இந்தக் கட்டுரையில் நான் விவாதிக்க விரும்புவது கிரீஸ் யக்கா (பூதம்) எனும் ஆராய்ச்சிக்குரிய நிகழ்ச்சி பார்க்கப்படவேண்டியது கட்டுரையில் நான் விவாதிக்க விரும்புவது கிரீஸ் யக்கா (பூதம்) எனும் ஆராய்ச்சிக்குரிய நிகழ்ச்சி பார்க்கப்படவேண்டியது இனவாதம் எனும் உதாரணத்தின் வகையிலேயே ஆகும். மேலும் சாதாரண சட்டங்களின் குறைவின் காரணமாக ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையிலே இதனைப் பார்க்கக்கூடாது. மற்றும் இந்த கிரீஸ் பூதங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததை, மக்கள் சாதாரணமாக சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள் என்கிற நோக்கில் பார்க்காமல் மாறிவரும் உலகப்புரட்சியின் ஒரு மேற்கோள் என்ற வடிவத்தில் இதனைப் பார்க்க வேண்டும் என்பதனையே. எல்லாவற்றுக்கும் முதலில், நான் சொல்லவேண்டியது இந்த கிரீஸ் பூதங்களைப்பற்றிய பிரதிபலிப்புகளின் ஒரு பகுதிக்கு காரணம் வெறும் மனப்பிராந்தியும் மிகைப்படுத்தலுமே ஆகும், ஆனால் அடிப்படையில் அதில் உண்மையான காரணங்கள் உள்ளன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

 சிறுபான்மையினர் பெரும்பகுதியாக வசிக்கும் இடங்களிலுள்ள பெண்களே இதற்கு இலக்கு வைக்கப்பட்டன. மற்றும் சில தொகையான சாட்சியங்கள் ஒருபக்கம சுட்டிக்காட்டுவது இந்த கிரீஸ் யக்காக்களுக்கும் மறுபக்கம்  இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கும் இடையில் இதற்கு உடந்தையான ஒரு வகையான தொடர்பு இருப்பதை.

இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முகக்கவனம் பிரதானமாக இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சார நடவடிக்கை என்கிற சாத்தியமான எண்ணத்துக்கே இட்டுச் சென்றுள்ளது. அரசாங்கத்தின் நன்மதிப்புக்கு பங்கம் ஏற்படும்படியான சில விடயங்கள் இடம்பெறும்போது  நிச்சயமாக அரசாங்கம் பெரும்பாலும் எப்போதும் கோரிக்கை விடுப்பது, தனது நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக எல்லாப்பகுதியினராலும் மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைதான் அது என்று. அதற்கு ஆதரவான தரவுகள் எதுவும் இல்லாதிருக்கும்போது அரசாங்கத்தின் கோரிக்கையை தீவிர கவனத்தில் எடுக்க முடியாது. அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான காலம் கனியவில்லை என்பதை தெரியப்படுத்துவதை பிரதான இலக்காகக்கொண்டு இது மேற்கொள்ளப்பட்டது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் வடக்கு மற்றும் சிறுபான்மையினர் பெருமளவில் வசிக்கும் இடங்களில் உண்மையான இராணுவ ஆட்சியை நிறுவுவதை வற்புறுத்தும் நோக்கத்தில் இதைச் செய்வதாக இன்னும் சிலர் கூறியுள்ளனர். கிரீஸ் பூதத்தின் வெளிப்பாடு ஆரம்பித்ததிலிருந்து கடந்து சென்ற எல்லா வாரங்களிலும் இந்தச் செய்தி பிரதான தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருந்த போதிலும் எதற்காக திட்டமிட்ட பிரச்சாரம்போல தோன்றும் இச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான முற்றாக நம்பத்தகுந்த காரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே சாத்தியமான எண்ணங்களுக்கான ஆராய்ச்சியிலிருந்து கடினமான உண்மை நடைமுறைகளுக்கு தாவவேண்டிய நேரம் இதுதான்.

