 
- எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் 'கந்துலு நிம வன துரு'. - கண்ணீர் வற்றும் வரை - (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு) -
நண்பர் ஜி.ஜி.சரத் ஆனந்த தகவலொன்றை அனுப்பியிருந்தார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தார்:
"உங்கள் சிறுகதையொன்றும் அடங்கியுள்ள புதிய தொகுப்பொன்று உடனே வெளிவரும் உங்கள் 'உடைத்த காலும் உடைத்த மனிதனும்' கதை தான். உங்கள் நல்லூர் ராஜதானி நூலை வெளியிட்ட அஹஸ மீடியா' வேர்க்ஸ் பப்ளிஷர். வட கிழக்கு, ,தோட்ட பகுதி, முஸ்லிம், அத்துடன் வெளிநாட்டில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன. நான்கு பெண் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். 12 எழுத்தாளர்கள் ( மூன்று தலைமுறையில்). 'கந்துலு நிம வன துரு'.. 'கண்ணீர் வற்றும் வரை' என்பது நூலின் பெயர். நூலில் இடம் பெறும் எழுத்தாளர்கள்: மு.சிவலிங்கன், நயீமா சித்திக், நீர்வை பொன்னையன், அழகு சுப்பிரமணியம், ராணி சீதரன், கே. ஆர்.டேவிட், ஆர்.ராஜேஸ்கண்ணன், ஆர். எம். நௌஷாத், வ.ந..கிரிதரன், பாலரஞ்சனி ஷர்மா, எம்.ரிஷான் ஷெரீப், மாதுமை சிவசுப்பிரமணியம்."
Last Updated on Monday, 16 December 2019 00:52
Read more...
Monday, 16 December 2019 01:06
-ஊர்க்குருவி -
கலை

பட்டிக்காட்டுப் பொன்னையா வந்தது தெரியாமல் போன எம்ஜிஆர் திரைப்படங்களிலொன்று. இலங்கையில் திரையிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் இப்பாடலை யு டியூப்பில் கேட்டபோது உடனடியாகவே பிடித்துப்போனது.. முதற் காரணம் டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலினிமை. அடுத்தது கே.வி.மகாதேவனின் இசை. அடுத்த காரணம் ஒன்றுமுண்டு. அது எம்ஜிஆர் & ஜெயலலிதாவின் நடிப்பு. பாடலுக்கேற்ப பாடலைச் சுவையாக்குவதில் இருவரின் பங்கும் முக்கியமானது. பாட,ல் வரிகளைப்பொறுத்தவரை குறிப்பிடத்தக்கதாக எவையுமில்லை, சந்தத்துக்கு எழுதியவை என்பதைத்தவிர.
பாடலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டமாக "நித்திரையை நீ மறக்க!" என்று வாத்தியார் (டி.எம்.எஸ்) கூற ஜெயலலிதா "ம்ஹூ' (சுசீலா) என்பார். தொடர்ந்து 'நீல விழி தான் சிவக்க' என வாத்தியார் கூற , ஜெயலலிதா 'ஓஹோ' என்பார். மீண்டும் வாத்தியார் "நித்திரையை நீ மறக்க!" என்று கூற, ஜெயலலிதா 'ஆகா' என்பார். மீண்டும் "'நீல விழி தான் சிவக்க" என்று வாத்தியார் தொடர, ஜெயலலிதா 'ம்ஹூ' என்பார். மேலும் டி.எம்.எஸ் 'முத்திரையை நான் பதிக்க!' என்று தொடர்ந்து 'முந்நூறு நாள் நடக்க!; என்று முடிக்க, ஜெயலலிதா சிரிப்பார். சிரித்தது ஜெயலலிதாவா சுசீலாவா என்பதில் எனக்கொரு சந்தேகமுண்டு. தொடர்ந்து ஜெயலலிதா "உன் முகம் போலே" என்பார். பதிலுக்கு வாத்தியார் 'ஆகா" என்பார். மேலும் ஜெயலலிதா ' என் மடி மேலே" என்பார். வாத்தியார் ஓகோ' என்பார். பாடலின் இப்பகுதியை நடிகர்களுக்காகவும்,. பாடகர்களுக்காகவும் மிகவும் இரசித்தேன். நீங்களுமொரு தடவை அப்பகுதியைக் கேட்டுப்பாருங்கள். மயங்கி விடுவீர்கள்.
Last Updated on Monday, 16 December 2019 01:12
Read more...
மல்லிகை சஞ்சிகையின் 43ஆவது ஆண்டு மலரை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். இம்மலரில் எழுத்தாளர் செங்கை ஆழியான் (முனைவர் க.குணராசா) ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி "'ஈழநாடு' இதழின் புனைகதைப் பங்களிப்பு" என்னும் தலைப்பில் நல்லதோர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஈழநாட்டில் வெளியான பல்வகைப்புனைகதைகள் பற்றிக் (சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் போன்ற) குறிப்பிட்டுள்ளதுடன் , ஈழநாட்டில் எழுதிய எழுத்தாளர்களை ஏழு தலைமுறைப் படைப்பாளிகளாக வகைப்படுத்தியுமுள்ளார். அவர்களைப்பற்றியும் , அவர்கள்தம் படைப்புகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க ஆய்வுக்கட்டுரை. வேறு யாரும் இவ்விதம் விரிவாக ஈழநாடு பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி ஆய்வுக் கட்டுரையேதாவது எழுதியதாகத் தெரியவில்லை. அவ்விதம் எழுதியிருந்தால் நான் இதுவரை அறியவில்லை.
ஈழநாட்டில் எழுதியவர்களைப்பற்றிய அவரது வகைப்படுத்தலில் என் பெயர் , வடகோவை வரதராஜன் ஆகியோரின் பெயர்களை ஏழாந்தலைமுறைப்படைப்பாளிகள் பிரிவினுள் கண்டேன். என் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் "வ.ந.கிரிதரன் (இப்படியும் ஒரு பெண், மணல் வீடுகள்)" என்று என் இரு சிறுகதைகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அக்காலகட்டத்தில் என் பதின்மவயதுப்பருவத்தில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் என் ஆரம்பகாலச் சிறுகதைகள் நான்கு வெளியாகியுள்ளன. அவற்றில் இரண்டு மட்டுமே செங்கை ஆழியானுக்குக் கிடைத்திருப்பதுபோல் தெரிகின்றது.
மேற்படி கட்டுரையில் ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் பகுதிகளை இங்கு ஒரு பதிவுக்காகப் பகிர்ந்துகொள்கின்றேன். மல்லிகை மலரையும் மேற்படி கட்டுரையையும் முழுமையாக வாசிப்பதற்குரிய இணைய முகவரி: http://noolaham.net/project/29/2870/2870.pdf
Last Updated on Sunday, 15 December 2019 09:45
Read more...
Saturday, 14 December 2019 09:33
- தகவல்: பா.அ.ஜயகரன் -
நிகழ்வுகள்
Saturday, 14 December 2019 09:17
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
நிகழ்வுகள்
‘இறைவனின் புண்ணிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்து இறைவனை வழிபட்டு வருவது நீண்ட நெடுங்காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் யாத்திரையாகும். அதிலும் கைலாச யாத்திரை என்பது கைலயங்கிரியில் வாழும் சிவனைத் தரிசிக்கும் புண்ணிய யாத்திரையாகும். கடினமும். ஊக்கமும்.இறைவனின் பெயரருளும் சித்தித்தால் மட்டுமே அடையக்கூடிய மகத்தான யாத்திரையாகும். சில புண்ணிய ஸ்தலங்கள் தரிசிப்பதால் மட்டுமல்ல நினைத்துப்பார்த்தாலுமேகூட அருள் தருகின்ற புண்ணிய ஸ்தலங்களாகும். அந்த வகையில் லண்டன் டாக்டர் அம்பி அவர்கள் ஆகம முறைகளை அனுசரிக்கும் இந்துப் பெருமகனாய் கைலாசத்தை இரண்டு முறைகள் தரிசித்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல பயண அனுபவத்தை ஒழுங்காகக் குறித்து அழகிய தமிழில். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்ற நோக்கிலே ‘கண்டேன் கைலாசம்;’ என்ற நூலினை எழுதி வெளியிட்டிருப்பது நாம் பெருமையுடன் பாராட்டவேண்டிய அம்சமாகும்’ என்று பிரம்மஸ்ரீ கைலை நாகநாத சிவாச்சாரியார் ‘கண்டேன் கைலாசம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது தனது ஆசியுரையில் தெரிவித்தார்.
Last Updated on Saturday, 14 December 2019 09:30
Read more...
Saturday, 14 December 2019 08:59
- Jayanthi Sankar -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 14 December 2019 09:36
Read more...
Friday, 13 December 2019 10:22
- ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்) -
'பதிவுகளில்' அன்று
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102 1. "டோபா டேக் சிங்' - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ| ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன.இந்த முடிவு சரியானதா இல்லையா என்று சொல்வது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் . இந்த முடிவுக்கு வருவதற்கு, இருநாடுகளின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, பலமுறை கூடி மிகக் கடுமையாக ஆலோசித்தும், விவாதித்தும் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த முக்கியமான பரிமாற்றம் செயல்படுத்தப்படும் இறுதிநாள் மற்றும் பிற முக்கியமான விபரங்களும் மிகவும் கவனத்துடன் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் உறவினர்களைக் கொண்ட முஸ்லிம் பைத்தியங்களை எவ்விதத் தொந்தரவும் இன்றி அங்கேயே வசிக்க விடுவதென்றும், மற்ற பைத்தியங்களை பரிமாற்றத்துக்காக எல்லைக்குக் கொண்டு செல்வதென்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பாகிஸ்தானிலோ, இந்து மற்றும் சீக்கியர்களின் மக்கள் தொகை முழுக்கவும் ஏற்கனவே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விட்டதனால், நிலைமை சற்று மாறுபட்டு இருந்தது. முஸ்லிம் அல்லாத பைத்தியங்களை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற சிக்கல் அங்கு எழவில்லை. இரு அரசுகளின் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவில் என்னவிதமான எதிர்வினை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் லாகூரின் பைத்தியக்கார விடுதிகளில் செய்தி பரவியதுமே அது மிகவும் பரபரப்பினைக் கிளப்பியது.
Last Updated on Friday, 13 December 2019 10:30
Read more...
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63 - 1. சிறுகதை: வேஷங்கள்! - -சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி)-
காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.
"எப்படி அவனால் முடிந்தது...! எப்படித் துணிந்து சொன்னான்...!" காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.
சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருடத் திருமண வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி அவர்களின் செல்ல மகள்.
"நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்...! நடித்தானா...?" காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.
"உமா உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்." காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான். அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதியபடி "சொல்லுங்கோ" என்றாள் மிக அன்பாக.
Last Updated on Friday, 13 December 2019 10:06
Read more...
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 - 1. ' ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்' - - ஆபிதீன் -
வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை , பாருங்கள்!) மோதிரத்தை எங்கே வாங்கினார்கள் , யாரிடம் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதற்காக அவர்களின் டைரி ஒன்றை புரட்டினேன். வருடா வருடம் எழுதும் டைரி அல்ல அது. கிழிந்துபோன வாழ்க்கை மொத்தத்திற்கும் ஒன்று. ஊரில் பால் பண்ணை வைத்து சொந்தக்காரர்களால் ஏமாந்தது, நாகப்பட்டினத்திற்கு கப்பலில் வந்து இறங்கிய காலத்தில் திமிர் பிடித்த கஸ்டம்ஸ்காரன் போட்ட டூட்டி, பினாங்கில் வாங்கிய தொப்பித் துணி சாயம் போயிருந்தது , பூட்டியா ஆயிஷாம்மா கனவில் சொன்ன சில செய்திகள் பின் உண்மையாகிப் போனது, குணங்குடியப்பாவின் எக்காலக்கண்ணி ஒரிரண்டு, கையானம் காய்ச்சுவது எப்படி?, நான் பிறந்தபோது அசல் சீனாக்காரன் சாயலில் இருந்தது, 'கடவுள் மனது வைத்தால் கழுதை கூட குஸ்தி போடும்' என்ற கனைப்புகள் என்று பலதும் அதில் இருக்கும். மோதிரம் பற்றி மட்டும் இல்லை. 'கமர் பஸ்தா ஹோனா' என்று தலைப்பிட்டு , எந்த ஆலிம்ஷாவோ பேசியதை பேசியதுபோலவே எழுதி அடிக்கோடிட்டும் வைத்திருந்த 786வது பாரா மட்டும் என்னைக் கவர்ந்தது. 'மாக்கான் வருவான்' என்று பிள்ளைகளுக்கு - நாலு வருடத்திற்கு ஒருமுறை ஊர் வந்து- பூச்சாண்டி காட்டிய வாப்பா பயந்ததின் அடையாளங்களில் ஒன்று.
'நாம பயப்படுறதுலெ 99.99% நடக்குறதில்லை. எது நடந்துடுமோண்டு நினைக்கிறோமோ அது நடக்காது. பயம் வருதுல்லெ? ஒரு தாள்லெ எழுதி வச்சுக்குங்க. இப்படி ஒரு பயம் வருது...இப்படி ஆயிடுமோண்டு தோணுதுண்டு குறிச்சி வச்சிக்குங்க. அப்புறமா அதை எடுத்துப் பாருங்க. ஒண்ணும் நடந்திருக்காது!. இப்படி உள்ள பயம்தான் நம்ம லை·ப்லெ முக்காவாசி நேரத்துலெ செஞ்சிட்டு வரோம்ட்டு புரியும்..வேற வார்த்தையிலெ சொன்னா உங்க லை·ப்லெ இதே மாதிரி முட்டாள்தனமான காரியத்துக்குத்தான் டைம் செலவு பண்ணியிருக்கீங்கண்டு புரியும். 'புள்ளக்கி அம்மை வாத்துடுமோண்ட நினைப்பு..அந்த நினைப்புலெ சோறு உண்ண முடியாம போறது...பேச வேண்டிய செய்தியை பேசாம போறது..·போன் call-ஐ அட்டென்ண்ட் பண்ண முடியாம ஆயிடுறது...நல்லா பேசுறாவங்கள்ட்டெ கூட தூக்கியெறிஞ்சி பேசுறது..இந்த reactionலாம் வரும். எழுதிவைங்க. அப்பவே பயம் பாதி குறைஞ்சி போயிடும்!'
Last Updated on Friday, 13 December 2019 09:52
Read more...
Thursday, 12 December 2019 10:17
- பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம் முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 -
ஆய்வு
- பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம் முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 -
நாடோடியாகச் சுற்றித்திரிந்த கற்கால மனிதன் ஒரு குடும்பமாக, இனக்குழுவாக, சமுதாயமாக வளா்ச்சியுற்றுப் பின்னா் நிலவுடைமை, அரசுடைமைச் சமுதாயமாக சங்ககாலத்தில் தொடங்கியோ தொடா்ந்தோ குடிகளுள் ஒருவனாக மாறினான். நில அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்கள் வேட்டுவா்கள், ஆயா், கானவா், உழவா், பரதவா் என்னும் வகைகளாகப் பகுக்கப்பட்டதை தமிழ் இலக்கணங்கள் கூறுகின்றன. குடிவழியோடு குயவா், தச்சா், பாணா், பொற்கொல்லா் போன்ற தொழில்வழிச் சாதியினரும் தோற்றம் பெற்றனா், ஒத்த குடிவழியோ ஒத்த தொழில்வழியோ ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் வாழ்ந்ததால் ஓா்குடிமக்கள் எனப்பட்டனா். குடிவழியறியப்பட்ட வேட்டுவா்களைப் பற்றி குறுந்தொகைப் பாடல்கள் வழி அறியமுயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
குறவா் குடி :
ஆதிமனிதனின் முக்கியத் தொழிலாக இருந்தது வேட்டைத் தொழில். மலைநிலம் சார்ந்த நிலங்களில் உருப்பெற்றதால் வேட்டைத் தொழில் குறிஞ்சித் திணை சார்ந்து அறியப்பட்டது. குறிஞ்சியோடு முறைமை திரிந்து பாலையாகப் படிமங்கொள்ளும் போதும் வேட்டைத் தொழில் தொடா்ந்ததை தமிழிலக்கியவெளியில் காணமுடிகிறது.
Last Updated on Friday, 13 December 2019 02:06
Read more...
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜூலை 2005 இதழ் 67 1. ஒரு சாண் மனிதன்! - செழியன் -
சாதாரணமாக ஒரு புகையிரத நிலையத்தில் நிகழ்வது போலத்தான் இது நடந்து வந்தது. ஏழு வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் அதில் முக்கியமானது, இது அங்கு நடப்பது போல, இங்கு தினமும் நடைபெறுவதில்லை. வாரத்திற்கு ஒரு
தடவை வருகின்ற புதன்கிழமைகளில் மட்டுமே நடக்கின்றது.
கண் இமைக்கும் நேரத்தில், மிக வேகமாக வருகின்ற புதையிரதத்தில் இருந்து, புகையிரத நிலைய அதிபரின் கைக்கு மாறுகின்ற அந்த வளையம் போல, கணநேரத்தில் இது கைமாறுகின்றது. பார்க்கின்ற போதெல்லாம், ஒரு கைதேர்ந்த சர்க்கஸ்காரர்
நடத்துகின்ற அற்புதமான மாயாஜாலக் காட்சி போல எனக்குள் அதிசயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதிசயம் மட்டுமல்ல, யாராவது ஆசிரியர்கள் கண்டுவிட்டால் என்ன நடக்குமோ என்ற பெரும் பதைபதைப்பும், நடுக்கமும் எப்போதுமே எனக்குள் இருக்கும்.
புதன்கிழமைகளில் இரண்டாவதும், மூன்றாவதுமான தொடர் பாடமாக எமக்கு வருவது சுகாதாரம். இந்தப் பாடத்திற்காக பத்து- யு வகுப்பில் இருந்து பத்து- ஊ வகுப்புக்கு, எமது வகுப்பில் இருந்த பாதி மாணவர்கள் அணிவகுத்துச் செல்லவேண்டும்.
மிகுதி பாதிப்பேரும் பிரயோக கணிதத்திற்காக பெளதீக ஆய்வு கூடத்திற்குச் சென்று விடுவார்கள்.
இந்தப் புதன் கிழமை எப்போது வரும் என்று வகுப்பு முழுதும் காத்திருக்கும். சிலர் வெளிப்படையாக உணர்ச்சி வசப்பட்டுப் போய் நிற்பார்கள். இன்னும் சிலர் வெளியில் வேண்டா வெறுப்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு உள்@ர ஆசை ஆசையாக உமிழ்நீர் வடித்துக் கொண்டிருப்பார்கள்.
Last Updated on Friday, 13 December 2019 02:30
Read more...
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் யூன் 2007 இதழ் 90
மேலெல்லாம் கொதித்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. இரவு பெரும்பொழுதும் தூக்கமற்றதாய்க் கழிந்திருந்ததில் விழித்தவளின் இமைகள் கனத்து, கண்களும் எரிச்சலாகியிருந்தன. இரவு எழுச்சி கண்டிருந்த உணர்ச்சி வேறு உள்கனன்றுகொண்டிருந்தது. அடக்கப்படாத் தாபம் எரிச்சலாய், கோபமாய் அவளில் பொங்கியது. அடைந்த மனவலி முக்கியம். அதை வெளிப்படுத்த முடியாததில் அழுகைதான் வரப்பார்த்தது.
சிந்தியா படுத்திருந்த சோபாவிலிருந்து தலையை நிமிர்த்தினாள்.
ஜன்னலூடாக வெளிச்சமடித்துக்கொண்டிருந்தது.
நேரம் என்னவாகவிருக்கும்? பத்து மணிக்கு மேலேயாய் இருக்கும் என வெளிச்சத்தில் ஊகம் கொண்டாள். தலையை இன்னும் கொஞ்சம் திருப்பி சுவர் மணிக்கூட்டைப் பார்ப்பதற்குமான அலுப்பு.
மேலே மாடியில் நடமாட்டத்தின், உடம்பசைவின் மரத்தள அதிர்வினோசை எழுகிறதா என்று கிரகிக்கப் பார்த்தாள். இல்லை, எந்த அசைவின் அறிகுறியும் இல்லை. கணேஷ் அந்தநேரமளவுக்குக்கூட எழுந்திருக்கக்;கூடிய நிலையில் இரவு வந்திருக்கவில்லைத்தான்.
இரவோ பகலோ, காலையோ மாலையோ வேலை செய்வதினூடாகத்தான் புதிதாக மோட்கேஜில் வாங்கிய அந்தப் பிரமாண்டமான வீட்டின் தவணைத் தொகையைச் செலுத்திக்கொண்டிருக்க முடிகிறது. மாதம் இரண்டாயிரத்து நானூறு டொலர் சாதாரணமான தொகையில்லை. அது ஒன்றே மட்டுமெனில் அவளுக்கும் கணேஷ்க்கும் கொஞ்சப் பொழுதெனினும் ஆறுதலாயிருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், கார் இன்சூரன்ஸ், ஹைட்ரோ பில், ரெலிபோன் செல்போன் பில்கள், கேபிள் ரீவி, இன்ரநெற் கனெக்சன் பில்கள் என இரண்டுபேர் சம்பளங்கள்கூட பற்றாக்குறையாய் இருக்கின்றன.
Last Updated on Friday, 13 December 2019 02:29
Read more...
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் பெப்ருவரி 2005 இதழ் 62
ஆகஸ்ட் மாதத்தில் ஓலைச்சுவடி இதழில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் அதன் தேதியைத் துல்லிதமாகச் சொல்ல முடியவில்லை. ஆகஸ்டின் முற்பகுதியாகத்தான் இருக்க வேண்டும். அருமையான அச்சு வார்ப்புள்ள அந்த இதழில் அந்தக்கதை தோற்றம் பெற்றிருந்தது. மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்தது அந்தக் கதை. அதன் நடை சுண்டி வசீகரிக்கும் அழகு. அந்தக் கதையை முதன் முதலில் படித்தவர்கள் அது ஒரு பெரும் மாயத் தோற்றம் என்றும் அதன் பின் பெரும் மர்மங்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பினார்கள். மிகவும் படித்தவர்களும் இலக்கிய ரசிகர்களாக உள்ளவர்களையுமே அந்தக் கதை கவர்ந்தது. அந்தக் கதையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் தங்கள் காலண்டர்களைத் திருப்பிப் பார்த்துவிட்டு அந்தக் கதை வெளிப்படுவதற்கு இது சிறந்த மாதமே என்றார்கள். இந்த மாதத்தில்தான் பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததெனவும், அதுவும் பல சுதந்திரங்கள் நள்ளிரவில் பெறப்பட்டன என்றும் அதற்கும் இதற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்றும் அவர்கள் தங்கள் இளைய தலைமுறையினருக்கும் வாசக சகாக்களுக்கும் தெரிவித்துக் கொண்டார்கள். சிலர் அந்தக் கதையைப் படித்து கண்கள் கலங்கினார்கள். இப்படியும் ஒரு கதை இருக்க முடியுமா என அழுது குரல் கம்மிப் பிறருக்குச் சொன்னார்கள். அவர்கள் கண்கள் கதையில் நிலைகுத்தி இருந்ததோடு படபடக்கும் மார்பை வலது கைகளினால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
Last Updated on Thursday, 12 December 2019 11:35
Read more...
இராமாயணத்தில் வரும் சீதை, மகாபாரதத்தில் வரும் குந்தி, காந்தாரி, திரௌபதி, சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, மாதவி, நளவெண்பாவில் வரும் தமயந்தி பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள். இவர்களை படைத்தவர்கள் யார்…? என்று பார்த்தால், வால்மீகி – கம்பர் – வியாசர் – இளங்கோவடிகள் - புகழேந்தி முதலான ஆண்கள்தான். காளிதாசர்தான் சகுந்தலையையும் படைத்தார். இந்தப்பெண்களையெல்லாம் கஷ்டப்படுத்திய இந்த ஆண்களின் படைப்புகளுக்கு எமது சமூகம் காவியம் என்றும் பெயர் சூட்டிக்கொண்டது. வள்ளுவரும் என்ன செல்கிறார்: அடிசிற்கினியாளே… அன்புடைய மாதே பதிசொற் தவறாத பாவாய்… அடிவருடி பின்தூங்கி முன் எழுந்த பேதையே…. “ என்று தனது மனைவி வாசுகி மரணித்த பின்னர் அவளை சிதையிலே வைத்து தீவைப்பதற்கு முன்னர் பாடினாராம்! அவளது மரணத்தின் பின்னர் வள்ளுவருக்கு அடிவருடியது யார்..? என்பது தெரியவில்லை. இந்தக்கதைகளைப்பற்றியெல்லாம் யோசிக்கவைத்திருக்கிறது - மறுவிசாரணைக்குட்படுத்துகிறது ஓவியாவின் கருஞ்சட்டைப்பெண்கள் நூல்.
எமது வாழ்நாளில் பலதரப்பட்ட இஸங்களை பார்த்துவருகின்றோம். கம்யூனிசம், மார்க்ஸிசம், ஷோசலிஸம், இவை தவிர, கிளாசிசம் - மேனரிஸம் - ரொமாண்டிசிசம் - மொடர்னிசம், எக்ஸ்பிரஷனிசம் - ரியலிசம் - நச்சுரலிசம் – சிம்பலிசம் – இமேஜிசம் - எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் ஏராளமான இஸங்கள் இருக்கின்றன. ஆனால், ஆணிஸம் – பெண்ணிஸம் என்று எதுவுமில்லை. பெண்ணியம் இருக்கிறது. ஆண்ணியம் இருக்கிறதா..?
கம்யூனிஸ்ட்டுகளின் அடையாளம் சிவப்பு என்றால் சுயமரியாதை இயக்கத்தினரது அடையாளம் கருப்பு! தந்தை “ பெரியார் பெரியார் “ என்று காலம்பூராவும் சொல்லிவருகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் தந்தை எனப்போற்றுகின்றோம். ஆனால், அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை யார் சூட்டினார்கள்..? என்று பார்த்தால், 1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு அந்தப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி இந்நூலில் தெரியவருகிறது.
Last Updated on Thursday, 12 December 2019 11:19
Read more...
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஏப்ரல் 2005 இதழ் 64
1. பெற்றோர் பருவம்!
"புள்ளெ வந்துட்டாளா?"
தனது இரண்டு சக்கர லாரியை போர்ட்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக்கொண்டே கேள்வியை தூக்கி வீட்டுக்குள் வீசினார் அப்துல் காதிர். ஸ்கூலில் இருந்து ட்யூஷனெல்லாம் முடிந்து அருமை மகளார் ஆறுமணிக்கு மேல்தான் வருவாள் என்று அவருக்கும் தெரியும். ஆனால் அலுவலகம் விட்டு வந்து அவர் வீட்டுக்குள் புகுவதற்கு முன் 'புள்ளெ வந்துட்டாளா' என்ற கேள்வி புகுந்துவிடும்.
வீரபத்ரனின் கழுத்தில் லாவகமாக மாட்டியிருந்த அவரது தோள் பையை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார். அவர் கேள்விக்கு வீட்டிலிருந்த யாரும் பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். அது ஒரு கேள்வியே அல்ல. அது ஒரு பழக்கம். வைத்த நேரத்துக்கு அலாரம் அடிப்பது மாதிரி, வீட்டுக்குள் நுழைந்ததும் அவர் வாயிலிருந்து அந்த கேள்வி புறப்பட்டுவிடும்.
"புள்ளெ வந்துட்டாளான்டு கேட்டேன்" என்று மனைவியைப் பார்த்துக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னார். அடுப்பங்கரையில் அவருக்காக டீ போட்டுக்கொண்டிருந்த ஹஸீனாவின் இதழோரம் கோணலாக ஒரு புன்னகை ஊர்ந்தது.
"அவ ஆரறை மணிக்கித்தான் வருவான்னு தெரியும்ல, ஏன் சும்மா கேட்டுக்கிட்டே இரிக்கிறீங்க? மணி இப்ப அஞ்சறெதானே ஆவுது?"
Last Updated on Thursday, 12 December 2019 10:55
Read more...
Thursday, 12 December 2019 10:33
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல் கல்லூரி, கோவை. -
கவிதை

"ஞானநிலையோடே அது சிரிக்கின்றது... பிரிப்படாத வண்ணங்களில் புழுதியேறி அகலத்திறந்த அதன் வாய்க்குள் சில கொசுக்களும் ஈக்களும் ரீங்காரத்தோடு...... ஈக்கியாய் உலரும் பொட்டல் வெயிலிலும் அதன் சிரிப்பில் சிறிதும் மாற்றமில்லை...
Last Updated on Thursday, 12 December 2019 10:38
Read more...
Thursday, 12 December 2019 10:08
- முனைவர் சு.குமார், உதவிப் பேராசிரியர், ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை -
கவிதை

புதிய தலைமுறையை உருவாக்குவோம் ஓ இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!! புது வருடம் பிறக்கிறது புது புது சிந்தனைகளோடு போராட்ட குணங்களோடு சமூக விஞ்ஞான உணர்வுகளோடு புது உலகத்தைப் படைத்திடுவோம் வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
Last Updated on Thursday, 12 December 2019 10:14
Read more...
Thursday, 12 December 2019 10:01
- -காரிகைக் குட்டி -
கவிதை

