் புதுவை இரத்தினதுரையின் காணாமல் போதல் வழி வகுக்கலாம். புதுவை இரத்தினதுரையை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகம் அவ்வளவு இலேசாக மறந்து விடப்போவதில்லை. தேசிய அரசியலுக்கு அப்பால் ஈழத்தின் வர்க்க விடுதலைக்காகப்போர்க்குரலாக ஒலித்த அவரது குரலை ஈழத்து முற்போக்கு இலக்கியம் அவ்வளவு இலேசில் மறந்து விடாது.

எழுபதுகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட 'குமரன்' இதழில் நிறைய கவிதைகளை வரதபாக்கியான் என்னும் பெயரில் எழுதியிருக்கின்றார். அவரது அக்காலகட்டத்துக் கவிதைகளினூடாக அவரை அணுகுவது அவரது கவிதைகள் பற்றிய திறனாய்வுக்கு , அவரது போர்ச்சுவாலைகளாகத் திகழ்ந்த கவிதைகளை அறிந்து கொள்வதற்குரிய நல்லதோர் அணுகுமுறை.

Last Updated on Saturday, 28 January 2017 22:35 Read more...
 

வாசிப்பும்,யோசிப்பும் 220: முருகபூபதியின் 'சொல்ல மறந்த கதைகள்' பற்றி நான் சொல்ல மறக்காத எண்ணங்கள் சில.. -

E-mail Print PDF

வாசிப்பும்,யோசிப்பும் 220: முருகபூபதியின் 'சொல்ல மறந்த கதைகள்' பற்றி நான் சொல்ல மறக்காத எண்ணங்கள் சில.. - வ.ந.கிரிதரன் =எழுத்தாளர் முருகபூபதிஎழுத்தாளர் முருகபூபதியின் எழுத்துகளை நான் விரும்பிப்படிப்பவன். குறிப்பாக அண்மைக்காலமாக அவர் எழுதிவரும் கட்டுரைகள் பல காரணங்களினால் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆவணப்பதிவுகளாகவும், இலக்கியச்சிறப்பு மிக்க பிரதிகளாகவும் அவை இருப்பதற்கு முக்கிய காரணம் அவர் சிறந்த ஊடகவியலாளராகவும், அதே சமயம் இலக்கியப்படைப்பாளியாகவும் இருப்பதுதான். இதனால்தான் அவரது எழுத்து வாசிப்பதற்குச் சுவையாகவும், அவற்றில் காணப்படும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் பிரமிப்பூட்டுவனவாகவும் இருக்கின்றன. அவரது 'சொல்ல மறந்த கதைகள்' தொகுதியினை அண்மையில் வாசித்தேன். தமிழகத்திலிருந்து சிபிச்செல்வனின் 'மலைகள்' பதிப்பகத்தினூடு மிகவும் நேர்த்தியாக வெளிவந்துள்ள நூலிது. இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் யுகமாயினி (சஞ்சிகை), உதயம் (இதழ்) ஆகிய இதழ்களிலும், தேனீ இணையத்தளம், அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்தளம் மற்றும் பதிவுகள் இணைய இதழ், நடேசனின் வலைப்பதிவு மற்றும் மேலும் சில இதழ்கள், இணையத்தளங்களில் வெளிவந்ததாகத் தனது முன்னுரையில் மறக்காமல் பதிவு செய்திருக்கின்றார். 'இலக்கியத்தால் ஒன்றுபடுவோம்' என்று அம்முன்னுரையினை முடித்திருக்கும் முருகபூபதி மேற்படி நூலினை 'கொடிய போர்களினால் உலகெங்கும் மடிந்த இன்னுயிர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்' என்று சமர்ப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்நூலிலுள்ள கட்டுரைகள் கூறும் விடயங்கள் பல் வகையின. முருகபூபதி ஊடகவியலாளராகவிருந்ததால், அரசியல்ரீதியாகவும், இலக்கியரீதியாகவும் அவருக்கு இன, மத, மொழி கடந்து பலருடனும் தொடர்புகள் இருந்திருக்கின்றன, அதனால் பலருடன் அவர் பழகும், பணி புரியும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக வாசகர்களான எமக்கு நல்ல பல அனுபவப் பதிவுகள் கட்டுரைகளாகக் கிடைத்திருக்கின்றன.

Last Updated on Friday, 27 January 2017 23:34 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 219: தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!'

E-mail Print PDF

தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!'

தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!'தமிழில் எனக்குப் பிடித்த முக்கியமான நாவலாசிரியர் தி.ஜானகிராமன். இவரது 'செம்பருத்தி', 'மோகமுள்', 'மலர் மஞ்சம்', மற்றும் 'அன்பே ஆரமுதே' ஆகிய நாவல்கள் இவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை. 'அன்பே ஆரமுதே' நாவலை என் பதின்ம வயதுகளில் வாசித்திருக்கின்றேன். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவலை அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நிலையில், ஓவியங்களுடன் வாசித்திருக்கின்றேன். அன்று இந்த நாவலை வாசித்ததற்கும், இன்று வாசிப்பதற்குமிடையில் நாவலை அனுபவிப்பதில், புரிந்து கொள்வதில் நிறையவே வித்தியாசங்களுள்ளன. ஏனென்றால் இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் இளம் வயதினரல்லர். முதுமையை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வயதினர். இவ்வயதினரின் உளவியலை பதின்ம வயதுகளில் புரிந்து கொள்வது வேறு. பாத்திரங்களின் வயதில் புரிந்து கொள்வதென்பது வேறு :-)

கதை இதுதான். அனந்தசாமி என்னும் சன்யாசி, சென்னையில் வாழும் மக்களுக்கு வர்க்க, சமூக வேறுபாடுகளற்ற நிலையில் நாட்டு வைத்தியம் செய்பவர். பந்தங்களைத் தன் இளவயதில் துறந்தவருக்குப் பந்தங்கள் அவரிடம் வைத்தியம் பார்க்கும் சென்னைவாசிகள்தாம். நாவல் அனந்தசாமியின் தாயாரின் மரணத்துடன் ஆரம்பமாகின்றது. அவருக்குச் சகோதர, சகோதரிகள் நல்ல நிலையில் இருந்தாலும், யாருமே வயதான தாயாரைத் தம்முடன் வைத்துப்பார்க்கத்தயாரில்லை. அனந்தசாமியே தாயாரைத்தன்னுடன் கூட்டி வந்து பராமரிக்கின்றார். இந்நிலையில்தான் தாயாரும் இறந்து விடுகின்றார். இவரிடம் வைத்தியம் பார்க்கும் செல்வந்தப்பெண்மணியொருத்திதான் நாகம்மாள். அவளுக்கு ஒரு மகள் சந்திரா.  காதல் தோல்வியால் துயரத்துக்குள்ளாகியிருப்பவள் சந்திரா.

Last Updated on Sunday, 22 January 2017 19:31 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 218: சல்லிக்கட்டு பற்றிய சிந்தனைகள்.. ; கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) நூல் பற்றி..

E-mail Print PDF

சல்லிக்கட்டுக் காளை!கவிதா பதிப்பக வெளியீடாக 'தினமணி: கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)'சல்லிக்கட்டுத்தடையைத்தொடர்ந்து அண்மைக்காலமாகத் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டம் பலரது கவனத்தையும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் பற்றிய விடயங்கள் மீது திருப்பியிருக்கின்றது. ஓரினத்தின் அடையாளங்களில் ஒன்றான அம்சமொன்றின் மீதான ஒருபக்கச்சார்பான தடையென்பது அதுவும் மத்திய அரசின் தடையென்பது நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகத்தையே விளைவிக்கும். சல்லிக்கட்டு விளையாட்டானது மிருக வதையென்றால் அதற்கான காரணங்களை விளக்கி, அதனைத்தடை செய்வதற்கான மக்களின் ஆதரவைப்பெற முயல வேண்டும். அதன் பின்னரே , அதற்கான ஆதரவு கிடைத்தால் மட்டுமே அதனைத்தடை செய்ய வேண்டும்.  இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால்..: சல்லிக்கட்டு என்பது மிருக வதையென்று மட்டும் கூறி விட முடியாது மனித வதையும் கூடத்தான். இவ்விளையாட்டில் மாடும் உயிரிழக்கலாம். அதனை அடக்க முயலும் மனிதரும் உயிரிழக்கலாம். அல்லது மாடும் படு காயமடையலாம். மனிதரும் படு காயமடையலாம். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் காளையை அடக்கப்புறப்படும் காளையர்கள் இவ்விளையாட்டில் தாம் எதிர்நோக்கும் வெற்றி, தோல்விகளை, அபாயங்களை உணர்ந்தே இறங்குகின்றார்கள். ஆனால் காளைகள் (எருதுகள் அல்லது காளைகள்) அவ்விதம் உணர்ந்தே இறங்குகின்றனவா என்பதை ஒருபோதுமே உணர முடியாது. ஆனால் அவை ஆக்ரோசமாகத் தம்மை எதிர்ப்போர் மீது பாய்வதைப்பார்க்கும்போது அவையும் இந்த விளையாட்டில் தீவிரமாகத் தம்மை ஈடுபடுத்துக்கொள்கின்றன என்பதை மட்டும் உணரலாம்.

Last Updated on Sunday, 22 January 2017 19:32 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 217 : 'மகுடம்' இதழின் கனடாச்சிறப்பிதழ். பற்றி......

E-mail Print PDF

'மகுடம்' இதழின் கனடாச்சிறப்பிதழ்'மகுடம் (கனடாச்சிறப்பிதழ்)' எழுத்தாளர் களப்பூரான் தங்கா அவர்கள் மூலம் கிடைத்தது. வி.மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராகக் கொண்டு , இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியாகும் கலை, இலக்கியச் சிற்றிதழான 'மகுடம்' இதழின் ஏப்ரல் - டிசம்பர் 2016 இதழ் கனடாச்சிறப்பிதழாக  கவிதைகள், சிறுகதைகள், மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கி வெளியாகியுள்ளது. சிறப்பிதழினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்ததும் விரிவாக என் கருத்துகளைப் பதிவிடுவேன். இதுவரையில் வாசித்த ஆக்கங்கள் பற்றிய கருத்துகளை மட்டும் இங்கு குறிப்பிடுவேன்.

கவிதைகளைப் பிரதீபா , தான்யா, இரா.குணசீலன், களப்பூரான் தங்கா, மாவலி மைந்தன் சி.சண்முகராசா, வல்வைக் கமல், முரளிதரன், த.அகிலன், அமரர் நா.ஜெயபாலன், எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மகனது பிறப்பு பற்றிய அனுபவம் தன்னைக் கவிஞனாக்கிய அனுபவத்தை இரா.குணசீலனின் 'வயிற்றறுத்து வரும் வம்சங்களுக்காக..' கவிதை வெளிப்படுத்துகிறது. வல்வைக் கமலின் 'காணாமல் போனவர்' கவிதை யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் ஏழினைக் கடந்த நிலையிலும் , காணாமல் போனவர் இன்னும் திரும்பாத நிலையினை எடுத்துரைத்து நீதி கேட்கின்றது. சர்வதேச மனிட உரிமை அமைப்புகளிடமெல்லாம் முறையிட்டும், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நீதி இன்னும் காணாமல் போய்த்தானுள்ளது என்பதை எடுத்துரைக்கும் கவிதை.

எஸ். லிங்கேஸ்வரனின் 'எறும்புகள்' கவிதை வானிலை அறிக்கை எதுவுமேயற்ற சூழலில் எறும்புகள் எவ்விதம் மழை வரப்போவதை அறிந்து ஒளிந்து கொண்டன என வியக்கின்றது. இவ்வகையான அனுபவங்கள் அவ்வப்போது அனைவருக்கும் ஏற்படுபவைதாம். சுனாமி ஏற்பட்ட சூழலில் மானுடர் அழிந்த அளவில் மிருகங்கள் அழியவில்லையென்றும், அவை சுனாமி வரப்போவதை உள்ளுணர்வால் அறிந்து , மேட்டு நிலங்களை நாடிச்சென்று தப்பி விட்டன என்றும் கூறக்கேட்டிருக்கின்றேன். அதனையே கவிதை நினைவூட்டியது. சாதாரண மானுட அனுபவமொன்று இங்கே கவிதையாகியிருக்கின்றது. இனிக்கின்றது.

Last Updated on Sunday, 22 January 2017 19:31 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 216 : எழுத்தாளர் மைக்கலின் முகநூல் கருத்துகள் பற்றி...; மஹாகவியின் 'புள்ளி அளவில் ஒரு பூச்சி!'; தமிழ்த்திரையுலகில் உண்மையான சகல கலா வல்லுநர் எஸ்.பாலச்சந்தர்!; இசை கேட்கும் நேரம் இது: உனது மலர் கொடியிலே. எனது மலர் மடியிலே. உனது

E-mail Print PDF

1. எழுத்தாளர் மைக்கலின் முகநூல் கருத்துகள் பற்றி...

- வ.ந.கிரிதரன் -நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது முகநூல் பதிவொன்றில் "தமிழிலக்கியம் ஏன் எப்போதுமே வாழ்வின் இருளையும்/துன்பங்களையும் பேசுகிறது? " என்றொரு கேள்வியினையும், "ஜப்பானில் காமிக்ஸ் நூற்கள்தான் மிக விற்பனையாகின்றனவாம். அப்படியொரு வாசிப்பை நாம் வழமைபடுத்தவேண்டும்." என்றொரு கருத்தினையும் "ஒரு படைப்பு, மனுஷவாழ்க்கைக்கு நம்பிக்கை தரவேண்டும். தொய்ந்த மனதை ஆரவாரித்து ஆர்முடுகலாக்க வேண்டும்."என்றொரு கருத்தினையும் கூறியிருந்தார். அவை என் சிந்தையில் ஏற்படுத்திய சிந்தனைகளை அப்பதிவுகளுக்கு எதிர்வினைகளாகக் கொடுத்திருந்தேன். அவற்றை ஒரு பதிவுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.

1. நண்பரே! மானுட வாழ்வு என்பது பல்வேறு முரண்பட்ட உணர்வுகளையும் உள்ளடக்கியதுதான். இதுவரை கால உங்களது வாழ்க்கையை மட்டுமே நினைத்துப்பாருங்கள். அந்த வாழ்வு இன்பகரமான உணர்வுகளாலும், துன்பகரமான உணர்வுகளாலும், நேர்மறை / எதிர்மறை உணர்வுகளாலும், வெற்றி/ தோல்விகளாலும், இறப்பு/பிறப்புகளாலும் உள்ளடக்கியிருப்பதைக் காண்பீர்கள். அனைவர் நிலையும் இதுதான்.,... இவைபோன்ற முரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியதுதானே மானுட வாழ்வு. தமிழிலக்கியம் மட்டுமல்ல உலக இலக்கியம் அனைத்துமே தத்யயேவ்ஸ்கியிலிருந்து, சேக்ஸ்பியரிலிருந்து,.. தகழி சிவசங்கரம்பிள்ளை வரை. கோகுலம் சுப்பையா வரை, சிவராம் காரந் வரை, வைக்கம் முகம்மது பஷீர் வரை மானுடத்தின் இருண்ட, ஒளிர்ந்த பக்கங்களைத்தாம் பேசுகின்றன.

Last Updated on Friday, 13 January 2017 06:25 Read more...
 

எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு) - 1

E-mail Print PDF

எனது குறிப்பேட்டுப் பதிவுகள்.. (ஓர் ஆவணப்பதிவு)....எண்பதுகளின் ஆரம்பத்தில் மார்க்சிய நூல்களை வாங்கிப்படிக்கத்தொடங்கிய காலகட்டம். அதுவரை தமிழ், இனம், பழம் பெருமை என்று உணர்வுகளின் அடிப்படையில் சமுதாய அரசியற் பிரச்சினைகளை அணுகிக்கொண்டிருந்தவனை , தர்க்கரீதியாக, அறிவு பூர்வமாக அணுகத்தூண்டியவை மேற்படி மார்க்சிய நூல்களே. 'சி.ஆர்.கொப்பி' என்று அழைக்கப்படும் நீண்ட தாள்களை உள்ளடக்கிய பேரேட்டில் (பொதுவாகக் கணக்கு வழக்குகளை எழுதக் கடை வியாபாரிகள் பாவிக்கும் குறிப்புப் புத்தகம் என்று நினைக்கின்றேன்) நேரம் கிடைத்தபோதெல்லாம் பல் வேறு விடயங்களைப்பற்றிய என் எண்ணங்களை எழுதிவரத்தொடங்கினேன். முகப்பு அட்டையில் எனக்குப் பிடித்த பாரதியாரின் , அறிஞர்களின் கருத்துகளை எழுதி, உள்ளட்டை மற்றும் முதற் பக்கத்தில் எனக்குப் பிடித்த ஆளுமைகளின் படங்களை ஒட்டி அக்குறிப்புப்புத்தகங்களை அலங்கரித்தேன்.

ஒவ்வொரு குறிப்புப் புத்தகத்தையும் தனி நூலாக, தலைப்புக்கொடுத்து வடிவமைத்தேன். இவ்விதம் எழுதிய நூல்களில் ஒரு சில இன்னும் என் கை வசமுள்ளன. ஏனையவை 83 இனக்கலவரத்துக்குப் பின் தோன்றிய அரசியற் சூழலில் தொலைந்து போய்விட்டன. அல்லது யார் கைகளிளாவது அவை இன்னுமுள்ளனவா தெரியவில்லை.

1. நூல் 1 : இயற்கையும், மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
2. நூல் 2: பிரபஞ்சமும் , மனிதனும் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
3. நூல் 3: தத்துவம், அரசியல், காதல் (கட்டுரைகள், கவிதைகள், கருதுகோள்கள்)
4. நூல் 4: கதை, கட்டுரை, கவிதைகள், எண்ண உருவகங்கள்

தற்போது இந்நூல்களின் அட்டைகள் கழன்று, தாள்களெல்லாம் ஒழுங்குமாறிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இயலுமானவரையில் ஒழுங்குபடுத்தி, இவற்றிலுள்ளவற்றை அப்படியே எவ்வித மாற்றமும் இல்லாமல் மீண்டும் ஒரு பதிவுக்காகப் பிரசுரிப்பதா அல்லது பிழை, திருத்தம் செய்து பிரசுரிப்பதா என்றொரு சிந்தனை வளையவருகின்றது. ஏனெனில் அக்காலகட்டத்திலிருந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்நூல்களிலுள்ள ஆக்கங்களில் பாவிக்கப்பட்டுள்ள சொற்கள், கருத்துகள் சிலவற்றை இக்காலகட்டத்தில் நான் பாவிப்பதில்லை. ஆனால் ஆக்கங்களின் அடிப்படைக்கருத்துகளில் பெரிதாக மாற்றமேதுமில்லையென்றே தோன்றுகின்றது. பிழை, திருத்தி எழுதினால் ஒரு காலகட்டப்பதிவுகளின் உண்மைத்தன்மை தொலைந்துபோகும் அபாயமுள்ளது. இது விடயத்தில் இன்னும் தெளிவான முடிவெதுவும் எடுக்கவில்லை.

Last Updated on Friday, 30 December 2016 06:14 Read more...
 

எழுத்தாளர் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பில் ஜான் டிரிங்வாட்டரின் 'ஆப்ரஹாம் லிங்கன்'

E-mail Print PDF

எழுத்தாளர் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பில் ஜான் டிரிங்வாட்டரின் 'ஆப்ரஹாம் லிங்கன்' அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் ஆப்ரஹாம் லிங்கன். அதற்கு முக்கிய காரணம் சிறு வயதிலிருந்தே பாடப்புத்தகங்களில் அவரைப்பற்றிப் படித்ததனாலேற்பட்ட பிம்பமாக இருக்கலாம். வறிய சூழலில் , விறகு வெட்டி, தெருவிளக்கில் பாடங்கள் படித்துப் படிப்படியாக முன்னேறி அமெரிக்க ஜனாதிபதியாகியவர் என்று படித்தது, அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலைக்காக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டதுடன், அதன் காரணமாகவே அமெரிக்காவின் தென் மாநிலத்தைச்சேர்ந்த தீவிரவாத எண்ணம் மிக்க நாடகக் கலைஞனான வில்லியம் பூத்தினால் சுட்டுகொல்லப்பட்டு , தன் கொள்கைக்காகத் தன் உயிரையே தந்தவர் என்று அறிந்தது போன்ற காரணங்களினால் சிறு வயதிலிருந்தே ஆப்ரஹாம் லிங்கன் எனக்குப் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களிலொருவராக விளங்கி வருகின்றார்.

ஆப்ரஹாம் லிங்கனைப்பற்றியொரு நூலினை அண்மையில் வாசித்தேன். அதுவோர் அபுனைவல்ல. வரலாறுப்புனைவு: ஒரு நாடகம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஜான் டிரின்ன்க்வாட்டர் (John Drinkwater) ஆங்கிலத்தில் எழுதி பல தடவைகள் பல்வேறு நகரங்களில் மேடையேறிய புகழ் பெற்ற நாடகமான 'ஆப்ரகாம் லிங்கன்' என்னும் நாடகத்தின் மொழிபெயர்ப்பான இந்த நூலினைத் தமிழில் தந்திருப்பவர் எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்களே.

இந்நாடகம் திண்ணை இணைய இதழில் தொடராக வெளிவந்து தமிழகத்தில் தாரிணி பதிப்பக வெளியீடாக (மே 2014)  வெளிவந்துள்ளது. இப்பிரதியினைப் பற்றிய எனது கருத்துகளைக் கூறுவதற்கு முன்னர் திரு.ஜெயபாரதனைப்பற்றிச் சிறிது கூறுவதும் அவசியமானதே.

Last Updated on Thursday, 22 December 2016 18:44 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 215 : புலம்பெயர் இலக்கியம் பற்றிய அலசல்...

E-mail Print PDF

வ.ந.கிரிதரன்அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கோ.நாதன் "புலம் பெயர்ந்தவர் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி படைத்தால் புலம் பெயர்வு இலக்கியமாகுமா?" என்றொரு  கேள்வியினைக் கேட்டிருந்தார். அது பற்றிய எனது கருத்தும் அதனைத்தொடர்ந்து முகநூலில் நடைபெற்ற சிறு கருத்துப்பரிமாற்றம் பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

எனது பதில்: "புலம் பெயர்ந்து வாழும் தமிழர் படைக்கும் எதுவுமே புலம் பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள்தான் வரும். புலம்பெயர் இலக்கியம் என்பது புலம் பெயர்ந்து வாழும் எவரும் படைக்கும் இலக்கியம். அவ்விலக்கியம் அக்கரை மண்ணின் வாழ்வினை விபரிக்கலாம். இழந்த மண்ணின் மீதான கழிவிரக்கத்தை வெளிப்படுத்தலாம். பிறந்த மண்ணைக்களமாகக்கொண்டும் படைக்கப்படலாம்.

புகழ்பெற்ற யூத இனத்தைச்சேர்ந்த அமெரிக்கரான ஜேர்சி கொசின்ஸ்கி இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் பெற்றோரிடமிருந்து பிரிந்த நிலையில் , சிறுவனாக ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் தப்பிப்பிழைப்பதற்காக அந்நியர்களுடன் அலைந்து திரிந்திருக்கின்றார். யூதச்சிறுவனான அவரைப்பெற்றோர் முகம் தெரியாத அந்நிய மனிதர்களுடன் அவராவது தப்பிப்பிழைக்கட்டுமென்று அனுப்பி விடுகின்றார்கள். . தன் இளமைக்கால அனுபவங்களை அவர் தனது புகழ் பெற்ற நாவல்களிலொன்றான 'The Painted Bird'  என்னும் நாவலில் விபரித்திருக்கின்றார்.  இவ்விதம் சிறுவனான அவர் அலைந்து திரிந்த  சமயம் யூத மக்கள் படும் துன்பங்களை, அவர்கள் மீது நடைபெறும் படுகொலைகளை, யூதப்பெண்கள் மீது புரியப்படும் கூட்டுப்பாலுறவு வன்முறைகளை, இவை போன்ற கொடிய அனுபவங்களையெல்லாம் அப்படி அப்படியே  வாசிப்பவர் தம் இதயங்களை உலுக்கும் வகையில் விபரிக்கின்றார்  அந்த நாவலில் ஜேர்சி கொஸின்ஸ்கி. இன்று அந்தப்படைப்பு அமெரிக்க இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்றாகக் கருதப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குணா கவியழகன், சோபா சக்தி, தமிழ்நதி, சயந்தன், விமல் குழந்தைவேலு...  எனப் புலம் பெயர்ந்த படைப்பாளர்கள் பலரின் படைப்புகளின் கதைக்களங்களும்  பிறந்த மண்ணின் மீதான சமூக அரசியல் நிகழ்வுகள்தாமே. அவர்கள் யாவரும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் என்றுதானே அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் படைக்கும் இலக்கியம் புலம்பெயர் தமிழ் இலக்கியமாகத்தானே அழைக்கப்படுகின்றது."

Last Updated on Wednesday, 21 December 2016 04:26 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 214 : தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் பற்றியொரு பார்வை...

E-mail Print PDF

முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும்தீபா ஜெயகுமார்ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைப்பற்றி பல்வேறு ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருவதைப்பார்த்து அப்படி என்னதான் இவரிடம் இருக்கிறது என்று பார்ப்போமேயென்று அவரது நேர்காணல்களுள்ள காணொளிகள் சிலவற்றைப் பார்த்தேன், பார்த்தபோது அவருக்கும் , மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குமிடையிலுள்ள பல ஒற்றுமைகள் புலப்பட்டன. தமிழ் மொழியைப்பாவிக்கும் முறையிலும், உரையாடும் முறையிலும், நிதானமாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையிலும் ஜெயலலிதாவை தீபா நினைவுறுத்துவதை அவதானிக்க முடிந்தது.

இந்தியா வாரிசு அரசியலுக்குப் பெயர் போன நாடுகளிலொன்று. பிரதமர் இந்திராகாந்தி மரணமடைந்தபோது எந்தவித அரசியல் அனுபவமுமற்ற ராஜிவ் காந்தி முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு இந்தியாவின் பிரதமாரானது யாவரும் அறிந்ததே. எனவே ஜெயலலிதா மறைந்த சோகத்திலிருக்கும் பெரும்பாலான மக்களுக்குத் தீபாவைப்பார்க்கும்போது ஜெயலலிதாவையே பார்ப்பது போலிருக்கும் உணர்வு தோன்றுவதும், அந்த உணர்வின் அடிப்படையில் அவரையே அதிமுகவின் அடுத்த தலைவராக எண்ணினாலும், ஆதரவு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எம்ஜிஆரின் மறைவின் போது ஜெயலலிதா பலராலும் ஓரங்கட்டப்பட்டார். அது போல் ஜெயலலிதாவின் மறைவின்போதும் தீபா ஜெயலலிதாவின் இறுதிக்காலத்தில் தனது அத்தையைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

Last Updated on Thursday, 22 December 2016 06:33 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 213: பாரதியார் நினைவாக..: திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

E-mail Print PDF

பாரதியார்எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் இரண்டிலொன்று மகாகவி பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதை. எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளிலொன்று மகாகவி பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதை.

டிசம்பர் 11 மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். அதனையொட்டி அவர் நினைவாக எனக்குப் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான 'திக்குகள் எட்டும் சிதறி' கவிதையினயும் கேட்க விரும்பியதன் விளைவு இந்தப்பதிவு.

Last Updated on Tuesday, 13 December 2016 01:09 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 212: மக்கள் கவிஞன் இன்குலாப் மறைவு!

E-mail Print PDF

அண்மையில் மறைந்த அமரர் இன்குலாப்அண்மையில் மறைந்த அமரர் இன்குலாப் நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான 'ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்' என்னும் கவிதையையும், அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன். 'சமயம் கடந்து மானுடம் கூடும், சுவரில்லாத சமவெளி தோறும், குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்; மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்' என்று பாடிய மக்கள் கவிஞன் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டான். ஆனால் அவன் தன் எழுத்துகளோடு என்றும் வாழ்வான்.

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

Last Updated on Tuesday, 13 December 2016 01:05 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 211 : ஜெயலலிதா மறைவு: சில சந்தேகங்களும்.. கேள்விகளும்...

E-mail Print PDF

முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும்அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா வருவது அக்கட்சியினரின் பிரச்சினை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறுதிவரையில் எதற்காக யாரையும் சந்திக்காத வகையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்? எதற்காக அப்பலோ மருத்துவ நிலையம் அடிக்கடி அவரது உடல் நிலை பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட வேண்டும். இச்சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமரர் ஜெயலலிதாவின் நிலையினை வெளிப்படுத்தும் காணொளிகள் வெளியிடப்பட வேண்டும். இச்சந்தேகங்கள் தீர்க்கப்பட்டால் மட்டுமே சசிகலா அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களின் ஆதரவைப் பெற முடியும். ஜனநாயக நாடொன்றில் மாநிலமொன்றின் முதல்வர் இவ்விதம் நடத்தப்பட்டிருப்பது கேள்விக்குரியது மட்டுமல்ல கேலிக்குரியதுமாகும்.

பல சந்தேகங்களை ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியிருப்பதால் அவரது உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் தீர்க்கப்படாமல், அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களைப்புறக்கணித்து அதிமுகவின் முக்கிய புள்ளிகள் செயற்படுவார்களென்றால் , எதிர்காலச்சட்டசபைத்தேர்தலில் அதிமுக பல பிரிவுகளாகப் பிரிபடுவது தவிர்க்க முடியாதது.

உண்மையில் ஜெயலலிதாவின் உடல் நிலை ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆபத்தான கட்டத்திலிருந்திருக்கலாம். அவரது உண்மை நிலை மக்களுக்கூ தெரிந்தால் மக்கள் கொதித்தெழலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாயிருக்கும். எனவே மக்களை ஜெயலலிதாவின் முடிவுக்குத் தயார் செய்து அவரது முடிவினை அறிவித்திருந்தால் மக்கள் பொங்கியெழ மாட்டார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்தால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படலாம். அதனைக்காரணம் காட்டி மத்திய அரசு அதிமுக அரசைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை நிலை பிரதமர் மோடிக்குத் தெரிந்திருந்த காரணத்தினால் போலும் அவர் ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவ நிலையத்துக்கு வந்து பார்க்கவில்லையோ தெரியவில்லையோ?

Last Updated on Tuesday, 13 December 2016 01:53 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 210: இசை கேட்கும் நேரம் இது!

E-mail Print PDF

பாலமுரளி கிருஷ்ணா1. இசை கேட்கும் நேரம்: இசைச்சிகரம் சரிந்தது: பாலமுரளிகிருஷ்ணா மறைவு! அமரர் சங்கீதக் கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா நினைவாக...

பிரபல கர்நாடக இசைக்கலைஞரான கலாநிதி பாலமுரளி கிருஷ்ணா இன்று (நவம்பர் 22) சென்னையில் மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடக இசையின் சிகரங்களில் ஒருவராக விளங்கிய பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இந்தியத் திரைப்படத்துறையிலும் தன் பங்களிப்பினை வழங்கித் தடம் பதித்தவர். இது பற்றி தினமணி இணையத்தளத்தில் '400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராக நடித்தார். 1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார். 11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலமுரளிகிருஷ்ணா எனக்கு மிகவும் பிடித்துப்போனதுக்கு முக்கிய காரணங்களாக அவரது அனைவரையும் ஈர்க்கும் முகராசி, எந்நேரமும் இதழ்க்கோடியில் ஒளிரும் காந்தப்புன்னகை, நெஞ்சினையள்ளும் இன்குரல், வித்துவச்செருக்கு அற்ற பெருந்தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். திருவிளையாடல் படத்தில் இவர் பாடிய 'ஒரு நாள் போதுமா? ' பாடலை யார்தான் மறப்பர்? இவரது பாடல்களைக் கேட்டு இரசிப்பதற்கு நிச்சயம் ஒரு நாள் போதாதுதான்.

இன்று முழுவதும் அடிக்கடி சிந்தையில் 'ஒரு நாள் போதுமா/', 'தங்கரதம் வந்தது' மற்றும் 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' ஆகிய பாடல்களே தோன்றுவதும், மறைவதுமாகவிருந்தன. அப்பொழுதுதான் தெரிந்தது என் ஆழ்மனத்தில் எவ்வளவுதூரம் அமரர் பாலமுரளிகிருஷ்ணாவின் இன்குரல் பதிந்துபோய்க்கிடக்கின்றது என்ற உண்மை. தமிழ்த்திரையுலகின் முக்கியமான இசைச்சாதனையாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர். இம்மூவரின் இசையமைப்பிலும் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் மெல்லிசைப்பாடல்கள் பாடியிருக்கின்றார். அவை அனைத்துமே மிகுந்த வரவேற்பினைப்பெற்ற பாடல்கள். எழுபதுகளில் 'சின்னக்கண்ணன் அழைக்கின்றான்' பாடல் இலங்கை வானொலியின் தமிழ்ப்பகுதியில் ஒலிக்காத நேரமேயில்லை என்னும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.

Last Updated on Sunday, 27 November 2016 07:31 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 209: அன்பரசியின்(அன்பு) தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்..' பற்றிய கருத்துகள் பற்றி....

E-mail Print PDF

அன்பரசி உரைஅண்மையில் டொராண்டோவில் நடைபெற்ற தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் பற்றிய கலந்துரையாடலில் உரையாற்றிய அன்பரசி (அன்பு) அவர்களின் கூறிய கருத்துகள் பற்றிச் சில கருத்துகளைக் கூறலாமென்று மீண்டுமொரு தடவை அவரது உரையினை உள்ளடக்கிய காணொளியினை (வடலி அமைப்பினர் யு டியூப்பில் வெளியிட்ட காணொளி) பார்த்தபொழுது தோன்றியது.

தனதுரையின் உரையின் ஆரம்பத்தில் அவர் தமிழினியக்கா என்று விளித்துக் கூறிய கருத்தொன்றில் நூல் பற்றிக் குறிப்பிடும்போது 'தமிழினியக்கா அவரது அறிவுக்கும், ஆளுமைக்கும் உட்பட்டு அவர் அறிந்த தரவுகள், தகவல்கள், அடிப்படையாக வைத்து நகர்கின்றது இந்நூல் என்றும், 'போர் கொடுமையானது. அதை ஒரு போராளியாக நேர்மையாகப் பதிவு செய்கின்றார் தமிழினி' என்றும் கூறுவார். ஆனால் காணொளியில் இந்த அவரது முடிவைத்தொடர்ந்து அவர் கூறிய பெரும்பாலான கருத்துகள் இக்கருத்துகளுக்கு எதிராகவே இருந்தன. எவ்விதம் அவரால் இந்த நூல் பற்றி இவ்விதமான இரு முரண்பட்ட கருத்துகளுக்கு வர முடிந்தது? அதனை அவர்தான் விளக்க வேண்டும்.

மேலும் மேற்படி நிகழ்வில் கலந்துரையாடலுக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்த நூல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட பிரதி அல்ல. கிளிநொச்சியில் வெளியான நூலின் பிரதி அது. ஆனால் தனதுரையை ஆரம்பித்ததுமே காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டதன் காரணமாக, காலச்சுவடு பதிப்பகத்தின் அரசியல் காரணமாக, அந்த அரசியலைத் தான் ஏற்காததன் காரணமாக காலச்சுவடு பதிப்பகப் பிரதியாக ஏற்கனவே எண்ணியிருந்ததால், அவ்வுணர்வுகளின் அடிப்படையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையினை அந்நோக்கில் வைத்து ஆரம்பித்தார். இலங்கைப்பதிப்புக்கும் , காலச்சுவடு பதிப்புக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் உண்டா? (பின் அட்டைப்பட அறிமுகத்தில் காலச்சுவடு பதிப்பகப் பிரதியிலுள்ள தவறு அனைவரும் அறிந்ததே.). அறிந்தவர்கள் அறியத்தரவும். ஏனெனில் நான் இன்னும் காலச்சுவடு பதிப்பகப்பிரதியினை வாசிக்கவில்லை. இரு பிரதிகளின் உள்ளடக்கமும் ஒன்றாக இருந்தால் காலச்சுவடு அரசியல் செய்கிறதென்ற தர்க்கம் வலுவாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.

Last Updated on Sunday, 27 November 2016 06:19 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 208 : டொராண்டோ: தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி ஜான் மாஸ்ட்டர்!

E-mail Print PDF

ஜான் மாஸ்ட்டர்அண்மையில் டொராண்டோவில் தேடகம் ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் பற்றிய நூல் வெளியீட்டில் அரசியற் செயற்பாட்டாளர் திரு.ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்) ஆற்றிய உரை பற்றிய எனது சிந்தனைத்தெறிப்புகள் இவை. அவரது முழுமையான உரையினைக்கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.

எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இவரை எனக்குத்தெரியும். ஆனால் புலம் பெயர்ந்து குடி புகுந்த நாடான கனடாவில்தான் இவரது முழுமையான ஆளுமையினை என்னால் , கடந்த பல வருடங்களாக இவரை , இவரது செயற்பாடுகளை அவதானித்ததன் மூலம் அறிய முடிந்தது. மிகுந்த தேடல் மிக்க இவரது சிந்தனையும், செயற்பாடும் எப்பொழுதும் உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்களின் மானுட உரிமைகளுக்காகத் தான் கற்று, உணர்ந்து, சிந்தித்துத் தெளிவடைந்த சமூக, அரசியல் தத்துவ நோக்கில் குரல் கொடுப்பதும், எழுதுவதும்தாம். இவ்வளவு வருடங்களாக அந்த விடயத்தில் இவர் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார். இவரது தான் நம்பும் சித்தாந்தம் பற்றிய தெளிவும், அதன் மீதான தொடர்ச்சியான இவரது தேடலும், புரிதலும், தெளிதலும் இவரது அத்தத்துவம் பற்றிய புரிதலைப் பண்படுத்துகின்றன. எனவே இவருடன் தர்க்கிப்பது மிகவும் இன்பமளிக்கக்கூடிய, பயன்மிக்க, ஆரோக்கியமானதொரு விடயமாக நான் உணர்வதுண்டு. ஆனால் அதிகம் பல்வேறு விடயங்களைப்பற்றித் தர்க்கிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. இனிமேல் அவ்விதமான வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதை இவரது இக்காணொளியிலுள்ள உரை தூண்டுகின்றது.

