இதில் நிச்சயமாக மீன்கள் இருக்கும். மூன்று அல்லது நான்கடி அகலம். இன்னும் சில இடங்களில் சற்று அதிகமாக கூட இருக்கலாம். மொத்தத்தில் இது ஒரு ஓடை போன்று தோற்றமளிக்காது தேங்கிய ஒரு நீர் குட்டையைப்போல் காட்சித்தந்தது. உற்றுப்பார்த்தால் மெதுவான ஓர் ஓட்டம் - இவ்வளவுதான் இந்த ஓடை.  ஆனால் ரம்மியமானது. அந்த பரந்த பெரிய வயல்வெளியின் ஓரமாய் - இடையிடையே  ஊதா நிறத்து மலர்களுடன்…

“மீன் இருக்குமா” போகிறப்போக்கில் கேட்டுவைத்தேன்.

“இருக்கும். ஆனால்ச் குறவர் கூட்டம்… அவர்கள் மட்டுமே இங்கே மீன் பிடிக்கலாம். அவர்களுக்கு தெரியும் - முதலைகளைப்பற்றி...”

கிட்டத்தட்டச் நகரிலிருந்து பத்து கிலோமீற்றர் வந்துவிட்டோம் - ஒதுக்குப்புறமாய் அமைந்திருந்த இந்த சாகம பாதையில். இந்த பாதையில் பஸ் ஏதும் ஓடாதாம் - ஆட்டோ மட்டும் தான். காலை வேளையில் மாத்திரம் ஆறுமணியளவில் ஒரு பஸ் உண்டு என்றார்கள்;. முதலைகள் இந்த ஒடுங்கிய ஓடையில் இருக்கின்றன என்பதெல்லாம் சோடித்து கட்டப்பட்ட கதையாகவே எனக்குப்பட்டது. பொதுவில் என்னைப்போல ஊருக்குவரும் புதிய சனத்தை இப்படியாக திகில்தந்து பயமுறுத்துவது என்பது சகஜமான கலை என்பதை அறிந்து வைத்திருந்தேன். தெளிவான நீராக இது இருக்கவில்லை என்பது உண்மைதான். கருப்பு... சதுப்புநிலம் வேறு. பாதையை ஒட்டி இவ்வோடை இடையிடையே ஒடுக்கமாய் மெல்லிய மணற் பரப்பில் சாவதானமாக ஓடியது. நெற்கற்றைகளை அந்த வயலில் அறுவடை செய்து முடித்திருந்தார்கள்;. உண்மையில் பரந்த ஒரு காணித்தான் அது. நெல்வயலின் விரிப்பின் தொங்கலில்ச் அதாவது நீண்டு விரிந்து கிடக்கும் இந்த வயலின் எல்லையில் ஆங்காங்கே சில கற்குன்றுகள் அடர்ந்த மரங்களோடு ரம்மியமாய் முளைத்திருந்தன. “முல்லைச் குறிஞ்சிச் மருதம் - மூன்று திணைகளுக்கும் இப்பகுதி சொந்தம்” என்றான் ஓட்டுனன்.

“காணியை செய்வது யார் என்றேன்”

“பலர். கோயிலுக்கு மாத்திரம் நூற்றைம்பது ஏக்கர் உண்டு. வெள்ளாமை முடிந்ததும் ஏலம் விடுவார்கள்”

“எத்தன போகம்”

“ரெண்டு” என்றான்.

“இடைக்காலத்தில் மரக்கறி போடுவார்களோ” என்று வினவினேன்.

