பதிவுகள்

 • Increase font size
 • Default font size
 • Decrease font size
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்

தருமு சிவராம் (பிரமிள்) நினைவாக..: "ஓடு புத்தரே ! தத்தரே ! பித்தரே ! " நாட்டுப்புறப்பாடலை கவிதையாக்கிய தருமு சிவராம். ஏப்ரில் 20 ஆம் திகதி அவரது பிறந்த தினம்

E-mail Print PDF

பிரமிள்: கவிஞர் பிரமிள் .கவியரசு கண்ணதாசனைத்தேடி தொலைதூரத்திலிருந்து  அவரது அபிமான ரசிகர் வந்துள்ளார். " எதற்காக இவ்வளவு தூரத்திலிருந்து என்னைத் தேடிவந்தீர்கள்...?" என்று கண்ணதாசன் அவரைக்கேட்டதும், " உங்கள் பாடல்களும் அதிலிருக்கும் கருத்துக்களும் என்னை பெரிதும் கவர்ந்தன. எனது வாழ்நாளுக்குள்  உங்களை நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்."  எனச்சொன்னார் அந்த  ரசிகர்.

" தம்பி... மரத்தைப்பார். அதில்  பூக்கும்  மலர்களையும், காய்க்கும் கனிகளையும் பார். அவற்றை ரசி, புசி. ஆனால்,  அந்த மரத்தின் வேரைப்பார்க்க  முயற்சிக்காதே... மரம் பட்டுவிடும். அதுபோன்று, ஒரு ஹோட்டலுக்கு  சாப்பிடச்சென்றால், சாப்பிட்டுவிட்டு  அதற்குரிய பணத்தை  கொடுத்துவிட்டு  போய்விடவேண்டும்.  நீ சாப்பிட்ட  உணவு தயாரிக்கும்  ஹோட்டலின் சமையலறைப்பக்கம்  சென்றுவிடாதே. பிறகு  நீ  எந்த ஹோட்டலிலும்  சாப்பிடமாட்டாய்"  என்றார் வாழ்க்கைத்தத்துவப்பாடல்களும்   எழுதியிருக்கும்  கவியரசர்.

இந்தத்தகவலை  எழுதும் எனக்கும்  எழுத்தாளர்களை தேடிச்சென்று பார்க்கவேண்டும்,  அவர்களுடன்  உறவாடவேண்டும்  என்ற ஆசை எழுத்துலகில்   பிரவேசித்த காலம்  முதலே  தொடருகின்றது. நான் எனது வாழ்நாளில் பல எழுத்தாளர்களை அவர்களின்   இருப்பிடம்தேடிச்சென்று நட்புறவை  ஏற்படுத்திகொண்டவன். தமிழ்நாடு  இடைசெவல் கரிசல் காட்டில்  கி. ராஜநாராயணன், குரும்பசிட்டியில்  இரசிகமணி கனகசெந்திநாதன்,  அளவெட்டியில் அ.செ. முருகானந்தன்,   தலாத்து ஓயாவில்  கே. கணேஷ், மினுவாங்கொடையில்  தமிழ் அபிமானி ரத்னவன்ச  தேரோ, திருகோணமலையில்   நா. பாலேஸ்வரி,  தொண்டமனாறில்  குந்தவை,  மாஸ்கோவில்  விதாலி ஃபுர்னிக்கா,   சென்னையில்  ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரில் கோவை ஞானி ..... இவ்வாறு பலரைத் தேடிச்சென்றிருக்கின்றேன். ஆனால், என்றைக்கும் என்னால்  சந்திக்கமுடியாமல்  மறைந்துவிட்ட,  அடிக்கடி  நான் நினைத்துப்பார்க்கும் ஒருவர்தான் பல பெயர் மன்னன் தருமுசிவராம். அவர் இன்றிருந்தால் அவருக்கு 78 வயது ( பிறந்த திகதி 20 ஏப்ரில் 1939).

Last Updated on Thursday, 20 April 2017 22:15 Read more...
 

நினைவலைகள்: வீரகேசரி முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம் இலங்கையில் நெருக்கடியான காலப்பகுதியில் தமிழ் இதழியல் பாதையில் நிதானமாக நடந்தவர்

E-mail Print PDF

வீரகேசரி முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம் எண்பத்தி ஏழு ஆண்டுகால விருட்சம்  வீரகேசரி,   எத்தனையோ காலமாற்றங்களை   சந்தித்தவாறு  தனது ஆயுளை நகர்த்திக்கொண்டிருக்கிறது.  வீரகேசரி  துளிர்விட்ட  வருடம் 1930.  விருட்சமாக  வளரும்போது எத்தனைபேர் அதன் நிழலில் இளைப்பறுவார்கள்,  எத்தனைபேர்  அதற்கு  நீர்பாய்ச்சுவார்கள், எத்தனைபேர்  அந்த  நிழலின்  குளிர்மையை  நினைத்துகொண்டு கடல் கடந்து செல்வார்கள்  என்பதெல்லாம் அதற்குத்தெரியாது. வீரகேசரி ஒரு வழிகாட்டி மரமாக அந்த இடத்திலேயே  நிற்கிறது. பின்னாளில்  அதன்வழிகாட்டுதலில்   வந்தவர்களில்  ஒருவர் அது துளிர்த்து சுமார் ஐந்துவருடங்களில் பிறந்தார். அவருக்கு  தற்பொழுது 82 வயதும்  கடந்துவிட்டது. அவர்தான் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம். அவருக்கு கடும் சுகவீனம் என்று அவருடைய நீண்ட கால நண்பரும் பல வருடங்கள்  வீரகேசரியில் அவருடன்  இணைந்து பணியாற்றியவருமான  வீரகேசரியின்  முன்னாள் விநியோக - விளம்பர முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம்  நேற்று 12 ஆம் திகதி, தொலைபேசியில்  சொன்னார்.  அவருடன் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு  வந்து  எனது  கணினியை பார்த்தேன் நண்பர் செல்லத்துரை  மூர்த்தி கனடாவிலிருந்து அதே செய்தியை மிகுந்த கவலையுடன்  மின்னஞ்சலில்  அனுப்பியிருந்தார்.

அமெரிக்காவில்   ஒரு மாநிலத்தில்  மூத்தபிரஜைகளை  பராமரிக்கும் இல்லமொன்றில்  எங்கள்  முன்னாள் ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் தங்கியிருப்பதாகவும்   தற்பொழுது  கவலைக்கிடமாக இருப்பதாகவும்  அடுத்தடுத்து  தகவல்  வந்தததையடுத்து,  அவரைப்பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன. ஆசிரியர்  சிவப்பிரகாசம்,  இவரது இனிய நண்பர்களினால் செல்லமாக  ‘சிவப்பி ’ என்றே அழைக்கப்படுபவர். அந்நாட்களில் வீரகேசரியில்  இரண்டு ‘சிவப்பிகள்’ இருந்தனர்.  ஒருவர் க.சிவப்பிரகாசம் என்ற எமது  முன்னாள் ஆசிரியர். மற்றவர்  து.சிவப்பிரகாசம் என்ற வீரகேசரியின்  முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர். இவர்கள்  இருவரையும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்,  2007  ஆம் ஆண்டு  இறுதியில்,  கனடாவில் தமிழர் செந்தாமரை இதழின் ஆண்டுவிழா  இராப்போசன விருந்தில் எதிர்பாராதவிதமாக  சந்திக்கநேர்ந்தது.  அந்தப்பயணத்தில்  இணைந்திருந்த அவுஸ்திரேலியா  நண்பர் நடேசனும் நானும்  அந்த விருந்தில்  அவர்களுடன்  ஒன்றாக  அமர்ந்திருந்தோம்.

Last Updated on Friday, 14 April 2017 00:49 Read more...
 

அசோகமித்திரன் நினைவுகள்: தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.

E-mail Print PDF

அசோகமித்திரன்சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன்  குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்‌ஷாவை காணும் குழந்தை,  " அப்பா ரிஷ்க்கா " என்று சொல்கிறது. உடனே  தகப்பன், " அது ரிஷ்க்கா இல்லையம்மா.... ரிக்‌ஷா" என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். " ரி... க்...ஷா..."  குழந்தையும் அவ்வாறே, " ரி...க்...ஷா..." எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா" என்கிறது.  தகப்பன் பொறுமையாக, மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தையின் உச்சரிப்பை திருத்தப்பார்க்கிறார். ஒவ்வொரு எழுத்தையும் அழகாக உச்சரிக்கும் குழந்தை, முடிவில் "ரிஷ்க்கா" என்றே சொல்கிறது. தகப்பன் எப்படியும் குழந்தை வாயிலிருந்து சரியான உச்சரிப்பு வந்துவிடவேண்டும் என்று நிதானமாக சகிப்புத்தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால், குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்க்கா என்றே தவறாக உச்சரிக்கிறது. அப்பொழுது கடைத்தெருவுக்குச் சென்ற மனைவி திரும்பிவருகிறாள். சென்ற இடத்தில் நினைவு மறதியாக குடையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்கிறாள். " பரவாயில்லை, ஒரு  ரிஷ்க்காவில்  போய் எடுத்துவா..." என்கிறார் கணவன். மனைவி திடுக்கிட்டு, " என்ன சொன்னீங்க...?" எனக்கேட்கிறாள். " ரிக்‌ஷாவில் போய் எடுத்துவா" எனச்சொன்னேன். " இல்லை... இல்லை... நீங்கள் வேறு என்னவோ சொன்னீர்கள்...!!!" இத்துடன் இச்சிறுகதை முடிகிறது. இதனை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வாழ்விலே ஒரு முறை என்ற சிறுகதைத்தொகுப்பில் படித்திருக்கின்றேன்.  ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலில் ஆழ்ந்திருக்கும் படிமத்தை அதில் கண்டு வியந்தோம்.

சிறுகதை அரங்குகளில் அசோகமித்திரனின் கதைகளை வாசிப்பதும் நல்ல அனுபவம். அதனை எழுதிய அசோகமித்திரன் கடந்த வியாழக்கிழமை 22 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார். ரிக்‌ஷா என்ற அச்சிறுகதையிலிருந்த  உருவ - உள்ளடக்க அமைதியைத்தான் நாம் அசோகமித்திரன் என்ற படைப்பாளியிடமும் அவதானித்தோம். தமிழகப்படைப்பாளிகளின் வரிசையில் அசோகமித்திரன் பற்றியும் எழுதவேண்டும் என்று பல மாதங்களாக நினைத்திருந்தும், அவரது மறைவுக்குப்பின்னரே அது சாத்தியமாகியிருப்பதையிட்டு ஆழ்ந்த துயரடைகின்றேன்.

Last Updated on Friday, 24 March 2017 07:07 Read more...
 

படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் செல்வராஜாவின் ஆவணப்பதிவு -- ஈழநாடு - ஒரு ஆலமரத்தின் கதை " யோகர்சுவாமியின் காலத்தை முந்திய ஞானமும் பிரதமர் ரணிலின் காலத்தைப் பிந்திய ஞானமும் "

E-mail Print PDF

நூலகர் செல்வராஜா" ஈழநாட்டிலே  பல சமூகத்தவர்கள் இருக்கின்றார்களெனினும் தமிழரின்  சொந்தப்  பண்பாட்டினையும்  உரிமைகளையும் எடுத்துரைக்கும்போது,  பிறசமூகத்தினரும் இந்நாட்டில் வாழ்ந்துவருகின்றனர்  என்பதையுணர்ந்து வேற்றுமையில்  ஒற்றுமை காண  முயலவேண்டும். ஒற்றையாட்சி( யுள்ள) இந்நாட்டில் மனித உரிமைகளைப்பெறுவது  சாத்தியமானதா...? அடிப்படை மனித உரிமைகள்  அனைத்தும் நன்கு பாதுகாக்கப்படுமா...? அன்றேல் சமஷ்டிதான்  இலங்கைக்கு  உகந்ததா...? மாகாண சுயாட்சி முறை எமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றத்தக்கதா...? இவைபோன்ற கேள்விகளுக்கு  விளக்கம்  தரும் கருத்தரங்கமாக 'ஈழநாடு' விளங்கும்." - என்று 58 ஆண்டுகளுக்கு முன்னர் (அமரர்) கே.சி. தங்கராஜா யாழ்ப்பாணத்திலிருந்து 11-02-1959 ஆம் திகதி வெளியான முதலாவது ஈழநாடு வார  இதழில் பதிவுசெய்துள்ளார். ஈழநாடு  வெளிவருவதன் நோக்கத்தை அவர் அன்று எழுதியிருந்தாலும், அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு இற்றைவரையில் சரியான பதில் கிடைக்கவும் இல்லை.  தீர்வுகளும் தூரத்தூர  விலகிச்சென்றுகொண்டே  இருக்கின்றன.

இலங்கையில்  இதுவரையில் எத்தனை தடவை அரசியலமைப்பு மாற்றப்பட்டுவிட்டது...?  தொடர்ந்தும்  வரைபுகள் முன்வைக்கப்படுகின்றன. பெரியார்  தங்கராசாவின் அரிய கருத்துக்களுடன் 1959 இல் ஒரு பிராந்திய பத்திரிகையாக இலங்கையில் வெளியான ஈழநாடு பற்றிய ஒரு  ஆவணப்பதிவாக வெளியாகியிருக்கிறது ' ஈழநாடு ஒரு ஆலமரத்தின் கதை'

ஏற்கனவே  இலங்கையின்  இலக்கிய - அறிவியல் படைப்புகள் பற்றிய செய்திகளையும்  ஆளுமைகள் மற்றும் நூலகவியல் பற்றிய கட்டுரைகளையும்,  நூல் பதிப்புத்துறை தொடர்பான ஆக்கங்களையும் - எரிக்கபட்ட யாழ். பொது நூல்நிலையம் பற்றியும்  வெறும் குறிப்புகளாக அல்லாமல்,  நீடித்து நிலைத்துநின்று பேசத்தக்க ஆவணமாகவே தமிழ் உலகிற்கு   வழங்கியிருக்கும் நூலகர் என். செல்வராஜா அவர்களின் மற்றும் ஒரு தேடல் பயணத்தின்  பயன்தான் இந்த அரிய நூல். ஆவணப்படுத்துபவர்களுக்கு  தேடல் மனப்பான்மையும், பதிவுகளைத்தொகுக்கும்  அனுபவமும் இருக்கும் பட்சத்தில்  எம்மைப்போன்ற வாசகர்கள்  பயனுள்ள  தரவுகளையும் தகவல்களையும்  பெற்றுக்கொள்வார்கள். வாசகருக்காகவும்  அதேவேளை சமூக, அரசியல் ஆய்வாளர்களுக்காவும்   தொடர்ச்சியாக அயற்சியின்றி இயங்கிவரும் நூலகர் செல்வராஜா எம்மத்தியில் சிறந்த ஆவணக்காப்பாளராகவே விளங்கிவருகிறார். அவரது அயோத்தி நூலகசேவை இந்நூலை  வெளியிட்டுள்ளது. 35 கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியிருக்கும் இந்நூலுக்கு வீரகத்தி தனபாலசிங்கம் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

Last Updated on Saturday, 15 April 2017 17:25 Read more...
 

கவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும். புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்.

E-mail Print PDF

அம்பி மனைவியுடன்ஏறினால் கட்டில், இறங்கினால் சக்கரநாற்காலி. அத்தகைய ஒரு வாழ்க்கையை அவுஸ்திரேலியா சிட்னியில் கடந்துகொண்டிருக்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி அவர்கள் அண்மையில் தனது 88 ஆவது  வயதைக் கடந்திருக்கிறார். எனினும்,  நினைவாற்றலுடன் தனது கடந்த கால வாழ்க்கைப் பயணத்தை நம்முடன் தொலைபேசி ஊடாக பகிர்ந்துகொண்டார். அன்பின் மறுபெயர் அம்பி என சில வருடங்களுக்கு முன்னர் மல்லிகை, ஞானம் அட்டைப்பட அதிதி கட்டுரையில் இவர் பற்றி எழுதியிருக்கின்றேன். நான் எழுதப்புகுந்த 1970 காலப்பகுதியிலிருந்து இவருடனான எனது இலக்கிய நட்புறவு குடும்ப நட்புறவாகவும் நெருங்கியமைக்கு அம்பியின் நல்லியல்புகளே அடிப்படை.

சிட்னிக்கு சென்றால் அவருடன் சில மணிநேரங்கள் செலவிடுவதும் அவரது நனைவிடை தோய்தல் கதைகளை செவிமடுப்பதும்,  அவருடன் அமர்ந்து உணவு அருந்துவதும் எனது வழக்கம். நகைச்சுவையும் அங்கதமும் அவரது பேச்சில் இழையோடும். நினைத்து நினைத்து சிரிக்கத்தக்க பல கதைகளை அவர் எனக்கு சொல்லியிருக்கிறார்.

உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகின்றேன். அவர் மெல்பனுக்கு வரும் சமயங்களில் எமது இல்லத்தில் தங்குவார். ஒரு தடவை அவர் இரவு உணவுக்குப்பின்னர் எடுக்கும் மருந்தை ( மாத்திரை) கொண்டுவருவதற்கு மறந்துவிட்டார்.
( நாமிருவரும் நீரிழிவுடன் சொந்தம் கொண்டாடுபவர்கள்)

நல்லவேளையாக என்னிடம் அவர் எடுக்கும் மாத்திரையின் மற்றும் ஒரு வகை இருந்தது. பெற்றுக்கொண்டார்.

Last Updated on Friday, 03 March 2017 01:56 Read more...
 

படித்தோம் சொல்கின்றோம்: இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆவணப்படுத்திய நூல். தமிழ் சமூகம் அறியத்தவறிய படைப்பாளுமைகளின் சரிதையை பதிவுசெய்திருக்கும் தொகுப்பு

E-mail Print PDF

முருகபூபதி -

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய நாற்பது முற்போக்கு ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும் 327 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கடந்த (2016) ஆண்டு இறுதியில் கொழும்பில் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு நூலிற்கான செயற்திட்டங்கள் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில்தான் மூத்த எழுத்தாளர் நீர்வைபொன்னையன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதை மின்னஞ்சல் வாயிலாக அறிந்தேன். நீர்வைபொன்னையன், தேவகௌரி, குமரன் பதிப்பகம் குமரன் ஆகியோர் அவ்வப்போது தொடர்புகொண்டு சில முற்போக்கு எழுத்தாளர்களின் விபரங்கள், படங்களும் கேட்டிருந்தனர். கேட்டவற்றை அனுப்பிக்கொண்டிருந்தேன். ஆயினும் நூல் வெளிவருவதில் தொடர்ந்தும் தாமதம் நீடித்துக்கொண்டிருந்தது. இதற்கிடையில் நீர்வைபொன்னையனும் அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்து திரும்பியிருந்தார்.இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து இயங்கிய சில எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இடம்பெறமாட்டார்கள் என்பதை தெரிந்துகொண்ட கவிஞர் மேமன்கவியும் பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர் தமது கடிதத்தில் இத்தொகுப்பில் புறக்கணிக்கப்பட்ட சில எழுத்தாளர்களின் பெயர்களையும் சுட்டிக்காண்பித்திருந்தார். முகநூல்களிலும் மின்னஞ்சல்களிலும் சில வாரங்கள் ஈழத்து  இலக்கியவாதிகளிடத்திலும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடமும் மேமன்கவியின் கடிதம் பேசுபொருளாக இருந்தது. இந்த சர்ச்சைகளும் நூல் வெளியீட்டில் தாமதம் தருகின்றதோ என அந்நியதேசத்திலிருந்து நான் யோசித்தேன். திடீரென்று ஒரு மின்னஞ்சல்,  தொகுப்பில் இடம்பெறவிருக்கும் முற்போக்கு எழுத்தாளர்களின் மனைவிமார், பிள்ளைகள் பெயர் விபரங்களும் கேட்டிருந்தது. அதற்கான பதிலை மின்னஞ்சலில் தெரிவிக்காமல், தொலைபேசி ஊடாகவே சொல்ல நேர்ந்தமைக்கு, குறிப்பிட்ட தகவல்கள் விவகாரங்களிற்கு அழைத்துச்சென்றுவிடும் என்பதும் ஒரு காரணம். 2014 ஆம் ஆண்டு முதல் தாமதமாகவிருந்து ஒருவாறு இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் நூல் கடந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் வெளியிடப்படுவதாக பத்திரிகைச்செய்தியில் பார்த்தேன்.

Last Updated on Monday, 20 February 2017 00:33 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்

E-mail Print PDF

 ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்எழுத்தாளர் முருகபூபதி எழுத்தாளர் இளங்கீரனுடன்இலங்கைத்தமிழ்ச்சூழலில்     ஒருவர்    முழு நேர    எழுத்தாளராக வாழ்வதன்    கொடுமையை    வாழ்ந்து     பார்த்து   அனுபவித்தால்தான் புரியும்.     எனக்குத்தெரிய     பல      முழுநேர      தமிழ்    எழுத்தாளர்கள்  எத்தகைய    துன்பங்களை,     ஏமாற்றங்களை,     தோல்விகளை, வஞ்சனைகளை,     சோதனைகளை      சந்தித்தார்கள்     என்பதை  மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது      அவர்களின்      வாழ்வு  எனக்கும்  புத்திக்கொள்முதலானது. நான்      எழுத்துலகில்    பிரவேசித்த     காலப்பகுதியில் மினுவாங்கொடையைச் சேர்ந்த     நண்பர்  மு.பஷீர்,  எங்கள் இலக்கியவட்டத்தின்        கலந்துரையாடல்களின்போது  குறிப்பிடும்  பெயர்:-  இளங்கீரன்.  இவரது  இயற்பெயர்      சுபைர்.      இவரும்     முழு நேர    எழுத்தாளராக     வாழ்ந்தவர்.

நீர்கொழும்பில்      எனது       உறவினர்       மயில்வாகனன்     மாமா  1966 காலப்பகுதியில்      தாம்     நடத்திய     அண்ணி     என்ற    சஞ்சிகையின்  முதலாவது      இதழில்      இளங்கீரன்     அவர்களின்     நேர்காணலை  பிரசுரித்திருந்தார்.      அப்பொழுது     எனக்கு       இளங்கீரனைத் தெரியாது.  அந்த      இதழில்     முன்புற -  பின்புற     அட்டைகளைத்தவிர     உள்ளே அனைத்துப்பக்கங்களிலும்      விடயதானங்கள்      கறுப்பு     நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன.       ஆனால்,      இளங்கீரனின்       நேர்காணல்     மாத்திரம் சிவப்பு      நிறத்தில்      அச்சாகியிருந்தது.  அதற்கான காரணத்தை        மாமாவிடம்      கேட்டேன். அண்ணி    சஞ்சிகையின்      துணை      ஆசிரியர்களில்      ஒருவரான ஓட்டுமடத்தான்       என்ற      புனைபெயரில்       எழுதும்      நாகராஜா    என்பவர்   இடதுசாரி      சிந்தனையாளர்.       இளங்கீரனும் கம்யூனிஸப்பற்றாளர்.        நாகராஜாதான்       அந்தப் பேட்டிக்காக இளங்கீரனைச்சந்தித்து        எழுதியவர்.      சஞ்சிகையில்       குறிப்பிட்ட பக்கங்கள்       சிவப்பு நிறத்தில்      அச்சாகவேண்டும்      என்ற      பிடிவாதத்தில் நாகராஜா       இருந்தார்     என்று      சொல்லி     எனது சந்தேகத்தைப்போக்கினார்.

Last Updated on Thursday, 12 January 2017 21:36 Read more...
 

திரையிலும் மறைவிலும் பாதி உண்மையாகிப்போன கலைஞர் ஓம்புரி

E-mail Print PDF

ஓம் பூரிஇலக்கியச்சிந்தனை அமைப்பின்  விழா சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் 1984 ஏப்ரில் மாதம் நடந்தவேளையில் அங்கு சென்றிருந்தேன். அந்த நிகழ்வில் சுஜாதா பேசி முடித்தபின்னர், மேடைக்குச்சென்று அவருடன்  உரையாடியபொழுது,  " இலங்கை  திரும்பு முன்னர் சென்னையில்  ஓடிக்கொண்டிருக்கும்  அர்த் சத்யா படத்தையும் பார்த்துவிட்டுச்செல்லுங்கள். " என்றார்.

1981 இல் இரண்டு முக்கிய அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் பொலிஸார் நடத்திய வேட்டையில்  யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டதை  சித்திரிக்கும் ஒரு  இலட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதையும் சுஜாதா எழுதியிருந்தார். சென்னையிலிருந்துகொண்டு அந்தக்கதையை எவ்வாறு எழுதினீர்கள் எனக்கேட்டபோது, அதற்கான  முன்கதைச்சுருக்கத்தை சொல்லிவிட்டே  அர்த்சத்யா  படத்தை அவசியம் பாருங்கள்  என்றார். அதற்கிடையில் வேறும் சில சுஜாதா ரசிகர்கள் அவரைச்சூழ்ந்துகொண்டதால்  மேற்கொண்டு அவருடன் உரையாட முடியவில்லை. எனினும் மேலும் உரையாடுவதற்கு தமது பெங்களுர் வீட்டுக்கு வாருங்கள்  என்று தமது முகவரியை எழுதித்தந்தார். ஆனால், என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அவர் சொன்னதால் அர்த்சத்யா படத்தை பார்க்க விரும்பினேன். நண்பர் கவிஞர் அக்கினிபுத்திரனும் அந்தப்படத்தை அவசியம் பாருங்கள் என்று சொல்லியிருந்தார். இரண்டு முக்கியமான படைப்பாளிகள் சொன்னதன் பின்னர் அதனைத்தவறவிட  விரும்பவில்லை.

Last Updated on Sunday, 08 January 2017 23:56 Read more...
 

வடபுலத்தின் அடிநிலைமக்களின் விடுதலைக்காக எழுதிய தெணியான். பொற்சிறையில் வாடும் புனிதர்களுக்காகவும் குரல்கொடுத்தார். அவருக்கு வயது 75.

E-mail Print PDF

தெணியான்கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியானை மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக் கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர்  வெளியான விவேகி என்ற இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி உட்பட பல இதழ்களில் அயராமல் எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது,  வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை - தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு,  மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர்.

Last Updated on Thursday, 05 January 2017 06:50 Read more...
 

படித்தோம் சொல்கின்றோம்: வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கதை. அகதியாக தஞ்சம் கோருபவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரித்த தன்வரலாற்று நாவல்.

E-mail Print PDF

முருகபூபதி -

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நான் மெல்பனில் வாடகைக்கு இருந்த அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எனது வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. முதல் நாள் மாலை  வேலைக்குச்சென்று,  அன்று  அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பி,  ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை,  இந்த நேரத்தில் யார் வந்து  கதவு தட்டி எழுப்புகிறார்கள்...? எனது கட்டிலுக்கு அருகில் மற்றும் ஒரு படுக்கையில் உறங்கிய அந்தத் தமிழ் இளைஞர் காலை வேலைக்குச்சென்றிருந்தார். சென்றவர்தான் எதனையும் தவறவிட்டுச்சென்று,  மீண்டும் வருகிறாரோ...? அல்லது வீட்டின் சாவியை விட்டுச்சென்றுவிட்டாரோ...? அந்தக் காலைவேளையில் எவரும் வரமாட்டார்கள். ஆனால், யாரோ கதவை அடித்துத்  தட்டுகிறார்கள். போர்த்தியிருந்த  போர்வையை விலக்கிக்கொண்டு கதவைத்திறக்கின்றேன். வெளியே இரண்டு அவுஸ்திரேலியர்கள் தாம் குடிவரவு திணைக்களத்திலிருந்து வந்திருப்பதாக தமது அடையாள அட்டையை காண்பித்தார்கள். தயக்கத்துடன் கதவைத்திறந்தேன். நன்றி சொன்னார்கள்.  " என்ன விடயம் ? " எனக்கேட்கிறேன். வந்தவர்கள் எனது கேள்விக்கு உடனடியாக பதில் தராமல் வீட்டின் ஹோல், அதனோடிணைந்த சமையல்கட்டு , நான் உறங்கிய அந்த ஒற்றைப்படுக்கையறை யாவற்றையும் கழுகுப்பார்வை பார்த்துவிட்டு, சீராக இருந்த மற்ற கட்டிலைப்பார்த்து, " இதில் படுத்திருந்தவர் எங்கே...?" எனக்கேட்டார்கள்.

" அவர் தனது நண்பரை பார்க்கச்சென்றிருப்பார்" என்று பொய் சொன்னேன்.

" நண்பரைப்பார்க்கச்செல்லும்போது பாணில் சாண்ட்விஷ்ஷ_ம் செய்து எடுத்துச்செல்வரா...?" என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு நான் பதில்சொல்லத்தெரியாமல் விழித்தேன். மற்றவர் கையிலிருந்த வோக்கி டோக்கியில் ஏதோ பேசினார்.

சில நிமிடங்களில் ஒரு பெண் அதிகாரி தனது அடையாள அட்டையை காண்பித்தவாறு எனது அறையிலிருந்து வேலைக்குச்சென்ற  அந்த இளைஞருடன் வாசலில் தோன்றினார். எனக்கு  யாவும்  அந்தக்கணமே  புரிந்துவிட்டது.

வீட்டில்  முன்னர்  இருந்துவிட்டு வேறு  இடங்களில் வேலைதேடிக்கொண்டு விடைபெற்றுவிட்ட  மூன்று பேருக்கு ஊரிலிருந்து வந்த கடிதங்களை ஒரு அதிகாரி கைப்பற்றினார்.

Last Updated on Saturday, 31 December 2016 01:28 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: தலையெழுத்தும் கையெழுத்தும் உறவாடுமா....? பேனாவை மாத்திரம் நம்பி வாழ்ந்த படைப்பாளி மு. கனகராசன்

E-mail Print PDF

திரும்பிப்பார்க்கின்றேன்: தலையெழுத்தும் கையெழுத்தும் உறவாடுமா....? பேனாவை மாத்திரம் நம்பி வாழ்ந்த படைப்பாளி மு. கனகராசன் =முருகபூபதி --“உங்களுடைய கையெழுத்து அழகாக  இருக்கிறது” என்றேன். “தலை எழுத்து அப்படி அல்ல” என்றார் கனகராசன். சொல்லும் போது மந்தகாசமான      புன்னகை.       பல  எழுத்தாளர்களின் தலை எழுத்து அவர் சொன்னது  போன்று      அழகாக    அமையவில்லை   என்பது  என்னவோ  உண்மைதான். வேறு எந்தத்  தொழிலும் தெரியாமல் எழுத்தை மட்டுமே நம்பிவாழ்வைத்    தொடங்கியவர்களின் வரிசையில்     இடம்    பெற்றவர்  மு.கனகராசன். இவர்       பணியாற்றிய   பத்திரிகைகள்   பல.       இலக்கியச் சிற்றேடுகள் சிலவற்றுடனும்      நெருங்கிய        தொடர்பு      கொண்டிருந்தார்.      நான்     அறிந்த வரையில்   மு.க.       என   எம்மால்       அழைக்கப்பட்ட  மு. கனகராசன்         சுதந்திரன் - தேசாபிமானி - புதுயுகம் , தினகரன்      முதலான  பத்திரிகைககளிலும்   சோவியத்நாடு இதழிலும் பணியாற்றியவர். 

சிற்பி      சரவணபவனின்      கலைச்செல்வி    செல்வராஜாவின்      அஞ்சலி   முதலான       இலக்கியச்       சிற்றேடுகளில்       வேலை     செய்திருக்கிறார். மல்லிகை      ஜீவாவுக்கும்      மல்லிகை       தொடர்பாக      அவ்வப்போது  ஆலோசகராக        இயங்கினார்.       மரணப்படுக்கையில்      விழுவதற்கு முன்னர்       இறுதியாக       தினகரனில்      வாரமஞ்சரியை      கவனித்துக்  கொண்டிருந்தார்.

கவிதை       சிறுகதை  நாடகம்       மொழிபெயர்ப்பு      இதழியல்      முதலான துறைகளில்       ஈடுபாடு      கொண்டிருந்த      மு.க      சிறிது காலம்    சோவியத் தூதுவராலயத்தின்      தகவல் பிரிவிலும்    வேலை செய்தார்.  எழுத்தாற்றல்        மிக்க      இவரது     படைப்புக்கள்  நூலாக வெளிவருவதில்தான்     எத்தனை       தடைகள்       தடங்கல்கள்  ஏமாற்றங்கள்.

Last Updated on Sunday, 25 December 2016 21:32 Read more...
 

எஸ்.பொ. நினைவுகள்......

E-mail Print PDF

(எஸ்.பொ. 26-11-2014 இல் மறைந்த வேளையில் நான்கு அங்கங்களில் எழுதிய தொடரின்  இறுதிப்பகுதி)

எஸ்.பொ

அவுஸ்திரேலியாவில்  பல  தமிழ்  அமைப்புகள்  1983  இற்குப்பின்னர் இயங்கியபோதிலும்  1988   இற்குப்பின்னரே   கலை - இலக்கியம்  சார்ந்த சிந்தனைகள்   உதயமாகின.  1986 - 1987  காலப்பகுதியில்  இங்கு குடியேறிய  ஈழத்தமிழர்கள்  மத்தியில்  நடன -  இசை  ஆசிரியர்கள் கலைஞர்கள்   - எழுத்தாளர்கள்  தத்தமது துறைகளில்  தம்மை வளர்த்துக்கொள்ள   அக்கறைகொண்டனர். தமது  அவுஸ்திரேலிய  வாழ்வில்  பொன்னுத்துரையினால் கடுமையாக   விமர்சிக்கப்பட்ட  கலாநிதி ஆ. கந்தையா  எழுதியிருக்கும்   சில  நூல்களில்  அவுஸ்திரேலியாவில்  புகலிடம் பெற்ற  ஈழத்தமிழர்களின்  கலை,  இலக்கியம்,  கல்வி,  ஆன்மீகம், சமூகம்  சார்ந்த  குறிப்புகள்  அடங்கிய  ஆவண  நூல்களில்  பல செய்திகளை  காணலாம். மெல்பனிலும்  சிட்னியிலும்  பல  இதழ்கள்  வெளியாகின.  சில காலப்போக்கில்   நின்றுவிட்டன.  கணினியின்  தீவிரமான  பாய்ச்சல் இணைய   இதழ்களுக்கும்  இங்கு  வழிகோலியதனால்  பல  அச்சு ஊடகங்கள்  நின்று  விட்டன.  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  முருகபூபதி  1972  இல் எழுதத்தொடங்கி  1997  இல்  தனது  இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை  தனது  பாட்டி  சொன்ன  கதைகள்  நூலினதும் ஏற்கனவே   வெளியான  தனது  நூல்கள்  பற்றிய  விமர்சனங்கள் தொகுக்கப்பட்ட  முருகபூபதியின்  படைப்புகள்  என்ற   நூலையும் மெல்பன் YWCA மண்டபத்தில்  15-11-1997   ஆம்   திகதி நடத்தியபொழுது   -  குறிப்பிட்ட  நிகழ்வை   வித்தியாசமாகவும் அவுஸ்திரேலியாவில்  வதியும்   முக்கியமான  கலை, இலக்கிய ஆளுமைகள்  நால்வரை  பாராட்டி  கௌரவித்து  விருது வழங்குவதற்கும்  தீர்மானித்து -  அந்த  நிகழ்வில்  நம்மவர் மலரையும்   வெளியிட்டபொழுது,  சிட்னியிலிருந்து  கவிஞர்  அம்பி, எஸ்.பொ.  - மெல்பனிலிருந்து  மூத்த  ஓவியர்  செல்லத்துரை, நாட்டுக்கூத்து   கலைஞர்    அண்ணாவியார்  இளைய  பத்மநாதன் ஆகியோரை    அழைத்தார்.

நம்மவர்   மலரில்  மேற்குறித்த  ஆளுமைகள்  பற்றிய  விரிவான பதிவுகளும்   முருகபூபதியின்  படைப்புகள்   நூலில்  எஸ்.பொ.  எழுதிய முருகபூபதியின்  சமாந்தரங்கள்   கதைக்கோவையின்   விமர்சனமும் இடம்பெற்றன. இந்நிகழ்வுக்கு   சிட்னியிலிருந்து  வருகை  தந்த  பேரசிரியர்  ஆ.சி. கந்தராஜா   தலைமை வகித்தார். மெல்பன்   அன்பர்கள்  இந்த  விழாவுக்கு  முருகபூபதிக்கு  பூரண ஒத்துழைப்பு   வழங்கியமையினால்  அது  சாத்தியமானது. ஆளுமைகளை  வாழும்  காலத்திலேயே   பாராட்டி கௌரவிக்கவேண்டும்   என்ற   மரபு  அவுஸ்திரேலியா   மண்ணிலே தமிழ்    சமூகத்திடம்   அறிமுகப்படுத்தப்பட்டதுடன்  அதன்  தேவையும் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில்   கலந்துகொண்டு   கௌரவம்  பெற்ற  எஸ்.பொ. அவர்களைப்பற்றிய  சிறப்புரையை  மெல்பனில்  தமிழ்  ஆசிரியராக பணியாற்றும்   இலக்கிய  ஆர்வலர்  திரு. சிவசம்பு  நிகழ்த்தினார்.

மறுநாள்   நவம்பர்  16   ஆம்   திகதி  மெல்பனில் Clarinda  என்னும் இடத்தில்   நடந்த  உதயம்  மாத  இதழ்  நடத்திய  கருத்தரங்கில் பொன்னுத்துரையும்   உரையாற்றினார்.  பொன்னுத்துரைக்கு  உதயம் இதழின்    கருத்துக்கள்   சிலவற்றில்   உடன்பாடுகள் இல்லாதிருந்தமைக்கு  காரணங்கள்   பல  இருந்தாலும்,   உதயம் ஆசிரியர்  டொக்டர்  நடேசனிடத்தில்  அன்பு  பாராட்டினார்.  நடேசனின்  சில  நூல்களையும்  அவர்  செம்மைப்படுத்தி  தமது  மித்ர பதிப்பக   வெளியீடாக  வெளியிட்டார். அவற்றுள்  ஒரு  சிலவற்றுக்கு  பொன்னுத்துரையே  பெயரும்  இட்டார்  என்பதும்  குறிப்பிடத்தக்கது.  வாழும்  சுவடுகள்  (இரண்டு பாகங்கள்)   வண்ணாத்திக்குளம்,   உனையே  மயல்கொண்டு  (நாவல்கள்) இந்த   இரண்டு    நாவல்களையும் - பின்னர்    ஆங்கிலத்தில் ( Butterfly Lake  --  Lost in You)   கொழும்பில்  பிரபல்யமான  நூல் பதிப்பு நிறுவனம்  விஜித்த   யாப்பா  வெளியிட்டது.

Last Updated on Thursday, 08 December 2016 21:22 Read more...
 

அரசியல் தலைவர்களினால் ஏற்கவும் இழக்கவும் முடியாத தனித்துவம் மிக்க துக்ளக் சோ. நாடகத்தில் - திரைப்படத்தில் - இதழியலில் அங்கதச்சுவையை இயல்பாக இழையவிட்டவரின் சகாப்தம் நிறைவடைந்தது

E-mail Print PDF

சோ" நான் ஒரு பத்திரிகை தொடங்கப்போகின்றேன். நீங்களும் ஆதரவு தரவேண்டும்."  என்று  35 வயதுள்ள  அவர்,  நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம்  கேட்கிறார். நகைச்சுவை நாடகங்களிலும் சில திரைப்படங்களிலும் அறிமுகமாகியிருந்த அவர்,  சட்டமும் படித்திருந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சில வர்த்தக நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும்  விளங்கினார். எதனையும் தர்க்கரீதியில்   விவாதிக்கும் திறமையும் அவருக்கிருந்தது. இவ்வளவு ஆற்றலும்  இருந்தும்,  எதற்காக பத்திரிகையும் நடத்தி வீணாக  நட்டப்படவேண்டும் என்ற நல்லெண்ணத்தின்  அடிப்படையிலேயே சிவாஜி  அவருக்கு  புத்திமதி  சொன்னார்.

" உனக்கு நடிப்பைத்தவிர வேறும்  ஒரு  நல்ல  தொழில் தெரியும்.  நீ பத்திரிகை  நடத்தினால் அது எப்படி இருக்கும் தெரியுமா...? கள் அருந்திய குரங்கை  தேனீக்கள் கொட்டினால் அது என்ன பாடுபடுமோ அப்படித்தான்  இருக்கும்  உனது பத்திரிகையும்" என்றார் சிவாஜி. ஆனால்,  இதனைக்கேட்ட  அவர்  தனது  யோசனையை கைவிடவில்லை. 1970 ஆம் ஆண்டு பிறந்ததும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் தனது பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டார். நாற்பத்தாறு ஆண்டுகளையும் கடந்து இன்றும் வெளியாகிறது அந்த இதழ். அதன் பெயர் துக்ளக்.

நடிகராகவும்  வழக்கறிஞராகவும்  இயங்கிக் கொண்டே   வெற்றிகரமாக பத்திரிகையும்  நடத்திய  அவர்தான் நேற்று  சென்னையில் தமது 82 வயதில் மறைந்த சோ. ராமசாமி. துக்ளக் என்ற மன்னர் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இன்று இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் புதிய நாணயத்தாள் விவகாரம் பற்றி  அறிவோம். இந்தியாவில்  விலங்குகளுக்கென மருத்துவமனை அமைத்த முன்னோடியாக அசோக மன்னன் விளங்குவது போன்று, மன்னர் கியாஸ்தின் துக்ளக்கின் மறைவிற்குப்பிறகு,  கி.பி. 1325 இல் பதவி ஏற்ற  முகம்மது பின் துக்ளக்தான் இந்தியாவில் நாணயத்தாளை அறிமுகப்படுத்திய  முன்னோடி. . கிறுக்குத்தனமாக  முடிவுகளை எடுக்கும்  மன்னர்  என்றே முகம்மது பின் துக்ளக்கை வரலாற்று ஆசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர். ஆயினும், துக்ளக் -  கணித சாஸ்திரம், தத்துவம், வானவியல், இயற்பியல்   முதலான துறைகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றிருந்தவர். துக்ளக் சோ  அவர்களும் பல்துறை ஆற்றல் மிக்கவர். அவர் ஒரு நடிகராகவும் வழக்கறிஞராகவும்  மாத்திரம்  இருந்திருப்பாரேயானால்  இவ்வளவு  தூரம் பிரபல்யம்  அடைந்திருக்கமாட்டார். சில  அரசியல்  தலைவர்களுக்கும்  ஆலோசகராக  விளங்கியர்  சோ.

Last Updated on Wednesday, 07 December 2016 21:59 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு - கற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்திற்காக பயன்படுத்திய பெண்ணிய ஆளுமை

E-mail Print PDF

பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு"பெண்களது  இலக்கிய மரபை நிறுவுதல் என்பது எப்பொழுதும் சவால்களை எதிர்கொள்வதாகவே  இருக்கிறது. பல  இடைவெளிகள், கேள்விகள் என்றும்  இருந்துகொண்டே  உள்ளன. சங்க  இலக்கியம் தொட்டு இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. சங்கப்பாட்டுகளில்  எத்தனை  பெண்களுடையவை...? சங்கப்புலவர்களில் எத்தனைபேர் பெண்கள்...?  என்ற  மயக்கம்  இன்னும்  முற்றாகத் தீர்ந்து விடவில்லை. பெயர் தொடர்பான மயக்கமே  இது. ஆணா? பெண்ணா? என்கிற மயக்கம் தற்காலம் வரை தொடர்கிறது." பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, 2007 ஆம் ஆண்டு வெளியான பெயல் மணக்கும் பொழுது ( ஈழத்துப்பெண் கவிஞர்கள் கவிதைகள் - தொகுப்பு அ. மங்கை) நூலுக்கு எழுதியிருந்த பின்னுரையில்  மேற்கண்ட  வரிகளைப்பார்க்கலாம்.

எஸ்.பொ.வுடன் இணைந்து நாம் தொகுத்த பனியும் பனையும் -புலம்பெயர்ந்தவர்களின் கதைத்தொகுப்பு வேலைகளிலும் எமக்கு இந்த மயக்கம் வந்தது. பல ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயர்களில் இன்றுவரையில் எழுதிவருகிறார்கள். காலப்போக்கில் தொடர்ச்சியான வாசிப்பில் எழுதுவது பெண்களா, ஆண்களா என்பதை தெரிந்துகொள்கின்றோம்.

