‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.

பிரெஞ்சு மக்கள் முதல் கட்ட வாக்களிப்பில் இதயத்தாலும்ää இரண்டாம் கட்ட வாக்களிப்பில் மூளையாலும் வாக்களிப்பது வழக்கம் என்ற கூற்றுப்படி 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரெஞ்சுச் சரித்திரத்தில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருமென்பதில் சந்தேகமில்லை. மே மாதம் 3ஆம் திகதி நடைபெறும் வேள்பாளார் நேரடித் தொலைக்காட்சி விவாதம் மக்களின் மனங்களை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை’ என்று லண்டனில் ஹரோச் சந்தி அமைப்பினர் சென்ற வாரம் ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கருத்தமர்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய சட்ட ஆலோசகரும்ää அரசியல் ஆய்வாளாருமான எஸ். பி. யோகரட்னம் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.   திரு. ரகுபதி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டிருப்பது:‘பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரித்தானியாவில் இடம்பெறும் தேர்தலைவிட முற்றிலும் வித்தியாசமானது. பிரித்தானியாவில்; பிறெக்சிற் (டீசநஒவை) ஐ எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்  பிரான்ஸ் தேர்தலின் முடிவுகள் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது. பிரெஞ்சு ஜனாதிபதியாகப் போட்டி இடுபவர் ஒரு சுற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத நிலையில் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் நிலைமை  அங்கு ஏற்படுகின்றது. அந்தவகையில் இம்மனுவேல் மக்ரோன் 23.8 வீதமும்ää மரின் லூபென் 21.5 வீதமும் பெற்று மிகுதி வாக்குகளை ஏனைய ஜனாதிபதி போட்டியாளர்களின்  வாக்குகளை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடவேண்டிய விடயம். எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இரண்டாவது சுற்றில் பகிரப்பட்ட ஏனைய வாக்குகளும் மேற்குறிப்பிட்ட இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் நிலையில் கடும் போட்டி நிலவுகின்றது.


தேசிய முன்னணி என்ற இனவாதம் பேசும் கட்சி பிரெஞ்சு நாட்டு மக்களுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை என்ற கோஷத்தை வைத்து இனவாத உணர்வைத் தூண்டி தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்பதை அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை ஐந்து வீத வாக்குகளைப் பெற்ற வலது சாரி வேட்பாளர் நிக்கோலா டுப்போன் என்பவர் தனது தனிப்பட்ட குரோதங்களை ஆயுதமாக்கி தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கி வருவது இக்கட்சியின் விகிதாரசார எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது.

தீவிர இடது சாரி வேட்பாளரான ஜோன் லுக் மெலேன்ஞ்ஜோன் தான் பெற்ற பத்தொன்பது வீத வாக்குகளை மக்ரோனுக்கு பகிரங்கமாக வழங்க ஒப்புக்கொள்ளாததது தேசிய முன்னணிக்கான பலத்தை இன்னும் அதிகரிக்க உள்ளது. விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் எனவும் வெற்றுவாக்குகளால்; வாக்களிக்கலாம் என்ற அவரது கூற்று மக்களால் கவலையுடன் நோக்கப்படுகின்றது. தீவிர இடதுசாரிக் கட்சியும்,வலது சாரிக் கட்சியும் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பதில் ஒற்றுமையாக இருப்பதால் மக்ரோன் இருமுனைத் தாக்குதலை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்.

பல வருடங்கள் ஆட்சி செய்த இரண்டு வலது சாரிக் கட்சி தற்போதுள்ள சோசலிசக் கட்சிக்கு எதிரானாவர்களாயிருந்தபோதும் தேசிய முன்னணியை முறியக்க வேண்டும் என்பதற்காக மக்ரோனைப் பகிரங்கமாக ஆதரிப்பதும்  ஆச்சரியப்படுவதற்கில்லை காரணம் இதே தேசிய முன்னணி ஜோன் மறி லு பென் தலைமையில் 2002ஆம் ஆண்டு பிரதான எதிர்க்கட்சி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட அச்சமே காரணமாகும்.

சட்ட ஆலோசகர் எஸ்.பி.ஜோகரட்னத்தின் உரையாடலின்போது கலாநிதி இ.நித்தியானந்தன், ஒளிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா, தொல்லியல் ஆய்வாளர் எஸ்.விசாகன் ஆகியோர் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர்.