இங்கு இவர் தமிழினியின் நூல் பற்றிய விமர்சனத்தை ஏனையவர்களிடமிருந்து வித்தியாசமானதொரு கோண்த்தில் நடாத்துகின்றார். தமிழினியின் நூல் பற்றிய முக்கியமான கருத்துகள் பற்றி ஆரம்பத்திலும், இடையில் அவ்வப்போதும் கூறி விடுகின்றார். தமிழினியின் நூலைப் பல்வேறு சக்திகளும் பல்வேறு வழிகளில் தமக்குச் சார்பாகப் பாவிக்கும். தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள சில விடயங்களில் தனக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவ்விதம் கூறுவதற்குத் தமிழினிக்குள்ள உரிமையினை மறுக்க முடியாது. இவ்விதமாகத் தமிழினியின் நூல் பற்றிய கருத்துகளைக் கூறும் ஜான் மாஸ்ட்டர் அதன் பின் தான் நம்பும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நூலைப்பற்றி ஆராய்கின்றார். அந்த ஆய்வினைச் செவிமடுக்கும் ஒருவருக்கு இதென்ன இவர் தமிழினியின் நூலைப்பற்றி விமர்சிப்பதாகக் கூறி விட்டு., தனது அரசியல் கருத்துகளையெல்லாம் மடை திறந்த வெள்ளமென அள்ளி விடுகின்றாரே என்றொரு எண்ணம் தோன்றக்கூடும். ஆனால் சிறிது கூர்ந்து பார்த்தால் அவர் தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களைத்தாம் தான் புரிந்த ஏற்றுக்கொண்ட அரசியற் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கின்றார் என்பது புரிய வரும்.

Last Updated on Saturday, 26 November 2016 23:10 Read more...
 

தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?

E-mail Print PDF

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி]- இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். - வ.ந.கி ]


தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் 'இது கூர்வாளல்ல. மொட்டை வாள்' என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து,  சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில்  அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.

இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.

சுருக்கமாகக் கூறுவதானால் இந்நூலைப் பலவேறு கோணங்களில் வாசகர் ஒருவர் அணுகலாம்.

1. ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விபரிப்பதால் இந்நூல் அப்போராளியின் வாக்குமூலமாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத்தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, ,,இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை நூல் விபரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். ஒரு கட்டத்தில் அவர் இவ்விதம் நினைக்கின்றார்:

Last Updated on Wednesday, 16 November 2016 21:42 Read more...
 

தமிழினியும், பெண் விடுதலையும்!

E-mail Print PDF

தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தஈ ஈர்த்தன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தஈ ஈர்த்தன. தமிழினியின் இக்கருத்துகள்  ஓர் ஆயுதமெடுத்துப்போராடிய அமைப்பின் போராளி என்ற வகையில் முக்கியமானவை. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:

1. :" எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், எப்ண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 73)

2. "பெண்கள்  ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது.   குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து  வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட  புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான  புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு  ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக  வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப்பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப்போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். " ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 75 & 76)

3. "பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை.  பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 76)

Last Updated on Friday, 11 November 2016 06:57 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 207: ஹிலாரி கிளிண்டனின் கனவாகிய கனவும், டொனால்ட் ட்ரம்ப்பின் நனவாகிய கனவும்நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை மக்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு அளித்துள்ளனர். விபரங்கள் வருமாறு:

ஹிலாரி ஹிளிண்டன்: 59,626,052 votes (47.7%) | டொனால்ட் ட்ரம்ப்: 59,427,652 votes (47.5%)

ஆனால் அமெரிக்கத் தேர்தலில் அதிகப்படியான மக்களின் வாக்குகளை ஹிலாரி கிளிண்டன் பெற்றுள்ளார்.

Hillary Clinton 228 | Donald J. Trump 279

ஆனால் அமெரிக்கத்தேர்தல் சம்பந்தமான சட்ட விதிகளின்படி அதிகளவு மக்களால் விரும்பப்படும் ஒருவர்தான் ஜனாதியாகவும் வரவேண்டும் என்பதில்லை. யாரும் 270 எண்ணிக்கையில் 'எலக்டோரல் (Electoral) வாக்குகளை, குறைந்தது 270 வாக்குகளைப் பெற வேண்டும். அப்பொழுதுதான் அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியும்.

இம்முறை தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை நிர்ணையித்தது சில தேர்தல் தொகுதிகள்தாம். அமெரிக்காவைப்பொறுத்தவரையில் குடியரசுக்கட்சியினருக்கு எப்பொழுதும் ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும், ஜனநாயகக் கட்சியினருக்கே ஆதரவு தெரிவிக்கும் தொகுதிகளும் உள்ளன. அவை தவிர்ந்த ஏனைய தொகுதிகள்தாம் எப்பொழுதும் ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி , தோல்வியை நிர்ணயிப்பவையாக எப்பொழுதும் விளங்குகின்றன. சில வேளைகளில் குடியரசுக்கட்சியினரின் தொகுதிகள் சில ஜனநாயகக் கட்சியினருக்கும், ஜனநாயகக் கட்சியினரின் தொகுதிகள் சில குடியரசுக்கட்சியினருக்கும் போவதுண்டு. அவ்விதம் நடப்பது அரிதாகத்தானிருக்கும். பெரும்பாலும் இரு கட்சியினரினதும் ஆதரவுத்தொகுதிகள் தவிர்ந்த ஏனைய தொகுதிகளான ஓகியோ, மிச்சிகன்,, புளோரிடா, போன்ற கடும் போட்டி நிலவும் தொகுதிகளை வென்றெடுக்கத்தான் இரு கட்சியினரும் கடுமையாகப்போட்டியிடுவார்கள். இம்முறையும் அவ்விதமே போட்டி நிலவியது.

ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் ட்ரம்பை விட அதிகளவு ஆதரவு பெற்றவராக தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன்னர்வரையில் திகழ்ந்தார். அச்சமயம் பார்த்து அமெரிக்க மத்திய புலனாவுத்துறையின் இயக்குநர் ஏற்கனவே முடிவுக்கு வந்திருந்த , ஹிலாரி கிளிண்டன் தன் பதவிக்காலத்தில் அந்தரங்கமாகப் பாவித்த மின்னஞ்சல் சேர்வர் பற்றிய விசாரணையை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருந்தார். அதனையடுத்து குடியரசுக்கட்சியினரின் கடுமையான பிரச்சாரத்தினால் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவு அதிகரிக்கத்தொடங்கியது. அதுவரையில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப்பிரிந்திருந்த குடியரசுக்கட்சியினரை அவருடன் மீண்டும் ஒன்றுபட்டு தேர்தலைச் சந்திக்க ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பு உதவியது. தேர்தலுக்கு ஓரிரு நாட்களின் முன்னரே மத்தியப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணையை மீண்டும் முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தார். இதற்கிடையில் தேர்தலில் முன்னதாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி சுமார் 25 மில்லியன்களுக்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து விட்டார்கள். மத்தியபுலனாய்வுத்துறை இயக்குநரின் ஹிலாரி கிளிண்டன் மீதான விசாரணை பற்றிய அறிவிப்பும் இறுதி நேரத்தில் புளோரிடா போன்ற எந்தக் கட்சியினரினதும் கோட்டையாகக்கருதப்படாத தொகுதிகளைச்சேர்ந்த வாக்காளர்கள் மனம் மாறுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

Last Updated on Thursday, 10 November 2016 19:07 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' பற்றி.....; முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி...

E-mail Print PDF

1. கவிஞர் நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' பற்றி.....

வாசிப்பும், யோசிப்பும் 206 : கவிஞர் நுஃமானின் 'தாத்தாமரும் பேரர்களும்' பற்றி.....; முனைவர் சி. மெளனகுருவின் 'சங்காரம்' கவிதை நாடகம் பற்றி...ஈழத்துத்தமிழ்க் கவிதையுலகில் எம்.ஏ.நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' முக்கியமான கவிதைத்தொகுதி. நுஃமானின் ஐந்து நெடுங்கவிதைகளை உள்ளடக்கிய தொகுதி. வாசகர் சங்க வெளியீடாக (கல்முனை) வெளியானது.

இத்தொகுப்பிலுள்ள நெடுங்கவிதைகள் வருமாறு:

1. உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்
2. அதிமானிடன்
3. கோயிலின் வெளியே
4. நிலம் என்னும் நல்லாள்
5. தாத்தாமரும் பேரர்களும்

இந்நூலை நுஃமான் கவிஞர் மஹாகவிக்கும், நீலாவணனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கின்றார்.

இன்று கவிதைகள் என்னும் பெயரில் நூற்றுக்கணக்கில் எழுதிக்குவிப்போர் ஒரு கணம் நுஃமான் போன்றோரின் கவிதைகளை வாசித்துப்பார்க்க வேண்டும். அப்பொழுது புரிந்து கொள்வார்கள் ஒருவருக்கு மரபுக்கவிதையின் அறிவு எவ்விதம் இன்றைய கவிதையினை எழுத உதவியாகவிருக்கும் என்பதை. உதாரணத்துக்கு நூலிலுள்ள நுஃமானின் 'அதிமானிடன்' கவிதையிலிருந்து ஒரு பகுதியைப்பார்ப்போம்:

Last Updated on Sunday, 30 October 2016 16:44 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 205: தமிழினியை நினைவு கூர்வோம்!..

E-mail Print PDF

தமிழினி ஜெயக்குமாரனின் நிதமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18. தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே.

அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே  தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.

தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அவரது சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில்யில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.

தமிழினி என்ற பெயரில் முகநூல் அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.  பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது.  படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.

Last Updated on Tuesday, 18 October 2016 01:16 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்! - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 204 : முகநூற்பதிவுகள்!  - யாழ்ப்பாணத்தில் அன்று: 'டபுள் டெக்கர் பஸ்'ஸில் போனேனடி!ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துத் தெருக்களில் 'டபுள் டெக்கர் பஸ்'கள் ஓடித்திரிந்தன. எழுபதுகளின் இறுதிவரையில் ஓடியதாக ஞாபகம். கே.கே.ஸ். வீதிவழியாக மானிப்பாய் வரையில் அவ்விதமோடிய 'டபுள் டெக்கரில்' சில தடவைகள் பயணித்திருக்கின்றேன். 'டபுள் டெக்கரில்' பயணிக்கையில் எனக்கு எப்பொழுதுமே மேற்தட்டில் பயணிப்பதுதான் விருப்பம். 'டிக்கற்' எடுத்ததுமே மேலுக்கு ஓடிவிடுவேன். மேல் தட்டிலிருந்தபடி இருபுறமும் விரியும் காட்சிகளைப்பார்த்தபடி, அவ்வப்போது பஸ்ஸுடன் உராயும் இலைகளை இரசித்தபடி செல்வதில் அப்பொழுது ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்தது.

'டொராண்டோ'வில் உல்லாசப்பிரயாணிகள் நகரைச்சுற்றிப்பார்ப்பதற்காக இவ்விதமான 'டபுள் டெக்கர்' பஸ்களை இன்னும் பாவிக்கின்றார்கள். அவற்றைப்பார்க்கும் சமயங்களிலெல்லாம் அன்று யாழ்ப்பாணத்தில் 'டபுள் டெக்கரி'ல் பயணித்த பால்ய காலத்து அனுபவங்கள்தாம் நினைவுப் புற்றிலிருந்து படம் விரிக்கும். 'டபுள் டெக்கரில்' பயணிப்பதைப்பற்றி ஏன் துள்ளிசைப்பாடகர்கள் 'டபுள் டெக்கரில்' பஸ்ஸில் போனேனடி!' என்று  பாடல்கள் எதுவும் எழுதவில்லை என்று இவ்விதமான சமயங்களில் தோன்றுவதுண்டு.

'டபுள் டெக்கர்' பஸ் என்றதும் ஞாபகத்துக்கு வரும் இன்னொரு விடயம். நண்பரொருவர் மானிப்பாய்ப்பக்கமிருந்து வருபவர். அவரது High school sweet heart' ஒருவர் யாழ் வேம்படியில் படித்துக்கொண்டிருந்தார். இவர் என்ன செய்வாரென்றால் பாடசாலை முடிந்து அந்தப்பஸ்ஸில் பயணிக்கும் அந்தப்பெண்ணைப்பார்ப்பதற்காக, அவரது கவனத்தைக் கவர்வதற்காக யாழ் பொது சனநூலகத்துக்குச் சென்று , காத்திருந்து, பாடசாலை முடிந்து அந்த  பஸ்ஸில் பயணிப்பார். ஒருபோதுமே நூலகப்பக்கமே செல்லாத நண்பன் இவ்விதம் நூலகம் சென்றது அக்காலத்தில் எமக்கு வியப்பினைத்தந்தது. பின்னர்தான் உண்மை புரிந்தது. ஆனால் அவரது முயற்சி அவருக்கு வெற்றியளிக்கவில்லை.  இவ்விதம் யாழ்ப்பாணத்து 'டபுள் டெக்கர்'களில் பல காதல் காவியங்களும் நிகழ்ந்ததுண்டு :-) காதல் காவியங்கள் எல்லாமே தோல்வியில் முடிபவைதாமே. :-) அந்த வகையில் நண்பரின் காதலும் காவியமாகிவிட்டது. :-)

Last Updated on Friday, 14 October 2016 22:08 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 203: எழுத்தாளர் சொக்கன் முற்போக்கிலக்கியவாதிகளிலொருவர்!

E-mail Print PDF

எழுத்தாளர் சொக்கன்சொக்கனின் 'சீதா' நாவல் (வீரகேசரி பிரசுரம்)- யாழ் இந்துக்கல்லூரி (கனடா) அமைப்பினரின் வருடாந்த நிகழ்வான 'கலையரசி 2016' விழா மலருக்காக, எழுத்தாளர் சொக்கனைப்பற்றிச் சுருக்கமாக எழுதிய கட்டுரையிது. -


ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் பலர், ஆசிரியர்கள் பலர் காத்திரமான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர். அவர்களில் சொக்கன் என்றழைக்கப்படும் கலாநிதி கந்தசாமி சொக்கலிங்கம் அவர்களுமொருவர். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் , நல்லூரை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்தவர் சொக்கன்.  யாழ் ஸ்ரான்லி கல்லுரியில் இடைநிலைக்கல்வியைக்கற்ற இவர் பின்னர் தமிழ் வித்துவான், இளநிலை, முதுகலை ஆகிய பட்டங்களுடன் கெளரவக் கலாநிதி பட்டங்களையும் பெற்றவர். யாழ் இந்துக்கல்லூரியில் ஆசிரியராகப்பணியாற்றியவரிவர்.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் சிறுகதை, நாவல், நாடகம் , இலக்கிய ஆய்வு என சொக்கனின் பங்களிப்பு பரந்து பட்டது. தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல், சைவ மதத்துக்கும் மிகுந்த பங்களிப்பு செய்திருக்கின்றார் சொக்கன். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் 'தமிழ்மாமணி', இந்துக் கலாச்சார அமைச்சின் 'இலக்கியச்செம்மல்' , அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் 'மூதறிஞர்' பட்டத்தினையும், விடுதலைபுலிகள் அமைப்பு வழங்கிய மாமனிதர் பட்டத்தையும்  பெற்றவர்..

இவரது 'கடல்' சிறுகதைத்தொகுப்பு 1972ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசினைப்பெற்றுக்கொண்டது. 'வீரத்தாய்', 'நசிகேதன்', 'நல்லூர் நான் மணிமாலை', 'நெடும்பா' ஆகிய கவிதைத்தொகுதிகள், 'சிலம்பு பிறந்தது', 'சிங்ககிரிக் காவலன்' ஆகிய நாடகங்கள், 'சீதா', 'செல்லும் வழி இருட்டு' ஆகிய நாவல்கள் மற்றும் 'ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி' (முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக எழுதப்பட்ட ஆய்வு நூல்) ஆகியவவை அவரது இலக்கிய வரலாற்றைச்சிறப்பிப்பவை.

Last Updated on Monday, 10 October 2016 05:46 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 202: என் குருமார்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

E-mail Print PDF

என்னைப்பொறுத்தவரையில் என் குருமார்கள் நூல்களே! அவற்றை எழுதிய எழுத்தாளர்கள், அறிஞர்களே! அவர்களின் இருப்பிடமான நூலகங்களே என் ஆலயங்கள்.
எனது குருமார்களின் உதவியினால் அறிவியல் , அரசியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப்பல்வேறு துறைகளையும் அறிய முடிந்தது.
ஐனஸ்டைன், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் ஃபிராய்ட், லெனின், மேரி கியூரி, ஸ்டீபன் ஹார்கிங், என் மனதைத்தொட்ட பல புனைகதை எழுத்தாளர்கள் எனப்பலரையும் அறிந்துகொள்ள, புரிந்து கொள்ள முடிந்தது. இந்த உலகை, இந்தப்பிரபஞ்சத்தை, உள்ளே விரிந்திருக்கும் உள்ளத்தை, அதன் ஆற்றலை , அண்ட வெளியில் பரந்து கிடக்கும் பிரமிப்பினையூட்டும் புதிர்களை இவற்றையெல்லாம் அறிய வைத்தவர்கள் எனது குருமார்களே!

"உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே" என்று என்னை நெஞ்சு நிமிர்த்தி ஆட வைத்தவர்கள் எனது குருமார்களே!

"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்"

என்று என் சிந்தையைப்புடம் போட்டவர்கள் எனது குருமார்களே!

"மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்"

என்று போதித்தவர்கள் என் குருமார்களே!

'இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்ந்திட' வைத்தவர்கள் என் குருமார்களே!

என் சிந்தனையை விரிவு படுத்திய, எப்பொழுதுமே விரிவு படுத்திக்கொண்டிருக்கும் குருமார்களே, இருப்பினைத் தெளிவுடன், நம்பிக்கையுடன் எதிர்கொண்டிட என்னை உருமாற்றிய குருமார்களே, இருப்பில் இன்பத்தைத்தந்த, தருகின்ற குருமார்களே! உங்களுக்கு என் நன்றி! மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி! நன்றி!

Last Updated on Friday, 07 October 2016 05:12
 

வாசிப்பும், யோசிப்பும் 201: ஜெயலலிதா என்னும் எழுத்தாளர் பற்றி......

E-mail Print PDF

ஜெயலலிதாவின் கட்டுரைத்தொகுப்பு.ஜெயலலிதா அன்று.'காவிரி தந்த கலைச்செல்வி' என்னும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பற்றிய தொடரொன்றின் முதற்பகுதியை யு டியூப்பில் பார்த்தேன். அந்நிகழ்வினைத்தொகுத்து வழங்கியவர் எழுத்தாளர் சுதாங்கன். அதில் ஜெயலலிதாவின் எழுத்து முயற்சிகளைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவார். .

எண்பதுகளில் 'எண்ணங்கள் சில' என்னும் தொடர் எழுதினார்  அதனைத் 'துக்ளக்' சஞ்சிகையில். எழுதியிருக்கின்றார்.

'தாய்' வார இதழில் 'எனக்குப் பிடித்த ஊர்', 'எனக்குப் பிடித்த வாத்தியார்', 'எனக்குப் பிடித்த ஓவியர்', 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்', 'எனக்குப் பிடித்த நாவல்', 'எனக்குப் பிடித்த தத்துவஞானிகள்' என 45 கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். அவையே 'மனதைத்தொட்ட மலர்கள்' என்ற நூலாக வெளிவந்தது. மேற்படி நூலில் தனக்குப் பிடித்த ஓவியராக லியனார்டோ டாவின்சியை குறிப்பிட்டிருக்கின்றார். தனக்குப் பிடித்த நாவலாக சார்ள்ஸ் டிக்கன்ஸின் 'டேவின் காப்பர்ஃபீல்ட்' டைக்குறிப்பிட்டிருப்பார். பதினாறு பக்கங்களில் நாவலைச்சுருக்கமாகக் குறிப்பிட்டு விமர்சித்திருப்பார்.

68இல் பொம்மை இதழுக்காக எம்ஜிஆரிடம் நேர் காணல் எடுத்திருக்கின்றார். 63 கேள்விகளை அவரே தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்திருக்கின்றார்.'இவை 'காவிரி தந்த கலைச்செல்வி' காணொளியில் கிடைக்கப்பெற்ற தகவல்கள்.

Last Updated on Thursday, 06 October 2016 22:11 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 200: மீண்டு வருக!

E-mail Print PDF

தமிழக முதல்வரின் சிறு வயதுத்தோற்றம்.தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாதமிழக முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் கட்சி பேதமின்றி அவர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டுமென்று வாழ்த்தியிருக்கின்றனர். இது தமிழக அரசியலில் காணாத விடயம். அரசியல் நாகரிகம் இன்னும் சிறிதாவது இருப்பதை எடுத்துக்காட்டும் பண்பு இவ்வாழ்த்துதலில் தெரிகிறது. "மகிழ்ச்சி!"

தமிழக முதல்வர் பற்றிய அரசியல்ரீதியிலான கருத்துகளுக்கு அப்பால் அவர் தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவைப்பெற்ற வசீகரம் மிக்க தலைவர். அந்த மக்களின் உணர்வுகளைப்புரிந்துகொள்ள வேண்டும். அவரை உயிருக்குயிராக விரும்பும் அந்த மக்களுக்காக அவர் விரைவில் பூரண சுகமடைந்து வருவார் என்று எதிர்பார்போம். ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல் சுகவீனம் சாதாரணமானதல்ல. அது பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் வெளியில் வராது மறைக்கப்பட்டிருந்தாலும், அவர் கடுமையானரீதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதுதான் அது. ஏதாவது தொற்றுநோயாகக்கூட இருக்கலாம். சவால்களை எதிர்த்து மீண்டு வரும் ஆளுமை மிக்கவர் அவர். இம்முறையும் மீண்டு வருவாரென்று எதிர்பார்ப்போம்.

பெண் சிசுக்கொலையைத்தடுக்க எடுத்த நடவடிக்கை,  மாணவர்களுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவும் திட்டங்கள். போன்ற அவரது திட்டங்கள் வறிய மக்களுக்கு மிகவும் உதவும் திட்டங்கள் என்பதில் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை.

Last Updated on Wednesday, 05 October 2016 20:17 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 199 : இலங்கைச்சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள்!

E-mail Print PDF

அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரம்"கூற்றுவனின் வாசலிலே
குற்றமற்றவர்
சுற்றமிழந்து இன்னுமெத்தனை
நாள் வாடுவதோ ?
"

அண்மையில் அகால மரணமடைந்த பின்னர்தான் பலருக்குக் கேலிச்சித்திரக்காரர் (Cartoonist) அஸ்வின் சுதர்ஸன் பற்றி தெரியவந்தது. அவரது படைப்புகள் மீது பலரின் கவனமும் திரும்பியது. என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

அவரது இங்குள்ள கேலிச்சித்திரம் (நன்றி: தமிழ்வின்) அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிந்த ராஜபக்சவின் கையிலிருந்த ஆட்சி அமைதியான முறையில் மைத்திரி பால சிறிசேனாவின் கைக்கு மாறியது. ஆனால் இன்னும் அரசியல் கைதிகளின் நிலை மாறாதது ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் ஒருசேர எழுப்புகிறது. ஏன் என்ற கேள்விக்குத் தர்க்கரீதியான விடையேதும் கிடைக்கவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டன. அரசை எதிர்த்துப்போரிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமெல்லாம் அஞ்சாத அரசு எதற்காகச் சந்தேகத்தின்பேரில் கைது செய்தவர்களையெல்லாம் ஆண்டுக்கணக்காக இன்னும் சிறைகளில் வைத்திருக்கின்றது? உண்மையில் அவர்களைச்சிறைகளில் வைத்துப் பராமரிப்பதால் அரசுக்கு வீண் செலவுதான் ஏற்படுகிறது.

இவ்வளவு காலமும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட அவ்வரசியல் கைதிகள் பலர் சொல்லமுடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பார்கள். அவர்களை வெளியில் விட்டால் மேலும் பல குற்றங்களை அரசுக்கு எதிராக அவர்கள் கூறுவார்கள் என்று அரசு நினைக்கின்றதோ? பின் எதற்காக அவர்களை இன்னும் சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றார்கள்?

Last Updated on Sunday, 02 October 2016 06:03 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 198: 'முறிந்த பனையின்' நினைவு தினம் செப்டம்பர் 21!

E-mail Print PDF

'முறிந்த பனையின்' நினைவு தினம் செப்டம்பர் 21! இன்று (செப்டம்பர் 21) ராஜினி திரணகமவின் நினைவு தினம். மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மானுடநேயப்போராளியாக அவரை வரலாறு என்றென்றும் நினைவில் நிறுத்தி வைத்திருக்கும். மருத்துவத்துறைப்பேராசிரியையாகத் தான் கற்றதை தன் மண்ணின் மாணவர்களுக்குப் போதித்த அதே சமயம் , தான் பிறந்த மண்ணில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காகவும் போராடியவர் அவர். அவற்றை எந்தவிதப்பாரபட்சமுமில்லாமல் ஆவணமாக்கிப் பதிவு செய்தவர்களிலொருவர். அவர் நினைத்திருந்தால் அவரது படிப்புக்கு மேனாடொன்றில்  செல்வச்செழிப்புடன் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவற்றையெல்லாம் துறந்துவிட்டு, தான் பிறந்த மண்ணுக்குத் திரும்பியவர். அதுவும் மண் போர்களினால் கொந்தளித்துக்கொண்டிருந்த சமயம் திரும்பினார். அச்சூழலுக்குள் நின்று உரத்துத் தன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் அவர்.

அவரைக்கொன்றவர்கள் யார்? பலர் பலரைக்கூறுகின்றார்கள். என்னால் அவ்விதம் யாரையும் குறிப்பிட்டுக்கூற முடியாது. என்னிடம் அவற்றுக்கான ஆதாரங்கள் இல்லை. அவை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் அவை நிரூபிக்கப்படாதவரையில் என்னால் யாரையும் குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்ட முடியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ராஜினி திரணகம தான் இறப்பதற்கு முன்னர் தன் மரணம் தன் மண்ணைச்சேர்ந்த ஒருவராலேயே புரியப்படும் என்று எழுதியிருக்கின்றார். அவ்விதமே நடந்தது என்பதில் மட்டும் யாருக்கும் சந்தேகமிருக்காது.

அவரைக்கொன்றவர்கள் யார் என்று தெரிந்தவர்கள் அவ்வப்போது பொதுவாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ஆதாரங்களுடன் தெரியப்படுத்துங்கள். ஆய்வுக்கட்டுரையாக எழுதுங்கள். ஆதாரங்கள் இருந்தால் நீதித்துறையினை நாடுங்கள். இவை எவற்றையும் செய்யாமல் பொதுவாகக் கூறுவதால் எந்தவிதப்பயனுமில்லை. இன்று இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் சென்றுவிட்டன. இந்நிலையில் இது போன்ற யுத்தக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் அவ்வாதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். இலங்கை அரசுக்கெதிரான யுத்தக்குற்றங்களை வலியுறுத்துவதுபோல், இவ்விதமான படுகொலைகளுக்கும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

Last Updated on Sunday, 02 October 2016 06:00 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 197 : ஆதிசங்கரரின் அத்வைதமும், அ.ந.க.வும்! -

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 197 : ஆதிசங்கரரின் அத்வைதமும், அ.ந.க.வும்! -தேடி எடுத்த கவிதை இது. இது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை. இந்தக்கவிதையை எழுதியவர் ஆதிசங்கரர். இந்து சமயத்தில், ஆதிசங்கரருக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவர் இருப்பை விளக்க உருவாக்கிய தத்துவம் அத்வைதம். அவரது கொள்கையின்படி இப்பிரபஞ்சத்தைப்படைத்தவரும், இங்குள்ளவர்களும் ஒரே சக்தியின்  வடிவங்களே. ஜீவாத்மா (சகல உயிரினங்களும்) , பரமாத்மா (இறைவன்) இரண்டும் ஒன்றே என்று கூறுவது அத்வைதம். கருத்துமுதல்வாதம் கடவுளை வேறான தனியானதொரு சக்தியாகவும், கடவுளால் படைக்கப்பட்டதே நாம் காணும் இப்பிரபஞ்சமும் என்று கூறும். பொருள்முதல்வாதமோ நாம் காண்பது மட்டுமே உண்மை. அதற்கும் வேறாக ஒன்றுமேயில்லை என்று கூறும். ஒருவிதத்தில் மாகவி பாரதியை அத்வைதவாதி என்று கூறலாம். அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையின் இறுதி முடிவு 'காண்பது சக்தியாம் ... இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிவதைப்பார்க்கையில் அவ்விதம்தான் எண்ணத்தோன்றுகின்றது. அக்கூற்றின்படி காணும் பொருளும், அதனை உருவாக்கிய சக்தியும் ஒன்று. இதனைத்தானே ஆதிசங்கரரின் அத்வைதமும் கூறுகின்றது.

ஆதிசங்கரின் அந்த மொழிபெயர்ப்புக் கவிதையை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி. அவர் மேற்படி கவிதையினை 'ஏகசுலோகி' என்னும் பெயரில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கின்றார்.லது  தினகரன் வாரமஞ்சரி மே 31, 1967 பதிப்பில் வெளியாகியுள்ளது. அந்தக் கவிதையைக் கீழே தருகின்றேன்.

Last Updated on Tuesday, 20 September 2016 04:25 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 196: பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11; அறிஞர் அண்ணா நினைவாக...;இந்தி இசை கேட்கும் நேரம் இது!

E-mail Print PDF

ஓவியம் - புதுவை ராமன்; நன்றி.என் பிரியத்துக்குகந்த மகா கவிஞன் பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. . எனக்குப் பிடித்த அவனது கவிதை வரிகள் சிலவற்றை அவனது நினைவாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்"

"நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்"

"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்..."

Last Updated on Monday, 19 September 2016 20:51 Read more...
 

எழுத்தாளர் குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அமரரானார்!

E-mail Print PDF

குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்)எழுத்தாளர் குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்களின் மறைவு பற்றிய செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஈழத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரிவர். குறிப்பாக ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு வளமை சேர்ந்த ஆரம்பகாலப்பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர்களிலொருவர் இவர்.இறுதிவரை சளைக்காது இலக்கியப்பங்களிப்பு செய்து வந்தவர்.

இத்தருணத்தில் இளவாலை ஜெகதீசனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த பொதிகை (கனடா) சஞ்சிகைக்காக இவருடனான நேர்காணலுக்காக இவரைச்சந்தித்திருந்ததை நினைவுகூர்கின்றேன்.

எழுத்தாளர் எஸ்.பொ. கனடா வந்திருந்தபோது அவருடனான உரையாடலின்போது அவர் இவரைப்பற்றிப்பெருமையாகக் கூறிய பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. இவருடன் இணைந்து மேலும் மூவருடன் சேர்ந்து 'மத்தாப்பு' என்னுமொரு குறுநாவலை வீரகேசரியில் எழுதியதை அவர் அப்பொழுது நினைவு கூர்ந்திருந்தார்.

மேலுமவர் கூறிய இன்னுமொரு விடயமும் நினைவிலுள்ளது. அக்காலத்தில் பெண்கள் இலக்கியம், இலக்கியக்கூட்டங்களுக்கெல்லாம் செல்வது மிகவும் அரிதாகவிருந்த காலகட்டம். அக்காலகட்டத்தில் குறமகள் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் அவ்விதமான இலக்கியக்கூட்டங்களிலெல்லாம் கலந்து கொண்டிருந்தார் என்பதையும், அவ்விதமான சமயங்களில் கூட்டம் முடிந்ததும் தாங்கள் அவருக்குத்துணையாகச் சென்று பஸ்ஸில் ஏற்றிவிட்டு வருவது வழக்கமென்றும் குறிப்பிட்டதைத்தான் கூறுகின்றேன்.

இவரது இழப்பு தமிழ் இலக்கியத்துக்கு, முக்கியமாக ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பே. இவரது இழப்பால் வாடும் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றேன்.

Last Updated on Friday, 16 September 2016 20:23 Read more...
 

குட்டிச்சிறுகதை: : வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!

E-mail Print PDF

1.
சிறுகதை வாசிப்போமா?பல்கலாச்சாரச் சமூகங்கள் நிறைந்தொளிரும், உலகிற்கொரு முன்மாதிரியான மா நகரிந்தத் 'தொராண்டோ' மாநகர். பாதாளப் புகையிரதங்கள், நவீன வாகனங்கள்,  விண்முட்டும் உயர் கட்டடங்கள், உலகில் அதியுயர்ந்த சுயதாங்கிக் கோபுரம் (CN Tower), இயங்கும் தன்மை மிக்க 'குவிகூரை' விளையாட்டு மண்டபம் (SkyDome), மாபெரும் அங்காடிகள், பூங்காக்களென ஒளிருமிந்தப் பெருநகருக்கு உலகில் நல்லதொரு பெயருண்டு: இந்நகரொரு குட்டிப் பூகோளம்.

2.
இம்மாநகரில்தான் நானும் இத்தனை வருடங்களாகக் 'குப்பை' கொட்டிக் கொண்டிருக்கின்றேன். இந்த நாட்டின் குடிமகனென்ற பெயரும், உரிமையும் கொண்ட எனைப் பார்த்து மூன்றாம் உலகத்து வாசிகளுக்குப் பொறாமையும், ஏக்கமும் அதிகம். அதிலும் தென்னிந்தியச் சினிமாக்களில் இந்நகரைக் காணும் தருணங்களிலெல்லாம் அவ்வுணர்வுகளதிகமாகும்.

3.
இந்தவிருபது வருடங்களில் தானெத்தனை எத்தனை மாற்றங்களை இம்மாநகர் கண்டுவிட்டது. இருந்தும் இன்னும் மாறாதவையுமுள சில.அவை:

3.1
அன்றெனை மறித்த காவல்துறையதிகாரி இன்று ஓய்வுபெற்றுப் போயிருக்கலாம். மரித்திருக்கலாம். இருந்தாலும் அன்றெனை மறித்த தருணத்தில் அவன் முகத்தில் படர்ந்த  அலட்சியம் ஒருவேளை அக்காலகட்டத்தின் எனது குடியுரிமை நிலை காரணமாக இருக்கலாமென்றெண்ணி ஆறுதலைடைந்ததுண்டு.

3.2.
ஆயின் பின்னர் குடியுரிமைபெற்றுப் பெருமிதத்தில் நடைபயின்றவென்னை இன்னுமொரு அதிகாரி அதுபோன்றதொரு அலட்சியத்தில் நடத்தியபோது, அவனுக்குமென் குடியுரிமை நிலை தெரியாமலிருந்திருக்கலாமென எண்ணினேன்.

Last Updated on Sunday, 11 September 2016 22:17 Read more...
 

'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற செங்கை ஆழியான் பற்றிய இலக்கிய நிகழ்வு பற்றி.....

E-mail Print PDF

செங்கை ஆழியான்இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு 'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'செங்கை ஆழியானின்' கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு' பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் 'எனது பார்வையில் செங்கை ஆழியான்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.

கவிஞர் கந்தவனம் தனதுரையில் செங்கை ஆழியான் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டங்களுக்காக எழுதிய நூல்கள் பற்றிய தனது கருத்துகளை முன் வைத்தார். அத்துடன் செங்கை ஆழியான் தொடர்ச்சியாக வாசித்து, கற்று, தனது அறிவை விருத்தி செய்து கொண்டேயிருக்குமொருவர். அதனால்தான் இவ்வளவு எண்ணிக்கையில் அவரால் எழுத முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் தனக்குப்பிடித்த செங்கை ஆழியானின் நகைச்சுவை நாவல்கள் , வரலாற்று நாவல்கள் , சமூக நாவல்கள் பற்றிக்குறிப்பிட்டார். அத்துடன் செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நாவலுக்கு எவ்விதம் ஓவியர் செளவின் படைப்பாற்றல் மேலதிகமாக உதவியது என்பதையும் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். அத்துடன் நல்லதொரு நகைச்சுவை விவரணச்சித்திரமாக வந்திருக்க வேண்டிய நடந்தாய் வாழி வழுக்கியாறு படைப்பில் , தேவையற்ற உபகதையொன்றைச் சேர்த்ததன் மூலம் செங்கை ஆழியான் ஊறு விளைவித்திருக்கின்றார் என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. மேலும் செங்கை ஆழியான் தன் படைப்புகள் சீதனம், வறுமை, சாதி போன்ற பிரச்சினைகளை ஒழிப்பதற்கு உதவும் என்று கூறுகிறார். ஆனால் அவரது படைப்புகள் சிலவற்றில் அவற்றுக்கான சந்தர்ப்பம் வந்தபோது , நாவலில் வரும் பாத்திரங்கள் அவ்விதம் நடக்கவில்லையே என்று சுட்டிக்காட்டிய கிரிதரன், இடப்பெயர்வு அவலங்களை விபரிக்கும் முக்கியமானதோர் ஆவணப்படைப்பாக வந்திருக்க வேண்டிய போரே நீ போய் விடு நாவலிலும் தேவையற்ற முறையில் உபகதையொன்று சேர்க்கப்பட்டிருக்கின்றது. மேலும் கதாசிரியர் கூற்று, கதை சொல்லியின் கூற்று ஆகியன தன்னிலையில் வரும்; சில நேரங்களில் படர்க்கையில் வரும். பிரதி எழுதப்பட்ட பின் பிழை, திருத்தம் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தனது கருத்தினைத்தெரிவித்தார். அத்துடன் செங்கை ஆழியான் வர்க்கப்போராட்டத்தைப் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் காணவில்லையென்றும் , கல்வி, தொழில், செல்வத்தின் மூலம் சாதிப்பிரச்சினையை ஒழிக்க முடியுமென்பது அவரது கருத்து என்பதையும் அவரது படைப்புகளூடு சுட்டிக்காட்டிய கிரிதரன், அது உண்மையாயின் இந்தியாவில் எப்பொழுதோ சாதிப்பிரச்சினை தீர்ந்திருக்க வேண்டுமே என்றார். செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்களில் நந்திக்கடலைச் சங்கிலியனுக்குக் குறியீடாகப் பாவித்திருந்த நந்திக்கடல் உணர்ச்சியின் அடிப்படையில் தனக்குப் பிடித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
Last Updated on Saturday, 27 August 2016 22:59 Read more...
 