“இல்லை – அனைவரும் ஒன்றாகப்போடுவர். ஒன்றாகவே அறுப்பர். தனிவேலை இந்தப்பகுதியில் ஆகாது – யானை! எல்லாவற்றையும் அழித்தொழித்துவிடும். அதனால்தான் அனைவரும் கூட்டாக ஒன்றுத்திரள வேண்டி இருக்கின்றது – யானைகளுக்கு எதிராக” அதோச் ஹியுகோ குடும்பத்தாருடன் தோசை சாப்பிட்டச் அந்த குடிசை கடை. வளைவிலிருந்தது. இப்போது அதன் அச்சு மாத்திரமே அங்கே மிஞ்சிக் காணப்பட்டது. யானை. குடிலின் அஸ்த்;திவாரமாக நின்றிருந்த இரண்டு சீமெந்து மேடுகளை தவிர ஒன்றுமே இப்போது மிஞ்சி இருக்கவில்லை. ஒட்டியதுப்போல் கிடந்த ஓர் அழிந்து போன கோயிலின் மிச்சசொச்சம் வேறு. மொத்தத்தில் காடுமண்டி போயிருந்தது கடை. முன்பு ஒருமுறை நாங்கள் ஆனந்தித்து உண்ட இந்த தோசைக்குடில்.

பாலம். இத்துடன் திரும்புவோம் - போதும் - இதுதான் நான் தேடிவந்த தோசைக்குடில் என்றேன் ஓட்டுனரிடம். வெட்டி திருப்பினான் - பாலத்தின் நடுவேச் திரும்பும் போது கூறினேன் ஓடையின் ஓரமாய் நின்ற அந்த பருத்த மருத மரத்தை பார்த்து: “அன்றைக்கு அத்தனையும்ச் இதில் பருந்துகள்...”

என்பார்வை இப்போது மரத்தின் அடியை நோக்கிப் பாய்ந்தது. மரத்தின் நிழலில்ச் மரத்தின் பருத்த வேர்களை ஒட்டினாற் போல் கிடந்த மணற் பரப்பில் ஓடையை அடுத்து கரிய நிறத்தில் ஒரு முதலை வாயை நன்கு பிளந்து அதன் உட்பகுதியை காட்டியவாறு படுத்திருந்தது. முதலைகள் உடற்சூட்டை தனிக்கும் பொருட்டுச் இப்படி வாயை அகலமாக திறந்து வைத்திருப்பதாக படித்திருந்தேன்.

இவனிடம் காட்டினேன். இவன் ஆட்டோவை ஓரம்கட்டி நிறுத்தினான்.

கருமையான அம்முதலையின்; விரிந்த வாயின் உள்ளே மென்சிவப்பு. பாதையைவிட்டு இவன் சரிவில் ஓடையை நோக்கிச் காட்டுப்புதர்களை நைத்தவாறு இறங்கத் தொடங்கினான்.

இவனது அரவத்தைக் கேட்ட முதலை கணத்தில் அகன்ற தன் வாயை மூடி சப்தமின்றி இலாவகமாக ஓடையில் குதித்து மறைந்தது. அதன் வால் ஒரு அடி அகலத்தில் பிரமாண்டமானதாய் இருந்ததாக எனக்குப்பட்டது.

ஓசையின்றி அது கருத்த அந்த ஓடை நீரில் இறங்கிச் ஆழ்ந்து ஓடையுடன் ஓடையாய் சங்கமித்து மறைந்துவிட்டது. சந்தடியே இல்லை. உண்மையை கூறினால் முதலையொன்று அந்த இடத்தில் இருந்ததாய் எந்த ஒரு சுவடும் இப்போது அங்கே இருந்ததாக இல்லை. ஒடுங்கிய அந்த ஓடையின் சதுப்பு நிலத்தரைகளில் தனது பாரிய உடலை கிடத்தி வைத்துக்கொண்டு தன் அடுத்த இரைக்காக அது காத்திருக்கக் கூடும்.

இப்போது புரிந்தது  இவன் கூறியது உண்மையென. அதாவது எந்த ஒரு மீன்பிடி கூட்டமோ அல்லது குளிப்பவர்களோ அல்லது துணிமணி துவைப்பவர்களோ இன்றி இந்த ஓடை ஏன் இவ்வளவு அமைதியாக ஓடுகின்றது என்று இப்போது புரிந்தது.