மக்ரோனின் நிலைப்பாடு
பல வருடம் அனுபவம் வாய்ந்த கட்சிகளை தோற்கடித்து 39 வயதான மக்ரோன் ஐரோப்பிய ரீதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார். ஆளும் சோசலிஷ அரசியல் அமைச்சராகப்  பணிபுரிந்துää கொள்கை முரண்பாட்டால் இராஜினாமா செய்த மக்ரோன் அவர்கள் ஒரு வருடத்தினுள் பலம் வாய்ந்த வலது - இடதுசாரிக் கட்சிகளுடன் சவால்விட்டுப் புகழ் ஏணியில் ஏறியமை குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். வலதும் இல்லை இடதும் இல்லை என்ற இவரது நிலைப்பாடு பல வருடங்களாக ஆட்சி செய்த இரு அரசுகளின் செயல்திறன் அற்ற தன்மையைப் பகிரங்கப்படுத்துவதால்ää இவருடைய அரசியலோடு சேர்ந்துää தமது இடங்களைக் காப்பாற்றும் நிலை இக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரவிருக்கும்; பொதுத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டு ஒரு பெரும்பான்மை அரசை அமைப்பதில் பெரும்; சிக்கலான நிலைப்பாடு இங்கு தோன்ற உள்ளது.

தனிப்பட்ட குணாதிசயம்
ஜோண் மரி லூபென் என்ற அவரது தந்தையாரால் 35 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கட்சியை பொறுப்பேற்ற மரி லூபென் தந்தையின் கடும்போக்குக் காரணமாக அவரையே கட்சியில் இருந்து வெளியேற்றி அதிகப்பலத்துடன் வளர்ந்துள்ளமையைச் சுட்டிக்காட்ட வேண்டும். மிகப் பெரிய தொழிற்சங்கங்களான சி ஜி ரி மற்றும் எவ் ஓ என்பவற்றின் ஆதரவைப் பெற்று தொழிலாளர்களின் ஆதவைப் பெற்றமை மற்றும் தேசிய முன்னணியானது 8 நகரங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன் 20 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் 2 தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டிருப்பதால் இவர்களது பலம் மேலும் அதிகரிக்குமென நம்பப்;படுகிறது. அதே வேளை ஊழல் குற்றச் சாட்டு வழக்குகளை எதிர்நோக்கும் தேசிய முன்னணித் தலைவி மறின் லூபென்னின் எதிர்காலம் எப்படி அமையுமென்பது கேள்விக்குறியாகும்.

மக்ரோனின் திட்டங்கள்
வரவு செலவுத்  திட்டத்தில் துண்டுவிழும் தொகையை 60 பில்லியன் யூரோவால் குறைக்கவேண்டும் எனக் கூறும் மக்ரோன் சுற்றுப்புறச்சூழல்ää தொழில்பயிற்சி, தொலைத் தொடர்பு வளர்ச்சிää பொதுக்கட்டுமானம் என்பவற்றில் முதலீடு செய்தல் வர்த்தக நிறுவனங்களுக்கான வரியை 33 வீதத்திலிருந்து 25 வீதமாகக் குறைத்தல்ää ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படல் போன்ற கொள்கைகளை எடுக்கவுள்ளார். உலகமயமாக்கல் கொள்கையால் தொழிலை இழந்தோரின் கோபமும் இவரை எதிர்க்க ஏதுவாயுள்ளது. எதிரணியானது இதனைச் சரியாகப் பயன்படுத்தி இவரை எதிர்த்து வருகின்றது.

மறின் லூபென்னின் திட்டங்கள்
எவ் என் என்ற தேசிய முன்னணியானது தொழில் வழங்கலில் பிரெஞ்சு மக்களுக்கு முதலிடம், யூரோ நாணயத்தை விலக்கி முன்னைய ‘பிராங்’ நாணயத்தைக் கொண்டுவருதல்ää ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து வெளியேற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தல்ää எல்லைக்கட்டுப்பாட்டைக் கொண்டுவருதல், வெளிநாட்டு உற்பத்திப் பொருட்கள்மீது மேலதிக வரியை விதித்தல் , குற்றச் செயலில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்தல்ä,புதிதாக நாட்டுக்குள் வருவோரை வருடாந்தம் பத்தாயிரமாகக் கட்டுப்படுத்தல் என்பவற்றுடன் சிறு தொழில்களுக்கான வரியைக் குறைத்தல் என்பது முக்கிய கொள்கையாகும்

ஐரோப்பிய ஒன்றியம் மக்ரோனின்  வெற்றியைத் தமது வெற்றியாகக் கருதுகின்றது. இவ்வருடம் ஜேர்மனியில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலை மக்ரோனின் வெற்றி உற்சாகப்படுத்துவும் உள்ளது. மாறாக பிரித்தானிய அரசு மக்ரோனின் வெற்றியை அச்சத்துடன் எதிர்பார்க்கிறது

சட்ட ஆலோசகர் எஸ்.பி.ஜோகரட்னத்தின் உரையாடலின்போது கலாநிதி இ.நித்தியானந்தன், ஒளிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா, தொல்லியல் ஆய்வாளர் எஸ்.விசாகன் ஆகியோர் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தனர்.

02. 05. 2017
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.