'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற செங்கை ஆழியான் பற்றிய இலக்கிய நிகழ்வு பற்றி.....

E-mail Print PDF

செங்கை ஆழியான்இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு 'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'செங்கை ஆழியானின்' கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு' பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் 'எனது பார்வையில் செங்கை ஆழியான்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.

கவிஞர் கந்தவனம் தனதுரையில் செங்கை ஆழியான் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டங்களுக்காக எழுதிய நூல்கள் பற்றிய தனது கருத்துகளை முன் வைத்தார். அத்துடன் செங்கை ஆழியான் தொடர்ச்சியாக வாசித்து, கற்று, தனது அறிவை விருத்தி செய்து கொண்டேயிருக்குமொருவர். அதனால்தான் இவ்வளவு எண்ணிக்கையில் அவரால் எழுத முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் தனக்குப்பிடித்த செங்கை ஆழியானின் நகைச்சுவை நாவல்கள் , வரலாற்று நாவல்கள் , சமூக நாவல்கள் பற்றிக்குறிப்பிட்டார். அத்துடன் செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நாவலுக்கு எவ்விதம் ஓவியர் செளவின் படைப்பாற்றல் மேலதிகமாக உதவியது என்பதையும் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். அத்துடன் நல்லதொரு நகைச்சுவை விவரணச்சித்திரமாக வந்திருக்க வேண்டிய நடந்தாய் வாழி வழுக்கியாறு படைப்பில் , தேவையற்ற உபகதையொன்றைச் சேர்த்ததன் மூலம் செங்கை ஆழியான் ஊறு விளைவித்திருக்கின்றார் என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. மேலும் செங்கை ஆழியான் தன் படைப்புகள் சீதனம், வறுமை, சாதி போன்ற பிரச்சினைகளை ஒழிப்பதற்கு உதவும் என்று கூறுகிறார். ஆனால் அவரது படைப்புகள் சிலவற்றில் அவற்றுக்கான சந்தர்ப்பம் வந்தபோது , நாவலில் வரும் பாத்திரங்கள் அவ்விதம் நடக்கவில்லையே என்று சுட்டிக்காட்டிய கிரிதரன், இடப்பெயர்வு அவலங்களை விபரிக்கும் முக்கியமானதோர் ஆவணப்படைப்பாக வந்திருக்க வேண்டிய போரே நீ போய் விடு நாவலிலும் தேவையற்ற முறையில் உபகதையொன்று சேர்க்கப்பட்டிருக்கின்றது. மேலும் கதாசிரியர் கூற்று, கதை சொல்லியின் கூற்று ஆகியன தன்னிலையில் வரும்; சில நேரங்களில் படர்க்கையில் வரும். பிரதி எழுதப்பட்ட பின் பிழை, திருத்தம் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தனது கருத்தினைத்தெரிவித்தார். அத்துடன் செங்கை ஆழியான் வர்க்கப்போராட்டத்தைப் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் காணவில்லையென்றும் , கல்வி, தொழில், செல்வத்தின் மூலம் சாதிப்பிரச்சினையை ஒழிக்க முடியுமென்பது அவரது கருத்து என்பதையும் அவரது படைப்புகளூடு சுட்டிக்காட்டிய கிரிதரன், அது உண்மையாயின் இந்தியாவில் எப்பொழுதோ சாதிப்பிரச்சினை தீர்ந்திருக்க வேண்டுமே என்றார். செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்களில் நந்திக்கடலைச் சங்கிலியனுக்குக் குறியீடாகப் பாவித்திருந்த நந்திக்கடல் உணர்ச்சியின் அடிப்படையில் தனக்குப் பிடித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
Last Updated on Saturday, 27 August 2016 22:59 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 195 : 'குடிவரவாளன்' நாவலும் , 'அந்தாதி' இலக்கிய வடிவமும்!

E-mail Print PDF

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

அண்மையில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் தனது கருத்துகளை முகநூலில் பதிவு செய்திருந்தார். அது வருமாறு:

"மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள். எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ' மீண்டும் தொடங்கும் 'மிடுக்காய்' தொடரும் வாழ்வு. இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது. இந்த இடத்தில் பெர்லின் வாழ்வு அனுபவங்களைப் பேசும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் 'நாவல்' தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. குடிபெயரும் வாழ்வின் அனுபவங்களைப் பேசும் இவர்கள் எங்கள் பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்."

திரு.குப்பிழான் சண்முகம் அவர்களின் கருத்துகளுக்கு நன்றி. இப்பதிவில் அவர் நாவலின் வடிவம் பற்றி 'இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது' என்று குறிப்பிட்டிருந்தது என் கவனத்தை ஈர்த்தது. அவரது கூற்றினை மீண்டுமொருமுறை சிந்தித்துப்பார்த்தேன்.

உண்மையில் இந்த நாவலுக்கு ஒரு வடிவம் உண்டு. அந்த வடிவத்துக்குள் தான் அனுபவங்கள் விபரிக்கப்படுகின்றன. ஒரு சட்டம் அமைக்கப்பட்டு , அதற்குள் ஓவியம் இருப்பதுபோல்தான் நான் நாவலின் வடிவத்தை அமைத்திருந்தேன். இந்த வடிவத்தை நான் இந்த நாவலுக்குப் பாவிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் தமிழ் மரபுக் கவிதையினோர் வடிவம்தான்.

மரபுக்கவிதையில் ஒரு வடிவம் உண்டு. அது அந்தாதித்தொடை. 'யாப்பருங்கலக்காரிகை' 'அந்தாதித்தொடை' பற்றி 'அந்தம் முதலாத் தொடுப்பதந் தாதி' என்று கூறும். அடி தோறும் இறுதியாக (அந்தம்) நிற்கும் சீர், அசை, அல்லது எழுத்து ஆகியவற்றையே அடுத்த அடியின் முதலாக (ஆதி) வைத்துப் புனையப்படும் கவிதையில் பாவிக்கப்படும் தொடை அந்தாதித்தொடை என்பதிதன் பொருள்.

அபிராமி அந்தாதியில் அபிராமிப்பட்டர் ஒவ்வொரு பாடலின் இறுதிச் சொல்லாக வரும் சொல்லையே அடுத்த பாடலின் முதற் சொல்லாக வைத்து முழுப்பாடல்களையும் அமைத்திருப்பார். அதனாலேயே அப்பாடல்களின் தொகுதி அபிராமி அந்தாதி ஆயிற்று.

Last Updated on Friday, 19 August 2016 05:48 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 194 : 'ராஜசிங்கம் 'மாஸ்ட்டர்' மறைவும் சில எண்ணங்களும்...

E-mail Print PDF

அமரர் ராஜசிங்கம் 'மாஸ்ட்டர்'நண்பர் எம்.பெளசரின் முகநூல் பதிவு மூலம் ராஜசிங்கம் மாஸ்ட்டர் மறைந்த செய்தி அறிந்தேன். இவர் ஈழத்தின் முக்கிய பெண் ஆளுமைகளின் (நிர்மலா இராஜசிங்கம், ராஜனி திரணகம,  சுமதி சிவமோகன், வாசுகி இராஜசிங்கம்)  தந்தை. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரின் உப அதிபராக நீண்ட காலம் பணி புரிந்தவர். இவருடன் எனக்கு நேர்முக அறிமுகம் கிடையாது. ஆனால் முதன் முதலாக இவரை நான் கண்ட போது இவரது  புதல்விகளின் பெயர்களை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அது எழுபதுகளின் ஆரம்பக் காலகட்டம். பதின்ம வயதில், நண்பர்களுடன் கும்மாளமடித்துச்சிட்டுக் குருவிகளாகச் சிறகடித்துப் பறந்து திரிந்த காலகட்டம். அப்பொழுதெல்லாம் யாழ் கே.கே.எஸ் வீதியிலே  எப்பொழுதும் பல்வேறு காரணங்களுகாகத் திரிந்துகொண்டிருப்போம். அப்பொழுதுதான் இவரை முதல் முதலாக அறிந்து கொண்டேன்.

அப்பொழுது இவர் யாழ்ப்பாணக்கல்லூரிக்குச் செல்வதும், சென்று திரும்புவதும் கே.கே.எஸ் வீதி வழியாகத்தான். ஸ்கூட்டரில் சென்று திரும்புவார். ஸ்கூட்டரில் சென்று திரும்பும் இவர் மாணவர்களான எம் கவனத்தை ஈர்த்ததற்கு முக்கிய காரணமொன்றிருந்தது. இவர் தனது மகள்களில் ஒருவரான சுமதி சிவமோகன் (அப்பொழுது அவர் சுமதி ராஜசிங்கம், மாணவி) ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்க, ஒரு பக்கமும் பார்வையைத் திருப்பாமல், செல்லும் பாதையிலேயே கவனத்தை வைத்தவராக விரைந்து கொண்டிருப்பார். பின்னால் அமர்ந்திருக்கும் மகளின் சுருண்ட தலைமுடி காற்றில் அலைந்து பறக்கும். தந்தைக்குத் தெரியும் பின்னால் அமர்ந்திருக்கும் தன் மகளை மாணவர்கள் பார்ப்பது. ஆனால் அதனைக் காட்டிக்கொள்ளாது ஸ்கூட்டரின் ஆர்முடுகலை அதிகரித்துச்செல்வார். மகளோ வீதியெங்கும் தன்னை நோட்டமிடும் இளவட்டங்களை இலேசாகப்பார்த்துப் புன்னகைத்தபடி செல்வார். இவர்கள் இருவரும் அவ்விதம் காலையும், மாலையும் செல்லும் காட்சிகள் அக்காலகட்டத்தில் பதின்ம வயதில் திரிந்து கொண்டிருந்த மாணவர்களுக்கு மறக்க முடியாத அழியாத கோலங்கள்.

பின்னர் ஒருமுறை சந்தித்து ஓரிரு வார்த்தை பேசியிருக்கிறேன். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகை சம்பந்தமாக விரிவுரையாளராக அக்காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த திரு.மு.நித்தியானந்தனைச் சந்திப்பதற்காகச் சென்றபோது வைமன்ட் வீதியிலிருந்த அவரது வீட்டுக்குச் சென்றபோது என்று நினைவு. அப்பொழுது பிரதான வீட்டில் ராஜசிங்கம் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். வளவிலிருந்த இன்னுமொரு வீட்டில்  நித்தியானந்தனும், நிர்மலா நித்தியானந்தனும் வசித்து வந்தனர். முதலில் பிரதான வீட்டுக்குச் சென்றபொழுது, அங்கிருந்த ராஜசிங்கம் அவர்கள் அருகிலிருந்த வீட்டைக்காட்டி அனுப்பி வைத்தார்.

Last Updated on Monday, 15 August 2016 22:19 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 193: தேவகாந்தனின் கந்தில் பாவை பற்றிச்சில கருத்துகள்.

E-mail Print PDF

தேவகாந்தனின் கந்தில் பாவைஎழுத்தாளர் தேவகாந்தன்எழுத்தாளர் தேவகாந்தனின் 'கந்தில்பாவை'யை இன்று வாசித்தேன். இது நாவல் மீதான முதற் கட்ட வாசிப்பு. ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை உள்ளடக்கிய நாவல் இது. வெவ்வேறு காலகட்டங்களை உள்ளடக்கிய நான்கு பகுதிகள். ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு அத்தியாயமாக்கி நூலை வகுத்திருக்கின்றார் தேவகாந்தன். பொதுவாக பகுதி 1, பகுதி 2, பகுதி 3 மற்றும் பகுதி 4 என்று பகுதிகளாகப் பிரித்திருப்பார்கள். அப்பகுதிகள் மேலும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு பகுதிகள் அத்தியாயங்களாகியிருக்கின்றன. தேவகாந்தன் இவ்விதம் நூலினை வகுத்ததற்கு ஏதாவது காரணம் இருக்குமோ அல்லது தற்செயலாக நடந்த நாவலின் பிரிப்பா என்பதை நாவலாசிரியரே அறிவார்.

இந்த நாவல் ஒரு குடும்பத்தின் பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கையை விபரிக்கும் வகையில் பின்னப்பட்டிருப்பதால்,  ஒவ்வொரு 'அத்தியாய'மும் (அல்லது 'பகுதியும்') பல்வேறு காலகட்டத்து ஆளுமைகளின் வாழ்வினை விபரிப்பதால், நாவல் கூறும் பொருளையும், பாத்திரப்படைப்புகளையும் , கதைப்பின்னலையும் தெளிவாக அறிவதற்கு, நாவல் மீதான முழுமையான வாசிப்பு அவசியமானது. அத்தியாயங்களில் ஒன்றைத்தவற விட்டாலும் நாவலின் முழுப்பரிமாணத்தையும் அடைவதில் சிரமம் ஏற்படும் சாத்தியமுள்ளது.

இந்த நாவலின் கூறு பொருள், பாத்திரப்படைப்பு, நான்கு தலைமுறைகளையும் உள்ளடக்கிய கதைப்பின்னல் (Plot) ஆகியவை நன்கு அமைந்திருக்கின்றன. அவை எழுத்தாளர் தேவகாந்தனின் எழுத்துச்சிறப்பினை வெளிப்படுத்துகின்றன. மேலும் இந்த நாவல் பல்வேறு காலகட்ட வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கியதால் பன்முகப் பரிமாணங்களைக்கொண்டதொரு நாவலாக உருவாகியிருக்கின்றது.

இந்த நாவலை வாசிக்க முன் . முன்னுரையில் நாவலாசிரியர் கூறும் பின்வரும் கூற்றினைச் சிறிது கவனியுங்கள்:

Last Updated on Saturday, 13 August 2016 06:20 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 192: ஜான் மாஸ்ட்டருடனான மாலை நேரச்சந்திப்பொன்று!

E-mail Print PDF

Uncle Rajanathan Muthusamippillai.எழுத்தாள நண்பர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவலை வாங்கி வைத்திருக்கும்படியும் , டொராண்டோ வரும்போது நூலினைப்பெற்றுக்கொள்வதாகவும் நண்பரும், அரசியற் செயற்பாட்டாளருமான ஜான் மாஸ்ட்டர் கூறியிருந்தார். அவ்விதம் வாங்கி வைக்கப்பட்டிருந்த நூலை இன்றுதான் அவரிடம் கொடுக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

விக்டோரியா பார்க் மற்றும ஃபிஞ்ச் வீதிகள் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் மக்டானல்ஸ்ட்ஸ் உணவகத்தில் மாலை எட்டு மணியளவில் சந்தித்தோம்.

வழக்கம் போல் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடினோம். உயிர்ப்பு 5இல் வெளிவந்த தன்னியல்பு, பொதுப்புத்தி பற்றிய ஏகலைவனின் நீண்ட பயனுள்ள கட்டுரை பற்றி, உயிர்ப்பு இதழ்களின் தொகுப்பின் வெளியீடு பற்றி, எண்பதுகளிலிருந்து இன்று வரையிலான கலை, இலக்கிய மற்றும் அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக உரையாடல் அமைந்திருந்தது.

உரையாடலின் முக்கிய பங்கினை சம்பூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையம் எடுத்துக்கொண்டது. விரைவில் இது பற்றியொரு கலந்துரையாடல் நடக்கவிருப்பதாகவும், தானும் அந்நிகழ்வில் உரையாட இருப்பதாகவும் ஜான் மாஸ்டர் எடுத்துரைத்தார். சீனாவுக்குப் போட்டியாக ஏற்கனவே வடக்கில் கா பதித்த இந்தியாவின் பதில் நடவடிக்கையாகவே ஜான் மாஸ்ட்டர் கருதுவதை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களைப்பை இணைக்கும் வகையில் புகையிரதப்பாதை அமைப்பதில் கவனம் செலுத்துவது பற்றியும் , இலாபநோக்கற்ற நிலையில் இயங்கும் அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றியும், ஜான் மாஸ்ட்டருடன் கருத்துகளைப்பகிர்ந்துகொண்டேன்.

Last Updated on Monday, 08 August 2016 04:36 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 191: எழுத்தாளர் ஜெயமோகனும், இனப்படுகொலையும் பற்றிய ஒரு பார்வை!

E-mail Print PDF

எழுத்தாளர் ஜெயமோகன்ஜெயமோகன் இனப்படுகொலை பற்றிக்கூறிய கருத்துகளுக்கு உணர்ச்சி வசப்பட்டுப்பலர் இணையத்தில் அவரைத்தூற்றிக் காரசாரமாக எதிர்வினையாற்றி வருகின்றார்கள். அவரது பேட்டியினை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் இணையத்தில் வெளியான அந்நேர்காணல் கேள்வி/ பதிலை வாசித்திருக்கின்றேன். முதலில் அவரது கேள்வியினைப் பார்ப்போம்.


"விகடன் தடம்: ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன’ என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது ‘உலோகம்’ நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?’’
ஜெயமோகன்: ``முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது. 1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது? இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது. இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை."


 

இனப்படுகொலை பற்றிய இது போன்ற கேள்விகளுக்குப்பதிலளிக்கும்போது நம்மவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகின்றார்கள். உணர்ச்சி கண்ணை மறைக்கும். அறிவையும் தடுமாறச்செய்யும். வார்த்தைகள் வராமல், போதிய தர்க்கிக்கும் வல்லமை அற்று ஜெயமோகனின் கூற்றினை வரிக்கு வரி எதிர்ப்பதற்கான காரணங்களைக் கூறுவதற்குப் பதில் கொதித்தெழுகின்றார்கள்.

ஜெயமோகன் இனப்படுகொலை பற்றித்தான் தான் நம்பும் காரணங்களைக் குறிப்பிடுகின்றார். இந்தியா, இலங்கை உட்படப்பல நாடுகளில் நடைபெற்ற ஆயுதக் கிளர்ச்சிகளில் பலர் அரசபடைகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையில் கூட சிங்களவர்களான ஜேவிபியினர் படுகொலை செய்யபட்டிருக்கின்றார்கள். இவையெல்லாம் இனப்படுகொலைகளா? இவற்றை அரசு தனக்கெதிராகப் போரிடும் குழுக்களுடனான மோதல்கள் என்றுதான் தான் பார்ப்பதாகவும், இனப்படுகொலையாகப் பார்க்கவில்லையென்றும் கூறியிருக்கின்றார்.

Last Updated on Monday, 08 August 2016 22:12 Read more...
 

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! -2

E-mail Print PDF

நித்தி கனகரத்தினம்நித்தியின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெறத்தொடங்கின. 1970இல் பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 'தமிழ் பாப் 70' என்னும் பெயரில் இசை நிகழ்ச்சியொன்றினை தினபதி பத்திரிகையில் பணி புரிந்த ஜெயசீலன் என்பவர் , சீதா பத்திரிகையினை அக்காலகட்டத்தில் நடத்திக்கொண்டிருந்த தமிழ் நெஞ்சன் என்பவருடன் இணைந்து நித்தி கனகரத்தினத்தின் பங்களிப்புடன் நடத்தினார்.  எஸ்.டி.துரைசாமி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த அப்துல் ஹமீட் மற்றும் புவனலோசனி வேலுப்பிள்ளை ஆகியோர் மேடைக்குப் பின்புறம் நின்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்வில் நிகழ்வு முழுவதும் நித்தி கனகரத்தினம் அவர்கள் 'சின்ன மாமியே' , 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே' மற்றும் 'ஊரே கெட்டுப் போச்சு' ஆகிய மூன்று பாடல்களை மட்டுமே திருப்பித்திருப்பிப் பாடி இரசிகர்களைக் களிப்பிலாழ்த்தியதுதான். இரசிகர்களும் அவர் அவ்விதம் திரும்பத்திரும்பப் பாடுவதை வரவேற்று இரசித்தனர்.  

இந்நிகழ்வு பற்றிய இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் அந்நிகழ்வுக்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணம் பதினைந்து ரூபா மட்டுமே. நிகழ்வின் மூலம் கிடைத்த பணத்தினை தினபதி ஜெயசீலனும், 'கீதா' பத்திரிகை தமிழ் நெஞ்சனுமே பங்கு போட்டுக்கொண்டர்.

இந்நிகழ்வில் பின்னாலிருந்து நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீட் அவர்கள் பின்னர் தானே முன்னின்று நித்தி கனகரத்தினத்தின்  இசை நிகழ்ச்சியினை நடத்திக்கொடுத்ததாகக் குறிப்பிட்டதாகவும் அது உண்மையில்லை என்பதைப்பதிவு செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் நித்தி கனகரத்தினம் அவர்கள் பாப் 71, பாப் 72, பாப் 73 ஆகிய பாப் இசை நிகழ்ச்சிகளை எம்.எஸ்.பெர்ணாண்டோ ,மற்றும் இந்திராணி பெரேரா ஆகியோருடன் இணைந்து கொழும்பில் நடத்தியதையும் குறிப்பிட்டார். இறுதி நிகழ்ச்சி BMICH மண்டபத்தில் நடைபெற்றதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன் முதலிரு நிகழ்வுகளும்
கொழும்பு நவரங்கல மண்டபத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.

Last Updated on Monday, 19 September 2016 05:11 Read more...
 

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! - 1

E-mail Print PDF

பொப் இசைச்சக்கரவர்த்தி நித்தி கனகரத்தினம் தம்பதியினருடன் ஒரு மாலைப்பொழுது! - 1இன்று கனடாவுக்கு வருகை தந்திருக்கும் பொப் இசைச்சக்கரவர்த்தி திரு.நித்தி கனகரத்தினம் தம்பதியினரை ஸ்கார்பரோவிலுள்ள மக்னிகல் ஜோஸ் (McNicoll Joe's)  உணவகத்தில் சந்தித்தோம்.

நண்பர எல்லாளன், எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோர் என்னுடன் நித்தி கனகரத்தினம் தம்பதியினருடனான சந்திப்பில் இணைந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரச்சந்திப்பில் திரு.நித்தி கனகரத்தினம் எம்முடன் தனது பொப்பிசை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இலங்கையிலேயே முதன் முதலாக ஆங்கில இசைக்குழுவொன்று Living Fossils என்னும் பெயரில் 1965 இல் ஆரம்பமானது. அதனை ஆரம்பித்தவர்கள் மூவர். ஒருவர்: மருத்துவர் சூரியபாலன் (டொராண்டோவில் அண்மையில் அமரரானவர்), நித்தி கனகரத்தினம் இவர்களுடன் லக்சுமன் ஞானப்பிரகாசம்.

1967இல் நித்தி கனகரத்தினம் அவர்கள் அம்பாறை தொழில்நுட்பக் கல்லூரியான ஹாடியில் கல்வி பயின்றபோது இவரது சீனியர்களிலொருவரான பாலச்சந்திரன் மூலமே முதன் முதலில் சின்ன மாமியே பாடலைக்கேட்டு அறிமுகமாகின்றார். அச்சமயம் சின்ன மாமியே பாடலில் பல தூஷணச்சொற்கள் நிறைந்திருந்தன. அவற்றை நல்ல பாவனைக்குரிய தமிழுக்கு மாற்றிப் பாடத்தொடங்கினார் நித்தி கனகரத்தினம். இவை தவிர இவர் கலந்து கொண்ட பல இசை நிகழ்ச்சிகள் பற்றி, பாடல்கள் உருவாகக்காரணமான நிகழ்வுகள் பற்றி மற்றும் அண்மைக்காலமாக இலங்கையில் இவர் இலாப நோக்கற்ற நிலையில் ஆற்றி வரும் பங்களிப்புகள் பற்றி, அவற்றாலடைந்த அனுபவங்கள் பற்றியெனப் பலவேறு விடயங்களைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Last Updated on Monday, 19 September 2016 05:11 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 190: 'ஆவணப்பதிவு: கனடாவின் முதலாவது தமிழ்க் கவிதைத்தொகுப்பு எது?

E-mail Print PDF

சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' கவிதைத்தொகுப்புமுன்பொருமுறை இது பற்றி முகநூலில் தர்க்கித்தது நினைவுக்கு வருகிறது.     தமிழர் தகவல் (கனடா) இதழின் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலரில் வெளியான முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் 'கனடாவில் தமிழ் இலக்கியம்' என்னும் கட்டுரையில் '"கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' ஆகும். இது 1990இல் வெளிவந்தது.' என்று குறிப்பிட்டிருந்தது பற்றித் தர்க்கித்தது நினைவுக்கு வருகின்றது. முனைவர் நா.சுப்பிரமணியன் 'காலம்' செல்வம் போன்றவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அம்முடிவுக்கு வந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் கவிஞர் சேரனின் 'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' வெளியாவதற்கு முன்னர் 14.01.1987 மங்கை பதிப்பக வெளியீடாக வெளியான 'மண்ணின் குரல்' தொகுப்பு எட்டுக் கவிதைகளையும் உள்ளடக்கி வெளியாகியுள்ளது. அக்கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

இக்கவிதைகள் அனைத்தும் மான்ரியாலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச்சஞ்சிகையில் வெளியானவை. பத்து அத்தியாயங்களை உள்ளடக்கிய 'மண்ணின் குரல்' நாவலும் அதே ' புரட்சிப்பாதை' கையெழுத்துச்சஞ்சிகையில்தான் வெளியானது.

Last Updated on Saturday, 06 August 2016 22:40 Read more...
 

வாசிப்பும் , யோசிப்பும் 189: ஜெயமோகனின் கருத்துகளும், எதிர்வினைகளும் பற்றிய சிறு குறிப்பு.!

E-mail Print PDF

எழுத்தாளர் ஜெயமோகன்எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எந்தவொரு விடயத்தைப் பற்றியும் ஒருவித கருத்திருக்கும். சில கருத்துகள் எம்முடன் ஒத்துப்போகக்கூடியவையாகவிருக்கும். வேறு சில கருத்துகள் முற்றிலும் ஒத்துப்போகாதவையாகவிருக்கும். அதற்காக அவரைத்தனிப்பட்டரீதியில் தாக்குவது முட்டாள்தனமானது. அவரது கருத்துகளை அவரது கருத்துகளினூடு எதிர்கொள்வது மிகவும் அவசியம். உதாரணமாக அவரது கருத்தான இந்திய அமைதி காக்கும் படையினர் பற்றிய கருத்து. அதற்காக நாம் ஆத்திரப்பட வேண்டிய தேவையில்லை. அவரது கூற்று தவறானதென்பதை தர்க்கரீதியாக ஆணித்தரமாக நிரூபிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக அவரைத்தனிப்பட்டரீதியில் தாக்குவதென்பது எதிர்மறையான விளைவுகளையே தரும்.

அதுபோல் அவருக்கு ஒவ்வொரு படைப்பாளி பற்றியும் ஒவ்வொருவித கருத்து இருக்கும். அவரது கருத்து தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அல்லது அவர் தன் எழுத்தை அவமதித்து விட்டார் என்பதற்காகத் துள்ளிக்குதிக்க வேண்டியதில்லை. அவரது கருத்தை மாற்றும்படி வற்புறுத்த முடியாது. அது அவரது கருத்து.  அது அவரது கருத்துரிமை..

அவர் ஒரு படைப்பைப்பற்றி உயர்த்திக் கூறுவதாலோ அல்லது தாழ்த்திக் கூறுவதாலோ அந்தப் படைப்பின் தரம் குறைந்து போய்விடப்போவதில்லை. உண்மையிலேயே அந்தப் படைப்பு தரமானதாகவிருப்பின் நிச்சயம் காலத்தை வென்று வாழும். மாகவி பாரதியைப்பற்றியே அவர் ஒரு மகாகவி அல்ல என்று வாதிட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களெல்லாரும் காலத்தின் முன் மண்டியிட, இன்றும் பாரதி மாகவியாக உயர்ந்து நிற்கின்றார். இதுபோல் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

Last Updated on Wednesday, 03 August 2016 18:33 Read more...
 

சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்!

E-mail Print PDF

சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்!- விரைவில் வெளிவரவிருக்கும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய  கட்டுரை இக்கட்டுரை. இத்தொகுப்பிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் ஏறகனவே 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவையென்பதும் குறிப்பிடத்தக்கது. - வ.ந.கி -


தொல்காப்பியம் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருபவர் நுணாவிலூர் கா.விசயரத்தினம். அதற்குக் காரணம் 'பதிவுகள்' இணைய இதழில் இவர் எழுதிய , எழுதிவரும் தொல்காப்பியம் பற்றிய, சங்கத்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும், ஏற்கனவே நூலுருப்பெற்ற இவரது 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' என்னும் நூலும்தாம். ஆரம்பத்தில் இவர் 'பதிவுகள்' இணைய இதழுக்கு இலக்கியக்கட்டுரைகள் அனுப்பியபோது இவர் தமிழ்ப்பேராசிரியர்களுள் ஒருவராக இருக்கக்கூடுமென்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது இவர் தமிழ்ப்பேராசிரியரல்லர் ஆனால் ஓய்வு பெற்ற ஒரு கணக்கியல் பட்டதாரி; கணக்காய்வுத் திணைகளத்தில் (இலங்கை) கணக்காய்வு அத்தியட்சகராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவரென்பது.

கணக்கியல் பட்டதாரியான இவர் எவ்விதம் இவ்விதம் சங்கத்தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய ஆய்வில் ஆர்வம் கொண்டார்? ஆனால் அந்த ஆர்வம் இவரது ஓய்வுக்காலத்தைப் பயனுள்ளதாக மாற்றித் தமிழ் இலக்கிய உலகுக்கு வளம் சேர்க்குமொன்றாக மாற்றி விட்டது. தமிழ்ப்பேராசிரியர்களே எழுதாத எண்ணிக்கையில் சங்கத்தமிழ் நூல்கள் பற்றியும், குறிப்பாகத் 'தொல்காப்பியம்' பற்றியும் இவர் எழுதி வருவது பாராட்டத்தக்கது. தன் பிறந்த மண்ணை நினைவுபடுத்தும் வகையில் 'நுணாவிலூர் கா.விசயரத்தினம்' என்னும் பெயரில் இலக்கியக் கட்டுரைகளை எழுதி வரும் நுணாவிலூராரின்  சுயவாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை மற்றும், சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய தெளிந்த இலகு நடை ஆகியவை அவரது எழுத்துகள் சிறப்புற்று விளங்குவதற்கு முக்கிய காரணங்கள். இத்தொகுதியிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளிவந்தவை என்பதும் மகிழ்ச்சிக்குரியது.

Last Updated on Tuesday, 02 August 2016 00:09 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 188: 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில!

E-mail Print PDF

'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில!'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' பற்றிய குறிப்புகள் சில! 2012 ஆம் ஆண்டு இலங்கை சென்ற நண்பர் ஒருவரிடம் என்னிடம் கொடுத்து விடும்படி திரு.கே.எஸ்.சிவகுமாரனால் கொடுத்து விடப்பட்டிருந்த 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் அண்மையில்தான் என் கைகளை வந்தடைந்தது. :-) மறக்காமல் நினைவில் வைத்திருந்து நூலை என்னிடம் சேர்ப்பித்த  நண்பருக்கு நன்றி. :-)

இது போல் இன்னுமொருவரிடமும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் நூல்கள் சிலவற்றைக் கொடுத்திருந்த விபரத்தை நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் அறியத்தந்திருந்தார். ஆனால் நூல்கள் இன்னும் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. :-)

இன்னுமொருவரிடம் கொடுத்திருந்த நூல் பொதி பெற்றவர் இன்னுமொருவரிடம்  கொடுத்து சிறிது காலம் தாழ்த்தியென்றாலும் வந்து சேர்ந்து விட்டது.

'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் கைக்கடக்கமானது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப மிகுந்த பயன் மிக்கது. குறிப்பாக ஆவணச்சிறப்பு மிக்கது. இந்நூலில் கே.எஸ்.எஸ் அவர்கள் எழுத்தாளர்களைபற்றி, வெளிவந்த நூல்கள் பற்றி, தன்னைப் பாதித்த அண்மைக்கால நாடகங்கள், சிங்களத்திரைப்படம் பற்றி, என்று பல விடயங்களைப்பற்றி , எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அமரர் சோமகாந்தன் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய 'காந்தன் கண்ணோட்டம்' என்னும் பத்தி எழுத்துகள் பற்றியொரு கட்டுரை தொகுப்பிலுள்ளது. இச்சிறு கட்டுரை சோமகாந்தனின் பத்தி எழுத்துகளை விபரிப்பதுடன், பத்தி எழுத்துகள் பற்றிய கே.எஸ்.எஸ் அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்பு.

'காந்தனின் கண்ணோட்டம்' பத்தி எழுத்துகளைப்பற்றி கே.எஸ்.எஸ் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

" நான் இந்த எழுத்துகளை வெகு ஆவலுடனும், ஆர்வத்துடனும் வாசித்து வந்தேன். விளைவு: ஆனந்தம், தகவற்கள விரிவாக்கம், செயற்பாட்டுப்பயன். ஆனந்தம் ஏனெனில் தமிழ்மொழியின் சொல்வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தால் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளகாங்கிதம் நான் அடைந்தமை. தெரியாத சில விபரங்களைக்கோர்த்து அவர் தரும் பாங்கு எனது அறிவை விருத்தி செய்ய உதவியமை சொல்லப்பட வேண்டும்.  காந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத் தன்மை கொண்டவையாதலால், அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெறுகின்றேன்."

Last Updated on Monday, 01 August 2016 17:48 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 187 : கறுப்பு ஜுலை 1983: மானுட அவலம் என்பதன் வடிவம! | கறுப்பு ஜூலை 83: சில கேள்விகளும், இழைக்கப்பட்ட அநீதியும் கிடைக்க வேண்டிய நீதியும்!|பெட்டிக்கு வெளியில் நின்று சிந்திக்கப்பழகுவோம் (Think outside the box)!

E-mail Print PDF

1. கவிதை: கறுப்பு ஜுலை 1983: மானுட அவலம் என்பதன் வடிவம! 

கறுப்பு ஜூலை 1983எண்ணிப் பார்க்கையில் எத்தனை நினைவுகள்.
கண்ணீர்த் தீவின் வரலாற்றை மாற்றிய
கறுப்பு ஜீலை எண்பத்து மூன்று.
மானுட அவலம் என்பதன் வடிவம்.

மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால்
மொழியின் பெயரால் நாட்டின் பெயரால்
இதுவரை மானுடர் மடிந்தது போதும்.
இனியும் வேண்டாம் இந்த அவலம்.

இனத்தின் பெயரால் இங்கே ஒருவர்
கூனிக் குறுகி அவமா னத்தால்
இருக்கும் காட்சி காணும் போதினில்
சிந்தையில் எழும் வினாக்கள் பற்பல.
யாரிவர்? எங்கி ருந்து வந்தார்?
குடும்பம் ஒன்றின் தலைவரா அல்லது
உறவுகள் அற்ற மானுடர் ஒருவரா?

இனவெறி மிகுந்து இங்கு வெறியுடன்
ஆடி நிற்கும் காடையர் முகங்கள்
மானுட அழிவின் பிரதி பலிப்புகள்.
இந்த மனிதர் இங்கே தனிமையில்
நாணி, வாடி, ஒடிந்து கிடக்கின்றார்.
இவரை இவ்வித மழித்த மானுடர்
மானுட இனத்தின் அவமானச் சின்னங்கள்..
மானுட உரிமை ஆர்வலர் மற்றும்
அனைவரு மெழுவீர்! எழுவீர்! எழுந்து
நீதி கிடைத்திட ஒன்றெனத் திரள்வீர்!

நடந்த வற்றில் பாடத்தைப் படித்து
நல்வழி தேர்ந்து பயணம் தொடர்வோம்.
சிறிய கோளில் மோதல்கள் எதற்கு.
அறிவுத் தளத்தில் அனைத்தையும் அணுகின்.

இதுவரை மோதலில் போரினில் மற்றும்
அனைத்து அழிவினில் மடிந்த துடித்த
மக்களை எண்ணியே பார்ப்போம். பார்த்து
இம்மண் மீதினில் புதிய பாதை
சமைப்போம். வகுப்போம். தொடர்வோம், மகிழ்வோம்.

Last Updated on Tuesday, 26 July 2016 16:36 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 186: தேடகம் (கனடா) மற்றும் கரவெட்டி கலாசாரப்பேரவை ஆதரவில் 'டொராண்டோ (கனடா)வில் நடைபெற்ற அமரர் 'செ.கதிர்காமநாதன் படைப்புகள்' நூல் வெளியீடு பற்றியதொரு பதிவு!!