ஒரு பெரியவர் கூறினார் - தரையை ஒட்டிப்படுத்துக்கிடக்கும் நான்கைந்தடி ஆழத்தில். ஆனா அதன் கண்களுக்கு நல்லா தெரியும் - நாம் கரையில வருவது. ஒன்னும் இல்லன்னு நாம ஓடையில் இறங்கினோமோ...”

இவரை  அவரது குடியிருப்பில்தான் சந்தித்தேன். ஆட்டோகாரர்தான் என்னை அக்குடியிருப்புக்கு இட்டு சென்றிருந்தார். பிரதான பாதையிலிருந்து ஒரு ஏழு கிலோமீற்றர் பிரிந்து குன்றும் குழியுமாய் இருந்த அந்த மண்பாதையில் இறங்கி ஏறி போய் சேர்ந்திருந்;தோம். குடியிருப்புக்களின் முன்னால் ஒரு “சர்ச்” கம்பீரமாக நின்றது. மோட்டார் பைக்குகள் இரண்டொன்றுச் எங்களைத் தாண்டி எதிரும் புதிருமாய் சென்றன. இது ஒரு பழங்குடி இனத்தின் குடியிருப்பு.

“மொதலையும் யானையும் தான். கிட்டத்துள கூடச் மொதல ஒரு ஆள கவ்விருச்சி. ஆனால் இங்க மின்சாரம் போட்டதும் யான வர்ரது கொறஞ்சிருச்சி. வெளிச்சத்துக்கு யான வராது. முந்தி சின்ன குப்பிலாம்பு. குப்பிலாம்பு வெளிச்சம் வெளியே வராது. யானை வீட்டுக்குள்ள நொலைஞ்சி நெல்லு மூட்டைகள் இழுத்தெடுத்துடும். சில நேரம் யான வீட்டுக்குள்ள வர்ர வரைக்கும் எங்களுக்கு தெரியாது. இருட்டுல நாங்க உருண்டு புரண்டு வெளியே ஓட யான நெல்லுமூட்டைய இழுத்தெடுத்து தன் பெரிய கால்களில் போட்டு பிக்க...”

“முந்தி எங்க அப்பரு இருந்த காலம். அப்ப முருகனத்தா கும்புடுவோம். வருஷத்துக்கு ஒரு திருவிழா. காட்டுநடுவுல பந்தத்த கட்டி ஆடிப்பாடி... அது ஒரு காலம்... அப்பதான் பாதர் - அந்த இங்கிலிசு காரரும் வந்தாரு. இப்ப எல்லாருமே இங்க கிருஸ்டியன். எங்க வாழ்க்கையும் ஏதேதோவா மாறிப்போயிருச்சு!”

திரும்பிவரும் போது இவன்தன் கதையை சொல்ல தொடங்கினான். ஒருவேளை நான் அந்த கிழவருடன் நடந்துக்கொண்ட விதத்தை பார்த்ததாலோ தெரியவில்லை. வரும் போது பெரியவரை கரங்கூப்பி வணங்கியிருந்தேன்.

