பாரதி கண்ட பெண்ணே!
எம் பாரத நாட்டின் கண்ணே!
சந்ததி தழைக்க
தலைமுறை சிறக்க
ஈரைந்து திங்கள்
கருவை சுமந்து
சுமையாய் கருதாமல்
சுகமாய் பிள்ளையை பெற்றெடுக்கும்
தாய்மையின் வடிவே!
தாய்ப்பால் புகட்டும் நீயே மழலையின் திருவே!


மனிதன் காணும் கடவுளின் தோற்றம்!
உயிர்களை காக்க ஆயுதம் ஏந்தும் போராளி!
நரையோடிப் புரையோடி
பிணி சுமந்த மூப்புண்டோர்
பல்லோருக்கு உணவூட்டி
மருந்தூட்டி பிணியகற்றி
மனதோடு உறவாடும்
பணி சுமக்கும் மருத்துவச்சி நீ!
கடல் அலைகள் ஓய்வதில்லை.
கொரானவின் அலைகளுக்கு முடிவுமில்லை.
முழுமனதோடு அன்பு கொண்ட நெஞ்சத்தால்
வெள்ளங்கி சேவைதனை
விருப்பத்துடன் மாலையிட்டாய்.
உயிரை பணையம் வைத்து
நித்தம் உயிரை காக்கும் தெய்வம் நீ!
காற்றுப்புகா உடை கவசம் அணிந்து
மூச்சுக்காற்றை காக்கும் மறுபிறவி நீ

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.