E-mail Print PDF

எழுத்தாளர் செ.கதிர்காமநாதன்இன்று 3600 கிங்ஸ்டன் வீதியில் அமைந்திருக்கும் 'ஸ்கார்பரோக் கிராமச்சமுக' நிலையத்தில் கலாச்சாரப்பேரவை, கரவெட்டி மற்றும் தேடகம் - கனடா ஆகியவற்றின் ஆதரவில் வெளியிடப்பட்ட அமரர் 'செ.கதிர்காமநாதன் படைப்புகள்' என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். நிகழ்வுடன் கூடவே 'காலம்' செல்வம் அவர்களின் 'வாழும் தமிழ்' புத்தகக்கண்காட்சியும் நடைபெற்றது.

செல்லும்போது சிறிது தாமதமாகிவிட்டது. நிகழ்வு எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர் அ.கந்தசாமி உரையாற்றிக்கொண்டிருந்தார். தனக்கேயுரிய கவித்துவ மொழியில் அவரது உரை அமைந்திருந்தது. அவர் தனதுரையில் செ.கதிர்காமநாதனின் குடும்பச்சூழல் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். செ.க.வே முதன் முறையாக பிறநாட்டுப்பாத்திரங்களை வைத்துப் புனைகதை எழுதியவராக அவர் தனதுரையில் குறிப்பிட்டார். அதற்குதாரணமாக செ.க.வின் 'வியட்நாம் உனது தேவைதைகளின் தேவவாக்கு' என்னும் சிறுகதையினைச் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் செ.கதிர்காமநாதனின் தமக்கையாரான இந்திராணி மகேந்திரநாதன் அவர்கள் தனது தம்பி பற்றிய உணர்வுகளைப்பகிர்ந்து கொண்டார். மிகவும் மெதுவான குரலில் அவரது உரை அமைந்திருந்ததால் பலருக்கும் ஒழுங்காகக் கேட்டிருக்குமோ என்று சந்தேகமாயிருந்தது. அவர் தனதுரையில் இளமைக்கால வாழ்வு, இலக்கிய முயற்சிகள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைத்தார்.

அவரைத்தொடர்ந்து எழுத்தாளர் 'அலை' யேசுராசா அவர்கள் செ.கதிர்காமநாதனின் புனைகதைகள் பற்றி, மொழிபெயர்ப்புக் கதைகள் பற்றி விரிவாகவே எடுத்துரைத்தார். செ.கதிர்காமநாதன் நல்லதொரு வாசகராகவும், எழுத்தாளராகவுமிருந்ததாலேயே தரமான பிறமொழி ஆக்கங்களையெல்லாம் அவரால் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க முடிந்தது என்பதைச்சுட்டிக்காட்டினார். அவரைத்தொடர்ந்து நூல் வெளியீட்டுக்குத் தேடகம் (கனடா)வுடன் இணைந்து ஒத்துழைத்த கரவெட்டி கலாச்சாரப் பேரவையினைச்சேர்ந்த அம்பிகைபாலன் செ.கதிர்காமநாதன் பற்றிய தனதுரையினை ஆற்றினார்.
Last Updated on Monday, 18 July 2016 21:00 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 185: ஆய்வாளர்கள் கவனத்துக்கு: ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகும், கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமியின்) பங்களிப்பும்!

E-mail Print PDF

அறிஞர் அ.ந.கந்தசாமி

ஈழத்து இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கியத்திறனாய்வு மற்றும் நாடகம் என அனைத்துப் பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து சாதனை புரிந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். அவர் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுபவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் விமர்சனங்கள், திறனாய்வுகள் செய்பவர்கள் பலருக்குப் போதிய தேடுதல் இல்லை என்பதென் கருத்து. இதனால் அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றிய போதிய புரிதல் இல்லை அவர்களுக்கு. இதனால் ஏற்கனவே யாரும் அவரைப்பற்றிக் கூறியதை எடுத்துரைப்பதுடன் நின்று விடுகின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்காக அ.ந.கந்தசாமி அவர்களின் கவிதைப் பங்களிப்பை எடுத்துரைப்பதுதான் இப்பதிவின் நோக்கம். அ.ந.க எத்தனை கவிதைகள் எழுதியிருக்கின்றார் என்பது சரியாகத்தெரியவில்லை. ஆனால் இதுவரை அவர் எழுதிய கவிதைகளில் எமக்குக் கிடைத்த கவிதைகளைப்பற்றிய விபரங்களைக் கீழே தருகின்றோம். அ.ந.க.வின் ஏனைய கவிதைகள் பற்றி அறிந்தவர்கள் அறியத்தரவும். ஈழத்தில் அவர் காலத்தில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றைத்தேடிப்பார்ப்பதன் மூலமே அவர் எழுதிய கவிதைகள் பற்றிய மேலதிக ஆய்வினைத்தொடர முடியும்.

அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) எழுதிய கவிதைகளில் எம்மிடமுள்ள கவிதைகள் பற்றிய விபரங்கள்:

Last Updated on Sunday, 17 July 2016 07:07 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 184 : தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' பற்றிச்சில வார்த்தைகள்....

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 183 : தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' பற்றிச்சில வார்த்தைகள்.... - வ.ந.கிரிதரன் -அண்மையில் வெளியான தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.

நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது 'எனக்காகக் காத்து நிற்பீர்களா?' என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.

நாட்டின் அரசியல் சூழல் மாறுகின்றது.  அமைதி காக்கும் படையினர் என்ற போர்வையில் இந்தியா தன் படைகளை இலங்கைக்கு அனுப்புகின்றது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அமைதிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்கள், அக்காலகட்டத்தில் நடைபெற்ற ஏனைய இயக்கங்களுக்கும் , புலிகளுக்குமிடையிலான மோதல்கள் (வடக்கில் நிகழ்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனான  மோதல்கள், வன்னியில் நிகழ்ந்த தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகத்துடனான மோதல்கள்) விடுதலைப்புலிகளின் பார்வையில் விபரிக்கப்படுகின்றன.  அக்காலகட்டத்தில் நடைபெற்ற இந்திய அமைதிப்படையினர் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்றவற்றைப்பற்றி நாவல் எடுத்துரைக்கின்றது. மோதல்களினால், சிங்கள இனவாதிகளின் தாக்குதல்களினால் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்லும் வானதியின் குடும்பத்தினரின் நிலையும் நாவலில் விபரிக்கப்படுகின்றது.

Last Updated on Sunday, 17 July 2016 07:07 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 183: மணி வேலுப்பிள்ளையின் 'மொழியினால் அமைந்த வீடு'

E-mail Print PDF

மணி வேலுப்பிள்ளைஎழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளை தற்போது டொராண்டோவில் வசித்து வருகின்றார். எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை நல்லதொரு மொழிபெயர்ப்பாளரும், கட்டுரையாளருமாவார். சிலிய ஜனாதிபதி அலந்தே, டெங் சியாவோ பிங், அம்மாவின் காதலன் மாயாகோவஸ்கி மற்றும் ரோசா லக்சம்பேர்க் போன்ற கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு..) பற்றிய மொழிபெயரியல்பு, மொழியினால் அமைந்த வீடு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, விபுலானந்த அடிகளின் கலைச்சொல்லாக்க வழிமுறைகள் போன்ற கட்டுரைகள் அதனையே வெளிப்படுத்துகின்றன.

மொழிபெயர்ப்பாளர்கள் பலர் மொழிபெயர்ப்புகளுடன் நின்று விடுகையில், இவர் மொழிபெயர்ப்பு பற்றிய ஆழமான கட்டுரைகளைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இவை படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எழுத்தாளர்களுக்கு பயன் மிக்க ஆலோசனைகளை வழங்குகின்றன.

ஆழமான கட்டுரைகளைச் சுவையாக எழுதுவதில் வல்லவர் இவர். உதாரணத்துக்கு 'மொழியினால் அமைந்த வீடு' கட்டுரை கீழுள்ளவாறு முடிவதைப்பாருங்கள்:

"உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒரு போதும் தடையாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற்படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால்தான் ஆட்சியாளரும், அரசியல்வாதிகளும் , விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகின்றார்கள். மொழித் திரிபுவாதிகள் கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமர மக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வருகின்றார்கள்."
Last Updated on Tuesday, 12 July 2016 21:15 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 182: தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் வெளியீட்டு நிகழ்வு குறித்து...

E-mail Print PDF

நாவல்: பார்த்தீனியம்தமிழ்நதிதமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நூல் வெளியீடு சென்றிருந்தேன், கனடாத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. நிகழ்வுக்குத் தலைமை தாங்கவென்று யாருமில்லை. இதற்கொரு காரணத்தைத்தனது ஏற்புரை/நன்றியுரையில் தமிழ்நதி தெரிவித்தார். அதாவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை ஆண்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அதற்குப் பதிலாகவே தனது நூல் வெளியீடு எந்தவிதத்தலைமையுமற்று நடை[பெற்றதாக என்று. தலைமையில்லாத நிகழ்வினைச் சிறப்பாக்குவதற்காகத் தன்னுடன் இணைந்த தனது சிறு வயதுத்தோழியர்களிலொருவரான அன்பு-அன்பு நன்கு செயற்பட்டதாகக்குறிப்பிட்டார். ஏன் பெண் ஆளுமையொருவரின் தலைமையில் நிகழ்வினை நடாத்தியிருக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக ஆண்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுவதால், பெண்களுக்குரிய இடம் கிடைக்கவில்லையென்று கருதும் தமிழ்நதி பெண்களின் தலைமையில் நிகழ்வினை நடத்த வந்த வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டாரே?

நிகழ்வு நடைபெற்ற மத்திய ஸ்கார்பரோ சமூக நிலையம் கலை, இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது.  எழுத்தாளர்களான அ.யேசுராசா, கவிஞர் கந்தவனம், கற்சுறா, ரதன், மா.சித்திவிநாயகம், வல்வை சகாறா, கவிஞர் அவ்வை, எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அ.கந்தசாமி, குரு அரவிந்தன் தம்பதியினர், முனைவர் பார்வதி கந்தசாமி, டானியல் ஜீவா, தீவகம் வே.ராஜலிங்கம், ந.முரளிதரன், தேவகாந்தன், பிரதிதீபா தில்லைநாதன் சகோதரிகள்,..,.. என்று பலரைக் காண முடிந்தது.

நிகழ்வில் ஜான் மாஸ்ட்டர், பொன்னையா விவேகானந்தன், முனைவர் அ.ராமசாமி, முனைவர் இ.பாலசுந்தரம், அருண்மொழிவர்மன், தமிழ்நதியின் தோழி அன்பு, தமிழ்நதி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியினை எழுத்தாளர் கந்தசாமி கங்காதரன் தொகுத்து வழங்கினார்.

பொன்னையா விவேகானந்தன் நல்லதொரு பேச்சாளர். தமிழ்நதி கவிஞர் கலைவாணி ராஜகுமாரனாக அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து தான் அறிந்த கவிஞரின் கவிதைகளை உதாரணங்களாக்கித் தன் உரையினை ஆற்றித் தமிழ்நதி பற்றிய நல்லதோர் அறிமுகத்தை வழங்கினார். அவர் தனதுரையில் 'கவிஞர்கள் சிலரே மெட்டுக்குப் பாடல்களையும், நல்ல கவிதைகளையும் எழுத வல்லவர்கள். அவ்வகையான கவிஞர்கள் கவிஞர் சேரனும், கலைவாணி ராஜகுமாரனுமே' என்னும் கருத்துப்பட தன் கருத்துகளைத்தெரிவித்தார். அத்துடன் ஆரம்பத்தில் கலைவாணி ராஜகுமாரன் தேசியம் சார்ந்தவராக இருந்த காரணத்தால் ஏனைய இலக்கியவாதிகள் பலரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.

Last Updated on Sunday, 10 July 2016 17:17 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 181: பேராசிரியர் நிமால் டி சில்வாவும், 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்''

E-mail Print PDF

பேராசிரியர் நிமால் டி சில்வாநல்லூர் ராஜதானி நகர அமைப்பு - வ.ந.கிரிதரன்மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்று கொண்டிருந்த காலத்தில் எமக்குக் கற்பித்த பேராசிரியர்களில் எப்பொழுதும் என் நினைவில் முதலில் வருபவர் பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள். இவர் சொந்தமாகக் கட்டடக்கலைஞராகத் தொழில் பார்த்து வந்த அதே சமயம் எமக்கு 'பாரம்பர்யக் கட்டடக்கலை' என்னும் பாடத்தினையும் எடுத்து வந்தார்.

இலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை எவ்வாறு சூழல்களுக்கேற்ற வகையில் வேறுபடுகின்றது, குறிப்பாகத்தென்னிலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை பற்றியெல்லாம் விரிவாகக் கற்பித்த அதே சமயம், மாணவர்களை அவர்கள் வாழும் பகுதிகளுக்குரிய கட்டடக்கலை பற்றிய கட்டுரைகளை எழுதும்படி ஊக்குவிப்பார். நான் யாழ்ப்பாணத்துக்குரிய பாரம்பரியக் கட்டடக்கலை பற்றி, குறிப்பாக நாற்சார வீடுகள் பற்றி, பாவிக்கப்படும் கட்டடப்பொருள்கள் பற்றி எழுதிய கட்டுரையைப் பாராட்டியது இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் மூலம் தாம் முதல் முறையாக ரோலன் டி சில்வாவின் பண்டைய அநுராதபுர நகரின் நகர அமைப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பெளத்தர்களின் கட்டடக்கலை, நகர அமைப்பில் எவ்விதம் வட்ட வடிவம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதைப் புரிய வைத்த கட்டுரை அது. பண்டைய அநுராதபுர நகர அமைப்பைப்பொறுத்த வரையில் நகரின் மத்தியில் சந்தையினையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் ஆங்காங்கே தாதுகோபுரங்களையும் கொண்டிருந்த நகர அமைப்பாக இருந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலம் எடுத்துரைத்திருப்பார் அந்தக் கட்டுரையில் ரோலன் டி சில்வா.

இந்த விடயத்தில் இந்துக்களின் நகர அமைப்பு, கட்டடக்கலை ஆகியவற்றில் சதுரம் (அல்லது செவ்வகம்) வகித்த பங்கு முக்கியமானது.

பெளத்தர்கள் வட்ட வடிவத்தையும், இந்துக்கள் சதுரத்தையும் தேர்தெடுத்ததற்கு அவர்களது சமயத்தத்துவங்கள் காரணமாக அமைந்திருந்தன. வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.

Last Updated on Monday, 11 July 2016 22:47 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 180: வாழ்த்துகிறோம் கட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலத்தை, அவர்தம் கட்டடக்கலைத்துறைச் சாதனைகளுக்காக!

E-mail Print PDF

கட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலம்ஜூலை 6, 2016 அன்று பல வருடங்களுக்குப் பின்னர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் கட்டடக்கலைஞர்கள் பலருடன் சந்தித்த கட்டடக்கலைஞர்களில் சிவா(குமாரன்) திருவம்பலமும் ஒருவர். நான் கட்டக்கலை மாணவனாக மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைத்தபோது மயூரதநாதன், கலா ஈஸ்வரன் இருவரும் தமது  இளமானிப்பட்டப்படிப்பை முடித்து வெளியேறியிருந்தார்கள். சிவா திருவம்பலம், 'தமிழர் மத்தியில்' நந்தகுமார் ஆகியோர் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். எமக்கு மென்மையான 'ராகிங்' தந்தவர்களிவர்கள்.

தனது கட்டடக்கலைப் படிப்பை முடித்து வளைகுடா நாடுகளில் பணியாற்றிக் கனடா வந்து இங்குள்ள புகழ்பெற்ற கட்டடக்கலை நிறுவனங்களில் பணியாற்றி, இங்கும் , ஒண்டாரியோவில், கட்டடக்கலைஞருக்குரிய அங்கீகாரத்தைப்பெற்று தற்போது புகழ்பெற்ற கனடியக்கட்டடக்கலை நிறுவனங்களிலொன்றான Hariri Pontarini Architects இல் பணியாற்றி வரும் சிவகுமாரன் திருவம்பலத்தைப்பற்றிப் பெருமைப்படத்தக்க விடயங்கள் பல. அவற்றிலொன்று Hariri Pontarini Architects நிறுவனத்தின் கட்டடக்கலைத்திட்டங்களிலொன்றான வெஸ்டேர்ன்  பல்கலைக்கழகத்தின் வர்த்தகத்துறைக்கான கல்வி நிலையமான ரிச்சர்ட் ஐவி கட்டடத் (Richard Ivey Building) திட்டத்தில் (33,000 சதுர மீற்றர்கள் பரப்பளவைக்கொண்ட இத்திட்டம் 2013இல் முழுமை பெற்றது.) பங்குபற்றிய முக்கியமான கட்டடக்கலைஞர்களில் இவருமொருவர்.

இத்திட்டமானது சர்வதேசக்கட்டடக்கலை நிறுவனங்கள் சமர்ப்பித்த கட்டட வடிவமைப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட திட்டமென்பதும் பெருமைக்குரிய விடயம்.

இது பற்றி 'ஆர்க்டெய்லி.காம்' (archidaily.com) பிரசுரித்துள்ள கட்டுரையொன்றில் 'ஒரு சிறப்பான வர்த்தகத்துக்குரிய கல்வி நிலையமானது கவர்வதாக, ஆக்க எழுச்சி மிக்க உணர்வுகளை எழுப்புவதாக, மற்றும் அதனைப்பாவிக்கும் அனைவருக்கும் மத்தியில் சமூக உணர்வினை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே சர்வதேசரீதியில் பெறப்பட்ட வடிவமைப்புகளிலிருந்து ரிச்சர்ட் ஐவி கட்டட வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டது. பிரதான நோக்கமானது சர்வதேசரீதியில் இது போன்ற ஏனைய நிறுவனங்கள் விடுக்கும் சவால்களுக்கு ஈடுகட்டுவதைச் செயற்படுத்தத்தக்க சூழலை உருவாக்குவதும், பல்கலைக்கழகத்தின் கோதிக் கட்டடக்கலைப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதும், லண்டன் நகருக்கு முத்திரைபதிக்கத்தக்கக் கட்டடமொன்றினை உருவாக்குவதுமே ஆகும்' என்று 'த ஆர்கிடெக்ட்' சஞ்சிகையினை ஆதாரமாக்கிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 08 July 2016 21:11 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 179: வழக்கறிஞர் செந்தில்நாதன் என்றொரு வானியல் ஆர்வலரும், 'கட்டைச்சுப்பரும்'.......

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 179: வழக்கறிஞர் செந்தில்நாதன் என்றொரு வானியல் ஆர்வலரும், 'கட்டைச்சுப்பரும்'.......எழுதுபதுகளில் யாழ் கஸ்தூரியார் வீதியில் (நாவலர் வீதிக்கு அண்மையில்) செந்தில்நாதன் என்னும் வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவரது வீடு மூன்று தளங்களை உள்ளடக்கிய (மொட்டை மாடியையும் உள்ளடக்கி) வீடு. இவர் தனது தொழிலான சட்டத்துறையில் எவ்விதம் மிளிர்ந்தார் என்பது தெரியாது. ஆனால் ஒரு விடயத்தில் இவர் என் கவனத்துக்குரியவரானார். தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் தொலைக்காட்டியொன்றினை வைத்து இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வது வழக்கம். யாழ்ப்பாணத்தில் வானியற் கழகமொன்றினையும் இவர் நிறுவி நடாத்தி வந்ததை பத்திரிகைச்செய்திகள் வாயிலாக (அநேகமாக ஈழநாடு பத்திரிகை) அறிந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் வானியலில் ஈடுபாடு கொண்டிருந்த இந்த வழக்கறிஞர் மாணவர்களாகிய எமக்கு வியப்புக்குரியவராக இருந்தார்; வித்தியாசமானவராகவுமிருந்தார்.

எனக்கு வானியல், வானியற்பியல் ஆகியவற்றில் என் மாணவப் பருவத்திலேயே மிகுந்த ஈடுபாடு. எனக்கு வானியற்பியல் பற்றிய ஆர்வத்துக்கு முக்கியமான காரணங்களில் சில: யாழ் பொது நூலகத்தில் நான் வாசித்த விஞ்ஞான நூல்களும், அப்பாவும்தாம். என் குழந்தைப்பருவத்தில் இரவுகளில் அப்பாவின் சாறத்தைத்தொட்டிலாக்கி, அப்பாவுடன் சேர்ந்து இரவு வானையும், அங்கு கொட்டிக்கிடக்கும் சுடர்களையும் இரசிப்பதுண்டு.

வானியற்பியல் என்றதும் இன்னுமொருவர் ஞாபகமும் வருகின்றது. யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், உயிரியல் என்னும் பாடத்துக்கு ஆசிரியராக வந்தவர் 'கட்டைச்சுப்பர்' என்ற பட்டப்பெயருக்குரிய ஆசிரியர். பிறவுண் வீதியில் இருந்தவர். நீண்ட 'தேர்மாஸ் பிளாஸ்கி'ல் 'கோப்பி' கொண்டு வருவார். அவருக்கு வானியலென்றால் உயிர். எங்களுக்கு உயிரியல் படிப்பிக்க வந்தவர், உயிரியல் பாடத்துக்கான நூலின் முன்னுரையில் இருந்த வானியல் பற்றிய ஒரு வசனத்தை எடுத்து, வானியல் பற்றி விரிவாக உயிரியலுக்குப் பதில் படிப்பிக்கத் தொடங்கி விட்டார். இரவு வானில் தெரியும் நட்சத்திரங்களை , நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றியெல்லாம் படிப்பிக்கத்தொடங்கியதால் எமக்குக் கற்பிக்க வேண்டிய உயிரியல் பாடத்தைத்தவற விட்டு விட்டார். இறுதியில் இதன் காரணமாக அவரை மாற்றி சகாதேவன் மாஸ்ட்டரை உயிரியல் பாடத்துக்குக்கொண்டு வந்தார்கள்.

'கட்டைச்சுப்பர்' இவ்விதம் வானியல் பற்றிப்படிப்பித்ததை நான் உண்மையிலேயே விரும்பிப் படித்தேன். ஏனெனில் எனக்கு மிகவும் அத்துறையில் ஆர்வமிருந்ததால்தான். அதன் காரணமாகவே இன்றும் அவர் என் நினைவில் பசுமையாக இருக்கின்றார்.

Last Updated on Monday, 04 July 2016 19:15 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 178: நூல் அறிமுகம்: 'தோழர் பால'னின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' பற்றி....

E-mail Print PDF

பாலன் தோழர்தோழர் பாலனின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' என்னும் சிறிய நூல் தோழர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. 'கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது ' என்பார்கள். அதற்கொப்ப அளவில் சிறியதானாலும், கூறும் பொருளில் காத்திரமானதாக, புரட்சிகரமானதாக அமைந்துள்ள நூலிது. இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியிலான தலையீடுகளை விபரிப்பதும், இவற்றால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்களை வெளிப்படுத்துவதும், எவ்விதம் இந்தியத்தலையீட்டிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கு இலங்கையின் மக்கள் அனைவரும் இன, மத , மொழி ரீதியிலான பிரிவுகள் ஏதுமற்று , ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதையும் தர்க்கரீதியாக விபரிப்பதே இந்நூலின் முக்கிய நோக்கமாகும். இது தன் நோக்கத்தில் வெற்றியே அடைந்திருக்கின்றது என்பதை இதனை வாசிக்கும்போது உணர முடிகின்றது.

பொதுவாக இந்தியாவின் தலையீடு இலங்கையிலுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்தியாவை மீறி இலங்கையால் எதுவுமே செய்ய முடியாது என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தியாவைப்பொறுத்தவரையில் அதன் அயல் நாடுகளுடனான வெளிநாட்டுக்கொள்கை அதன் தேசிய நலன்களுக்கு அமையவே அமைந்துள்ளது. அயல் நாடுகள் அதன் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயற்படும்போது அது அந்நாடுகளை ஆக்கிரமிக்கவும் தயங்காது என்பதை வரலாறு காட்டி நிற்கிறது. அயல் நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தனது நலன்களுக்குச் சார்பாகப் பயன்படுத்துவதில் இந்தியா ஒருபோதுமே தயங்கியதில்லை. இதனை இந்நூல் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதுவரை காலம் இலங்கையின் மீதான இந்தியத்தலையீட்டினை வரலாற்றுக்கண் கொண்டு , சுருக்கமாக ஆராயும் இந்நூல், , இந்தியா எவ்விதம் தன் அயல்நாடுகளில் தன் நலன்களுக்காகத்தலையிடுகின்றது என்பதையும் புள்ளி விபரங்களுடன் வெளிப்படுத்துகிறது

அண்மைக்காலமாகவே , குறிப்பாக இலங்கையில் யுத்தம் மெளனிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து இந்நாள் வரையில் உபகண்ட அரசியலைக்கூர்ந்து நோக்கினால், இந்தியா இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளைத்தன் மாநிலங்களைப்போலவே பயன்படுத்தி வருவதைப்போன்றதொரு நிலையினை அவதானிக்க முடிகின்றது. தன் நலன்களுக்கேற்ப அது ஈடுபட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் பார்க்கும்போது (காங்கேசன் துறைத்திட்டம், பலாலி விமான நிலையத்திட்டம், புகையிரத்தப்பாதை மீளமைப்புத்திட்டங்கள், சம்பூர் அனம் மின்சார நிலையத்திட்டம், திருகோணமலை எண்ணெய்ச்சுத்திகரிப்பு நிலையத்திட்டம் என இவை போன்ற பல திட்டங்கள்) எவ்வளவு தூரம் இந்தியாவின் தலையீட்டில் இலங்கை அகப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

Last Updated on Monday, 04 July 2016 18:45 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 177: எழுத்தாளர் டொமினி ஜீவாவுக்கு வயது எண்பத்தியொன்பது! நவீன ஈழத்தமிழ் நாடகமும், க.பாலேந்திராவும்!

E-mail Print PDF

எழுத்தாளர் டொமினி ஜீவாவுக்கு வயது எண்பத்தியொன்பது!

எழுத்தாளர் டொமினிக் ஜீவா!ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்கள் ஜூன் 27 அன்று தனது  எண்பத்தியொன்பதாவது வயதில் காலடியெடுத்து வைக்கின்றார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில்  எழுத்தாளராக, இதழாசிரியராக, பதிப்பாளராக மற்றும் சமூகப்போராளியாக இவரது பன்முகப்பட்ட பங்களிப்பு எப்பொழுதும் நினைவு கூரப்படும். பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. வளமுடன், நலமுடன் நீண்ட காலம் வாழ்ந்திட வாழ்த்துகிறோம்..

இது பற்றி எழுத்தாளர் மேமன்கவி அவர்கள் பின்வரும் தகவலை முகநூலில் பகிர்ந்துள்ளார். அதனை நாம் இங்கு மீள்பதிவு செய்கின்றோம்.

"எதிர்வரும் 27.06.2016 அன்று தனது 89வது பிறந்த தினத்தை கொண்டாடும் டொமினிக் ஜீவா அவர்களை அன்று காலை 9.30 முதல் 11.30 வரை COLOMBO15. MATTAKULIYA CROW ISLAND BEACH PARK. யில் சந்தித்து நண்பர்கள் அவரை வாழ்த்தலாம். தொலைபேசி யில் வாழ்த்த விரும்பும் நண்பர்கள் அல்லது குறுஞ்செய்தி(தமிழிலோ ஆங்கிலம் இரண்டிலும்) அனுப்பி வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 94778681464 இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ளலாம்." -
மேமன்கவி-

Last Updated on Monday, 27 June 2016 05:57 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 176: அ.யேசுராசாவின் 'தெரிதலும்' , புரிதலும். மற்றும் வெகுசனப்படைப்புகளும்!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும்ழகரம் 5 இதழ் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் தனது 'தெரிதல்' என்னும் செய்திக்கடித வடிவமைப்பில் கடந்த பல வருடங்களாக வெளியாகி வரும் சிற்றிதழினைத்தந்தார். 'இளைய தலைமுறைக்கான இரு திங்கள் கலை, இலக்கிய இதழ்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இதழ் 'தெரிதல்'.

'தெரிதல்' மூலம் பல கலை, இலக்கிய விடயங்களை தெரிந்துகொள்ள முடிகின்றது என்பதை இதழைப்புரட்டியபோதுதான் புரிந்தது. 12 பக்கங்களில் எவ்வளவு விடயங்களைத் தர முடியுமோ அவ்வளவு விடயங்களையும் தருகின்றது 'தெரிதல்'. உதாரணத்துக்கு நிகழ்வில் யேசுராசா அவர்கள் வழங்கிய தெரிதல் வைகாடி- ஆனி 2016 இற்குரிய இதழ். மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை: 12. இதழில் மூன்று கவிதைகள் (மஞ்சுளா வெடிவர்த்தனாவின் 'சப்பாத்து' என்னும் சிங்களக் கவிதை எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில், லதுரு மதுசாங்க லியனாராய்ச்சியின் 'நண்பா..' லறீனா அப்துல் ஹைக் மொழிபெயர்ப்பில், மற்றும் தீபிகாவின் 'நகரம்' ஆகியவை வெளியாகியுள்ளன.

இவை தவிர இதழிலுள்ள முக்கியமான படைப்புகள் பற்றிய விபரங்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன:

1. நயநீக்கப் புனைவால் திரவநேர அழகியல் - இ.சு.முரளிதரன் -
2. மிக்கயீல் ஷோலக்கவ் - சோ.பத்மநாதன்
3. சீறி ஓயாத வருங்கால மனிதநதி - சோலைக்களி
4. எஸ்.பொ. என்னும் ஆளுமை: இலக்கிய ஆய்வரங்கு - இறமணன் -
5. சிறுகதை: நிழல் தேடி - பைந்தமிழ்க்குமரன் -
6. சிறுகதை: ஒளி - மருதூர்க்கொத்தன் -
7. எழுகையும் - நா.நவராஜ்
8. அறிதலுக்கான புதியதோர் வாசல்: இலங்கை சமகால கலை, கட்டட வடிவமைப்பு - கிருபாலினி பாக்கியநாதன்
9. தகவற் களம் : பல கலை, இலக்கியத்தகவல்களின் சுருங்கிய வடிவிலான தொகுப்பு

செய்திக்கடிதமளவில் தரமான கலை, இலக்கிய விடயங்களைத்தாங்கி வெளிவந்திருக்கும் 'தெரிதல்' நிச்சயம் நம் ;புரிதலை' அறிதலை அதிகரிக்கவே செய்யுமென்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை. கீழுள்ள இணைய இணைப்பில் ஏனைய இதுவரை வெளிவந்த இதழ்களைப் படிக்கலாம்:
Last Updated on Friday, 24 June 2016 05:21 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 175: ழகரம் 5 இலக்கிய இதழ் (மலர்) பற்றி... (1)

E-mail Print PDF

நன்றி: றஷ்மியின் அ.யேசுராசா ஓவியம் (கோமகன் வலைப்பதிவு)ழகரம் 5 இலக்கிய மலரின் வடிவமைப்பைப் பொறுத்த அளவில் ஓரிரு புறக்கணிக்கத்தக்க குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் நிறைவான வடிவமைப்பு. இதுவரை கனடாவில் வெளியான இலக்கிய இதழ்களில் தரத்தில் இதனை முதல் நிலையில் வைப்பதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. சிறிய குறைபாடுகள் என்றால்.. அதற்கு உதாரணமாக இதழில் வெளியான எனது கட்டுரையான அ.ந.க.வின் 'மனக்கண்' கட்டுரையைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. அது: இதுவரையில் அ.ந.க.வின் ஒரே நாவலான 'மனக்கண்' நாவலுக்கு யாருமே விமர்சனம் எழுதவில்லை என்னைத்தவிர. அதற்கு நாவல் தொடராக வெளிவந்தபோதும் இதுவரையில் நூலாக வெளிவராததும் காரணங்களிலொன்றாக இருக்கலாம்.

இதழில் கட்டுரையில் எனக்கு நாவல் பிடித்திருப்பதற்கு நான்கு காரணங்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதில் முதல் மூன்று காரணங்களையும் உரிய சிறிது பெரிய , தடித்த எழுத்துருக்களைப்பாவித்து வடிவமைத்திருக்கின்றார்கள். நான்காவது காரணமான 'நாவல் கூறும் பொருள்' என்பதற்கும் அவ்விதம் பாவிக்க மறந்து விட்டார்கள். மேலும் கட்டுரையில் 'மனக்கண்' நாவலிலிருந்து சில பகுதிகளை உதாரணத்துக்காகப் பாவித்திருக்கிறேன். அப்பகுதிகளை ஏனைய பகுதிகளிலிருந்து சிறிது வேறுபடுத்திக்காட்டியிருக்க வேண்டும். அதனைச்செய்யத்தவறி விட்டார்கள். ஆனால் இந்தக் குறைகள் முன்பே கூறியுள்ளதுபோல் புறக்கணிக்கத்தக்கவை.

மலரின் முதலாவது கட்டுரையான 'தமிழ்நதி'யின் 'எழுத்தின் பாலினம்' இதழின் முக்கியமான கட்டுரைகளிலொன்று. மேனாட்டு இலக்கியத்தில் அன்றிலிருந்து இன்றுவரை, எவ்விதம் பெண் எழுத்தாளர்கள் அவர்கள் பெண்களாக இருக்கின்ற காரணத்தினால் ஆண் பெயர்களில் மறைந்திருந்து எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் நல்லதொரு கட்டுரை. கட்டுரை புகழ் பெற்ற ஆண் எழுத்தாளர்கள் பலரால் காலத்துக்குக் காலம் பெண் எழுத்தாளர்கள் எவ்வளவுதூரம் அவர்களது பால் (Gender)  காரணமாகக் கீழத்தரமாக எள்ளி நகையாடப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கட்டுரை உதாரணங்களுடன் வெளிப்படுத்துகிறது.

உதாரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வி.எஸ்.நைபாலின் பின்வரும் கூற்றுடன் கட்டுரை ஆரம்பமாகின்றது:

Last Updated on Wednesday, 22 June 2016 05:50 Read more...
 

'ழகரம் 5' சிற்றிதழ் சஞ்சிகை வெளியீட்டில் எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் சில நிமிடங்கள்...

E-mail Print PDF

எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் ...எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களின் 'ழகரம்' சஞ்சிகை தனது ஐந்தாவது இதழுடன் மீண்டும் தனது பயணத்தைப்பல வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பித்திருக்கின்றது. அரங்கு நிறைந்து நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்கள் பலரையும் (அ.யேசுராசா, ரதன், குரு அரவிந்தன், கற்சுறா, ப.ஶ்ரீகாந்தன், தேவகாந்தன், அருண்மொழிவர்மன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அவ்வை, கவிஞர் சேரன், பி.விக்கினேஸ்வரன், பொன்னையா விவேகானந்தன், தமிழ்நதி, ஞானம் இலம்பேட், கடல்புத்திரன் , சிவகுமார் (கட்டடக்கலைஞர்), கலா ஈஸ்வரன் (கட்டடக்கலைஞர்), திலீப்குமார், என்.கே.மகாலிங்கம் என்று பலரையும் காண முடிந்தது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், இறுதியிலும் சில நிமிடங்களே எழுத்தாளர் அ.யேசுராசாவுடன் உரையாடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் இயல்பாக, நீண்ட நாள் அறிந்தவர் ஒருவருடன் உரையாடியது போன்ற உணர்வினை அந்தச்சில நிமிடங்கள் தந்தன. நிகழ்வின் பிரதம பேச்சாளராக அவர் விளங்கினார். சஞ்சிகையின் அட்டைப்பட நாயகனாகவும் அவரே விளங்கினார்.

நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆரம்பத்தில்,  நிகழ்வினைத் தலைமை தாங்கி நடத்திய கவிஞரும் பேராசிரியருமான சேரன் வரச் சிறிது தாமதமாகி விட்டதால் அந்த இடத்தை எழுத்தாளர் கங்காதரன் நிரப்பினார். பின்னர் சேரன் வந்து பொறுப்பேற்றி நிகழ்வினைச் சிறப்பாக வழி நடத்தினார். பொன்னையா விவேகானந்தன், 'காலம்' செல்வம், உமை, ஞானம் இலம்பேட், என்று நிகழ்வில் உரையாற்றிய பலரும் சிற்றிதழ்கள் பற்றிய தமது எண்ணங்களைப்பகிர்ந்து கொண்டார்கள்.

நிகழ்வின் பிரதம பேச்சாளரான எழுத்தாளர் அ.யேசுராசா சிற்றிதழ்கள் பற்றிய தனது உரையில் தனது இலக்கியச் செயற்பாடுகள் பற்றி ஆரம்பத்திலிருந்து விரிவாகவே பல ஆரம்பகாலத்துச் சிற்றிதழ்கள் பற்றி எடுத்துரைத்து உரையினை நிகழ்த்தினார். எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எவ்விதம் 'தீபம்' சிற்றிதழினைத் தனித்துத் தொடங்கினார் என்பது பற்றியும், எவ்விதம் இவ்வகையான சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன என்பது பற்றியும், இவற்றை பேரார்வத்துடன் வாசித்த தமது அனுபவங்களையெல்லாம் விபரித்தார்.
Last Updated on Monday, 20 June 2016 17:23 Read more...
 

வ.ந.கிரிதரனின் கவிதைகள் இரண்டு!.

E-mail Print PDF

கவிதை: மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -

உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.

Last Updated on Sunday, 19 June 2016 06:33 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 174: செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்';

E-mail Print PDF

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவல் அவரது முதலாவது நாவல். 'கலைச்செல்வி' நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று 'நந்திக்கடல்' . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் 'அன்பு புத்தகசாலை'யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்சப்பறவைகள்'. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே 'நந்திக்கடல்' யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: 'தற்போது நூலகத்தில் 'நந்திக்கடல்' நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக 'நூலகம்' தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( 'மறுமலர்ச்சி', 'கலைச்செல்வி' இதழ்கள் உட்பட).

