கவிஞர் , சிறுகதையாசிரியர், சமூக, அரசியல் ஆய்வாளர், நடிகர் எனப் பன்முக ஆளுமை மிக்கவர் வ.ஐ.ச.ஜெயபாலன். அவர் எண்பதுகள், தொண்ணூறுகளில் ஆங்கிலக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். லங்கா கார்டியன், எகனமிம் ரிவியூ  சஞ்சிகைகளில் அவரது சமூக, அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

எகனமிக் ரிவியூ (Economic Review) சஞ்சிகையின் ஏப்ரில் 1991 இதழில் இவ்வகையான ஆங்கிலக் கட்டுரையொன்று  'The Socio Economic and Cultural Background of Batticaloa District'('மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக, பொருளியல் மற்றும் கலாச்சாரப் பின்னணி')  என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.  இதழில் அபிவிருத்தி என்னும் பிரிவில்  'யாழ் பல்கலைக்கழக மாணவர் சபையின் முன்னாள் தலைவரான வ.ஐ.ச.ஜெயபாலன் இளந் தலைமுறையின் முன்னணித் தமிழ்க் கவிஞரும், சிறந்த தமிழ் அறிவு ஜீவியுமாவார்' என்னும் குறிப்புடன் வெளியானது. அதனைத் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation) என்னும் இணையத்தளம் மீள்பிரசுரம் செய்துள்ளது.

கட்டுரைக்கான இணைப்பைக் கவிஞர் ஜெயபாலன் அறியத்தந்திருந்தார். அவருக்கு என் நன்றி. இக்கட்டுரை எண்பதுகளில் அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த சமயம் லங்கா கார்டியனில் அவரது ஆங்கிலக் கட்டுரைகள் வெளியானதை நினைவு படுத்தியது.  ஓரிரவு பொரளையிலிருந்து  ஆர்மர் வீதி வரை இ.போ.ச பஸ்ஸொன்றில் கதைத்துக்கொண்டு சென்றதையும் நினைவு படுத்தியது. அவர் அக்காலகட்டத்தில் எழுதிய  சமூக, அரசியல் சார்ந்த ஆங்கிலக் கட்டுரைகள் தொகுக்கப்பட வேண்டும்.

கட்டுரைக்கான இணைப்பு