சுப்ரபாரதிமணீயனின்  இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு கோவையில் வெள்ளி அன்று கோவை பீளமேடு கிளஸ்டர்  மீடியா கல்லூரியில் நடைபெற்றது. மாலு மற்றும் 1098 என்ற திருப்பூர் வாழ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் Notch,  1098 என்ற பெயர்களில்  மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன Notch நாவலை கோவையைச் சார்ந்த பேரா .பாலகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்.

1098 நாவலை மதுரையைச் சார்ந்த பேராசிரியர் வின்செண்ட் மொழிபெயர்த்துள்ளார் இவற்றை டெல்லியைச் சார்ந்த Authours press பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

விசாரணை திரைப்படத்தின் மூல கதையாசிரியர் சந்திரகுமார் , பாரதியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் செல்வராஜ்,, ஆவணப்பட இயக்குனர் மயன்,  மொழிபெயர்ப்பாளர் கோவிந்த சாமி உட்பட பலர் நூல்களின் வெளியீட்டில் கலந்து
கொண்டார்கள் .  பேரா பாலகிருஷ்ணன் மறைந்த கவிஞர் வேனில் கிருஷ்ணமூர்த்தி மறைவை ஒட்டி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாலு - Notch நாவல்  மொழிபெயர்ப்பு அனுபவத்தை விவரித்தார் . 1098 நாவலின் மையமான பெண்மைய சிந்தனை மையம் பற்றியும் மொழிபெயர்ப்பு சிறப்பு பற்றியும் விவரித்தார் . சுப்ரபாரதிமணியன் இந்த இரு நாவல்களின் படைப்பு அனுபவங்களை விவரித்தார்.

பீளமேடு கிளஸ்டர்  மீடியா கல்லூரி நிர்வாகிகள் அரவிந்தன் , திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்  . ஜாப்பர் நன்றியுரை வழங்கினார்.


கவிதைப்பட்டறை 2021

தமிழ்க்கவிதை வரலாறு, பரிமாணம், கவிதை அனுபவம் என்ற ரீதியில் உரைகளும் கவிதை வாசிப்பும் அவற்றின் பரிசீலனையும் கொண்டதாகப் பட்டறை  இருக்கும். பங்கு பெறும் கவிஞர்கள் தாங்கள் எழுதியக் சிலக்கவிதைகளுடன்  வரவும். கவிதைப்பட்டறையில் இடம்பெறும் கவிதைகள்  “ கவிதை 2021 ” நூலில் இடம்பெறும்.

 . 28/2/21    மதியம் 3 மணி முதல். இடம் : மக்கள் சேவை இளைஞர் இயக்கக் கட்டடம்.,60 அடி சாலை, டி எஸ் கே நகர்,, மரகதம் லேஅவுட், அரசு மருத்துவமனைக்கு வெகு அருகில், திருப்பூர் 4 (94447 72950 / 74183 84438 )

இந்த கவிதைப்பட்டறை அமைப்பு :

கனவு இலக்கிய வட்டம்,பவர் ஆப் இம்பாக்ட் மக்கள் நலவாழ்வு அறக்கட்டளை    தமிழ் வாகை மாலை யுடூப்  சேனல், சைன் ஸ்டியோ, கதம்பம் டி வி , வாழ்வியல் கலாச்சாரமையம்,

முன்பதிவுக்கு : கவிஞர் ஆழ்வைக்கண்ணன் 75503 16500

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.