ஈழத்தில் பெண் எழுத்துக்களை குறிப்பாக இளம் தலைமுறை பெண்படைப்பாளிகளை  எமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும், எம்மத்தியில் இன்றும் அயர்ச்சியின்றி இயங்கும் ஆளுமையான சித்திரலேகா மௌனகுரு அவர்களை  சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் சந்தித்தேன்.  கலை, இலக்கியம், கல்வி மற்றும் ஊடகத்துறையில்  ஈடுபாடுகொண்டிருந்தவர்கள்  வாழ்ந்த ஒரு அழகிய மாடி வீட்டில்தான் சித்திரலேகா - மௌனகுரு தம்பதியரையும் கண்டேன். அந்த இல்லத்தை ஏற்கனவே எனது பத்திகளில் காவிய நயம் நிரம்பிய கலாசாலை என்றும் வர்ணித்துள்ளேன். கொழும்பு - பாமன் கடை என்னும் இடத்தில் அமைந்த அந்த வீட்டில் 'அப்பல்லோ' சுந்தா சுந்தரலிங்கம்,  மௌனகுரு, கவிஞர்கள் முருகையன், சிவானந்தன் குடும்பத்தினர் வசித்தனர். அடிக்கடி அங்கு இலக்கிய சந்திப்புகள் நடக்கும். நீர்கொழும்பில் ஏதும் இலக்கியக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யும்பொழுது அந்த இல்லத்திலிருப்பவர்களிடம் சென்றுதான் ஆலோசனைகள் பெறுவேன். அன்று முதல் இன்றுவரையில் அங்கிருந்தவர்களுடனான எனது நேசிப்புக்கு எந்தவொரு விக்கினங்களும் வந்ததில்லை. கலை இலக்கிய ஊடக உலகில் உறவுகள் ஆரோக்கியமாக  நீடித்திருப்பது அபூர்வம் என்பதனால்தான் அவ்வாறு சொல்கின்றேன்.  சித்திரலேகா அக்காலப்பகுதியில்   இலங்கை வானொலி கலைக்கோலத்தில்  இலக்கிய உரைகளை நிகழ்த்தியபோது கேட்டிருக்கின்றேன். இவரது வானொலி ஊடகப்பிரவேசம் குறித்து ஜோர்ஜ் சந்திரசேகரன் தமது நூலிலும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்தப்பதிவு சித்திரலேகாவின் ஆற்றல்களை மேன்மைப்படுத்தாமல், வளர்ந்துவரும்   ஆளுமையை  இனம்காணாமல்  ஆணாதிக்க மனோபாவத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து, அந்த நூலை எனக்கு வாசிக்கத்தந்த நண்பர்  காவலூர்   ராசதுரையிடமும்  சொல்லியிருக்கின்றேன்.

Last Updated on Saturday, 26 November 2016 19:51 Read more...
 

ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த "புதுமைப்பிரியை" பத்மா சோமகாந்தன்! அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் இலக்கியவாதி!

E-mail Print PDF

"புதுமைப்பிரியை" பத்மா சோமகாந்தன்இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு,  இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள்.  அவர்கள்  தந்த  சுதந்திரம்  எமது அரசியல்வாதிகளுக்கு  தந்திரமானதுதான்  மிச்சம். இந்தப்பின்னணியில்  முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952  இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர்  யார்...?  என்ற பதவிப்போட்டியில் வேரோடியிருந்த   இனப்பிரச்சினை இன்னமும் தீரவில்லை. சிங்களத்தலைவர்கள்  பதவிக்கு  வரவேண்டுமானால்  இலங்கை தேசிய  சிறுபான்மை  இனங்கள்  பலிக்கடாவாகவேண்டும். 1955 இல் பிரதமராக யாழ்ப்பாணம் சென்ற சேர். ஜோன் கொத்தலாவலை, வடபுலத்து மக்கள் வழங்கிய மாலை மரியாதை வரவேற்பினால் மனம் குளிர்ந்து, " தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவருவேன்" என்றார். இதனை தவறாகப்புரிந்துகொண்ட எச். எல். மேத்தானந்தா என்ற ஒரு பௌத்த மத தீவிரவாதி " சரிதான், இனிமேல் சிங்களவர்களும் தமிழ்தான் படிக்கவேண்டிவரும் " என்று தென்னிலங்கையில் வகுப்புவாதம் கக்கத்தொடங்கினார். அதனை தனக்குச்சாதமாக்கினார் பண்டாரநாயக்கா. இதனைப்புரிந்துகொண்ட கொத்தலாவலை, தாமதிக்காமல் ஒரு பல்டி அடித்தார். 1956 இல் களனியில் ஐ.தே.கட்சி மாநாட்டில், தனிச்சிங்களமே ஆட்சி மொழி என்றார். பண்டாரநாயக்கா அதன் பிறகும் சும்மா இருப்பாரா...? தாம் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவேன் என்றார். ஐ.தே.க.வை தோற்கடிக்க ஐம்பெரும் சக்திகளை (பஞ்சமா பலவேகய) திரட்டிக்கொண்டு தேர்தலில் வென்ற பண்டாரநாயக்காவுக்கு உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. டீ.எஸ். சேனாநாயக்காவுக்குப்பிறகு தனக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் டட்லிக்கும் அவரையடுத்து கொத்தலாவலைக்கும் சென்றதுதான்  அவரை சிங்கள தீவிரவாதம் பேசக்காரணமாக இருந்திருக்கிறது. அதற்குப்பின்னாலிருந்து நெருப்பு மூட்டியவர்கள் மேத்தானந்தா, புத்தரகித்த தேரோ ஆகியோர்.

இன்றும் இந்தக்கதைதான் வேறு வேறு ரூபத்தில் இலங்கையில் நீடிக்கிறது. ஏறச்சொன்னால் எருதுக்குக்கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பார்களே... அவ்வாறு யாராவது ஒரு சிங்களத்தலைவர் இனப்பிரச்சினைக்கு  தீர்வுகொண்டுவந்தால் மற்ற சிங்களத்தலைவர் எதிர்ப்பார். இன்று எதிர்ப்பவர் நாளை பதவிக்கு வந்து நல்ல தீர்வு சொன்னால், முன்னர் நல்ல தீர்வுகொண்டுவர விரும்பியவர், அதனை ஆதரிக்காமல் எதிர்ப்பார். இது முற்றுப்பெறாத கதை.

இது இவ்விதமிருக்க,  இந்த வரலாற்றில் வரும் மேத்தானந்தா போன்றதொரு இனவாதியை அதே பெயரில், சித்திரித்து 1956 இல் காலிமுகத்தில் தமிழ்த்தலைவர்கள் சத்தியாக்கிரகம் நடத்தியபோது இடம்பெற்ற  தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஒரு சிறுகதையை தமிழில் எழுதியிருப்பவர் யார் என்று பார்த்தால் எமக்கு அதிசயமாக இருக்கிறது. ஆனால், அது அதிசயம் அல்ல உண்மை.

Last Updated on Thursday, 17 November 2016 01:45 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்

E-mail Print PDF

- முருகபூபதி - அவுஸ்திரேலியா -கடந்த பதினொரு  ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள்.  கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர். 2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக வந்தபோது முதல் முதலில் சந்தித்தேன். 2009  இல் தி.மு.க.வின் இளைஞர் அணி மாநாட்டை திருநெல்வேலியில் கொடியேற்றி தொடக்கிவைத்த அவரது அரசியல் பிரவேசத்தைக்கண்டேன். 2013 இல் கரிசல்காட்டின் வாசம் நிரம்பிய சில நூல்களின் படைப்பாளியாக பார்த்தேன். குறிப்பிட்ட  இந்த எட்டு ஆண்டுகளுக்குள் ஒரு  சந்தர்ப்பத்தில்  லோகசபைத்தேர்தலில் ஒரு எம்.பி.யாக நிற்பதற்கு வேட்புமனு தாக்கல்செய்யவேண்டிய தருணத்தில் எதிர்பாராதவிதமாக வேலூரில் கார்விபத்தில் சிக்கியதனால் அந்த வாய்ப்பையும் இழந்து, அதனால் சில மாதங்கள் படுக்கையிலிருந்தபோதிலும் மீண்டு எழுந்துவந்து கவிதைகள், கட்டுரைகள் படைத்தார். பாதியில் நின்ற ஆய்வேட்டை பூர்த்திசெய்து முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.

சென்னை திருவான்மியூர் அருகே நீலாங்கரையில் தமிழச்சி சுமதி தங்கபாண்டியனை அவரது அழகான இல்லத்தில் சந்தித்தபோது அவருடனான உரையாடலில் நானும் என்னைப்போன்று பலரும் தொலைத்துவிட்ட கிராமங்கள் படிமங்களாக வந்து நெஞ்சை உரசிக்கொண்டிருந்தன.

தமிழச்சி தான் பிறந்து தவழ்ந்த கரிசல் காட்டை தனது கவிதைகளில் கட்டுரைகளில் பதிவுசெய்வது ஜனநெரிசல் நிரம்பிய கட்டிடக்காட்டிலிருந்துகொண்டுதான். அவரது எஞ்சோட்டுப்பெண்ணும், வனப்பேச்சியும் அருகனும் மஞ்சனத்தியும் பாம்படமும் அவர் உளமாற நேசிக்கும் மல்லாங்கிணறு கிராமத்தையே உயிர்ப்புடன் சித்திரிக்கின்றன. 90 களில் இலக்கியப்பிரவேசம் செய்தவர். சென்னை ராணிமேரிகல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியிலிருந்தபோது தமிழ்நாட்டில் மித்ர பதிப்பகம் ஊடாக எஸ்.பொ.வின் அறிமுகம் கிடைத்து, கனடாவில் வதியும் அளவெட்டி சிறிசுகந்தராஜாவின் அனுசரணையுடன் தனது எஞ்சோட்டுப்பெண் கவிதை நூலை வெளியிட்டார். கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழ் வெளியானபோது அதில் பிரசுரமான அருண். விஜயராணியின் தொத்துவியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியன் ஸ்டடீஸ் சென்டரில் நடந்த கருத்தரங்கில் ஆய்வு செய்தார்.

Last Updated on Tuesday, 01 November 2016 18:26 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: கரிசல் இலக்கியத்திலிருந்து பயணித்து, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்! கயத்தாறில் தூக்கில் தொங்கிய கட்டபொம்மன் சிலையான கதையை தெரிந்துகொள்ளுங்கள்!

E-mail Print PDF

இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்வள்ளுவர் கம்பன்   இளங்கோ  பாரதி  முதலான முன்னோடிகளை  நாம்  நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான்  அவர்கள்  என்று ஓவியங்கள் உருவப்படங்கள்  சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.   இவர்களில் பாரதியின் ஒரிஜினல் படத்தை  நம்மில்  பலர் பார்த்திருந்தாலும்,  கறுப்புக் கோர்ட் வெள்ளை தலைப்பாகை தீட்சண்யமான   கண்களுடன் பரவலாக அறிமுகம்பெற்ற  படத்தைத்தான் பார்த்து வருகின்றோம். அந்தவரிசையில் வீரபாண்டிய  கட்டபொம்மனை  நடிகர் திலகம்  சிவாஜியின்  உருவத்தில்   திரைப்படத்தில்  பார்த்துவிட்டு  அவரது சிம்ம கர்ஜனையை கேட்டு வியந்தோம். பிரிட்டிஷாரின்  கிழக்கிந்தியக்கம்பனிக்கு  அஞ்சாநெஞ்சனாகத் திகழ்ந்து  இறுதியில் தூக்கில்  தொங்கவிடப்பட்ட   வீரபாண்டியகட்டபொம்மன்  மடிந்த  மண்  கயத்தாறைக் கடந்து 1984  இல்   திருநெல்வேலிக்குச்  சென்றேன். கட்டபொம்மன்  தூக்கிலிடப்பட்ட   அந்தப் புளியமரம்   இப்பொழுது அங்கே இல்லை. கட்டபொம்மன்   பற்றிய  பல கதைகள்  இருக்கின்றன.  அவன் ஒரு தெலுங்கு மொழிபேசும் குறுநில மன்னன்  என்றும்   வழிப்பறிக்கொள்ளைக்காரன்   எனவும் எழுதப்பட்ட   பதிவுகளை  படித்திருக்கின்றேன்.  இவ்வாறு கட்டபொம்மனைப் பற்றிய  தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு   முன்பே எனது  இளம்பருவ  பாடசாலைக்காலத்தில்  இலங்கை  வானொலியில்  வீரபாண்டிய  கட்டபொம்மன்   திரைப்படத்தில்  சக்தி  கிருஷ்ணசாமியின் அனல்கக்கும்  வசனங்களை சிவாஜிகணேசனின்  கர்ஜனையில்  அடிக்கடி   கேட்டதன்பின்பு- அந்த  வசனங்களை  மனப்பாடம்செய்து  பாடசாலையில்  மாதாந்தம்  நடக்கும் மாணவர்  இலக்கிய மன்ற  கூட்டத்தில்   வீரபாண்டிய கட்டபொம்மன்  வேடம்  தரித்து நடித்தேன்.  ஜாக்சன்  துரையாக நடித்த  மாணவப்பருவத்து  நண்பன்  சபேசன்  தற்பொழுது   லண்டனிலிருக்கிறான். இடைசெவலைக்   கடந்துதான்   திருநெல்வேலிக்குப்போக   வேண்டும். வழியில் வருகிறது கயத்தாறு.  அந்த இடத்தில்  இறங்கி கட்டபொம்மன்   சிலையைப்பார்த்தேன்.   பாடசாலைப்பருவமும்   வீரபாண்டிய  கட்டபொம்மன் திரைப்படமும்  நினைவுக்கு  வந்தன.  அவ்விடத்தில் அந்தச்சிலை  தோன்றுவதற்கு  முன்னர்  மக்கள்  தாமாகவே  ஒரு நினைவுச்சின்னத்தை   எழுப்பியிருந்தார்களாம். எப்படி...?

Last Updated on Friday, 14 October 2016 19:38 Read more...
 

ஜெயலலிதா எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த வாசகர். பல்துறை ஆற்றலும் நினைவாற்றலும் மிக்கவர்

E-mail Print PDF

ஜெயலலிதாபதிவுகள்  இணையத்தில்  கிரிதரன்  குறிப்பிட்டிருப்பது போன்று இன்றைய  தமிழக முதல்வர்  செல்வி ஜெயலலிதா ஜெயராம் எழுத்தாளர்  மட்டுமல்ல,  அவர்  சிறந்த வாசகர்.  அத்துடன்  நல்ல நினைவாற்றலும்  பல்துறை ஆற்றலும்  மிக்கவர்.தினமும்  அவர்  நூல்கள் படிப்பவர். அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் சினிமாவுக்கு வந்தது  ஒரு  விபத்து. தொடர்ந்து கல்லூரியில்  படித்து  பட்டம்  பெறுவதற்கே  விரும்பியிருந்தவர். தாய் நடிகை சந்தியாவிடம், பத்மினி பிக்‌ஷர்ஸ் பந்துலுவும், சித்ராலய ஶ்ரீதரும்  கேட்டதனாலேயே  அம்மு  என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா  தமிழ்த்  திரையுலகிற்கு வந்தார்.

பந்துலுவின் எம். ஜி. ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஶ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை முதலான படங்களே அவருடை முதல் தமிழ்ப்பட வரிசையில் இடம்பெற்றவை.   1961 இலேயே அவர்  Epistle  என்ற ஒரு ஆங்கிலப்படத்திலும் நடித்தவர். 1961 - 65 காலப்பகுதியில் அவர் கன்னடம், ஹிந்தி, தெலுங்குப்படங்களில் நடித்துவிட்டிருந்தார். ஆனால், அவர் எம்.ஜி. ஆருடன் திரையுலகில் இணைந்து அரசியலுக்கு வராமல் விட்டிருந்தால், சிலவேளை சிறந்த எழுத்தாளராகியிருப்பார்.

Last Updated on Saturday, 08 October 2016 20:31 Read more...
 

நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்! இந்தியாவின் ஆத்மாவை யதார்த்தம் சிதையாமல் இலக்கியப்படைப்புகளிலும் திரையிலும் காண்பித்த கலைஞன் ஜெயகாந்தன்!

E-mail Print PDF

நூறாண்டுகள்    நிறைவடைந்த    இந்திய    சினிமாவில்   ஜெயகாந்தனுக்குரிய   இடம்! இந்தியாவின்   ஆத்மாவை   யதார்த்தம்   சிதையாமல் இலக்கியப்படைப்புகளிலும்   திரையிலும்   காண்பித்த   கலைஞன்  ஜெயகாந்தன்!தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர்  ஜெயகாந்தன் - படைப்பிலக்கியவாதி - பத்திரிகையாளர் - சினிமா வசனகர்த்தா - பாடலாசிரியர் - திரைப்பட இயக்குநர் என பன்முக  ஆளுமை  கொண்டிருந்தவர். அவரது வாழ்வும் எழுத்தும் கம்பீரமானது. அவர் நீண்டகாலம் ஈடுபட்ட துறைகள் குறித்து ஏற்கனவே ஏராளமான மதிப்பீடுகள் வெளியாகியிருக்கின்றன.

அவரது படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உட்பட ருஷ்ய மற்றும்  ஐரோப்பிய மொழிகளிலும்  வெளியாகியுள்ளன. தமது படைப்புகளுக்காக  மாஸ்கோவிலிருந்து ரோயல்ட்டியும் பெற்ற ஒரே ஒரு தமிழக எழுத்தாளர். பாரதியை தமது ஞானகுருவாக வரித்துக்கொண்டவர்.  ஜெயகாந்தனிடம்  பாரதியின்  இயல்புகளும் இருந்தன. ஜெயகாந்தனும்  தமிழ்  சினிமாவும்  என்ற தலைப்பில் நான் எழுதிய இக்கட்டுரையை அவரது மறைவின் பொழுது  அவர்  நினைவாக சமர்ப்பித்தேன்.  இக்கட்டுரை  தமிழ்நாடு  குமுதம்  வெளியீடாக வந்த ஜெயகாந்தன்  சிறப்பு  நூலிலும்   இடம்பெற்றதாக  அறிகின்றேன்.

சென்னையில்  தமிழ்  ஸ்ரூடியோ  என்ற  அமைப்பு  தற்பொழுது நூறாண்டுகள்  நிறைவடைந்த  இந்திய  சினிமா தொடர்பாக கருத்தரங்குகளும்  திரைப்பட  அரங்குகளும் நடத்திவருகின்றது. படைப்பிலக்கியவாதியான ஜெயகாந்தன் தமிழ் சினிமாவுக்குள் சுயமாக  நுழைந்து,  தனது  சுயத்தை  இழந்துவிடாமல் கௌரவமாக  விலகி  வெளியே  வந்தவர்.

தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கேள்வி பதில் பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

கேள்வி: தமிழ் சினிமாவுக்குள் பிரவேசித்த ஜெயகாந்தன் ஏன் இப்பொழுது அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் ?

பதில்: தமிழ் சினிமா எதிர்பார்ப்பதுபோல் ஜெயகாந்தன் இல்லை. ஜெயகாந்தன் எதிர்பார்ப்பதுபோல்  தமிழ் சினிமா இல்லை.


இந்தத்தகவலை உயிர்மை இதழின் நூறாவது இதழில்  (டிசம்பர் 2011) திரையுலக விமர்சகர் தியோடர் பாஸ்கரனின் பின்வரும் கருத்துடன் ஒப்பிட்டும் பார்க்கலாம். அவர்  சொல்கிறார்: "எழுத்தாளர்களை நல்ல முறையில் ஒரு சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால்    இயக்குநர்களுக்கு    ஆழமான    இலக்கியப்பரிச்சயம்    தேவை. எழுத்தாளர்களுக்கும் சினிமாவின் தனி  இயல்புகள் சாத்தியக்கூறுகள்   -    இவை   பற்றிய ஒரு     பிரக்ஞை     வேண்டும்.     அதுமட்டுமல்ல      திரையும் எழுத்தும் தத்தம்    இயல்புகளில்    மிகவும்    வேறுபட்ட    ஊடகங்கள் என்பதையும்      உணர்ந்திருக்கவேண்டும்.      வங்காள    -    மலையாள சினிமாக்களில்  இத்தகைய     புரிதல்    இருபுறமும்   இருப்பதைக்காணலாம்.     அங்கிருந்து      வரும்     பன்னாட்டுப்புகழ்பெறும் திரைப்படங்களில்     பெருவாரியானவை      ஒரு      இலக்கியப்படைப்பையே     சார்ந்திருப்பதைக்கவனிக்கலாம்."

Last Updated on Sunday, 02 October 2016 06:23 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: செய்திகளுக்கான அச்சு ஊடகத்தினூடாக ஒரு செய்தியாளரின் கதை! வீ.ஆர். வரதராஜா நினைவுகள்!

E-mail Print PDF

திரும்பிப்பார்க்கின்றேன்: செய்திகளுக்கான அச்சு ஊடகத்தினூடாக ஒரு செய்தியாளரின் கதை! வீ.ஆர். வரதராஜா நினைவுகள்!வீரகேசரியால்  எனக்குக்கிடைத்த  நண்பர்கள்  அதிகம். ஊடகத்துறையானது   நண்பர்களையும்  எதிரிகளையும் சம்பாதித்துக்கொடுக்கும்.   ஆனால்,  பொருளாதார  ரீதியில்தான் சம்பாத்தியம்  குறைவானது. வீரகேசரிக்கு   நூறு  வயது   விரைவில்  நெருங்கவிருக்கிறது.  மகாகவி   பாரதியின்  உற்ற  நண்பர்  வ.ராமசாமி (வ.ரா)  அவர்களும் முன்னொரு  காலத்தில்  இதில்  ஆசிரியராக  பணியாற்றியவர்தான். புதுமைப்பித்தனுக்கும்  பிறிதொரு  காலத்தில்  அச்சந்தர்ப்பம்  வந்தது. ஆனால்,  அவர்  சினிமாவுக்கு  வசனம்  எழுதச் சென்னைக்குச்  சென்றமையால்,  இலங்கைக்கு  வரவில்லை. கே.பி. ஹரன்,  அன்டன்  பாலசிங்கம்,  செ.கதிர்காமநாதன்,  கே.வி. எஸ்.வாஸ், காசிநாதன், கோபாலரத்தினம், க. சிவப்பிரகாசம், டேவிட் ராஜூ, பொன். ராஜகோபால், சிவநேசச்செல்வன்,  நடராஜா, கார்மேகம், டி.பி.எஸ். ஜெயராஜ், அஸ்வர், கனக. அரசரத்தினம்,  சுபாஷ் சந்திரபோஸ்  உட்பட    பலர்  பணியாற்றிய  பத்திரிகை  வீரகேசரி. வீரகேசரி குடும்பத்தில் இருந்த  சிலரைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.  மின்னஞ்சல் -  இணையத்தள  வசதிகள்  இல்லாத  அக்காலத்தில்  அங்கு பணியாற்றியவர்களின்  வாழ்க்கையை  இன்று நினைத்துப் பார்க்கும்பொழுது    சுவாரஸ்யங்களும் துயரங்களும் கெடுபிடிகளும்   சவால்களும்  நெருக்கடிகளும்தான்  நினைவுகளில் வந்து   அலைமோதுகின்றன. அத்தகைய  ஒரு கால  கட்டத்தில்தான்  வரதராஜா  வீரகேசரியில் இணைந்திருந்தார்.அவர்   அங்கு  அலுவலக  நிருபராக  பணியாற்றினார்.  எனக்கு வீரகேசரியுடனான  தொடர்பு  1972  இலிருந்து  தொடங்கியது. அப்பொழுது  நீர்கொழும்பு  பிரதேச  நிருபராகவே அங்கு   இணைந்தேன்.

அதன்பின்னர்  1977  இல்  வீரகேசரியில்  ஒப்புநோக்காளர் (Proof Reading)  பிரிவில்  ஏற்பட்ட  வெற்றிடத்தையடுத்து  அதற்கு விண்ணப்பித்து   நேர்முகத்தேர்வில்  தெரிவுசெய்யப்பட்டேன். அவ்வேளையில்  என்னுடன்  தெரிவானவர்தான்  தனபாலசிங்கம். இவர்தான்   பின்னாளில்  வீரகேசரி  ஆசிரிய  பீடத்திலும் அதற்குப்பின்னர்,  தினக்குரலிலும்  இணைந்து,  தினக்குரலின்  பிரதம ஆசிரியரானவர்.   அதன்  பிறகு  வீரகேரியின்  வெளியீடான  சமகாலம்  இதழில் ஆசிரியரானார்.  ஆனால்,  சமகாலம்  தற்பொழுது வெளியாவதில்லை   என்று  அறியமுடிகிறது.

வரதராஜாவுடன்  1977  இன்பின்னர்  நெருக்கமாகப்பழகும்  கால கட்டம்  தொடங்கியது. அவர்   எழுதும்  செய்திகளை , நீதிமன்றச் செய்திகளை ஒப்புநோக்கியிருக்கின்றேன். ஆசிரிய  பீடத்தில்  நான்  இணைந்த பிற்பாடு   அவர்  தரும்  செய்திகளை செம்மைப்படுத்தியுமிருக்கின்றேன். இந்த   செம்மைப்படுத்தல்  என்பது  ஒருவகையில் Team Work   தான். நிருபர்  எழுதுவார்.  அதனை  துணை  ஆசிரியர்  செம்மைப்படுத்தி (Editing)  தலைப்புத்தருவார்.  அதன்பின்னர்  செய்தி  ஆசிரியர் மேற்பார்வை  பார்த்து  அவசியம்  நேர்ந்தால்,  திருத்தங்கள்  செய்வார்.   அதன்பின்னர்  அச்சுக்குச்செல்லும்.  குறிப்பிட்ட  செய்திகளை   அச்சுக்கோர்த்தபின்னர்  ஒப்புநோக்காளர்களிடம்  சென்று முதல் Proof   இரண்டாம் Proof  பார்க்கப்படும்.   அதன்பின்னர்  பக்க வடிவமைப்பாளர்  செய்தி  ஆசிரியரின்  ஆலோசனைகளுக்கு  அமைய பக்கங்களை   தயாரிப்பார்.  முழுப்பக்கமும்  தயாரானதும் முழுமையான   Page Proof   எடுக்கப்படும்.   அதனையும் ஒப்புநோக்காளர்கள்   பார்த்து  திருத்துவார்கள்.  அதன்  பின்னர்  செய்தி ஆசிரியரோ  அல்லது  ஆசிரியபீடத்தைச்சேர்ந்த  ஒருவரோ மேலோட்டமான  பார்வை  பார்த்த  பின்னர்,  மீண்டும் அச்சுக்கூடத்திற்கு   எடுத்துச்செல்லப்படும். அதிலிருக்கும்  பிழைகளையும்  அச்சுக்கோப்பாளர்  அல்லது  பக்க வடிவமைப்பாளர்  திருத்தியபின்னர்  மற்றும்  ஒரு  ஊழியர்  மஞ்சள் நிறத்தில்  அமைந்த  ஒரு  அட்டையில்  அந்த  முழுப்பக்கத்தையும் அழுத்தி  ஒரு  புதிய  வடிவம்  எடுத்துக்கொடுப்பார்.   அதன்பின்னர் அச்சுக்கூடத்தில்   ஒரு  இயந்திரத்துள்  செலுத்தப்பட்டு  அந்த அட்டையில்   பழுக்கக்காய்ச்சிய  ஈயம்  படரவிடப்பட்டு  வளைவான ஒரு  ஈயப்பிளேட்  தயாராகும்.   அனைத்துப் பக்கங்களும்  இவ்வாறு தயாரானதும்   முறைப்படி  அவை  பெரிய  ரோட்டரி  இயந்திரத்தில் பொறுத்தப்பட்டு  பத்திரிகை  அச்சாகும்.   விநியோகப்பிரிவு  ஊழியர்கள்   அதன்பின்னர்  விநியோக  வேலைகளை  ஆரம்பிப்பார்கள்.

Last Updated on Sunday, 25 September 2016 04:54 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை. 86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளி

E-mail Print PDF

திரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை. 86 வயதிலும் எழுதிக்கொண்டிருக்கும் மூத்த படைப்பாளிஅண்மையில் தமது பவளவிழாவை சந்தித்த நண்பர் பத்மநாப ஐயர் பற்றிய பதிவொன்றை எழுதியிருந்தேன். அதனைப்படித்த பலரும் தொடர்புகொண்டு மின்னஞ்சலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடைய தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தனர். என்னிடமும் இருக்கவில்லை.. லண்டனில் வதியும் இலக்கிய நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அதற்கிடையில் பத்மநாப ஐயரே மின்னஞ்சலில் வந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அவருடன் உரையாடினேன். அந்தப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அவருடைய மைத்துனர், நீர்கொழும்பில் சமூகப்பணிகள் மேற்கொண்ட சுந்தரம் ஐயர் சென்னையில் காலமாகிவிட்ட எனக்குத்தெரியாத தகவலும் தந்தார். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த ஓட்டத்தில் எம்முடன் பயணித்த பலரும் விடைபெறுவது இயல்புதான்.

பத்மநாப ஐயரை நன்கு தெரிந்த தமிழகத்தில் வதியும் எங்கள் மூத்த படைப்பாளி இந்திராபார்த்தசாரதியும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டு தொலைபேசி இலக்கம் கேட்டிருந்தார். தமக்கு 86 வயதாகிவிட்டதாகவும், தொடர்ந்தும் வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இயங்குவதாக அவர் எழுதியிருந்தார். அந்த வார்த்தைகள் எனக்கு வியப்பூட்டின. பல எழுத்தாளர்கள் படைப்பு இலக்கியத்திலிலிருந்து ஒதுங்கி, முகநூல் குறிப்பாளர்களாக நோண்டிக்கொண்டிருக்கும் சூழலில் 86 வயதிலும் இந்திரா பார்த்தசாரதி எழுதுவதும் இயங்குவதும் எமக்கு முன்மாதிரியானது. அவர் பற்றிய இந்தப்பதிவை மீண்டும் வாசகர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் வழங்குவது பொருத்தமானது.

Last Updated on Friday, 23 September 2016 20:21 Read more...
 

அயராமல் இயங்கிய ஆளுமைக்கு அஞ்சலிக்குறிப்பு: ஈழத்து இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரி 'குறமகள்' வள்ளிநாயகி ( 1933 - 2016)

E-mail Print PDF

குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்)இரண்டு  வயதில்  வாசிக்கத்தொடங்கி,  நான்கு வயதில் கட்டுரை எழுதி, பதினேழு வயதில் சLateKuramagalிறுகதை படைத்து, உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து, ஆசிரியராகி, வெளிவாரி பட்டப்படிப்புடன் நாடகத்துறையிலும் பயின்று,  எழுத்தாளராக, பெண்ணிய ஆளுமையாக, சமூகச்செயற்பாட்டளராக, பேச்சாளராக பரிமளித்து அயற்சியின்றி  இயங்கி,   கனடாவில்  மௌனமாக  விடைபெற்ற  ஈழத்தின்  மூத்த எழுத்தாளர் பற்றி அறிந்திருக்கிறீர்களா...? அவர்தான் வள்ளிநாயகி என்ற இயற்பெயருடனும் குறமகள் என்ற புனைபெயருடனும்  வாழ்ந்து தமது 83 ஆவது வயதில்  இம்மாதம் 15 ஆம் திகதி கனடா ரொரண்டோவில் மறைந்த இலக்கியவாதி.

இலங்கையின் வடபுலத்தில் 1933 ஆம் ஆண்டு ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்த வள்ளிநாயகியையும் அன்றைய சமூக அமைப்புத்தான் ஒரு படைப்பாளியாக்கியிருக்கிறது. " வாழ்வின் தரிசனங்களே தாம் எழுதும் படைப்புகள் " என்றுதான் எழுத்தாளர்கள் சொல்வார்கள். வள்ளிநாயகியும்  இதற்கு விதிவிலக்கல்ல.  அவருக்கு  பன்னிரண்டு வயதிருக்கும்போது அவர் வீட்டுக்கு   அயலில்  ஒரு  குடும்பத்தில்  நிகழ்ந்த  மனதை  உருக்கும் சம்பவத்தால்  மனதளவில்  பெரிதும்  பாதிப்படைந்திருந்து  ஐந்து ஆண்டுகள்  கடந்தும்  அந்தச்சம்பவம்  தந்த  அழுத்தத்தினால் தமது  17 வயதில் அவர்  எழுதிய  முதலாவது  சிறுகதைதான்  போலி கௌரவம். அந்நாளில் வடக்கில் வெளிவந்த  ஈழகேசரியில் பதிவாகியது.

ஒரே  குடும்பத்தைச்சேர்ந்த  ஒரு  அண்ணனும்  தங்கையும்  திருமணச் சீதனப்பிரச்சினையால் அடுத்தடுத்து   தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்பொழுது அந்தத்தங்கை நிறைமாதக்கர்ப்பிணி. சீதனம் கேட்டு தொல்லை தந்த அவள் கணவனால் அந்தக்குடும்பத்தில் நேர்ந்த பேரவலம் 12 வயதுச்சிறுமியான வள்ளிநாயகியை பாதித்திருக்கிறது. சமூகம் இப்படித்தான் இருக்கும். ஆனால்,  சமூகம் எப்படிருக்கவேண்டும் என்பதை அந்த இளம்வயதிலேயே சிந்தித்து,  அவர் எழுதிய  முதல்கதையில் சீதனப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் கொடுத்ததை வாங்கிக்கொள்ளும் நாயகனை அவர் படைத்துக்காண்பித்திருக்கிறார்.  பின்னர் சீதன முறையை ஆதரிக்கும்  சமூகச்சீர்கேட்டுக்கு  எதிராக  தனது  எழுத்துக்களை போர்க்குரல் ஆக்கியிருக்கிறார்.

Last Updated on Sunday, 18 September 2016 20:10 Read more...
 

"சமூகரீதியான போராட்டங்களில் மீட்சிக்கான கருவியாகவே இலக்கியத்தை தெரிவு செய்தேன்" -அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மெல்பன் சந்திப்பில் சல்மா

E-mail Print PDF

எழுத்தாளர் சல்மா ஆஸ்திரேலியாவில்"படைப்பு  இலக்கியமா -? ,   அரசியலா - ? இதில் எனது  இறுதித்தெரிவு எது ?  எனக்கேட்டால்,   படைப்பு  இலக்கியம்தான்  எனச்சொல்வேன். எனது   படைப்புக்கூடாக  சமூகத்தை  பார்க்கும்போது  தோன்றும் நெருக்கடிகளிலிருந்து  என்னைப் பாதுகாத்துக்கொள்ள  அரசியல்  ஒரு கவசமாகியது.   எனினும்,  எனது  சமூகம்சார்ந்த  பணியில் படைப்பு இலக்கியமே   இறுதித்தேர்வாக  அமையும் "  என்று  தமிழகத்திலிருந்து வருகை   தந்திருந்த  எழுத்தாளரும்  சமூகச்செயற்பாட்டாளருமான சல்மா,    கடந்த  ஞாயிறன்று  மெல்பனில்  Mulgrave  Neighborhood House   மண்டபத்தில்   நடைபெற்ற இலக்கியச்சந்திப்பு    நிகழ்ச்சியில்  குறிப்பிட்டார்.  அவுஸ்திரேலியா    குவின்ஸ்லாந்து மாநிலத்தில்  நடைபெற்ற   Byron bay  எழுத்தாளர் விழாவில் பங்குபற்ற  வருதைந்திருந்த  சல்மா, சிட்னியில்   இரண்டு  தமிழ்  அமைப்புகள்  ஒழுங்குசெய்த   சந்திப்பு கலந்துரையாடலில்   பங்கேற்றபின்னர்  மெல்பனில்  நடந்த நிகழ்ச்சியிலும்   உரையாற்றினார்..

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் துணைத்தலைவர்   லெ.முருகபூபதி  தலைமையில்   நடைபெற்ற இச்சந்திப்பில்   மெல்பனைச்சேர்ந்த  பல  எழுத்தாளர்களும்  இலக்கிய ஆர்வலர்களும்   கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில்  கலந்துகொண்டவர்கள்   சல்மாவின்  வேண்டுகோளின் பிரகாரம்   தம்மை  முதலில்  அறிமுகப்படுத்திக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து   சல்மா   பற்றிய  சிறிய  அறிமுகத்தை முருகபூபதி   வழங்கினார். சல்மா   இலக்கியப் பிரதியாளராகவும்  சமூகச்செயற்பாட்டாளராகவும் ஒரே    சமயத்தில்  இயங்கிவருபவர்.   நாவல்,  சிறுகதை,  கவிதை, பயண   இலக்கியம்  முதலான  துறைகளில்  எழுதியிருக்கும்  சல்மா தமிழ்நாடு   திருச்சியில்  பொன்னாம்பட்டி  ஊராட்சி மன்றத்தலைவியாகவும்    சமூக  நலத்துறை  வாரியத் தலைவியாகவும் இயங்கியிருப்பவர்.   ஒரு  தடவை   சட்டமன்றத்தேர்தலிலும் போட்டியிட்டவர்.    செனல்  4   தயாரிப்பில்  சல்மாவின்  வாழ்வும் பணியும்    ஆவணப்படமாகியுள்ளது.  பல  உலகப்பட  விழாக்களில் விருதுகளையும்   வென்றுள்ளது.   சல்மாவின்  படைப்புகள்  ஆங்கிலம், மலையாளம்,   மராத்தி,   ஜெர்மன்,   மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

Last Updated on Tuesday, 16 August 2016 21:52 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை - தலாத்து ஓயா கணேஷ்

E-mail Print PDF

 கே.கணேஷ், மின்னஞ்சல்  யுகம்  வந்த பின்னர்  காகிதமும்  பேனையும்  எடுத்து கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பும்  வழக்கம்  அரிதாகிவிட்டது. தொலைபேசி,   கைப்பேசி,  ஸ்கைப், டுவிட்டர்,  வைபர்,  வாட்ஸ்அப்  முதலான   சாதனங்கள்  விஞ்ஞானம்  எமக்களித்த வரப்பிரசாதமாயிருந்தபோதிலும் , அந்நாட்களில்  பேனையால் எழுதப்பட்ட   கடிதங்கள்  தொடர்பாடலை  ஆரோக்கியமாக  வளர்த்து மனித   நெஞ்சங்களிடையே  உணர்வுபூர்வமான  நெருக்கத்தையே வழங்கிவந்தன. உலகம்  கிராமமாகச் சுருங்கிவரும்  அதே  சமயம்  மனித  மனங்களும் இந்த   அவசர  யுகத்தில்  சுருங்கிவருகின்றன.

இலக்கியங்கள்   மனிதர்களை  செம்மைப்படுத்தி மேன்மையுறச்செய்துள்ளன.    அவ்வாறே  கடித  இலக்கியங்களும் படைப்பாளிகளிடத்தே    அறிவுபூர்வமாகவும்  உணர்வு பூர்வமாகவும் நெருக்கத்தையும்    தேடலையும்   வளர்த்து வந்துள்ளன. இலங்கையில்   மலையகம்  தலாத்துஓயாவில்  வாழ்ந்து  மறைந்த இனிய   இலக்கிய   நண்பர்  கே.கணேஷ் -  சுவாமி விபுலானந்தர், சிங்கள  இலக்கிய  மேதை  மார்டின்  விக்கிரமசிங்கா   ஆகியோருடன் இணைந்து   ஒருகாலத்தில்  அகில  இலங்கை எழுத்தாளர்   சங்கத்தை ஸ்தாபித்தவர்.   பின்னர்  இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தை 1950 களில்  உருவாக்கியவர். அப்பபொழுது   நான்  இந்த  உலகத்தையே  எட்டிப்பார்க்கவில்லை.   கே. கணேஷ்   ஈழத்து  தமிழ்  இலக்கிய  முன்னோடி,   படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர். எனக்கும்   அவருக்கும்  இடையே  மலர்ந்த  உறவு  தந்தை -  மகனுக்குரிய   நேசத்தை  உருவாக்கியிருந்தது.   இதுபற்றி  விரிவாக முன்னர்   எழுதிய  காலமும்  கணங்களும்  என்ற  தொடர்பத்தியில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

நான்   அவுஸ்திரேலியாவுக்கு 1987  இல்  வந்தபின்னர்,  அவர்  எனக்கு ஏராளமான   கடிதங்கள்  எழுதியிருக்கிறார்.  மாதம்  ஒரு  கடிதமாவது அவரிடமிருந்து  வந்துவிடும்.   நானும்  உடனுக்குடன்   பதில்  எழுதுவேன்.    இடைக்கிடை   தொலைபேசியிலும்  பேசிக்கொள்வோம். அவர்  மறையும்  வரையில்  எனக்கு  கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார்.   அக் கடிதங்களை   தனி நூலாகவும் தொகுக்கமுடியும். பல   நூல்களின்  ஆசிரியர்.   பல  வெளிநாட்டு  இலக்கியங்களை தமிழுக்குத்தந்தவர்.   கனடா  இலக்கியத்தோட்டத்தின்  இயல்விருது பெற்றவர்.

அடுத்த   ஆண்டு  பெப்ரவரி   மாதம்  வந்தால்  நான்  இலங்கையிலிருந்து   அவுஸ்திரேலியாவுக்கு   புலம்பெயர்ந்து  வந்து  30  வருடங்களாகிவிடும்.     ஏறக்குறைய  மூன்று  தசாப்த  காலத்துள் காலத்துள்    ஆயிரத்துக்கும்   மேற்பட்ட   கடிதங்களை   முன்பு எழுதியிருக்கின்றேன்.   ஆனால்,  கணினி  யுகம்   வந்தபின்னர்   மின்னல் வேகத்தில்    கடிதங்களை    பதிவுசெய்து  அனுப்பிக்கொண்டிருக்கும் அவசர   வாழ்க்கைக்கு  பலியாகியவர்களில்  நானும்  ஒருவன். தற்போதைக்கு   இந்த  மின்னஞ்சலுடன்  நின்றுகொள்வதுதான் மனதுக்கு   ஆறுதலாக  இருக்கிறது.  என்னிடம்  முகநூல் இல்லையென்பதால்  எனது  முகமும்  மறந்துபோய்விடும்  என்று  ஒரு நண்பர்   சொன்னார். முகநூல்களினால் முகவரிகளைத் தொலைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு   மத்தியில்  எனது   மனதில் ஆழமாகப்பதிந்த   மூத்த   இலக்கிய   முகங்களை   அடிக்கடி நினைத்துப்பார்க்கின்றேன். ஏற்கனவே  எனக்கு  வந்த  பல  இலக்கிய  ஆளுமைகளின்  கடிதங்களை   பொக்கிஷம்  போன்று  பாதுகாத்து  வருகின்றேன்.  சில வருடங்களுக்கு   முன்னர்  கடிதங்கள்  என்ற   நூலையும் வெளியிட்டேன்.   அதில்  சுமார் 80   படைப்பாளிகளின்   இலக்கிய  நயம் மிக்க  கடிதங்கள்  பதிவாகியுள்ளன. இன்றும்   என்னோடு  பயணித்துக்கொண்டிருக்கும்  கே. கணேஷ் எழுதிய  கடிதங்களின்  வரிசையில்  ஒரு  சிலதை  இங்கு பதிவுசெய்கின்றேன்.

