* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG
பெண்களாகப் பிறந்த யாவருக்கும் - ஏதோ ஒரு விதத்தில் சாதனை என்ன என்று கூறி - சாதித்த பெண்களுக்கும் இக் கவிதை காணிக்கை.
அழகான உடை பெண்ணின்
ஆளுமையை மாற்றும் என்பார்
அழகான நடத்தைதான் பெண்ணே உன்
வாழ்க்கையையே மாற்றும்!
பெண்ணே!
புரிதல் இல்லாத இடத்தில் - நீ
பரிந்து பேசினாலும் - இல்லை
பாசத்தில் பேசினாலும் - அது
பலவந்தமாகத்தான் தோன்றும்
இசை மொழியான தமிழ் மொழியால்
இனிதே அழகாக்கி பண்படுத்திவிடு அதனை!
பெண்ணே!
கோபம் வந்தாலும் உன்
நிதானத்தை இழக்காதே!
கோபத்தின் பின்னால் உன் நியாயத்தைவிட
பெரிதாக நீ எறிந்த
வாத்தைதான் பேசப்படும்
கடைசித் துளியும் உதிர்ந்த பிறகும்
பொறுப்புடன் சித்திரமாக்கிவிடும்
உன் சிந்தனையை பேனாக்குச்சியால்
பொறித்துவிடு!
பெண்ணே உனக்குள்
வட்டமிட்டுக்கொண்;டிருக்கும்
வலிகள் தான் ஏளராளம்
சத்தம் போட்டுச் சொல்ல முடியாமல்
மனசுக்குள்ளே குமையும்
பேசாப் பொருளை என்னிடம் பேசு
துணிந்து பேசு
உன் பாதை
சரியானதாகவும் இருக்கலாம்.
நடித்துப் பேசுபவர்களிடம்
மனம் திறந்து பேசாதே!
நிலவின் ஒளியை இருட்டை
அதன் நிழலை விடுத்து
அங்கு மெழுகுபோல் ஒன்று
உருகுவது பற்றித்தான் பேசுவார்கள் - பெண்ணே!
மனந்திறந்து மலருபவனிடம்
மறைத்துப் பேசாதே!
மழைக்குப் பின் அந்தக்
கம்பியில் சிறிது ஓடி
ஒத்திகை பார்க்கும்
அந்தத் துளியின் நதிபோல்
ஓரத்தே நீ ஓடிக்கோண்டேயிரு!
அதில் அறிவின் மொழியைக் கலந்துவிடு!
இந்தச் சமூகத்துடன் பொருந்தி வாழ முடியவில்லையா?
சபாஷ் கவலைப்படாதே!
அறிஞர் ஒருவர் கைதட்டுகின்றார்
இப்போதுதான்
நீ சிந்திக்கத் தொடங்விட்டாய் என்று....
மாயும் உலகினில் நீ
போராட வேண்டியது நீயேதான்
உண்மையிலேயே உன்னுடன்தான்
உனக்கு நடக்கும் அனைத்திற்கும் காரணம்
நீயேதான்
உன்னுள் உரசிக்கொள்!
உனது சில கேள்விகளுக்கு
சொல்லமுடியாத பதில்கள்
இருக்கத்தான் செய்கிறது!
சில நேரங்களில் அழுகையாகவும்
பல நேரங்களில் கோபமாகவும் வருகிறது
காரணம் நீ ஒரு பெண் என்று
காரணம் கற்பிக்கின்றார்கள்!
கலங்காதே!
நம்பிக்கையில் நடைபோடு!
கழுகுப் பார்வையால்
நகங்களை வலுவாக்குவதுபோல்
உன் விதிப்படி வாழ்வதற்கு
சுடர்விட்டுப் பாய்ச்சுகின்றாள் அவளொருத்தி!
உன்னை வெளிச்சத்தால்
ஆமாம்... அங்கே தெரிகின்றதே! பார் பார்
சூரியன்போல் உன்னை சூடிக்கொள்கின்றாள்
ஆஹா!