“பன்னெண்டு வயசுலேயே இரண்டு தடவ தலைவர சந்திச்சிருக்கேன். அதுபோதும் - அது வன்னியிலே. எனக்கு கால்ல அடி. உள்ள ரெண்டு தகடு போட்டிருக்கு. அப்ப ஆஸ்பத்திரியில இருந்து நாங்க எழுதியிருந்தோம். நாங்க மட்டக்களப்பு. இரண்டு அண்ணன் மாரும் இயக்கத்துல. நான் குண்டடிப்பட்டு இருக்குறேன்... மட்டக்களப்பு போகும் முன் பார்க்க முடிந்தால்...  இப்படி கனப்பேர் எழுதினோம். ஒரு நாள் தலைவர் வந்தார். அவர் வரும் முன் அவரது மெய் பாதுகாவலர்கள் முழு வைத்தியசாலையையும் பொறுப்பெடுத்து தேடி ஆஞ்சவைகள். தலைவர் என்னைக் கூப்பிட்டார் - முன்னுக்கு வர சொல்லி. கிரச்சோட ஊன்றி ஊன்றி முன்னால் சென்றேன். அவர் தாங்கிப்பிடிச்சு என்னை மடியில் இருத்திக்கொண்டார். சிறுவனாக இருந்தப்படியால் என்னை முதலில் அழைத்திருக்கலாம்... வயிற்றை சுற்றி அவரது கரங்கள்... என்னிடம் பல விஷயங்களை அவர் விசாரித்தார்...”

“இந்த இயக்கத்துல இருக்கையிலத்தான் இவள காதலிக்க தொடங்கினேன். இவளுக்கு நான் தந்த முதல் காதல் பரிசு சைனட்குப்பிதான். இவளும் அந்த நேரத்துல இயக்கத்துல இருக்கிறாள். அந்த நேரத்துல எனக்கு புதுசா ஒரு சைனட்குப்பி கெடச்சது. முந்தி வெள்ள நிறம். ஒரே குப்பி. இப்ப ரெண்டு குப்பி – பச்சயும் ஊதாவும்ச் அத இவளுக்கு குடுத்துட்டேன்.”

“ஏன்” என்றேன்.

“தெரியாது. ஒரு வேள உடனடியாக சாக – கஷ்டப்படாம  என்றிருக்கலாம்… இவளது முகம் துணுக்கென சிறுத்துப் போனது."

நான் இடையிட்டு சமாதானம் கூறினேன். “அதாவது நொடிக்குள்ச் கஷ்டப்படாமல்...”

"அது ஒரு காலம். நானும் இவளுமாய் இருந்த காலம்... ஒரு பத்துபவுன் உள்ளவளை கட்டிச் இன்னுமொரு பத்துபவுனை தேடிச் வாழ்க்கையே நான் - நாங்கள் வீணடிக்க தாயாராக இல்லை... பின்னர் இயக்கத்துல இருந்து பிரிந்து கட்டார் சென்றேன். அதற்கு காரணமே அம்மாதான். அம்மா வன்னிக்கே வந்துவிட்டா...  நான் ரெண்டாவது தடவ குண்டடிப்பட்டு வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருக்கையில. அந்த நேரம் என்ட ரெண்டு அண்ணன்மாரும் வீரச்சாவு அடைச்சிருந்தாங்க. அம்மா வந்து உள்ளத சொன்னா. 'ரெண்டு பேரும் இறந்தாச்சு இவனையாவது எனக்கு தந்துடுங்க'  என்று சொல்லி அழுதவ.

இந்த கோரிக்கையை இயக்கம் பாத்துச்சு. நியாயமானது என்று பட்டிருக்க வேண்டும். உடனே எனக்கு  'ட்ரெய்னிங்'.  பகைவனின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் போகப்போகிறாய்... அங்க எப்படியிருக்கனும் – என்ன செய்யனும்... என்ன நடக்கும் என்பதற்கெல்லாம்  'ட்ரெய்னிங்'. கடைசியில இயக்கம் என்னை புலனாய்வு பிரிவின் மட்டக்களப்பு பிரிவொன்றுக்கு தலைவனாக அனுப்பிவைச்சது. அஞ்சு வருஷதுக்கு பின்னர்தான் என்ன கண்டுபிடிச்சினம் - நான் இயக்கத்துல ஒரு ஆள் என்று. அதுவரைக்கும் - நான் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டி – அதாவது ரெட்ட வாழ்வு. ஒரு பாதி ஆட்டோ ஓட்டி. மறுபாதி தலைமறைவாய் இயக்கத்துக்காய் செயல்படுபவன். அஞ்சு வருஷத்துக்கு பின் என்னை சுட வந்;தார்கள். தூப்பாக்கிய மண்டையில வைச்சு ட்ரிகர இழுத்துவிட்டான். என் அதிஷ்டம். துப்பாக்கி சுட மறுத்து விட்டது. அவன நான் கீழ தள்ளி நெஞ்சுல கால வைச்சு அடித்தேன். அதுக்கு பின்னரே உடனடியாக கட்டார் போனேன்”.

