கவிஞர். நா.முத்துக்குமார்  நினைவு தினக் கவிதை..

கவிக்கு ஒரு கவி!
அவையே முத்துக் கவி!
ஆழ்கடலில் கண்டெடுத்த முத்தே!
தமிழ்த் திரைக்குக் கிடைத்த
சிறந்த  சொத்தே,
உன் பாடலின் வரிகள்
மேகங்களைக் கலைக்கின்றன.
காதல் மழையைப் பொழிய வைக்கின்றன.
பொழிந்தது சாரல் மழையல்ல.
கவியின் கனிந்த, ஆழ்ந்த
காதல் வரிகள்,
நீ   செதுக்கிய வார்த்தைகள்
என் மனத்தை  உலுக்கும் சொல்லாடல்கள்.
நீ பாடிய பாட்டு,
என் மனதின் இன்பத்
தாலாட்டு,

மனம் வருந்தி அதில்
மூழ்கிக் கிடந்த என்
கால் தசையினை
ஆடவைத்தன
கவியின் உன் சொற்கள்.
கவியுனை உள்வாங்கிய என்னை
கவியுன்  சிந்தனை
களிப்புற வைத்தது.
திருப்பத்தை நோக்கி என்
இருப்பு சென்றாலும்
முத்துவின் வரிகள் என்றுமென்
மனத்திலிருக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.