Last Updated on Monday, 08 August 2016 21:39 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார். மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த ஆளுமையின் நாட்குறிப்பும் தொலைந்தது பாதிக்கப்பட்டவர்களின் ஆத்மக்குரலை இலக்கியத்தில் பதிவ

E-mail Print PDF

செ.கதிர்காமநாதனின் 'நான் சாக மாட்டேன்.'எழுத்தாளர் செ.கதிர்காமநாதன்" செ.கதிர்காமநாதன்  பட்டப்படிப்பு  முடிந்ததும்  இலங்கையின் பிரபல்யமான பத்திரிகை   நிறுவனம்  ஒன்றில்  சில  ஆண்டுகள் பணிபுரிந்தார்.    இக்காலம்  மிக  இக்கட்டான  காலம்.  தக்க  ஊதியமே இவருக்கு கிட்டவில்லை.   எழுத்தாளரான  இவருக்குக் கிடைத்த மாதச்சம்பளத்தையே    சொல்லத்தயங்கினார்.   தன்  உழைப்பிற்கேற்ற ஊதியம்   கிடைக்கவில்லை என்று  வருந்தினார்.  மனம் நொந்தார். கூடிய   ஊதியம்  கிடைக்கத்தக்க  இடங்களிலெல்லாம்  வேலைக்காக முயன்றுகொண்டேயிருந்தார். பத்திரிகையில் பணியாற்றியவேளை  ஒரு  நாவலையும்  அதே இதழில்  தொடராக  எழுதினார்.   அதற்குத்தனியாக  பணம் கிடைத்ததா ? என்று  கேட்டேன். கிடைத்த  தொகையை வேதனையோடுதான்  கூறினார். வழமையான   லாப நோக்காகவா ?  அவரது  உழைப்பிற்கு நன்றிக்கடனாகவா ?   இலக்கிய  ஆர்வத்தினாலேயா?  தெரியவில்லை. அவரது    மொழிபெயர்ப்புக்கதை  ஒன்றையும்  முன்னர்  வெளியிட்ட மூன்று   சிறுகதைகளையும்  சேர்த்து  இன்று   நூலாக வெளியிட்டுள்ளனர், அவர் பணியாற்றிய  நிறுவனத்தினர். 113   பக்கம்.    கிரவுன் 1/8 மடித்தாளில்  நியுஸ் பிரிண்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட   இந்நூலின்   விலை  ரூ.2/25. மலிவுப் பதிப்பு  நூல்களை  வெளியிட்டு  வெற்றி  (இலாபத்தில்) பெற்று விட்டதாகக்கூறும்   இவர்கள்  தந்த  நூல்களில்  இதுவே முதன்மைபெறுகிறது. நூலின் பெயர்:நான் சாகமாட்டேன்."

மேற்கண்டவாறு  கொழும்பிலிருந்து  1972  இல்  செ. கணேசலிங்கன் தாம்   வெளியிட்ட  குமரன்  இதழில்  ஒரு  சிறிய  கட்டுரை எழுதியிருந்தார்.   செ.கதிர்காமநாதன்  மறைந்தவுடன்  பதிவான நினைவஞ்சலிக்குறிப்பாக   அதனை  எடுத்துக்கொள்ளலாம்.

அவர்   மறைவதற்கு  சில  மாதங்களுக்கு  முன்னர்  ஒரு இலக்கியக்கூட்டத்தில்தான்   முதலும்  கடைசியுமாக  நான் அவரைச்சந்தித்தேன். அக்கூட்டம்  கொள்ளுப்பிட்டி  தேயிலைப் பிரசார  சபை  மண்டபத்தில் நடந்தது.   முன்வரிசையிலிருந்த  கதிர்காமநாதனை  எனக்குக் காண்பித்தவர்   நண்பர்  மு. கனகராஜன்.   நிகழ்ச்சி  முடியும்பொழுது இரவு   எட்டுமணியும்  கடந்துவிட்டது.    தொலைவிலிருந்து வந்திருந்தமையினால்   அவரைச்சந்தித்துப்பேசமுடியாமல்,   பிறிதொரு   சமயம்  பார்க்கலாம்  என்ற  எண்ணத்தில் புறப்பட்டுவிட்டேன். ஆனால் , அதன்பின்னர்  அவரைச்சந்திக்கவே முடியாமல்போய்விட்டது.

Last Updated on Wednesday, 20 July 2016 22:34 Read more...
 

பிரதேச மொழி வழக்கில் பேசி நடித்து அசத்திய மரைக்கார் ராமதாஸ் மறைந்தார்! இலங்கை கலையுலகின் மைந்தனுக்கு நினைவஞ்சலிப்பகிர்வு!

E-mail Print PDF

மரிக்கார் ராமதாஸ்பட்டி  தொட்டி  எங்கும்  ஒலித்த "  அடி   என்னடி  ராக்கம்மா  பல்லாக்கு நெளிப்பு "  பாடல்  இடம்பெற்ற  பட்டிக்காடா  பட்டணமா  படமும்  அவ்வாறே  அன்றைய  ரசிகர்களிடம்  நல்ல  வரவேற்பு  பெற்றது. 1972  இல்  வெளிவந்த   இந்தப்படத்தில்  இன்றைய  முதல்வர் ஜெயலலிதாவுடன்  சிவாஜி   நடித்தார்.   அடங்காத  மனைவிக்கும் செல்வச்செருக்கு  மிக்க  மாமியாருக்கும்  சவால்விடும்  நாயகன்,  தனது   முறைப்பெண்ணை  அழைத்து  பாடும்  இந்தப்பாடல் அந்நாளைய    குத்துப்பாட்டு  ரசிகர்களுக்கு  விருந்து  படைத்தது. விமர்சன    ரீதியாகப்பார்த்தால்  அந்தப்படமும்  பாடலும் பெண்ணடிமைத்தனத்தையே   சித்திரித்தது. மக்களிடம்   பிரபல்யம்  பெற்றதால்,   இலங்கையில்  சிங்கள சினிமாவுக்கும்  வந்தது.   இன்னிசை   இரவுகளில்  இடம்பெற்றது.    அதே இசையில்  ஒரு  பாடலை   எழுதிப்பாடிய   இலங்கைக்கலைஞர் ராமதாஸ்   தமிழ்நாட்டில்  மறைந்தார்.

" அடி  என்னடி  சித்தி  பீபீ "  என்று  தொடங்கும்  அந்தப்பாடலின் சொந்தக்காரர்   ராமதாஸ்,  இலங்கையில்  புகழ்பூத்த  கலைஞராவார். மரைக்கார்   ராமதாஸ்  என  அழைக்கப்பட்ட  இவர்  பிறப்பால் பிராமணர். ஆனால்,  அவர்  புகழடைந்தது  மரைக்கார்  என்ற இஸ்லாமியப்பெயரினால்.   சென்னையில்  மறைந்துவிட்டார்  என்ற  தகவலை  சிட்னி தாயகம்   வானொலி  ஊடகவியலாளர்  நண்பர்  எழில்வேந்தன் சொல்லித்தான்   தெரிந்துகொண்டேன்.   கடந்த  சில  வருடங்களாக உடல்நலக்குறைவுடன்   இருந்ததாகவும்  அறிந்தேன்.

1970    காலப்பகுதியில்  இலங்கை  வானொலி  நாடகங்களிலும்  மேடை  நாடகங்களிலும்  தோன்றி  அசத்தியிருக்கும்  ராமதாஸ்,   குத்துவிளக்கு உட்பட   தமிழ்,   சிங்களப் படங்களிலும்  நடித்தவர்.   பாலச்சந்தரின்  தொலைக்காட்சி   நாடகத்திலும்  இடம்பெற்றவர். கோமாளிகள்   கும்மாளம்   நகைச்சுவைத்  தொடர்  நாடகத்தைக் கேட்பதற்காகவே    தமிழ்  நேயர்கள்  நேரம்  ஒதுக்கிவைத்த  காலம் இருந்தது.   அதற்குக்  கிடைத்த  அமோக  வரவேற்பினால்  அதனைத் திரைப்படமாக்குவதற்கும்    ராமதாஸ்  தீர்மானித்தார். வானொலி  நாடகத்தில்  பங்கேற்ற  அப்புக்குட்டி  ராஜகோபால்,   உபாலி   செல்வசேகரன்,   அய்யர்  அப்துல்ஹமீட்  ஆகியோருடன் மரைக்கார்   ராமதாஸ்  வயிறு  குலுங்க  சிரிக்கவைத்த  தொடர்நாடகம்    கோமாளிகள் கும்மாளம். நான்குவிதமான   மொழி  உச்சரிப்பில்  இந்தப்பாத்திரங்கள் பேசியதனாலும்    இந்நாடகத்திற்கு  தனி  வரவேற்பு  நீடித்தது. திரைப்படத்தை    தயாரிக்க  முன்வந்தவர்  முஹம்மட்  என்ற  வர்த்தகர். திரைப்படத்திற்காக   ஒரு  காதல்  கதையையும்   இணைத்து , காதலர்களை   ஒன்றுசேர்ப்பதற்கு  உதவும்  குடும்ப  நண்பர்களாக மரைக்காரும்   அப்புக்குட்டியும்  அய்யரும்  உபாலியும்  வருவார்கள். இந்தப் பாத்திரங்களுக்குரிய   வசனங்களை  ராமதாஸே  எழுதினார். காதலர்களாக    சில்லையூர்  செல்வராசன் -  கமலினி  நடித்தார்கள். நீர்கொழும்பு - கொழும்பு   வீதியில்  வத்தளையில்  அமைந்த ஆடம்பரமான   மாளிகையின்   சொந்தக்காரராக  ஜவாஹர்  நடித்தார். அதற்கு    கோமாளிகை  என்றும்  பெயர்சூட்டினார்  ராமதாஸ்.

Last Updated on Wednesday, 13 July 2016 19:36 Read more...
 

பெருமாள் முருகனும் மாதொருபாகனும்: படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்திற்கு சாவு மணி அடிக்கும் இந்துத்துவா பிற்போக்குவாதிகள்

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதி- தமிழ்நாட்டில் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலின் தடையை  உயர் நீதிமன்றம்  நீக்கியுள்ளது. மாதொரு பாகனுக்கு மாத்திரமின்றி  கருத்துச்சுதந்திரத்திற்கும் கிடைத்த வெற்றி இது. தடை அழுத்தத்தினால்  தான் மரணித்துவிட்டதாகச்சொன்ன பெருமாள்முருகன் ஊரைவிட்டும்  சென்றார். இனி அவர் உயிர்த்தெழும் காலம்  கனிந்துள்ளது. இந்நாவல்    மீதான சர்ச்சை வெளியானபொழுது நான் எழுதிய நீண்ட கட்டுரையை மீண்டும் இங்கு பதிவு செய்கின்றேன். இதனை எழுதியபின்னர்தான்   மாதொருபாகன்   நாவல்  படிக்கும் சந்தர்ப்பம்  எனக்குக்கிடைத்தது.  -(முருகபூபதி -


சில    வருடங்களுக்கு  முன்னர்  தமிழ்நாட்டில்  மனோன்மணியம் சுந்தரனார்    பல்கலைக்கழகத்தில்  பாட  நூலாகவிருந்த  செல்வராஜ் எழுதிய  ஒரு  சிறுகதைத்தொகுப்பிலிருந்து  நோன்பு  என்ற சிறுகதையை    நீக்கவேண்டும்  என்று  இந்துத்துவா  அமைப்புகள் போராடின. சிறிது   காலத்தில்  மற்றும்  ஒரு  தமிழக  பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின்   சாபவிமோசனம்  சிறுகதையை  நீக்கவேண்டும் என்று  குரல்  எழுப்பியது. இலங்கையில்  வடபகுதியில்  உயர்வகுப்புகளில்  நாவல்  இலக்கிய வரிசையில்   இணைத்துக்கொள்ளப்பட்ட  மூத்த  எழுத்தாளர் செ.கணேசலிங்கன்    எழுதிய   முதலாவது  நாவல்  நீண்ட பயணம் நூலை   தவிர்த்துக்கொள்வதற்கு  மேட்டுக்குடியினர்   மந்திராலோசனை   நடத்துவதாக  அண்மையில்  ஒரு  தகவல் கிடைத்தது. இலங்கையின்   மூத்த  தலைமுறை    வாசகர்களுக்கு  நல்ல பரிச்சயமான   நாவல்  நீண்டபயணம்.    வடபகுதியின்  அடிநிலை மக்களின்    தர்மாவேசத்தையும்  ஆத்மக்குரலையும்  பதிவு  செய்த முக்கியமான   நாவல்.

இந்தப்பின்னணிகளுடன்    தற்பொழுது  தமிழக  இலக்கிய  உலகில் பெரும்  சர்ச்சையை   எழுப்பியிருக்கும்  பெருமாள்  முருகனின் மாதொருபாகன்  நாவலை   பார்க்கலாம். காலச்சுவடு   பதிப்பகம்  வெளியிட்டுள்ள  இந்நாவலுக்கு  எதிராக மீண்டும்    இந்துத்துவா    அமைப்பினரும்   இராமருக்கு  வக்காலத்து வாங்கும்   இராமகோபாலனும்  கோஷம்  எழுப்புகின்றனர். இராமகோபாலன்   பெருமாள்  முருகனை   அவன்...  இவன்... என்றெல்லாம்    ஒருமையில்  விளித்து  லண்டன்  பி.பி.சிக்கு பேட்டியளிக்கிறார். மதவெறியின்   உச்சம்  அவரது  குரலில்   தெரிகிறது. பகுத்தறிவுவாதம்    பேசிய  திராவிடக்கட்சிகள்  பெருமாள்  முருகன் விடயத்தில்   குரலை   தாழ்த்தியுள்ளன.   தி.முக.வுக்கும்  அண்ணா தி.மு.க.வுக்கும்   பெருமாள்முருகனைவிடவும்  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்தான்   முக்கியத்துவமானது.
விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியைச்சேர்ந்தவரும்   மணற்கேணி மற்றும்    நிறப்பிரிகை  ஆசிரியருமான  ரவிக்குமார்  மாத்திரம் பெருமாள் முருகனுக்காக   குரல் கொடுத்துள்ளார்.  இடதுசாரி மாக்ஸீயக்கட்சிகளும்   குரல்  கொடுக்கத்தொடங்கியுள்ளன.

Last Updated on Saturday, 09 July 2016 21:48 Read more...
 

எதிர்வினை: நூல் அறிமுகம்: 'தோழர் பால'னின் 'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' பற்றி....

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதிஅன்புள்ள  கிரிதரன்  அவர்கட்கு,   வாசிப்பும்  யோசிப்பும்  பத்தியில், தோழர் பாலன்  எழுதியிருக்கும்  இலங்கை  மீதான  இந்திய ஆக்கிரமிப்பு   நூல்  தொடர்பாக  உங்கள்  கருத்துக்களை   படித்தேன். இந்திய   ஆக்கிரமிப்பு  என்பது  அரசியல்  பொருளாதாரம்  மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல.   கலை,  இலக்கியம்,  திரைப்படம்  முதலான துறைகளிலும்   அந்த  ஆக்கிரமிப்பு  மற்றும்  ஒரு  அவதாரம் எடுத்திருக்கிறது.

ரோகணவிஜேவீராவின்   மக்கள்  விடுதலை  முன்னணியின் தொடக்ககால  (1970 - 1971)   வகுப்புகளில்  இந்திய  விஸ்தரிப்பு  வாதம் சொல்லப்பட்டது.   இந்திய  அமைதிப்படை    என்ற  பெயரில்  இந்திய இராணுவம்   உள்ளே  வந்தபோதும்,   அந்த  இயக்கம்  கடுமையாக எதிர்த்தது.   எனினும்  அதன்  செயல்பாடுகளில்  பல  குறைபாடுகள், தவறுகள்   இருந்தபோதிலும்  இந்திய  விஸ்தரிப்பு  வாதத்தை முன்வைத்த   முன்னோடியாக  அந்த  இயக்கம்  அமைந்திருந்தது.

புளட் இயக்கம்  வங்கம்  தந்த  பாடம்  என்ற  நூலை வெளியிட்டதன்  பின்னணியிலும்   அரசியல்  இருந்தது.   இந்திய  ஆக்கிரமிப்பு  இன்றும் தொடருகிறது.   அது  இலங்கையின்  கலை,  இலக்கிய, திரைப்படத்துறையையும்  பாதித்திருக்கிறது. யாரோ  முட்டாள்தனமாக  தாய்  நாடு  - சேய் நாடு  என்று  சொன்னதன் விளைவை   இலங்கை  இன்றும்  அனுபவிக்கிறது.

இந்திய   வணிக  இதழ்கள்  மீது  கட்டுப்பாடுகளை  விதிக்கவேண்டும் என்று   இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்  குரல் எழுப்பியபோது   அதனை  எதிர்த்து  விமர்சித்தவர்களை   நீங்களும் அறிவீர்கள். இன்றும்   இந்திய  தமிழ்   நூல்களை   இலங்கைக்கு  தாராளமாக வர்த்தகரீதியில்   இறக்குமதி  செய்யமுடியும்.   அவ்வாறு இலங்கைத் தமிழ்நூல்களை   இந்தியாவுக்கு  ஏற்றுமதி  செய்யமுடியாது. இந்தச்சட்டம்   இன்றளவும்  நடைமுறையில்  இருக்கிறது. ஆனால்,  இந்த  விவகாரம்  இன்னமும்  இந்திய  தமிழ்  ஊடகங்களுக்கும்    இந்திய  தமிழ்  எழுத்தாளர்களுக்கும்  தெரியாது. சென்னையில்   எம்மவர்கள்  தமது  நூல்களை  புத்தகச்சந்தைக்கு எடுத்துச்செல்வதற்காக   இந்திய  பதிப்பகங்களின்   தயவில்தான் வாழ்கிறார்கள்.

Last Updated on Tuesday, 05 July 2016 18:05 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: கருத்தியல் போராட்டம் நடத்தி களைத்துப்போனவர் ஓய்வு பெறட்டும்! சிவாசுப்பிரமணியம் நினைவுப்பகிர்வு!

E-mail Print PDF

" இந்தக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ள  பெயருக்குரியவனை உமக்குத்தெரியுமா ? "

" தெரியாது. "

" உமக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?"

" தமிழ், ஆங்கிலம், சிங்களம் தெரியும்."

" எப்படி  உம்மால்  இந்த  மூன்று  மொழிகளிலும் சரளமாகப்பேசமுடிகிறது"

" நான்  இலங்கையன்.  இம்மூன்று  மொழிகளும்  இங்கே பேசப்படுபவை.   அதனால்  கற்றேன்.  பேசுகின்றேன்"

" எவ்வாறு  இந்த  மொழிகளில்  உமக்கு  பேசும்  ஆற்றல்  வந்தது."

"  நான்  தமிழன்.   அதனால்  தமிழ்  பேசுகின்றேன். சிங்கள இலக்கியவாதிகளைத்தெரியும்.  சிங்கள  இலக்கியமும் தெரியும். சிங்கள  நண்பர்களும்  எனக்கு  இருக்கிறார்கள்.  ஆங்கிலத்திலும் படித்திருக்கின்றேன். அத்துடன்   நான்  ஒரு  அரசாங்க  ஊழியன்"

" உமக்கு  மொழிபெயர்க்கத் தெரியுமா?"

Last Updated on Monday, 27 June 2016 19:57 Read more...
 

அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்

E-mail Print PDF

அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம்                எங்கள்  நாவலர்,  " வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் " -  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு  எதிராக  நீதிமன்றில்  அவர்  வழக்காடியதையும்  அறிந்திருப்போம். ஆனால்,  அவர்  தமது  இளமைக்காலத்தில்  கோபமும்  மூர்க்க  குணமும் கொண்டவர்   என்பதை  அறிந்திருப்போமா  ?  தமது  உறவினர்  மீது  தமக்கு வந்த  கோபத்தை  வெளிப்படுத்துவதற்கு    ஒரு  கத்தியை  எடுத்துக்கொண்டு அவர்   துரத்திய  கதை  எத்தனைபேருக்குத் தெரியும்  ?  ஆறுமுகநாவலர்  நூற்றாண்டு  இலங்கையில்  நாடுதழுவிய  ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில்   நடைபெற்ற  விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான்  அந்த  சுவாரஸ்யத்தை  வெளிப்படுத்தினார். அவர்தான்   தகைமைசார்  பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம். இவ்வாறு   கூட்டங்களிலும்  விழாக்கள்  மற்றும்  சந்திப்புகளிலும்  பல சுவாரஸ்யங்களை  அவிழ்த்து  கலகலப்பூட்டும்  பூலோகசிங்கம்  அவர்கள் தற்பொழுது   அவுஸ்திரேலியா,  சிட்னியில்  ஒரு  முதியோர்  பராமரிப்பு நிலையத்தில்  கட்டிலில்   சயனித்தவாறு  கடந்த  காலங்களை  நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு   மனிதர்  வாழ்விலும்  முதுமை  வரும்.  அந்த  முதுமை  மேலும் இரண்டு   மைகளையும்  அழைத்துக்கொண்டு  அருகிலிருந்து  உறவாடும். அவைதான்   தனிமை - இயலாமை. அந்தத்தனிமையும்  எழுதமுடியாதிருக்கும்  இயலாமையும்தான்  இன்று அவரை  வாட்டிக்கொண்டிருக்கின்றன.

பூலோகசிங்கமும்  அங்கதச்சுவையுடன்  உரத்துச்சிரித்து  மகிழ்வூட்டுபவர். ஆறுமுகநாவலரைப்பற்றி  நாம்  அறியாத  பல  பக்கங்களை,  அவரது நூற்றாண்டு   காலத்தில்  தான்  பேசிய  மேடைகளில்  சொன்னவர். ஒரு  சமயம்  கடும்கோபத்துடன்  தமது  உறவினர்  ஒருவரை வெட்டுவதற்காக  ஒரு  வெட்டுக்கத்தியுடன்  நாவலர்  ஓடியிருக்கும் செய்தியைச்சொல்லி,   தனது  பேச்சுக்களினால்  எங்களை  சிலிர்க்கச்செய்த சிங்கம்,  தற்போது  நான்கு  சுவர்களுக்குள்  அமர்ந்து,   தான்  கடந்தவந்த  பொற்காலங்களை  நினைத்துக்கொண்டிருக்கிறது.  சிலவருடங்களுக்கு   முன்னர்  சிட்னியில்  ஒரு  நாள்  வெளியே நடந்துசென்றபோது , எதிர்பாராதவிதமாக  தடுக்கியோ  மயங்கியோ விழுந்திருக்கிறார்.   அதனைத் தொடர்ந்து  தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு,  படிப்படியாக  தேறியிருந்தாலும்,  பவளவிழா நெருங்கியிருந்த   காலப்பகுதியில்  விதியானது  தன்னை  இப்படி முடங்கியிருக்கச்செய்துவிட்டதே   என்ற  கவலையையும்  ஐந்து  ஆண்டுகளுக்கு முன்னர்  கடந்துவிட்டார்.

Last Updated on Friday, 17 June 2016 22:52 Read more...
 

தமிழர் வாழ்வில் சினிமா திரையரங்குகளின் மகாத்மியம்! சிவாஜியின் கனவு தொலைந்தது!. வாரிசுகளின் கனவு விதையாகிறது!

E-mail Print PDF

சாந்தி தியேட்டர்முருகபூபதி"பழையன  கழிதலும்  புதியன  புகுதலும்  வழுவல  கால வகையினானே "   என்பது  நன்னூல்  வாக்கு.  இதனை பனையோலையில்   எழுத்தாணியால்  பதிவுசெய்தவர்  பவனந்தி முனிவர்   என்று   சொல்லப்படுகிறது. வள்ளுவரும்   கம்பரும்  இளங்கோவும்  அவ்வையாரும் ஏட்டுச்சுவடிகளையும்   எழுத்தாணியையும்  ஏந்திக்கொண்டுதான் அமரத்துவமான   எழுத்துக்களைப்படைத்தனர்  என்பதற்காக  இந்த நூற்றாண்டின்  பிள்ளைகள்  பனைமரம்  தேடி அலையவேண்டியதில்லை. அவர்கள்   கணினியிலும்  கைத்தொலைபேசியலும் தட்டிக்கொண்டிருக்கின்றனர். கைத்தொலைபேசியிலேயே  சினிமாப்படங்களையும்  சின்னத்திரை மெகா தொடர்களையும்  விளையாட்டுக்களையும்,  தாம்  விரும்பும் இசை, நடன  நிகழ்ச்சிகள்  உட்பட  அனைத்தை  பொல்லாப்புகளையும் முகநூல்   வம்பு  தும்புகளையும்  பார்த்துக்கொள்ளமுடியும். இனி  கையில்  எடுத்து  வாசிக்க  புத்தகம்  எதற்கு ?  படம்பார்க்க தியேட்டர்தான்   தேவையா? சில  படங்களை  அகலத்திரையில்  பார்த்தால்தான்  திருப்தி எனச்செல்பவர்கள்  விதிவிலக்கு. தொலைக்காட்சியின்   வருகை,  திருட்டு விசிடியின்  தீவிர  ஆக்கிரமிப்பு   முதலான  காரணிகளினால்,  திரையரங்குகள் படிப்படியாக   மூடப்பட்டுவருகின்றன.

இலங்கை,   இந்தியா  உட்பட  வெளிநாடுகளில் வணிகவளாகங்களுக்குள்  சிறிய  திரையரங்குகள்  தோன்றிவிட்டன. ஒரு  வணிக வளாகத்திற்குள்  பிரவேசித்தால்  சின்னச்சின்ன திரையரங்குகளையும்   தரிசிக்கமுடியும். மனைவியுடன்   ஷொப்பிங்  செல்லும்  கணவன்,  மனைவியால் பொறுமை  இழக்கும்  தருணங்களில்  அந்த  அரங்கினுள்  நுழைந்து ஏதாவது  ஒரு  படத்தை  கண்டுகளித்துவிட்டு,  மனைவி  ஷொப்பிங் முடிந்ததும்,  பொருட்களை  காவி வருவதற்கு  செல்லமுடியும். இதுதான்  இன்று  பல  குடும்பங்களில்  நடக்கிறது. வெளிப்புற   படப்பிடிப்புகளினாலும்  காதல்  காட்சிகளுக்காக தயாரிப்பாளர்கள்   வெளிநாடுகளில்  லொகேஷன்  தேடுவதனாலும் இந்தியாவில்  பல  சினிமா  ஸ்ரூடியோக்கள்  மூடுவிழாக்களை சந்தித்தன. தமிழ்நாட்டில்  பிரபல்யமான  எஸ். எஸ். வாசனின்   ஜெமினி,  சேலம் மொடர்ன்   தியேட்டர்ஸ்  சுந்தரத்தின்  பல  ஏக்கர்  நிலப்பரப்புள்ள  ஸ்ரூடியோ,   சென்னை  நெப்டியூன்,  ஏ.எல். ஸ்ரீநிவாசனின்  சாரதா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்  கற்பகம்,  பானுமதியின் பரணி, நாகிரெட்டியின்   விஜயா, வாஹினி,  எம்.ஜி.ஆரின்  சத்தியா   உட்பட சில  சிறிய   ஸ்ரூடியோக்களும்   மூடப்பட்டுவிட்டன. சென்னைக்குச்சென்றால்,  பஸ்பயணிகள்  நடத்துனரிடம்  ஜெமினிக்கு ஒரு  டிக்கட்  என்று  கேட்டு  ஏறி  இறங்கும்  காட்சியை  காணலாம். ஜெமினிக்கு  இன்று  அதுதான்  வாழும்  அடையாளம்.   அந்த புகழ்பெற்ற  ஸ்ரூடியோவிலிருந்துதான்  மகத்தான  வெற்றிப்படங்கள்  ஒளவையார்,  சந்திரலோகா,   வஞ்சிக்கோட்டை  வாலிபன், ஒளிவிளக்கு  என்பன   வெளியாகின.

Last Updated on Saturday, 11 June 2016 07:04 Read more...
 

அஞ்சலி: முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்!

E-mail Print PDF

ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  கடந்த  29  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில்   தமது  இல்லத்தில்  காலமானார். ஆரம்பத்தில்  இலங்கை  கம்யூனிஸ்ட்  கட்சியில்  அங்கம்  வகித்திருந்த   இவர்,   கட்சியின்  உத்தியோகபூர்வ  இதழ்களான புதுயுகம், தேசாபிமானி  ஆகியவற்றில் தொடர்ச்சியாக  எழுதியிருக்கிறார். ஆங்கிலம்,   சிங்களம்  ஆகிய மொழிகளில்  சிறந்த  புலமை இவருக்கிருந்தமையால்   அரசியல்  மற்றும்  இலக்கிய  மேடைகளில் மொழிபெயர்ப்பாளராகவும்   செயல்பட்டார்.   இலங்கை  முற்போக்கு எழுத்தாளர்   சங்கத்தின்  மூத்த  உறுப்பினராகவும்  இவர்  இயங்கிய காலத்தில்   சங்கத்தின்  மாநாடுகள்,   கருத்தரங்குகளில்  பல சிங்களத்தலைவர்கள்,    எழுத்தாளர்களின்  உரையை  அழகாக  தமிழில் மொழிபெயர்த்தவர்.

இலங்கை   கம்யூனிஸ்ட்  கட்சியிலிருந்து  அதிருப்தியுற்று வி.பொன்னம்பலம்   வெளியேறி  செந்தமிழர் இயக்கம்  என்ற அமைப்பை   உருவாக்கிய வேளையில்  வி. பொன்னம்பலத்துடன் இணைந்து  இயங்கியவர். இலங்கை   அரசசேவையில்  பணியாற்றியிருக்கும்  சிவா சுப்பிரமணியம்   சிறுகதைகள்,   கட்டுரைகள்,  விமர்சனங்கள் முதலானவற்றையும்   சிங்களச் சிறுகதைகளின்  தமிழ் மொழிபெயர்ப்புகளையும்   மல்லிகை   இதழில் எழுதியவர். குணசேனவிதான  என்ற   பிரபல  சிங்கள  எழுத்தாளரின்  பாலம என்னும்   தேசிய  ஒருமைப்பாட்டை  வலியுறுத்திய  பிரபல்யமான  சிங்களச் சிறுகதையை  தமிழில்  மொழிபெயர்த்தவர்.  இதே சிறுகதையை   ஆங்கில  மூலத்திலிருந்து  தமிழ்நாட்டில்  ஜெயகாந்தன்   மொழிபெயர்த்து  தமது  கல்பனா   இதழில் வெளியிட்டிருப்பதும்   குறிப்பிடத்தகுந்தது.

Last Updated on Monday, 30 May 2016 05:35 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: மல்லிகையில் அட்டைப்பட அதிதி கௌரவம் பெறாத மல்லிகையின் தொண்டன் ரத்தினசபாபதி

E-mail Print PDF

திரும்பிப்பார்க்கின்றேன்: மல்லிகையில் அட்டைப்பட அதிதி கௌரவம் பெறாத மல்லிகையின்  தொண்டன் ரத்தினசபாபதிபெரியார்  ஈ.வே.ராமசாமி  தமது  குடியரசு  இதழ் விநியோகத்திற்கு முதலில்   தேர்வு  செய்த   இடங்கள்  தமிழகத்தின்  பட்டி  தொட்டி எங்கும்  இருந்த  சிகை அலங்கார  நிலையங்கள்தான்  என்று சொல்லப்பட்டதுண்டு. காரணம்;  இங்கு  வரும்  வாடிக்கையாளர்களின்  கண்களில்  குடியரசு இதழ்கள்   தென்படும்.   எடுத்துப்படிப்பார்கள்.  அவ்வாறு  தமது சமூகச்சீர்திருத்தக் கருத்துக்களையும்    பகுத்தறிவுவாத சிந்தனைகளையும்   பெரியார்  அக்காலத்தில்  சாதாரண  மக்களிடம் பரப்பினார். எங்கள்  மல்லிகை  ஜீவாவுக்கும்  பெரியார்  ஆதர்சமாகத் திகழ்ந்தவர். அவரை   முன்மாதிரியாகக்கொண்டு,  தாம்  வெளியிட்ட  மல்லிகையை   இலங்கையில்  பல  தமிழ்  அன்பர்கள்   நடத்திய சிகை அலங்கரிப்பு  நிலையங்களுக்கும்  விநியோகித்தார். யாழ்ப்பாணத்திலும்  கொழும்பிலும்  இவ்வாறு  மல்லிகையை  அவர் விநியோகம்   செய்ததை  நேரில்  பார்த்திருக்கின்றேன்.  தொடக்கத்தில் அவருடைய   யாழ்ப்பாணம்  கஸ்தூரியார்  விதியில்  அமைந்த ஜோசப்சலூனின்   பின்னறையிலிருந்து  மல்லிகையின்  பக்கங்கள் அச்சுக்கோர்க்கப்பட்டன. காலப்போக்கில்  ராஜா   தியேட்டருக்குப்பின்னால்  மல்லிகைக்கென தனியாக   அலுவலகம்  அமைத்து  வெளியிட்டார்.   வடக்கில்  போர் நெருக்கடியினாலும்  இயக்கத்தின்  நெருக்குவாரங்களினாலும்  கொழும்புக்கு   இடம்பெயர்ந்து,  மல்லிகையை  வெளியிட்டார்.  கடந்த சில   வருடங்களாக  மல்லிகை  வெளிவரவில்லை.

மல்லிகை ஜீவாவுடனும்  மல்லிகையுடனும்   மல்லிகையின் நண்பர்களுடனும்   தொடர்ச்சியாக  இணைந்திருந்த  முன்னாள்  தபால் அதிபர்  ரத்தினசபாபதி,  அவர்கள்  மல்லிகையில்  பல  ஆக்கங்களை எழுதியிருந்தபோதிலும்  அவருடைய   முகம்   அட்டையில் பிரசுரமாகவேயில்லை. அட்டைப்பட  அதிதி  என்ற  மகுடத்தில்  இலங்கை,  இந்திய  மற்றும் புலம்பெயர்ந்த    படைப்பாளிகள்,   கல்விமான்கள்,  கலைஞர்கள், சமூகப்பணியாளர்கள்,   முற்போக்கான  அரசியல்  தலைவர்கள்  பலரும்   அட்டைப்பட  அதிதிகளாக  மல்லிகையில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பழைய  மல்லிகை  இதழ்களை   பார்த்தால்,  எத்தனைபேர்  அவ்வாறு கனம் பண்ணப்பட்டுள்ளனர்  என்பது   தெரியவரும். பின்னாளில்   அக்கட்டுரைகளை  தனித்தனி  தொகுதிகளாகவும் மல்லிகைப்பந்தல்   வெளியிட்டுள்ளது. அட்டைப்பட  ஓவியங்கள் (1986)  மல்லிகை முகங்கள் (1996) அட்டைப்படங்கள் (2002)  முன்முகங்கள் (2007)  முதலான தொகுப்புகள்தான்  அவை.   இந்த  வரிசையில்  முதல்  வெளியீடான அட்டைப்பட  ஓவியங்கள்  நூல்,   தமிழ்நாட்டில்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்  பதிப்பகத்தினால்  மற்றும்  ஒரு  பதிப்பையும் கண்டிருக்கிறது. ஆனால்,   மல்லிகையின்  வளர்ச்சிக்கு  பல  ஆண்டுகாலம் பக்கத்துணையாக  விளங்கிய  ரத்தினசபாபதி  அவர்களின்  படம்தான் மல்லிகையின்   முகப்பு  அட்டையை   அலங்கரிக்கவில்லை. கண்களுக்கு  கண்ணின்  இமைகள்   தெரிவதில்லை. ஆயினும் -  ஜீவா  ஆரம்பத்தில்  வழக்கமாக  எழுதும்  மல்லிகையின் கொடிக்கால்கள்   என்ற  பத்தியில்    இவரைப்பற்றிய   குறிப்பினை பதிவுசெய்துள்ளார்

Last Updated on Sunday, 22 May 2016 00:33 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: முதல் பிரதியை சைவஹோட்டல் வாயிலில் வெளியிட்ட விஞ்ஞான ஆசிரியர்; நாவலப்பிட்டியில் படிப்பகம் அமைத்து இலக்கியப்பயிர் வளர்த்த சீர்மியத்தொண்டர்!

E-mail Print PDF

 இர.சந்திரசேகரன்நூல் வெளியீடுகள்  எங்கும்  நடக்கின்றன.  முதல்  பிரதி,  சிறப்புப்பிரதி வழங்கும்  சடங்குகளுக்கும்  குறைவில்லை.  அவற்றை அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள்  படிக்கிறார்களா ?  என்பது  வேறு  விடயம். இவ்வாறு  நூல்களின்  அரங்கேற்றங்கள்  கோலம்கொண்டிருக்கையில்,  ஒரு  எழுத்தாளரின்  நூலை முகத்திற்காக  விலைகொடுத்து  வாங்காமல்,  எதிர்பாராத  தருணத்தில் ஒரு  சைவஹோட்டல்  வாயிலில்  அந்த  எழுத்தாளரின் கைப்பையிலிருக்கும்  நூலைக்  கண்டுவிட்டு  பணம்  கொடுத்து வாங்கிய     முகம்  மறந்துபோன ஒரு  வாசக  அன்பர்  இன்றும் அழியாதகோலமாக  அந்த  எழுத்தாளரிடம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அந்த  எழுத்தாளர்  தமது  முதலாவது  நூலை  1974   ஆம்  ஆண்டு புரட்டாதி  மாதம்  கொழும்பில்  ஒரு  அச்சகத்தில்  அச்சடித்துவிட்டு, அவற்றில்  25   பிரதிகளை   எடுத்துக்கொண்டு  கோட்டை  ரயில் நிலையத்திற்கு  முன்னால் அமைந்துள்ள  பிரபல சைவஹோட்டலுக்குச்செல்கிறார்.

அங்கு  தமது  புதிய  நூலின்  பிரதிகளை  விற்பனைக்கு வைக்கமுடியுமா ?  எனக்கேட்கிறார்.    இத்தகைய விற்பனைக்காக  அந்த  ஹோட்டலுக்கு  அவர்  கமிஷனும் கொடுக்கத்தயார். ஆனால்,  அங்கு  மறுத்துவிடுகிறார்கள்.  சொல்லப்பட்ட  பதில் "இலங்கை  நூல்கள்  விற்பனை  செய்வதில்லை."

அங்கிருந்த  கண்ணாடி   அலுமாரியில்  தமிழகத்தின்  நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.   மேசையில்  தமிழக  வணிக  இதழ்கள் வண்ணம்   வண்ணமாக  விற்பனைக்கு  இருந்தன.

அந்த  எழுத்தாளர்  ஏமாற்றத்துடன்  படி  இறங்கியபோது,  அந்த ஹோட்டலில்  உணவருந்திவிட்டு  கையை    காகிதத்தால் துடைத்துக்கொண்டு  வந்த  ஒரு  தமிழ்  அன்பர்,  அந்த  எழுத்தாளரை நிறுத்தி  "  உங்கள்  புத்தகத்தின்  விலை  என்ன ?   என்று கேட்கிறார்.

" மூன்று  ரூபா  தொன்னூறு  சதம்."

அந்த  அன்பர்  நான்கு  ரூபாவை  நீட்டி  நூலைப்பெற்றுக்கொள்கிறார்.

Last Updated on Tuesday, 24 May 2016 17:24 Read more...
 

பவளவிழா நாயகன் ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 15 - 04 - 2016 அன்று 75 வயது. பவளவிழாக்காணும் ஈழத்து படைப்பாளியின் பல்துறை பணிகள்! புன்னாலைக்கட்டுவனிலிருந்து தமிழர் புலம்பெயர் நாடுகள் வரையில் பயணித்த யாத்ரீகன்!

E-mail Print PDF

ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன்1.
"கிழக்கு  வானில்  சூரியன்  தங்கப்பாளமாக  ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான்.    சூரியோதயத்தை  நான்  முன்னர் கடற்கரையோரங்களில்   நின்று  பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால்,   உயரத்தில்,   பறந்துகொண்டிருக்கும்  விமானத்திலிருந்து, புதிய  கோணத்தில்  வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும்  மேகங்களினூடாக   அந்த   அழகிய காட்சியைப்பார்த்தபோது   நான்  மெய்மறந்துபோனேன்.   ஆதவனின்  ஒளிப்பிழம்புகள்    கணத்துக்குக்கணம்   புதிது  புதிதாய் கொள்ளை   அழகை   அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன."

இலங்கையிலிருந்து  17   ஆண்டுகளுக்கு   முன்னர்   வானத்தில்   பறந்து வரும்பொழுது Dr.T.Gnanasekaran  அவுஸ்திரேலியா  சிட்னியில்  இறங்கும்  தருணத்தில்  விமானம்  தரைதட்டுவதற்கு  முன்னர்   அந்த அதிகாலைப்பொழுதின்  உள்ளங்கவர்  காட்சியை   தரிசித்த   58   வயது படைப்பாளி  ஞானசேகரனின்   அன்றைய   வர்ணிப்புத்தான்   அந்த சூரிய  உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில்  இலக்கியவானில் ஞானம்   கலை,  இலக்கிய  இதழின்  பரிமாணத்துடன்  அவருக்கு பேருதயமாகியது   என்பதற்கு  ஒரு  நேரடி  சாட்சியாக  இருந்துகொண்டு   பவளவிழா  நாயகன்  ஞானம்  ஆசிரியர்  தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன். இலங்கையில் 1999 வரையில் நான் இவரை சந்தித்திருக்கவில்லை.

1999 ஆம்  ஆண்டு அவுஸ்திரேலியாவில்  சிட்னியில்  வதியும்  தமது புதல்வரிடம்   இவர்  தமது   துணைவியாருடன்   புறப்படுவதற்கு முன்னர்   மல்லிகை  ஜீவாவிடம்  எனது  தொடர்பிலக்கம்  பெற்றுள்ளார். ஒருநாள்   சிட்னியிலிருந்து   ஞானசேகரன்  தொலைபேசியில் அழைத்தபோது,  மெல்பனுக்கு  அழைத்தேன்.   எமது  இல்லத்தில்  ஒரு  மாலைவேளையில்     இலக்கியச்சந்திப்பும்   இரவு   இராப்போசன விருந்தும்    ஒழுங்குசெய்தபொழுது , மெல்பன்  இலக்கிய  ஆர்வலர்கள் செல்வத்துரை   ரவீந்திரன் ,  டாக்டர்  சத்தியநாதன்,   நடேசன்,   புவனா ராஜரட்ணம்,    அருண். விஜயராணி,   பாடும்மீன்  சிறிகந்தராசா ஆகியோர்    கலந்துகொண்டனர். மெல்பனில்   பாலம்  லக்ஷ்மணன்   அவர்களின்  இல்லத்திற்கும்  மாவை நித்தியானந்தனின்   பாரதி   பள்ளிக்கும்   வேறு  சில இடங்களுக்கும்  அழைத்துச்சென்றேன்.    காரில்  அமர்ந்தவாறே குறிப்புகள்    எடுத்துக்கொண்டார்.    பயணக்கதைக்கு   அவர் தயாராகிவிட்டார். இலங்கை   திரும்பியதும்   தினக்குரல்  வார  இதழில் அவுஸ்திரேலியப்பயணக்கதையை    சில  வாரங்கள்  தொடர்ந்து   எழுதி  - இறுதியில் அந்தத்தொடரையே நூலாக்கினார்.  பேராசிரியர் சி. தில்லைநாதனின்  அணிந்துரையுடனும்  எனது  முன்னுரையுடனும் அந்த  நூல்  வெளியாகியது. அவ்வேளையில்  ஞானசேகரன்  தமது  மருத்துவப்பணி  நிமித்தம் கண்டியில்   வசித்தார்.  கண்டி  முகவரியிலிருந்து  ஞானம் பதிப்பகத்தினால்   1999  மார்கழியில்   அந்த   நூல்  வெளியானது. அவுஸ்திரேலியா  வந்தவர்,   இந்தக்கங்காரு  நாட்டைப்பற்றி  மாத்திரம்   தகவல்  சேகரிக்கவில்லை.   இங்கிருந்த  எஸ்.பொ, மாத்தளை  சோமு,   முருகபூபதி,   அருண் . விஜயராணி  முதலான படைப்பாளிகள்,   நாடகக்கலைஞர்  சி. மனோகரன்  ஆகியோருடனான நேர்காணலையும்  பதிவுசெய்துகொண்டு,   சிட்னியில்   24   மணிநேரமும்   ஒலிபரப்பாகும்  இன்பத்தமிழ் வானொலி   இயக்குநர் பாலசிங்கம்   பிரபாகரனுக்கும்    நேர்காணல்  வழங்கிவிட்டு   தாயகம் திரும்பினார். ஞானசேகரன்    சந்தித்தவர்களுடனான  நேர்காணல்   தொகுப்பும், வானொலிக்கு    அவர்  வழங்கிய   பேட்டியும்    இணைந்த  புரிதலும் பகிர்தலும்   என்ற   நுலையும்  அதே  1999  ஆம்  ஆண்டு  மார்கழியில் வெளியிட்டார்.

Last Updated on Saturday, 16 April 2016 06:12 Read more...
 