அன்பான இயக்கம். சந்தேகமில்லை அப்படியென்றால் ஏன் இந்த பின்னடைவுகள் என்றேன். மௌனமாயிருந்தவன் சிறிது பொறுத்துக் கூறினான்  "பிழைகள்தான்  இவ்வளவு சரிவுக்கும் காரணம்" என்றான்.

"இதில் சர்வதேசத்திற்கு பங்குண்டோ"  எனத் தொடர்ந்தேன். இருக்கலாம் என கூறிய அவன் ஒரு கணம் மௌனம் காத்தான். பின் இக்கதையை தொடர விரும்பாதவன் போல மீண்டும் கட்டார் கதைகளுக்கு தாவ தொடங்கினான்.

"போகையில நாலு பிள்ளைகள். மூத்தவனுக்காய் இதுவரை ஒன்பது லட்சம் செலவு. ஒழுங்கா படிக்கல அவன்  ஓஎல் முடிய சொன்னேன். உனக்கு இன்னும் மூண்டு தம்பிச் தங்கையர் உண்டு. என்னால கஷ்டப்பட்டு அந்தளவுக்கு செலவழிக்க முடியாது. இவ்வளவு சம்பாதிச்சதும் |ஆட்டோ ஓட்டித்தான். இனி நீயாய் தேடி நீயாக படி என்றேன். ‘இல்லப்பா… இந்த தடவ மாத்திரம். என்னைய ஏலெவல் வரைமாத்திரம் படிப்பிச்சுடுங்க’ என்றான் அவன். நான் பெத்த பிள்ளை அல்லவா? எப்படி மறுக்க முடியும். படிப்பிச்சேன்.

ஆனா அவன் போக்கு சரிவரல. ஏலெவலையும் சும்மாத்தான் பாஸ் பண்ணினான். சொன்னான். என்னை மெரைன் கோர்ஸ் செய்ய கொழும்புக்கு அனுப்புங்க அப்பா. ஒன்னும் தேவயில்ல. ஒன்பது லட்சம். அது முடிஞ்சவுடனேயே வேல. பிறகு குடும்பத்த நான் மொத்தமாய் கவனிப்பேன் என்றான் அவன். மனுசி ஒருபக்கம்ச் இவன் ஒருபக்கம். மனுசியின் தாலி முதல்கொண்டு எல்லாத்தையும் வித்துச் அடகுவைச்சு ஒன்பது லட்சம் திரட்டினேன். ஒருவருஷம் கழிச்சு கல்யாணம் செய்து கொண்டுவந்து நிக்;குறான். அவளுடைய அப்பா வீட்டுவாசப்படி ஏறி சொல்றான் 'என்ன செய்றது சின்னதுகள்…'

நான் சொன்னேன் : சுமக்க வேண்டியது இனி உங்கட பொறுப்பு – உங்க கடமையும் அதுதான் என்றேன்.

அதுக்கு அவன் சொல்றான் :  'நாங்க வசதி வாய்ப்பு இல்லாத சனம். நீங்களேதான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்'  என்டு. ஆனா கொஞ்சநாளிலேயே அவர்களுக்குள் ஒரு விரிசல். அவன்ச் அவாவுடைய வீட்டில்ச் அங்கேயே சாப்பிட்டுச் அங்கேயே ஒரு குடும்பமாய் வாழ்ந்தவன். அதுதானே எங்களுடைய சனங்களின் பழக்கமும். ஒருநாள் அவளோட அப்பன் ஏதோ பேச்சு வாக்குல சொல்லியிருக்கிறான் - இத்தன ரூபாவுக்கு நீ இதுவரை இங்கு சாப்பிட்டிருக்கின்றாய் என்று.