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அவர்கள் பெரும்பான்மையாக அல்லது கணிசமான அளவில் குடியிருக்கும் பகுதிகளில் வைத்து இதற்கு இரையாகியுள்ளார்கள். அந்த இரை சிறுபான்மைப் பெண்கள். இந்த கிரீஸ் யக்காக்களுக்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பதற்கு நிச்சயமான சான்றுகள் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்;டுள்ளது. இதில் மேலும் ஒரு உண்மை என்னவென்றால் அரசாங்கம் இந்தச் சதிகாரர்களை கண்டுபிடித்து இது திட்டமிட்ட ஒருபிரச்சாரம் என்று தெளிவாகக் கருதப்படும் எண்ணத்தை இல்லாமலாக்கும் என்று ஒருவர் கூட நம்பவில்லை.

யுத்தம் முடிவடைந்துவிட்ட போதிலும் தற்போது நிலவும் தண்டனை விதிவிலக்கு கலாச்சாரங்களின் மற்றொரு சம்பவம்தான்; இது என்று இந்த உண்மைகளை எழுதித்தள்ளிவிட முடியாது. அவைகள் நேரடியாக விரல் நீட்டுவது கணிசமானளவு சிறுபான்மையினரான இரு இனங்களுக்கு எதிராக பெரும்பான்மையினர் மேற்கொள்ளும் இனவாதத்தைத்தான். அந்த இனவாதத்தை நோக்கி நகரும் அரசாங்கத்தின் உள்வாங்கும் தன்மையை அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் தன்மையை அவை மேலும் சுட்டிக்காட்டுகின்றன.

முப்பது வருட யுத்தத்தின் பின்னர் எதிர்பார்க்கக்கூடிய, வழமை நிலை முற்றாக ஏற்படுத்தப்பட்டதும் மறைந்து போகக்கூடிய சில நோய்களின் அறிகுறிகள்  என்று உண்மையில் கருதக்கூடிய சிலவற்றைப்பற்றி நான் மிக ஆழமாக வாசிக்கிறேன் என்கிற வாதங்கள் எழக்கூடும். இந்த வழமை நிலை கூட யுத்தம் முடிவடைந்த உடனடியாகவே ஏற்படுத்த முடியாது என்றுகூட வாதிக்கப்படலாம். இந்த வழியில் சிந்திப்பவர்கள்கூட இனவாதத்தை நோக்கி கை காட்டும் கடின உண்மைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நிலையில் இருக்கலாம்.

ஆனால் சில பெண்களை சுரண்டிப்பார்க்க மட்டுமே சில குறும்புத்தனமானவர்களால் அந்த இனவாதம் வெளிக்காட்டப் பட்டிருந்தால் அதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாதுதான்.

தீங்கற்றதிலிருந்து முற்றிலும் தாங்க முடியாத மூர்க்கத்தனமானது வரை இனவாதத்தில் பல படிமுறைகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். ”தெமலா” (தமிழா) என்கிற பதம் அவமானத்தை உண்டாக்குவதற்காகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் அப்பிரயோகம் தீவிர மறுதாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதோ, அல்லாததோ என்பது அது பயன்படுத்தப்படும் சூழ்நிலையின் தன்மையில் தங்கியுள்ளது. ஆனால் “பற தெமலா” என்பது நிச்சயமாக  சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே கருதப்படும்.

ஒரு சிறுபான்மை உத்தியோகத்தர் பாகுபாட்டுக்கு உட்படுத்தப் படலாம். ஆனால் அதை எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்வது என்பது திரும்பவும் சூழ்நிலையின் தன்மையில் தங்கியுள்ளது. எப்படியாயினும் அவரது மனைவியை ஒருவர் கீறும்போது, அரசாங்கத்தின் உடந்தையான தன்மை அல்லது கண்டுகொள்ளாமல் விடும் தன்மை காரணமாக அந்தக் குற்றவாளியை ஒருபோதும் பிடித்து நீதியின் முன் நிறுத்தக்கூடாது என எதிர்பாhத்தால் நிச்சயமாக அது தாங்கமுடியாத ஒன்றாகவே கருதப்படும். தற்போது நடக்கும் விடயத்தில் நாங்கள் அனைவரும் நினைவிற் கொள்ளவேண்டியது கிரீஸ்பூதத்தால் இந்த கீறல் மேற்கொள்ளப்படுவது மிகப் பரந்த பிரதேசமெங்கும் இடம்பெற்றுள்ளது.