அஞ்சலி: வாழ்வின் துன்பியல் அரங்காற்றுகையில் கானல் திரைக்குப்பின்னால் வாழ்ந்த எழுத்தாளர் கே. விஜயன் படைப்புகளின் மூலப்பிரதியை தொலைத்துவிட்டுத் தேடாமல் நினைவில் தேங்கியிருந்ததை மீண்டும் பதிவுசெய்தவர்

E-mail Print PDF

அமரர் கே.விஜயன்அடுத்தடுத்து  எம்மிடமிருந்து  விடைபெறுபவர்களின்   வரிசையில் இலக்கிய   நண்பர்  கே. விஜயனும்  அண்மையில்   இணைந்துகொண்டு எம்மிடமிருந்து  அகன்றுவிட்டார். இவருடைய   பெயரில்  சென்னையில்  ஒரு  திரைப்பட  இயக்குநர் இருந்தார்.   ஜெயகாந்தனின்   நண்பர்.    அதனால்  ஈழத்து  எழுத்தாளர் விஜயனை   நான்   காணும்   சந்தர்ப்பங்களில்  "  எப்படி  இயக்குநர்  சார்?" என்று   வேடிக்கையாக  அழைப்பதுண்டு. கே. விஜயன்  என்ற  பெயர்   ஈழத்து  இலக்கிய  உலகிலும் தமிழ்ப்பத்திரிகைச்சூழலிலும்   நன்கு  பிரசித்தி  பெற்றிருந்தது. சிறுகதை,  தொடர்கதை,   நாவல்,  கட்டுரை,  விமர்சனம்,  பத்தி எழுத்துக்கள்,   கலை  இலக்கிய  நிகழ்ச்சிகள்  பற்றிய விவரணச் சித்திரம்   என  நிறைய  எழுதிக்குவித்தவர்தான்  விஜயன்.   அத்துடன் வீரகேசரி,   சுடரொளி  ஆகிய  பத்திரிகைகளிலும்  பணியாற்றியவர். நான்   எழுதத்தொடங்கிய  காலத்திற்கு  முன்னே   எழுதியவர். இவருடைய   தொடர்கதை  ஒன்று  மித்திரன்  நாளிதழில்  வெளியான சமயத்தில் அதனை (Proof Reading)  ஒப்பு நோக்கியிருக்கின்றேன். அச்சமயத்தில்   அவர்  வெள்ளவத்தையில்   ஒரு ஆடைத்தொழிற்சாலையில்  பணியிலிருந்தார்.

இலங்கையில்  தேசிய  இலக்கியம்,   மண்வாசனை,  பிரதேச  மொழி வழக்கு   முதலான  சொற்பதங்கள்  பேசுபொருளாக  இருந்த  அக்கால கட்டத்தில்   விஜயன்,  கொழும்பு  வாழ்  மக்களின்  பேச்சுத்தமிழில் தமது   கதைகளை   எழுதியவர்.

1977 - 1987   காலப்பகுதியில்   கொழும்பிலிருந்து  வெளியான தினகரன்,   வீரகேசரி,  ( தினபதி ) சிந்தாமணி  ஆகிய   பத்திரிகைகளின் வாரப்பதிப்புகளில்   இலக்கிய  பத்தி  எழுத்துக்கள்  பரவலாக அறிமுகமாகியிருந்தன.    சிந்தாமணியில்  அதன்  ஆசிரியர்  எஸ்.டி. சிவநாயகம்    இலக்கிய  பீடம்   என்ற  தலைப்பில்  பத்தி  எழுதினார். தினகரனில்    எஸ். திருச்செல்வம் -  எஸ்.தி. பக்கம்  என்ற   தலைப்பில் எழுதினார். வீரகேசரி   வாரவெளியீட்டில்  இலக்கியப்பலகணி   என்ற  தலைப்பில் ரஸஞானி  என்ற  புனைபெயரில்  நான்  எழுதிவந்தேன். அதற்கெல்லாம்   முன்னர்,  எச். எம். பி. மொஹிதீன்,  தினகரன் வாரமஞ்சரியில்  அபியுக்தன்,   அறிஞர்கோன்   என்ற   தலைப்புகளில் எழுதினார்.  அவர்  இலங்கை  வானொலியில்  நிகழ்ந்த  ஊழல்கள் பற்றியெல்லாம்  அதில்  அம்பலப்படுத்தினார்.   அத்துடன்  சில அரசியல்  வாதிகளையும்  சீண்டினார்.   அதனால்  வெகுண்ட  அன்றைய   கல்வி   அமைச்சர்  அல்ஹாஜ்  பதியுதீன்  முகம்மத் லேக்ஹவுஸ்   மேலிடத்திற்குச்சொல்லி , மொஹிதீனின்  அந்த பத்திஎழுத்துக்களை    தடைசெய்தார். பின்னாளில்  மொஹிதீன்    அபியுக்தன்   என்ற    பெயரிலேயே    ஒரு மாத   இதழையும்   சிறிதுகாலம்     வீம்புக்கு    நடத்தி    ஓய்ந்துபோனார்.

எஸ்.தி. , தினகரனில்   எழுதிய  சில  பத்தி  எழுத்துக்களினால்  அலை யேசுராசா,   புதுவை  இரத்தினதுரை  முதலானோரும்  தமிழ்க்கதைஞர் வட்டத்தினரும்   கோபமுற்ற   செய்திகளும்  உள்ளன. மொஹிதீன், அறிஞர்கோன்   எழுதியபொழுது,   வித்துவான்   ரஃமான் எரிச்சலுற்று  "அது  என்ன ? அறிஞர்கள்  சூப்பிய  ஐஸ்கிறீம் கோனா?"  என்று   எள்ளிநகையாடினார்.

எனது   இலக்கியப் பலகணியில்  முடிந்தவரையில்  விவகாரத்துக்குரிய  சர்ச்சைகளை   நான்  உருவாக்காமல் இருந்தமைக்கு   எனது  இயல்புகள்  மட்டுமல்ல,  எனக்கு  வீரகேசரி ஆசிரியர்கள்    ஆ. சிவநேசச்செல்வனும்,    பொன். ராஜகோபாலும் இட்டிருந்த   கடிவாளமும்   ஒரு  காரணம்தான். அதனால்  எனது  பத்தியில்  " ரஸமும்  இல்லை.   ஞானமும்  இல்லை "  எனச்சொன்னவர்களும்  வாரம்தோறும்  அந்தப்பத்திகளை படிக்கத்தவறவில்லை.

Last Updated on Tuesday, 12 April 2016 06:02 Read more...
 

"சின்னமாமியே" புகழ் கமலநாதன்! மறைக்கப்பட்ட பாடலாசிரியரும் மறைந்தார்! இலங்கை தமிழ்பொப்பிசைப்பாடல் பிதாமகருக்கு அஞ்சலி

E-mail Print PDF

"சின்னமாமியே" புகழ் கமலநாதன்! மறைக்கப்பட்ட  பாடலாசிரியரும் மறைந்தார்! இலங்கை தமிழ்பொப்பிசைப்பாடல்  பிதாமகருக்கு அஞ்சலிஇலங்கையிலும்  தமிழ்நாட்டிலும்  நகரம்,  கிராமம்  உட்பட பட்டிதொட்டியெங்கும்  பிரசித்தமான  பாடல்தான்  "  சின்ன  மாமியே  உன்  சின்னமகளெங்கே ?  பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச்சென்றாளோ ?   "தமிழ்த்திரைப்படங்கள்  சிலவற்றிலும்  இடம்பெற்றுள்ளது.  இலங்கை வடமராட்சியைச்சேர்ந்த  கலைஞர்  கமலநாதன்  இயற்றிய அந்தப்பாடல்,  தற்பொழுது  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும் பிரபல  பாடகர்  நித்தி கனகரத்தினத்தால்  பிரசித்தி பெற்றது. ஒரு  கால கட்டத்தில்  இளைஞர்களை   பெரிதும்  வசீகரித்த இந்தப்பாடலை  இயற்றிய  கமலநாதன்  நேற்று (26-01-2016)  வடமராட்சி  -  வதிரியில்  அக்கினியுடன்    சங்கமமானார்.

சில   மாதங்களாக  சுகவீனமுற்றிருந்த  கமலநாதன்,  வடமராட்சியில் சிறந்த  கல்விப்பாரம்பரியத்தின்  பின்னணியிலும்  கலை, இலக்கிய ஊடகத்துறை  செயற்பாட்டாளர்களின்   பின்னணியிலும்  வாழ்ந்தவர். சிறந்த   உதைபந்தாட்ட  வீரர்.   பின்னர்  உதைபந்தாட்டப்போட்டிகளுக்கு    மத்தியஸ்தராகவும்  விளங்கியவர். பாடல்   புனையும்  ஆற்றலும்  இவருக்கிருந்தமையால்  சுமார் அரைநூற்றாண்டுக்கு  முன்னர்  எழுதிய  பாடல்தான்  சின்ன  மாமியே.   எனினும்  அதனை  மேடைகள்தோறும்  நித்தி கனகரத்தினம் பாடிக்கொண்டிருந்தமையால்,  கமலநாதனின்  பெயர்  வெளியில் தெரியவில்லை.   எனினும்  இப்பாடலின்  ரிஷிமூலத்தை  காலம் கடந்து  எழுத்தாளர்  வதிரி சி. ரவீந்திரன்  வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தார். இலங்கை   பத்திரிகைகளில்  இச்செய்தி  பகிரங்கமானபொழுது தன்னடக்கம்    பேணியவர்  கமலநாதன்.

ஒரு  காலகட்டத்தில்,  ஏ.ஈ. மனோகரன்,  நித்தி  கனகரத்தினம், இராமச்சந்திரன்,  முத்தழகு, அமுதன் அண்ணாமலை  முதலான  பலரால்  பொப்பிசைப்பாடல்கள்    இலங்கையிலும்  தமிழ்  நாட்டிலும்  பிரபல்யம்   பெற்றன. அவ்வாறே  சிங்கள  மக்கள்  மத்தியில்  எச்.ஆர். ஜோதிபால,  பிரடீ சில்வா,   ஷெல்டன்  பெரேரா,  எம்.எஸ். பெர்னாண்டோ,  மில்டன் மல்லவராச்சி  முதலானோரும்  பிரபல்யம்  பெற்றிருந்தனர்.

சமூக சீர்திருத்தம்  தொடர்பாகவும்   மனிதர்கள்,  மற்றும்   மாறிவரும் உலகத்தின்   நவநாகரீகம்   பற்றிய  அங்கதச் செய்திகளும்  இந்தப்பொப்பிசைப்பாடல்களில்   தொனிக்கும்.    இன்றைய   நவீன கணினி   தொழில்நுட்ப  சாதனங்கள்  இல்லாமலேயே   குறைந்தளவு வசதிகளுடன்   பொப்  பாடல்களின்  ஊடாக அவற்றை    இயற்றியவர்களின்  கருத்துக்களை  நகைச்சுவையுடனும் சோகரசத்துடனும்  நளினமான  ஆடல்கள்  மூலமும்  இந்தப் பாடகர்கள்   மக்கள்  மத்தியில்    எடுத்துச்சென்றனர். ஆனால்,  கேட்டு  ரசித்து  தாமும்  பாடும்  மக்களுக்கோ  இந்தப்பாடல்களை    இயற்றியவர்  யார்  ?  என்பது  தெரியாது.   அவ்வாறே    கமலநாதனும்  கிணற்றுள்  விளக்காக  வாழ்ந்தார்.

Last Updated on Wednesday, 27 January 2016 22:03 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: நிழலாகத்தொடர்ந்துவரும் நினைவுகளில் கனடா ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா! எழுத்தில் தர்மத்தையும் தார்மீகத்தை வேண்டி நிற்கும் பெண்ணியக்குரல்!

E-mail Print PDF

ஶ்ரீரஞ்சனி விஜேந்திராமுருகபூபதி" கனடாவுக்கு வந்த வயது முதிர்ந்த அம்மா அன்பிருந்தும் நேரமின்மையால் அல்லற்படும் பிள்ளைகளின் பாராமுகம் கண்டு இதென்ன வாழ்க்கை என்று ஊருக்குப் போய்விடுகிறாள். ஆனால் ஊரில் பெரிய காணியும் வீடும் இருந்தும் கனடாவில் பேரப் பிள்ளைகளைப் பிரிந்து வந்த குற்ற உணர்வு நிம்மதியைக் கெடுத்து விடுகிறது. முடிவில் தங்கள் விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அந்தத் தாய் கனடாவுக்குத் திரும்புகிறாள்  பேரப் பிள்ளைகளுக்காக!

இந்தக் கதை கனடாவில் மனதுள்ளே பொருமும் எத்தனையோ தாய்மாருக்கு உங்கள் குமுறலுக்கு அர்த்தம் இல்லை என்று அறிவிக்க ரஞ்சனியால் எழுதப்பட்டிருக்கின்றது. பணத்தை வைத்துப் பயமின்றி வாழலாம்! ஆனால் பாசத்தை வைத்துத் தான் பதறாமல் வாழமுடியும்! " என்று சாலினி என்பவர் கனடாவில் வதியும்  ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின்  நான் நிழலானால்  கதைத்தெகுப்பினை மதிப்பீடு செய்கிறார். பேரக்குழந்தைகளுடன்  வாழும்  வாழ்க்கை  காவிய  நயம் மிக்கது என முன்னர்  எழுதியிருக்கின்றேன்.

எனது மகளின் இரண்டு வயதுக்குழந்தையுடன்  ஒருநாள்  இரவு விளையாடிக்கொண்டிருந்தபொழுது,   அவள்  நடந்துவரும் அழகை ரசித்தேன்.   ஆனால்,  அவளோ  தன்னைப்பின்தொடரும் நிழலை திரும்பித்திரும்பிப்  பார்த்து  ரசித்தாள்.   சிரித்தாள்.   அவளைப்பின்பற்றி தொடரும்   நிழல் பற்றி அவளுக்கு எதுவும்  புரியவில்லை. அதனைக்காட்டி  "தாத்தா " என்று  விளித்தாள்.   அவளுக்கு அது என்ன என்று   விளக்கவேண்டும். நானும்  அவளுடன்  நடந்து  எனது  நிழலையும்  அவளுக்கு காண்பித்தேன்.  அவள்  அட்டகாசமாகச்   சிரித்தாள்.   தொடர்ந்தும் அவ்வாறு   என்  கைபற்றி  நடந்து  திரும்பித்திரும்பி  நிழலைப்பார்த்து சிரித்தாள்.

அந்தக்கணம்  என்னை  கொள்ளைகொண்டுசென்றது.   இப்படி உலகெங்கும்   எத்தனையோ  தாத்தா,  பாட்டிமார்  தங்கள்  மனதை தமது   பேரக்குழந்தைகளிடம்  பறிகொடுத்துவிட்டு,   எங்கும்  அகன்று சென்றுவிட   முடியாமல்   கட்டுண்டு  கிடக்கின்றனர். நாம் எமது  நிழலைப் பார்த்து என்றைக்காவது  சிரித்திருப்போமா---? நிழலுக்குள்  ஆயிரம்  அர்த்தங்கள்  இருக்கின்றன.   தென்னிந்தியாவில் ஒரு  நடிகர்  நிழல்களின்  பெயரில்  வாழ்கிறார்.   நிழல்கள்,  நிழல் நிஜமானால்   என்றெல்லாம்  படங்களும்  வெளியானது. " இன்றும்  தாயகத்தின்  நினைவுகளிலேயே   அலைகிறார்கள். நனவிடைதோய்ந்துகொண்டிருக்கிறார்கள்."  என்று  புலம்பெயர்ந்து வாழும்  எமது  ஈழத்தமிழ்ப்படைப்பாளிகள்  பற்றி  விமர்சகர்களிடம் பொதுவான  குற்றச்சாட்டு  நீடிக்கிறது. ( இதுபற்றிய விவாதத்தை கனடா பதிவுகள் கிரிதரன் தமது முகநூலில் தொடக்கியிருக்கும்  தருணத்தில்  ஸ்ரீரஞ்சனி  பற்றிய இந்தக்கட்டுரையை   எழுதநேரிட்டதும்   தற்செயலானது)

Last Updated on Friday, 22 January 2016 02:55 Read more...
 

தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலைத் தோற்றுவித்த குரல் ஓய்ந்தது.! முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி!

E-mail Print PDF

தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலைத் தோற்றுவித்த குரல் ஓய்ந்தது.! முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி!'இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க
இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.
சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க
ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்;க"


தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் - பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே  1955 ஆம் ஆண்டு பிறந்த குணசேகரன்,  நாட்டுப்புற பாடல்கள்  ஆய்வில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர். காலம் காலமாக நீடித்த முன்னைய மரபார்ந்த அரங்கவியலுக்கு மாற்றாக தலித் அரங்கவியல் கோட்பாட்டை உருவாக்கியவர் குணசேகரன். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தலித் கலை இலக்கிய அமைப்புகளின் மாநாடுகளில் இவருடைய நிகழ்ச்சிகளின்  அரங்காற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.

தன்னானே என்னும் பெயரில் நாட்டுப்புறக்கலைக்குழுவை அமைத்து, தமிழ்நாட்டின் கிராமங்கள்தோறும் தலித் மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய சமூகப்போராளி.  நாட்டுப்புறக்கலைகள் தொடர்பாக ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த குணசேகரன் எழுதிய 'நாட்டுப்புற மண்ணும் மக்களும்'.என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. புதுவை அரசின் கலை மாமணி விருதும் பெற்றவர்

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தமிழ்நாட்டில் தலித் பண்பாடு இலக்கியம் குறித்த முன்முயற்சிகளை 1990 களின் துவக்கத்தில் முன்னெடுத்தபோது  தங்களோடு எல்லா களங்களிலும் இணைந்து நின்றவர். தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது 'மனுசங்கடா' ஒலிநாடாவுக்கும் 'பலி ஆடுகள்' நாடகத்துக்கும் முக்கியமான இடம் உண்டு. " என்று முன்னாள் சட்டசபை உறுப்பினரும் எழுத்தாளரும் நிறப்பிரிகை ஆசிரியருமான தோழர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: மருத்துவ கலாநிதியாகியிருக்கவிருந்தவர், இலக்கிய மருத்துவ நிபுணரான அதிசயம்! தெல்லிப்பழை மகாஜனாவின் புதல்வர்களின் வரிசையில் வந்த விழிசைக்குயில் கோகிலா மகேந்திரன்!

E-mail Print PDF

கோகிலா மகேந்திரன்எல்லாமே  நேற்று  நடந்தது போலிருக்கிறது.   காலம்  என்னதான் விரைந்து  ஓடிMrsKohilamMahendranனாலும்,  நினைவுச்சிறைக்குள்  அடைபட்டுத்தான் வாழ்கிறது.    அவ்வப்போது  விடுதலையாகி  வெளியே  வந்தாலும்  அந்தக்கூட்டுக்குள்   மீண்டு விடுகிறது  பறவையைப்போன்று. திசை  மாறிய  பறவைகள் பற்றி அறிவோம்.  ஒரு  மருத்துவ கலாநிதியாக  வந்திருக்கவேண்டியவர்,  எவ்வாறு  திசைமாறி இலக்கிய  மருத்துவரானார்....?   தெல்லிப்பழை   விழிசிட்டி  என்ற கிராமத்திலிருந்து   கூவத்தொடங்கிய  ஒரு   விழிசைக்குயில் பற்றியதுதான்   இந்தப்பதிவு.

1972 ஆம்  ஆண்டு  ஜூலை  மாதம்  13  ஆம்  திகதியன்று  மதியம் எனது   வீட்டுக்கு  தபாலில்  வந்த  மல்லிகையின்  அந்த மாதத்திற்குரிய  இதழை   என்னால்   மறக்கமுடியாது.   அன்றுதான் எனது  பிறந்த  தினம். அந்த  மல்லிகையின்  அட்டையை   அலங்கரித்தவர்  பாவலர் துரையப்பாபிள்ளை.   அவர்  பற்றி  நான்  அதிகம்  அறிந்திராத  காலம்.   அவர்தான்  யாழ்ப்பாணம்  தெல்லிப்பழை  மகாஜனா கல்லூரியின்   ஸ்தாபகர்  என்ற  தகவலையும்,  தொலைவில்   வாழ்ந்த நான் மல்லிகையிலிருந்து   தெரிந்துகொண்டேன்.  அந்த  இதழில்தான் எனது   முதல்  சிறுகதை  கனவுகள்  ஆயிரம்  வெளியாகியிருந்தது.  அந்த   இதழை  தபால் ஊழியர்  தரும்பொழுது, "  மொக்கத்த  பொத்த...?" (" என்ன  புத்தகம்...? " ) எனச்சிங்களத்தில்  கேட்டார். "  மல்லிகை " என்றேன்.    அவருக்குப்புரியவில்லை.   வீட்டின்  முற்றத்தில் படர்ந்திருந்த   மல்லிகைக் கொடியையும்,  பூத்திருந்த  மல்லிகை மலர்களையும்   காண்பித்தேன்.

பின்னர்  அந்தத்  தபால்  ஊழியர்  மாதாந்தம்  மல்லிகையை கொண்டுவரும்பொழுது,   ஒருதடவை   அதன்  அட்டையில் பதிவாகியிருந்த   மூத்த சிங்கள  எழுத்தாளர்  மார்ட்டின் விக்கிரமசிங்காவின்   படத்தையும்  காண்பித்தேன்.

அந்த   ஊழியர்  ஆச்சரியப்பட்டார்.   அந்த  ஆச்சரியத்தின்  அர்த்தங்கள் ஆயிரம். ஆனால்,   சிங்கள  மக்களுக்கும்  இவ்வாறு   ஆச்சரியம்  தந்த மல்லிகை இன்று   இணையத்தில்தான்  (www.noolagam.com) வாழ்கிறது.

மகாஜனா  கல்லூரியில்  பயின்ற  பலர்  பின்னாளில்  கலைஞர்களாக, படைப்பாளிகளாக,  அதிபர்,   ஆசிரியர்களாக,  பத்திரிகையாளர்களாக, இசை,  நடனக் கலைஞர்களாக,  பாடகர்களாக  பிரபல்யம் பெற்றிருக்கிறார்கள்.

Last Updated on Friday, 08 January 2016 20:48 Read more...
 

மகாபாரத பாண்டவர் சபையில் அடித்துக்கொல்லப்பட்ட "துணிச்சலான ரிஷி" சார்வாகன் பெயரை புனைபெயராக்கிய இலக்கிய ஆளுமை மறைந்தார். தொழுநோயாளருக்கு சிகிச்சையளித்த மனிதநேய மருத்துவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

E-mail Print PDF

எழுத்தாளர் சார்வாகனன் மறைவு!சமகாலத்தில்  மறைந்தவர்களின்  அறையினுள்தான்  வாழ்கின்றேனா....?  இந்தக்கேள்வியை  எனக்கு  நானே   கடந்த  ஆண்டின்  தொடக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டே  இருக்கின்றேன்.  ஆனால்,  இந்தக்கேள்விக்கு  பதில் இல்லை.   இந்த  ஆண்டின்  இறுதியும்  மறைந்தவர்களின்  அறையினுள்தான் என்னை  முடக்கிப்போட்டிருக்கிறது.   எனது  அறையிலிருக்கும்  கணினியை திறக்கும்பொழுதே   பதட்டம்தான்  வருகிறது.

துயில்  மறைந்து  பல   மாதங்கள்.   துயரம்  கப்பிய  சிந்தனைகளும்  அப்படியே  பல  மாதங்களாக  ஓடுகிறது.   முற்றுப்புள்ளியில்லாத  நீண்ட வசனங்களையே  எனது  அறையிலிருந்து  எழுதுகின்றேன்.   பழகியவர்கள் தெரிந்தவர்கள்  இலக்கியப்பாதையில்  இணைந்து  வந்தவர்கள் ஒவ்வொருவராக  விடைகொடுக்கும்பொழுதும்  அவர்களின்  படங்கள் நிரம்பியிருக்கும்   எனது  கணினியை  தினமும்  பார்க்கும்பொழுதும் நீண்டபொழுதுகள்   தினமும்  செலவிடும்  இந்த  அறை   எனக்கு மறைந்தவர்களின்   அறையாகவும்,   அவர்கள்  என்னோடு  பேசிக்கொண்டிருக்கும்    அறையாகவும்  மாறிவிட்டது.

கடந்த  20  ஆம்   திகதி  ஞாயிற்றுக்கிழமை   அவுஸ்திரேலியா  மெல்பனில் எமது  அருமை   இலக்கியச்சகோதரி  அருண். விஜயராணியை  அவருடைய இறுதிப்பயணத்தில்  வழியனுப்பிவிட்டு  மறுநாள்  21  ஆம்  திகதி  வீடு  திரும்பி  அவருடைய   இறுதி    நிகழ்வுகளை  மனதில் அசைபோட்டுக்கொண்டிருக்கையில்  அடுத்த  செய்தி  தமிழ்நாட்டிலிருந்து தளம்  ஆசிரியரும்  மூத்த  எழுத்தாளர்  அகிலனின்  மருமகனுமான  பா. ரவியிடமிருந்து  வருகிறது.

" முருகபூபதி,  எங்கள்  சார்வாகன்  மறைந்தார்."

" ஆளுமைகளையெல்லாம்  உம்மிடம்  அழைத்துக்கொள்ளும் வேலையைத்தான்  தொடர்ந்து  பார்க்கிறீரா...? "   என்று  அந்தக்கடவுளிடம் உரத்துக்கேட்கின்றேன்.  ஆனால்,  எனக்கிருக்கும்   அந்த  இறை நம்பிக்கைகூட   இல்லாத  ஒரு  மகத்தான  மனிதர்தான்  ஸ்ரீநிவாசன்  என்ற சார்வாகன். அவர்    பிராமணர்  சமூகத்தைச் சேர்ந்தவர்.  ஆனால்,  தனக்கு  மதம் மீதான   நம்பிக்கை ஏன்  இல்லாமல்  போனது...?  என்று  என்னிடம்  ஒரு உண்மைக்கதையையே   மெல்பனுக்கு  வந்திருந்த சமயத்தில் சொல்லியிருக்கிறார்.

யார்  இந்த  சார்வாகன்....?

Last Updated on Friday, 01 January 2016 22:36 Read more...
 

மூத்த எழுத்தாளர் பத்மஸ்ரீ சார்வாகன் மறைந்தார்!

E-mail Print PDF

எழுத்தாளர் சார்வாகனன் மறைவு!தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளரும் தொழுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்ற சார்வாகன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை  சென்னை திருவான்மியூரில் வால்மீகி நகரில் மறைந்தார். இவருக்கு 86 வயது. தமிழகத்தில் வெளியான இலக்கியச்சிற்றிதழ்கள் எழுத்து -கணையாழி - ஞானரதம் - தீபம் - தளம்  ஆகியனவற்றில் எழுதியவர். ஒருதடவை இலக்கியச்சிந்தனை அமைப்பின் பரிசும் பெற்றார். சென்னை வாசகர் வட்டம் 1970 களில் வெளியிட்ட அறுசுவை குறுநாவல் தொகுப்பில் இவருடைய அமரபண்டிதர் கதையும் இடம்பெற்றது.

காஃப்கா பாணியில் கதை எழுதுபவர் என்று இலக்கிய விமர்சகர்களினால் மதிப்பீடுசெய்யப்பட்ட சார்வாகனின் இயற்பெயர் ஸ்ரீநிவாசன். இவருடைய நூல்களை தமிழ்நாடு க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவருடைய மனிதநேய மருத்துவசேவையை பாராட்டிய இந்திய மத்திய அரசு ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இவருடைய மருத்துவ ஆய்வுக்கு தமிழ்நாடு மருத்துவக்கல்லூரியில் ஸ்ரீநிவாசன் கருத்தியல் (Srinivasan Concept) என்ற அங்கீகாரம் கிடைத்ததுடன் மாணவர்களின் பயன்பாட்டுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் தென் அவுஸ்திரேலியா மாநிலத்தலைநகரம் அடிலைற்றில் நடந்த தொழுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணர்களின் மாநாட்டிலும் கலந்துகொண்ட சார்வாகன் அங்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த கேர்ணல் ஹரிஹரன் - திரைப்படக்கலைஞர் டில்லி விசுவநாதன் ஆகியோரின் உடன்பிறந்த சகோதரரான சார்வாகன் - இலங்கை தமிழ் அறிஞர் கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதி கி.லக்ஷ்மண அய்யரின் துணைவியார் இலக்கிய ஆர்வலர் திருமதி பாலம் லக்ஷ்மணனின்;  நெருங்கிய உறவினருமாவார். 1951 இல் இவர் மருத்துவக்கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் இலங்கை வந்து சில கல்லூரிகளில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகளிலும் கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 23 December 2015 07:43
 

சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு! -

E-mail Print PDF

அருண். விஜயராணிஎழுதிச்  செல்லும்  விதியின்  கை
எழுதி  எழுதி  மேற்செல்லும்
தொழுது  கெஞ்சி  நின்றாலும்
சூழ்ச்சி  பலவும்  செய்தாலும்
வழுவிப்  பின்னாய்  நீங்கியொரு
வார்த்தை யேனும்  மாற்றிடுமோ,
அழுத  கண்ணீர்   ஆறெல்லாம்
அதிலோர்  எழுத்தை  அழித்திடுமோ

--- உமர்கய்யாம்  ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு ) -

ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, 13-12-2015 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார். இலங்கை வானொலியிலும்  அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும்  நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான  அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் - தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.

Last Updated on Tuesday, 15 December 2015 20:58 Read more...
 

அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும்!

E-mail Print PDF

அருண். விஜயராணி- ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான பெண் படைப்பாளிகளிலோருவர் அருண் விஜயராணி. அவர் இன்று மறைந்துள்ளதாக எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் முகநூலில் அறிவித்திருந்தார். அவரது மறைவையொட்டி எழுத்தாளர் முருகபூபதி  எழுதிய இந்தக்கட்டுரை வெளியாகின்றது. -

கன்னிகளின் குரலாக தனது எழுத்தூழியத்தை தொடர்ந்த அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும்

இலங்கை வானொலி ‘ விசாலாட்சிப்பாட்டி ‘ இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பு

” வணக்கம்…. பாருங்கோ…. என்னத்தைச் சொன்னாலும் பாருங்கோ, உங்கடை விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக் கேட்டால் பாருங்கோ…. வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்கிழமை எண்டால் பாட்டியின்ர நினைவு தன்னால வருகுது. அதனால சில திங்கட்கிழமையில அவவுக்கு தொண்டை கட்டிப்போறதோ இல்லை… வேற ஏதேன் கோளாறோ தெரியாது. இவ வரவே மாட்டா….. பாவம் கிழவிக்கு என்னாச்சும் நேந்து போச்சோ எண்டு ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை எண்ணிக்கை எத்தனை எண்டு உங்களுக்குத்தெரியுமே…? அதனாலை ஒண்டு சொல்லுறன் கோவியாதையுங்கோ… பாட்டியின்ர பிரதியளை இரண்டு மூண்டா முன்னுக்கே அனுப்பிவைச்சியளென்டால் பாட்டி பிழைச்சுப்போகும். தடவித் தடவி வாசிக்கிற பாட்டிக்கு நீங்கள் இந்த உதவியை எண்டாலும் செய்து குடுங்கோ ”

இக்கடிதம் இலங்கை வானொலி கலையகத்திலிருந்து 08-11-1976 ஆம் திகதி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு. விவியன் நமசிவாயம் அவர்களிடமிருந்து ஒரு பெண் எழுத்தாளருக்கு எழுதப்பட்டது. அந்தப்பெண்தான் விசாலாட்சிப்பாட்டி தொடரை எழுதியவர். அந்தப்பெண் அப்பொழுது பாட்டியல்ல. இளம் யுவதி. அவர்தான் அன்றைய விஜயராணி செல்வத்துரை, இன்றைய படைப்பாளி அருண். விஜயராணி. இவரது விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியது.

அக்காலத்தில் பல வானொலி நாடகங்கள் யாழ்ப்பாண பேச்சு உச்சரிப்பில் ஒலிபரப்பாகின. விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார்.

சமூகம் குறித்த அங்கதம் அதில் வெளிப்பட்டது. அங்கதம் சமூக சீர்திருத்தம் சார்ந்தது. அதனை அக்கால கட்டத்தின் நடைமுறை வாழ்வுடன் அவர் வானொலி நேயர்களுக்கு நயமுடன் வழங்கினார். வடக்கில் உரும்பராயைச் சேர்ந்த விஜயராணியின் முதலாவது சிறுகதை ‘ அவன் வரும்வரை ‘ இந்து மாணவன் என்ற ஒரு பாடசாலை மலரில் 1972 இல் வெளியானது.

Last Updated on Sunday, 13 December 2015 06:23 Read more...
 

படித்தோம் சொல்கின்றோம்: சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம்

E-mail Print PDF

சைனா கெய்ரெற்சியின்  குழந்தைப்போராளி  நவீனம்முருகபூபதி"ஏகே 47  துப்பாக்கியுடன்  ஒவ்வொரு  குழந்தையும்  மூன்று ரவைக் கூடுகளை   அணிந்துகொள்கிறார்கள்.  சிலர்  ஆறு ரவைக் கூடுகளைக்கூட  கட்டியிருப்பார்கள்.  இந்தச் சுமையைப்பற்றி எங்களுக்கும்   கவலையில்லை.  எங்கள்  தலைவர்களுக்கும் கவலையில்லை.    எந்தப்பாரத்தைச் சுமந்தாவது,  என்ன  வித்தை காட்டியாவது   தலைமையின்  கவனத்தைப் பெற்றுவிடுவதில் குழந்தைகள்   கண்ணும்  கருத்துமாயிருந்தார்கள்.   கனமான இந்தத்துப்பாக்கிகள்   எங்களுக்குத்தாயின் அரவணைப்பைப்போன்றன.   நாங்கள்  உயிரைவிட்டாலும் விடுவோமே  தவிர  ஒரு  கணமும்  துப்பாக்கியை விட்டுப்பிரியமாட்டோம்.   துப்பாக்கி  இல்லாத  நாங்கள் முழுமையற்ற   பிறவிகள்.   உங்களின்  இந்த  அவலநிலை  குறித்து உங்கள்  தளபதிகள்  கொஞ்சமேனும்  கவலை கொள்ளவில்லையா... ?  என  நீங்கள்  கேட்கக்கூடும்.   அவர்கள் முசேவெனியின்   விருப்பங்களைப் பிழைபடாமல்  நிறைவேற்றும் கலைகளில்   மூழ்கிக்கிடந்தார்கள். "

இந்த  வாக்குமூலம்,  ஆபிரிக்க  நாடான  உகண்டாவில்  1976  ஆம் ஆண்டு   பிறந்த  ஒரு  குழந்தையின்   போர்க்கால  வாழ்க்கையின் சரிதையில்  பதிவாகியிருக்கிறது. அவள்  பெயர்   கெய்ரெற்சி.   (Keitetsi). அந்தக்குழந்தைக்கு  ஒன்பது  வயதாகும்பொழுது  இராணுவப்பயிற்சிக்கு   தள்ளப்படுகிறாள்.   கட்டளைத்தளபதிக்கு அவளுடைய   குழந்தைப்பருவம்  ஒரு பொருட்டல்ல.   ஆனால்,  அவளுக்கு  ஒரு  அடைமொழிப்பெயர்  சூட்டவேண்டும்.  அவளுக்கு இடுங்கிய  கண்கள். " ஏய் உன்னைத்தான்.சீனர்களைப்போல  இடுங்கிய  கண்  உள்ளவளே.... என்னை  நிமிர்ந்துபார்."  அந்த உறுமலுடன்  அவளுக்கு பெயரும்  மாறிவிடுகிறது. அன்றுமுதல் அவள் சைனா கெய்ரெற்சி. (China Keitetsi)

தாயன்பு,   நல்ல  பராமரிப்பு,  நேசம்  தேவைப்பட்ட  குடும்பச்சூழல், கல்வி   யாவற்றையும்   தொலைத்துவிட்ட  பால்ய காலம், களவாடப்பட்ட  குழந்தைப் பருவம்,  ஆரோக்கியமற்ற  அரசு,  அதிகாரம் யாரிடமுண்டோ  அவர்களே   மற்றவர்களின்  வாழ்வைத் தீர்மானிக்கும்   சக்திகள்.   இவ்வளவு  கொடுந்துயர்களின்  பின்னணியில்  சபிக்கப்பட்ட  ஒரு  பெண் குழந்தையின்  வாழ்வு  அந்த   உகண்டா   மண்ணில்  எவ்வாறு  பந்தாடப்பட்டது...? அவளது அபிலாசைகள்   எங்கனம்  புதைக்கப்பட்டது...? என்பதை சயசரிதைப்பாங்கில்   சொல்லும்  புதினம்தான்  குழந்தைப்போராளி.

Last Updated on Wednesday, 02 December 2015 22:53 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: தாமரைக்கு ஒரு செல்வி வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை

E-mail Print PDF

தாமரைச்செல்விமுருகபூபதிஎங்கள் நீர்கொழும்பில்  நான்  அறிந்தவரையில்  இற்றைக்கு  70 ஆண்டுகளுக்கு  முன்னர்  தோன்றிய  முதலாவது  சைவ உணவகம் கணேசன்  கபேதான்  நீர்கொழும்பில்  வீரகேசரி  பத்திரிகையின் முதலாவது   ஏஜன்ட்.   வீரகேசரிக்கு தற்பொழுது 85 வயது. கணேசன் கபே   இன்றும்   இருக்குமானால்  அதன் வயது  75. இந்த கணேசன்  கபேயில்தான்   ஆளுமையும்   ஆற்றலும்  நிரம்பப்பெற்ற  சாதனைப்பெண்மணி      தாமரைச்செல்வியின்  முதல்  நாவல் -  வீரகேசரி  பிரசுரம்  சுமைகள்  எனக்குக்  கிடைத்தது.  அதனை தாமரைச்செல்வி   எழுதியகாலத்தில்   அவருக்கு 24  வயதுதான்  என்ற தகவல்   நண்பர்  புலோலியூர்   ரத்தினவேலோன்  எழுதிய குறிப்பிலிருந்து   தெரிகிறது. சுமைகள்   நாவலுக்கு   பின்னாலும்  ஒரு  கதை  இருக்கிறது. அதனைப்பின்னர்  சொல்கின்றேன்.

1970 களில்   ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இடதுசாரிக2ளும் கூட்டணி அமைத்து அரசாங்கம் அமைத்தபொழுது , இந்தியாவிலிருந்து புற்றீசலாக   வந்து குவிந்த  தரமற்ற  வணிக  இதழ்கள்  மீது கட்டுப்பாடு  வந்ததை  வீரகேசரி  நிறுவனம்தான்  தக்கமுறையில் பயன்படுத்திக்கொண்டு  வீரகேசரி  பிரசுரங்களை  வெளியிட்டது. முதலில்  திருகோணமலையிலிருந்து  எழுதிக்கொண்டிருந்த  நா. பாலேஸ்வரியின்  பூஜைக்கு  வந்த  மலர்  வெளியானதாக  நினைவு. அதனைத்தொடர்ந்து  இலங்கையின்  முன்னணி  எழுத்தாளர்கள் பலரின்  நாவல்கள்  வீரகேசரி  பிரசுரமாக  வந்தன.   செங்கை ஆழியான்,   டானியல்,  பால மனோகரன்  (நிலக்கிளி)  தெணியான், அருள். சுப்பிரமணியம்,   செ. கதிர்காமநாதன்,  வ.அ.இராசரத்தினம், யாழ்நங்கை,  செம்பியன் செல்வன்,   தெளிவத்தை ஜோசப்.... இவ்வாறு சுமார் 60  இற்கும்  மேற்பட்ட  படைப்பாளிகளின்  நாவல்கள் வெளியானது. இந்தியாவிலிருந்து  வந்து  இலங்கையில்  மலையகத்தில்  முன்னர் வாழ்ந்த  கோகிலம்  சுப்பையாவின்  தூரத்துப்பச்சை    நாவலும் வெளியிடப்பட்டது.    இந்த  வரிசையில்  நான்   பார்த்த  நாவல் தாமரைச்செல்வி   எழுதியிருந்த  சுமைகள்.

Last Updated on Wednesday, 21 October 2015 22:14 Read more...
 

தமிழ்த்திரையுலகின் 'பொம்பிளை சிவாஜி' மனோரமா ஆச்சி.

E-mail Print PDF

ஆச்சி மனோரமாதிரையுலகில்  நடிக்கும்பொழுது  தான்  இணைந்து  நடிக்கப்பயந்த மூன்று  கலைஞர்களைப்பற்றி  நடிகர்திலகம்  சிவாஜி கணேசன்  ஒரு சந்தர்ப்பத்தில்  கூறியிருந்தார். அம்மூவரும்:  நடிகையர்  திலகம்  சாவித்திரி,   நடிகவேள்  எம்.ஆர். ராதா,   சகலகலா  ஆச்சி  மனோரமா.   இன்று இவர்கள்  அனைவரும் திரையுலகை   விட்டு  விடைபெற்றுவிட்டனர்.   இறுதியாக  கடந்த  10 ஆம்  திகதி  சென்றவர்  ஆயிரம்  படங்களுக்கு  மேல்   நடித்து சாதனைகள்   பல  நிகழ்த்திய  மனோரமா. தமிழ்சினிமா  மிகைநடிப்பாற்றலுக்கு  பெயர் பெற்றது. நாடக மேடைகளிலிருந்து  அந்தக்காலத்தில்  வந்த  நடிகர்,  நடிகைகளும் அவர்களுக்கு  உணர்ச்சியூட்டும்  வசனம்  எழுதிக்கொடுத்தவர்களும் சினிமா  என்றால்  இப்படித்தான்  இருக்கும் -  இருக்கவேண்டும்  என்ற   கற்பிதம்  தந்தவர்கள். அதனால்   யதார்த்தப்பண்புவாத  தமிழ்ப்படங்களின்  எண்ணிக்கை தமிழ்  சினிமாவில்  குறைந்தது. இந்தக்கருத்தை   இலங்கைப் பேராசிரியர்  கா. சிவத்தம்பி  அவர்களும் கனடா  மூர்த்தி  சிவாஜி  கணேசன்  மறைந்தபொழுது  தயாரித்த 'சிவாஜிகணேசன்   ஒரு  பண்பாட்டுக்குறிப்பு'  என்ற  ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.

மனோரமா  1937  ஆம்  ஆண்டு  மே  மாதம் 26 ஆம்  திகதி   தமிழ்நாட்டில்  தஞ்சாவூரில்  மன்னார்க்குடியில்  பிறந்தவர். ஏழ்மையான  குடும்பத்தில்  பிறந்த  இவர்  கற்றது  ஆறாம்  தரம் வரையில்தான்.   வறுமையில்  வாடிய  இவருடைய  குடும்பம் காரைக்குடிக்கு   அருகில்  பள்ளத்தூர்  என்ற  இடத்திற்கு இடம்பெயர்ந்தது. கோபி  சாந்தா  என்ற  இயற்பெயர்கொண்டிருந்தவருக்கு  கற்றலில் ஆற்றல்  இருந்தபோதிலும்,  மேலும்  கற்பதற்கு  குடும்பத்தின் பொருளாதார    நிலைமை  இடம்கொடுக்கவில்லை.   சிறுமியாக இருக்கும்பொழுதே  துடிப்போடு  பேசும்  ஆற்றல் இவருக்கிருந்தமையினால்   அவருடை  12  வயதில்  நாடக சபாக்களின் நிகழ்ச்சிகளில்   தோன்றினார். பள்ளத்தூரிலிருந்து   நாடக  சபா  மேடைகளுக்கு  இவர்  வந்தமையால்  அந்த  வட்டத்தில்  இவர்  பள்ளத்தூர்  பாப்பா  என்றே முதலில்   அழைக்கப்பட்டார்.   பின்னர்  இவருக்கு -  இவர் ஆரம்ப காலங்களில்  நடித்த  நாடக   இயக்குநர்  ஒருவர்  மனோரமா  என்ற புதிய    பெயரைச்சூட்டினார். இவர்போன்று  தமது   இயற்பெயர்களை   தமிழ்  சினிமாவில் மாற்றிக்கொண்ட   நடிக,   நடிகையர்    ஏராளம்.