காலக் கடிதக் குறிப்புகளின் பயணம்.
சில கடிதங்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன் வந்திருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த அதே முகவரி.
கடிதம் அடைய வேண்டிய முகவரி மாறாதிருந்தாலும் அதனை அனுப்பும் நபர்களின் முகவரிகள் நிச்சயமாய் வேறாகவே இருந்தது.
அதே போல் மற்றொன்றாக ஒரு தகவல் அக்கடிதங்கள் வெவ்வேறு காலத்தில் அதே முகவரியில் வாழ்ந்த வேறு வேறு நபர்களுக்கானது. எனில், அது வேறு வேறு காலத்தில் எழுதப்பட்டவைகளே. அவ்வெழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில் அந்நபரின் குறிப்புகளை முதலில் கண்டடைதல் வேண்டும். பழங்கால எகிப்திய நாகரீக 'கியூனிபார்ம்' எழுத்துக்களையும், சிதைந்த 'சிந்து எழுத்து' முறைகளுமாய் இருக்குமெனில் நைல்நதியின் பாதையோடும், தோலால் வரையப்பட்ட மேப்பில் குறிக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு ஈரானிய 'மெசபடோமிய' நாகரீகத்திற்குள் நுழைந்து அந்நபர் குறித்த தகவலை நாம் திரட்டியாக வேண்டும்.
இக்கடிதத்தையும் பிரிக்க வேண்டாமென்ற குறிப்புகளோடு எனது மேசையின் மேல் உறைகிழிக்கபடாமல் வெறித்தப் பார்த்தன அவ்வெழுத்துகள்... பெருநாட்டு நீண்ட அலகு பறவையாய்.
* கியூனிபார்ம், சிந்து எழுத்து - இரண்டும் பழங்கால சித்திர எழுத்து முறைகளுள் ஒன்று.
Last Updated on Thursday, 12 December 2019 10:07
Read more...
Thursday, 12 December 2019 09:54
- முனைவர்.சி.திருவேங்கடம் -
கவிதை

தள்ளாட்டம் …
உள்ளத்தின் ரணம் ஆற அருமருந்தென கூடா நண்பனின் பரிந்துரைப்பை செவிமடுத்து கேட்டு கண்ணாடிக் கோப்பைக்குள் திரவத்தை ஊற்றிக் கொஞ்சம் உறிஞ்சிக் குடித்தேன்.
Last Updated on Thursday, 12 December 2019 09:56
Read more...
Thursday, 12 December 2019 09:47
- கவிஞர் பூராம் (முனைவர் ம இராமச்சந்திரன் ), திருவண்ணாமலை -
கவிதை
1
வந்து விழுந்த
சூரியக் குழந்தை
அழுது ஆர்ப்பாட்டம் செய்தது,
கண் குளத்தின் தண்ணீர்
ஊற்று பொங்கி வழிய
இதய வானில் அன்பு
ஆவேசமானது
எதையாவது கொடுத்து
அழுகையை நிறுத்திவிட
முயற்சிகள் எல்லாம்
அழுகையின் வீரியத்தில்
அடங்கிப் போயின.
கையறு நிலையோடு நின்ற
என்னைக் கள்ளப் பார்வை
பார்த்து மீண்டும் மீண்டும்
அழுகையின் உச்சத்திற்குச் சென்றது.
உடல் சோர்ந்து மனம் அயர்ந்து
அமைதியின் மடியில் அகப்பட்டு
கண்ணை முடினேன்
காதுகளுக்கு அழும் ஓசையின்
சுவடுகூட தென்படவில்லை
ஆழ்ந்த பெருமூச்சோடு கண் திறக்க
மன மற்று இருக்கும் வேளையில்
பிரகாசமான அகஒளியில் நான்.
வெறுமையின் நிறைகுடத்தில்
ததும்பி வழிகிறேன்.
Last Updated on Thursday, 12 December 2019 09:51
Read more...
Thursday, 12 December 2019 09:29
- சுருளிதுரை, பரவை,மதுரை -
சிறுகதை
வண்டி மேற்காமா கிளம்ப, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் எனக் கண்டக்டர் கூவிக் கொண்டு இருக்க, டிரைவர் ஆக்ஸ் லேட்டரை லேசாக அழுத்திக் கொண்டே இருக்க வண்டி புறப்படுவது போல... உறுமிக்கொண்டு இருக்கு, “ஒட்டன் சத்திரம், தாராபுரம் இருந்தா ஏறு, இடையிலே... எங்கயும் நிக்காது... பைப்பாஸ் வழியா போறது...” எனக்கத்திக்கொண்டே இருந்தார்.
“டைம்பாஸ் கதைப்புத்தகம் சார், அஞ்சு இருபது ரூபா சார், அஞ்சு இருபது ரூவா... எந்தப் புத்தகத்த வேணும்னாலும் எடுத்துக்கிடலாம்... சார் டைம்பாஸ் புத்தகம் சார்...” கூவிக்கிட்டே ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கினான்...
“என்ன இவன் பழைய புத்தகத்துக்கு விலைச் சொல்லுறானே ஒன்னும் புரியலயே...” 60 வயது நிரம்பிய பெரிய மனுஷன் புலம்பிக்கிட்டே “காலம் மாறிப்போச்சு...”
“மாதுளை கிலோ எம்பது, எம்பது”
“வெள்ளரிக்கா பாக்கெட் பத்து ரூபாய்...”
“டக்! டக்! வேர்கடலை, வேர்கடலை...” எனக் கூவிக்கொண்டே தள்ளு வண்டியில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இயல்பான பரபரப்புடன் இருந்தது...
“சார் திருப்பூர், திருப்பூர் பைப்பாஸ்...”
“அக்கா மல்லிப்பூ மல்லிப்பூ. நூறு பத்துரூபா, ஒரு முழம் இருபது அக்கா. வாங்கிக்கக்கா...”
சாயங்கால மஞ்சள் வெயில் அடிக்க, மஞ்சள் நிற சேலையில் நாற்பது வயது மதிக்கதக்க நல்ல வாசனையோ இன்னும் இளமை நீங்காத முதுமை தொடாத நிலையில் பின்பக்க படியில் வேகமாக துள்ளிக் குதித்து ஏறி கடைசி சீட்டுக்கு முந்திய சீட்டில் வந்து அமர்ந்தாள், பஸ் மெல்ல ஊர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது... குரு தியேட்டர் திரும்பி... வைகைப்பாலம் கடந்து பாத்திமா கல்லூரி சாலையைப் பிடித்து போய்க் கொண்டு இருந்தது...
“டிக்கெட்... டிக்கெட்... எடுங்க” எனக் கேட்டுக்கிட்டு வர.. இதுவரை புரிந்தும் புரியாமலும் இருந்த புதுப்பாடலைப் போட்டதில் டிக்கெட் கேட்டவுக ஊர் சரியா கேட்காம மாத்திக் கொடுக்க... “மலைப்பாக, பாட்டச் சத்தமா வேற வச்சு... பாட்ட கேட்க முடியல... ஏங்க சத்தத்தை கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்க...”
Last Updated on Thursday, 12 December 2019 09:35
Read more...
Thursday, 12 December 2019 00:51
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல் கல்லூரி, கோவை. -
ஆய்வு
உயிரிகளின் அறிவுநிலையானது ஒன்றன் படிநிலையிலிருந்து அடுத்தவொன்றின் வளர்ச்சியாக அமைந்திருப்பதை உணரவேண்டியது இன்றியமையானதகும். தம் சூழலைச் சுற்றி வாழும் உயிரிகளை உற்றுநோக்கி, இணங்கி வாழும் நிலையானது மனிதனின் பகுத்தறிவின் நோக்கமென்று கூறுவதில் மிகையில்லை. மனிதனின் பகுத்தறிவின் வளர்ச்சிக்கு இப்படிநிலையே மூலமாக இருந்திருக்கக்கூடும். அந்நிலையில் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் பலநிலைகளில் அரிய தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன.
தமிழர்களின் நிலவமைப்பிற்கும், புறத்திணைக்கும் பெயர்க்குறியீடாக அதற்கேற்ற தாவரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது நாம் அறிந்தவொன்றாகும். இது தமிழர்களின் சூழலியல் அறிவிற்குத் தக்கச் சான்றுமாகும். நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்கள் தம் மரபார்ந்த சடங்கான “சக்கலாத்தி” எனும் நிகழ்வில் பயன்படுத்தும் தாவரங்களையும் அதன் குறியீட்டு நிலையினையும் இக்கட்டுரையானது விளக்கி ஆய்கின்றது.
நீலகிரியில் வாழ்கின்ற படகர்களின் வாழ்வியலானது பல்வேறு கலாச்சார, பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கியது. முன்னோர் வழிபாட்டினைத் தமது ஆதி வழிபாட்டாகக் கடைப்பிடித்து வருகின்ற படகர்கள் தம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் வழியில் தாம் வாழ்வதனைக் காட்டும் விதமாக நிகழ்த்தப்படும் சடங்கே இந்தச் ‘சக்கலாத்தி’ எனும் நிகழ்வாகும். இது படகர்களின் புத்தாண்டாகவும் கொள்ளப்படுகின்றது.
Last Updated on Thursday, 12 December 2019 01:02
Read more...
பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் யூன் 2004 இதழ் 54
குப்பையை அளைந்தபடியே மறுபடியும் தலைதிருப்பி பார்த்தபோது, அவன் இன்னும் அதே மரத்தடி திண்டில், காவி-வெள்ளையடித்த சிமெண்டுச் சிறு தெய்வத்தினருகில் அவளை பார்த்தபடி குந்தியிருப்பது தெரிந்தது. அவள் பார்பதை உணர்ந்ததும், பார்வையை விலக்கி வானத்தை பார்த்தபடி தன் மந்தமான தாடியை சொரிந்து விட்டு கொண்டான். எதிர்பக்கம் கூடியிருந்த செருப்பு தைக்கும் குடும்பத்திலிருந்து, தமிழ் சினிமா வசனம், சற்று தள்ளி இருவர் புகைத்து கொண்டிருந்த கஞ்சா புகைமணத்துடன் கலந்து, கேட்டுகொண்டிருந்தது. சாலையில் காய்கறி வண்டியுடன் சென்றுகொண்டிருந்த தமிழ் சிறுமியை பார்த்ததும் எழுந்து கைதட்டி அழைத்தான். அவள் இவனை பார்த்ததும் ஒரு கேரட்டை கொண்டு வந்து நீட்டினாள். கேரட்டை கடித்தபடியே, இயல்பானது போல் பவனை செய்தபடி மீண்டும் அவள் பக்கம் பார்வையை செலுத்தி, அவள் இன்னும் பார்த்து கொண்டிருப்பதை அறிந்து பழையபடி வானம்பார்கலானான்.
"பரதேசி நாய்க்கு ரோஷத்த பாரு!" முகத்தை அலட்சியமாய் வைத்தபடி கிளறுவதை தொடர்ந்தாள். சோம்பல் தரும் குளிர்காற்று சோம்பேரித்தனமாய் வீசிகொண்டிருந்தது. வெகுநேரமாய் தள்ளி நின்று யோசித்துகொண்டிருந்த தெருநாய், முகரும் நோக்கத்தோடு சோம்பலான உறுமலுடன் அவள் அருகில் வர, மடித்த காலி அட்டைபெட்டியால் அலட்சியமாய் அதன் முகத்திலடித்தாள். நாய் நொடிபொழுதில் தலையை பின்னுக்கிழுத்து, இரண்டடி பின்னகர்ந்து மீண்டும் புடவையருகே முகத்தை கொண்டுவந்தது.
Last Updated on Thursday, 12 December 2019 00:55
Read more...
Wednesday, 11 December 2019 10:36
-முனைவர்.வே.மணிகண்டன்
ஆய்வு
வல்லமை.காம் இணைய இதழில் முனைவர் வே.மணிகண்டன் எழுதிய இணைய இதழ்கள் பற்றிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவாகின்றது. - ஆசிரியர் -
வல்லமை.காம் (நவம்பர் 10, 20170)
தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடிகள், பக்கங்களாக மாறி இன்று இணையத்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் இணையப் பயனாளர்களிடம் இணையத்தமிழ் இதழ்களை மிக எளிதாக எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் வலையேற்றப்படும் இணையத்தமிழ் இதழ்களில் உடனுக்குடன் படைப்புகள் வெளியிடவும், இலக்கிய விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த முடிகிறது. படைப்பிலங்கியங்களுக்கு பெரும்பான்மையான இணைய இதழ்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் இணையத்தமிழ் இதழ்களில் எந்தெந்த நிலைகளில் தொகுக்கப்படுகின்றன என்பதைத் திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களின் வாயிலாக இவ்வியல் ஆராய்கிறது.
திண்ணை இதழ் அறிமுகம்
ஜனநாயக ரீதியாக அனைத்துத் தரப்பினரும் தம்முடைய கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பொது மேடையாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. மாறுபட்ட, முரண்பட்ட பல கருத்துகளுக்கும் களம் அமைத்துத்தரும் பணியை செவ்வனே திண்ணை இதழானது செய்கின்றது.
திண்ணை ஓர் இலாப நோக்கற்ற இணைய இதழாகும். இவ்விதழ் வார இதழாக 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து இணையத்தில் தரவேற்றம் செய்யப்படுகின்றது. திண்ணை இதழின் ஆசிரியர் கோ.இராஜாராம். திண்ணையின் தொடக்க கால இதழ்கள் பெரும்பாலும் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முழுமை பெறாது வந்துள்ளன. திண்ணையின் முதல் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எனும் பிரிவில் மட்டும் பாவண்ணனின் ஒளிர்ந்த மறைந்த நிலா என்னும் கட்டுரை தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றைய பிரிவுகள் எந்தப் படைப்புகளும் இன்றிக் காணப்படுகின்றன.
Last Updated on Wednesday, 11 December 2019 10:43
Read more...
Saturday, 07 December 2019 09:54
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுருபன்முகக்கலை அறிவியல்கல்லூரி,கோவை -
ஆய்வு
இயற்கைகோடு இயைந்து வாழ்கின்ற நீலகிரி படகர் இன மக்களின் வாழ்வியல் வழக்காறுகள் அவர்தம் இயற்கைப்புரிதல், வாழ்வியல் விழுமியங்கள், பண்பாடு மற்றும் கலாச்சாரப் பரிமாண நிலை போன்றவற்றிற்கான சிறந்த ஆவணங்களாகும். பஞ்சபூதங்களையும், மரம், கல், ஞாயிறு, நிலவு, பிறை போன்ற பல்வேறு இயற்கைக்கூறுகளையும் வழிபடுகின்ற படகர்கள் காற்றினையும் வணங்குகின்றனர். காற்றினைக் “காயி” என்று அழைக்கும் இவர்கள் காற்று சார்ந்த பல வாழ்வியல் வழக்காறுகளைக் கட்டமைத்து அதனை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
குழந்தைவளர்ப்பு மீது அதீத அக்கறையுடையவர்களாக விளங்குகின்ற இம்மக்களின் மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் சிறப்பிடம் பெறுகின்றது. அதே நிலையில் கருப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் பேணுவதில் இவர்கள் கட்டமைத்துள்ள வழக்காறுகளுள் காற்றினையும் அதனால் உறும் பாதிப்புகளைக் கையாளும் விதமும் குறிப்பிடத்தகுந்ததாகும். காற்றினால் மனித உடலுறும் பாதிப்பையும், அதற்குரிய தற்காப்பு மற்றும் மருத்துவத்தையும் அடியொற்றியதாக இவ் ஆய்வுக் கட்டுரை விளங்குகின்றது.
பஞ்சபூதங்களில் வலிமையின் கூறாக காற்று கருதப்படுவதைப் புறநானூறு சுட்டுகிறது (புறம், பா. 2). உலகம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்குக் காற்று மிகவும் இன்றியமையானது. காற்று மனிதனின் உடலில், சூழலில் ஏற்படுத்தும் விளைவின் அடிப்படையில் படகர்கள் காற்றினைக் “காயி” (காற்று), “தொட்ட காயி” (பெரிய காற்று) என்று இருவகைப்படுத்துகின்றனர்.
Last Updated on Saturday, 07 December 2019 10:01
Read more...
பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63
1. நாகதோஷம்! - - சுமதி ரூபன் -
கலைந்து போன அவளின் கருங்கூந்தல் நீண்டு பரந்து அந்த அறைப் பரப்பை மூடிக்கொள்ள சாளரத்தினூடே ஊடுருவிப் புகுந்து கொண்ட மெல்லிய நீல நிலவொளி அவளின் நிர்வாண உடல்பரப்பில் பட்டுத் தெறித்து விட்டத்தில் ஏற்ற இறக்கங்களை காட்டி நின்றது. அவள் மோகித்திருந்தாள்.. அண்டத்தின் அனைத்தும் அவளின் காலடியில் என்பதாய் மமதையில் மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை ரசித்தபடியே அவள் கலைந்தாள். நாகம் அசைந்தது.. மென் கறுப்புத் தோலைக் களைந்து விட்ட நாகம் தனது நுண்மையான கரும் நாக்கால் அவளின் பாதம் தொடங்கித் தலைவரை மெல்ல நகர்ந்து, முகர்ந்து, புகுந்து, நழுவ சூரியனைத் தொட்டுவந்தவள் போல் உடல்த் தணதணப்பில் அவள் சிணுங்கினாள்.. நாகத்திற்கு கோபம் தலைக்கேறியது.. என்றோ தான் ஏங்க வைக்கப்பட்டு ஏமாந்தது போல் ஆவேசம் வந்தது.. நாகம் வேகம் கொண்டு அவள் உடலை சுற்றி ஆவெசமாய் இறுக்க எலும்புகள் மெல்ல நொறுங்கத் தொடங்கின.. அவள் உச்சத்தின் வேதனையில் வாய்விட்டுக் கதறினாள்.. நாகத்தின் பார்வையில் குரோதம் தெரிந்தது.. மூடிக்கிடந்த அவள் கண்களை தனது நாக்கால் எச்சில் படுத்தி அவள் கண்விழிகளுக்குள் தனது பார்வையைச் செலுத்தியது.. அவள் வார்த்தைகளற்று வதைபட்டாள்.. அவள் வளைவுகளை அழுத்தி தனக்கான மோகத்தில் திளைத்து எழுந்தது நாகம்.. அவள் மூச்சுக்காற்று மெல்ல மெல்ல அடங்க களைப்புற்ற நாகம் விலகி அவள் கூந்தலுக்குள் நுழைந்து புரண்டு தனது தோலுக்குள் புகுந்து நகர்ந்து கொண்டது.. வரண்டு போய் அசைவின்றிக் கிடந்தாள் அவள். கண் விழித்தாள்.. தெளிவற்று குத்தி நின்றது பார்வை.. பல வருட கேள்விகளுக்கு விடைதேடிக்களைத்து இன்று பதில் கிடைப்பதாய் நம்பி மீண்டும் கலைந்து போனாள். மனதுக்குள் குரோதம் வளர்ந்தது.. ஆண்மையின் மிதப்பில் நாகம் அசைந்தது. விம்மிப்புடைந்து நிற்கும் தனது மார்புகளிளைத் தடவிக்கொடுத்து அதிசயித்தாள்.
நீள்சதுர கண்ணாடி பிம்பத்தை தனக்குள் வாங்கிப் பிரதிபலிக்க, இருப்பதால் இடையளவிலிருந்து தலைமட்டும் கண்ணாடிக்குள் அடங்கிப்போய், இடுப்பில் பிதுங்கும் தசை.. பதிவாய் தொங்கும் பருத்த மார்பகங்கள்.. உச்சியில் ஊடுருவும் வெள்ளை மயிர்;கள்.. கண்கள் உடலில் அர்த்தமின்றி மேய்ந்து வலம்வர குளிர்காற்று ஊடுருவி தலைமயிரைக் கலைத்துக் கன்னத்தில் போட்டது..
Last Updated on Thursday, 12 December 2019 10:31
Read more...
Saturday, 07 December 2019 09:29
- புதியவன் -
ஆய்வு
தொல்காப்பியத்தின் தொன்மையை அறிய முயல்வதிலிருந்து தொல்காப்பியர் யார் என்ற விடையத்தை தேட இக்கட்டுரையில் முயல்கிறோம். தொன்மை என்றதும் கி.பி ஒன்றா அல்லது கி.மு.இருபத்தொன்றா என்ற ஆய்விற்குள் செல்லவில்லை. மாறாக இலக்கிய அறிவியலில் விளக்கப்பட்டுள்ள மனித வரலாற்று படிநிலை எட்டினுள் தொல்காப்பியர் எந்தச் சமூகக் கட்டத்தில் உருவெடுத்த சிந்தனையாளர் என்பதை அறிய முயல்கிறோம்.
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்) 2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்) 3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்) 4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்) 5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்) 6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்) 7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் (தந்தை அதிகார சமூகம்) 8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)
வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் என்ற ஆறாம் கட்டச் சமூகத்தின் முதிர்ச்சியில் வாழ்ந்த சார்லஸ் டார்வின் உயிரினங்களின் பரிணாமக் கொள்கையை அறிவியல் பூர்வமாக விளக்கியவர். குரங்கு இனங்களிலிருந்து மனித இனம் உயிரியல் பரிணாமக் கொள்கை அடிப்படையில் எப்படி படிமலர்ந்தது என்பதை அவரது ஆய்வு விளக்குகின்றது. தொல்காப்பியரோ அறிவின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்த்துகிறார்.
Last Updated on Saturday, 07 December 2019 09:50
Read more...
Friday, 06 December 2019 08:31
- கு. பூபதி, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, கற்பகம் உயார்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21-
ஆய்வு
காலந்தோறும் மக்கள் பயன்படுத்தி வந்த பொருட்கள் அதன் தேவை மற்றும் தனித்தன்மை கருதி அந்தந்த சூழலுக்கு ஏற்ப தனி வடிவமோ, பொது அமைப்பில் மாறுதலோ கொள்கின்றன. அப்புழங்கு பொருட்கள்வழி மேற்கொள்ளப்படும் ஆய்வு புழங்கு பொருள் அல்லது பருப்பொருள் பண்பாய்வு என அறிஞர்களால் வகைப்படுத்தப்படுகிறது. வாய்மொழி வழக்காறுகள், ஏட்டுச்சுவடிகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள் போல புழங்கு பொருட்களும் அந்தந்த நில மக்களின் பண்பாட்டுச் சூழல் செய்திகளை காலங்களின் ஊடாகக் கடத்தும் திறனுடையவை. குறுந்தொகைப் பாடல்களில் காணக்கிடைக்கும் புழங்கு பொருட்களையும், அதன்வழி பண்பாட்டுச் சூழலையும் இக்கட்டுரை ஆராய்கிறது.
பயன்பாடு: புழங்கு பொருட்களை அவற்றின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டுக்களம் சார்ந்து, தொழில்சார் கருவிகள், வேட்டைக் கருவிகள், வேளாண்கருவிகள், அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் எனப் பாகுபடுத்தலாம்.பெரும்பாலான அறிஞர்கள் புழங்கு பொருட் பயன்பாட்டை கலை (Art) என்றும் கைவினை (Craft) என்றும் இரு உட்பிரிவுகளாகக் காண்கின்றனர் என மானிடவியலாளர் ஹென்றி கிளாசி குறிப்பிடுகிறார். பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானவை என்று கொள்ள முடியாது. அவை மற்ற பயன்பாடுகளிலிருந்து நாம் வேறுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கும் அப்பண்பாட்டை காலங்கடந்து நிலைநிறுத்துவதற்கும் காரணிகளாக அமையலாம்.
Last Updated on Friday, 06 December 2019 08:39
Read more...
Wednesday, 11 December 2019 10:17
- மார்கரெட் லாரன்சு (கனடா) | தமிழில்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் -
'பதிவுகளில்' அன்று
பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஆகஸ்ட் 2003 இதழ் 44 -
நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருப்பீர்கள் என்று எணக்குத் தெரியாது. நாம் சந்திக்க மாட்டோம். உங்கள் வயது எனக்குத் தெரியாது. என் வயதினராக இருப்பீர்களென நினைக்கிறேன். எனக்கு நாற்பத்தோரு வயதாகிறது. உங்களுக்கு எவ்வளவு குழந்தைகளிருக்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு பிள்ளைகளிருக்கிறார்கள். என் மகளுக்கு பதினைந்து வயதாகிறது.என் மகனுக்கு பன்னிரண்டு வயசாகிறது. உங்களுக்கும் பன்னிரண்டு வயதில் ஒரு மகனிருக்கிறான்.
என் மகன் கானாவில் பிறந்தான். அப்போது மருத்துவர் அருகிலில்லை. நான் நலமாக இருந்தாலும் டாக்டருக்கு அதிக வேலைகள் இருந்ததாலும், ஒரு மருத்துவச்சி தான் என்னை கவனித்துக் கொண்டாள். அவள் ஒரு கானிய குடும்பத் தலைவி. நான்கு குழந்தைகளுக்குத் தாய். எனவே எந்த மருத்துவருக்கும் அவருக்குத் தெரிந்த அளவு தெரிந்திருக்க நியாயமில்லை. நேரம் செல்லச் செல்ல அவர் எனக்கு உறுதியளித்தார். "இது ஒரு ண் குழந்தையாகத் தானிருக்கும். ஒரு ஆணால் தான் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியும்". நான் வலியால் துடித்த போது அந்த பெண்மணி நான் பிடித்துக் கொள்ள தனது கைகளை நீட்டினாள். அந்தக் கைகள் மட்டுமே வாழ்வின் கடைசி நம்பிக்கைச் சின்னங்களாக நினைத்து நான் பற்றிக் கொண்டேன். "இதோ விரைவில் முடிந்து விடும். நான் உன்னிடம் பொய் செல்வேனா. இதோ பார். எனக்குத் தெரியும். நானும் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறேன்," என்று கூறினார்.
Last Updated on Wednesday, 11 December 2019 10:33
Read more...
பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் ஜூலை 2002 இதழ் 31
1 தவிப்பு - - டானியல் ஜீவா - என்னெண்டு தெரியல நாரி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற மசிலி இறிகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ... கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சுட்டு வந்தனான்.நல்ல வெக்கையாய் இருக்குது. குளிச்சிட்டு வந்தாலும் உடம்பு பிசு பிசுத்தபடி. அப்பாட்மென்காரி கீற்றரை நல்லாக் கூட்டிப் போட்டாள் போல இருக்கு. அவ கூட்டினாப் போல என்ன எங்கட கீற்றரால குறைச்சால் ரியாய் போய்விடும் எண்டு நினைச்சுத்தான் குளிச்சிற்று வெளியில வரக்கில கீற்றரை நல்லாக் குறைச்சுப் போட்டு வந்தனான். அப்படியிருந்தும், இப்புடி வெக்கையாய் இருக்கு.... உடம்பிலே வேற சேட்டு போட்டிருக்க வேண்டிய நிலை. மாமி எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருக்கும் அதனால் என்டில்ல, ஊரில இருக்கும்போது கூட அப்படித்தான் எந்த வெக்கையாய் இருந்தாலும் உடம்பில் இருக்கிற சேட்டை கழட்ட மாட்டேன். அது என்ர பரவனி புத்தியெண்டு அம்மா சொல்லுவ. இப்ப முப்பது வயதாகிட்டு, உடம் பெல்லாம் மசுக்குட்டி மயிர் படர்ந்து கிடக்கிறது போல. என் உடம்பு முழுவதும். அதுவும் கூச்சத்துக்கு காரணமாயிருக்கலாம். சீச்...சீ... அப்படியும் சொல்ல ஏலாது. நான் பிறப்பாலே கொஞ்சம் கூச்சப்பட்டவன் தான். ஒரு தாழ்வுச் சிக்கல் எண்டுகூட சொல்லலாம். என்ர மனசு தேவையில்லாமல் எதை எதை யோவெல்லாம் அலட்டிக்கொண்டு இஇருக்குது என்று என் மனம் சொல்லியது.
தொங்கப் போடப்பட்ட என் தலையை மேலே தூக்கிக் கொண்டு சோபாவில் இருந்த மாமியை நோக்கி என் கண்களின் பார்வையை நிலை நிறுத்தினேன். ஏதோ ஆழ்ந்த யோசினையிலிருந்த மாமி என்னை நோக்கி பார்வை வீச்சால் ஒரு தடவை உலாவவிட்டுவிட்டு, ”தம்பி ஏதும் குடியுமென்?” என்று கேட்டாள்.
”வேண்டாம் மாமி. காலையில எழும்பின கையோடு ஒரு தேத்தணீ போட்டுக் குடிச்சிட்டன். நேற்று ஸ்¡£ல் பக்கமாக வேலைக்கு அலைஞ்சதில கால் சாடையாய் நோகுது”.
Last Updated on Wednesday, 11 December 2019 10:07
Read more...
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் செப்டெம்பர் 2001 இதழ் 21 -
-ஒன்று-
பாற்கடலின் விளிம்பில் ரத்தச் சிவப்பு படர்ந்தது. சூரியன் மறையப்போகும் நேரம். அலைகளின் இரைச்சலை மீறிக் கொண்டு அசுரர்களின் இரைச்சல் வானில் மோதியது. ஒருபுறம் மார்பு பிளந்த மகாபலியின் அலறல். இன்னொருபுறம் நமுசியும் சம்பரனும் இதயத்தில் தைத்த வேல்களைப் பிடுங்கும்போது எழுப்பிய மரணக் கூச்சல். மற்றொரு புறத்தில் வேரற்ற மரம் போல விழுந்த அயோமுகனின் சத்தம். அச்சத்தத்தில் நெஞ்சம் துடித்தது. தன்னைச் சுற்றிலும் அசுரர்கள் அபயக் குரல் எழுப்பியபடி ஓடுவதைக் கண்டன ராகுவின் கண்கள். உடல் இரண்டு துண்டுகளாக அறுபட்ட நிலையில் முன்னால் வேகவேகமாக மாறிக் கொண்டிருந்த காட்சிகளைத் துயரத்துடன் நோக்கினான் அவன். கடலின் செந்நிறம் ஏறிக் கொண்டே இருந்தது. ரத்தம் கலந்த கடற்பரப்பில் மரணதேவதையின் முகம் தெரிந்தது. ஒரு பெரிய மிருகத்தின் முகம் போல இருந்தது அவள் முகம். அந்த வெறி. அந்தச் சிவப்பு. அவள் கோரைப் பற்கள். உயிரற்ற உடல்களை அள்ளி எடுக்க நீண்டன அவள் கைகள். அக்கை கடலையே துழாவிக் கரையைத் தொட்டது. யாரோ தாக்கியது போல உடல் அதிர்ந்தது. "ஐயோ" என்றான்.
விழிப்பு வந்துவிட்டது. பீதியில் இதயம் துடிக்கச் சுற்றியும் இருந்த கூடாரங்களைப் பார்த்தான் ராகு. உண்ணாநோன்பினால் சோர்ந்திருந்தாலும் மோகினியின் அங்க அழகுகளைச் சுவையோடு பேசிக் கொண்டிருக்கும் சக வீரர்களின் குரல்கள் கேட்டன. அனைவரும் கொல்லப்படுவதாக எப்படி நினைத்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. உடனே அந்தக் கனவின் காட்சி மீண்டும் விரிந்தது. மெல்ல எழுந்து கூடாரத்தைவிட்டு வெளியே வந்தான். வெயில் ஏறிய வானம் கண்களைக் கூசவைத்தது. அருகில் இரைச்சலிடும் அலைகளையே வெகுநேரம் பார்த்தான். அவனுக்குத் தன் மனத்தில் கவிந்திருக்கும் குழப்பம் பற்றிக் கவலை உண்டானது. "அபசகுனம்" என்று முணுமுணுத்துக் கொண்டான். எழுந்து கைகளை வானை நோக்கி உதறினான். அவசரமாகப் பணியாள் ஓடிவந்து அருகில் நின்றான். "துணைக்கு வரவேண்டுமா அரசே?" என்றான். ராகுவின் பார்வை அவன் தோள்களில் பட்டு மீண்டது. அவன் காட்டும் பணிவு நடிப்பா உண்மையா புரிந்துகொள்ள முயற்சி செய்து தோற்றான். புன்னகையோடு தலையசைத்தபடி தொடர்ந்து தனியாக நடக்கத் தொடங்கினான்.
Last Updated on Wednesday, 11 December 2019 02:50
Read more...