இவைகள் 1983லும் 1977லும் நடந்தவைகளுடன் சமாந்தரமாக இழுத்தப்பார்த்தபோது அவை நீண்ட தூரத்துக்கு ஒத்துப்போவதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அப்போது  ஐக்கிய தேசியக் கட்சியின் அரச பயங்கரவாதிகள் முற்றான தண்டனை விதிவிலக்கோடு தமிழர்களை உயிரோடு எரிக்க முடியும் எனக் காண்பித்தனர். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் தெரு நாய்களை விடக் கேவலாமாக நடத்தப்பட்டார்கள். தெரு நாய்கள் கூட ஸ்ரீலங்காவில் ஒருபோதும் உயிரோடு எரிக்கப்பட்டதில்லை.

சிறு காயங்களை ஏற்படுத்தம் கீறல் சம்பவங்களுடன் உயிரோடு எரிக்கப்பட்டவர்களை சமப்படுத்துவது நிச்சயமாக பொருத்தமற்றதுதான். ஆனால் நான் குறிப்பிடுவது, கிரீஸ்பூதங்கள் முற்றான தண்டனை விதிவிலக்குடன் தங்கள் கீறல் சம்பவங்களை ஒரு பரந்த பிரதேசமெங்கும் வெளிப்படுத்த முடியுமாயின், 1983ல் என்ன நடந்தது என்பதை கவனத்தில் கொள்ளும் போது அவர்களால் முற்றான தண்டனை விதிவிலக்குடன் சுலபமாக இன்னும் மேலே செல்லமுடியும். இந்த கிரீஸ்பூதங்களின் வெளிப்பாடு நிச்சயமாகத் தாங்க முடியாத இனவாதத்தை சுட்டிக் காட்டுவதாக கருத முடியும்.

நான் மேலே எழுதியிருப்பது தங்களை குத்திக்காட்டுவதாக சில சிங்களவர்கள் கருதக்கூடும், ஏனெனில் அவர்களின் கண்ணோட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதம் மட்டுமே இருக்க முடியும். ஆனால் சிங்கள இனவாதம் ஒருபோதும் கிடையாது. வழங்கப்பட்ட காரணிகள் யாவும்  சாத்தியமான சிங்கள இனவாத்தை சுட்டிக்காட்டும்போது நான் முன்னர் எழுதிய “பொபி மூலோபாயம்” என்பதை நிலைநாட்டுவதையே அவர்களால் எதிர்பார்க்க முடியும்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பிரித்தானியாவிலும் மற்றம் வேறு இடங்களிலும் உள்ளவர்கள், தடுக்கப்படாத இனவெறி முன்னிறுத்தப்படும்போது பயங்கரமான ஆபத்துக்கள் எழக்கூடும் என்கிற ஆழ்ந்த எச்சரிக்கை அடைந்திருந்தார்கள். அப்படி எழுந்த விழிப்புணர்வு காரணமாக கிடைத்த பொருள்தான் நாசிகள் மனித நேயமற்று இழைத்த குற்றமான குரூரமான படுகொலைகள்.

பிரித்தானியாவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்திய குழுக்கள் எப்போது இனவெறி பற்றிய குற்றச்சாட்டுகள் காவல் துறையைச் சேர்ந்த  லண்டன் பொபியிடம் பதிவு செய்யப்பட்டன என  அறிய நேர்ந்தது. அவர் இனவெறி நடவடிக்கை போலத் தென்படுபவவைகளுக்கு வக்காலத்து வாங்கி ஐம்பதுக்கும் மேற்பட்ட சாத்தியமான விளக்கங்களை அளித்திருந்தார். ஆனால் இனவெறியைப்பற்றி ஏதுவும் இல்லை. பிரித்தானியாவில் இந்த “பொபி மூலோபாயம்” அபத்தமான ஒன்று என கருதப்பட்டது, ஆனால் ஸ்ரீலங்காவில் அது பலமாக செழித்து வளருகிறது. உள்நாட்டு “பொபி மூலோபாயம்”  நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப்போன்ற சில தர்க்க வாதங்களை அநேகமாக கொண்டு வரலாம்.