Last Updated on Monday, 12 October 2015 01:03 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: ஆக்க இலக்கியத்திலும் தமிழர் மருத்துவத்திலும் ஈடுபட்டுழைத்த இலக்கியத்தோழன் இளங்கோவன். பாரதியின் சேவகன் கண்ணன் - டானியலின் சேவகன் இளங்கோவன்

E-mail Print PDF

இளங்கோவன்முருகபூபதிகவியரசு  கண்ணதாசன்  பற்றி  ஒருசமயம்  கலைஞர்  கருணாநிதி கவிதை    எழுதியபொழுது "  யார்  அழைத்தாலும்  ஓடிப்போகும்  செல்லப்பிள்ளை "    என்று  வர்ணித்தார்.   எனக்கும்  இலக்கியத் தோழன் வி.ரி. இளங்கோவன்  குறித்து  நினைக்கும்தோறும்  அந்த வரிகள்   நினைவுக்கு  வருவது  தவிர்க்கமுடியாதது. கவிஞர்கள்   இயல்பிலேயே  மென்மையானவர்கள்தான்.  அதனால்  அவ்வப்பொழுது  எவருக்கும்   செல்லப்பிள்ளையாகிவிடுவார்கள். இளங்கோவனை  நான்  யாழ்ப்பாணத்தில்  சந்தித்த  காலப்பகுதியில் அவர்   சீனசார்பு  கம்யூனிஸ்ட்   கட்சியின்  முகாமிலிருந்தார். கொழும்பிலிருந்த   தோழர்  சண்முகதாசன்,   யாழ்ப்பாணத்திலிருந்த  மூத்த   எழுத்தாளர்  கே. டானியல்  மற்றும்  கட்சித்தோழர்  இக்பால் ஆகியோருடன்  மிக  நெருக்கமான  தோழமையுடன் இயங்கிக்கொண்டிருந்தார். இத்தனைக்கும்  இவர்  ஆயுர்வேதம்  படித்தவர்.   அத்துடன் பிலிப்பைன்ஸில்   நடந்த  ஆயுர்வேத  வைத்தியர்களின்  மாநாட்டிலும் கலந்துகொண்டவர்.   இயற்கை   வைத்தியத்துறையில்  பல நூல்களையும்   எழுதியிருந்தவர்.   மூலிகைகள்  பற்றிய நுண்ணறிவு கொண்டிருந்தவர். அத்துடன்  சிறுகதை,  கவிதை,  கட்டுரை,  பத்தி  எழுத்துக்கள், விமர்சனங்கள்   எழுதியவர்.  கட்சியின்  தொண்டனாகவே தோழர்களுடன்  ஊர்சுற்றி  பணியாற்றியவர்.  தனக்கென  ஒரு கிளினிக்கை   அவர்   யாழ்ப்பாணத்தில்   தொடங்கியிருந்தாலும் பெரும்பாலன  நேரங்களில்  அவர்  நோயாளருடன்  நேரத்தை செலவிடவில்லை.   அவரது  வாழ்க்கை   கட்சி  சார்ந்த தோழர்களுடனும்    இலக்கியவாதிகளுடனுமே   நகர்ந்தது.

இளங்கோவன்  கலை,  இலக்கியக் குடும்பத்திலிருந்து  வந்தவர். அவருடைய  அண்ணன்  மூத்த  எழுத்தாளர்  நாவேந்தன்.   துரைசிங்கம்   மற்றும் ஒரு  எழுத்தாளர்.  சட்டத்தரணி   தமிழ்மாறன் அரசியல்  ஆய்வாளர்.    இளங்கோவனின்  மனைவி  பத்மா  சிறுவர் இலக்கியம்  படைப்பவர்.  பல  நூல்களை   எழுதியிருப்பவர். இளங்கோவனின்   புதல்வி  ஓவியா  திரைப்படத்துறையில்  ஒரு எடிட்டர். 1983  ஆம்  ஆண்டு  தொடக்கத்தில்  எமது  முற்போக்கு  எழுத்தாளர் சங்கம்   நாடாளாவிய  ரீதியில்  பாரதி  நூற்றாண்டு  விழாவையும் பாரதி   நூல்கள்  கண்காட்சியையும்  ஈழத்து  எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது.  இக்கண்காட்சிக்குழுவில்   நான்   இருந்தேன்.  முதல்  விழா  கொழும்பில்  தொடங்கியது.

Last Updated on Monday, 05 October 2015 23:46 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்.:ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தமது கடின உழைப்பினால் தொண்டாற்றிய செங்கை ஆழியான்! கலாநிதி கந்தையா குணராசா விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கும் மகாவம்சம் வரலாறு பற்றியும் ஆய்வுமேற்கொண்ட பன்னூல் ஆசிரியர்.

E-mail Print PDF

செங்கை ஆழியான்முருகபூபதிசமீபத்தில்  இலங்கை  சென்று  திரும்பியிருந்த  மெல்பனில் வதியும் இலக்கிய  நண்பரும்  இளம்  படைப்பாளியுமான  ஜே.கே.  என்ற புனைபெயருடன்   எழுதும்  ஜெயகுமரன்  சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில்   நண்பர்  செங்கை  ஆழியானை  சென்று பார்த்ததாகச் சொன்னார். ஈழத்தின்  மூத்த  எழுத்தாளராக  அறியப்பட்ட  எழுதிக்கொண்டே இயங்கிய  செங்கை  ஆழியான்  சுகவீனமுற்று  பேசுவதற்கும் சிரமப்பட்டுக்கொண்டு   வீட்டில்  முடங்கியிருப்பதை  ஜே.கே. சொன்னபொழுது    கவலையாக  இருந்தது. அவருக்கு   நோய்க்குரிய  அறிகுறிகள்  தென்பட்ட 2010 - 2011 காலப்பகுதியில்  சந்தித்த  பின்னர்  மீண்டும்  சந்திப்பதற்கு  எனக்கு சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை. ஈழத்து   இலக்கிய  வளர்ச்சியில்  செங்கை  ஆழியானுக்கு முக்கியமான   இடம்  இருக்கிறது  என்பதை  எவரும் மறுக்கமுடியாது.    இவரும்  செ.கணேசலிங்கன்  போன்று  நிறைய எழுதியவர்.   யாழ்ப்பாணம்  இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவராக  பேராதனைப் பல்கலைக்கழகம்  புகுந்த  கந்தையா குணராசா   என்ற   இயற்பெயர்  கொண்டிருந்த  செங்கை ஆழியான் சிறுகதை,    நாவல்,   தொடர்கதை,  ஆய்வுகள்,  மற்றும்  புவியியல் சம்பந்தப்பட்ட   பாட  நூல்கள்,   ஏராளமான  கட்டுரைகள், விமர்சனங்கள்,    நூல்   மதிப்புரைகள்  எழுதியவர்.     பல இலக்கியத்தொகுப்புகளின்  ஆசிரியராகவும்  பல   நூல்களின் பதிப்பாசிரியராகவும்  விளங்கியதுடன்   சுறுசுறுப்புக்கும் விடாமுயற்சிக்கும்   எடுத்துக்காட்டாகவும்  முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர். இன்றும்   எமது  நாட்டிலும்  தமிழகத்திலும் விமர்சனங்களுக்குள்ளாகிவரும்  மகாவம்சம் பற்றிய  ஆய்வையும் மேற்கொண்டு   நூல்   எழுதியிருப்பவர்.

நோயின் உபாதை அவரைப்   பேசவும்  எழுதவும் முடியாமல் முடங்கவைத்திருக்கிறது. இளமைத்துடிப்புடன் அவர் இயங்கிய காலங்களில் இன்று போன்று கணினி வசதி  இருக்கவில்லை. வீரகேசரி பிரசுரமாக  வெளியான  அவருடைய  வாடைக்காற்று நாவலை 1973  காலப்பகுதியில்  படித்துவிட்டு, யாழ்ப்பாணம்  பிரவுண் வீதியிலிருக்கும் அவருடைய கமலம் இல்லத்தின் முகவரிக்கு கடிதம் எழுதினேன். அவ்வேளையில்  அவர்  செட்டிகுளம்  உதவி  அரசாங்க  அதிபராக பணியிலிருந்திருக்க வேண்டும். நெடுந்தீவு    தொழில்  வாழ்க்கை  அனுபவங்களிலிருந்து  அவர் எழுதிய அந்த  நாவலில்  வரும் பாத்திரங்களை    எங்கள்  நீர்கொழும்பூர்   மீனவ  மக்கள்  மத்தியிலும்  நான்  பார்த்திருப்பதனால்   அந்த  நாவல்  எனக்கு  மிக  நெருக்கமாகவே இருந்தது.

Last Updated on Friday, 25 September 2015 18:53 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின் நுட்பங்களின் ஆய்வில் தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்!

E-mail Print PDF

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பு 1970களில் இயங்கியது. இதில் எழுத்தாளர்கள் சாந்தன், மாவை நித்தியானந்தன், குப்பிழான் சண்முகன், யேசுராசா, இமையவன், நெல்லை க.பேரன் உட்பட சில நண்பர்கள் அங்கம்வகித்து அடிக்கடி கலை, இலக்கிய  சந்திப்புகளை   நடத்திக்கொண்டிருந்தார்கள். சில நிகழ்ச்சிகளை வெள்ளவத்தை  தமிழ்ச்சங்கத்திலும்  நடத்தி  மூத்த  எழுத்தாளர்களை  அழைத்து  அவர்களின்  இலக்கிய அனுபவங்களை பேசவைத்தார்கள்.

இலங்கையின்  வடபகுதியைச் சேர்ந்த  இந்த  இலக்கிய  நண்பர்கள் தொழில்   நிமித்தம்  கொழும்பில்  வாழ்ந்துவந்தனர்.  பெரும்பாலும் அனைவருக்கும்   அப்பொழுது  திருமணம்  ஆகியிருக்கவில்லை. இந்த  பிரம்மச்சாரிகள்  நடத்திய  சில  சந்திப்புகளில் நீர்கொழும்பிலிருந்து  சென்று  கலந்துகொள்ளும்  சந்தர்ப்பங்களும் எனக்குக்கிடைத்தது.    சில  சந்திப்புகள்  நண்பர்களின்  வாடகை அறைகளில்  நடக்கும். அங்கிருக்கும்  கட்டில்களே  ஆசனங்கள்.

நாடகம்,   கவிதை,  சிறுகதை,  நாவல்,  விமர்சனம்  என்று அந்தக்கலந்துரையாடல்கள்   அமைந்திருக்கும்.   மிகவும்  தரமான கருத்துப்பரிமாறல்களுக்கு  களம்  அமைத்திருந்த   அச்சந்திப்பில்  ஒரு நாள்  நாட்டியம்  பற்றிய  கலந்துரையாடல்  நடந்தது. நடன   நர்த்தகி  கார்த்திகா  கணேசர்  அவர்கள்  எழுதி  தமிழ் நாடு தமிழ்ப்புத்தகாலயம்  1969  இல்  வெளியிட்டிருந்த  தமிழர்  வளர்த்த ஆடற்கலை   என்ற   நூலையே  அன்று  பேசுபொருளாக எடுத்திருந்தார்கள்.    அன்றைய   சந்திப்புக்கு  இலக்கிய   திரனாய்வாளர்    கே.எஸ். சிவகுமாரனும்  வருகை  தந்திருந்தார்.

Last Updated on Saturday, 12 September 2015 22:40 Read more...
 

எழுத்தாளர், ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர் கலைவளன் சிசு. நாகேந்திரனுக்கு 95 வயது. முதிய வயதிலும் தமிழ் அகராதி எழுதியவர்

E-mail Print PDF

1_sisunagenthiran.jpg - 18.40 Kbகாலம்  தரித்து  நிற்பதில்லை.   அதனால்  வயதும்  முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும்.   இறுதியில்  முதுமை  வரும்பொழுது  உடன் வரும்  நண்பர்கள்  தனிமை,   இயலாமை,   நனவிடை  தோயும் இயல்பு.   எல்லாம்  போதும்  என்ற  மனப்பான்மை. ஆயினும் -  முதுமையிலும்  ஒருவர்  அயராமல்  இயங்குவதென்பது கொடுப்பினை.   அவ்வாறு  மருத்துவனையில்  தங்கியிருக்கும் வேளையிலும்  தமிழ்  அகராதியொன்றை   தயாரிப்பதற்காக குறிப்புகளை    பதிவு செய்துகொண்டிருக்கும்  எம்மத்தியில்  வாழும் ஒரு    மூத்தவர்  பற்றியதே   இந்தப்பதிவு. அவர்தான்   அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  பல்துறை ஆற்றல்  மிக்க  கலைவளன்  சிசு. நாகேந்திரன். அவருக்கு    09-08-2015  ஆம்  திகதி  95  வயது  பிறந்தது. அவருக்கு   மனமார்ந்த  வாழ்த்துக்களை   தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை   தொடருகின்றேன்.

இந்த  95   வயதிலும்   அயராமல்  இயங்கி   கலை,   இலக்கிய  மற்றும் சமூக  நிகழ்வுகளுக்கு  வருகைதரும்  எழுத்தாளர்  சிசு. நாகேந்திரன் அவர்கள்,    அவுஸ்திரேலியாவில்  வருடந்தோறும்  தமிழ்   எழுத்தாளர்   விழாவை   நடத்திவரும்  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்   காப்பாளர்.   சில  வருடங்களுக்கு  முன்னர்  இந்த அமைப்பின்  தலைவராகவும்  பணியாற்றியவர்.

தமிழ்  எழுத்தாளர்  ஒன்று கூடல்  நிகழ்வுகளில்  தவறாமல் கலந்துகொள்ளும்   இவர்,    நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்பார்.   எழுத்தாளர் விழா   மெல்பனில் - சிட்னியில் -  கன்பராவில்  நடந்தாலும் சாக்குப்போக்குச் சொல்லாமல்,  தமது  உடல்  நலத்தையும் பொருட்படுத்தாமல்  அர்ப்பணிப்பு  உணர்வுடன்  பங்கேற்று கருத்தரங்குகளில்    கட்டுரையும்  சமர்ப்பிப்பார்.

Last Updated on Wednesday, 12 August 2015 04:03 Read more...
 

" இளம்தலைமுறையினரே கனவு காணுங்கள் " என்று அறைகூவல் விடுத்தவரின் நீண்ட கால கனவு நனவாகவில்லை. உலகத்தலைவர்களுக்கும் தேசங்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த படகோட்டியின் மைந்தன்

E-mail Print PDF

கடல்  அலைகள்,  பொன்மணல்,
புனிதயாத்திரிகர்களின்  நம்பிக்கை,
இராமேஸ்வரம்   பள்ளிவாசல்  தெரு,
இவையெல்லாம்  ஒன்று  கலந்த  உருவம்  நீ...
என்  அன்னையே...
உன்  ஆதரவுக்கரங்கள்  என்  வேதனையை  மென்மையாய் அகற்றின
உன்  அன்பும்  ஆதரவும்  நம்பிக்கையும்  எனக்கு  வலிமை   தந்தன.
அதைக்கொண்டே  நான்  இந்த  உலகை
அச்சமின்றி   எதிர்கொண்டேன்
என்   அன்னையே...  நாம்  மீண்டும்  சந்திப்போம்
அந்த   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாளில்.

abdulkalam5.jpg - 3.04 Kbமுருகபூபதிஇவ்வாறு  தமது  அன்னையை   நினைத்து  கவிதை   எழுதிய  பாரத ரத்னா  அப்துல்கலாம்,  தமது  அன்னையிடமே   சென்றுவிட்டார். அவர்   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாள்  என்று  எதனைக் குறிப்பிட்டார் என்ற  விளக்கம்  இங்கு  அவசியமில்லை. ஒரு  விறகு  வெட்டியின்  மகன்  அமெரிக்காவின்  ஜனாதிபதியானார். ஒரு    செருப்புத்தைக்கும்  தொழிலாளியின்  மகன்  ருஷ்யாவில் அதிபரானார். பாரத  நாட்டில்  ஒரு  படகோட்டியின்  மகன்  ஜனாதிபதியாகி  இன்று மக்களின்    மனங்களில்  வாழ்ந்துகொண்டு   விடைபெற்றார். இராமேஸ்வரமும்    இராமனும்  அரசியலாகிய  கதை   தெரியும். இராமர்    பாலம்  அமைத்த  இராமன்  எந்த  பொறியியல்  கல்லூரியில் படித்தான்   எனக்கேள்வி  கேட்டவரின்  தலையை   கொய்து எறியப் போனவர்களின்  செய்தியும்  தெரியும்.   இராமரா  -   பாபர் மசூதியா  என்ற  போர்க்களத்தில்   மாண்டுபோன  இன்னுயிர்கள் பற்றியும்   அறிவோம். இந்தப்பின்னணிகளுடன்    இலங்கையையும்  இந்தியாவையும் பிரிக்கும்   கடல்  எல்லைக்  கடலோரக்  கிராமத்தில்  ஏழ்மையான குடும்பத்தில்  பிறந்து,  இளம்தலைமுறைக்கு கலங்கரைவிளக்கமாகத்திகழ்ந்த   அப்துல்  கலாம்  என்ற  பிரம்மச்சாரி    விஞ்ஞானியாகவும்  எழுத்தாளராகவும்   திகழ்ந்தவர்.

எழுச்சித்தீபங்கள்  -   இந்திய  ஆற்றலின்  ஊற்றுக்கண்  என்ற  தமது  நூலை   ஒரு   பன்னிரண்டாம்    வகுப்பு  படிக்கும்  மாணவிக்கே சமர்ப்பணம்  செய்திருந்தார். அவர்   அதற்கான  காரணத்தையும்  இவ்வாறு  சொல்கிறார்.

Last Updated on Saturday, 08 August 2015 22:51 Read more...
 

பயணியின் பார்வையில் - 05

E-mail Print PDF

முருகபூபதி-அற்றைத்திங்கள்  அவ்வெண்ணிலவில்
அலையோர   வெண்மணலில்
நாம்  பதித்த  கால்   தடங்கள்
இல்லாத   இடங்கள்  இல்லை

விஜயலட்சுமி சேகர் நெய்தலில் கடலின் நடுவே போர்ட் சிட்டி - குறிஞ்சியில் மலையடிவாரத்தில் லயன் சிட்டி கடல் மட்டும்  மாறிவிடாத   காலிமுகம் \கடலும்    கடல்  சார்ந்த  பிரதேசமும்    நெய்தல்  என்று   சங்க இலக்கியம்     கூறுகின்றது.    இலங்கையில்     ஐந்து            திணைகளும் ( குறிஞ்சி,   நெய்தல்,   மருதம்,  முல்லை,  பாலை )    இருக்கின்றனவா...? என்று   ஆராய்ந்தால்  பாலை    ( எதுவும்  பயிரிட  முடியாத  நிலம் ) இல்லையா    என்று    நாம்  யோசிப்போம்.  . ஆறாம்    திணை    நவீன    தமிழ்  இலக்கியத்தில்   பிறந்துள்ளது. நான்   பிறந்த  நீர்கொழும்பும்  இலங்கைத்தலைநகரும்  நெய்தல் நிலப்பிரதேசங்கள்.   எங்கள்  ஊரில்  கடலின்  ஓயாத அலையோசையை   கேட்டவாறே  பிறந்து -  தவழ்ந்து -  வளர்ந்து வாழ்ந்தமையினால்  கடலின்    மீது   தீராத  காதல். ஆனால்   -  சுனாமி  கடற்கோள்  வந்தபொழுது  எனக்கு  கடல் மீது கடுமையான   வெறுப்பு  தோன்றியது.    அவ்வாறே   1978  இல் கிழக்கில் சூறாவளி  வந்தபொழுது  காற்றின்  மீது வெறுப்புத்தோன்றியது.    மலையகத்தில்  மண்  சரிவுகளும் வெள்ளப்பெருக்கும்   ஏற்படும்  வேளைகளில் தண்ணீர்  மீது  ஆத்திரம் வருகிறது.

Last Updated on Monday, 03 August 2015 21:22 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன் நாவன்மையில் சிறந்து விளங்கிய நாவேந்தன்!

E-mail Print PDF

திரும்பிப்பார்க்கின்றேன் நா வன்மையில் சிறந்து விளங்கிய நாவேந்தன்!     சமகாலத்தில்  இலங்கையிலும்  தமிழர்  புலம்பெயர்ந்த  நாடுகளிலும் தினமும்  பேசப்படும்  ஊராக  விளங்கிவிட்டது  புங்குடுதீவு. இந்தத்தீவுக்கு  இதுவரை  சென்றிராத  தென்னிலங்கை   சிங்கள மக்களும்   மலையக  மக்களும்,  இந்த  ஊரின்  பெயரை  பதாதைகளில்  தாங்கியவாறு  வீதிக்கு  வந்தனர். இலங்கைப்பாராளுமன்றத்திலும்  இந்தத்தீவு  எதிரொலித்தது. ஜனாதிபதியை  வரவழைத்தது. இலங்கையில்   மூவினத்து  மாணவர்  சமுதாயமும்  உரத்துக்குரல் எழுப்பும்   அளவுக்கு  இந்தத்தீவு  ஊடகங்களில்  வெளிச்சமாகியது. இத்தனைக்கும்   அங்கு  ஒரு  வெளிச்சவீடு  நீண்ட  நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது. பதினைந்துக்கும்  மேற்பட்ட  பாடசாலைகள்,   20   இற்கும்  மேற்பட்ட குளங்களின்   பெயர்களுடன்    இடங்கள்.   20   இற்கும்  மேற்பட்ட சனசமூகநிலையங்கள்  ( வாசிகசாலைகள்   உட்பட)  பல  கோயில்கள் எழுந்திருக்கும்    புங்குடுதீவில்,   இதுவரையில்  இல்லாதது  ஒரு பொலிஸ் நிலையம்தான்.

கலை,  இலக்கியம்,  இசை,  ஊடகம்,  கல்வி,  திரைப்படம்,  நாடகம் முதலான   துறைகளில்  ஈடுபட்ட  பல  ஆளுமைகளின்   பூர்வீகமான பிரதேசம்   புங்குடுதீவு. புங்குடுதீவு  எனப்பெயர்  தோன்றியதற்கும்  பல  கதைகள்.  இங்கு புங்கைமரங்கள்    செறிந்து  வளர்ந்தது  காரணம்  என்றார்கள். தமிழ்நாட்டில் புங்குடியூர்  எங்கே  இருக்கிறது  என்பது தெரியவில்லை.   ஆனால்,  அங்கிருந்தும்  மக்கள்  இங்கு இடம்பெயர்ந்து    வந்திருக்கிறார்கள்.   தமிழக புங்குடியூரில் ஆங்கிலேயர்களுக்கு முற்பட்ட  காலத்தில்   இஸ்லாமியர்களினால் நிகழ்ந்த   படையெடுப்பினால்  மக்கள்  இடம்பெயர்ந்து வாழ்வதற்கு  இந்தத்தீவுக்கு   வந்தனராம்.   முன்னர்  பூங்கொடித்தீவு  என்றும் பெயர்   இருந்ததாம்.   ஒல்லாந்தர்  இங்கு  சங்கு  ஏற்றுமதி வர்த்தகத்திலும்   ஈடுபட்டிருக்கின்றனர்.   அதனால்  சங்குமாவடி என்றும்    இந்த  ஊருக்கு  முன்னர்  பெயர்  இருந்ததாம். சப்ததீவுகளுக்கு    மத்தியில்  புங்குடுதீவு  இருந்தமையால் -   இதற்கு Middle  Burg  என்றும்  ஒல்லாந்தர்  பெயர்  சூட்டியிருக்கின்றனர். இந்தத்தீவைச் சேர்ந்த  சில  எழுத்தாளர்கள்,  கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ,  ஆசிரியர்கள்,  பிரமுகர்கள்  எனது நண்பர்களாகவிருந்தும்  எனக்கு  இந்த  ஊருக்குச் செல்லும்   சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.

Last Updated on Thursday, 02 July 2015 17:57 Read more...
 

படித்தோம் சொல்கின்றோம்: புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி.

E-mail Print PDF

படித்தோம் சொல்கின்றோம்: புகலிடத்து  வாழ்வுக் கோலங்களில் எம்மை  நாம் சுயவிமர்சனம்  செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின்  அனந்தியின்  டயறி.ஒருவர்   மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம்,   ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை   மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது   கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை   என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம்.  காந்தியடிகளின் நாட்குறிப்பு,   நேரு   சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு   எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும்   நிகழும் சம்பவங்களை   குறித்து வைப்பதற்காக அறிமுகமான  Diary ( Daily record of event)   தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும்   அவ்வாறு அழைக்கப்படுகிறது. உலகப்பிரசித்தி  பெற்றவர்களின் டயறிகள் பிற்காலத்தில் அதிக விலையில்    ஏலம்போயிருப்பதையும் நூதன சாலைகளில் இடம்பெற்றிருப்பதையும்  அறிவோம்.

ஏற்கனவே   தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டிருக்கும் பெர்லினில்   வதியும் கருணாகரமூர்த்தியின் மற்றுமொரு வரவு அனந்தியின்  டயறி.  இதனை  அவர் 16  ஆண்டுகளுக்கு  முன்னரே எழுதத்தொடங்கி , அவரது கணினியில் வைரஸ் ஆதிக்கம் செலுத்தி, அந்தக்குறிப்புகளை   இழந்துவிட்ட சோகத்தில் நெடுநாட்கள்   இருந்தபொழுது,   டயறிக்குறிப்புகளின் பாங்கில் வெளியான   சில ஆங்கில தமிழ் நாவல்களைப் படித்ததும் மீண்டும் உற்சாகம்   கரைபுரண்டு ஓடவும் இந்த நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறார்.

காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்நாவலில் காலச்சுவடு ஸ்தாபகர் சுந்தரராமசாமியையும்  தமது என்னுரையில் நினைவுபடுத்தியுள்ளார். சு.ரா.  என இலக்கியப்பரப்பில் நன்கு அறியப்பட்ட சுந்தர ராமசாமியின்   ஜே.ஜே. சில குறிப்புகள்   மிகவும்  முக்கியமான படைப்பு.    ஜோசஃப் ஜேம்ஸ் என்ற ஒரு எழுத்தாளனைப்பற்றியது. ஆனால், அவனுடைய எழுத்துக்களை   நாம்   பார்த்திருக்கவில்லை.   "தன்   உள்ளொளியை  காண  எழுத்தை ஆண்டவன்   அவன் " என்றும்  - அற்பாயுளிலேயே   மறைந்துவிட்டான் எனவும்  சொல்லியவாறு   சு.ரா.வே   கற்பனை செய்துகொண்டு எழுதிய புதினம் ஜே.ஜே. சிலகுறிப்புகள்.

Last Updated on Friday, 19 June 2015 23:53 Read more...
 

முருகபூபதி பக்கம்: எழுதவிரும்பும் குறிப்புகள்: ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது! ஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை!

E-mail Print PDF

எழுதவிரும்பும் குறிப்புகள் ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது ஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை இலக்கியப்பிரவேசம்   செய்த  காலப்பகுதியில்  சென்னை   வாசகர் வட்டம்   வெளியிட்ட அறுசுவை  என்ற  ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற   நூலைப்படித்தேன்.   அதில் சார்வாகன்  என்ற  பெயரில் ஒருவர்  அமரபண்டிதர்  என்ற  குறுநாவலை   எழுதியிருந்தார். அவர்   ஒரு  மருத்துவநிபுணர்  என்ற  தகவல்,   நான் அவுஸ்திரேலியாவுக்கு  வந்த பின்னர்தான்  தெரியும்.   அவர் தொழுநோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால்   பத்மஸ்ரீ  விருதும்  வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள்   மூத்த  தமிழ்  அறிஞர்  கி. இலக்ஷ்மண  அய்யரின் துணைவியார்   பாலம்  அவர்களின் ஒன்றுவிட்ட  சகோதரர். மெல்பனுக்கு   அவர் வந்தபொழுது   எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி  பாலம்  லக்ஷ்மணன். சார்வாகன் அவரது  இயற்பெயரல்ல. அந்தப்  புனைபெயரின் பின்னாலிருந்த   கதையை    தமிழக சார்வாகனே   சொன்னார். மகாபாரதத்தில்    குருஷேத்திர  களத்தில்  கௌரவர்களை   அழித்து வெற்றிவாகைசூடிய   பாண்டவர்கள்,   தருமருக்கு  பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில்    அந்தச் சபையிலிருந்து எழுந்து  அந்த  வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை   சுட்டிக்காண்பித்து  கடுமையாக விமர்சித்தவர்   சார்வாகன்  என்ற  முனிவர். அவரது  கூற்றால் வெகுண்டெழுந்த  மக்கள் அவரை    அடித்தே  கொன்றுவிட்டார்களாம். சார்வாக  மதம்  என்ற  புதிய  கோட்பாடு உருவானது  என்றும் பாஞ்சாலியும்   அந்த   மார்க்கத்தை  பின்பற்றியதாக  கதை இருப்பதாகவும்   சார்வகன்  என்ற  புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர்   ஸ்ரீனிவாசன்  சொன்னபொழுது  மகாபாரதத்தின் மற்றுமொரு  பக்கத்தை   தெரிந்துகொண்டேன்.

Last Updated on Sunday, 14 June 2015 18:12 Read more...
 

எழுத்துப்போராளி ஷோபாசக்தி நடித்த தீபன் ஆவணப்படத்திற்கு சர்வதேச விருது

E-mail Print PDF

ஷோபாசக்திமுருகபூபதி"ஒப்பீட்டளவில்  இந்திய  நாடு,  இலங்கையைவிட  ஊடகச் சுதந்திரம்   lமிகுந்த  நாடு.   இவ்விரு  நாடுகளின்  திரைப்பட அடிப்படைத்  தணிக்கை விதிகள்   காலனியக்  காலத்தில்  உருவாக்கப்பட்டவை. தணிக்கையே   இல்லாத  சுதந்திர ஊடகவெளிதான்  நமது விருப்பமென்றாலும்   இப்போதுள்ள  தணிக்கை விதிகளைக் கண்டு  நாம்  பேரச்சம் அடையத் தேவையில்லை.   ஆனந்த் பட்வர்த்தனின்   அநேக   படங்கள் தணிக்கை    விதிகளுடன்  நீண்ட  போராட்டத்தை    நடத்தித்தான் வெளியாகியுள்ளன.    தமிழில்  சமீபத்திய  உதாரணமாக  நான் பணியாற்றிய  ‘செங்கடல்’ திரைப்படமும்    நீண்ட  சட்டப் போராட்டத்தை    நடத்தித்  தணிக்கையை   வென்றிருக்கிறது" இவ்வாறு  சில வருடங்களுக்கு முன்னர்  எழுதியிருக்கும்  ஷோப சக்தி நடித்திருக்கும்  தீபன்  என்ற   ஆவணப்படம்  சமீபத்தில்  நடந்த கேர்ன்ஸ்    சர்வதேச திரைப்படவிழாவில்  சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. முதலில்   அவரை   மனந்திறந்து  பாராட்டி  வாழ்த்திக்கொண்டே    அவர்    பற்றிய குறிப்புகளை   இங்கு  பதிவுசெய்கின்றேன்.

எனது    விருப்பத்துக்குரிய  படைப்பாளி  ஷோபா சக்தி. இதுவரையில் நாம்   நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை.   எழுத்துக்களினால் பரிச்சயமானவர். 1994   ஆம் ஆண்டளவில்  எஸ்.பொன்னுத்துரையுடன் இணைந்து புகலிடச்சிறுகதைகளை தொகுக்கும்  பணியில்  ஈடுபட்டபொழுது ஷோபா சக்தியினதும்    சிறுகதையொன்றை   புகலிட  இதழிலிருந்து தெரிவுசெய்தோம். எனினும்    அந்தப்பெயரைப்பார்த்ததும்  அவர்  ஆணா... பெண்ணா... என்ற    மயக்கமும் வந்தது.    காலப்போக்கில்  அவரது  கொரில்லா நாவலைப்படித்ததன்    பின்னரும்  தமிழக இதழ்களில்  அவர் பற்றிய குறிப்புகளை   படித்த பின்னரும்தான்  உண்மை   தெளிவானது.

Last Updated on Friday, 29 May 2015 20:28 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன். நூல்களை ஏந்திய கைகளில் மற்றவர்களின் பாதணிகளை ஏந்திய மலையகத்தின் தாரகை. மௌனமே மொழியாக வாழ்ந்த தன்னடக்கம் மிக்க ஆளுமை என்.எஸ்.எம். ராமையா

E-mail Print PDF

முருகபூபதி

" இயற்கைச்   சூழலின்   மத்தியில்   ஏகாந்தமாயிருந்து  கலையம்சம்   மிக்க – கலை - இலக்கியங்களைப் படைக்க    வேண்டிய    மணிக்கரங்கள்  இரும்புக்கடையின்   மத்தியில்     கணக்கு    ஏட்டுடன்   சதா   கருமமாற்றம்   நிலை    என்றுதான்   மாறுமோ... ?"     என்று    நண்பர்     மேகமூர்த்தி     பல வருடங்களுக்கு    முன்னர்    என்.எஸ்.எம்.     ராமையாவைப் பற்றி  மல்லிகையில்    எழுதியது    நினைவுக்கு  வருகிறது. மேகமூர்த்தி     இன்று    கனடாவில்.   முன்பு    வீரகேசரியில்     துணை ஆசிரியராக     பணியிலிருந்தவர்.     தற்பொழுது     வீரகேசரி   மூர்த்தி    என்ற பெயரில்   எழுதிவருகிறார். நானும்   முதல்   முதலில்  என்.எஸ்.எம்.   அவர்களை  அந்த இரும்புக்கடையில்தான்     சந்தித்தேன்.  அறிமுகப்படுத்தியவர்  மு.கனகராசன். அமைதி - அடக்கம் - பணிவு – மறந்தும்    சுடுசொல்    பாவிக்கத்    தெரியாத அப்பாவித்    தனமான   குண    இயல்புகள்  -  எதனையும்    ரசித்துச்   சிரிக்கும் பொழுது    குழந்தைகளுக்கே  உரித்தான    வெள்ளைச் சிரிப்பு  இவ்வளவற்றையும்   தன்னகத்தே    கொண்டிருந்த     அந்த   வித்தியாசமான மனிதரிடத்தில்    நல்ல   ரஸனையைக்  கண்டேன்.     தர்மாவேசத்தை என்றைக்கும்      கண்டதில்லை. நாம்   அவரை   இராமையா    என்று     அழைப்பது   அபூர்வம்.    அவரது முதல்     எழுத்துக்கள்தான்     இலக்கிய     உலகில்     பிரபலமானவை. மலைநாட்டு எழுத்தாளர்     சங்கத்தின்     தலைவராக     விளங்கிய போதும்கூட   தலைவர்களுக்கே     உரித்தான    கம்பீரம்   காத்து   இமேஜ் தேட முயலாமல்   எளிமையாக     வாழ்ந்தவர்.

Last Updated on Sunday, 17 May 2015 18:46 Read more...
 

பயணியின் பார்வையில் (03 & 04)

E-mail Print PDF

நிலத்துக்கும்  ஆகாயத்துக்குமிடையில்
அந்தரவெளியில் நீந்திவரும்
பறவைகளை   வரவேற்றுக்கொண்டிருக்கும்
மரங்களுக்குத் தெரியுமா
எந்தப்பறவை
எப்போது   வந்து   எங்கே  அமருமென்று...? -
  கருணாகரன்

முருகபூபதிஇந்தப்பத்தியை   எழுதும்  வேளையில்  சிங்கப்பூரின்  முன்னாள் பிரதமர்   லீ குவான் யூ  மறைந்த  செய்தி  வருகிறது.    அவருக்கு அஞ்சலி  செலுத்திக்கொண்டு  இந்தப்பத்தியை    தொடருகின்றேன். சிங்கப்பூருக்கு    சென்றதும்  மைத்துனர்  விக்னேஸ்வரன்  தனது நண்பர்களுக்கு   எனது  வருகை    பற்றி  அறிவித்தார்.   எமது  இலங்கை    மாணவர்  கல்வி    நிதியம்  தொடர்பான  தகவல்  அமர்வு கலந்துரையாடலுக்காக    அவர்  ஒரு  சந்திப்பை ஒழுங்குசெய்திருந்தார்.

பொதுவாகவே  இலங்கையில்  நீடித்த  போரும் -  இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு  நேர்ந்த  அழிவுகளும்  தொடர்பாக  மலேசியா,  சிங்கப்பூர் தமிழ்   மக்களிடம்  ஆழ்ந்த  கவலை    இருந்தது.   இம்மக்களில் இலங்கைத்தமிழர்களும்    இடம்பெற்றாலும்,   மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும்    இடையில்  தமிழ்  மக்கள்  தமது  உணர்வுகளை வெளிப்படுத்துவதில்    நிரம்ப  வேறுபாடும்   நீடிக்கிறது. மலேசியாவில்   வதியும்  இந்திய  வம்சாவளியினர்  குறித்த உரிமைப்போராட்டம்    நாம்  நன்கு  அறிந்ததே.   ஆனால்,  சிங்கப்பூரில் அந்த   நிலைமை    இல்லை.    தமிழ்,  ஆங்கிலம்,  சீனம்,  மலாய் மொழிகளுக்கு    அரச  அங்கீகாரம்  வழங்கியவாறு   சிங்கப்பூர்   அரசு இயங்குகிறது. சிங்கப்பூரில்    நின்றவேளையில்  தைப்பூசத்திருவிழா    வெகு கோலாகலமாக    நடந்தது.  அரசின்  அமைச்சர்களும்  கலந்துகொண்டு சிறப்பித்ததை    தொலைக்காட்சியில்  பார்த்தேன்.    மக்களின் பக்திப்பரவசம்    கரைபுரண்டு    ஓடியது. பக்தர்கள்    வேல்  குத்தி  ஆடியவாறு  தமது  ஆழ்ந்த  நம்பிக்கையும் வெளிப்படுத்தினார்கள்.    வருடாந்தம்  நடக்கும்  தைப்பூசத்திருவிழா அங்கு    தொடர்ந்து  கோலாகலமாகவே   கொண்டாடப்படுகிறது. ஆனால்,   சிங்கப்பூரில்  பறவைக்காவடி  தடை செய்யப்பட்டிருப்பதாக அறிந்தேன்.    மனிதன்  தன்னைத்தானே    வருத்துவதை    நகரீக  உலகம்    ஏற்றுக்கொள்ளாது .  ஆனால் -  காலம்    காலமாக  நீடிக்கும் மத  நம்பிக்கையை    தடுப்பதற்கு  சில  நாடுகளின்    அரசுகள் முன்வருவதற்கு   தயக்கம்  காட்டுகின்றன.

Last Updated on Sunday, 26 April 2015 18:01 Read more...
 

பயணியின் பார்வையில் (2)

E-mail Print PDF

முருகபூபதி1990   இல்   இலக்கியவாதிகளைத்தேடியது  போன்று  25  வருடங்களின் பின்னர்   நான்  தேடவில்லை.   ஆர்வமும்  இல்லை.   சோவியத்தில் மாற்றம்  - சிங்கப்பூரில்  மாற்றம் -  கியூபாவில்  மாற்றம்.   இப்படி உலகமே   மாறிக்கொண்டு  இணைய  யுகத்தில்  வாழும்பொழுது மனிதர்களும்    மாறிவிடுவார்கள்தானே....?

அண்மையில்  சிங்கப்பூருக்குச்  சென்று   நின்ற  இரண்டு  நாட்களுக்குள்    என்னால்  சந்திக்க  முடிந்தவர்கள்  சிலர்தான். குறிப்பாக    கண்ணபிரான்,   கனகலதா,   புஸ்பலதா  நாயுடு.   ஏனோ இவர்களை  தவிர்க்கமுடியவில்லை.   சிங்கப்பூர்  செல்லும் சந்தர்ப்பங்களில்    இவர்களை   எப்படியும்  நேரம்  ஒதுக்கி சந்தித்துவிடுவேன்.

( இந்தப்பயணத்தில்  சிங்கப்பூர்   தேசிய  பல்கலைக்கழக  மானுடவியல்    பேராசிரியரான  அமெரிக்காவைச்சேர்ந்த  பேனார்ட் பேட் , அதே  பல்கலைக்கழகத்தில்  விரிவுரையாற்றும்     சித்தார்த்தன்  ( பேராசிரியர்கள்  மௌனகுரு - சித்திரலேகா தம்பதியரின் மகன்)   ஆகியோரை    பின்னர்  மட்டக்களப்பில்  22-02-2015  ஆம்  திகதி மகுடம்  கலை   இலக்கிய  வட்டம்  நடத்திய  சந்திப்பில்  சந்தித்தேன். இது  எதிர்பாராத  சந்திப்பு)  மைத்துனர்  விக்னேஸ்வரன் சிங்கப்பூரில் எனக்கு  எல்லா வசதியும்    செய்துகொடுப்பவர்.

தமிழ்த்தேசியத்திலும்   கவியரசு  கண்ணதாசனிடத்திலும்  தீவிர பற்றுக்கொண்டவர்.    எனக்கு  கண்ணதாசன்  குடும்பத்தினருடனும் ஓவியர்  மணியன்  செல்வனுடனும்    நட்புறவை   உருவாக்கியவர். ( எனது   கங்கை மகள்  சிறுகதைத்தொகுதியில்    ஓவியர்  மணியன் செல்வனின்    ஓவியமே  முகப்பாகியது.) 

Last Updated on Sunday, 26 April 2015 17:49 Read more...
 

கலைத்தாகம் மிக்க தம்பதியரின் தணியாத தாகம் கலைத்தாகம்!

E-mail Print PDF

கமலினி செல்வராஜன்"அத்தானே அத்தானே எந்தன்   ஆசை அத்தானே கேள்வி   ஒன்று கேட்கலாமா  உன்னைத்தானே.? "   எனக்கேட்ட   கமலினி  செல்வராசன் அத்தானிடமே   சென்றார். திருமதி  கமலினி  செல்வராசன்  கொழும்பில்  மறைந்தார்  என்ற செய்தி   இயல்பாகவே  கவலையைத்தந்தாலும்,  அவர்  கடந்த  சில வருடங்களாக   மரணத்துள்  வாழ்ந்துகொண்டே   இருந்தவர்,  தற்பொழுது   அந்த   மரணத்தைக்கடந்தும்   சென்று  மறைந்திருக்கிறார் என்றவகையில்   அவரது  ஆத்மா  சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.

ஈழத்தின்   மூத்த  தமிழ்  அறிஞர்  தென்புலோலியூர் கணபதிப்பிள்ளையின்  புதல்வி  கமலினி,  இயல்பிலேயே  கலை, இலக்கிய,  நடன,  இசை  ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தமைக்கு  அவரது   தந்தையும்  வயலின்  கலைஞரான  தாயார் தனபாக்கியமும் மூலகாரணமாக  இருந்தனர்.  எனினும்  புலோலியூர் கணபதிப்பிள்ளையின்   நெருங்கிய  நண்பராகவிருந்த  பல்கலை வேந்தன்  சில்லையூர்  செல்வராசன்,   அந்த  நெருக்கத்தை   அவர் புதல்வியின்   மீதும்  செலுத்தியமையினால்,  ஏற்கனவே  ஜெரல்டின் ஜெஸி   என்ற  மனைவியும்  திலீபன்,  பாஸ்கரன்,  முகுந்தன்,  யாழினி ஆகிய   பிள்ளைகள்  இருந்தும்  கமலினியை   கரம்  பிடித்தார்.

கலைத்தாகம்   மிக்க,   கமலினி -   களனி  பல்கலைக்கழக  பட்டதாரியாகி    ஆசிரியராகவும்  பணியாற்றியவர்.   தந்தை  வழியில் தமிழ்த்தாகத்தை   பெற்று   வளர்ந்த  கமலினி  தாய்வழியில்  இசை ஞானமும் , கணவர்  சில்லையூர்  வழியில்  கலைத்தாகமும்  பெற்று பல்துறை   ஆற்றல்  மிக்கவராக  திகழ்ந்தார்.

Last Updated on Tuesday, 07 April 2015 19:59 Read more...
 