என்ட மனுசி கூட இந்த விஷயத்த என்னிடம் மறைச்சுப்போட்டவள். இவருக்கு தெரிஞ்சால்… என்டு பதைபதச்சு போனவள். இதெல்லாம் கணக்கு பார்க்க வேண்டிய விஷயமா என்ன! என்ட செல்ல மகனுக்கு சாப்பாடு… இத என்னால ஜீரனிக்க முடியல. ஒரு நாள் கடைசியிலச் தாங்காமச் மனுசி என்னிடம் சொல்லிப்போட்டால்… நான் வாயடைச்சு போனேன்.

நா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்து இவன கூப்பிட்டு கேட்டேன் : அப்பா இதுக்கெல்லாம் ஒரு கணக்கா… நான் கட்டாரில் வேலை செய்த இடத்துக்கு – அவனொரு கேரளாக்காரன் - போன் செய்தேன. முடியாது. பயணச்செலவு மட்டும்தான். அத மட்டும்தான் என்னால தாங்க முடியும். கடைசியில விசா அனைத்தையும் அவனே செலவு செஞ்சு அனுப்பினான். நான் எனது மகனை கட்டாருக்கு அனுப்பி வைத்தேன். இப்ப ஆளே மாறிப்போய்விட்டான். அப்படி ஒரு திருத்தம். அண்மையில ஒரு சீட்டுக் காசு வந்துச்சு. என்ன காரணமோ. தெரியல இவனிடம் போன் பண்ணி கேட்டனான் - காசை என்ன செய்யலாம் என்டு… அம்மாவோட நகையை திருப்புங்க அப்பா என்றான் அவன். அப்படியே செய்தேன். அப்படி ஒரு திருத்தம் அவனிடம்.

இயக்கத்தை விட்டதா…? அம்மாவால் தான்… அவ தான் வந்து மன்றாடினாள். பின்னர் அஞ்சுவருஷத்துக்கு பிறகு என்ன சுட்டதும்தான் கட்டாருக்கு புறப்பட்டேன்… போயச்; வந்து இறங்குகிறேன்… அந்த நேரம் சண்டை எல்லாம் முடிந்திருந்த நேரம்… ஆனால்ச் என்னை ஏர்போட்ல வைச்சு கைது செய்தினம்… நான் ஒன்டையும் மறைக்கல… மறைக்க இனி என்னத்தான் இருக்கு… என்னை விசாhரிச்ச சி.ஐ.டியிடம் சொன்னேன்… இவ்வளவுத்தான் என் முழு கதையையும்ச் வரலாறும். சுடுவதாயிருந்தா இஷ்டப்படி சுடலாம்… சுட்டு எரிச்சிருங்கோ… ஆனால் என்ட மனுஷி–தாய் இவைகளுக்கு ஒரு செய்திய கொடுத்துடுங்கோ… அவன் செத்துப்போட்டான் என்டு அதுகள் பாவம்… எனக்காக எவ்வளவோ இழந்து போனவைகள்… வீணா அலைவினம்; என்றேன்.

கடைசியில நீ போகலாம் என்றார்கள்… எனக்கு சந்தேகம்தான்… உண்மையில் புதினம்தான். சரியென்று வந்தேன.; பின் லீவு முடிய மீண்டும் விமானநிலையம் சென்றேன் - கட்டார் புறப்பட. அங்கே என்னை கைது செய்து விசாரித்த அதே சி.ஐ.டிஆபிசர் எனக்காக காத்திருந்தான். சிரித்தான்… 'புறப்பட்டு விட்டாயா… பார்ட்டி இல்லையா' என்றான்…

'பார்ட்டி… என்ன பார்ட்டி…' நானும் சிரித்தேன்…

‘ஒரு ஜூஸ் என்றான் : விளாம்பழ ஜூஸ் வாங்கினேன்.’

