“சமயம், சாதி, பல்துறை இலக்கியம், நவீன இலக்கியம், கவிதை, ஹைக்கூ கவிதை, நாடகம், திரை, கலை, ஓவியம், மார்க்சியம், பெரியாரியம், பொது அரசியல், தமிழ்த் தேசியம், தலித்தியம், பெண்ணியம், தொல்லியல், நாட்டுப்புற இலக்கியம், குறளியம், செய்தி இதழ்கள், தன்னம்பிக்கை, சூழலியம், தொழிலாளர், இலக்கணம், நூலறிமுக இதழ்கள், கல்வி, மாணவர் இதழ்கள், விளையாட்டு, சட்டம், தொழில், தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவம், வேளாண்மை, சிறுவர், மொழிபெயர்ப்பு, மனித உரிமை போன்ற பல துறைகளை உள்ளடக்கமாகக் கொண்டு சிற்றிதழ்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.” என்று பட்டியலிடுவார் சிற்றிதழ்கள் குறித்து அதிக திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிவரும் கீரைத்தமிழன்.

தமிழில் வெளிவந்துள்ள சிற்றிதழ்களைப் பல்வேறு ஆர்வலர்கள் சேகரித்துப் பதிவு செய்துள்ளனர். அதில் குன்றம் இராமநத்நம், பொள்ளாச்சிநசன், நந்தவனம் சந்திரசேகரன், தி.மா.சரவணன், மு.முருகேஷ், கிருஷ் ராமதாஸ், சுந்தரசுகன், நவீன்குமார், சொர்ணபாரதி ஆகியோர் முக்கியமானவர்கள். தமிழம் இணையதளத்தில் தொடர்ந்து சிற்றிதழ்களைப் பதிவு செய்தும், அது குறித்தெழுதியும் வருவது சிறப்பிற்குரிய காரணங்களில் ஒன்றாகும். கீற்று இணையதளம் தொடந்து இவ்விதழ்களைப் பதிவிடுகின்றன. பதிவுகள் போன்ற வெளி நாட்டு இணையதளங்களும் சிற்றிதழ் சார்ந்த கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

அவ்வகையில், டெலிகிராம் எனும் செயலியில் தமிழ் மேகசின் எனும் குழுவில் இணைந்தால், மாதந்தோறும் வெளிவரும் தமிழ் மற்று ஆங்கில மாத இதழ்களை நம்மால் எளிமையாய் படிக்க முடியும். தொடந்து முக்கியமான இதழ்கள் இதில் வெளிவருகின்றன. அதோடு முக்கியத்தமிழ் எழுத்தாளர்களின் நூல்களும் வாசிக்கக் கிடைக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் மாதந்தோறும் 80-90 இதழ்கள் மாதந்தோறும் வெளியிடப்படுகின்றன. பிறமாநிலங்கள், பிற நாடுகளிலிருந்து வரும் இதழ்கள் இதோடு இணைகிறது. இவற்றை ஆவணப்படுத்தி இதில் வரும் படைப்புக்களைச் செம்மையாகப் பதிவு செய்கிறபொழுது எதிர்காலச் சந்ததியினர் தமிழால் பயன்பெறுவர். சிற்றிதகளின் வெளியீடுகளையும் கீழ்க் கண்டவாறு அந்த அந்தக் காலத்திலேயே பதிவுசெய்தால் பயனாக இருக்கும்.

டெலிகிராம் பக்கத்தில் வெளிவந்த தற்காலச் சிற்றிதழ்களின் பட்டியலில் சில. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒவ்வொரு இதழும் எவ்வளவு ஆண்டுகள் மற்றும் எத்தனை இதழ்கள் வந்தன என்பதை பெயருக்குப் பின் உள்ள எண் கொண்டு அறியலாம். என்வே இதழ்களின் வரலாற்றையும் இது பதிவு செய்வதாக இருக்கும் என்பதால் அவை போடப்பட்டுள்ளன.

1.தமிழ் முரசு மலர்-1- இதழ்-75 “நிகரென்று கொட்டு முரசே- இந்த நீணிலம் வாழபவரெல்லாம்” எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.)

2. விவாஹா மலர்-1- இதழ் -14 (இரு மனங்கள் இணையும் திருமணத்திற்காக எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.)

3. ஆன்மீக மலர் (மெயில் புக்) மலர்-5, இதழ்-153

ஆன்மீக தேடலின் புதிய அடையாளம் எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.) (மாதமிருமுறை)

4. கேப்பிடல் மெயில் - மலர்-2 இதழ்-2 (மாதமிருமுறை) நேர்மை - வாய்மை – உரிமை எனும் தலைப்போடும் வெளிவரும் இதழ்.)

5. ஊடக விகடன் மலர்-1 இதழ்-8 (தமிழ் மாத இதழ்) சேலம்.

6. துணிந்து நில் – புதுக்கோட்டையில் இருந்து வெளிவரும் இதழ்.

7. தலைமை ரிப்போர்ட்டர் – மலர்-1 இதழ்-10, புலனாய்வு இதழ்

8. நாளைய தீர்ப்பு - மலர் -11 தீர்ப்பு-2 (அரசியல் புலனாய்வு இருவார இதழ்)

“அஞ்சுவதும், அடிபணிவதும் நீதிதேவன் ஒருவனுக்கே”- எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.)