தொடர் கட்டுரை: பயணியின் பார்வையில் (1)

E-mail Print PDF

" சிங்கப்பூர்    இளையர்கள்  அரசியலில்  பிரதிநிதித்துவம்  ஏற்று  தமிழ் மொழியின்  முக்கியத்துவத்தை     தமிழ் பேசும்  மக்களிடம்  கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் " -  சிங்கை  இளம்  தலைமுறையின் குரல்

ஊஞ்சல் கொண்டுபோய் எறிந்த எங்கள் உலகம்
சிவந்த  தும்பிகளின்
கண்ணாடிச் சிறகைப்போல்
எதிலெதிலோ   மோதிச்சிதைந்தது -   அனார்
         
இலங்கைப்பயணத்தின் வழியில் சில காட்சிகள்
          
முருகபூபதிதாயகத்தில்  -  இல்லை...  இல்லை ....இரவல்    தாய்   நாட்டில் மீண்டும் ஒரு  தொடர்ச்சியான   பயணத்துக்கு  தயாரானேன்.    நான்   நீண்ட காலமாக   அங்கம்  வகிக்கும்  அவுஸ்திரேலியாவில்  இயங்கும் இலங்கை   மாணவர்  கல்வி   நிதியத்தின்  சில முக்கிய பணிகளுக்காக   என்னை இந்த  அமைப்பு  அனுப்பிவைத்தது. 2015    முற்பகுதியில்,  அதாவது  கடந்த  ஜனவரி  மாதம் செல்லவேண்டும்  என்றுதான்  முதலில்  தீர்மானம்  இருந்தது. ஆனால்,  ஜனவரி  8  ஆம்   திகதி  இலங்கையில்  ஜனாதிபதித்தேர்தல்.    இலங்கையில் ,  குறிப்பாக  தென்கிழக்கு ஆசியாவில்    தேர்தல்  வருகிறது  என்றால்  அக்காலப்பகுதியில் அங்கு   பயணிப்பவர்கள்  முன்னெச்சரிக்கையுடன்  இருத்தல் வேண்டும்    என்பது  எழுதப்படாத  விதியல்லவா...? அரசும்   அதிகார  பீடமும்  மாறுவது  வீடு   மாறுவதற்கு  ஒப்பானதாக என்றைக்கு   நடைபெறும்   என்பது  வெறும்  கனவுதான் அவுஸ்திரேலியாவில்   அரசு  தேர்தலில்  மாறும்பொழுது  வீடு மாறிச்செல்லும்    உணர்வுதான்    வருகிறது.   இலங்கையில்   இம்முறை    ஜனநாயகம்  பாதுகாக்கப்பட்டதுதான்    பெரிய  நிம்மதி. இல்லையேல்....   வழக்கம்போன்று    சிறுபான்மை    இனத்தவரின் தலையில்தான்    விடிந்திருக்கும்.  முன்பெல்லாம்   எனது   சொந்தச்செலவில்  விமான  டிக்கட் பெற்றுச்சென்றேன்.   ஆனால்,  தற்பொழுது  தொழிலும்  இல்லாமல் மருந்து  மாத்திரைகளுடனும்  இன்சுலினுடனும் அல்லாடிக்கொண்டிருக்கையில்   வழங்கப்பட்ட  பொறுப்பை நிறைவேற்றவேண்டும்    என்ற  கடமை  உணர்வே   முன்னின்றது.

Last Updated on Wednesday, 01 April 2015 21:42 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: பல்துறை ஆற்றலுடன் பதிப்பாளராகவும் விளங்கிய மூத்த படைப்பாளி அன்புமணி! சமூகநலன் சார்ந்த பணிகளிலேயே தனது வாழ்நாளை செலவிட்டு விடைபெற்ற கர்மயோகி

E-mail Print PDF

அன்புமணிமுருகபூபதி"ஒருவன்  என்னவாக  இருக்க வேண்டும் என்பதை  அவன்  மனமோ அல்லது அவனின் அறிவோ   தீர்மானிப்பதில்லை,  அவனின் ஆன்மாதான்    தீர்மானிக்கிறது"   என்ற  மகாபாரத  தத்துவத்தை சமீபத்தில் படித்தேன்.  இந்தத்தத்துவத்தை  நெஞ்சத்துக்கு  நெருக்கமானவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில்   அதிலிருக்கும்    உண்மை  புலப்படுகிறது. வயது    செல்லச்செல்ல  நெஞ்சத்துக்கு  நெருக்கமானவர்கள்  யார்...? என்ற   தெரிவு  எம்மையறியாமலேயே   மனதிற்குள் உருவாகிவிடுகிறது.    அவர்களில்  பலருடைய  மறைவு வெற்றிடத்தையும்    தோற்றுவிக்கிறது. ஈழத்து    இலக்கிய  வளர்ச்சியில்  காத்திரமான பங்களிப்புச்செய்தவரும்    மூத்ததலைமுறை   எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான    அன்புமணி  இரா . நாகலிங்கம்  கடந்த  2014 ஆம்    ஆண்டு  ஜனவரி  மாதம்  12  ஆம்    திகதி  மறைந்தவுடன் கிழக்கிலங்கையில்    மட்டுமல்ல எழுத்தாளர்கள்  மத்தியிலும்  ஒரு வெற்றிடம்    தோன்றியதுபோன்ற  உணர்வே   வந்தது.

அவர்    தமது  வாழ்வில்  என்னவாக  இருக்கவேண்டும்   என்று விரும்பினார்...?   என்ற  வினாவுக்குத் தேவைப்படும்  பதில்  அவரது வாழ்விலேயே இருந்தது.    அவர்  தமது  அறிவை   சமூகநலன்சார்ந்து பயன்படுத்தியவர். எமது  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  பணிகளுக்கு  ஆதரவு வழங்கிய   மட்டக்களப்பு  பிராந்தியத்தின்  செயலூக்கமுள்ள நால்வரைப்பற்றி     நண்பர்  பிரேம்ஜி    அடிக்கடி   சொல்வார்.   அவர்கள்: ரீ. பாக்கியநாயகம்,   எதிர்மனசிங்கம்,   செ.குணரத்தினம்,   அன்புமணி. இவர்களில்   அதிகமாக  எழுதிக்குவித்தவர்  செ.குணரத்தினம். எதிர்மனசிங்கம்    ஒருவகையில்  எனது  உறவினர்.  கலாசார உத்தியோகத்தராக  பணியாற்றியவர்.   பாக்கியநாயகம்  மட்டக்களப்பு எழுத்தாளர்   சங்கத்தின்  தூணாக  விளங்கியவர்.  பாக்கியநாயகத்தையும்    எதிர்மனசிங்கத்தையும்  மட்டக்களப்பு கச்சேரிக்கு    1978  காலப்பகுதியில்    சென்றபொழுது  முதல்  முதலில் சந்தித்தேன்.    அவ்வேளையில்  மட்டக்களப்பை    சூறாவளி கோரமாகத்தாக்கியிருந்தது. குணரத்தினம்    அவ்வப்பொழுது  வீரகேசரி  வந்து  செல்லும் படைப்பாளி.    அதனால்  அவர்  இலக்கிய  நண்பரானார். அன்புமணி    பற்றி   மல்லிகைஜீவா  என்னிடம்  சொன்ன    காலத்தில் அவர்    கிழக்கிலங்கையிலிருந்து  மலர்  என்ற  இலக்கிய  திங்கள் இதழை    வெளியிட்டுக்கொண்டிருந்தார்.    கொழும்பு  சென்றால் கோட்டை    ரயில்  நிலையத்திற்கு  முன்பாகவிருந்த  ராஜேஸ்வரி பவனில்   இதர  இலக்கிய  இதழ்களுடன்  மலர்    இதழையும் வாங்கிவிடுவேன்.    மலர்  தரமான    இதழ்.    ஆனால்,  1972 காலப்பகுதியிலேயே   தனது  ஆயுளை   முடித்துக்கொண்டது.

Last Updated on Saturday, 14 March 2015 23:53 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பங்களித்த பரோபகாரி துரை. விஸ்வநாதன்.

E-mail Print PDF

துரை. விஸ்வநாதன் அவர்கள்.  இலங்கை  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  இயங்கு சக்திகளாகவும் மல்லிகை  கலை இலக்கிய மாசிகைக்கு பக்கபலமாகவும் இவர்கள் திகழ்ந்தார்கள். 1990  களில் மல்லிகை ஜீவா  கொழும்புக்கு இடம்பெயர்ந்தபொழுது அவரதும்  மல்லிகையினதும் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் - விரைவிலேயே  ஆச்சரியக்குறியாக்கியவர் துரைவி என எம்மவர்களினால்  அன்புடன் அழைக்கப்பட்ட துரை விஸ்வநாதன் அவர்கள்.முருகபூபதிகம்பனுக்கு  ஒரு  சடையப்ப  வள்ளலும்  - கார்ல் மார்க்ஸ_க்கு  ஒரு ஏங்கல்ஸ_ம்    இருந்தமையால்   காவியத்திலும்    - காலத்திலும் மானுடம் மேன்மையுற்றது  என்பார்கள். இலங்கையில்   1970  இற்குப்பின்னர்    இலக்கிய  வளர்ச்சிக்கு இலக்கியம்    படைக்காமலேயே   அளப்பரிய  சேவைகள் புரிந்தவர்களாக   சிலர்  எம்மால்  இனம்  காணப்பட்டனர். அவர்களில்  ஓட்டப்பிடாரம்  ஆ. குருசாமி,  எம். ஏ. கிஷார்,  ரங்கநாதன் ஆகியோரின்    வரிசையில்   போற்றப்படவேண்டியவர்  துரை. விஸ்வநாதன்  அவர்கள்.    இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின்   இயங்கு சக்திகளாகவும்  மல்லிகை   கலை  இலக்கிய மாசிகைக்கு  பக்கபலமாகவும்  இவர்கள்  திகழ்ந்தார்கள். 1990   களில்  மல்லிகை  ஜீவா   கொழும்புக்கு  இடம்பெயர்ந்தபொழுது அவரதும்   மல்லிகையினதும்  எதிர்காலம்  கேள்விக்குறியானது. ஆனால்  -  விரைவிலேயே    ஆச்சரியக்குறியாக்கியவர்  துரைவி  என எம்மவர்களினால்   அன்புடன்  அழைக்கப்பட்ட  துரை  விஸ்வநாதன் அவர்கள். தமது   வாழ்நாள்  முழுவதும்   கலை,  இலக்கிய  ரசிகராகவே  இயங்கி    மறைந்த  துரைவியின்  இழப்பு  ஈழத்து  இலக்கிய வளர்ச்சிப்பாதையில்  ஈடுசெய்யப்பட  வேண்டிய  பாரிய  இழப்பாகும். துரைவி    அவர்கள்  தினகரன்  பத்திரிகையில்  ராஜ  ஸ்ரீகாந்தன் ஆசிரியராக    பணியாற்றிய  காலத்தில்  நடத்தப்பட்ட  சிறுகதைப்போட்டிக்கு    ஒரு   இலட்சத்து  ஒரு   ரூபாய்  வழங்கி ஊக்குவித்த   பெருந்தகை.     மலையக  இலக்கியவாதிகளுக்கும் மலையக    இலக்கிய  ஆய்வுகளுக்கும் ஆதர்சமாகத்திகழ்ந்தவர்.

Last Updated on Monday, 09 March 2015 19:13 Read more...
 

நெய்தல் - நீர்கொழும்பு வாழ்வும் வளமும்

E-mail Print PDF

நெய்தல் -  நீர்கொழும்பு  வாழ்வும் வளமும்  நூல் வெளியீட்டு அரங்கு; விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு நடைபெறும் முதலாவது இலக்கியப்பொது  நிகழ்வு கடலும்   கடல்  சார்ந்த  நிலமும்  நெய்தல்  என  சங்க இலக்கியங்களில்   சொல்லப்படுகின்றது.   இலங்கையில் மேற்குக்கரையில்   இந்து  சமுத்திரத்தை  அணைத்தவாறு  விளங்கும் கடற்கரை நகரம்   நீர்கொழும்பு. ஐதீகக்கதைகளும்  வரலாற்றுச்சிறப்பும்  மிக்க  இந்நகரில்  வாழ்ந்த மூத்தகுடியினர்   தமிழர்கள்.   அவர்களினால்  1954  இல் விஜயதசமியின்பொழுது 32   குழந்தைகளுடன்  தொடங்கப்பட்ட பாடசாலையே    இன்று  வடமேற்கில்  கம்பஹா    மாவட்டத்தில்  ஒரே ஒரு   இந்து  தமிழ்  மத்திய  கல்லூரியாக  விளங்கும்  விஜயரத்தினம்   இந்து  மத்திய  கல்லூரி. இதன்   ஸ்தாபகர்  எஸ்.கே. விஜயரத்தினம்    நீர்கொழும்பில் நகரபிதாவாக   (மேயர்)  விருந்த  தமிழராவார்.    தமிழ் மக்களின்  பண்பாட்டுக்கோலங்களுடன்,  வரலாற்றுச்சுவடுகளுடன்  வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும்  கவரும்  இந்நகருக்கு  அருகாமையிலேயே    சர்வதேச விமான  நிலையம் கட்டுநாயக்காவில் அமைந்துள்ளது. கல்லூரி 1954 இல் ஆரம்பப் பாடசாலை தரத்திலிருந்தபொழுது  முதல் மாணவனாக  இணைத்துக்கொள்ளப்பட்டவரும்   தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான  லெ. முருகபூபதி விஜயரத்தினம்    இந்து  மத்திய கல்லூரியின் 60 வருட நிறைவு வைரவிழாவை முன்னிட்டு தொகுத்து  வெளியிட்டுள்ள  நெய்தல் - நீர்கொழும்பு   வாழ்வும்    வளமும்   நூல் நீர்கொழும்பில் அண்மையில் சிறப்பாக  வெளியிடப்பட்டது.

Last Updated on Monday, 09 March 2015 18:51 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: கிழக்கிலங்கை மூதூரில் இழப்புகளே வாழ்வாகிப்போன மூத்த படைப்பாளி வ.அ.இராசரத்தினம் அன்பு மனைவிக்கு அவர் கட்டியது மாளிகையல்ல - இதயத்தால் படைத்தார் ஒரு காவியம்!

E-mail Print PDF

வ.அ.இராசரத்தினம்முருகபூபதிவீரகேசரியில்   பணியாற்றிய  காலத்தில்  அடிக்கடி  நான்  செய்திகளில்   எழுதும்  ஊரின்  பெயர்  மூதூர்.   ஒரு  காலத்தில் இரட்டை  அங்கத்தவர் தொகுதி.   தமிழர்களும்  முஸ்லிம்களும் புட்டும்   தேங்காய்  துருவலும்  போன்று  ஒற்றுமையாக  வாழ்ந்த பிரதேசம்.  அரசியல்  இந்தத்தொகுதியை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. தமிழ் - முஸ்லிம்  அரசியல்  தலைவர்களும்  அப்பாவி  பொது மக்களும்   அதிக  அளவில்  கொல்லப்பட்டிருக்கின்றனர்.  பல   தமிழ்க்கிராமங்கள்  இந்த  ஊரை   அண்மித்திருக்கின்றன. மூதூருக்கு   படகில்  செல்லவேண்டும்  என்றெல்லாம்  சிலர் சொல்லக்கேட்டுள்ளேன்.   ஆனால்,  நான்  இலங்கையிலிருந்த காலப்பகுதியில்   திருகோணமலைக்கோ   அதன்  அயல்  ஊர்களுக்கோ சென்றதில்லை.  அதற்கான  சந்தர்ப்பங்களும்  கிடைக்கவில்லை.  1965  இல்   பாடசாலை சுற்றுலாவிலும்    1978   இல் சூறாவளியின் பொழுதும்தான் மட்டக்களப்பை     தரிசித்தேன்.   இலங்கையில்  பார்க்கத்தவறிய  தமிழ் ஊர்களும்  தமிழ்க்கிராமங்களும்  ஏராளம்.  மன்னார்,  திருக்கேதீஸ்வரம்,  திருகோணமலை,  மூதூர்  என்பனவும்  முன்னர் எனது    தரிசனத்துக்கு கிட்டவில்லை. 1984   இல்  தமிழ்நாட்டுக்கு  இராமேஸ்வரம்  வழியாக சென்றவேளையிலும்    மன்னார்,  தலைமன்னார்  ரயில் நிலையங்களைத்தான்    கடந்திருக்கின்றேனே   தவிர  அந்தப் பிரதேசங்களுக்குள்   சென்று  உலாத்திவிட்டு  வருவதற்கு சந்தர்ப்பமே    கிடைக்கவில்லை. எனினும்  -  குறிப்பிட்ட  தமிழ்ப்பிரதேசங்களை   பார்க்கத்தவறிய   ஏக்கம் மனதில்   நீண்டகாலம்  இருந்தது.    அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து  2009   இல்  போர்  முடிவுக்கு  வந்தபின்னரே 2010  இற்குப்பின்னர்    மேற்சொன்ன  தமிழ்  ஊர்களுக்கும் கிராமங்களுக்கும்    பயணித்துவருவதற்கான  வாய்ப்பு  கிட்டியது.

Last Updated on Thursday, 29 January 2015 03:21 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: இலக்கியத்திலும் மொழியியலிலும் பன்முக ஆளுமை கொண்டிருக்கும் பேராசிரியர் நுஃமான் இலக்கியத்தொடர்பாடலுக்கும் ஆய்வுத்தேடலுக்கும் பாதை செப்பனிட்டுக்கொடுத்தவர்.

E-mail Print PDF

 நுஃமான்முருகபூபதிஇலங்கையின்  மூத்த  கவிஞரும்  விமர்சகருமான  நுஃமான் அவர்களுக்கு  70  வயது  என்பதை  அறிந்து  முதலில்  எனது நல்வாழ்த்துக்களை   அவருக்குத்  தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை  எழுதத்தொடங்குகின்றேன். நுஃமான்   தொழில்  ரீதியில்  பணியாற்றிய  கல்வித் துறையில்  எவ்வாறு  படிப்படியாக  உயர்ந்து  இன்று  தகைமைசார்  பேராசிரியராக  விளங்குகிறாரோ  அவ்வாறே  தாம்  சார்ந்த  இலக்கியத்துறையிலும்   படிப்படியாக  உயர்ந்து  பலருக்கும் முன்மாதிரியாகியிருப்பவர். அவர்  கவிஞர்,  விமர்சகர்,  ஆய்வாளர்,  மொழியியல்  அறிஞர், பேராசான்,   பதிப்பாளர்  முதலான  பன்முகம்  கொண்டவர். இலக்கியப்பிரவேசத்தில்  அவர்  ஆரம்பத்தில்  சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்   என்பதை   அறியமுடிகிறது.  பின்னாளில் ஆளுமையுள்ள  விமர்சகராகத்  தோற்றம்  பெற்ற  பலர்  ஆரம்பத்தில் சிறுகதைகள்தான்   எழுதியிருக்கின்றனர்  என்பது  தகவல்.   அந்த வரிசையில்  கைலாசபதி -  தொ.மு.சி ரகுநாதன்  ஆகியோரையும் குறிப்பிடலாம்.

நுஃமான்  பிறந்த  ஆண்டு  1944  என்பது  மாத்திரமே  தெரிந்த நிலையில்  அவரது  வாழ்க்கைப்பின்புலம்  பற்றிய  எதுவித தகவலும் இற்றைவரையில்  எனக்குத் தெரியாது.  அவரை  முதன்  முதலில் கொழும்பில்   இலக்கியசந்திப்புகளிலும் -  பின்னர்  அவர்  ஆசிரியராக பணியாற்றிய  கொழும்பு  அல்.ஹிதாயா  வித்தியாலயத்திலும் சந்தித்தேன். எனது  நினைவுக்கு  எட்டியவரையில்  1972  காலப்பகுதியில்  அவரை ஒரு  பாடசாலை  ஆசிரியராகவும்,  அதேசமயம்  இலக்கிய விமர்சகராகவும்  பார்த்தேன்.   அவரை  கவிஞன்  என்ற   கவிதைக்காக கிழக்கிலங்கையில்  (1969 -1970)  வெளியான   இதழின்  இணை ஆசிரியராகவும்  மகாகவி  உருத்திரமூர்த்தியின்  சில  நூல்களை பதிப்பித்த  பதிப்பாளராகவும்  தெரிந்துகொண்டிருந்தேன்.

Last Updated on Sunday, 11 January 2015 20:10 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன். அறுபது ஆண்டுகாலமாக அயர்ச்சியின்றி எழுதிவரும் இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன்.

E-mail Print PDF

நீர்வை பொன்னையன்முருகபூபதிஇலங்கையில்  தமிழ்  கலை,  இலக்கிய  பரப்பில்  மாவை,   வல்வை, கரவை,    சில்லையூர்,  காவலூர்,  திக்குவல்லை,  நீர்கொழும்பூர், நூரளை,    நாவல்  நகர்,  உடப்பூர்,  மாத்தளை   முதலான  பல  ஊர்கள் பிரசித்தமாவதற்கு   அங்கு  பிறந்த  பல  கலைஞர்களும் படைப்பாளிகளும்   காரணமாக  இருந்துள்ளனர். ஊரின்  பெயரையே   தம்முடன்  இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில்   தொடரும்  பலருள்  நீர்வை   பொன்னையனும்   ஒருவர்.   இலங்கையில்  மூத்த இலக்கியப்படைப்பாளியான   அவர்  சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு   வருகை  தந்து  சிட்னியில்  தமது  புதல்வியின்   குடும்பத்தினர்களுடன்  தங்கியிருப்பதாக  தகவல் கிடைத்து   அவருடன்  தொடர்புகொண்டேன். வடபுலத்தில்    நீர்வேலியில்  1930   ஆம்  ஆண்டு  பிறந்த  நீர்வை பொன்னையன்,    தமது    ஆரம்பக்கல்வியை    நீர்வேலி    அத்தியார் இந்துக்கல்லூரியில்    ஆரம்பித்து   பின்னர்    மட்டக்களப்பு  - கல்லடி சிவானந்தா   கல்லூரியிலும்  தொடர்ந்து  பயிற்றப்பட்ட  ஆங்கில ஆசிரியராக   கிழக்கிலங்கையில்  சம்மாந்துறை   முஸ்லிம் பாடசாலையில்    பணியாற்றிவிட்டு    இந்தியாவில்   கல்கத்தா பல்கலைக்கழகத்தில்   பயின்று  பட்டதாரியாக  தாயகம்  திரும்பினார்.

Last Updated on Friday, 02 January 2015 23:19 Read more...
 

சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான். ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ.

E-mail Print PDF

espo59.jpg - 60.16 Kb

இலங்கையின்  மூத்த  படைப்பாளி  எஸ்.பொ.  அவுஸ்திரேலியாவில் சிட்னியில்  26-11-2014 மறைந்தார்.  கடந்த  காலங்களில்  எனக்குத்தெரிந்த -  நான்  நட்புறவுடன்  பழகிய பல  படைப்பாளிகள்  சமூகப்பணியாளர்கள்  குறித்து எழுதிவந்திருக்கின்றேன்.  வாழும்  காலத்திலும்  அதில்  ஆழமான கணங்களிலும்   அவர்களுடனான  நினைவுப்பகிர்வாகவே  அவற்றை இன்றும்   தொடர்ந்து  எழுதிவருகின்றேன். காலமும்  கணங்களும்  ஒவ்வொருவர்   வாழ்விலும்  தவிர்க்க முடியாதது. எஸ்.பொ.  அவர்களை  1972  ஆம்  ஆண்டு  முதல்  முதலில்  கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில்  ரெயின்போ  அச்சகத்தில்  சந்தித்தேன். அதன்பிறகு  கொழும்பில்  பல  இலக்கியக்கூட்டங்களிலும் சந்தித்திருக்கின்றேன்.   எஸ்.பொ  இரசிகமணி   கனக செந்திநாதன் கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துரை  உட்பட  பல  இலக்கியவாதிகள்   எமது நீர்கொழும்பு   இந்து  இளைஞர்  மன்றம்  தொடர்ச்சியாக  மூன்று நாட்கள்  நடத்திய  தமிழ்  விழாவிற்கு  வருகை தந்துள்ளனர்.

எஸ்.பொ.  1980  களில்  நைஜீரியாவுக்கு  தொழில்  நிமித்தம்  புறப்பட்ட வேளையில்   கொழும்பு -  ஜம்பட்டா  வீதியில்  மலையக  நாடகக் கலைஞரும்   அவள்  ஒரு  ஜீவநதி  திரைப்படத்தின்   தயாரிப்பாளரும் அதன்  வசனகர்த்தாவுமான   மாத்தளை   கார்த்திகேசுவின்  இல்லத்தில் எஸ்.பொ.வுக்காக    நடந்த   பிரிவுபசார  நிகழ்வில்   சந்தித்தேன். மீண்டும்   அவரை  சில  வருடங்களின்   பின்னர்   1985   இல்   ஒரு விஜயதசமி   நாளில்  வீரகேசரியில்  நடந்த  வைபவத்தின்பொழுது என்னைச்சந்திக்க  வந்த   எஸ்.பொ.வின்   ஆபிரிக்க   அனுபவங்கள் பற்றிய    நேர்காணலை  எழுதி   வெளியிட்டேன்.  1987  இல்  நான் அவுஸ்திரேலியாவுக்கு   வந்த    பின்னர்  -  1989  இல்  எனது  இரண்டாவது  சிறுகதைத்தொகுதி  சமாந்தரங்கள்  நூலின்  வெளியீட்டு  விழாவை  மெல்பனில்  நடத்தியபொழுது  சிட்னியில் மூத்த   புதல்வர்  டொக்டர்   அநுராவிடம்  அவர்   வந்திருப்பது   அறிந்து அவரை    பிரதம பேச்சாளராக   அழைத்தேன்.   அன்றைய   நிகழ்வே அவர்   அவுஸ்திரேலியாவில்   முதல்  முதலில்  தோன்றிய   இலக்கிய பொது நிகழ்வு. 1972 முதல் 2010 வரையில்   சுமார்  38  ஆண்டுகள்  மாத்திரமே அவருக்கும்  எனக்குமிடையிலான  இலக்கிய  உறவு   நீடித்தது.   அந்த உறவு எவ்வாறு   அமைந்தது    என்பதுபற்றிய  தகவல்களை  இந்தத் தொடர்   ஆக்கத்தில்    பதிவுசெய்யவில்லை. கலை  இலக்கிய  ஊடகத்துறையில்   ஈடுபடும்  எவரும்  அன்றாடம் சந்திக்கக்கூடிய   அனுபவங்களே    அவர்தம்  வாழ்வின் புத்திக்கொள்முதலாகும்.    எஸ்.பொ.  குறித்து  நானும்  என்னைப்பற்றி அவரும்   ஏற்கனவே   நிறைய   எழுதிவிட்டோம்.    ஒரு கட்டத்திற்குப்பிறகு  எழுதுவதற்கு   எதுவும்   இல்லை என்றாகிப்போனாலும் -  அவர்தம்   எழுத்தூழிய   ஆளுமை   தமிழ்    சமூகப்பரப்பில்   தவிர்க்க  முடியாதது. மூத்த    இலக்கிய  சகா  எஸ்.பொ. வின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்தித்து அன்னாரின் மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும்  அவரது கலை- இலக்கிய ஊடகத்துறை நண்பர்களின்  துயரத்தில் பங்கேற்று   இந்த   ஆக்கத்தை  தொடருகின்றேன்.

Last Updated on Wednesday, 26 November 2014 20:01 Read more...
 

பால்யகாலத்திலிருந்து புகலிட காலம் வரையில் தொடரும் நினைவுப்பதிகை. காலம் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம் நூலகர் நடராஜா செல்வராஜா

E-mail Print PDF

'நூல்தேட்டம்' நூலகவியலாளர் என். செல்வராஜா!முருகபூபதிநீர்கொழும்புக்கு    வந்திருக்கிறீர்களா? அந்த   ஊர்   குறித்து   கர்ணபரம்பரைக்கதைகளும்    சுவாரஸ்யமான வரலாற்று    செய்திகளும்    இருக்கின்றன. அங்கிருந்த   தமிழர்கள்   சிங்களவர்களாக    மாறிவிட்டார்கள்    என்று கேள்விஞானத்தில் வாய்க்கு   வந்தபடி   பேசிவருபவர்களும் இருக்கிறார்கள் ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் அங்கு இருப்பதனால் சின்னரோமாபுரி என்றும் அழைப்பார்கள். அங்கு பூர்வீகமாக   வாழ்பவர்களும் அவர்களின் அடுத்த சந்ததியினரும் சகோதர மொழியான சிங்களத்தை   சரளமாக பேசுவதனால் அம்மக்கள் சிங்களவர்களாகிவிட்டதாக பலர்   கற்பனை    பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மேல்நாடுகளுக்கு   வந்து    தமிழை   மறந்து   ஆங்கில   மோகத்தில் ஆங்கிலம்   மாத்திரம்   பேசிக்கொண்டிருப்பவர்கள்   அனைவரும் ஆங்கிலேயர்    என்ற   முடிவுக்கு   வந்துவிடமுடியுமா? அவ்வாறு   நீர்கொழும்பு   வாழ்   தமிழர்கள்   சிங்கள    மோகத்தில் தம்மை    மாற்றிக்கொள்ளவில்லை.   தோப்பு  -   கொச்சிக்கடை முதலான நீர்கொழும்பை    அண்டியிருக்கும் ஊர்களில்   வசித்த தமிழ்  கத்தோலிக்கர் சிலர்    சிங்களம்   கற்றால்   அரச  உத்தியோகம்   கிடைக்கும்  என நம்பி சிங்களம் படித்தனர்.  சில சிங்கள    கத்தோலிக்க  மதகுருமார் நீர்கொழும்பு   பிரதேசத்தில் தேவாலயங்களில்    சிங்கள மொழியில்  பிரார்த்தனை நடத்தினார்கள். இந்தப்பின்னணியிலிருந்து   அவ்வூர்   தமிழர்கள்   சிங்களவர்களாக மாறிவிட்டனர்   என்ற    முடிவுக்கு    வந்தவர்கள்   வாய்க்கு   வந்தபடி பேசிவருகிறார்கள்.

Last Updated on Monday, 24 November 2014 21:26 Read more...
 

அடுத்தடுத்து எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு. எல்லாம் இழந்து நிர்க்கதியான பின்னரும் தனது உடலை தானமாக வழங்கிய சகோதரி ராஜம் கிருஷ்ணன்.

E-mail Print PDF

அடுத்தடுத்து   எமது இலக்கியக்குடும்பத்தில் பேரிழப்பு. எல்லாம்  இழந்து நிர்க்கதியான பின்னரும் தனது உடலை  தானமாக வழங்கிய  சகோதரி ராஜம் கிருஷ்ணன்.

அவுஸ்திரேலியா - சிட்னியில்  கடந்த  14  ஆம்  திகதி  மறைந்த மூத்தபடைப்பாளி  காவலூர்  ராஜதுரையின்  இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்ட  பின்னர் சிட்னி  மத்திய  ரயில்   நிலையத்திற்கு  வந்து  மெல்பன்  புறப்படும்  ரயிலில்  அமர்ந்திருக்கின்றேன். பத்திரிகையாளர்   சுந்தரதாஸ்   கைத்தொலைபேசியில் தொடர்புகொள்கின்றார். காவலூரை   வழியனுப்பிவிட்டு  புறப்பட்டீர்கள்.  மற்றும்  ஒருவரும் மீள   முடியாத  இடம்  நோக்கிப்புறப்பட்டுவிட்டார்  என்ற  செய்தி வந்துள்ளது என்றார். யார்...? எனக்கேட்கின்றேன். ராஜம்கிருஷ்ணன்  என்கிறார். கடந்த 2012 ஆம்  வருடம்  தமிழகம்  சென்று  ராஜம்கிருஷ்ணனை   அவர்  அனுமதிக்கப்பட்டிருந்த   சென்னை  - பொரூர்  இராமச்சந்திரா மருத்துவமனையில்   பார்த்துவிட்டு  திரும்பி -  பயணியின் பார்வையில்    தொடரில்    ஆளுமையுள்ள  அந்த  அம்மாவைப்பற்றிய விரிவான  கட்டுரையை   பதிவுசெய்திருந்தேன்.
அக்கட்டுரையிலிருந்து  சில  பகுதிகள்  இங்கே:

Last Updated on Thursday, 23 October 2014 22:34 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் குத்துவிளக்கு திரைப்படம் வெளியிட்ட கட்டிடக்கலைஞர் வி.எஸ். துரைராஜா தென்னிந்திய தமிழ் சினிமாவின் இராட்ச ஒளிவெள்ளத்தால் மங்கிப்போன ஈழத்தின் அகல்விளக்குகள்.

E-mail Print PDF

குத்துவிளக்கு  திரைப்படம்  1970  களில்  உருவான  சூழல்  மிகவும் முக்கியமானது. வி.எஸ். துரைராஜாகுத்துவிளக்கு   திரைப்படம்   1970   களில்    உருவான    சூழல்   மிகவும் முக்கியமானது.     டட்லி சேனா  நாயக்கா    தலைமையிலான    ஐக்கிய தேசியக்கட்சி    படுதோல்வியடைந்து    ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க)  -  என். எம். பெரேரா   (சமசமாஜி) -   பீட்டர்    கெனமன்    (கம்யூனிஸ்ட்) கூட்டணியில்    அரசு    அமைந்த   பின்னர்   பல   முற்போக்கான திட்டங்கள்    நடைமுறைக்கு    வந்தன. உள்நாட்டு     உற்பத்திக்கு   மிகவும்    முக்கியத்துவம்   தரப்பட்டது. வடக்கில்    வெங்காயம் - மிளகாய்   பயிர்செய்கையாளர்களின் வாழ்வில்    வசந்தம்   வீசியது. உள்நாட்டு    ஆடைத்தொழிலுக்கு  ஊக்கமளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து    தரமற்ற    வணிக   இதழ்கள்   மீதான  கட்டுப்பாடு வந்தது. உள்நாட்டுத்திரைப்படங்களை   ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம்    தோன்றியது.

அதுவரைகாலமும்    இந்திய   திரைப்படங்களை    இறக்குமதி  செய்து கோடி    கோடியாக    சம்பாதித்த   இலங்கையில்    திரைப்படங்களின் இறக்குமதிக்கு   ஏகபோக    உரிமை     கொண்டாடிய   பெரும் தனவந்தர்களுக்கு   வயிற்றில்    புளி   கரைக்கப்பட்டது. பதுக்கிவைக்கப்பட்ட   கள்ளப்பணத்தை   வெளியே    எடுப்பதற்காக புதிய    ஐம்பது  -   ரூபா   நூறு    ரூபா    நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்நிய செலாவணி   மோசடிகளில்   ஈடுபட்ட   சில   பெரும்   புள்ளிகள் கைதானார்கள்.  கொழும்பு    தெற்கில்   வோர்ட்    பிளேஸில்   முன்னாள்   அதிபர் ஜே. ஆர் .ஜெயவர்தனாவின்    வாசஸ்தலத்திற்கு    அருகாமையில்   தமது கட்டிடக்கலை        பணியகத்தை    நடத்திக்கொண்டிருந்த  துரைராஜா அவர்களுக்கு    தாமே  ஒரு   தமிழ்த்திரைப்படம்   தயாரிக்கவேண்டும் என்ற    எண்ணம்    உருவானது   தற்செயலானது  என்று    சொல்ல முடியாவிட்டாலும்  அன்றைய   காலப்பின்னணியும்   அவரை அந்தப்பரீட்சைக்கு    தள்ளியிருந்தது    எனச்சொல்லலாம்.

Last Updated on Thursday, 25 September 2014 22:12 Read more...
 

அற்பாயுளில் மறைந்த அற்புதக்கலைஞன் மண்டலின் ஸ்ரீநிவாஸ்

E-mail Print PDF

பிறநாட்டு    நல்லறிஞர்    சாத்திரங்கள்   தமிழ்  மொழியில்  பெயர்த்தல்  வேண்டும்
இறவாத   புகழுடைய  புதுநூல்கள்   தமிழ்மொழியில்  இயற்றல் வேண்டும்
மறைவாக  நமக்குள்ளே   பழங்கதைகள்   சொல்வதிலோர்   மகிமை இல்லை
திறமான   புலமையெனில்   வெளிநாட்டோர்   அதை வணக்கஞ்செய்தல்  வேண்டும்

அற்பாயுளில் மறைந்த  அற்புதக்கலைஞன் மண்டலின் ஸ்ரீநிவாஸ்முருகபூபதிஎன்று   மகாகவி  பாரதி    பல்லாண்டுகளுக்கு   முன்னர்   சொன்னார். அவரது   வாக்கிற்கு   சிறந்த   இலக்கணமாக  வாழ்ந்த   மெண்டலின் இசைமேதை   ஸ்ரீநிவாஸ்  தனது   45   வயதில்  ஆயுளை முடித்துக்கொண்டார். ஸ்ரீநிவாஸ்  என்றால்   எந்த   ஸ்ரீநிவாஸ்..?     என்றுதான்    கேட்பார்கள். மெண்டலின்    என்ற   மேலைத்தேய    இசைக்கருவியுடனேயே   தனது    வாழ்நாளை    செலவிட்ட    இந்தக்கலைஞருடன்   அந்த இசைக்கருவியின்    பெயரும்    இணைந்தமையால்  இன்று  அவரது மறைவு    என்றைக்குமே    அஸ்தமிக்காத   அந்த    இசையுடன் பேசப்படுகிறது. மேதாவிலாசம்  மிக்க  பலருக்கு   அற்பாயுள்தானா? எனக்கேட்கச்செய்கிறது  அவரது  மறைவுச்செய்தியும்.   விவேகானந்தர்,   பாரதி,   ஐன்ஸ்றின்,   போன்று   உலகளவில் பேசப்பட்டவர்களும்    அற்பாயுளில்   மறைந்தார்கள்.   அந்த வரிசையில்  இன்று    மெண்டலின்   ஸ்ரீநிவாசன். கர்னாடக    இசையாகட்டும்   மேலைத்தேய    இசையாகட்டும் திரையிசையாகட்டும் அவற்றிலெல்லாம்    சங்கமித்த    மெண்டலின் வாத்தியம் உள்ளத்தை   கொள்ளைகொண்டு  போகும் வல்லமை மிக்கது. தனது இளம்பராயத்திலிருந்தே    தனது    தந்தையிடமிருந்து   இந்த வாத்திய   இசையை    கற்று  வந்து   சாதனைகள்  படைத்த ஸ்ரீநிவாஸ்  பத்மஸ்ரீ  -    சங்கீத   ரத்னா   விருதுகளையும்   பெற்றவர். கீழைத்தேய    வாத்தியக்கருவிகளான   தம்புரா  -  வீணை  -  கோட்டுவாத்தியம்  -   புல்லாங்குழல்  -  நாதஸ்வரம்  -   மிருதங்கம் - தவில்   -  கடம்  -   கஞ்சிரா   -   சதங்கை முதலானவற்றிலிருந்து வேறுபட்டவை   வயலின்  -   கிட்டார்  -      ட்ரம்ஸ்  -   மெண்டலின்.

Last Updated on Sunday, 21 September 2014 20:19 Read more...
 

திரும்பிப்பார்க்கிறேன்: இலங்கையில் கல்விக்கும் இலக்கியத்திற்கும் அயராது சேவையாற்றிய ஆய்வறிஞர் முகம்மது சமீம்.

E-mail Print PDF

muhamatsameem9.jpg - 33.91 Kbமுருகபூபதிகடந்த  சில  மாதங்களாக   முற்போக்கு   இலக்கிய   முகாமிலிருந்து அடுத்தடுத்து   எனது  இனிய   நண்பர்களை  நான் இழந்து கொண்டிருக்கின்றேன். இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்   முன்னாள் செயலாளர்   நண்பர்   பிரேம்ஜி   ஞானசுந்தரன்   அவர்களின்   மறைவின் துயரத்தின்  சுவடு   மறையும்   முன்னர்   தமிழ்   நாட்டில்   மூத்த படைப்பாளி   இலக்கிய  விமர்சகர்   தி.க.சிவசங்கரன் மறைந்தார். அவருக்கும்   இரங்கல்  எழுதி   எனது   நினைவுகளுக்கு   அவரை மீண்டும்   அழைத்து   மனதிற்குள் உரையாடிக்கொண்டிருந்தவேளையில் ---  இதோ  நானும்  வருகிறேன் என்னையும்    அழைத்துக்கொள்ளும்   என்று   நெஞ்சத்தினுள் பிரவேசித்துவிட்டார்     இனிய   நண்பர்    சமீம்   அவர்கள். அவரது   மறைவுச்செய்தியை  அறிந்தவுடன்  கடந்த  காலங்கள்தான் ஓடிவருகின்றன.   நான்   இலக்கிய   உலகில்   பிரவேசித்த  காலப்பகுதியில்  அதாவது 1972  ஆம்  ஆண்டு   காலப்பகுதியில்தான்   சமீம்  எனக்கு அறிமுகமானார்.  அவர்  கம்பளை  சாகிராக்கல்லூரி   அதிபராகவும்  பின்னர்   கிழக்குப்பிராந்திய   கல்வி  பணிப்பாளராகவும்  பணியாற்றிய காலகட்டத்தில்    எமது    இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்    பணிகளிலும்   தீவிரமாக   இணைந்து   இயங்கினார்.

Last Updated on Wednesday, 17 September 2014 16:47 Read more...
 

எழுத மறந்த குறிப்புகள் பயிர் வளர் மண்ணில் உயிர்ப்புடன் வாழும் தம்பதியர் தொடர்பாடல்தான் இயந்திர யுகத்தில் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது.

E-mail Print PDF

முருகபூபதிபலரதும்  வாழ்க்கை   ஏதோ   ஒருவகையில்   தூண்டுதல்களுடன்தான் தொடருகின்றது.   எனது    வாழ்வும்   அப்படியே   சமீபத்தில்   நான்   வெளியிட்ட   எனது   சொல்ல   மறந்த  கதைகள்  நூலை  வெளியிட முன்வந்தபொழுது   அதுதொடர்பாக   நான்   வழங்கிய   வானொலி நேர்காணல்   மற்றும்   வெளியான    விமர்சனங்களையடுத்து   அவற்றை செவிமடுத்த -   கவனித்த   சில  இலக்கியவாதிகள்   எனக்கு   வாழ்த்து தெரிவித்திருந்ததுடன்    நூலின்   பிரதியும்   கேட்டிருந்தார்கள்.    அவர்களில் ஒருவர்    ஜெர்மனியில்   வதியும்   எழுத்தாளர்   ஏலையா  முருகதாசன்   என்ற   அன்பர்.  இவர்  அண்மைக்காலமாகத்தான்   என்னுடன்   மின்னஞ்சல்   தொடர்பில் இருப்பவர்.    ஒரு   நாள்   இரவு   தொலைபேசியிலும்  தொடர்புகொண்டு உரையாடினார். எனது   வானொலி   நேர்காணலில்  குறிப்பிட்ட   அந்த   சொல்ல  மறந்த கதைகளில்   இடம்பெற்ற   முன்னைய   சோவியத்தின் இராஜதந்திரியிடமிருந்த    சங்கத்  தமிழ்  இலக்கியம்  தொடர்பான பார்வையைப்பற்றி   அறிந்ததும்   எனக்கு   பின்வரும்  மின்னஞ்சலை அனுப்பினார்.   அதனை    காலத்தின்   தேவை   உணர்ந்து    வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு   -   இனி    நான்  எழுதப்போகும்    எழுத  மறந்த  குறிப்புகள் தொடருக்குள்    பிரவேசிக்கின்றேன்.

Last Updated on Tuesday, 02 September 2014 22:56 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: தனது தொப்புள்கொடி நாவல் வெளியீட்டு நிகழ்வைக்காணமலேயே தொப்புள்கொடி உறவைத்தேடிச்சென்ற படைப்பாளி நித்தியகீர்த்தி!

E-mail Print PDF

திரும்பிப்பார்க்கின்றேன்: தனது தொப்புள்கொடி நாவல் வெளியீட்டு நிகழ்வைக்காணமலேயே தொப்புள்கொடி உறவைத்தேடிச்சென்ற படைப்பாளி நித்தியகீர்த்தி! முருகபூபதிஅவுஸ்திரேலியாவில்    இலக்கியத்துறையில்  ஈடுபாடுள்ள எழுத்தாளர்களையும்   கலைஞர்களையும்   ஊடகவியலாளர்களையும் தனிப்பட்ட  விருப்பு வெறுப்புகளுக்கு  அப்பால்  வருடாந்தம்  ஒன்று கூடச்செய்யும்   தமிழ்  எழுத்தாளர்  விழாவை  2001  ஆம்  ஆண்டு  மெல்பனில்  நான்   ஒழுங்குசெய்து  அதற்கான   பூர்வாங்க  வேலைகளில்  ஈடுபட்டிருந்தபோது,    சிட்னியிலிருந்து  நண்பர்    கலாமணி    ( தற்பொழுது    யாழ்ப்பாணத்திலிருந்து   ஜீவநதி   மாத  இதழை  வெளியிடும்  அதன்  ஆசிரியர்   பரணீதரனின்   தந்தையார்)     தமது  குடும்பத்தினருடன்   வந்து  எமதில்லத்தில்    தங்கியிருந்தார். கலாமணி    தமது   பூதத்தம்பி    இசைநாடகத்தை   எழுத்தாளர் விழாவில்   மேடையேற்றுவதற்காகவும்  விழாவில்   நடந்த  இலக்கிய கருத்தரங்கில்  உரையாற்றுவதற்காகவும்   வருகைதந்திருந்தார். கலாமணி   தற்பொழுது  யாழ். பல்கலைக்கழகத்தில்   விரிவுரையாளராக  பணியிலிருக்கிறார். 2001 ஆம்  ஆண்டு  முதலாவது  எழுத்தாளர்  விழா  அழைப்பிதழ்களுக்கு   முகவரிகளை    எழுதி   முத்திரைகளை ஒட்டிக்கொண்டிருந்தபொழுது  ஒரு  தொலைபேசி  அழைப்பு  வந்தது. நண்பர்   கலாமணிதான்    எடுத்தார்.