1. ஆறாத்துயர்
ஒரு நம்பிக்கையில் வெளியே வருபவளிடம் ’இருட்டிய பின் ஏன் வருகிறாய்’ என்ற கேள்வி பகலிலும் அவள் தனது நம்பிக்கையைப் பறிகொடுக்கும்படி செய்துவிடுகிறது.
பயத்தில் பதுங்கிக்கொள்ள குகை அல்லது பதுங்குகுழி தார்ச்சாலையில் இருப்பதில்லை.
இருந்தாலும் அங்கிருந்து கைபேசியில் யாரிடமேனும் உதவிகோர ‘சிக்னல் கிடைக்காது.
’பலாத்காரம் தவிர்க்கப்படமுடியாதபோது படுத்து அனுபவி’ என்று ‘quotable quote’ பகன்றவனை நெருப்பில் புரட்டியெடுக்கவேண்டும்.
Last Updated on Wednesday, 11 December 2019 02:57
Read more...
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் பெப்ருவரி 2003 இதழ் 38
கா காகா கா.. என்ற சத்தம் அவர் வீட்டின் பின் பக்கமிருந்து வந்திருக்க வேண்டும். கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டார். மணி காலை 5.30 என்றது. தன்னிடமிருந்த மாற்றுத் திறப்பின் மூலம் கதவினைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். கா.. கா என்ற குரல் இந்தமுறை அதிக வன்மையுடன் அவரைத் தொட்டது. பின்புறம் சென்று பார்க்கலாமா? என்று நினைத்து மீண்டும் அந்த குரல் வந்தால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்தார். உறங்கிக் கிடந்த வீட்டை எழுப்ப நினைத்து ஸ்விட்சைத் தட்டினார். வெளிச்சம் நிரம்பி வழிந்தது. ஜன்னல் கண்ணாடிகளுக்கு வெளியே இருந்த பிவிசி திரைகளை மின்சாரப் பொத்தானை அழுத்தி சுருட்டினார். உள்ளே இருந்த மெல்லிய பிரெஞ்சுத் திரைச் சீலைகளும் நீக்கபட்டன. வெளியே ஆரவாரமற்ற ஐரோப்பிய வைகறை. தலையில் ஒளியைச் சுற்றிய வண்ணம் மெல்லிய உறுமலோடு குப்பைக்கூடைகளை ஒரு பகாசூரனின் பசி ஆர்வத்தோடு வயிற்றில் இட்டுக் கொள்ளும் குப்பையள்ளும் லாரி. சிறிது நேரம் அந்தக் காட்சியில் லயிப்பற்றுக் கவனம் செலுத்த, மறுபடியும் பின்பக்கமிருந்து கா கா என்ற அந்தக் குரல். இந்தியாவில் மட்டுமே அவர் கேட்டிருக்கின்ற ஓசை. குரலா? ஓசையா? எப்படி இனம் பிரிப்பது என்ற கேள்வி தேவையில்லாமல் எழுந்தது. சற்று கவனமாகக் கேட்டார். ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு காகத்தின் குரல் தான். இங்கே எப்படி?
இந்தியாவிற்குப் போகும் போதெல்லாம் அந்த குரலின் அல்லது ஓசையின் சுகத்திற்காகவே வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் புழக்கடைப் பக்கம் சென்று படுப்பது வழக்கம். அதிகாலையில் எங்கேயோ ஒரு சேவல் "கொக்கரிக்கோ " எனத் தொண்டை கமறலோடு ஆரம்பித்துவைக்க அது ஊரெல்லாம் எதிரொலித்துவிட்டு இவரது சகோதரர் வீட்டு கோழிக்கூண்டில் வந்து முடியும். இந்த நிகழ்வுக்காகவே காத்திருந்தது போல, ஒரு காகம் கா.. கா என ஆரம்பித்துக் கொடுக்க, அதனைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்திற்கு கா.. கா என்ற கச்சேரி. " இந்தப் பாழாப்போன காக்கைகள், தூக்கத்தைக் கெடுக்குதே! உள்ளே வந்து படுக்கக் கூடாதா? என்று அங்கலாய்க்கும் அவரது அம்மாவிற்குத் தெரியுமா? இந்தியாவிற்கு அவரை இழுத்துவருகின்ற விஷயங்களில் இதுபோன்ற ஓசைகளும் உள்ளடக்கம் என்று.
இந்தியாவில் இருக்கும் வரை, அமாவாசை கிருத்திகை எனக் கடவுள்களுக்கோ, முன்னோர்களுக்கோ வீட்டில் படைக்கும் போதெல்லாம் காக்கைக்குச் சாதம் வைப்பது இவராகத்தான் இருக்கும். பூவரச இலையைக் கிள்ளி ஒரு கவளப் படையலை ஏந்தி பின்புறமிருக்கும் கிணற்றடிச் சுவரில் கையிலிருக்கும் குவளைநீரைத் தெளித்து, சோற்றுக் கவளத்தை வைத்துவிட்டுக் காகத்தைத் தேடி அது ஒன்று பத்தாகும் ரசவாதத்தை மெய்மறந்து கண்களை விரியவிட்டிருக்கிறார். கடைசியாக அவரது அப்பா இறந்தபோது,காரியப் பிண்டத்தைக் குளத்தங்கரையில் வைத்துவிட்டு துக்கத்தை மறந்து, காகங்களின் ஆள் சேர்ப்பில் சந்தோஷம் கண்டது ஞாபகத்திற்கு வந்து போனது..
Last Updated on Wednesday, 11 December 2019 02:51
Read more...
Wednesday, 11 December 2019 02:15
-ஷோவென் ழான்-ரொபெர்| தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா
'பதிவுகளில்' அன்று
'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். -- ஆசிரியர் -
பதிவுகள் மே 2003 இதழ் 4
-1-
தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் எல்ஸாவுக்கு வயது 5. சுருள் சுருளாக, பழுப்பு நிறத்தில் நீண்டமுடி. படிகம் போன்ற தெளிவான விழிகள். மண்ணில் விளையாடியதால் அழுக்கடைந்த கால்கள். எல்ஸாவின் தோட்டம் உயரமான மரங்களும், எண்ணிக்கையற்ற பூவகைகளும் நிறைந்த தோட்டம். எல்ஸாவின் சிறியக் கண்களுக்குள் அடங்காத மிகப்பெரியத் தோட்டம். ஆனால் அவள் கற்பனையில் விரிந்தக் கதைகளுக்கும், துடுக்கான விளையாட்டிற்கும், அவ்விளையாட்டுக்கெனவே கற்பனையில் உதிக்கின்ற அவளது தோழர்களுக்கும் ஏற்றத் தோட்டம்.
மரங்கள் தோறும் தாவிச் செல்லும் சித்திரக் குள்ளன். அழகான மலர்களிலிருந்து சுகந்தத்தை மட்டுமே சேகரிக்கின்ற குட்டி தேவதைகள். வழக்கம்போல வசிய மருந்துகக்காக கள்ளிச் செடிகளையும், அழுகியப் பழங்களையும் தேடுகின்ற சூனியக்காரிகள் என அவளது கற்பனைக் கேற்றவாறு தோட்டத்தின் பங்களிப்பு மாறும். மணல் நிரப்பப்பட்டத் தொட்டியில், அவள் கட்டுகின்ற மணற்கோட்டைகளில் சூரியனின் கதிர்களும், மேகத்தின் நிழல்களும் வாசம் செய்யும். பூமியில் காதினை வைத்து மண்ணில் வாழும் புழுக்களும் வண்டுகளும் இடும் இரைச்சலைக் கேட்டு, அவைகளை ஆச்சரியப் படுத்துவாள். சிறிது நேரம் அவள் ஆடுகின்ற ஊஞ்சலின் மூலம் உயரே பறக்கின்ற 'மேசான்ழ்' குருவியை பிடித்திட முயல்வாள். பின்னர் இறங்கி 'ராஸ்பெரி' பழங்களைப் பறித்து 'மாக்பை' குருவியோடு பங்குபோட்டுக் கொள்வாள். 'மாக்பை' குருவி அமர்ந்திருக்கும் சுவர்தான் வீதியிலிருந்தும், வெளி மனிதர்களிடமிருந்தும் தோட்டத்தைப் பாதுகாக்கிறது. தோட்டத்து அமைதியை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது.
Last Updated on Wednesday, 11 December 2019 02:23
Read more...
- பதிவுகள் இணைய இதழ் புகலிடத் தமிழ் இலக்கிய இதழ்களில் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளை இதுவரை பிரசுரித்துள்ளது. பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. இப்பகுதியில் தொடர்ந்து வெளியாகும் கவிதைகள் வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் கவிதைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் கவிஞர்கள். - பதிவுகள் -

பதிவுகள் ஆகஸ்ட் 2004 இதழ் 56 1. எங்கள் தேசம் இந்திய தேசம்!
(NCERTவெளியிட்டுள்ள 'ஜிந்த் தேஷ்கீ நிவாஜி' எனும் இந்திப் பாடலின் 'இசைபெயர்ப்பு' )
பல்லவி எங்கள் தேசம் இந்திய தேசம் வாழ்க வாழ்க வாழ்கவே! இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள் எல்லாரும் சகோதரர்கள்!
சரணங்கள் வேறு வேறு வண்ணப் பூக்கள் சேர்ந்த வாச மாலை நாங்கள்! வண்ணம் வேறு வேறென் றாலும் வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! (எங்கள் தேசம்...
சிந்து கங்கை பிரம்ம புத்ரா கிருஷ்ணா காவேரி சென்று சேரும் கடலில் என்றும் நீரின் தன்மை ஒன்றுதான்! (எங்கள் தேசம்...
Last Updated on Tuesday, 10 December 2019 11:14
Read more...
-பதிவுகள் இணைய இதழ் புகலிடத் தமிழ் இலக்கிய இதழ்களில் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளை இதுவரை பிரசுரித்துள்ளது. பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. இப்பகுதியில் தொடர்ந்து வெளியாகும் கவிதைகள் வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டுயது அவசியம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் கவிதைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் கவிஞர்கள். - பதிவுகள் -
 1. பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63 அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்...
அன்புக் குழந்தைகளே! நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும் என்னிடமில்லை,
கவித்துவமற்ற மொழியூடு வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர
நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு எம்மிடம் எந்த மந்திரமுமில்லை
Last Updated on Tuesday, 10 December 2019 23:58
Read more...


இதுவரை அறிஞர் அ.ந.கந்தசாமியின் இரண்டு நூல்கள் அச்சு வடிவில் வெளியாகியுள்ளன. ஒன்று தமிழகத்தில் பாரி நிலைய வெளியீடாக வெளியான 'வெற்றியின் இரகசியங்கள்'. அடுத்தது தேசிய கலை இலக்கியப் பேரவையூடாக வெளியான 'மதமாற்றம்' நாடகம், தற்போது பதிவுகள்.காம் வெளியீடுகளாக அவரது கவிதைகள் தொகுப்பு மற்றும் 'மனக்கண்' நாவல் ஆகியவை வ.ந.கிரிதரனின் விரிவான முன்னுரைகளுடன் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. அவற்றை நூலகம் இணையத்தளத்தின் நூலக நிறுவனத்தின் ஆவணகம் வலைத்தளத்தின் 'எண்ணிம எழுத்தாவணங்கள்' பிரிவில் வாசிக்கலாம்.
நூலக நிறுவனத்தின் ஆவணகம் வலைத்தளத்தின் 'எண்ணிம எழுத்தாவணங்கள்' பிரிவு உண்மையில் மிகுந்த பயனுள்ள பிரிவு. மின்னூல்களை இன்றைய வடிவங்களாக அங்கீகரித்து உருவாக்கப்பட்ட பிரிவு. இதுவரை அச்சேறாத தம் படைப்புகளை எழுத்தாளர்கள் மின்னூல்களாக்கி ஆவணப்படுத்த வழியேற்படுத்தியுள்ளது. இதனை எழுத்தாளர்கள் முறையாக, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் ஆக்கங்களைத் தொகுத்து அவற்றைப் பிடிஃப் கோப்புகளாக்கி நூலகம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Monday, 09 December 2019 10:10
Read more...
Saturday, 07 December 2019 10:02
- குவிகம் இல்லம் -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Tuesday, 10 December 2019 10:46
- நூல் அறிமுகம் பகுதியில் உங்கள் நூல்கள், மின்னூல்கள் மற்றும் ஏனைய நூல்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தலாம். அறிமுகத்தை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
- பதிவுகள் -
மின்னூல்: காணாமல் போன தேசங்கள்! - நிர்மல் -

அன்பு வணக்கம், என் பெயர் நிர்மல், நான் உங்கள் இணைய தளத்தை இணையத்தில் தேடும் பொழுது கண்டடைந்தேன். மிக்க தரமான தகவல்களை சிரத்தையோடு தரும் தளமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். நான் கிண்டிலில் ஒரு புக் வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போன தேசங்கள் என்கிற தலைப்பிலான என் புத்தகத்தில் எப்படி தேசங்கள் அழிந்தன என்பதையும் , நில வளங்களை சரியாக பங்கீட்டு பல மொழி இனம் கொண்ட நாடுகள் சிறப்பாக வாழ்கின்றன என்பதையும் எட்டு நாடுகளின் வரலாற்றை எளிமையாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கு ஏற்றது போல எழுதியுள்ளேன். யுகோஸ்லாவியா சிதறியது, கொசோவாவில் நடந்த இன அழிப்பு பற்றி எழுதியுள்ளேன்.
Last Updated on Friday, 06 December 2019 09:22
Read more...
Friday, 06 December 2019 08:19
- செ.மகாலட்சுமி ( கோவை ) -
இலக்கியம்
காப்பியத் தலைவியின் பெயரையே இந்நுாலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ளார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவரை காப்பியத் தலைவியாக அமைத்தது சாத்தனாரின் சிறப்பாகும். கணிகை மகளை காப்பியத் தலைவியாக்கியதுடன் திறன் அவருடைய பெயரையே நூலுக்கு சூட்டுவது என்பது ஒரு புரட்சி. மனிதனின் வாழ்வியல் சிந்தனைகள் மணிமேகலையில் மிகுதியாக உள்ளன. அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை விளக்குவதே கட்டுரையாகும்.
மனிதனுடைய அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றில் பூர்த்தி செய்து வாழ வேண்டும். அதனை நல்ல நெறியில் பெற வேண்டும் என்பதை மணிமேகலை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல இத்தகைய மூன்றும் இல்லாதவர்களுக்கு அவர்களை கொடுத்த வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அதனைத்தான்,
“அறமெனப் படுவது யாதுயெனக் கேட்பின் மறவா திதுகேள் மண் உயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையும் அல்லது கண்டது இல்” (மணி 25 – 228-231)
என்ற வரிகளின் மூலம் கூறுகிறார். அறத்தின் இலக்கணத்தை வள்ளுவர் வரையறுத்ததைப் போல சாத்தனாரும் கூறியுள்ளது சிறப்புக்குரியதாகும் அதுமட்டுமல்லாது,
“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” (மணி 11 – 95-96)
என்ற வரிகளின் மூலம் உணவு கொடுத்தவர்கள் பிறருக்கும் உயிர் கொடுத்தவர்கள் என்று கூறுகிறார். இந்நுாலில் மணிமேகலை அட்சய பாத்திரம் கொண்டு உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated on Friday, 06 December 2019 08:28
Read more...
அமரர் அருளரை அவரது 'லங்காராணி' மூலம் மட்டுமே இதுவரை அறிந்திருந்தேன். ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர் என்றும் அறிந்திருந்தேன். அவரது நாவலான 'லங்கா ராணி' மூலம் அவர் சமதர்ம சமுதாயத்தை விரும்பும் ஒருவர் என்றும் எண்ணியிருந்தேன். இலங்கைத் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தைத் தீவிரமாக ஆதரிக்கும் ஒருவராகவும் எண்ணியிருந்தேன். அவரது மறைவு முகநூலில் அவர் பற்றிய பல்வகைப்பட்ட பலரது கருத்துகளையும் வெளிப்படுத்தியது. அதன்பின்னரே அவரது எழுத்துகள் பற்றி கவனத்தைத் திருப்பினேன். எழுத்தாளர் சரவணன் கோமதி நடராசா தனது முகநூற் பதிவொன்றில் அருளரை அவரது லங்கா ராணிக்காகப்பாராட்டிய அதே சமயம் அவர் பாவிக்கும் சாதிரீதியிலான சொல்லாடல்களைத் தனது “தலித்தின் குறிப்புகள்” கட்டுரையில் விமர்சித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் "இந்த விமர்சனங்களுக்கு அப்பால் அவர் ஈழப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பு மரியாதைக்குரியவை. அவர் எழுதிய லங்காராணி நாவல் இன்றும் ஒரு முக்கிய இலக்கியமாகவும், பதிவாகவும் போற்றப்படுகிறது. தோழருக்கு செவ்வணக்கங்கள்." என்றும் அஞ்சலி செலுத்தியிருந்தார். எழுத்தாளர் மைக்கல் (சதுக்கபூதம்) தனது முகநூற் பதிவொன்றில் அருளர் கோவியர்களோடும் ,ஒடுக்கப்பட்ட மனுஷர்களோடும தோளணைக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இவை போல் அருளரைப்பற்றிய பல்வகையான கருத்துகளை முகநூலில் காணமுடிந்தது.
அருளர் முகநூலிலும் இருப்பதாக அறிந்தேன். ரிச்சர்ட் அருட்பிரகாசம் (Richard Arudpragasam) என்னும் அடையாளத்தில் அவர் இருப்பதாகவும் அறிந்தேன். அவர் என் நட்பு வட்டத்தில் இல்லாததால் அவரது பதிவுகள் எவையும் என் கண்களில் தட்டுப்பட்டிருக்கவில்லை. அவரது பதிவுகளைப் பார்வையிட்டபோது அவரது இதுவரை நான் அறியாதிருந்த ஆளுமையினை, அவரது மறுபக்கத்தினை அறியும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒருவகையில் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது என்பேன். இதுவரை நான் என் மனத்தில் பதிவு செய்திருந்த அருளர் வேறு, முகநூலில் இயங்கிக்கொண்டிருந்த அருளர் வேறு என்பதை என்பதை உணர முடிந்தது.
Last Updated on Friday, 06 December 2019 01:30
Read more...
Friday, 06 December 2019 00:26
- முனைவர் ம.இராமச்சந்திரன், ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் -
நூல் அறிமுகம்
இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ , வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.
சங்கக் கால மக்களின் வாழ்வியலை நவீன மொழியோடு எடுத்துரைக்கும் நாவல். தமிழரின் தொன்மையான பண்பாடு சங்கக் காலப் பண்பாடு. இதனை எடுத்துக் கூறும் அகச் சான்று சங்க இலக்கியம். சங்கக் கால மக்கள் மனித வாழ்க்கையை இரண்டு பிரிவாகப் பிரித்துச் சிந்தித்துள்ளனர். ஆண் பெண் உறவைக் கூறுவது அக வாழ்க்கை என்றும் மன்னர்களின் போர் வீரம் பற்றிப் பேசுவது புற வாழ்க்கை என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த இலக்கியப் பதிவுகள் அக்கால மக்களின் எண்ண ஓட்டங்களை மன உணர்வுகளை வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. இத்தகைய பின்புலத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.
சங்கப் புலவர்கள் கபிலர், பரணர், ஒளவை இவர்கள், கடையெழு வள்ளல்களில் வேள்பாரி, நன்னன், அதியமான் போன்றோரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர்களின் நட்புக்குப் பாத்தியப்பட்டவர்களாக இருந்து வந்தனர். நன்னனின் நட்புக்குப் பரணரும் , பாரியின் நட்புக்குக் கபிலரும், அதியமானின் நட்புக்கு ஒளவையும் விளங்கியதை அவர்களின் பாடல் நமக்கு உணர்த்துகிறது.
நவிற மலையை ஆட்சி செய்தவன் நன்னன், பறம்பு மலையை ஆண்டவன் பாரி, குதிரை மலையை ஆண்டவன் அதியமான் இவர்கள் அனைவரும் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள், அதே வேளையில் அரசியல் போர் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினர். மக்களின் நலன் கருதி புலவர்களின் அன்பு பெற்றுச் செம்மையாக அரசியல் வாழ்வை முன்னெடுத்தவர்கள் இவர்கள். என்றாலும் இம்மன்னர்களின் வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டு பாணர்களின் வாழ்வியலோடு கதைக் கூறுவது இந்நாவல்.
பாடி ஆடி மக்களையும் மன்னர்களையும் மகிழ்விப்பவர்கள் பாணர்கள். இசை கூத்து கதை என்று வாழ்ந்து வரும் பாணர்கள் வறுமையில் உழன்று புகழிடம் தேடி பயணிக்கும் பயணத்தில் இந்நாவல் தொடங்குகிறது. வறுமையின் துன்பம் தாளாமல் கொடையாளரைத் தேடியதில் நன்னன் முதலிடம் பெறுகிறான்.
Last Updated on Friday, 06 December 2019 00:46
Read more...
அந்த தேவாலயத்தின் முன்னால் நிற்கின்றேன். சில மாதங்களுக்கு முன்னர்தான் ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி அங்கு பலர் தங்கள் இறுதிமூச்சை காணிக்கையாக்கினர். அவர்களின் பெயர்ப்பட்டியல் பதிவான காட்சிப்பலகையின் முன்னால் நின்று மௌனமாக பிரார்த்தித்தேன். பிரார்த்தனையின்போது அமைதி அவசியம் என்று சிறுவயதில் எனது அம்மாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லித்தந்திருக்கிறார்கள். எங்கள் வீட்டில் நவராத்திரி , கந்தசஷ்டி விரத காலங்களில் பிரார்த்தனை வழிபாடு நடக்கும்போது அதற்கு இடையூறு தரும்வகையில் சத்தம் போடக்கூடாது, குழப்படி செய்யக்கூடாது என்று அம்மாவும் பாட்டியும் எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்குப்பயந்து அமைதியாக இருப்போம். வெள்ளிக்கிழமைகளிலும் திருவிழாக்காலங்களிலும் கோயில்களுக்கு செல்லும்போதும், அங்கே அமைதியாக இருக்கவேண்டும் என்றுதான் புத்தி சொல்லி அழைத்துப்போவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் அம்மா, எங்கள் ஊரில் சிலாபம் செல்லும் பாதையில் தழுபொத்தை என்ற இடத்தில் வரும் அந்தோனியார் கோயிலுக்கு அழைத்துச்செல்வார்கள். அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கும்போது, அம்மா கையோடு எடுத்துவரும் தேங்காய் எண்ணெய் போத்திலை என்னிடத்தில் தந்து அங்குள்ள தீபவிளக்கிற்கு எண்ணெய் வார்க்குமாறு சொல்வார்கள்.
அந்தோனியார் கோயில் மிகவும் அமைதியாக இருக்கும். வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அங்கு செல்வோம். கோயில்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்வோம். ஊரின் புறநகரத்திலிருக்கும் பௌத்த விகாரைக்கு வெசாக், பொசன் பண்டிகை காலங்களில் செல்வோம். எனினும் அங்கிருந்த பள்ளிவாசல்களுக்கு செல்லும் பழக்கம் இருந்ததில்லை. ஆயினும், அங்கிருந்த அல்கிலால் மகா வித்தியாலயத்தில் மேல் வகுப்பு படிக்கும்போது, அவர்களின் பிரார்த்தனைகளை கேட்பதுண்டு. எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களில் அநேகர் இஸ்லாமியர். மூவினத்தவர்களும் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக எங்கள் ஊர் விளங்கியமையால், மூவினத்து நண்பர்களையும் சம்பாதித்திருக்கின்றேன்.
Last Updated on Thursday, 12 December 2019 11:13
Read more...
 ஜேர்ஸி கொஸின்ஸ்கியைத் தமிழ் இலக்கிய உலகுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய கட்டுரை சுபமங்களா இதழில் வெளியான Being There கட்டுரை. அது அவரது புகழ்பெற்ற நாவல். அளவில் சிறியதானாலும் காரம் மிக்க நாவல். திரைப்படமாகவும் வெளியானது. விம்ப ஆராதனை மிக்க தற்காலச்சமுதாயத்தை விமர்சிக்கும் நாவல். அக்கட்டுரையை எழுதியவர் வ.ந.கிரிதரனாகிய நானே.
ஜேர்ஸி கொஸின்ஸ்கி போலந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபுகுந்து , ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கி , ஆங்கில இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்.
இவரது 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) நாவல் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தில்; முக்கிய படைப்பாகக் கருதப்படும் படைப்பு. 1965இல் வெளியான இந்நாவல் இதுவரை முப்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகயுத்தக் காலத்து மானுட உரிமை மீறல்கள் வாசிப்பவர்தம் இதயங்கள் உறையும் வகையில் சில இடங்களில் மிகவும் குரூரமாக விபரிக்கப்பட்டுள்ளதால் வாசகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யூதச்சிறிவனொருவனை அவனது பெற்றோர் அவனாவது நாசிகளிடமிருந்து தப்பிப்பிழைக்கட்டும் என்னும் எண்ணத்துடன் மனிதரொருவனுடன் அனுப்பி வைக்கின்றனர். இவ்விதம் அனுப்பப்பட்ட அச்சிறுவன் யுத்தச்சூழல் நிலவிய காலகட்டத்தில் கிழக்கைரோப்பிய நாடுகளெங்கும் தப்பிப் பிழைப்பதற்காக அலைந்து திரிகின்றான். பல்வேறு வகைப்பட்ட அனுபவங்களுக்குள்ளாகின்றான். அவற்ற விபரிப்பதே 'நிறமூட்டப்பெற்ற பறவை' நாவல்.
பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுடன் இந்நாவல் பற்றி உரையாடியபோது, அந்நாவலால் ஈர்க்கப்பட்ட அவர் அந்நாவலைத் தமிழில் ஸ்நேகா பதிப்பகம் மூலம் வெளியிட விரும்புவதாகக் கூறினார். நாவலிருந்தால் அனுப்பி உதவுமாறும் கூறினார். நானும் அந்நாவலைபெற்று பாலாஜிக்கு அனுப்பினேன். இது பற்றி நண்பர் பாலாஜி என்னுடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் வருமாறு:
Last Updated on Wednesday, 04 December 2019 02:29
Read more...
Tuesday, 03 December 2019 07:42
- வ.ந.கி
அரசியல்
எழுத்தாளரும், சமூக அரசிய செயற்பாட்டாளருமான அருளர் (அருட்பிரகாசம்) மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் கருணாகரனின் பதிவொன்றின் மூலம் அறிந்துகொண்டேன். அருளர் இலங்கைத் தமிழர்களின் விடுதலை அமைப்புகளிலொன்றான ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர். அத்துடன் அவர் ஓர் எழுத்தாளரும் கூட.
அவர் எழுதிய 'லங்கா ராணி' நாவலானது எழுபதுகளின் இறுதியில் , இலங்கைத் தமிழர்கள் ஆயுதரீதியிலான போராட்டத்தினை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தம் போராட்டம் பற்றிய புரிதலை, அறிவினை வளர்த்துக் கொள்வதற்காக இரகசியமாக வாசித்த நாவல். 77 இனக்கலவரத்தைத் தொடர்ந்து தெற்கிலிருந்து அகதிகளாக அக்கப்பலில் இலங்கைத் தமிழர்கள் வடக்கு நோக்கித்திரும்பினார்கள். சுமார் 1200 தமிழர்களைக் காவிக்கொண்டு பயணித்தது 'லங்கா ராணி'. அந்நாவலின் பல்வகைப் பயணிகளினூடு, விடுதலைப்போராட்டத்தை அணுகிய நாவல். இந்நாவலை வெளியிட்டது ஈரோஸ் அமைப்பு.
'லங்கா ராணி' நாவலுக்கு முக்கியமானதொரு பெருமை உண்டு. அது: இலங்கைத்தமிழரின் ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டத்தில் , அப்போராட்டம் பற்றி முதலில் வெளியான நாவல் இதுவேயென்றே கருதுகின்றேன். . இந்த ஒரு நாவல் மட்டும் போதும் அருளரை வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கு.
Last Updated on Tuesday, 03 December 2019 07:48
Read more...
 எழுத்தாளர் ஜெயகாந்தன் என் வாழ்க்கையில் என் பால்ய காலத்திலிருந்து இன்றுவரை என்னை மிகவும் பாதித்த ,கவர்ந்த, பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். உண்மையில் நான் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே இவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அப்பா அப்பொழுதெல்லாம் ஆனந்த விகடனில் வெளியான ஜெயகாந்தனின் 'கோகிலா என்ன செய்து விட்டாள்?' என்னும் குறுநாவலைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பார். அப்பொழுதிலுருந்தே ஜெயகாந்தனைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அதன்பின் நான் வாசிக்கத்தொடங்கிய குறுகிய காலத்திலேயே நிறைய வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஜெயகாந்தனின் விகடனில் வெளியான முத்திரைச் சிறுகதைகளிலொன்றான 'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது' தொடக்கம், 'தினமணிக்கதிர்ர்' சஞ்சிகையில் வெளியான ஜெயகாந்தனின் பல சிறுகதைகள் என அவரது கதைகளை அதிகம் வாசித்திருக்கின்றேன். 'தினமணிக்கதிர்' சஞ்சிகையில் ஜெயகாந்தனின் சிறுகதைத்தொகுப்பபொன்றிலிருந்து சிறுகதைகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருந்தார்கள். 'ஒரு பிடி சோறு', 'ராசா வந்திட்டாரு', 'பிணக்கு', 'டிரெடில்' என்று சிறுகதைகள் பல வெளியாகின. தொடர்ந்து அவரது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியானது. 'ரிஷி மூலம்' குறுநாவலும் , தொடராக கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியானது. ''அக்காலகட்டத்தில்தான் விகடனில் அவரது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' ஆகிய நாவல்கள் தொடராக வெளியாகின. ராணிமுத்து பிரசுரங்களாக அவரது கைவிலங்கு குறுநாவல் 'காவல் தெய்வம்' என்னும் பெயரில் வெளியானது. அதனுடன் சேர்ந்து 'கருணையினால் அல்ல' குறுநாவலுமிருந்தது. தொடர்ந்து 'வாழ்க்கை அழைக்கிறது' நாவலும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியானது.
இவை தவிர நான் வாசிக்கத்தொடங்குவதற்கு முன்னர் வெளியான 'யாருக்காக அழுதான்?', 'உன்னைப்போல் ஒருவன்' ஆகியவற்றைப் பின்னர் தேடியெடுத்து வாசித்திருக்கின்றேன்.
Last Updated on Sunday, 01 December 2019 21:38
Read more...
 ஹைதராபாத்தில் கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டி பயணித்த 'ஸ்கூட்ட'ரின் 'டய'ரொன்றினைப் 'பங்ச'ராக்கி, , அவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்த செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவிலேயே கொலையாளிகள் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். பிரியங்கா ரெட்டி இறப்பதற்கு முன்னர் தனது சகோதரியை அழைத்துள்ளார். தனக்குப் பயமாகவுள்ளதாகவும், தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும்படியும் வேண்டியுள்ளார். நிலைமையின் தீவிரத்தைச் சகோதரி உணர்ந்திருக்கவில்லை. பிரியங்கா ரெட்டியும் சகோதரியை அழைத்ததற்குப் பதில் காவல்துறையினைரை அழைத்திருந்தால் ஒருவேளை தப்பியிருக்கக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களைப பெண்கள் தவிர்க்க வேண்டும். இரவுகளில் தனிமையாக நேரங்கெட்ட நேரங்களில் 'அண்டர்கிரவுண்ட்' வாகனத்தரிப்பிடங்களில் வாகனத்தை நிறுத்தச் செல்லல், தனிமையாகத் தொலைதூரத்துக்குப் பயணித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். செல்லும் வழியில் ஏதாவது வாகனத்துக்கு நடந்து விட்டால் , நிராதரவான நிலையில் , தவிக்கும் நிலை ஏற்படும் சாத்தியமிருப்பதால் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.
'டொரண்டோ' நகரில் இளம் பெண் வைத்தியரொருவர் தான் வசிக்கும் 'கொண்டோ'வின் 'அண்டர்கிறவுண்ட்' வாகனத்தரிப்பிடத்துக்கு நள்ளிரவில் தனது வாகனத்தைக் கொண்டு சென்றபோது அங்கிருந்த வீதி மனிதனிருவனால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது நினைவுக்கு வருகின்றது.
Last Updated on Sunday, 01 December 2019 12:48
Read more...
கோகிலம் சுப்பையாவை எழுத்தாளர் நந்தினி சேவியர் முகநூலில் நினைவுபடுத்தியிருந்தார். வீரகேசரி பிரசுரமாக வெளியான இவரது 'தூரத்துப்பச்சை' மலையக இலக்கியத்துக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த, சேர்க்கும் முக்கியமானதொரு படைப்பு. நாவலில் வரும் வள்ளி என்னும் பாத்திரம் மறக்க முடியாத பாத்திரம். தகழியின் தோட்டியின் மகனை வாசித்தபொழுது ஏற்பட்ட உணர்வு எனக்கு இந்நாவலை வாசிக்கையிலும் ஏற்பட்டது. இரு நாவல்களுமே மானுட வாழ்வின் குழந்தையிலிருந்து முதுமை வரையிலான போராட்டத்தை, சமூக, அரசியற் சூழல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவுகளை வெளிப்படுத்துவதாக அமைந்த நாவல்கள். மீண்டும் அவரது 'தூரத்துப் பச்சை' நாவலினைப் வாசிக்க வேண்டுமென்ற உணர்வினை நந்தினி சேவியரின் நினைவூட்டல் ஏற்படுத்திவிட்டது.
நந்தினி சேவியரின் பதிவில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் 'தூரத்துப்பச்சை' (வீரகேசரி பிரசுரம்) அட்டையினைப் பகிர்ந்திருந்தார்.அதனை நன்றியுடன் இங்கு பகிர்கின்றேன்.
Last Updated on Sunday, 01 December 2019 12:39
Read more...
Sunday, 01 December 2019 08:25
- முனைவர் செ.துரைமுருகன் , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு -
ஆய்வு
தமிழகத்தின் மேற்கே,மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைமாவட்டம் நீலகிரியாகும். இம்மாவட்டம் பல்வேறு தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அவற்றுள் முதன்மையானது யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள காப்பகமும் அவை உள்ளடங்கிய உயிர்க்கோள மண்டலமும் நீலகிரியாகும். தவிரவும் இந்தியாவெங்கும் இனங்காணப்பட்ட அருகிவரும் தொன்மையான 75 பழங்குடி குழுக்களில் ஆறுவகையான தொல் பழங்குடிகளின் ஒருமித்த வசிப்பிடமாகவும், பழங்குடிகள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுமக்கள் வாழும் பகுதியாகவும்,15 க்கும் மேற்பட்டதிராவிட மொழிகள் பேசப்படும் திராவிட மொழிகளின் நுண்ணுலமாகவும், சமூகவியல் , மானுடவியல், மொழியியல்,புவியியல்,சூழலியல் முதலான பல்துறை சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வுக்களங்களின் ஆவணப் பெட்டகமாகவும் நீலகிரி விளங்கிவருகிறது.
உயிர்சூழல் மண்டலம் பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பு இனங்கண்டு வருகிறது . அவ்வாறு யுனெஸ்கோ அமைப்பால் 1986 இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகமும் நீலகிரியாகும். இங்கு இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள் ,ஈரப்பதம் மிகுந்த பசுமை மாறாக் காடுகள் , சோலை புல்வெளிகள் ,சவானா புல்வெளி காடுகள் முதலானவை இங்குள்ளன.அவற்றுள் உலகில் உள்ள 3238 பூக்கும் இனத்தாவரங்களுள் சுமார் 135 இனங்களும் தவிரவும் அரியவகை பூச்சியுண்ணும் தாவரமான, டொசீ இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்குதான் உள்ளது.
Last Updated on Friday, 06 December 2019 08:41
Read more...
Sunday, 01 December 2019 08:05
- கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் -
அரசியல்