9. ‘பீப்பிள் டுடே’ – மலர்-7 இதழ்-1 மக்கள் விழிப்புணர்வு தமிழ் மாத இதழ்- எனும் தலைப்போடு வெளிவரும் இதழ்.)

10. ‘வெற்றி யுகம்’ – மலர்-5 அதழ்-3

11. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் - தொகுதி -103, இதழ்-1- நூற்றாண்டு கடந்த முதல் தமிழ் - ஆன்மீகப் பண்பாட்டு மாத இதழ்

12. பால ஜோதிடம் (எண்கள்) vol-38 issue:43 வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டி, ஆசிரியர்:- முருகு பாலமுருகன்

13. தமிழ் நெஞ்சம்- இலக்கிய இதழ், வெளி நாட்டிலிருந்து வரும் அச்சு மற்றும் இணைய இதழ்.

15. அரசியல் ஒற்றன் - ஆண்டு-15 ,மாதம்-9

16. தாய் வீடு – ஆசிரியர் பி.ஜெ. டிலிப்குமார். வெளி நாட்டிலிருந்து வரும் பக்கங்கள் அதிகமுள்ள காத்திரமான இதழ்.

17. வாலிபர் உலகம். மலர்-13 இதழ்-10

18. சமரசம். மாத இருமுறை இதழ் இஸ்லாமிய மதத்திலுள்ள கருத்துக்களை அலசி ஆராயும் சிறப்பான இதழ்.

19. குர் ஆனின் குரல். இஸ்லாமிய மதத்திலுள்ள கருத்துக்களை அலசி ஆராயும் சிறப்பான இதழ்.

20. ‘கிக்’ வாசிக்க வாசிக்க, மலர்-1 இதழ்-58

21. கவிமாடம்- கவிதைகளுக்கான ஓர் இதழ்

22. கதிர்’ஸ் - கலகல மின்னிதழ். மாத இதழ் (50-வது இதழ்) புத்தாண்டு, பொங்கல் சிறப்பிதழ்

23. கண்காணி நியூஸ் - தமிழ் மாத இதழ் மலர்-2 இதழ்-6

24. ஸப்த கிரி (திருமலை திருப்பதி தேவஸ்தானம்). சமய மாத இதழ்

25. உள்ளும் புறமும் - இலக்கியப் புலனாய்வு மாத இதழ்

26. முதல் குற்றப் பத்திரிக்கை . மாதமிரு இதழ். இதழ்-283

27. குறிஞ்சி டைம்ஸ் . ‘தமிழர்களின் மனசாட்சி’

28. பாரத தமிழ்த் தாமரை. மலர்-8 இதழ்-8 .நடுநிலை தமிழ் மாத இதழ்

29. மாலை மதி .

30. நகரத்தார் மலர் – மலர் -43, இதழ்-9. கலை இலக்கியத் திங்களிதழ்

31. ‘துணிந்தெழு” - (தமிழ் வெளியீடு) இதழ்-25 .மாத இதழ்

வரலாறு படைக்க இருக்கும் வைர நெஞ்சங்கள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

32. திட்டம் - டிசம்பர் -22 எண்ணுடன் வரும் இதழ், வளர்ச்சிக்கான மாத இதழ்

33. இருளின் வெளிச்சம். டிசம்-22 மலர்-2 இதழ்-8

34. அகர முதல இலக்கியப் பேரவை. ஓலை-30, ஓசை-119. கவிதை வார இதழ்

35. ராஜ கோபுரம’ - கோபுரம்-6 கலசம்-2. அசத்தலான ஆன்மீக ஜோதிட வாழ்வியல் மாத இதழ்

36. வாசவி ஜோதி - பல்கலை மாத இதழ். உண்மையின் குரலால் ஒளித்திடும்

37. “லட்சியம் வெல்லும்” மலர்-8 இதழ்-6. அரசியல் சமூக விழிப்புணர்வு மாத இதழ்

38. இனிய திசைகள் திசை-21 வழி-1. சமுதாய மேம்பாட்டு மாத இதழ்

39. சம்பக். (சிறுவர்களுக்கான இதழ்)

40. உலகத்தமிழ் இதழ்- ‘158’

41. லேடீஸ் ஸ்பெஷல். புறப்படு பெண்ணே புவியசைக்க, ஆசிரியர் - கிரிஜா ராகவன்

42. அறிவியல் ஒளி சுடர்-15 ஒளி -11

43. பெரியார் பிஞ்சு - மலர்-20 இதழ் -1

44. ஆசிரியர் கேடயம் -02:11. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாத இதழ்

45. பொது அறிவு உலகம். தன்னம்பிக்கை - போட்டித் தேர்வு - வேலைவாய்ப்பு - தமிழ் ஆங்கில மாத இதழ்

46. நமது அறிவியல் (மலர்-4 இதழ்-47). அறிவியல் விழிப்புணர்வு தமிழ் மாத இதழ்

(அறிவியலில் புதுமை செய்வோம்)

47. சுதேசி - மலர் -12 இதழ் -9

48. ‘அறம்’ . அறம் வெல்லும் அறத்தால் நாடும் வெல்வோம்

49. ஹார்ட் ஃபுல்ரெஸ்

50. அரசியல் முத்திரை . துணிவு, கம்பீரம், நேர்மை , தமிழ் மாத இதழ்


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.