Last Updated on Friday, 01 August 2014 22:22 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன் - கறுப்பு ஜூலை 83 நினைவு தினக்கட்டுரை: இலக்கிய திறனாய்வாளர் கலா. பரமேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று

E-mail Print PDF

 

" ஞாயிற்றுக்கிழமை  போய்விடுவேன்  என்றார் - அவ்வாறே  போய்விட்டார் இரண்டு  நாள்  இடைவெளியில் சஞ்சரித்த காலமு (னு)  ம்  கணங்களும் "

1_kalaparameswaran.jpg - 12.09 Kbமுருகபூபதிமுப்பத்தியொரு  ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை   மாதம்   22   ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  நள்ளிரவு    யாழ்ப்பாணம்    பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்தியில்  வந்துகொண்டிருந்த  இராணுவ  ட்ரக்   வண்டி  மீது நிலக்கண்ணி வெடித்தாக்குதல்    நடந்தது.  அச்சம்பவத்தில்  13   இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியை  தமிழர்கள்  இன்றும்  கறுப்பு  ஜூலை  என்று அனுட்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இலங்கையின்  அரசியலிலும்  அங்கு வாழ்ந்த   பூர்வகுடி தமிழ் மக்களினதும்  வாழ்வில்    பெரும்    மாற்றத்தை ஏற்படுத்திவிட்ட அந்த  1983   ஜூலை   மாதத்தில் யாழ்ப்பாணம் பலாலிவீதியில் ஒரு  இல்லத்தில்  அந்த    கறுப்புஜூலை   ஆழமாகவே பதிந்துவிட்டது. அந்தவீட்டிலிருந்த   முதியவர்    மற்றும்    குடும்பத்தலைவர்    தவிர்ந்த ஏனையவர்களை    வேரோடு    பிடுங்கி    எறிந்து    தேசாந்தரிகளாக்கியது. அப்படியென்றால்  -  அந்த    முதியவரும்    குடும்பத் தலைவரும்    என்ன ஆனார்கள்?    அவர்களின்    உடல்களை    குண்டுகள்    துளைத்து    அவர்கள் பரலோகம்    பயணித்தார்கள். எனது   இனிய    நண்பர்   கலா. பரமேஸ்வரன்   இன்று (24-07-1983)    யாழ்ப்பாணம்   பலாலிவீதியில்    கொல்லப்பட்ட   31    ஆவது    ஆண்டு நினைவு  தினம்.  அந்தத்துயரமே  இந்தக்கறுப்பு ஜூலையில்    இன்றைய  நாளில் எனது துயர்பகிர்வு. அன்று  24  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை   ஆடி  ஆமாவாசை - போயாதினம்.    தென்னிலங்கையில்   நாட்டின்    ஜனாதிபதி   உட்பட பௌத்தர்கள்    அனைவரும்   சில்   அனுட்டித்துக்கொண்டிருந்தார்கள்.

Last Updated on Tuesday, 22 July 2014 23:01 Read more...
 

படித்தோம் சொல்கிறோம்: ஈழத்தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்ட போரின் அவலங்களைப் பேசும் கருணாகரனின் வேட்டைத்தோப்பு அரசியல் அறமே கூற்றுவனாகி மக்களின் வாழ்வை குலைத்துப்போட்டதை சித்திரிக்கும் தொகுப்பு!

E-mail Print PDF

ஈழத்தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்ட போரின்  அவலங்களைப் பேசும்  கருணாகரனின்   வேட்டைத்தோப்புமுருகபூபதிஇலங்கையில்   மட்டுமன்றி   தமிழகம்  மற்றும்  தமிழர்  புகலிட நாடுகளிலும்    இலக்கிய   வாசகர்களின்   கவனிப்பிற்குள்ளான கருணாகரன்  -   கவிஞராகவே    முன்னர்   அறியப்பட்டவர்.    வெளிச்சம் இதழின்    ஆசிரியராகவுமிருந்தவர்.    பத்தி   எழுத்தாளர் -ஊடகவியலாளர் -   சில நூல்களின் பதிப்பாளர்   -  இலக்கிய     இயக்க செயற்பாட்டாளர்.  எனக்கு  கருணாகரன்  இலக்கியத்தின்  ஊடாக  அறிமுகமானது  2008 இல்தான்.  லண்டனில்   வதியும்  முல்லை  அமுதன்  தொகுத்து   வெளியிட்ட இலக்கியப்பூக்கள்   தொகுப்பில்  மறைந்த  செம்பியன் செல்வனைப்பற்றி    கருணாகரன்   எழுதியிருந்த    கட்டுரை வித்தியாசமானது.    வழக்கமான   நினைவுப்பதிவுகளிலிருந்து முற்றிலும்    மாறுபட்டு    புதியகோணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு    அந்தத்தொகுப்பில்    மிகவும்   பிடித்தமான   அக்கட்டுரையை எழுதிய    கருணாகரன்   யார்?    அவர்    எங்கே   இருக்கிறார்?    என்று ஒரு நாள்   முல்லை  அமுதனுடன்   தொலைபேசியில் தொடர்புகொண்டு    விசாரித்தேன். கருணாகரன்   வன்னியிலிருப்பதாக தகவல்   கிடைத்தது.   2009 இல் மெல்பனில்    நடந்த   எழுத்தாளர்   விழாவில்   குறிப்பிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.   பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா    அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில்   கலந்துகொண்ட    ஜெயமோகன்   தமிழகம் திரும்பியதும்   எழுதியிருந்த   புல்வெளிதேசம்   நூலிலும்  இந்தத் தகவலை    பதிவுசெய்திருந்தார்.

Last Updated on Sunday, 13 July 2014 18:44 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: இலக்கிய விமர்சனங்களை எழுதினாலும் - தன்மீதான விமர்சனங்களை மௌனமாகவே எதிர்கொண்ட பேராசிரியர் கைலாசபதி

E-mail Print PDF

கலாநிதி க.கைலாசபதிமுருகபூபதிநம்மிடத்தில் - நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு.அவருக்கு    கடிதம்    எழுதினேன் -  பதிலே இல்லை.கடிதமா ? ஐயோ – எழுத  நேரம்  எங்கே  கிடைக்கிறது.  அமர்ந்து  கடிதம் எழுதுவதற்கு    நேரம்    தேடி    போராடுகின்றோம்.கோபிக்க வேண்டாம்.    உங்கள்     கடிதம்     கிடைத்தது.    பதில்   எழுத முடியாமல்      போய்விட்டது.     அவ்வளவு     பிஸி.இவ்வாறு     உரையாடுபவர்களை      நாம்    பார்த்திருக்கின்றோம்.எப்பொழுது?மி.மு.   காலத்தில்.     அதென்ன   மி.மு?    மின்னஞ்சலுக்கு     முன்னர்   நாம் வாழ்ந்த     காலத்தில்.     தற்பொழுது    மி.பி.  காலத்தில்    வாழ்கின்றோம்.  அதாவது    மின்னஞ்சலுக்கு   பிற்பட்ட    காலத்தில்.      மின்னஞ்சல்  தந்த  கொடைகள்    முகநூல்  -   டுவிட்டர்  -  ஸ்கைப்.   இனிவரும்    காலத்தில்   மேலும்    புதிய    சாதனங்கள்  வரலாம்.ஆனால்  -   இந்த மென்பொருள்    சாதனங்கள்    எல்லாம்    வருவதற்கு   முன்பே   இந்தப்பத்தியின்   தொடக்கத்தில்  குறிப்பிட்ட   சமாதானங்களைக்  கூறி  தப்பிப் பிழைக்காமல் -  தனக்கு   வரும்   கடிதங்களுக்கெல்லாம்   தளராமல்   பதில் கடிதம்   எழுதிய   ஒருவர்   நம்   மத்தியில்   வாழ்ந்து   மறைந்தார்   என்பதை எத்தனை பேர்   அறிந்திருப்பார்கள்?.அவர்தான்    பேராசிரியர்   கைலாசபதி.   கடிதம்     எழுதுவதும்   ஒரு   கலைதான்   என   உணர்த்திய   இலக்கிய வாதியாக   அவரை   நான்   இனம்   காண்கின்றேன்.தனக்கிருந்த   பல  முக்கிய  பணிகளில்  ஒன்றாக  கடிதங்கள் எழுதுவதையும்  அவர்  கருதியிருக்க வேண்டும்.  பல  வருடங்களுக்கு முன்னர்  கைலாசபதி  எழுதிய  கடிதங்கள்  பலவற்றை  மிகவும்   பத்திரமாக பாதுகாத்து  ஒரு   கோவையில்   பிணைத்து   வைத்திருந்த    கவிஞர்    முருகையனிடம்தான்    கைலாசபதியைப் பற்றிய   இந்த   உண்மையை   அறிந்து கொண்டேன்.இதுவரையில்  -   கைலாசபதி    தமது    நண்பர்களுக்கு    இலக்கிய   நயத்துடன் எழுதிய  கடிதங்கள்   நூலாக   வெளிவரவில்லை.   கைலாஸின்   நண்பர்கள் இணைந்தால்    இப்படியொரு   முயற்சியிலும்   இறங்கிப் பார்க்கலாம். எழுத்தாளர்களுக்கு   ஆலோசனை   கூறும் - அபிப்பிராயம்  தெரிவிக்கும் கருத்துக் கருவூலங்களான   அவை   எதிர்காலத்தில்   தொகுக்கப்படலாம்  என்ற   எதிர்பார்ப்பும்   எனக்குண்டு.இன்றைய  மின்னஞ்சல்   யுகத்தில்   மறைந்துவரும்  கடிதக்கலை   என்று சில    மாதங்களுக்கு   முன்னர்   ஒரு   கட்டுரை   எழுதியிருந்தேன்.  அதனை பல   ஊடகங்கள்   மறுபிரசுரம்   செய்திருந்தன.   அக்கட்டுரையிலும் கைலாசபதியின்   கடிதக்கலையைத்தான்   விதந்து   பதிவுசெய்திருக்கின்றேன்.

Last Updated on Friday, 04 July 2014 19:59 Read more...
 

மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது!

E-mail Print PDF

மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது!முருகபூபதிஇலங்கையின் மூத்த எழுத்தாளரும் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது. 1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த டொமினிக்ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியத்துறையில் பிரவேசித்தவர். இலங்கை கம்யூனீஸ்ட் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தமக்கு நாளாந்தம் வருவாய்தரும் தொழிலையும் கைவிட்டு முழுநேர எழுத்தாளராக பல தசாப்தகாலமாக அயராமல் உழைத்தார். இலங்கையில் கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலம் உருவானதும் தனது தண்ணீரும் கண்ணீரும் முதலாவது சிறுகதைத்தொகுதிக்காக சாகித்திய விருதும் பெற்றார். இலங்கையில் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைக்காக முதல் முதலில் சாகித்திய விருதுபெற்றவரும் டொமினிக் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் முதலில் கஸ்தூரியார் வீதியிலிருந்தும் பின்னர் காங்கேசன்துறை வீதியில் ஒரு ஒழுங்கைக்குள்ளும் இருந்து பல வருடங்களாக வெளியான மல்லிகை மாத இதழ் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியிருக்கிறது. இலங்கையில் நாடுபூராகவும் தெருத்தெருவாக அலைந்து மல்லிகையை விநியோகித்து தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர் அதன் ஊடாக ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் ஜீவாவையே சாரும். அதனால் மல்லிகைஜீவா என்றே அழைக்கப்பட்டார். வடக்கில் போர்மூண்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுக்காகிதாதிகளுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய காலத்திலும் பாடசாலை அப்பியாசக் கொப்பித்தாள்களில் மல்லிகையை அச்சிட்டு வெளியிட்ட சாதனையாளர் மல்லிகை ஜீவா பல   நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்புக்கு இடம்பெயர்ந்து புறக்கோட்டை ஸ்ரீகதிரேசன் வீதியில் தொடர்ந்தும் பல வருடகாலமாக மல்லிகை இதழை வெளியிட்டுவந்தார்.

Last Updated on Friday, 04 July 2014 19:57 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: கிழக்கிலங்கையின் மண்வாசனையை இலக்கியப்படைப்புகளில் பரவச்செய்த மருதூர்க்கொத்தன், இன்று அவரது பிறந்த தினம்

E-mail Print PDF

1_maruthurkoththan.jpg - 9.85 Kbமுருகபூபதிபல   படைப்பாளிகள்   தமது   இலக்கியப்பிரதிகளை  எழுதும்பொழுது இயற்பெயரை  விடுத்து   புனைபெயர்களில்    அறிமுகமாவார்கள்.   பலர்   தமது   பிறந்த  ஊருக்குப்பெருமை   சேர்க்கும்   வகையில் தமக்குத்தாமே   ஊருடன்   இணைந்த  புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள். பின்னாளில்  அவர்களின்    இயற்பெயரை    பிறப்புச்சான்றிதழ் -பதிவுத்திருமண   சான்றிதழ் -  மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும்.    இலக்கிய   வட்டத்திலும்   குடும்ப  மட்டத்திலும் புனைபெயரே   நிலைத்துவிடும். கிழக்கு   மாகாணத்தில்   இஸ்மாயில்    என்ற   பெயரில்  ஒரு எழுத்தாளர்  இருந்தார்    எனச்சொன்னால்  எவருக்கும்  தெரியாது. மருதூர்க்கொத்தனையா  சொல்கிறீர்கள்   என்று   அவருக்கு  மிகவும் நெருக்கமான   சிலரே    குறிப்பிடுவார்கள். கிழக்கு   மாகாணத்தில்   கல்முனைக்கு   அருகாமையில்   பெரிய நகரமும்   அல்லாமல்   சிறிய   கிராமமாகவும்   காட்சியளிக்காத கடலோர   சிற்றூர்   மருதமுனை. இந்த   ஊரில்  மருதூர் ஏ. மஜீத்  -   மருதூர்க்கனி   -   மருதூர் வாணன் என்ற   பெயர்களில்   எழுதியவர்களின்   வரிசையில்   முன்னோடியாக இருந்தவர்   மருதூர்க்கொத்தன். 1935  ஜூன்  மாதம்  6  ஆம்  திகதி   அநுராதபுரத்தில்   பிறந்த   இஸ்மாயில்   என்ற    மருதூர்க்கொத்தன்    (இன்று  அவர்  உயிருடன் இருந்திருந்தால்  79   ஆவது   வயதை   குடும்பத்தினருடனும் இலக்கிய   நண்பர்களுடனும்    கொண்டாடியிருப்பார்.)  2004 ஆம் ஆண்டு  ஏப்ரில்  மாதம்  19  ஆம்   திகதி  மறைந்தார்.

Last Updated on Thursday, 05 June 2014 22:14 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: தொடரும் கனவுலகில் வலி சுமக்கும் நூலக நினைவுகள்

E-mail Print PDF

 - யாழ். பொது நூலகம்   இனவாதிகளினால்   1981   மே (31-05-1981) மாதம்  எரிக்கப்பட்டு    முப்பத்திமூன்று   வருடங்களாகின்றன.   அதன் நினைவாக   இந்தப்பதிவு. -

யாழ். பொது நூலகம்  இனவாதிகளினால்  1981  மே (31-05-1981) மாதம் எரிக்கப்பட்டு  முப்பத்திமூன்று  வருடங்களாகின்றன.  அதன் நினைவாக  இந்தப்பதிவுமுருகபூபதிஎனக்கு     அப்போது    பதினைந்து  வயதிருக்கும்.    நீர்கொழும்பில் எங்கள்   வீட்டிலிருந்து    ஒன்றரை    கிலோ மீட்டர்   தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும்    (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச்  செல்வதற்காக    தமது   ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது)    இந்து    சமுத்திரமும்   சங்கமிக்கும்   முன்னக்கரை என்ற    இடத்திற்குச்சமீபமாக    வாழ்ந்த   டேவிட்  மாஸ்டர் என்பவரிடம்    கணிதம்    படிப்பதற்காக  (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன். நீர்கொழும்பு   பழைய  பஸ்நிலையத்தை   கடந்துதான் முன்னக்கரைக்குச்செல்லவேண்டும்.    அந்தப்பாதையில்  நீர்கொழும்பு மாநகர    சபையின்    பொது  நூலகம்   அமைந்திருந்தது.   ரியூசன்   முடிந்து வரும்   மாலைநேரங்களில்    என்னை    அறியாமலேயே    எனது   கால்கள்   அந்த    நூலகத்தின்    வாசலை    நோக்கி    நகர்ந்துவிடும்.    அங்கே    குமுதம்  -   கல்கண்டு  -  கல்கி  - ஆனந்தவிகடன்    உட்பட     இலங்கைப்பத்திரிகைகளையும் படித்துவிடுவேன்.     மு.வரதராசனின்     பெரும்பாலான    நாவல்களையும்    அங்குதான்    படித்தேன்.
கல்கி    வெள்ளிவிழாவை    முன்னிட்டு   நடத்தப்பட்ட    நாவல் போட்டியில்    பரிசுபெற்ற    உமாசந்திரனின்    முள்ளும்  மலரும் (பின்னர்  ரஜனிகாந்த் - ஷோபா   நடித்து   பாலமகேந்திராவின் ஒளிப்பதிவுடனும்  மகேந்திரனின்   இயக்கத்திலும்   வெளியான  படம்) ரா.சு.நல்லபெருமாளின்  கல்லுக்குள்    ஈரம்  -     பி.வி.ஆரின் மணக்கோலம்     ஆகியனவற்றையும்     அந்த     நூலகத்தில்தான்   படித்து    முடித்தேன்.    அக்காலம்   முதலே    எனக்கும்    நூலகம்  பற்றிய    கனவு   தொடங்கிவிட்டது.    எங்கள்   வீட்டிலேயே  Murugan Library    என்ற    பெயரில்  ஒரு  நூலகத்தை தொடங்கினேன்.     மாதம்  25   சதம்தான்   கட்டணம்.   எனது  அம்மாதான்    முதலாவது    உறுப்பினர்.    அயலில்   சிலர்  இணைந்தனர்.   அதற்கென   ஒரு Rubber  Stamp  தயாரித்து  சிறிது காலம்    அந்த  நூலகத்தை  நடத்தினேன். ஆனால் -   தொடரமுடியவில்லை.    புத்தகங்களை    எடுத்துச்சென்ற சிலர்    திருப்பித்தரவில்லை.    மனம்  சோர்ந்துவிட்டது.

Last Updated on Saturday, 31 May 2014 00:29 Read more...
 

மெல்பனில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய இலக்கிய அரங்கு! அசோகனின் வைத்தியசாலை நாவல் வெளியீட்டில் முருகபூபதியின் உரை:

E-mail Print PDF

1_ashokanin_vaiththiyasalai.jpg - 10.28 Kbமுருகபூபதிஎழுத்தாளரும் சமூகப்பணியாளரும்   விலங்கு  மருத்துவருமான நடேசனின்   புதிய நாவல்   அசோகனின்   வைத்திய  சாலை - வண்ணாத்திக்குளம்   நாவலின்   சிங்கள   மொழிபெயர்ப்பு  சமணல வெவ  மற்றும்    உனையே   மயல் கொண்டு  நாவலின்  ஆங்கில மொழிபெயர்ப்பு Lost In You   ஆகிய   மூன்று   நூல்களினதும் விமர்சன  அரங்கு  அண்மையில்  (04-05-2014)  மெல்பனில்    இலங்கை சமூகங்களின்  கழகத்தின்   ஏற்பாட்டில்    அதன்   தலைவர்  திரு. பந்து திஸாநாயக்கா   அவர்களின்   தலைமையில்   நடந்தது. தமிழ்  சிங்கள முஸ்லிம்  மற்றும்   அவுஸ்திரேலியா   வெள்ளை இனத்தவர்களும்   கலந்து   சிறப்பித்த   இந்நிகழ்வில்   விக்ரோரியா மாநில   பாராளுமன்ற உறுப்பினர்கள்   ஜூட்  பெரேரா  -  லிஸ்பீட்டி - மூத்த  பத்திரிகையாளர்   மகிந்தபாலா  -  சிங்கள  எழுத்தாளர்  குருப்பு ஆங்கில   பத்தி  எழுத்தாளர் மொல்ரிஜ் -   எழுத்தாளர்  முருகபூபதி ஆகியோர்    உரையாற்றினர்.   நடேசன்   ஏற்புரை  வழங்கினார். நிகழ்வின்  இறுதியில்   கலந்துரையாடலும்  தேநீர் விருந்தும் இடம்பெற்றது.

Last Updated on Saturday, 17 May 2014 21:32 Read more...
 

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழா (1989 - 2014)

E-mail Print PDF

06-09-2014  சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre - Memorial Drive, Noble Park, Vic - 3174, Australia )

இலங்கையில்  முன்னர்  நீடித்த உள்நாட்டுப்போரினால்  பெற்றவர்களை   இழந்த  ஏழைத்தமிழ்  மாணவர்களின்  கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1989 ஆம்  ஆண்டு  முதல்  அவுஸ்திரேலியா உட்பட  பல  வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து  வாழும்  அன்பர்களின்  ஆதரவுடன்  நிதியுதவி  வழங்கி  குறிப்பிட்ட  மாணவர்களின்  எதிர்காலம் சிறப்படைய சேவையாற்றிய இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம்  இந்த ஆண்டில் (2014)  தனது  25  வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு  வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.

இலங்கையில்   முன்னர்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்   பெற்றவர்களை     இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்கு  கடந்த 1989 ஆம்   ஆண்டு   முதல்   அவுஸ்திரேலியா  உட்பட   பல    வெளிநாடுகளில் புலம்  பெயர்ந்து   வாழும்    அன்பர்களின்    ஆதரவுடன்   நிதியுதவி   வழங்கி   குறிப்பிட்ட   மாணவர்களின்   எதிர்காலம்  சிறப்படைய  சேவையாற்றிய  இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்   இந்த  ஆண்டில்  (2014)   தனது   25   வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு    வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.  

Last Updated on Saturday, 17 May 2014 19:39 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: நடமாட முடியாத காலத்திலும் நடமாடும் நூலகமாகத் திகழ்ந்த இரசிகமணி கனகசெந்திநாதன் இலக்கியத்தையும் இனிப்பையும் நேசித்தார்.

E-mail Print PDF

1_kanaka-senthinaathan.jpg - 7.27 Kbமுருகபூபதிசிட்னியிலிருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வானொலியில்  எழுத்தும் எழுத்தாளரும் என்ற  நிகழ்ச்சிக்காக ( நேரடி  ஒலிப்பதிவு - நேரடி ஒலிபரப்பு )   என்னை   பேட்டிகண்ட   குறிப்பிட்ட வானொலி ஒலிபரப்பு ஊடகவியலாளர் நண்பர்   செ.பாஸ்கரன்   பேட்டியின்    இறுதியில்  ஒரு   கேள்வி - ஆனால் ஒரே  பதில்  தரவேண்டும் என்றார். கேளுங்கள்   என்றேன். உங்களுக்குப் பெரிதும் பிடித்தமான   தமிழ்   எழுத்தாளர்   யார்?  -   இதுதான் கேள்வி. என்னை மிகவும்  தர்மசங்கடத்திற்குள்ளாக்கிய   கேள்வி.   உடனடியாக  பதில்   சொல்ல   சற்று   தயங்கினேன். கருத்துமுரண்பாடுகளுக்கு அப்பாலும்   எனக்குப்பிடித்தமான   பல எழுத்தாளர்கள்    இருக்கிறார்கள்.எனது  திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரில் இடம்பெறும் பல எழுத்தாளர்கள்   எனக்கு   பிடித்தமானவர்கள்தான். ஆனால் - எனக்குப்பிடித்த   ஒரு   எழுத்தாளரின்   பெயரையும்  ஏன்   அவரை  எனக்குப்பிடித்தது  என்றும்   சொல்ல  வேண்டும்.  சில கணங்கள்  யோசிக்கவைத்த  கேள்வி  அது. எனது  மௌனத்தைப்பார்த்துவிட்டு  மீண்டும்  -  உங்களுக்குப்பிடித்தமான   தமிழ்   எழுத்தாளர்   யார்?  சொல்லுங்கள்   என்றார்     பாஸ்கரன். எனக்குப் பெரிதும் பிடித்தமான  எழுத்தாளர்   குரும்பசிட்டி  இரசிகமணி கனகசெந்திநாதன்    எனச்சொன்னேன். உடனே  அவர்  தனக்குப்பிடித்தமான  எழுத்தாளர்  மு. தளையசிங்கம் என்றார். எனக்கும்   அவரை  நன்கு  பிடிக்கும்   என்றேன்.

Last Updated on Monday, 05 May 2014 20:34 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: மௌனமே மொழியாக முதியோர் இல்லத்தில் படைப்பாளி காவலூர் ராசதுரை வருங்காலத்தில் நாம் கடக்கவிருக்கும் பாதையில் பயணிக்கும் ஆளுமை

E-mail Print PDF

1_kavaloor_rajaduraiமுருகபூபதிஇதுவரையில்     நான்   எழுதிய  திரும்பிப்பார்க்கின்றேன்    தொடர்பத்தியில்  பெரும்பாலும்   மறைந்தவர்களைப் பற்றித்தான்  எழுதிவந்திருக்கின்றேன். நெஞ்சில்  நிலைத்த  நெஞ்சங்கள்  தொடரிலும்   மறைந்த 12 ஆளுமைகளை    பதிவுசெய்துள்ளேன்.    இந்தத் தொடர்  பாரிஸ் ஈழநாடுவில் வெளியானபொழுது   ஒரு   இலக்கிய   சகோதரி  என்னிடம்   ஒரு  வினாவைத் தொடுத்தார்.   குறிப்பிட்ட   தொடரில்  நான்  மறைந்த  ஆண் படைப்பாளிகளைப்பற்றி   மாத்திரம்   எழுதியதாகவும்   பெண்களைப்பற்றி எழுதவில்லை   என்றும்   புகார்    எழுப்பியிருந்தார். பெண்களுக்கு   ஆயுள்   அதிகம்   என்று   மாத்திரம்   பதில்   சொன்னேன். அந்தத்தொடரில்   இடம்பெற்றவர்கள்   அனைவரும்   மறைந்துவிட்ட ஆண் படைப்பாளிகள்தான். அவுஸ்திரேலியாவுக்கு  நான்   புலம்பெயர்ந்து  27 வருடங்களாகின்றன. கால்நூற்றாண்டுக்கும்  அதிகமான   காலப்பகுதியில்   நான்   நேசித்த - என்னை  நேசித்த   பலரும்   விடைபெற்றுவிட்ட சோகம்   தனிப்பட்ட   ரீதியில் என்னை   தொடர்ந்து    வந்துகொண்டுதானிருக்கிறது. திரும்பிப்பார்க்கின்றேன்   தொடரில்   தற்சமயம்   எம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களைப்பற்றியும்   எழுதவேண்டும்   என்ற  எண்ணம் கடந்த   சில   நாட்களாக   எனது   மனதில்   உருவாகிவருகிறது. காரணம்   சில   நாட்களுக்கு   முன்னர்   அவுஸ்திரேலியா    -  குவின்ஸ்லாந்து மாநிலத்தில்    எமது   தமிழ்   இலக்கிய   கலைச்  சங்கம்  நடத்திய  கலை இலக்கிய    கருத்தரங்கு   நிகழ்ச்சியில்   கலந்துகொண்ட  பின்னர் மெல்பனுக்கு   திரும்பும்    வழியில்    சிட்னியிலும்  சில  நிகழ்ச்சிகள் சந்திப்புகளில்    கலந்துகொண்டேன்.   எனது   பயணத்தில்  நான்  சிட்னியில் சந்திப்பதற்கு   பெரிதும்    விரும்பியிருந்த   ஒருவர்   நண்பர்   எழுத்தாளர் வானொலி - திரைப்படக்   கலைஞர்    காவலூர்  ராசதுரை. சிட்னிக்கு    செல்லும்    சந்தர்ப்பங்களிலெல்லாம்   அவரைப்பார்க்காமல் திரும்புவதும்    இல்லை.   இந்தப்பயணத்தில்   ஒருநாள்   அவரை சந்திக்கச்செல்வதற்கு    முன்னர்   அவரது   வீட்டுக்கு  தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.

Last Updated on Wednesday, 09 April 2014 20:13 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: அளவெட்டி ஆசிரமக்குடிலில் சந்தித்த அ.செ.முருகானந்தன் தமது மரணச்செய்தியை பத்திரிகையில் பார்த்த பாக்கியவான்!

E-mail Print PDF

எழுத்தாளர் அ.செ.முருகானந்தன்முருகபூபதிஅளவெட்டியில் அந்த இனிய மாலைப்பொழுதில் அவரைப்பார்ப்பதற்காக புறப்பட்டபொழுது மகாகவியின் மூன்றாவது புதல்வர் கவிஞர் சேரன் தம்பி சோழன் - அண்ணா - நீங்கள் கற்பனை செய்துவைத்துள்ள தோற்றத்திலோ நிலைமையிலோ அவர் இருக்கமாட்டார். - என்றார். தம்பி - அவரது எழுத்துக்களைப்படித்திருக்கிறேன். சக இலக்கியவாதிகளிடமிருந்து அவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன்.  ஆனால் அவரை இன்று வரையில்  நான்  நேரில் பார்த்தது கிடையாது.ஒரு மூத்ததலைமுறை இலக்கியவாதியை  பார்க்கப்போகிறோம் என்ற உணர்வைத்தவிர வேறு எந்தக்கற்பனையும் என்னிடம்  இல்லை. என்றேன். இன்றைய தலைமுறை வாசகர்கள் கேட்கலாம் -அது என்ன சேரன் - சோழன்?  என்று. சங்ககாலத்தில்  வாழ்ந்த   மூவேந்தர்கள் பாண்டியன் - சேரன் - சோழன். ஆனால் நவீன உலகத்தில்  ஈழத்தில்  அளவெட்டியில் வாழ்ந்த கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்திக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண்கள். அவர்களின் பெயர்     சேரன் - சோழன் -  பாண்டியன். இரண்டு பெண்பிள்ளைகள். அவர்கள் அவ்வை - இனியாள். சேரனும், பாண்டியனும் , மகள் அவ்வையும்  தற்பொழுது கனடாவில். சோழன் அமெரிக்காவில். இனியாள் மருத்துவராக அவுஸ்திரேலியாவில். இதில் மற்றுமொரு  தகவலும் இருக்கிறது. தற்காலத்தில் பேசுபொருளாக இருக்கும் சோவியத்தின் உக்ரேயினைச்சேர்ந்த பெண்ணைத்தான் பாண்டியன் மணம்  முடித்தார். அவர்களின் மூத்த புதல்வன் பெயர் எல்லாளன். எல்லாளனும் பெற்றோர்களுடன் கனடாவில். மகாகவியை நான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம்  எனக்கு   கிட்டவில்லை. நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் அவர் மறைந்தார். எனினும் மகாகவியின் பிள்ளைகளுடன் எனக்கு உறவும் உரையாடலும் இருக்கிறது.

Last Updated on Friday, 21 March 2014 04:09 Read more...
 

இலக்கியத்தினூடே பயணித்த இயக்குநர் பாலுமகேந்திரா

E-mail Print PDF

இலக்கியத்தினூடே  பயணித்த  இயக்குநர்  பாலுமகேந்திரா'பாலு... உன்னுடைய   நுண்ணுணர்வுகளுக்கும்   இந்த    மீடியத்தின்   மீது   நீ கொண்டிருக்கும்    காதலுக்கும்    உன்னுள்    இருக்கும் படைப்புத்தாகத்திற்கும்   நீ   ஒரு   இயக்குநராக    மாறுவதுதான்   இயல்பானது ---  விரைவில்  நீ   ஒரு   படத்தை    இயக்குவாய்--- Mark My Words    -  என்று    பல    வருடங்களுக்கு    முன்னர்    கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு -    தன்னைப்பார்க்கவந்த   பாலுமகேந்திராவை    வாழ்த்தியவர்   சர்வதேச   புகழ்  பெற்ற  இயக்குநர் சத்தியஜித் ரே. புனா   திரைப்படக்கல்லூரியில்   பாலுமகேந்திரா    ஒளிப்பதிவுக்கலையை பயின்ற    காலத்தில்    வருகைதரு   விருந்தினராக   விரிவுரையாற்ற   வந்த சத்தியஜித்ரேயை   பாலு மகேந்திரா   இலங்கையில்   மட்டக்களப்பில்  கல்வி    கற்றுக்கொண்டிருந்த    காலத்திலேயே   மிகவும்   நேசித்தவர். ரேயின்   ஆளுமையை    உள்வாங்கிக்கொண்ட   திரையுலக  கலைஞர்களின் வரிசையில்  பாலுமகேந்திரா  மிகவும்  முக்கியமானவர். ரே  மறைந்த  பின்னர்  1994   ஆம்   ஆண்டு  வெளியான  ஒரு  மேதையின் ஆளுமை   என்ற   தொகுப்பு  நூலில்  பாலுமகேந்திரா எழுதியிருக்கும் கட்டுரைகள்  திரைப்படத்துறையில்   பயிலவிருப்பவர்களுக்கு  சிறந்த  பாட நூல். இந்திய   சினிமாவின்  நூற்றாண்டு  தமிழகத்தில்   கொண்டாடப்பட்டுள்ள கால கட்டத்தில்  பாலுமகேந்திராவின்  மறைவை - தென்னிந்திய   சினிமாவில் அவரது   பங்களிப்பு  தொடர்பாக  ஆராய்வதற்கும் -  அவரது  இழப்பு பலருக்கும்  வழி  திறந்திருக்கிறது. பாலு மகேந்திரா  இயல்பிலேயே  நல்ல  தேர்ந்த  ரசனையாளர். இலக்கியப்பிரியர்.  தீவிர  வாசகர்.  இலங்கையில்  அவர்  மட்டக்களப்பில் படித்த  காலத்திலும்  சரி  கொழும்பில்  வரைபடக்கலைஞராக  பணியிலிருந்த காலத்திலும்  சரி  அவரது  கனவுத் தொழிற்சாலையாக  அவருக்குள்ளே தொழிற்பட்டது  அவர்  நேசித்த  சினிமாதான்.

Last Updated on Sunday, 16 February 2014 23:48 Read more...
 

படித்தவற்றை என்னசெய்வது ?

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதிமுன்னர்      அணிந்த       உடைகளை      என்ன     செய்வோம்?       என்பதற்கு  அவரவர்      தரப்பில்       பதில்கள்       இருக்கின்றன.      பொதுவாக  இல்லாதவர்களுக்கு       கொடுப்பார்கள்.       இலங்கையில்      ஒரு    காலத்தில்  பழைய     ஆடைகளை       கொடுத்துவிட்டு       புதிய     பாத்திரங்கள்  வாங்குவதை       சிறுவயதில்      பார்த்திருக்கிறேன். தற்பொழுதும்      இந்த     வழக்கம்     இலங்கையிலிருக்கிறதா?      என்பது  தெரியாது. சுனாமி  கடற்கோள்     பாதிப்புக்கு      உதவுமாறு      அவுஸ்திரேலியா  மெல்பனில்      அன்பர்களிடம்     வேண்டுகோள்      விடுத்தபொழுது -   பெட்டி  பெட்டியாக      பாவித்த      உடைகள்தான்      முதலில்      வந்து     குவிந்தன.  ஏனைய      நிவாரணப்பொருட்கள்      அதன்பிறகுதான்.       இரண்டு  கொள்கலன்களில்      அவற்றை      நிரப்பி       கப்பல்      மார்க்கமாக    இலங்கைக்கு     கொண்டு     சேர்த்ததும் -      பின்னர்      அவற்றை      கொழும்பு       துறைமுகத்திலிருந்து      வெளியே      எடுத்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு       விநியோகிக்க      பட்ட     கஷ்டங்களும்   நீண்டதொரு     கதை. வாசிக்கும்      பழக்கம்      உள்ளவர்களிடம்      நூல்கள்,      பத்திரிகைகள்,     வார- மாத     இதழ்கள்    குவிந்துவிடும்.       இவற்றில்      பத்திரிகைகள்      இதழ்கள்  இலங்கையில்      எடைபார்த்து      கிலோவுக்கு     இன்னவிலை     என்ற  நிர்ணயம்      இருக்கிறது.     பழைய     பேப்பர்கள்      வாங்கும்    கடைகள்  இலங்கையில்      இருக்கின்றன.

Last Updated on Wednesday, 05 February 2014 22:42 Read more...
 

மூத்த எழுத்தாளரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான பிரேம்ஜி கனடாவில் காலமானர்!

E-mail Print PDF

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நீண்டகாலமாக அந்த அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய எழுத்தாளரும்  ஊடகவியலாளருமான  பிரேம்ஜி  ஞானசுந்தரன்  நேற்று மாலை கனடாவில் காலமானார். அச்சுவேலியில்   17-11-1930   ஆம் திகதி பிறந்த பிறந்த ஞானசுந்தரன் தமது ஆரம்பக்கல்வியை அச்சுவேலி கிறீஸ்தவ கல்லூரியிலும் பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும்  கற்றார். 1947 இல் தமது 17 வயதிலேயே சுதந்திர  இளைஞர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.    அன்றிலிருந்து ஞானசுந்தரன் தீவிரமான வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடத்தொடங்கினார். தமிழகம்சென்று மூத்த அறிஞர்கள்     நாமக்கல்  கவிஞர்  -வி.க.  வா.ரா-  சுவாமிநாத சர்மா  -  குயிலன், - பேராசிரியர் ராமகிருஷ்ணன்  - தமிழ் ஒளி முதலானோரின்  தொடர்பினால் இடதுசாரிக்கருத்துக்களை உள்வாங்கி இடதுசாரியாகவும் முற்போக்கு எழுத்தாளராகவும்  இயங்கிய ஞானசுந்தரன்     அங்கு  கம்யூனிஸ்ட் கட்சியின்  முன்னணி இதழிலிலும் பணியாற்றினார். தயாகம்  திரும்பிய பின்னார் கே.கணேஷ் மற்றும் கே. ராமநாதன் ஆகியோரின்  தொடர்புகளினால் இலங்கை கம்யூனிஸ்ட கட்சியின்  தேசாபிமானி  - மற்றும் சுதந்திரன் முதலான     இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.

Last Updated on Tuesday, 11 February 2014 20:28 Read more...
 

நயப்புரை: மெல்பன் சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வுக்காக எழுதப்பட்டது -கே.எஸ். சுதாகரனின் 'காட்சிப்பிழை'

E-mail Print PDF

கே.எஸ். சுதாகர் (ஆஸ்திரேலியா)எழுத்தாளர் முருகபூபதிவல்லமை என்ற இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை காட்சிப்பிழை. அவுஸ்திரேலியாவில் வதியும்     சுதாகரன் இலங்கை பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. முன்னர் நியூசிலாந்தில் வாழ்ந்துவிட்டு அவுஸ்திரேலியா     மெல்பனுக்கு வந்தவர். பல வருடங்களாக  சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள் எழுதுபவர். இலங்கையிலும் தமிழகத்திலும்      மற்றும் வெளிநாடுகளிலும் நடந்த பல சிறுகதைப்போட்டிகளில் பரிசில்கள் பெற்றவர். அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய    கலைச்சங்கத்தில்  பல பதவிகளிலிருந்து  சிறந்த பங்களிப்பு செய்துவருபவர். சq;கத்தின் 10 ஆவது எழுத்தாளர்  விழாவை (2010)    முன்னிட்டு நடத்தப்பட்ட  சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டிகளை திறம்பட நடத்தியிருப்பவர்.  தற்பொழுது சங்கத்தின்    செயற்குழுவில் இதழாசிரியராக பணியாற்றுபவர். குறிப்பிட்ட வல்லமை இணைய இதழின் சிறுகதைப்போட்டிக்கு வந்த கதைகளை  தேர்வு செய்தவர் தமிழகத்தின் பிரபல இலக்கியவிமர்சகர் வெங்கட்சாமிநாதன். குட்டுப்பட்டாலும் படவேண்டும் மோதிரக்கையினால் என்பார்கள். வசிட்டவர் வாயால்     பிரம்மரிஷிப்பட்டம் என்பார்களே அதேபோன்றதுதான் வெங்கட்சாமிநாதனின்  தேர்வு. சுதாகரனின் காட்சிப்பிழை  வல்லமை     தொகுத்த பரிசுக்கதைகளின் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. பாலகிருஷ்ணனுக்கும் கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் தஞ்சமடையும்    இல்லத்திலிருக்கும் தெமட்டகொட அங்கிளுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?

Last Updated on Saturday, 28 December 2013 21:41 Read more...
 

நயப்புரை: தெளிவத்தை ஜோசப்பின் - மனிதர்கள் நல்லவர்கள்

E-mail Print PDF

தெளிவத்தை ஜோசப் எழுத்தாளர் முருகபூபதிஇந்த   ஆண்டு     தமிழகத்தின்    விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும்  தெளிவத்தை  ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர்.  இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு  நாம் அவுஸ்திரேலியாவில்  நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார்.  அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை. 'மனிதர்கள்  நல்லவர்கள்'  என்ற சிறுகதையை  அவர்  மல்லிகையில்  பல வருடங்களுக்கு முன்னர்  எழுதியிருக்கிறார்.  காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால்  காலத்தை வென்றும் வாழும் கதையாக  என்னை கவர்ந்தது. அனைவரும் ஒன்றாகிக்களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. அது தீபாவளி இந்தக்கதையில். இங்கு நாமும் ஒன்றாக கூடிக்களிக்க இந்த அமர்வு தேவையாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவின்  இயந்திரமயமான வாழ்க்கை வாழும் எம்மவருக்கும்  குடும்ப ஒன்று கூடல்கள்  வாராந்தம் அல்லது மாதாந்தம் அல்லது வருடாந்தம் தேவையாக இருக்கிறது. இலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. இந்த அங்கதம்  எந்தவொரு நாட்டு மக்களுக்கும்  பொருந்துகிறது.

Last Updated on Thursday, 19 December 2013 00:47 Read more...
 

தமிழில் சிறுகதை இலக்கியம்: அவுஸ்திரேலியாவில் நடந்த அனுபவப்பகிர்வு; படைப்பிலக்கியத்தில் செம்மைப்படுத்தலுக்கு அவசியமான தேர்ந்த வாசிப்பு அனுபவம்!