முப்பது வருட யுத்தத்தின் பின்னர் உடனடியாக வழமைநிலை மீளமைக்காமல் உள்ளபோது சில நோயின் அறிகுறிகளை எதிர்பாhக்கலாம் போர் வெற்றி கொள்ளப்பட்டது உண்மைதான். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ தொடர்ந்து செழித்து வருவதுடன் மற்றும் மிகவும் திறமையாக செயற்படுகிறது, இனப்பிரச்சினையில் இந்தியா அமெரிக்காவுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது போலத் தெரிகிறது, தமிழ்நாடு முன்னெப்போதையும் விட அதிக பகை கொண்டுள்ளது போலத் தெரிகிறது, அதே போலத்தான் ஐரோப்பிய ஒன்றியமும், முழு மேற்கும் மற்றும் அவர்களின் கூட்டணியினரும் உள்ளனர். மேலும் ஜெனிவா மேடையில் ஸ்ரீலங்கா நிறுத்தப்படுவதற்கான அச்சுறுத்தல் முன்னரைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையிலும் -  சிங்களவரின் ஒரு பகுதியினரிடத்து தர்க்கம் தொடரலாம்.  தமிழர்கள் மீதுள்ள தணிவின் குறைவின் காரணமாக, இது எல்லோரிடத்துமில்லை என்பது விளங்கிக் கொள்ளக்கூடியதே. இப்படியான நடத்தைகள் இடம்பெறலாம் என்பதும் கிரீஸ் யக்காவின் தாக்குதலுக்கான ஒரு விளக்கமாகும். ஆனால் இந்த வாதம் அhத்தமற்றது, ஏனெனில் இந்தத் தாக்குதல் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல முஸ்லிம்களுக்கு எதிராகவும் நடைபெறுகிறது. மற்றும் சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழர்களுக்கு எதிரான சிங்களவரின் கருத்துக்களில் முஸ்லிம்கள் சிங்களவர்களின் பக்கமே இணைபிரியாது இருந்து வருகிறார்கள்.

முஸ்லிம்கள் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கைக்கு எதிராக இருந்தார்கள். சிங்களம் மட்டும் சட்டத்துக்கு சாதகமாக இருந்ததோடு, தமிழர்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கிய உயர் கல்வி நடவடிக்கைகளிலும் அவர்கள் சிங்களவர்கள் பக்கமே நின்றார்கள். 1977இலிருந்து 1983 வரையான அரச பயங்கரவாதத்தின்போது கூட எதிராக அவர்கள் ஒரு வார்த்தை பேசவில்லை. மற்றும் வடக்கிலிருந்து தங்களை வெளியேற்றியதை தாங்கிக்கொண்டும் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக அரசாங்கத்தின் பக்கம் நின்றே போரிட்டார்கள். இன்று அவர்கள் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகளில்கூட முக்கியமாகவும் உறுதியாகவும் அரசாங்கத்தின் பக்கமே நிற்கிறார்கள். இங்கு முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கும் என்னவென்றால் 200ம் ஆண்டில் ஆனையிறவில் ஏற்பட்ட தோல்வியினால் அப்போதைய அரசாங்கம் தைரியத்தை இழந்து நின்ற நிலையில் முஸ்லிம் நாடான பாகிஸ்தான் உதவி செய்திருக்காவிட்டால் ஈழம் தொடர்பான விடயம் அப்போதே நன்கு உறுதி செய்யப்பட்டிருக்கும்.

கிரீஸ் யக்காவுக்கான ஒரே ஒரு சாத்தியமான விளக்கம் இனவெறி என்பதுதான். தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகியோரை மொத்தமாக ஒன்றாக்கி  எங்கள் இனப்பிரச்சனையின் பின்னணியின் அளவை மொத்த எதிர்ப்புறமாக வன்முறை என்ற செயற்பாட்டில் ஒன்றிணைப்பது இனவெறியின் முன்னிலையை அநேகமாகத் தீர்மானிக்கும் சிறந்த உருவாக்கத்துடன் கனகச்சிதமாகப் பொருந்துகிறது. ஆகுபெயர் பிரதியிடல் என அழைக்கப்படும். இதில் ஆகு பெயர் எனும் பதத்தின் பொருள் ஆனது ஒரு பேச்சின் மதிப்பீட்டில் ஒரு பகுதியானது முழுவதையும் குறித்து உணர்த்தும். உதாரணத்துக்கு , நீக்கிரோக்களின் தோலின் நிறமான கறுப்பு ,அவர்கள் சகல எதிர்மறையான இயல்புகளையும் கொண்டவர்கள் என்பதை குறித்துணர்த்துவதற்காக “கறுப்பு” என்கிற பதம் பயன்படுகிறது.

