பொறையாரில் பிறந்து                            
வறுமையில் நெடிந்து                                                               
வலிகளைச் சுமந்து
உழைப்பை நம்பி உறுதியுடன்
பொதுகை (புதுவை) வந்தார்…

பல போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்க்கை
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை.
அடைக்கலம் தந்தார் மாமனிதர்
அன்போடு அடிமையாய் உழைத்தார்
அவர் நலன் கருதி.

தொழிலாளி முதலாளி பேதமில்லை
சொந்த மகனைப்போல கருதி
மேயராய் இருந்த மாமனிதர்
கலைஞரின் ஆட்சி ஏற்ற  தலைமையில்
சிவப்பிரகாசம் முன்னிலையில்
சுயமரியாதை திருமண செய்துவைத்தார்.

சொந்த அக்காளின் மகளை மணமுடித்தார்
சொந்தங்கள் என்னவோ அப்பாவுக்கு என்றும் தூரம்தான்..
சொத்துக்கள் ஏதும் இல்லை
செளபாக்கியவதியை கைப்பிடித்தார்
சங்கடங்கள் பல வந்தாலும்
சந்தேஷமாய் வாழ்க்கை நடத்தினார்.

இன்னல்கள் பல வந்தாலும்
இல்லாளும் இன்முகத்துடன்
இன்பமாய் இல்லறம் நடத்தி
நம்பிக்கை ஒளி ஊட்டினார்.

முகம் பார்க்கும் கண்ணாடி தொழில் செய்தார்
முகவரிகள் பல தேடி வந்தன..
கண்ணகியின் வரலாற்றை
படம்பிடித்த கலைஞருக்கு
கண்ணாடியாலே பூம்புகார் நகரத்தை
வடிவமைத்து தந்தார்.

கைவண்ண வேலைப்பாடுகள் பல
இவர் கை செய்யாத வேலையே இல்லை பல
கண்ணதாசன் இருந்தால் கைவண்ணம் கண்டேன்
வண்ண சந்தாதால் கவிதை வடித்திருப்பார்.

தொடக்க கல்வி ஏட்டாத அப்பாவிற்கு
வாழ்க்கையே அனுபவ கல்வியை
கற்றுத்தந்தது.
கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்
கடிகாரம் போல சூழன்றோடி பணி செய்தார்..

குபேர் பஜாரில் கடைத்தெருவில்
கடையிருந்தால் அப்பா
புரட்சி கவி பாரதிதாசன்
வான்புகழ் வாணிதாசன்
சிவப்பிராகாசம்
தேனருவி கவிகேட்டு
தேனீர் அருந்தி நண்பனரானார்.

மூன்றுப் பெண்பிள்ளை பெற்றார்
மூக்கனிப்போல கண்ணும் கருத்துமாய் வளர்த்தார்..
கல்வி வழிகாட்டி
தமிழ் ஆர்வம் கொண்டதால்
ஓவியராய்
கணக்காளராய்
தமிழ் பேராசிரியாராய்
தன் புதல்விகளை புகழ் அடையச் செய்தார்.

இல்லற வாழ்வினை அமைத்து தந்து
நல்லறமுடன் வாழ் தூணாய் நின்றார்..
இல்லால் இறைவனடி சேர
இனிய நினைவுகளை இதயத்தில் சுமந்து
இனி வரும் நாளை கழிக்க
இரவு பகல் பாராமல் எங்களுக்காக
உழைத்த எங்கள் அப்பா
சற்று முதுமைக்காரணமாக
சாய்வுநாற்காலியில் ஒய்வெடுக்கிறார்..

ஒடியது போதும்
உழைத்தது போதும்
பேரப்பிள்ளைகளுடன் விளையாடுங்கள்
உங்களுக்காக உழைக்க நாங்கள் இருக்கிறோம்
அப்பா.
உங்கள் மகளாக மட்டுமல்ல
உங்கள் தாயாகவும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.