30.11.2019
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (29.11.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை
இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த அரசு ராஜினாமா செய்த பின்னணியில் இவரது சகோதரர் மகிந்திர ராஜபக்சே பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு புதிய அமைச்சரவையும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியின் போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் அச்சம் கலந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சே அரசின் அதிகார வர்க்க, மக்கள் விரோதப் போக்கின் காரணமாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்து புதிய கூட்டணி அரசு ஏற்பட்டது. ஏற்பட்ட புதிய அரசு மக்களுக்கு அளித்த குறிப்பாக, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதுடன், இவ்வாட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.
Last Updated on Friday, 06 December 2019 08:40
Read more...
Friday, 29 November 2019 11:04
- குவிகம் இல்லம் -
நிகழ்வுகள்

KUVIKAM ILLAM <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Last Updated on Tuesday, 10 December 2019 10:45
Friday, 29 November 2019 01:41
- சமாதானித்திற்கான கனேடியர்கள் ஸ்ரீ லங்கா சார்பு -
நிகழ்வுகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Friday, 29 November 2019 01:51
Wednesday, 27 November 2019 01:12
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல், கல்லூரி கோவை. -
ஆய்வு
நீலகிரி மாவட்டம் ஒரு பன்மயக் கலாச்சார மையம். உலகத் தொல்குடிகளுள் குறிப்பிடத்தகுந்தவர்களின் வாழ்விடம் இது. இவர்களுள் தோடர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இதுவரை நடைபெற்றுள்ள நீலகிரிசார்ந்த பழங்குடிகள் ஆய்வுகளுள் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இனக்குழுச் சமூகமாக விளங்குகின்றது தோடர்கள் எனும் ஆயர்ச்சமூகம். சங்ககாலம் தொட்டு உற்பத்திப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கத்தினர் ஆயர்கள். முல்லை நிலத்தினை தம் வாழ்வியல் களமாகக் கொண்டு வாழ்ந்த ஆயர்கள் ‘இருத்தல்’ எனும் தம் நிலத்திற்குரிய உரிபொருள்சார் ஒழுக்கத்தினைத் தம் வாழ்வோடு உட்செறித்தவர்கள். ஆயன், ஆய்ச்சியர், இடையன், இடைச்சியர், கோவலர் என்ற பெயர்களை உடைய முல்லைநில மக்கள் தம் பெயரமைப்பினைக் கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவர்களாகத் திகழ்கின்றனர். அஃறிணை உயிரிகளின் முக்கியவத்துவத்தினை உணர்ந்து, அதன்மீது தன் அன்பினையும், பண்பினையும் கட்டமைத்து, வாழ்வியல் மற்றும் பொருளாதார நிறைவினை அடைந்தவர்கள் ஆயர்கள். நீலகிரியில் வாழ்கின்ற தோடர்களும் மிகச்சிறந்த ஆயர் சமூகம் என்று அறுதியிட்டுக் கூறலாம்.
நில அமைப்பிற்கேற்பவும், தம் தொழில் மற்றும் வாழ்முறைச் சார்ந்து தத்தம் வாழிடத்தினைத் தகவமைத்துக் கொண்ட நீலகிரி மாவட்ட மக்களுள் மலையின் உச்சியில் தோடர்கள் வாழ்கின்றனர். உலகிலேயே 5500 அடிகள் உயர மலைப்பகுதியில் சைவ உணவை உண்டுவாழும் ஆயர்குடி தொதவர்கள் மட்டுமே (பக்தவச்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள், ப – 141). தோடர்கள் நீலகிரியில் வாழ்கின்ற மக்களால் ‘தொதவர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தப் பெயர்க்காரணம் குறித்து நோக்கும்போது மூன்று வகையான விளக்கங்கள் நமக்கு நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றன. இதில் முதன்மையானதாக ‘பண்டையில் மன்னர்களால் தூதுவராக இங்கு அனுப்பப் பட்டவர்கள் நாங்கள். எனவே தூதுவா என்பது தொதவா என்று மருவி இன்று வழங்கப்பட்டு வருகின்றது’ என்கிறார் கோடநாடு மந்துவினைச் சார்ந்த தோடர் கொட்டாட குட்டன்.
Last Updated on Thursday, 28 November 2019 10:20
Read more...
 இலங்கையில் தமிழர்கள் வாழும் பல இடங்களில் வருடா வருடம் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. அமைதியான முறையில் அசம்பாவிதங்கள் எவையுமின்றி இடம்பெற்றுள்ளன. புகலிடத் தமிழர்கள் நினைவு கூரும் மாவீர்ர் தின நிகழ்வுகளுக்கும் , இலங்கையில் நடைபெறும் மாவீர்ர்தின நிகழ்வுகளுக்குமிடையில் காணப்படும் வேறுபாடு புகலிடத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் நவம்பர் 26 கொண்டாடப் படுவதைப்போல் இலங்கையில் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் மாவீரர் தின நிகழ்வுகள் நினைவு கூர்ப்படுவது இலங்கையில் தடுக்கப்படுவதில்லை. இலங்கை அரசக் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிக்கரை நிறுவனம் வெளியிடும் தமிழ்ப்பத்திரிகை தினகரன். தினகரன் இம்முறை வடக்கில் நடக்கும் 'மாவீரர் தின' நிகழ்வினை வெளிப்படுத்தும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து "நல்லூரில் மாவீரர்களுக்கு அஞ்சலி" என்னும் தலைப்பிட்டுப் பிரசுரித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கு மாவீரர் தின நிகழ்வுகள் நடப்பதில் ஆட்சேபணையில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் மூலம் நினைவு கூரப்படுவதை இலங்கை அரசாங்கத்தினால் ஏற்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் உருவப்படங்கள் மீண்டும் புலிகள் போன்ற அமைப்புகள் இலங்கையில் உருவாகக் காரணமாக அமைந்துவிடும் என்று இலங்கை அரசு ஐயுறுவதுதான்.
Last Updated on Thursday, 28 November 2019 01:03
Read more...
எமது நீர்கொழும்பூரில் கலை, இலக்கியவாதிகள் இணைந்து இலக்கிய வட்டம் என்ற அமைப்பை 1975 களில் தொடங்கினோம். அதன் தலைவராக இயங்கியவர் எழுத்தாளர் மு. பஷீர். இந்த அமைப்புக்கு முன்னோடியாக எமது இல்லத்தில் வளர்மதி நூலகம் என்ற நூல் நிலையத்தையும் தொடக்கியிருந்தேன். வளர்மதி நூலகம் 1971 இல் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி தொடங்கப்பட்ட காலத்தில் உருவானது. மாலையானதும் ஊரடங்கு உத்தரவு அமுலாகிவிடும். வெளியே செல்லமுடியாது. அக்காலத்தில் தொலைக்காட்சியும் இல்லை.
இலக்கிய நண்பர்கள் மத்தியில் நூல்களை பரிமாரிக்கொள்வதற்காகவே வளர்மதி இயங்கியது. வளர்மதி கையெழுத்து சஞ்சிகையும் நடத்தினோம். இக்காலப்பகுதியில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் எங்கள் ஊருக்குவந்து அறிமுகமானார்.மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழும் வெளியிட்டோம். அதற்கு முன்னர் எமது மாமா முறையானவரான அ. மயில்வாகனன் தனது சாந்தி அச்சகத்திலிருந்து அண்ணி என்ற மாத இதழை சில மாதங்கள் நடத்தினார். அதன் முதல் இதழின் வெளியீட்டு விழாவுக்கு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின்போதுதான் பஷீர் எனக்கு அறிமுகமானார். எனினும் அப்போது நான் இலக்கியப்பிரவேசம் செய்திருக்கவில்லை. பழைய பஸ்நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த மாநகர சபையின் பொது நூலகத்தில் பஷீரை அவ்வப்போது சந்திப்பேன். அவருக்குத் தெரிந்த தொழில் பீடி சுற்றுவது. அவரது வாப்பா கேரளத்திலிருந்து வந்தவர்.
Last Updated on Thursday, 28 November 2019 00:47
Read more...
Wednesday, 27 November 2019 01:38
- மாலன் , முகநூல் -
நிகழ்வுகள்
சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனம் 'புவி எங்கும் தமிழ்க் கவிதை' கவிதைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கவிதைகளைத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் மாலன்.

Last Updated on Wednesday, 27 November 2019 11:55
Read more...
புதிய ஜனாதிபதியாக நந்தசேன கோத்தபாயா ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து நடைபெறும் செயல்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய பல்வகை வினாக்களை எழுப்புகின்றன. நாட்டின் எதிர்காலம் பற்றிய முதலாவது அச்சம் நாடு எவ்வகையான ஆட்சியமைப்பை நோக்கிச் செல்கின்றது என்பதையிட்டுத்தான். 2015இல் நடைபெற்ற ஜனாதிபதி ஆட்சியின்போது எதிர்பாராதவிதமாக மகிந்த ராஜபக்ஷா தேர்தலில் தோல்வியுற்றபின்னர் தன் தம்பியான கோத்தபாயா ராஜபக்சவுடன் இணைந்து நாட்டின் தேர்தலை இரத்துச் செய்துவிட்டு ஆட்சியில் நீடிக்கச் செய்த சதி வெற்றியளிக்கவில்லை. முப்படைத்தளபதிகளும், காவல்துறைத் தலைவரும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் அச்சமுற்ற மகிந்த ராஜபக்ச அவசர அவசரமாக, தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடமுன்னரே, ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து அவருடன் பாதுகாப்பாக வெளியேறியதாக ஒரு செய்தி இலங்கை அரசியலில் அடிபடுகின்றது. அதில் பாடம் படித்த மகிந்தவும், கோதபாயாவும் எதிர்காலத்தில் அவ்விதமானதொரு நிலை தோன்றக்கூடாது என்பதில் உறுதியான நோக்கில் இருப்பதுபோல் தெரிகின்றது.
தற்போதுள்ள அரசியல் சூழலில் இன்னும் நீண்ட காலம் இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக் கட்டில் இருக்கப்போகின்றனர். அவ்விதமிருந்து இவர்கள்மீது அதிருப்தியுற்று மக்கள் முன்புபோல் தேர்தலில் தோல்வியுற வைத்தாலும் கோத்தபாயா ஆட்சியிலிருந்து இறங்கப்போவதில்லை போல்தான் தோன்றுகின்றது. அடிப்படையில் அவர் அரசியல் தலைவரல்லர்.இராணுவத்தளபதி. அதனால்தான் பதவிக்கு வந்தவுடனேயே இராணுவத்தினரின் கைகளில் பாதுகாப்பைக் கொடுத்திருக்கின்றார். இதனால் ஏற்படும் முக்கிய நன்மைகள்: காவல்துறையினரின் முக்கியத்துவம் குறைகின்றது. காவல்துறையின் புலனாய்வுப்பிரிவின் படையினர் மீது புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதில்லை. ஏற்கனவே அவ்விதம் விசாரணைகளை முன்னெடுத்தவர் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Last Updated on Wednesday, 27 November 2019 01:37
Read more...
Monday, 25 November 2019 08:07
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
ஆய்வு
நீலகிரி எனும் உயிர்ச்சூழல் மண்டலம் உணவுச் சங்கிலிக்கும், உணர்வு சங்கிலிக்கும் ஒத்திசைத்து நிற்கும் அட்சயப்பாத்திரம். ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பி.யரின் கூற்று பொருட்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களுக்கும் பொருந்தும். பொருட்களுக்கு இடப்படும் பெயர்கள் அப்பொருட்கொண்ட குணத்தின் அடிப்படையில் காரணமாகவோ, இடுகுறியாகவே அமையும். பெரும்பாலும் இயற்கைசார்ந்த பொருட்கள் இடுகுறிப்பெயராகவே அமைவன. வாழ்களத்தைச் சுற்றியுள்ள இயற்கையைப் புரிந்துக்கொண்டு, அதன் கொடைகளான செடி, கொடிகளைப் பயன்பாட்டு மற்றும் குறியீட்டு நோக்கில் அதற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் பொதுவாக காரணப்பெயராகவே விளங்குகின்றது.
நீலகிரியில் வாழ்கின்ற படகரின மக்கள் ‘பாம்பெ உல்லு’ என்று அழைக்கும் காரணப்பெயர் கொண்ட ஒரு புல்வகை சூழல், பண்பாடு, பயன்பாடு போன்ற பல்வேறு பரிமாணங்களில் தன்னை முன்னிறுத்தும் போக்கு சூழலியல் நோக்கில் காணத்தக்கதாகும். தேவை, தேர்வுக்கருதி இவர்களின் வழக்காறுடன் ஒன்றியப் பொருளாகவும், முடிமுதல் அடிவரை பயன்பாட்டு நிலைக்கொண்டதாகவும் இந்த ஓரறிவு உயிர் விளங்குகின்றது.
உயிரிகளின் தொகுப்பாக விளங்கும் இப்புவியில் ஆறறிவு உயிரியான மனிதனின் வாழ்வில் சடங்குகள் புரிதலாலும், பண்பாட்டாலும் கட்டமைக்கப்பட்டவை. சடங்குகள் சார்ந்த புழங்குபொருட்களும் காரணகாரிய அடிப்படையில் அமைக்கப்படுபவை. படகரின மக்களின் பெரும்பாலான சடங்குகளில் பல்வேறு பண்புகளைக்கொண்ட தாவரங்கள் இடம்பெறுகின்றன. அத்தாவரங்களுள் 'பாம்பெ உல்லுவும்' ஒன்று.
Last Updated on Wednesday, 27 November 2019 01:16
Read more...
Saturday, 23 November 2019 09:33
- கார்த்திகா வாசுதேவன் -
நூல் அறிமுகம்
- தினமணி பத்திரிகையில் (தினமணி.காம்) தனது நூலான வெளியான ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ நூல் மதிப்புரையினை எழுத்தாளர் ஆசி.கந்தராஜா அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அதனை உங்களுடன் பகிர்ந்துகொளீன்றோம். நன்றி. -
சுஜாதா தமது ‘கற்றதும் பெற்றதுமில்’ இப்படி எழுதி இருந்தார் ஒருமுறை.. அதாவது இனிமேற்கொண்டு தனக்கு புத்தகம் அனுப்புபவர்கள் சமையல் குறித்த புத்தகங்களை அனுப்பினால் அதை வாசிக்க தனக்கு மிகவும் இஷ்டம் என்று. இதை சுஜாதாவின் மொழியில் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவர் சொன்னதின் அர்த்தம் இது தான். அந்த நேரத்தில் அவர் கையில் ஆசி.கந்தராஜாவின் ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ புத்தகம் கிடைத்திருந்தால் ஒருவேளை உச்சி முகர்ந்திருப்பாராயிருக்கும். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது.
*‘மாமிக்கு ஊர் அரிசிப் புட்டுக்கு, நல்லெண்ணையில் வதக்கிய கத்தரிக்காய் பொரியல் வேண்டும். பொரியலுக்கு மட்டுவில் வெள்ளைக் கத்தரிக்காய் தோதுப்படாது’ *‘ஒரு வாய்க்குள் அடங்கக்கூடிய இனிப்பான சின்னச்சின்ன மோதகங்கள் அவை, பொரித்த மோதகங்கள் ஒவ்வொன்றாக வாய்க்குள் சங்கமமாகிக் கொண்டிருந்தன’ *வீரசிங்கத்தார் சாமான் வாங்குவது ஒரு தனிக்கலை. கத்தரிக்காயென்றால் ஊதா நிற லெபனீஸ் கத்தரிக்காய், கிறீஸ்லாந்து பால் வெண்டி, வியட்நாம் கட்டைப் பாவற்காய், இலங்கை பச்சை மிளகாய், கோயம்பத்தூர் உலாந்தா முருங்கை, பிஜி நாட்டு புடலங்காய் என அவரது காய்கறிப் பட்டியல் கோளமயமாகும். *இந்த மனுஷன் மூண்டு நேரமும் லெபனீஸ் ‘ஷவர்மா’ சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏத்திக் கொண்டு வரப்போகுது’ - என பணி நிமித்தம் மூன்று ஆண்டுகள் லெபனான் செல்லும் வீரசிங்கத்தைப் பற்றி அவரது மனைவி கொள்ளும் கவலை.
இப்படி புத்தகத்தில் ஏராளமான ருசிகரத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
Last Updated on Saturday, 23 November 2019 09:39
Read more...
Friday, 22 November 2019 10:32
- யசோதா.பத்மநாதன். – சிட்னி. -
நூல் அறிமுகம்
 காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி. வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் - போர் காலம் - போருக்குப் பின் - என்ற பெரு மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி.
வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்; தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்டிருந்தது; இருக்கிறது என்பதை இவரது படைப்புகளை மாத்திரம் பார்க்கும் ஒருவர், நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் சலிக்காத வகையிலும் கலைத்துவத்தோடு உணர்ந்து கொள்ளலாம்.
அவை கதைப்புலங்களைக் கொண்டிருந்தாலும் ஆவணத்தன்மை கொண்ட வரலாற்றுத் தார்ப்பரியங்களை உள்ளே கொண்டுள்ளவை. அதன் வழியே தாமரைச்செல்வி ஒரு ’காலச் சிற்பி.’ காலத்தை மொழியால் செதுக்கியவர். அவைகளை வாசிப்பது என்பது இருந்த இடத்தில் இருந்த படி காலங்களைக் கடக்கும் ஒரு பயண அனுபவம்.
அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் இன்று வெளிச்சத்திற்கு வருகிறது போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’
இந் நாவல், ஊர்வாழ்வில் இருந்து தப்புதலும் மண்ணை இழத்தலின் வலிகளும், படகுப்பயண அனுபவங்களும் பயங்கரங்களும், புதியநாட்டின் வரவேற்புகளும் இங்குள்ள நிலைகளும் எனப் பயணித்தலின் வழி அகதி மாந்தர்களின் ஒரு புதிய வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்கிறது. அவர்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தோடு கப்பல் ஏறிய சமான்யர். அந்த அபாயகரமான கடல் பயணத்தில் மாண்டு போனவர்கள் போக, உயிர் தப்பியவர்கள் வந்துவிட்டோம் என்று மூச்சுவாங்க முடியாமல் ‘எண்ணைக்குத் தப்பி நெருப்புக்குள் விழுந்த கதையாக’ ஆகிப்போன நிலையினை சொல்லுமிடங்கள் மிகுந்த வலி மிக்கவை; தமிழுக்குப் புதிதானவை; மேலும், ஏனைய தமிழர்கள் அனுபவிக்காதவையும் கூட. இவர்களின் அனுபவங்கள் ஈழ/ புகலிட தமிழ் இலக்கியத்திற்குக் கிட்டிய புது வரவு; புது வெளிச்சம்; புதுப் பார்வை என்று துணிந்து கூறலாம்.
Last Updated on Friday, 22 November 2019 10:41
Read more...
Thursday, 21 November 2019 02:44
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -
ஆய்வு
இந்த ஞாலம் பல்நிலை உயிர் திரட்சிகளின் தொகுப்பு. உயிரிகளின் மூலம் இயக்கம். இயங்குநிலையின் மூலம் தேவை. உயிரிகளின் அடிப்படைத்தேவை ஆற்றல். ஆற்றலுக்கு அடிப்படை உணவு.
மனித உடலில் இயற்கையாக அமைந்துள்ள ஆற்றலின் நிலைப்பாட்டிற்கு உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அடிப்படையானது. உயிரிகள் தன் ஆற்றல் கொணர்விற்கு உட்கொள்ளும் இயற்கை மூலங்கள் காற்று, நீர், உணவு ஆகியவை (குறள் 941). இவற்றைத் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலிலிருந்து உயிரிகள் தன்னிறைவுச் செய்துக் கொள்கின்றன.
மானுடர்களின் உணவுநிலை பண்பாட்டின் முக்கியக் கூறுகளுள் ஒன்றாகும். மனிதனின் மனப்பக்குவத்தை அறிந்துக் கொள்ளும் நிலைகளனாகவும் மனிதனின் உணவு வரலாறுத் திகழ்கின்றது. உணவினைப் பச்சையாக உண்ட ஆதிமனிதன், உணவினை வேகவைத்து உண்ட பழங்குடியின மனிதன், உணவினைப் பக்குவப்படுத்தி முறைவயின் உண்ட வேளாண்யுக மனிதன், உணவினைப் பதப்படுத்தி உண்ணும் தற்கால மனிதன் என்று மனிதனின் மனப்பக்குவத்தினை வெளிக்காட்டும் ஆதாரங்களாக உணவுமுறைகள் திகழ்கின்றன.
உணவுசார் செய்முறை காலந்தோறும் பல மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அதன் உறுபொருள் இயற்கையின் பாற்பட்டதேயாகும். மக்களின் உணவு முறையானது காலச்சூழல், இடச்சூழல், கலாச்சாரச்சூழல் என்ற பன்முகப் பரிமாணங்களை உட்செறித்தது. ஒவ்வொரு இனமக்களுக்கும் இம்மேற்காண் அடிப்படையில் உணவுமுறையானது வேறுபடுகின்றது.
இத்தகு உணவுமுறை படைக்கப்படுகின்ற இடத்தினைப் பொறுத்து பல்வேறு நம்பிக்கைகளையும், வழக்காறுகளயும் உட்கொண்டது. நாட்டுப்புறம் சார்ந்த கலாச்சார கூறுகளுள் ‘விலக்கு’ (tabo) என்பதும் ஒன்று. ‘விலக்கு என்ற சொல் புனிதம் புனிதமற்றது என்ற இரண்டு மாறுபட்ட பொருளைக் கொண்டது’ (தே.ஞானசேகரன்.2010).
Last Updated on Wednesday, 27 November 2019 01:16
Read more...
’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல. அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்ற பார்வையை வெளிப்படுத்தும் பாரதி சிறுகதையில் நவீன வடிவத்தை மறுத்து பழைய மரபின் வாய்மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியை கைக்கொண்டார் என்பது தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும். .தமிழின் முதல் சிறுகதை “ குளத்தங்கரை அரசமரம் “ சிறுகதையை எழுதிய வவேசு ஐயர் என்பதை மறுதலித்து பாரதியின் ஆறில் ஒரு பங்கு, ரயில்வே ஸ்தானம் போன்றவற்றை முன் நிறுத்தும் முயற்சிகளும் இருந்திருக்கின்றன .வவேசு ஐயர் கதை தாகூர் எழுதிய காட்டேர் கதா என்னும் வங்க கதையின் ஒரு தழுவல் என்பதுதான் காரணமாக இருந்திருக்கிறது. அவரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அது வெளிவந்தது. தாகூர் கதையில் ஆற்றங்கரை படிக்கட்டு சொல்லும் விவரிப்பில் எட்டு வயதில் விதவையான ஒரு பெண் பிறகு சிறுவயதில் சாமியார் ஒருவரிடம் மனதை பறிகொடுத்து விரத்தியடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்வது பற்றியது. அய்யரின் கதையில் சிறுவயதில் மணம்முடிக்கப்பட்ட ருக்மணி வரதட்சனை கொடுமை காரணமாக குளத்தில் குதித்து உயிரை துறக்கிறாள் என்பதை குளத்தங்கரை அரசமரம் கதை சொல்கிறது. இது 1915 இல் விவேக போதினியில் வெளிவந்து .அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில் இடம்பெற்றது,
தெலுங்கு இலக்கிய உலகில் 1910 காலத்திய குரஜாட அப்பாராவின் தித்துப்பாட்டு ( சீரமைப்பு) என்ற கதை புதிய வடிவச் சிறுகதைக்கு முக்கிய உதாரணம் எனப்படுகிறது. ஆரம்பகால தெலுங்கு இலக்கியம் பெரும்பாலும் சமயத்தை உள்ளடக்கியே இருந்தது. கவிஞர்களும் அறிஞர்களும் பெரும்பாலும் மொழி பெயர்ப்பினையே செய்து வந்துள்ளனர், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற அனைத்து புராணங்களையும் மொழிபெயர்த்துள்ளனர், பதினாறாம் நூற்றாண்டு முதல்,புராணங்களில் இருந்து அரிதாக அறியப்பட்ட கதைகள் தெலுங்கு மொழி காவியங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியது. பொதுவாக இலக்கியப் படைப்புகள் அகன்யா அல்லது கந்தா, சரித்ரா, விஜயா, விலாசா மற்றும் அபியுதாயா என்னும் தலைப்பின் கீழ் ஒரு ஒற்றை நாயகனை பற்றியும் அவனது பராக்கிரம்ங்களைப் பற்றியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தலைப்புகளில் பொதுவான விஷயங்கள் கவிதை வடிவிலேயே எழுதப்பட்டிருந்தன.
Last Updated on Wednesday, 20 November 2019 09:47
Read more...