சில அல்லது அநேகமான தமிழர்கள் பிரிவினைவாதிகள் அதனால் இனவாதிகள் எல்லாத் தமிழரும் உண்மையில் அல்லது மொத்தமாக பிரிவினைவாதிகள் என கருதி அவ்வாறு நடத்தப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். அதன்படி நீலன் திருச்செல்வம், ஈழம் திருச்செல்வம் என ஈழவாதிகள் அவரைக் கொலை செய்யும் வரை அழைக்கப்பட்டார். சில முஸ்லிம்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களாக உள்ளனர். அதேவேளை சில முஸ்லிம்கள் போதைப்பொருள் வர்த்தகத்தின் அச்சாணிகளாகவும் உள்ளனர். அதனால் இனவெறியர்கள் எல்லா முஸ்லிம்களையும் உண்மையாக அல்லது மொத்தமாக  போதைப்பொருள் கடத்தல்காரர்களாக கருதி அவ்வாறு நடத்தப்படவேண்டும் என நினைக்கிறார்கள்.

தற்போதைய விடயத்தைப் பொறுத்தவரை தமிழர்களும் மற்றும் முஸ்லிம்களும் சிறுபான்மை இனத்தவர் என்கிற வகைப்படுத்தலின்கீழ் வருகிறார்கள். மேலும் சில தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராகப் போரிட்டபோது, முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கே தமது ஆதரவை வழங்கியிருந்தாலும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்  ஆகிய  இருபகுதியினரும் ஒன்றாகவே கருதப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் சிறுபான்மை இனத்தவர்கள். அதனால்தான் எங்களது புதிய கூட்டமான சூடான இறுதித் தேசியவாதிகளான உயர்ந்த நாட்டுப்பற்றுள்ள கிரீஸ் பூதங்களும் மொத்தமான விதிவிலக்கில்லாமல் முஸ்லிம் மாதர்களும் துன்புறுத்தப் படவேண்டும் என்கிற சரியான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

நான் கட்டாயமாகச் சொல்லவேண்டியது மக்களை முட்டாள்களாக்குவதற்கு பயங்கரமான விதத்தில் இனவெறி பிரயோகிக்கப்படுகிறது. இதில் முக்கியமாகத் தெரிவிக்க வேண்டியது கிரீஸ் யக்கா நிகழ்ச்சி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஏற்றுக் கொள்ள முடியாத மொத்த இனவெறியின் வெளிப்பாடு என்பதை. தமிழர்களும் மற்றும் முஸ்லிம்களும் சகல சட்டபூர்வமான வளங்களையும் பயன்படுத்தி அதற்கு எதிராக உள்நாட்டிலும் மற்றும் சர்வதேசத்திலும் போராட வேண்டும். அவாகளுக்கு எதிராக நடைபெறும் மனித நேயமற்ற செய்கைகளை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கான ஒரே மாற்றீடு அதுதான்.

நான் இப்போது எனது கருத்துக்கு வருகிறேன் இந்த கிரீஸ் பூத நிகழ்ச்சிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்ததை, மக்கள் சாதாரணமாக சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டார்கள் என்கிற நோக்கில் பார்க்காமல் மாறிவரும் உலகப்புரட்சியின் ஒரு மேற்கோள் என்ற வடிவத்தில் இதனைப் பார்க்க வேண்டும்.

நான் புரட்சி என்று இங்கு கருதுவது  பிரான்சிய, ரஷ்ய, மற்றும் சீனப் புரட்சிகளைப் போன்ற மரபுரீதியான வெகுஜனப் புரட்சியை அல்ல, ஆனால் இரண்டாவது உலகயுத்தத்தின் முடிவிலிருந்து புரட்சிகர முறையாக உலகெங்கும் பரவிவரும் நிலையான, தளராத ஊக்கத்துடன், செய்யப்படும் ஆழமான மாற்றத்துக்கான செயற்பாட்டை.

