- மு.நித்தியானந்தன் -மு.தளையசிங்கத்தின் 'தியாக' மரணம் பற்றி இப்போது கேள்வி எழுந்துள்ளது.  சு.வில்வரத்தினம் மு.த.பற்றிய போலீஸ் தாக்குதலைப்பற்றிப் பேசினால் உணர்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார் என்பதெல்லாம் அவர் மு.த.பற்றி கொண்டிருந்த உணர்வுபூர்வமான ஈடுபாட்டைக் குறிப்பதாகும். அவர் புங்குடுதீவில் அஹிம்சை வழி  நின்று போராடிய நிகழ்வு வணக்கத்திற்குரியது. ஆனால், அவருடைய மரணம் குறித்து கேள்வி எழுந்ததும் சென்டிமென்டல் கூச்சல் போடவேண்டியதில்லை. புத்தர்பிரான் மறைவு குறித்தே அவர் food poisoning இல் இறந்தாரா, அவர் தானம் பெற்று உண்ட உணவு பற்றி இன்று ஆய்வுகள் நடக்கின்றன.புத்தர்  இலங்கை வந்தது எப்படி என்றால், பவுத்த பிக்குகள் உங்களை அறைவார்கள். அக்கேள்வியை எழுப்பினாலே அவர்கள் உணர்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள். உணர்ச்சியின் எல்லைக்கு போவது ரொம்ப லேசு.  அது புத்தி செயல்படும் நேரமில்லை. Anthony Burns என்ற கறுப்பின அடிமையானவர் தப்பிச்சென்று , பின் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்ட நிலையில் அவரைச் சிறையிலிருந்து மீட்க அடிமை முறையினை எதிர்த்தவர்கள் முயன்றபோது, அவருக்குக் காவலில் இருந்த James Batchhelder  சுட்டுக்கொல்லப்பட்டபோது, அவரின் autopsy மரணவிசாரணை அறிக்கை பற்றி இன்றும் பேசப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்தது 1854 ஆம் ஆண்டு.. இன்றைக்கு 167 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இந்த மருத்துவச் சான்றிதழ் முக்கியமானதுதான். பாரதியார் யானை தாக்கி மரணமுற்ற நிகழ்ச்சி பற்றி மு.புஷ்பராஜன் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.அந்த விளக்கத்திற்கு புஷ்பராஜனிடம் தான் மருத்துவச் சான்றிதழ் கேட்கவேண்டும். விஷயம் தெரியாதவன் கேள்வி கேட்டால், அவனிடம் போய் மரணமடைந்தவர் பற்றி நீ ஆதாரம் தா என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.    

தியாக மரணம் எப்படி நடந்தது என்று கேள்வி எழுப்பினால், நாம் அதற்கு உணர்ச்சியின் எல்லைக்குக்குப்போயோ அல்லது அந்த boundary க்குப்பக்கத்தில் நின்றோ கூச்சல் போடுவதால், விடை கிடைக்காது. அந்த மரணம் எப்படிச் சம்பவித்தது என்று யாராவது கேள்வி கேட்டால், அதற்கு உணர்ச்சி பூர்வமாகப் பதில் அளிக்காமல் உண்மையான நிலையை ஆதாரத்தோடு விளக்கவேண்டும். சு.வி. அவர்கள் ஆமர் ஸ்ட்ரீட் சந்தியில் போகும்போது உணர்ச்சியின் எல்லைக்கே போய் அவர் தாக்கப்பட்டதை விவரித்தார் என்பதெல்லாம் அவர் தாக்கப்பட்டார் என்பதை நிறுவும் சாட்சியம் மட்டும்தான். ஒருவரின் மரணத்திற்கான cause of death என்பதை உணர்ச்சியின் எல்லைக்கே போய் ஒருவர் விளக்க முடியாது. மு.த .தான் தாக்கப்பட்டது பற்றி 'மல்லிகை' கட்டுரை எழுதவில்லை என்றெல்லாம்  குறைப்பட்டார், மல்லிகை தன்  மறைவுக்குப்பின் அட்டைப்படம் போட்டுக் கட்டுரை எழுதும்போது தனது படம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று சொன்னார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை..

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.