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா' , 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்கள் வெளியானபோது , நண்பர் ஸ்நேகா பாலாஜி அந்நூல்களை வல்லிக்கண்ணன் அவர்களுக்குக் கிடைக்கச் செய்தார். அவ்விதம் கிடைத்த எனது நூலான 'அமெரிக்கா' பற்றிய கருத்துகளைத் தெரிவித்து அவர் தனது முத்து முத்தான கையெழுத்தில் எட்டு பக்கக் கடிதமொன்று அனுப்பியிருந்தார். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்
Last Updated on Wednesday, 20 November 2019 10:32
Read more...
Wednesday, 20 November 2019 09:00
- ஞா. டிலோசினி ( இலங்கை - கிழக்கு பல்கலைக்கழகம்) -
இலக்கியம்
 அவுஸ்திரேலியப் புகலிட எழுத்தாளராகிய முருகபூபதி அவர்கள், ஈழத்து இலக்கியம் மற்றும் ஊடகத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளார். பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கூடாக தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்திய இவர், இருபதுக்கு மேற்பட்ட நூல்களை இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். முருகபூபதியின் அயராத முயற்சியினால் இலங்கையில் பாரதி என்ற ஆய்வு நூல், முகுந்தன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இலங்கையில் பாரதி , மகாகவி பாரதி பற்றிய பல்வேறு விடயங்களை நீண்ட காலமாக தேடித்தொகுத்து ஆராய்ச்சி பூர்வமாக எழுதப்பட்டுள்ள ஆய்வு நூலாகும்.
இந்நூலில் பாரதியை அறிமுகம் செய்யும் அங்கம் 01 இல், பாரதியின் நண்பர்கள் பற்றிக் கூறப்படுகிறது. பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட பாரதியின் நண்பர்களை விபரிக்கும் இப்பகுதியில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல்கள், வர்த்தகர்கள், தீவிரவாதிகள், விடுதலைப்போராளிகள், பத்திரிகையாளர்கள், சாதாரண ஹரிஜனங்கள், பாமரர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் வருகிறார்கள். அங்கம் 02 இல் மதம் பிடித்த யானையிடம் இருந்து பாரதியைக் காப்பாற்றிய குவளைக்கண்ணன் என்கின்ற கிருஷ்ணமாச்சாரியார் பற்றியும், பாரதியின் மறைவு பற்றியும், பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமி பற்றியும் கூறப்படுகின்றது. இப்பகுதியில் பாரதியின் ஞானகுரு இலங்கையர் என்ற பெருமையையும் பாரதி நேரில் சந்தித்த ஒரேயொரு இலங்கையர் யாழ்ப்பாணத்துச் சாமி என்பதையும் நூலாசிரியர் அழுத்திக் கூறுகின்றார். பாரதியின் ஞானகுரு பற்றி ஈழத்து இலக்கிய வரலாற்றில் பல இடங்களில் பதிவுகள் இடம்பெற்றிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாரதியின் ஞானகுரு பற்றி செங்கைஆழியான் எழுதிய திரிபுகள் பற்றியும் இப்பகுதியில் விமர்சிக்கப்பட்டுள்ளது. வேறொரு சாமியாரை பாரதியின் ஞானகுருவாக நிரூபிக்க ஏன் செங்கைஆழியான் முயன்றார் என்ற கவலைக்குரிய விமர்சனமும் இடம்பெற்றுள்ளது.
Last Updated on Thursday, 21 November 2019 09:01
Read more...
Wednesday, 20 November 2019 09:28
- சந்திரகெளரி சிவபாலன் -
இலக்கியம்
 பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியரும் சிவத்தமிழ் சஞ்சிகையின் ஆசிரியருமான கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால், செய்பவர் திறமை திறம்பட இருக்க வேண்டியது அவசியம். கருவி அற்புதமானால், கருத்தா கருவிக்கு ஆற்றிய அர்ப்பணிப்பும் போற்றப்படவேண்டியதும் புரியப்பட வேண்டியதுமாகும். படைப்பாளியின் திறமை அறியப்பட்டாலேயே அந்தப் படைப்பின் வெற்றி புரியப்படும் வெற்றிமணியான விபரமும் புரியும்.
வெற்றிமணி பத்திரிகை தாயகத்தில் ஆரம்பித்து 69 வருடங்கள் ஆகின்றன. அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்த வெற்றிமணி அவர் மறைவின் பின் நின்று போக அவருடைய மகன் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் மீண்டும் தாயகத்தில் வெற்றிமணி மாணவர் காலாண்டு இதழாக இன்றும் வெளியீடு செய்து கொண்டு வருகின்றார். தாயகத்தில் ஏற்பட்ட சில பல சூழ்நிலைகள் காரணமாக தாமதங்கள் அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
ஆனால், ஐரோப்பாவில் இவர் புலம்பெயர்ந்து தன்னுடைய வாழ்க்கையைத் தளம் அமைத்த பின் மீண்டும் வெற்றிமணி பத்திரிகையை யேர்மனியில் ஆரம்பித்து இம்மாதம் (ஆனிமாதம் 1994 - ஆனிமாதம் 2019) 25 வருட வெற்றி காண்கின்றார். தற்போது இலண்டன், சுவிஸ், யேர்மனி ஆகிய நாடுகளில் பலரும் தேடும் சிறப்புப் பெற்ற இலவச வண்ணப் பத்திரிகையாக இப்பத்திரிகை வெளிவருகின்றது. இப்பத்திரிகை எவ்வாறு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது என்னும் வரலாற்றை இத்தருணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.
Last Updated on Wednesday, 20 November 2019 09:35
Read more...
Wednesday, 20 November 2019 08:52
- முனைவர் செ.துரைமுருகன், தமிழ்துறை உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி ,கோவை, தமிழ்நாடு-
ஆய்வு
தமிழ்மொழியில் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையானதாக வைத்து போற்றத்தக்கது தொல்காப்பியமாகும். தமிழ் மொழிக்குரிய வரைவிலக்கணமாக அமைந்த இந்நூலானது இலக்கண மரபுகளாக எழுத்து, சொல், பொருள் மரபுகளையும் அதன் பயன்பாட்டு முறைகளையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறது. அதிலும் குறிப்பாக, பொருளதிகாரத்தில் அகப்புற மரபுகளையும், மரபியல் என்ற இயலில் தமிழ் மொழிக்குரிய வழக்கு மரபுகளையும் மிக விரிவாக எடுத்துக்கூறுகிறது. தமிழ்மொழியின் இருநிலை வழக்கு மரபையும் அதில், வழக்கு மரபாக வழங்கி வருவனவற்றைத் தமிழினம் இடையறாமல் பின்பற்றி வருகின்றது என்பதையும் மரபியலில் பல நூற்பாக்களில் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அத்தகைய மரபுச் சொற்கள் பன்னெடுங்காலமாக வழக்கிலிருந்து ஈராயிரமாண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பிய மரபியலில் இடம்பெற்றுள்ளன. எழுத்து வழக்கற்று பேச்சுவழக்கினை மட்டுமே கொண்டுள்ள திராவிட தொல்பழங்குடிகளின் வழக்கில் அத்தகைய மரபுச்சொற்கள் வழங்கி வருவது வியப்புக்குரியதே. அத்தகு சொற்களைக் கண்டறிந்து இம்மொழிகளின் உறவு நிலைகளை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொல்பழங்குடிகள் மனித குலமானது பல்வேறு இனங்களாகவும், தேசிய இனங்களாகவும், சமூகங்களாகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவற்றுள் மிகவும் தொன்மையாக விளங்குபவர்கள் பழங்குடிமக்களாவர். பழங்குடிகளே, மனிதகுலத்தின் தொன்மையான நிலையினையும் அதன்பிறகு ஏற்பட்டுள்ள பல்வேறு படிநிலை வளர்ச்சியினையும் அறிந்துகொள்ள சான்றாக உள்ளனர். இந்தியா முழுவதும் பல பழங்குடி சமூகங்கள் இருந்தபோதும் தென்னிந்திய அளவில் பழங்குடிகளை மதிப்பிடுவது என்ற நிலையில் சென்னை அரசு அருங்காட்சியகக்; கண்காணிப்பாளராக இருந்த எட்கர்தர்ஸ்டன் 1885ஆம் ஆண்டு முதல் தென்னிந்தியா முழுவதும் குலங்களையும் குடிகளையும் ஆராய்ந்து 2000க்கும் மேற்பட்ட பழங்குடிகள், சாதிகள், குலப்பிரிவுகள் இருப்பதாக இனங்கண்டார். அதன்பின்னர் இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம் 1985இல் இந்தியா முழுவதும் 4635 சமூகங்கள் உள்ளதெனவும் அவற்றுள் பழங்குடி சமூகங்கள் 461 என்றும் ஆய்வின் வழி வெளிக்கொணர்ந்தது. தமிழக அரசுpன் அட்டவணைச் சாதிகள் அமுலாக்கச் சட்டப்படி (1976) தமிழகத்தில் 36 பழங்குடிச் சமூகங்கள் உள்ளன எனவும் வரையறுத்தது. மற்றொரு நிலையில், இந்தியாவில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைப்புக்குள்ளாகின. அதனால் எல்லைகள் மாற்றம் பெற்றன. இதனால் பழங்குடிகள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டனர். இதில் மாநில அளவில் பழங்குடிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு மைய அரசு பழங்குடிகளுள் மிகத் தொன்மையானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அரசின் உதவிகளை தர எண்ணியது. இதனால் 1969ஆம் ஆண்டு ‘சிலுஆவோகுழு’ ஒன்றை அமைத்து இந்திய அளவில் தொன்மைப் பழங்குடிகளை இனங்காணுமாறு பணிக்கப்பட்டது. அவ்வாறு வரையறுப்பதற்குப் பின்வரும் காரணிகள் அடிப்படையாகக் கொண்டது அக்குழு. அவை.
Last Updated on Wednesday, 20 November 2019 08:55
Read more...
Tuesday, 19 November 2019 21:59
- ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா -
சமூகம்
 குறிப்பாகச் சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது. எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், இந்த வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருக்கிறது.
ஆணாதிக்கத்தால் உருவாகும் பல்வகையான பிரச்சினைகளுக்கெல்லாம் சமூகமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதை எப்போது நாங்கள் அனைவரும் உணர்கிறோமோ, அப்போதே இதற்கான தீர்வும் உருவாகும் என்பதே யதார்த்தமாகும். அவதானிப்பு, பிரதிபண்ணல், மற்றும் முன்மாதிரி ஒன்றைப் பின்பற்றல் என்பனவே சமூகத்தில் நிகழும் கற்றலின் தோற்றுவாய்களாக அமைகின்றன என்கிறார் உளவியலாளர் Albert Bandura. குழந்தைப் பருவம் முதல் அவரவர் பாலினத்தின்படி, அவர்களது சகாக்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவர்கள் செயல்படவேண்டிய வழிவகைகளைப் பற்றிச் சிறுவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அடிப்படையில் ஆண் ஒருவன் தைரியசாலியாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் எப்போதும் அழகாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் எனவும் சமூகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது.
Last Updated on Tuesday, 19 November 2019 22:07
Read more...
Saturday, 16 November 2019 23:23
- தகவல்: கருணாகரன் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 16 November 2019 23:28
Saturday, 16 November 2019 00:04
- இலக்கிய அமுதம் -
நிகழ்வுகள்
Last Updated on Saturday, 16 November 2019 00:11
Friday, 15 November 2019 08:52
- தேவகி கருணாகரன் (சிட்னி அவுஸ்திரேலியா) -
சிறுகதை
என்னுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சேர்ந்து எனது எண்பதாவது பிறந்த நாளை அமோகமாக சிட்னியில் கொண்டாடினார்கள். என் மூத்த பேத்தி மாதுமையும் மூத்த பேரன் கபிலனும் கேக் வெட்டியபபின் என்னைப் பற்றி சிறு சொற்பொழிவு ஆற்றி என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தார்கள்.
பேரன் கபிலன், “அப்பம்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பூமியில் எண்பது வருடங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அப்பம்மா, இது மிக நீண்டகாலம் ஒரு சாதனை எனச் சொல்லலாம். 1938 இல் இந்த உலகைச் சுற்றி வர நாலு நாள் எடுத்தது. அந்தக் கால கட்டத்திலே ஒருவரின் வருடாந்தச் சம்பளம் $1700 ஆக இருந்தது. அவுஸ்திரேலியாவில் ஒரு கட்டிப் பாண் ஒன்பது சதம், நீங்கள் பிறந்த வருடத்திலே தான் சவுதி அரேபியாவில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. நம்புகிறீர்களோ இல்லையோ அது சர்வாதிகாரர்களின் காலம், சகாப்தம். ஸ்டாலின், முசலோனி, ஹிட்லர் ஆகியோர் அதிகாரத்தில் இருந்த காலம். இப்படிச் சரித்திர முக்கியத்துவமான காலத்தில் பிறந்திருக்கிறீர்கள். பேரப் பிள்ளைகளான எங்களுக்கு பெருமையாகவிருக்கிறது. அதுமட்டுமா, ஹிட்டலர் யூத மக்களை கொடுமைப் படுத்தியகாலமும் அதுதான்.” எனக்கூறியதோடு தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது பள்ளி விடுதலை நாட்களில் என்னோடு கழித்த இன்பமான நினைவுகளைப் பகிர்ந்து என்னையும் எல்லோரையும் மகிழ்வித்தான்.
இந்தச் சொற்பொழிவு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்தது. என் நினைவு தெரிந்த நாள் முதல் இந்த எண்பது வயது வரை கண்ட மாற்றங்களோ ஆயிரம் ஆயிரம். அந்த நினைவுகள் என் நெஞ்சினிலே திரும்பி எழ மனதிலே சொல்லமுடியாத ஏக்கமும் தாபமும் எழுந்தது.
இரண்டாவது மகா யுத்தம் தொடங்குவதற்கு மூன்று வருடங்களுக்கு முன், ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தி எட்டில், தாய் தந்தையருக்கு எட்டாவது குழந்தையாக இந்தப் பூமியில், கொக்குவில் கிராமத்தில் இருந்த எனது பாட்டா பாட்டி வீட்டில் பிறந்தேன். எனக்கு சிந்தாமணி எனப் பெயரும் வைத்தார்கள். எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது, ஏன் எனக்கு இந்த பழங் காலத்துப் பெயரை சூட்டினீர்கள் என பெற்றோரிடம் கேட்டதற்கு, ஐம் பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி சினிமாப் படமாக 1937 ஆம் ஆண்டில் வெளிவந்து மக்களிடையே புகழ் பெற்றிருந்தது, அம்மாவிற்கும் அந்தப் பெயர் பிடித்திருந்ததால், அந்தப் பெயரை எனக்கு வைத்தார்களாம்.
Last Updated on Friday, 15 November 2019 09:14
Read more...
சென்னை ஐஐடியில் மானுடவியல் துறையில் முதுகலையில் படித்துக்கொண்டிருந்த கேரளாவைச்சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் அங்கு பணி புரியும் பேராசிரியர்கள் சிலரின் பாரபட்சம் மற்று துன்புறுத்தல்கள் காரணமாகத் தற்கொலை செய்துள்ள விபரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பாத்திமா தன் அலைபேசியில் தனது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார், பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன், மற்றும் இன்னுமொருவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இப்பேராசிரியர்களை நிச்சயம் சட்டம் தண்டிக்க வேண்டும். இதில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மாணவி பாத்திமாவின் பாடமொன்றுக்கு முதலில் குறைந்த புள்ளிகளை இட்டிருக்கின்றார். பின்னர் மாணவி மீளாய்வு செய்யக்கூறியதும் அதிகரித்துள்ளார். இம்மாணவியின் தற்கொலை பற்றிய இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்கட்டுரையில் இவ்விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சகல பாடங்களிலும் உயர் பெறுபேறுகளைப்பெற்று வந்துள்ள மாணவி பாத்திமா இவ்விதமானதொரு முடிவினைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிய சென்னை ஐஐடி கல்வி நிறுவனப்பேராசிரியர்களால் அந்நிறுவனத்திற்கே அவமானம்.
Last Updated on Monday, 16 December 2019 01:06
Read more...
Thursday, 14 November 2019 09:22
--ஊர்க்குருவி -
கலை
எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் சரி , இன்றும் சரி எம்ஜிஆரின் படங்களென்றால் அவை ஒரே மாதிரியானவை. கருத்துள்ள பாடல்களைக் கொண்டவை. காதல் பாடல்கள் இனிமையானவை. இவற்றுடன் தம் கருத்துகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளில் மட்டுமல்ல இன்னுமொரு விடயத்திலும் நன்கு சிறப்பாக செயற்படக்கூடியவர். அது அவரது நடனத்திறமை. திரைப்படங்கள் பலவற்றில் எம்ஜிஆரின் நடன அசைவுகளை அவதானித்தால் அக்காலகட்டக் கதாநாயக நடிகர்களில் அவரைப்போல் நடனமாடக் கூடிய நடிகர்கள் வேறு யாரையும் என்னால் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. நடிப்புத்திறமை மிக்க நடிகர் திலகத்தால் 'வண்டி தொந்தி'யுடன் விரைவாக, சிறப்பாக ஆட முடிவதில்லை. ஆனால் முறையான உடற் பயிற்சியினால் உடலைச் சிறப்பாகப்பேணிய எம்ஜிஆர் தனது இளமைப்பருவத்தில் மட்டுமல்ல வயது ஐம்பதைத்தாண்டிய நிலையிலும் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார்.
எம்ஜிஆரின் திரைப்பட நடனங்களில் என்னை மிகவும் கவர்ந்தவையாக உடனடியாக நினைவுக்கு வருபவை: குடியிருந்த கோயிலில் எல்.விஜயலட்சுமியுடன் 'ஆடலுடன் பாடல்' பாடலுக்காக ஆடும் பஞ்சாபிய நடனம். இது பற்றி நேர்காணலொன்றில் எல்.விஜயலட்சுமி இப்பாடலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் வரையில் பயிற்சி செய்தே தன்னுடன் ஆடியதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த நடனத்திறமை மிக்க தன்னுடன் இணைந்து ஆடுவதற்காக என்று எம்ஜிஆரே கூறியதையும் அவர் நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார். 'மதுரை வீரன்' திரைப்படத்தில் 'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்காக அவர் இ.வி,சரோஜா குழுவினரின் கேலியைத் தொடர்ந்து ஆடும் காட்சியும் சிறப்பானது.
Last Updated on Thursday, 14 November 2019 09:33
Read more...
( வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம் போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை. இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில் யாழ். ஈழநாடு பிரைவேட் லிமிட்டட் நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன், இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முருகபூபதி எழுதி, அண்மையில் வெளியான இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலில், முன்னைய ஈழநாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இங்கு பதிவாகின்றது. )
" கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958 இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும் தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது." இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஈழகேசரியின் மறைவிற்குப்பின்னர் உதயமாகிய ஈழநாடு பத்திரிகையின் தோற்றத்தையும் அஸ்தமனத்தையும் லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா " ஈழநாடு என்றதோர் ஆலமரம்" என்னும் கட்டுரையில் உணர்வுபூர்வமாகவும் அறிவார்ந்த தளத்திலும் பதிவுசெய்துள்ளார்.
Last Updated on Wednesday, 13 November 2019 02:08
Read more...
- முகநூல் எனக்கு வழங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். இவர் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துவரும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர்தான் மதிப்புக்குரிய ஜவாத் மரைக்கார். இவரது முகநூற் பதிவுகள் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய அரிய தகவல்களை உள்ளடக்கியவை. அண்மைக்காலமாக இவர் பதிவு செய்துவரும் கவிதைச் சமர் பதிவுகள் அவ்வகையானவை. ஐம்பதுகளில் பேராசிரியர் கைலாசபதி ஆசிரியராகவிருந்த காலகட்டத்தில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், முருகையன் ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கவிதைச் சமர் இது. அச்சமர் பற்றிய பதிவுகள் அவை. வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய பதிவுகள் இவை. - பதிவுகள் -
பாரதி கவிதைச் சமர் - 1
1950 களின் இறுதிப் பகுதி . தினகரனின் பிரதம ஆசிரியராக கலாநிதி க .கைலாசபதி கடமையாற்றிக் கொண்டிருந்த காலம். பாரதியார் நினைவு நாளையொட்டி , ஞாயிறு தினகரனில் ஒரு கவிதை வெளிவந்தது. கவிதையின் தலைப்பு " சூட்டி வைத்த நாமங்கள் சொல்லுந் தரமாமோ? ". கவிதையை எழுதியிருந்தவர் , 'தான்தோன்றிக் கவிராயர்'.
பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் அங்கதக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதும் தான்தோன்றிக் கவிராயர் என்ற புனைபெயரிலேயே அவர் தனது கவிதைகளை எழுதுவது வழக்கம் என்பதும் இலங்கை இலக்கிய உலகில் பிரசித்தம்.
மேற்குறிப்பிட்ட கவிதையைப் பிரசுரித்ததோடு கைலாசபதி நின்றுவிடவில்லை . முருகையன், மஹாகவி போன்ற பிரபல கவிஞர் பலருடன் தொடர்பு கொண்டு ஒரு கவிதா மோதலையே ஏற்படுத்தினார். இம்மோதலில் பிரசவமான கவிதைகள் "பாரதி கவிதைச் சமர்" என்ற பெயரில் தொடர்ச்சியாக வெளிவந்தன. இச்சமரில் முதலாவது மறுப்பு , " நீர் கண்ட தோற்றம் நிசமல்ல , தான்தோன்றீ ! " என்ற தலைப்பில் கவிஞர் இ .முருகையனால் எழுதப்பட்டது. அதற்கு தான்தோன்றிக் கவிராயர், "ஏலே முருகையா ! ஏன் உமக்கு இந்தலுவல் ? " என்று பதில் கவிதை எழுத நீலாவணன் , மஹாகவி , மு.பொ ., ராஜபாரதி போன்ற பல கவிஞர்கள் உள்ளே நுழைந்து தமக்குள்ளேயே மோதிக்கொள்ள .....கடைசியில் முருகையனும் தான்தோன்றிக் கவிராயரும் ஓரணியில் நின்று ஏனையவர்களைச் சாட...... கவிதைப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
இக்கவிதைச் சமரைச் சுவைத்திராதவர்களுக்காகவும் சுவைத்து மறந்தவர்களுக்காகவும் எனது அடுத்த பதிவிலிருந்து தொடர்ச்சியாக அவற்றைத் தர எண்ணுகின்றேன்.
Last Updated on Wednesday, 13 November 2019 01:38
Read more...

ரத்தக்காட்டேரிகள் பசியோடு உலவிக்கொண்டிருக்கும். நிலவும் அமைதியை அவற்றால் அங்கீகரிக்க முடியாது. அவற்றைப் பொறுத்தவரை வெறுப்பும் விரோதமுமே வாழ்வியல்பு.
தலைகள் அறுபட்டு விழுந்தால்தான் அவற்றைப் பொறுக்கியெடுத்து சூனி்யக்காரர்களின் வசியத்திறத்தோடு அவற்றை ஆட்டியாட்டிக் காட்டி அக்கம் பக்கத்திலிருப்பவரை அச்சத்திலாழ்த்தி தினமுமான குறையாத தீனிக்கு வழிசெய்துகொள்ள முடியும்.
ரத்தக்காட்டேரிகள் நாவறள உலவிக்கொண்டிருக்கும். நிலவும் அமைதியை ஏற்றுக்கொள்ள முடியாமல். அது பயத்தால் விளைந்தது என்று நாளும் சொல்லிச்சொல்லி உருவேற்றப்பார்க்கும்.
Last Updated on Monday, 11 November 2019 08:49
Read more...
Monday, 11 November 2019 08:19
- சுப்ரபாரதிமணியன் -
சிறுகதை
குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில் யாரோ பெண் உட்கார்கிறார் என்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யார் என்று கூர்ந்து பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி வெளிக்காட்சியைப் பார்த்தான், குமரன் நினைவு மண்டபத்தைக் கடந்து பேருந்து அண்ணாவையும் பெரியாரையும் ஒருங்கே காட்டியபடி நகர்ந்தது. அதீத பவுடர் வாசமும் இன்னொரு உடம்பு வெகு அருகிலிருப்பதும் உடம்பைக்கிளர்ச்சி கொள்ளச்செய்தது அவனுக்கு.
பாலம் ஏறும் போது பேருந்துத் திரும்பியதில் அவளின் உடம்பு அவனுடன் நெருங்கி வந்த போது கிளர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தான் . முகச்சவரம் செய்யப்பட்டு பவுடர் இடும்போது தன் முகம் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. இன்னும் கூர்ந்து கவனிப்பதை அவளும் பார்த்தாள்.
அது திருநங்கையாக இருந்தது. அவன் உடம்பின் கிளர்ச்சி சற்றே அடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த உடம்பின் நெருக்கமும் உடம்பு வாசனையும் அவனுக்குப் பிடித்திருந்தது. நெருக்கமாக்கிக் கொண்டான்.
நெருப்பரிச்சல் பகுதியில் திருநங்கைகள் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறான். பிச்சையெடுக்கிற போது அவர்களின் அதட்டல் மிகையாக இருந்திருக்கிறது, பிச்சை கிடைக்காத போது உடம்ப்பின் பாகங்களைக் காட்டியும் உடலை பகிரங்கப்படுத்தியும் செய்யும் சேஷ்டைகளோ பிரதிபலிப்புகளோ அவனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.பிச்சை கேட்டு கொடுக்காத ஒருவனைத் தொடர் வண்டிப்பெட்டியிலிருந்து தள்ளிக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
பெரிய கட்டிடங்கள் மின்விளக்குகளை பொருத்திக்கொண்டு தங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. பேருந்தின் வேக இயக்கத்தில் அவள் வெகு நெருக்கமாக தன் உடம்பைப் பொருத்திக் கொள்வது தெரிந்த்து.. அவனுக்கும் இசைவாக இருப்பது போல் இருந்தான்.பயணம் ரொம்பதூரம் தொடர வேண்டும் என நினைத்தான்.
Last Updated on Monday, 11 November 2019 08:50
Read more...
Monday, 11 November 2019 08:14
- பி. அனுராதா எம்,ஏ.எம்ஃபில், முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி, கோவை-18 -
இலக்கியம்
“சென்றிடுவீர் எட்டு திக்கும் கல்விச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் “
என்பதற்கேற்ப இன்றைய நாளில் நம் நாட்டு மக்கள் பல நாடுகளுக்கும் தங்கள் கல்வி அறிவைக் கொண்டு செல்கிறார்கள்.பல நாடுகளுக்குப் படிக்கவும் செல்கிறார்கள்.சிலர் குடியுரிமை பெற்று அங்கேகே தங்கிவிடுகிறார்கள். சிலர் திரும்பி வருகிறார்கள். இப்படி வெளிநாடுகளுக்குச் செல்வதும் வருவதும் இன்றைய நாளில் சுலபமாகி விட்டது.அதனால் வெளிநாட்டுக் கலாச்சாரங்கள் நம் நாட்டுக் கலாச்சாரங்களுக்குள் நுழைந்து பல நவீனத் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது கண்கூடு. வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் பல மாற்றங்களை அடைந்திருந்தாலும் பண்பாடு என்ற ஒன்றால் நம்முடைய அடையாளங்கள் நமதாகக் காக்கப் படுகின்றன.அதனைச் சொல்வதில் நாவல்கள் முக்கிய இடம்பெறுகின்றன.
மனிதனின் அறிவு வளர வளர சிந்தனைகளும் தேடல்களும் அதிகமாகி அவனுடைய மனத்தை விரியச் செய்கின்றன. குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிராமல் அடுத்தடுத்துச் சென்று பல்வேறு பரிமாணங்களை அடைந்து முழுமனிதனாக வேண்டும் என்பது நம் மண்னின் மகிமையாக சுடர்விடுகிறது. எங்கு சென்றாலும் நம் மண்ணின் வேர் அங்கும் பிடித்து நின்று நம்மை வேறுபடுத்திக் காட்டுகின்றன. அதற்கு வாஸந்தியின் நாவல்கள் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளன.
பத்திரிக்கையாசிரியரும் எழுத்தாளருமான வாஸந்தி பல ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் அதனால் கிடைத்த அனுபவங்களைத் தமது நாவல்களில் பகிர்ந்துள்ளார்.வெளிநாட்டுக் கலாச்சாரங்களைச் சொல்வதில் தனக்கென்று தனியிடத்தைப் பெற்றுள்ளார். பல நாவல்கள் அதற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றில் ‘சந்தியா’; ‘காதல் என்னும் வானவில்’ ஆகியவற்றை சிறந்த எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.
Last Updated on Monday, 11 November 2019 08:19
Read more...
நீண்ட காலத்திற்குப்பின்னர் அவன் என்னைப்பார்க்க வந்தான். அவனை “ அவர் “ என்று அழைக்காமல் மரியாதைக் குறைவாக “அவன் “ என்று அழைப்பதாக வருந்தவேண்டாம். அவன் பிறப்பதற்கு முன்னர் – நூறாண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தமையால், அவ்வாறு அழைக்கின்றேன்.
பல முன்னோர்களையும் “ அவன் “ என்றுதானே விளிக்கிறார்கள். ஏன்… சில சந்தர்ப்பங்களில் எம்மைப்படைத்த ஆண்டவனைக்கூட “ அவன் படைத்தான் “ எனத்தானே சொல்கிறார்கள்.
நான், அவன் அப்பன் பிறப்பதற்கு முன்பே பிறந்திருக்கின்றேன். என்னைப்படைத்தவர்களினால் என்னிடம் வந்து செல்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட குழந்தைகள் வந்து திரும்பிய அக்காலத்தில், அவன் பாட்டன் பிறந்த ஊர்க்காரர்கள் கல்லெறிந்து என்னைக் களைக்கப்பார்த்தார்கள்.
அவனது பாட்டி அந்தக்கதைளை அவனிடம் அவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாள். நீண்ட காலத்திற்குப்பின்னர் என்னை அன்று பார்க்க வந்திருந்த அவன், எனது மேனியை தொட்டுப்பார்த்து பரவசமடைந்தான்.
அவனுக்கு அந்தநாள் நினைவுகள் வந்திருக்கவேண்டும். அவனை அன்று அழைத்துவந்தவர்கள், என்னிடத்தில் விட்டுச்சென்றுவிட்டார்கள். அவன் என்னிடமிருந்து விடைபெற்றுச்செல்வதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. அதனால், என்னருகில் வந்து எனது அங்க இலட்சணங்களை ரசித்தான். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கதைகள் இருக்கின்றன. அதுபோன்று எனக்கும் ஒரு கதை நீண்ட வரலாறாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1902 ஆம் ஆண்டில் பிறந்த எனக்குள்ளும் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. நான் பல தடவைகள் செத்துப்பிழைத்திருக்கின்றேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன் அறிந்துவைத்திருக்கும் ஒருவரின் மகனும் எழுத்தாளன்தான். கவிதையும் எழுதியிருக்கின்றான். அவனுக்கு அன்று என்னைப்பார்த்ததும் அந்த அன்பரின் மகன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.
Last Updated on Wednesday, 13 November 2019 02:16
Read more...
Saturday, 09 November 2019 02:43
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
கவிதை

"இரவு முழுக்க வீட்டின் முன்னறையில் விளக்கெரிய குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக் கொண்டிருந்த அப்பாவின் கோபம் குளிர்ந்திருந்தது..... அதே அறையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அப்பாவின் உடலும் குளர்ந்திருக்க ஓயாமல் எரிந்து கொண்டே இருக்கின்றது அவ்வறையின் குண்டு பல்பும் அக்கா எழுதிச் சென்ற கடிதமும்......"
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Saturday, 09 November 2019 02:45
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் டிவோலி, லிபர்ட்டி திரையரங்கில் போடப்படும் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . அந்த சமயத்தில் நான் ஹைதராபாத் திரைப்பட சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை. தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து டிவோலி ,லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை நேரத் திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன் அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன்.ஞாயிறுகளில் வார விடுமுறை வந்தால் சவுகரியமாகப் போய்விடும், பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .அது ஒரு வகை அனுபவம் .
Last Updated on Monday, 11 November 2019 08:24
Read more...
 காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2017 டிசம்பரில் சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல் வெளிவந்த காலப் பகுதியிலேயே நூல் கையில் கிடைத்திருந்தும் அதை வாசிக்கத் தொடங்குவதற்கு நானெடுத்த கால நீட்சியின் கழிவிரக்கத்தோடேயே அதை அண்மையில் வாசித்து முடித்தேன்.
இந்திய சரித்திரத்தில் மாபெரும் நிகழ்வுகளைக்கொண்டது மொகலாய அரசர்களின் ஆட்சிக் காலம். அதில் பதினேழாம் நூற்றாண்டு மிகவும் தனித்துவமானது. மிக ஆழமாய் இன்றெனினும் அக் காலப் பகுதியின் சரித்திரம் வாசகனின் அறிதலில் தவறியிருக்க வாய்ப்பில்லை. வெகுஜன வாசிப்பில் பெரிதும் பேசப்பட்ட அனார்க்கலி – சலீம் காதல் அக்பர் கால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாகவும் கொண்டாடப்பட்டது. தீவிர வாசகர்களின் கவனத்தையும் அக்பர் காலம் வேறு காரணங்களில் வெகுவாக ஈர்த்திருந்தது. அக்பர் காலம் தொடங்கி ஜஹாங்கீர், ஷாஜகான் ஈறாக ஐந்து பேரரசர்களின் ஆட்சிபற்றிய விதந்துரைப்பில்லாத மொகலாய சரித்திரம் அதுகாலவரை எழுதப்பட்டிருக்கவில்லை; கதைகளும் தோன்றியிருக்கவில்லை. அத்தகு காலக் களத்தில் கதை விரித்த நாவல் ‘பெருவலி’.
இரண்டு பாகங்களாய் 167 பக்கங்களில் அமைந்த இந் நாவலின் முதலாம் பாகம் ஷாஜகானின் ஆட்சியை மய்யப்படுத்தியது. அன்றைய அரசியல் நிலபரம் விளக்கமாகும்படி அக்பர் முதற்கொண்டு தொடர்ந்த பேரரசர்களின் ஆட்சியும், வாழ்வும்பற்றி அளவான விவரிப்பை நாவல் கொண்டிருப்பினும், அது ஷாஜகான் – மும்தாஜின் முதிர் காதலுக்கு குறிப்பாய் அழுத்தம் தந்திருக்கும்.
தக்காணத்து அரசதிகாரியாயிருந்த ஷாஜகான் (அப்போது குர்ரம்) பதவியிலிருந்து நீக்கப்பட்டு அங்கேயே நிஜாம்சாஹியென்ற இடத்தில் தங்கவைக்கப்படுகிறார். அரசியல் சதுரங்கத்தின் காய் நகர்த்தல்களுடன் கதை அங்கிருந்துதான் ஹிஜ்ரா பானிபட்டின் பார்வையிலிருந்து ஆரம்பிக்கிறது. கதைசொல்லியும் அவ்வப்போது அவனை இடைவெட்டி கதையை நகர்த்திச் செல்வார். எவரது பார்வையிலிருந்து கதை விரிகிறதென்ற மயக்கம் வாசகனுக்குத் தோன்றாதபடி கதையை நகர்த்தும் படைப்பாளியின் சாதுர்யம் சிறப்பு. நாவலில் ஒரு மீள்பார்வை நிகழ்கிறபோதுதான் இந்த கதைசொல்லிகளின் மாற்றம்கூட வாசகனுக்குப் புலனாகிறது.
Last Updated on Friday, 08 November 2019 09:25
Read more...
Friday, 08 November 2019 00:03
- ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்., நெல்லை, தமிழகம்) -
சிறுகதை
எனக்கு நல்லா நினைவிருக்கு….., இருவத்தஞ்சு வரியமாகுது…. தைப்பொங்கல் கழிஞ்சு மற்றநாள் மாட்டுப்பொங்கல் அண்டைக்குத்தான் எங்கடை அன்னக்குட்டியும் பிறந்தது.
“அன்னக்குட்டி…….”
ஓமோம்…. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.
அன்னக்குட்டியிலையிருந்து நான் பத்து வயது மூப்பு. என்னோடை கூடப்பிறந்த பொம்பிளைபிள்ளையள் ஒருத்தரும் இல்லையே எண்டதாலையும் , அது என்ரை அம்மம்மா யாழ்ப்பாணத்திலையிருந்து ஆசையாய் வாங்கி அனுப்பிவிட்ட மாட்டின்ரை முதல் பசுக்கண்டு எண்டதாலையும், அன்னலச்சுமி எண்ட அவ பேரை வைச்சோம். என்னைப் பொறுத்தமட்டிலை, அன்னக்குட்டி எங்கடை குடும்பத்திலை ஒருத்தி. என்ரை தங்கச்சி…..!
“அன்னக்குட்டி ….. அண்ணை பள்ளிக்குடம் போட்டு வாறன்…. நீ அம்மாட்டை பால்குடிச்சிட்டு நல்லபிள்ளையா பேசாமல் இருக்கவேணும் தெரியுமோ….. துள்ளிப்பாஞ்சு விளையாடுறோமே எண்டு நினைச்சுக்கொண்டு கிணத்தடிப்பக்கம் போவுடாதை…. சரியோ…. கிணத்துக்கை ஒரு கிழவன் இருக்குது…. உன்னைப் பிடிச்சுப்போடும்….”
பள்ளிக்குடம் போகத் துவங்கிறத்துக்கு முதலெல்லாம், என்ரை அம்மாவும் இப்பிடித்தான் என்னட்டையும் அடிக்கடி சொல்லிச் சொல்லி வெருட்டிறவ…. நானும் அதுமாதிரிச் சொல்லிக்கில்லி வெருட்டி வைக்காட்டா, உது சும்மா கிடக்காது கண்டியளோ….
பள்ளிக்கூடத்தில இருக்கையுக்கையும் அன்னக்குட்டியின்ரை நினைவுதான்…..
வீட்டுக்கு வந்தாலும், நேரா கொட்டிலுக்குப் போய், பத்து நிமிசமாவது அன்னக்குட்டியோடை கதைச்சுப்போட்டுப் போனாத்தான் எனக்குப் பத்தியப்படும்….
Last Updated on Friday, 08 November 2019 00:06
Read more...

பதிவுகள் மார்ச் 2003 இதழ் 39
எங்கள் பரமபிதாவே!
சீதனத்தில் பாதித்தொகை ஏஜென்சிக்குப் போய்விட்டது.
அரைவருடச் சம்பளத்தின் மிச்சம் சீட்டுக் கழிவுக்குப் போய்விட்டது.
ஒரு மாதச் சம்பளம் இயக்கத்திற்குப் போன பின் எனக்கென்று ஆணிச் செருப்புக்கூட வாங்க முடியாதிருப்பதேன்?
Last Updated on Thursday, 07 November 2019 02:38
Read more...

1.
பதிவுகள் செப்டம்பர் 2003 இதழ் 45 மனசு! சூனிய வெளிக்குள்....... மனசு சூனிய வெளிக்குள் சிக்கித் தவிக்கிறது. உன்னவள் உன் அஸ்தியை ஊருக்கு அனுப்புவது பற்றிப் பேசினாள். அவள் புண்ணியவாட்டி. உன் அருகிருந்து தன் கடன் முடித்து விட்டாள்.
நான் எதுவுமே செய்யாதிருந்து விட்டு இப்போ.......... சூனிய வெளிக்குள் நின்று சுற்றிச் சுழல்கிறேன்.
Last Updated on Thursday, 07 November 2019 02:13
Read more...
“ஆசிரியரின் மரணம்” என்பது 1967 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இலக்கிய விமர்சகரும் தத்துவஞானியுமான ரோலண்ட் பார்த்ஸ் எழுதிய ஒரு கட்டுரை ஆகும் . இது மிகவும் செல்வாக்குமிக்க மற்றும் ஆத்திரமூட்டும் கட்டுரையாகும் (இது பல்வேறு கூற்றுக்களின் அடிப்படையில்) இலக்கிய விமர்சனத் துறையில் பல்வேறு குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் மாற்றங்களையும் செய்கிறது .
இதில் ஒப்பீட்டளவில் கலைப் படைப்பின் மூலம், உரையை அணுகுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பாரம்பரிய வழியை பார்த்ஸ் விமர்சிக்கிறார் மற்றும் அசைக்கிறார், இது எழுத்தாளரை மையமாகக் கொண்டது: இது ஆசிரியரின் நோக்கங்களைத் தேடுவதிலும், வாழ்க்கையை பகுப்பாய்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. உரையின் உள்ளடக்கத்தை மட்டும் மதிப்பிடுவதற்கு பதிலாக உரையின் பொருளை கட்டவிழ்க்க ஆசிரியரின் பின்னணி அவசியமில்லை என்கிறது.
முதல் பத்தியில், பால்சாக் எழுதிய நாவலான சர்ராசினிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பினெல்லாவின் கதாபாத்திரத்தின் மூலம் தனது கட்டுரையில் அவர் முன்வைக்கும் அடிப்படை கருத்தை விளக்க பார்த்ஸ் முயற்சிக்கிறார்.
இந்த கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகையில், உண்மையில் ஒரு பெண்ணாக மாறுவேடமிட்ட ஒரு காஸ்ட்ராடோ (ஒரு காஸ்ட்ரேட்டட் ஆண்), பால்சாக் எழுதுகிறார், “ இது பெண், அவளது திடீர் அச்சங்கள், பகுத்தறிவற்ற விருப்பங்கள், அவளது உள்ளுணர்வு அச்சங்கள், அவளது தூண்டப்படாத துணிச்சல், அவளுடைய தைரியம் மற்றும் சுவையானது உணர்வின் சுவையாக இருக்கிறது. "
இந்த வெளிப்பாடுகளில் யாருடைய கருத்துக்கள் வெளிவருகின்றன என்பதை அறிய முடியுமா என்ற கேள்வியை பார்த்ஸ் எழுப்புகிறார். பேசும் அந்த நாவலின் தன்மை இவையா? பால்சாக் தனது முன்கூட்டிய அறிவு மற்றும் பெண்களின் தப்பெண்ணத்துடன் பேசுகிறாரா அல்லது அது வேறு யாரின் குரல்?
அடிப்படையில், ஒரு வாசகனாக பார்த்ஸ் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அந்த கதாபாத்திரத்தின் வழியாகவோ அல்லது வேறு ஒருவரின் வாயிலிருந்தோ வரும் எழுத்தாளரின் தனிப்பட்ட கருத்தாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட பாத்திரம் என்ன பேசுகிறது என்பதை ஒருவரால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது.
Last Updated on Thursday, 07 November 2019 01:30
Read more...
Sunday, 03 November 2019 08:57
- புதியவன் -
ஆய்வு
இக்கட்டுரை சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகளின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். மார்க்சிய சமூகவிஞ்ஞானம் கண்டறிந்த சமூக முடிவுகள் மனிதகுல வரலாற்றில் முப்பெரும் பிரிவுகளாக அறியப்படுகின்றது.
1. வர்க்கங்கள் தோன்றாத சமூகம் 2. வர்க்கச் சமூகங்கள் 3. எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற பொதுவுடைமை சமூகம்
1.வர்க்கங்கள் தோன்றாத சமூகம் மனித மூதாதையர்கள் வாழ்ந்த வர்க்கங்கள் தோன்றாத சமூகம். அதாவது, தனிச்சொத்துடைமை தோன்றாத சமூகம். இதனை ஆதிப் பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமைச் சமூகம் என்பர். இக்காலக்கட்டத்தில் மனிதர்களுக்குள் வர்க்கப்பிரிவு தோன்றியிருக்கவில்லை. அதாவது, உழைப்பவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்கின்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை. தாய் தலைமையில் காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்து வாழ்ந்தார்கள். வேட்டை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியன கரு வடிவில் தோன்றியிருந்தன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் இத்தகைய வர்க்கமற்ற புராதன பொதுவுடைமை சமூகத்திலேயே வாழ்ந்தார்கள்.
Last Updated on Sunday, 03 November 2019 09:22
Read more...
 மகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர்.
அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார்.
பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில் மாங்கொட்டைச்சாமி என அழைக்கப்பட்ட குள்ளச்சாமி புதுச்சேரியில் அறிமுகமாகிறார். நாளரை அடி உயரமுள்ள அவருடைய ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.
வீதியோரத்தில் படுத்துறங்குவார். மண்ணில் புரள்வார். நாய்களுடனும் அவருக்கு சண்டை வரும். கள்ளும் அருந்துவார். கஞ்சா புகைப்பார். பிச்சையும் எடுப்பார். இருந்தும் அவர் துணி வெளுக்கும் தொழிலாளி. ஒரு சமயம் பாரதியிடத்தில் " நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேல் சுமக்கிறேன்" என்றார்.
மற்றும் ஒருநாள் பாரதி, அந்தக்குள்ளச்சாமியிடம், " ஞானநெறியில் செல்லவிரும்புபவன் எந்தத்தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும்...? " என்று கேட்கிறார்.
அதற்கு அந்தச்சாமியார், " முதலில் நாக்கை வெளுக்கவேண்டும், பொய், கோள், கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி என்பன கூடாது. உண்மையைத்தவிர வேறொன்றும் இந்த நாக்கு பேசலாகாது. அச்சத்தை அகற்றவேண்டும். அதற்கு மனதினுள் இருக்கும் இருளைப்போக்கவேண்டும்" எனச்சொல்லியிருக்கிறார். அதன் பிறகு,
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்..... அச்சமில்லை... அச்சமில்லை.... மனதிலுறுதி வேண்டும்... முதலான சாகாவரம் பெற்ற வரிகள் பாரதியிடத்தில் பிறக்கின்றன.
Last Updated on Wednesday, 13 November 2019 02:16
Read more...
Sunday, 03 November 2019 01:26
- - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் - -
கவிதை

வாகை சூடிய ஹரி ஆனந்தசங்கரி
வையமெலாம் போற்றும் வகையான வெற்றியின் கைகளிலே வென்றான் ஹரி !
ரூச்றிவர் வண்ணம் உளமாகிச் செந்தமிழ் ஆச்சுதே மீண்டும் அரண் !
இன்பக் கனடா இயன்றபத் தொன்பதின் நற்தேர்தல் சொல்லும் நலம் !
சனரஞ் சகத்தோடும் சான்றாகும் யஸ்ரின் கனடாவென் றானார் கரம் !
எந்நாளும் மக்கள் இதயத் திருப்பாகும் நல்லோர்க் கெனவாகும் நாடு !
முள்ளிவாய்க் காலும் முகத்தும் கனலாகி அள்ளுதுயர் கண்டார் அரி !
கனடா நிலைப்பாடு கண்டதுவே அய்நா இனத்தோடும் எண்ணம் எடுத்து !
போர்தந்த நாட்டிற் புதையுற்ற தாய்நிலத்தில் நேர்கண்ட மாந்தன் நெறி !
ஐந்தல்ல நூறல்ல ஆயிரம்பல் லாயிரம் தந்துமண் கண்டான் தனம் !
மண்ணொடும் நீராக வயலொடும் நெல்லாக எண்ணிய மாமனிதன் என்க !
Last Updated on Friday, 29 November 2019 02:04
Read more...
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் --
- எழுத்தாளர் திலகபாமா கவிதை, சிறுகதை, விமர்சனம் எனப் பன்முக இலக்கியப் பங்களிப்பு செய்து வருபவர். பட்டி வீரன் பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருபவர். இவரது கவிதைத்தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள் , கட்டுரைத்தொகுப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. 'கழுவேற்றப்பட்ட மீன்கள்' என்பது இவரது வெளிவந்த நாவலாகும். 'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்ப காலத்தில் இவர் தன் எழுத்துலகப் பயணத்தைத்தொடங்கியவர். பதிவுகள் இணைய இதழிலும் இவரது படைப்புகள் பல வெளியாகியுள்ளன. அவ்விதம் வெளியான கவிதைகளே இங்கு பதிவாகின்றன. இவரைப்பற்றிய விரிவான விக்கிபீடியாக் குறிப்புகளுக்கு: https://ta.wikipedia.org/s/olr -
1. பதிவுகள் ஏப்ரில் 2002 இதழ் 28 தவம் கிடக்கும் கல் சாபம் தந்ததாய் உன் சாணக்கிய சிரிப்பு கட்டிய தாலிக்காய் உடைமை ப் பொருளாய் எனை சந்தித்த உன்னிடமிருந்து விமோசனம் தந்த வரமாய் என் சிந்திப்பின் தித்திப்பு காலால் தீண்டி பெண்ணாய் மாற்றும் அவதாரம் நாடாது கலையை நெஞ்சில் கொண்டு சிலையாய் மாற்றும் சிற்றுளிக்கும் தாங்கிய கைதனுக்கும் காத்திருக்கும் என் தவம்
Last Updated on Saturday, 02 November 2019 07:57
Read more...
Friday, 01 November 2019 08:38
- பதிவுகளில் அன்று: நட்சத்திரவாசி (பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான்) -
'பதிவுகளில்' அன்று
- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் --
- பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான் உலக இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், அறிவியற் கோட்பாடுகள், கலை, இலக்கிய ஆளுமைகள் என ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடான கட்டுரைகளை மற்றும் கவிதைகளை எழுதிவருபவர். நட்சத்திரவாசி என்னும் புனைபெயரில் இவர் அன்று பதிவுகள் இணைய இதழில் எழுதிய கவிதைகளிவை. இவரது வலைப்பதிவு: நட்சத்ரவாசியின் தளம் (https://natchathravasi.wordpress.com/). -
பதிவுகள் டிசம்பர் 2010 இதழ் 132 கடைசி வேட்டை -
ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன்\ பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான் மெல்ல தென்றல் வீசுகையில் நான் நினைவுகளில் என்னை காண்கிறேன் எனது தேசத்தில் எனக்கிருந்த வீடும்,ஊரும் இல்லாமல் போயிற்று என்னை ஆண்ட காதலியவளின் முகமும் கூட ஒரு மின்னல் வெட்டென வந்து போகிறது அவ்வப்போது நினைவுகள் எனது குழந்தைகளிடன் நான் கொண்ட பாசம் கண்ணீராய் வானத்தில் ஊர்ந்து போகிறது வெண்ணிற மேகக் கூட்டமாய் அது எங்கோ மழையாய் பெய்யக் கூடும் என் சோகம் சொல்லி எனினும் வறண்ட பாலையில் தூசிக்காற்றாய் சுழலும் உயிரின் பொடிதுகள்கள் உயிராக வேண்டி தியானிக்கின்றன அவனோ ஏழு வானங்களுக்கு மேல் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறான் அவனுக்கு தெரியாததல்ல தனிமையும்,உவர்ப்பும் மந்திரத்தால் அவனை வசியம் செய்து எனதுயிரை என்னிடம் சேர்க்கும் வல்லமையுடையவன் யாரோ எப்போது வர கூடுமோ எனினும் நான் காத்திருக்கிறேன் எனது ஊரின் ரம்மியமான பொழுதுகளை குடித்து காதல் போதையை கிரகித்து ஊன் அழிய சிதிலமாய் போகுமிந்த உயிர்கூட்டில் கடைசி வேட்டை எப்போதோ சொல்லிவிடு அதற்கு முன்னால் எனக்கொரு சேதியனுப்பவேண்டும்.
Last Updated on Friday, 01 November 2019 08:49
Read more...
 - முகநூல் பல ஆளுமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களில் ஒருவர் பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான் . முகநூலில் உலக இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், அறிவியற் கோட்பாடுகள், கலை, இலக்கிய ஆளுமைகள் என ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடான கட்டுரைகளை எழுதிவருபவர் இவர். இவரது வலைப்பதிவு: 'நட்சத்ரவாசியின் தளம்' (https://natchathravasi.wordpress.com/). இவரைப்போன்ற பலரின் பயனுள்ள பதிவுகள் இங்கு மீள்பதிவு செய்யப்படும். - பதிவுகள் -
"உடலின் பயனற்ற பாகங்களை" அகற்றுவது
உயிரணுக்களைக் கையாள்வதற்கான புதிய தொழில்நுட்பங்களால் வழங்கப்பட்ட மனிதர்களை வளர்ப்பதற்கும் வடிவமைப்பதற்கும் சாத்தியக்கூறுகள் ஆபத்தானவை என்று தோன்றலாம், ஆனால் இப்புலத்தின் ஆரம்ப நாட்களில் சில விஞ்ஞானிகள் முன்னறிவித்ததை ஒப்பிடும்போது அவை பழமைவாதமானவை மட்டுமே.
சொற்போர்களுக்கு இடையிலான உயிரியலாளர்கள் மற்றும் உயிர் வேதியியலாளர்களின் குறிப்பிடத்தக்க தலைமுறையில் ஜான் டெஸ்மண்ட் பெர்னல் என்பவரும் ஒருவர் - இதில் ஜேபிஎஸ் ஹால்டேன், ஜோசப் நீதம், ஜூலியன் ஹக்ஸ்லி மற்றும் கான்ராட் ஹால் வாடிங்டன் ஆகியோர் அடங்குவர் - அவர் வளர்ச்சி மற்றும் மூலக்கூறு உயிரியலின் அடித்தளங்களை அமைத்தார், அதே நேரத்தில் அவற்றை வளர்ச்சிபெற்ற கருத்தாகமாக செய்தார் அறிவியலின் சமூகப் பாத்திரங்களின் உறுதியான பார்வைக்கு அவை முன்னேறுகிறது. பெர்னலின் நீட்டிக்கப்பட்ட கட்டுரை தி வேர்ல்ட், தி ஃபிளெஷ் அண்ட் தி டெவில் (1929) என்பது இன்று நாம் உயிரி தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் ஒழுக்கத்தால் வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறித்த ஹால்டேனின் ஊகங்களுக்கு விடையிறுப்பாகும், அவை கேம்பிரிட்ஜில் உள்ள ஸ்ட்ரேஞ்ச்வேஸ் ஆய்வகத்தில் திசு வளர்ப்பு பற்றிய ஆராய்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டன.
டேடலஸ் , அல்லது சயின்ஸ் அண்ட் தி ஃபியூச்சர் (1924) இல் இனப்பெருக்கம் பற்றிய ஹால்டேனின் கணிப்புகள், பல விஞ்ஞானிகள் இன்று ஆபத்தை விளைவிப்பதைத் தாண்டியதைத் தாண்டி ஊகிக்கவும், விரிவுபடுத்தவும் ஒரு தயார்நிலையைக் காட்டினால், அது உயிரி தொழில்நுட்பம் எங்கு செல்லக்கூடும் என்பது பற்றிய பெர்னலின் எண்ணங்களுடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை. இறுதியில், “உடலின் பயனற்ற பாகங்களை” அகற்றி அவற்றை இயந்திர சாதனங்களுடன் மாற்றலாம்: செயற்கை கால்கள் மற்றும் உணர்ச்சி சாதனங்கள் மிகச் சிறந்த வேலையைச் செய்கின்றன. முடிவில், இந்த சைபோர்க் இருப்பு ஒரு வகையான "மூளையில் ஒரு மூளையாக" மாறும், இது ஒரு உடலுக்குப் பதிலாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களின் விநியோகிக்கப்பட்ட அமைப்பு வரை இணைக்கப்பட்டுள்ளது:
Last Updated on Thursday, 31 October 2019 22:29
Read more...
Tuesday, 29 October 2019 21:29
- பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான் (Mujeeb Rahman) -
முகநூல் குறிப்புகள்
 - முகநூல் பல ஆளுமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களில் ஒருவர் பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான் . முகநூலில் முகநூலை உலக இலக்கியம், இலக்கிய கோட்பாடுகள், அறிவியற் கோட்பாடுகள், கலை, இலக்கிய ஆளுமைகள் எனத் தன் முகநூலில் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடான கட்டுரைகளை எழுதிவருபவர் இவர். இவரது வலைப்பதிவு: 'நட்சத்ரவாசியின் தளம்' (https://natchathravasi.wordpress.com/). இவரைப்போன்ற பலரின் பயனுள்ள பதிவுகள் இங்கு மீள்பதிவு செய்யப்படும். - பதிவுகள் -
மிகாயீல் ஃபூக்கோவின் ஆரம்பகால வாழ்க்கை இரண்டாம் உலகப் போரினால் தீர்க்கமாகக் குறிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலரிடம் அவர் ஏன் ஒரு தத்துவஞானியாக மாற முடிவு செய்தார் என்று கேட்டதற்கு , ஃபூக்கோ பதிலளித்தார்: “நான் பத்து அல்லது பதினொரு வயதில் எப்போது ஜெர்மானியரராக மாறுவோமா அல்லது பிரெஞ்சுக்காரராக இருப்போமா என்று எங்களுக்குத் தெரியாது. குண்டுவெடிப்பில் நாங்கள் இறந்துவிடுவோமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது ”. அவரது பதினாறு வயதிற்குள், ஃபூக்கோ "ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே அறிந்திருந்தார்": அந்த பள்ளி வாழ்க்கை அவருக்கு "வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட சூழலை" வழங்கும். இதற்கு, ஃபூக்கோ அறிவு "தனிப்பட்ட இருப்பைப் பாதுகாப்பதற்கும் வெளிப்புற உலகத்தைப் புரிந்துகொள்வதற்கும் செயல்படுகிறது" என்று கூறினார். அறிவு என்பது “புரிந்துகொள்வதன் மூலம் உயிர்வாழும் ஒரு வழிமுறையாகும்”.
1946 ஆம் ஆண்டில் ஃபூக்கோ எக்கோல் நார்மல் சூப்பரியூரில் அனுமதி பெற்றார். 1952 ஆம் ஆண்டில் மனநோயியல் பட்டம் பெற்றார், அவர் பாரிஸில் உள்ள ஹெப்பிடல் சைன்ட்-அன்னேயில் மனநல நோயாளிகளுடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார், அங்கு அவர் தொடர்ந்து உளவியல் படித்து வந்தார். இந்த நேரத்தில் அவர் லுட்விக் பின்ஸ்வாங்கரின் டிராம் அண்ட் எக்ஸிஸ்டென்ஸை மொழிபெயர்க்கவும் உதவினார் - இதற்காக அவர் ஒரு நீண்ட அறிமுகத்தை எழுதினார். 1953 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில், ஃபூக்கோ லில்லி பல்கலைக்கழகத்தில் உளவியலைக் கற்பித்தார், மேலும் அவரது முதல் புத்தகத்தை வெளியிட்டார்: மன நோய் பற்றிய ஒரு புத்தகம் மற்றும் 1850 முதல் 1950 வரையிலான உளவியலின் வரலாற்றைக் கண்டுபிடிக்கும் ஒரு சிறு படைப்பு. மைசன் டி பிரான்சின் இயக்குநர் பதவியை ஆக்கிரமித்து 1950 களின் நடுப்பகுதியில் உப்சாலா, மேற்கில் பைத்தியக்காரத்தனமான வரலாற்றை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார், இது சோர்போனில் அவரது முதன்மை ஆய்வறிக்கையாக மாறும்.
வார்சா பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் கழித்த பின்னர், பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சு நாகரிக மையத்தை மீண்டும் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஃபூக்கோ, ஹாம்பர்க்கில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் இயக்குநராக சுருக்கமாக பணியாற்றினார். அவர் 1960 இல் கிளெர்மான்ட்-ஃபெரண்ட் பல்கலைக்கழகத்தில் உளவியலில் விரிவுரையாளராக ஒரு பதவியை ஏற்றுக்கொண்டார், மேலும் 1961 இல் சோர்போனில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஃபோலி எட் டெரைசனும் 1961 இல் வெளியிடப்பட்டது, மேலும் நைசன்ஸ் டி லா கிளினிக் மற்றும் ரேமண்ட் ரூசலின் வெளியீடு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது 1966 வாக்கில் , லெஸ் மோட்ஸ் மற்றும் லெஸ் தேர்வுகளின் அசாதாரண வெற்றியுடன், ஃபூக்கோ பிரான்சில் ஒரு முன்னணி புத்திஜீவியாகிவிட்டார். அதே ஆண்டு செப்டம்பரில், துனிஸ் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதற்காக பிரான்சிலிருந்து புறப்பட்ட அவர், பின்னர் 1968 இல் திரும்பி வின்சென்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியர் பதவியைப் பெற்றார். 1969 ஆம் ஆண்டில், L'archéologie du savoir ஆக தோன்றினார்.
Last Updated on Thursday, 31 October 2019 22:30
Read more...
Tuesday, 29 October 2019 05:46
- நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் மதுமிதா. - -
நேர்காணல்