இந்த செயற்hடுகளின் பின்னால் நல்வாழ்க்கையை நோக்கிய உலக மக்களின் அபிலாசைகள் ஒரு வலிமையான சக்தியாக வெறும் பொருள் நலத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் ஆனால் கண்ணியம், மகிழ்ச்சிக்கான உரிமை, சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பனவற்றைக் கொண்டு திகழ்கிறது. இந்த புரட்சிகரமான உந்துதலின் சமீபத்தைய வெளிப்பாடுதான் அராபிய வசந்தம்.

இந்த குறிப்பிடத்தக்க கிரீஸ் யக்கா நிகழ்ச்சியில் நாம் காண்பது அவமரியாதைப் படுத்தும் ஒரு வகையான இனவெறியினை, அது உலகின் எந்த இடத்திலும் மனிதாபிமானத்துக்கு ஏற்புடையதல்ல. இதில் உண்மை என்னவென்றால் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இருபகுதியினரும் காவல்துறையினரையும் மற்றும் ஆயுதப்படையினரையும் எதிர்க்கும் நடவடிக்கையில் வெளிக்காட்டிய தயார்நிலை ஒரு புரட்சியின் அடையாளம்தான். இது ஸ்ரீலங்காவில் வெளிப்படையாக நடைபெறாத ஒன்றாகும்.

நாங்கள் ஜேவிபி மற்றும் எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சிகளை சந்தித்திருக்கிறோம். ஆனால் அவைகள் உயரிய திட்டங்கள் வகுத்து நடைபெற்ற விவகாரங்கள். ஆனால் இந்த விடயத்தில் திட்டமிடப்படாமலும் மற்றும் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்கள் அரசாங்கத்தின் வலுக்கட்டாயமான உபகரணத்தை தைரியமாக எதிர்த்து நின்றுள்ளார்கள். இந்த விடயத்தில் சட்டத்தை அவர்கள் தங்கள் கைகளில் எடுத்தக்கொண்டதை வருந்தத்தக்க ஒரு விடயமாகவும் பார்க்கலாம் அத்தோடு  அதை நடந்துவரும் உலகப்புரட்சியின் வடிவத்திலும் பார்க்கலாம்.

முடிவாக மூன்று சுருக்கமான விடயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். சிறுபான்மையினர் இனவெறி மற்றும் பாகுபாடு என்பனவற்றால் நியாயமான மனக்குறைகளை கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு என்ன சாட்சியங்கள் உள்ளன என் சில சிங்களவர்கள் கேட்கிறார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் சிறுபான்மையினரின் பிரச்சினைகளை நிறுவுவதற்கு போதியளவு விடயங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.

இந்த கிரீஸ் யக்கா நிகழ்ச்சியை இனவெறி என்கிற ஒரே வகையில் மட்டும் விளங்கிக் கொள்ளக்கூடிய விதமாக நான் வெற்றிகரமாக நிறுவியிருப்பதாக நம்புகிறேன். எனது இரண்டாவது கருத்து சிங்கள இனவாதம் என நான் குறிப்பிடும்போது எல்லாச் சிங்களவரும் அல்லது பெரும்பாலானவர்கள் இனவாதிகள் என்று நான் குற்றம் சாட்டவில்லை. அவர்களில் ஒரு சிறிய பகுதியினர்தான் அப்படியானவர்கள் என நான் நம்புகிறேன். எனது மூன்றாவது கருத்து, ஸ்ரீலங்கா அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டியது சர்வதேச சமூகத்தின் சில அங்கத்தவர்கள் ஸ்ரீலங்காவுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.

அதற்கு உறுதி தரக்கூடிய சில நீதியான விடயங்கள் இருந்தால் மட்டுமே அவர்களால் அப்படிச் செய்ய முடியும் என நான் எண்ணுகிறேன்.  இந்த கிரீஸ் யக்கா நிகழ்ச்சி – மிகவும் தனித்துவமான விதிவிலக்கு கலாச்சாரம் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதை தடுப்பதுதான் இணங்க வைக்கும் ஒரு வழியாக அரசாங்கம் எதிர்பார்க்குமானால் -  அது ஸ்ரீலங்காவுக்கு எதிரான நீதியான ஒரு வழக்;கினை அவர்களுக்கு பங்களிப்புச் செய்திருக்கும்.

நன்றி: தேனீ.காம் http://www.thenee.com/html/230911.html