‘சிகரெட்’; என்றான்.

‘கோல்ட்;லீப்’ வாங்கினேன்.

மிடரு மிடராய் குடித்தவன் - இடையே புகையையும் இழுத்திழுத்து விட்டான். நான் கேட்டேன் :  'சரி எல்லாமே முடிஞ்சு போனது. ஆயிரம் கேள்விகள் என்னை கேட்ட நீங்கள்… ஆனால் பினாமி பொருத்து… புலிகளின் தங்கம் - பணம் என்னிடம் பதுங்கி இருக்கின்றதா என்பது தொடர்பில் ஏன் விசாரிக்கவில்லை'  என்றேன்.

சிரித்தான. பின் கூறினான்.

'பார்… நான் முப்பது வருஷமாய் புலனாய்வு துறையில் சேவையில் இருப்பவன்… ஓர் பத்து நிமிஷம்… அது போதும்… ஒரு ஆளின் உண்மை நிலைமையை நான் கணக்கிட்டுக்கொள்ள… நீ… ஒரு நல்ல மனிதன். உண்மையான புலி. நீ… எப்படிப்பட்ட ஒருஆள் என்றால்ச் ஒரு சாகத்துணிந்த மனிதன்… சாகப்பிறந்தவன்… வெறுமனே குண்டைக்கட்டிக்கொண்டு எந்த வாகனம் என்று கேட்டுச் அந்த வாகனத்தின் முன் பாய எந்த நொடியும் தயாராக இருப்பவன்… நீயா… பினாமியா… பணத்தை ஒளித்து வைத்திருப்பதா…'  சிரித்தான் அவன்.

உண்மையாக சொல்கிறேன் ஐயா. சிங்களவர் மத்தியிலே மிகுந்த நல்லவர்கள் உண்டு. அந்த மாதிரி மனிதர்கள் தமிழர்களிடை கூட இல்லை"

 நான் சிரித்தவாறே கூறினேன் : "இம்… அப்படி என்றால் ஒரு கதை முடிந்தது என்றாகிவிட்டது. வாழ்வின் பல மட்டங்களில் உங்களது வாழ்வும் பயணித்திருக்கின்றது" என்றேன்.

அவனும் பதிலுக்கு சிரித்தான்.

"அப்படி ஒன்றுமில்லை. நாங்கள் எல்லாம் ஏதோ வாழ்ந்திருந்தோம் என்றுதான் பெயர். ஆனால் எங்களை விட தரமான ஆட்கள் இயக்கத்தில் இருக்கவே செய்தார்கள். ஒரு இராணுவ அதிகாரிக்கு குண்டு வைத்தவள்… அவளும் பெண்தான். ஒரு மேஜரை தன்பால் காதல் வயப்பட வைத்துவிட்டாள்;. பின் அவனுக்காய் ஒரு குழந்தையையும் வயிற்றில் வளர்த்துக்கொண்டே அந்த இராணுவ உயர்அதிகாரியையும் சந்திக்க சென்றாள்… அன்றுதான் குண்டையும் கட்டிக்கொண்டு சென்றிருந்தாள். வெடிக்க வைத்;தாள்… அவளும் அவளது குழந்தையும் மரணித்துப்போயின… அப்படிப்பட்டவர்களும் இயக்கத்தில் இருக்கத்தான் செய்தார்கள். "

அவன் இப்போது பேச்சற்று சோகமாகினான். அவர்களின் நினைவுகளில் ஆழ்ந்தவாரேச் ஆட்டோவில்ச் குழியும் மேடுமாயிருந்தச் அந்த பாதையில் குலுங்கி குலுங்கி அவன் என்னை கூட்டிச்சென்றான்.