மதுமிதா: வணக்கம் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தின் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அண்மையில் நூலாக்கம் பெற்றது குறித்து அறிகிறேன். வாழ்த்துக்கள்.
ஜெயந்தி சங்கர்: நன்றி மதுமிதா. Dangling Gandhi என்ற நூல் 2019ல்பிரசுரம் கண்டிருக்கிறது. 2011ல் எழுதி உள்ளூர் Ceriph இதழில் பிரசுரமான ஒரு கதை தவிர மற்ற 11 கதைகளுமே கடந்த நான்காண்டுகளில் எழுதப்பட்டவை.
மதுமிதா: நல்லது, தமிழில் சிறுகதை, குறுநாவல், நாவல் என்று பல வடிவங்களிலும் இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறீர்கள். ஆங்கில சிறுகதைகளை எழுதும் விருப்பம் எப்போது எப்படி உங்களுக்குள் எழுந்தது?
ஜெயந்தி சங்கர்: சுமார் இருபத்தோரு ஆண்டுகள் தமிழில் எழுதிய பின்னர் 2016 முதல் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதத் தொடங்கியிருக்கிறேன். முதலில் 1995ல் எழுதத் தொடங்கியபோதே ஈராண்டுகளுக்கு இரு மொழிகளிலுமே எழுதினேன். எனினும், ஒரு கட்டத்தில் என்னதிது ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தலாமே என்றெண்ணியதன் பயனாய் தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.
அசோகமித்ரன் உள்ளிட்ட மதிப்பிற்குரிய சில மூத்த தமிழ் எழுத்தாளர்கள் சீக்கிரமே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்து இறுதிவரை தமிழிலேயே எழுதி வந்தனர் என்பது நமக்கெல்லாம் தெரியும், இல்லையா? எந்தத் திட்டமும் இல்லாமலே எனக்கு அப்படியே தலைகீழாக நடந்துள்ளது.
சீக்கிரமே ஆங்கிலத்துக்கு வந்துவிடுவேன் என்றே எண்ணியிருந்தேன் அப்போது. ஆனால், நான் நினைத்ததைவிட தமிழ் என்னை நீண்டகாலம் தக்கவைத்துக் கொண்டது. தாமதமாகவேனும் ஆங்கிலத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
Last Updated on Tuesday, 29 October 2019 06:29
Read more...
கீழ்கண்ட கல்வெட்டு குறும்பர் என்கிறது.
1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகேசரி பந்மற்கியாண்டு 1. 2 ஆவது வாணகோவரையர் குணமந்தன் குறும்ப கோ 3 லாலன் வயிரமேகனார் கொடுக்கன் சிற்றண்பு(லி) 4 நாடன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரம(தே) 5 யூர் நாடி சதுர்வேதிமங்கலத்து (வா)ரிக்கு.. 6 த்த பொன் முதல் இருபதின் கழஞ்சு து(ளை).. 7 ......யால்.......................
தெலுங்கில் கொடுக்கு மகனைக் குறிக்கிறது. செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி கொடுக்கு என்றால் தமிழில் மகன் என்று பொருள் கூறுகிறது. இக்கல்வெட்டில் கொடுக்கு என்றச் சொல் கொடுக்கன் என மகனைக் குறிக்க வருவது நோக்கத்தக்கது.
வாண அரசர்கள் பல்லவரோடு மணவினை செய்துகொண்டு பிள்ளைகளுக்கு பட்டான் பெயரை சூடிக்கொண்டதால் வயிரமேகன் பெயர் வாணர்களுக்கும் வழங்கலாயிற்று. இந்த வயிர மேகன் கம்பவர்ம காலத்தவன்.
விளக்கம்: வாண அரசரும், குணம் நிரம்பியவரும் (குணமந்தை > குணமந்தன்), குறும்பர் தலைவருமான (கோலாலன்) வயிரமேகனார் மகனும் ஆன சிற்றண்புலி நாட்டின் அதிபன் திருவண்ணா நாட்டு தேவதாநப் பிரம(தே) யூரை நாடிச் சென்று அங்கத்து சதுர்வேதிமங்கல குளத்திற்கு (வாரிக்கு) .. இருபது கழஞ்சு பொன் கொடையளித்தான் என்பது செய்தி. வயிரமேகன் இறந்தபின் இவன் இக்கொடை நல்கியிருக்க வேண்டும்.
Last Updated on Monday, 28 October 2019 09:44
Read more...

1. Puthiyavan Siva <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Oct. 28 at 1:14 p.m.
வணக்கம் சான்றீர், எனது ஆய்வு மற்றும் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு பதிவுகள் இணைய இதழ் அங்கீகாரம் வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன். தங்கள் அங்கீகாரத்தால் கிட்டும் ஊக்கத்தைப் பயன்படுத்தி இலக்கியத்தின் சமூகவிஞ்ஞான இலட்சியங்களுக்கு எனது பங்களிப்பை செலுத்துவேன் என உறுதியளிக்கிறேன். நன்றி சான்றீர்.
என்றும் அறிவன்புடன்
புதியவன்
2. Letchumanan Murugapoopathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
> Oct. 29 at 6:02 p.m.
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு குழந்தை சுர்ஜித்துக்காக நீங்கள் வரைந்த கண்ணீர் ஓவியம் படித்து உருகிப்போனேன். பெற்றோரின் கவன ஈனம் அரசினதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலிருக்கும் மெத்தனங்களும்தான் இத்தகைய இழப்புகளுக்கு அடிப்படை! ஆழ்துணை கிணறுகளை சுற்றி வேலி அமைத்து - அல்லது அவற்றை நிரந்தரமாக மூடியாவது உயிரிழப்புகளை தடுக்கமுடியும். மேலே இருக்கும் இணைப்பையும் பார்க்கவும். அறம் என்ற திரைப்படத்தையும் நீங்கள் பார்த்திருக்கலாம். நன்றி.
அன்புடன் முருகபூபதி
3. Rajalingam Velauthar <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Oct. 29 at 5:17 p.m.
ஈரம் வற்;றிவிட்ட நிலையில் இதயத்தைத் தொடும் குரல். நெஞ்சைத் தொடுகிறது.
- தீவகம் வே.இராசலிங்கம்
4.
1. Sunil Joghee <suniljogTo:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Oct. 23 at 1:29 p.m. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். முனைவர் கோ. சுனில்ஜோகி ஆகிய நான் கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றேன். நீலகிரி மலைவாழ் மக்களான படகர் இன மக்களை பற்றியும் தோடர், குறும்பர் போன்ற இதர பழங்குடி மக்களைப் பற்றியும் 13 ஆண்டுகள் ஆய்வு அனுபம் பெற்றுள்ளேன். இது சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். மேலும் கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புத் திறன்களையும் நான் பெற்றுள்ளதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். என் ஆய்வு சார்ந்த தகவல்களை, என் படைப்புகளை உலகம் முழுவதற்கும் பகிர விழைகிறேன். நன்றி....
[ நன்றி. உங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். 'பதிவுகள்' அவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஆவலாகவுள்ளது. எழுத்தாளர் பிலோ இருதயநாத் பல வருடங்களுக்கு முன்னர் இந்தியப் பழங்குடி மக்களைப்பற்றி எழுதிய சஞ்சிகைக் கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன. மானுடவியற் துறையில் இவை போன்ற கட்டுரைகள் முக்கியமானவை. உங்கள் பணி பாராட்டுக்குரியது. - ஆசிரியர், பதிவுகள்.]
Last Updated on Thursday, 31 October 2019 23:43
Read more...
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும உலகெங்கும் பரந்திருக்கும், ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட 43 சிறு கதைகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் “Unwinding".இதில் திருப்பூரைச் சார்ந்த சுப்ரபாரதிமணியனின் கதையும் இடம்பெற்றுள்ளது .இதன் வெளியீடு அறிமுகம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ( NCBH. NBT ) திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் முகப்பில் நடைபெற்றது. சென்னையைச் சார்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மா ப கணேசன் வெளியிட சுப்ரபாரதிமணியன் பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சிக்கு பி ஆர் நடராஜன் ( ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) தலைமை வகித்தார். சண்முகம் (( திருப்பூர் மாவட்ட தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை அளித்தார்.
பத்திரிக்கையாளர் மா ப கணேசன் பேசுகையில் “ தமிழில் 1960கள் வரை மொழிபெயர்ப்பு நூல்கள் இலக்கியம் மற்றும் பிற துறைகளில் சிறப்பாக வெளிவந்தன. அந்த வகையில் பல படைப்பாளுமைகள் பணிபுரிந்தனர் . அதற்குப்பின் தொயவு உள்ளது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளில மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்கும் ஆர்வம் வளர்ந்துள்ளது ஆரோக்கியமானது. மொழிபெயர்ப்புத்துறை இளைஞர்களுக்கு நல்ல வருமானம் தரும் பணியாக இன்றைய தொழில் நுட்ப உலகில் மலர்ந்துள்ளதை புதிய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்
Last Updated on Saturday, 09 November 2019 01:36
Read more...
1.கருங்காணு. - நாவல் அ ரங்கசாமி
மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு போன்றவை அவர் நாவல்களில் குறிப்பிடத்தக்க பதிவுகளாக உள்ளன இந்த நாவல்களின் பல அம்சங்களை மீண்டும் கருங்காணு நாவலில் கொண்டுவந்திருக்கிறார் ரங்கசாமி அவர்கள். 1940களில் தொடங்கி சுமார் 20ஆண்டுகள் மலேசியா சுதந்திரம் வரைக்குமான காலகட்டம் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது பொன்னன் என்ற ஒரு தமிழனின் குடும்பத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது . ஒரு தமிழ் குடும்ப வாழ்க்கை என்பது மட்டுமில்லாமல் மலேசிய தமிழர்கள் மலேசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வாழ்வியல் சிக்கல்களை மிகவும் கூர்மையாக இந்த நாவல் சொல்கிறது .
இந்த நாவல் நாதன் என்ற புரட்சியாளன் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார் . தோட்டக் காட்டில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக முயற்சியில் அவர் பெரும் ஈடுபாட்டை காட்டுகிறார். அவர் மூலம் பலருக்கு சில உரிமைகள் கிடைக்கிறது. இன்னைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி மண்ணுல நமக்காக நாமே பாடுபடுவதுதான் என்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதை தன்னுடைய உழைப்பிலும் செலுத்துகிறார்கள் ரேஷன் கடை வருகை , மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சஞ்சலங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன கம்யூனிஸ்டுகள் எப்படி அந்த காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்தார்கள் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார், இந்த நாவலில் செம்பணைக் காடுகளுக்குள் இருந்துகொண்டு செம்மரங்கள் மூலம் என்னை தயாரித்து வெளிக்கொணரப்படுகிறது என்பது ஒரு பகுதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பாமாயில் இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது சாதாரண மக்களுக்காக ரேஷன் கடைகளில் இந்த பாமாயில் விற்கப்படுகிறது . இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு எண்ணெய் வகைகள் புறக்கணிக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்த பாம் ஆயில் எப்படி தயாரிப்பிற்கு வந்தது என்பதை பல கதாபாத்திரங்கள் மூலம் பெறப்படுகிறது .நெல் சோறு பற்றி கேள்விப்பட்டு இருப்போம் இதில் மரவள்ளி சோறு பற்றிய குறிப்புகள் உள்ளன . உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற ரீதியில் தமிழர்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள் ஜப்பான்காரர்கள் உடைய ஆக்கிரமிப்பு தமிழர்களின் வாழ்க்கையில் பல சோதனைகளை எழுப்புகிறது . பிறகு 1953 அவர்கள் சரணடைந்து விடுகிறார்கள் அதற்கு பின்னால் வருகின்ற காலகட்ட சோதனைகளும் விளக்கப்பட்டுள்ளன. நமக்கு எல்லாம் நல்ல காலம்தான் வெள்ளைக்காரன் சீக்கிரம் திரும்பி வந்து விடுவாள் பழைய காலம் திரும்பும் என்று பல நம்பிக்கைகள் சிலருக்கு வருகின்றன ஆங்கிலேயன் வருகின்றான், அவருடைய நடவடிக்கைகளும் உழைப்பாளர்களுக்கு எதிராகவும் இருக்கிறது , சுதந்திரம் , பெரும் கலகம் நேதாஜியின் எழுச்சியும் மரணமும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது நேதாஜியின் மரணம் சார்ந்து தமிழர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகளும் சொல்லப்பட்டிருக்கிறது .
Last Updated on Friday, 25 October 2019 09:06
Read more...

எனது 41 கவிதைகள் 'வ.ந.கிரிதரன் கவிதைகள் 41' என்னும் மின்னூலாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தற்போது பிடிஃப் வடிவிலேயே மின்னூல் கிடைக்கும். எதிர்காலத்தில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். வாங்குவதற்கான இணைய இணைப்பு:
Last Updated on Saturday, 19 October 2019 09:59
Read more...
Wednesday, 16 October 2019 05:18
- வ.ந.கி -
மின்னூல்கள்
பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்', அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். 'பதிவுகள்' இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும்.

எனது 60 கட்டுரைகள் அடங்கிய தொகுதி 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள் 60 (இலக்கியம், கட்டடக்கலை & அறிவியல்) என்னும் தலைப்பில் மின்னூலாகப் 'பதிவுகள்.காம்' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. விலை விபரம்: $6 தற்போது பிடிஃப் கோப்பாக இம் மின்னூல் கிடைக்கின்றது. இம் மின்னூலினை வாங்க விரும்புபவர்கள் பின்வரும் இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம்:
தொகுப்பிலுள்ள கட்டுரைகள் விபரங்கள் வருமாறு:
Last Updated on Wednesday, 16 October 2019 10:10
Read more...
Tuesday, 15 October 2019 02:34
administrator
மின்னூல்கள்
- பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்', அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். 'பதிவுகள்' இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும். -

வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகளின் மின்னூற் தொகுப்பு 'பதிவுகள்.காம்' வெளியீடாக வெளியாகியுள்ளது. தற்போது பிடிஃப் கோப்பாகவே தொகுப்புள்ளது. விலை $4 (கனடியன்). புகலிட அனுபவங்களை உள்ளடக்கிய கதைகள், விஞ்ஞானப்புனைவுகளை உள்ளடக்கிய கதைகள் எனப் பல்வேறு களங்களைக் கொண்ட கதைகள் இவை. இணைய இதழ்கள் மற்றும் அச்சூடகங்களில் வெளியானவை, மின்னூலை வாங்க விரும்பினால் கீழுள்ள இணைய இணைப்பை அழுத்தவும்:
Last Updated on Wednesday, 16 October 2019 05:36
Tuesday, 15 October 2019 02:28
administrator
மின்னூல்கள்
- பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்', அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். 'பதிவுகள்' இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும். -
AMERICA is the English translation of my Tamil novel AMERICA (அமெரிக்கா) . This is based on a Sri Lankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized.
Now this novel is available as an e-book (as a PDF document - $3 ). To buy the book:
Last Updated on Wednesday, 16 October 2019 05:30
Tuesday, 15 October 2019 02:24
administrator
மின்னூல்கள்
- பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்', அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். 'பதிவுகள்' இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும். -

'AN IMMIGRANT' is the English translation of my Tamil novel 'KudivaravaaLan' (குடிவரவாளன்). I have already written a novella , AMERICA in Tamil, based on a Sri Lankan Tamil refugee's life at the detention camp in New York. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. if my short-novel describes life at the detention camp, this novel ,AN IMMIGRANT, describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. Now this novel is available as an e-book (as a PDF document). To buy the book:
Last Updated on Wednesday, 16 October 2019 05:31
- பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்', அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். 'பதிவுகள்' இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும். -
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க:
1983 இலங்கை இனக்கலவரத்தைத்தொடர்ந்து , பிறந்த மண்ணை விட்டுப் புகலிடம் நாடிக் கனடா புறப்பட்ட வேளை, வழியில் பாஸ்டன் நகரிலிருந்து கனடாவின் மான்ரியால் நகருக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய 'டெல்டா ஏர் லைன்ஸ்' நிறுவனம் எம்மை ஏற்றிச் செல்ல மறுத்து விடவே, அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் எம்மை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதில் மும்முரமாகவிருந்தார்கள். அதிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லின் நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டோம். அக்காலகட்ட அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் விளைவே எனது நாவலான 'அமெரிக்கா'. அளவில் சிறியதானாலும் இந்நாவல் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முதலில் புகலிடம் நாடிச்சென்ற இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் நாவல் இதுவேயென்பேன். இந்நாவல் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக மற்றும் கனடா மங்கை பதிப்பக வெளியீடாக மேலும் சில சிறுகதைகளையும் உள்ளடக்கி வெளியானது. இதன் தொடர்ச்சியாக இந்நாவலின் நாயகன் இளங்கோவின் நியூயோர்க் மாநகரத்து அனுபவங்கள் 'குடிவரவாளன்' என்னும் நாவலாகத் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியானது.
'அமெரிக்கா' நாவல் தனி நூலாக வெளிவரவேண்டுமென்ற என் கனவினை நனவாக்கிய எழுத்தாளரும் , 'மகுடம்' பதிப்பக உரிமையாளருமான மைக்கல் கொலின் அவர்களுக்கும், அட்டைப்படத்தினைச் சிறப்பாக வடிவமைத்துத் தந்த கட்டடக்கலைஞர் சிவசாமி குணசிங்கம் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
'அமெரிக்கா' மின்னூலினை $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு:
Last Updated on Wednesday, 16 October 2019 05:36
Tuesday, 06 January 2015 18:50
- பதிவுகள் -
மின்னூல்கள்
- பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்', அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். 'பதிவுகள்' இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும். -
வணக்கம்! 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்):
குடிவரவாளன் நாவல் பற்றி மேலும் சில குறிப்புகள்... வ.ந.கிரிதரன் - இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா 'எயார் லைன்ஸ்' எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.
Last Updated on Wednesday, 16 October 2019 05:36
Read more...

