1. அண்ணலும் நோக்கினாள்! அவளும் நோக்கினாள்!

வந்தியத்தேவன், குந்தவைப்பிராட்டியார் & பெரிய பழுவேட்டரையர். ஓவியர் வினுவின் கைவண்ணம். வந்தியத்தேவன், குந்தவை இருவரும் ஒருவரை ஒருவர் உற்று நோக்குவதாக வரைந்திருக்கும் ஓவியர் வினுவின் ஓவியத்திலிருக்கும் உயிர்த்துடிப்பு அனைவரையும் கவருமொன்று. 'கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்' என்னும் கம்பரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

'எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.' - கம்பர்

முகநூல் எதிர்வினை

Akathiyan Tholkapiyan

விதையிருந்து துளிர் விடும் புது முளை போல்
இதயம் இருந்து அரும்பும் புரியாத ஓர் உணர்வின் பங்கீடு
"அண்ணலும் அவளும் நோக்கினர்"
என்னே அற்புத வரிகள்..
வாழ்க புகழ்!


2. கடம்பூர் மாளிகையில் தன் நண்பன் வந்தியத்தேவனை கந்தமாறன் பெரிய பழுவேட்டரையருக்கு அறிமுகம் செய்கின்றான். பாத்திரங்களின் உடல் மொழிகளைக் கவனியுங்கள்.

முகநூல் எதிர்வினை

Firoza Hussain
பொன்னியின் செல்வன் திரைப் படம் முற்றிலும் அந்த நாவலின் பிரதிபலிப்பா? நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

Giritharan Navaratnam
Firoza Hussain நானும் பார்க்கவில்லை. என் தங்கையொருத்தி பார்த்திருக்கின்றா. அவரின் கூற்றுப்படி நாவலைப் படமாக்கியிருந்தாலும், சில முக்கியமான எங்களுக்கெல்லாம் பிடித்த சம்பவங்களைக் காணமுடியவில்லை. ஆனால் படம் நன்றாக வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். உதாரணத்துக்கு நாவலில் வரும் புகழ்பெற்ற பூங்குழலியின் பாடலான 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?' பாடலைப் பாவித்திருக்கலாம் என்றார்.

Firoza Hussain
Giritharan Navaratnam அருமையான விளக்கம்.மிக்க நன்றி சகோதரா


3. ஓவியர் வினுவின் ஓவியம் - குந்தவையும் , வானதியும் குடந்தை சோதிடர் வீட்டில்.

முகநூல் எதிர்வினை

J P Josephine Baba
முகத்தில் என்ன ஆளுமை!
 
Giritharan Navaratnam
J P Josephine Baba இவ்வோவியங்களும் எம்மை நாவலுடன் ஒன்ற வைத்தன. இன்றும் பொன்னியின் செல்வன் பாத்திரங்களாக நினைவில் நிற்பவர்கள் வினுவின் ஓவிய மாந்தர்களே.

4. ஓவியர் வினுவின் ஓவியம் - குந்தவையும் , வானதியும்

5. ஓவியர் வினுவின் வல்லவரையன் வந்தியத்தேவன் ஓவியம். எங்களையெல்லாம்  கவர்ந்த வாணர்குலத்து வீரன் இவனே. மேலே மதிலால் எட்டிப்பார்த்துக்கொண்டிருப்பது ஆழ்வார்க்கடியான்.

முகநூல் எதிர்வினைகள்

Kumaravelu Ganesan
மணியத்தின் மகன் செல்வனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை?

Giritharan Navaratnam
Kumaravelu Ganesan மணியன் செல்வன் கல்கியில் நிறையத் தொடர்களுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கின்றார். இவர் சிவகாமியின் சபதம் மீண்டும் தொடராக வெளியானபோது வண்ண ஓவியங்கள் வரைந்திருக்கின்றார். இவருக்குக் கல்கியில் வாய்ப்பு நன்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Kumaravelu Ganesan
Giritharan Navaratnam எனது கேள்வி "ஏன் பொன்னியின் செல்வனின் பிற்கால பதிப்புக்களுக்கு ஓவியம் வரைய வாய்ப்பு வழங்கப்படவில்லை" என்பது .

Giritharan Navaratnam
Kumaravelu Ganesan இதற்கான பதிலை ம.செ தான் கூற வேண்டும். ஒருவேளை ஓவியர் மணியத்தின் பழைய ஓவியங்களுடன் பொன்னியின் செல்வன் இரண்டாவது தடவையும் கல்கியில் தொடராக வெளிவந்ததாலும், புதிய ஓவியர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியும் இருந்திருக்கலாம். மேலும் பொ.செ. மீள் பிரசுரமாக வெளியான காலகட்டங்களில் ம.செ வேறு தொடர்களுக்கு வேறு இதழ்களில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கலாம் . இப்படிப் பல காரணங்கள் இருக்கக் கூடும். எல்லாம் ஊகங்கள்தாம். இருந்தாலும் நீங்கள் நினைப்பதுபோல் அவருக்கும் பொ.செ.வுக்கு ஓவியங்கள் வரையச் சந்தர்ப்பங்கள் தந்திருக்கலாமென்று தோன்றுகின்றது. சிறப்பாக , மனமொன்றி அப்பணியினைச் செய்திருப்பார். ஏனென்றால் முதலில் பொ.செ.வுக்கு ஓவியங்கள் வரைந்தது அவர் தந்தையல்லவா.


'6. பொன்னியின் செல்வன் - ஓவியர் வினுவின் ஓவியம்.

முகநூல் எதிர்வினை

Sanjayan Selvamanickam
Photoshop இல்லாத காலத்தில் வரையப்பட்டது


மேலுல் சில ஓவியங்கள்

 

ஓவியர் வினு