கவிதை வாசிப்போமா?

ஆதாம் ஏவாள் உதிரத்தில் ஓருயிராய் ஓருடலாய் நான் கருவுற்றிருந்தபோது,
அன்பும் மனிதமும் இவ்வுலகில் உருப்பெறத் தொடங்கின.
ஆதாமின் கொடுங்கோலற்ற அன்பும்-பரிவும்-களவும்-காமமும்
ஆணாதிக்கச் சாயலை ஒருபோதும்
ஏவாளின் உடலையும்+உள்ளத்தையும்=ஏன் உயிரையும் சிதைக்கவேயில்லை;
மாறாக, ஏவாள் பூப்பெய்தும்போதும் தாய்மையுறும்போதும்
மிக அனுரசணையாக ஆதாம் நடந்துகொண்ட விதம்
பூமித்தாய் மட்டுமன்று; உலகத்தார் உள்ளமும் குளிர்ச்சியுற்றது.

அதனால்தான், நான் இத் தலைமக்களுக்குப் பாலகனாகப் பிறப்பெடுத்தேன்.
ஆதாம்போல், ஏவாளும் இவ்வுலக உயிர்களெல்லாம்
எமதுக் குழந்தைகளென்றுக் கருதியமையதால்,
தமது முலைகளிரண்டில் ஒன்றை எனக்கும், மற்றொன்றைப்
பிற உயிர்களுக்கும் சரிசமமாகப் பாலூட்டி உலக உயிர்களை ரட்சித்தாள்.
அன்று முதல் இன்று வரை உலகத்தார் மனத்தில் அன்பும் மனிதமும்
மானமுமாக, ஓங்கித் தழைக்கின்றனென்று இயேசு கிறித்துவராகிய நான்,
புது தில்லியிலுள்ள ஓரழகியச் சோலைவனத்தில் எமது சீடர்களுடன்
பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது அவ்விடத்திலிருந்த பஞ்சாபிக் கோயில்-
சிவன் கோயில்-அனுமன் கோயில்-துர்க்கை கோயில்-மசுதிக் கோயிலென
கோயில்களின் நாற்புற வாயில்களும் திறந்தே இருந்தன.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.