நான்
ஆழமும், முடிவுமற்ற
கழிவிரக்கக்குளத்தில்
மூழ்கிக்கொண்டிருக்கின்றேன்.
முடிவற்ற தொடர் பயணத்தில்
பயணித்துக்கொண்டிருக்கின்றேனா?

அக்குளத்தில்
நிகழ்காலமெல்லாம்
கடந்த காலமே.
எதிர்காலம் என்றெதுவுமேயில்லை.
காலமற்ற
கழிவிரக்கவெளியது.
கடந்ததை மட்டும் நோக்கிய
காலப்பயணங்கள் மட்டுமே அங்கு சாத்தியம்.
அங்கு காலத்துக்குப் பரிமாணம்
ஒன்றே.
கழிவிரக்கக் குளத்தில் மூழ்கையில்
நான் வருந்துவதில்லை.
துடிப்பதில்லை.
மூச்சுத் திணறுவதில்லை.
எப்பொழுதுமே அங்கு
மூழ்கிக்கொண்டிருக்கவே விரும்புகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.