இவ்விதமாக 'நூலகம்' தளமானது ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஆவணச்சுரங்கமாக உருமாறிக்கொண்டிருக்கின்றது. இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் கல்வி கற்கும் பட்டப்படிப்பு மாணவர்களை அவர்களை வழி நடாத்தும் பேராசிரியர்கள் 'நூலகம்' போன்ற தளங்களைப்பாவித்து, ஈழத்துத்தமிழ்ப்படைப்பாளிகள் பற்றி, ஈழத்தில் வெளியான தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் பற்றி ஆய்வுகளைச்செய்யத்தூண்ட வேண்டும். அவ்விதம் செய்யப்படும் ஆய்வுகளை நூலாக வெளியிட வேண்டும். அவ்விதம் செய்தால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த வளம் சேர்த்ததாக அவ்வாய்வுகள் அமையும்.

Last Updated on Saturday, 18 June 2016 18:02 Read more...
 

'குடிவரவாளன்' பற்றி குப்பிழான் சண்முகம்!; கனடாவில் 'தாய்வீடு'!

E-mail Print PDF

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் அண்மையில் தனது முகநூல் பதிவொன்றில் எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிய தனது கருத்துகளைப்பகிர்ந்திருந்தார். அப்பதிவினை இங்கு நான் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எழுத்தாளர் குப்பிழான் சண்முகத்தின் குறிப்பு!

மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள்.

எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ' மீண்டும் தொடங்கும் 'மிடுக்காய்' தொடரும் வாழ்வு.

Last Updated on Thursday, 09 June 2016 06:20 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 174: போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்!| மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட நூல்கள் | கடல்புத்திரனின் 'வேலிகள்'!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 174: போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்!| மங்கை பதிப்பகம் (கனடா) வெளியிட்ட நூல்கள் | கடல்புத்திரனின் 'வேலிகள்'!1. போராளிகளின் வீடுகளைக் கையளிக்காத அரச அதிபர்! எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மாவின் முகநூற்பதிவு!

எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா தனது முகநூலில் பின்வருமாறு பதிவொன்றினையிட்டிருந்தார்.

"கிளி நொச்சியில் மு்னனாள் போராளிகளின் வீடுகளை இராணுவம் கையளித்த ஓருமாதமாகியும் அங்கு குடியேறவோ காணியுள் பிரவேசிக்கவோ அரச அதிபர் தடை விதித்துள்ளார். காணியை பார்க்கச் சென்றவர்களை பொலீசை வைத்து மிரட்டி வெளியேற்றியுள்ளனர். அத்தனை குடும்பங்களும் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்கள் என்பதும் தனித்து பெண்களும் குழந்தைகளுமே உள்ள குடும்பங்களாகும். பல லட்சம் செலவளித்து கட்டிய வீடுகள் இவை என்பதுடன் ஆதரவற்ற நிலையில் இவர்கள் அல்லல் படுகிறார்கள் என்பதும் உண்மை ஒவ்வொரு காரியாலயங்களாக இழுத்தடிக்கப்பட்டு அலைக்களிந்தாலும் காணிகளை தர மறுக்கிறார்கள். இக்காணிகளை யாராவது ஆட்டையப் போட நினைக்கிறாங்களா? சாக்குப்போக்குகள் சந்தேகமாகத்தான் உள்ளன...இச் செய்தியை ஊடகங்களும் ஏனைய வலைத்தளங்களும் பகிர்ந்து கொள்வதன்மூலம் அநாதரவான பெண்களுக்கு உதவமுடியும் நண்பா்களே"

உதவிதான் செய்யவில்லை. உபத்திரவமாவது செய்யாமலிருக்கலாம். பனையாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதைதான். முன்னாள் போராளிகள் அனைவரின் நல்வாழ்வுக்காகத்தானே போராடினார்கள். எல்லாவற்றையும் இழந்து, எல்லாவற்றையும் துறந்து போராடினார்கள். யுத்தம் மெளனிக்கப்பட்டு அவர்கள் அநாதரவாகவிடப்பட்டபோது சமூகம் அவர்களைப்புறக்கணிக்கிறது. இது வருந்தத்தக்கது.

Last Updated on Friday, 27 May 2016 06:01 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 173 : பால்ய காலத்து நண்பர்களும், முகநூலும்!

E-mail Print PDF

ஆர்.விக்கினேஸ்வரன்ஆர்.விக்கினேஸ்வரன்முகநூல் செய்துள்ள பல நன்மைகளிலொன்றாக என் வாழ்வில் சந்திக்கவே சந்தர்ப்பங்கள் அரிதாகவிருந்த என் பால்ய காலத்து நண்பர்கள் சிலருடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்ததைக் குறிப்பிடுவேன். குறிப்பாக சண்முகராஜா , திருநாவுக்கரசு, சிவகுமார், விக்கினேஸ்வரன் மற்றும் ராஜரட்னம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் முதல் மூவரும் ஏழாம் வகுப்பு வரையில் வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்கள். மற்றவர் ராஜரட்னம் யாழ் இந்துக்கல்லூரியில் 9, 10ஆம் வகுப்புகளில் படித்தவர்.

விக்கினேஸ்வரன் தற்போது திருநெல்வேலி (தமிழகம்) நகரில் வசிக்கிறார். புகைப்படக்கலைஞரான இவர் அங்கு புகைப்பட ஸ்டுடியோ நடாத்தி வருகின்றார். அண்மையில் முகநூல் மூலம் மீண்டும் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன் (முகநூலில் Srirham Vignesh என்னும் பெயரில் அறியப்படுபவர்) தனது முகநூல் பக்கத்தில் தன்னைப்பற்றிய அறிமுகத்தைபகிர்ந்திருக்கின்றார்.

அந்த அறிமுகத்தின் மூலம் இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபட்டு வருவதை அறிந்தேன். மகிழ்ச்சி தருவது. அந்த அறிமுகக்குறிப்பின் இறுதியில் இவர் கூறிய விடயம் என்னை ஆச்சரியபட வைத்ததுடன் மகிழ்ச்சியையும் தந்தது. அந்த அறிமுகக் குறிப்பின் இறுதியில் இவர் குறிப்பிட்டிருந்தது இதுதான்:

"எனது இலக்கியத்துறை ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்தவர்  வவுனியா மகா வித்தியாலயத்தில் 3 - 6ம் வகுப்புவரை என்னோடு படித்த சக மாணவர் ஒருவர்தான்.அவர் 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை,கதை என எழுத ஆரம்பித்துவிட்டார். அதுபோல எழுதவேண்டும் என எழுந்த ஆர்வம் நிறைவேறியது, நான் 11ம் வகுப்பு (+1) படிக்கும்போதுதான். அந்த மாணவர் வேறு யாருமல்ல....கனடாவிலிருந்து வெளிவரும், பிரபல இலக்கிய (இணைய) இதழான ''பதிவுகள்'' இதழின் ஆசிரியர் ''கிரி'' (Navratnam Giritharan) அவர்கள்தான். சமீபத்தில்தான் அவருடைய தொடர்பு (முக நூலில்) கிடைத்தது."

Last Updated on Friday, 27 May 2016 06:02 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 172 :இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா! | தமிழகமும், திராவிடக்கட்சிகளும், மூன்றாவது அணியினரும்.. | 'டொராண்டோவில் மகிந்த ராஜபக்சவும், முள்ளிவாய்க்காலும்'

E-mail Print PDF

1. இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!

இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!நாம் வாழும் இக்காலகட்டத்தில் வாழும் மானுட உரிமைப்போராளியான இரோம் சானு சர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் மனித உரிமைகளுக்காகப்போராடும் அனைவரும் அறிந்திருக்க வேண்டியதொன்று.  2.11.2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.

2.11.2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள மலோம் என்னும் ஊரில் இந்தியப்படைத்துறையின் துணைப்படையான 'அசாம் ரைபிள்சி'னால் பத்துப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்ட் இரோம் சானு சர்மிளா. இன்றுவரை தன் முடிவில் எந்தவிதத் தளர்வுமில்லாமல் இருந்து வருகின்றார்.

இவரைப்பற்றி இரா.கலைச்செல்வன் அண்மைய விகடனொன்றில் நல்லதொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதிலவர் எவ்விதம் அவரை அவரிருக்கும் மருத்துவ மனையில் சந்தித்தது என்பது பற்றியும், இரோம் சானு சர்மிளாவின் தனிப்பட்ட அந்தரங்கள் உணர்வுகள் பற்றியும் (காதல் போன்ற) அவர் எழுதியிருக்கின்றார். அவரது காதல் (இன்னொரு தேசத்தைச் சேர்ந்த ஒருவருடான) காரணமாகப் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்கின்றார். அவர் யாருக்காகப் போராடுகின்றாரோ அந்த மக்களில் பலருக்கே அவரது போராட்டம் பற்றித் தெரியாமலிருக்கின்றது. ஆனால் இவற்றாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், தன் கொள்கைகளுக்கேற்பத் தன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.

இவருக்கு வலுக்கட்டாயமாக, மூக்கு குழாய் வழியே உணவு வழங்கப்படுகின்றது. ஆனாலும் இவரது உடலுறுப்புகள் இவரது தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டம் காரணமாகப் பழுதடைந்து போய் விட்டன. மாதவிடாய் கூட இதன் காரணமாக நின்று போய் விட்டது.      

போராளி எனச்சந்தேகிக்கப்படும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க உதவும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டுமென்பதே இவரது முக்கியமான கோரிக்கை.

Last Updated on Tuesday, 24 May 2016 18:29 Read more...
 

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

E-mail Print PDF

கவிதை: முள்ளிவாய்க்கால் நினைவுக்கவிதை - வ.ந.கிரிதரன்

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

Last Updated on Tuesday, 17 May 2016 05:10 Read more...
 

நனவிடை தோய்தல்: குருமண்காட்டு நினைவுகள் (1)

E-mail Print PDF

குருமண்காட்டுப்பாதையும், மன்னார் றோட்டும் சந்திக்கும் இடத்தில் தற்போது காளி கோயிலுள்ளது.அண்மையில் கூகுள் நிலவரைபட வீதித்தோற்றம் மூலம் பார்த்தபொழுதுதான் காலம் எவ்வளவு விரைவாக மாறுதல்களுடன் ஓடி விட்டது என்பது புலப்பட்டது. என் பால்ய காலத்தில் பதிந்து கிடக்கும் குருமண்காட்டுப் பிரதேசத்தின் இன்றைய நிலையைப்பார்த்தபொழுது அடையாளமே காணமுடியாத வகையில் அப்பிரதேசம் மாறிக்கிடப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அதற்கு முக்கிய காரணங்களிலொன்றாக இலங்கையில் நடைபெற்ற யுத்தமும், அக்காலகட்டத்தில் வவுனியாப்பகுதி அடைந்திருந்த முக்கியத்துவமும்தாம் என்று நினைக்கின்றேன். வடக்குக்கும் தெற்குக்குமிடையில் அனைவரும் வந்து செல்லக்கூடிய முக்கிய நகராக வவுனியா உருமாறியிருந்ததால், யுத்தம் நடைபெற்ற பகுதிகளிலிருந்தெல்லாம குடிபெயர்ந்த மக்களால் நகர் நிறைந்து விட்டதுடன், மாற்றங்கள் பலவற்றையும் அடைந்து விட்டதெனலாம்.

ஆனால் இன்னும் என் நெஞ்சில் படம் விரித்திருப்பது என் பால்ய காலத்த்துக் குருமண்காடுதான். அந்தக் காலத்துக் குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த எங்கள் வாழ்வு பற்றி, அங்கு வாழ்ந்த மனிதர்களைப்பற்றி நினைவில் பதிந்து கிடப்பதையெல்லாம் எழுத்தில் பதிவு செய்தாலென்ன என்றொரு எண்ணம் அண்மைக்காலமாகவே அடிக்கடி தோன்றி மறைகிறது.

என்னைப்பொறுத்தவரையில் குருமண்காடு என்பது என் பால்ய பருவத்தின் சொர்க்க பூமி. ஒரு காலகட்டத்தினை வெளிப்படுத்தும் குறியீடு. மறக்க முடியாத அந்த அனுபவங்களுக்குச் சொந்தமான அந்தப்பிரதேசம் இன்று முற்றாக மாறி விட்டது. நாம் வாழ்ந்ததை வெளிப்படுத்தும் எந்தவித அடையாளங்களுமேயற்ற புதியதொரு நகராக, குடியிருப்புகளுடன், வர்த்தக நிலையங்களுடன், வீதிகளுடன் புதிய பிறப்பெடுத்து நிற்கிறது.

இந்நிலையில் என் மனதில் அழியாத சித்திரமாக விரிந்து கிடக்கும் குருமண்காடு பற்றிய நினைவுகளைப் பதிவு செய்தல் அவசியமென்று நினைக்கின்றேன். இந்தப்பகுதி பற்றியதொரு ஆவணமாகவும் இந்த நனவிடை தோய்தல் விளங்குமென்பதால் இத்தகைய பதிவுகள் அவசியமேயென்றும் தோன்றுகிறது.

குருமண்காட்டு அனுபவங்களை மையமாக வைத்து ஏற்கனவே ஒரு நாவல் எழுதியிருக்கின்றேன். அது 'வன்னி மண்'. 'தாயகம் (கனடா)' சஞ்சிகையில் தொடராக வெளியாகி, தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் மூலம் வெளிவந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்று.

நாங்கள் இருந்த காலகட்டத்தில் குருமண் காடு ஒற்றையடிப்பாதையுடன் கூடிய காட்டுப்பிரதேசம்.

நாங்கள் அப்பகுதிக்குக் குடி பெயர்ந்தபோது மொத்தம் இருந்த மானிடக் குடியிருப்புகள் ஒன்பதுதான்.
Last Updated on Monday, 16 May 2016 03:31 Read more...
 

இலங்கையில் நடைபெறவுள்ள வ.ந.கிரிதரனின், (தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள) 'குடிவரவாளன்' நாவலின் வெளியீட்டு நிகழ்வு பற்றி...

E-mail Print PDF

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'இலங்கையில் வ.ந.கிரிதரனின், தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள  'குடிவரவாளன்' நாவலின்  வெளியீட்டு நிகழ்வு பற்றி...

நண்பர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம். எதிர்வரும் 15.05.2016 , ஞாயிற்றுக்கிழமை அன்று  மாலை 3.30 மணிக்கு, ஞானாலயம், பருத்தித்துறை என்னும் முகவரியில் என்னுடைய நாவலான 'குடிவரவாளன்' நாவலின் வெளியீடும், கருத்தரங்கும் நடைபெறவுள்ளன.

எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில், எழுத்தாளர் அறிமுகவுரையினை சு.குணேஸ்வரனும்,  அவரைத்தொடர்ந்து நூல் மதிப்பீட்டு உரைகளை திரு.ஜி.ரி. கேதாரநாதன் ,  வேல். நந்தகுமார் ஆகியோரும் ஆற்றுவார்கள். நிகழ்வின் முடிவில் நன்றியுரையினை சித்திராதரன் ஆற்றுவார்.

அதற்கான அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளேன். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பில் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்ததற்காக 'உயில் & சித்தம்' குழுவினருக்கும், எழுத்தாளர் சு.குணேஸ்வரனுக்கும், மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் எழுத்தாளர்கள் குப்பிளான் ஐ.சண்முகன், ஜி.ரி.கேதாரிநாதன், வேல்.நந்தகுமார் மற்றும் சித்திராதரன் ஆகியோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

இந்நிகழ்வில் நூல் விற்பனையில் கிடைக்கப்பெறும் பணம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச்செலவுக்கு வழங்கப்படும்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் கலை, இலக்கிய ஆர்வலர்கள்  அனைவருக்கும் நன்றி!


'குடிவரவாளன்' நாவலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் இலங்கையிலும் விற்பனைக்குள்ளன. நூலின் பிரதிகளை வாங்க விரும்புபவர்கள் எழுத்தாளர் குணேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவருடைய அலைபேசி இலக்கம்: +94776120049

கனடா நண்பர்கள் கவனத்துக்கு: இந்நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:

வதிலைப்பிரபா: Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua - 642 202 Tamil Nadu, India. Phone: 04543 - 26 26 86 | Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52. email: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it | This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 10 May 2016 04:35 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 171: திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோமின் மறைவுச்செய்தியும், சில நினைவுகளும்! | அன்னையர் தினப்பதிவொன்று.......

E-mail Print PDF

- வாசித்தவை, யோசித்தவை மற்றும் வாசித்து யோசித்தவை ஆகியவற்றின் பதிவுகளிவை. -

திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோம்தமிழ்ப்படைப்புகள் பலவற்றை ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்புச்செய்து , தமிழ் இலக்கியத்தை உலகளாவியரீதியில் அறிமுகப்படுத்தும் பணியினைச்செய்த திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோம் தனது எண்பதாவது வயதில் இலண்டனில் மறைந்ததாகச்செய்திகள் தெரிவிக்கின்றன. இவரது இழப்பு முக்கியமானதோரிழப்பு. ஆனால் தனது மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஆற்றிய இவரது சேவையினைத்தமிழ் இலக்கிய உலகம் எப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூரும். அதே சமயம் இவரது மறைவு பற்றிய செய்தி சில நினைவுகளை மீண்டும் அசை போட வைத்து விட்டது.

தமிழ் இலக்கியத்தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருதான  2007ற்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது மொழிபெயர்ப்பாளரான திருமதி லக்சுமி ஹோல்ம்ஸ்ரோமுக்குக் கிடைத்தது. அந்த வருடத்துக்குரிய சாதனையாளரைத்தேர்வு செய்யும் தெரிவுக்குழுவில் ஒருவராக நானுமிருந்தேன். ஏனையவர்களாக  பேராசிரியர் எம். ஏ. நுஃமான், பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி, கவிஞரும், எழுத்தாளருமான மு. பொன்னம்பலம் ஆகியோரிருந்தனர்.

நான் இவரைத்தெரிவு செய்திருந்ததற்கு முக்கிய காரணம் இவரது மொழிபெயர்ப்புச்சேவைதான்.  இன்றைய உலகில் சுமார் எண்பது மில்லியன் தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் சிதறி வாழ்ந்திருந்தும் உலக இலக்கிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முக்கியத்துவம் இன்னும் பூரணமாக அறியப்படவில்லை. இந்நிலையில் தமிழ்ப் படைப்புகளை ஆங்கில மொழி மாற்றம் செய்து, அதன் மூலம் தமிழ் இலக்கியத்தின், மொழியின் பங்களிப்பை உலக இலக்கிய அரங்கில் நிறுவும் வேலையினைத் தனியொருவராக நின்று இவர் ஆற்றிவந்ததற்காகவும்,  தமிழ் இலக்கியத்தின் பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை, நவீனப் படைப்புகளை, தமிழின் நவீன நாடக முயற்சிகளை, பெண்ணியம் மற்றும் தலித் இலக்கியப் படைப்புகளையெல்லாம் ஒரு பரந்த அளவில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை ஒரு பரந்த அளவில் சர்வதேசமயப்படுத்தியதன் மூலம் இவர் ஆற்றியுள்ள பங்குக்காகவும் இவரது மொழிபெயர்ப்புப்பணி என்னைப்பொறுத்தவரையில் முக்கியமாகப்பட்டது.

Last Updated on Tuesday, 10 May 2016 04:47 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 170 : யாழ் இந்துக்கல்லூரி வருடாந்த இராப்போசன இரவினில்....

E-mail Print PDF

- வாசித்தவை, யோசித்தவை மற்றும் வாசித்து யோசித்தவை ஆகியவற்றின் பதிவுகளிவை. -

யாழ் இந்துக்கல்லூரிச்சங்க வருடாந்த இராப்போசன நிகழ்வினில்..

நேற்று நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தினரின் வருடாந்த இராப்போசன இரவு  'ஸ்கார்பரோ கொன்வென்சன் சென்ட'ரில் நடைபெற்றது. வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளைத்தவிர்ப்பவன் நான். ஆனால் இம்முறை நண்பர்கள் பிறேமச்சந்திரா, கனகவரதா ஆகியோர் கூடுதலாக யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தில் இணைந்து செயற்பட்டதாலும், நண்பர் கீதானந்தசிவமும் செல்வதற்கு ஆவலுடன் இருந்ததாலும் செல்வதற்கு முடிவெடுத்தேன்.

பாடசாலைக்காலத்து நண்பர்கள் பலரைச் சந்திக்கலாம், எமக்குக்கற்பித்த ஆசிரியர்கள் பலரைச்சந்திக்கலாம் என்பதாலும் செல்வது நல்லதே என்று தோன்றியது.

கூடவே நண்பர் கனகவரதாவின் பரிந்துரையின் பேரில் ஈழத்துத்தமிழ்த்துள்ளிசைப்பாடகரான அமுதன் அண்ணாமலையின் இசைக்கச்சேரியும் நடைபெற ஏற்பாடாகியிருந்ததால், அவரது பாடல்களையும் நேரில் மீண்டுமொருமுறை கேட்டு மகிழலாம் என்ற எண்ணமும் மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளும் ஆவலைத்தூண்டியது.

கனடாத்தேசிய கீதம், கல்லூரிக்கீதம் மற்று, தமிழ்த்தாய் வணக்கம் ஆகியவற்றை முறையே செல்வி வைசாலி கிருஷ்ணானந்தன், கலாநிதி மைதிலி தயாநிதி மற்றும் சிவை சுபதரன் ஆகியோர் பாடி நிகழ்வினைத்தொடக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் தம்மைப்பலிகொடுத்த போராளிகள் அனைவருக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. வரவேற்புரையினை திரு. ரவீந்திரா கந்தசாமி நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடன நிகழ்வு நடைபெற்றது.  தொடர்ந்து சங்கத்தலைவர் திரு. மோகன் சுந்தரமோகனின் தலைமையுரையும், அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட திரு.பிரபா சந்திரனின் உரை நிகழ்ந்தது.  இவர் அமெரிக்க மத்திய அரசின் பாதுகாப்புத்திணைக்களத்தில் பணிபுரிகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Last Updated on Monday, 02 May 2016 21:19 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 169: நாவல் 'குடிவரவாளன்' பற்றிய வாசிப்பனுவமும், புலம் பெயர் அனுபவங்களும்...

E-mail Print PDF

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நேற்று நண்பர் எல்லாளன் தொலைபேசியில் அழைத்தார். அழைத்தவர் வழமைக்கு மாறாக நீண்ட நேரம் உரையாடினார். எதனைப்பற்றியென்று நினைக்கின்றீர்கள்? எல்லாம் அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்த என் நாவலான 'குடிவரவாளன்' பற்றித்தான்.
நாவலை வாசித்தபொழுது தன் நெஞ்சினைத்தொட்டு விட்டதாகக் கூறினார். தன் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் அசை போட வைத்துவிட்டதென்றார். இந்த நாவல் புலம் பெயர்ந்த தமிழர்களில் முதலாம் தலைமுறையினர் பலரும் அனுபவங்களை விபரிப்பதால் பலருக்குத் தம் வாழ்வின் அனுபவங்களை நிச்சயமாக நினைவூட்டியிருக்கும்.

மேலும் தனது அனுபவங்கள் பலவற்றை விபரித்தார். 'காலம்' செல்வம் 'தாய் வீடு' பத்திரிகையில் இது போன்று தன் அனுபவங்களை எழுதியிருக்கின்றார் என்று நினைவு கூர்ந்தார். ஆனால் அவரது அபுனைவு. இது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவு. அதுதான் வித்தியாசம்.

அவர் அப்பொழுது பகிர்ந்துகொண்ட அவரது அனுபவங்களில் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஒருமுறை அவர் வன்கூவரில் வேலை தேடி மோட்டேல்கள் (Motel) ஏறி இறங்கியிருக்கின்றார். சென்ற இடங்களிலெல்லாம் மோட்டேல்களில் Vacancy என்ற அறிவிப்பு இருப்பதைக்கண்டு அவ்விதம் அறிவிப்புக்காணப்படும் இடங்களிலெல்லாம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார். ஆனால் ஓரிடத்திலும் வேலை கிடைக்கவில்லை. இவருக்கு ஒரே ஆச்சரியம் : 'என்ன இது எல்லா இடத்திலும் 'வேகன்ஸி'யென்று அறிவித்திருக்கின்றார்களே. ஆனால் ஓரிடத்திலும் வேலை இல்லையென்று கூறுகின்றார்களே' என்று. எப்பொழுதுமே பத்திரிகைகளில் வேலைக்கான 'வேகன்ஸி' விளம்பரங்களைப்பார்த்துப்பார்த்து 'வேகன்ஸி' என்றதும் மனது தவறுதலாக மோட்டேல்களில் அறைகளுக்கான 'வேகன்ஸி' அறிவிப்பை வேலைக்கானதாக எண்ணிவிட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் புகலிடத்தமிழர்களின் இழந்த ஊர் நினைவுகள் பற்றிய கழிவிரக்கம், புதிய இடத்தில் காணப்படும் நிறவேற்றுமை போன்ற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை எழுதுவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் இவ்விதமான அனுபவங்களும் புகலிடத்தமிழர்களின் அனுபவங்களே.

Bum / Bomb ( வீதி வழியே, பிச்சையெடுத்துக்கொண்டு அலைந்து திரிபவர்களையும் Bum என்று கூறுவது மேற்கு நாடுகளில் வழக்கம்.) இரண்டு சொற்களும் கேட்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் தமிழ் பாதுகாவல் அதிகாரியொருவர் அடைந்த அனுபவத்தை 'புலம் பெயர்தல்' என்னும் என் சிறுகதையொன்றில் விபரித்திருக்கின்றேன். வாடிக்கையாளர்களொருவர் இரண்டாம் தளத்தில் Bum இருப்பதாகக் கூறியதைக்கேட்ட அந்த அதிகாரி Bomb இருப்பதாகக்கருதி அடையும் பதற்றத்தை விபரிக்கும் கதை அது. இது போன்ற புகலிட அனுபவங்கள் பல சிரிப்பை வரவழைக்கும்.

Last Updated on Monday, 18 April 2016 00:14 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 168: 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவாக.....

E-mail Print PDF

நெடுந்தீவு சண்முகநாதன்இன்று தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன் அவர்களின் இறுதி அஞ்சலிக்காக எழுத்தாளர் தேவகாந்தனுடன் சென்றிருந்தேன். தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமான ஒருவர் சண்முகநாதன். இவரை நான் ஒருமுறை 81.82 காலகட்டத்தில் சந்தித்திருந்த விடயத்தை இன்றுதான் உணர்ந்தேன். அவருக்கு அஞ்சலி செய்வதற்காக வந்திருந்த வந்திருந்த 'ஜான் மாஸ்ட்டர்' பழைய நிகழ்வொன்றினை நினைவு படுத்தியபோதுதான் அதனை உணர்ந்தேன். ஒருமுறை 81/82 காலகட்டத்தில் வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்திருந்த அநாதைகள் இல்லத்தில் நடைபெற்ற, காந்தியம் அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   'தமீழீழ விடுதலை' பற்றிய மூன்று நாள் கருத்தரங்கில் பல்வேறு  அமைப்புகளைச்சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அந்நிகழ்வில் சண்முகநாதனும் கலந்து கொண்டிருந்தார். அந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான் அவரைச்சந்தித்திருக்கின்றேன். நீண்ட நேரம் அவருடன் உரையாடியுமிருக்கின்றேன். அதன் பின்னர் அவர் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் கோப்பொன்றினை (ரோனியோப் பிரதி) எனது கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார். அது பற்றி 'தாயகம்' (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் கட்டுரையொன்றினை 'நாவலர் பண்ணை நினைவுகள்' என்று எழுதியிருந்தேன். பின்னர் அதனைப் 'பதிவுகள்' இணைய இதழிலும் மீள்பிரசுரம் செய்திருந்தேன். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கும்"

"அந்தக் கருத்தரங்கில் 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்று தன்னை அறிமுகப்படுத்திய நெடுந்தீவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரை சந்தித்ததும் நினைவிற்கு வருகின்றது. பின்னர் இவர் 'றோனியோ' பிரதியாக தமது கட்சியின் கொள்கைப்பிரகடன அறிக்கையினைத் தபால் மூலம் கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார்.." (பதிவுகள், 'நாவலர் பண்ணை நினைவுகள்' - 24 ஏப்ரில் 2012).

ஆரம்பத்தில் அவரது பெயர் உடனடியாக ஞாபகம் வர மறுத்தது. நெடுந்தீவு ராமநாதன் என்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் 'நெடுந்தீவு சண்முகநாதன்' என்பது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் 'தேடகம்' நிகழ்வுகளில் அவ்வப்போது கண்டிருக்கும் சின்னத்தம்பி சண்முகநாதன்தான் அவர் என்பது இன்றுவரை தெரியாமலே இருந்தது இன்று ஜான் மாஸ்ட்டர் நினைவுபடுத்தும்வரை.

Last Updated on Sunday, 17 April 2016 05:09 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 167: தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்..' பற்றிய குறிப்புகள்!

E-mail Print PDF

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி1. தவளைப்பாய்ச்சல்'

தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்.' அதில் கூறப்பட்டுள்ள சுய விமர்சனங்களுக்காக அந்நூலினை எதிர்ப்பவர்களால் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அந்நூல் விமர்சனங்களுடன் பல தகவல்களையும் ஆவணப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களை, அவை வெற்றிகரமானவையாக அமைவதற்காகப்போராளிகள் செய்த பயிற்சிகள், கொடுத்த விலைகள் ,இவற்றைப்பற்றியெல்லாம் விரிவாகவே விபரிக்கின்றது நூல். தமிழினியின் எழுத்தாளுமை நூலுக்கு மேலும் இலக்கியச்சிறப்பினை அளிக்கின்றது. யுத்தங்களை விபரிக்கையில் ஏற்படும் சக தோழிகளின் இழப்புகள் நெஞ்சைத்தொடும் வகையில் நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. போதிய உணவின்றி, போதிய ஆடைகளற்று பல சிரமங்களுக்குள்ளான நிலையிலும், தமது இலட்சியத்துக்காகப்  போராடும் அவர்களது நடவடிக்கைகள், உணர்வுகள் ஆகியனவும் நூலில் விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நூலின் ஆவணச்சிறப்பு அதிகரிக்கின்றது.

நூலில் பூநகரி முகாம் மீதான 'தவளைப்பாய்ச்சல்' பற்றி விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் போராளிகள் சுமார் ஒரு வருடமாக எடுத்த பயிற்சி பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. பூநகரிச்சமர் பற்றி நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்:

"1993 இறுதிப் பகுதியில் அச்சுவேலிப்பகுதியில் வல்லை வெளியோடு சேர்ந்திருந்த கடல் நீரேரியில் ஒரு மாதிரி இராணுவ தளம் அமைக்கப்பட்டு எமது அணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அது எந்த இராணுவத்தளத்தின் மாதிரி வடிவம் என்பது அபோது தான் எங்களுக்குப் புரிந்தது. நான் முதன் முதலாகப் பங்கெடுத்த தாக்குதல் பூநகரி இராணுவ முகாம் மீதானதாகும்." (பக்கம் 55; இலங்கைப்பதிப்பு)

" இத்தாக்குதல் நடவடிக்கைக்காக  விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வருடத்திற்கும் மேலான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.. வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக்கொண்ட  தாக்குதலணிகள்  இந்தச் சமரில்  ஈடுபடுத்தப்பட்டன." (பக்கம் 56)

இந்தச் சமருக்குத் 'தவளைப்பாய்ச்சல்' என்று விடுதலைப்புலிகள் பெயர் வைத்திருக்கின்றார்கள். அவ்விதமான பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம் சுவாரசியமானது. அது பற்றித் தமிழினி பின்வருமாறு விபரிப்பார்:

"புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ- கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடாத்தப்பட்ட ஈரூடகத் தாக்குதல் இதுவாகும். இதனால் இந்நடவடிக்கைக்கு 'ஒப்பரேசன் தவளை' என இயக்கம் பெயர் சூட்டியிருந்தது." (பக்கம் 56)

தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட பெயர்தான் 'தவளைப்பாய்ச்சல்'.

Last Updated on Sunday, 17 April 2016 05:00 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 166: முனைவர் தாரணியும், புகலிடத்தமிழ் இலக்கியமும்...

E-mail Print PDF

Dr. R. Dharaniமுனைவர் ஆர் .தாரணி (Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D) அவர்களை எனக்குக் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத்தெரியும். இணையம் மூலம் அறிமுகமான இலக்கியவாதிகள், கல்வியாளர்களில் இவரும் முக்கியமான ஒருவர். இவரை நான் முதலில் அறிந்துகொண்டதே சுவாரசியமானதோர் அனுபவம். இணையத்தின் முக்கியமான பயன்களை எனக்கு உணர்த்திய அனுபவம் அது. அப்பொழுது நான் இணையத்தில் எனக்கொரு பக்கத்தை வைத்திருந்தேன். அதில் என் சிறுகதைகள் மற்றும் ஏனைய ஆக்கங்கள் பலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் மான்ரியாலிலுள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து கனடிய எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி , கனடிய அரசின் நிதி உதவியுடன் Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!' என்னும் தலைப்பில் ஆய்வுத்திட்டமொன்றிலீடுபட்டுக்கொண்டிருந்தன. அதற்காக அவர்கள் கனடிய எழுத்தாளர்களின் விபரங்கள் அடங்கிய இணையத்தளப்பக்கமொன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள். அதில் கனடாவில் வாழும் பல்லின எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள், அவர்கள்தம் இணையத்தளங்கள் மற்றும் அவ்விணையத்தளங்களுக்கான இணைப்புகள் என அப்பக்கத்தில் தகவல்களைப்பதிவு செய்திருந்தார்கள். (இந்தத்தளம் இப்பொழுது இயங்குவதில்லை.)

அக்காலகட்டத்தில்  புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதுவதற்காக, அது பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தார் முனைவர் தாரணி. அவர் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பற்றியே அச்சமயம் இணையத்தில் தேடிக்கொண்டிருந்ததாகப்பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளும்போது தெரிவித்திருந்தார். அச்சமயம் அவரது கண்களில் மான்ரியால் பல்கலைக்கழகம் மேற்பார்வையில் இயங்கிக்கொண்டிருந்த கனடிய எழுத்தாளர்கள் பற்றிய இணையத்தளமும், அதிலிருந்த என் பக்கத்துக்கான இணைப்பும் பட்டிருக்கின்றது. என் பக்கத்திலிருந்த புகலிட வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த கதைகளை, சிறு நாவலான 'அமெரிக்கா' ஆகியவற்றை வாசித்திருக்கின்றார்.அவற்றை வாசித்ததும் என் கதைகளையே மையமாக வைத்துத் தான் எழுதவிருந்த புகலிட ஆய்வுக்கட்டுரையினை எழுதுவதாகத்தீர்மானித்து என்னுடன் தொடர்புகொண்டிருந்தார். அப்பொழுது அவர் எழுதிய என் படைப்புகளைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு "‘Seeking the invisible Humanness in an Alien Land' :  A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan" . இவ்வாய்வுக் கட்டுரையினைத் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கொன்றில் சமர்ப்பித்திருந்தார்.

Last Updated on Monday, 11 April 2016 06:38 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 165: ஹைக்கூக் கவிதைகள் பற்றியதொரு 'ஹைக்கூ'ப் புத்தகம்!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பார்கள். கவிதையுலகில் ஹைக்கூக்களும் கடுகைப்போலிருந்தாலும், வாசிப்பவருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தில் மிகவும் வலிமையானவை.

ஹைக்கு வகைக்கவிதைகளை இயற்ற விரும்புபவர்கள், இவ்வகைக்கவிதைகளை வாசிக்க விரும்புபவர்கள் எனப்பல்வகைக் கவிதைப்பிரியர்களுக்கும் உறுதுணையாகவிருந்து வழிகாட்டும் நல்லதொரு வழிகாட்டிதான் ' Haiku in English' (ஆங்கிலத்தில் ஹைக்கூ) என்னும் கைக்கடக்கமான இச்சிறு நூலும். இதனை எழுதியவர் ஹரோல்ட் ஜி. ஹென்டெர்சன் ( Hraold G.Henderson. இச்சிறுநூலினை வெளியிட்டிருப்பவர்கள் இச்சிறுநூலினை வெளியிட்டிருப்பவர்கள்: Charles E. Tuttle Co.

நூல் அறிமுகக் குறிப்பு, ஜப்பானியக் ஹைக்கு, ஆங்கிலத்தில் ஹைக்கூ, ஹைக்கூவை எழுதுதலும்,  கற்பித்தலும், அநுபந்தம் ஆகிய பிரிவுகளாக விளங்குகின்றது.

ஹைக்கூவானது ஜப்பானியர்களால் பல நூறு வருடங்களாகப் பாவிக்கப்பட்டுவரும் கவிதை வடிவம். தமிழில் திருக்குறள் ஈரடிகளில் , குறள் வெண்பாவாக , ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அமைந்திருப்பதுபோல் , ஜப்பானியக் ஹைக்கூவும் மூன்று அடிகளில் , சில கட்டுப்பாடுகளுக்கு அமைய எழுதப்படும் குறுங்கவிதை வடிவம். ஜப்பானியக் கவிதையின் பொதுவான அம்சங்களாக அல்லது விதிகளாகப் பின்வருவனற்றைக் கூறலாம்:

1. மூன்று அடிகளில் 17 அசைகளைக்கொண்டதாக இருக்க வேண்டும். முதல் அடியில் 5 அசைகளையும், இரண்டாவது அடியில் 7 அசைகளையும், மூன்றாவது அடியில் 5 அசைகளையும் கொண்டதாக ஜப்பானியக் ஹைக்கூ இருக்க வேண்டும்.

2. ஹைக்கூவானது இயற்கையுடன் சம்பந்தப்பட்டதாக நிச்சயம் இருக்க வேண்டும்.

3. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் (event) பற்றியதாக இருக்க வேண்டும்.

4. அந்தச் சம்பவமானது நிகழ்காலத்தில் நடப்பதாக நிச்சயம் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நடப்பதாக இருக்கக்கூடாது.

Last Updated on Thursday, 07 April 2016 17:05 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 164: கலாநிதி க. கைலாசபதியின் பிறந்தநாள் இன்று! நினைவு கூர்வோம்!

E-mail Print PDF

கலாநிதி க. கைலாசபதியின் பிறந்தநாள் இன்று! நினைவு கூர்வோம்!கலாநிதி கைலாசபதியின் நூல்களை வாசித்திருக்கின்றேன். ஆனால் அவரை ஒருமுறைதான் என் வாழ்நாளில் நேரில் சந்தித்திருக்கின்றேன். 'மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க'த்தின் வருடாந்த வெளியீடான 'நுட்பம்' இதழுக்காக ஆக்கம் வேண்டி, யாழ் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை சந்தித்திருக்கின்றேன். இதழுக்குக் கட்டுரை தர ஒப்புக்கொண்ட அவர் குறிப்பிட்ட திகதியில் கட்டுரையைத் தரவும் செய்தார். அது மட்டுமின்றி 'நுட்பம்' மலர் கிடைத்ததும் அது பற்றிய சிறு விமர்சனக்குறிப்படங்கிய கடிதமொன்றினையும் அனுப்பி வைத்தார். அக்கடிதம் இன்னும் என்னிடமுள்ளது. நேரத்தை மதிக்கும், சொன்ன சொல் தவறாத அவரது பண்பு என்னைக்கவர்ந்ததொன்று.

கைலாசபதியவர்கள் தினகரனில் ஆசிரிய பீடத்தை அலங்கரித்த காலகட்டம் தினகரனின் இலக்கியச்சிறப்பு மிக்கதொரு காலம் என்று கூறலாம். ஈழத்துத்தமிழ் முற்போக்கிலக்கியத்துக்கு அதுவொரு பொற்காலம் என்றும் கூறலாம்.

அவரது எழுத்தில் எனக்குப் பிடித்த அம்சம்: தெளிவான நடையில், தர்க்கச்சிறப்பு மிகுந்திருப்பதுதான். கூறிய பொருள் பற்றிய அவரது தர்க்கம் எப்பொழுதும் என்னைக் கவர்ந்தது. வேறு சிலர் ஒரு பொருளைக்கூற வந்து, பலரின் மேற்கோள்களுடன் , வாசிப்பவரைக்குழப்புமொரு மொழி நடையில் எழுதுவார்கள். அவர்கள்தம் கட்டுரைகளை வாசிப்பவர்கள் பிரமித்துப்போவார்கள் அவர்கள் மேற்கோள்களைக்கண்டு, ஆனால் வாசித்து முடித்ததும் தங்களது தலைகளைச்சொறிந்துகொள்வார்கள் கூறும் பொருள் அறியாது. ஆனால் கைலாசிபதியின் எழுத்து இதற்கு நேர்மாறானது. தெளிவான நடையில், ஆழமான மொழியில், தர்க்கம் செய்யும் எழுத்து அவருடையது.

அவர் மார்க்சியக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்டவர். அதனால் அழகியலை மையமாக வைத்து எழுதப்படும் எழுத்துகளை மக்களுக்குப் பயன்படாத எழுத்துகள் என்று கருதினார். அதனால் அவற்றை அவர் வன்மையாகச் சாடினார். அவர் இருந்திருந்தாலும் ஏனைய சிலர் மாறியதுபோல் தன் கொள்கையிலிருந்தும் அவர் மாறியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
Last Updated on Tuesday, 05 April 2016 22:17 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 163: ஞானம் சஞ்சிகையின் தலையங்கமும், மறுமலர்ச்சிச்சங்கமும், அ.ந.க.வும்...

E-mail Print PDF

ஞானம் ஆசிரியத்தலையங்கம்அறிஞர் அ.ந.கந்தசாமிஅண்மையில் கோப்பாய் சிவம் , செல்லத்துரை சுதர்சன் ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளியான 'மறுமலர்ச்சிச் சஞ்சிகைகளின் தொகுப்பு' பற்றிய ஞானம் சஞ்சிகை ஏபரல் மாத இதழின் தலையங்கத்தில் வாழ்த்தியிருக்கின்றது. மேற்படி ஞானம் சஞ்சிகையின் வாழ்த்துச்செய்தி வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள , குறிப்பிடப்படாத விடயங்கள் பற்றிச் சுட்டுக்காட்டுவது முக்கியமென்று எனக்குத் தோன்றுகின்றது.  'அ.செ.மு , வரதர் போன்ற 'ஈழத்து நவீன எழுத்தாளர்களின் இரண்டாவது பரம்பரையினரில் பலர் மறுமலர்ச்சி உருவாக்கிய எழுத்தாளர்களே. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அ.செ.மு போன்றவர்கள் மறுமலர்ச்சி  சஞ்சிகையின் வரவுக்கு முன்னரே ஈழகேசரி மூலம் எழுதத்தொடங்கி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர்கள். அவர்களில் அ.செ.முருகானந்தன், தி.ச.வரதராசன், க.செ.நடராசா, அ.ந.கந்தசாமி, பஞ்சாட்சரசர்மா போன்ற ஐவருமே மறும்லர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்கள். இதனால்தான் இவர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று கூறப்படுகின்றார்களே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையில் எழுதியதனால் அல்ல.

மறுமலர்ச்சிச் சங்கத்திற்குள் பஞ்சாட்சர சர்மாவை இழுத்தவர் அ.ந.கந்தசாமி. பஞ்சாட்சர சர்மாவே தனது கட்டுரைகள் பலவற்றில் தன்னை எழுத்துத்துறையில் ஊக்கப்படுத்தியவராகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் 'பஞ்சாட்சரம்' நூல் முன்னுரையிலும் தன்னை எழுதுமாறு தூண்டிய இருவர்களாக அ.ந.கந்தசாமியையும், பண்டிதர் பொ.கிருஷ்ணபிள்ளையையும் குறிப்பிட்டுள்ளார். அதிலவர் அவர்கள் தன்னை எழுதுமாறு தூண்டித் தன்னம்பிக்கையூட்டி எழுத வைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாட்சர சர்மா அவர்களின் மகனான கோப்பாய் சிவம் அவர்கள் தனது தந்தையின் எழுபதாண்டு வயதினையொட்டி வெளியிட்ட 'பஞ்சாட்ஷரம்' நூலில் , பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு ஏனைய கலை, இலக்கியவாதிகள் எழுதிய கடிதங்களையும் இணைத்துள்ளார். மேற்படி நூலை நூலகம் இணையத்தளத்தில் எழுத்தாளர் கோப்பாய் சிவம் அவர்களின் படைப்புகளுக்கான பக்கத்தில் காணலாம்.

மேலும் மேற்படி நூலிலுள்ள பஞ்சாட்சர சர்மா அவர்களைப்பற்றிய கட்டுரையில் எழுத்தாளர் வரதர் அவர்கள் மறுமலர்ச்சிச்சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்கள் ஐவரென்றும், அவர்களிலொருவராக அ.ந.கந்தசாமியையும் குறிப்பிட்டிருப்பார்.

பஞ்சாட்சரம் தொகுப்பு நூலில் பலர் பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு எழுதிய கடிதங்களையும் சேர்த்திருக்கின்றார்கள்.  அதிலொன்று அ.ந.க எழுதிய கடிதம்.  அதிலவர் பஞ்சாட்சர சர்மாவை மறுமலர்ச்சிச்சங்கத்தில் இணைந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்திருக்கின்றார். அக்கடிதத்தில் அ.ந.க குறிப்பிட்டுள்ள விடயங்கள் சில வருமாறு:

1. மறுமலர்ச்சிச்சங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற அவசியத்தை முதலில் வலியுறுத்தியவர் அ.செ.முருகானந்தன். ஈழகேசரி பத்திரிகையில் அவரது பத்தியான 'பாட்டைசாரியின் குறிப்புக'ளில் இவ்விதம் மறுமலர்ச்சி சங்கத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். இதனை அக்கடிதத்தில் அ.ந.க குறிப்பிட்டிருக்கின்றார்.

2 . இவ்விதமாக மறுமலர்ச்சிச்சங்கத்தினை அமைக்கும் முயற்சியில் தனது நண்பர்களான அ.செ.மு.வும், வரதரும் ஈடுபட்டிருப்பதாகவும் , அவர்களுடன் ஒத்துழைத்துச் சங்கத்தை வெற்றியாக்க வேண்டுமென்பது தனது அவாவென்றும் அ.ந.க அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் 'மறுமலர்ச்சிச்சங்கம் மறுமலர்ச்சி இலக்கிய ஆர்வமுள்ள உத்தம ரஸிகர் திருக்கூட்டமாக இருக்க வேண்டும். தாங்கள் அத்தகையார் ஒருவர். எனவே தங்கள் ஒத்துழைப்பை நான் அதிகம் விரும்புகின்றேன்' என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். அக்கடிதம் எழுதப்பட்ட திகதி: 01.06.48. (பஞ்சாட்சர்மா; பக்கம் 169]

Last Updated on Tuesday, 05 April 2016 22:23 Read more...
 

இலங்கைக்கு விஜயம் செய்த திரு.'குடிவரவாளன்'.

E-mail Print PDF

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

இலங்கையில் அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'குடிவரவாளன்' நாவலின் குறிப்பிட்ட எண்ணிகையிலான பிரதிகள் இலங்கையிலும் விற்பனைக்குள்ளன. நூலின் பிரதிகளை வாங்க விரும்புபவர்கள் எழுத்தாளர் குணேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவருடைய அலைபேசி இலக்கம்: +94776120049

Last Updated on Thursday, 31 March 2016 06:48
 

திரு 'குடிவரவாளன்' இன்று கனடா வந்து சேர்ந்தார்!

E-mail Print PDF

வ.ந.கி

தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது நாவலான 'குடிவரவாளன்' நாவலில் குறிப்பிட்ட எண்ணிகையிலான பிரதிகள் இன்று கிடைக்கப்பெற்றேன், நான் எவ்விதம் என் நாவல் வெளிவர வேண்டுமென்று விரும்பினேனோ அவ்விதமே அட்டைப்படம் முதல், நூலின் வடிவமைப்பு வரை அமைந்திருப்பது மகிழ்ச்சியினைத்தருகின்றது. நூல் இவ்விதம் வெற்றிகரமாக வெளிவருவதற்கு இணையம் மிகவும் கை கொடுத்தது என்றுதான் கூற வேண்டும். நூலின் ஆரம்ப நிலையிலிருந்து, வெளியாகும் வரையில், ஓவியா பதிப்பக உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்கள் அலுக்காமல், சலிக்காமல் என் கருத்துகளை உள் வாங்கி, விவாதித்து வந்துள்ளதை இத்தருணம் நினைத்துப்பார்க்கின்றேன். இவ்விதமான கருத்துப்பரிமாறல்கள் இந்நூல் சிறப்பாக வெளிவந்திருப்பதற்கு மிகவும் உதவியிருக்கின்றன.

FedEx 'கூரியர்' மூலம் வதிலைப்பிரபா 20.03.2016 அன்று அனுப்பிய புத்தகப்பொதி , இன்று 24.03.2016 என் கைகளை வந்தடைந்தது. அனுப்பியதிலிருந்து எனக்குக் கிடைக்கும் வரையிலான அதன் வரலாற்றை இணையத்தின் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது. உலகமயமாக்கலின் பாதக விளைவுகளுக்கு மத்தியில் இவ்விதமான நன்மைகளுமுள்ளன.

கனடா நண்பர்கள் கவனத்துக்கு:
இந்நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:

Last Updated on Sunday, 27 March 2016 05:43 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 163: அம்மாவின் நினைவாக...;தமிழ்வாணன்: தன்னம்பிக்கையின் சிகரம்!:கவிதைப்பிரியர்களுக்கோர் சஞ்சிகை: மகாகவி!

E-mail Print PDF

திருமதி நவரத்தினம்1. அம்மாவின் நினைவாக...

அவர் ஓர் ஆசிரியையாக விளங்கியவர். யாழ் இந்துக்கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம் மற்றும் அராலி இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியையாகக் கடமையாற்றியவர். 'நவரத்தினம் டீச்சர்' என்றால் தான் அவரைப் பலருக்குத்தெரியும். யாழ் இந்து மகளிர் கல்லூரிக் காலகட்டத்தைச்சேர்ந்த அவரது சக ஆசிரியர்களுக்கு அவரை 'மங்கை' என்றால்தான் தெரியும். அதுதான் அவரது வீட்டுப்பெயர். ஆனால் அவரது இயற்பெயர் மகேஸ்வரி. அது யாருக்குமே தெரியாது. கண்டிக்கவே தெரியாத ஆசிரியர்களில் அவருமொருவர். புவியியல், ஆங்கிலம் மற்றும் Home Science ஆகிய துறைகளில் பாடங்களை அதிகமாகக் கற்பித்தவர்.

வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலைகளில் நேரத்துடன் எழுந்து, அனைவருக்கும் உணவு தயாரித்து, மதிய நேர உணவினை அனைவருக்கும் தயார் செய்வார். அதிகாலைகளில் நாங்கள் குழந்தைகள் அனைவரும் அவர் பின்னால் கோழிக்குஞ்சுகளாகச் சென்ற காலைகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. மாலை நேரங்களில் வீடு திரும்பும்போது நான் என் நண்பர்களுடன் திரும்பி விடுவேன். ஆனால் காலைகளில் பாடசாலை செல்லும்போது அவருடனேதான் செல்வதுண்டு.

நன்கு பாடும் திறமை மிக்கவர். சிறுவயதில் அவர் பாடும் பாரதியார் விடுதலைக்கீதங்களை (குறிப்பாகத் 'தாயின் மணிக்கொடி பாரீர்), 'மிஸ்ஸியம்மா' திரைப்படப்பாடலான 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்' ஆகிய பாடல்களை அவர் அவ்வப்போது பாடக்கேட்டு இரசித்திருப்பதும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

Last Updated on Sunday, 27 March 2016 00:50 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 162 : தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி,,,; தமிழினி சாகாள்!; கார்ல் மார்கஸ் - 'சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்சரியாக உய்த்துணர்ந்தவன்'!

E-mail Print PDF

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி1. தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி,,

சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் வெளியிட்டுள்ள தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலின் இலங்கைப்பதிப்பின் பின் அட்டையில் பின்வருமாறுள்ளது"

"உயிருடனிருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களோடு இணைந்தே வெளியேறத்தயாராகியிருந்தார்கள். ஆபத்துக்காலத்தில் கோழி தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை இழுத்துக்கொள்வதுபோல் தமிழ் மக்கள் தம்முடனே போராளிகளையும் பாசத்துடன் அரவணைத்து உள்வாங்கிக்கொண்டார்கள்.  யாரெண்ரே தெரியாமல் காயமடைந்து அனாதரவாகக் கிடந்த பல போராளிகளையும் மக்களில் சிலர் தூக்கிச் சுமந்துகொண்டு வெளியேறத்தயாரானார்கள்."

இதற்குக் கீழே தமிழினி பற்றிய சிறு குறிப்பொன்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மேற்படி நூலின் பின் அட்டையில் வேறு யாரோ எழுதியதைத் தமிழினி எழுதியுள்ளதாகக் குறிப்பி்டப்பட்டுள்ளதை முகநூலில் பலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அது கண்டிக்கத்தக்கது. காலச்சுவடு பதிப்பகத்தார் இதற்கான பதிலை நிச்சயம் கூறவே வேண்டும்.

தமிழினியில் சுயசரிதையில் நான் வாசித்த வரையில் ஈழத்தமிழர் போராட்டத்தைக்கொச்சைப்படுத்தியதாக எதனையும் நான் காணவில்லை. அவர் தன் அனுபவங்களை , போராட்ட அனுபவங்களை, விடுதலைப்புலிகளின் பிரமிக்கத்தக்க போர் வெற்றிகளை எல்லாம் விபரிக்கின்றார். இறுதியில் இவ்விதமான வெற்றிகளுடன் கூடிய போராட்டமானது , முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது அவருக்கு அதிர்ச்சியைத்தருகிறது. யுத்தத்தின் பின்னரான, மக்களின் முன்னாள் போராளிகள் மீதான புறக்கணிப்பு குறிப்பாகப் பெண் போராளிகள் மீதான புறக்கணிப்பு இதுவரை காலமும் யாருக்காகப் போராடினேன் என்ற கேள்வியை அவரிடத்தில் எழுப்புகிறது. அதன் பின்னரான அவரது அனுபவம் அவரை இதுவரை காலமும் நடந்த போராட்டம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. அச்சிந்தனையை அவர் தன் சுயசரிதையில் வெளிப்படுத்துகிறார்.

அவ்விதம் வெளிப்படுத்தும்போது தலைமையின் பலமான அம்சங்களை ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் விபரித்த அவர் , முழு அமைப்புமே தலைமையை மையமாக வைத்துக்கட்டியெழுப்பப்பட்டிருந்ததால், தலைமையுடன் முடிவுடன் ஆயுதங்கள் மெளனிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான போராளிகளும் கை விடப்பட்ட நிலையும் உருவானபோது அந்நிலை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றார்.

என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான கேள்விகள், சுய பரிசோதனைகள் ஆரோக்கியமானவை. ஏன் இவ்வளவு வெற்றிகளுடன் விளங்கிய அமைப்பானது, முற்று முழுதாக இயங்க முடியாதவாறு, ஆயுதங்கள் மெளனிக்கப்பட வேண்டிய நிலையுடன் முடிவுக்கு வரவேண்டி வந்தது என்ற கேள்விகளுக்கான நியாயமான சுய ஆய்வே தமிழினியின் சுயசரிதை.

Last Updated on Saturday, 19 March 2016 19:54 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 161 : நவகாலத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இணைய இதழ்கள்!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!நவகாலத்தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் முனைவர்கள் பலர் தமக்குக் கிடைக்கும் நூல்களை மையமாக வைத்தே பெரும்பாலும் எழுதுவது வழக்கம். இதனால் நவகாலத்தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பினை அவர்கள் பலரின் எழுத்துகள் காட்டத்தவறிவிடுகின்றன. இணையத்தில் குறிப்பாக இணைய இதழ்களில் வெளியாகும் பல படைப்புகளை இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட முனைவர்கள் பலர் தவற விட்டு விடுகின்றார்கள்.  ஆனால், அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது.

முனைவர் நா.சுப்ரமணியன், முனைவர் இ.பாலசுந்தரம் போன்றவர்கள் கனடாத்தமிழ் இலக்கியம் பற்றிய தமது கட்டுரைகளுக்கு 'பதிவுகள்' போன்ற இணைய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை, படைப்புகளை மையமாக வைத்து ஆய்வினைச்செய்திருப்பது அவதானிப்புக்குரியது. இணைய இதழ்களின் இலக்கியப்பங்களிப்பினை இவர்கள் புரிந்து கொண்டிருப்பது நல்லதொரு விடயம்.

அண்மைக்காலமாக இணைய இதழ்களில் வெளியாகிய பல்வகைப்படைப்புகள் நூலுருப்பெற்று வெளிவருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள் பல (நீலக்கடல் நாவல் உட்பட) திண்ணை இணைய இதழில் வெளியாகிப்பின் நூலுருப்பெற்றவைதாம். 'பதிவுகள்' இணைய இதழிலும் இவரது இலக்கியக் கட்டுரைகள், பிரெஞ்சுப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியாகியுள்ளன. எழுத்தாளர் இரா.முருகனின் 'அரசூர் வம்சம்' 'திண்ணை' இணைய இதழில் வெளியாகி நூலுருப்பெற்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் அவர்களின் அறிவியற் கட்டுரைகள் பல திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது இலக்கியப்படைப்புகள் பல திண்ணை இணைய இதழில் வெளியாகி நூலுருபெற்றுள்ளன. இவை தவிர நடேசன் (ஆஸ்திரேலியா) அவர்களின் 'அசோகனின் வைத்தியசாலை' 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகிப்பின்னர் நூலுருப்பெற்றதையும், அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றது என்பதையும் மறந்து விட முடியாது. மேலும் அண்மையில் வெளியான தமிழினியின் 'போர்க்காலம்' கவிதைத்தொகுதி 'பதிவுகள்' மற்றும் தமிழினியின் முகநூல் பக்கம் ஆகியவற்றில் வெளியாகிப்பின்னர் நூலாக வெளிவந்ததும் கவனத்திற்கொள்ள வேண்டியதொன்று.

Last Updated on Saturday, 12 March 2016 21:29 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 160 : 'ராமச்சந்திரன்' ஆட்சி செய்த மண்ணில் 'ரவிச்சந்திரன்கள்' மடியும் நிலை இனியும் வேண்டாம். | எழுத்தாளர் 'சீர்காழி' தாஜ்.......

E-mail Print PDF

1.  'ராமச்சந்திரன்' ஆட்சி செய்த மண்ணில் 'ரவிச்சந்திரன்கள்' மடியும் நிலை இனியும் வேண்டாம்.

ரவிச்சந்திரன் என்ற மனிதர் , தன்னுடன் வாழும் மக்களின் உரிமைகளைச் சுட்டிக்காட்டி, அவலங்களைச்சுட்டிக்காட்டிபோராளியாகத்தன்னை மாய்த்துக்கொண்டிருக்கின்றார். அவரது இந்தப்போராட்டம் , இந்த முடிவு தமிழகத்தில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இனியாவது விடிவொன்றினைக்கொண்டு வரட்டும்.

அண்மையில் கனடா அரசு 25,000 சிரிய அகதிகளைப் பெரும் ஆரவாரத்துடன் கை நீட்டி, அரவணைத்து அழைத்தபோது எனக்குத் தமிழகத்தில் அகதிகள் முகாம் என்ற பெயரில் நடாத்தப்படும் தடுப்பு முகாம்களில் வாடும் எம் நாட்டுத்தமிழ் அகதிகளின் நிலைதான் ஞாபகத்துக்கு வந்தது. ஈழத்தில் நிலவிய கொடிய அடக்குமுறைகள் காரணமாகத் தாய்த்தமிழகம் என்ற பெரும் நம்பிக்கையுடன் , அபயம் நாடித்தமிழகம் வந்த அப்பாவி அகதிகள் அவர்கள். அவர்களை இருகரம் நீட்டி அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப்பதிலாகத் தடுப்பு முகாம்கள் என்ற ஒருவகைச்சிறைக்கூடங்களில் தடுத்து, உளரீதியாகத்துன்பங்களை அனுபவிக்க வைத்து, அதிகாரிகளின், காவல்துறை அதிகாரிகளின் அடக்கு முறைகளுக்குள் பல்வகைத்துன்பங்களை அனுபவிக்க வைத்து ஏன் தமிழக அரசு இவ்விதம் அந்த அகதிகளுடன் வாழ்வுடன் விளையாடுகிறது?

தமிழக அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் , நடிகர்கள் போன்ற பலர் இவர்களைப்பற்றி எதுவுமே பெரிதாகக் கதைப்பதேயில்லை. இவர்களுக்காகக் குரல் கொடுப்பதேயில்லை. இவ்வளவுக்கும் இவர்களது நிலை பற்றி மானுட உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சிலர் அவ்வப்போது குரல் எழுப்பித்தான் வருகின்றனர். , ஊடகங்கள் சில இவர்களது நிலை பற்றிக் குரல் கொடுத்துத்தான் வருகின்றன. இருந்தும் ஏன் எல்லாரும் இவர்களின் நிலையினை மாற்றி, பூரண சுதந்திரம் மிக்கவர்களாக இவர்கள் வாழ அனுமதிக்கவில்லை?

அகதி முகாமுக்குத் தாமதமாக வந்த ரவிச்சந்திரனை அதுவும் மிகவும் நியாயமான காரணத்துக்காகத் தாமதமாக வந்தவரைக் கண்டித்து, அவமானப்படுத்தி, அகதி முகாமுக்குள் ஏற்க முடியாது என்று மறுத்த அதிகாரி ராஜேந்திரன் , ரவிச்சந்திரனை 'வாழ்க்கையின் ஓரத்துக்கே' ஓடும்படி விரட்டியிருக்கின்றார். அவர் மீது பொலிஸார் வழக்குத்தொடுத்திருப்பதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப்போன்ற அதிகாரிகள் மிகவும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தன் வாழ்வையே மாய்த்துக்கொண்ட ரவிச்சந்திரனின் குடும்பத்துக்குப் போதிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எந்தக் காரணத்துக்காக ரவிச்சந்திரனுக்கு இந்த நிலை ஏற்பட்டதோ? அந்தக்காரணங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும். அகதிகள் பூரண சுதந்திரம் மிக்கவர்களாக வாழ்வதற்கு உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமற்று, சாதாரணை குடிமக்களைப்போல் தாம் விரும்பிய இடங்களில் அல்லது அகதி முகாம்களில் சுதந்திரமாக வாழ்வுதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

Last Updated on Monday, 07 March 2016 22:56 Read more...
 

நன்றி! நன்றி! நன்றி!

E-mail Print PDF

தமிழகத்தில் தற்போது ஓவியா பதிப்பக வெளியீடாக விற்பனைக்கு வந்துள்ள எனது நாவலான 'குடிவரவாளன்' பிரதியுடன் பதிப்பக உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா இருக்கும் காட்சியினையே இங்கு காண்கின்றீர்கள்.தமிழகத்தில் தற்போது ஓவியா பதிப்பக வெளியீடாக விற்பனைக்கு வந்துள்ள எனது நாவலான 'குடிவரவாளன்' பிரதியுடன் பதிப்பக உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா இருக்கும் காட்சியினையே இங்கு காண்கின்றீர்கள். மிகவும் சிறப்பாக நூலினை வெளியிட்டுள்ள ஓவியா பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் வதிலைப்பிரபாவுக்கும் நன்றி. எழுத்தாளர் ஒருவருக்கு அவரது படைப்பொன்றினை நூலுருவாகப்பார்க்கும்போது ஏற்படும் இன்பத்தை விபரிக்க வார்த்தைகளில்லையென்பேன். 'குடிவரவாளன்' நாவலினை வதிலைப்பிரபா கைகளில் பார்க்கையில் ஏற்படும் களிப்பும் அவ்வகையானதே.

நூலினைப்பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஓவியா பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

முகநூல் பல ஆக்கபூர்வமான நன்மைகளை அதன் அங்கத்தவர்களுக்குத்தருகிறது. தம் பால்ய காலத்து நண்பர்களுடன், நண்பர்களுடன், சக எழுத்தாளர்களுடன், பதிப்பகத்தாருடன் எனப் பலருடன் ஆக்கபூர்வமான தொடர்ப்புகளைப் பேணுதற்கு உதவுகின்றது. ஓவியா பதிப்பகத்தையும், அதன் உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா அவர்களையும் நான் அறிந்து கொண்டதும் முகநூல் வாயிலாகத்தான். அதற்காக முகநூலுக்கும் நன்றி. முகநூல் மூலம் நான் அடைந்த நன்மைகளில் இதுவுமொன்று.

நீண்ட காலமாக நூலாக வெளிவரவேண்டுமென்று நான் விரும்பிய நாவல் 'குடிவரவாளன்' அதனைச் சாத்தியமாக்கிய ஓவியா பதிப்பகத்துக்கு மீண்டுமொருமுறை நன்றி. நூலின் அட்டைப்படத்திலிருந்து, பிழை திருத்தம் செய்வதுவரை, வதிலைப்பிரபா காட்டிய சிரத்தை என்னைப் பிரமிக்க வைக்கிறது. இயலுமானவரையில் எழுத்துப்பிழைகளைக் களைந்துள்ளோம். நூல் சிறப்பாக வெளிவந்துள்ளது.

Last Updated on Friday, 04 March 2016 20:19 Read more...
 

அஞ்சலி: அமரர் செங்கை ஆழியான் நினைவாக....

E-mail Print PDF

செங்கை ஆழியானின் 'ஆச்சி பயணம் போகின்றாள்'செங்கை ஆழியான்எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று மறைந்ததாக முகநூல் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அண்மையில் எழுத்தாளர் முருகபூபதியின் பதிவொன்றில் செங்கை ஆழியான் உடல்நலமிழந்து இருந்த விபரத்தை அறிந்தபோது அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென வேண்டி முகநூலில் பதிவொன்றினையிட்டிருந்தேன். அது தவிர அவர் பற்றி அவ்வப்போது வேறு சில பதிவுகளையும் முகநூலில் இட்டிருக்கின்றேன். அப்பதிவுகள் செங்கை ஆழியான் எவ்விதம் என் இளம் பருவத்தில் என்னைப்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தும் பதிவுகள் என்பதாலும், அவை அவரது பன்முக இலக்கியப்பங்களிப்பினைப் புலப்படுத்துவதாலும், அவற்றைத்தொகுத்து என் அஞ்சலியாக இங்கு பதிவிடுகின்றேன்.

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் செங்கை ஆழியானுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் போன்ற தொகுப்புகளை வெளியிட்டதன் மூலம், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகினை ஆவணப்படுத்தி மிகுந்த பயனுள்ள பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

புனைவு, அபுனைவு என இவரது பங்களிப்பு பரந்தது. ஈழத்தமிழர்தம் வரலாறு பற்றி இவர் எழுதிய கட்டுரைகளும், நூல்களும் முக்கியமானவை. புனைவுகளிலும் சமுகக்கதைகளுடன், வரலாற்றுக்கதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் 'ஆச்சி பயணம் போகின்றாள்', 'நடந்தாய் ஆறு வழுக்கியாறு!' மற்றும் 'கொத்தியின் காதல்' ஆகிய நகைச்சுவைப்புனைவுகளையும் எழுதியிருக்கின்றார்.

இலங்கை அரச படைகளினால் யாழ்ப்பாணம் எரியுண்டபோது நீலவண்ணன் என்னும் பெயரில் அவற்றை ஆவணப்படுத்தும் அபுனைவுகளை எழுத்தாளர் அமரர் வரதர் அவர்களின் வேண்டுகோளின்பேரில் எழுதியிருக்கின்றார்.

Last Updated on Monday, 29 February 2016 00:01 Read more...
 

தமிழகத்தில் மார்ச் முதல் திகதி அன்று வெளியாகின்றது 'குடிவரவாளன்'

E-mail Print PDF

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

'பதிவுகள்' வாசகர்களுடன் மகிழ்ச்சிகரமான செய்தியொன்றினை பகிர்ந்துகொள்கின்றோம். வ.ந.கிரிதரனின் நாவலான 'குடிவரவாளன்' தமிழகத்தில் மார்ச் 1, 2016 அன்று விற்பனைக்கு வருகின்றது. ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரும் இந்த நாவலினைப்பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் திரு. வதிலைப்பிரபா, ஓவியா பதிப்பகம் அவர்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.

ஓவியா பதிப்பக விபரங்கள்: Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua - 642 202 Tamil Nadu, India
Phone: 04543 - 26 26 86 |  Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it | This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

இந்நாவல் வ.ந.கிரிதரனின் ஆறாவது  நாவலாகும். இதுவரை வெளியானவை:

1. மண்ணின் குரல் (1987) - கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். புரட்சிப்பாதை (மான்ரியால்) கையெழுத்துச்சஞ்சிகையில் 84.85 காலப்பகுதியில் தொடராக வெளிவந்து , மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் நூலாக வெளிவந்தது.
2. கணங்களும், குணங்களும் - தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் 1998இல் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 'மண்ணின் குரல்' என்னும் பெயரில் வெளியான நான்கு நாவல்களின் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள நாவல்களிலொன்று. தொடராக வெளியானபோது 'மணிவாணன்' என்னும் பெயரில் வெளியானது.
3. அருச்சுனனின் தேடலும்! அகலிகையின் காதலும்! - தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
4. வன்னி மண்! - தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
5. அமெரிக்கா. -  தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து 'மண்ணின் குரல்' நாவல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
6. குடிவரவாளன். - பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் தொடராக வெளிவந்து தற்போது தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவருகின்றது. தொடராக வெளியானபோது 'அமெரிக்கா 2', 'அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்' என்னும் பெயர்களில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயருக்கு மாற்றமடைந்த நாவலிது.

Last Updated on Sunday, 28 February 2016 23:20 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 159: கனடாவின் முதலாவது தமிழ்க்கவிதை நூலெது?

E-mail Print PDF

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவின் முதல் தமிழ் நாவலாக வெளிவந்த ஆக்கம் எனது 'மண்ணின் குரல்' இந்த நூலுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நூல் 'மண்ணின் குரல்' நாவலையும் 8 கவிதைகளையும் மற்றும் 2 கட்டுரைகளையும் கொண்ட சிறு தொகுப்பாக வெளிவந்தது.  அந்த வகையில் இதனை முதலாவது நாவலாகவும் கருதலாம். அதே சமயம் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். இந்நூல் 87 தை மாதம் வெளியானது. அந்த வகையில் கனடாவில் வெளியான முதலாவது கவிதை நூலாகவும் இதனை ஒருவிதத்தில் கொள்ளலாமோ?

சுதா குமாரசாமியின் 'முடிவில் ஓர் ஆரம்பம்' கவிதைத்தொகுப்பும் றிப்ளக்ஸ் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அது வெளிவந்த ஆண்டு சரியாகத்தெரியவில்லை. 87ற்கு முன் வெளிவந்திருந்தால் அதனையே முதலாவது கவிதைத்தொகுதியாகக் கருதலாம். முகநூலில் இக்கவிதைத்தொகுப்பினைப்பற்றிச்சுட்டிக் காட்டியிருந்தார் நண்பர் கனடா மூர்த்தி. அவருக்கு நன்றி.

'மண்ணின் குரல்' றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டது. இதிலுள்ள கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 'மண்ணின் குரல்' நாவல் ஆகியன 'புரட்சிப்பாதை' (மான்ரியால்) கையெழுத்துச் சஞ்சிகையில் 84/95 காலப்பகுதியில் வெளியாகிய படைப்புகள். அக்காலத்து என் உணர்வுகளைப்பிரதிபலிப்பவை. அன்றுள்ள என் அறிவு மட்டத்திற்கேற்ப சில சொற்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தொகுப்பிலுள்ள நாவலின் பெயர் மண்ணின் குரல். அதனால் இத்தொகுப்புக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தம். அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவையும் மண்ணின் குரல்களாகத்தாம் ஒலிக்கின்றன. அந்த வகையில் மண்ணின் குரல் என்னும் நூலின் பெயர் நூலின் படைப்புகள் அனைத்துக்கும் பொருத்தமான தலைப்பென்பேன்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு...
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

Last Updated on Sunday, 28 February 2016 03:02 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 158 : கனடாவில் வெளியான கவிதைத்தொகுதிகள்...; பள்ளிக்கூடமா? பல்கலைக்கழகமா?

E-mail Print PDF

வ.ந.கிரிதரனின் 'எழுக அதிமானுடா!'

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று - ' நித்திய வாழ்வு காணலாம்'

1. கனடாவில் வெளியான கவிதைத்தொகுதிகள்....

முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் 'கனடாவில் தமிழ் இலக்கியம்' என்னும் கட்டுரையில் கனடாவில் வெளியான கவிதை நூல்களைப்பற்றிய குறிப்பொன்று வருகின்றது. அது வருமாறு:

"கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய  'எலும்புக் கூடுகளின் ஊர்வலம்' ஆகும்.  இது 1990இல் வெளிவந்தது.  இதனையடுத்து கெளரி என்பாரின் 'அகதி' என்ற நெடுங்கவிதை நூலும், அ.கந்தசாமி , மலையன்பன் மற்றும் ரதன் ஆகிய மூவரின் தொகுப்பான 'காலத்தின் பதிவுகள்' என்ற தொகுதி 1991இலும், ஆனந்தபிரசாத் என்பாரின் 'சுயதரிசனம்' என்ற தொகுதி 1992இலும் வெளிவந்தன. அடுத்த நான்காண்டுகளில் என்.கே.மகாலிங்கம் அவர்களின் 'உள்ளொளி' (1993), அ.கந்தசாமி அவர்களின் 'கானல் நீர்க்கனவுகள்' (1994), நிலா குகதாசன் அவர்களின் 'இன்னொரு நாளில் உயிர்த்தேன்' (1996) முதலிய சில கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன.  இத்தகவல்களைத் தந்துதவியவர்கள் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் மற்றும் எழுத்தாளர் திரு.ப.ஶ்ரீஸ்கந்தன் ஆகியோராவார்."

சேரனின் கவிதைத்தொகுதியான 'எலும்புக்கூடுகளின் ஊர்வலம்' தேடகம் அமைப்பினரால் வெளியிடப்பட்டது.

Last Updated on Saturday, 27 February 2016 21:29 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!கனடாவிலிருந்து வெளிவரும் 'தமிழர் தகவல்' இதழின் பெப்ருவரி (2016) மாத இதழ் அதன் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலராக வெளிவந்துள்ளது. இதனை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்விதம் ஈழத்துப் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளரான எஸ்.திருச்செல்வத்தை ஆசிரியராகக்கொண்டு அவரால் வெளியிடப்படுவது.

மாதா மாதம் வெளியாகும் இதழ்கள் கனடாத் தமிழருக்கு, புதிய குடிவரவாளர்களுக்குப்பயனுள்ள விபரங்களை, ஆக்கங்களைத்தாங்கி வெளிவருவன. அவற்றை இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூற முடியாது.. ஆனால் இவ்விதழின் ஆண்டு மலர்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவை நிச்சயம் இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூறலாம். அந்த வகையில் இலக்கியச்சிறப்பு மிக்க மலராக இம்மாத இதழும் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இம்மலர் கனடாத்தமிழர் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் அதே சமயம், உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர் பற்றிய விபரங்களையும் தாங்கி வெளிவந்திருக்கின்றது.  அவ்வகையில் புலம் பெயர் தமிழர் சிறப்பு மலராகவும் இவ்விதழைக்கூறலாம். மலரின் கலை, இலக்கியச்சிறப்பு மிக்க கட்டுரைகளாகப்பின்வரும் கட்டுரைகளைக்குறிப்பிடுவேன்.