E-mail Print PDF

தமிழில் சிறுகதை  இலக்கியம்: அவுஸ்திரேலியாவில் நடந்த அனுபவப்பகிர்வு; படைப்பிலக்கியத்தில் செம்மைப்படுத்தலுக்கு அவசியமான தேர்ந்த வாசிப்பு அனுபவம்!எழுத்தாளர் முருகபூபதிஅவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர்  விழாவையும் கலை -இலக்கிய சந்திப்புகளையும் நடத்திவரும்  அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் மெல்பனில் தமிழில் சிறுகதை இலக்கியம் தொடர்பாக அனுபவப்பகிர்வு     நிகழ்ச்சியை வேர்மண்ட் சவுத் சமூக நிலைய மண்டபத்தில் நடத்தியது. இதுதொடர்பாக    இந்த   ஆக்கத்தை   எழுதுவதற்கு  விரும்பினேன். ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் - மொழிபெயர்ப்பு முயற்சிகள் -     இலக்கிய இயக்கம் - கலை, இலக்கியத்துறை  சார்ந்த  நம்மவர்கள் தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். உயிர்ப்பு- Being Alive (ஆங்கில மொழிபெயர்ப்பு)    முதலான   சிறுகதைத்தொகுப்புகளையும்     பதிப்பித்திருக்கின்றேன். அந்த  வரிசையில் அவுஸ்திரேலியாவில்      தமிழ்ச்சிறுகதை இலக்கியம்  பற்றிய இந்த ஆக்கத்தை  எழுதுவதற்கு முனைந்தேன்.  சிறுகதை  இலக்கிய வடிவம் எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் எமது முன்னோர்கள் சிறந்த கதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை     ஏனோ மறந்துவிடுகின்றோம். தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர்  கதைகேட்கும் ஆர்வம் குழந்தைகளுக்கும் இல்லை. கதைசொல்ல  பாட்டா, பாட்டிமாருக்கும்  அக்கறை  இல்லை. இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் அனைவருமே தற்பொழுது தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  அவுஸ்திரேலியா தமிழ்ச்சூழலும்  அதற்கு விதிவிலக்கல்ல.       பகல்பொழுதில்  வேலைக்குச் செல்வதனால்  தொலைக்காட்சித்தொடர்களை  பிரத்தியேகமாக பதிவுசெய்ய  வழிசெய்துவிட்டு    -   மாலை வீடு திரும்பியதும்    அவற்றைப்பார்த்து  திருப்தியடையும் நடைமுறை வந்துவிட்டது பல வீடுகளில். இந்த      இலட்சணத்தில் எத்தனைபேர் சிறுகதைகளைப்படிக்கிறார்கள்?  அல்லது படிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள்.?  சிறுகதை எழுத்தாளர்கள்  தமது படைப்பு தொடர்பாக  எவரேனும், வாசகர்    கடிதமாவது   -   கருத்தாவது      எழுதமாட்டார்களா      என்று காத்துக்கிடக்கின்றனர். சிறுகதைத்தொகுதியை  வெளியிட்டால்  அதனைப்பற்றி      குறைந்தபட்சம் இதழ்களில்  சிறிய அறிமுகக்குறிப்பாவது   பதிவாகுமா?  என்ற  எதிர்பார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

Last Updated on Saturday, 14 December 2013 21:05 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: குழந்தையுள்ளம் படைத்த அகஸ்தியரின் தர்மாவேசம்

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதி'அன்புள்ள   முருகபூபதிக்கு..… கடந்தவாரம்  லண்டனிலிருக்கும்  மகனிடம் வந்திருக்கிறோம்.   பேரக்குழந்தையின்   பிரசவம்   முடிந்தது.   ஆவன   செய்தபின் பிரான்ஸ்   திரும்புவோம்.   பெண்   குழந்தை   கிடைத்திருக்கிறது.  வந்த  இடத்தில் உடல்நலம்   பாதிக்காதவகையில்    இலக்கியக் கூட்டங்களுக்கும்   பேட்டிகளுக்கும் ஒழுங்குசெய்துள்ளார்கள்.    பின்   விபரம்  அறிவிப்பேன். வீரகேசரியில் உங்கள் குறிப்பு பார்த்தேன்.  நன்றி.’ - இது  நண்பர் அகஸ்தியர் 22-08-1995   இல் எனக்கு எழுதிய கடிதம். அகஸ்தியர்   எனக்கு  எழுதிய  இறுதிக்கடிதம்  இதுதான்  என்பதை 09-12-1995  ஆம் திகதி   இரவு   நண்பர்   பாரிஸ்   ஈழநாடு   குகநாதன்   தொலைபேசியில்  அகஸ்தியரின்   மறைவுச்செய்தி   சொல்லும்   வரையில்  நான்   தீர்மானிக்கவில்லை.  அகஸ்தியர்  முதல்நாள்   பாரிஸ்  நகரத்தையே  ஸ்தம்பிக்கவைத்த  வேலைநிறுத்த   காலப்பகுதியில்   டிசம்பர்  8 ஆம் திகதி   மறைந்தார். அகஸ்தியரின்   புதல்வி   ஜெகனியுடன்   தொலைபேசியில்  தொடர்புகொண்டு   ஆறுதல்கூறி    நானும்   ஆறுதல்பெற்றேன். நீண்ட    காலமாக    நாம்   புலம்பெயர்ந்திருந்தாலும்    பேசிக்கொண்டது   கடிதங்கள் வாயிலாகத்தான்.    அதற்கும்    முற்றுப்புள்ளிவைத்துவிட்டு   விடைபெற்றார். ஈழத்து     இலக்கிய    உலகில்   மூத்த தலைமுறையைச்சேர்ந்தவராயினும் இளம்தலைமுறையினருடன்    ஒரு   குழந்தையைப்போன்று    வெள்ளைச்சிரிப்புடன் (சிரிப்பிலும்   பலவகையுண்டு)   மனந்திறந்து   பேசும்   இயல்புள்ளவர்.

Last Updated on Sunday, 01 December 2013 20:05 Read more...
 

திரும்பிப் பார்க்கின்றேன்: சிவாஜி முதல் சிவாஜி வரையில் எழுதி ஓய்ந்த சுஜாதா

E-mail Print PDF

சுஜாதாஎழுத்தாளர் முருகபூபதிஇலக்கியப்படைப்புகள்  எழுதத்தொடங்குவதற்கு  முன்னர்  குமுதம்    இதழ்களில்    சுஜாதாவின்     எழுத்துக்களைப்    படித்திருந்த   போதிலும்    தொடர்ந்து படிப்பதற்கு    ஆர்வமூட்டாத    எழுத்துக்களாக அவை  என்னை   சோர்வடையச்செய்திருந்தன.  நான்  படித்த  சுஜாதாவின்  முதலாவது   தொடர் நைலான் கயிறு. அதுவும்  மர்மக்கதைதான். எனினும் அவரது   பாலம்   என்ற   சிறுகதை மாத்திரம்   நீண்ட   நாட்கள்   மனதில்  தங்கி   நின்றது.  அச்சிறுகதை   உளவியல்   சார்ந்து   வித்தியாசமாக   எழுதப்பட்டிருந்தது. நான்   தீவிரமாக   வாசிக்கத்தொடங்கிய  1970   காலப்பகுதியில்     சுஜாதாவின் பெரும்பாலான   கதைகள்  மர்மக்கதைகளாக  இருந்ததனாலோ   என்னவோ   பின்னர் அவற்றிலிருந்த    ஆர்வம்   குறைந்துவிட்டது. ஒருநாள்   இந்திராபார்த்தசாரதியின்   தந்திரபூமி   நாவலைப்படித்தபொழுது அந்நாவலுக்கு   சுஜாதா   எழுதியிருந்த   முன்னுரை  என்னைப்பெரிதும்   கவர்ந்தது.   அந்நாவலின்  நாயகன்   கஸ்தூரியின்   தோல்வியை   ஜூலியசீஸரின்  வீழ்ச்சிக்கு   ஒப்பானது   என    சுஜாதா  எழுதியிருந்தார். பின்னர்  மீண்டும்   அவரது எழுத்துக்கள்    மீது   ஆர்வம்   தோன்றியது.   சுஜாதாவின்    பாணியில்    இலங்கையில்   எழுதிய  ஒரு  எழுத்தாளரும்  எனது  இனிய   நண்பர்தான்.    அவர்தான்  தெளிவத்தை  ஜோசப்.     சுஜாதா   சங்கர் -  கணேஷ்   என்ற  இரட்டையர்களை  தமது  தொடர்கதைகளில்  துப்பறியும்   நிபுணர்களாக    படைத்திருந்தார்.  தெளிவத்தை  ஜோசப்  ரமேஷ் -ரவிந்திரன்   என்ற  புனைபெயரில்  சில  கதைகளை  சுஜாதாவின்   பாணியில்   எழுதிப்பார்த்தார்.   பிறகு  தொடரவில்லை.  இப்படி  சுஜாதாவின்   பாதிப்புக்குள்ளான    பல எழுத்தாளர்கள்   தமிழகத்திலும்  இலங்கையிலும்  மட்டுமல்ல   அவுஸ்திரேலியாவிலும்     இருக்கிறார்கள்.

Last Updated on Saturday, 30 November 2013 20:32 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: ஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா

E-mail Print PDF

எழுத்தாளர் டொமினிக் ஜீவாயாழ்ப்பாணம்  அரியாலையில்  நாவலர்  வீதியில்  அமைந்த  ஸ்ரான்லி  கல்லூரியில் (தற்பொழுது  கனகரத்தினம்  மத்திய  கல்லூரி) 1962  ஆம்  ஆண்டளவில்  எனக்கும் எனது  மச்சான்  முருகானந்தனுக்கும்  ஆறாம் வகுப்பு புலமைப்பரிசில்  அனுமதி  கிடைத்தது.   அப்பொழுது எனக்கு பதினொரு வயதிருக்கும். நான் முதல் தடவையாக  பனைமரங்களைப்பார்த்தது    அக்காலத்தில்தான்.  அதற்கு  முன்னர்  அந்தக்கற்பகதருவை பாடசாலை  பாடப்புத்தகங்களில்தான்   பார்த்திருக்கின்றேன். ஈழவிடுதலைப்போராட்டம்     ஆரம்பமானதன்பின்பு பல இலக்கிய மற்றும் ஆய்வு  நூல்களில்  பனைமரங்கள்    அட்டைப்படமாகின.  ரஜனி  திராணகம  சம்பந்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மனித உரிமை  ஆசிரியர்  சங்கத்தின் வெளியீடான முறிந்த  பனை,  மூத்த   பத்திரிகையாளர்  கார்மேகத்தின் ஈழத்தமிழர்  எழுச்சி, செ.யோகநாதன் தொகுத்த  ஈழச்சிறுகதைகள் வெள்ளிப்பாதசரம்,     ஜெயமோகனின்    ஈழத்து  இலக்கியம், பேராசிரியர் கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்   சமூகம் - பண்பாடு – கருத்துநிலை  உட்பட   பல  நூல்கள்  பனைமரத்தை  ஒரு  குறியீடாகவே   அட்டைகளில்  சித்திரித்துள்ளன.

Last Updated on Sunday, 03 November 2013 20:10 Read more...
 

படித்தோம் , சொல்கிறோம்: கவிஞர் செ. கதிரேசர்பிள்ளையின் பாரதம் தந்த பரிசு

E-mail Print PDF

கவிஞர் செ. கதிரேசர்பிள்ளைஎழுத்தாளர் முருகபூபதிநடிப்பதற்காகவே எழுதப்படும் படிப்பதற்காக  மாத்திரம்  எழுதப்படும் நடிப்பதற்கும் படிப்பதற்கும்  எழுதப்படும்  நாடகங்கள் என்று  மூன்றுவகைகள்  இருப்பதாக ஒரு  சந்தர்ப்பத்தில் பேராசிரியர்  மு.வரதராசன் குறிப்பிட்டார். நாடகங்களை எழுதினால்  நடிக்கமாத்திரமே முடியும். படிப்பதற்காக  நாடகங்கள் எழுதமுடியாது எனச்சொல்லும் விமர்சகர்களும்  இருக்கிறார்கள்.ஒரு காலத்தில்  தமிழ்      சினிமாப்படங்களின்  கதை  வசனங்கள் கையிலே  சுருட்டக்கூடிய பருமனில் சிறு  நூல்களாக  வெளியாகின. அவற்றைப்படித்துப்பாடமாக்கி பாடசாலைகளிலும்  மற்றும் பிரதேச  சனசமூகநிலையங்கள் ஊர் மன்றங்களில் நாடகம்  நடித்திருக்கிறார்கள்.  குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன்  (வசனம் சக்தி கிருஷ்ணசாமி)  இரத்தக்கண்ணீர்  (வசனம்  திருவாரூர் தங்கராசு)  திரைப்பட  வசனத்தை வைத்துக்கொண்டு நடித்திருக்கிறார்கள்.  வரி வட்டி திறை வானம்  பொழிகிறது… பூமி விளைகிறது…  வயலுக்கு   வந்தாயா ஏற்றம் இறைத்தாயா…அங்கு கொஞ்சி  விளையாடும்  எம்குலப்பெண்களுக்கு   மஞ்சள்   அரைத்துக்கொடுத்தாயா?   மாமனா மச்சானா. என்று பாடசாலைக்காலத்தில் கட்டபொம்மன்   வசனம் பேசிய பலர்   எம்மத்தியில் இருக்கிறார்கள்.

Last Updated on Wednesday, 30 October 2013 20:55 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துலகம்

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதிஉச்சிவெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்தோம் புகலிடத்துக்கு வந்து கால் நூற்றாண்டுகாலத்தின் பின்னர் எனக்கு ஒரு  உண்மை தெரிந்தது. தாயகத்தின் போர்  அநர்த்தங்களினால் அதிலிருந்து தப்பிவந்தவர்கள், ஓடி ஓடி உழைத்து தேட்டங்கள்     தேடினார்கள்.  பிள்ளைகளை படிக்கவைத்து பட்டங்கள் பெறுவதற்கும் தொழில் வாய்ப்பு பெறுவதற்கும் கடினமாகப்பாடுபட்டார்கள்.         ஊரிலிருக்கும் உறவுகளுக்கும் உதவினார்கள். கார், வாகனங்கள், வீடுகள் என்று சகல  சௌகரியங்களும் பெற்றார்கள். விடுமுறை காலங்களில் விமானங்களில் உலகை வலம் வந்தார்கள். விருந்துகளிலும் ஒன்றுகூடல்களிலும் குதூகலமாக பொழுதை கழித்தார்கள். அதே நேரம் ஓடி ஓடி இயந்திர கதியில் உழைத்தார்கள். எல்லாம் இருந்தும் எதனையோ இழந்துவிட்ட சோகம் அவர்களை வாட்டிக்கொண்டுதான் இருக்கிறது...முழுவதும் வாசிக்க

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 07 October 2013 16:49
 

திரும்பிப்பார்க்கின்றேன்:: யாழ்தேவி நீ யார் தேவி? நிற்பதும் ஓடுவதும் யாருக்காக? எடிட்டிங் கற்றுத்தந்த எடிட்டர் ‘நடா’ நடராஜா

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதியாழ்ப்பாணத்துக்கு மீண்டும் யாழ்தேவி ஓடவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திபார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.    தற்பொழுது கிளிநொச்சிவரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ரயில் பற்றித்தான் எத்தனை சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும்  கோட்டையிலிருந்து  காங்கேசன்துறைக்கும் தினமும் காலை, மதியம் பின்னர் இரவுநேரமும் ஆறு ரயில்கள் மற்றும் அனைத்து நிலையங்களிலும் தரித்துச்செல்லும் பொதிகள் ஏற்றி இறக்கி நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும் சரக்கு ரயில் என்பனவற்றில் பயணித்தவர்கள் தற்காலத்தில் உலகெங்கும் வாழ்கிறார்கள். இவ்வாறு    தினமும்    எட்டு   ரயில்கள்            ஓடிக்கொண்டிருந்த   பாதையில்  பல  ஆண்டுகளாக    ரயிலே    இல்லை.   நீடித்த   உள்நாட்டுப்போர்      தொலைத்துவிட்ட  அந்த  ரயில்களை…   அந்தப்பயணங்களை,    அதில்  பயணித்த  எவராலுமே   தங்கள்   மனங்களிலிருந்து    தொலைத்துவிடவே    முடியாதுதான்..... மேலும் வாசிக்க

Last Updated on Monday, 07 October 2013 16:40
 

திரும்பிப்பார்க்கின்றேன: ஆடிக்கலவர காலத்திலும் நெற்றியில் திருநீறு துலங்க நடமாடிய மூத்த பத்திரிகையாளர் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன்

E-mail Print PDF

சிவகுருநாதன்எழுத்தாளர் முருகபூபதிகொள்ளுப்பிட்டி   ரண்முத்து ஹோட்டலில் ஒரு நூல் வெளியீட்டுவிழா. நானும் ஒரு பேச்சாளன்.  என்னை நூலாசிரியரின் பதிலுரைக்கு  முதல், விழாத்தலைவர் பேசுவதற்கு அழைக்கிறார். எப்படி? “நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இனி  அடுத்துப் பேசப் போகிறவர்  முருகப10பதி. அவருக்கு  ஒரு வேண்டுகோள், கெதியாகப் பேசி முடித்துவிட்டு, நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க  ஓடவும்.”
சபையில் சிரிப்பலை அடங்கச் சில விநாடிகள் தேவைப்படுகிறது. பம்பலப்பிட்டி  சாந்திவிஹார் ஹோட்டலில்  ஒரு  பிரபல தமிழ்ப் பத்திரிகையாளருக்கு பாராட்டு  பிரிவுபசார விழா.  புகைபடக் கலைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக  இயங்கி, படங்கள் எடுத்துக்   கொண்டிருந்தார்.   விடைபெறவுள்ள  பத்திரிகையாளரைப் பாராட்டிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் அரசியல் பிரமுகர்  தலைவரால்   அழைக்கப்படுகிறார். பிரமுகர் தமது பேச்சுக்கிடையே – அந்தப் புகைப்படக் கலைஞரையும் புகழ்ந்து சில வார்த்தைகளை   உதிர்த்துவிட்டு “அந்தக் கலைஞர் சிறந்த படப்பிடிப்பாளர், அவருக்கும் நாம்   பாராட்டு   விழா  நடத்த வேண்டும்” என்கிறார். உடனே, தலைவர் “அந்தக் கலைஞர் பத்திரிகைகளுக்காக எடுத்த படங்களையும் பார்த்துள்ளேன்.  அவர்  எடுத்த   வேறு படங்களையும் பார்த்துள்ளேன்” என்று சொன்னவுடன் சபையில் அட்டகாசமான சிரிப்பொலி எழுந்து அடங்கியது.  அந்தப்புகைப்படக்கலைஞர்   நாணத்துடன்  தலைகவிழ்ந்து   சபையின்  பின்புறம் ஓடி  வந்துவிட்டார்.

Last Updated on Monday, 07 October 2013 16:41 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன் ---03: அச்சுப்பிசாசை விரட்டுவதற்கு அயராமல் உழைத்த பெருந்தகை இலக்ஷ்மண ஐயர்

E-mail Print PDF

 இலக்ஷ்மண ஐயர்எழுத்தாளர் முருகபூபதிபடைப்பாளிகளையும்   பத்திரிகையாளர்களையும்  கல்வித்துறை  சார்ந்த  ஆசிரியர்கள்,  விரிவுரையாளர்கள்,    பேராசிரியர்கள்   மற்றும்  பதிப்புத்துறையில்  இருப்பவர்களை மிரட்டிக்கொண்டிருக்கும்   ஒரு  பிசாசு  இருக்கிறது.   இது  கண்களுக்குத்தெரியும்   பிசாசுதான்,   ஆனால்   எப்படியோ   கண்களுக்குத்தப்பிவிடும்.  எங்கே  எப்படி  காலை வாரிவிடும்  என்பதைச்சொல்லமுடியாது. மானநட்ட  வழக்கிற்கும்  தள்ளிவிடும்  கொடிய  இயல்பு  இந்தப்பிசாசுக்கு  இருக்கிறது. அதுதான்  அச்சுப்பிசாசு. மொழிக்கு  ஆபத்துவருவதும்  இந்தப்பிசாசினால்தான்.  1990  ஆம்  ஆண்டு  மறைந்த  எங்கள்  கல்விமான்  இலக்ஷ்மண  ஐயரை  நினைக்கும்  தருணத்தில்   அவர்  ஓட ஓட விரட்டிய  இந்த  அச்சுப்பிசாசுதான்  எள்ளல்  சிரிப்போடு   கண்முன்னே  தோன்றுகிறது. இலக்ஷ்மண  ஐயர்   கொழும்பு  மலே வீதியில்  அமைந்த  கல்வி  அமைச்சில்   தமிழ்ப்பிரிவின்  வித்தியாதிபதியாக  பணியாற்றிய  காலத்தில்  எங்கள்  நீர்கொழும்பூர்  விஜயரத்தினம்  மகா  வித்தியாலயத்தின் ( தற்பொழுது  இந்து மத்திய  கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டிருக்கிறது)   பழைய  மாணவர்  மன்றத்தை  உருவாக்கியிருந்தோம் பாடசாலையில்  எமது  மன்றம்  நடத்திய  நாமகள்  விழாவுக்கு  பிரதமவிருந்தினராக  இலக்ஷ்மண  ஐயரை  அழைப்பதற்காக  சென்றிருந்தோம்.

Last Updated on Thursday, 29 August 2013 23:37 Read more...
 

இலக்கிய உலகில் ஒரு பொக்கிசம் கே. எஸ். சிவகுமாரன்

E-mail Print PDF

[ 'கொடகே' வாழ்நாள் சாதனையாளர் (2012)ற்கான கௌரவ சாஹித்திய விருதினைப் பெறுகிறார் கே. எஸ் சிவகுமாரன் அவர்கள்  எழுத்தாளர் முருகபூபதியால் எழுதப்பட்டுத் தமிழ்முரசு(ஆஸ்திரேலியா) இணையத்தளத்தில் வெளியான கட்டுரை  இதனையொட்டி  இங்கு மீள்பிரசுரமாகிறது. - பதிவுகள்]

K.S.Sivakumaranஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தழும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருப்பவர் கே.எஸ்..சிவகுமாரன். இதுவரையில் தமிழில் 22 நூல்களையும் ஆங்கிலத்தில் இரண்டு நூல்களையும் வரவாக்கிவிட்டு தொடர்ந்தும் அயராமல் ஆங்கில, தமிழ் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்.  தங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ். எழுதமாட்டாரா? என்று காத்திருக்கும் படைப்பிலக்கியவாதிகளும் எம்மத்தியிலிருக்கிறார்கள். சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கியவிமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதை எழுத்தாளருமாவார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார். இருமை, சிவகுமாரன் கதைகள்  ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும். விரைவில் பவளவிழாக்காணவுள்ள கே.எஸ்.எஸ்., பேராதனைப்பல்கலைக்கழக ஆங்கிலப்பட்டதாரி. தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்திருப்பவர். தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர். விமர்சகர்கள் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் இயல்பினர் என்பதனாலோ என்னவோ, தம்மை ஒரு திரனாய்வாளர் என்று சொல்லிக்கொள்வதில் அமைதிகாண்பவர். எவரையும் தமது எழுத்துக்களினால் காயப்படுத்தத்தெரியாதவர்.

Last Updated on Saturday, 07 September 2013 20:02 Read more...
 

அறவழியா? ஆயுதவழியா? அமரர் மு.தளையசிங்கம் நினைவுகள்!

E-mail Print PDF

அமரர் மு.தளையசிங்கம் எழுத்தாளர் முருகபூபதி‘எழுத்தாளர்கள் Activist ஆக இருத்தல் தகுமா? தகாதா?’ என்னை நீண்டகாலமாக அரித்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. பேப்பரும் பேனையும் கற்பனையும் இருந்தால் போதும். எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் குவிக்கலாம். எழுதியவற்றை பிரசுரிக்க பத்திரிகை உலகத் தொடர்பும் கிடைத்துவிட்டால் எழுத்தாளனாகி விடலாம். “ஒரு எழுத்தாளனின் கடமை அவ்வளவுதானா? வெறுமனே பெயரும் புகழும் தேடுவது மாத்திரம்தானா அவனது வேலை. தானும் சிந்தித்து மாற்றவர்களையும் சிந்திக்கச் செய்வதும் எழுத்தாளனின் வேலை” என்பார் ஜெயகாந்தன். “எழுத்தின் மூலமாகத்தான் மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றோமே – மக்களுக்கு போதனை செய்கின்றோமே. அதற்கும் அப்பால் நமக்கென்ன அலுவல் கிடக்கின்றது” என்று எழுத்தாளர்கள் எண்ணுவார்களாயின் மேற்குறிப்பிட்டவாறு அவர்களுக்கு பேப்பர், பேனா, கற்பனையுடன் - வெளியிட பத்திரிகையும் இருந்தால் மாத்திரம் போதுமானதுதான். சமுதாயத்தில் புரையோடிப்போயுள்ள அழுக்குகளை நீக்கவும், அநீதிகளை அம்பலப்படுத்தி, அவற்றுக்கு மாற்று வழிகளைக் காண்பிப்பதற்கும் எழுத்தை மாத்திரம் ஆயுதமாகப் பாவிப்பதுடன் அவனது கடமை முற்றுப்பெறுகின்றதா? சிலர் “ஆம்” என்கின்றனர். சிலரோ “இல்லை” அதற்குமேலும் அவன் செயலூக்கத்துடன் இயங்க வேண்டியுமுள்ளது என்கின்றனர். எப்பொழுதும் வித்தியாசமாக சிந்திப்பவர்களினாலும் செயல்படுவர்களினாலுமே ஒரு தேசத்தில் மாற்றமும் முன்னேற்றமும் காணப்படும் என்பர். வேலை, வீடு, உணவு, நித்திரை, குடும்பம் என்று ஒரு வட்டத்துள் சுழன்றுகொண்டு எழுதி, “எழுத்தாளர்” என்ற பெயரை சம்பாதித்தவர்களும் இருக்கின்றனர்.

Last Updated on Wednesday, 06 June 2012 05:07 Read more...
 

இலங்கையில் தலைசிறந்த தமிழ் நாவல்கள்.....?

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதிபேராசிரியர் க. கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றதையடுத்து, அவர் 1976 ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்கும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள ஆய்வரங்கொன்றை இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். குறிப்பிட்ட 1976 ஆம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டுக்காலமாகும். பல முன்னோடி நாவலாசிரியர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருந்த தமிழ்நாடு, இந்த நூற்றாண்டுக்காலத்தை ஏனோ மறந்துவிட்டிருந்தது. இத்தனைக்கும் தனது வாழ்நாள் பூராகவும் தன்னை ஒரு எழுத்தாளன் என்று நிறுவிவரும் கலைஞர் தமிழக அரசில் அப்போது முதல்வராக பதவியிலிருந்தார். இவ்வாறு தமிழகம் மறந்த பல விடயங்கள் இருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் இலக்கிய ஆர்வலர் (அமரர்) ரங்கநாதன் அவர்களின் இல்லத்தின் மேல்மாடியில் நடைபெற்ற மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்ட இலக்கிய விமர்சகர் சிட்டி அவர்கள், இலங்கையரின் பல முன்மாதிரிகளை சுட்டிக்காட்டிப்பேசும்போது கைலாசபதியினால் நடத்தப்பட்ட நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கையும் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளையும் கடந்து வெளியாகும் மல்லிகையையும் சிலாகித்துப்பேசினார். மேற்சொன்ன யாழ்.பல்கலைக்கழக நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் அடையாறில் நடந்த மல்லிகை நிகழ்விலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.

Last Updated on Saturday, 02 June 2012 22:30 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன்: சமரசங்களுக்குட்படாத படைப்பாளி - பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன்

E-mail Print PDF

தொ.மு.சிதம்பரரகுநாதன்  “புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம், உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” – என்று  எழுதிய  தொ.மு.சிதம்பரரகுநாதன்  தமது 79 ஆவது வயதில் திருநெல்வேலியில் மறைந்தார் என்ற அதிர்ச்சியும் துயரமும் கலந்த செய்தியை   தாங்கிய  கடிதம்    2001 ஆம்  ஆண்டு  இறுதியில் இலங்கையிலிருந்து நண்பர்   கே.கணேஷிடமிருந்து   எனக்கு   வந்தது. வாராந்தம்   கொழும்புப்   பத்திரிகைகள்  இங்கு திங்கள் அல்லது செவ்வாய் கிடைத்துவிடும். ஆனால் அவற்றில் இந்த மறைவுச் செய்தியை காணமுடியவில்லை. திருநெல்வேலி பெருமாள்புரத்தில்தான் இப்பொழுதும் அவர் வசிக்கிறார் என நம்பிக்கொண்டிருந்தேன். இறுதியாக 90 இல் அவரது இல்லத்திற்கு குடும்பத்தோடு விருந்தினராகச்  சென்றேன். எனது  அப்பாவின்  வழியில் அவர் எனது நெருங்கிய உறவினர் என்பது எனக்கு எப்பொழுதும் பெருமை தரும் விஷயம். அவரது  மருமகள் (மகனின் மனைவி)  மாலதி  ஹரீந்திரன்  எனக்கு  அண்ணி  முறை. இந்த உறவு முறைகளுக்கெல்லாம் அப்பால் ரகுநாதனை நான் பெரிதும் மதிப்பதற்கு பல காரணங்கள்  இருந்தன. அதனாலேயே  அவரது மறைவின்  பின்னர்  எனது பறவைகள்  நாவலை  அவருக்கே  சமர்ப்பணம்  செய்திருந்தேன். புதுமைப்பித்தனின்  நெருங்கிய சகாவான ரகுநாதன், அவர் குறித்து கொண்டிருந்த – எமக்குப் புகட்டும் பாடம் என்ன? என்பதையே இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். எனவே ரகுநாதன் குறித்து என்னால் சொல்லக்கூடியது இதுதான்:- ‘ரகுநாதனது வாழ்க்கை சமரசங்களுக்குட்படாத ஒருவரின் துணிவு, உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.’

Last Updated on Sunday, 18 August 2013 23:38 Read more...
 

திரும்பிப்பார்க்கின்றேன் - 02: வாழ்வில் எது எஞ்சும்? எது மிஞ்சும்? பயணத்தை திசை திருப்பிய ‘மாணிக்ஸ்’ மாணிக்கவாசகர் –

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதி“இவர்  ஓர்  எழுத்தாளர்  அல்லர்.  ஆனால்,  எப்பொழுதுமே  எழுத்தாளர்களுக்கு மத்தியிலே  காணப்படுபவர்.   எழுத்தாளர்களுக்காக  எதையும்  செய்யத்துணிபவரும் கூட.குறிப்பாக  முற்போக்கு  எழுத்தாளர்களால்  நன்கு  அறியப்பட்டவர்.  மாணிக்கவாசகர்தான் அவரது பெயர்.” - இவ்வாறு  மல்லிகை 2010 அக்டோபர் இதழில், தமது வாழும் நினைவுகள்  தொடரில்  பதிவு  செய்கிறார்  நண்பர்  திக்குவல்லை கமால்.  கமாலின்  வார்த்தைகளை  நான்  மட்டுமல்ல மாணிக்கவாசகரை நன்கு தெரிந்த அனைவருமே  அங்கீகரிப்பார்கள். எனது  வாழ்வை  ஒருகட்டத்தில்  திசை  திருப்பியவர்தான்  இந்த மாணிக்கவாசகர். 1973-1976  காலப்பகுதியில்  நிரந்தரமான  வேலை  எதுவும்  இல்லாமல் அலைந்துகொண்டிருந்தேன். காலிமுகத்திடலில்  வீதி  அகலமாக்கும்  நிர்மாணப்பணியில்  ஒப்பந்த  அடிப்படையில் அங்கு  வேலை  செய்த  தொழிலாளர்களை ‘மேய்க்கும்’ ஓவர்ஸீயர்  வேலையையும் ஒப்பந்தம்  முடிந்ததும்   இழக்கநேர்ந்தது. எனது  நிலைமையைப்பார்த்து  பரிதாபப்பட்ட  பிரேம்ஜியும்  சோமகாந்தனும்  எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பக  வேலைகளுக்காக  என்னை உள்வாங்கி  மாதம் 150 ரூபா அலவன்ஸ்  தந்தார்கள். நானும்  நீர்கொழும்பு – கொழும்புஎன  தினசரி  பஸ்ஸ_க்கு  செலவழித்து  பயணித்துக்கொண்டிருந்தேன். முற்போக்குஎழுத்தாளர்  சங்கம்  மற்றும்  கூட்டுறவுப்பதிப்பகத்தின்  பணிகளின்போதுதான்  மாணிக்ஸ்அறிமுகமானார்.  அவருடன்  அறிமுகமான  மற்றுமொருவர்  சிவராசா  மாஸ்டர். இருவருமே கம்யூனிஸ்ட்  கட்சியின் (மாஸ்கோ)  ஆதரவாளர்கள்.  அத்துடன்  இருவரும் ஆசிரியர்களாக  கொழும்பில்  பணியிலிருந்தவர்கள்.

Last Updated on Sunday, 18 August 2013 23:37 Read more...
 

சொல்ல மறந்த கதை: காவி உடைக்குள் ஒரு காவியம்

E-mail Print PDF

Rathnawansa Theroமுருகபூபதிஇலங்கையில் வடமேல் மாகாணத்தில்  அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை  மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் அத்தனகல்லை என்ற நகரத்துக்கு சமீபமான கிராமம்தான் இங்கு நான் குறிப்பிடும் கொரஸ்ஸ. மினுவாங்கொடை என்ற மற்றுமொரு ஊரைக்கடந்து உடுகம்பொலை என்ற இடத்தையும் கடந்து சென்றால் இந்த கொரஸ்ஸ கிராமம் வரும். அங்கே ஒரு பௌத்த விகாரை. அதன் பிரதம குரு (விஹாராதிபதி) வணக்கத்துக்குரிய பண்டிதர் ரத்ன வண்ஸ தேரோ. அவரைப்பார்க்கச்செல்பவர்கள் பெரும்பாலும் அந்தக்கிரமத்திலும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களையும் சேர்ந்த சிங்கள கிராமவாசிகள்தான். அவர்கள்தான் அந்த பௌத்த பிக்குவுக்கு தினமும் தானம் (மதிய உணவு) முறைவைத்து கொண்டுவந்து கொடுப்பவர்கள். தினமும் பகலில் மாத்திரம் ஒரு வேளை உணவுண்டு பௌத்த தர்மத்தை மக்களுக்கு போதித்துவந்த அவரைப்பார்க்க அடிக்கடி தமிழ் எழுத்தாளர்களும் சென்றுவந்திருக்கிறார்கள் எனச்சொன்னால் இதனை வாசிக்கும் வாசகர்கள் ஆச்சரியப்படலாம்.  அதிசயம்தான். ஆனால் உண்மை.

Last Updated on Wednesday, 17 October 2012 22:44 Read more...
 

மறைந்துவரும் தபால் கடிதக்கலை

E-mail Print PDF

எழுத்தாளர் முருகபூபதிமின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம்.  எஸ். அறிமுகமானதன்   பின்னர்  கடிதம்  எழுதுவதே   அரிதாகிவிட்டது.  தற்காலத்தில்  படிவங்களையும்  ஒன்லைனில்  பூர்த்திசெய்து    அனுப்ப முடிந்திருப்பதனால்  அதிலும்  பேனைக்கு    வேலையில்லாமல் போய்விட்டது. காசோலைக்கு   ஒப்பமிடுவதற்கு மாத்திரம்    பேனை    உதவும்  காலத்தில் வசதி படைத்தவர்கள்  மாறிவிட்டார்கள். எழுத்தாணியும்  பனையோலை   ஏடுகளும்  வெள்ளீய அச்சும் நூதனசாலைக்குச் சென்று விட்டன போன்று தபால் முத்திரைகளும்    வருங்காலத்தில்  ஆவணக்காப்பகத்தில்    இடம்பெறலாம்.    அவுஸ்திரேலியாவில்    தபால் நிலையங்களை   போஸ்ட்  ஷொப் (Post Shop) என அழைக்கிறார்கள்.  அந்தப்பெயரில்தான்    தபால்    நிலையம்     காட்சிப்பலகையில்   துலங்குகிறது. அங்கே  முத்திரை    மட்டுமல்ல    இனிப்பு   சொக்கலெட்ää    தண்ணீர்ப்போத்தல்  காகிதாதிகள்    உட்பட   வேறு   பொருட்களும்   விற்பனையாகின்றன.    மக்கள்  முத்திரை    வாங்குவதும்  குறைகிறது.    காரணம்    கணினிதான்.

Last Updated on Thursday, 29 August 2013 22:16 Read more...
 

தெணியான் 'இன்னும் சொல்லாதவை'

E-mail Print PDF

எழுத்தாளர் தெணியான்எழுத்தாளர் முருகபூபதி நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள், நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள். 'இன்னும் சொல்லாதவை' நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன். அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி. இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது. ஒரு எழுத்தாளனது புனைவுலகை தரிசித்து அதில் லயித்துக்கிடக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தாளனது சொந்த வாழ்வைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ளும்போது அந்த எழுத்தாளனைப்பற்றி உருவாக்கிவைத்திருக்கும் மனக்கோட்டை உடைந்து சிதறுவதே இயல்பு. இதனால்தானோ என்னவோ பல பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்வை வெளிப்படுத்துவதில்லை. தங்களது சுற்றம், நட்பு இவற்றின்மீது வெளிச்சம்படாமல் கவனமாகப்பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலைக்கு மாறாக தெணியானின் வாழ்வனுபவங்களை படிக்கும்போது அவர் மீதான நமது மதிப்பு பல மடங்கு கூடுகிறது. அவருடன் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

Last Updated on Friday, 08 February 2013 00:37 Read more...
 

காலமும் கணங்களும்: இலக்கிய உலகில் ஒரு யோகி கணேஷ்!

E-mail Print PDF

காலமும் கணங்களும்: இலக்கிய உலகில் ஒரு யோகி கணேஷ்!எழுத்தாளர் முருகபூபதிபாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப்பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது” என்றாள். தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் பிறந்த உலகப் பிரசித்திபெற்ற பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக இலங்கைக்கு அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச்சுருக்கமாகச் சொல்லிவிட்டு, இயக்குநர் பாலா தமிழ்நாட்டில் தேயிலைத்தோட்டங்களில் கூலி அடிமைகளாக வேலைசெய்த மக்களுக்கு நேர்ந்த கொடுமையை சித்திரித்திருக்கிறார்” என்றேன். மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி இந்த காலமும் கணங்களும் தொடர் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.

Last Updated on Sunday, 14 April 2013 19:34 Read more...
 

சில நினைவுகளும் சிந்தனைகளும்: இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நடந்த கௌரவிப்பு – பாராட்டு விழா

E-mail Print PDF

இக்பால்செ.கணேசலிங்கன்டொமினிக் ஜீவாகொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி, முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பதுபேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது. நல்ல செய்தி. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியான செயல். இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது. பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை இயக்கமாகவே நடத்திவந்த முன்னோடிகள் பற்றிய தகவல்களையும் இன்றைய தலைமுறையினர் இந்த நிகழ்வின் ஊடாகவும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னர் ஒரு காலத்தில் முற்போக்கு என்றவுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் அந்தப்பெயரில் ஒரு சங்கம் இயங்குகிறது. மாக்சிஸ்ட் – லெனினிஸ்ட் சிந்தனையுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு பின்பலமாகவும் பின்புலமாகவும் இருக்கிறது. செம்மலர் என்ற சிற்றேட்டையும் அந்த அமைப்பு வெளியிடுகிறது. அதேசமயம் வலதுகம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இயங்குவது தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம். அதன் ஸ்தாபகர் தோழர் ஜீவானந்தம். அவர் ஆசிரியராக பணியாற்றி வெளியானது தாமரை இதழ். பின்னர் யார் யாரோ அதற்கு ஆசிரியரானார்கள். இலங்கையில் இந்த நிலைமை இருக்கவில்லை.

Last Updated on Thursday, 29 August 2013 22:15 Read more...
 

அமைதியும் ஆற்றலும் ஆளுமையும் இணைந்த இலக்கிய கலாவித்தகர் மணிவிழா நாயகர் கலாமணி

E-mail Print PDF

எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது. காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ என்னவோ  நண்பர் கலாமணியுடனான  நட்புறவின்  தொடக்கமும்  நீட்சியுற்ற நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறதுஎழுத்தாளர் முருகபூபதிஎல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக -  செடியாக - மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன்.  அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக   அவுஸ்திரேலியா   சிட்னிக்கு வந்தார்.   நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன். மனைவி  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய   மனஉளைச்சல்   என்பதை  அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். Home Sick இடம்பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும்   அனுபவித்த    புத்திக்கொள்முதல்தான். எனினும் தான் வந்தநோக்கத்தில்   கண்ணும்   கருத்துமாக இருந்து   அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி.   சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு    ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின்   எதிர்காலம்   குறித்த   ஏக்கமும்   கவலையும் அவரது மனதில் கொழுவேறியது.

Last Updated on Sunday, 14 April 2013 19:34 Read more...
 

பின்தொடரும் வியட்நாம் தேவதை! வியட்நாம் போரின் நாற்பது ஆண்டு நிறைவில், நினைவாக ஒரு பதிவு! காலத்தின் கோலத்தில் முரண்நகைக்குட்பட்ட தேசங்கள்!

E-mail Print PDF

Kim Phuc- முருகபூபதி- வாழ்க்கைப்பயணத்தில் நாம் எத்தனையோ பேரைச்சந்திக்கலாம். ஆனால் அவர்களில் எத்தனைபேர் எமது நெஞ்சங்களில் நீக்கமற நிலைபெற்று, எமது நினைவுகளில் தொடர்ந்து வந்துகொண்டிருப்பார்கள்? அவ்வாறு நினைவுகளில் தொடருபவர்களுடனான முதல் சந்திப்பு ‘பல முதல்கள்’ போன்று மறக்கவே முடியாத நிகழ்வாகிவிடும். சுமார் இருபத்தி ஏழு வருடகாலமாக என்னைத்தொடர்ந்துவரும் ஒரு வியட்நாம் தேவதையைப் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த ஆக்கத்தை எழுதுகின்றேன். இருபதாம் நூற்றாண்டில் நடந்த  வரலாற்று முக்கியத்துவம் மிக்க சம்பவங்களை பதிவுசெய்துள்ள இணையத்தளங்கள் மற்றும் இதழியல் ஊடகங்களில் இடம்பெற்ற அந்தப்படத்தை எவரும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். அதனை எடுத்தவர் 'அசோசியேட் பிரெஸ்'ஸினைச் சேர்ந்த Huynh Cong Nick Ut என்னும் புகைப்படக்காரர். இந்தப் புகைப்படத்திற்காக புகழ்பெற்ற  'புலியட்சர்' விருதினையும் பெற்றவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Last Updated on Thursday, 29 August 2013 22:11 Read more...
 

அமைதியும் ஆற்றலும் ஆளுமையும் இணைந்த இலக்கிய கலாவித்தகர் மணிவிழா நாயகர் கலாமணி

E-mail Print PDF

எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது. காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ என்னவோ  நண்பர் கலாமணியுடனான  நட்புறவின்  தொடக்கமும்  நீட்சியுற்ற நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறதுஎழுத்தாளர் முருகபூபதிஎல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக -  செடியாக - மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன்.  அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக   அவுஸ்திரேலியா   சிட்னிக்கு வந்தார்.   நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன். மனைவி  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய   மனஉளைச்சல்   என்பதை  அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். Home Sick இடம்பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும்   அனுபவித்த    புத்திக்கொள்முதல்தான். எனினும் தான் வந்தநோக்கத்தில்   கண்ணும்   கருத்துமாக இருந்து   அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி.   சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு    ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின்   எதிர்காலம்   குறித்த   ஏக்கமும்   கவலையும் அவரது மனதில் கொழுவேறியது.

Last Updated on Thursday, 29 August 2013 22:16 Read more...
 


பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள் / அறிவித்தல்கள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் கடந்தவை (மார்ச் 2000 - மார்ச் 2011)
வெங்கட் சாமிநாதன் பக்கம்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
கட்டடக்கலை / நகர அமைப்பு / வரலாறு/ அகழாய்வு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன் பக்கம்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
சுப்ரபாரதிமணியன் பக்கம்
சு.குணேஸ்வரன் பக்கம்
யமுனா ராஜேந்திரன் பக்கம்
நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ஆர். தாரணி பக்கம்
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா பக்கம்
எழுத்தாளர் பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன் பக்கம்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
குரு அரவிந்தன் பக்கம்
சத்யானந்தன் பக்கம்

counter for tumblr

அண்மையில் வெளியானவை

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.
இலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.

'ஓவியா' பதிப்பக விபரங்கள்:
Oviya Pathippagam

17-16-5A, K.K.Nagar,
Batlagundua - 642 202
Tamil Nadu, India

Phone: 04543 - 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com

பதிவுகள் இதுவரையில் (2000 - 2011)

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

அ.ந.கந்தசாமி படைப்புகள்

புதிய பனுவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Wikileaks


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

ISSN  1481 - 2991
ஆசிரியர்: வ.ந.கிரிதரன் Editor-in - Chief: V.N.Giritharan

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"
'பதிவுகள்' இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.  'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளில் தேடுக!

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர்...

'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து  வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

கூகுளில் தேடுங்கள்

Custom Search

உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

Satyamev Jayate

Join Aamir Khan and STAR India on Satyamev Jayate – an emotional, challenging quest for hope – Sundays, at 11 AM

Center For Asia Studies

Fyodor Dostoevsky

Fyodor Dostoevsky (1821-1881) was a Russian novelist, journalist, short-story writer whose psychological penetration into the human soul had a profound influence on the 20th century novel. Read More

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

We develop CMS (Content Management Systems) websites for small businesses.

What is a CMS (Content Management Systems) web site? It is a type of web site which allows you to control and manage the content of your site without programming or HTML knowledge. Using CMS you can easily add or delete the content (images & text) in your website on the fly. We develop a higly professional CMS web site at a reasonable price. With your basic computer skills, you will be able to manage the content of your web site easily. Editing can be done with any normal web browser from anywhere in the world.  For your CMS website needs, Contact Nav Giri , an independent Web Infrastructure Consultant, at ngiri2704@rogers.com


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -