அழகே உனது
கண்களே கவிதை.
அன்பால் ஈர்த்தே
அகத்தை நிறைத்தாய்.

உயிரின் உயிரே
உண்மைக்கு காதலே.
உயிருள்ள வரை
பிரியாத மையலே.

இதயத்தில் ஊற்றேடுத்து
இடமாறும் அன்பே.
விழிகளால் கதைபேசி
விழித்திடும் கண்ணே.

காதலில்லா உலகேது
கருணையில்லா மனமேது.
கரும்பாய் தித்திக்கும்
கற்கண்டாய் இனிக்கும்.

கண்கள் பனித்திடும்
காதலும் பெருகிடும்.
கள்ளமில்லா உள்ளம்
கலந்ததே உயிரிலே.

உறவாய் வருமே
உயிரைத் தருமே.
எனக்குச் சொந்தம்
என்னாளும் மகிழ்ச்சி.

எள்ளளவும் கலங்காதே
ஏற்றமுடன் வாழ்வோமே.
கட்டியணைத்து முத்தமிடடே
காலமெல்லாம் வாழ்வோம்.

காதல்ப் பரிசாய்
சிவப்பு ராணியான.
ரோசாவைப் பரிசளிக்கிறேன்
காதலர்தின வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.