1. கனடாவில் தமிழ் ஒலிபரப்பு கால் நூற்றாண்டு வரலாறு - பொன்னையா விவேகானந்தன். கனடாவில் தமிழ் ஒலிபரப்பு வளர்ந்த கதையினை விரிவாக விபரிக்கும் கட்டுரை இது.

2. திரை விலகுகிறது.. மேடை நாடகங்கள் - ப.ஶ்ரீஸ்கந்தன். இக்கட்டுரையும் கனடாத் தமிழரின் நாடக வரலாற்றை விரிவாகப்பேசுகிறது; ஆவணப்படுத்துகிறது.

3.  இது படமல்ல. புலம்பெயர் திரைப்பட கவழிகை. - ரதன்.  திரைப்படங்களைப்பற்றிய பொதுவான கட்டுரை. இறுதியில் கனடாவில் வெளிவந்த திரைப்படங்களைப்பட்டியலிடுகிறது. இதற்குப்பதிலாக கட்டுரை முழுவதுமே கனடாவில் வெளியான தமிழ்த்திரைப்படங்களைப்பற்றியதாக இருந்திருக்கும் பட்சத்தில், கனடாத்தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரையாக விளங்கியிருக்கும். கவழிகை என்றால் திரைச்சீலை. 'புலம்பெயர் திரைப்பட கவழிகை' என்ற தலைப்பு 'புலம்பெயர் திரைப்படத்திரைச்சீலை' என்ற பொருளினைத்தருகின்றது. அது பற்றிய குழப்பகரமான சிந்தனையைத்தருகிறது. இன்னும் எளிமையாகத் தலைப்பினை வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது.

Last Updated on Monday, 22 February 2016 06:50 Read more...
 

அஞ்சலி: அம்பர்தோ எகோ!

E-mail Print PDF

அம்பர்தோ எகோஅம்பர்தோ எகோஅம்பர்தோ எகோ

அம்பர்தோ எகோ பல் துறைகளில் தன் ஆளுமையினைப்பதித்த முக்கியமானதோர் ஆளுமை. இலக்கிய விமர்சனம், ஊடகப் பண்பாடு, குறியியல், மானுடவியல், படைப்பு இலக்கியம் மற்றும் மத்தியகாலத்து அழகியல் பற்றிய ஆய்வுகள் என இவரது பங்களிப்பு பரந்தது; முக்கியமானது; தவிர்க்க முடியாதது.

தமிழில் இவரைப்பற்றிய விரிவான நூல்கள் அல்லது இவரது நூல்கள் அதிகம் வந்ததாகத்தெரியவில்லை. ரஃபேலின் (வின்சென்ட் பால்) 'அம்பர்தோ எகோ :சில நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு' என்றொரு நூல் , அகம்புறம் பதிப்பகத்தின் மூலம் 2010இல் வெளிவந்திருக்கின்றது. அண்மைக்காலத்தில் தமிழகத்தில் மேலும் பல நூல்கள் வந்திருக்கக்கூடும்.

இவரது இழப்பு மிகப்பெரியதோர் இழப்பு என்றால் அது மிகையான வார்த்தைகளல்ல. ஆழ்ந்த அஞ்சலிகள்.

Last Updated on Saturday, 20 February 2016 18:29
 

வாசிப்பும், யோசிப்பும் 156: சிற்பியின் 'கலைச்செல்வி'

E-mail Print PDF

சிற்பியின் 'கலைச்செல்வி''கலைச்செல்வி' சஞ்சிகை ஈழத்தில் வெளிவந்த தமிழ்ச்சஞ்சிகைகளில் முக்கியமானதொரு சஞ்சிகை. 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்னும் தாரக மந்திரத்துடன் , சிற்பி சரவணபவனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த சஞ்சிகை அது. கலைச்செல்வி சஞ்சிகையை நினைத்தால் எனக்கு ஞாபகம் வரும் விடயம் என் மாணவப்பருவத்தில் அச்சஞ்சிகையின் ஓரிதழொன்றினை வாசித்த சம்பவம்தான். கூடவே அவ்விதழில் வெளியான சொக்கன் அவர்களின் சிறுகதையொன்றும் ஞாபகத்துக்கு வரும்.

அச்சிறுகதையின் கரு இதுதான்: தமிழ் ஆசிரியர் ஒருவரின் மகளுக்கு , அவரின் மாணவனொருவன் காதல் கடிதம் எழுதி விடுகின்றான். ஆனால் அந்தக் காதல் கடிதத்தை எழுதியவன் தன் மாணவனே என்பதை அவ்வாசிரியர் கண்டு பிடித்து விடுகின்றார். எப்படி? வழக்கமாக அவன் தமிழில் எழுதும் போது விடும் எழுத்துப்பிழையொன்றினை அந்தக் காதல் கடிதத்திலும் விட்டிருப்பான். அதிலிருந்து அந்த மாணவனை அத்தமிழாசிரியர் கண்டு பிடித்து விடுகின்றார்.

எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் வாசித்த எழுத்தாளர் சொக்கனின் அச்சிறுகதையினை, இப்பொழுது நினைத்தாலும் இதழ்க்கோடியில் இலேசாக முறுவலொன்று ஓடி மறையும். காதல் கடிதம் பற்றிய தமிழ் வாத்தியாரான சொக்கனின் தமிழ் வாத்தியார் பற்றிய சிறுகதையை நினைக்குந்தருணங்களில் அது வெளியான 'கலைச்செல்வி' சஞ்சிகையும் ஞாபகத்துக்கு வந்து விடுகின்றது.

'கலைச்செல்வி' சஞ்சிகையின் சில இதழ்களை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்க முடிகிறது.

இவ்விதழ்களில் அறிந்து கொண்ட விடயங்கள் சில வருமாறு: இவ்விதழ்களில் புதுமைப்பிரியை (பத்மா சோமகாந்தன்), , எஸ்.பொ., வ.அ.இராசரத்தினம், சிற்பி சரவணபவன், மு.தளையசிங்கம், கவிஞர் நீலவாணன், கவிஞர் பரமஹம்சதாசன், தேவன் (யாழ்ப்பாணம்), ஆதவன், அ.க.சர்மா எனப்பலர் எழுதியுள்ளார்கள். [ஆதவன் என்னும் பெயரிலும் அக்காலகட்டத்திலும் ஒருவர் எழுதிக்கொண்டிருந்திருக்கின்றார்.]

'உனக்காகக் கண்ணே' என்னும் தலைப்பில் நாவலோன்றினைச் சிற்பி என்னும் பெயரில் சரவணபவன் அவர்கள் எழுதியுள்ளார். அ.க.சர்மா 'அணுவுள் ஓர் அதிசயம்' என்னும் தலைப்பில் அறிவியற் கட்டுரைத்தொடரொன்றினை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர்கள் 'எழுத்துலகில் நான்' என்னும் தலைப்பில் தம் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பதையும் அறிய முடிகின்றது.

Last Updated on Saturday, 20 February 2016 18:42 Read more...
 

தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!

E-mail Print PDF

தமிழினி ஜெயக்குமாரன்- 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில் அண்மையில் மறைந்த தமிழினி ஜெயக்குமாரனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றினை, அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் உதவியுடன், சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தத்தொகுப்புக்கு வ.ந.கிரிதரன் எழுதிய முன்னுரையினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். - பதிவுகள் -


தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் ஈழத்துத்தமிழ் இலக்கிய வானில் கணப்பொழுதில் ஒளி தந்து மறையும் மின்னலைப்போல் , தன் குறுகிய வாழ்வினுள் ஒளிர்ந்து மறைந்தவர் தமிழினி. இவரது படைப்புகள் குறைவாக இருந்தபோதிலும், அவை நூலுருப்பெற வேண்டியதவசியம். தமிழினியின் கவிதைகளைத்தொகுத்து சிறு தொகுப்பாக வெளிக்கொணர முனைந்திருக்கும் அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் இந்த முயற்சியானது மிகவும் பாராட்டுதற்குரியதும், பயனுள்ளதுமாகும். முக்கியமானதொரு தொகுப்பாக விளங்கப்போகும் தொகுப்பிது என்றும் கூறலாம்.

தமிழினி அண்மைக்காலமாகத்தான் எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தினாரா? உண்மையில் அவர் கடந்த காலத்திலும் பல்வேறு பெயர்களில் அவர் எழுதியிருப்பதை அவரே ஒருமுறை தன் முகநூலில் பகிர்ந்திருக்கின்றார். அவரது 'மழைக்கால் இரவு' சிறுகதையின் வரிகளிலிருந்து 'யுத்தம்' என்றொரு கவிதையினை உருவாக்கிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன். அது பற்றித் தன் முகநூலில் கருத்துத்தெரிவித்திருந்தபோது தன் கடந்த காலத்து இலக்கிய முயற்சிகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

Last Updated on Sunday, 14 February 2016 00:26 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 155 : மேலும் சில முகநூல் பதிவுகளும், பின்னூட்டங்களும்!

E-mail Print PDF

'மூத்த' எழுத்தாளர்களும், முகநூலும்!

எஸ்.எல்.எம்.ஹனீபாசமூக ஊடகங்களை அண்மைக்காலமாகப்பல மூத்த எழுத்தாளர்கள் பலர் பாவித்து வருவது ஆரோக்கியமானதொரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். இங்கு நான் பாவித்துள்ள மூத்த எழுத்தாளர்கள் என்னும் பதம் அமரர் எஸ்.பொ. அவர்களுக்குப் பிடிக்காததொரு பதம். அவருடன் ஒருமுறை ஆறுதலாக உரையாடிக்கொண்டிருந்தபொழுது 'அதென்ன மூத்த எழுத்தாளர்' என்று அவர் பரிகாசம் செய்தது ஞாபகத்துக்கு வருகின்றது. மூத்த என்னும் சொற்பதத்தை வயதில் மூத்த, எழுத்துத்துறை அனுபவத்தில் மூத்த என்னும் கருத்துப்பட பாவிக்கலாம் என்பதால் அவ்விதம் பாவிப்பதில் தவறில்லையென்றே கருதுகின்றேன். அதனாலேயே இங்கும் அப்பதத்தைப்பாவிக்கின்றேன்.

அந்த வரிசையில் அண்மைக்காலமாக முகநூலில் அதிகம் சந்திக்கக்கூடியவர்களிலொருவராக எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களையும் குறிப்பிடலாம். இன்னுமொருவர் எஸ்.எல்.எம் ஹனீபா. மேலும் 'அலை' யேசுராசா, மேமன்கவி, வி.ரி.இளங்கோவன் என்று பல ஈழத்து எழுத்தாளர்களைக்குறிப்பிடலாம். இவர்களைப்போன்றவர்களுடனெல்லாம் கருத்துகள் பரிமாறுவதைச் சாத்தியமாக்கியுள்ளது முகநூல்.  மேலும் பல்வேறு நாடுகளிலும் வாழும் பல்வேறு தலைமுறைகளைச்சேர்ந்த எழுத்தாளர்கள் சந்திக்குமோரிடமாக விளங்குகின்றது முகநூல். இது முகநூலின் முக்கியமான பயன்களிலொன்று. இவற்றை மூத்த எழுத்தாளர்கள் எல்லாரும் விளங்கியுள்ளார்கள் என்பதற்கில்லை. ஆனால் அவ்விதம் விளங்கிய சிலர் , இவ்விதமான சமூக ஊடகங்களை ஆக்கபூர்வமாகப்பாவிக்கின்றார்கள். இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானது.

எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான 'மக்கத்துச்சாலை'யினி 'நூலகம்' தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.noolaham.net/project/01/90/90.htm

நந்தினி சேவியர் அவர்களின் 'அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்' சிறுகதைத்தொகுப்பினையும் 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான முகவரி: http://noolaham.net/project/03/230/230.pdf'

'அலை' யேசுராசா அவர்களை அவரது எழுத்தினூடு அறிந்திருக்கின்றேன். அவருடனான கருத்துப் பரிமாறல்களைச் சாத்தியமாக்கியுள்ளது முகநூல். பதிவுகள் இடுவதுடன், அவ்வப்போது ஏனைய பதிவுகளுக்குத் தன் கருத்துகளையும் தெரிவிக்கத்தயங்காதவர் இவர்.

Last Updated on Sunday, 21 February 2016 18:11 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 154: இலக்கியத்தில் தடம் பதித்துவரும் சகோதரிகள் இருவர்!

E-mail Print PDF

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் (புகலிடம் இலக்கியத்தையும் உள்ளடக்கி)  தடம் பதித்துvவரும் பெண் எழுத்தாளர்களில் இருவர் சகோதரிகள். ஒருவர் சந்திரா ரவீந்திரன். மற்றவர் சந்திரவதனா செல்வகுமாரன். நீண்ட நாள்களாக சந்திரா ரவீந்திரன், சந்திரா தியாகராஜா, சந்திரவதனா செல்வகுமாரன் ஆகிய மூவரும் சகோதரிகள் என்று நினைத்திருந்தேன். இவர்களில் சந்திரா தியாகராஜாவே மூத்தவராக இருக்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது சந்திரா தியாகராஜாவும், சந்திரா ரவீந்திரனும் ஒருவரே என்பது. சந்திரா தியாகராஜா எண்பதுகளிலிருந்தே ஈழத்துத் தமிழ் வெகுசன ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட ஒருவராக விளங்கியவர் என்பதாலேயே அவ்விதம் எண்ணியிருந்தேன்.

தற்போது சந்திரா ரவீந்திரனாக அறியப்படும் இவரது 'நிலவுக்குத்தெரியும்' சிறுகதைத்தொகுதி அண்மையில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாகத்தமிழகத்தில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவர் சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதிய காலகட்டத்தில் வெளியான 'நிழல்கள்' சிறுகதைத்தொகுப்பு பருத்தித்துறையில் யதார்த்தா வெளியீடாக 1988இல் வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் சிரித்திரனில் பரிசு பெற்ற இவரது சிறுகதைகளும், யாழ் இலக்கிய வட்டம் / வீரகேசரி இணைந்து நடாத்திய குறுநாவல் போட்டியில் (1984 / 1985) இரண்டாம் பரிசு பெற்ற 'நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்' என்னும் குறுநாவலும் அடங்கியுள்ளன.

'நிழல்கள்' என்னும் இத்தொகுப்பினை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தொடுப்பு: http://noolaham.net/project/45/4435/4435.pdf

சகோதரிகள் இருவரும் தொடர்ச்சியாக ஆற்றி வரும் இலக்கியப்பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சந்திரவதனா செல்வகுமாரனும் 1975 தொடக்கம் எழுதி வருகின்றார். இருவருமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகவே தம் இலக்கிய வாழ்வினைத்தொடங்கியவர்கள் என்பதை இவர்களைப்பற்றிய விக்கிபீடியாத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

Last Updated on Thursday, 11 February 2016 20:29 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 153 :இலங்கைத் தமிழ்ப்பொப் இசையும், நித்தி கனகரத்தினமும்!

E-mail Print PDF

நித்தி கனகரத்தினம் இளமையில்நித்தி கனகரத்தினம்இலங்கைத்தமிழ்ப்பொப் இசையென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவர் நித்தி கனகரத்தினம்தான். அமரர் கமலநாதன் எழுதிய 'சின்ன மாமியே!' பாடல் மூலம், அதனைப் பாடி, அதனை பட்டி தொட்டியெங்கும் அறிய வைத்து, அதன் காரணமாகவே  இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நித்தி கனகரத்தினம். நான் முதலில் கேட்ட ஈழத்துப்பாடல் 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடல்தான்.

நித்தி கனகரத்தினம் பாடிய மூன்று பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை என்பேன். 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' , 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே! உன் காலைப்பிடித்துக்கெஞ்சுகிறேன்.' மற்றும் 'லண்டனிலை மாப்பிள்ளையாம் பெண்ணு கேட்கிறாங்க' ஆகிய பாடல்கள்தாம் அவை.

தனித்துவம் மிக்க இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் வளர்ச்சிக்கு, இலங்கைத்தமிழரின் யாழ்ப்பாணத் தமிழ்ச்சொற்கள் அடங்கிய இவர் பாடிய பொப் இசைப்பாடல்கள்  முக்கிய பங்காற்றியுள்ளன. 'ஊர் சுழலும்   பொடியளெல்லாம்', ' ஏனணை மாமி', 'இஞ்சினியர் என்று சொல்லி புளுகித்தள்ளினாராம்' போன்ற சொற்பிரயோகங்கள் மேற்படிப்பாடல்களுக்குச் சுவை சேர்ப்பவை.

இலங்கைத்தமிழ்ப்பொப் இசைக்குப் பலர் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் முன்னணியில் நிற்பவர் நித்தி கனகரத்தினம் என்பேன். அதற்குக் காரணமாகப் பொப் இசைப்பாடல்களுக்கேற்ற அவரது குரல், துடிப்பான இசை, பாடல் வரிகளில் விரவிக்கிடக்கும் நகைச்சுவை ஆகியவற்றையே  குறிப்பிடுவேன்.

Last Updated on Thursday, 11 February 2016 21:16 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 152 : 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடலுக்குச் சொந்தக்காரர் யார்?

E-mail Print PDF

நித்தி கனகரத்தினம் , கமலநாதன்அண்மையில் மறைந்த கமலநாதன்தான் 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?' பாடலை இயற்றிய விடயமே பலருக்கும் அவரது மறைவுக்குப்பின்னர்தான் தெரிய வந்து வியப்பினை ஏற்படுத்தியது. பலரும் இதனை நித்தி கனகரத்தினமே எழுதியதாக நினைத்திருந்தார்கள். நானும் அவ்விதமே எண்ணியிருந்தேன். இது பற்றி வானொலி நிலையமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில் நித்தி கனகரத்தினம் அளித்த விளக்கத்தில் தனக்கு இப்பாடலை எழுதியவர் கமலநாதனே என்ற விடயம் 2001இல் தான் தெரிய வந்தது என்று கூறியிருக்கின்றார். அதே சமயம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான பாடலுக்கு அவரைக்குறிப்பிடுவதுபோல், இந்தப்பாடலையும் தான் இசைமைத்து, மெருகூட்டிப்பாடிப் புகழடைய வைத்ததால் தனக்குத்தான் அந்தப்பெருமை இருக்க வேண்டும் என்னும் கருத்துப்படக் கருத்தொன்றினையும் உதிர்த்துள்ளார். அந்த வானொலி நேர்காணலுக்கான இணைப்பினை எழுத்தாளர் முருகபூபதி மின்னஞ்சல் மூலம் அறியத்தந்திருந்தார். நன்றி திரு. முருகபூபதி அவர்களுக்கு.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/chinna-maamiye-controversy

ஒரு பாடலின் இசைக்கு இளையராஜா பொறுப்பாக இருந்தாலும், அதற்குரிய பாடலை எழுதியவரின் பெயரை அவர் மறைப்பதில்லையே. அது போல் இந்தச் 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடலை இசையமைத்துப்பாடிப் புகழடைய வைத்தவர் நித்தி என்றாலும், அப்பாடலை எழுதிய பாடலாசிரியரான அமரர் கமலநாதனின் பெயர்  உரிய முறையில் குறிப்பிடப்பட்டுக் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

2001ஆம் ஆண்டிலிருந்து நித்தி கனகரத்தினத்துக்குத் தெரிந்திருப்பதால், அதன் பிறகு நடைபெற்ற நித்தியின் நிகழ்ச்சிகள் , நேர்காணல்கள் எல்லாவற்றிலும் பாடலாசிரியர் கமலநாதனின் பெயர் குறிப்பிடப்பட்டு , நிகழ்ச்சிகளில் உரிய முறையில் விளக்கமளிக்கப்பட்டு, . அவருக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Last Updated on Sunday, 07 February 2016 22:41 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 151 : ஜும்பா லாகிரியின் 'திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது'!

E-mail Print PDF

ஜும்பா லாகிரியின் 'திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது'

Jhumpa Lahiri'Interpreters Of Maladies.' சிறுகதைத்தொகுதிகாகப் புலியட்சர் விருதினைப் பெற்றவர் ஜும்பா லாகிரி. இவரது எழுத்து நடை, கதைப்பின்னல் ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் சுவையாக, வாசிப்பவர் நெஞ்சினை அள்ளும் வகையில் அமைந்திருக்கும் இவரது எழுத்து நடை.

இவரது மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதையொன்று அன்றிலிருந்து இன்று வரை மனதில் பசுமையாகவுள்ளது. அது மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதைகளிலொன்றான 'திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது' (When Mr.Pirzada Came to Dine.) என்னும் சிறுகதை  திரு.பிர்ஷடா கிழக்குப் பாகிஸ்தானைச்சேர்ந்தவர். பாகிஸ்தான் அரசின் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா வந்திருப்பவர். அவரது குடும்பத்தினர் டாக்காவிலுள்ள அவரது மூன்று மாடி வீட்டில் வசித்து வருகின்றார்கள், அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உயிரியலில் விரிவுரையாளராக இருப்பவர். திருமணமாகி இருபது வருடங்களாக அவருக்கு ஆறிலிருந்து பதினாறு வரை வயதினரான ஏழு பெண் குழந்தைகள். எல்லாருடைய பெயரும் A என்னும் முதல் எழுத்தில் ஆரம்பமாகும்.

திரு.பிர்ஷ்டா அமெரிக்காவிலிருக்கும் சமயம் பாகிஸ்தான், சுயாட்சி கேட்டுப்போராடிய கிழக்குப் பாகிஸ்தான் மீது அடக்குமுறைகளைக்கட்டவிழ்த்து விடுகிறது. இக்காலகட்டத்தில் கிழக்குப்பாகிஸ்தானில் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகின்றனர். இக்காலகட்டத்தில் நடைபெறும் கதைக்களத்தைக்கொண்ட கதை 'திரு.பிர்ஷ்டா உணவருந்த வந்தபோது.'

Last Updated on Sunday, 07 February 2016 20:04 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 150: ரகுமான் ஜானுடன் ஒரு சந்திப்பு!

E-mail Print PDF

ரகுமான் ஜான்கடந்த ஞாயிறு அன்று மாலை ரகுமான் ஜானுடன் நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. காலத்தின் கோலத்துடன் பலர் காணாமல் போய் விடுவதைத்தான் பொதுவாகப் பார்த்திருக்கின்றோம். ஒரு சிலர்தாம் தம் சிந்தனையில் தெளிவு மிக்கவர்களாக , சிந்தனையில் பரிணாம வளர்ச்சி பெற்றவர்களாக , எப்பொழுதும் கற்றலை விடாது கடைப்பிடிப்பவர்களாக இருப்பதைப்பார்த்திருக்கின்றோம். அவர்களில் ஒருவர்தான் ரகுமான் ஜான்.

ஈழத்தமிழர்களின் வரலாறு பற்றிய விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டியதன் அவசியம் பற்றி ரகுமான் ஜான் ஆர்வமுள்ளவராகவிருக்கிறார். இதற்காக அவ்வப்போது பல்வேறு வழிகளில் , கடந்த காலங்களில் தான் எடுத்த முயற்சிகள் பற்றி உரையாடலில் எடுத்துரைத்தார். இன்றும் அதே ஆர்வத்துடன் தமிழர் வரலாறு முறையாக , ஆய்வுக்கண்ணோட்டத்தில் எழுதப்பட வேண்டியது அவசியம் என்னும் கண்ணோட்டத்தில் இருக்கிறார் ஜான். குறிப்பாக ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாறு உட்பட ஈழத்தமிழர்களின் வரலாறு முறையாக எழுதப்பட வேண்டியது அவசியம் என்னும் அவரது கொள்கையுடன் எனக்கும் உடன்பாடே. ஆயுதப்போராட்டத்தின் அடிப்படைக்காரணிகள், போராட்ட அமைப்புகள் பற்றிய விபரங்கள், அமைப்புகளுக்கிடையில் நிலவிய அக / புற முரண்பாடுகளும், மோதல்களும், அமைப்புகளின் அரசியல் மற்றும் போராட்டச்செயற்பாடுகள் எனப்பல்வேறு விபரங்களையும் உள்ளடக்கியதாக அவ்வரலாற்று நூல் அமைய வேண்டும். மேலும் ஈழத்தமிழர் வரலாறு பற்றிய நூல்கள், ஆவணங்களைச்சேகரித்துக்கொண்டிருக்கின்றார் ரகுமான் ஜான்.
Last Updated on Thursday, 04 February 2016 21:50 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 149 :'சைபர் வெளி'யில் அமரர் வெங்கட் சாமிநாதனுடன் சில கணங்கள்......

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -'கட்டோடு குழலாட ஆட' என்ற இந்தப்பாடல் 'பெரிய இடத்துப்பெண்' என்னும் திரைப்படத்திலுள்ள பாடல். ஜோதிலட்சுமி, மணிமாலா , எம்ஜிஆர் ஆகியோரின் நடிப்பில் வெளியான பாடல். இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. ஆனால் தற்போது இந்தப்பாடல் இன்னுமொரு காரணத்துக்காகவும் பிடித்துப்போனது. அதற்குக் காரணம் அண்மையில் மறைந்த அமரர் வெங்கட் சாமிநாதன். இன்று இந்தப்பாடலைக்கேட்கும் சமயங்களில் திரு.வெங்கட் சாமிநாதனின் நினைவும் கூடவே தோன்றி விடுகின்றது.

திரு. வெங்கட் சாமிநாதன் என் முகநூலில் நண்பர்களிலொருவராக இருந்தாலும் முகநூலில் நான் அவரது பதிவுகளைக்காண்பதில்லை. என்னுடன் தொடர்புகொள்வதென்றால் மின்னஞ்சல் மூலம்தான் அவர் தொடர்பு கொள்வார். ஆனால் இந்தப்பாடலுக்கு மட்டும் அவர் தற்செயலாக இதனைப்பார்த்துவிட்டுத் தம் கருத்தினைத்தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துப்பரிமாறல்களையும் , அந்தப்பாடலையும் மீண்டுமொருமுறை 'பதிவுகள்' வாசகர்களுடன்  அவர் ஞாபகார்த்தமாகப்பகிர்ந்து கொள்கின்றேன்.

Venkat Swaminathan இது எப்படி? இப்போது தான் தற்செயலாக எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடக்கும் உங்கள் பதிவை. எல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்களாக இருக்கின்றனவே என்று ஆச்சரியப்பட்டு. ஒன்றைப் போட்டுப் பார்த்தேன். கட்டோடு குழல் ஆட பாட்டு அது. மிக நன்றாக இனிமையாக இருக்கிறது. இதையெல்லாம் எப்படி ஒன்று சேர்த்து வைத்திருக்கிறீர்கள் எம்ஜிஆர் ரசிகரா நீங்கள்? அல்லது அப்பழங்கால சினிமாப் பாட்டுக்களின் ரசிகரா? எம்ஜிஆர் பாட்டுக்களாக ஒன்று சேர்க்க எப்படித் தோன்றியது? எப்படியிருந்தாலும் ஒரு வித்தியாசமான தேடலுக்கு நன்றி. சந்தோஷமாக இருக்கிறது.

Last Updated on Thursday, 04 February 2016 21:51 Read more...
 

சிறுகதை: மணல் வீடுகள்!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....என் ஆரம்ப காலத்துச்சிறுகதைகளிலொன்று 'மணல் வீடுகள்'.  19.06.1977 வெளியான ஈழநாடு வாரமலரில் பிரசுரமான சிறுகதையிது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் (G.C.E - Advanced Leval) படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு வாரமலரில் அக்காலகட்டத்தில் வெளியான எனது நான்கு சிறுகதைகளில் 'மணல் வீடுகள்' சிறுகதையுமொன்று. தமிழக வெகுசன ஊடகங்களின் ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடந்த பருவத்தின் பாதிப்பை இச்சிறுகதையில் நீங்கள் அவதானிக்கலாம். அந்த வயதுக்குரிய உணர்வுக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்தும் சிறுகதை. மல்லிகையில் வெளியான ஈழநாடுச்சிறுகதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் செங்கை ஆழியான் அவர்கள் (முனைவர் க.குணராசா) ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவராக என்னைக்குறிப்பிட்டு, இச்சிறுகதையினையும் குறிப்பிட்டிருப்பார். ஒரு பதிவுக்காக இச்சிறுகதையினை இங்கு பதிவு செய்கின்றேன்.

Last Updated on Tuesday, 02 February 2016 19:19 Read more...
 

தேவன் (யாழ்ப்பாணம்)!

E-mail Print PDF

தேவன் (யாழ்ப்பாணம்)![ யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தின் வருடாந்தக் கலைவிழாவான 'கலையரசி 2015' நிகழ்வினையொட்டி வெளியான 'கலையரசி' மலரில் வெளியான தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய சுருக்கமான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். - வ.ந.கி]

ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றில் யாழ் இந்துக்கல்லூரியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் வரை பலர் ஈழத்துத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். இது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியின் ஆசிரியரான தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு பற்றிச் சுருக்கமாக ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

தேவன் - யாழ்ப்பாணம் மிகச் சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசும் ஆற்றல் வாய்த்தவர். இதனால் அன்றைய காலகட்டத்தில் யாழ்நகரில் நடைபெற்ற கலை, இலக்கிய நிகழ்வுகளில் , அந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பிரதான தொகுப்பாளராக அப்பொழுது அவர் அனைவராலும் அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

இது தவிர தேவன் - யாழ்ப்பாணம் என்றால் உடனே ஞாபகம் வருவது அவரது புகழ்பெற்ற 'ஸ்கோடா' (Skoda) மோட்டார் வாகனமாகும். அதன் காரணமாக அன்றைய காலகட்டத்து மாணவர்களால் அவர் 'ஸ்கோடா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டதும் நினைவுக்கு வருகின்றது. அந்தக் கண்ணாடி அணிந்த முகமும், அந்த 'ஸ்கோடா' மோட்டார் வாகனமும் இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் 1924இல் பிறந்த இளையப்பா மகாதேவன் தன் புனைபெயராக தேவன் என்று வைத்துக் கொண்டார். தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் முதலாவது நினைவு மலரில் தேரடியான் என்னும் பெயரில் தேவன் அவர்களின் தமையனாரான இளையப்பா தர்மலிங்கம் அவர்கள் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றார். அது  தேவன் அவர்களின் பெயருக்கான காரணங்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை வழங்குகின்றது. [இது பற்றிய தகவல்களை வழங்கிய என் முகநூல் நண்பர்களில் ஒருவராகிய திருமலை மூர்த்தி அவர்களுக்கு நன்றி.]

Last Updated on Monday, 01 February 2016 06:44 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று - ' நித்திய வாழ்வு காணலாம்'

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று - ' நித்திய வாழ்வு காணலாம்'அண்மையில், வாசித்த அறிவியல் கட்டுரைகளில் என் கவனத்தை ஈர்த்த கட்டுரைகளிலொன்று யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவரும், பொறியியலாளருமான திரு. ப. தயாநிதி , சென்ற வருடம் யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தினரால் , யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டினை சிறப்பிக்குமுகமாக நடாத்திய 'கலையரசி' நிகழ்வு மலரில் எழுதிய 'இன்னும் சில தசாப்த காலத்திற்கு வாழ்வீர்களாயின் நித்திய வாழ்வு காணலாம் (Live long enough to live for ever) என்னும் கட்டுரைதான் அது.

தானியங்கியியல் (Robotics), நனோ தொழில் நுட்பம் (nano thechnology) மற்றும் மரபுப்பொறியியல் (Genetic engineering) ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்த அடுத்த கட்ட அறிவியல் வளர்ச்சியே இவ்விதம் மானுடர் நீண்ட காலம் அல்லது நித்திய வாழ்வு வாழ்வதற்குரிய சாத்தியத்தைக்கொண்டு வந்துள்ளதை , அழகு தமிழில் , தர்க்கச்சிறப்புடன் விபரிக்கின்றது தயாநிதியின் இந்தக்கட்டுரை.

நனோ தொழில் நுட்பத்தினைப்பாவித்து மானுடரின் கண்களுக்குப்புலப்படாத 'நுண் தானியங்கி' (nanobot) எனப்படும் தானியங்கியை  (robot) உருவாக்க முடியும். இந்த 'நுண்தாங்கிகளை' வைரஸ்கள், பக்ரீயியாக்களைப்போல் தம்மைத்தாமே பிரதியெடுத்துப் பெருகும் வகையில் உருவாக்க முடியும். இதன் மூலம் இவ்விதமான 'நுண் தாங்கிகள்' கொண்டு பல்வேறு நோய்களை உருவாக்கும் வைரஸ்களை, பக்ரீறியாக்களை மற்றும் புற்று நோய்க்கலங்களை அடையாளம் கண்டு அழிக்க முடியுமென்பதை, பல்வேறு நோய்களுக்குக் காரணமான மரபணுக்களைச்சரி செய்ய முடியுமென்பதை எளிமையாக விபரிக்கின்றது மேற்படி கட்டுரை.

அத்துடன் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகளுக்குப் பதிலாக , அவற்றின் வேலைகளைச்செய்வதற்கு இவ்வகையான நுண்தாங்கிகளை இரத்தத்துக்குப் பதிலாகப்பாவிக்கக்கூடிய நிலையும் உருவாகுமென்றும் கட்டுரை விபரிக்கின்றது.

அத்துடன் கட்டுரை கூறும் இன்னுமொரு விடயமும் என் கவனத்தைக்கவர்ந்தது. அது மானுடர் செய்யும் வேலைகள் அனைத்தையும் தானியங்கிகள் செய்வதால், தற்போது நிலவும் பொருளாதார நிலை முற்றாக அழிந்து, எல்லாருக்கும் எல்லாப்பொருள்களும், சேவைகளும் கிடைக்க வழி பிறக்குமாம்.

Last Updated on Sunday, 31 January 2016 07:36 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் தனது முகநூல் பதிவொன்றில் விமர்சனம் பற்றிக்குறிப்பிடும்பொழுது குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தைக்கவர்ந்தது. அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: "டானியல் யார் ..அவரது கொள்கை என்ன என்பது உங்களுக்குத் தெரியும் வீரகேசரி நிறுவனம் யாருடையது என்றும் உங்களுக்குத்தெரியும்..... அந்த நிறுவனம் டானியலின் நாவலை வெளியிடுகிற தென்றால் ஒன்று வீரகேசரி டானியல் பக்கம் மாறி இருக்கவேண்டும் அல்லது டானியல் வீரகேசரியின் பக்கம் மாறி இருக்கவேண்டும்.. இதில் யார் யார் பக்கம் மாறியுள்ளார்கள் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்றேன். கூட்டம் நிசப்தமாக இருந்தது."

இருவருமே ஒருவர் ஒருவர் பக்கம் மாறியிருக்க வேண்டுமென்று எந்தவிதக் கட்டாயமுமில்லை. டானியலுக்குத் தன் படைப்பு பல வாசகர்களிடம் செல்ல வேண்டும். வீரகேசரி நிறுவனத்துக்கு எந்தவொரு படைப்பும் இலாபம் ஈட்டி வருமானத்தைத்தர வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் பாவித்துக்கொள்கின்றார்கள். ஆனால் டானியல் வீரகேசரி நிறுவனத்துக்காகத் தன் படைப்பின் உள்ளடக்கத்தை அல்லது வரிகளை மாற்றிச் சமரசம் செய்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

எவ்வளவோ நல்ல மார்க்சிய நூல்களை மேற்கு நாடுகளின். இலாபம் ஈட்டிச் சம்பாதிப்பதையே அடிப்படையாகக்கொண்ட பதிப்பகங்கள் பல வெளியிட்டுள்ளன. மார்க்சின் மூலதனம், மார்க்சின் வரலாறு போன்றவற்றையெல்லாம் , கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எல்லாவற்றையும் அவை வெளியிட்டுள்ளன. அதற்காக அந்நிறுவனங்கள் எல்லாம் மார்க்சியத்தத்துவத்துக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுவிட்டன என்று கூற முடியுமா?

Last Updated on Friday, 29 January 2016 21:56 Read more...
 

இலங்கை அரசியல்: இலங்கையின் மிகவும் மோசமான தலைவர்கள் இருவர்!

E-mail Print PDF

'தம்மிஷ்ட்டர்' ஜே.ஆர்.ஜெயவர்த்தனே.மகிந்த ராஜபக்சஇலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில், இலங்கையின் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களில் மிகவும் கீழ்த்தரமான அல்லது மோசமான தலைவர்களாக நான் கருதும் இருவர்:

1. ஜே.ஆர்.ஜெயவர்த்தனே
2. மகிந்த ராஜபக்ச


ஏன் ஜே,ஆர்?

1. ஜே.ஆர். ஐம்பதுகளின் இறுதியில் கண்டிக்குப்பாத யாத்திரை சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக்கிழிக்கக் காரணமாகவிருந்தவர்.

2. 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும், நடைபெற்ற இனக்கலவரத்தின் போது 'போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்' என்று முழங்கிக் கலவரத்தைப்பற்றியெரிய வைத்தவர்.

3. 'தர்மிஷ்ட்டர்' என்று தன்னை அழைத்துக்கொள்வதை விரும்பும் இவர் தம்மிஷ்ட்டராகி, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகத்தன்னைப்பிரகடனப்படுத்தி, தன் ஆட்சிக்காலத்தை அதிகரித்தவர்.