மானுட விடுதலைக்காகத் தன்னுயிர் தந்த மாவீரன். மறைந்தும் இவன் புகழ் இன்னும் மங்கவில்லை மானுடர்தம் மனங்களில்.
மரணப்படுக்கையிலும் இவன் மனவுறுதி மலைக்க வைப்பது.
இவன் சிந்தனைகள், இவன் எழுத்துகள் இவன் வாழ்வு போர் சூழ்ந்த உலகில் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள்.
Last Updated on Thursday, 10 October 2019 00:22
Read more...
'காந்தியப் பண்பும் 'வெண்முகில்' நாவலும் ' என்னும் தலைப்பில் எழுத்தாளர் காண்டேகரின் நாவலான 'வெண்முகில்' பற்றிய திருமதி.பா.சுதாவின் ஆய்வுக்கட்டுரை ( தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளிலொன்று; பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது) காண்டேகர் பற்றிய நினைவலைகளை ஏற்படுத்தி விட்டதெனலாம்.
என் பதின்ம வயதுகளில் வாசிப்பு வெறி பிடித்துத் தேடித்தேடி வாசித்த எழுத்தாளர்களில் காண்டேகருக்கு முக்கியமானதோரிடமுண்டு. மராட்டிய எழுத்தாளரான காண்டேகர் தமிழில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களிலொருவராக அறுபதுகளில், எழுபதுகளில் விளங்கிக் கொண்டிருந்தார். எழுத்தாளர் கா.ஶ்ரீ.ஶ்ரீயின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான காண்டேகரின் நாவல்களைத் தமிழ் வாசகர்கள் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தார்கள். காண்டேகரின் பல படைப்புகள் பல தமிழில் வெளியான பின்னரே மராத்தியில் வெளியாகின என்று எழுத்தாளர் ஜெயமோகன் காண்டேகர் பற்றிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகின்றது. அவ்வளவுக்குக் காண்டேகரின் புகழ் தமிழ் இலக்கிய உலகில் பரவியிருந்தது.
Last Updated on Wednesday, 23 October 2019 00:32
Read more...
Monday, 07 October 2019 09:01
- முனைவர் பி.ஆர்.இலட்சுமி, புலவர், பி.லிட்., எம்.ஏ., எம்.ஏ., எம்.ஏ., எம்ஃபில்.,பிஎச்.டி., டிசிஎஃஇ.,பிஜிடிசிஏ., சென்னை. -
அறிவியல்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்-பாரதி.
அமிழ்தினும் இனிய தமிழ்மொழி கணினியிலும், இணையப் பயன்பாட்டிலும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படினும், தமிழ்மொழி தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படாதநிலை காணப்படுகிறது. இந்நிலை மாற்றம் பெறுவதற்கு தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களைத் தமிழ்க்கணினி இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றம்பெற வைக்கவேண்டும். தொழில்வசதிகள் பெருகிட தாய்மொழிக்கல்வி மிகவும் இன்றியமையாததாகும். இதற்குப் பள்ளிக்கல்வியில் கணினிவழி தமிழ் கற்பித்தல் அவசியம் என்பதை இவ்வாய்வுக்கட்டுரை விளக்குகிறது.
முக்கியக் குறிப்புகள் – ஆங்கிலவழிக் கல்வியின் தாக்கம், தமிழ்வழிக் கல்வி, தமிழ்க்கணினி, குறுஞ்செயலிகள், அறிவியல்கருவிகளில் தமிழ்மொழி
இன்றைய ஆங்கிலவழிக் கல்வி பணிவாய்ப்பினை முழுமையாகப் பெற்றுத் தருவதால் மக்கள் ஆங்கிலவழிக் கல்வி முறையினைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களிடம் முழுமையான ஆங்கிலவழிக்கல்வி இருப்பினும் அவர்களால் தாய்மொழியில் புரிந்து படிக்கும் அளவு படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர முடிவதில்லை. இதனால், மனப்பாடம் செய்து பயிலும் முறை பெரும்பான்மையான மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை காணப்படுவதால் படைப்பாற்றல்திறன் குறைவாக அவர்களிடம் காணப்படுகிறது. தாய்மொழியில் கல்வி பெறும் மாணவர்களிடம் தமிழ்வழிக் கணினிக் கல்வியை முழுமையாக அளித்திடும்போது படைப்பாற்றல் திறனுடன் பல மென்பொருட்களையும், சமுதாயத்திற்குப் பல சாதனைகளையும் அளிக்க இயலும். தமிழ்க்கணினி என்பது வெறும்இலக்கியம், உரைநடை, கட்டுரை, கடிதங்கள், பண்பாடு போன்றவற்றை மட்டும் கற்றுத் தருவதன்று.
Last Updated on Monday, 07 October 2019 09:06
Read more...
புகலிடத் தமிழ் நாவல்களில் உலக இலக்கியத்துக்கு வளம் சேர்த்த புனைவுகளில் ஒன்றாக நிச்சயம் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' படைப்பினைக் கூறுவேன்.
ஒரு நல்ல படைப்பானது தனது மறு வாசிப்புகள் மீதான ஆர்வத்தினை எப்பொழுதும் தூண்டிக்கொண்டேயிருக்கும். . ஒவ்வொரு வாசிப்பிலும் அது புதியதோர் அனுபவத்தினைத் தருமொன்றாக அமைந்திருக்கும். அவ்வகையான புனைவுகளிலொன்றுதான் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' நாவலும்.
முழுக்க முழுக்கப் புகலிட அனுபவங்களையே மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல்கள் குறைவு. எனது 'அமெரிக்கா' , 'குடிவரவாளன்' ஆகியவை அவ்வகையானவை. இளங்கோ என்னும் இலங்கைத் தமிழ் அகதியின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், அதன் பின்னரான நியூயார்க் மாநகரில் அவனது இருப்புக்கான போராட்டத்தினையும் விபரிக்கும் நாவல்கள் அவை. ஆனால் அவற்றில் கூட பிறந்த மண்ணின் சமூக, அரசியல் நிலைமைகள் விபரிக்கப்படுகின்றன. ஆனால் ஜீவமுரளியின் 'லெனின் சின்னத்தம்பி' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் புகலிட வாழ்வினை முழுமையாக விபரிக்கும் நாவல். நடேசனின் 'அசோகனின் வைத்தியசாலை'யும் புகலிடத் தமிழர்தம் வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல்களிலொன்று.
லெனின் சின்னத்தம்பி பணிபுரியும் உணவகத்தின் முதலாளி சப்கோஸ்கி, அவனது மனைவி, அவனுக்குக்கீழ் தொழிலாளிகளைக் கண்காணித்து வேலை வாங்கும் இடைநிலைத்தொழிலாளர்களான சண்டைக்காரன் (திருவாளர் ஸ்ரைற்ரர்) , அக்சல் குறுப்ப இவர்களை மையமாக வைத்து. உணவகம் திவாலாகப் போகும்வரையிலான நிலையினை விபரிப்பதுதான் இந்த நாவலின் முக்கிய நோக்கம்.
எழுத்தாளர் ஜீவமுரளி திறமையான கதைசொல்லிகளிலொருவர் என்பதற்கு நல்லதோர் அத்தாட்சி 'லெனின் சின்னத்தம்பி'.
'கெவ்ரர் பார்ட்டி சேவீஸ்' என்ற உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவி வயிறு வளர்க்கும் கோப்பை கழுவுமொரு தொழிலாளியான 'லெனின் சின்னத்தம்பி'யின் வாழ்வினை அவர் வேலை பார்க்கும் உணவகம் 'திவாலா'கப் போகும் வரையில் விபரிக்கும் நாவல் அவரது வேலை அனுபவங்களை, அவருடன் வேலை பார்க்கும் சக மனிதர்களின் உளவியலை, நிறுவனத்தின் வர்த்தக நிலையினை, அது எதிர்நோக்கும் சவால்களை, அது பணி புரியும் தொழிலாளர்கள் மேல் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சுவையாக, சிறப்பான மொழி நடையில் வெளிப்படுத்துகின்றது.
Last Updated on Wednesday, 23 October 2019 00:33
Read more...
- கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் (2019) இதழில் வெளியாகியுள்ள தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் பற்றிய என் விமர்சனக் கட்டுரை. -
அண்மையில் வெளியான தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.
நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது 'எனக்காகக் காத்து நிற்பீர்களா?' என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.
Last Updated on Tuesday, 01 October 2019 00:37
Read more...
இன்று தமிழகத்தில் நடைபெறுகின்ற தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் 'தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள்' என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்துக்கான எனது வாழ்த்துச் செய்தியினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசியக் கருத்தரங்கத்துக்குப் பதிவுகள் இணைய இதழும் இணைந்து தன் பங்களிப்பை நல்க வேண்டி முனைவர் வே.மணிகண்டன் அவர்கள் தொடர்புகொண்டபோது மகிழ்வுடன் இணங்கினேன். முனைவர் வே.மணிகண்டன் வழி நடத்திலில் ஏற்கனவே இளமுனைவர் பட்ட ஆய்வுக்கு எனது படைப்புகள் மற்றும் பதிவுகள் இணைய இதழ் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இணைய இதழ்களின் ஆரோக்கியமான பங்களிப்பை நன்கு பயன்படுத்தும் முனைவர் வே.மணிகண்டனின் முயற்சியால் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் ஒன்றாக அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அதே சமயம் 2000ஆம் ஆண்டிலிருந்து , 'அனைவருடனும் அறிவைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் செயற்பட்டு வரும் 'பதிவுகள்' இணைய இதழின் இதுவரை காலப்பங்களிப்பையிட்டு எனக்கு மனத்திருப்தி நிறையவே உண்டு.
இணையத்தில் தமிழின் பாவனையை எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் அதிகரிப்பதையும், என் படைப்புகளை வாசகர்கள், எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்வதையே முக்கிய நோக்கங்கங்களாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட 'பதிவுகள்' இணைய இதழை வாசகர்கள், எழுத்தாளர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு முக்கியமான இணைய இதழ்களிலொன்றாக மாற்றி விட்டது. அத்துடன் தமிழகப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரின் பங்களிப்பு 'பதிவுகள்' இணைய இதழினை இன்று முக்கியமான பன்னாட்டு இணைய ஆய்விதழாகவும் மாற்றியுள்ளது.
தமிழிலக்கிய ஆய்வுகளுக்குப் 'பதிவுகள்' இணைய இதழ் களமமைத்துக் கொடுத்து வருவதையிட்டு நான் உண்மையில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். அதே சமயம் 'பதிவுக'ளின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (கனடா), பேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு), பேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்) மற்றும் எழுத்தாளர் லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா) ஆகியோர் பதிவுகளுக்கு ஆலோசகர்களாகவிருந்து ஆற்றும் பங்களிப்பும் விதந்தோதப்பட வேண்டியது. ஆரம்பத்தில் ஆலோசகர்களிலொருவராக விளங்கியவரும், பதிவுகள் இணைய இதழில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவருமான அமரர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) அவர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன்.
Last Updated on Wednesday, 25 September 2019 08:18
Read more...
அக்டோபர் 5 அன்று 'டொராண்டோ'வில் வெளியிடப்படவுள்ள எழுத்தாளர் தேவகாந்தனின் ஐந்து நூல்களிலொன்று 'நவீன இலக்கியம்: ஈழம் - புகலிடம் - தமிழகம்". பூபாலசிங்கம் (இலங்கை) பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட நூல். தேவகாந்தனின் பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் பேசும் விடயங்களாக தமிழ்க்கவிதைகளின் செல்நெறி, இலங்கைத்தமிழ்க் கவிதைகள் பற்றிய வரலாற்றுப் பார்வை, இலங்கைத்தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனப் பார்வை, வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன் மற்றும் நா.பார்த்தசாரதி போன்றோரின் படைப்புகள் , தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய நோக்கு, புலம் பெயர் இலக்கியம், மலேசிய இலக்கியம், பின் காலனித்துவ இலக்கியம், கனடா இலக்கியச் சஞ்சிகைகள் இவற்றுடன் மு.தளையசிங்கத்தின் படைப்புகள் ஆகியன அமைந்துள்ளன. கட்டுரைகள் 1998 -2018 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை.
தேவகாந்தன் அவர்கள் முகத்துக்காக எழுதுபவரல்லர். தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர். இங்குள்ள கட்டுரைகளில் அவரது இவ்வாளுமையினைக் காணலாம். அவரது சிந்தனை வீச்சினைக் காணலாம். ஒருவரது படைப்புகளை வாசித்துச் சிந்தித்து அவர் எடுக்கும் முடிவுகளிலிரிந்து இதனை அவதானிக்கலாம். உதாரணத்துக்கு மு.தளையசிங்கத்தின் படைப்புகளிலிருந்து அவர் எடுக்கும் பின்வரும் முடிவினைக் கூறலாம்:
"சர்வோதயம் சார்ந்து அவர் எவ்வளவுதான் பின்னாளில் எழுதியிருந்தாலும் , இச்சிறுகதை உருவான காலத்தில் ஒரு தமிழ்த் தேசியவாதியாக தன்னை உணர்ந்துள்ளார் மு.த. அதுவும் இறுக்கமான நடவடிக்கைகள் அவசியமென்ற கருத்துக்கொண்டு. அப்படியில்லை என்று வாதிடுவதெல்லாம் வீண்." (பக்கம் 118; கட்டுரை 'படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்: மு.த. குறித்தான ஓர் இலக்கிய விசாரணை'.)
தொகுப்பின் கட்டுரைகள் கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள் எனப் படைப்பாளிகள் பலரை அவர்கள் தம் எழுத்துகளை, சஞ்சிகைகள், இணைய இதழ்களை அறிமுகப்படுத்துவதுடன் தேவகாந்தனின் கருத்துகளையும் கூடவே வெளிப்படுத்துகின்றன. நவீனத் தமிழ்க் கவிதைகள் கூறும் பொருள் பற்றிக் குறுப்பிடுகையில் "இன்றைய தமிழ்க் கவிதையின் தளம் மிக விஸ்தீரணமானது. அதுமனுக்குலம் எதிர்நோக்கும் புதிய புதிய பிரச்சினைகளைப் பேசுகின்றது. மனித அவலங்களை, நம்பிக்கைகளை, பெண்ணிய எழுச்சிகளை, ஜனநாயக அறை கூவல்களைப் பேசுகின்றது. சில கவிதைகள் யுத்தங்களின் நியாயத்தை, சில கவிதைகள் ஆயுதங்களின் நாசத்தை மொழிகின்றன. சில் பொருளாதாரத்தளத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பொதுக் கொடுமைகளான பசி, பிணி, அறியாமை பற்றியும் , சில உலகப் பொதுப் பிரச்சினைகளான விபசாரம், எயிட்ஸ் நோய் போன்றன குறித்தும் பிரஸ்தாபிக்கின்றன. பேசப்படும் பொருள் அது குறித்து ஒரு பொது அடையாளத்தைப் பொறித்திருப்பினும் அவற்றுக்கு விசேட அடையாளங்களுமுண்டு. இத்தனிப்பண்புகள் கவிதைத்தரத்தை நிர்ணயிக்க, பொதுப்பண்புகள் கவிதைச் செல்நெறியை வரைகின்றன." (பக்கம் 1 & 2; கட்டுரை 1: 'சமகால தமிழ்க்கவிதைகளின் செல்நெறி குறித்து....) என்று அவர் கூறுவது ஓருதாரணம்.
Last Updated on Wednesday, 23 October 2019 00:33
Read more...
Last Updated on Friday, 20 September 2019 05:53
 1. காலத்தால் அழியாத கானங்கள் : 'அபுது கே துமசி கரு குஷி அபுனி'
ஜெயாபாதுரி, லதா மங்கேஷ்கார், எஸ்.டி.பர்மன் & மஜ்ரூத் சுல்தான்பூரி கூட்டணியில் உருவான இன்னுமொரு நெஞ்சிற்கினிய 'அபிமான்' பாடல் 'அபுது கே துமஷி கரு குஷி அபுனி'. filmy Quotes இணையத்தளத்திலிருந்த இப்பாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பினைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றேன்.
படம்: அபிமான் இசை: எஸ்.டி.பர்மன் பாடகர்: லதா மங்கேஷ்கார் பாடல் வரிகள்: மஜ்ரூத் சுல்தான்பூரி https://www.youtube.com/watch?v=emKJ5_cMEHk
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்.. இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான் என் வாழ்க்கை இருப்பது உனக்குத் தியாகம் செய்வதற்காகத்தான். இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..
இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது. இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது. உலகம் என்ன கூறுகின்றது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. என் உறவினர்கள் யாரும் என்னைப்பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பது பற்றி. எனக்குக் கவலையில்லை.
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..
உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது. உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது. நான் உன்னுடன் இணைந்து புகழும் பெற்றுள்ளேன். யாருக்குத் தெரியும் எனது அமைதியின்மை என்னை எங்கே கொண்டு செல்லுமென்று.
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..
Last Updated on Friday, 20 September 2019 05:53
Read more...
 சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனத்தினர் எழுத்தாளர் மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியிட்டிருந்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை' நூலின் நான்கு பிரதிகளைத் தபால் மூலம் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முடிந்தவரையில் கவிதைகளைத் திரட்டித் தொகுத்துள்ளார் மாலன். சிறப்பானதொரு கவிதைத்தொகுதியினைத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ள சாகித்திய அகாதெமியினருக்கும், தொகுத்த எழுத்தாளர்
மாலனுக்கும், தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் .
தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:
1. கோகுலக் கண்ணன் - அகராதியில் விழுந்த குழந்தை, ஒளியில் குழந்தை
3. வேதம் புதிது கண்ணன் - வீடுபேறு, மணம்
4. கவிநயா - கைப்பைக் கனவுகள்
1. ஆழியாள் - உப்பு, குமாரத்தி
1. நா.சபேசன் - நான் காத்திருக்கிறேன்
3. நவஜோதி ஜோகரட்னம் - சதா மெளனம், வயது வந்தாலென்ன
1. நுஃமான் - பிணமலைப் பிரசங்கம், துப்பாக்கி பற்றிய கனவு
2. அனார் - இரண்டு பெண்கள்
4. தீபச்செல்வன் - ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்
5. எம்.ரிஷான் ஷெரீப் - ஆட்டுக்குட்டிகளின் தேவதை
6. அபார் - தாள் கப்பல்
Last Updated on Friday, 20 September 2019 05:23
Read more...
ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ சென்ற ஆண்டு (ஏப்ரல் 2018) வெளிவந்திருக்கிறது. இதுபற்றி மிகுந்த வாத பிரதிவாதங்கள் ஓர் இலக்கியச் செயற்பாடுள்ள சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் குளத்திடை போட்ட கல்லான நிலைமைதான் வழக்கம்போல் பிரதிக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் இத் தொகுப்பு மிகுந்த அவதானிப்பில் தோன்றிய வினாக்களுக்கு கண்டடைந்த விடைகளை மிகச் சுருக்கமாகவும், இறுக்கமாகவும் சொல்வதோடு, விடையாக எதையும் சொல்லாத இடங்களிலும் வினாக்களை எழுப்பிய அளவில் திருப்திகொண்டு தம்மை அமைத்திருக்கின்றன.
பத்தொன்பது சிறு கட்டுரைகளின் தொகுப்பான இச் சிறு நூல் கொள்ளும் விகாசம் பெரிது. இதுபற்றி கவனம் கொள்கையில் முதலில் இதன் முன்னுரைபற்றிப் பேசவேண்டும். கட்டுரைகள் சொன்னவற்றை மிகச் சரியாக எடைபோட்டு அவற்றின் குறை நிறைகளைச் சுட்டி அதுவொரு வாசக திசைகாட்டியாக பொருத்தமாகச் செயற்பட்டிருக்கிறது. ஒரு முன்னுரையாகவன்றி நூலின் திறனாய்வாகவே அது உருக்கொண்டிருக்கிறது. அந்தளவு ஓர் கனதியான முன்னுரையை தாங்கக்கூடிய வலிமை ந.மயூரரூபனின் கட்டுரைகளுக்கு இருக்குமாவென, அதை முதலில் வாசிக்கையில், என்னில் ஐயுறவெழுந்தது. கட்டுரைகளை வாசித்த பின்னால் இது ‘காகத்தின் தலையில் பனம்பழத்தை வைத்த கதை’யாக இல்லையென்பதைத் தெரியமுடிந்தது.
இந்த பத்தொன்பது கட்டுரைகளை நோக்குகையில் படைப்பு – படைப்பாளி – வாசகன் ஆகிய தளங்களில் தனித்தனியாகவும், பின் ஒட்டுமொத்தமாகவும் ‘புனைவின் நிழல்’ தன் கருத்தை முன்வைத்திருப்பதாகக் கொள்ளமுடியும்.
இப் பிரதி முன்வைக்கும் கருத்துச் சாராததும் நூலாக்கம் சம்பந்தப்பட்டதுமான இரண்டு அம்சங்களை முதலில் குறிப்பிடுவது நல்லது எனத் தோன்றுகிறது. ஒன்று, தெளிவற்றதும் தீவிரமற்றதுமான சில கட்டுரைகளை, குறிப்பாக ‘ஆண்குறியாலான அதிகாரம்: காலம் கலங்கி மடியும் மந்திரம்’ என்பதுபோன்றவற்றை தொகுப்பில் சேர்க்காது விட்டிருக்கலாம். அவை பொருள் மயக்கமும் தெளிவின்மையும் கொண்டிருக்கின்றன. ஏனைய கட்டுரைகளோடு ஒப்பிடுகையில் அவை வலிமை குறைந்தவையும். அடுத்து, நிறுத்தக் குறியீடுகள் தேவையற்ற இடங்களிலும், அதிகமான இடங்களில் தவறான பிரயோகத்திலும் வருவதைத் தவிர்த்திருக்கலாம். இதனால் பொருள் கோடலின் இடைஞ்சல் வாசிப்பின் வேகத்தையும் சுகத்தையும் தடுக்காது இருந்திருக்கும்.
இக் கட்டுரைகள் பலவிடங்களில் இயங்கியல், அமைப்பியல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. இயங்கியல் என்ற வார்த்தையை இயங்குமுறை எனக் குறிக்கவேண்டுமிடங்களிலும் பயன்படுத்துவதால் விளக்கக் குறைவு ஏற்பட்டு வாசகனை மலைக்க வைக்கின்றது. அவை கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பேச்சு வழக்கில் பயன்படும் அமைப்பியல் என்ற பதம் (சிலர் அமைப்பியலெனவே எழுத்திலும் பயன்படுத்துகின்றனர்) இன்று எழுத்திலும் அவ்வாறே பயன்படுத்தப் படுவதில்லையென்பது ஆய்வுலகில் அறிய வந்துள்ள விபரம். அது அமைப்பு மையவாதமெனவே படுகின்றது (பார்க்க: ‘அமைப்பு மையவாதமும் பின்அமைப்பயிலும்’, க.பூரணச்சந்திரன்). இது முக்கியமான அம்சமில்லையெனினும் வாசக தெளிவுக்காக இதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம்.
Last Updated on Wednesday, 18 September 2019 06:37
Read more...
 - முனைவர் ஆர். தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தினால், உன்னதமான பல ஆங்கிலக் கவிதைகளை தமிழ் மக்களும் அறிய வேண்டும் என்ற துடிப்பில் அவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மிகவும் விரும்புவது காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஆங்கிலக் கவிகளான ஷெல்லி, வொர்ட்ஸ்வொர்த், பைரன், W. B. யேட்ஸ் போன்ற கவிகளின் எழுத்துக்கள். அதனுடன், கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்ற பொன்மொழிக்கேற்ப, பயணம் மேற்கொண்டு பல நாடுகளில் உள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை முறை, மற்ற நாடுகளின் மேன்மைகள், மாறுபட்ட கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் அறிந்து கொள்ள மிகுந்த ஆவல் கொண்டவர். இதுவரைக்கும், அமெரிக்கா, ஐரோப்பா, யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வெளி நாடுகளையும் , இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் பற்றி அறிந்து கொள்ள பயணம் சென்று வந்தவர். உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முனைப்புடன் இருப்பவர். அவரின் இந்தக் கட்டுரையானது பெண்ணின் படைப்பு என்பதே ஒட்டுமொத்த மனித குலத்தின் நலத்தைப் பேணிப் பராமரித்துக் காக்கத்தான் என்ற நோக்கில், இல்லத்திலும், சமூகத்திலும் பெண்கள் தங்களைச் சார்ந்திருப்போரின் உடல்நலம் காப்பதில் எவ்வாறு தங்கள் பங்களிப்பை அளிக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டுடன் விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. -
“விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே!” - மகாகவி பாரதியார்
மனிதகுலம் உருவானது பற்றிய கற்பனைக்கதைகள் அல்லது ஒருவேளை கட்டுக்கதைகள் என்றாலும் கூட, அவற்றின் மூலம் இன்றைய சமுதாயம் ஆதி முதலாக உதித்த ஆதாம் மற்றும் அவனின் அன்புக்குப் பாத்திரமான ஏவாள் முன்னொருகாலத்தில் ஜீவித்திருந்திருப்பார்கள் என்றும் அவர்களைக் கடவுள் தனது கண்ணின் மணிகளாகக் கருதி அவரின் ஈடன் தோட்டத்தில் எல்லாவித சலுகைகளையும் பெற்று, கவலையற்று சுற்றித் திரிந்து வாழ்வை அனுபவிக்க முழுசுதந்திரமும் முதலில் கொடுத்திருந்தார் என்று இன்றளவும் பெரிதும் நம்பும்அளவு செய்திருக்கிறது. மனித குலம் முழுமைக்கும் மூதாதையரான அவர்களின் அப்படிப்பட்ட சுதந்திரமும், மற்றட்ட மகிழ்வும் இரண்டாக பிளவுபட்டு துக்கித்து நிற்கும் நிலை ஏற்பட்டதன் காரணம் பாம்பு வடிவச்சாத்தானின் கேடு விளைவிக்கும் தூண்டுதலால் என்பதும் அனைவரும் அறிவர்.
இந்தக் கதை, கற்பனையாக இருந்தாலுமே, இது தோன்றிய காலம் முதலில் இருந்தே, ஏவாள் சாத்தானின் முகஸ்துதியில் மயங்கி தன் அன்புத் தோழனை வற்புறுத்தி கடவுள் தடை செய்த கனியைச் சுவைக்கச் செய்ததினால், அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டு, ஈடன் என்னும் சொர்க்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, துக்கமும், துன்பமும் நிறைந்த புதிய உலகான பூமி வாழ்வை அடைய நேரிட்ட காரியத்தைப் பற்றி பல்வேறு தீவிர விமர்சனங்கள் என்றென்றும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கற்பனைக்கதையில் வரும் ஏவாள் எனும் பெண்ணானவள் துரோகம் செய்யத்தூண்டும் குற்றவாளியாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஆயினும் இந்தக் கதையில் உள்ள நேர்மறையான ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தோமானால், ஏவாளின் பழம் சுவைக்கும் விருப்பம் வெளிப்படையாக மேலோங்கி நிற்பதுடன், அதிலும், மனித குலத்துக்கு மிகச் சிறந்த ஆரோக்யத்தைக் கொடுக்கக் கூடிய ஆப்பிள் கனியை, ஒரு ஆப்பிளை தினமும் சுவைத்தால், மருத்துவரை தூரத் தள்ளி வைக்கலாம் என்று இன்றளவும் உலா வரும் பழமொழிக்கேற்ப, அவளின் அன்புக்கணவனை வற்புறுத்தி சுவைக்கத் தூண்டிய செயல் தெளிவாகப்புலப்படும்.
Last Updated on Sunday, 11 August 2019 19:01
Read more...
Letchumanan Murugapoopathy <
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
Jun. 18 at 1:23 a.m.
அப்பா நினைவாக......
அன்புள்ள நண்பர் கிரிதரன் அவர்கட்கு வணக்கம். தந்தையர் தினத்தில் -- உங்கள் அப்பா நினைவாக நீங்கள் எழுதியிருந்த பதிவு சிறப்பானது. உங்கள் அப்பா ஒரு முழுமையான மனிதராக வாழ்ந்திருப்பது தெரிகிறது. பொதுவாக பல எழுத்தாளர்களுக்கும் அவர்களின் தந்தைமாருக்கும் இடையே முரண்பாடுகள்தான் பெருகியிருந்துள்ளன!?
பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், பாலகுமாரன், ஜெயமோகன்... முதலான எழுத்தாளர்கள் தங்கள் தந்தைமாருடன் எங்கெங்கே முரண்பட்டார்கள் என்பதை எழுதியிருக்கிறார்கள்.
ஜெயகாந்தன் , மரணப்படுக்கையிலிருந்த தந்தையை புறக்கணித்துவிட்டு வந்தவர். இந்த எழுத்தாளர்களின் சுயவரலாறு தெரிந்தால் அதிர்ச்சியடைவோம். இந்நிலையில் உங்கள் தந்தையார் உங்களது நல்ல தோழராகவே விளங்கியிருப்பது தெரிகிறது.
வருடாந்தம் தந்தையர், அன்னையர் தினங்களில் எமது எழுத்தாளர்கள் இதுபோன்ற பதிவுகளை எழுதி, அவர்களின் நினைவுகளைக் கொண்டாட முடியும். அதற்கு உங்கள் நினைவுப்பதிவு முன்னுதாரணமாக இருக்கும். உங்கள் தந்தையார் பற்றிய பல செய்திகளை அறிந்து அவர் மீது எமக்கும் மதிப்புண்டாகிறது. தந்தைமார் பிள்ளைகளுக்கு நண்பர்களாக இருப்பது அபூர்வம்! உங்கள் நினைவுப் பதிவு எனது தந்தையார் பற்றி எழுதவும் என்னைத்தூண்டுகிறது.
நன்றி.
அன்புடன்
முருகபூபதி - அவுஸ்திரேலியா
Last Updated on Friday, 21 June 2019 08:09
Read more...

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அதிக அளவில் வருவதால் உடனுக்குடன் பிரசுரிப்பதில் சிறிது சிரமமிருப்பதைப் புரிந்து கொள்வீர்களென்று கருதுகின்றோம். கிடைக்கப்பெறும் படைப்புகள் அனைத்தும் தரம் கண்டு படிப்படியாகப் 'பதிவுகள்' இதழில் பிரசுரமாகும் என்பதை அறியத்தருகின்றோம். உங்கள் பொறுமைக்கும் ஆக்கப்பங்களிப்புக்கும் எம் நன்றி.
எமக்குப் படைப்புகளைப் பலர் அனுப்புகின்றார்கள் என்பதைக்கவனிக்கவும். சிலர் பாமினி எழுத்துருவில் அனுப்புகின்றார்கள். சிலர் ஒருங்குறி எழுத்துருவில் அனுப்பினாலும், அவற்றில் பல எழுத்துப்பிழைகளுடன் அனுப்புகின்றார்கள். அவர்கள் பாமினியில் எழுதி விட்டு, எழுத்துரு மாற்றி மூலம் ஒருங்குறிக்கு மாற்றி விட்டு, அவ்விதம் மாற்றுகையில் ஏற்படும் எழுத்துப்பிழைகளைத்திருத்தாமலே அனுப்புகின்றார்கள் என்று நினைக்கின்றோம். இவ்விதமான தவறுகள் திருத்தப்பட வேண்டும்.
மேலும் கிடைக்கும் படைப்புகள் வாசிக்கப்பட்டு, பதிவுகள் இதழில் பிரசுரிப்பதற்கு உரியனவா என்பது முடிவு செய்யப்பட்ட பின்னரே அவை வெளியாகும் என்பதை அவர்கள் கவனத்துக்கெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எமக்கும் கிடைக்கும் படைப்புகள் , பிரசுரத்துக்கு உரியனவாகத்தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பிரசுரமாகும். படைப்புகள் எப்பொழுது வெளியாகும் என்று விசாரித்து மீண்டும் மீண்டும் கடிதங்களை அனுப்பாதீர்கள் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் கவனத்துக்கு: 'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள், கடிதங்கள் அனுப்புவோர்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
ஆரம்ப காலத்து ''பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில், எழுத்துருவில் (திஸ்கி எழுத்துரு, அஞ்சல் எழுத்துரு) நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே: இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) : கடந்தவை
Last Updated on Friday, 30 November 2018 09:26
Monday, 04 January 2016 18:23
administrator
'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
- பதிவுகள் -
Last Updated on Friday, 14 October 2016 19:50
 ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).
Last Updated on Friday, 08 July 2016 18:47
Read more...
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்! ("Sharing Knowledge With Every One")" - பதிவுகள்
பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பினால் லதா (யூனிகோடு) எழுத்தினை அல்லது ஏதாவதொரு tsc எழுத்தினைப் பாவித்து தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்ப முன்னர் எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரி பார்த்து அனுப்பி வையுங்கள். மேற்படி பிழைகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்களே பொறுப்பு. தற்போதைய சூழலில் 'பிரதியைச் சரிபாத்தல்' எமக்கு மிகவும் சிரமமானது. இருந்தாலும் முடிந்தவரை திருத்த முயல்வோம். முக்கியமான இலக்கணப் பிழையாக பன்மை எழுவாயும், ஒருமைப் பயனிலையும் கொண்டமைத்த வாக்கியங்களைக் கூறலாம். 'பாமினி' எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைப்பதைத் தவிர்க்க முனையுங்கள். 'பாமினி' எழுத்தில் வரும் படைப்புகள் பதிவுகளில் உடனடியாகப் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். அவற்றை tscற்கு மாற்றும் பொழுது பல எழுத்துகள் , 'இ', 'அ','ஆ', மற்றும் 'ஞ' போன்றன காணாமல் போய் விடுவதால் மீண்டும் அவ்வெழுத்துகளைத் தட்டச்சு செய்ய வேண்டிய மேலதிக வேலை எமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துக்கு மாற்றுகையில் தேவையற்ற எழுத்துகளை இடையிடையே தூவி விடுகின்றது. அவற்றை நீக்குவதென்பது மேலதிக வேலை. குறிப்பாகப் படைப்பானது மிகவும் நீண்டதாகவிருந்தால் தேவையற்ற சிரமத்தைத் தருகிறது.'பாமினி'யில் எழுத விரும்புவர்கள் அவற்றை ஏதாவதொரு 'உருமாற்றி' (Converter) மூலம் ஒருங்குறிக்கு மாற்றி, அவற்றை மின்னஞ்சல் செய்தியாக அனுப்பி வையுங்கள். 'உருமாற்றிக'ளை பின்வரும் இணையத் தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்:
Last Updated on Friday, 30 November 2018 09:24
Read more...
Tuesday, 09 April 2013 17:51
- தளநிர்வகிப்பாளர், பதிவுகள் -
நிகழ்வுகள்
பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும். பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும். பின்வரும் இணையத்தளத்தில் (கண்டுபிடி எழுத்துருமாற்றி) இதற்கான வசதிகளுண்டு: http://kandupidi.com/converter/ இதுபோல் பல இணையத்தளங்களுள்ளன. அல்லது இலவசமாக எழுத்துருமாற்றி (Converters) மென்பொருள்கள் இணையத்தில் பல இருக்கின்றன. அவற்றை உங்கள் கணினியில் பதிவிறக்கி, நிறுவிப் பாவிக்கலாம்.
Last Updated on Saturday, 29 March 2014 23:06
|