திருவிழாக் கூட்டத்தில்
தொலைந்து விடக்கூடாதென்று
இறுகப்பிடித்த - உன்
உள்ளங்கைச் சூடு
இன்னும் உள்ளத்தில்
கணந்துக்கொண்டே
இருக்கிறது....!

மேற்படிப்புக்கு
இது தான் சிறந்த
பாடமென்று – என்
கரம்பற்றி சொன்னபோது
முனிவு கொண்டு
உதறியவனின்
உண்மை வரி(லி)கள்.

உன் சுமைகளை எப்போதும்
என் சுமையாய்
ஆக்கியதில்லை
நம் சுமையென்று
நம்பவைத்ததில்லை
எனக்கு சுமையாய் - நீ
எப்போதும்
இருந்ததில்லை

கழுதையாய்
நீ சுமந்தும்
நான்
இராசா வீட்டுக்
கன்றுக்குட்டிதான்!
எனக்கு நீ இராசா தான்

தப்பே நான் செய்தாலும்
எப்போதும் என்னை
ஏகமாய்க் கொண்டாட
மறந்ததில்லை
இப்போதும் – உன்
உள்ளங்கைச் சூடு
என்னுள் தினம்...தினம்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.