4. சிறிலங்காவின் முதலாவது ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர். தன் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தன் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் பலரின் ஆதரவுடன் ( குறிப்பாக சிறில் மத்தியூ வெளிப்படையாகவே தமிழர்களுக்கெதிராக இனவாதத்தை நிகழ்த்தி வந்தார்) தமிழர்களுக்கெதிராக மிகப்பெரிய இனக்கலவரத்தை 1983இல் ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கெதிரான தமிழர்களின் ஆயுதப்போராட்டம் சர்வதேசப்பரிமாணங்கள் பெற்று வெடிக்கக்காரணமாகவிருந்தவர்.

Last Updated on Friday, 29 January 2016 23:02 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 146 : சரத்சந்திரரின் தேவதாஸ் பற்றி...

E-mail Print PDF

சரத்சந்திரரின் தேவதாஸ்சரத்சந்திரர்அண்மையில் மறைந்த எழுத்தாளரும், பிரபல மொழிபெயர்ப்பாளருமான சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில்  வெளியான வங்க நாவல்கள் அல்லது படைப்புகள் எதனையாவது எங்கு கண்டாலும் எடுத்து வாசிக்கத்தவறுவதேயில்லை. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான வங்க நாவலான 'நீல கண்டப்பறவையைத்தேடி ' வாசித்ததிலிருந்து ஆரம்பித்த என் விருப்பங்களில் இதுவுமொன்று. மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில் அற்புதமாக விளங்குபவை இவரது மொழிபெயர்ப்புகள். அதுவே இவரது மொழிபெயர்ப்பின் சிறப்பும் கூட.

இவரைப்போல் இன்னுமொருவர் ஞாபகமும் கூட வருகிறது. எழுபதுகளில் என் மாணவப்பருவத்தில் கா.ஶ்ரீ.ஶ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபல மராட்டிய நாவலாசிரியரான காண்டேகரின் படைப்புகளை ஒரு வித வெறியுடன் தேடிப்பிடித்து வாசித்திருக்கின்றேன். காண்டேகரின் நாவல்களில் வரும் 'வாழ்க்கையென்றால் புயல்' போன்ற வசனங்களை விரும்பி வாசித்த அப்பருவத்து நினைவுகள் இப்பொழுதும் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

அண்மையில் டொராண்டோவிலுள்ள பொதுசன நூலகத்தின் ஸ்கார்பரோ கிளையொன்றில் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான தேவதாஸ் நாவலின் பிரதியொன்றைக்கண்டபோது , அம்மொழிபெயர்ப்பு சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான காரணத்தினால் எடுத்து வாசிக்க விரும்பி இரவல் பெற்று வந்தேன். , 'நல்லநிலம்' பதிப்பக வெளியீடாக வெளீவந்த பிரதி இது.  தேவதாஸ் நாவலை எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான த.நா.குமாரசாமியும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பினை நானின்னும் வாசிக்கவில்லை.

ஏற்கனவே திரைப்படம் மூலம் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான கதை. வாசிப்பதில் அப்படியென்ன பெரிதாக இருக்கப்போகின்றது என்றொரு எண்ணமும் கூட எழுந்தாலும். மொழிபெயர்ப்பாளரின் மேலிருந்த விருப்பு காரணமாக எடுத்து வந்து வாசித்தேன்.

சிறிய நாவல். விரிந்த , ஐந்நூறு பக்கங்களைக்கடந்த பெரிய நாவல்களிலொன்றல்ல. மானுட உளவியல் போராட்டங்களை விரிவாக, பக்கம் பக்கமாக விவரித்துச்சொல்லும் படைப்புமல்ல. எனக்கு அதிகம் பிடித்த இயற்கை வர்ணனைகள் நிறைந்த நாவலுமல்ல. ஆனாலும் வாசித்த பொழுது முக்கியமாக நாவலின் முடிவினை வந்தடைந்த பொழுது நெஞ்சினை அதிர வைத்த படைப்பு சரச்சந்திரரின் தேவதாஸ்.

ஏன் இந்தப்படைப்பு மிகுந்த வரவேற்பினையும், ரோமியோ-யூலியட், லைலா- மஜ்னு , அம்பிகாபதி- அமராவதி வரிசையில் மக்கள் மனதில் நிலையான இடத்தைப்பெற்றது என்று சிந்தனையோடியது.

Last Updated on Wednesday, 27 January 2016 02:28 Read more...
 

இறுதிக்கட்டத்தில் 'குடிவரவாளன்'!

E-mail Print PDF

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

அப்பாடா! ஒரு வழியாக எனது 'குடிவரவாளன்' நாவலை இயலுமானவரையில் பிழை திருத்தி ஓவியா பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். பிழை திருத்துவது போல் மிகவும் சிரமமான காரியம் வேறொன்றுமில்லை என்றே தெரிகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பிழை தப்பிப்பிழைத்து விடும் அதிசயத்தை என்னவென்பது. இந்நூலைத் தமிழகத்தில் வெளியிடும் ஓவியா பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

83 இனக்கலவரத்தைத்தொடர்ந்து அகதியாகப்புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழ் அகதியொருவன் எவ்விதம் சட்டவிரோதக்குடிவரவாளனாக நியூயார்க் மாநகரில் சுமார் ஒரு வருடம் வரையில் இருப்பினை எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கின்றான் என்பதை விபரிக்கும் நாவல் இது.

நாவலின் ஆரம்பத்தில் சில அத்தியாயங்கள் 83 இனக்கலவர நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் அத்தியாயங்களாக இருந்தபோதிலும், நாவல் முழுவதும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ,மண்ணையே கதைக்களமாகக்கொண்டு, அங்குள்ள பல்வகை மாந்தர்களைப்பாத்திரங்களாகவும் கொண்டு நடைபோடுகிறது. அந்த வகையில் முக்கியமானதோர் ஆவணமாகவும் இந்த நாவல் நிச்சயம் விளங்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏற்கனவே எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு, என் மகள் தமயந்தியால் சரி, பிழை பார்க்கப்பட்டு வெளியிடுவதற்குத் தயார் நிலையிலுள்ளது. அதனை மின்னூல் வடிவில் என் வலைப்பதிவான http://vngiritharan23.wordpress.com தளத்தில் வாசிக்கலாம். காலம், நேரம் கூடி வரின் அம்மொழிபெயர்ப்பும் நூலுருப்பெறும்.

விரைவில் 'குடிவரவாளன்' தமிழகத்தில் வெளிவரும். நூல் வெளிவந்ததும் நூல் பற்றிய மேலதிகத்தகவல்களை அறியத்தருவேன். ஓவியா பதிப்பகத்துக்கும் அதன் உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி!

Last Updated on Tuesday, 26 January 2016 06:59 Read more...
 

புலம்பெயர் தமிழர்தம் படைப்புகள் 1: பனியும் பனையும் - புகலிடக்கதைக்களங்களையும், பாத்திரங்களையும் உள்ளடக்கிய புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் புனைகதைகளின் தொகுப்பு. -

E-mail Print PDF

புலம்பெயர் தமிழர்தம் படைப்புகள் 1: பனியும் பனையும் - புகலிடக்கதைகளளங்களையும், பாத்திரங்களையும் உள்ளடக்கிய புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் புனைகதைகளின் தொகுப்பு. - வ.ந.கிரிதரன் - வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....இத்தொகுப்பிலுள்ள 39 கதைகளைப்பற்றியும் சுருக்கமான குறிப்புகளை அவ்வப்போது  பதிவு செய்யப்போகின்றேன். 1994இல் வெளியான இத்தொகுதி பற்றிய முழுமையானதொரு ஆய்வுக்கட்டுரைக்கு முதற்படியாக இவ்விதம் செய்வது பயனுள்ளது என்பது என் கருத்து. இது போல் தொடர்ந்தும் வாசிக்கவுள்ள அனைத்துப் புகலிடத்தமிழ்க் கதைகள் பற்றிய குறிப்புகளையும் அவ்வப்போது பதிவு செய்வேன். காரணம்: புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்தவர்களின் கதைகள் புகலிடக் கதைகளங்களை உள்ளடக்கியுள்ளனவா அல்லது இழந்த மண் மீதான கழிவிரக்கங்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றனவா என்பதை அறியும் பொருட்டுத்தான். தொடர்புகள் காரணமாகத் தமக்குக் கிடைக்கும் புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் ஒரு சில கதைகளை மட்டும் படித்துவிட்டுப் புலம்பெயர் தமிழர் படைப்புகள் புகலிடக் கதைக்களங்களை, பாத்திரங்களை வெளிப்படுத்தவில்லை என்று கிளிப்பிள்ளைபோல் கூறிவரும் கூற்றுகளில் எவ்வளவு உண்மையுள்ளது என்பதை ஆராய்வதும் இவ்விதமான என் பதிவுகளுக்கு முக்கிய காரணங்களிலொன்றாகும்.

கதை ஒன்று:  'பனியும், பனையும்" தொகுப்பில் முதற் தொகுதிக்கதைகள் அவுஸ்திரேலியக் கதைகள். மொத்தம்: ஒன்பது. முதலாவது கதையின் தலைப்பு: ...பனையும். எழுதியவர்: சந்திரிகா ரஞ்சன். அச்சிறுகதை பற்றிச்சிறிது பார்ப்போம்:

'பனியும், பனையும்': ஆஸ்திரேலியாக் கதைகள் 1- சந்திரிகா ரஞ்சனின் '...பனையும்'.

இந்தக்கதை கூறும் பொருள்தானென்ன? நிறுவனமொன்றில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கும் இலங்கைத்தமிழர் ஒருவரின் பார்வையில் கதை கூறப்படுகிறது. கதை சொல்லி தன்னைப்பற்றிக் கதையின் தொடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:

Last Updated on Saturday, 23 January 2016 23:51 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 145: புகலிடப்படைப்புகளைப்பற்றி...

E-mail Print PDF

 வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....'எதுவரை' இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணலொன்று  வெளியாகியுள்ளது. அதனைக்கண்டவர் எழுத்தாளர் கோமகன். அந்நேர்காணலில் ஒரு கேள்வி. அது:

"புலம் பெயர் இலக்கிய சூழலில் இருந்து வெளியாகின்ற படைப்புகளில் ஒரு சிலதைத்தவிர அநேகமான படைப்புகள் மலரும் நினைவுகளையொத்த படைப்புகளாகவே வெளிவருகின்றன. இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது ?"

இவ்விதமான கேள்விகளை எதிர்கொள்ளும்போதுகளில் நான் எனக்குள் சிரித்துக்கொள்வதுண்டு. இந்தக்கேள்வியில் கூறப்பட்டிருப்பதுபோல்தான் உண்மையான நிலை உள்ளதா? 'இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது' என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது. இவ்விதமான கேள்விகளுக்கு முக்கிய காரணம்: இவ்விதமான கேள்விகளைக்கேட்பவர்கள் குறிப்பிட்ட சிலரின் படைப்புகளையே முக்கியமான , தரமான படைப்புகளாகக்கருதிக்கொண்டு, அவர்களது படைப்புகளை மட்டுமே படிப்பார்கள். அவ்விதம் படிப்பதால் , இவர்களால் ஏனைய படைப்பாளிகள் பலரின் படைப்புகளைப்படிக்க முடிவதில்லை என்றெண்ணுகின்றேன். உண்மையில் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பல புலம் பெயர் கதைக்களங்களையும், மாந்தர்களையும் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.

புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத்தாங்கி வெளியான தொகுப்புகளில் முதலாவதும், முக்கியத்துவம் பெற்றதுமான தொகுப்பு: 'பனியும், பனையும்' அதிலுள்ள கதைகளை ஒருமுறை இந்த நேர்காணலைக்கண்ட கோமகன் வாசித்துப் பார்த்தால் தெரியும் அவற்றில் எவ்வளவு கதைகள் புகலிடச்சூழலைக் கதைக்களங்களாக்கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றன என்று.

Last Updated on Friday, 22 January 2016 02:33 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்....; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....;'பனியும், பனையும்' தொகுப்பு பற்றி...

E-mail Print PDF

பழைய புத்தக விற்பனையில்.....

 வாசிப்பும், யோசிப்பும் 144 : பழைய புத்தக விற்பனையில்.....; புகலிடப்படைப்புகளைப்பற்றி...; "யாதும் ஊரே! யாவரும் கேளீர்!" ;முகநூல் பதிவுகள் பற்றி....எனக்கொரு பழக்கமுள்ளது. அது எங்காவது பாவித்த பழைய புத்தகங்கள் விற்பனைக்குப் போட்டிருந்தால் , அவற்றில் பிடித்த புத்தகங்களை வாங்குவதுதான். இங்குள்ள கிளை நூலகங்களுக்கு ஒரு பழக்கமுள்ளது. நல்ல தரமான புத்தகங்களைக்கூட, அவை அதிகம் பாவிக்கப்படாமலிருந்தால் விற்பனைக்குப்போட்டு விடுவார்கள். ஏன் அவற்றைப் பிற கிளைகளுக்கு அனுப்பக்கூடாது? எனென்றால் நல்ல நிலையிலுள்ள பல புத்தகங்களை இவ்விதம் விற்பனைக்குப்போட்டிருப்பதைப்பல தடவைகள் பார்த்திருக்கின்றேன்.

நேற்றும் ஸ்கார்பரோவிலுள்ள ஏஜின்கோர்ட் கிளைக்குச் சென்றிருந்தபொழுது அங்கும் புத்தகங்கள் பலவற்றை விற்பனைக்குப் போட்டிருந்தார்கள். அவற்றிலிருந்து ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் வெளியான உலகச்சிறுகதைத்தொகுப்பொன்றையும், க.நா.சு மொழிபெயர்ப்பில் வெளியான Animal Farm நூலின் தமிழ் மொழிபெயர்ப்பினையும் வாங்கினேன். ஒவ்வொன்றும் விலை ஒரு டாலர்தான். அம்ருத பதிப்பக வெளியீடாக வெளிவந்த நூல் 'மிருகங்களின் பண்ணை'. நூலின் அட்டையில் 'மிருகங்களின் பண்ணை' என்று தலைப்பினையிட்டிருந்தவர்கள், நூலின் உள்ளே 'மிருகங்கள் பண்ணை' என்று குறிப்பிடிருக்கின்றார்கள்.

அங்கிருந்த மேலுமொரு தமிழ்ப்புத்தகமும் என் கவனத்தைக்கவர்ந்தது. அது அமெரிக்காவில் வாழும் பெண் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத்தொகுப்பு. ஏற்கனவே அவரது படைப்புகளை வாசித்திருக்கின்றேன். அந்தத்தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டிப்பார்த்தேன். நூலின் உள்ளே, முதல் பக்கத்தில் முத்து முத்தான எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த ஒரு விடயம் என் கவனத்தை ஈர்த்தது. அந்த நூலின் ஆசிரியரே அதிலிருந்த குறிப்பினை எழுதியிருந்தார். அந்தக் குறிப்பிலிருந்து ஒரு விடயத்தை அறிய முடிந்தது. அந்த நூலினை அவர் இங்கு, கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் ஒருவருக்கு அன்பளிப்பாகப் பரிசளித்திருக்கின்றாரென்பதை அக்குறிப்பு வெளிப்படுத்தியது. அந்தக் கனடா எழுத்தாளர் இங்கிருந்து வெளியாகும் சஞ்சிகையொன்றின் ஆசிரியரென்பதும் தெரிந்திருந்தது. அத்துடன் அவரது சஞ்சிகையில் அமெரிக்காவில் வசிக்கும் அந்தப்பெண் எழுத்தாளர் எழுதியிருக்கின்றார் என்பதையும், அதற்காக அவர் கனடா எழுத்தாளருக்கு நன்றி கூறுவதையும் அந்தக் குறிப்பு வெளிப்படுத்தியது.

Last Updated on Friday, 22 January 2016 02:33 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 143 : பரதன் நவரத்தினத்தின் 'மரண தேவன்' முகநூல் பதிவு பற்றி....

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும்!அண்மையில் பரதன் நவரத்தினம் தனது முகநூல் பதிவாக 'மரணதேவன்' என்னும் சிறு கதையொன்றினைப் பதிவு செய்திருந்தார். டொரான்டோ பாதாள இரயிலில் பயணிக்குமோர் இளைஞனை, அந்த இரயில் முன் விழுந்த மரணித்த மானுடர் ஒருவரின் நிலை எவ்விதம் பாதிக்கின்றது என்பதைப்பற்றிய சிறியதொரு விபரிப்பே அக்கதை. கதை சிறியதாக இருந்தாலும் வாசிப்பவரை ஈர்க்கும் தன்மை மிக்கது. மழை பெய்யும் இரவொன்றில் , கடையொன்றில் பணியாற்றும் தொழிலாளி ஒருவர், வீடு திரும்புவதை விபரிக்கும் கதை. அவ்விதம் இரவில் தனியே திரும்பும்போது , நகரத்து இரவில் ஒருவர் அடையும் பயப்பிராந்திகளையும் அழகாக விபரித்திருக்கின்றார். வாசிப்பவரையும் அந்தப்பயப்பிராந்தி பீடித்து விடுவதுதான் அவரது எழுத்தின் சிறப்பு.

மேலும் நல்ல எழுத்து நடை. கூடவே சூழலை அவதானிக்கும் ஆற்றலுடன் கூடிய சம்பவ விபரிப்பு. இவை அனைத்தும் சேர்ந்து நல்லதொரு சிறுகதையாக மலர்ந்திருக்கின்றது. இன்னுமொன்று நகரத்தின் தன்மையினை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள எழுத்து. பகலில் வெறும் கட்டடங்களும், விரையும் மனிதர்களுமாகக்காட்சியளிக்கும் நகரின் இரவு வித்தியாசமானது. விபரிக்கும் வரிகள் சிறக்கின்றன.

'டிராகுலா'த்திரைப்படங்களில் அல்லது அது போன்ற திகிலூட்டும் திரைப்படங்களில் ஒவ்வொரு சிறு சிறு சம்பவத்தையும் பார்வையாளரின் அச்சத்தினைப் படிப்படியாக அதிகரிக்கும் வண்ணம் அமைத்திருப்பார்கள். அது போன்ற எழுத்துப்பாணியினைப் பரதன் இக்கதையில் கையாண்டிருக்கின்றார்.

எழுத்தில் சிறப்புண்டு. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ஒரு பதிவுக்காக அவரது அக்கதையினை இப்பதிவின் இறுதியில் பதிவு செய்திருக்கின்றேன். நீங்களும் ஒருமுறை வாசித்து அந்த இரவில் அவரது கதையின் நாயகன் அடைந்த உணர்வினை நீங்களும் அடையுங்கள்.

Last Updated on Saturday, 16 January 2016 07:50 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 142 : றியாஸ் குரானாவின் தமயந்தி பற்றிய குறிப்பு பற்றி....

E-mail Print PDF

தமயந்திஅண்மையில் றியாஸ் குரானா தமயந்தியின் படைப்புகளைப்பற்றிப்பின்வருமாறு தன் முகநூல் குறிப்பொன்றில் கூறியிருந்தார்:

"சில விசயங்கள் ஆச்சரியமானதுதான். அவ்வப்போது உதிரியாக இதழ்களில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிண்டு கவிதைகளும் அதிலடங்கும். ஆனால், அவர் ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கியமானவர்தான். ஆர்வமூட்டும் கதைசொல்லி. அவருடைய கதைகள், கவிதைகள் தொகுப்பாக்கம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஈழத்து இலக்கிய வெளியில் தொகுப்பாக்கம் செய்வதே பெரும் சவாலான விசயம். சிலர் அதை அவ்வளவாக பொருட்படுத்துவதே இல்லை. "

இங்கு விமர்சகர்கள் என்ற பெயரில் உலா வருபவர்களில் பலர் தம் அங்கீகாரத்துக்காக தம் சிஷ்யகோடிகளாகச்சிலரைத்தூக்கிப் பிடிப்பார்கள். சிஷ்யகோடிகளும் அவர்களைத்தூக்கிப்பிடிப்பார்கள். ஒருவரையொருவர் முதுகு சொறிந்து கொள்வதில் குளிர்காய்வார்கள். இவர்கள் வெளியிடும் தொகுப்புகளும் அவ்விதமாகவே இருப்பதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் யாருக்கும் அடி பணியாத, வளைந்து கொடுக்காதவர்களை இந்த முதுகு சொறியும் கூட்டம் கண்டு கொள்வதில்லை. மேலும் அவர்களும் இவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதில்லை. மேலும் வளைந்து கொடுக்காதவர்களைப்பற்றி அங்கீகாரத்தை நாடுமொரு விமர்சகர்  தூக்கி வைத்து எழுதினாலும், தம்மை அவ்விதம் எழுதி விட்டார்களே என்று வளையாதவர்கள் பதிலுக்கு அவர்களைத்தூக்கி வைப்பதில்லை வழக்கமான சிஷ்யகோடிகளைப்போல். இதனால் அவ்வகை விமர்சகர்களுக்கு எந்தவித ஆதாயமுமில்லை. ஆனால் உண்மையான படைப்பாளிகளை அவர்களது படைப்புகளினூடு தரமான வாசகர்கள் கண்டு கொள்வார்கள். இன்று நீங்கள் கண்டு கொண்டதைப்போல. அவ்விதமான படைப்புகள் கால ஓட்டத்தில் நின்று பிடிக்கும்.

மேலும் இக்காலத்தில்  தொகுப்புகள் வரவில்லையே  என்று குறைபடுபவர்கள் தேடுதலற்றவர்கள். அதிகமான படைப்புகளை இணையத்தில் காண முடியும். தேடினால் இணையத்தில் நிறையவே கிடைக்கிறது. தொகுப்புகள் வந்தால்தான் வாசிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். இணையத்தில் தேடிப்பாருங்கள். கண்டு பிடியுங்கள். வாசியுங்கள். இன்று ப்ரதிலிபி போன்ற தளங்களின் எழுத்தாளர்களின் மின்னூல்கள் வெளியாகின்றன. பல எழுத்தாளர்கள் வலைப்பதிவுகளை வைத்திருக்கின்றார்கள். பலர் இணைய இதழ்களில் எழுதி வருகின்றார்கள். தொகுப்புகளில் வரும் படைப்புகளை விடப்பல மடங்கு அதிகமான படைப்புகளை இணையத்தில் தேடுதல் மிக்க ஆய்வாளர் ஒருவரால் கண்டு பிடிக்க முடியும்.

Last Updated on Saturday, 16 January 2016 07:49 Read more...
 

அழியாத கோலங்கள்: நா.பா.வின் 'குறிஞ்சி மலர்' - நிலவைப் பிடித்துச் - சிறு கறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதிந்த முகம்.| பூங்குழலி - அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?

E-mail Print PDF

1. நா.பா.வின் 'குறிஞ்சி மலர்' - நிலவைப் பிடித்துச் - சிறு கறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதிந்த முகம்,

நா.பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்'நா.பார்த்தசாரதிஎன் பதின்ம வயதுகளில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் நாவல்களை நான் இரசித்து வாசித்திருக்கின்றேன். அவர் தமிழ்ப்பண்டிதராதலால், பழந்தமிழ் இலக்கியத்தில் அவருக்குள்ள புலமையினை அவரது படைப்புகளினூடு உணர முடியும். சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத்தமிழரின் பல்வகை இலக்கியப்படைப்புகளின் தாக்கங்களும் அவற்றினூடு விரவிக்கிடக்கும்.

பாத்திரப்படைப்பு, மொழி ஆகியவற்றுக்காக அவரது படைப்புகளை நான் என் பதின்ம வயதுகளில் விரும்பி வாசித்திருக்கின்றேன். அவரது படைப்புகளில் வரும் மாந்தர்களெல்லாரும் , சாதாரண மானிடர்களை விட ஒரு படி மேலானவர்கள்; இலட்சிய நோக்கு மிக்கவர்கள்; குறிஞ்சி மலர், பொன் விலங்கு நாவல்களில் வரும் அரவிந்தன், பூரணி, சத்தியமூர்த்தி போன்றவர்கள். இது பற்றி அவரிடமே ஒருவர் கேள்வி கேட்டிருந்தபோது அதற்கு அவர் அவ்விதமான பாத்திரங்களை வைத்து எழுதுவதிலென்ன தவறு என்று கேட்டதை எங்கோ வாசித்திருக்கின்றேன்.

அவரது நாவல்கள் அதிகமானவற்றில் முடிவு அவலச்சுவையிலிருக்கும். [ இவரைப்போன்ற இன்னுமொருவர் அக்காலகட்டத்தில் கொடி கட்டிப்பறந்த எழுத்தாளர் ஜெகசிற்பியன். அவரது படைப்புகளும் பெரும்பாலும் துன்பத்திலேயே முடிவுறும்.]

எழுத்தாளர் நா.பா.வும் நல்ல கவிஞர்களிலொருவர். மணிவண்ணன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். அப்பெயரிலேயே ஆரம்பத்தில் கல்கியில் நாவல்களையும் படைத்து புகழடைந்தவவர் அவர்.

அவரது நாவலான குறிஞ்சி மலரில் நாயகனான அரவிந்தன் அவ்வப்போது தன் மனதிற்குகந்த நாயகியான பூரணியைப்பற்றி எழுதிய கவிதை வரிகள் ஆங்காங்கே நாவலில் வரும். அவரது படைப்புகளை விரும்பி வாசித்த காலகட்டத்தில் இவ்விதமாக குறிஞ்சி மலர் நாவலில் ஆங்காங்கே காணப்படும் அரவிந்தனின் கவிதை வரிகளையும் விரும்பி வாசித்ததை இப்பொழுதும் நினைத்துப்பார்க்கின்றேன்.

Last Updated on Saturday, 16 January 2016 02:54 Read more...
 

பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ! பொங்கல்!

E-mail Print PDF

பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ! பொங்கல்!ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்! இந்
நானிலம் காத்திடும்
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும்!


நானறிந்த வரையில் தைப்பொங்கலை ஈழத்தமிழர்கள் யாவரும் தமிழர்தம் திருவிழாவாகத்தான் கொண்டாடி வருகின்றார்கள். அவ்விதமே தொடர்ந்தும் கொண்டாடுவோம். தமிழர்தம் திருவிழாக்களில் இந்தத்தைத்திருநாள் எனக்கு மிகவும் படித்த திருவிழா என்பேன். இவ்வுலகின் உயிர்களுக்குக் காரணமான இரவியினை நோக்கி, மானுடர்தம் வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவினை அளிக்கும் உழவரை எண்ணி,  உலகு இயந்திரமயமாகுவதற்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை உழவருக்கும், அனைவருக்கும் பல்வகைகளில் உறுதுணையாகவிருந்துவரும்  மாடுகளைப்போற்றித் தமிழர் அனைவரும் (உழவருட்பட) வருடா வருடம் தம் நன்றியினைத்தெரிவிப்பதற்காகக்கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

பொங்கல் என்றதும் என் பால்ய காலத்து நினைவுகள் படம் விரிக்கின்றன. அப்பொழுது நாம் வவுனியாவில் குடியிருந்தோம். பொங்கல் அன்று முற்றத்தில் புதுப்பானையில் அதிகாலையிலேயே எழுந்து , நீராடி, அம்மா பொங்குவதும், பொங்கும் சமயங்களில் சிறுவர்களாகிய நாம் வெடிகொளுத்தி மகிழ்வதும் இன்னும் நெஞ்சினில் படம் விரிக்கின்றன. எழுபதுகளில் ஈழத்தமிழர் வாழ்வில் ஏற்பட்ட அரசியல் ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டதைத்தொடர்ந்து இவ்விதமான திருவிழாக்களில் வெடி கொளுத்துவதும் இல்லாமலாகிப்போனது. என் பால்ய காலத்து வாழ்வில் இவ்விதமான திருவிழாக்களைக்கொண்டாடி மகிழ்ந்த காலமென்றால் அது நாம் வவுனியாவில் இருந்த காலம்தான். இவ்விதமான பண்டிகைக்காலங்களில் அக்காலகட்ட நினைவுகளை மீளவும் அசைபோடுவதும் வழக்கமாகிப்போனது.

Last Updated on Thursday, 14 January 2016 00:16 Read more...
 

'காவியத்துக்கு ஒரு மஹாகவி!' - வ.ந.கிரிதரன் -

E-mail Print PDF

- கவிஞர் மஹாகவியின் பிறந்த தினம் ஜனவரி 9. அதனையொட்டிய பதிவிது.-

கண்மணியாள் காதை -- மஹாகவி -கவிஞர் மஹாகவி -
'காவியத்துக்கு ஒரு மஹாகவி' என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் 'கண்மணியாள் காதை' காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியமிது. கவிஞர் 'சடங்கு' என்று 'விவேகி'யில் எழுதிய தனது குறுங்காவியத்தின்  நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம் 'கண்மணியாள் காதை' . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் 'கண்மணியாள் காதை' தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி 'ஈழநாடு' பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த 'தேனி'யின் விமர்சனம்  'காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி' என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி 'கண்மணியாள் காதை'யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் 'கண்மணி', 'செல்லையன்' ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான 'காரிருள்' காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும்.  அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:

"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

Last Updated on Saturday, 09 January 2016 19:43 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 141 : பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி....

E-mail Print PDF

ஓவியம் - புதுவை ராமன்; நன்றி.மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

Last Updated on Tuesday, 05 January 2016 07:09 Read more...
 

இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று இன்புற்றிருப்போம்!

E-mail Print PDF

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்று பிறக்குமிப்புத்தாண்டில்
இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று
இன்புற்றிருப்போம்!
கொன்றழிக்கும் கவலை நீக்கி,
எண்ணமதைத் திண்ணமுற
இசைத்துக்கொண்டு,
மனதினில் உறுதி கொண்டு,
வாக்கினில் இனிமையேற்றி,
நினைவு நல்லது நாடி,
மண் பயனுற வேண்டி,
இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று
இன்புற்றிருப்போம்!
இன்புற்றிருப்போம் இனிவருமாண்டில்.
இன்புற்றிருப்போம்! இன்புற்றிருப்போம்!
பதிவுகள் வாசகர்கள் அனைவருக்குமெம்
அகம் திறந்து வாழ்த்துகின்றோம்:
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

பதிவுகள்' வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் தனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. அனைவரது வாழ்விலும் அவர்தம் எண்ணங்கள் இப்புதிய ஆண்டில் ஈடேறட்டும். தொடர்ந்தும் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஈழத்தமிழர்கள் வாழ்வில் இந்த வருடமாவது நல்லதொரு முடிவினைக்கொண்டு வரட்டும். அல்லவற்றைத் தவிர்த்து, நல்லவற்றை நாடிப் பயணங்கள் தொடரட்டும்; பிறப்பு சிறக்கட்டும்

Last Updated on Sunday, 03 January 2016 18:27 Read more...
 

அழியாத கோலங்கள்: சாண்டில்யனின் கடல் புறா, ஓவியர் லதாவின் ஓவியங்களுடன்.

E-mail Print PDF

அக்காலகட்டத்தில் குமுதத்தில் வெளியான ஓரிரு   அத்தியாயங்களை (பாலூர்ப் பெருந்துறையில் இளைய பல்லவனின் வீர சாகசங்களை விபரிக்கும் ஓவியர் லதாவின் ஓவியங்களுடன் கூடிய)   வாசித்துவிட்டு வாசிப்பதற்காகத் தேடி அலைந்திருக்கின்றேன். அண்மையில் இணையத்தில் ஓரத்தநாடு கார்த்திக் என்னும் அன்பரின் வலைப்பதிவில் என் பால்ய காலத்தில் நான் வாசித்த பல வெகுசனப்படைப்புகளை மீண்டும் அவை தொடராக வெளிவந்தபோது வெளியான ஓவியங்களுடன் வாசிக்க முடிந்தது. அக்காலகட்டத்தில் கல்கி, விகடன், குமுதம், கலைமகள், தினமணிக்கதிரி, ராணி , கல்கண்டு என வெளியான வெகுசன இதழ்களில் தொடராக வெளிவந்த படைப்புகள் பலவற்றை நான் சேகரித்து, 'பைண்டு' செய்து வைத்திருந்தேன். அவையெல்லாம் 1983-2009 வரையில் ஈழத்தில் நிலவிய அரசியல் சூழலில் அழிந்து விட்டன. இந்நிலையில் அண்மையில் அன்பர் ஓரத்தநாடு கார்த்திக்கின் தளத்தில் பல படைப்புகளைக்கண்ட போது , அதுவும் வெளியானபோது வெளிவந்த ஓவியங்களுடன் பார்த்தபோது என் சிந்தனைக்குருவி மீண்டும் அந்தக்காலத்துக்கே சிறகடித்துச்சென்று விட்டது. அவ்விதம் வெளியான படைப்புகளில் ஒருபோதுமே சாண்டில்யனின் 'கடல்புறா'வினை என்னால் மறக்க முடியாது.

நான் ஆறாம் வகுப்பிலிருந்தே கல்கி, விகடனில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஆனால் குமுதம் சஞ்சிகையில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கியது வவுனியா மகாவித்தியாலயத்தில் அக்காலத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் பால்யகாலத்து நண்பர் மூலம்தான். அவரது வீட்டில் அக்காலகட்டத்தில் குமுதம் சஞ்சிகையினை எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனவே அவர் அதில் வெளியான பி.வி.ஆரின் 'கூந்தலிலே ஒரு மலர்', சாண்டில்யனின் 'ராஜமுத்திரை', சித்திரக்கதையான 'கடற்கன்னி' ஆகியவற்றைப் பற்றிக்கூறியிருந்ததாக ஞாபகம். அல்லது அவை வெளிவந்த குமுதம் சஞ்சிகையினை எனக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும். அதன்பின்னரே குமுதத்தின்பால் என் கவனம் திரும்பியது. அதன் பின்னர் ரிஷாங்கனை நான் சந்திக்கவில்லை. அவர் தற்போது மருத்துவராகப் பணிபுரிவதாகக்கேள்விப்படுகின்றேன். மருத்துவரான என் கடைசித்தங்கை அவரது பல்கலைக்கழகக்காலகட்டத்தில் ஒருமுறை அவரைச்சந்தித்திருப்பதாகக்கூறியிருக்கின்றார். முகநூல் மூலம் மீண்டும் அறிமுகமான என் பால்யகாலத்து நண்பர்களிலொருவரான சண்முகராஜாவும் ரிஷாங்கன் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பதாகக் கூறியிருக்கின்றார்.

Last Updated on Saturday, 02 January 2016 06:56 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 140 : எழுத்தாளர் என்றால் யார்? யார்? முகநூலில் ஓர் அலசல்!

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும்  140 : எழுத்தாளர் என்றால் யார்? யார்? முகநூலில் ஓர் அலசல்!எழுத்தாளர் பற்றி எழுத்தாளர் குப்பிளான் சண்முகம் தனது முகநூற் பதிவொன்றில் "கதை. கவிதை, கட்டுரை எழுதுபவர்களையே "எழுத்தாளர்" எனக் கொள்லாமென நம்பியிருந்தேன். அண்மைகாலங்களில் கட்டுரை எழுதுபவர்களுயும் எழுத்தாளர் எனக் கொள்ளலாமென ஒரு கருத்து மேலோங்கி இருக்கிறது என்னால் இதுபற்றி தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?." என்றொரு வினாவினை எழுப்பியிருந்தார். அது பற்றிய எனது சிந்தனை கீழே.

எழுத்தாளன் என்பதற்குப் பல அர்த்தங்களுள்ளன. எழுத்தை ஆள்பவர் என்பது ஓர் அர்த்தம். ஆனால் எழுத்தாளன் என்னும் சொல் உருவானது அந்த அர்த்தத்தில் மட்டுமல்ல. ஆளன் என்பது விகுதி. அந்த விகுதியைக்கொண்டு அமைக்கப்பட்ட சொல்தான் எழுத்தாளன் என்பதுவும். அந்த அர்த்தத்தில் இங்கு எழுத்து என்பதுடன் ஆளன் என்னும் விகுதியைச்சேர்த்து உருவாக்கப்பட்ட சொல்லாக எழுத்தாளன் வருகின்றது. உதாரணமாக பேச்சு + ஆளன் = பேச்சாளன். எனவே கட்டுரை மட்டுமல்ல எழுத்தின் எந்த வடிவத்தினையும் கையாள்பவனை எழுத்தாளன் என்றும், பொதுவாக எழுத்தாளர் என்று அழைப்பதில் எந்த விதத்தவறுமில்லை.

Rajaji Rajagopalan ஆளன் என்னும் விகுதிக்கு நீங்கள் தந்த விளக்கம் அர்த்தமுள்ளது. எழுதும் எல்லாரும் எழுத்தையே தமது சிந்தனைக்கு உருவம் கொடுக்கும் ஆயுதமாகக் கொள்கிறார்கள்.

Sri Sritharan ஆங்கிலத்தில் writer, author என இரண்டு வெவ்வேறு சொற்கள் உள்ளன. https://en.wikipedia.org/wiki/Author

Jeeva Kumaran எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் புனைவு இலக்கியம் (FICTION: சிறறுதை-கதை-நாவல்-கவிதை-நாடகம்) போன்ற இலக்கிய வடிவங்களைப் படைத்தவர்களை ஆக்க (CREATIVE WRITERS) எழுத்தாளர்கள் என்றும்.... மற்றைய வகை நூல்களை எழுதியவர்களை நூலாசிரியர் என்றும் அழைத்ததாக ஞாபகம்.

F.ex: Writer Mr. Jeyakanthan: Authour Mr. Sivathamby

ஆனால் பத்தி எழுத்துகளும்... புனைவு இலக்கிய ஆசிரியர்களே பத்தி எழுத்துக்குள் வந்ததும் அவர்களை அங்கே வேறுபடுத்தாது அதே எழுத்தாளர்கள் தலையங்கத்துடன் பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. இன்று எழுதுபவன் எல்லாம் எழுத்தாளராயும் கவிஞனும் என்றாகி விட்டது என்று நினைக்கின்றேன்

Last Updated on Friday, 01 January 2016 02:40